Everything posted by கந்தப்பு
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சென்ற ஐபிஎல்இல் இரண்டாம் இடத்தை பெற்றதற்கான முக்கிய வீரர்கள் அபிஷேக் சர்மா, ட்ரவ்ரிஸ் ஹெட், கிளாசன் போன்றவர்களும் இஷான் கிருஷ்ணன், முகமது சாமி, சென்ற ஐபிஎல்லில் அதிக விக்கெட்டுக்கள் பெற்ற ஹர்சல் பட்டேல் அடங்கிய அணி என்பதினால் SRH இவ்வருடம் முதலிடம் பிடிக்கும் என எழுதினேன். ஆனால் நடப்பது என்னவோ?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மோயின் அலி அண்மைக்காலங்களில் துடுப்பாட்டத்தில் பெரிதாக சாதிக்கவில்லை
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் சென்றவருடம் கேகேஆர் இருந்தபோது ரஸலுக்கு சில ஓவர்கள் வழங்கியிருந்தார். ஆனால் ராகனா எதிரணி நன்றாக விளையாடும் போது ஏதாவது விக்கெட் எடுக்க வேண்டும் போது ஒரு ஓவர் மட்டும் வழங்கி பார்க்கிறார் போல இருக்கிறது. இன்று வழங்கிய ஒரே ஒரு ஓவரில் முதலாவது விக்கெட்டான சாயி சுதர்சனின் விக்கெட்டை ரஸல் எடுத்தார்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கொல்கத்தா அணியில் மொயின் அலி, குர்பாஸ் விளையாடுகிறார்கள் குயின்டன் டி காக் , nortje இன்று விளையாடவில்லை
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அடுத்த இரண்டு ஏலமும்( 2026,2027 )மினி ஏலம்தான், முற்று முழுதாக அணியில் பெரிய மாற்றங்கள் இருக்காது. தீபக் கோடா உட்பட சில இந்திய வீரர்களும், 2,3 வெளிநாடு வீரர்களும் நீக்கப்படுவார்கள். 2022 இல் நடைபெற்ற மெகா ஏலத்தில் பிறகு நடைபெற்ற போட்டியில் சென்னை விளையாடிய 14 போட்டியில் 4 மட்டும் வென்று 9 ம் இடம் பிடித்தது. அடுத்து வந்த மினி ஏலத்தில் ஒரு சில மாற்றங்களுடன் சென்னை அணி 2023 இல் முதலிடத்தை பிடித்தது
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நான் நம்பவில்லை. ஆனால் அவர்கள் இன்னும் முற்று முழுதாக நீங்கவில்லை
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்னும் முற்று முழுதாக போகவில்லை. மிகுதி 6 போட்டியில் வென்றால் சென்னை 8 போட்டிகளில் வென்றதாகி விடும். சென்ற வருடம் பெங்களூர் அணி 7 போட்டிகளில் வென்று அடுத்த சுற்றுக்கு சென்று விட்டது . சென்ற வருடம் முதல் 8 போட்டியில் பெங்களூரு அணி ஒன்று மட்டுமே வென்றது. மிகுதி 6 போட்டிகளும் வென்று அடுத்த சுற்றுக்கு சென்றது ஆனால் சென்னை, ராஜஸ்தான் அணிகள் 8 போட்டிகளில் இம்முறை 2 போட்டிகளில் வென்றன . கொல்கத்தா 7 போட்டியில் 3 வென்று இருக்கிறது. இன்னும் ஒரு அணியும் இதுவரை அடுத்த சுற்றுக்கோ செல்வது உறுதிப்படுத்தப்படவில்லை.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
விஜய் சங்கர் திருநெல்வேலிகாரர். ஆண்ட்ரே சித்தார்த்தும் தமிழ் நாட்டுக்காரர். சென்னை, கொல்கத்தா என்று தெரிவு செய்திருக்கிறீர்கள். SRH இனை தெரிவு செய்து மோசம் போனேன் 😄
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
7 பந்தில் 2 ஆறு ஓட்டங்கள், 2 நாலு ஓட்டங்கள் என 22 ஓட்டங்கள் எடுத்துள்ளார்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நான் எழுதியது மாதிரி இரு போட்டிகளும் நடந்திருக்கிறது
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சென்னை அணியில் ராகுல் திருப்பதிக்கு பதிலாக 17 வயது ஆயுஷ் ம்ஹாத்ரே விளையாடுகிறார்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நிச்சியமாக இல்லை
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்றைய போட்டியில் மும்பாய் வெல்லும் என எழுதியிருந்தாலும் நான் சென்னை அணிக்கே இன்று ஆதரவு
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வெளியநாட்டு வீரர்களில் நூர் அகமது, பத்திரனா,ரச்சின் ஜடேஜா கட்டாயம் விளையாடுவார்கள். பேபி AB விளையாடவேண்டும் என்றால் 4 வது வெளிநாட்டு வீரர் ஓவர்டனுக்கு பதிலாகவே விளையாடுவார். ஆனால் ஓவர்டன் ஒரு பந்து வீச்சாளர். Baby AB யும் ஒன்று இரண்டு ஓவர்கள் போடக்கூடியவர். ரச்சின் ஜடேஜா, விஜய் சங்கர் போன்றவர்களும் 1,2 ஓவர்கள் போடக்கூடியவர்கள் .
