Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. நிப்பாட்டாதீங்கோ தொடர்ந்து எழுதுங்கோ... இதை கோராவில் வெளியிட அனுமதி கிடைக்குமா?
  2. இந்தியனோடு மின்சாரத்தை இணைத்தால் இலங்கையை இந்தியா கட்டுப்படுத்தும் என்பது எனது புரிதல்
  3. சரியாகச் சொன்னீர்கள். இதனால் அவர்கள் தமது தனித்துவம் எனக் கருதிய அனைத்தையும் புலிகள் ஏற்றனர். இல்லை 50 ஆண்டுகள் இல்லை... அதற்கும் மேல். நானறிந்த வரை இலங்கை பிரித்தானிய ஆட்சியிலிருந்து சுதந்திரம் அடைவதற்கு முன்னர் ஒரு நிகழ்வு நடந்ததாம். அப்போதைய அமைச்சரவையில் பொன்னம்பலம் இராமநாதன் (இவர் என்று எனது நினைவில் உள்ளது) முஸ்லிம்களை தமிழர்கள் என்றபோது முஸ்லிம்கள் கடும் போர்க்கொடி தூக்கி தாம் தனி இனம் என்றனர் என்பது வரலாறு. இவர்கள் இவ்வாறு செய்வதற்கு ஆங்கிலேயரிடமிருந்து கிடைத்த சலுகையே காரணமாகும். இந்தத் தனி இனம் தொடர்பில் ஒரு வாதாட்டம் ஐ.பி.சி தமிழில் முன்னர் ஒரு காலத்தில் ஒரு ஒளிபரப்பானது என்பது கூடுதல் தகவல்.
  4. புலிகளும் முஸ்லிம்களும் 1989ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி அவர்களுக்கு தனி பண்பாடு உள்ளதை புலிகள் ஏற்றதோடு அவர்கள் தனி இனம் என்பதையும் ஏற்றுக்கொண்டனர்.
  5. விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் சிறப்பு படையணியின் கப்பல்கள் & விசைப்படகுகளுக்கு சில வரிகள் --> நன்னிச் சோழன் இங்கே தெரிந்தெடுத்தவை யாவும் "அலை பாடும் பரணி" என்னும் இசை இறுவட்டிலுள்ள அந்தி நேரப் பொழுதிலே என்ற பாடலிலிருந்து எடுக்கப்பட்ட வரிகளாகும். ஆயினும் அம்முழுப் பாடலுமே இவர்கள் மேல் தான் பாடப்பட்டது. https://eelam.tv/watch/%E0%AE%85%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%A8-%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%B4-%E0%AE%A4-%E0%AE%B2-andhi-nera-poluthile-eelam-song_Sz3tAADad8vhyiV.html எமது முகவர்களுக்கு: "உலகம் முழுதும் உலவிச் சென்று உதவி செய்த உள்ளங்கள்" எமது வள்ளங்களுக்கு: "உணர்வு கொண்டு மண்ணை எண்ணி உயரச் சென்ற வள்ளங்கள்" எமது ஆழ்கடலோடிகளுக்கு: "கடலை முழுதும் அளந்தவர், கப்பலில் பொருளைக் கொணர்ந்தவர்" "தாயகத்தின் உயிரைப் பேண" = To maintain the life line of the homeland
  6. 222 பேரின் பட்டியலைப் பார்த்தேன்... தேடப்படுபவர்கள் என்றிருக்கிறது.... இதில் அரிசியல்துறை, புலவாய்வுத்துறை என்பதிலிருந்து அறிக்கை விடுபவர்களின் பெயர்கள் இருக்கின்றனவா என்று தேடிப்பார்த்தேன், தயாமோகன் என்பவரைத் தவிர ஒருவரின் பெயரையும் காணோம் (எனது கண்ணிற்கு தெரியாமல் மறைந்திருக்கிறதோ?). தணிக்கை ************************************* குறிப்பாக தாங்கள் புலிகள் தானென்றும் சிங்கள அரசிற்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கிறோம் என்று