Everything posted by நன்னிச் சோழன்
-
பாலச்சந்திரனின் மரணச் செய்தி கேட்டு மனமுடைந்தாராம் மகிந்த! இப்படிக் கூறுகிறார் நாமல்
இந்தியாக்காரன் என்று நான் சொல்லவில்லை!
-
பாலச்சந்திரனின் மரணச் செய்தி கேட்டு மனமுடைந்தாராம் மகிந்த! இப்படிக் கூறுகிறார் நாமல்
நயவஞ்சகம் என்றால் அது சிங்களவன் தான்
-
கல்லறையின் காவலன் – சிங்கண்ணா ( கோமகன்)
“தயவு செய்து என்னை எரிக்காதீங்கோ. என் அண்ணாக்குப் பக்கத்தில கொண்டு போய் தாட்டு விடுங்கோ அது மட்டும் எனக்குப் போதும். “ என்று தனது மருமகனுக்கு சொல்லி விட்டு தன் மூச்சை நிறுத்திவிட்டார் அந்த உயரமான பருமனான உடலமைப்புக் கொண்ட அந்த விடுதலை விரும்பி. அவரை கோமகன் என்று அறிந்தவர்களை விட சிங்கண்ண என்று அறிமுகம் கண்டவர்கள் தான் அதிகம். சாதாரண போராளிகள் முதல் மூத்த தளபதிகள் வரை சிங்கண்ண என்றால் அறிமுகம் அற்றவர்கள் இருக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர் அவ்வாறான புனிதமான பணியில் இருந்தார். மாவீரர்கள் தமிழ்த் தேசத்துக்காக தமது இன்னுயிர்களை ஆகுதி ஆக்கி விசுவமடு துயிலும் இல்லம் வரும்போது இந்த மனிதனை சந்திக்காமல் குழிக்குள் போவதில்லை. விசுவமடு துயிலும் இல்லத்தில் தனது இறுதிக்கால பணியைச் செய்த சிங்கண்ண என்ற கோமகன் திடமானவராகவும், தேசம் மீதும் மாவீரர்கள் மீது எவ்வளவு நேசத்தை கொண்டிருந்தார் என்பதை அவரோடு பழகிய அனைவரும் நிச்சயமாக அறிந்திருப்பர். விசுவமடு மாவீரர் துயில்கின்ற இல்லத்தை தனது குல தெய்வங்களின் கோவில் போலவே நேசத்தோடு பராமரித்து வந்தார் கோமகன். இறுதி காலங்கள் விசுவமடு துயிலுமில்லம் அவரது வீடாகிப் போன போது அவரது வாழ்வும் அதுவே ஆகிவிட்டது. கோமகனின் போராட்ட வாழ்க்கை இன்று நேற்று ஆரம்பித்ததல்ல, பிறந்த காலம் தொட்டு தனது சாவடைந்த நாள் வரை போராட்டமே வாழ்வாகி கொண்டவர் ( ஈழ விடுதலைப் போராட்டம் மட்டுமல்ல சாதியப் போராட்டத்துக்கு எதிராகவும் ) மிருதங்க வாத்தியக் கலைஞரான முருகனின் மூன்றாவது பிள்ளையாக பிறந்த சிங்கராஜா சிறுவயதாக ஓடியாடி விளையாடிய பருவத்திலையே தனது தந்தையை இழந்து தவித்த போது தாயின் அரவணைப்புக்குள் வளரத் தொடங்கிய போது, அவரது கிராமத்தை சாதிய வெறியர்களின் பேயாட்டம் சீர்குலைக்கத் தொடங்கியது. திரும்பும் இடமெங்கும் அடக்கியாள பேரினவாதமாக சாதியவாதிகளின் ஆணாதிக்க சக்திகள் பரவிக் கிடந்தன. அப்போது சாதியத்துக்கு எதிரான போராளியாக, அவ்வூரின் காவல்காறர்களாக அன்றைய இளைஞர்கள் மாறிய போது, கந்தவனம் என்ற பெயரைக் கொண்ட மூத்த சகோதரன் கரங்களில் ஆயுதங்களை ஏந்தி இருந்தார். இன்னொரு சகோதரனனான இரத்தினம் ( பெரியதாய் மகன்) ஒரு கரத்தில் ஆயுதமும், மறு கரத்தில் பேனாவையும் தூக்கி இச் சாதி வெறியர்களின் அடக்குமுறைக்கு எதிராக போர் புரிந்தனர். ஆனால் அப் போர் ஓயும் முன்பே அக் கிராமத்துக்கு பேரிடியாய் ஒரு சாவு விழுந்தது. கோமகனின் மூத்த சகோதரன் திட்டமிட்டு வெட்டிச் சாகடிக்கப்பட்டார். இந்த சாவுடன் ஆரம்பித்தது இக் குடும்பத்தின் போராட்ட வரலாறு. இந்திய வல்லாதிக்க சக்திகள் அமைதிப்படை என இலங்கை வந்திருந்த போது, இந்தியப்படையின் கொடூரமுகத்தை முன்னமே ஊகித்துக் கொண்ட தேசியத் தலைவர் இந்தியாவை எதிர்த்து போராட முடிவெடுத்த போது , தமிழீழ விடுதலைப்புலிகளின் இளம் போராளியாக இருந்தார் சுருளி என்கின்ற சிவராசா. அவரையும் அவர் சார்ந்த அணியையும் பாதுகாக்கும் பணி அதிகமாக கோமகனை சார்ந்ததாகவே இருக்கும். ஒரு இடத்தில் தாக்குதல் நடந்தால் அல்லது அப்பகுதி தேடுதல் வேட்டைக்கு உட்படுத்தப்பட்டால், அப்பகுதியில் மதிவண்டியோடு காத்திருப்பார் கோமகன். இந்திய இராணுவம் மீதான அத் தாக்குதலை முடித்துவிட்டு / சுற்றிவளைப்பை முறியடித்து பின்வாங்கும் புலி அணிகளை பாதுகாப்பான இடத்துக்கு நகர்த்தி பாதுகாப்பு தருவார் கோமகன். இவ்வாறு தமிழீழ விடுதலைப்புலிகளின் வடமராட்சி பிரதேச அணிகளை பாதுகாத்துக் கொண்டிருந்த சிங்கண்ணனால் தனது தம்பியான சுருளியை அன்று காப்பாற்ற முடியவில்லை. இன்று தாம் நல்லவர்கள் என்ற பெயரில் அரசியலில் இருக்கும் ஒரு ஒட்டுக்குழு ஒன்று சிங்கண்ணனை காட்டிக் கொடுத்து கைது செய்து சித்திரவதை முகாம் ஒன்றில் அடைத்திருந்தது. அதே நேரம் அக்கிராமத்தை சுற்றிவளைத்து சுருளியை கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டும் செயற்பட்டது. கரவெட்டி கிராமம் முற்றுமுழுதாக சுற்றிவளைக்கப்படப் போவதை அறிந்த சுருளி தனது அண்ணன் கைதாகி விட்டதால், மற்ற சகோதரனான இரத்தினத்தையும் கைது செய்து விடுவார்கள் என அஞ்சினார். அதனால் அப்பிரதேசத்துக்கு போக வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டதையும் தாண்டி தனது சகோதரனுக்கு அத்தகவலை தெரிவித்து உடனடியாக கிராமத்தில் இருந்து வெளியேற்றுவதற்காக கரவெட்டி மத்திப் பகுதியில் இருந்து கிழக்கை நோக்கி செல்கிறார். அப்போது ஏற்கனவே திட்டமிட்ட பொறிக்குள் சுருளி வருகிறார். அக்கிராமத்தை சேர்ந்த காட்டிக்குடுப்பாளன் ஒருவனால் கச்சிதமாக போடப்பட்ட இக்கொலைத்திட்டம் நிறைவேறிய போது இந்தியன் இராணுவத் தாக்குதலில் காயமடைந்தும், பக்கத்து மதில் பாய்ந்து ஓடிய போது ஒரு துரோகி வீட்டுக்குள் நுழைந்து விடுகிறார். வழி தெரியவில்லை உயிருடன் பிடிபடக் கூடாது என்பதால் குப்பி கடித்தார். சகோதரனை காப்பற்ற வேண்டும் என்ற நினைப்பில் வந்த சுருளி லெப்டினன் சுருளியாக வீரச்சாவடைந்தார். அதன் பின்பான காலம் அதிகமான சண்டைகளை