Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

akootha

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by akootha

  1. எமதினம் சொந்தமண்ணில் சுதந்திரமாக வாழவேண்டும் என்ற உயரிய நோக்கை கொண்டு தமதுயிர்களை ஈகம் செய்த இந்த மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.
  2. கோமகன், செய்தியை வெட்டி ஒட்டும் பொழுது எழுத்துக்களின் அளவை ( நான் பதியும் எழுத்துக்களின் அளவு 14) பதிய முன்னர் மாற்றுங்கள். பதிந்த பின்னரும் மாற்றலாம் (edit). பி.கு.: இது கொஞ்சம் குழப்பாமாய் உள்ளது வாசிக்கும்பொழுது கோமகன் மோகன் கோமகன் மோகன் கோமகன் மோகன் கோமகன் மோகன் மோகன் கோமகன் மோகன் கோமகன் மோகன் கோமகன் மோகன் கோமகன்
  3. வீர வணக்கங்கள்! இந்த மாவீரரை பற்றிய தகவல்களுக்கு நன்றிகள்.
  4. துரோகம் செய்ததால் கருணாநிதி தண்டிக்கப்பட்டார்: சீமான் செவ்வாய், 17 மே 2011( 19:00 IST )தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க. தலைவர் கருணாநிதி சந்தித்த படுதோல்வி, அவர் தமிழினத்திற்கு செய்த துரோகத்திற்கு கிடைத்த தண்டனை என்று நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். முள்ளிவாய்க்கால் படுகொலையின் இரண்டாவது நினைவு தினத்தையொட்டி, வேலூரில் நாளை நாம் தமிழர் கட்சியின் சார்பில் பொதுக் கூட்டமும், அதற்கு முன்பு, ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையை வரவேற்று பேரணியும் நடைபெறவுள்ளது. பேரணி, பொதுக்கூட்டத்தின் நோக்கும் பற்றி இன்று வேலூரில் செய்தியாளர்களிடம் விளக்கிய சீமான், “தமிழ் ஈழப் பகுதியில் முள்ளிவாய்க்கால் கரையில் தமிழின ஒழிப்பு கோரச் சம்பவங்கள் நடைபெற்றன. 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி அந்த கொடிய படுகொலை நடந்தது. அதில் நிராயுதபாணியாக இருந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த நாளை உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் தமிழ் தேசிய துக்க தினமாக கடைபிடித்து வருகிறார்கள். நாளை 2வது துக்க தினம் ஆகும். அதையொட்டி இங்கு வேலூரில் பேரணியும் பொதுக் கூட்டமும் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டம் துக்க தினத்தையொட்டி அழுவதற்காக அல்ல, எழுவதற்காக நடக்கப் போகும் கூட்டம்” என்று கூறியுள்ளார். தமிழர்களின் நிலையில் மாற்றம் வேண்டும் என்பதற்காகவே மக்கள் நம்பிக்கையுடன் ஜெயலலிதாவைத் தேர்ந்தெடுத்துள்ளனர். ஜெயலலிதாவும் இலங்கை அதிபர் ராஜபக்சவை போர்க் குற்றவாளி என்றும், அவரை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்க வேண்டும் என்றும், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார் என்று கூறிய சீமான், இந்தியாவின் அயலுறவுக் கொள்கையில் மாற்றம் வேண்டும் என்று கூறினார். ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருக்கும் நளினி உள்ளிட்ட அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட சீமான், சோனியா காந்தி தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவை தேனீர் விருந்திற்கு அழைத்ததை தவறாகக் கருதவில்லை என்று கூறினார். http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1105/17/1110517049_1.htm
  5. கடவுளின் பெயரால் முதல்வராகப் பதவியேற்றார் ஜெயலலிதா: விஜய்காந்த்-மோடி பங்கேற்பு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார். இதைக்காண ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் சென்னையில் திரண்டனர். இந்த பதவியேற்பு விழாவில் தேமுதிக தலைவர் விஜய்காந்த் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள தவிர குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் பங்கேற்றனர். சட்டசபைத் தேர்தலில் அதிமுக மிகப் பெரிய வெற்றியைப் பெற்று 147 இடங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. இதையடுத்து ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கைகள் நேற்று வேகம் பிடித்தன. முதலில் அதிமுக சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் ராயப்பேட்டையி்ல் உள்ள அதிமுக தலைமையகத்தில் நடந்தது. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், சட்டசபை கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுதொடர்பான தீர்மான முடிவை கட்சிப் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவை சந்தித்துக் கொடுத்தார். பின்னர் அந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டையனுடன் ஆளுநர் மாளிகை சென்றார் ஜெயலலிதா. அங்கு ஆளுநர் பர்னாலாவை சந்தித்து இக்கடிதத்தைக் கொடுத்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். கடிதத்தை ஏற்றுக் கொண்ட பர்னாலா ஆட்சியமைக்குமாறு ஜெயலலிதாவைக் கேட்டுக் கொண்டார். ஆளுநரைச் சந்தித்தபோது அமைச்சரவைப் பட்டியலையும் ஜெயலலிதா வழங்கினார். அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து நேற்று இரவு அமைச்சர்கள் பட்டியல் வெளியானது. இதையடுத்து இன்று பதவியேற்பு விழா நடைபெற்றது. இன்று பிற்பகல் 12.45 மணியளவில் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பர்னாலா பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். ஜெ. ஜெயலலிதாவாகிய நான் ஜெயலலிதா எடுத்துக் கொண்ட பதவிப்பிரமாணம் மற்றும் ரகசியக் காப்பு உறுதிமொழி... ஜெ. ஜெயலலிதா என்னும் நான் சட்டப்படி அமைக்கப்பட்ட இந்திய அரசியல் அமைப்பின் பால் உண்மையான நம்பிக்கையும், மாறாப்பற்றும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய நாட்டின் ஒப்பில்லாத முழு முதல் ஆட்சியையும், ஒருமையையும் நிலைநிறுத்துவேன் என்றும், தமிழ்நாட்டு அரசின் முதலமைச்சராக, உண்மையாகவும், உளச்சான்றின் படியும், என் கடமைகளை நிறைவேற்றுவேன் என்றும், அரசியல் அமைப்பிற்கும், சட்டத்திற்கும் இணங்க, அச்சமும், ஒருதலை சார்பும் இன்றி, விருப்பு, வெறுப்பை விளக்கி, பலதரப்பட்ட மக்கள் அனைவருக்கும், நேர்மையானதை செய்வேன் என்றும், ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதி மொழிகிறேன். ஜெ.ஜெயலலிதா என்னும் நான் தமிழ்நாட்டு அரசின் முதலமைச்சர் என்ற முறையில் எனது கவனத்திற்கு உள்ளாவதும், தெரியவருவதுமான எந்த பொருளையும் முதலமைச்சரின் கடமைகளை நிறைவேற்ற தேவையான அளவுக்கு அன்றி, ஒருவரிடமோ, பலரிடமோ நேர்முகமாகவோ, மறைமுகவாகவோ அறிவிக்கவோ, வெளிப்படுத்தவோ மாட்டேன் என்று ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதி மொழிகிறேன். