Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. அப்பன்ர இயக்கத்தை அழிக்க பிள்ளை வேலை செய்துள்ளார்.... தகவலுக்கு நன்றி
  2. தகவலுக்கு மிக்க நன்றி ஐயனே. இவர் இப்போதும் உயிருடன் உள்ளாரா? (நான் கட்டுரையை வாசிக்கவில்லை)
  3. தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் தேவர் அண்ணாவின் கருத்துகள்…. தேசியத்தலைவர் 81 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமிழ்நாட்டில் வந்திறங்கினார். 82இல் தலைவர் மதுரையில் இருந்த காலத்திற்தான் ஓவியர் நடராஜாவுடன் சந்திப்பு ஏற்படுகின்றது.78 இலேயே விடுதலைப்புலிகளின் இலச்சினையோடு கூடிய உரிமைகோரல் கடிதம் சிறில் மத்தியூவின் அரசபணியில் என்ற என் வலப்புக்களில் இலங்கை பூராவுமே ஒரே நேரத்தில் அனுப்பி வைக்கப்பட்டதை கிருஷ்ணா அம்பலவாணர் அறிவாரா?அப்போது அவர் இயக்கத்தில் இருந்தாரா?
  4. பிரபாகரனும் நானும்…பழ.நெடுமாறன் | (மரக்காணம்பாலாவுக்குஅளித்தபேட்டி) ”1982-ம் ஆண்டு மே மாதம் 24-ம் தேதி. சென்னை பாண்டி பஜாரில் தம்பி பிரபாகரனும், பிளாட் அமைப்பின் தலைவர் முகுந்தனும் எதிர்பாராத விதமாக சந்தித்துக்கொண்டார்கள். அது துப்பாக்கிச்சண்டையில் முடிந்தது. இருவரும் கைதுசெய்யப்பட்டார்கள். அப்போது நான் மதுரையில் இருந்தேன். புலிகளின் அரசியல்பிரிவு பொறுப்பாளராக இருந்த பேபி சுப்பிரமணியம் என்னை உடனடியாக சென்னைக்கு வரும்படி அழைத்தார். நான் இல்லாத வேளைகளில் மயிலாப்பூரில் உள்ள எனது அறையில்தான் பேபி தங்கியிருந்தார். அவரோடு வேறு சிலபுலிகளும் இருந்தனர். கைது செய்யப்பட்ட பிரபாகரனையும் முகுந்தனையும் தங்களிடம் ஒப்படைக்கக் கோரி சிங்களப்போலீஸ் உயரதிகாரிகள் சென்னை வந்திருந்தார்கள். நான் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து உடனடியாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டினேன். ‘பிரபாகரன் முகுந்தன் ஆகியோரை எவ்விதநிபந்தனையும் இன்றி விடுவிக்கவேண்டும். எக்காரணம் கொண்டும் சிங்களபோலீஸாரிடம் ஒப் படைக்கக்கூடாது’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருபதுகட்சிகள் ஒன்றுகூடி நிறைவேற்றிய இத்தீர்மானம் தமிழகம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, இருவரையும் நாடு கடத்துவது நிறுத்தப்பட்டது. இதன் பிறகு, நான் சிறையில் இருந்த பிரபாகரனையும் முகுந்தனையும் சந்திக்கச் சென்றேன். இந்த இடத்தில் ஓர் உண்மையைச் சொல்லியாக வேண்டும். அதுவரை நான் பிரபாகரனைச் சந்தித்தது இல்லை. எனதுஅறையில் தங்கும் பேபி மற்றும் அவரது தோழர்களிடம், ‘பிரபாகரனை நான் சந்திக்க வேண்டும்’ என்று பலமுறை கேட்டிருக்கிறேன். ஏதேதோ சாக்குகள் கூறி வந்தார்களே தவிர பிரபாகரனை அழைத்துவரவில்லை. சென்னைச்சிறையில் சிறைஅதிகாரி அறையில் நான் அமர்ந்திருந்தேன். பிரபாகரன், முகுந்தன் மற்றும் இருதோழர்கள் உள்ளே நுழைந்தார்கள். முகுந்தனை எனக்கு அடையாளம் தெரியும். எனவே பிரபாகரன் யாரென்று தெரியாமல் நான் திகைத்தேன். பிரபாகரன் முன்வந்து ‘அண்ணா! நான்தான் பிரபாகரன்’ என்றபோது… அந்தக் காட்சியை பார்க்கவேண்டுமே! எனக்குப் பேரதிர்ச்சி ஏனென்றால் பேபியோடு எனது அறையில் தங்கியிருந்தவர்களில் இவரும் ஒருவர். பலமுறை இவரை என்வீட்டில் பார்த்திருக்கிறேன். ‘எங்கய்யா உங்கதலைவர்?’ என்று கேட்டபோதெல்லாம் ‘அவரும் உங்களை பார்க்கனும்னுதான் விரும்பறார்’ என்று பதில்வரும். இவர் வாய்பேசாமல் உட்கார்ந்திருப்பார். புலிகளை மாதிரி ரகசியம் காப்பதற்கு இன் னொருவர் பிறந்துவர வேண்டும்.” என்றபடி மலரும் நினைவுகளில் வியப்பில் ஆழ்கிறார் தடைசெய்யப்பட்ட தமிழர் தேசிய இயக்கத் தலைவரான பழ.நெடுமாறன். ”வழக்கறிஞர் என்.டி.வானமாமலைதான் பிரபாகரனுக்கு பிணை விடுதலை வாங்கிக்கொடுத்தார். ‘அவர் மதுரையில் தங்கி கையெழுத்திடவேண்டும்’ என்று உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனைதான் பிரபாகரனை எனக்கு நெருக்கமாக்கியது. சுமார் ஏழுமாதங்கள் என் இல்லத்தில் அவர் தங்கியிருந்தார். அந்த காலகட்டத்தில், பிரபாகரனைப் பற்றியும் அவரது இயக்கத்தைப் பற்றியும் நிறையவே நான் அறிந்துகொண்டேன். மதுரையில் இருந்தபோதுதான் இயக்கத்துக்கான சின்னம் வடிவமைக்கப்பட்டது. ஓவியர் நடராசன் அதை வரைந்து கொடுத்தார். அவர் மதுரை அரசு மருத்துவமனையில் பார்மஸிஸ்ட்டாக பணியாற்றியவர். எங்கள்வீட்டில் குடியிருந்த டைலர் தங்கராசுதான் சீருடையை வடிவமைத்துக் கொடுத்தார். தொப்பி மட்டும் மதுரை புதுமண்டபத்தில் இருந்த ஒருகடையில் தேர்வு செய்தார்கள். சீருடையை பார்த்துவிட்டு, ‘நூறு பேர் இந்த ராணுவ சீருடையோடு அணிவகுக்கவேண்டும். அதை நான் பார்க்கவேண்டும்’ என்றார் பிரபாகரன். அது ஆயிரம், பல்லாயிரம் என்று பெருக்கெடுத்தது. இவ்வளவு பெரிய ராணுவத்தை கட்டமைத்து அதற்கு திறம்பட பயிற்சியளித்த மாபெரும் தலைவன், யாரிடமும் பயிற்சி பெறவில்லை என்பதுதான் ஆச்சர்யமான விஷயம். பழ.நெடுமாறன்
  5. விடுதலைப்புலிகளின் இலச்சினையை முதலில் வரைந்தது மோகண்ணா என்ற இராமதாஸ் மோகனதாஸ் தான். 1974 ஓகஸ்டில் பெரியசோதியுடன் வேதாரணியத்தில் இருந்து சென்னைக்கு வந்த ‘தம்பி என்ற ழைக்கப்பட்ட பிரபாகரன்(தலை வர்) சந்தித்த போராளிதான் ஆ.இராசரெத்தினமாகும். கோடம் பாக்கம் ரஸ்டிபுரத்தில் இருந்துவரும் பிரபாகரனும் எக்மோர் C.I.T காலனியில் வாழ்ந்த இராசரத்தினமும் தொடர்சியாக சந்தித்து கலந்துரையாடும் இடம் கன்னிமாரா நூல்நிலையமாகும். இங்கி ருந்துதான் தமிழ் மொழியின்தொன்மை தமிழரின்வரலாறு ஈழத் தமிழரின்தனித்துவம் என பலதையும் தலைவர் ஐயம்திரிபற அறிந்துகொண்டார். இக்காலத்தில்தான் கரிகாலன் என தலைவர் பிரபாகரனும் எல்லாளன் என இராசரத்தினமும் தமது மாற்றுப் பெயர்களை தேடிக்கொண்டனர். தமிழீழத்தின் முதலாவது மாமனிதராக தலைவர் பிரபாகரனால்; பெருமைப் படுத்தப்பட்ட ஆ.