Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

putthan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by putthan

  1. பலஸ்தீனத்திற்காக பல ஆயுத குழுக்கள் உருவாகி அழிந்து போகின்றது..பேச்சுவார்த்தை என பல நிகழ்வுகள் நடை பெறுகிறது ...PLO போய் காலங்கள் கடந்தும் பலஸ்தீனம் என்ற கருத்தியல் இன்னும் நிற்கின்றது அது போல புலிகள் போனாலும் தமிழ் தேசியம் நிலைத்து நிற்க்கும் ...தமிழ் தேசியம் குறும் தேசியம் என சிலர் புலம்பி கொண்டிருப்பார்கள் அது அவர்கள் சுதந்திரம் ...
  2. 75 வருடமா சிங்கள அரசியல்வாதிகளிடம் கொடுத்து அவையள் என்னத்தை கிழிச்சவையள் ...அதே மாதிரி இவையளுமெதையாவது சுருட்டி கொண்Tஉ அரசியல் செய்திருப்பினம்
  3. போர் குற்றங்களில் இருந்து காப்பாற்றி கொள்ள இதுவும் ஒரு வழி....சில கடற்படை அதிகாரிகளுக்கு விசா இல்லை அமெரிக்காவுக்கு .....ஆனால்
  4. என்ன சஜீத் மாத்தையா இது கூட தெரியாதா? அமேரிக்கா ஏனைய நாடுகளை தாக்கும் பொழுது சில நாடுகளை தன் பக்கம் வைத்து கொள்ளுவது வழமை ...(கூட்டு படைகள்)...ஏதாவது சட்ட சிக்கல் வந்தால் ...நாங்கள் தனியாக தாக்கவில்லை கூட்டாக தாக்கினோம் என சொல்வார்கள். சிறிலங்காவுக்கு உலக வங்கியின் பணம் தொடர வேண்டுமாயின் அமெரிக்கா சொல்படி நடக்க வேண்டும்... இல்லை என்றால் இந்தியா மாதிரி தனியாக சென்று தங்களது கப்பலை பாதுகாத்து விட்டு அந்த பிராந்தியத்தில் நிற்கவேணும்...இந்த விடயத்தில் எவ்வளவு உண்மை இருக்கிறது என தெரியவில்லை...(மாலைதீவில் புளோட் குழுவினரை அனுப்பி சதி செய்தது போல் சோமாலி கடற்கொள்ளையரை செற் பண்ணிச்சினமோ தெரியவில்லை)
  5. ரொ இந்த காணொளியை தயாரித்திருக்காது..ஆனால் அறிவுரை வழங்கியிருக்கலாம் பி.ஜெ.பி யிடம் அதுவும் தமிழ் நாடு பி.ஜெ.பி யிடம்.அது தான் இந்த வீடியோ இவ்வளவு மட்டமாக வெளிவந்திருக்கிறது. 1)பழ நெடுமாறன் ஐயா இந்திரா காந்தியுடன் நெருங்கிய தொடர்பை கொண்டவர்,மேலும் இந்திராகாந்தி இந்தியாவின் தேசிய நலனுக்கு தான் முக்கியத்துவம் கொடுத்தவர் அவர் ஈழத் தமிழர் நலனுக்காக எதையும் செய்யவில்லை..இன்று இருந்தாலும் செய்திருக்க மாட்டார்.பழ நெடுமாறன் ஐயா ஊடாக அவர் எமது போராட்டத்தை தங்களது தேசிய நலனுக்காக பயன்படுத்த முயற்சி செய்தவர் அதன் அறுவடை தான் இன்று எமது தலைவர் இருக்கிறார் என அறிக்கை விடுவது.... இந்திரா காங்கிரஸின் வேலுச்சாமி , தலைவர் இருக்கின்றார் என அறிக்கை விடுவதும் இதன் பின்னனி என கொள்ளலாம். 2) இன்று மோடி ,அண்ணாமலை ஊடாக சில செயல்களை செய்ய முயல்கின்றார்,இந்தியாவின் தேசிய கட்சிகள் எமது போராட்டத்தை அழிப்பதற்கு முன் நிற்பார்கள் .