Everything posted by கந்தப்பு
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்னும் முற்று முழுதாக போகவில்லை. மிகுதி 6 போட்டியில் வென்றால் சென்னை 8 போட்டிகளில் வென்றதாகி விடும். சென்ற வருடம் பெங்களூர் அணி 7 போட்டிகளில் வென்று அடுத்த சுற்றுக்கு சென்று விட்டது . சென்ற வருடம் முதல் 8 போட்டியில் பெங்களூரு அணி ஒன்று மட்டுமே வென்றது. மிகுதி 6 போட்டிகளும் வென்று அடுத்த சுற்றுக்கு சென்றது ஆனால் சென்னை, ராஜஸ்தான் அணிகள் 8 போட்டிகளில் இம்முறை 2 போட்டிகளில் வென்றன . கொல்கத்தா 7 போட்டியில் 3 வென்று இருக்கிறது. இன்னும் ஒரு அணியும் இதுவரை அடுத்த சுற்றுக்கோ செல்வது உறுதிப்படுத்தப்படவில்லை.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
விஜய் சங்கர் திருநெல்வேலிகாரர். ஆண்ட்ரே சித்தார்த்தும் தமிழ் நாட்டுக்காரர். சென்னை, கொல்கத்தா என்று தெரிவு செய்திருக்கிறீர்கள். SRH இனை தெரிவு செய்து மோசம் போனேன் 😄
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
7 பந்தில் 2 ஆறு ஓட்டங்கள், 2 நாலு ஓட்டங்கள் என 22 ஓட்டங்கள் எடுத்துள்ளார்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நான் எழுதியது மாதிரி இரு போட்டிகளும் நடந்திருக்கிறது
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சென்னை அணியில் ராகுல் திருப்பதிக்கு பதிலாக 17 வயது ஆயுஷ் ம்ஹாத்ரே விளையாடுகிறார்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நிச்சியமாக இல்லை
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்றைய போட்டியில் மும்பாய் வெல்லும் என எழுதியிருந்தாலும் நான் சென்னை அணிக்கே இன்று ஆதரவு
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வெளியநாட்டு வீரர்களில் நூர் அகமது, பத்திரனா,ரச்சின் ஜடேஜா கட்டாயம் விளையாடுவார்கள். பேபி AB விளையாடவேண்டும் என்றால் 4 வது வெளிநாட்டு வீரர் ஓவர்டனுக்கு பதிலாகவே விளையாடுவார். ஆனால் ஓவர்டன் ஒரு பந்து வீச்சாளர். Baby AB யும் ஒன்று இரண்டு ஓவர்கள் போடக்கூடியவர். ரச்சின் ஜடேஜா, விஜய் சங்கர் போன்றவர்களும் 1,2 ஓவர்கள் போடக்கூடியவர்கள் .
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இவர் முன்பு மும்பாய் டெல்லி போட்டி பற்றியும் எழுதியிருந்தார். சென்னை, மும்பாய் அணிகளுக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள் இவ்வணிகள் வென்றாலும் தோன்றாலும் இவ்வணிகள் விளையாடும் போட்டிகளுக்கு இவ்வணிகளின் இரசிகர்கள் போட்டிகள் பார்க்க செல்வார்கள். நான் நினைக்கிறேன் ஊகத்தின் அடிப்படையில் எழுதுகிறார் என நினைக்கிறேன்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
விஜய் சங்கருக்கா, ராகுல் திருப்பதிக்கா? பேபி AB விளையாடுவாரனால் ஒரு வெளிநாட்டு வீரருக்கு பதிலாக களமிறங்குவார். ஓவர்டன்க்கு பதிலாகவா?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
14 ஓவர்கள் போட்டியாக நடைபெறவுள்ளது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இப்பொழுது மழை விட்டுவிட்டது