இந்தியப் படைகளோடு புலிகள் செய்த காலம். அதே நேரம் கைதாகி சித்திரவதைகளுக்குள்ளான சிங்கண்ண விடுதலை செய்யப்பட்ட போது முழு உடலும் அடி காயங்களாலும், உள் காயங்களாலும் வலியாலும் நிரம்பிக் கிடந்தது. அவரது துணைவியான சரஸ்வதியும், சகோதரிகளும் அவரை மருத்துவத்தாலும், கவனிப்பாலும் மீண்டும் சாதாரணமானவராக மீட்டெடுத்தனர். அவர் சாதாரணமானவராக நடமாடியத் தொடங்கிய போது இவரது மைத்துனனான மேயர் செங்கதிரும் வீரச்சாவடைந்திருந்தார். தம்பியையும், மைத்துனனையும் தமிழீழத்தை அபகரிக்கும் நோக்கில் வந்த இந்திய படையிடமும் சிங்கள வல்லாதிக்க இராணுவத்திடமும் பறிகொடுத்த சிங்கண்ணனாலும், இரத்தினத்தாலும் இன விடுதலைக்காக போராடாமல் வீட்டுக்குள் முடங்கிப் போய் கிடந்து வீடும் குடும்பமும் தனி வாழ்க்கையும் என்று இருந்துவிட முடியவில்லை. அதையும் தாண்டி அவர்கள் விடுதலைக்கான பயணத்தில் தம்மை போராளிகளாக்கினர் இரத்தினம் 1991 ஆம் வருடத்தில் இருந்தும் சிங்கண்ண 1994 ஆம் வருடத்தில் இருந்தும் பயணிக்கத் தொடங்கினர். அரசியல்த் துறையில் சிங்கண்ண கோமகனாகவும், இரத்தினம் பாரிமகனாகவும் இணைக்கப்படுகிறார்கள். களமும், அரசியலும் என்று பயணித்த கோமகன் தனது இறுதி நாட்கள் வரை இந்த தேசத்தை நேசித்த ஒரு உன்னதமான போராளி. அரசியல்த்துறைப் போராளியான கோமகனுக்கு அங்கே பல பணிகள் காத்திருந்தன. சண்டைப் பணி மட்டுமல்லாது, பரப்புரை, மனிதநேயப்பணிகள், என்று பல பணிகள் கொடுக்கப்பட்டன. யாழ்ப்பாணத்தை இனவழிப்புப் படைகள் முழுமையாக கைப்பற்றுவதற்கு சந்திரிக்கா தலமையிலும், அனுரத்வத்தவின் முயற்சியிலும் ஈடுபட்டு வந்த நேரத்தில் சில ஊர்களுக்குள் மீண்டும் குழு மோதல்கள், சாதிய வெறிச் சண்டைகள் என மக்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், அவ்வாறான பிரச்சனைகளை கையாளவும், இச்சண்டியர்களை கட்டுப்படுத்தவும் வேண்டிய தேவை எழுகிறது. அதனால் வடமராச்சியில் பணியில் இருந்த பலர் ஒருங்கிணைக்கப்பட்டு சண்டைகளில் ஈடுபட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை குழப்புவபர்கள் இனங்காணப்பட்டனர். அவர்களை கைது செய்து மக்கள் வாழ்க்கையை இயல்புக்கு கொண்டு வருவதற்கு இட்ட கட்டளையை நிறைவேற்ற சென்றபோது ஓர் இடத்தில் கோமகனின் கழுத்தை நோக்கி வீசப்பட்ட கத்தி அவரது மூக்குப் பகுதியில் காயத்தை ஏற்படுத்திவிட்டுச் சென்றது. இவ்வாறு இனவழிப்புப் படைகளுடன் மட்டுமல்லாது, மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு தீங்கிழைக்கும் எவரையும் எதிர்த்து நிற்பார் கோமகன். யாழ்மாவட்டத்தை விட்டு எமது அமைப்பு பின்நகர்ந்த போது ஒட்டிசுட்டான் பகுதியில் வீட்டை அமைத்த கோமகன் குடும்பத்தை விட்டு பணிக்காக போய்விட்டார். பின் அங்கிருந்து வள்ளிபுனம் நோக்கி நகர்ந்துவிட்டார். கோமகனின் மனைவி, பிள்ளைகளை பாதுகாத்து, பராமரித்து கல்வியூட்டி வளர்த்து வந்தார். அப்போது இவர்களின் மூன்றாவது பிள்ளையான பரிமளா தந்தை வழியில் போராட வேண்டும் என்று மாலதி படையணியில் இணைந்து கொண்டாள். கோமகனின் மகள் கோமகள் என்ற பெயரில் காவல் காத்தாள். அவள் சண்டை அணியில் நின்ற போது பின்களப் பணிக்காக மக்களை அழைத்துக் கொண்டு சென்ற கோமகன் கவலரன் ஒன்றில் மகளை காண்கிறார். வரி உடையில் அப்பாவும் மகளும் களமுனையில் நின்ற அக்காட்சி எம் விடுதலைப் போராட்டத்துக்கு மட்டுமே உரியது. அங்கிருந்த பொறுப்பாளரிடம் மகளோடு உரையாடுவதற்கு அனுமதி கேட்ட போது பொறுப்பாரின் கண்கள் பனித்தன. எத்தனையோ வீடுகளில் ஒருவர் கூட போராட்டத்துக்காக பங்கெடுக்காத நிலையில் இக்குடும்பத்தால் மட்டும் இவ்வாறு வாழ எவ்வாறு முடிந்தது? மகளுக்கு பொறுப்பாக நின்ற பெண் போராளி உடனியாக காவலரனில் இருந்து பின்நகர்த்தி தந்தையோடு பேசுவதற்கு அனுமதித்தாள். ஆனால் இருவருமே களப்பணியில் நிற்பதால் நீண்ட நேரம் பேசவில்லை. விழிகள் கலங்கினாலும் விடைபெற்றுக் கொள்கிறார்கள். 6 பிள்ளைகளை பெற்றெடுத்த கோமகனுக்கு முதல் பிள்ளை சாதாரணமான பிள்ளையாக வளர்ந்தும் 14 வயதில் இருந்து உடல்நலம் குன்றியவனாக போனது மனவேதனை. என்றாலும் அப்பிள்ளையை சிறப்பாக கவனித்து வந்தார். 2000 ஆண்டளவில் அப்பிள்ளை சாவடைந்து விட துடித்துப் போனார்கள் பெற்றவர்கள். ஆனாலும் மக்களின் வாழ்வுக்காக போராளியானவரல்லவா அவர். அவ்விழப்பில் இருந்து மீண்டு வந்தார். ஆனால் அடுத்த இழப்பும் அவர்களுக்கு வரப்போவதை அறியவில்லை. யாழ்ப்பாணத்தை நோக்கி பெரும் திட்டமிட்ட சண்டை ஒன்றை விடுதலைப்புலிகளின் படையணிகள் செய்கின்றன. குடாரப்பு ஊடாகத் தரையிறங்கி யாழ்ப்பாணத்தில் குந்தி இருந்த இராணுவத்தை முடக்குவதற்கான பெரும் சண்டை. அத் தரையிறக்க சண்டைக்கு படையணிகள் கடல் வழியாக நகர்ந்த போது, தரைவழியாக நகர்ந்த படையணிகளுக்கான பின்னணி வழங்கலுக்காக சிங்கண்ண அனுப்பப்படுகிறார். திறமையான சாரதி, கடுமையான உழைப்பாளி. எதற்கும் அஞ்சிடாத துணிந்தவர். இவர் இப்பணியில் இருந்த போது கோமகள் முன்னணியில் சண்டையிட்டுக் கொண்டிருந்தாள். அப்பாவும், பிள்ளையும் ஒரே களமுனையில் இனவழிபு அரசை எதிர்த்து நின்றனர். ஒரு நிலையில் முன்னணியில் சண்டையிட்டுக் கொண்டிருந்த கோமகள் வீரச்சாவடைய அக் குடும்பம் மீண்டும் பேரிழப்பை சந்திக்கிறது. அதே நேரம் மகள் மகள் வீரச்சாவடைந்ததைக் கூட அறியாதவராக, பின்களப் பணியில் இருந்து மீண்ட அவர் நேரடியாக தியாகசீலத்துக்கு சென்றார். (தூண்டி) அங்கே பணி செய்த அவருக்கு மகள் வீரச்சாவடைந்தது கூட தெரியவில்லை. அவர் அங்கே