ஆனால் அதை பிராந்திய கட்சிகளின் ஊடாக செய்ய முயல்வார்கள் ,அதே நேரம் எமக்கு முழுஆதரவு கொடுப்பது போல வெளியில் இருந்து பார்க்கும் பொழுது தெரியும் ஆனால் இறுதி முடிவு இந்தியாவின் தேசிய நலன் ,எமது தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள்,நாம் வெள்ளி பார்க்க வேண்டியது... 3)இன்று காசி ஆனந்தன் காவி ஆனந்தனாக மாறி அறிக்கை விடுவதும் இதன் பின்னனி. 4) இந்தியாவின் அரசாங்கம் சிறிலங்கா அரசுடன் நேச உறவுடன் தொடர்ந்து செயல்படும் ...வியாபார நலன்கள் சார்ந்து செயல் படும்..... சிறிலங்காவை இராணுவ பலத்தினால்24 மணித்தியாலத்தினுள் தனது மாநிலமாகா மாற்ற முடியும் என்ற நம்பிக்கை இந்தியாவுக்கு உண்டு ஆகவே தான் சிறிலங்காவின் வெற்றிகரமான் ராஜந்திர நகர்வுகளை சகித்து கொண்டிருக்கின்றது... இந்தியா இன்று வடமாகாணத்துக்கு கப்பல் விடுவது,விமானம் பறக்கவிடுவது, இலவசமாக இசை நிகழ்ச்சி நடத்துவது ,பிரபலமான சைவ கோவில்களை புனருத்தாரணம் செய்வது அங்கு இராமர், அனுமான் மற்றும் எமக்கு தெரியாத கடவுள்கள அறிமுகம் செய்வது....இப்படி பல பல... 5) ஈழத் தமிழர்கள் என்ற தேசிய இனத்தை அழித்து கிறிஸ்தவர்கள்,இந்துக்கள் ,பெளத்தர்கள்,இஸ்லாமியர்கள் என்ற அடையாளத்தை வடக்கு கிழக்கில் முன் நிலைப்படுத்த திட்டமிட்டு செயல் படுவது... சிறிலங்காவின் பொருளாதரத்தை வளப்படுத்த இலவச இசை நிகழ்ச்சி நடத்துவது...இதன் ஊடாக மக்களின் பணம் வீணாக செலவு செய்யப்பட்டு நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் ஆனால் மக்களுக்கு எந்த லாபமும் கிட்டாஅது... இடக்கிட நாங்களும் புலனாய்வு அதிகாரியாக வந்து அறிக்கை விடுவமல்ல....
  6. நீங்கள் கூறுவது உண்மை தான் ......நாம் முன்பு யாழில் தான் தான் நேரத்தை அதிக நேரம் செலவளிப்பேன்....இந்த வட்சப் வந்த ,யூ டியுப் வந்த பின்பு அங்கு தான் அதிக நேரம் செலவளிக்கிறேன்...
  7. நீதிபதிக்கு சம்பளம் கொடுக்க நீதி அமைச்சிடம் பணம் இல்லை என்ற காரணத்தால் வழக்கு விசாரணை நூறு வருடங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது ....
  8. இது வயசு போக போக அதிகமாகிறது
  9. வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி....நுணாவிலன் .ஜனாதிபதியின் அதிகாரம் அதை விட பெரிது அவர் தனித்தே ஆட்டிபடைக்கலாம் போல உள்ளது வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி....நிலாமதி பார்ப்போம் என்ன செய்யப்போகிறார்கள் என்று
  10. வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி....சுவி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி....தமிழ்சிறி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி....ஈழப்பிரியன் ... எது நடகின்றதோ அது நன்றாக நடகிறது
