Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கந்தப்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கந்தப்பு

  1. விஜய் சங்கருக்கா, ராகுல் திருப்பதிக்கா? பேபி AB விளையாடுவாரனால் ஒரு வெளிநாட்டு வீரருக்கு பதிலாக களமிறங்குவார். ஓவர்டன்க்கு பதிலாகவா?
  2. 14 ஓவர்கள் போட்டியாக நடைபெறவுள்ளது.
  3. சென்னை அணியில் தென்னாப்பிரிக்கா வீரர் டெவால்ட் பிரவேஸ் இணைகிறார். இவர் நன்றாக 6 ஒட்டங்கள் எடுக்கக்கூடியவர். முன்பு 2023,2024 இல் மும்பாய் அணிக்காக அதிரடியாக 6 ஓட்டங்கள் எடுத்தவர். சென்ற ஏலத்தில் ஒரு அணியும் இவரை எடுக்கவில்லை. ஆனால் அண்மையில் தென்னாப்பிரிக்காவில் நடந்த SAT20 போட்டிகளில் சிறப்பாக விளையாடினார். சென்னை ஏலத்தில் 25 பேரை எடுத்திருந்தது. அதில் வேகப்பந்து வீச்சாளரான குர்ஜப்நீத் சிங் ஒரு போட்டியிலும் இம்முறை விளையாட விட்டாலும் பயிற்சியின் போது காயமடைந்தார். அவருக்கு பதிலாக டெவால்ட் பிரவேஸ் இணைகிறார். சென்னை ஏலத்தில் 7 வெள்ளிநாடடு வீரர்களை மட்டுமே எடுத்தது, அதிகபட்சம் 8 வெளிநாடு வீரரை ஒரு அணி வைத்திருக்கலாம்.ஆகவே சென்னை அணியின் 8 வது வெளிநாட்டு வீரராக இணைகிறார் டெவால்ட். முன்னாள் தென்னாப்பிரிக்கா வீரர் எபி டி விளர்ஸ் போல விளையாடுவதினால் இவரை பேபி AB என அழைப்பார்கள்.
  4. பயணம் இனிதாக அமைய வாழ்த்துகிறேன்.
  5. நான் முதல் போட்டியில் PBKS என்றும் இரண்டாவது போட்டியில் RCB என்றும் தெரிவு செய்துள்ளேன்.
  6. RCB , பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் இன்றும், ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறவுள்ளது.
  7. நானும் அடிச்சு விடப்போகிறேன். 64 வது போட்டியில் (மே 13) பெங்களூரு மைதானத்தில் 286 ஒட்டங்களுக்கு மேல் SRH அடிக்கும். 😀 கிளாசனை நம்பினால் கைவிட மாட்டார்
  8. இந்த மைதானத்தில்தான் மும்பைக்கு எதிராக 116 ஒட்டங்களை KKR எடுத்தது . SRH 200 அடிக்கவே கஷ்டம் போலஇருக்குது . இதில 300 🤔.
  9. காயம் பட்டால் சொந்த காரணங்களுக்காக விளையாடாமல் நின்றால் காயப்பட்டால் அதற்கு அந்த வருடத்தில் பேசிய பணம் முழுதுமாக வழங்கப்படும். ஆனால் முதலாவது போட்டி துவங்க முதல் வேறு போட்டிகளில் காயப்பட்டு அவ்வருடம் ஐபிஎல் விளையாட மாட்டார் என அணியில் இருந்து விலகினால் அல்லது விலக்கப்பட்டால் அவருக்கு சம்பளம் இல்லை. சென்னை ருத்துராஜ் , SRH அடம் சாம்பா போன்றவர்களுக்கு பேசிய முழுப்பணமும் வழங்கப்படும். தனிப்பட்ட ரீதியாக சில போட்டிகளில் விளையாடாவிட்டால் ( உ+ ம் ரபாடா தென்னாப்பிரிக்கா சென்று உள்ளார்) அந்த விளையாட்டு வீரர் விளையாடாமல் சென்ற போட்டிகளின் எண்ணிக்கை விகிதத்தை கழித்து விட்டு மிகுதி சம்பளத்தை வழங்குவார்கள்.