பொதுவாக பொதுவெளியில் சொல்லித்திரியும் புலவர் (சிங்களம் சுடுதண்ணி குடித்த நாய் போன்று திரிந்த 2010/2011 ஆம் ஆண்டளவில் துவிட்டரில் தான் நீலவரியுடன் இருக்கும் நிழற்படங்களை வெளியிட்டிருந்தவர். அங்கிருந்துதான் நானே இவரின் படங்களை எடுத்தேன்!) செழியன் (இன்றளவும் முள்ளிவாய்க்காலிலிருந்து தலைவர் தப்பி வெளிநாட்டில் இருக்கிறார் என்று அவிழ்த்துவிட்டுக்கொண்டு இருக்கிறார், இறுதியாக 2024இல் கூறியிருந்தார்), ஜெயாத்தன் போன்றோரின் பெயர்களைக் காணவில்லையே..... "துவாரகா" புகழ் அப்துல்லாவின் பெயர் முதற்கொண்டிருக்கும் போது இவர்களின் பெயர் விடுபட்டுள்ளதே? அது எப்படி திமிங்கிலம்? பிற்குறிப்பு: 2009 மே வரை இவர்கள் செய்தவற்றை மதிக்கிறேன், என்றினும் கேள்வி கேட்கமாட்டேன். ஆனால் மேயிற்குப் பின்னர் இவர்கள் புலிகளின் பெயரில் நுங்குவண்டி ஓட்டுவது நிப்பாட்டப்பட வேண்டும்.🤬
  7. எழுத்தாளர்: சபா கிரிஸ் தமிழ் மக்களுக்காக உயிர்துறந்த சிங்கள இனத்தைச் சேர்ந்த "வில்லியம் ஐயே" உம், போராளியாக மாறி வீரச்சாவடைந்த அவரது மகனது கதையும் பலர் அறிந்திருக்க மாட்டீர்கள். நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் இதேநாளில் டிசம்பர் 04, 1984ஆம் உயிர்த்தராசன் குளத்துச் சந்திக்கு அருகில் நடைபெற்ற படுகொலையில், படையினரால் 200+ பொதுமக்கள் படுகொலைசெய்யப்பட்டனர். இதில் தொடர்புடைய இன்னுமோர் விடயத்தைக் கட்டாயமாக நாம் அறிந்திருக்க வேண்டும். மேற்சொன்ன சம்பவத்தில் ஒரு பேருந்தில் வந்தவர்களும் சுடப்பட்டார்கள். அப்பேருந்திலிருந்து பயணிகள் இறக்கப்பட்டு, அடையாள அட்டை பார்க்கப்போவதாக கூறி, வரிசையில் நிறுத்தப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அப்பேருந்தில் மட்டும் ஏறக்குறைய ஐம்பது(50) பேரளவில் இருந்திருக்கின்றார்கள். பேருந்திலிருந்து பயணிகளை இறக்கி அவர்களைச் அழித்தொழிக்கப் போகின்றார்கள் என்பதைத்தன் மதுநுட்பத்தால் புரிந்துகொண்ட பேருந்து நடத்துனரான சிங்கள இனத்தைச் சேர்ந்த ‘வில்லியம் ஐயே(ஐயா)’, பயணிகளை இறக்க அனுமதிக்காது படையினருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வில்லியம் ஐயாவை முதலில் பலவந்தமாக இழுத்து வெளியே வைத்துக்கொண்டு, எல்லாப் பயணிகளையும் இறக்கிவரிசையில் வைத்துச் சுட்டபோது இந்த ஓட்டுனரையும் கொன்றொழித்திருக்கின்றார்கள். அப்பேருந்தில் பயணம்செய்த திருமணமாகி மூன்று நாள்களான எங்கள் கணித ஆசிரியர், அச்சூட்டுச் சம்பவத்தில் தப்பிப்பிளைத்தவர். அவரே இச்சம்பவத்தை கண்ணீரோடு எங்களுக்கு ஒருமுறை விரித்தார். அன்றைய காலத்திலேயே எம் மக்களுக்காக உயிர்கொடுத்த உறவு வில்லியம் ஐயே. சகோதர மொழிபேசும் சகோதர இனத்தவர். மறந்துபோகாது இன்றும் பலருடைய