  11. ஆயு போவான் அதி உத்தம, மேன்மைதங்கிய, சிங்கள பெளத்த தேசியத்தின் காவலனே, சிங்க லே ஒடும் சிங்கராஜாவே, சிறிலங்கா சோசலிச குடியரசின் රාජපුත්‍ර ஜனாதிபதி அவர்களே வணக்கமுங்கோ.... இது உங்களது இனவாத கொள்கைகளால் பாதிக்க பட்ட இன்னுமோரு தமிழ் தேசிய பும்பெயர் தமிழனால் உங்களுக்கு வழங்கப்படும் மரியாதை ..... எம் இனம் உங்களிடமும் உங்கள் தேசியத்திடம் கேட்டது ஒன்றே ஒன்று தான் சம அந்தஸ்துடன் எமது பிரதேசத்தில் தனித்துவத்துடன் வாழவிடுங்கள் என்று மட்டும் தான்... எம்மக்கள் இந்த 74 வருடத்தில் பான் தா,பால் தா,டிசல் தா,காஸ் தா, மின்சாரம் தா என போரடவில்லை. வாழ உரிமை மட்டுமே கேட்டார்கள்.அந்த உரிமைக்காக முதலில் அகிம்சை வழியாகவும் பின்பு 30 வருட ஆயுத போராட்டம் நடத்தினார்கள் இது யாவும் நீங்களும் நானும் சிறிலங்கா மக்களும் அறிந்ததே.... ஆயுத போராட்டகாலத்தில் போராட்டத்தை தலமை தாங்க பிரபாகரன்,தம்பி,தலைவர் என்ற செல்ல பெயருடன் மேதகு என்ற கெளரவ பட்டத்துடன் ஒருவ்ர் உங்களது சிறிலங்கா தேசத்தின் இராணுவத்துக்கு தொல்லை கொடுத்து போராடியதும் நீங்கள் அறிந்ததே... அவரும் அவரது மக்களும் தளபதிகளும் தங்களை நம்பியே போராட்டத்தை நடத்தினார்கள் . ஒன்றல்ல இரண்டல்ல இருபதைந்து வருடங்கள் . வல்லரசுகளின் எதிர்ப்பு (அமேரிக்கா,மேற்குலகு ) பிராந்திய வல்லர்சுகளின் எதிர்ப்பு(இந்தியா,சீனா) இறையாண்மை நாடுகளின் எதிர்ப்பு (பாகிஸ்தான் ,கியுபா...) ஐ.நாடுகள் சபையின் கண்டுகொள்ளா தன்மை (தெரிந்தும் தெரியாத்து போல் நடித்து உங்களுக்கு ஆதரவு தந்தமை) வெளிநாட்டு தூதரகங்களின்(எதிர்ப்பு) புலம் பெயர் உறவுகளின் சிறு பணப் பங்களிப்புடன் 25 வருடங்கள் தனது மக்களின் உணவுதேவையை பூர்த்தி செய்து ,உங்கள் இராணுவத்துடனும் பயங்கர இராணுவ தாக்குதல் செய்து தாக்கு பிடித்தது என்பது இமாலய சா தனை என்றே சொல்ல வேண்டும். வடமாகாண பருத்திதுறைமுனையிலிருந்து வவுனியா வரை 20 வருடங்களுக்கு மேலாக புகையிரத போக்குவரத்து ,பொது போக்குவரத்து எதுவும் இன்றி பயங்கர அனுபவங்களுடன் வவுனியாவரை வந்து அங்கிருந்து பயம் கலந்த உணர்வுடன் கொழும்பை அடைந்து மீண்டும் எங்கு போகிறோம் என்ற இலக்கின்றி புலம்பெயர்ந்து பல இன்னல்களுக்கு மத்தில் எம்மை அடையாளப்படுத்தி வாழும் இனம்.... அவர் பயங்கரவாதி,அவரை சூழவுள்ள மக்கள் பயங்கர வாதி என உலகம் பூராவும் பிரச்சாரம் செய்து உலக நாடுகளை நம்ப வைத்து மக்களை வழிநடத்திய போராளி குழுவை அழித்தீர்கள் ... நீங்களும் உங்கன்ட இராணுவம் மட்டுமல்ல உலகம் பூராவும் உள்ள நாடுகளின் இராணுவ ஆலோசனைப்படி மக்களை கொலை செய்தீர்கள் . தமிழரின் இரத்தம் இந்துமுத்திரத்தில் கலக்கட்டும் ,பெண்கள் சிங்கள இராணுவ வீரர்களுக்கு இரையாகட்டும் என சொல்லி கொன்றுகுவித்து ராஜ புத்ரா என சிங்கள மக்களால் கெளரவிக்கப்பட்டிர்கள்.. உலகநாடுகள் உங்களுடன் கைகொர்த்து ஜனநாயகத்தை காக்க முன்வந்தன...