Everything posted by putthan
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குமாரசுவாமி இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி Suvy நன்றி கிருபன் உங்களுக்கும் எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஈழப்பிரியனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
தமிழ்சிறி... சுட்ட, முறுக்கு. (தொடரும்... சிறு கதை)
கெதியா சுட்டு அனுப்புங்கோ ....இன்று சனிக்கிழமை பிரயோசனப்படும்..
-
ஐம்பதில் ஆசை
இதை வாசிக்கும் பொழுது ஓடவேணும் போல இருக்கு ஆனால் .....இன்று தொடக்கம் ஓட வேண்டும்...நன்றி இணையவன்
-
நாங்களும் அரசியல் அலசுவோமல்ல
நன்றி கிருபன் நீங்கள் கூறுவது உண்மை....தமிழர்களின் நிலங்கள் சுருங்குவதை தடுக்க சில போராட்டங்களை செய்கிறார்கள் ஆனால் அவர்களால் வெற்றியடைய முடியாது... சிங்களவரின் பயணம் தொடரும் , இயற்கையும் தனது பயணத்தை தொடரும்.... 😀உதுக்குதான் டபிள் அக்டிங் கூடாது என்று சொல்லுறவையள்
-
நாங்களும் அரசியல் அலசுவோமல்ல
நன்றி உடையார் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்...போர்த்துகீசர் காலத்திலிருந்து அவர்கள் அப்படித்தான்(விபச்சாரிகள்) ... சோலமன் ,ரிச்சேர்ட் களின் வாரிசுகள் எல்லாம் புத்தரின் கொள்கை பரப்பிறன் என்று நாட்டை குட்டிசுவராக மாற்றிந்து தான் மிச்சம்
-
நாங்களும் அரசியல் அலசுவோமல்ல
உண்மையிலயே உந்த தமிழ்கட்சிகள் என்னத்தை செய்ய முடியும்...அவர்களால் தந்தியடிப்பது,கடிதம் போடுவது ,அறிக்கைவிடுவது,பாராளுமன்றத்தில் அலறுவது...இதை தவிர என்னதான் செய்ய முடியும் ...பாவப்பட்ட ஜென்மஙகள் ... பை த வே.... பி பி சி ,சி என் என்,அல் ஜசிரா போன்ற பிரபல நிறுவனங்கள் ஆய்வு செய்ய அழைத்தார்கள் ...பாதுகாப்பு காரணங்களுக்காக நான் செல்ல வில்லை 😀 நன்றி விசு...எமது கனவு சிறியது அதை நிறைவேற்ற அவர்கள் விடமாட்டார்கள்
-
நாங்களும் அரசியல் அலசுவோமல்ல
நன்றி சுவி ....வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் ... நன்றி அண்ணா நீண்ட அரசியல் கருத்துக்கு ...தங்களது மதங்களை தேவைக்கு ஏற்ற வகையில் மாற்றும் சிங்கள அரசியல் வாதிகள்...மல்கம் ரஞ்சித்தும் காவி கட்டி பெளத்தனாக மாறி அரசியல் செய்தாலும் செய்வார்..
