Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கந்தப்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கந்தப்பு

  1. 2 போட்டிக்கு பிறகு சிலவேளை விளையாடலாம் என்றுதான் எழுதியிருந்தார்கள்
  2. இந்த முறை ஒரு அணி 5 capped players இணையும் 1 uncapped players இனையும் ( அல்லது 4 capped players, 2 uncapped players) தக்கவைக்கலாம் uncapped player க்கு அதிகபட்சம் 4 கோடிதான் வழங்க வேண்டும். ராம்தீப் சிங் uncapped player முறையில் 4 கோடிக்கு தெரிவு செய்யப்பட்டார் Harshit Rana வும் uncapped player முறையில் 4 கோடிக்கு தெரிவானார்
  3. கருப்பு மண் உள்ள மைதானத்தில் விளையாடுவார்கள் என்று வாசித்த ஞாபகம். சூழல் பந்து வீச்சாளர்களுக்கு கருப்பு மண் சாதகம்
  4. ஒரு அணி எல்லோரையும் தக்கவைக்க முடியாது. விரும்பிய 4, 5 பேரை தக்கவைத்தபின்பு (அல்லது தாங்கள் வழங்க விருக்கும் பணத்தினை ஏற்காதவர்களையும்)மாற்றவர்களை ஏலம் மூலம் விரும்புவார்கள். ஏலத்தில் KKR ஷிரேஷா ஐயரை அணியில் எடுக்க முயற்சித்தார்கள். அவர் கிடைக்காத்ததினால் வெங்கடேச ஐயரை எடுத்தார்கள். பஞ்சாப் அணி அர்ஷ்தீப் கானை தக்கவைக்காமல் ஏலத்தில் 18 கோடிக்கு பெற்றார்கள். 2022 மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங் இவ்வாறே தீபக் சகாரை 14 கோடிக்கும், மும்பாய் இந்தியா ஏலத்தில் 15.25 கோடி குடுத்து இஷான் கிருஷ்ணனை எடுத்தார்கள். ஆனால் நேற்று வெங்கடேச ஐயர் 29 பந்துகளில் 60 ஓட்டங்களையும், ரிங்கு சர்மா 17 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களையும் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுக்களையும் பெற்றார்கள். ரஷல் 2 விக்கெட்டையும், சுனில் நரேன் 1 விக்கெட்டையும் எடுத்தார்கள்
  5. இந்த வருடம் ஒவ்வொரு அணியும் முதலில் தக்கவைக்கிற வீரருக்கு 18 கோடியும், 2 வது வீரருக்கு 14 கோடியும், 3 வது வீரருக்கு 11 கோடியும், 4 வது வீரருக்கு 18 கோடியும் 5 வது வீரருக்கு 14 கோடியும் வழங்க வேண்டும் என விதி இருந்தது. சென்னை அணி 4 capped players தக்கவைத்தார்கள். 4 பேரை தக்கவைப்பதினால் 18+ 14 +11+ 18 = 61 கோடிகளை சென்னை செலவு செய்தது. 18 , 18 கோடிகளுக்கு ஜடேஜா, கைக்வார்ட் ஆகியோரையும், மிகுதி 25 கோடிக்கு ( 14+11) பதிரானா, துபேயினை தக்கவைத்தார்கள். மற்றைய அணிகளில் பல இவ்வாறே வீரர்களை தெரிவு செய்தார்கள். ஆனால் கொல்கத்தா அணி தெரிவு செய்த 4 capped வீரர்களுக்கு 49 கோடி மட்டுமே செலவு செய்ய முன் வந்தது. மிகுதி 12 கோடி ( 61- 49) அவர்கள் செலவு செய்யவில்லை. உபயோகிக்காத 12 கோடியும் ஏலத்திலும் செலவு செய்ய முடியாது . 49 கோடியில் 4 வீரர்களை (13,12,12,12) ரிங்கு சிங், ரசல், சுனில் நரேன், வருண் சக்கரவர்த்தியினை வாங்குவதற்கு செலவு செய்தார்கள். இந்த 4 வீரர்களும்தான் இந்த விலையை ஏற்றுக்கொண்டார்கள். சென்னை, மும்பாய், ராஜஸ்தான், SRH போல வீரர்களை தக்கவைக்க செலவு செய்திருந்தால் ஷிரேயாஸ் அய்யர், மிச்சல் சார்க், குல்தீப் ஜாதவ் போன்றவர்களை தக்க வைத்திருக்கலாம். 2022 இல் நடந்த மெகா ஏலத்திலும் இவ்வாறே தக்க வைத்த வீரர்களுக்கு குறைந்த பணத்தினையே KKR செலவு செய்தது. குறைந்த பணத்துக்கு ஏற்று கொண்டவர்கள் தக்கவைக்கபட்டார்கள்.