நாட்டை அபிவிருத்தி செய்ய பணத்தை வாரி வாரி வழங்கினர். முப்படைகள் மற்றும் பொலிஸ் படைகள் முழு ஆதரவு,ஆகாய போக்குவர‌த்து,க‌ப்பல் போக்குவரத்து யாவும் உங்கள் வசம், அங்கீகரிக்கபட்ட‌ சர்வதேச பணபரிவர்த்தனைகள் ....அதை இயக்க /இயங்க வைக்க தகுதி /தகமை/புலமைகள் கொண்ட நிர்வாக அதிகாரிகள் இருந்தும் உங்களுக்கு மக்கள் வழங்கிய ஐந்து வருட ஜனாதிபதி பதவியை தக்க வைத்து கொள்ள முடியாமல் போய்விட்டதே .... ராஜ புத்ரா....ஒன்றில் சுய புத்தி இருக்க வேணும் அல்லது சொல் புத்தி இருக்க வேணும் உங்களுக்கு இரண்டும் இல்லை என எங்களுக்கு ஏற்கனவே தெரிந்து தான் வாக்கு போடவில்லை ... நீங்கள் அழிவை தந்தாலும் கெளர‌வமான‌ முறையில் உங்களை நிராகரித்தோம் .... ராஜ புத்ரா சிங்க லெ(சிங்கள இரத்தம் ) என உசுப்பேத்தி 69 லட்சம் வாக்குகளை அளித்து ராஜா மாத்தையாவாக அரண்மையில் யில் அமர வைத்த சிங்களய சகோதரஜாக்கள் ,,,, வருங்கால ஜனதிபதி தொடக்கம் கூலி தொழில் செய்யும் சதாரண பிரஜை வரை இன்று உங்களை குண்டுகளால் துளைக்கின்றனர். மூளை.இருக்கின்றதா...பீர‌ங்கி குண்டு...டுமீல் பொன்னையா ....விமான குண்டு ..டமில் விதை(போலை) இருக்கா....எரிகுண்டு புஸ்ஸ் பிஸ்ஸா(விசரா)....ஆர்ட்லரி....ஊஊஊ கரியா....ஏகே47..டுமில்.. உங்கள் குடும்பத்தை வேறு ,சொல்ல முடியாத வார்த்தைகளால் துளைத்தெடுக்கின்றனர்... வெளியே போ ,இந்த நாட்டில் இருக்காதே ,உனது தாய் நாட்டுக்கு போ,நீ களவாடிய சொத்துக்களை திருப்பி நாட்டுக்கே கொடு ....நீயும் உன்குடும்பமும் நாட்டை விட்டு அரசை விட்டு வெளியே போ... இவ்வளவு பாராட்டுக்களையும் பெற்றும் நான் போகமாட்டேன் என அடம் பிடிக்கிறீங்கள் பாருங்கோ...உண்மையிலயே நீங்கள் பிஸ்ஸு தான் ... போராளிகளின் தளபதிகளை வெளிநாட்டு புலனாய்வு சக்திகளுடன் இணைந்து அவர்களை கண்காணித்து விமான குண்டுகள் போட்டு அழித்தீர்கள் ,சிலருக்கு பணம் பதவி ஆசைகளை கொடுத்து உங்கள் பக்கம் இழுத்தீர்கள்...இந்த இக்கட்டான சூழலிலும் நீங்கள் இந்த நரித்தனத்தை விட வில்லை....ஆனால் உங்கள் மக்களும் உங்களை ஆதரித்தகட்சி எம்பிக்களும் நன்றாகவே புரிந்து வைத்துள்ளனர்.. இன்று உங்கள் உறவுகளையே அண்ணன் ,தம்பி,மாமன் மச்சான் எல்லோரையும் வெளியேற சொல்லி உங்களை ராஜ புத்ரா ரராக கொண்டாடிய மக்களே துரத்தியடிக்கின்றனர்... இறுதிவரை களத்தில் நின்று தன்னையே அழித்துகொண்ட அந்த மேதகு முன்பு நீங்கள்? சீரோ......எங்களுக்கு ஆனால் ராஜ புத்ரா ஆக் கிய உங்கள் மக்களுக்கு நீங்கள் நாய் புத்ர சீ சீ பல்லோ புத்ர.... உங்கள் பெயர்..... மானம் மரியாதை சர்வதேசம் மற்றும் தெரு தெருவாக ....,பறசூட்டில் பறக்கிரது .
