Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கந்தப்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கந்தப்பு

  1. கம்மின்சை குறை சொன்னிங்கள் நேற்று நன்றாக விளையாடினார். ரசலை குற்றம் சொன்னீர்கள். KkR இன் கடைசி போட்டியின் சிறந்த வீரருக்கான விருதினை பெற்றார். சாம் கரணை திட்டினீங்கள். 47 பந்தில் 88 அடித்தார். மொயின் அலியை புகழ்ந்தீர்கள். ஆள் ஒரு ஓவருக்கு 5 ஆறு ஓட்டங்களை வழங்கினார். சுவியையும் புகழ்ந்தீர்களோ தெரியாது. முதல் இடத்தில் இருந்து பின்னுக்கு போய் கொண்டு இருக்கிறார். என்னையும் ஒருக்கா திட்டி விட்டிங்கள் என்றால் புண்ணியமாக போகும். போட்டியில் முன்னுக்கு வருவேன்.😄
  2. எனக்கும்தான். எப்பவாவது SRH வென்றால் புள்ளிகள் கிடைக்கும். 2 புள்ளிகள் போயிற்றிதே.
  3. இன்று டெல்லி அணியில் நடராஜன் விளையாடுகிறார். நித்தேஷ் குமார் ரெட்டி இன்று ஹைதரபாத் அணியில் இருந்து இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக சச்சின் பேபி விளையாடுகிறார்.
  4. சென்னை அணியின் வான்ஸ் பேடி பயிற்சியின் போது காயப்பட்டதினால் ஊர்வில் படேலினை (wicket keeper) வழங்கியுள்ளார்கள். இவர் T20 போட்டிகளில் குறைந்த பந்தில் 100 ஓட்டங்கள் பெற்றவர் வரிசையில் 2 ம் இடத்தில் இருக்கிறார். 28 பந்தில் 100 ஓட்டங்கள் பெற்றவர். சென்னை அடுத்த வருட ஐபிஎல்லுக்கு இப்பவே தயார் படுத்தி வருகிறார்கள். சில வாரங்களுக்கு முன்பே வாங்கிய 17 வயது ஆயுஷ் ம்ஹாத்ரே சென்ற சனிக்கிழமை நடந்த போட்டியில் 48 பந்துகளில் 94 ஓட்டங்கள் பெற்றார். பேபி டிவிலரசும் 6 ஓட்டங்கள் அடிக்ககூடியவர் . ஜடேஜா முன்பு 6,7 இடங்களில் விளையாடவந்து பெரிதாக சாதிப்பதில்லை . ஆனால் கடந்த சில போட்டிகளில் 4 ம் இடத்தில் வந்து 53 , 77 ஒட்டங்களை குறைந்த பந்துகளில் பெற்றார்.
  5. அன்ரு ரசல் இன்று முதல் 9 பந்துகளில் 2 ஒட்டங்களை பெற்றார். ஆனால் அடுத்த 16 பந்துகளில் 55 ஓட்டங்கள் பெற்று இன்றைய போட்டியின் சிறந்த வீராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்
  6. KKR ஒரு ஓட்டத்தினால் வெற்றி எனக்கு இரண்டு புள்ளிகள் நேற்று சென்னை 2 ஓட்டத்தினால் தோல்வி. எனக்கு புள்ளிகள் கிடைக்கவில்லை
  7. மொயின் முதல் 2 ஓவர் சிறப்பாக வீசினாலும் 3 வது ஓவரில் 5 ஆறு ஓட்டங்களை வழங்கினார். அந்த ஓவரில் 32 ஓட்டங்களை ராஜஸ்தான் பெற்றது.
  8. தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும், யூனியன் கல்லூரிக் கீதத்தை எழுதியவரும் ஆன கவிஞர் அம்பி அம்பிகைபாகர் அவர்களின் பேத்தி அஷ்வினி அம்பிகைபாகர் அவுஸ்திரேலியா நாடாளுமன்ற தேர்தலில் பார்டன் தொகுதியில் ஆளும் தொழிற்கட்சி சார்பாக வெற்றி பெற்று பாராளுமன்ற அங்கத்தவர் ஆகத் தெரிவாகி உள்ளார்.