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவியேற்றனர். ஜெ முதல்வராகும்போது கூட்டுத் தொகை 1: ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்பது இது 3வது முறையாகும். இதற்கு முன்பு 1991 முதல் 96 வரையிலும், பின்னர் 2001 முதல் 2006 வரையிலும் முதல்வராக பதவி வகித்துள்ளார் ஜெயலலிதா. தற்போது 2011ல் அவர் முதல்வராகிறார். அவர் முதல்வர் பதவிக்கு வரும் போதெல்லாம் அந்த ஆண்டில் ஒன்றாம் எண் இருப்பது ஆச்சரியமான ஒரு ஒற்றுமையாகும். விஜய்காந்த் வந்தார்: ஜெயலலிதா முதல்வர் பதவியேற்பதைக் காண அனைத்துக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தேமுதிக தலைவர் விஜயகாந்த், சிபிஎம் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், சிபிஐ செயலாளர் தா.பாண்டியன், மனித நேய மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, பார்வர்ட் பிளாக், புதிய தமிழகம், மூவேந்தர் முன்னேற்ற முன்னணி உள்ளிட்ட தமிழக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். இவர்கள் தவிர சிபிஐ பொதுச் செயலாளர் பரதன், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, லோக் ஜனதா தள் தலைவர் அஜீத் சிங் ஆகியோரும் பங்கேற்றனர். சசிகலா-சோ பங்கேற்பு: அதே போல ஜெயலலிதாவின் தோழி சசிகலா, துக்ளக் சோ, முன்னாள் டிஜிபி தேவாரம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். விழாவில் மிக உற்சாகமாகக் காணப்பட்ட சோ, விஜய்காந்த் வந்தவுடன் ஓடோடிச் சென்று வரவேற்றேதோடு அவரை நரேந்திர மோடிக்கு சிறப்பு அறிமுகமும் செய்து வைத்தார். நடிகர் சரத்குமார் தனது மனைவி ராதிகாவோடு வந்திருந்தார். ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்பதைப் பொதுமக்களும் காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்காக பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்திற்கு வெளியே பெரிய பந்தல் போடப்பட்டிருந்தது. அங்கு ஏராளமான டிஜிட்டல் டிவிக்கள் வைக்கப்பட்டிருந்தன. அதேபோல பல்கலைக்கழகப் பகுதி மற்றும் மெரீனா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை ஆகிய இடங்களில் பெரிய சைஸ் டிஜிட்டல் டிவியும் வைக்கப்பட்டிருந்தது. முதல்வராகப் பொறுப்பேற்கும் ஜெயலலிதா 12.30 மணிக்கு விழா மேடைக்கு வந்தார். அனைவரும் ஆளுநர் பர்னலாவின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தனர். அவர் 12.40 மணிக்கு மேடைக்கு வந்தார். அவர் வந்தவுடன் தனது அமைச்சர்களை ஆளுநருக்கு ஜெயலலிதா அறிமுகப்படுத்தி வைத்தார். இதையடுத்து ஜெயலலிதாவுக்கு பர்னாலா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். தமிழில், கடவுளின் பெயரால் ஜெயலலிதா பதவியேற்றுக் கொண்டார். ஜெயலலிதாவைத் தொடர்ந்து நிதியமைச்சராக ஓ.பன்னீர்செல்வம், வேளாண்மைத்துறை அமைச்சராக கே.ஏ.செங்கோட்டையன், மின்துறை அமைச்சராக நத்தம் ஆர்.விஸ்வநாதன், உள்ளாட்சித்துறை அமைச்சராக கே.பி.முனுசாமி, தொழில்துறை அமைச்சராக சி.சண்முகவேலு, வீட்டு வசதித்துறை அமைச்சராக ஆர்.வைத்திலிங்கம், உணவுத்துறை அமைச்சராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அமைச்சர்கள் பதவியேற்றனர். 'ஓவர் ஸ்பீடு' கருப்பசாமி: அடு்த்ததாக கால்நடைத்துறை அமைச்சராக கருப்பசாமி படுவேகமாக ஓடி வந்து, அதே வேகத்தில் படு வேகத்தில் பதவிப் பிரமாணத்தை எடுத்துக் கொண்டு, ஆளுநரின் கையை மிக வேகமாகப் பிடித்து குலுக்கிவிட்டு, படு ஸ்பீடாக திரும்பி வந்து ஜெயலலிதாவுக்கு கும்பிடு போட்டுவிட்டுச் செல்ல, அவரது வேகத்தைப் பார்த்து ஜெயலலிதா விழுந்து விழுந்து சிரித்தார். கூட்டத்தில் இருந்த அனைவருமே சிரிப்பில் ஆழ்ந்தனர். இவரைத் தொடர்ந்து உயர் கல்வித்துறை அமைச்சராக பி.பழனியப்பன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக சி.வி.சண்முகம், கூட்டுறவுத்துறை அமைச்சராக செல்லூர் ராஜூ, வனத்துறை அமைச்சராக கே.டி.பச்சமால், நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி, இந்து அறநிலையத்துறை அமைச்சராக எஸ்.வி.சண்முகநாதன், பொதுப்பணித்துறை அமைச்சராக கே.வி. ராமலிங்கம் ஆகியோர் பதவியேற்றனர். தொடர்ந்து சிறப்பு திட்ட அமலாக்க அமைச்சராக எஸ்.பி.வேலுமணி, சிறப்பு திட்ட அமலாக்க அமைச்சராக எஸ்.பி.வேலுமணி, ஊரக தொழில்துறை அமைச்சராக எம்.சி.சம்பத், வருவாய்த்துறை அமைச்சராக தங்கமணி, செய்தித்துறை அமைச்சராக ஜி.செந்தமிழன் ஆகியோர் பதவியேற்றனர். கோகுல இந்திரா, செல்வி ராமஜெயம்: இவர்களைத் தொடர்ந்து வணிகவரித்துறை அமைச்சராக கோகுல இந்திரா, சமூக நலத்துறை அமைச்சராக செல்வி ராமஜெயம், கைத்தறி-ஜவுளித்துறை அமைச்சராக பி.வி.ரமணா, தகவல் தொழில்நுட்ப அமைச்சராக ஆர்.பி.உதயகுமார், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராக என்.சுப்பிரமணியன், போக்குவரத்து அமைச்சராக செந்தில் பாலாஜி, சுற்றுச்சூழல் அமைச்சராக என்.மரியம் பிச்சை, மீன்வளத்துறை அமைச்சராக கே.ஏ.ஜெயபால், சட்ட அமைச்சராக இசக்கி சுப்பையா, சுற்றுலாத்துறை அமைச்சராக புத்தி சந்திரன் ஆகியோர் பதவியேற்றனர். அடுத்ததாக தொழிலாளர் நலத்துறை அமைச்சராக செல்லப்பாண்டியன், சுகாதாரத் துறை அமைச்சராக டாக்டர் வி.எஸ்.விஜய், விளையாட்டுத்துறை அமைச்சராக என்.ஆர். சிவபதி ஆகியோர் பதவியேற்றனர். இந் நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள், நீதிபதிகள், காவல் துறை அதிகாரிகள், நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், பாடகி பி.சுசீலா, நடிகை அஞ்சலி தேவி, நடிகை செளகார் ஜானகி உட்பட பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர். முதல் கையெழுத்து: முதல்வர் பதவியை ஏற்றதும் ஜெயலலிதா புனித ஜார்ஜ் கோட்டைக்கு புறப்பட்டுச் சென்றார். அவர் முதலில் உத்தரவிடப்போகும் திட்டம் எது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட உறுதி மொழி ஒன்றை நிறைவேற்றுவது தொடர்பான உத்தரவாக அது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. http://thatstamil.oneindia.in/news/2011/05/16/jayalalitha-take-oath-as-cm-today-aid0091.html
