Everything posted by putthan
-
அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா துப்பாக்கிச் சூட்டில் பலி!
அப்பட்டமான மனித உரிமை மீறல் ...சோசலிச ஜனநாயக குடியரசில் போதை பொருள் கடத்துவது குற்றமா?
-
தமிழரசுக் கட்சியின் தலைவரானார் சி.சிறீதரன்
இதை இந்திய கொள்கை வகுப்பாளர்கள் பல வருடங்களுக்கு முன்னே தொடங்கி விட்டார்கள் புலிகள் இருக்கும் காலத்திலயே தொடங்கி விட்டார்கள் ....ஆஞ்சநேயர் இணுவிலில் குடியேறும் பொழுது , ....பிரமான்டமான பெருமாள் கோவில் திருகோண மலையில் கட்டும் பொழுதே தொடங்கிவிட்டது....அதன் அறுவடை தான் இது ... மக்கள் மொழியை விட மத நம்பிக்கையில் அதிக பற்று உடையவர்கள். அதை இந்திய கொள்கை வகுப்பாளர்கள் நன்றாகவே கையாள்கின்றனர். மேலும் கிறிஸ்தவ மதகுருமாரும் சிறிதரனுட நிற்பதை காணலாம்...
-
தமிழரசுக் கட்சியின் தலைவரானார் சி.சிறீதரன்
சுமத்திரன் தனிகட்சி தொடங்கினால் அது சாத்தியப்படும்....தலமைக்கு தெரியாமல் இவர் இனி ஊடக அறிக்கை விட முடியாது என நினைக்கிறேன்...அப்படி வெளியிட்டால் தலமை கண்மூடிக்கொண்டு ஆமா போடக் கூடாது .... இவரை தனிகட்சி தொடங்கும்படி நீங்கள் கூறும் சர்வதேசங்கள் ஊக்கப்படுத்தலாம்...
-
தமிழரசுக் கட்சியின் தலைவரானார் சி.சிறீதரன்
இந்தியா சிறிலங்காவின் தலமையை, மற்றும் ஆட்சியாளர்களை தீர்மானிக்கும் அளவுக்கு நாட்டில் செல்வாக்கு செலுத்துகின்றது இந்த நிலையில் நாம் எம்மாத்திரம்...மாலைதீவு இந்தியாவின் கை விட்டு அகன்றதின் பின் மேலும் மேலும் சிறிலங்காவை இறுக பற்றிகொள்ள இந்தியா நிச்சயம் முயற்சி செய்யும்...
-
இலுப்பைக்கடவை காவல் நிலைய பொறுப்பதிகாரியின் அட்டகாசம்?
கோவிலகளை ஒப்பிட வேண்டும் .... ஆயுத படைகள் நிறுவும் கோவில்களும்,மக்கள் சொந்த பணத்தில் கட்டும் கோவில்களுக்கும் வித்தியாசம் உண்டு என நான் நினைக்கிறேன் ..ஆயுத பலத்தின் ஊடாக மக்களுக்கு மத அடையாளங்களையும் மதங்களையும் பரப்புதல் ஐக்கிய இலங்கைக்கு அழகல்ல.... ஒரு இனத்தின் மத நம்பிக்கையை அழித்து ஆட்சியாளர்கள் தங்களது அதிகாரத்தை பாவித்து மதங்களை பரப்புதல் ஏற்புடையது அல்ல... ஐக்கிய இலங்கை வேணும் என்றால் தெற்கில் ஏகாம்பர்ம் அட்டுழியம் செய்ய வேண்டும் வடக்கில் எக்கநாயக்க செய்ய வேண்டும் ...
-
இலுப்பைக்கடவை காவல் நிலைய பொறுப்பதிகாரியின் அட்டகாசம்?
உண்மைதான் ,ஐக்கிய இலங்கை என்றால் அப்படித்தான் இருக்க வேணும் ....ஆனால் வடபகுதியில் எக்கநாயக்க செய்த வேலையை தெற்கில் ஏகாம்பரம் அல்லது எட்வேர்ட் பஸ்டியாம்பிள்ளை செய்யும் நிலை இருக்க வேண்டும் ....முடியமா ? சைவக் கோவில்கள் தெற்கில் உண்டு ஏன் பெள்த்த விகாரைகள் வத்கில் இருக்க கடாது என சொல்வது போல உள்ளது
-
வடக்குக்கான இந்திய ஒத்துழைப்பு தொடரும் !