  6. ௐம் ஓம் ஏலுமா ஏலாதா ஏலுமென்றால் பண்ணிபார் 😀
  7. கொஞ்சம் ஓவராக தெரியவில்லையா? நீங்கள் 9 கேள்விகளுக்கு சரியான பதில் எடுத்து ( 4 கேள்விகள் பிழை) 18 புள்ளிகள் எடுத்து இருக்கிறீர்கள். நான் 9 கேள்விகள் பிழை விட்டு 4 கேள்விகளுக்கு மட்டுமே சரியான பதில் எழுதியிருக்கிறேன்.😳
  8. இன்று குஜராத் தோல்வி அமையுமானால் 7 அணிகள் CSK, MI, SRH , KKR, GT, LSG,GT தலா 3 போட்டிகள் விளையாடி ஒரே ஒரு போட்டியில் வென்று 2 புள்ளிகளுடன் கடைசி 7 இடங்களில் இருப்பார்கள். முதல் 3 இடத்தில் இருக்கும் அணிகள் இதுவரை ஒருமுறையும் வெற்றிக்கிண்ணத்தை பெற்றுக்கொள்ளாத அணிகளாகும்.
  9. குஜராத் சாயி சுதர்சன் இன்று காயம் காரணமாக சிலவேளை விளையாட மாட்டாராம். வீரப்பயனுக்கு ஆட்டமத்தில சனி என்று நினைத்தேன். 4 புள்ளியில் இருந்து 8 புள்ளிக்கு வந்திட்டார். எனக்குத்தான் அட்டமத்தில் சனி போல. முதல் 6 போட்டி முடிவில் 4 கேள்விக்கு சரியான புள்ளிகள் பெற்று 8 புள்ளிகள் பெற்றேன். பிறகு வந்த 7 போட்டிகளுக்கும் புள்ளிகள் கிடைக்கமால் இப்பவும் 8 புள்ளிகள். போற போக்கை பார்த்தால் நான் தான் கடைசி போல 😳
  10. நான் ஒன்றும் தூர் வாரவில்லை. சென்ற ஐபிஎல் பெரிதாக பார்க்கவில்லை. ஆனால் 2023 போட்டிகள் பார்த்தேன். மிகவும் குறைந்த ஓட்டங்களை பெற்ற அணி எது என்ற கேள்விக்கு பதில் எழுதும் போது 2023 போட்டிகளின்போது லக்னோவில் நடைபெற்ற போட்டிகளில் பந்து வீச்சாளர்கள் நன்றாக பந்து வீசி பெரும்பாலான அணிகள் குறைந்த ஓட்டங்களை பெற்றது ஞாபகத்தில் வந்தது. இம்முறை பூரான் நல்ல விளையாடிவருவதினால் சென்ற வருடம் நடைபெற்ற போட்டிகளில் பூரான் அடித்த ஒட்டங்களை இரண்டு நாளைக்கு முன்பு இணையத்தில் பார்த்தேன்
  11. ஒரே ஒரு போட்டியில் அதுவும் பஞ்சாப்புக்கு எதிராக சென்ற வருடம் இதே மைதானத்தில் 21 பந்துகளுக்கு 42 ஓட்டங்கள் பெற்றார் . இதுதான் இந்த மைதானத்தில் சென்ற வருடத்தில் அவரின் ஆகக்கூடிய ஓட்டம். இந்த மைதானம் பந்து வீச்சாளர்களுக்கு உதவி செய்யும். இதில் விளையாடுகிற அணிதான் சிலவேளை குறைய ஒட்டங்களை பெறலாம் என நினைத்து, இந்த மைதானத்தில் லக்னோ அணி 7 போட்டிகள் விளையாடுவதால் இம்முறை குறைய ஓட்டங்கள் பெறும் அணி லக்னோ என தெரிவு செய்தேன்