  6. இந்த மௌன புரட்சியில் சீமானின் பங்கு Significantly, film director and activist, Mr Seeman who runs a NAAM TAMILAR outfit met the AIADMK chief Miss J Jayalalitha before the polls and offered his support to defeat the DMK-Congress alliance. The DMK government had come down heavily on Mr Seeman and arrested him under NSA, in an apparent bid not to rub up the Congress the wrong way, even as Mr Karunanidhi himself never approved of the LTTE. A powerful orator, Mr Seeman was drawing huge crowds from the day he addressed his first meeting on the Lankan Tamil plight just as the war began to escalate in Sri Lanka towards the end of 2008. In order not to have him challenge his hold on power, the DMK government had him arrested a few times and then under the NSA. As the election campaign drew to a close, the DMK chief gained an image as a friend of the Sri Lankan president, Mr Mahinda Rajapaksa. After offering support to the AIADMK, Mr Seeman’s outfit got down to the job of exclusively targeting the Congress constituencies and campaigned widely in those constituencies. Elsewhere, the Lankan Tamil issue and Karunanidhi’s duplicity along with the “heartless” stand of the Congress was taken up by every Opposition party from the AIADMK to the BJP and even the BSP and independents http://www.thestatesman.net/index.php?option=com_content&view=article&id=369625&catid=36
  7. தமிழக அமைச்சர்கள் விவரம் ஜெ. ஜெயலலிதா - முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் - நிதி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் - விவசாயத்துறை அமைச்சர் நத்தம் ஆர். விஸ்வநாதன் - மின்சாரத்துறை அமைச்சர் கே.பி. முனுசாமி - உள்ளாட்சித்துறை அமைச்சர் சி. சண்முகவேலு - தொழில்துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் - வீட்டுவசதித்துறை அமைச்சர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி - உணவுத்துறை அமைச்சர் சி. கருப்பசாமி - பால் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் பி. பழனியப்பன் - உயர்கல்வித்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் - பள்ளிகல்வித்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜு - கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.டி. பச்சமால் - வனத்துறை அமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி - நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் - இந்து அறநிலையத்துறை அமைச்சர் கே.வி. ராமலிங்கம் - பொதுப்பணித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி - சிறப்புத் திட்டத்துறை அமைச்சர் டி.கே.எம். சின்னையா - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் - ஊரக தொழில்துறை அமைச்சர் பி. தங்கமணி - வருவாய்த்துறை அமைச்சர் ஜி. செந்தமிழன் - செய்தித்துறை அமைச்சர் எஸ். கோகுல இந்திரா - வணிக வரித்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் - சமூகநலத்துறை அமைச்சர் பி.வி. ராமண்ணா - கைத்தறி, ஜவுளித்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் - தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் என். சுப்பிரமணியன் - ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி - போக்குவரத்துத்துறை அமைச்சர் என். மரியம் பிச்சை - சுற்றுச்சூழல் அமைச்சர் கே.ஏ. ஜெயபால் - மீன்வளத்துறை அமைச்சர் இ. சுப்பையா - சட்டத்துறை அமைச்சர் புதிசந்திரன் - சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.டி. செல்லபாண்டியன் - தொழிலாளர் நலத்துறை அமைச்சர் வி.எஸ். விஜய் - சுகாதாரத்துறை அமைச்சர் என்.ஆர். சிவபதி - விளையாட்டுத்துறை அமைச்சர் http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest News&artid=418617&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=
  8. தோல்விக்கு விளக்கம் கேட்டு காங்கிரஸ் மேலிடம் நோட்டீஸ் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைத் தழுவியது குறித்து அக்கட்சியின் தமிழக மூத்த தலைவர்களிடம் கட்சி மேலிடம் விளக்கம் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது தலைமைக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கட்சியின் உயர்நிலைக் குழுவின் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில் ஐந்து மாநில சட்டப் பேரவையின் முடிவுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. தமிழகத்தின் அரசியல் தலையெழுத்தை நிர்ணயிக்கும் கட்சி காங்கிரஸ் என்ற நிலைமை தற்போது தலைகீழாக மாறி விட்டது. தமிழகத்தில் காங்கிரஸின் தற்போதைய நிலை பிகார் மாநிலத்தைப் போல் ஆகிவிட்டது. இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டிருப்பதற்கு முக்கிய காரணம் கட்சியில் உள்ள கோஷ்டிப் பூசலே. இது போன்ற பூசலுக்கு இடம் கொடுக்க எக்காரணத்தைக் கொண்டும் அனுமதிக்க கூடாது என்ற முடிவை காங்கிரஸ் தலைமை வலியுறுத்தியதாகத் தெரிகிறது. குறிப்பாகத் தமிழகத்தைச் சார்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரும், தேசிய அளவில் பிரபலமானவருமான ஒருவரின் மகன், கட்சியின் விதிமுறைகளைக் காற்றில் பறக்கவிட்டு, கட்சியின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் தன்னிச்சையாக செயல்பட்டு வருவதற்கு முற்றுப்புள்ளிவைக்க வேண்டும் என அக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. அடுத்த ஐந்து ஆண்டு காலம் காங்கிரஸ் கட்சிக்குத் தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு ஓர் உறுப்பினரைக் கூட தேர்ந்தெடுக்க முடியாத நிலைமை கட்சித் தலைமைக்குப் பெரிய ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. தேர்தலுக்காக கட்சியால் வழங்கப்பட்ட நிதி சரிவர வேட்பாளர்களுக்குக் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு காங்கிரஸ் தலைமைக்கு வந்துள்ளதாகவும், தமிழகத்தில் கட்சிக்கு இந்த நிலை ஏற்பட்டதற்கு யார் யார் காரணம் என்பதைக் கண்டறிந்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது. மேலும் படுதோல்விக்கான காரணங்கள் குறித்து தமிழகத்தின் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களிடம் இருந்து விளக்கம் கேட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வரும் 22 ஆம் தேதி தனது இரண்டாவது ஆண்டை நிறைவு செய்கிறது. அதற்குப் பிறகு கட்சியிலும், மத்திய அமைச்சரவையிலும் சில அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. அத்துடன் தமிழகத்தில் கட்சியைப் பலப்படுத்தும் வகையில் புதிய பொறுப்பாளர், மாநிலத் தலைவர் ஆகியோரை நியமிக்க இருப்பதாகவும் கட்சித் தலைமைக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. http://www.alaikal.com/news/?p=70061