  9. மும்பாயிருக்கு இருக்கும் 3 போட்டிகளில், எதிராக விளையாடும் அணிகள் புள்ளி பட்டியலில் 2,4,5 ஆம் இடங்களில் உள்ள அணிகள் (GT, PBKS, DC ). RCB க்கு இன்னும் 4 போட்டிகள் இருக்கிறது. அதில் 3 போட்டிகள் பெங்களூர் மைதானத்தில் நடைபெறும். இன்று சென்னைக்கு எதிராக பெங்களூரு மைதானத்தில் RCB விளையாடுகிறது.
  10. KKR க்கு இன்னும் 4 போட்டிகள் . இதில் 3 இனை வென்றால் 15 புள்ளிகள். 4 இனையும் வென்றால் 17 புள்ளிகள். மிகுதி இருக்கும் போட்டிகளில் 3 போட்டிகளில் தற்போது கடைசி 3 இடங்களில் இருக்கும் அணிகளான CSK, RR, SRH எதிரான போட்டி. 4 வது போட்டி RCB க்கு எதிரான போட்டி பெங்களூரில் நடைபெறவுள்ளது. இவ்வருடம் பங்களூரில் நடைபெறாத 6 போட்டிகளிலும் RCB வென்று இருக்கிறது. ஆனால் பங்களூரில் நடைபெற்ற 4 போட்டிகளில் RR க்கு எதிரான போட்டிகளை தவிர மிகுதி 3 போட்டிகளிலும் தோல்வி.
  11. இன்று SRH தோல்வி அடைந்தாலும் அதிகாரபூர்வமாக தோல்வி அடையாது. இன்றைய போட்டி உட்பட 5 போட்டிகள் SRH விளையாடவேண்டும். 5 இல் 4 இனை வென்றால் SRH 14 புள்ளிகள் பெறும்.
  12. பொய் இல்லை நேற்று ரோகித் அடித்த அடி பார்க்கவில்லையா 😄 சென்ற வருடம் கடைசியாக வந்தது மும்பாய், கடைசிக்கு முதல் பஞ்சாப். 8 ம் இடம் குஜராத். ஆனால் இவை தற்போது முதல் 4 இடங்களில் இருக்கின்றன.
  13. சென்றவருடம் ரோகித் சர்மாவின் அணித்தலைவர் பதவியை ஹர்திக் பாண்டியாவுக்கு வழங்கப்பட்டது . மும்பாய் ரசிகர்கள் இதனை விரும்பவில்லை. ஹர்திக் பாண்டியா பந்து வீசும் போதும், துடுப்பாட்டாம் செய்யும் போதும் மும்பாய் ரசிகர் அவரை கூக்குரல் இட்டு ஏளனம் செய்தார்கள். சென்ற வருடம் மும்பை அணி 4 போட்டிகள் மட்டுமே வென்று கடைசி இடத்தை பிடித்தது. யாழ் இணையத்திலும் ஹர்திக் பாண்டியாவை அணித்தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என சில எழுதினார்கள். இந்த வருடம் மீண்டும் மகேலா ஜெயவர்த்தனா மும்பாய் முதன்மை பயிற்சியாளர். ஹர்திக் பாண்டியா, ரோகித் சர்மா, பூமாரா , சூரியகுமார் ஜாதவ், திலக் வர்மா போன்றவர்கள் தக்கவைக்கப்பட்டார்கள். ஏலத்தில் போல்ட், தீபக் சகார், ரயான் டிக்கெல்டன், வில் ஜாக் போன்றவர்களும் எடுக்கப்பட்டார்கள். முதல் 5 போட்டிகளில் 4 இல் மும்பாய் தோற்றது. ஏன் இங்கு யாழ் இணையத்திலும் ஹர்திக் பாண்டியாவின் தலைமையை ரோகித்தும் சூரியகுமாரும் விரும்பாததினால் ஏனோதானோ என்று விளையாடுகிறார்கள் என்ற பொருளில் சக கருத்தாளர் ஒருவர் எழுதியதை வாசித்த ஞாபகம். 