Everything posted by நியாயம்
-
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் - செய்திகள்
அரை இறுதி விடயத்தில் இலங்கை, மேற்கிந்திய தீவுகளை விட அவுஸுடன், தென் ஆபிரிக்கா/இங்கிலாந்து செல்வதற்கு வாய்ப்பு அதிகம் தானே? மற்றைய குழுவில் இந்தியாவுடன் பாகிஸ்தான்/நியூசிலாந்து/பங்களாதேஷ் போகும்.
-
நான் முதல்வராக வந்தவுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், தமிழர்கள் மட்டுமே விளையாடுவார்கள் - அவ்வணியில் நானும் விளையாடுவேன்
அரசியல் வேறு விளையாட்டு வேறு, அரசியல் வேறு மதம் வேறு எனும் கோட்பாடுகள் எல்லாம் இந்தியாவிலும் சாத்தியம் இல்லை, இலங்கையிலும் சாத்தியம் இல்லை? மேற்கத்தைய நாடுகளில் சிறிதளவு சாத்தியமோ?
-
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் - செய்திகள்
நானும் இப்போது பார்த்தேன். இரண்டாவது சுற்றில் முதல் இரண்டு இடங்களை பெறும் அணிகள் அரை இறுதிக்கு செல்லும். கால் இறுதி இல்லை. ஆனால், இரண்டு குழுக்களையும் பார்த்த அளவில் இரண்டும் சமநிலையில் காணப்படுவது போல தென்படவில்லை. இலங்கை அணி உள்ள குழு மிகவும் பலமானது. இங்கே போட்டியிட்டு அரையிறுதிக்கு செல்வது சாத்தியமா தெரியவில்லை. ஆனால் என்ன ஒரு காலத்தில் தேசிய அணிக்காக விளையாடப்போகும் எதிர்கால நட்சத்திரங்களுக்கு நல்ல பயிற்சி, அனுபவம் இங்கு கிடைக்கும்.
-
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் - செய்திகள்
நீங்கள் சொல்வதின்படி பார்த்தால் 12 அணிகள் அல்லவா வரப்போகின்றது? அடுத்த சுற்று நொக் அவுட் சுற்று தானே? எட்டு அணிகள் தானே?
-
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் - செய்திகள்
இல்லை செல்லவில்லை போல. அவர்கள் குழுவில் தென் ஆபிரிக்காவும், இங்கிலாந்தும் முன்னணியில் உள்ளன. சாரசரி ஓட்ட விகிதம் அடிப்படையில் இன்று தென் ஆபிரிக்கா முன்னணிக்கு வந்துள்ளது.
-
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் - செய்திகள்
மேற்கிந்திய தீவுகள் அணி அடுத்த சுற்றுக்கு செல்கின்றதோ?
-
விபத்தில் சிக்கிய ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிந்தார் ..
இரவு நேரம் மணிக்கு கடுகதி பாதையில் 160 கிலோமீற்றர் வேகத்தில் வாகனம் செலுத்தப்பட்டதாம். அமைச்சர் அனுமதி இல்லாமல் சாரதி இப்படி வேகமாக ஓட வாய்ப்பு இல்லை. முன்பும் இப்படி வேகமாக சென்றுள்ளார்கள் என கருதவேண்டி உள்ளது. கண்மண் தெரியாமல் வாகனம் ஓடினால் சாவு வராமல் வேறு என்ன வரும். தவிர, இலங்கை கடுகதி பாதைகள் இவ்வளவு வேகமாக ஓடல்கூடிய வகையில் இல்லை. இதே கடுகதி பாதையில் மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் வாகனம் ஓடுபவர்கள் உள்ளார்கள். பதவி, அதிகாரம் உள்ளது என்பதற்காக எப்படியும் வாகனத்தை செலுத்தலாம் என நினைப்பவர்கள் உயிரில் ஆசை என்றால் இனியாவது இந்த விபத்தை பார்த்து திருந்தட்டும்.
-
இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்
ஆழ்ந்த அனுதாபங்கள்! 🙏
-
நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் : 224 உறுப்பினர்கள் எதிராக வாக்களிக்க வேண்டும் - சிவில் அமைப்பினர் கூட்டாக வலியுறுத்தல்
இலங்கை நாட்டில் ஏற்கனவே உள்ள சட்டங்கள் தமது கருத்துக்கு மாறுபாடான கருத்தை கூறுபவர்களின் தொண்டையை அரசு நசுக்குவதற்கு போதாது என்று மேலதிகமாக இப்படி ஒரு சட்டம் வந்துள்ளதோ. இந்த சட்டம் நடைமுறையில் பிரயோகம் செய்யப்படும் போதே பலருக்கு இதன் தாற்பரியம் புரியக்கூடும். இணைய தகவல் பரிமாற்றம் சம்மந்தப்பட்ட இந்த இலங்கை அரசின் சட்டம் பற்றி இங்குள்ள (யாழ்) கருத்தாளர்கள் கருத்து கூற ஆர்வப்படவில்லையோ.