  9. ஈழ விவகாரத்தில் தமிழினத்திற்குச் செய்த துரோகம் கொங்கு மண்டலத்திற்குட்பட்ட தொகுதிகளில் ஒன்றைக்கூட காங்கிரஸால் ஜெயிக்க முடியவில்லை. போட்டியிட்ட 9 தொகுதிகளிலும் மோசமான தோல்வி அடைந்திருக்கிறது காங்கிரஸ். கொங்கு மண்டலம் கோவை, ஈரோடு, திருப்பூர், ஊட்டி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்குமண்டலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 9 சீட்டுகள் ஒதுக்கப்பட்டன. அவற்றில் ஒன்றைக் கூட கைப்பற்ற முடியாமல் படுதோல்வி அடைந்தது காங்கிரஸ். திருச்செங்கோடு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம், அவினாசி, ஊட்டி, தொண்டாமுத்தூர், வால்பாறை ஆகிய 9 தொகுதிகள் கொங்கு மண்டலத்தில் காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகள் ஆகும். வீணானது ராகுலின் பிரச்சாரம் ராகுலின் செல்லப்பிள்ளைப் பட்டியலில் இருக்கும் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜாவை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ய ராகுலே ஈரோட்டிற்கு வந்து பிரச்சாரம் செய்தார். ராகுலின் பிரச்சாரமும், இளங்கோவனின் ஆதரவும் கைகொடுக்கும் என்ற கனவில் மிதந்த யுவராஜாவிற்கு தேர்தல் முடிவு அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது. விடியல் சேகர், எம்.என். கந்தசாமி, யுவராஜா, மயூரா கந்தசாமி, கோவை தங்கம், செல்வகுமார் போன்ற பிரபலமான முகங்களே தோல்வியைத் தழுவி இருப்பது தொண்டர்கலை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. என்ன காரணம்? ஈழ விவகாரத்தில் தமிழினத்திற்குச் செய்த துரோகம், திமுகவின் குடும்ப அரசியல் மற்றும் பிரம்மாண்ட ஊழல்களின் மீதான எரிச்சல், மோசமான உட்கட்சி பூசல், தங்கபாலுவைப் போன்ற காமெடியான தலைமை, பிரச்சாரத்தில் ஒருங்கிணைப்பு இல்லாமை ஆகியவை தமிழகம் முழுவதிலும் தோல்வியை ஏற்படுத்திய பொதுவான காரணங்கள் என்றாலும் கொங்குமண்டலத்தின் பிரச்சனைகள் எதையுமே காங்கிரஸ் கண்டு கொள்ளாததை இப்பகுதியில் ஏற்பட்ட தோல்விக்கு முக்கிய காரணம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். உள்ளூர் பிரச்சனைகள் மின் பற்றாக்குறை கொங்குமண்டலத்தின் உற்பத்தியாளர்களை வெகுவாகப் பாதித்தது, திருப்பூரின் சாயக்கழிவு நீர் பிரச்சனை, நூல் விலை உயர்வு, லாரி தொழில் எதிர்கொண்ட பிரச்சனைகள், விவசாயிகள் எதிர்கொண்ட சவால்கள் என கொங்குமண்டலத்தின் பிரச்சனைகள் எதையும் காங்கிரஸ் கண்டுகொள்ளவில்லை. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தும் கொங்கு மண்டலத்தின் எந்த பிரச்சனைகளையும் கண்டுகொள்ளாத காங்கிரஸை மக்கள் துரத்தியடித்திருக்கிறார்கள் என்றால் அது மிகையில்லை. http://www.alaikal.com/news/?p=69792
  10. சத்தியமூர்த்தி பவனில் தங்கபாலு-இளங்கோவன் ஆதரவாளர்கள் பயங்கர அடிதடி சென்னை: காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் தங்கபாலு ஆதரவாளர்களுக்கும், இளங்கோவன் ஆதரவாளர்களுக்கும் இடையே இன்று பயங்கர மோதல் நடந்தது. அதில் பலருக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது. வேட்டிகள் கிழிந்தன. சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததால் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து தங்கபாலு ராஜினாமா செய்தார். இது குறித்துக் கேள்விப்பட்டதும் இளங்கோவன் உள்ளிட்ட பிற கோஷ்டித் தலைவர்களின் ஆதரவாளர்கள் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். பட்டாசுகளும் வெடித்தனர். இந்த கொண்டாட்டங்களில் பங்கேற்க இளங்கோவன் ஆதரவாளர்களான முன்னாள் கவுன்சிலர் மணிப்பால், கோபி, பூக்கடை வேலு ஆகியோர் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தனர். ஆனால், அவர்களை உள்ளே விடாமல் தங்கபாலு ஆதரவாளர்களான சந்திரன் உள்ளிட்டோர் தடுத்தனர். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியாக மாறியது. இளங்கோவன் ஆதரவாளர்கள் சந்திரனை அடித்து உதைத்தனர். இதையடுத்து தங்கபாலு ஆதரவாளர்கள் பதிலுக்கு திருப்பித் தாக்கினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர அடிதடி ஏற்பட்டது. ஒருவரையொருவர் அடித்து கீழே தள்ளி மிதித்துக் கொண்டனர். சிலர் தப்பி சத்தியமூர்த்தி பவனுக்குள் ஓட, அவர்களை உள்ளேயும் விரட்டிச் சென்று தாக்கினர். இதில் கட்சி அலுவலகத்தில் இருந்த நாற்காலி, மேஜைகளும் உடைக்கப்பட்டன. இதையடுத்து பிற நிர்வாகிகள் தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தினார். இதைத் தொடர்ந்து இளங்கோவன் ஆதரவாளர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இந்த சண்டை நடந்தபோது தங்கபாலு சத்திமூர்த்தி பவனுக்குள் தான் இருந்தார். அவர் வெளியே வரவில்லை. தங்கபாலு ராஜினாமா செய்ததை கேள்விபட்டதும் அவரது எதிர் கோஷ்டியை சேர்ந்த காங்கிரசார் சத்திய மூர்த்தி பவனுக்கு வந்து இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்தனர். கோவையில் தங்கபாலு கொடும்பாவி எரிப்பு: இந் நிலையில் கோவையில் தங்கபாலுவின் கொடும்பாவியை தொண்டர்கள் எரித்தனர். கோவை காந்திபுரத்தில் இளங்கோவன் ஆதரவாளர்கள் தங்கபாலுவிற்கு எதிராக கோஷமிட்டபடி தங்கபாலுவின் உருவ பொம்மையை எரித்தனர். இது தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்தனர். http://thatstamil.oneindia.in/news/2011/05/14/thankabalu-elangovan-supporter-exchange-blows-aid0090.html
  11. மீண்டும் இங்கு தேர்தல் நடக்க வேண்டும், பணநாயகம் ஜனநாயகத்தை வெல்லக்கூடாது.
  12. தன்னை விற்று பிழைப்பு நடத்தும் xxx கூட ஐந்து நிமிடத்திற்கு மட்டுமே காசு கொடுத்தவனுக்கு அடிமையாக இருக்கிறாள்..! ஒர் ஓட்டுக்காக உன்னை விற்றால் ஐந்து ஆண்டுகளுக்கு நீ அடிமையாகப் போவது மட்டுமின்றி... அன்னை பாரதத்தையும் ஊழல்வாதிகளிடம் அடிமையாக்கி விடுவாய்..! அரசியல் கொள்ளைக்காரர்களின் ஓட்டுக்காக விலை போனால் தாய்நாட்டினை அடிமைப் படுத்தும் நவீன வெள்ளைக்காரனாகிவிடுவாய்..! உன்னை விற்காமல் உண்மையாய் ஓட்டளி... http://tamilnanbargal.com/node/32733 ஒழுங்கான ஆட்சிக்கு ஒழுக்கமாய் வாய்ப்பளி..!