  10. நடராஜன் இல்லாமலே 6 போட்டிகளில் 5 இனை டெல்லி வென்று முதல் இடத்தில் இருக்கிறது. மிகுதி 8 போட்டிகளில் 3 இனை வென்றால் playoff க்கு டெல்லி தெரிவாகலாம் . சிலவேளை சென்ற வருடம் பெங்களூரூ போல மேலும் 2 போட்டிகள்( மொத்தம் 7 /14 போட்டிகள்) வென்றும் தெரிவாகலாம். நடராஜன் 7,8 மாதங்கள் காயம் காரணமாக விளையாடவில்லை. 2024 இல் விளையாடியது போல வருவாரா? . வெற்றி பெற்ற 3 போட்டிகளில் டு பிளிஸ் விளையாடினார். அதில் ஒன்றில் 2 ஒட்டங்கள் பெற்றாலும் மற்றைய போட்டிகளில் 29, 50 என எடுத்திருக்கிறார். நீங்கள் சொல்வது போல டூ பிளிஸ், நடராஜன் போன்றவர்களின் வருகையினால் ஜேக் பிரேசர் மெக்கர்க், முகேஷ் குமார் (அல்லது மோகித் சர்மா) உள்ள டெல்லி அணியை விட பலம் வாய்ந்த அணியாக இருக்கும் என நானும் நம்புகிறேன்.
  11. டெல்லி ஒரு போட்டியைத்தவிர எல்லாப்போட்டிகளிலும் வென்றிருக்கிறது. இதனால் அடிக்கடி அணியை காட்டாயம் மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்ப்படவில்லை. முக்கியமாக Faf du Pleassis காயம் காரணமாக விளையாடாத சூழ்நிலை. அத்துடன் வேறு ஆரம்ப துடுப்பாடாளர்களும் அணியில் இல்லை. ஆனால் சென்னைக்கு எதிரான போட்டியில் ராகுல் ஆரம்ப துடுப்பாட்டாளராக விளையாடி 77 ஓட்டங்கள் பெற்றவர். ( முன்பும் பஞ்சாப்,லக்னோ அணியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக ராகுல் சிறப்பாக விளையாடி இருக்கிறார்.) Jake Frasher McGurk க்கு பதிலாக ராகுல் ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவும், சமீர் ரிஸ்வி ராகுலின் இடத்திலும் விளையாடலாம். சிலவேளை துடுப்பாட்ட வரிசையில் 3 - 5 இடங்களில் அணிக்கு சிறந்த வீரர் ராகுல் ( சூரியகுமார் ஜாதவ், ஹென்ரிச் கிளாசன் மாதிரி) விளையாடினால் நல்லது என நினைக்கிறார்களோ.
  12. அதிகப்பட்சம் 4 வெளிநாட்டு வீரர்கள்தான் விளையாடலாம். அதற்கு குறைவாக எத்தனை பெறும் இருக்கலாம். ஏன் 11 இந்தியர்கள் கொண்ட அணியாகவும் விளையாடலாம். ஏலத்தில் ஒரு அணி 25 பேர்களை அதிகபட்சம் எடுக்கலாம். இதில் வெளிநாட்டு வீரர்கள் அதிகபட்சம் 8 ஆக இருக்கவேண்டும். சென்னை, டெல்லி அணி இம்முறை 7 வெளிநாட்டு வீரர்கள் எடுத்திருக்கிறார்கள். இதில் டெல்லி அணியில் ஏலத்தில் எடுத்த Harry brook விலகிவிட்டதினால் டெல்லி அணியில் 6 வெளிநாட்டு வீரர்கள். அதில் Faf Du Plessis காயப்பட்டிருக்கிறார். ஆக 5 வெளிநாட்டு வீரர்கள் விளையாடக்கூடிய நிலையில் இருக்கிறார்கள்
  13. இதுதான் செம்பாட்டு மண்ணின் பெருமை என்பது. தான் தோற்றாலும் பரவாயில்லை இன்னுமொரு செம்பாட்டன் வெல்லவேணும் என்ற உயர்ந்த குணம் வேறு மண்ணில் காண்பது அரிது. நன்றி தலைவா
  14. இதுவரை நடந்த 2 போட்டிகளிலும் முதலில் விளையாடிய அணிகள் முறையே 205/4, 219/6 ஓட்டங்கள் எடுத்தன. 2 வது போட்டியில் இரண்டாவது விளையாடிய சென்னை 201/5 ஓட்டங்கள் பெற்றது. பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான மைதானமாக அமையவில்லை. ஆனால் இன்று ராணா விக்கெட்டுகளை எடுத்து இருக்கிறார்
  15. விஜய் சங்கர் நிதானமாக விளையாடக்கூடியவர். overton இறுதி நேரத்தில் கண்டபடி அடித்து ஓட்டங்கள் பெறக்கூடியவர். முன்பே இவரை விட்டால் கண்டபடி அடித்து விரைவில் ஆட்டமிழப்பார்.
