Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

putthan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by putthan

  1. காவலூரான் கன்னி பதிவு சிறப்பாக உள்ளது பாராட்டுக்கள்
  2. சில சின்ன உண்மைகளுக்கு பொய் சேர்த்து கிறுக்குவது கிறுக்கர்களின் குணம்...நன்றி கிருபன் நன்றி நிலாமதி நன்றி சிறி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் 🤣 நன்றி ஏராளன் வருகைக்கும்,கருத்து பகிர்வுக்கும்....
  3. அவன் ஒர் ஆடம்பர அழகன் அமைதியான ஆண்டி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கு.சா
  4. வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ....சொல்லி போடாதையுங்கோ பிறகு நான் அவுஸ் டொலரை சிறிலங்கா மாதவிடம் விசிட் பண்ணும் பொழுது மாற்ற முடியாது ... வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ....இப்ப சிறிலங்காவை விற்கின்றனர் ...டொலர் இருக்கா,மருந்து இருக்கா,அரிசி இருக்கா,
  5. பரNaகோர்ட்..... பரNaகோர்ட் "பழைய போத்தல்,பேப்பர், பித்தளை,அலுமினியம் சருகை சேலை இருக்கா" "அண்ணே நில்லுங்கோ பழைய புத்தகம் கொஞ்சம் இருக்கு எடுத்திட்டு காசு தாங்கோ" " ஒரு கிலோ இருக்கு இந்தா இரண்டு ரூபா" காசை வாங்கி பொக்கற்றுக்குள்ளே போடுற நேரம் குகனின் அம்மா "தம்பி யாரோட கதையுச்சுகொண்டிருக்கிறாய் படலையில் நின்று" "அம்மா அது பழைய அலுமினிய சமான்கள் வாங்கிற பரனகோர்ட்அண்ண" "நிற்க சொல்லு இரண்டு அலுமினிய சட்டி கிடக்குது கொடுத்திட்டு ஏதாவது வாங்குவோம்" இரண்டு பழைய அலுமினிய சட்டியை கொண்டு வந்து கொடுத்தா ,அவரும் சட்டியை காலால் மிதித்து நெளித்து நிறுத்து பார்ட்த்து விட்டு சைக்கிளில் கட்டி வைத்திருந்த ஒரு பிளாஸ்டிக் பக்கற்றையும் சின்ன அலுமினியம் சருவச்சட்டியையும் காட்டி "அம்மா இந்த பிளாஸ்டிக் பக்கற் வேணுமா அல்லது அலுமினிய சட்டி வேணுமா" "அம்மா பிளாஸ்டிக் பக்கற் நல்லது வடிவா இருக்கு இதை எடுங்கோ" தாயார் அனுமதி தரமுதலே குகன் பரணகொர்ட் அண்ணரின் சைக்கிளிலிருந்து அதை கழற்றி வீட்டுக்குள் எடுத்து சென்று விட்டான். மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பிய தந்தையிடம் பிளாஸ்டிக் பக்கற்றின் வருகை பற்றி விளக்கினான் . தந்தையோ அவனுக்கு பொருளாதர அரசியல் வகுப்பு எடுத்தார் "நீ கொடுத்த அலுமினியம் 30 ரூபா பெறும் அவன் தந்த பக்கற் 10 ரூபா தான் பெறும்" "அந்த சட்டிகளை நாங்கள் பாவிக்கிரதில்லை தானே" " என்றாலும் பெறுமதி இருக்குத்தானே அது தானே அவன்கள் எடுக்கிறாங்கள்" "அப்பா வள‌வுக்குள் இருக்கும் பழைய