வந்திருந்த வித்துடல்களை தூய்மைப் படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களோடு இணைந்து அவ்வேலையை செய்துகொண்டிருந்தார். அதனால் மகள் வீரச்சாவடைந்ததை கூட அறியவில்லை. வித்துடல் வீட்டுக்கு வந்த பின் தான் அறிந்து கொண்டார். வீட்டுக்கு வர தாமதமும் ஆனார். அதே நேரம் அவர் பணியாற்றிய விசுவமடு துயிலும் இல்லத்திலையே உறங்கினாள் அவரின் மகளும். ஆனாலும் துவண்டு விடவில்லை. தன் பணியில் உறுதியாகவே இருந்தார். அவர் மாவீரர்கள் மீது வைத்திருந்த பாசம், அவர்களை உறங்க வைக்கும் துயிலுமில்லங்களை மேம்படுத்துதல், புனரமைத்தல் என்று பணி கொடுக்கப்பட்டு மாவீரர்பணிமனைப் பொறுப்பாளர் பொன்தியாகம் அப்பாவின் பொறுப்பில் பணியமர்த்தப்படுகிறார். இதன் பின்பான காலமே எப்போதும் அவர் நேசிக்கும் மாவீரர்களோடு அவர் அதிகமாக வாழத் தொடங்கினார். அவ்வாறான ஒரு நிலையில் தான் சமாதானம் என்ற பெயரில் எம்மீது நடாத்தப்படவிருந்த இனவழிப்புக்கான தயார்ப்படுத்தல்களை சிங்கள தேசம் தொடங்கியிருந்தது. அப்போது கொடிகாமம், சாட்டி போன்ற துயிலும் இல்லங்களை உடனடியாக புனரமைக்கும் பணி கோமகனுக்கு கொடுக்கப்பட்ட போது அதை சரியாக செய்து முடித்தார். பின் நாட்களில் சமாதான காலம் முறிவடைந்த போது விசுவமடு துயிலும் இல்லம் கோமகனின் வீடானது. அப்புனித இடம் அவரது கோவிலானது. தினமும் அக் கோவிலை பூசித்து வந்த கோமகனால் துயிலும் இல்லத்தை விட்டு பிரிந்து விட முடியவில்லை. இறுதிவரை அங்கேயே பணிசெய்தார். விடுதலைப்புலிகளின் போராளிகளைப் பொறுத்தவரையில் சாவினை எதிர்பார்த்த வாழ்வினைத் தான் ஒவ்வொருவரும் வாழ்ந்தார்கள். அங்கே விதைக்கப்பட்ட ஒவ்வொரு மாவீரனின் கனவுகளையும் சுமந்த ஒட்டுமொத்த உருவமாக கோமகன் துயிலுமில்லத்துக்குள் வாழ்ந்தார். இறுதி யுத்தம் என்ற பெயரில் இனவழிப்பு நடவடிக்கை தொடங்கிய போது, தினமும் வித்துடல்கள் வந்து கொண்டிருந்தன. இரவு பகல் என்றில்லாது வித்துடல்கள் விதைக்கப்பட்டன. தளபதிகள் சாதாரண போராளிகள் என்றில்லாது அத்தனை பேரும் விதையாகிய பொழுதுகளில் எல்லாம் மனம் வலித்தாலும் எதிரி மீது கோவம் வந்தாலும் தான் செய்யும் பணியை நேசித்தார் கோமகன். பிள்ளைகளுடன் நண்பனாக பழகும் அவரால் எளிதில் எல்லோரையும் கவர்ந்து கொள்ளவும் முடிந்திருந்தது. என்ன சிங்கண்ண தியாகம் அப்பா டபிள் பட்ஜட்டா தாறார் உங்கட ஆக்கள் எல்லாரும் ஒரே மாதிரி இருக்கிறீங்களப்பா என அவரின் தொப்பையை நக்கலடிக்கும் போராளிகளை திருப்பி நக்கலடித்து வாய் திறக்காமல் செய்து அனுப்பும் அவரால் அப் போராளி வித்துடலாக மீண்டும் அங்கே வந்தால் எவ்வாறு தாங்கிக் கொள்ள முடியும்? ஆனால் அவர் தாங்கினார். தன் உறவுகளுக்கு கூட அவர் கண்கலங்க மாட்டார். உறவுகளின் என்றாலும் வித்துடல்கள் விதைக்கப்படும் முன் உறுதியுரை வாசிக்கும் போது எந்த பிசிறும் இருக்காது. குரலில் தடுமாற்றம் இருக்காது. உறுதியாகவே தன் பணியாற்றினார். இவ்வாறான பொழுதுகளை எல்லாம் கடந்து வந்த கோமகன் இறுதிப் போர் என்ற இனவழிப்புத் தாக்குதலால் தான்நேசித்த விசுவமடு துயிலும் இல்லத்தை விட்டு பின் நகர வேண்டி இருந்தது. அவரால் முடியவில்லை. ஆனால் சிங்கள தேசமே அவரை அங்கிருந்து நகர்த்தியது. இறுதியாக அத் துயிலுமில்லத்துக்கு வந்திருந்த ஒரு வித்துடலை விதைப்பதற்காக முயன்ற போது, சிங்களப்படையின் எறிகணை ஒன்று வீழ்ந்து வெடிக்கிறது. அவ்வெறிகணை உடல் முழுவதும் காயங்களை உண்டு பண்ணி குருதி பெருக்கெடுத்த நிலையில் துயிலுமில்லத்தை விட்டு வெளியேற்றியது. அன்று தான் அவர் இறுதியாக தன் குலகோயிலை பார்த்தது. இனவழிப்புச் சண்டை முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற போது கலங்கிப் போன சிங்கண்ணையால் எதுவும் செய்ய முடியவில்லை. காயங்களின் கோரம் இயங்குவதில் கொஞ்சம் கடினம். ஆனாலும் இறுதியாக வித்துடல்கள் விதைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் துயிலும் இல்லம் வரை அப்பணியை கைவிடவே இல்லை. மே 12 ஆம் திகதி இரவு 2 மணி சிங்களப்படையின் கொடூரமான தாக்குதல்களின் உச்சம் நடந்து கொண்டிருக்கிறது. நந்திக்களிப் பகுதியில் பங்கரும் வெட்ட முடியவில்லை. வெற்றுத் தரையில் எல்லோரும் படுத்திருந்தார்கள். ஊர் முழுக்க அழுகுரல்கள். திரும்பும் இடமெங்கும் நாற்றமெடுத்த நிலையில் வெற்றுடல்கள். இரத்தச் சிதறல்கள் என முள்ளிவாய்க்கால் முடங்கிக் கொண்டிருந்தது. சிங்கண்ணையின் குடும்பமும் விதிவிலக்கல்லவே. ஆட்லறி எறிகணை ஒன்று அருகில் வீழ்ந்து வெடிக்கிறது. அவரின் குடும்பம் சார்ந்த 20-25 பேர் காயமடைகிறார்கள். அதில் மீண்டும் காயமடைந்த சிங்கண்ண படுகாயமடைந்த தன் மகளை தூக்கிக் கொண்டு இறுதியாக இயங்கிய மருத்துவமனைக்கு ஓடுகிறார். ஆனால் அம்மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவரால் அப்பிள்ளையை காப்பாற்ற முடியவே இல்லை. மறுபடியும் ஒரு பிள்ளையை இழந்த நிலையில் கோமகன் என்ற சிங்கண்ண சிங்களத்தின் கொடூரங்களுக்குள் வாழ வேண்டிய நிலையில் சரணடைகிறார். 