Everything posted by கந்தப்பு
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நடராஜன் இல்லாமலே 6 போட்டிகளில் 5 இனை டெல்லி வென்று முதல் இடத்தில் இருக்கிறது. மிகுதி 8 போட்டிகளில் 3 இனை வென்றால் playoff க்கு டெல்லி தெரிவாகலாம் . சிலவேளை சென்ற வருடம் பெங்களூரூ போல மேலும் 2 போட்டிகள்( மொத்தம் 7 /14 போட்டிகள்) வென்றும் தெரிவாகலாம். நடராஜன் 7,8 மாதங்கள் காயம் காரணமாக விளையாடவில்லை. 2024 இல் விளையாடியது போல வருவாரா? . வெற்றி பெற்ற 3 போட்டிகளில் டு பிளிஸ் விளையாடினார். அதில் ஒன்றில் 2 ஒட்டங்கள் பெற்றாலும் மற்றைய போட்டிகளில் 29, 50 என எடுத்திருக்கிறார். நீங்கள் சொல்வது போல டூ பிளிஸ், நடராஜன் போன்றவர்களின் வருகையினால் ஜேக் பிரேசர் மெக்கர்க், முகேஷ் குமார் (அல்லது மோகித் சர்மா) உள்ள டெல்லி அணியை விட பலம் வாய்ந்த அணியாக இருக்கும் என நானும் நம்புகிறேன்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
டெல்லி ஒரு போட்டியைத்தவிர எல்லாப்போட்டிகளிலும் வென்றிருக்கிறது. இதனால் அடிக்கடி அணியை காட்டாயம் மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்ப்படவில்லை. முக்கியமாக Faf du Pleassis காயம் காரணமாக விளையாடாத சூழ்நிலை. அத்துடன் வேறு ஆரம்ப துடுப்பாடாளர்களும் அணியில் இல்லை. ஆனால் சென்னைக்கு எதிரான போட்டியில் ராகுல் ஆரம்ப துடுப்பாட்டாளராக விளையாடி 77 ஓட்டங்கள் பெற்றவர். ( முன்பும் பஞ்சாப்,லக்னோ அணியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக ராகுல் சிறப்பாக விளையாடி இருக்கிறார்.) Jake Frasher McGurk க்கு பதிலாக ராகுல் ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவும், சமீர் ரிஸ்வி ராகுலின் இடத்திலும் விளையாடலாம். சிலவேளை துடுப்பாட்ட வரிசையில் 3 - 5 இடங்களில் அணிக்கு சிறந்த வீரர் ராகுல் ( சூரியகுமார் ஜாதவ், ஹென்ரிச் கிளாசன் மாதிரி) விளையாடினால் நல்லது என நினைக்கிறார்களோ.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அதிகப்பட்சம் 4 வெளிநாட்டு வீரர்கள்தான் விளையாடலாம். அதற்கு குறைவாக எத்தனை பெறும் இருக்கலாம். ஏன் 11 இந்தியர்கள் கொண்ட அணியாகவும் விளையாடலாம். ஏலத்தில் ஒரு அணி 25 பேர்களை அதிகபட்சம் எடுக்கலாம். இதில் வெளிநாட்டு வீரர்கள் அதிகபட்சம் 8 ஆக இருக்கவேண்டும். சென்னை, டெல்லி அணி இம்முறை 7 வெளிநாட்டு வீரர்கள் எடுத்திருக்கிறார்கள். இதில் டெல்லி அணியில் ஏலத்தில் எடுத்த Harry brook விலகிவிட்டதினால் டெல்லி அணியில் 6 வெளிநாட்டு வீரர்கள். அதில் Faf Du Plessis காயப்பட்டிருக்கிறார். ஆக 5 வெளிநாட்டு வீரர்கள் விளையாடக்கூடிய நிலையில் இருக்கிறார்கள்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இதுதான் செம்பாட்டு மண்ணின் பெருமை என்பது. தான் தோற்றாலும் பரவாயில்லை இன்னுமொரு செம்பாட்டன் வெல்லவேணும் என்ற உயர்ந்த குணம் வேறு மண்ணில் காண்பது அரிது. நன்றி தலைவா
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இதுவரை நடந்த 2 போட்டிகளிலும் முதலில் விளையாடிய அணிகள் முறையே 205/4, 219/6 ஓட்டங்கள் எடுத்தன. 2 வது போட்டியில் இரண்டாவது விளையாடிய சென்னை 201/5 ஓட்டங்கள் பெற்றது. பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான மைதானமாக அமையவில்லை. ஆனால் இன்று ராணா விக்கெட்டுகளை எடுத்து இருக்கிறார்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