  13. கம்பீரமாக சுமப்போம் கருப்பு ‘மை’யை – செந்தமிழன் சீமான் தமிழக மக்கள் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் வகையில், சட்டப்பேரவைத் தேர்தலில் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி: என் இனமானத் தமிழர்களே… தமிழகத்தில் உள்ள 63 தொகுதிளில் தொண்டைத் தண்ணீர் வற்ற பரப்புரை செய்துவிட்டு, இப்போதுதான் உட்கார அவகாசம் கிடைத்திருக்கிறது. ஒரு கணம் ஓய்வு கிடைத்தால்கூட நிம்மதியாகக் கண் அயரலாமே என சுற்றிச் சுழன்ற உடம்பு ஏங்குகிறது. உட்காரவோ சாப்பிடவோ நேரமின்றி தமிழகம் முழுக்கச் சுற்றிவந்து இறுதியாக சென்னையில் பரப்புரையை முடித்தபோது, என்னால் முடிந்த கடமையை நிறைவேற்றிவிட்டேன் என்கிற நிம்மதி பிறக்கிறது. ஆனாலும், நிமிட பொழுதுகூட என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. எம் தமிழினம் வாக்குப் பதிவின் மகத்துவம் அறிந்து வரிசையில் நிற்குமா… இல்லை, ‘இன்றைய விடுமுறையை எப்படியாவது கழிக்கலாம்’ என நினைத்து வாக்குச்சாவடிக்குப் போவதைத் தவிர்க்குமா என்பது என் நெஞ்சைக் குடையும் கேள்வி. 100 சதவீத வாக்குப் பதிவை முழுமையாக நிகழ்த்தி முன் மாதிரி மாநிலமாக நம்மால் மாற முடியவில்லை. ‘யாருக்கு வாக்களிக்க வேண்டும்’ என உங்களின் விரல் பிடித்து அழைத்துப்போக நீங்கள் ஒன்றும் கிளிப்பிள்ளை அல்ல… என்னுடைய ஒற்றை வேண்டுகோள், ‘தயவு செய்து வாக்களியுங்கள்’! கோபத்தோடு பேசுவதும் சாபத்தோடு வாழ்வதும் நமக்கான தீர்வை எப்படிக் கொடுக்கும்? நம் காயங்களுக்கு மருந்து தேடும் மகத்துவ வரமாக வாக்கு இருக்கிறது. நம்முடைய வாக்குரிமையை நாம் சரியாகப் பயன்படுத்தினாலே, இந்த சமுதாயத்துக்கு ஆற்றவேண்டிய கடமையை மிகச் சரியாக நாம் செய்துவிட்டோம் என்கிற நிறைவுக்கு உறுதி சொல்ல முடியும். வாக்கு செலுத்துவதன் அவசியத்தை உணர்த்த வேண்டிய தலைவர்களே இன்றைக்கு வாக்களிப்பதைப் புறக்கணித்துவிட்டு வேறு வேலைகளைப் பார்க்கிறார்கள். பெருமகனார் பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் அஸ்ஸாம் மாநிலத் தேர்தலில் வாக்களிக்கவில்லை. ‘பிரதமருக்கு பல்வேறு அலுவல்கள் இருந்ததால் வாக்களிக்க முடியவில்லை!’ என பிரதமர் அலுவலகம் விளக்கம் சொல்கிறது. இந்த வெட்கக்கேடான நிலையை எங்கே போய் சொல்வது? ஊழல் லஞ்சம் என எத்தகைய பிரச்னையில் கருத்துக் கேட்டாலும், ‘எனக்குத் தெரியாது’ என ஒண்ணாம் வகுப்பு குழந்தைபோல் சொல்லும் பிரதமர் மன்மோகன் சிங் வாக்களிக்கும் விஷயத்தில்கூட இந்தியக் குடிமகன்களுக்கு முன் மாதிரியாக இருக்கக்கூடாதா? என் இனமானத் தமிழர்களே… குடலைப் பிடுங்கும் குமட்டல் சமூகமாக லஞ்சமும் ஊழலும் இன்றைக்குப் பெருகிவிட்டன. நல்லாட்சி என்றால் அங்கீகரிக்கவும் காட்டாட்சி என்றால் வீட்டுக்கு அனுப்பவும் வாக்கு என்கிற வரம் நம் கையில் இருக்கிறது. ஜனநாயகத்தின் ஜீவனை நிலைகொள்ள வைக்கும் விதமாக நமது வாக்குகளைத் தவறாமல் பதிவு செய்வோம். ஜனநாயகக் கடமையை நிறைவாகச் செய்த பெருமிதத்தோடு நம் விரல்களில் கறுப்பு மையை கம்பீரமாகச் சுமப்போம்! http://rste.org/2011/04/12/%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%80%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa/
  14. ரூ. 5.11 கோடி என்னுடையதுதான், இன்னும் ரூ. 20 கோடி இருக்கு-ஆனா கணக்கு கிடையாது: டிராவல்ஸ் அதிபர் ஆம்னி பஸ்ஸில் பிடிபட்ட ரூ. .5.11 கோடி மட்டுமல்ல, இன்னும் என்னிடம் ரூ. 20 கோடி பணம் உள்ளது. ஆனால் எதற்குமே கணக்கு கிடையாது என்று திருச்சி டிராவல்ஸ் அதிபர் அதிரடியாக கூறியுள்ளார். திருச்சியில் நேற்று முன்தினம் தனியார் ஆம்னி பஸ் ஒன்றின் மேற்கூரையில் 5 பேக்குகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.5 கோடியே 11 லட்சத்து 27 ஆயிரம் பணத்தை திருச்சி மேற்கு சட்டசபை தேர்தல் நடத்தும் அதிகாரி டாக்டர் சங்கீதா அதிரடியாக பறிமுதல் செய்தார். இந்தப் பணம் அமைச்சர் கே.என். நேரு அனுப்பிய பணம் என்று சர்ச்சை கிளம்பியுள்ளது. ஆனால் இதை நேரு மறுத்துள்ளார். இந்த நிலையில் இந்தப் பணத்தை பலத்த பாதுகாப்புடன், தேர்தல் அதிகாரிகள், ஸ்டேட் வங்கியில் டெபாசிட் செய்துள்ளனர். இந்தப் பணப் பறிமுதல் தொடர்பாக 6 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்து வரும் தேர்தல் சோதனைகளில் ஒரே நேரத்தில் பிடிபட்ட மிகப் பெரிய தொகை இது என்பதாலும், அமைச்சர் நேருவின் தொகுதிக்குட்பட்ட பகுதியில் சிக்கியுள்ளதாலும் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக டிராவல்ஸ் உரிமையாளர் உதயக்குமரன், அவரது மகன் அருண் பாலாஜி, நிறுவன மேலாளர் பாலு ஆகியோரிடம் வருமான வரித்துறையினரும்,தேர்தல் அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். அப்போது பணம் குறித்து துருவித் துருவி விசாரிக்கப்பட்டது. அதற்கு உதயக்குமரன் அதிரடியாக விளக்கம் அளித்துள்ளார். அந்த பணம் என்னோடதுதான். அதேபோல என்கிட்ட இன்னும் 20 கோடி இருக்கு. ஆனா எல்லா பணத்துக்கும் என்கிட்ட கணக்கு கிடையாது. நான் 8வது வரைக்கும்தான் படிச்சிருக்கிறேன். அதனால் கணக்கு வச்சிக்கிறது கிடையாது. இதுவரை இன்கம்டாக்ஸ் கட்டாம இருந்தேன். எல்லோரும் சொன்னாங்க. நீ ஒரு நாள் மாட்டப்போறேன்னு. அது போல இப்ப நான் நல்லா வசமா மாட்டிக்கிட்டேன். ரியல் எஸ்டேட்டுக்கு டோக்கன் அட்வான்ஸ் கொடுக்கத்தான் இந்த 5 கோடியை எடுத்துக்கிட்டு மெட்ராஸ் போனேன். தேர்ல் நேரமா இருக்குறதுனாலதான் என்னோட பஸ்சுலேயே டாப்ல கட்டிப்போட்டு எடுத்துக்கிட்டு போனேன் என்று பலே பதிலை அளித்துள்ளார் உதயக்குமரன். இதற்கிடையே, சம்பவத்தன்று அதிகாரி சங்கீதா ரெய்டுக்குப் போனபோது பஸ் இருந்த பகுதியிலிருந்து காரில் நான்கு பேர் தப்பிச் சென்றுள்ளனர். அவர்கள் யார் என்பது குறித்து தற்போது தீவிர விசாரணை நடந்து வருகிறது. http://thatstamil.oneindia.in/news/2011/04/07/trichy-travels-owner-accepts-5-11-cr-belongs-him-aid0091.html
  15. தமிழகத்துக்கு மத்திய அரசு ஆதரவு: சோனியா சென்னையில் தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் சோனியா, பா.ம.க., ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் உரையாற்றிய பா.ம.க., தலைவர் ராமதாஸ், ஜெயலலிதா எதிர்கட்சி தலைவராக இருக்க கூட தகுதியில்லை என கூறினார். பின்னர் உரையாற்றிய முதல்வர் கருணாநிதி, மாநிலங்களுக்கு இடையே நிலவும் நதிநீர் பிரச்சனைகளை தீர்க்க நதிகளை தேசியமயமாக்க நடவடிக்கை எடுக்கவும், தென்னக நிதிகளை இணைக்க மத்திய அரசு உதவி வழங்க சோனியா மூலம் மத்திய அரசை கேட்டு கொள்வதாகவும், தமிழை மததிய ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆக்க வேண்டும். அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கல்வியை மாநில பட்டியலில் சேர்க்க உரிய அரசியலமைப்பு சட்டத்தை கொண்டு வர சோனியா மூலம் மத்திய அரசை கேட்டு கொள்வதாகவும், கச்சத்தீவை மீட்க மத்திய உதவ வேண்டும். சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும். முல்லை பெரியாறு, பாலாறு, மற்றும் காவிரி பிரச்னைகளில் சுப்ரீம் கோர்ட்டில் உள்ள வழக்குகள் ஒத்திவைக்கப்படுவதை தவிர்த்து விரைவில் தீர்வு காண உதவ வேண்டும். ஈழத் தமிழர்களுக்கு சிங்களர்களுக்கு சமமான அதிகாரங்கள் வழங்க வேண்டும் என கூறினார். பின்னர் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா, தமிழகம் இந்தியாவில் முன்னணி மாநிலமாக உள்ளது. ஆட்டோ மொபைல் துறை, ஐ.டி., துறைகளில் தமிழகம் முன்னணியில் உள்ளது. மதிய உணவு, திருமண உதவி திட்டம், விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் இந்தியாவிற்கு எடுத்து காட்டாக உள்ளது. தமிழகத்துக்கு மத்திய அரசு முழு ஆதரவு அளிக்கும். திட்டங்களை நிறைவேற்றுவதற்காகவும், உறுதி மொழிகளை நிறைவேற்றுவதற்காகவும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு ஓட்டுப்போட வேண்டும். நலத்திட்டங்கள் எல்லாம் அனைத்து பிரிவு மக்களுக்கு சென்றடைய வேண்டும். தமிழகம் விரைவான வளர்ச்சி மற்றும் சமூக நீதி பெறுவதற்கு மத்திய மாநில அரசு இணைந்து செயல்படும். இலங்கையில் தமிழர்கள் மறுவாழ்வுக்காக மத்திய அரசு தொடர்ந்து உதவி செய்யும். அங்கு சிங்களவர்களுக்கு சமமாக தமிழர்களுக்கு உரிமைகள் வழங்கப்படும் என்ற இலங்கையின் உறுதிமொழியை நிறைவேற்ற தொடர்ந்து வலியுறுத்துவோம்.மீனவர்கள் மீது இனிமேல் இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடக்காது என உறுதி‌ கூறுகிறோம் என சோனியா கூறினார். http://election.dinamalar.com/election_news_detail.php?id=2318