-
நைட்ரஜன் வாயு செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்படும் முதல் அமெரிக்க கைதியின் கடைசி நேர அச்சம்
தனது மனைவியின் கொலையை திட்டமிட்ட கணவன் மனைவி கொலை செய்யப்பட்டு ஒரு கிழமையில் தான் குற்றவாளி என காவல்துறை அறிந்துவிட்டதால் தற்கொலை செய்துவிட்டாராம். அவர் மனைவியை கொலை செய்ய வேலைக்கு அமர்த்திய ஏஜண்ட் ஆயுள் தண்டனை பெற்று நோய் வந்து இறந்துவிட்டார். ஏஜெண்ட் இடம் தலா ஆயிரம்டொலர் கூலி பெற்று பெண்ணை கொலை செய்தவர்களில் ஒருவருக்கு ஏற்கனவே விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டது. மற்றவர் இவர். மரண தண்டனை கூடாது என கூறும் நாங்கள் எமது உறவுகள் யாராவது கொலை செய்யப்பட்டால் கொலையாளிகள் மரண தண்டனை பெறுவதை ஆதரிப்போமா அல்லது ஆதரிக்க மாட்டோமா?
-
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் - செய்திகள்
இலங்கை இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அவுஸ் உடனான போட்டியில் உண்மையான பலம் தெரியவரும்.
-
கிளிநொச்சியில் அதிகாலை நடந்த கோர விபத்து!
இந்த விபத்து செய்தியை தொலைக்காட்சியில் பார்த்தேன். அது ஒரு கோரக்காட்சி. பேருந்து ஓட்டுனர் கண் மண் தெரியாமல் வாகனத்தை ஓட்டினாரோ? எட்டு மாடுகள் ஒரே நேரத்தில் பேருந்து முன்னால் வர வாய்ப்பில்லை. மாடுகள் சாரதியின் கண்களில் முன்கூட்டியே தென்படவில்லையோ. தெருவில் மிருகங்கள் காணப்பட்டால் வேகத்தை குறைத்து அவதானமாக வாகனத்தை ஓட்டவேண்டும் என பேருந்து சாரதிகளுக்கு தெரியாதோ அல்லது சொல்லிக்கொடுக்கப்படுவது இல்லையோ. வாகன சாரதிகள் ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை மீண்டும் பயிற்சி எடுக்கவும், வீதி பரீட்சை சித்தி அடையவும் வேண்டும் எனும் நடைமுறை கொண்டு வரப்படவேண்டும் அப்படி ஏதும் இல்லை என்றால். தவிர ஒரு வருடத்துக்கு ஒரு தடவையாவது வாகனம் ஓட்டுதல் சம்மந்தமான கல்வியூட்டல் வழங்கப்பட வேண்டும்.
-
சதுரங்க மேடைகளை தன்வசமாக்கும் யாழின் மைந்தன்.!
சதுரங்க போட்டிகள் பாடசாலைகளில் வைக்கப்படுகின்றன. நம்மவர்களில் பலரும் நீண்டகாலமாகவே விளையாடுகின்றார்கள். உலக அளவில் யாராவது முன்னணிக்கு வந்து உள்ளார்களா? வாழ்த்துக்கள் வேணுகானன் நயனகேஷன்!
-
சிசிடிவி அபராத முறைக்கு பேருந்து சங்கம் எதிர்ப்பு!
இது மிக நல்லதொரு வரவேற்கத்தக்க திட்டமும் ஆரம்பமும். பேருந்து சங்கத்தின் சொட்டை காரணமும், எதிர்ப்பும் கண்டிக்கத்தக்கது.
-
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் - செய்திகள்
இந்த கோப்பையில் முதல் நான்கு இடங்களை எந்த அணிகள் பெறலாம் @பையன்26?
-
காசோலையை காண்பித்து மோசடியில் ஈடுபட்ட யாழைச் சேர்ந்த 3 பெண்கள் உள்ளிட்ட 6 பேர் கைது
கிட்டத்தட்ட மூன்று கோடி ரூபாய். இதை காசாக வழங்கலாமா? வங்கியில் இவ்வளவு பெரிய தொகையை காசாக கொடுப்பார்களா?
-
தமிழரசுக் கட்சியின் தலைவரானார் சி.சிறீதரன்
இந்த தலைவர் பதவிக்குரிய பதவிக்காலம் எவ்வளவு? ஆயுள் காலமா? யாப்பு என்ன கூறுகின்றது?
-
காசாவில் மயானங்களை கனரக வாகனங்கள் கொண்டு உழுது அழிக்கும் இஸ்ரேலிய இராணுவம்
சீ என் என் இல் கடந்த சில நாட்களாக இதுதான் தலைப்பு செய்தி. சீ என் என் இலேயே தலைப்பு செய்தியாக பிரசுரிக்கின்றார்கள் என்றால் இஸ்ரேல் எவ்வளவு மோசமான முறையில் செயற்படுகின்றது என்பதை கற்பனை செய்யலாம். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் இருப்பான் என்ற பொன்மொழி இஸ்ரேல் விடயத்தில் எப்போது காண்பிக்கப்படும் என அவதானிப்போம்.