18-19 வயது வரை வளர்த்தெடுத்த 3 பிள்ளைகளை இழந்த மனிதன் உடைந்து போகவில்லை. ஆனால் முள்ளிவாய்க்காலில் எம் விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்ட போது உண்மையில் உடைந்து போனார். அவரால் சாதாரணமாக இயங்க முடியவில்லை. மனம் சுக்கு நூறாகிக் கிடந்தது. இந்த நிலையில் ஓமந்தையில் வைத்து காட்டிக் கொடுப்பாளன் ஒருவரால் ( கோமகனுக்கு நன்கு அறிமுகமானவன் ) காட்டிக் கொடுக்கப்பட்டாலும் கைதில் இருந்து தப்பி ஆனந்தகுமாரசாமி முகாமுக்குள் கொண்டு செல்லப்படுகிறார். அங்கு ஒரு மாதத்துக்கு மேல் வாழ்ந்த அவரால் காட்டிக் கொடுப்பாளர்களிடம் இருந்து தப்பிக்க முடியவில்லை. இனங்காணப்பட்டு கைது செய்யப்படுகிறார். கடுமையான சித்திரவதைகள் நடந்தேறின. ஏற்கனவே காயமடைந்திருந்த அவரால் சித்திரவதைகளை தாங்க முடியவில்லை. ஆனாலும் தாங்கினார். ஒரு வருடத்துக்கு பின் விடுதலை செய்யப்பட்ட பின் ஒட்டிசுட்டானில் நடந்த மரணவீடொன்றுக்காக பேருந்தில் பயணித்த சிங்கண்ண, விசிவமடுத் துயிலும் இல்லத்தடியை பேருந்தில் இருந்தபடி ஏக்கத்தோடு பார்த்தபடி போகிறார். அசைவில்லை. பரமை பிடித்தவராய் இருந்தார். குறிப்பிட்ட தூரம் கடந்த போது அவர் மயங்கி சரிகிறார். பின்பு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற உறவினர்களுக்கு மருத்துவர் அதிர்ச்சி கொடுத்தார்கள். “சிங்கண்ணைக்கு பாரிசவாதமாம்.” உடைந்த உறவுகள. வீட்டுக்கு கொண்டு வந்த போது அவர் ஒன்றைக் காலும் கையும் இழுத்த நிலையிலே கிடந்தார். குறுகிய கால மருத்துவத்தின் பின் சாதாரணமாக இல்லை எனிலும் மெதுவாக நடமாடத் தொடங்கியவரை குறுகிய காலத்தில் முழுமையாக படுக்கையில் கிடத்தியது பாரிசவாதம். நீண்ட கால படுக்கையில் அவரின் நினைப்பு முழுவதும் மாவீரர்கள் சார்ந்ததாகவே இருந்தது. இவ்வாறு அவர் படுத்த போது 2014 இறுதி நாள்வரை ஒரு கரத்தில் பேனாவும், மறுகரத்தில் துப்பாக்கியுமாக பயணித்த அன்பு அண்ணன் பாரிமகனும், நோயினால் மடிந்து போக இன்னும் இன்னும் உடைந்து போகிறார் கோமகன். அண்ணனை துயிலும் இல்லத்தில் உறுதியுரை செய்து விதைக்க வேண்டிய சிங்கண்ண படுக்கையில் கிடக்க சாதாரண சுடரை ஒன்றில் குழி வெட்டி புதைத்ததும் அவரால் ஏற்க முடியவில்லை. அவருக்குப் பக்கத்திலையே தானும் தூங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். தன்னை பராமரித்து வந்த மருமகனிடம் “ அண்ணாக்குப் பக்கத்தில என்னை விதைச்சு விடப்பு எரிக்காத” என்ற வேண்டுகோளோடு விழி மூடிப் போய்விட்டார். இறுதிக் காலத்தில் கூட தேசியத் தலைவரை அழைத்தபடியே இருந்திருக்கிறார். தூங்கும் போது தவிர மற்ற நேரத்தில் எல்லாம் அவர் பணியாற்றிய பிரிவின் தொலைத்தொடர்பு நிலையங்களை கூப்பிட்டபடி இருந்திருக்கிறார். இவரைப் பார்க்க வரும் நண்பர்களிடம் தனது துப்பாக்கி ரூமுக்குள்ள கிடக்கிற அலமாரிக்குள்ள வைச்சுப் பூட்டிட்டுத் தான் வந்தனான் திறப்புத் தாறன் எடுத்து வாறியா என்றெல்லாம் தான் நேசித்தவற்றைப் பற்றியே கதைச்சிருக்கிறார். அதனாலோ என்னவே எங்கள் தேசத்தை நேசித்த வேங்கை, தமிழீழ விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்ட 2009 வைகாசி 18 ஆம் நாளில் இருந்து சரியாக 10 வருடங்களின் முடிவில். 2019 வைகாசி 18 அன்று இரவு 11.50 மணியளவில் தன் விழிகளை மூடி தனது அண்ணன் அருகிலையே வெட்டப்பட்ட குழியில் துயில்கின்றார். --> இ.இ. கவிமகன் https://eelamaravar.wordpress.com/2019/05/21/singan-komagan/
-
LTTE T-55 Tank | புலிகளின் வகை- 55 தகரி
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
சோல்பரி ஆணைக்குழு நியமிக்கப்பட்ட 80வது ஆண்டில் ஈழத்தமிழர் இறைமையின் தொன்மை குறித்து சில தெளிவுகள் – சூ. பற்றிமாகரன்
தெளிந்த வரலாற்றையும் குழப்பிவிட்டுள்ளார், கட்டுரையின் எழுத்தாசிரியர் சூ. பற்றிமாகரன். இலண்டன் கிழக்கிந்தியக் கம்பெனி 1796 இல் டச்சுக் காலனித்துவ அரசிடம் இருந்து கைப்பற்றி மதராசில் இருந்து ( இன்றைய சென்னை) தமிழகத்துடன் இணைந்ததாக முழு இலங்கையையும் 1802 வரை ஒரே சட்டத்தில் ஓரே நிதியுடன் ஆட்சிப்படுத்தியமை ஈழத்தமிழர் ஆங்கிலேய ஆட்சிக்குட்பட்ட வரலாற்றின் முதல் தொடக்கமாகவுள்ளது.// இல்லை, 1976 இல் பிரித்தானியர் கைப்பற்றியதிலிருந்து 1978வரை தான் மதராஸோடு ஆளுகைக்காக இணைக்கப்பட்டிருந்தது. அதுவும் 1978-1802 கிழக்கிந்திய கொம்பனி மற்றும் பிரித்தானிய முடி ஆட்சி ஆகியவற்றால் இணைந்து ஆளப்பட்டது. இந்நிலைமையே 1802வரை தொடர்ந்தது. பின்னர் பிரித்தானிய முடியாட்சியின் தனி குடியேற்ற நாடாக மாற்றப்பட்டது. //வடஅமெரிக்க முஸ்லீம் யாத்திரிகரான இபின் பட்டுடா 1344 // இல்லை, இவர் வட ஆப்பிரிகாவிலுள்ள மொரோக்கோவைச் சேர்ந்தவர் ஆவார் // அடுத்து வரும் 30 ஆண்டுகளும் பிரித்தானியா காலனித்துவ அரசாங்கம் ஈழத்தமிழர்களின் அரசுக்குரிய பகுதிகளையும் சிங்களவர்களின் அரசுக்குரிய பகுதிகளையும் தனித்தனியான அலகுகளாகவே ஆட்சிப்படுத்தினமை இலங்கைத் தீவில் இரு இறைமையுள்ள அரசுக்களை பிரித்தானியாகைப் பற்றியது என்பதற் கான வரலாற்றுச் சான்றாக உள்ளது.// இல்லை, கிடையவே கிடையாது. பூசணிக்காயை சோற்றுக்குள் மறைத்திருக்கிறார் கட்டுரையாளர். ஈழத் தமிழர்களினது, சிங்களவர்களினது என்று தனித்தனி அலகுகளாக பிரித்து ஆளவில்லை. ஏனெனில், பிரித்தானியர் இலங்கையை கைப்பற்றிய போது (ஒல்லாந்தரிடமிருந்து) கரையோரத்தையே கைப்பற்றினர்; ஒல்லாந்தர் ஆண்ட ஆட்புலங்கள். மலைநாட்டு அரசும் திறைசெலுத்தும் வன்னிமைகளும் அப்படியே தான் இருந்தன. எனவே தாம் கைப்பற்றிய பகுதிகளை ஒன்றாக்கி கரையோர மாகாணம் எனவும், கண்டி அரசை தனி மாகாணமாகவும் வைத்து ஆட்சி செலுத்தினர். கரையோர மாகாணத்தில் கொழும்பு, காலி, யாழ், திருமலை, சிலாபம், நீர்கொழும்பு, மன்னார், களுத்துறை ஆகியனவும் மலைநாட்டில் கண்டி அரசிற்குட்பட்ட ஆட்புலங்களை தனி மாகாணமாகவும் (11 மாவட்டங்களாக) வைத்திருந்தனர். காலி மற்றும் களுத்துறையில் சிங்களவரே பெரும்பான்மை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் யாழ், திருமலை, மன்னார் பகுதியில் உரோமன்-டொச் சட்டம் இல்லாமல் அங்கு தேசவழமை இருந்தது. இதன் மூலம் தமிழர் இறைமையை அவர்கள் கணக்கிலெடுக்கவில்லை என்பதும், தாம் ஒவ்வொன்றாக கைப்பற்றிக்கொண்டு வரவர தமது நிர்வாக வசதிக்கேற்ப அவற்றை ஆண்டனர் என்பதும் விளங்குகிறது. மேலும் கரையோர ஏற்கனவே ஐரோப்பிய ஆளுகை இருந்தமையால் அதனை இலகுவாக அவர்களால் நிர்வகிக்க முடிந்தது. எனினும் கண்டியில் வேறு மாதிரி இருந்தமையால் அவர்களால் உடனடியாக அது இயலவில்லை. // 31.10. 