மாலை தீவையே உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியவில்லை.. உங்களது இந்து சமுத்திர கடல் பாதுகாப்பு வலயத்தை சுருக்கி உங்கள் நாட்டின் லச்ச தீவுக்கு கொண்டுவந்து விட்டீர்கள் சீனா தனது பாதுகாப்பை விரிவாக்கிறது ...நீங்கள் சுருக்கி கொண்டு ,...வெகு விரைவில் அந்தமானில் சீனா கடற்படை தளம் அமைக்கும்.... இறையாண்மையுள்ள , 75 வருடங்களாக உங்கள் நாட்டுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்து உங்கள் சகல் ராஜதந்திர நடவடிக்கைகளையும் உடைத்தெரிந்து தனது அரசியலை செய்யும் சிங்கள அரசியல்வாதிகளிடம் நீங்கள் எதிர்பார்கின்றீர்கள் வடமாகணத்தை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என..
-
கடைகளை எரிக்க 12 இலட்சம் ரூபா! - பெல்ஜியத்தில் இருந்து வந்த பணம்.
யாழ் நூல் நிலையம் 40 வருடங்களுக்கு முன் எரித்தமைக்கு புலம்பெயர் தமிழர்கள் காரணம் என சில சிங்கள, தமிழ் அரசியல் வாதிகள் அறிக்கை விடலாம்😃
-
தமிழரசுக் கட்சியின் தலைவரானார் சி.சிறீதரன்
வாழ்த்துக்கள் சிறிதரன்...இருவரும் அரசியல் தெரிந்த மேதைகள் ... யார் ஊடக பேச்சாளர்? சம்பந்தன் சுமத்திரனை உள்வாங்கி தமிழ்தேசியத்தை ஆட்டம் காண வைத்தது போல.... சிறிதரன் நம்பிக்கையான உண்மையான தமிழ் தேசிய பற்று உள்ள இளைஞர்களை உள்வாங்கி தனக்கு அடுத்த கட்ட செயல் வீரர்களை உருவாக்க வேண்டும்... இன்றைய இக்கட்டான் நேரத்தில் தமிழ் தேசியத்தை நீக்க பல கோணங்களிலிருந்து செயல் படுகின்றனர். சர்வதேசமும் தமிழ் தேசிய நீக்கத்தை விரும்புகிறது .இந்தியா ஒருபடி மேலே சென்று இந்து அடையாள அரசியலை திணிக்க முயல்கிறது..இவை யாவற்றையும் சுளிச்சு வெட்டி ஒடி தமிழ் தேசியத்தை தக்க வைப்பார்களா இவர்கள்?
-
யாழ்ப்பாணத்திற்கு நீதி அமைச்சர் விஜயதாச விஜயம்
நம்புவது போல நடிக்கின்றனர் போல....அல்லது நடியுங்கள் என வற்புறுத்தப்படுகின்றனரா?
-
றீச்சாவுக்கு படையெடுக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
இதன் இயக்குனர் பாஸ்கரனை உண்மையிலயே பாராட்ட வேண்டும்...
-
3400 ஆண்டு பழமையான நாக மனித எச்சங்கள் யாழ்ப்பாணம் வேலணையில் கண்டுபிடிப்பு
சிறிலங்கா ஏர்லைன்சில் பிரி டிக்கட் போட்டு தந்தாலும் வரமாட்டேன்,
-
யாழ். மண்டை தீவு பொலிஸ் காவலரண் மீது பெற்றோல் குண்டு வீசிய இருவர் கைது
ஏன்டாப்பா வன்முறையில் ஈடுபதின்றீர்கள்....இனி அறிக்கை விடுவாங்கள் புலிகள் மீள் உருவாகின்றனர் என,,,
-
ஜனவரியில் இலங்கை வருகிறார் பிரித்தானிய இளவரசி ஆன்
இன்று பிரித்தானிய அரச குடும்பமும் ,சிறிலங்கா அரசு போல வங்குரோத்து நிலையில் தான் இருக்கிறது .. அவர்களின் அடிமை நாடுகளின் விமானத்தில் போனால் அதிக மரியாதை கிடைக்கும் என நினைத்திருப்பார்கள்... மேலும் எங்கன்ட விமான சேவை நிறுவனத்தினரும் வியாபாரத்தை அதிகரிக்க இவையளுக்கு கட்டணம் அறவிடாமல் டிக்கட் போட்டிருப்பினம்....ஆனால் பகிடி என்னவென்றால் வெளிநாட்டு சிங்களவர்களே அந்த விமானத்தில் ஏற யோசிக்கின்றனர்.
-
ஜனவரியில் இலங்கை வருகிறார் பிரித்தானிய இளவரசி ஆன்
சில சிங்கள அமைச்சர் அறிக்கை விடுவினம் : இவர் 13 ஆம் திகதி திரும்பி போவதை வன்மையாக கண்டிக்கிறேன் என அறிக்கை விட்டாலும் விடுவினம்...தமிழரின் 13 ஆம் திறுத்த சட்டத்திற்க்கு ஆதரவு தெரிவித்து 13 ஆம் திகதி வெளிகிடுகிறார்...