இராசரெத்தினத்தால் ‘தாமிரபரணி தமிழ்ப்புலிகள்’ எனும்பெயரே தலைவரின் மனதில் ஆரம்பத்தில் விதைக்கப்பட்டிருந்தது. இதுவே 1975 யூலை 27இல் ‘புதிய தமிழ்ப் புலிகள்'(TNT) என பொன்னாலையில் துரையப்பா அழிப்பின் போது தலைவர் பிரபாகரனின் போராட்டக்குழுவின் பெயராக மாற்ற மடைந்தது. இதனைத் தொடர்ந்து 05.03.1976 நடந்த புத்தூர்வங்கி பணப்பறித்தெடுப்பின்பின் இயக்கத் தின் முதலாவது மத்தியகுழு உருவாக்கப்பட்டது. ஐந்துபேரடங்கிய இம்மத்திய குழுவில் நாலு பேர் வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்கள் என்பது எமக்கெல்லாம் வரலாற்றுபெருமையாகும். குறிப்பிட்ட தலைவர்பிரபாகரனின் குழுவான புதிய தமிழ்ப் புலிகள் 1976 மே 04 புளியங் குளத்தில் நடந்த கலந்துரையாடலின்பின் தமிழீழ விடுதலைப் புலிகள் என்றபெயரில் நிறுவனமயப்படுத்பட்டது. இதைத்தொடர்ந்து இயக்கத்தின் இயங்குதிசையை தீர்மானிக்கும் இயக்கத்திற்கான கட்டுப்பாடுகளும் வரையறுக்கப்பட்டன. முதலாவது மத்தியகுழுவின் தீர்மானத்திற்கமைய தலைவர் பிரபாகரனின் விருப்பத்திற்கு ஏற்றவாறு மோகண்ணாவால் விடுதலைப்புலிகளின் உத்தியோகபூர்வமான முதலாவது இலச்சினையும் உருவாக்கப்பட்டது. பருத்தித்துறையில் அமைந் திருந்த மோகண்ணாவின் ‘மோகன் ஆட்ஸ்’ கலைக்கூடத்திற்கு வந்து குறிப்பிட்ட இலச்சினையை இயக்கத்திற்காக பெற்றுச் சென்றவர் முதலாவது மத்தியகுழு உறுப்பினர்களில் ஒருவராகிய திரு.குமரச்செல்வம் ஆவார். தாமிரபரணி தமிழ்ப்புலிகள் – புதிய தமிழ்ப்புலிகள் – என்பவற்றின் வழியாக தலைவர் பிரபாகரன் அவர்களின் போராட்ட இயக்கம் இறுதியில் தமிழீழ விடுதலைப்புலிகள் என பெயர்மாற்றம் கண்டது.(இப்பெயரை முன்மொழிந்தவரின் பெயர்கூட இன்றுவரை உத்தியோக பூர்வமாக வெளிப்படுத்தப்படவில்லை) இதேபோல் விடுதலைப் புலிகளின் இலச்சினையும் ஒரேஎத்தனத்தில் இன்றுள்ள வடிவத்தை எடுக்கவில்லை. 1916இல்அமெரிக்காவின் கலிபோணியாவில் உருவாகிய GOLDWIN PICTURES நிறுவனமே பின்னாட்களில் METRO GOLDWIN MAYER எனும் பிரமாண்டமான MEDIA COMPANY யாக உருவாயிற்று. MGM எனும் இந்நிறுவனத்தின் TRAD MARK ஆக காணப்படுவது திரைப் பட சுருள்களுக்கிடையில் இருந்து கர்ஜிக்கும் சிங்கம் ஆகும். இதனை மூலமாகவைத்து 1975 இல் ‘வாசு சிகார்’ அட்டைப் பெட்டிக்காக மோகண்ணா ஆரம்பத்தில் உருவாக்கிய சித்திரமே ‘வாசு சிகார்’ அட்டைப்பெட்டியில் காணப்பட்ட ‘சுவரை உடைத்துக் கொண்டு பாயும் சிங்கமாகும். இச்சிங்கத்தின் மாதிரியே தலைவர் பிரபாகரன் அவர்களின் விருப்பத்திற்கமைய 1976இல் தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுதிகொண்ட உத்தியோக பூர்வமான இலச்சினை வடிவத்தில் காணப்பட்ட புலியாக ஆரம்பத்தில் மாற்றப் பட்டது. குறிப்பிட்ட விடுதலைப்புலிகளின் சின்னத்திற் காக பின்னர் பண்டாரவன்னியனின் ஓவியத்தில் கேடயத்தின் குறுக்காக