  16. காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இயக்குனர் சீமான் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார். கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட செல்வபுரத்தில் நேற்று நடந்த பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு சீமான் பேசினார். அப்போது அவர், ‘’தேர்தல் களத்தில் பல்வேறு கட்சிகள் நிற்கிறது. ஆனால் நாம் தமிழர் கட்சி யுத்த களத்தில் நிற்கிறது. காங்கிரஸ் கட்சியை இந்த தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்ற உறுதியுடன் தமிழக மக்கள் முன் நம்பிக்கையுடன் நிற்கிறோம். இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த சிங்கள அரசுக்கு துணை போன காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் ஒரு இடம் கூட கிடைக்காமல் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும். காங்கிரசுக்கு துணைபோன ஆட்சி மாற வேண்டும். ஈழத்தமிழர்களுக்கு செய்த வஞ்சகத்திற்கு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வஞ்சிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளையும் தோற்கடிக்க வேண்டும். காங்கிரசுக்கு துணைபோன ஆட்சி தமிழகத்தில் மாற்றப்பட வேண்டும். காங்கிரஸ் அதனுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளை தோற்கடிக்க வாக்காளர்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.பி.வேலுமணிக்கு வாக்களியுங்கள்’’என்று பேசினார். http://www.alaikal.com/news/?p=64046
  17. சீமான் பிரசாரத்தால் கவலைப்படவில்லை: காங்கிரஸ் தங்களுக்கு எதிரான நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானின் பிரசாரத்தால் கவலைப்படவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தெரிவித்தார். சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறுகையில், "ராகுல் காந்தி ஒவ்வொரு முறையும் தமிழகத்திற்கு வரும்போது முதல்வர் கருணாநிதியை சந்திக்கவில்லை என்று கூறுகிறீர்கள். அவர் சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது இதுபற்றி கூறியிருக்கிறார். முதல்வர் கருணாநிதி ஒரு மூத்த தலைவர். அவர் மீது தனக்கு மிகுந்த அன்பு இருப்பதாக அவரே தெரிவித்திருக்கிறார். மூத்த தலைவர்கள் மீது ராகுல் காந்திக்கு எப்போதும் மிகுந்த மரியாதையும், அன்பும் உள்ளது. தமிழகத்தில் வெளியாகியுள்ள கருத்துக் கணிப்புகள் அனைத்தும் போலியானவை. மக்களை ஏமாற்றும் நயவஞ்சகத்தனத்தின் ஒரு பகுதியே அது. கடந்த 2009ம் ஆண்டு இதேபோல ஒரு கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் எங்கள் கூட்டணிதான் அதிக இடங்களில் வெற்றி பெற்று அந்த கருத்துக்கணிப்பை பொய்யாக்கியது. அதேபோல இந்த முறையும் ஜனநாயக முற்போக்கு கூட்டணிதான் வெல்லும். மேலும், அந்தக் கருத்துக்கணிப்பில் அரசியல் சாதனைகளை கூறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலின் மையக் கருத்தே மத்திய, மாநில அரசுகளே எண்ணற்ற சாதனைகள்தான். எனவே அந்த சாதனைகளை மக்கள் மறக்காமல் இந்த கூட்டணியை வெற்றி பெறச் செய்வார்கள். சோனியா காந்தி அறிவித்த வேட்பாளர்களை எதிர்த்து யார் போட்டியிட்டாலும் அவர்கள் உண்மையான காங்கிரஸ்காரர்களாக இருக்க மாட்டார்கள். எனவேதான் அவர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள். அவர்களை நீக்க எனக்கு அதிகாரம் இல்லை என்று யாரும் சொல்ல முடியாது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போதும் சீமான் எங்கள் கூட்டணியை எதிர்த்து பிரசாரம் மேற்கொண்டார். அதையும் மீறி நாங்கள் வெற்றிபெற்றோம். எங்களுக்கு கூட்டணி பலம் உள்ளது. எனவே இந்தப் பிரச்சாரத்தை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. தேர்தல் ஆணையம் நியாயமாகவும், பாரபட்சமின்றி நடந்து கொள்ளவேண்டும்.மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மீது வழக்குப் பதிவு செய்திருப்பதை கண்டிக்கிறேன். நடிகர் சிரஞ்சீவி காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யவிருக்கிறார். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்," என்றார் தங்கபாலு. http://therthal.vikatan.com/index.php?eid=827
  18. கச்சத்தீவும் தமிழக மீனவர்களும்! எண்ணூரிலிருந்து குளச்சல் துறைமுகம் வரை 1,076 கி.மீ. நீள கடற்கரை வளமுள்ளது தமிழ்நாடு. 13 மாவட்டங்கள், 591-க்கு மேலான கிராமங்களில் 15 லட்சம் மீனவர்கள் வாழ்கிறார்கள். நெய்தல் நிலத்தில் வாழும் இந்தத் தொன்மையான குடிமக்கள், நாட்டின் தென்கோடிக் கடற்கரையின் காவலர்களாகவும் பணியாற்றி வந்த பழங்குடியினர். வங்கக்கடலில் மீன் பிடித்தும், முத்துக் குளித்தும், மேற்கத்திய நாடுகளோடு வணிகத்தொடர்பும் வைத்துக் கொண்டிருந்தவர்கள் இவர்கள். நாடு விடுதலை பெற்று 64 ஆண்டுகளில், கடந்த பத்தாண்டுகளில்தான் கடலில் மீன் பிடிக்க முடியாமலும் கரையில் அமைதியாக வாழ முடியாமலும், இவர்கள் தங்களது வாழ்வுரிமையை இழந்து வருகிறார்கள். இந்திய மீனவர்கள் ஆழ்கடலில் பயணித்துச் சேர்த்துவரும் கடல் பொருள்களின் மூலம் கிடைக்கும் அந்நியச் செலாவணி ஆண்டுக்கு ரூ. 