போத்தல் எல்லாம் பொறுக்கி எடுக்கப்போறேன் இரண்டு கிழமையில் பரண்கொர்ட்காரர் வருவார் கொடுக்கபோறன்" "எல்லாத்தையும் தூக்கி கொடுத்து போடாதை ,அம்மாவிடம் காட்டிபோட்டு கொடு" அப்பர் ஏதோ புலம்புகிறார் என நினைத்து தனது காரியங்களை செய்யத்தொடங்கினான். வளவில் உள்ள போத்தல்களை பொறுக்கி கொண்டிருக்கும் பொழுது கண்ணில் பட்டது ஆடுகளுக்கு புண்ணாக்கு நீர் வைக்கும் பித்தளை சட்டி ,உண்மையிலயே அது ஒர் சட்டியல்ல பானை .ஆடுகள் உணர்ச்சி வசப்பட்டு உதைபந்தாட்டங்கள் விளையாடி சகல பக்கத்திலும் அடி வாங்கி சட்டி வடிவில் வந்து விட்டது இருந்தாலும் ஒரு ஓட்டை விழவில்லை. இரண்டு கிழமை கழித்து பரணகோர்ட் அண்ணர் கூவின சத்தம் கேட்க படலையை திறந்து கையை காட்டினான். இந்த தடவை இருவர் வந்திருந்தனர் சைக்ககிள் நிறைய பிளாஸ்டிக் பாத்திரங்கள் ,அலுமினிய பாத்திரங்கள் எல்லாம் கட்டியிருந்தன அதை பார்த்தவுடன் இவனுக்கு ஆடுகளுக்கு புது பாத்திரம் வாங்கி வைக்க வேணும் என்ற ஆசை வந்து விட்டது ...இருந்த போத்தல்களை கொடுத்தான் ஒரு சின்ன பிளாஸ்டிக் பாத்திரம் கொடுத்தார்கள் . "அண்ணே எனக்கு இந்த அலுமினிய சட்டியை தாங்கோ" அவர்கள் சிரித்து கொண்டே "இந்த போத்தலுக்கு இது தரமுடியாது வேறு ஏதாவது பித்தளை சட்டி அல்லது சருகை சீலை கொண்டு வாங்கோ" அவன் ஓடிப்போய் ஆட்டுக்கு தண்ணீ வைக்கும் பாத்திரத்தை கொண்டு வந்து கொடுத்தான் அவர்கள் கையினால் தூக்கி பார்த்தவுடனே அவன் கேட்ட சட்டியை கொடுத்து விட்டனர். அவனுக்கு பெரிய சந்தோசம் ஆட்டுக்கு புது பாத்திரம் வாங்கி வைத்த குட்டி தம்பி ...என்று. அன்று மாலை அவர்கள் இருவரின் சைக்கிளிலும் இருந்த புது சமான்கள் யாவும் முடிந்திருந்தது சைக்கிளில் சகல பழைய சாமான்களையும் சாக்கில் கட்டி ஹறியரில் வைத்து தள்ளி கொண்டு வந்தவர்கள் அவனை கண்டதும் குடிக்க தண்ணீர் கேட்டார்கள் இவனும் வீட்டினுள் சென்று எடுத்து வந்து கொடுத்தான். அந்த ஒழுங்கையில் உள்ள அநேகமானவர்களுக்கு அவர்கள் பழக்கமானவர்கள் ஆகிவிட்டனர். படலையில் நின்ற பக்கத்து வீட்டு அண்ரியை கூப்பிட்டு ஐநூறு ரூபா கொடுத்தான் . சருகை சேலைக்கு என்றான். குகனுக்கு விடுப்பு அறிவது என்றால் கொள்ளை பிரியம் . "அண்ணே நீங்கள் இருவரும் சொந்தகாரன்களே" "இவர் என்ட சொந்த தம்பி" "அண்ணே இந்த போத்தல் எல்லாம் என்ன செய்வீங்கள் கழுவிபோட்டு திருப்பி பாவிப்பிங்களோ" "இல்லை எங்கன்ட பெரியண்ண கொழும்பில் கடை வைத்திருக்கிறார் அவ‌ருக்கு அனுப்பிவிடுவோம் " "அவர் என்ன செய்வார் என எங்களுக்கு தெரியாது" "அப்ப சருகை ,அலுமினியம்,பித்தளை" "அதுகளை பெரியண்ணருக்கு