1832 இல் கற்சிலை மடுவில் உயிரிழந்த பின்னரே 1833இல் பிரித்தானியரால் தாம் விரும்பியவாறு தங்களின் .... // பிரித்தானிய ஆவணங்களின் படி, பண்டார வன்னியன் பனங்காமத்தில் 1811இல் காயச்சாவடைந்தார். அவரின் பின்னும் அவரின் குதிரைப்படை தளவாயான ஒருவரின் மகனான கதிர்வேலன் தலைமையில் 1870 வரை பிரித்தானியருக்கு எதிரான கரந்தடிப் போர் தொடர்ந்தது. 1870இல் முள்ளிவாய்க்காலுக்கு அருகாமையிலுள்ள கமுகந்தோட்டம் (பெயர் சரியாக நினைவில்லை, எனினும் ஒலிப்பு இவ்வாறுதான் அமையும்) என்னுமிடத்தில் நடந்த இறுதிச் சமரில் தமிழர் படைகள் முற்றாக அழிந்து போயின.
-
சோல்பரி ஆணைக்குழு நியமிக்கப்பட்ட 80வது ஆண்டில் ஈழத்தமிழர் இறைமையின் தொன்மை குறித்து சில தெளிவுகள் – சூ. பற்றிமாகரன்
வெகுசில தகவல் பிழைகளைத் தவிர முன்னர் கேள்வியுற்றிராத வரலாறுகளைக் கொண்டுள்ள கட்டுரையாகும்.
-
உயிர்மின்னல்களின் வெடியில் அதிர்ந்த காலித் தட்சின துறைமுகம் - 2006
புலிகளின் நிகழ்படமொன்றை பார்த்துக்கொண்டிருக்கும் போது தற்செயலாக இவரின் காட்சியைக் கண்டேன், திரைப்பிடிப்பு செய்தேன். இவரும் இத்தாக்குதலில் வீரச்சாவடைந்த கடற்கரும்புலி ஆவார். இவரின் பெயர் லெப். கேணல் அரவிந்தா எனப்தாகும். இது 2006ம் ஆண்டு கரும்புலிகள் நாளில் எடுக்கப்பட்ட காட்சி என்று துணிபுகிறேன்.
- Sea Black Tiger Lt. Col. Aravintha - operation commander for the raid on Thatchina naval base, Galle, Sri Lanka on 2006
-
இலங்கையின் 77ஆவது சுதந்திர தினம் இன்று : ஜனாதிபதி அநுர தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் விசேட நிகழ்வுகள்
சிறிலங்காவிற்கு எனது சுதந்திரதின வாழ்த்துகள்😍
-
கிளிநொச்சியில் இடம் பெற்ற சுதந்திரதின எதிர்ப்பு போராட்டம்!
சிங்களவனோடு சேர்ந்து கூத்தடிக்கிற "மணல் மாபியா" சிறி முதலானோர் - சுதந்திர தின எதிர்ப்பு போராட்டமாம்!
-
ஈழப்போரில் தமிழகம் செய்த உதவிகளின் பட்டியல்
எழுத்தாளர்: அறியில்லை. 10 July 2014 https://www.facebook.com/photo.php?fbid=392315390872120&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739 1970 களில் இருந்து 1982 வரை புலிகள் இயக்கம் வளர ஆரம்பித்த காலகட்டத்தில் தமிழகம் அவர்களுக்கு எவ்வளவு உறுதுணையாக இருந்தது என்று அனைவருக்கும் தெரியும். அது தொடர்பான ஒரு விளக்கமான பதிவு. பழ.நெடுமாறன் அவர்களின் பங்களிப்பு முதன்மையானது: பலமுறை புலிகளுக்கும், தலைவருக்கும் உணவு, இடம் என பல ஆதரவுகளை வழங்கியவர். 25- 6- 82ல் உமாமகேசுவரனும் பிரபாகரனும் சென்னை பாண்டிபசாரில் மோதிய வழக்கில் அவர்கள் கைதாக, நெடுமாறன் வீட்டில் விசாரணை நடந்த போது "ஆமாம், அவர்கள் ஆயுதப் போராளிகள் என்று தெரிந்துதான் உதவினேன்; தமிழனாக நான் செய்த கடமைக்கு எந்த விளைவையும் சந்திக்க ஆயத்தமாயிருக்கிறேன்." என்று உறுதியாகக் கூறிவிட்டு அவர்களைப் பிணையில் எடுக்கப்போன போதுதான் தாம் உதவி வந்த இளைஞர்களில் ஒருவர்தான் பிரபாகரன் என்று தெரியவருகிறது. அந்த வழக்கை நடத்தி மதுரையில் தமது வீட்டிலும் தமது உறவினர்கள் வீட்டிலும் பிரபாகரன், ரகு, தங்கவேலாயுதம், அன்ரன், மாத்தையா, செல்லக்கிளி ஆகியோரைத் தங்கவைத்தவர். போராளிகளை பிடித்துச் செல்ல சிங்கள அரசு ஆளனுப்ப 1- 6 82 ல் 20கட்சிகளைக் கூட்டி தீர்மானம் போட்டு அதை பிரதமரான இந்திரா காந்திக்கு அனுப்பி போராளிகளைக் காத்தவர். கிட்டு, ரஞ்சன், பண்டிதர், சீலன், புலேந்திரன், பொன்னம்மான், இளங்குமரன் போன்ற முக்கிய போராளிகளை பாபநாசத்தில் தமது இல்லத்தில் மறைத்து வைத்தவர். மதுரையில் தமது வீட்டிலும் ஒன்றுவிட்ட தம்பி திரவியம் வீட்டிலும் பிரபாகரனைத் தங்கவைத்தவர். காங்கிரசு பிரமுகர் வி.கே.வேலு அம்பலம் என்பவர் வீட்டில் இளங்குமரன் மற்றும் தோழர்கள் தங்கவைத்தவர். தமது தம்பியின் மாமனார் ஊரான அவினாபுரியில் புலிகளுக்கு முகாம் அமைத்து தந்தவர். தமது தோழர் சந்திரபால் என்பவர் வீட்டில் சீலனுக்கு சிகிச்சை. உறவினர் பாண்டியன் என்பவர் வீட்டில் இந்திய-புலிகள் போரின்போது முக்கிய ஆவணங்களை மறைத்துவைத்தவர். பிரபாகரனின் தாய்தந்தையரை தம்மோடு வைத்துகொண்டவர். அ.அமிர்தலிங்கம் அவர்களுக்கும் பிரபாகரனுக்கும் இருமுறை பேச்சுவார்த்தை நடத்தி தமிழர் விடுதலைக் கூட்டணியையும் புலிகளையும் இணைக்க முயன்றவர். ரஞ்சன், பஷீர்/காகா, சந்தோசம், புலேந்திரன் ஆகியோருக்கு பிரபாகரன் தலைமையில் திருப்பங்குன்றம் அருகேயுள்ள காடுகளில் பயிற்சிக்கு உதவியவர். 1985ல் புலிகள் பாதுகாப்பில் ஈழத்தில் சுற்றுப்பயணம் செய்து தமிழர் நிலையை நேரடியாக 'சுதந்திரக் காற்று' என்ற பெயரில் ஆவணப்படமாக்கி இந்தியா முழுவதும் தடையை மீறித் திரையிட்டவர். 