-
நாங்களும் அரசியல் அலசுவோமல்ல
உலக ஒழுங்கு என்று வரும் பொழுது இன்றும் பழைய வலது/இடது அணி தான் அச்சாணி யாக இருக்கிறது .. அணிசேரா நாடுகள் என்ற அமைப்பும் இருந்தது ஆனால் அந்த அணி நாடுகள் உடைந்து போனது அல்லது வலது/இடது கூட்டணிகளுடன் கூட்டு சேர்ந்து கொண்டது எனது பார்வையில்... ஆசிய பிராந்தியத்தில் இரண்டாம் உலக போரின் பின்பு இரு பெரும் இடதுசாரி (??)நாடுகள்(சோவியத் சீனா)ஆசிய பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்துவதை உலக போரை முடிவுக்கு கொண்டு வந்த தரப்பு விரும்பவில்லை. வலது நாடுகளின்(வநா) கூட்டு தங்களது வசதிக்கும் தங்களது செல்வாக்கை செலுத்துவற்குமாக சில தீவுகளை நாடுகளாக உருவாக்கி அல்லது குத்தகைக்கு எடுத்து தங்களது வலது/ஜனநாயக/பல்கலாச்சார கொள்கைகளை வகுத்து சென்றன.....மதங்களை மையப்படுத்தி நாடுகளின்எல்லைகளையும் வகுத்து சென்றனர். பிரித்தானியா தனது காலனித்துவத்திலிருந்த நாடுகளை ஒரு அணியின் கீழ் பொதுநலவாய நாடுகள் என உருவாக்கினர் இந்த பொதுநலவாய நாடுகள் தங்களது செல்ல பிள்ளைகளாக தங்களால் அறிமுகம் செய்யப்பட்ட பல் கலாச்சார,மற்றும் ஜனநாயக மரபுகளை மதித்து நடப்பார்கள் என நினைத்தார்கள்.அத்துடன் தங்களது மொழி,மற்றும் மத பண்பாடு (கிறிஸ்தவம)தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் என நம்பினார்கள் . அரசியல் லாபங்களுக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் இந்த நாடுகளை உபயோகிக்கலாம் என்ற தூர நோக்கு சிந்தனை யுடன் உடன் செயல் பட்டார்கள். அப்படி உருவான நாடு தான் சிலோன்..... பல பொதுநலவாய நாடுகள் பிரித்தானியாவை சுழிச்சு விளையாட தொடங்கின ,அதில் ஒன்று சிலோன். இதை அறிந்த வ/நா கூட்டு ஆசியா பிராந்திய நாடாகிய ஜப்பான் ஊடாக பல நிதியுதவிகளை செய்து தம் பக்கம் வைத்து கொள்ள முடிவு செய்தது. ஜப்பானும் சிறிலங்காவும் பாரம்பரிய நட்பு நாடுகளாக மாறியது. . அதே சமயம் சிலோன் தனது நாட்டை(இறையாண்மை) பாதுகாத்து கொள்ளவும்,அரசியல் வாதிகள் தங்களது அரசியல் /பணம் பலத்தை பெருக்குவதற்கு பல உத்திகளை பயன்படுத்தினார்கள். சிலோன் முழுவதும் ஒரே இனம் ,ஒரே மொழி, ஒரேமதம் பேசும் மக்கள் வாழ வேண்டும் .உலகில் சிங்கள பெளத்தம் இந்த நாட்டில் மட்டும் உள்ள காரணத்தால் இதை பாதுகாக்க நினைத்த சிங்கள பெளத்த தேரர்கள் இனவாத்தை கையில் எடுத்தார்கள் .கிறிஸ்தவ சிங்கள அரசியல்வாதிகளும் இதைபயன்படுத்தி பெளத்தர்களாக மாறி அரசியல் செய்ய தொடங்கினார்கள். அரசியல் யாப்புக்களை மாற்றுவதும் இனவாதம் பேசுவதுமாக நாட்டை நடத்த தொடங்கினார்கள். வாக்குரிமை பறிக்கப்பட்டமை,சிங்களம் மட்டும் சட்டம்,பாத யாத்திரைகள் ,ஒப்பந்த்ங்கள் கிழித்தெறிதல் என்பன உள் நாட்டில் நடந்து கொண்டிருக்க மறுபக்கத்தில் சர்வதேச மட்டத்தில் சிலோன் என்ற பெயரை சிறிலங்கா குடியரசு என மாற்ற அரசியல் யாப்பை மாற்றினார்கள் . ஜெ.வி.