Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியாயம்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by நியாயம்

  1. ஒருவருக்கும் பதில் தெரியாது போல. அல்லது பதில் கூறுவதற்கு கூச்சப்படுகின்றார்களோ? யாழ் கருத்துக்களத்தில் அவ்வப்போது இந்த பதம் பயன்படுத்தப்பட்டதை அவதானித்துள்ளேன். அண்மைக்காலம் என்று கூறுவதானால் மருத்துவர் அர்ச்சனா இந்த பதத்தை பயன்படுத்தி உள்ளார். மற்றும் விஜய் தொலைக்காட்சியில் காண்பிக்கப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த பதத்துக்கு போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.
  2. பாலஸ்தீனம், லெபனான், இஸ்ரேல், உக்ரைன், மற்றும் அனைத்து மக்களும் போர் அற்ற அமைதியான சூழலில் வாழ வேண்டும். இதற்கு வெற்றி பெறும் புதிய அமெரிக்க சனாதிபதி உழைப்பார் என எதிர்பார்ப்போம்.
  3. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாருக்கு முப்பது மெய்ப்பாதுகாவலர்கள் போதாதா?
  4. இது இந்திய உளவு அமைப்பின் தொலைநோக்கு திட்டமோ யார் அறிவார்.
  5. வினா: செம்பு/சொம்பு தூக்கி என்றால் என்ன அர்த்தம்? இது தமிழ் சொல்லா? இந்த சொல் பாவனையில் எப்போது எங்கிருந்து வந்தது? ••••••• ♻️
  6. இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் கூனி குறுகி நிக்கிறீனம் போல. கோலி சார் ஓய்வு நிலைக்கு வந்துவிட்டாரோ. வாசிங்டன் சுந்தர் தமிழோ?
  7. என்னப்பா ஒருத்தருக்கும் குளிக்கும்போது மூக்கினுள் தண்ணீர் போவது இல்லையோ அல்லது குளிப்பதே இல்லையோ? ஒரு பதிலையும் காணோம். 😁
  8. தொலைக்காட்சியில் சுமார் பதினைந்து நிமிடங்கள் நேற்று முன்தினம் பார்த்தேன். படத்தின் பெயர், விபரம் இப்போது இங்கு அறிகின்றேன். கொஞ்சம் வித்தியாசமான படம். வழமையில் பொறுமையாக இவ்வளவு நேரம் பார்ப்பது இல்லை. ஏதோ ஒரு காரணத்தால் படம் பிடித்துவிட்டது. அரவிந்தசாமி திருமண நிகழ்வில் உண்பது தொடக்கம் நாட்டுப்பால் ரீ கார்த்தியின் தூண்டுதலால் குடித்து பேருந்தை தவறவிட்டு பின்னர் இருவரும் கார்த்தி வீட்டில் ஒன்றாக பியர் அடிக்கும் காட்சிவரை பார்த்தேன். அத்தான் என உருகும் கார்த்தி முகபாவனையாலேயே பேசும் அரவிந்தசாமி என சென்றது. கார்த்தி கொஞ்சம் ஓவர் அக்டிங்க் தான்.
  9. இடைவெளியில் துபாயில் வைத்து எவ்வாறு கடத்தினார்கள்? இவர் துபாய் வரும் செய்தி எப்படி கிடைத்தது? அரச புலனாய்வு அமைப்புக்கள் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல போலும்.
  10. வீழ்த்த முடியாத கட்சி இல்லை சரி. ஆனால், வரும் தேர்தலில் வீழ்த்தக்கூடிய கட்சி இல்லை என நினைக்கின்றேன். அதேசமயம் @குமாரசாமி கூறியது போல் விஜய் கட்சி மூலம் எவ்வளவு தூரம் அரசியல் சாக்கடையில் தாக்குப்பிடிக்க முடியும் என்பதும் எதிர்வு கூறுவதற்கு கடினமானது.
  11. மகிந்த குடும்பத்தின் அரசியல் ஓரங்கட்டபடும் என நாம் முன்பு நினைக்கவில்லை. எதுவும் நடக்கலாம். மகிந்த குடும்பம் விஜயின் தீவிர இரசிகர்கள் என நினைக்கின்றேன்.
  12. நானும் மனதில் இப்படித்தான் நினைத்தேன் டாக்டரின் மைண்ட் வொயிசோ என்று. சா.. எப்படி ஆரம்பித்த அவர் பயணம் இப்படி மட்டமாக யோசிக்கும் அளவுக்கு எம்மை கொண்டு வந்து விட்டது.