  12. காவலூரான் கன்னி பதிவு சிறப்பாக உள்ளது பாராட்டுக்கள்
  13. சில சின்ன உண்மைகளுக்கு பொய் சேர்த்து கிறுக்குவது கிறுக்கர்களின் குணம்...நன்றி கிருபன் நன்றி நிலாமதி நன்றி சிறி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் 🤣 நன்றி ஏராளன் வருகைக்கும்,கருத்து பகிர்வுக்கும்....
  14. அவன் ஒர் ஆடம்பர அழகன் அமைதியான ஆண்டி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கு.சா
  15. வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ....சொல்லி போடாதையுங்கோ பிறகு நான் அவுஸ் டொலரை சிறிலங்கா மாதவிடம் விசிட் பண்ணும் பொழுது மாற்ற முடியாது ... வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ....இப்ப சிறிலங்காவை விற்கின்றனர் ...டொலர் இருக்கா,மருந்து இருக்கா,அரிசி இருக்கா,
  16. பரNaகோர்ட்..... பரNaகோர்ட் "பழைய போத்தல்,பேப்பர், பித்தளை,அலுமினியம் சருகை சேலை இருக்கா" "அண்ணே நில்லுங்கோ பழைய புத்தகம் கொஞ்சம் இருக்கு எடுத்திட்டு காசு தாங்கோ" " ஒரு கிலோ இருக்கு இந்தா இரண்டு ரூபா" காசை வாங்கி பொக்கற்றுக்குள்ளே போடுற நேரம் குகனின் அம்மா "தம்பி யாரோட கதையுச்சுகொண்டிருக்கிறாய் படலையில் நின்று" "அம்மா அது பழைய அலுமினிய சமான்கள் வாங்கிற பரனகோர்ட்அண்ண" "நிற்க சொல்லு இரண்டு அலுமினிய சட்டி கிடக்குது கொடுத்திட்டு ஏதாவது வாங்குவோம்" இரண்டு பழைய அலுமினிய சட்டியை கொண்டு வந்து கொடுத்தா ,அவரும் சட்டியை காலால் மிதித்து நெளித்து நிறுத்து பார்ட்த்து விட்டு சைக்கிளில் கட்டி வைத்திருந்த ஒரு பிளாஸ்டிக் பக்கற்றையும் சின்ன அலுமினியம் சருவச்சட்டியையும் காட்டி "அம்மா இந்த பிளாஸ்டிக் பக்கற் வேணுமா அல்லது அலுமினிய சட்டி வேணுமா" "அம்மா பிளாஸ்டிக் பக்கற் நல்லது வடிவா இருக்கு இதை எடுங்கோ" தாயார் அனுமதி தரமுதலே குகன் பரணகொர்ட் அண்ணரின் சைக்கிளிலிருந்து அதை கழற்றி வீட்டுக்குள் எடுத்து சென்று விட்டான். மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பிய தந்தையிடம் பிளாஸ்டிக் பக்கற்றின் வருகை பற்றி விளக்கினான் . தந்தையோ அவனுக்கு பொருளாதர அரசியல் வகுப்பு எடுத்தார் "நீ கொடுத்த அலுமினியம் 30 ரூபா பெறும் அவன் தந்த பக்கற் 10 ரூபா தான் பெறும்" "அந்த சட்டிகளை நாங்கள் பாவிக்கிரதில்லை தானே" " என்றாலும் பெறுமதி இருக்குத்தானே அது தானே அவன்கள் எடுக்கிறாங்கள்" "அப்பா வள‌வுக்குள் இருக்கும் பழைய போத்தல் எல்லாம் பொறுக்கி எடுக்கப்போறேன் இரண்டு கிழமையில் பரண்கொர்ட்காரர் வருவார் கொடுக்கபோறன்" "எல்லாத்தையும் தூக்கி கொடுத்து போடாதை ,அம்மாவிடம் காட்டிபோட்டு கொடு" அப்பர் ஏதோ புலம்புகிறார் என நினைத்து தனது காரியங்களை செய்யத்தொடங்கினான். வளவில் உள்ள போத்தல்களை பொறுக்கி கொண்டிருக்கும் பொழுது கண்ணில் பட்டது ஆடுகளுக்கு புண்ணாக்கு நீர் வைக்கும் பித்தளை சட்டி ,உண்மையிலயே அது ஒர் சட்டியல்ல பானை .