பி (சேகுவார புரட்சி)இடது சாரி கொள்கையை புரட்சி மூலம் உருவாக்க போராடினார்கள். இந்த போராட்டம் இந்தியா இராணுவத்தின் உதவியுடன் சிலோன் இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டது. (தற்பொழுது சீனா பணத்தை காட்டி நேரடியாக ஆட்சியை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவருகின்றனர்,முன்பு போல மாவோ யிஸ்ட்க்களை உருவாக்க வேண்டிய தேவையில்லை.) சிறிலங்காவில் ஆட்சிக்கு வருபவர்கள் யாவரும் தங்களது கட்சி தொடர்ந்து நிலைத்திருப்பதற்கு அரசியல் யாப்பில் மாற்றத்தை கொண்டு வந்திருக்கின்றனர் . ஜெ.ஆர் ஆட்சிக்கு வந்தார் சிறிலங்கா குடியரசு என்ற பெயரை சிறிலங்கா சோசலிச ஜனநாயக குடியரசு என மாற்றி அரசியல் யாப்பையும் மாற்றினார் தனது கட்சி தொடர்ந்து 17 ஆண்டுகள் ஆட்சி அமைக்க கூடியதாக இருந்தது. தமிழ்மக்களின் ஆயுத போராட்டம் சிங்கள ஆட்சியாளர்களின் அரசியல் ஆசைக்கும் விருப்புக்கும் நன்றாக தீனி போட்டது.திறமையாக கையான்டார்கள் சிங்கள ஆட்சியாளர்கள் நாட்டில் அக்கறை கொள்வதை விட அதிகாரத்தை அலங்கரிப்பதிலயே கவனம் செலுத்தினர் சந்திரிக்கா ஆட்சி அமைத்தார் அவரும் அரசியல் யாப்பை மாற்றுவதாக சொல்லித்தான் ஆட்சி ஏறினார் ... ஐக்கிய தேசிய கட்சி ஆளுமை குறைய தொடங்க சிறிலங்கா சுதந்திரகட்சி ஆட்சியமைக்கும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது .சந்திரிக்காவின் பதவிக்காலம் முடிய ராஜபக்சா ஆட்டம் தொடங்குகிறது .இதுவரை காலமும் மேற்குலகு, சீனா, இந்தியா போன்ற நாடுகளுடன் சுளிச்சு ஓடிய ஒட்டம் ஒரு முட்டுக்கட்டை நிலைக்கு வந்து பகிரங்கமாக சீனாவுடன் உறவாட வேண்டிய நிலைக்கு சிறிலங்கா வந்து நிற்கின்றது .புதிய கட்சி நீண்ட நாள் ஆட்சி செய்ய வேண்டும் அத்துடன் இது குடும்ப கட்சியாகவும் நீண்டநாட்கள் பயணம் செய்ய வேண்டியுள்ளது.இந்த குடும்ப கட்சியில் ஒரு சிக்கல் உண்டு சகோதரர்கள் அவர்களின் பிள்ளைகள் எல்லோரும் ஜனாதிபதி ,பிரமதர் ஆக வரும் தகுதியுடையவர்கள். மீண்டும் சிறிலங்கா யாப்பு மாற்றப்படுவதன் மூலம் அதன் பெயர் சிங்கலெ ஆக மாறும் .சீனா சகல அபிவிருத்தியையும் செய்யும் நாட்டின் பெரும் பகுதி சீனாவுக்கு சொந்தமாகும்.....சிங்கள மக்கள் சிங்கலெ என்ற பெயர் கிடைத்தது மற்றும் தமிழர்கள்,இஸ்லாமியர்கள் நாட்டின் சொத்தை அபகரிக்கவில்லை என பெரும் மூச்சு விடுவார்கள் ஆனால் ட்ரகன் விழுங்கிய சிங்கத்தை மறந்துவிடுவார்கள் வலதுசாரி பின்னனி கொண்ட கூட்டு ஐ.நா சபையில் மனித உரிமை மீறல் என்ற குற்றசாட்டை போட்டு சிறிலங்காவை சீனா பக்கம் சாயாமல் தடுக்க முயற்சி செய்து பார்கின்றது ஆனால் வலது சாரிகளின் நன்கொடையை விட சீனாவின் நன்கொடை பல மடங்கு அதிகம் அதனால் அரசியல்வாதிகளின் பணப்பையும் பெரிதாகும்... நீண்ட நாட்கள் அரசியல் எழுதவில்லை அதுதான் இந்த சின்ன கிறுக்கல்
-
இன்னொரு அம்மா
பெண்கள் பெண்களை புரிந்து நடந்தால் நன்றாக இருக்கும்...கதை சிறப்பு
-
இப்படியும்.. செய்வார்களா? உண்மைச் சம்பவம்.