  13. என்னை ஏன் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கூட்டிக்கொண்டு போனாய், இலங்கையை விட்டு நாங்கள் ஏன் வெளிநாட்டுக்கு போகவில்லை என கேள்வி கேட்கும் பிள்ளைகளும் உண்டு. நானும் எனது தகப்பனாரிடம் பல வினாக்கள் தொடுத்துள்ளேன். வினாக்களிற்கான விடைகள், தெளிவு நாம் அவர்களின் வயதுக்கு/நிலமைக்கு வரும்போது விளங்கும். இலங்கையை விட ஜேர்மனி எந்த வகைகளில் வாழ்வதற்கு உகந்தது என உங்கள் பேரனுக்கு கூறலாம் @Paanch
  14. இங்கு கசப்பான ஒரு உண்மையை நோக்க வேண்டும். சிங்கள மக்கள் ஒரு பொது தேர்தலில் தமிழ் கட்சிகளுக்கு வாக்கு அளிப்பார்களா? சிங்கள மக்கள் தமது இனம் பார்த்து வாக்கு அளிக்கின்றார்கள் என்றால் தமிழர்களும் அப்படி செய்யலாமா?
  15. கட்டளை தளபதி @ரஞ்சித் 160 விமானங்கள் அணிவகுத்து சென்று ஈரான் மீது தாக்குதல் நடாத்திவிட்டு சென்றுள்ளதாக அறிவித்துள்ளார். நானும் எங்கே அந்த 160 விமானங்கள் என தேடித் தேடிப்பார்த்தேன். கடைசியில் @ஏராளன் இணைத்துள்ள ஒரு படத்தில் எட்டு விமானங்கள் அணிவகுத்து செல்வதை பார்த்தேன். மிகுதி 152 இஸ்ரேலிய விமானங்கள் படம் எடுக்க முன்னரே ஈரான் மீது தாக்குதல் நடாத்திவிட்டு வேகமாக சென்றுவிட்டன என நினைக்கின்றேன்.
  16. திருமதி பாஞ்ச் விரைவில் முழுமையான ஆரோக்கியம் பெறட்டும்.
  17. உதயன் வழங்கும் செய்தியின் அடிப்படையில் கருத்து கூறமுடியுமா என்பதே முதல் வினா.
  18. தமிழ் மக்களிற்கு என்ன செய்தீர்கள் என்று கேட்கிறார். இவர் தனது மகளிர் அமைப்பு பற்றிய ஈடுபாட்டை கூறுகின்றார். தொடர்ந்தும் அதே வினாவை கேட்க லூசு என்று முடிகின்றது. நான் நினைக்கின்றேன் ஆட்களை தூக்கி எறிந்து கதைப்பது அர்ச்சனாவின் குண இயல்போ என்று. இவர் பேச்சை கேட்க எனக்கு @nedukkalapoovan நினைவில் வருகின்றார். யாழ் இந்து ஆட்கள் இப்படித்தானோ? 😁
  19. இங்குள்ள கருத்துக்கள் எல்லாவற்றையும் வாசித்தேன். கொல்லப்பட்டவர் அகதி முகாமில் பிறந்தார், இஸ்ரேல் சிறையில் 21 வருடங்கள் அடைக்கப்பட்டார் என தகவல்கள் உள்ளன. இப்படியான ஒருவரிடம் எப்படியான மனித நேயத்தை நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்? அவலத்தை கொடுத்தவனுக்கு அவலத்தை கொடுத்துள்ளார். இறுதியில் கொல்லப்பட்டார். ஒரு விதத்தில் பார்த்தால் பதினாறு வயதில் போராட சென்ற தலைவர் பிரபாகரனை விட இவருக்கு போராடுவதற்கான தேவை மிக அதிகமாகவே காணப்பட்டது.
  20. பெரிய பிளாஸ்ரிக் போத்தலில் தானே நல்ல தண்ணீர் வழங்கும் நிறுவனங்கள் தண்ணீர் கொண்டு வருகின்றன. பிளாஸ்ரிக் கொள்கலன் டிபொசிட் ரூபா 1,500. ஒரு கொள்கலன் நீர் ரூபா 400. பிளாஸ்ரிக் கொள்கலனை மீள் சுழற்சி செய்கின்றார்கள். பிளாஸ்ரிக்கை விட்டால் வேறு எங்குதான் போவார்கள்? உலோகங்கள் நிக்கல்/கட்மியம்/அலுமினியம் கொள்கலன்களில் நீர் விநியோகம் செய்ய முடியுமா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.