நெஞ்சங்களில் இருப்பவர். பூசையறையில் வைத்து பூசிக்கப்படவேண்டியவர். மடுறோட்டில்தான் வாழ்ந்தவர். அடிக்கடி மடுவுக்குச் செல்கின்றபோது இவரைப் பல தடவைகளில் பேருந்தில் கண்டிருக்கின்றேன். அந்த உயர்ந்த உள்ளம் கொண்ட உத்தமர், என் கண்களுக்குள் இன்றும் நிழலாடுகின்றார். எல்லா மக்களையும் அறிந்திருந்தார். இயல்பாகப் பழகுகின்ற பண்பான மனிதர். பெருத்த உருவம் உடையவர், சிங்கள உச்சரிப்பில் தமிழைத் தமிழர்களைவிட நன்றாகப் பேசும் திறமையானவர், வறுமைப்பட்டவர்கள் பேருந்தில் ஏறுகின்றபோது அரசினுடைய வர்த்தமானி அறிவிப்பு இல்லாமலேயே அக்காலத்திலேயே சிறப்புச் சலுகை வழங்கியவர், மாணவர்களை அன்றைய காலத்திலேயே இலவசமாக ஏற்றிப் பறித்த பாரி அவர்! தன் பொறுப்பில் உள்ள மக்களுக்காக தன்னுயிரைப் பொருட்படுத்தாத தியாகி அவர். அன்று அவர் தாராளமாகத் தப்பித்திருக்கலாம். அவரின் உயிருக்கு எந்த ஊறும் நிகழ்ந்திருக்காது! ஆனால், தன் மக்களுக்கா, நீதிக்காக நின்றதினால் அவர் தன் இன்னுயிரை எமக்காய் இழந்தார். அவ்வாறே அவருடைய மகனும் தமிழீழ விடுதலைப்போரில் புலியாகி நின்று வீரச்சாவடைந்தார். கப்டன் பிரவின்ராஜ் (கேடி ஜெயசேன ஆரியவன்ச, 24.02.1993) மடு வீதி, மன்னார். 1993 ஆம் ஆண்டு மன்னார் நானாட்டான் படை முகாமிற்கும் கட்டைக் காட்டிற்கும் இடையில் அமைந்திருந்த தொடர் காவலரண்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவடைந்தார். இவரது பெயரில் ஓர் எழுச்சிக் குடியிருப்பு, "கப்டன் பிரவின்ராஜ் எழுச்சிக் குடியிருப்பு", மன்னாரில் 22/08/1993 அன்று மாவட்டக் கட்டளையாளர் திரு கதிர் மற்றும் மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு கணேஸ் ஆகியோரால் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்விற்கான ஈகைச்சுடரினை மாவீரரின் தந்தையே ஏற்றிவைத்தார் (24/8/1993 ஈழநாதம், பக்-4). இப்படிக் கதைகள் கனக்கவே இருக்கின்றன. கதைக்க வெளிக்கிட்டால் இதயம் கனத்துப்போகின்றது…! இருப்பினும் அவை எழுதப்பட வேண்டும். வில்லியம் ஐயா போன்ற மனிதாபிமானிகள், தியாகிகள், உத்தமர்கள், எங்கும் இருக்கின்றார்கள். அவர்கள், இனங்களை மதங்களை நிறங்களை மொழிகளை, மனித வரையறைகளைக் கடந்து — வாழ்ந்தவர்கள் — வாழ்பவர்கள் — வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்.
  8. இதில் குறிப்பிடப்பட்டுள்ளது போலல்லாது சிறிலங்கா படைத்துறையானது 1991 ஆம் ஆண்டு (ஆகக்குறைந்து) முதற்தடவையாகவும் 1995 முதற் கொண்டு பல தடவையும் புலிகளின் வான்கலங்களின் பறப்புகளை கண்டு வெளியுலகிற்கு அறிக்கையிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். மேலும் இங்கு கட்டுரையாளரால் குறிப்பிடப்பட்டுள்ள உலங்குவானூர்தி என்ற சொல்லானது தற்சுழல்பறனை (Gyroplane/Autogyro/Gyrocopter) என்பதை குறிக்கிறது.