  16. மொயின் அலி சூழல் பந்துக்கு சாதகமான மைதானங்களில் மட்டுமே விளையாடுகிறார் போல இருக்குது. இதுவரை நடந்த 6 போட்டியில் 3 போட்டியில் விளையாடினார். அதிலும் 2 போட்டியில்தான் பந்து வீசினார்
  17. நேற்று அஸ்வினுக்கு பதிலாக இவரை எடுத்ததற்கு காரணம் இவரின் துடுப்பாட்டம்தான். இவர் தோனி, துபே போல 6 ஓட்டங்கள் அடிக்கக் கூடியவர். ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 4 பந்துகளில் 11 ஓட்டங்கள் அடித்தார்.
  18. Overtone க்கு ஏற்கனவே 2 ஓவர் குடுத்ததினால் இவர்களுக்கு 4 ஓவர்கள் வழங்கவில்லை. அவருக்கு குடுக்காமல் விட்டிருந்தால் இவர்கள் இருவருக்கும் 4 வது ஓவர்கள் கிடைத்திருக்கும்.
  19. முதல் சுற்றில் 70 போட்டிகள். மிகுதியாக இருப்பவை வெறும் 4 போட்டிகள் மட்டுமே. சென்ற வருடம் சென்னை முதல் சுற்றில் மட்டுமே விளையாடியது. மிகுதி 4 நான்கு போட்டிகளும் ( Qualifier 1, Eliminator, Qualifier 2, இறுதி போட்டி) அரங்கு நிறைந்த போட்டிகளாகவே இருந்தன. உலகக்கோப்பை போட்டிகளில் இந்தியா ஆரம்ப சுற்றில் வெளியேறினால், அதற்கு பிறகு நடைபெறும் சூப்பர் 8, சூப்பர் 6 போட்டிகளில் இந்தியா விளையாட விட்டால் வருமானம் குறைந்து இருந்தது. குறிப்பாக 2007 இல் மேற்கிந்தியா தீவில் நடைபெற்ற உலகக்கோப்பையினை சொல்லலாம். சென்னை நல்லாய் விளையாடுதே இல்லையோ இந்த முறை நடைபெறும் ஐபிஎல் தொடரில் உள்ள மொத்தமாக உள்ள 74 ( 70 ஆரம்ப சுற்று + 4 இறுதி போட்டிகள்) போட்டிகளில் குறைந்தது 69 வது வரை சென்னை விளையாடும். ( 69 வது போட்டிதான் சென்னை இம்முறை ஆரம்ப சுற்றில் விளையாடும் இறுதி போட்டி). ஐபிஎல் போட்டிகளின் இறுதி போட்டிகள் யார் விளையாடினாலும் எப்பொழுதும் அரங்கு நிறைந்த போட்டிகளாகவே இருக்கும்.