தான் அனுப்புவோம்,சரி தம்பி போய்யிட்டு வாரம்" அவர்கள் போனபின்பு குகனும் வீட்டினுள் சென்று படுக்க போய்விட்டான் அப்பா நாளை காலை ஆட்டுக்கு தண்ணீர் வைக்கும் பொழுது ஆச்சரியப்படட்டும் என நினைத்தபடியே தூங்கிவிட்டான் விடியகாலையில் ' "டேய் குகா எங்கயடா ஆட்டுக்கு புண்ணாக்கு வைக்கிற சட்டி" "இந்தா இருக்கு புதுசு" " எங்கயடா பழைய சட்டி" "அதை கொடுத்து தான் இதை வாங்கினேன்" கண்ணத்தில் ஒர் அறை விழுந்தது அவனுக்கு "டேய் யாரிட்ட கேட்டு கொடுத்தனீ அதின்ட பெறுமதி எவ்வளவு என்று தெரியுமா?" இவர்களின் சத்தம் கேட்டு தாயார் ஒடி வந்தார் என்னது தகப்பனும் மகனும் புடுங்கு படுறீயள் "இவன் இருக்கிற சாமன்களை எல்லாம் எடுத்து உந்த பரணகோர்ட் காரனிட்ட கொடுக்கிறான் ஒருநாளைக்கு என்னையும் கொடுத்துபோட்டு புது அப்பா கொண்டு வருவான் நீ பார்த்து கொண்டு இரு".. "சும்மா கத்த வேண்டாம் ,பிள்ளை ஆடு பாவம் என்று புதுசு வாங்கி வைச்சு சந்தோசப்பட்டது நீங்கள் என்னடா என்றால்" " நீ அடுத்தவள், அந்த சட்டி பழங்காலத்து சட்டி அதின்ட வெயிட் எவ்வளவு தெரியுமா" "அந்த பழசுகளை வைச்சு என்ன செய்யப்போறீங்கள்" "இது பழசு என்றாலும் ஸ்ரொங்க் ,இந்த ஆடுகளின் சகல உதைகளையும் தாங்கி கொண்டு இருந்தது ஒரு ஒட்டை விழவில்லை அது போக அதை உருக்கினால் அதை வாங்கின காசின்ட முக்கால்வாசி காசு தேறும்." "சரி சரி" "உன்ட மகன் வாங்கி வைச்சிருக்கிறது அலுமினியம் ஆடு இரண்டு நாளில் சட்டியை பந்தாக்கி வைச்சிடும் பிறகு தாயும் மகனும் உங்கன்ட சீலையை கொடுத்து அவனிட்ட புதுசு வாங்கி வையுங்கோ" "அம்மா,பரணகோர்ட் அண்ணே பக்கத்து வீட்டு அண்ரியிட்ட ஐநூறு ரூபா கொடுத்தவர் சருகை சீலை கொடுத்தமைக்கு" "படுவா நான் இவ்வளவு கத்திறன் நீ என்னடா என்றால் திரும்ப திரும்ப பரணகோர்ட் காரனிட்ட போறது என் நிற்கிறாய் இனிமேல் வீட்டு வாசலில் பரணகோர்ட் காரனை கண்டன் என்றால் காலை அடிச்சு முறிச்சு போடுவன்" என கோபத்தில கத்திவிட்டு ஆட்டுக்கு புது பாத்திரத்தில் புண்ணாக்கு தண்ணீரை ஊற்றி விட்டு சென்று விட்டார் தந்தை. தந்தையார் கூறியது போல இரண்டு கிழமையில் சட்டி நெளிந்து ஓட்டை விழுந்து விட்டது .அதற்கு வீதியில் இருந்த தார் உருண்டையை உருக்கி ஒட்டி சில காலம் பாவித்தார்கள் பிறகு ஆடுகளை விற்று விட்டு கொழும்புக்கு வந்துவிட்டனர் குகன கொழும்பில் வேலை தேடி கொண்டிருக்கும் பொழுது விளம்பரம் ஒன்றை பார்த்தான்,ஸ்ரோர் கீப்பர் வேலைக்கு வெற்றிடம் இருப்பதாக போட்டிருந்தார்கள். குகனும் விண்ணப்பிருந்தான், நேர்முகபரீட்சைக்கும் அழைத்திருந்தார்கள் . குறிப்பிட்ட நேரத்தில் நேர் முகபரீட்சைக்கு போனான். அழகான பெண் ஒருத்தி அவனை உள்ளே அழைத்து சென்றாள் இராணுவ உடையில் ஒருத்தர் டி குடித்து கொண்டிருந்தார்.