5 வது போட்டியில் இருந்து பூமரா விளையடத்துடங்கினார். ஆரம்பத்தில் out of form இல் இருந்தாலும் மும்பையில் நடைபெற்ற சென்னைக்கு எதிரான போட்டியில் இருந்து ரோகித் சர்மா சிறப்பாக விளையாட துடங்கினார். சூரியகுமார் ஜாதவ், ராஜன் ரிக்கெல்டன் போன்றவர்களின் சிறப்பான துடுப்பட்டங்களும், போல்ட், பூமாரா போன்றவர்களின் பந்து வீச்சுகளும், ஹர்திக் பாண்டியாவின் சிறப்பான தலைமையும், மகேலாவின் பயிற்சியும் சேர மும்பாய் தொடர்ந்து வெற்றி மேல் வெற்றியை பெற்று வருகிறது.
  14. குத்துக்கரணத்துக்கு மும்பாயின் தொடர் வெற்றிகளும் ஒரு காரணம். முதல் 5 போட்டிகளில் மும்பாய் ஒரு போட்டி மட்டுமே வென்றது. ஆனால் கடைசி 6 போட்டிகளில் தொடர் வெற்றி
  15. இன்று ராஜஸ்தான் தோல்வியுற்றால் அதிகாரபூர்வமாக வெளியில்
  16. செம்பாட்டன் அவர்கள் பொதுவாக சொன்னதை எனக்கு சொன்னதாக நினைத்து எழுதினேன். ஒவ்வொருவருக்கும் கருத்து சுதந்திரம் இருக்கிறது. உங்களுக்கு என்ன தோன்றுதோ அவற்றை எழுதுங்கள்
  17. முன்பு பஞ்சாப் அணியில் இருக்கும் போது சாம் கரணை முதல் 4,5 இடங்களில் துடுப்பாட விடுவார்கள். நன்றாக அடித்து ஓட்டங்கள் பெறுவார் . வேறு அணிகளில் விளையாடும் போது 8,9 இடங்களில் வந்து சரியான சந்தர்ப்பங்கள் அவருக்கு கிடைக்காது. சென்னை அணி சாம்கரனுக்கு இம்முறை சரியான இடத்தில் அடிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கி இருக்கிறது.
  18. சாம் கரண் 2023 இல் மும்பாய்க்கு 29 பந்தில் 55 ஓட்டங்கள் அடித்த அடி மறக்க முடியாது. சென்ற வருடம் டெல்கி எதிராக 4 வது இடத்தில் துடுப்பாடவந்து 47பந்துகளில் 63 அடித்தது போல இன்றும் அடிப்பாரா
  19. Kayo இல்லாமல் நான் அனுப்பிய இணைப்பினுடாக போட்டிகளை பார்க்க முடிகிறதா? பெரும்பாலான போட்டிகள் அவுஸ்திரேலியா நேரம் இரவு 12 மணிக்கு ஆரம்பிப்பதினால் போட்டிகளை பார்க்க உங்களுக்கு நேரம் கிடைக்குமா ? நான் எங்கே கழுவி ஊத்துகிறனான்? நான், நீங்கள், வசி, கிருபன் உட்பட ஒரு சிலர் மட்டுமே ஒரு போட்டியாளர்களையும் இந்த திரியில் கழுவி ஊத்துவதில்லை என நினைக்கிறேன்.