50,000 கோடியாகும்! ஆனால், இந்த மீனவர்கள் கடலில் மீன் பிடிப்பதற்கும் கட்டுப்பாடு! கரையோரங்களில் குடியிருப்பதற்கும் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. நாட்டுப்படகு, விசைப்படகு உரிமையாளர்களான மீனவர்கள் மீன்பிடிக்கும் கடலுக்கு எல்லை விதிக்கப்படுகிறது. ஆழ்கடலில் பிடித்துவரும் மீனுக்கும் அளவு எல்லை போடப்படுகிறது. ஆனால், 15 பெரிய டிராலர்கள், மீன்பிடிக் கப்பல்களின் உரிமையாளர்களுக்கோ, ஆழ்கடலில் மீன் குஞ்சுகளைக்கூடப் பறித்து அள்ளிச் செல்லும் உரிமை வழங்கப்படுகிறது. வியாபாரிகளான கப்பல் முதலாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உரிமை மீன்பிடித் தொழிலைத் தங்களது வாழ்வாதாரமாகக் காலங்காலமாகச் செய்துவரும் மீனவர்களுக்கு மறுக்கப்படுவது என்ன நியாயம் என்பதுதான் கேள்வி. உலகமயமாக்கல் கொள்கையால், மண்ணின் மைந்தர்களான மீனவர்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது. கப்பல் உரிமையாளர்களுக்குக் கடலே சொந்தமாக்கப்பட்டுள்ளது; கடற்கரையும் அழகுபடுத்தப்பட்டு சுற்றுலா மையங்களாகவும், கேளிக்கை விடுதிகளாகவும், உயர்தரப் பொருள்கள் விற்பனை செய்யப்படும் வணிக வளாகங்களாகவும் உருவாக்கப்படுகின்றன. இத்தனை தொல்லைகளையும் தாங்கிக்கொண்டு, மீன்பிடித் தொழிலையே அன்றாட வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளார்கள் மீனவர்கள். வேறு வழி? அவர்களுக்கு வேறு தொழில் எதுவும் தெரியாதே. 1974-1976-ம் ஆண்டுகளில் தமிழகத்துக்குச் சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுக்க இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்துக்குப் பின்னர் நாள்தோறும் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரையில், குறிப்பாக நாகப்பட்டினம், கோடியக்கரை, தொண்டி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி வரையுள்ள கடற்கரையில் 7 லட்சம் மீனவர்கள் வாழ்கிறார்கள். இவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்றால், இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுகிறார்கள். அடித்துக் கொல்லப்படுகிறார்கள். வலைகள் அறுத்தெறியப்படுகின்றன. படகுகளை வெட்டி அழிக்கிறார்கள். மீன்களை மீண்டும் கடலில் வீசிவிடுகிறார்கள். நிர்வாணப்படுத்தி தலைமன்னார் சிறையில் கொடுமைப்படுத்துகிறார்கள். 2010 முடிய - தமிழக மீனவர்கள் 571 பேர் இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளார்கள். காயமடைந்தவர்கள் 1,200 பேர், அழிக்கப்பட்ட விசைப்படகுகள் 300, சேதப்படுத்தப்பட்டவை 600. காணாமல் போனவர்களும் உண்டு; தலைமன்னார் சிறைகளில், கைதிகளாகச் சிலர் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இதுவரை பொருள் சேதமும், மீனவர்கள் அடைந்த பொருள் இழப்பும் ரூ. 25,000 கோடி இருக்கும் என்று கணக்கிடப்படுகிறது. தொடர்ந்து இலங்கை ராணுவத்தால் நொந்து வேதனைப்படும், தமிழக மீனவர்களைப் பற்றி மத்திய அரசும், அமைச்சர்களும் கவலைப்படுவதாகவே தெரியவில்லை. தமிழக அரசும் தனக்கு நெருக்கடி வரும்போதெல்லாம், தமிழக மீனவர்களின் மீது ஒப்புக்குக் கண்ணீர்விட்டு ஆதரவைத் தெரியப்படுத்துவதோடு சரி. டச்சுக்காரர்கள் இலங்கையை அடிமைப்படுத்திய காலத்தில் உருவாக்கிய இலங்கை வரைபடத்தில் கச்சத்தீவு இல்லை. கி.பி.1600-ம் ஆண்டு முதல் பிரிட்டிஷ் ஆட்சி வெளியேறியது வரை, ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்குச் சொந்தமாக இருந்ததற்கான ஆவணங்கள் உள்ளன. சுதந்திரத்துக்குப் பின்னர் 1948-ல் ஜமீன் ஒழிப்புச் சட்டப்படி, கச்சத்தீவு தமிழக அரசுக்குச் சொந்தமாக்கப்பட்டது. தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கச்சத்தீவை, நட்பு முறையில் மத்திய அரசு இலங்கைக்குத் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டது. முதல் ஒப்பந்தம் 1974-ல் கையெழுத்தானது. இந்திரா காந்தியும், சிறிமாவோ பண்டார நாயகாவும் கையெழுத்திட்டார்கள். நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் சர்தார் சுவரண்சிங் பேசியது - ""பாக் நீரிணையில் உள்ள கச்சத்தீவு முக்கால் சதுர மைல் அளவுள்ளதாம். இந்த ஒப்பந்தத்தை நாம் உறுதி செய்கிறபோது, மீன் பிடிக்கும் உரிமை, பண்டிகைக்கான சுற்றுலா, கப்பல் போக்குவரத்து போன்ற உரிமைகள் கடந்த காலத்தில் இரு நாடுகளுக்கும் இருந்தது. வருங்காலத்துக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை மாண்புமிகு அங்கத்தினர்கள் கவனத்தில் கொள்ள வேண்டுமென நினைவுபடுத்துகிறேன். இவ்வொப்பந்த அடிப்படையில் இந்திய மீனவர்களும் யாத்ரீகர்களும் கச்சத்தீவுக்குப் போய் வருவதற்கு இதுவரை பெற்றிருந்த உரிமைகளைத் தொடர்ந்து அனுபவிப்பார்கள். எனவே, போக்குவரத்து அனுமதி ஆவணங்களையோ அல்லது விசா போன்றவற்றையோ வேண்டுமென இலங்கை அரசு கோர முடியாது. ஸ்ரீலங்கா - இந்தியக் கப்பல்கள் இதுவரை பாரம்பரியமாக அனுபவித்து வந்த எல்லா உரிமைகளையும் தொடர்ந்து அனுபவிப்பார்கள். இதுவரை என்னென்ன உரிமைகள் இருந்து வந்ததோ நம்முடைய படகுகள் அந்தப்பக்கம் செல்வதற்கும் அந்தப் பக்கத்திலிருந்து இந்தப்பக்கம் வருவதற்கும் கச்சத்தீவு பயன்படுத்தப்படுவதற்குரிய அந்த உரிமைகள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன என்பது இந்த ஒப்பந்தத்திலிருந்து ஏற்படுகிறது.'' ஆனால், இன்றைய காலகட்டத்தில் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை விரட்டுவதோடு விட்டுவிடாமல், உயிரையும் பறிக்கும் பாதகச் செயலில் ஈடுபட்டு வருகிறது. தமிழக மீனவர்களுக்கு விரோதமான செயலில் இலங்கை அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. கச்சத்தீவை திரும்பப் பெறக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா, அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.எஸ்.மணியன், ம.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி உள்ளிட்டோர் முழக்கமிட்டனர். அதற்கு 31.8.2010 அன்று பதிலளித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, கச்சத்தீவு ஒப்பந்தம் புனிதமானது, பவித்திரமானது அதனை ரத்துசெய்ய முடியாது'' என்றெல்லாம் கூறியுள்ளார். பாக். நீரிணையிலும் மன்னார் வளைகுடாவிலும் இந்திய மீனவர்களுக்கு உள்ள உரிமைகளைப் பேணிக்காக்க வேண்டிய கடமையில் இருந்து மத்திய அரசு விலகி நிற்கிறது. தமிழக அரசு இதற்கு உடந்தையாக வேடிக்கை பார்க்கிறது. இலங்கையில் விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டனர் என்று 2009-ம் ஆண்டு மே மாதம் இலங்கை அரசு அறிவித்த பிறகும், தமிழக மீனவர்களை வேட்டையாடும் செயலை இலங்கைக் கடற்படை நிறுத்தியபாடில்லை. ஜெகதாப்பட்டினம் பாண்டியன், புஷ்பவனம் மீனவர் ஜெயக்குமார் போன்றோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் நிருபமாராவ் இலங்கை சென்று மீனவர் பிரச்னை குறித்துப் பேசிவிட்டுத் திரும்பியபோதும் நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். இதனைக் கண்டிக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள், வேடிக்கை பார்த்துக்கொண்டு தங்களுடைய பொறுப்பைத் தட்டிக் கழித்துள்ளன. சில நாள்களுக்கு முன்னர்கூட ராமேஸ்வரம் மீனவர்களின் செல்போன்கள் பறிக்கப்பட்டுள்ளன. உடைமைகள் நாசமாக்கப்பட்டுள்ளன என்ற செய்திகள் வந்தன. நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்குப் பதிலளித்த