மற்ற மூவரும் பெரிய மேசையில் சிங்கள தேசிய உடையணிந்து அமர்ந்திருந்தனர். வாடிவென்ட என்றார்கள் இவனும் பயந்து பயந்து அமர்ந்தான் "நம மொக்கத" "குகன்" "கொயத வடக்கருவே" "வெர்ஸ்ட் ஜொப்" "கம ஹொயத" "யாப்பானய" "அப்பே(சி) பலன(சி) எஸ்பீரியன்ஸ் மான்(சி)" பைலை மூடி அவனிட்ட கொடுத்து விட்டார்கள். இவர்களை எங்கயோ கண்ட மாதிரி இருக்கே என நினைத்த படி வீடு வந்தான். "என்னடா இன்டெர்வியூ எப்படி" "சரிவரவில்லையப்பா" "சவுதிக்கு போட்ட வேலைக்கு வரச்சொல்லி போட்டிருக்கிறாங்கள்" என சொல்லிய படியே அந்த கடிதத்தை கொடுத்தார் . "அப்பா இன்றைக்கு போன கொம்பனியில் இன்டர்வியூ பண்ணினவர்களை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு" " எந்த கொம்பனி?பெயரை சொல்லு?" "GoMaBa" "அவன்கள் தான்டா ஊரில பரணகொர்ட் வியாபாரம் செய்தாங்கள் இப்ப அவன்கள் பெரிய வியாரிகள் அவனின்ட தம்பி ஒருத்தன் ஆர்மியில் இருக்கிறான்" "அடகோதாரி " "நான் சொன்னான் தானே அவ‌ன்கள் உங்கட்ட நவீன வடிவான பொருட்களை தந்து போட்டு பாரம்பரிய விலையுயர்ந்த பொருட்களை எடுத்து கொண்டு விற்று பெரிய பணக்காரங்கள் ஆகிட்டாங்கள் கள்ள பயல்கள்" அவனும் சவுதி சென்று அங்கிருந்து அவுஸ்ரேலியா சென்று ,வருடங்கள் கழிந்தன ,தந்தையும் தாயும் மரணமடைந்து விட்டனர் .சிறிலங்கா செய்திகளை படிப்பதை நிறுத்தவில்லை ..சகோதரர்கள் ஒன்றிணைந்து சிறிலங்கா மாதவை தூக்கி பிடிப்பதாக வரும் செய்திகளை படித்து மகிழ்வது உண்டு திடிரேனே சிறிலங்கா மாதா ஆட்டம் கண்டதை தொலைகாட்சியில் காட்டினார்கள் .தொடர்ந்து இரண்டு மாதங்கள் தான் மக்களுக்கு உணவு,எரிபொருட்கள் வழங்க முடியும் என சொன்னார்கள் ,மக்கள் போராட்டத்தில் குதித்திருந்தனர். தொலைகாட்சியை பார்த்தபடியே கதிரையில் கண்ணயர்ந்துவிட்டான் குகன். கோர்ட் சூட் போட்ட ஒருத்தர் சைக்கிளில் சிறிலங்காவை சாக்கில போட்டு இரண்டு பக்கமும் தொங்க விட்டபடி "டொலர் இருக்கா டொலர்,தங்கம் இருக்கா தங்கம்,மருந்து இருக்கா மருந்து ,யுவான் இருக்கா யுவான்" என்று கத்தியபடி கடலில் இறங்கி கொண்டிருந்தார் திடுக்கிட்டு எழுந்தான்
  6. அதற்காக தான் உதயகம்பன் பிலா,விமல் வீரவம்சா,இன்னும் சில இடசாரிகளை வெளியனுப்பியதாக கதை அடிபடுகிறது ....அரசாங்கத்திலிருந்து இந்தியாவுக்கு எதிராக குரல் கொடுக்க முடியாது ....வெளியில் போய் இந்தியாவுக்கு எதிராக குரல் கொடுக்க சொன்னதும் ராஜ்பக்சா குடும்பமாம்....