  12. இன்று மும்பாய் கொல்கத்தாவை தோற்கடிக்குமாயின் CSK, SRH,MI, KKR, RR ஆகிய 5 அணிகளும் தலா 3 போட்டிகள் விளையாடி ஒரு போட்டி மட்டும் வென்று 2 புள்ளிகளுடன் கடைசி 5 இடங்களில் இருப்பார்கள்
  13. நடராஜன் காயம் காரணமாக 2024 ஆகஸ்ட்க்கு பிறகு இதுவரை ஒரு முதல் தரப்போட்டிகளிலும் விளையாடவில்லை. அவர் பூரண சுகம் பெற்றதும் விளையாடுவார். வாசிங்டன் சுந்தர் GT அணியில் இருக்கிறார். இவ்வணி இவ்வருடம் விளையாடிய போட்டிகளில் 3 தமிழர்கள் சாயி சுதர்சன், சாயி கிஷோர், ஷாருக்கான் விளையாடி இருக்கிறார்கள். இபோட்டிகளில் ரசித் கானும் இருப்பதினால் வாசிங்டன் சுந்தர் தெரிவு செய்யப்படவில்லை. சாயி கிஷோரும் சிறப்பாக பந்து வீசுகிறார். அண்மைக்காலங்களில் வாஷிங்டன் சுந்தர் சிறந்த டெஸ்ட் போட்டியாளார் என நிரூபித்தாலும் T20யில் பெரிதாக சாதிக்கவில்லை.
  14. நான் சாம்பியன் கிண்ணப்போட்டியில் ஓவர்டன் சகலதுறை வீரர் என்றும் இவர் விளையாடிய ஒரே ஒரு டெஸ்ட்போட்டியில் 97 ஒட்டங்களை பெற்றவர், சென்னை சூப்பர்கிங் இவரை ஏலத்தில் எடுத்திருக்கிறது என்று சொன்னேன். நல்ல வீரர் என்று சொல்லவில்லை. பந்து வீச்சில் T20 அண்மைக்காலங்களில் இவர் சிறப்பாக விளையாடவில்லை ஆனால் துடுப்பாட்டத்தில் கிடைக்கிற பந்தில் வேகமாக ஓட்டங்கள் பெறுகிறார் இம்முறை செம்பாட்டானும் வீரப்பையனும் ஒரே அணியை தெரிவு செய்திருக்கிறார்கள். செம்பாட்டனின் வெள்ளி திசை பலனால் வீரப்பையன் 6 புள்ளிகள் பெறுகிறாரா? அல்லது வீரப்பையனின் அட்டமத்து சனியால் செம்பாட்டனுக்கு இம்முறை புள்ளிகள் கிடைக்காமல் போகுமா?
  15. SRH இனை தெரிவு செய்து போட்டேன். டெல்லியை தெரிவு செய்தவர் செம்பாட்டன். SRH இனை தெரிவு செய்தவர் வீரப்பையன். செம்பட்டனுக்கு வெள்ளி திசை. அதுதான் தொட்டதெல்லாம் பொன். பையனுக்கு அட்டமத்தில சனி. அதுதான் 4 புள்ளிக்கு மேல புள்ளிகள் இல்லை போல இருக்குது.
  16. அத்துடன் திலக் வர்மா, கார்திக் பாண்டியா முறையே 36 பந்துக்கு 39 ஒட்டங்கள், 17 பந்துக்கு 11 ஒட்டங்கள் என மெதுவாக விளையாடியதும் ஒரு காரணம் . பிரதீஷ் கிருஷ்ணாவின் 4 ஓவருக்கு வெறும் 18 ஓட்டங்கள் வழங்கி 2 முக்கிய விக்கெட்டுக்கள் ( சூரியகுமார் யாதவ், திலக் வர்மா) எடுத்ததும் காரணம். சாயி சுதர்சனின் அபார ஆட்டமும் காரணம். …..
  17. நீங்கள் வடமராட்சியை சேர்ந்தவர் என்று யாழில் வாசித்த நினைவு ??