ஆடுகள் உணர்ச்சி வசப்பட்டு உதைபந்தாட்டங்கள் விளையாடி சகல பக்கத்திலும் அடி வாங்கி சட்டி வடிவில் வந்து விட்டது இருந்தாலும் ஒரு ஓட்டை விழவில்லை. இரண்டு கிழமை கழித்து பரணகோர்ட் அண்ணர் கூவின சத்தம் கேட்க படலையை திறந்து கையை காட்டினான். இந்த தடவை இருவர் வந்திருந்தனர் சைக்ககிள் நிறைய பிளாஸ்டிக் பாத்திரங்கள் ,அலுமினிய பாத்திரங்கள் எல்லாம் கட்டியிருந்தன அதை பார்த்தவுடன் இவனுக்கு ஆடுகளுக்கு புது பாத்திரம் வாங்கி வைக்க வேணும் என்ற ஆசை வந்து விட்டது ...இருந்த போத்தல்களை கொடுத்தான் ஒரு சின்ன பிளாஸ்டிக் பாத்திரம் கொடுத்தார்கள் . "அண்ணே எனக்கு இந்த அலுமினிய சட்டியை தாங்கோ" அவர்கள் சிரித்து கொண்டே "இந்த போத்தலுக்கு இது தரமுடியாது வேறு ஏதாவது பித்தளை சட்டி அல்லது சருகை சீலை கொண்டு வாங்கோ" அவன் ஓடிப்போய் ஆட்டுக்கு தண்ணீ வைக்கும் பாத்திரத்தை கொண்டு வந்து கொடுத்தான் அவர்கள் கையினால் தூக்கி பார்த்தவுடனே அவன் கேட்ட சட்டியை கொடுத்து விட்டனர். அவனுக்கு பெரிய சந்தோசம் ஆட்டுக்கு புது பாத்திரம் வாங்கி வைத்த குட்டி தம்பி ...என்று. அன்று மாலை அவர்கள் இருவரின் சைக்கிளிலும் இருந்த புது சமான்கள் யாவும் முடிந்திருந்தது சைக்கிளில் சகல பழைய சாமான்களையும் சாக்கில் கட்டி ஹறியரில் வைத்து தள்ளி கொண்டு வந்தவர்கள் அவனை கண்டதும் குடிக்க தண்ணீர் கேட்டார்கள் இவனும் வீட்டினுள் சென்று எடுத்து வந்து கொடுத்தான். அந்த ஒழுங்கையில் உள்ள அநேகமானவர்களுக்கு அவர்கள் பழக்கமானவர்கள் ஆகிவிட்டனர். படலையில் நின்ற பக்கத்து வீட்டு அண்ரியை கூப்பிட்டு ஐநூறு ரூபா கொடுத்தான் . சருகை சேலைக்கு என்றான். குகனுக்கு விடுப்பு அறிவது என்றால் கொள்ளை பிரியம் . "அண்ணே நீங்கள் இருவரும் சொந்தகாரன்களே" "இவர் என்ட சொந்த தம்பி" "அண்ணே இந்த போத்தல் எல்லாம் என்ன செய்வீங்கள் கழுவிபோட்டு திருப்பி பாவிப்பிங்களோ" "இல்லை எங்கன்ட பெரியண்ண கொழும்பில் கடை வைத்திருக்கிறார் அவ‌ருக்கு அனுப்பிவிடுவோம் " "அவர் என்ன செய்வார் என எங்களுக்கு தெரியாது" "அப்ப சருகை ,அலுமினியம்,பித்தளை" "அதுகளை பெரியண்ணருக்கு தான் அனுப்புவோம்,சரி தம்பி போய்யிட்டு வாரம்" அவர்கள் போனபின்பு குகனும் வீட்டினுள் சென்று படுக்க போய்விட்டான் அப்பா நாளை காலை ஆட்டுக்கு தண்ணீர் வைக்கும் பொழுது ஆச்சரியப்படட்டும் என நினைத்தபடியே தூங்கிவிட்டான் விடியகாலையில் ' "டேய் குகா