  7. அருமை சுவியர் .... என்றும் தீராது மனிதனின் அதிகார பசி ஆக்கிரமிப்பு பசி ஆத்மீக பசி புகழ் பசி கெளரவ பசி இவை இருக்கும் வரை கொலை களம் நிரந்தரம்
  8. அதிலயும் சிவன் ஒரு படி மேல, உன்னில் என்னை தேடு என்று சொல்லி ஒதுங்கிட்டான்... தொடருமா? அவர் சொல்லவே இல்லை நான் வர மாட்டேன் வாசிக்க மாட்டேன்....நான் யாழ் வாரிசு ஆக்கும்🤣🤣
  9. இன்றைய லங்கா மாதவின் பரிதாப நிலைக்கு என்ன காரணம் என்பதை அழகாக எழுதியுள்ளீர்கள்
  10. என்ன தான் இருந்தாலும் 30 வயசில -ஹார்மோனியம் வாசிக்கும் பொழுது இருந்த வேகம் இப்பொழுது விரல்களுக்கு இல்லையே என உள் மனதில் ஒர் கவலை அவருக்கு எட்டி பார்த்திருக்கும்
  11. சத்தியமா அது ஒர் வல்லிய சோகமானு🤣
  12. என்ட இதயம் காதலித்தது ஒருத்தியை மட்டுமல்ல ,பல இளம் பெண்களின் இதயத்தை ...ஆனால் ஒரு இதயமும் பதிலுக்கு என்னை காதலிக்கவில்லை🤣
  13. கதை அருமை தொடருங்கள் ஆவலுடன் எதிர் பார்த்து காத்திருக்கிறோம்
  14. நன்றி ராஜா அவனே எல்லாம்...அவன் ஆட்டிப்படைக்கிறான் நாங்கள் ஆடுகிறோம்
  15. நன்றி யாயினி ,முருகன் இல்லாத உலகமா அவன் இன்றி அணுவும் அசையாதே... இப்ப தான் கொரனா முடிவடைந்துள்ளது இனி அதிகம் வெளிக்கிட்டு திரியலாம்...கதை கரு கிடைக்கும் என் எதிர் பார்க்கலாம். நன்றி பாஞ்..நீங்கள் கொடுத்து வைச்சனீங்கள் முருகன் ...பதின்மவயதில் காதலியை தந்து விட்டார்...எனக்கு கலியாணம் கட்டமட்டும் காதலியை காட்டவில்லை அதுதான் முருகனோட ஒரு இது
  16. சிறப்பு சுவியர் ..கருத்தாக கள்ளச்சாவி போட்டு கருவறை திறக்கலாம் என சொன்ன‌ கணவானே பாராட்டுக்கள்
  17. வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க மகிழ்ச்சி ... இந்தியாவுக்கு போய் கொஞ்சம் சொப்பிங் செய்து போட்டு முருகனிட்ட வார ஊர்சனத்துக்கு கலர் காட்டலாம் என்றால் ,கொரனா முட்டுக்கட்டை போடுது வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க மகிழ்ச்சி ... சுமே
  18. வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி புங்கை அண்ணா அவன் வசதியா வாழத் தெரிந்தவன் மட்டுமல்ல பக்தர்களையும் வசதியாக‌ வாழவைக்கும் சூரன் நன்றி தோழரே வருகைக்கும் வரவேற்ப்புக்கும் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி சிறி வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க மகிழ்ச்சி
  19. வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்மிக்க நன்றி அவர் மாறினாலும் உந்த மனிசிமார் மாறினம் இல்லை...அவரின்ட ஏஜன்ட்மார் (ஐயர்மார்) கொஞசம் கொஞ்சமாக மாறி வருயினம் .....அவையள் மாறினால் எங்கன்ட மனிசிமாறும் மாற சந்தர்ப்பம் உண்டு வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்மிக்க நன்றி கு.சா...அவனில்லாமல் சிட்னி புத்தன் இல்லை😅 நானும் அழகு என்று மனிசி இடக்கிட சொல்லுறவ....