  18. நீங்கள் சொல்வது சரி வாழ்த்துகள் செம்பாட்டன். தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறீர்கள். நானும் ஒரு செம்பாட்டான்தான். யாழ் மாவட்டத்தில் வலிகாமத்தில் சில ஊர்களில் செம்பாட்டு மண்தான் இருக்கும். அப்படியான ஒரு ஊரை பிறப்பிடமாக கொண்டவன்
  19. தமிழ் நாட்டுக்காரர் விஜய் சுந்தர் இம்முறை சென்னை அணியில் இருக்கிறார் . அவர் திலக் கோடாவைவுக்கு பதிலாக விளையாடலாம். இதைவிட நியூசிலாந்து டெவன் கொன்வே சாம்கரனுக்கு பதிலாக விளையாடலாம். திலக் கோடாவுக்கு பதிலாக இந்தியா வேகப்பந்து வீச்சாளார்களில் ( முகேஷ் சவுத்திரி, குர்ஜாப்நீத் சிங், கமலேஷ் நாகர்கோடி) ஒருவரை விளையாடச்செய்யலாம். ஆனால் இதனால் ஒரு துடுப்பாட்டவீரர் குறையும் என்பது பிரச்சனை. நேற்றைய போட்டியில் தோற்றதற்கு ஒழுங்காக 2,3 hatchகள் பிடிக்காததும் ஒரு காரணம். நாளை ராஜஸ்தானுடன் சென்னை விளையாடுகிறது. இந்த மைதானத்தில்தான் சில நாட்களுக்கு முன்பு மொயின் அலியும், வருண் சக்கரவர்த்தியும் சிறப்பாக விளையாடினார்கள்
  20. என்ன சொல்கிறீர்கள் 1957, 1977,1981, 1983 கறுப்பு யூலை என இன அழிப்பு செய்யவில்லையா?. 35 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற சத்துருக்கொண்டான் இனப்படுகொலை கேட்டாலே உடல் நடுங்கும். செம்மணி புதைகுழி மறந்து விட்டீர்களா?
  21. 2007 இறுதிபோட்டி நடைபெறும் போதுதான் விடுதலைப்புலிகள் கொழும்பில் வான் வெளித் தாக்குதல் நடத்தினார்கள்.
  22. Bumarah இன்னும் சில போட்டிகளில் விளையாடமாட்டார். மும்பாய் இன்னும் சிலவேளை 2,3 போட்டிகளாவது பூம்ரா இல்லாமல் விளையாடவேண்டும். ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் முன்பு இணையம் ஒன்றில் ,பெரும்பாலும் ஏப்ரல் மாதத்தின் முதல் 15 நாட்களுக்குள் விளையாடுவார் என வாசித்திருந்தேன் ஆனால் Hardik Pandiya தடை நீங்கி இன்று விளையாடுவார். அவர்தான் அணித்தலைவர்
  23. இதுவரைகலாம் நடைபெற்ற T20 போட்டிகளில் இந்தியா மைதானங்களில் ஹைதராபாத் அணியின் ராஜீவ் காந்தி மைதானம் ஒரு ஓவருக்கு 9.7 ஒட்டங்கள் பெற்று முதல் இடத்தையும் பெங்களூரூ அணியின் சின்னசாமி மைதானம் ஒரு ஓவருக்கு 9.2 ஓட்டங்களையும், 3 வதாக டெல்லி அணியின் விசாகப்பட்டினம் மைதானம் இடம் பிடித்து இருக்கிறது. டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் தலா 2 இடங்களில் சொந்த மைதானங்களில் இம்முறை விளையாடுகிறது இன்று இரவு லக்னோ அணியுடன் SRH அணி ராஜிவ் காந்தி மைதானத்தில் விளையாடுகிறது. மறுபடியும் வழமைபோல இம்மைதானத்தில் அதிக ஓட்டங்கள் கிடைக்குமா என்பது இன்று தெரியும்.
  24. நான் டெல்லியைத் தெரிவு செய்ததற்கு காரணம், அவர்களின் பிரபல்யமான பந்து வீச்சாளர்கள். ஸ்டார்க் (Starc) , அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், மோகித் சர்மா, நடராஜன். இவர்களுடன் ராகுல்,faf du Plessis. ஆனால் ராகுலும் நடராஜனும் நேற்றைய போட்டியில் விளையாடவில்லை. லக்னோவில் சிறந்த துடுப்பாட்டாளர்கள் இருந்தாலும் அவர்களின் சிறந்த 4 வேகப்பந்து வீச்சாளர்கள் காயப்பட்டு இருக்கிறார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.