  9. படைத்தவர்: அறியில்லை எழுத்தாக்கம்: ஒலிநாடாவிலிருந்து எழுத்தாக்கம் செய்தேன்(நன்னிச் சோழன்) ஆண்டு: 2012/2011 (https://eelam.tv/watch/%E0%AE%B5-%E0%AE%A9-%E0%AE%AA-%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2-%E0%AE%B1-%E0%AE%AE-%E0%AE%B5-%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A9-%E0%AE%A8-%E0%AE%A9-%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AE-history-of-sky-tigers-and-the-memory-of-sky_enyGD5qQmlTPtG5.html) தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றில் என்றும் நிகழ்ந்திராத சாதனையாக வான்புலிகளின் சாதனைகள் நடந்தேறியுள்ளன. விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் வான்பறப்பு முயற்சிகளில் கிட்டண்ணா ஈடுபட்டிருந்தார். யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வெளியில் ஆரம்ப கால பறப்பு முயற்சிகள் வெற்றியளிக்காத போதிலும் விடுதலைப் போராட்டம் இன்று இலக்குத்தவறாத வான் தாக்குதலை நடத்தும் வல்லமையை கொண்ட வான்புலிகள் அணியை அன்று கொண்டதாக வளர்ச்சிபெற்று விட்டது. இந்த வெற்றியை நேரில் நின்று பார்த்து பெருமைப்படுவதற்கு அவர் இல்லாது போனாலும் வானிலிருந்து ஏனைய மாவீரர்களுடன் பார்த்து நிச்சயம் மகிழ்வார் என்றே நம்பலாம். உலக வரலாற்றில் முப்பெரும் படைகளையும் கொண்டிருக்கும் முதற் பெரும் இயக்கமாக விடுதலைப் புலிகளை அடையாளப்படுத்தியது வான்புலிகளின் வருகைதான். கடற்புலிகளைப் போன்று வான்புலிகளின் தேவையையும் நன்கு அறிந்த தலைவர் அவர்கள் அதனால் அதற்கான சிந்தனைகளில் செயற்பாடுகளில் தலைவர் ஈடுபட்டிருந்தார். இந்த முயற்சியின் வெற்றி 1998ம் ஆண்டு மக்களுக்கு தெரிய வந்தது. அதாவது முள்ளியவளையில் உள்ள மாவீரர் துயிலுமில்லம் மீதில் விடுதலைப் புலிகளின் வான்புலிகள் உலங்குவானூர்தியில் சென்று மலர்தூவி வணக்கம் செலுத்தியது அன்று மக்கள் பலரும் கண்ணூடாக பார்த்தார்கள். அதன் பின்புதான் விடுதலைப்புலிகளின் வான்படை பரிணாமம் பெறுகிறது. அன்று வான்புலிகளுக்கு கேணல் சங்கரண்ணா தான் பொறுப்புடன் நின்று செயற்பட்டார். வற்றாப்பளைப் பகுதியில் பாரிய முகாம்கள் அமைத்து மக்களுடன் நெருங்கிய உறவினை வளர்த்தார் சங்கரண்ணா அவர்கள். அன்றைய காலகட்டப் பகுதியில் வான்புலிகளின் வான்கலங்கள் வற்றாப்பளை, நந்திக்கடல் வெளியில் தான் பறப்பில் ஈடுபடும். அவ்வாறு சிறிய வெளிகளிலெல்லாம் பயிற்சித் தளங்களை அமைத்து விடுதலைப் புலிகளின் வான்புலிகள் பயிற்களில் ஈடுபட்டார்கள், தொடக்க காலத்தில். இதில் உலங்குவானூர்தி மற்றும் கிளைடர் வகை வானூர்திகள் ஈடுபடுத்தப்பட்டன. விடுதலைப் புலிகளின் இந்த வான்கலங்களை அன்று அப்பகுதியில் வாழ்ந்த மக்களும் அறிந்திருந்தார்கள். ஆனால் வெளியுலகிற்கு வான்புலிகளின் செய்திகள் தெரிந்திருக்கவில்லை. இவ்வாறான நிலையில் வான்புலிகள் வெளியுலகிற்கு அறிமுகமாகாத காலத்தில் சிறிலங்கா வான்படையிடம் வான்கலமொன்று அகப்பட்டுக்கொள்ளும் நிலையும் ஏற்பட்டது. அது வான்புலிகளின் உலங்குவானூர்தி ஒன்று முல்லைத்தீவு நந்திக்கடல் வெளியில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை முள்ளியவளை, கேப்பாப்பிலவு, முல்லைத்தீவு பகுதிகளில் சுற்றிச் சுற்றி வட்டமிட்டுக்கொண்டிருந்தது. அந்த வேளையில் தான் சிறிலங்கா வான்படையினரின் தாக்குதல் திறம்மிக்க வானூர்தியான புக்காரா, மிகையொலி வேக வானூர்திகள் முல்லைத்தீவை நோக்கி திடீரென வந்துவிட்டன. வான்புலிகளின் உலங்குவானூர்தி இன்னமும் பறப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. முள்ளியவளை பகுதிக்கு