  20. வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்மிக்க நன்றி நிலாமதி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்மிக்க நன்றி கிருபன் ...கிறுக்குவதே எனது பொழுது போக்கு
  21. எனக்கு பிரச்சனை இல்லை ...நகர்த்துங்கள்
  22. வார இறுதிநாட்களில் அநேகமாக இங்கிலிசு பிரேக் பாஸ்ட் சாப்பிடுவது அடியேனின் வழமை.அதற்காக நீங்கள் நினைக்க கூடாது அடியேன் ஆங்கிலபட்டதாரி என்று ..முட்டை பொறியள்,சொசெஜ்,பேக்கன், பாணை டொஸ்ட் பண்ணி தக்காளி சோசுடன் சாப்பிடுவது வழமை.. முட்டையையும்,சொசெஜ்யையும் தாயார் பண்ணி கோப்பையில் வைத்து விட்டு பேக்கனை போட்டேன் சட்டி நல்லா சூடா இருந்திருக்க வேணும் அத்துடன் சட்டியில் எண்ணையும் இருக்கவில்லை ,புகையும் கறுகிய மணம் வீட்டினுள் பரவ, தொலைகாட்சியில் பக்தி சணலில் பக்திபரவசத்துடன் எதோ பார்த்து கொண்டிருந்த சம்சாரம் "என்னப்பா செய்யிறீங்கள் கறுகி மணக்குது" "பேக்கன் பொரிச்சனான் அது கொஞ்சம் எரிஞ்சு போய்விட்டது ,உமக்கும் பேக்கன் பொரிக்கவா" "ஐயோ கடவுளே இன்றைக்கு நல்லூர் தேர் , ஆகஸ்ட் மாதமென்றால் நல்லூர் கலகலப்பாக இருந்த காலம் அது.நல்லூரானுக்கு கொடியேற்றிவிட்டார்கள் என்றால் யாழ்ப்பாணமே கலகலப்பாகி விடும் .ஊர்களில் உள்ள சைக்கிள்களில் முக்கால்வாசி இரவுபகலாக நல்லூரானின்ட பக்த போடிகளை தாங்கியபடி ஓடிக்கொண்டே இருக்கும்.இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்துகளும் கிழங்கு அடுக்கிய கணக்கில் சனத்தை ஏற்றிகொண்டு ஓடித்திரியும்.எங்களை போன்ற பெடியள் பக்தி பரவசத்தில் வேஸ்டியுடன் முருகனை காணும் ஆவலுடன் சைக்கிளில் செல்வோம்.கோவிலுக்கு செல்வது என்றால் வீட்டில் இலகுவில் அனுமதி கிடைத்து விடும், அப்பாவும் கவனமாக பாவிக்கும் தனது சைக்கிளையும் தந்து விடுவார். கோவிலுக்கு அருகாமையில் செல்ல செல்ல நடந்து செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிவிடும் .முருகனின் தரிசனத்திற்கு வெளிக்கிட்ட எங்களுக்கு வீதிகளில் தரிசனம் கிடைக்க தொடங்கிவிடும் .சைக்கிள் தரிப்பிடத்திற்க்கு ஒரு ரூபா கொடுக்க வேண்டும் அது பெரிய காசு...5 ரூபா கொண்டு போவது என்பது பெரிய விடயம். சைக்கிளை தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு தரிசனத்திற்கு உள்ளே சென்று விடுவோம்.முருகனின் தரிசனத்தை விட எங்களுக்கு விரும்பிய அழகு தரிசனத்தை தேடி அலைந்து திரிவோம்.அநேகமாக விரக்தியடைந்து வெளியே வருவோம் .காரணம் முருகனும் எங்களை கண்டு கொள்வதில்லை ..நாங்கள் தரிசனம் தேடி சென்ற பெண்களும் கண்டு கொள்வதில்லை.கடலை ஆச்சி மட்டும் எங்களை தனது வருமானத்திற்காக வாங்கோ வாங்கோ என கூவி அழைப்பார் .