-
4வது உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல்!
நான் நினைக்கிறேன் "அதிகார பரவலாக்கள் கொடுக்க வேணும் ஆனால் கொடுக்க கூடாது" என்ற கொள்கையை சிறிலங்கா கொள்கை வகுப்பாளர்களும்,சர்வதேச கொள்கை வகுப்பாளர்களும்,அயல்நாட்டு கொள்கை வகுப்பாளரும் தமது கொள்கையாக வைத்திருக்கின்றனர் போலும்... ஒரு இரவில் தீர்க்க கூடிய பிரச்சனையை 75 வருடங்களுக்கு எடுத்து செல்கின்றனர்
-
4வது உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல்!
9 பேரில் தொடங்கிய அரச பயங்கரவாத படுகொலைகள் பல லட்சத்தை தாண்டிவிட்டது அனால் இன்றும் ஜனநாயக அரசு என சொல்லி கொண்டு திரிகின்றனர் நம்மவர் சிலரும்,சர்வதேசமும்
-
3400 ஆண்டு பழமையான நாக மனித எச்சங்கள் யாழ்ப்பாணம் வேலணையில் கண்டுபிடிப்பு
பிறகு என்ன 3400 ஆன்டுகளுக்கு முன்பே ஐக்கிய இலங்கையாக இருந்திருக்கிறது...நாகர்கள் ஐக்கிய இலங்கைக்குள் ஒற்றுமையாக வாழ்ந்திருக்கின்றனர் ... எப்ப புத்தரின் சிலை கண்டு பிடிப்பார்கள் ?,
-
செங்கடலிற்கு ஹெளத்தி கிளர்ச்சியாளர்களிற்கு எதிராக கப்பலை அனுப்புவதா ? ஆராய்கின்றது இலங்கை கடற்படை
போர் குற்றங்களில் இருந்து காப்பாற்றி கொள்ள இதுவும் ஒரு வழி....சில கடற்படை அதிகாரிகளுக்கு விசா இல்லை அமெரிக்காவுக்கு .....ஆனால்
-
செங்கடலிற்கு ஹெளத்தி கிளர்ச்சியாளர்களிற்கு எதிராக கப்பலை அனுப்புவதா ? ஆராய்கின்றது இலங்கை கடற்படை
என்ன சஜீத் மாத்தையா இது கூட தெரியாதா? அமேரிக்கா ஏனைய நாடுகளை தாக்கும் பொழுது சில நாடுகளை தன் பக்கம் வைத்து கொள்ளுவது வழமை ...(கூட்டு படைகள்)...ஏதாவது சட்ட சிக்கல் வந்தால் ...நாங்கள் தனியாக தாக்கவில்லை கூட்டாக தாக்கினோம் என சொல்வார்கள். சிறிலங்காவுக்கு உலக வங்கியின் பணம் தொடர வேண்டுமாயின் அமெரிக்கா சொல்படி நடக்க வேண்டும்... இல்லை என்றால் இந்தியா மாதிரி தனியாக சென்று தங்களது கப்பலை பாதுகாத்து விட்டு அந்த பிராந்தியத்தில் நிற்கவேணும்...இந்த விடயத்தில் எவ்வளவு உண்மை இருக்கிறது என தெரியவில்லை...(மாலைதீவில் புளோட் குழுவினரை அனுப்பி சதி செய்தது போல் சோமாலி கடற்கொள்ளையரை செற் பண்ணிச்சினமோ தெரியவில்லை)
-
இலங்கையில் சோழர் ஆட்சிக்குப் பிறகு மீண்டும் பிரமாண்ட ஜல்லிக்கட்டு - 57 வயதிலும் காளை அடக்கும் வீரர்
நாம் எமது மத தனித்துவத்தையே கடந்த 40 வருடத்தில் இழந்து விட்டோம், இழந்து கொண்டும் வருகிறோம்...இந்தியா இதில் பெரும் பங்கு வகிக்கின்றது ...மக்கள் கடவுள் என எதை சொன்னாலும் நம்பும் நிலை ....ஆகவே இந்தியா கடந்த வருடங்களில் இந்து என்ற அடையாளத்தை நிலைநிறுத்த பல ராமாயண கடவுள்களை சைவ கோவில்களில் புகுத்தியுள்ளது ...திருக்கேதீச்சரத்தில் ஆஞநேயர்,ராமர் இன்னும் பல ...கோவில் கட்ட பணமில்லை என்றவுடன் இந்திய தூதுவர் பணம் கொடுத்து இந்து கலாச்சாரத்தை இலகுவாக புகுத்தி விடுகின்றனர்.. இஸ்லாமியருக்கு அரேபு தேசம் கிஸ்தவ்ர்களுக்கு அமேரிக்கன் மிசன்....