-
இந்தியா எதிர் அப்கானிஸ்தான் இரண்டு முறை சூப்பர் ஓவர் கிரிக்கேட் வரலாற்றில் முதல் முறை
உலக கோப்பை நடைபெற்றபோதே தமது வசதிக்கு ஏற்றபடி தமக்கு அனுகூலமாக அமையும்படி பல ஆட்டங்களில் புகுந்து விளையாடினார்கள் என கருத்து கூறப்பட்டது. என்ன செய்வது இவர்கள் டிசைன் அப்படி.
-
19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து பயிற்சி குழாத்தில் தமிழ் யுவதி அமுருதா
ஐ பி எல் எல்லாம் விளையாட வாய்ப்பு கிடைக்குமோ எதிர்காலத்தில். முன்னாள் யாழ் கிரிக்கெட் வீரர்களின் புதல்வர்கள் தந்தையின் சுவடை பின்பற்றியுள்ளார்கள். பெண் பிள்ளைகள் அப்பா போல் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் காட்டி ஈடுபடுவது கொஞ்சம் புதுசுதான்.
-
இந்தியவாழ் இலங்கை அகதிகளுக்கு சர்வதேச அங்கிகாரமிக்க கடவுச்சீட்டு!
இந்தியாவில் அகதி முகாமில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இந்த வசதி உபயோகமானது. ஆனால் பிரச்சனை என்ன என்றால் இந்தியா அகதிமுகாமை விட்டு இந்த கடவுச்சீட்டில் இலங்கைக்கு ஏதும் அலுவலாக சென்றால் திரும்பி வர முடியாதாம். இது உண்மையா பொய்யா என தெரியவில்லை. அகதி முகாமில் உள்ள ஒருவர் கூறினார். இந்திய அகதி முகாமில் மிக நீண்ட காலமாக உள்ளவர்கள் பல சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள். இவர்கள் சுதந்திரம் பல வழிகளில் மறைமுகமாக மட்டுப்படுத்தப்பட்டது. உண்மையை சொல்லப்போனால் இவர்களுக்கு மீண்டும் இலங்கை வந்து வாழ்வது மிக கடினமானது. இதற்கான அடிப்படை தேவைகள், பொருளாதார கட்டமைப்புக்கள் எதற்கும் உத்தரவாதம் இல்லை. இங்கு இன்னோர் சவால் என்ன என்றால் இந்தியாவில் பிறந்த மற்றும் குழந்தை பருவத்தில் பெற்றோரினால் கொண்டு செல்லப்பட்ட பிள்ளைகள் திருமண வயதை அடைந்து விட்டார்கள். இப்படியான பிள்ளைகளை கரை சேர்ப்பது பெற்றோருக்கு அவர்கள் சக்தியை மீறிய கடினமான பொறுப்பு. இங்கே மத நிறுவனங்கள் சிறிதளவு ஆதரவு கொடுக்கின்றன.
-
டாடோ என்கின்ற டாலிபோ
உண்மைச் சம்பவம் வாசிக்க திகிலாக உள்ளது. மொகமது இப்படி செய்ய தூண்டியது அல்லது இதை செய்ய கட்டளையிட்டது மாபியா குழுவோ எனவும் சந்தேகம் வருகின்றது. வாகன இலக்க தகட்டை மறைக்கும்/மாற்றும் யோசனையே மொகமதுவுக்கு தோன்றாதது அவன் ஆத்திரத்தில் பின்விளைவை நினைக்காது/ எதேச்சையாக முடிவு எடுத்தானோ என எண்ண தோன்றுகின்றது. எனக்கும் மொகமது எனும் பெயரில் ஒரு முதலாளி பழக்கம். அவன் சாவகசமாக கதைக்கும்போது தங்களுக்கு வெட்டு, கொத்து எல்லாம் சாதாரண கைவந்த கலை என்று கூறுவான்.
-
நாட்டின் பல பகுதிகளிலும் காற்றின் தரம் குறைந்தது!
இந்தியா பல விடயங்களில் இலங்கைக்கு ஒரு சாபக்கேடு.
-
உச்சம் தொட்ட மரக்கறி விலைகள்!
பெரும்பாலும் உருளைக்கிழங்கு, பருப்பு இவை இரண்டையும் சமைத்து காலத்தை ஓட்டுகின்றார்கள். பெரியவர்களுக்கு வண்டி வைப்பது தொடக்கம் எல்லோருக்கும் மலச்சிக்கல் ஏற்படுவது வரை இது ஒரு சமுதாயத்தையே நீண்ட காலத்தில் ஆரோக்கியம் குன்றியதாக மாற்றிவிடும்.
-
உச்சம் தொட்ட மரக்கறி விலைகள்!
எனது வினாவும் மக்களினால் தமது காய்கறி தேவையின் குறிப்பிடத்தக்களவு பகுதியை வீட்டுதோட்டம் மூலம் பூர்த்தி செய்யமுடியாதா?