காணப்படும் வாள்கள் துப்பாக்கிகளாகவும் சோவியத் நாடு சஞ்சிகையில் வளைந்து ஓவல்வடிவத்தில் காணப்பட்ட நெற்கதிர்களின் நெல்மணிகளை துப்பாக்கியின் ரவைகள்(குண்டுகள் ) ஆகவும் மாதிரியாக கொண்டு இறுதியாக 1977ன் இறுதியில் மோகண்ணா உருவாக்கிய அவ்அடையாளச் சின்னமே விடுதலைப்புலிகளின் முதலாவது அடையாளச் சின்னமாகும். இவ்வாறே 1977இன் இறுதியிலேயே விடுதலைப்புலிகளின் அடையாளச் சின்னம் உருவாக்கப்பட்டுவிட்டது. – ஆதாரம் – விடுதலைத்தீப்பொறி(தலைவரின் வாக்குமூலம்) 1977 இறுதியில் உருவாக்கப்பட்ட விடுதபைபுலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட கடிதம் 1978 ஏப்ரல் 25 ந்திகதி வீரகேசரி பத்திரி கையில் வெளிவந்த விடுதலைப் புலிகளின் முதலாவது உரிமை கோரல் கடிதமாகும். இக்கடிதத்தில் தமிழீழம் என்பதன் ஆங்கிலப் பதம் THAMIL EALAM என குறிக்கப்பட்டுள்ளதை கவனிக்கவும். இதுவே TAMILEELAM என முதலில் மாற்றத்திற்குள்ளாகியது. இதைத்தொடர்ந்து 1979 ஒக்டோபரில் ‘சோசலிச தமிழீழத்தை நோக்கி’ என்ற பிரசுரமும் பொதுமக்களிற்கு நேரடியாக விநியோ கிக்கப்பட்டிருந்தது. . தொடர்ந்து 1982இல் அமெரிக்காவில் நடைபெற்ற தமிழீழப் பிரகடனத்திற்கு எதிராக மக்கள்மத்தியில் விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரத்திலும் மேற்படி இலச்சினை பாவிக்கப்பட்டது. குறிப்பிட்ட மூன்று வெளியீடுகளிலும் முன்கூறிய புலிகளின் இலச்சினையே பாவிக்கப்பட்டது. இதன் பின்னரே குறிப்பாக 1982ம்ஆண்டின் பின்னரைப்பகுதியிலேயே மதுரையில் தங்கியிருந்த தலைவர் பிரபாகரன் ஓவியர் நடரா சனை முதன்முதலாக சந்தித்திருந்தார். இக்காலத்தில்தான் மேற்படி இலச்சினையில் மேலும் சிலமாற்றங்களை தலைவர் ஏற்படுத்தியிருந்தார். குறிப்பாக புலியின் பார்கும்திசை வெளியி லிருந்து உட்பக்கம் பார்கும்திசைக்கு மாற்றப்பட்டது. இதுவே இன்று நாம்காணும் இலச்சினையாகும். விடுலைப்புலிகளின் இவ்இலச்சி னையை ஓவியர் நடராசனே வரைந்ததாக இன்று கூறுவோர் கவனிக்கத்தவறியது அது முதலில் பகிரங்கப்படுத்தப் பட்ட காலமாகும். 1978 இல் வெளியிடப்பட்ட இலச்சினையை 1982 இல் நடராசன் எப்படி வரைந்திருப்பார். குறிப்பிட்ட மூல இலச்சினையை வரைந்த ஓவியர் மோகண்ணாவும் மாற்றங்களை செய்த ஓவியர் நடராசாவும் மறைந்துவிட்டபோதும் இவர்களு டன் சம்பந்தப்பட்ட நெடுமாறன்போன்ற சிலர் இன்னும் உயிரோடு உள்ளார்கள் என்பதை யாரும் மறந்து விடமுடியாது. குறிப்பாக விடுதலைப்புலிகள் இலச்சினையை மோகண்ணா வரையவில்லை என 10.12.2015 இல் சமூகத்தளமொன்றில் வந்து கருத்துக்கூறிய கிருஸ்ணா அம்பலவாணர் மற்றும் அவர் கருத்தினை ஆமோதித்த VALvettithurai.org இனரும் தெரிந்து கொள்ளவேண்டியது நீங்கள் பின்னூட்டமாக வெளியிட்ட பதிவுகளை மீண்டும் ஒருமுறை படியுங்கள். ,,,www.valvettithurai.org/ ‘புலிக்கொடி வரைந்த தமிழ்நாட்டு ஓவியர்’ எனும் தலைப்பில் முதலாவது அடியே ‘தமிழீழ விடுதலைப்புலிகளின் கொடி உருவான வரலாற்றில் தமிழ்நாட்டு ஓவியருக்கும் முக்கியப்பங்கு இருக்கிறது’. என காணப்படுகின்றதே இங்கு கூறப்படும் பங்கு என்றசொல் எதனைக் குறிப்பிடுகின்றது. தலைவர் கூறவில்லை எனக்கூறுவோர்க்கு நாம்கூறுவது மகாவம்சத்தை மொழிபெயர்த்த வில்லியம் கெய்கர் இறுதியில் கூறியது இதுதான் ‘மகாநாம கூறியதைவிட கூறாமல் விட்டதே மிகஅதிகமான தாகும். ஆம் தலைவர் கூறவில்லை என்பதனால் எதுவும் நடக்கவில்லை என்பது கருத்தல்ல. அவர் கூறியவை மிகச்சிலவே. கூறாதவையோ மிகஅதிகம் என்பதனை அனைவரும் அறிவர். விடுலைப்புலிகளின் இலச்சினையை மோகண்ணா கீறவில்லை எனக்கூறவந்த கிருஸ்ணா அம்பலவாணர் மேலும் தனது கடிதத்தில் ‘அமரராகியுள்ள மோகனதாஸ் அவர்கள் முதற்களப் போராளியான சங்கர் மற்றும் சீலன் செல்லக்கிளி உட்பட சில போராளிகளின் உருவங்களை ஓவியமாக வரைந்தவர்’ எனக் கூறியுள்ளார். எதனை அடிப்படையாக வைத்து கிருஸ்ணா அம்பலவாணர் இவ்வாறு கூறவருகின் றார். விடுதலைப்புலி களின் உத்தியோகபூர்வமான எந்த வெளியீடுகளிலும் மேற் கூறியவர்களின் சித்திரங்களை மோகண்ணா என்ற மோகனதாஸ் வரைந்ததாக எங்கும் பதியப்படவில்லையே. முதற்களப் பலியாகிய சங்கருக்கு முன்பும் பல போராளிகளின் வரலாறுகள் உண்டு இவ்வாறிருக்க முதல் களப்போராளியென கிருஸ்ணா இவ்விடத்தில் சங்கரின் பெயரைக்கூறுவது ஏன்? களப்போரா ளியான சங்கரா அல்லது களப்பலியான சங்கரா என விளக்கவும். வரலாற்றுபதிவுகளில் தவறு ஏற்பட்டு விடக்கூடாது எனக்கூறும் கிருஸ்ணாஅம்பலவாணருக்கு நாம் கூறுவது உங்களிற்கு தெரிந்தவை மட்டும்தான் வரலாறுகள் இல்லை. இன்னும் ஏராளம் உண்டு. ஏற்றுக்கொள்ளுங்கள். வல்வெட்டித்துறையில் வித்தாகி வளர்ந்து மரமாகிய ஈழத்தமிழாகளின் ஆயுதப் போராட்டத்தின் வெளிவராத பக்கங்களும இன்னும் ஏராளம் உண்டு. அத்துடன் ஓவியர் மோகனதாஸ் தமிழீழ விடுதலைப்புலிகளின் உத்தியோகபூர்வ இலட்சினையை 1974 இல் ஆண்டில் வரைந்து 1976ம் ஆண்டில் மொருகூட்டிக் கொடுத்த விடயம் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. என திருவாளர் சிவாஜிலிங்கம் 22.11.2015 இல் வெளியிட்ட பகிரங்க அறிக்கையை சுட்டியே 10.12. 2015 இல் கிருஸ்ணா அம்பலவாணரின் குறிப்பிட்ட மறுப்பறிக்கை வெளிவந்திருந்தது. திரு.சிவாஜிலிங்கம அதற்கு பதிலளிப்பார் என பார்த்திருந்தேன். இன்றுவரை ஏனோ பதிலளிக்கவில்லை எனினும் தமிழீழ விடுதலைப்புலிகளின் இலச்சினையை முதலில் வரைந்தவர் மோகண்ணாதான் என்பதை 10.11.2015 இல் முதன் முதலில் வெளியிட் டவன் என்பதால் இதற்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாடு எனக்கும் உண்டு. தொடரும் விவாதங்களிற்கு தயாராக வர்ணகுலத்தான் 15.DEC.2015
  6. இந்தா காத்தான்குடிக்காரர் தொடங்கீற்றாங்கள்.... புத்தளத்தான்ஸைத் தான் இன்னும் காணேலை இல்லை என்ர கண்ணிலை படேலை. இது இலங்கை முஸ்லிம்களின் யூரியூப் தடம்.