பிரதமர் மன்மோகன் சிங், ""இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது. கடலில் எல்லை தாண்டி மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களை, இலங்கைக் கடற்படையினர் கைதுசெய்ய வேண்டுமே தவிர, சுட்டுக்கொல்வதை எந்த வகையிலும் ஏற்க முடியாது'' என்று கூறியுள்ளார். இந்திய மீனவர்களைக் கைது செய்யலாம் என இலங்கை அரசுக்குப் பிரதமரே பச்சைக்கொடி காட்டுவது வேதனை அளிக்கிறது. மேலும், பிப்ரவரி 22-ம் தேதி நாடாளுமன்றத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தாக்கல் செய்த அறிக்கையில், ""சர்வதேசக் கடல் எல்லையைத் தாண்டி இலங்கையின் கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் செல்லும் போதெல்லாம்தான் பிரச்னை ஏற்படுகிறது என்பதை இந்த அவையின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். அதற்காக இந்திய மீனவர்களை அடித்துத் துன்புறுத்துவதோ, சுட்டுக்கொல்வதோ நியாயமாகிவிடாது. அதேவேளையில் இந்திய மீனவர்களும் இலங்கை மீனவர்களின் கவலை, அச்சம் ஆகியவற்றை எண்ணிப்பார்க்க வேண்டும். கடந்த பல ஆண்டுகளாக நிம்மதியாக மீன்பிடிக்க முடியாமல் தவித்த இலங்கை மீனவர்கள், இப்போதுதான் அச்சம் நீங்கி மீன்பிடித் தொழிலில் அக்கறை காட்டி வருகின்றனர். இந்த நிலையில், ஏதோ ஒரு காரணத்துக்காக இந்திய மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லைக்குள் நுழைவதை எப்படி நியாயப்படுத்த முடியும்? இலங்கை மீனவர்களும், மீன்பிடித் தொழில் செய்து பிழைக்க வேண்டும் என்பது நியாயம்'' எனக் கூறியுள்ளார். பிரதமர் மன்மோகன் சிங்கும், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும் கூறுவதைக் கவனிக்கிறபோது, அவர்கள் இலங்கை ராஜபட்ச அரசுக்கு வக்காலத்து வாங்குவதாகத்தான் இருக்கிறதே தவிர, இந்திய மீனவர்கள் பற்றிக் கவலைப்படுவதாகவே தெரியவில்லை. அப்படியானால், இந்திய மீனவர்களின் வாழ்வாதாரம் பற்றி, உரிமைகள் பற்றிக் கவலைப்பட யாருமே கிடையாதா? அவர்கள் நாடில்லா அனாதைகளா? அந்நிய தேசத்துப் பிரஜைகளா? 1987-ம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ராஜீவ் - ஜெயவர்த்தன ஒப்பந்தம் தமிழர்களின் வரலாற்று வாழ்விடமான வடக்கு - கிழக்கு மாகாணத்தை ஒருங்கிணைக்க அடிகோலியது. இலங்கைத் தமிழர்கள் இரண்டாம்தரக் குடிமக்கள் இல்லை என்பதைப் பறைசாற்றியது. அந்த ஒப்பந்தத்தை இனவாத ஜே.வி.பி. தொடுத்த வழக்கின் காரணமாக இலங்கை நீதிமன்றம் ரத்து செய்தது. இலங்கை அரசு, ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தத்தை மதிக்கவில்லை. ஆனால், நாம் மட்டும் எவ்வாறு கச்சத்தீவு ஒப்பந்தத்தைப் புனிதமாகக் கருத முடியும்? புனிதத்தின் பெயரில் இந்திய உயிர்கள் பலியிடப்படலாமா? இந்திய நாட்டில் தமிழக மீனவர்கள் இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தப்படுவது நியாயமாகுமா? எனவே, கச்சத்தீவை மீட்கவும், அங்கு இந்திய மீனவர்களின் உரிமையை நிலைநாட்டவும், நிரந்தரத்தீர்வு காண்பதற்கான எல்லா வழிகளும் காண ஒன்றுபட வேண்டும். மூலம்: தினமணி - பங்குனி 31, 2011
  19. இலங்கை அகதிகள் வாழ நடவடிக்கை: ஜெ. தமிழ்நாட்டில் இலங்கை அகதிகள் கௌரவமாக வாழ நடவடிக்கை எடுக்கப்படும் என, ஜெயலலிதா கூறினார். தூத்துக்குடி அண்ணாநகர் பிரதான சாலையில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில், வாக்கு கேட்டு வேனில் இருந்தபடி ஜெயலலிதா பேசியதாவது: தமிழகம் வளர்ச்சியில் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது. அதிமுக ஆட்சி அமைந்தால் கச்சத்தீவை மீட்டெடுத்து தமிழக மீனவர் நலன் காக்க நடவடிக்கை எடுக்கப்படும். இயந்திர படகுகள் வாங்க மானியம் வழங்கப்படும். 13 இடங்களில் மீன் பதப்படுத்தும் பூங்காக்கள் அமைக்கப்படும். மீன்பிடிக்க விலக்கு அளிக்கப்பட்டுள்ள 45 நாள் தடைக் காலத்தில் மீனவக் குடும்பங்களுக்கு ரூ. 2000 உதவித்தொகை வழங்கப்படும். பருவகாலத்தில் 4 மாதங்களுக்கு மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள இயலாத சூழ்நிலையில் மீனவக் குடும்பங்களுக்கு ரூ. 4000 உதவித்தொகை வழங்கப்படும். தமிழ்நாட்டில் இலங்கை அகதிகள் கௌரவமாக வாழ நடவடிக்கை எடுக்கப்படும். இலவச திட்டங்கள் இலங்கைத் தமிழ் அகதிகள் முகாம்களுக்கும் நீட்டிக்கப்படும். இலங்கைத் தமிழர்கள் தங்கள் சொந்த நாட்டில் அடிமைகள் போல் வாழும் நிலையை மாற்ற மத்திய அரசை வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கப்படும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதியக்குழு முரண்பாடுகள் களையப்படும். சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றார். http://www.alaikal.com/news/?p=63861
  20. தமிழகம், புதுவையில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி ஏப்ரல் 6, 7-ம் தேதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார். ஏப்ரல் 6-ம் தேதி தில்லியில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வரும் அவர், இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் எம்.யுவராஜாவை ஆதரித்து ஈரோட்டிலும், இளைஞர் காங்கிரஸ் அகில இந்தியப் பொதுச்செயலாளர் ஜோதிமணியை ஆதரித்து கரூரிலும், முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசரை ஆதரித்து அறந்தாங்கியிலும், விளாத்திகுளம் தொகுதியில் பெருமாள்சாமியை ஆதரித்தும் ராகுல் காந்தி பிரசாரம் செய்கிறார். தமிழகத்தில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு புதுச்சேரி செல்லும் அவர் ஏப்ரல் 7-ம் தேதி காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார் http://dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D,+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D+2+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&artid=400260&SectionID=129&MainSectionID=129&SEO=&SectionName=Tamilnadu பின்னூட்டம் ஒன்று: தமிழகம், புதுவை வருகின்றார் காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர்; தமிழக புதுவை மக்கள் அவரிடம் கேளுங்கள். இலங்கை தமிழரின் இன்றைய அவல நிலையில் இந்திய அரசின் தெளிவான நிலைப்பாடு என்ன? ஈழம் ஈழத் தமிழர்களின் தாயக மண் என்ற உண்மையை இப்போதாவது ஏற்றுக் கொள்கின்றர்களா. கட்சித் தீவை தமிழ் மக்களை கண்டுக் கொள்ளாமலும், தமிழக அரசை கலக்காமலும் ஏன் இலங்கைக்கு அன்று கொடுத்தீர்கள். ஒவ்வொருப் பிடி மண்ணுக்கும் நாடுகள் சண்டையிடும்போது, போரிடும் பொது எதை மனத்தில் வைத்து இதைச் செய்தீர்கள். இதை மக்களிடம் சொல்ல அவர் கடமைப் பட்டுள்ளார். By பழனிசாமி T

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.