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சென்னை அணியில் தென்னாப்பிரிக்கா வீரர் டெவால்ட் பிரவேஸ் இணைகிறார். இவர் நன்றாக 6 ஒட்டங்கள் எடுக்கக்கூடியவர். முன்பு 2023,2024 இல் மும்பாய் அணிக்காக அதிரடியாக 6 ஓட்டங்கள் எடுத்தவர். சென்ற ஏலத்தில் ஒரு அணியும் இவரை எடுக்கவில்லை. ஆனால் அண்மையில் தென்னாப்பிரிக்காவில் நடந்த SAT20 போட்டிகளில் சிறப்பாக விளையாடினார். சென்னை ஏலத்தில் 25 பேரை எடுத்திருந்தது. அதில் வேகப்பந்து வீச்சாளரான குர்ஜப்நீத் சிங் ஒரு போட்டியிலும் இம்முறை விளையாட விட்டாலும் பயிற்சியின் போது காயமடைந்தார். அவருக்கு பதிலாக டெவால்ட் பிரவேஸ் இணைகிறார். சென்னை ஏலத்தில் 7 வெள்ளிநாடடு வீரர்களை மட்டுமே எடுத்தது, அதிகபட்சம் 8 வெளிநாடு வீரரை ஒரு அணி வைத்திருக்கலாம்.ஆகவே சென்னை அணியின் 8 வது வெளிநாட்டு வீரராக இணைகிறார் டெவால்ட். முன்னாள் தென்னாப்பிரிக்கா வீரர் எபி டி விளர்ஸ் போல விளையாடுவதினால் இவரை பேபி AB என அழைப்பார்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பயணம் இனிதாக அமைய வாழ்த்துகிறேன்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நான் முதல் போட்டியில் PBKS என்றும் இரண்டாவது போட்டியில் RCB என்றும் தெரிவு செய்துள்ளேன்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
RCB , பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் இன்றும், ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறவுள்ளது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நானும் அடிச்சு விடப்போகிறேன். 64 வது போட்டியில் (மே 13) பெங்களூரு மைதானத்தில் 286 ஒட்டங்களுக்கு மேல் SRH அடிக்கும். 😀 கிளாசனை நம்பினால் கைவிட மாட்டார்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இந்த மைதானத்தில்தான் மும்பைக்கு எதிராக 116 ஒட்டங்களை KKR எடுத்தது . SRH 200 அடிக்கவே கஷ்டம் போலஇருக்குது . இதில 300 🤔.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
காயம் பட்டால் சொந்த காரணங்களுக்காக விளையாடாமல் நின்றால் காயப்பட்டால் அதற்கு அந்த வருடத்தில் பேசிய பணம் முழுதுமாக வழங்கப்படும். ஆனால் முதலாவது போட்டி துவங்க முதல் வேறு போட்டிகளில் காயப்பட்டு அவ்வருடம் ஐபிஎல் விளையாட மாட்டார் என அணியில் இருந்து விலகினால் அல்லது விலக்கப்பட்டால் அவருக்கு சம்பளம் இல்லை. சென்னை ருத்துராஜ் , SRH அடம் சாம்பா போன்றவர்களுக்கு பேசிய முழுப்பணமும் வழங்கப்படும். தனிப்பட்ட ரீதியாக சில போட்டிகளில் விளையாடாவிட்டால் ( உ+ ம் ரபாடா தென்னாப்பிரிக்கா சென்று உள்ளார்) அந்த விளையாட்டு வீரர் விளையாடாமல் சென்ற போட்டிகளின் எண்ணிக்கை விகிதத்தை கழித்து விட்டு மிகுதி சம்பளத்தை வழங்குவார்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நடராஜன் இல்லாமலே 6 போட்டிகளில் 5 இனை டெல்லி வென்று முதல் இடத்தில் இருக்கிறது. மிகுதி 8 போட்டிகளில் 3 இனை வென்றால் playoff க்கு டெல்லி தெரிவாகலாம் . சிலவேளை சென்ற வருடம் பெங்களூரூ போல மேலும் 2 போட்டிகள்( மொத்தம் 7 /14 போட்டிகள்) வென்றும் தெரிவாகலாம். நடராஜன் 7,8 மாதங்கள் காயம் காரணமாக விளையாடவில்லை. 