Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியாயம்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by நியாயம்

  1. துயரமான பதிவு. ஆழ்ந்த இரங்கல்கள்!
  2. உங்கள் வினா சிக்கலானது. சிந்தித்துப்பார்த்தேன். நீங்கள் என்ன எதிர்பார்க்கின்றீர்கள்? எமது சமூகத்தில் மத மாற்றம் என்று பார்க்கப்போனால் வெவ்வேறு மிசனரிகளின் ஆதிக்கம்தான் கோலோச்சுகின்றது. நெருங்கிய உறவுகளுக்கே நீச்சல் தடாகத்தில் முக்கி எடுத்து புதியப்பிறப்பு கொடுக்கும்போது இப்போது நான் சாத்தான் ஆகிவிட்டேன். வடக்கு, கிழக்கு பகுதிகளில் புத்த விகாரைகள் புதிது புதிதாக முளைக்கும் பிரச்சனை உள்ளது. ஆனால் அதேசமயம் இலங்கையின் வேறு பகுதியில் அவை நடைபெறவில்லையா என்பது ஒரு விடயம். வேண்டா பெண்டாட்டி கைப்பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம். இலங்கையின் பிறபகுதிகளில் சாதாரணமாக எடுக்கப்படக்கூடிய பல விடயங்கள் தமிழர் பகுதிகளில் வரும்போது நுணுக்குகாட்டி பார்வைக்கு உள்ளாகுவதும், விமர்சனங்களினால் கிழிக்கப்படுவதும் ஒரு விதத்தில் தவிர்க்கப்பட முடியாதவையும் ஆகின்றன. இவை சந்தேகம், நம்பிக்கையின்மை, அதிகம் உணர்ச்சிகளை கிளறக்கூடிய வகையில் அமைவது இயல்பு. தமிழர்/சிங்களவர்/இன பிரச்சனை/முரண்பாடு ஒருபுறம் நிற்க, இலங்கையும், பெளத்தமும் ஒன்றுக்கொன்று பிரித்து பார்க்கமுடியாத விடயம் என்பது உண்மை. இந்த வகையில் பெளத்தம் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாமல் தமிழர் உரிமைகள் விடயத்தில் அதிக கவனம் எடுப்பது, அக்கறை செலுத்துவது சிறந்தது என நினைக்கின்றேன். அவன் அங்க விகாரை கட்டுறான் இங்கை விகாரை கட்டுறான் என கொந்தளிப்பதை விட நமது தேவைகளை அடைவதை/பூர்த்தி செய்வதை பற்றி கவனம் செலுத்தலாமே. எமது பிரச்சனை இலங்கையில் எமக்கு சம உரிமை கிடைக்காதமையா அல்லது பெளத்தம்/சிங்களவர் எமது வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்துவதா? நாம் பொதுவில் பெளத்த பேரினவாதம் என்றுதான் விளிக்கின்றோம். ஆனால் வரலாற்றை புரட்டி பார்த்தால் பெளத்தர் அல்லாத இலங்கையர்கள் தமிழர்களை/உரிமைகளை/பறிப்பதில்/ஒடுக்குவதில் வழங்கிய பங்கு அபரிமிதமானது. உங்கள் வினாவை நான் தொடர்ந்து சிந்தித்துப்பார்க்கின்றேன்.
  3. நீங்கள் கடைசியாக இலங்கைக்கு எப்போது சென்றீர்கள்? நீங்கள் கூறும் கருத்துக்கள் பலவற்றுடன் உடன்படுகின்றேன். ஆனால், இங்கே அங்குள்ள மக்களின் விருப்பங்கள், செளகரியங்களுக்குத்தான் நான் முதலிடம் கொடுக்கின்றேன். நீண்டகாலம் இயக்கத்தில் பணியாற்றி கடைசி போரின் பின் பொதுவாழ்வில் இணைந்த பலர் உள்ளார்கள். இலங்கை இராணுவத்தில் தமிழர்கள் சிவிலியன் பதவிகளில் உள்வாங்கப்பட்டுள்ளார்கள். அங்குள்ள சிறார்கள், சிறுமிகளுடன் எதிர்காலம் பற்றி பேசும்போது உங்களுக்கு வளர்ந்து என்னவாக விருப்பம் என்றால் போலிஸ் அதிகாரியாக வர விருப்பம் எனும் பதில்களும் வருகின்றன. திட்டமிட்ட ஆக்கிரமிப்புக்கள், ஓரம் கட்டலை மறுப்பதற்கு இல்லை. ஆனால், அங்கே மக்களுக்கு அவரவர் பிரச்சனை. தனிநபர்களாகவே சமூகத்தில் தமக்குரிய தேவைகளை நிறைவேற்ற வேண்டும். அப்பா என்னை வெசாக் கூடு பார்க்க கூட்டிக்கொண்டு போ என பிள்ளை கேட்டால் அதற்கு “ஆமி மாமா பொல்லாதவர் அங்கை நாங்கள் போகக்கூடாது” என விளக்கம் கொடுக்க முடியுமா? இலங்கை சென்ற சமயங்களில் பல்வேறுபட்ட அனுபவம் உள்ளவர்களுடன் பேசினேன். ஆறு, ஏழு வயதில் இராணுவ காப்பரண்களில் இராணுவம் கொடுத்த தானத்தை உட்கொண்ட இருபது வயது பிள்ளைகளிடம் எமது அனுபவத்தை எதிர்பார்க்க முடியாது.