சைக்கிள் பார்க் காசை தவிர மிகுதி பணத்திற்கு கச்சான் சோளப்பொறியல் மற்றும் குச்சி ஐஸ்கிறீம் வாங்கி சாப்பிட்டபடியே வீடு சென்று விடுவோம். நாங்கள் கடலை வாங்க வெளி வீதி வலம் வந்து கொண்டிருக்கும் பொழுது கொஞ்சம் எஙகளைவிட அலங்காரம் அதிகம் போட்ட ஆண்களும் பெண்களும் நடுத்தர வயது த‌ம்பதியினர் வீதிகளில் வலம் வந்து கொண்டிருப்பார்கள் . மச்சான் ஆட்களை தெரியுதே என நண்பர்கள் கேட்பார்கள் தெரியவில்லை மச்சான் என்று சொன்னால் ,என்னடா மச்சான் உவையள் கொழும்பில் வேலை செய்கின்ற கோஸ்டிகள் திருவிழாவுக்கு வந்திருக்கினம். பார்க்க தெரியுது பசையுள்ள கோஸ்டிகள் என்று என‌ சொல்லி விட்டு "நாங்களும் இப்படி வருவோமல்ல" என அடுத்த பில்டப்பை போடுவோம். இந்த வழமை நாங்கள் தொழில் மற்றும் உயர்கல்வி தேடி செல்லும் வரை தொடர்ந்தது. ஒரு நாள்திருவிழா முடிந்து வீடு வந்த பொழுது அம்மா சொன்னார் "தம்பி உனக்கு தபால் வந்திருக்கு எதோ வேலைக்கு நேர்முக பரீட்சைக்கு கூப்பிடிருக்கிறாங்கள் போல தெரியுது, நீ ஒவ்வோரு நாளும் போய் கும்பிட்ட அந்த நல்லூரான் கைவிட மாட்டான்" "ஒம் அம்மா" அம்மாவுக்கு தெரியுமோ நாங்கள் என்னத்துக்கு முருகனிட்ட போனோம் என்று, இல்லை நான் தான் சொல்ல முடியுமோ விசயத்தை... இரண்டு நாளில் கொழும்புக்கு செல்ல வேண்டியிருந்தது எனது மாமா கொழும்பில் வாழ்ந்த காரணத்தால் பெரிய பிரச்சனைகள் இருக்கவில்லை .இரவு நேர (மெயில்) தபால் வண்டியில் செல்வதற்கு நண்பர்கள் கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு சைக்கிளில் அழைத்து சென்றார்கள். நல்லூரானின் தேர் திருவிழா முடிந்த கையுடன் கொழும்புக்கு பயணமானேன்.கோண்டாவில் புயையிரத நிலையத்தில் பிலாப்பழசீமேந்து பைகளுடனும் முருங்கைகாய் கட்டுகளுடனும் சனம் முண்டியடித்து கொண்டு நின்றது .அப்ப தான் புரிந்தது கொழும்பில் பணிபுரியும் இளைஞர்கள் ,குடுமபத்தினர் நல்லூரானை தரிசித்து விட்டு மீண்டும் கொழும்புக்கு செல்வதறகு நிற்கின்ரனர் என்பது.அதை பார்த்தவுடன் எனக்கு வேலை கிடைத்தால் நானும் இப்படி வந்து போகலாம என்று நம்ம மனசு கற்பனையில் மிதக்க தொடங்கி விட்டது பல கற்பனைகளில் அதுவும் கடந்து போனது கொழும்பில் முருகன் எனக்கு வேலை தரவில்லை ..ஆனால் ஒவ்வொரு வருட உறசவத்திற்க்கும் தன‌து பக்தர்களை தாங்கி வரும் வேலைய யாழ்தேவிக்கு கொடுத்துகொண்டிருந்தான். நாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் மக்கள் வெளியேற யாழ்தேவி,மெயில் வண்டி போகுவரத்து துண்டிக்கப்பட கொழும்பு பக்தர்கள் வருவது தடைப்பட, யாழ் பக்தர்களை எம்பெருமான் அலங்கார கந்தன் வெளிக்கிடுங்கோடா வெளிநாட்டுக்கு என ஆணையிட அந்த ஆணையை நிறைவேற்ற யாழ்தேவியை பிடித்து கொழும்பு வந்து சேர்ந்தவர்களில் நானும் ஒருத்தன், வெளிநாடு செல்வதற்காக கொழும்பில் இருக்கும் பொழுது கதிர்காமம் போகும் வாய்ப்பு ஏற்பட்டது.