விஜய் சங்கர் நிதானமாக விளையாடக்கூடியவர். overton இறுதி நேரத்தில் கண்டபடி அடித்து ஓட்டங்கள் பெறக்கூடியவர். முன்பே இவரை விட்டால் கண்டபடி அடித்து விரைவில் ஆட்டமிழப்பார்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மொயின் அலி சூழல் பந்துக்கு சாதகமான மைதானங்களில் மட்டுமே விளையாடுகிறார் போல இருக்குது. இதுவரை நடந்த 6 போட்டியில் 3 போட்டியில் விளையாடினார். அதிலும் 2 போட்டியில்தான் பந்து வீசினார்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நேற்று அஸ்வினுக்கு பதிலாக இவரை எடுத்ததற்கு காரணம் இவரின் துடுப்பாட்டம்தான். இவர் தோனி, துபே போல 6 ஓட்டங்கள் அடிக்கக் கூடியவர். ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 4 பந்துகளில் 11 ஓட்டங்கள் அடித்தார்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
Overtone க்கு ஏற்கனவே 2 ஓவர் குடுத்ததினால் இவர்களுக்கு 4 ஓவர்கள் வழங்கவில்லை. அவருக்கு குடுக்காமல் விட்டிருந்தால் இவர்கள் இருவருக்கும் 4 வது ஓவர்கள் கிடைத்திருக்கும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதல் சுற்றில் 70 போட்டிகள். மிகுதியாக இருப்பவை வெறும் 4 போட்டிகள் மட்டுமே. சென்ற வருடம் சென்னை முதல் சுற்றில் மட்டுமே விளையாடியது. மிகுதி 4 நான்கு போட்டிகளும் ( Qualifier 1, Eliminator, Qualifier 2, இறுதி போட்டி) அரங்கு நிறைந்த போட்டிகளாகவே இருந்தன. உலகக்கோப்பை போட்டிகளில் இந்தியா ஆரம்ப சுற்றில் வெளியேறினால், அதற்கு பிறகு நடைபெறும் சூப்பர் 8, சூப்பர் 6 போட்டிகளில் இந்தியா விளையாட விட்டால் வருமானம் குறைந்து இருந்தது. குறிப்பாக 2007 இல் மேற்கிந்தியா தீவில் நடைபெற்ற உலகக்கோப்பையினை சொல்லலாம். சென்னை நல்லாய் விளையாடுதே இல்லையோ இந்த முறை நடைபெறும் ஐபிஎல் தொடரில் உள்ள மொத்தமாக உள்ள 74 ( 70 ஆரம்ப சுற்று + 4 இறுதி போட்டிகள்) போட்டிகளில் குறைந்தது 69 வது வரை சென்னை விளையாடும். ( 69 வது போட்டிதான் சென்னை இம்முறை ஆரம்ப சுற்றில் விளையாடும் இறுதி போட்டி). ஐபிஎல் போட்டிகளின் இறுதி போட்டிகள் யார் விளையாடினாலும் எப்பொழுதும் அரங்கு நிறைந்த போட்டிகளாகவே இருக்கும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
100% உண்மை
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அடம் சம்பா நீங்கள் சொல்வதுபோல 2 போட்டிகளிலும் சாதிக்கவில்லை. ஆனால் அணியில் இருக்கும் ராகுல் சகாருக்கு (இவரும் சூழல் பந்து வீச்சாளர்)இன்னும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நீங்கள் சொல்வது போல துடுப்பாட்டமும் , நன்றாக விளையாடிய ரிஷப் பண்ட் , ஆயுஷ் பதோனி, அப்துல்சமித் ஆட்டமிழக்க காரணமாக இருந்த காரணத்தினாலும் தோனிக்கு போட்டியின் சிறந்த வீரருக்கான பரிசினை வழங்கி இருக்கலாம். நூர் அகமது சிறப்பாக பந்து வீசினார். வெறும் 13 ஓட்டங்கள் கொடுத்தார். ஒன்று, இரண்டு விக்கெட் எடுத்திருந்தால் அவருக்கு விருது கிடைத்திருக்கும் என நினைக்கிறேன். ஆனால் முரளி கார்த்திக் கேட்ட கேள்விக்கு தோனி, சிறப்பாக பந்து வீசிய நூர் அகமது, ஜடேஜா போன்றவர்களுக்கு விருது வழங்கியிருக்க வேண்டும் என தெரிவித்தார்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