  4. வினா: நாம் ஒவ்வொருவரும் பல்வேறு மின்னஞ்சல் வழங்கிகளை உபயோகிக்கின்றோம்: Hotmail, Yahoo Mail, Outlook, Gmail, Apple இத்தியாதிகள். பாதுகாப்பு, பயன்பாட்டு உபயோகங்கள், விலை, நம்பிக்கை இவற்றின் அடிப்படையில் மிகச்சிறந்த மின்னஞ்சல் எது என நீங்கள் கூறுகின்றீர்கள்? ••••••• ♻️
  5. உங்கள் வினாக்களுக்கு பதில் கூறுவதற்குரிய தரவுகள் என்னிடம் இல்லை. ஆனால் நான் கேள்விப்பட்ட விடயம் என்ன என்றால் வெள்ளவத்தையிலும் தமிழ் ஆட்கள் வெசாக் தினத்தில் உணவு உட்கொண்டார்கள். வேடிக்கை பார்த்தார்கள். இவ்வாறே இலங்கையின் பல்வேறு பிரதேசங்களிலும் நடக்கும். யாழ்ப்பாணத்தில் சாதாரண சிங்கள மக்கள், வர்த்தகர்களின் பிரசன்னம் இல்லாதபடியால் இராணுவத்தினர் அலங்காரம், உணவு கொடுத்தலை செய்கின்றனர். நல்ல மாற்றங்கள் வரவேற்கப்பட வேண்டும். @ரஞ்சித் மேற்கண்ட உரையாடலில் எழுதிய விடயம்/எழுதிய பாணி ஆச்சரியம் தரக்கூடிய ஒன்று அல்ல. அவர் எழுத்துக்கள் அப்படித்தான். எல்லோரும் ஒரே மாதிரி அல்லதானே.
  6. அலங்காரம், ஒளிவிளக்கு, உணவு எல்லாம் பார்க்க நல்லாய்த்தான் உள்ளது. நாம் சிறுவயதில் பார்த்தபோது உள்ளதைவிட இப்போது தொழில்நுட்பம் புகுந்து அட்டகாசமாக விளையாடுகின்றது. முன்பை விட இப்போது சனங்களுக்கு இராணுவம் மீது உள்ள பயம் போய்விட்டது. சகஜமாக உறவாடுகின்றார்கள்.
  7. புதிய சட்டம் இங்கே எப்படி கையாளப்படுகின்றது என பார்த்தால்.. இன்னோர் கண்ணோட்டம். ஒருவர் தவறு செய்துவிட்டு பாதிக்கப்பட்டவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்கின்றார். பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாகவும், தவறு செய்தவருக்கு எதிராகவும் ஒருவர் சமூக ஊடகத்தில் கருத்து பகிர்கின்றார். இப்போது சமூக ஊடகத்தில் கருத்து பகிர்ந்தவர் வீட்டு கதவை போலிசார் தட்டுகின்றனர். ஆக மொத்தத்தில் வழக்கு என வந்த விடயத்தை எவரும் விமர்சனம் செய்ய முடியாது என்பதற்கு இந்த சம்பவம் ஓர் முன் உதாரணம்? ஒன்றும் புரியவில்லையே.
  8. இதுவே சிறீ லங்கன் எயார் லைன்ஸ் என்றால் நீங்களே அடித்து துவைத்து கொடியில் காயப்போட்டு இருப்பீர்கள்.
  9. இவர் எவரது ஊதுகுழல் என்று தெரிந்தால் பதில் சொல்லலாம்.
  10. நினைவு வணக்கங்கள்! 🙏 அவலங்களில் சனங்கள் சீரழிந்த சம்பவங்கள் நேற்றுப்போல் உள்ளது. புதிய தலைமுறை பிள்ளைகளுக்கு நமது வாழ்வு பற்றி கூறலாம் என்றால் பிரமிப்பு வருகின்றது. எதை தொடுவது எதை விடுவது என்று குழப்பமே ஏற்படும். வரலாற்றில் நாங்கள் வாழ்ந்துள்ளோம், வாழ்கின்றோம். இது வாயால் சொல்லி முடிக்கக்கூடிய விடயம் இல்லை என உணர்கின்றேன்.