சைவப்பிரியர்களுக்கு தனியாகவும், அசைவபிரியர்களுக்கு தக்னியாகவும் மலசல கூடம் கட்டி. சைப்பிரியர்களின் பசளையை பயிர்களுக்கும்,அசைவப்பிரியர்களின் பசலையை விலங்குகளுக்கும் கொடுக்கலாம் 🤣
-
கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! (இறுதிப் பகுதி)
அருமையான கதை ....ஓவ்வொரு வசனமும் ஊர் ஞாபகத்தை நினைவுபடுத்தி செல்கின்றது ..எழுத்து நடை பிரமாதமாக இருக்கின்றது என நான் சொல்ல எனக்கு தகுதியில்லை...அருமை அருமை... சைக்கிள் ஓடும் பொழுது நாய் குரைத்தால் கால்களை தூக்கி நாம் செய்யும் சேட்டை ,,,,ஆஹா ஆஹா.... தொடருங்கள்....இன்னுமொரு ஊர் ஞாபத்தை
-
பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
🤣🤣
-
அண்ணா அறிவாலயம்.
இப்படியான உதவிகள் நண்பர்கள் தான் செய்வார்கள் அதுதான் நண்பேன்டா என்று சொல்லுயினம் போல
-
கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! (பகுதி -3)
அருமை வாசிக்க வாசிக்க கடற்கரை காட்சி கண் முன்னே வந்து காதாபாத்திரங்கள் மனகண்ணில் காட்சி தருகின்றன
-
பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
கார், வீடு போன்ற ஆசைகள் ஓரளவுக்கு கிடைத்து அறுபது வயதை அடையும் பொழுது ஓர் ஆசை வரும் ஞானம் அடைய என்ன வழி என்று..... கோவில் ,யு டியுப் என அலைந்து திரிய வேண்டிகிடக்கு🤣 நான் இந்த படத்தை பார்த்தேன் அப்படி பெரிய தாக்கம் ஒன்ரும் எனக்கு நட்க்கவில்லை ...நான் 17 +🤣
-
கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! (பகுதி -2)
யாழ்கவி சைவப்பிரியர் .... ரூங்காபி மீன் கடையில் இறாலை உடைத்தும் கொடுப்பார்கள், பென்டில் கில்லில் புதுசா மீன் கடையும் இறைச்சி கடையும் வந்திருக்கிறது (பணம் இல்லாமல் அவர்களுக்கு நான் விளம்பரம் செய்கின்றேன்...)😃
-
இனி இளவேனில் காலம் - நிழலி
இங்கும் உண்டு அதிகம் தலைநகர் கன்பராவில் இப்படியான காட்சிகளை காணலாம்,சிட்னி நகரமாயமாக்கப்பட்டமையால் குறைவு என சொல்லலாம்
-
இனி இளவேனில் காலம் - நிழலி
உங்களுக்கு இளவேனில் காலம் எங்களுக்கு இலையுதிர்காலம் வரபோகின்றது ...அருமையான கவிதை
-
போர் + ஆட்டம் (போராட்டம்)
ஆட்டம் தொடரட்டும் பார்க்க ஆவலாய் உள்ளோம்
-
சமூகமும் ஓட்டமும்
ஆமை வேகத்தில் எழுதாமல் முயல் வேகத்தில் எழுதுங்கோ😄 .....தொடருங்கள் விசு வாசிக்க ஆர்வமாக உள்ளோம்
-
கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! (பகுதி -2)
அருமையான பதிவு வாசிக்கும் பொழுது மனக்கண்ணில் தீவுப்பகுதிகள் வந்து போகின்றது....உங்கன்ட கதையில் சுறாவும் புட்டும் என்று வாசித்தவுடனே அதை சாப்பிட வேணும் என்ற ஆசை வந்திட்டுது....உடனே நம்ம சிட்னி யாழ்ப்பாண(பென்டில் கில்) டவுனில் போய் வாங்கி வந்து சமைத்து சாப்பிட்டு விட்டோம்..
-
செப்சிஸும் அம்மாவின் இழப்பும்
அம்மாவின் இழப்பு ஈடு செய்யமுடியாத ஒன்று ...நீண்ட மருத்துவ விளக்கத்திற்கு நன்றி
-
காவலூர்க் கனவுகள்
அருமையான கவிதை ....50 வருடங்களுக்கு முதல் போன பொழுது இருந்த நயினாதீவுக்கும் இரண்டு வருடங்களுக்கு முதல் போன நயினாதீவுக்கும் ....பல மாற்றங்கள் ...எல்லோரும் கூறுவது போன்று பலவிடயங்களை இழந்து கொண்டு வருகிறோம்....
-
பெண்மை எனும் நல் மனையாள் .
பெண்கள் தின வாழ்த்துக்கள்...பகிர்வுக்கு நன்றிகள்....