போட்டியில் முதல் இடத்தில் இருக்கும் சுவி அவர்களுக்கு வாழ்த்துகள்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இவ்வருடம் நடைபெற்ற ஐபிஎல்லில் பவர் பிளேயில் பந்து வீசிய அஸ்வின், Overton ,முகேஷ் சவுத்திரி போன்றோர்கள் அதிக ஒட்டங்களை குடுத்தார்கள். ஆனால் நேற்றைய போட்டியில் Khaleel Ahemed உடன் Anshul Kamboj சிறப்பாக பவர் பிளேயில் குறைந்த ஒட்டங்களை குடுத்தார்கள். குறிப்பாக பூரான், ஏய்டன் மார்க்கம் போன்றோர்கள் பவர் பிளேயில் குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழக்க செய்தது. நேற்று சென்னை அணியின் களத்தடுப்பு (fielding) சிறப்பாக இருந்தது . குறிப்பாக Markram அடித்த பந்தை ராகுல் திருப்பதிபிடித்த விதத்தை சொல்லலாம். முந்தைய போட்டிகளின்போது எதிரணியினர் அடித்த பந்துகளை பிடிக்கத்தவறியதினால் அதிக ஒட்டங்களை விட்டுக் குடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பஞ்சாப் அணியின் ஆர்யா அடித்த பந்தினை இருமுறை பிடிக்க சென்னை அணி வீரர்கள் தவறிவிட்டார்கள். இதனால் ஆர்யா அப்போட்டியில் 103 ஒட்டங்களை பெற்றார். முதலில் பிடித்திருந்தால் சென்னை சிலவேளை அப்போட்டியில் வென்று இருக்கலாம். தோனியும் நேற்று நன்றாக விளையாடிய ரிஷப் பண்ட் , ஆயுஷ் பதோனி, அப்துல் சமித் ஆட்டமிழக்க காரணமாக இருந்தார். வழமை போல நேற்று நூர் அகமது சிறப்பாக பந்து வீசினார். shaik ரஷீத் சச்சின் ரவீந்திர போன்றோர்கள் முதன்முறையாக இந்தவருடம் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பவர்பிளேவில் 50 ஓட்டங்களுக்கு மேல் சென்னை அணி எடுக்க உதவினார்கள். சிவம் துபே ஆரம்பத்தில் மெதுவாக அடித்து விளையாடினார். ஆனால் தோனி வந்து வேகமாக அடித்து அணி வெல்வதற்கு உதவி செய்தார். LSG அணியின் Ravi Bishnoi யும் சிறப்பாக 3 ஓவரில் 18 ஓட்டங்கள் குடுத்து 2 விக்கட் எடுத்தார். அவருக்கு ஏன் 4 வது ஓவர் வழங்கப்படவில்லை என வர்ணனையாளர் மைக்கல் கிளாக் கேள்வி எழுப்பி இருந்தார். விரைவாக அடிக்க கூடிய டேவிட் மில்லருக்கும் அடிப்பதற்கு LSG சந்தர்ப்பம் வழ்ங்கவில்லை.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ருத்துராஜ் கைக்வாட் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியதினால், 17 வயதான இளம் வீரர் Ayush Mhatre அவர்கள் சென்னை அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இவர் ஒரு சகல துறை வீரர்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நான் ‘இன்றுசென்னை வெற்றி பெற்றதற்கு தோனி 11 பந்தில் 26 ஓட்டங்கள் உட்பட’ என்றுதான் எழுதினேன். ‘உட்பட’ என்பதை நீங்கள் கவனிக்கவில்லை போல. இந்த் போட்டியை முழுவதும் பார்த்தேன். நேற்று தோனி சிறப்பாக விளையாடினார்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நீங்கள் என்ன எழுதினாலும் இன்று சென்னை வெற்றி பெற்றதற்கு தோனி 11 பந்தில் 26 ஓட்டங்கள் உட்பட பல காரணங்கள் சொல்லாம்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நான் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்களை பெறுபவர் என்பதில் அபிஷேக் சர்மாவை தெரிவு செய்தேன். தொடரில் அதிக ஓட்டங்கள் பெற்றவர்களில் தெரிவு செய்யவில்லை. SRH, MI ஆகிய அணிகள் கடைசி போட்டிகளில் எழுச்சி பெற்றன.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