  11. வினா: யாராவது உங்களிடம் வந்து நீங்கள் எப்படியான நிலமையில் உள்ளபோது/என்ன செய்துகொண்டு உள்ளபோது உங்களிடம் நிதி/பொருள் உதவி கேட்டால் அல்லது பொருட்களை/சேவையை உங்களுக்கு விற்பனை செய்ய முயற்சித்தால் நீங்கள் செம கடுப்பாகுவீர்கள்? கொடுக்க மாட்டீர்கள்? ••••••• ♻️
  12. என்ன கொடுமை ஐயா. பூசகர் மீது ஏன் இவ்வளவு வெறித்தனம்? டென்மார்க் எவ்வளவு அழகிய, அமைதியான நாடு. எங்கடையதுகள் எங்க போனாலும்..
  13. டொனால்ட் டிரம்ப் அமோக வெற்றிபெறலாம் என ஊகிக்கின்றார்கள். 🤔
  14. எல்லா வீடுகளிலையும் மின்விசிறி சுத்தோ சுத்தென்று சுத்திக்கொண்டு உள்ளது. இலங்கையில் மின்விசிறி விற்பனை, மின்விசிறி உதிரி பாகங்கள், மின்விசிறி திருத்தல் சம்மந்தமான வியாபாரம் நல்லாய் ஓடும் போல.
  15. முழுமையான பின்னணி தெரியாமல் எப்படி தீர்ப்பு கூறுவது? ஏதும் முன் பகையோ?
  16. மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சியை மூக்கு முட்ட பிடிச்சுப்போட்டு குளிசைகளை போட்டுக்கொண்டு சீவிப்பது பலருக்கு பழகிவிட்டது. ஏதோ மாட் கவ் வியாதி என்று முன்னம் ஏதோ சொன்னார்கள். என்ன சொல்லப்படுகின்றது என்பதை விட யாரால் சொல்லப்படுகின்றது என்பதுதான் முக்கியத்துவம் பெறுகின்றது.
  17. உலக பொதுமறை திருக்குறள் புலால் மறுத்தல் பற்றி பேசுகின்றது. பசுவதை தவிர்க்கப்படல் வேண்டும் என்பது ஒரு புதிய சிந்தனை அல்ல. அதேசமயம் நடைமுறை உலக ஒழுங்கில் உணவு தேவையை பூர்த்தி செய்வதில் மாட்டிறைச்சியின் பங்கு முக்கியமானது.
  18. வினா: உங்களுக்கு அமெரிக்க குடியுரிமை உள்ளது என வைப்போம். ஜனாதிபதி தேர்தலில் நவம்பர் ஐந்து 2024 உங்கள் வாக்கு யாருக்கு? ••••••• ♻️
  19. அரசாங்கம் தங்கள் வசதிக்கு, தங்கள் இஸ்டத்துக்கு மாற்றங்கள் செய்கின்றது. இலங்கைக்கு வருகை தருகின்ற மக்களில் கணிசமான தொகையினர் இலங்கையில் பிறந்து வளர்ந்தவர்கள். இவர்கள் புதிய வீசா நடைமுறையை எப்படி பார்ப்பார்கள் என்பது முக்கியமானது. வீசா இழுபறிகள், வெளி நிறுவனத்தின் கையாள்கையால் தகவல் பரிமாற்றத்தில் வரக்கூடிய மாற்றங்கள் போன்றவை பலர் இலங்கைக்கு பயணம் செய்வதை ஊக்குவிக்காது போகலாம். இது வருகையில் கணிசமான வீழ்ச்சியை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்பட ஏதும் இல்லை.
  20. நேரம் பொன்னானது. நேரம் போகும் வாராது. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள். அலைவரும்போதே தலை முழுகு. ஆரோக்கியமான வாழ்வு ஆயுளை அதிகரிக்கும்.
  21. வெள்ளவத்தையில் சிங்களவன் கடை ஒன்றுக்கு சென்று ஆப்பம் சாப்பிட்டு ஆப்பமே வெறுத்து போயிற்று ஐயா. ஆனால் இட்டலியுடன் சிலந்திக்காலை அவிச்சு தந்தது தமிழன் கடைதான்.
  22. கொழும்பில் வெள்ளவத்தையில் ஒரு சாப்பாட்டு கடையில் இட்லி பொதி வாங்கியபோது அவிஞ்ச இட்லியுடன் ஒரு சிலந்தியின் அவிஞ்ச காலும் மூட்டுக்களுடன் வந்தது. சிலந்தி காலை ஒரு பக்கம் தூக்கிவீசிப்போட்டு இட்லியை மட்டும் முழுங்கிப்போட்டு பேசாமல் ஒரு சம்பவமும் இடம்பெறாதது போல் உள்ளார்கள். இதை எல்லாம் படம் எடுத்து செய்தி ஆக்குவதா? 😩
  23. வித்தியாசமான அணுகுமுறையிலான இரண்டு வெவ்வேறு பதில்கள் @ஈழப்பிரியன் @suvy ••••••• வினா: வேகமாக காசு சேர்க்க (சொத்து சம்பாதிக்க) முயற்சி செய்பவர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை (உங்கள் வழிகாட்டுதல்) என்ன? ••••••• ♻️

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.