1983 ஜூலைக் கலவரம் நடந்தபோது 5000இளைஞர்களைத் திரட்டி மதுரையிலிருந்து மக்கள் பேராதரவுடன் நடை ஊர்வலமாக இராமேசுவரம் வந்து எவர் தடுத்தும் நிற்காமல் அங்கிருந்து பல படகுகளில் கடலில் ஈழம்நோக்கி பாதி தூரம் வந்து இந்தியக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டவர். திலீபன் உண்ணோநோன்பிருந்தபோது நேரில் சென்றவர் . என இவரைப் பற்றி தனி புத்தகமே போடலாம்! இவை தவிர இன்னபிறரின் வெளித்தெரியா பங்களிப்புகள் பின்வருமாறு: 1970களிலேயே தமிழர் மாணவர் பேரவை நிறுவனர் சத்தியசீலன் போன்ற பல போராளிகளுக்கு உதவியதோடு நில்லாமல் ஆன்டன் பாலசிங்கம் மற்றும் புலிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் அறைகள் வழங்கிய மத்திய இணையமைச்சர் செஞ்சி இராமச்சந்திரன். அந்த சமயத்தில் போராளிகளுக்கு அருகேயிருந்து உதவிய புலமைப்பித்தன். உமாமகேசுவரன் விடுதலைப் புலிகள் இயக்கப்பெயருக்கு உரிமைகொண்டாடியபோது அவரை சரிசெய்து புளட் இயக்கம் தோற்றுவிக்கக் காரணமாயிருந்த அருகோ (எழுகதிர் ஆசிரியர்). சென்னை தெற்குப்பகுதியில் கடற்கரைக்கு சற்று தொலைவில் உள்ள சவுக்குத் தோப்புகளில் புலிகள் பயிற்சிபெற உதவிய சென்னைத் தமிழர் பலர் (திருமதி.அடேல் பயிற்சி பெற்ற இடம்). டெலோ சிறீசபா ரத்தினம் சில பெண்களை பயிற்சிக்காக சென்னை அழைத்து வந்தபோது டெலோ இயக்கம் பெண் போராளிகள் மீது ஆர்வம் காட்டாதபோது சென்னையில் தாழ்த்தப்பட்ட கத்தோலிக்கர் அவர்களைப் புலிகளுடன் சேர்த்துவிட்டனர் (முதல் பெண்புலிகள் பிரிவைச் சேர்ந்தவர்களில் சோதியா, சுகி, தீபா, இமெல்டா, வசந்தி போன்றோர் இதில் அடங்குவர்). 1984ல் திருவான்மியூரில் பெண் போராளிகளுடன் தங்கியிருந்த ( தொடர்ச்சி பின்னூட்டத்தில்) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ப.மாணிக்கம் கேட்டுக்கொண்டதன் பேரில் என்.டி.வானமாமலை பிரபா-உமா வழக்கை நடத்தினார். அமைச்சர் காளிமுத்து பிரபாகரனுக்கு நேரடியாக பல உதவிகள் செய்தவர். மருத்துவக் கல்லூரி மாணவனான திண்டுக்கல் சந்திரன் தோழமையுடன் பிரபாகரனுக்கு பல உதவிகள் செய்தவர். நெடுமாறன் அவர்களின் தோழர்கள் மீனாட்சி சுந்தரம், ஜெயப்பிரகாசம், தமிழ்க்கூத்தன் ஆகியோரும் உள்ளூருக்குள் பல உதவிகள் செய்தனர். புலிகளின் இலச்சினையில் சில மாற்றங்கள் செய்து கொடியாக மாற்றி தந்த ஓவியர் நடராசன். புலிகளின் உடையை வடிவமைத்த மதுரை தங்கராசு. முதல் மாவீரன் சங்கருக்கு மதுரையில் தோட்டா நீக்கி சிகிச்சை போன்ற பல முக்கிய மருத்துவ உதவிகளைச் செய்த புலிகளுக்காகவே ரகசிமாக இயங்கிய மருத்துவமனையின் பொறுப்பாளர் மரு.என்.எஸ்.மூர்த்தி. இசைநிகழ்ச்சி நடத்தி புலிகளுக்கு நிதி திரட்ட உதவிய இளையராஜா. 1980ல் சீரணியரங்கில் முதன்முதலாக புலிகளுக்கு ஆதரவாக கூட்டம் கூட்டிய பழநி பாபா. 1995ல் யாழ்இடப்பெயர்வு மக்களை தமிழகம் ஏற்றுக்கொள்ள முதன்முதலாகத் தீக்குளித்த அப்துல் ரவூப். புலிகளுக்கும் தமிழக விடுதலை இயக்கங்களுக்கும் பாலமாக விளங்கிய அமரர் சுப.முத்துக்குமார். 2009ல் முத்துக்குமார் உட்பட தீக்குளித்த 17 ஈகிகள். ராஜீப் காந்திக்கு உயிருடன் இருக்கும் போதே அறம்பாடிய, தனுவுக்கு கவியாரம் சூட்டிய பெருஞ்சித்திரனார். Tகெ Hஇச்டொர்ய் ஒf Tகமிரபர்னி எனும் ஈழத்தமிழர்களின் வரலாற்றை எழுதிய, தனி ஈழத்துக்காக தீவிரமாகப் போராடிய, புலிகளால் மாமனிதர் பட்டம் அளிக்கப்பட்ட ஆ. இராசரத்தினத்துக்கு 1973லிருந்து கடைசிவரை அடைக்கலம் வழங்கிய திரு இரா.ஜனார்த்தனம் மற்றும் மணவைத்தம்பி. புலிகளின் பாடல்களுக்கு இசையமைத்துப் பாடித் தந்த தேனிசை செல்லப்பா. சிறுமலை என்ற ஊரில் பயிற்சிக்கு தன் இடத்தை வழங்கிய திண்டுக்கல் அழகிரிசாமி. அப்போது முகாமுக்கு உணவு வழங்கிய திண்டுக்கல் வணிகர் சங்கத் தலைவர் மணிமாறன். ஈழத்திற்கு சென்று மரணப்படுக்கையில் இருந்த பிரபாகரனின் தாயாரைப் பல தடைகளை மீறி சந்தித்த வழக்கறிஞர் அங்கயற்கண்ணி. 1986ல் சார்க் மாநாடு பெங்களூரில் நடைபெற்றபோது ஜெயவர்த்தனாவுக்கு ஆயிரக்கணக்கானோரோடு கறுப்புக்கொடி காட்டிய கர்நாடகத் தமிழ்ப்பேரவைப் பொதுச்செயலாளர் சண்முகசுந்தரம். 1996ல் புலிகளுக்கு ஜீப் வண்டி நன்கொடையளித்த பி.எல்.ராமசாமி (திராவிடர் கழகம்). இந்திய அமைதிப்படை அட்டூழியத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க 1988ல் கொடைக்கானல் குண்டுவெடிப்பு நடத்தி சிறைசென்ற தோழர்.பொழிலன். அடேல் மீது தவறான சந்தேகத்தோடு கூடி வந்து தாக்க முற்பட்ட அந்தப் பகுதி தமிழர்கள். அங்கே பொன்னம்மான் தாங்கள் ஈழப்போராளிகள் என்று கைத்துப்பாக்கியை எடுத்துக்காட்ட மன்னிப்பு கேட்டு வருந்தியபடி கலைந்துசென்றனர். பாலா-அடேல் தங்கியிருந்த வீட்டில் குண்டுவெடித்தபோது அக்கம்பக்கத்து தமிழர்கள் வந்து நலம் விசாரித்தனர். வேறொரு இஸ்லாமியத் தமிழ்க்குடும்பம் துணிந்து வீடுகொடுத்தது. எம்ஜிஆர் காவல்துறையை முடுக்கிவிட காரணமானவர் இலங்கை அமைச்சர் லலித் அதுலத் முதலி என தெரியவர அவர்மீது வழக்குபோடவிடாமல் இந்திய அரசாங்கம் தடுத்துவிட்டது. பயிற்சிக்கு தமது சொந்த இடத்தைக் கொடுத்த கொளத்தூர் மணி. கொளத்தூரில் பயிற்சி நடந்தபோது 150 போராளிகளுக்கு மூன்று ஆண்டுகள் சகலதேவைகளையும் நிறைவேற்றியதோடு மட்டுமன்றி தம்மோடு பழகிய பொன்னம்மான் ஈழத்தில் இறந்தபோது நினைவிடம் அமைத்த கொளத்தூர் தமிழக மக்கள். அதே நேரத்தில் திருவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பில் உள்ள முகாமுக்கு உதவிகளனைத்தும் செய்த அப்பகுதி தமிழர். அமைச்சராக இருந்தபோது புலிகளுக்கு உதவியதால் 1992ல் தடா'வில் கைது செய்யப்பட்ட சுப்புலட்சுமி, அவரது கணவர் செகதீசன். கௌதமி, கலாராம், குமார் என்ற மூன்று ஊனமுற்ற ஈழவர் தடாவில் கைது செய்யப்பட்டபோது போராடி விடுதலை பெற்ற வழக்கறிஞர் கே.