போர் வானூர்திகள் வந்துவிட்டன. வானூர்திகள் திடீரென வந்துவிட்டதால் வான்புலிகள் உலங்குவானூர்தியை உடனடியாக தரையிறக்க வேண்டிய நிலை எழுந்துவிட்டது. தங்களது வான்தளத்தில் தரையிறக்கினால் எதிரி அந்த இடத்தினையும் வான்கலங்களையும் அடையாளம் கண்டுவிடக்கூடும் என்பதால் அவசர அவசரமாக வற்றாப்பளைக்கும் கேப்பாபிலவிற்கும் இடைப்பட்ட வயல்வெளிப்பகுதியில் தரையிறக்கினார்கள். இவ்வாறுதான் அன்று வான்கலங்களை பாதுகாத்து விடுதலைப் புலிகளின் வான்படையினர் அடுத்தகட்ட பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர். இரணைமடு பகுதியில் பாரிய வான்படைத் தளத்தினை நிறுவினார்கள். விமான ஓடுதளம் அமைக்கப்பட்டது. இது சிறிலங்கா அரசின் கண்களுக்கு குத்துகின்றது. பன்னாடுகளில் பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது, தவிபு இடம் வான்கலங்கள் உள்ளனவென்று. அருகிலுள்ள இந்தியாவிற்கு அச்சுறுத்தலென்று சிறிலங்கா அரசே தனது வாயால் பரப்புரை சொல்கிறது. இவ்வாறுதான் தவிபு இன் வான்புலி அணியினர் சற்றுச் சற்றாக வளர்ந்துகொண்டிருந்த காலகட்டப்பகுதியில் முதற் தாக்குதலை கட்டுநாயக்கா வான்படைத்தளம் மீது மேற்கொண்டார்கள். அதன் பின்னரான காலத்தில் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டார்கள். ஆனால் சிறிலங்கா அரசோ தவிபு இன் வான்படையினரை அழித்துவிடவேண்டுமென்று கங்கணத்தில் இரணைமடுவிலுள்ள வான்தளம் மீதில் இரவு-பகல் பாராது பல தடவைகள் வான்குண்டுகளை வீசி வான்தளத்தை அழித்தார்கள். எல்லாவற்றிற்கும் நடுவணில் தான் கோழி தன் இறக்கைக்குள் குஞ்சுகளை காப்பது போல் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் வான்புலிகள் அணியினை பக்குவமாக பாதுகாத்தார். கட்டுநாயக்கா வான்படைத்தளம், அதன் பின்னரான முத்துராஜவெல - கொலன்னாவை எண்ணைக் களஞ்சியங்கள் மீதான தாக்குதல்கள், வவுனியா ஜோசப் படைத்தளம் மீதான தாக்குதல், மணலாறில் ஆற்றடிப் படைத்தளம் மீதான தாக்குதல் என்று வான்புலிகளின் தாக்குதல் தொடர்ந்துகொண்டிருந்த காலகட்டத்தில் விடுதலைப் புலிகளின் வான்புலிகளை அழிப்பதற்கு சிறிலங்கா அரசு கங்கணம் கட்டியது. இந்த வேளையில் தரையில் போர் உக்கிரமடைந்தது. அதாவது மன்னாரிலிருந்து நகர்ந்த சிறிலங்காப் படையினர் கிளிநொச்சியை அண்மித்துவிட்டார்கள். அதன் பின்னர் இரணைமடுப் பகுதியை அண்மித்துவிட்டார்கள். இரணைமடுப் பகுதியில் விடுதலைப் புலிகளின் வான்படைத்தளத்தை கைப்பற்றிவிட்டதாகவும் அறிவித்திட்டார்கள். இந்த நிலையிலும் தமிழீழத் தேசியத் தலைவரவர்களால் வான்புலிகள் காப்பாற்றப்பட்டு பௌத்திரமான இடத்தில் பாதுகாப்பாக வைக்கப்படுகிறார்கள். இறுதியாக சிறிலங்காப் படையினரின் நகர்வு விசுவமடு - புதுக்குடியிருப்பை அண்மித்த காலகட்டப் பகுதியில் சுற்றுமுழுதான பல்குழல் எறிகணைக்கு தமிழ் மக்கள் இலக்காகிக்கொண்டிருந்த காலகட்டமாக அன்றைய காலகட்டம் காணப்படுகின்றது. அதாவது 20/02/2009 அன்று சிறிலங்காப் படையினரின் எறிகணைத் தாக்குதலுக்கு நடுவணில் வான்கரும்புலிகள் பறந்து சென்று கொழும்பின் தலைநகர் பகுதியில் தாக்குதல் நடத்தி வீரவரலாறானார்கள். அந்த வீரவரலாறானவர்கள் தான் கேணல் ரூபன் மற்றும் லெப். கேணல் சிரித்திரன். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றில் வான்புலிகளின் சாதனை என்றும் மறந்திட முடியாது. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் பதியப்பட்ட நாளாக இன்றைய நாள் அன்று காணப்படுகின்றது. அதாவது வான்கரும்புலிகளின் நினைவுநாள் இன்றாகும். அந்த வான்கரும்புலிகளின் நினைவுகளை இன்று நாம் மீட்டுகிறோம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.