  7. தகவலுக்கு நன்றி. மேற்கொண்டு வரும் செய்திகளையும் பார்ப்போம்.
  8. கமாஸை ஒட்ட நறுக்க வேணும். இதைவிட நல்ல சந்தர்ப்பம் அமையாது இனி... ஒக்க துடைச்சழிக்க வேணும். அங்காலை லெபனான் எல்லையிலை ஆங்காங்கே மோதல் நடைபெறுகிறது... இன்னொரு செய்தி, மருத்துவமனை மீதான தாக்குதலில் 500 பேரெல்லாம் கொல்லப்படவில்லையாம். வெகு குறைந்தளவிலான மக்கள் தான் கொல்லப்பட்டனராம். மேலும் அது மருத்துவமனையிலிருந்த ஒரு ஊர்தி தரிப்பிடம் மீதான தாக்குதலாம். மெய்யுண்மை (facts) தெரியவில்லை.
  9. இஸ்ரேல் பாரிய ரத்தப்பலி வேண்டாமல் நிப்பாட்டது என்டு நினைக்கிறன். போகப் போகத் தெரியும்!
  10. மூனாவை அடையாளங்க் காட்டியமைக்கு மிக்க நன்றி. அன்னாரின் சேவை மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்... எம்மவர்களில் கருத்தோவியங்கள் வரைபவர்கள் அருகிவிட்டனர்... இவர் போன்ற ஒருசிலரே இன்னமும் அப்பணியைச் செவ்வன செய்துகொண்டு உள்ளனர்.
  11. தங்கட பாரிய அழிவுக்கான பாதையை இந்த முல்லாக்களே உண்டாக்குறாங்கள்... எது எப்பிடியோ, இந்தத் தடவை செமச் சாத்து இருக்கு!
  12. பாலஸ்தீ ***** எங்கு தனது பல்குழல் உந்துகணைகளை வைத்து ஏவுகின்றது என்பதை நோக்கவும்.
  13. தூயவன் அரசறிவியல் கல்லூரி பொறுப்பாளர் சஞ்சய் அவர்களின் திருமணத்தின் போது தூயவன் அரசறிவியல் கல்லூரி பொறுப்பாளர் சஞ்சய்
  14. 2002, கிளிநொச்சி இப்படையணியின் பெயர் தெரிந்தவர்கள் கூறவும் இங்கே இந்த மெல்லிய கபில நிறச் சீருடை அணிந்துள்ள போராளிகள் எந்தப் படையணியைச் சேர்ந்தவர்கள் என்று யாருக்கேனும் தெரியுமா? இப்படையணியின் சீருடையின் படிமங்கள் 1998ம் ஆண்டு (ஓயாத அலைகள் - 2) முதல் கிடைக்கப்பெறுகின்றன. 'இடது பக்கத்திலிருந்து முதலாவதாக அமர்ந்திருப்பவர் - சிங்கள தரைப்படையின் சீருடை போன்ற சீருடை அணிந்துள்ளவர் - மட்டக்களப்பைச் சேர்ந்த படையணிப் போராளி. இவர் அணிந்துள்ளது மட்டக்களப்பு படையணி ஒன்றினது சீருடை ஆகும்.' நடு: லெப். கேணல் சித்திராங்கன், மணலாறு கட்டளைப் பணியகம் 'முன்னால் நிற்பவர் கட்டளையாளர் கலையழகன் இப்படையணி/ படையில் பெண்களும் இருந்துள்ளனர். 'வலமிருந்து இரண்டாவதாக வரும் அக்கா இச்சீருடை அணிந்துள்ளதை நோக்குக'
  15. கனத்த மனங்கள்! காலத்தின் கோலமிது
  16. ஐயனே, உது பல்லாண்டுகளுக்கு முன்னர் வெளிவந்தது... நான் பலமுறை யூரியூப்பில் கண்டிரூக்கிறேன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.