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இவர் முன்பு மும்பாய் டெல்லி போட்டி பற்றியும் எழுதியிருந்தார். சென்னை, மும்பாய் அணிகளுக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள் இவ்வணிகள் வென்றாலும் தோன்றாலும் இவ்வணிகள் விளையாடும் போட்டிகளுக்கு இவ்வணிகளின் இரசிகர்கள் போட்டிகள் பார்க்க செல்வார்கள். நான் நினைக்கிறேன் ஊகத்தின் அடிப்படையில் எழுதுகிறார் என நினைக்கிறேன்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
விஜய் சங்கருக்கா, ராகுல் திருப்பதிக்கா? பேபி AB விளையாடுவாரனால் ஒரு வெளிநாட்டு வீரருக்கு பதிலாக களமிறங்குவார். ஓவர்டன்க்கு பதிலாகவா?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
14 ஓவர்கள் போட்டியாக நடைபெறவுள்ளது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இப்பொழுது மழை விட்டுவிட்டது
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சென்னை அணியில் தென்னாப்பிரிக்கா வீரர் டெவால்ட் பிரவேஸ் இணைகிறார். இவர் நன்றாக 6 ஒட்டங்கள் எடுக்கக்கூடியவர். முன்பு 2023,2024 இல் மும்பாய் அணிக்காக அதிரடியாக 6 ஓட்டங்கள் எடுத்தவர். சென்ற ஏலத்தில் ஒரு அணியும் இவரை எடுக்கவில்லை. ஆனால் அண்மையில் தென்னாப்பிரிக்காவில் நடந்த SAT20 போட்டிகளில் சிறப்பாக விளையாடினார். சென்னை ஏலத்தில் 25 பேரை எடுத்திருந்தது. அதில் வேகப்பந்து வீச்சாளரான குர்ஜப்நீத் சிங் ஒரு போட்டியிலும் இம்முறை விளையாட விட்டாலும் பயிற்சியின் போது காயமடைந்தார். அவருக்கு பதிலாக டெவால்ட் பிரவேஸ் இணைகிறார். சென்னை ஏலத்தில் 7 வெள்ளிநாடடு வீரர்களை மட்டுமே எடுத்தது, அதிகபட்சம் 8 வெளிநாடு வீரரை ஒரு அணி வைத்திருக்கலாம்.ஆகவே சென்னை அணியின் 8 வது வெளிநாட்டு வீரராக இணைகிறார் டெவால்ட். முன்னாள் தென்னாப்பிரிக்கா வீரர் எபி டி விளர்ஸ் போல விளையாடுவதினால் இவரை பேபி AB என அழைப்பார்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பயணம் இனிதாக அமைய வாழ்த்துகிறேன்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நான் முதல் போட்டியில் PBKS என்றும் இரண்டாவது போட்டியில் RCB என்றும் தெரிவு செய்துள்ளேன்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
RCB , பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் இன்றும், ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறவுள்ளது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நானும் அடிச்சு விடப்போகிறேன். 64 வது போட்டியில் (மே 13) பெங்களூரு மைதானத்தில் 286 ஒட்டங்களுக்கு மேல் SRH அடிக்கும். 😀 கிளாசனை நம்பினால் கைவிட மாட்டார்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இந்த மைதானத்தில்தான் மும்பைக்கு எதிராக 116 ஒட்டங்களை KKR எடுத்தது . SRH 200 அடிக்கவே கஷ்டம் போலஇருக்குது . இதில 300 🤔.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
காயம் பட்டால் சொந்த காரணங்களுக்காக விளையாடாமல் நின்றால் காயப்பட்டால் அதற்கு அந்த வருடத்தில் பேசிய பணம் முழுதுமாக வழங்கப்படும். ஆனால் முதலாவது போட்டி துவங்க முதல் வேறு போட்டிகளில் காயப்பட்டு அவ்வருடம் ஐபிஎல் விளையாட மாட்டார் என அணியில் இருந்து விலகினால் அல்லது விலக்கப்பட்டால் அவருக்கு சம்பளம் இல்லை. சென்னை ருத்துராஜ் , SRH அடம் சாம்பா போன்றவர்களுக்கு பேசிய முழுப்பணமும் வழங்கப்படும். தனிப்பட்ட ரீதியாக சில போட்டிகளில் விளையாடாவிட்டால் ( உ+ ம் ரபாடா தென்னாப்பிரிக்கா சென்று உள்ளார்) அந்த விளையாட்டு வீரர் விளையாடாமல் சென்ற போட்டிகளின் எண்ணிக்கை விகிதத்தை கழித்து விட்டு மிகுதி சம்பளத்தை வழங்குவார்கள்.