2024 இல் விளையாடியது போல வருவாரா? . வெற்றி பெற்ற 3 போட்டிகளில் டு பிளிஸ் விளையாடினார். அதில் ஒன்றில் 2 ஒட்டங்கள் பெற்றாலும் மற்றைய போட்டிகளில் 29, 50 என எடுத்திருக்கிறார். நீங்கள் சொல்வது போல டூ பிளிஸ், நடராஜன் போன்றவர்களின் வருகையினால் ஜேக் பிரேசர் மெக்கர்க், முகேஷ் குமார் (அல்லது மோகித் சர்மா) உள்ள டெல்லி அணியை விட பலம் வாய்ந்த அணியாக இருக்கும் என நானும் நம்புகிறேன்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
டெல்லி ஒரு போட்டியைத்தவிர எல்லாப்போட்டிகளிலும் வென்றிருக்கிறது. இதனால் அடிக்கடி அணியை காட்டாயம் மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்ப்படவில்லை. முக்கியமாக Faf du Pleassis காயம் காரணமாக விளையாடாத சூழ்நிலை. அத்துடன் வேறு ஆரம்ப துடுப்பாடாளர்களும் அணியில் இல்லை. ஆனால் சென்னைக்கு எதிரான போட்டியில் ராகுல் ஆரம்ப துடுப்பாட்டாளராக விளையாடி 77 ஓட்டங்கள் பெற்றவர். ( முன்பும் பஞ்சாப்,லக்னோ அணியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக ராகுல் சிறப்பாக விளையாடி இருக்கிறார்.) Jake Frasher McGurk க்கு பதிலாக ராகுல் ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவும், சமீர் ரிஸ்வி ராகுலின் இடத்திலும் விளையாடலாம். சிலவேளை துடுப்பாட்ட வரிசையில் 3 - 5 இடங்களில் அணிக்கு சிறந்த வீரர் ராகுல் ( சூரியகுமார் ஜாதவ், ஹென்ரிச் கிளாசன் மாதிரி) விளையாடினால் நல்லது என நினைக்கிறார்களோ.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அதிகப்பட்சம் 4 வெளிநாட்டு வீரர்கள்தான் விளையாடலாம். அதற்கு குறைவாக எத்தனை பெறும் இருக்கலாம். ஏன் 11 இந்தியர்கள் கொண்ட அணியாகவும் விளையாடலாம். ஏலத்தில் ஒரு அணி 25 பேர்களை அதிகபட்சம் எடுக்கலாம். இதில் வெளிநாட்டு வீரர்கள் அதிகபட்சம் 8 ஆக இருக்கவேண்டும். சென்னை, டெல்லி அணி இம்முறை 7 வெளிநாட்டு வீரர்கள் எடுத்திருக்கிறார்கள். இதில் டெல்லி அணியில் ஏலத்தில் எடுத்த Harry brook விலகிவிட்டதினால் டெல்லி அணியில் 6 வெளிநாட்டு வீரர்கள். அதில் Faf Du Plessis காயப்பட்டிருக்கிறார். ஆக 5 வெளிநாட்டு வீரர்கள் விளையாடக்கூடிய நிலையில் இருக்கிறார்கள்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இதுதான் செம்பாட்டு மண்ணின் பெருமை என்பது. தான் தோற்றாலும் பரவாயில்லை இன்னுமொரு செம்பாட்டன் வெல்லவேணும் என்ற உயர்ந்த குணம் வேறு மண்ணில் காண்பது அரிது. நன்றி தலைவா
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இதுவரை நடந்த 2 போட்டிகளிலும் முதலில் விளையாடிய அணிகள் முறையே 205/4, 219/6 ஓட்டங்கள் எடுத்தன. 2 வது போட்டியில் இரண்டாவது விளையாடிய சென்னை 201/5 ஓட்டங்கள் பெற்றது. பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான மைதானமாக அமையவில்லை. ஆனால் இன்று ராணா விக்கெட்டுகளை எடுத்து இருக்கிறார்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
விஜய் சங்கர் நிதானமாக விளையாடக்கூடியவர். overton இறுதி நேரத்தில் கண்டபடி அடித்து ஓட்டங்கள் பெறக்கூடியவர். முன்பே இவரை விட்டால் கண்டபடி அடித்து விரைவில் ஆட்டமிழப்பார்.