-
நாட்டைக் கட்டியெழுப்பும் அபிவிருத்தித் திட்டத்தில் இணையுங்கள் – பல்கலைக்கழக மாணவர்களுக்கு அரச அதிபர் அழைப்பு!
AI மூலம் எப்படி கோழிபண்ணை வைத்து முன்னேறலாம் என இந்த மாணவ்ர்களுக்கு அறிவுரை கூறினால் சிறப்பாக இருக்கும்...கோழி முட்டையை இறக்குமதி செய்யும் நீங்கள் பொருளாதர வளர்ச்சி எடுக்கிறீயல் ...தேர்தலின் பின்பு வட மாகாண பக்கமே வரமாட்டியல்...
-
பொருளாதார நெருக்கடி! மக்களின் வருமானத்தில் பெரும் வீழ்ச்சி !
உலக வங்கி ,இந்தியா பெரியண்ணன்,சீனா மாமா இருக்கும் பொழுது இலங்கை மக்களுக்கு பொருளாதர வீழ்ச்சி வந்தா என்ன எழுச்சி வந்தா என்ன.... புலம் பெயர் தமிழ் உறவுகள் வேற இருக்கினம் பிறகென்ன கவலை.. எங்க விகாரை கட்டலாம் எங்க ,சிறுபான்மை இனத்தை ஓரம் கட்டலாம் என் மட்டும் சிந்தியுங்கோ ...
-
இலங்கையில் சோழர் ஆட்சிக்குப் பிறகு மீண்டும் பிரமாண்ட ஜல்லிக்கட்டு - 57 வயதிலும் காளை அடக்கும் வீரர்
முடியாத காரியம்...ஒரு இலங்கைபிரஜை (கிறிஸ்தவன்,இஸ்லாமியன்,இந்து,பெளத்தன்) இந்தியாவின் வாடை இல்லாமல் வாழ்ந்திட முடியாது ...அவனின் பிறப்பிலிருந்து இறப்பு வரை ஏதோ விதத்தில் பின்னி பிணைந்து விட்டது. அதுவும் தமிழனின் வாழ்க்கை இரண்டர கலந்து விட்டது.அதிலும் இந்துக்களின் (சைவ அடையாளம் இழந்து... விறும்பி இந்துவாக மாறும் ) புலம் பெயர்ந்து வாழும் எம்மவர்கள் இந்தியா வாடையை போட்டி போட்டு உள்வாங்குகின்றனர்,இந்தியா பொருளாதாரத்தை வளர்ச்சியடைய வைப்பதில் பங்கு வ்கிக்கின்றனர். கலியாண வீடு என்றால் இரு வீட்டாரும் இந்தியா சென்று கொள்வனவு செய்யும் பொருட்களின் பெறுமதி .. ஆத்மீக பயணம் காசி முதல் ,ராமேஸ்வரம் உள்ள ச்கல கோவில்களையும் தரிசித்தல்,அது போக மனித சுவாமிகளை தரிசித்தல் இப்படி பல விடயங்கள் புத்தகாய ...சிங்களவர்களை அழைத்தல்.. அவரின்ட பதவிக்கு உத்தரவதம் நீங்கள் கொடுப்பியளே? நிர்மலா நல்லூரில் செங்கோலுடன் நின்ற ஐயரை தேடினார்....தொண்டா ஜல்லிகட்டை ஊக்கப்ப்டுத்துகிறார்
-
இலங்கையில் சோழர் ஆட்சிக்குப் பிறகு மீண்டும் பிரமாண்ட ஜல்லிக்கட்டு - 57 வயதிலும் காளை அடக்கும் வீரர்
ஆளுனரின் இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன்... வன்முறைகளை தூண்டும் எந்த விளையாட்டும் தமிழருக்கு தேவையில்லை..பிறகு பக்கத்து வீட்டுக்காரன் சணடிக்கு வந்தால் நீங்கள் அவனை காளையை அட்க்கிற மாதிரி அடக்க வெளிக்கிட பிறகு அவன் உலகத்தில இருக்கிற காவலிகளை எல்லாம் துணக்கு அழைத்து தமிழனை அடக்கி அழித்து விடுவான் ஆகவே இப்படியான விளையாட்டுக்களை தமிழருக்கு அறிமுக படுத்த வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். அத்துடன் மெய்வல்லுனர் போட்டியிலிருந்து ஈட்டியெறிதல் ,குண்டெறிதல் போன்றவற்றை தமிழர்கள் விளையாடுவதை தடை செய்ய வேண்டும்.. மென் பந்தாட்டம்.பூப்பந்தாட்டம்,கிரிக்கட்( சொவ்ட் போல்) மற்றும் சினிமா,நாடகம் பாடல்கள் , போன்றவற்றை ஊக்கப்படுத்துங்கள்