Cricinfo அல்லது வேறு இணையத்தில் இருந்து Probable XII இணை எடுத்து இங்கு இணைத்திருக்கிறீர்கள் போல. பல சமயங்களில் Probable Xll உள்ளவர்கள் தான் போட்டிகளில் விளையாடுவார்கள் என்றாலும், இது 100% எல்லாப்போட்டிகளிலும் நடப்பதில்லை. நேற்று கருண் நாயர் டெல்லி அணிக்காக சிறப்பாக விளையாடினார். அவர் cricinfo இன் ProbableX11இல் இடம் பிடிக்கவில்லை. ஒரு இணையத்தில் போட்டி தொடர்பாக Preview எழுதுபவருக்கு 100% வீதம் யார் விளையாடுவார்கள் என்பது தெரியாது. சென்னை அணி 19 வயதுக்கு கீழ்ப்பட்ட இந்தியா அணியில் விளையாடிய தமிழக வீரர் Andre Siddarth மற்றும் Shaik Rasheed , Shreyas Gobal( இவர் பந்தும் வீசக்கூடியவர் ) போன்றவர்களுக்கும் சந்தர்ப்பம் குடுத்து பார்க்கலாம்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
லக்னோ வெல்லும் என்று விடை எழுதி இருந்தேன். மிச்சல் மார்ஸ் இன்று அவரது மகளின் சுகவீனம் காரணமாக ,விளையாடவில்லை.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நானும் சென்னையை தெரிவு செய்துள்ளேன். ஆனால் சென்னை அணியில் அதிக ஓட்டங்கள் பெற்ற ருத்துராஜ் இனி விளையாடமாட்டார். மீண்டும் எனக்கு சோதனை. ஆனால் தோனி இனி அணித்தலைவர் . சென்னை தொடர் வெற்றிகளை குவிக்குமா?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வாத்தியார் கவலைப்படவேண்டாம். நானும் 14 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வென்றேன். ஆனால் கடைசியாக நடைபெற்ற 2 போட்டிகளில் வென்றிருக்கிறேன். நல்ல சுண்டலும் இரசித்து சாப்பிட்டேன்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மார்ச் 30 இல் நடந்த ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் Tushar Deshpand வீசிய பந்து முழங்கையில்( unprotected elbow) பட்டதால் வலியுடன் ருத்துராஜ் விளையாடி 63 ஓட்டங்கள் பெற்றார். இதனால் பிறகு வந்த போட்டி ஒன்றில் காயம் காரணமாக விளையாடமாட்டார் என செய்திகள் வந்தது. பிறகு டெல்லி, பஞ்சாப் அணிகளுக்கு எதிராக வலியுடன் விளையாடினார். பிறகு எக்ஸ்ரே(X ray), எம் ஆர் ஐ ( MRI scan) எடுத்து பார்க்கும் போது முழங்கை எழுப்பில் சிறிய முறிவு (fracture in his elbow in the radial neck) ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இவ்வருடம் ஐபிஎல்லில் ருத்துராஜ் அவர்கள் தொடர்ந்து விளையாடமாட்டார். இதனால் தோனி அணித்தலைவர் ஆகிறார். ( 2022 இல் சிலபோட்டிகளில் ஜடேஜா தலைமை வகித்தார். பெரும்பாலான போட்டிகள் தோல்வியில் முடிவடைந்தன.) ருத்துராஜின் இடத்தில் இன்று யார் விளையாடபோகிறார்? மறுபடியும் ராகுல் திருப்பதியா? ராகுல் திருப்பதி 2024 ஐபிஎல்லில் SRH அணியில் 3 வது இடத்தில் துடுப்பாடினார் . அதில் சிறப்பாக விளையாடினார். ஆனால் சென்னை அணியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக விளையாடினார். அதில் பெரிதாக அடிக்கவில்லை.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இம்முறை பெங்களூர் அணி சொந்த மண்ணில் விளையாடிய 2 போட்டிகளும் தோல்வி. இரண்டு போட்டிகளிலும் பங்களூர் அணி முதலில்தான் துடுப்பாடியது