பூசாரி பூட்டிய திரைக்கு பின்னால் வாயையும் மூக்கையும் கட்டி பூஜை செய்து விட்டு எங்களுக்கு தீபத்தை தொட்டு வழிபட நீட்டிக்கொண்டு வந்தார். "என்ன மச்சான் ஐயர் பூணுலை மறைக்க , சேர்ட்டும் அணிந்து கொண்டு வாரார் " "இவர் ஐயர் இல்லை இவரை கபராலை என்று சொல்லுறவையள், பரம்பரை பரம்பரையாக அவையள் இப்படித்தான் செய்யிறவையள் " " கேள்வி பட்டனான் இப்ப தான் பார்க்கிறேன்" " ஏன் செல்வசந்நிதியிலும் இப்படித்தானே" " அங்க நான் போகவில்லை" "சனம் சன்னதியிலிருந்து இங்க நடந்து வாரவர்கள்" "முருகா வெளிநாட்டுக்கு போக உதவி செய் என்று தமிழிலும் ,தெரிந்த சிங்களத்திலயும் விண்ணப்பத்தை போட்டு விட்டு வந்தேன்" முருகா நீ தமிழனா சிங்களவனா என்ற கேள்வியை எழுப்பியவாறு பஸில் கொழும்பு திரும்பிகொண்டிருந்தோம் . "டேய் வெளிநாட்டுக்கு போகவேணும் என்று விண்ணப்பம் போடுறாய் எந்த நாட்டுக்கு என்று கேட்டியா? ஒழுங்கா அப்பிளிகேஷன் போடத் தெரியாது இதில நான் சிங்களவனா தமிழனா என்ற கேள்வி..பே...." தெகிவள பயின்டா.... சத்தம் கேட்டு திடுகெட்டு எழுந்து பஸிலிருந்து இறங்கினேன். வெளிநாட்டிலயே வேலை செய்யும் வாய்ப்புக்கள் கிடைத்தது. தமிழர்களில் பலர் வெளிநாடுகளில் தங்கள் அரைவாசிகாலத்தை கழிகின்றனர் அந்த வகையில் எனக்கும் அந்த சந்தர்ப்பம் கிடைத்து. சிங்கள முருகன் கொடுத்ததோ தமிழ் முருகன் கொடுத்தானோ என்ற பிரச்சனை இல்லை காரணம் நமக்கு இப்ப‌ அவுஸ் முருகன் இருக்கிறான் . நல்லூரானின்ட தேர் காலத்தில் மச்சம் சாப்பிட்டு விட்டேன் என்ற பயத்தில் அடுத்த நாள் காலையில் குளித்து வெளிக்கிட்டு நம்ம சிட்னி முருகனிட்ட போனேன் . கோவிலில் கந்தர் நின்றார்.மூக்கு வாய்க்கு ஒழுங்காக கச்சை கட்டியிருக்கினமோ என்று பார்த்து ஆட்களை எண்ணி உள்ளே அனுப்பி கொண்டிருந்தார். என்னை கண்டவுடன். " இப்ப நல்லூரானிட்ட நின்று இருக்க வேணும் இந்த கொரானா கோதாரி எல்லாத்தையும் கெடுத்து விட்டது" "அதுதான் இன்றைக்கு நானும் கோவிலுக்கு வந்தனான்" " என்ன நீ மச்சம் சாப்பிட்டு போட்டியாம் நல்லுரானின்ட திருவிழா காலத்தில்" முருகன் மறந்தாலும் இந்த சுற்றியிருக்கிற சனம் விடாது போட்டு கொடுத்துவிடுவாங்கள் முருகனிட்ட என்று புறுபுறுத்த வாறு "மறந்து போய் சாப்பிட்டு விட்டேன் ,எஸ்கியூஸ் மீ மூருகா" என்றேன்...... கண்ணை திறந்தேன் ஐயர் வாயை கட்டியிருநந்தார் மாஸ்க் என்ற போர்வையில் தீபத்தை நீட்டினார் தொட்டு கும்பிட்டுவிட்டு முருகா தொண்டைமானாறு சன்னிதியிலிருந்து சிட்னி வரை மெளன‌மாக இருந்து உன்னுள் என்னை தேடு என்று சொல்லுறாய் போல.....என்று நானும் மெளனமாக வீடு திரும்பினேன்.
  23. மிக்க நன்றி ராஜா மிக்க நன்றி யாயினி மிக்க நன்றி பெருமாள் மிக்க நன்றி paanch மிக்க நன்றி ஜெகாதுரை மிக்க நன்றி இணையவன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.