சந்துரு (தற்போது ஓய்வு பெற்ற நீதிபதி). பிரபாகரன், மாத்தையா உள்ளிட்ட முதல் பிரிவு இந்தியாவுக்கு பயிற்சிக்கு வந்தபோதும், இந்திய-இலங்கை-ஈழப்போராளிகள் பேச்சுவார்த்தையின் போதும் தம்மால் முடிந்த உதவிகளைச் செய்த எஸ்.சந்திரசேகரன் (றோ உயரதிகாரி). புலிகளின் ஆயுதங்கள் தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்டபோதும், புலிகள் இந்தியாவிடம் பயிற்சி பெறவும் பல உதவிகள் செய்த தமிழக காவல்துறை உயரதிகாரி அலெக்சாண்டர். 1983ல் ஐநா பேரவைக் கூட்டத்தில் 70நாட்கள் பன்னாட்டு தலைவர்களுடன் பேசி, உரையாற்றி ஐநா பொதுச்செயலர் ஃபெரஸ் டி.கொய்லர் இலங்கை தமிழர் பிரச்சனை மனித உரிமை மீறல் தொடர்பானது என்று ஒப்புக்கொள்ளவைத்த பண்ருட்டி.ராமச்சந்திரன். 1985ல் திம்பு மாநாட்டில் ஈழ ஆயுதக்குழுக்கள் ஒன்றிணைந்ததைக் கெடுக்க இந்திய அரசு பாலசிங்கம், சந்திரகாசன், சத்தியேந்திரா ஆகியோரை நாட்டைவிட்டு வெளியேறச் சொன்னபோது பொங்கியெழுந்த தமிழகம் போராடி அதைத் தடுத்தது. கறுப்பு யூலையின்போது அதுவரை தமிழகத்தில் நடக்காத அளவு முழுஅடைப்பும், பல்வேறு போராட்டங்களும் நடந்தன. ராசீவ் காந்தியால் வெளியுறவுத்துறை அமைச்சரான ஏ.பி.வெங்கடேசன் தமிழர் ஆதரவு செயல்பாட்டால் பதவி விலக்கப்பட்டார். ஆலோசகரான ஜி.பார்த்த சாரதி தமிழர் ஆதரவு செயல்பாட்டினால் ஜெயவர்த்தனாவால் குற்றம்சாட்டப்பட்டு பதவி விலகினார். கவிஞர்.காசிஆனந்தனுக்கு ஆதரவும் அடைக்கலம் தந்துள்ளது தமிழகம். இந்திய அமைதிப் படை ஈழத்தில் நடத்திய கொடுமைகள் பற்றி புலிகள் வெளியிட்ட 'சாத்தானின் படைகள்' நூலுக்கு ஓவியம் வரைந்துகொடுத்ததற்காக இந்திய உளவுத்துறையால் கைது செய்யப்பட்டு பல கொடுமைகளுக்கு ஆளான ஓவியர்.வசந்தன். ஈழ- இந்தியப் போரில் தப்பிவந்த அத்தனை பேருக்கும் தமிழகம் உதவியதுய (காட்டாக அப்போது பாலசிங்கம் தம்பதி தப்பி தமிழகம் வந்து வீட்டுக்காவலில் இருந்த கிட்டுவை சந்தித்துவிட்டு காலாவதியான கடவுச்சீட்டு மூலம் வேறு பெயரில் பயணச்சீட்டு எடுத்து சென்னையிலிருந்து இலண்டன் சென்றனர்). போர் நடந்தபோது அங்கே களநிலவரம் அறிய மத்திய ரிசர்வு போலீசு உயரதிகாரி கார்த்திகேயன் என்பவரை இந்திய டி.என்.சேஷன் அனுப்பினார், 1989ல் ரகசியமாக போர்ப்பகுதியில் சுற்றிவிட்டு தமிழர்கள் கேட்கும் உரிமைகளைத் தருவதே தீர்வென்றும், புலிகளின் பலத்தையும், இந்தியப் படையினரின் மனமொடிந்த நிலையையும் கூறி போர் முடிவுக்கு வர முக்கிய காரணமாக இருந்தார். 1988ல் சிறிலங்க அரசில் அமைச்சராக இருந்த பக்ருதீன் முகமது தலைமையில் இலங்கை இஸ்லாமியர் பற்றி பேச சென்னையில் கிட்டுவை சந்திக்க வந்தபோது அப்துல் சமத் என்ற இந்திய முஸ்லீம் லீக் தமிழகக் கிளை தலைவர் அந்தப் பேச்சுவார்த்தையை பழ.நெடுமாறன் கேட்டுக் கொண்டதன்பேரில் நடத்தி புலிகளுக்கு ஈழத்தமிழ் இஸ்லாமியர் பக்கபலமாக இருக்க உதவியவர். இந்திரா கொல்லப்பட்டபோது நடந்த சீக்கியப்படுகொலை போல் இரஜீவ் படுகொலையின்போது தமிழர் படுகொலை போன்ற தீவிர நடவடிக்கை வராமல் பார்த்துக்கொண்டவர் அப்போதைய குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன். 2002ல் சென்னை ஆனந்த் திரையரங்கில் புலிகள் ஆதரவு கூட்டம் நடத்திய தமிழ் முழக்கம் சாகுல் அமீது, பழ.நெடுமாறன், மரு.தாயப்பன், பாவாணன் ஆகியோர் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். 1990களில் புலிகள் கல்வித்திட்டத்தில் தமிழக கல்வியாளர்கள் பாடத்திட்டம், புத்தகங்கள், பயிற்சி என பல வகைகளில் உதவினர்; இராணுவ விஞ்ஞானம் பற்றிய பாடத்திட்டங்களை தீட்டி அளித்தவர் சென்னையில் இதே துறையின் தலைவராக இருந்த பேரா.மனோகரன்; நுண்கலைக் கல்லூரி ஒன்றை புலிகள் ஆரம்பிக்க பேரா.விசயகோபால் திட்டவரைவு வழங்கினார்; நீர்மேலாண்மை பற்றிய பாடத் திட்டம் நெடுமாறனின் தம்பி முனைவர்.பழ.கோமதிநாயகம் என்பவர் தீட்டியது; இவர், தமிழ் பாடத்துக்கு கடையம் பேரா.அறிவரசன், ஆங்கிலத்துக்கு பேரா.அ.அய்யாச்சாமி போன்றோர் ஈழத்திற்கே சென்று ஆண்டுக்கணக்கில் தங்கி உதவினர். புலிகள் மீதான பல்வேறு வழக்குகளை தாமே முன்வந்து நடத்தியவர் தடா எஸ்.சந்திரசேகரன், இவரும் இவரது உதவி வழக்கறிஞர் கோபிகிருஷ்ணனும் 2004ல் தலைவரை சந்தித்தனர். இயக்குநர்கள் பாரதிராசா, மகேந்திரன், மணிவண்ணன் போன்றோர் தலைவரைச் சந்திக்கச் சென்று தமிழீழக் கலை பண்பாட்டுத் துறை நடத்தும் பூலித்தேவன் நாடகம், இலக்கிய விருதுகள், முத்தமிழ் விழா, பொங்கல் விழா போன்றவை கண்டு வியந்து வாழ்த்துகளும், ஆலோசனைகளும் வழங்கினர். புலிகள் 1995ல் வேலூர் கோட்டையிலிருந்து தப்பி காட்டுக்குள் தப்பியபோது கொளத்தூர் மணி மற்றும் நெடுமாறன் போன்ற பலரின் உதவியால் ஈழம்போய்ச்சேர்ந்தனர் (இவர்கள் சேலம் காடுகளில் பதுங்கியிருந்தபோது எதேச்சையாக வீரப்பனார் அவர்களைச் சந்திக்க மிகவும் மகிழ்ந்து வேண்டிய உதவிகளைச் செய்தார், இவர்களில் பிடிபட்டவர் மாறன் தற்போது லண்டனில் வசிக்கிறார்). பிரேமா என்ற பெண்புலிக்கு குண்டு அகற்றி தமது பொறுப்பில் பாதுகாத்த பழ.நெடுமாறனின் தோழர் மரு.பொ.முத்துசெல்வம். சமரச முயற்சிகளை முன்னெடுத்த நீதியரசர்.வி.ஆர்.கிருஸ்ணய்யர். மேலும் சீமான், வைகோ, ஜெகத் கஸ்பர், எம்ஜிஆர் போன்றவர்களின் பங்களிப்பு பலருக்கும் தெரியுமாதலால் அவற்றை விளக்கவில்லை.