  20. முன்புதான் சென்னை அணியை அப்பாக்களின் அணி என்று சொல்வார்கள். ஏலத்தில் அதிக வயது போனவர்கள் சென்னை அணியில் எடுப்பதினால் சொல்லுவார்கள். ஆனால் இம்முறை சென்னை அணியில் 3 பேர் மட்டுமே 35 வயதும் அதற்கு மேற்பட்டவர்களும் இருக்கிறார்கள். தோனி 43 வயது. அஸ்வின் 38 வயது. ஜடேஜா 35 வயது. மும்பாய் அணியில் 3 பேர். ஆனால் கொலகத்தா அணியில் 5 பேர் 35 ம், 35 வயதுக்கு மேல் இருக்கிறார்கள். இம்முறை கொல்கத்தா அணியில் அதிக வயது போனவர்கள் இருக்கிறார்கள். இம்முறை சென்னை அணியில் இருக்கும் 25 பேரில் 10 பேர் 25 வயதை விட குறைவானவர்கள். நூர் அகமது 19 வயது, பத்திரானா 21 வயது . ரச்சின் ரவீந்திரா 24 வயது. ஆயுஷ் ம்ஹாத்ரே 17 வயது. அன்சுல் கம்போஜ் 23 வயது . ஷாகிக் ரஷித் 20 வயது. டெவால்ட் பிரேவிஸ் 21 வயது . இன்று சிலவேளை விளையாடுவார் என எதிர்பார்க்கப்படும் vansh bedi 21 வயது. தமிழக வீரர் சித்தார்த் 18 வயது .
  21. கடைசி 2 போட்டியிலும் வென்ற அணிகள் கடைசி 4 இடங்களில் இருந்த அணிகள். இதே போல சென்னை இன்று வெல்லுமா? 2024 ஐபிஎல் இருந்து இன்று வரை சென்னை மைதானம் சென்னை அணிக்கு பெரிதாக உதவவில்லை.குறிப்பாக 2024 இல் சென்னை சுழல் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கவில்லை. தீக்சனா, ஜடேஜா போன்றவர்கள் 2024 இல் சிறப்பாக பந்து வீசவில்லை. இம்முறை 2024 இனை விட சுழல் பந்து வீச்சாளர்களுக்கு ஓரளவு சாதகமாக இருந்தாலும், 2023 க்கு முன்பு சென்னை மைதானம் இருந்தது போல இருக்கவில்லை. எப்படி மைதானம் செயற்படும் என்று சொல்லமுடியாமல் இருப்பதாக சில வர்ணனையாளர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.
  22. முதுகு வலிப்பு காரணமாக அணித்தலைவர் கில் ராஜஸ்தான் துடுப்பாடும் போது விளையாடவில்லை. இதனால் உபதலைவர் ரஷித் கான் அணிக்கு தலைமை தாங்கினார்
  23. கடைசி 4 அணிகளில் இனி வரும் போட்டிகளில் வென்றால் KKR 17 புள்ளிகள் எடுக்கலாம். SRH 16 புள்ளிகள் எடுக்கலாம். ஆனால் குறிப்பாக SRH துடுப்பாட்டக்காரர்கள் Out of form இல் இருக்கிறார்களே
  24. ராஜஸ்தானுக்கு இனி 4 போட்டிகள் மட்டுமே இருக்கிறது. மிகுதி 4 போட்டிகளிலும் இதே மாதிரி விளையாடி வெற்றி பெற்றால் 14 புள்ளிகள் பெறலாம். 14 புள்ளிகள் எடுத்தால் அடுத்த சுற்றுக்கு செல்ல சிலவேளை சந்தர்ப்பம் இருக்கும் .சென்ற வருடம் பங்களூர் அணி கடைசி 6 போடிகளில் வென்று 14 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் தோற்று இருந்தால் 2025 இல் அடுத்த சுற்றுக்கு தெரிவாகாத முதல் அணி ராஜஸ்தானாக இருந்திருக்கும். இதுவரை 10 அணிகளில் ஒரு அணியும் அடுத்த சுற்றுக்கு செல்லும் என்பது உறுதிப்படுத்தவில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.