  20. அடம் சம்பா நீங்கள் சொல்வதுபோல 2 போட்டிகளிலும் சாதிக்கவில்லை. ஆனால் அணியில் இருக்கும் ராகுல் சகாருக்கு (இவரும் சூழல் பந்து வீச்சாளர்)இன்னும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
  21. நீங்கள் சொல்வது போல துடுப்பாட்டமும் , நன்றாக விளையாடிய ரிஷப் பண்ட் , ஆயுஷ் பதோனி, அப்துல்சமித் ஆட்டமிழக்க காரணமாக இருந்த காரணத்தினாலும் தோனிக்கு போட்டியின் சிறந்த வீரருக்கான பரிசினை வழங்கி இருக்கலாம். நூர் அகமது சிறப்பாக பந்து வீசினார். வெறும் 13 ஓட்டங்கள் கொடுத்தார். ஒன்று, இரண்டு விக்கெட் எடுத்திருந்தால் அவருக்கு விருது கிடைத்திருக்கும் என நினைக்கிறேன். ஆனால் முரளி கார்த்திக் கேட்ட கேள்விக்கு தோனி, சிறப்பாக பந்து வீசிய நூர் அகமது, ஜடேஜா போன்றவர்களுக்கு விருது வழங்கியிருக்க வேண்டும் என தெரிவித்தார்.
  22. போட்டியில் முதல் இடத்தில் இருக்கும் சுவி அவர்களுக்கு வாழ்த்துகள்
  23. இவ்வருடம் நடைபெற்ற ஐபிஎல்லில் பவர் பிளேயில் பந்து வீசிய அஸ்வின், Overton ,முகேஷ் சவுத்திரி போன்றோர்கள் அதிக ஒட்டங்களை குடுத்தார்கள். ஆனால் நேற்றைய போட்டியில் Khaleel Ahemed உடன் Anshul Kamboj சிறப்பாக பவர் பிளேயில் குறைந்த ஒட்டங்களை குடுத்தார்கள். குறிப்பாக பூரான், ஏய்டன் மார்க்கம் போன்றோர்கள் பவர் பிளேயில் குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழக்க செய்தது. நேற்று சென்னை அணியின் களத்தடுப்பு (fielding) சிறப்பாக இருந்தது . குறிப்பாக Markram அடித்த பந்தை ராகுல் திருப்பதிபிடித்த விதத்தை சொல்லலாம். முந்தைய போட்டிகளின்போது எதிரணியினர் அடித்த பந்துகளை பிடிக்கத்தவறியதினால் அதிக ஒட்டங்களை விட்டுக் குடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பஞ்சாப் அணியின் ஆர்யா அடித்த பந்தினை இருமுறை பிடிக்க சென்னை அணி வீரர்கள் தவறிவிட்டார்கள். இதனால் ஆர்யா அப்போட்டியில் 103 ஒட்டங்களை பெற்றார். முதலில் பிடித்திருந்தால் சென்னை சிலவேளை அப்போட்டியில் வென்று இருக்கலாம். தோனியும் நேற்று நன்றாக விளையாடிய ரிஷப் பண்ட் , ஆயுஷ் பதோனி, அப்துல் சமித் ஆட்டமிழக்க காரணமாக இருந்தார். வழமை போல நேற்று நூர் அகமது சிறப்பாக பந்து வீசினார். shaik ரஷீத் சச்சின் ரவீந்திர போன்றோர்கள் முதன்முறையாக இந்தவருடம் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பவர்பிளேவில் 50 ஓட்டங்களுக்கு மேல் சென்னை அணி எடுக்க உதவினார்கள். சிவம் துபே ஆரம்பத்தில் மெதுவாக அடித்து விளையாடினார். ஆனால் தோனி வந்து வேகமாக அடித்து அணி வெல்வதற்கு உதவி செய்தார். LSG அணியின் Ravi Bishnoi யும் சிறப்பாக 3 ஓவரில் 18 ஓட்டங்கள் குடுத்து 2 விக்கட் எடுத்தார். அவருக்கு ஏன் 4 வது ஓவர் வழங்கப்படவில்லை என வர்ணனையாளர் மைக்கல் கிளாக் கேள்வி எழுப்பி இருந்தார். விரைவாக அடிக்க கூடிய டேவிட் மில்லருக்கும் அடிப்பதற்கு LSG சந்தர்ப்பம் வழ்ங்கவில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.