-
தரைப்புலிகள் இன் படிமங்கள் | LTTE Ground Tigers' Images
சோதியா படையணிப் போராளிகள் பயிற்சியின் போது காலம் அறியில்லை
- 1202 replies
-
- தமிழீழ ராணுவம்
- இராணுவம்
- sri lanka rebel army
- விடுதலைப்புலிகள்
-
Tagged with:
- தமிழீழ ராணுவம்
- இராணுவம்
- sri lanka rebel army
- விடுதலைப்புலிகள்
- சிறிலங்கா இராணுவம்
- விடுதலைப் புலிகளின் நிழற்படங்கள்
- sri lanka rebels
- தமிழீழம்
- புலிகளின் படங்கள்
- விடுதலைப் புலிகள்
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- புலிகளின் படையணிகள்
- tamil eelam army
- prabhakaran
- eelam land force
- தமிழீழ விடுதலைப்புலிகள்
- ltte land force
- தமிழீழ இராணுவம்
- ltte brigades
- ltte land tigers
- ltte fighters
- தமிழீழப்படை
- tamil eelam army images
- eelam army
- தரைப்படை
- ltte
- ltte army
- தமிழீழத் தரைப்படை
- ltte regiments
- kotti
- kotty
- srilankan rebel army
- ltte rebel
- ltte fire teams
- ltte battlions
- தமிழீழ படைத்துறை
- srilanka rebels
- சிறீலங்கா
- sri lankan land force
- sri lankan army
- ltte rebels
- ltte images
- ltte pictures
- ltte photos
- புலிகள்
- eelam fighters
- படைத்துறை
- ஈழப்படை
- prabakaran
- ராணுவம்
- tamil army
- tamil forces
-
தரைப்புலிகள் இன் படிமங்கள் | LTTE Ground Tigers' Images
(தயவு கூர்ந்து படிமம் மேல் எழுதாதீர்கள்... இது உங்கள் அப்பன் ஆத்தை சம்பாதிதது அல்ல.இவை தமிழீழத்தின் சொத்துக்கள்) பயிற்சியின் போது 11.8.2007
- 1202 replies
-
- தமிழீழ ராணுவம்
- இராணுவம்
- sri lanka rebel army
- விடுதலைப்புலிகள்
-
Tagged with:
- தமிழீழ ராணுவம்
- இராணுவம்
- sri lanka rebel army
- விடுதலைப்புலிகள்
- சிறிலங்கா இராணுவம்
- விடுதலைப் புலிகளின் நிழற்படங்கள்
- sri lanka rebels
- தமிழீழம்
- புலிகளின் படங்கள்
- விடுதலைப் புலிகள்
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- புலிகளின் படையணிகள்
- tamil eelam army
- prabhakaran
- eelam land force
- தமிழீழ விடுதலைப்புலிகள்
- ltte land force
- தமிழீழ இராணுவம்
- ltte brigades
- ltte land tigers
- ltte fighters
- தமிழீழப்படை
- tamil eelam army images
- eelam army
- தரைப்படை
- ltte
- ltte army
- தமிழீழத் தரைப்படை
- ltte regiments
- kotti
- kotty
- srilankan rebel army
- ltte rebel
- ltte fire teams
- ltte battlions
- தமிழீழ படைத்துறை
- srilanka rebels
- சிறீலங்கா
- sri lankan land force
- sri lankan army
- ltte rebels
- ltte images
- ltte pictures
- ltte photos
- புலிகள்
- eelam fighters
- படைத்துறை
- ஈழப்படை
- prabakaran
- ராணுவம்
- tamil army
- tamil forces
-
navam arivu (3).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
navam arivu (2).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
navam arivu (1).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
தரைப்புலிகள் இன் படிமங்கள் | LTTE Ground Tigers' Images
11-8-2007... பயிற்சியின் போது தமிழீழத் தயாரிப்பு ஜேம்ஸ்-97 தடைவெடிகளோடும் (Torpedo) புலிவீரிகள் நிற்கின்றனர் தடைவெடிகளையும் கொண்டுசெல்கின்றனர் (தொடர்ச்சி அடுத்த மறுமொழிப்பெட்டியினுள்)
- 1202 replies
-
- தமிழீழ ராணுவம்
- இராணுவம்
- sri lanka rebel army
- விடுதலைப்புலிகள்
-
Tagged with:
- தமிழீழ ராணுவம்
- இராணுவம்
- sri lanka rebel army
- விடுதலைப்புலிகள்
- சிறிலங்கா இராணுவம்
- விடுதலைப் புலிகளின் நிழற்படங்கள்
- sri lanka rebels
- தமிழீழம்
- புலிகளின் படங்கள்
- விடுதலைப் புலிகள்
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- புலிகளின் படையணிகள்
- tamil eelam army
- prabhakaran
- eelam land force
- தமிழீழ விடுதலைப்புலிகள்
- ltte land force
- தமிழீழ இராணுவம்
- ltte brigades
- ltte land tigers
- ltte fighters
- தமிழீழப்படை
- tamil eelam army images
- eelam army
- தரைப்படை
- ltte
- ltte army
- தமிழீழத் தரைப்படை
- ltte regiments
- kotti
- kotty
- srilankan rebel army
- ltte rebel
- ltte fire teams
- ltte battlions
- தமிழீழ படைத்துறை
- srilanka rebels
- சிறீலங்கா
- sri lankan land force
- sri lankan army
- ltte rebels
- ltte images
- ltte pictures
- ltte photos
- புலிகள்
- eelam fighters
- படைத்துறை
- ஈழப்படை
- prabakaran
- ராணுவம்
- tamil army
- tamil forces
-
malathy regiment (1).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
malathy regiment (2).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
மதங்கள், பெரியார், திராவிடம் தொடர்பான விடுதலைப்புலிகளின் பார்வை - கேர்ணல் கிட்டு
கண்டேன் மிக்க நன்றி
-
tt-2.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
tt-1.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
kannan-இளந்திரையன்.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
kalaipanpadu-kalakam.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
kalaipanpaddu-kalakam.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images