எங்கயடா ஆட்டுக்கு புண்ணாக்கு வைக்கிற சட்டி" "இந்தா இருக்கு புதுசு" " எங்கயடா பழைய சட்டி" "அதை கொடுத்து தான் இதை வாங்கினேன்" கண்ணத்தில் ஒர் அறை விழுந்தது அவனுக்கு "டேய் யாரிட்ட கேட்டு கொடுத்தனீ அதின்ட பெறுமதி எவ்வளவு என்று தெரியுமா?" இவர்களின் சத்தம் கேட்டு தாயார் ஒடி வந்தார் என்னது தகப்பனும் மகனும் புடுங்கு படுறீயள் "இவன் இருக்கிற சாமன்களை எல்லாம் எடுத்து உந்த பரணகோர்ட் காரனிட்ட கொடுக்கிறான் ஒருநாளைக்கு என்னையும் கொடுத்துபோட்டு புது அப்பா கொண்டு வருவான் நீ பார்த்து கொண்டு இரு".. "சும்மா கத்த வேண்டாம் ,பிள்ளை ஆடு பாவம் என்று புதுசு வாங்கி வைச்சு சந்தோசப்பட்டது நீங்கள் என்னடா என்றால்" " நீ அடுத்தவள், அந்த சட்டி பழங்காலத்து சட்டி அதின்ட வெயிட் எவ்வளவு தெரியுமா" "அந்த பழசுகளை வைச்சு என்ன செய்யப்போறீங்கள்" "இது பழசு என்றாலும் ஸ்ரொங்க் ,இந்த ஆடுகளின் சகல உதைகளையும் தாங்கி கொண்டு இருந்தது ஒரு ஒட்டை விழவில்லை அது போக அதை உருக்கினால் அதை வாங்கின காசின்ட முக்கால்வாசி காசு தேறும்." "சரி சரி" "உன்ட மகன் வாங்கி வைச்சிருக்கிறது அலுமினியம் ஆடு இரண்டு நாளில் சட்டியை பந்தாக்கி வைச்சிடும் பிறகு தாயும் மகனும் உங்கன்ட சீலையை கொடுத்து அவனிட்ட புதுசு வாங்கி வையுங்கோ" "அம்மா,பரணகோர்ட் அண்ணே பக்கத்து வீட்டு அண்ரியிட்ட ஐநூறு ரூபா கொடுத்தவர் சருகை சீலை கொடுத்தமைக்கு" "படுவா நான் இவ்வளவு கத்திறன் நீ என்னடா என்றால் திரும்ப திரும்ப பரணகோர்ட் காரனிட்ட போறது என் நிற்கிறாய் இனிமேல் வீட்டு வாசலில் பரணகோர்ட் காரனை கண்டன் என்றால் காலை அடிச்சு முறிச்சு போடுவன்" என கோபத்தில கத்திவிட்டு ஆட்டுக்கு புது பாத்திரத்தில் புண்ணாக்கு தண்ணீரை ஊற்றி விட்டு சென்று விட்டார் தந்தை. தந்தையார் கூறியது போல இரண்டு கிழமையில் சட்டி நெளிந்து ஓட்டை விழுந்து விட்டது .அதற்கு வீதியில் இருந்த தார் உருண்டையை உருக்கி ஒட்டி சில காலம் பாவித்தார்கள் பிறகு ஆடுகளை விற்று விட்டு கொழும்புக்கு வந்துவிட்டனர் குகன கொழும்பில் வேலை தேடி கொண்டிருக்கும் பொழுது விளம்பரம் ஒன்றை பார்த்தான்,ஸ்ரோர் கீப்பர் வேலைக்கு வெற்றிடம் இருப்பதாக போட்டிருந்தார்கள். குகனும் விண்ணப்பிருந்தான், நேர்முகபரீட்சைக்கும் அழைத்திருந்தார்கள் . குறிப்பிட்ட நேரத்தில் நேர் முகபரீட்சைக்கு போனான். அழகான பெண் ஒருத்தி அவனை உள்ளே அழைத்து சென்றாள் இராணுவ உடையில் ஒருத்தர் டி குடித்து கொண்டிருந்தார்.மற்ற மூவரும் பெரிய மேசையில் சிங்கள தேசிய உடையணிந்து அமர்ந்திருந்தனர். வாடிவென்ட என்றார்கள் இவனும் பயந்து பயந்து அமர்ந்தான் "நம மொக்கத" "குகன்" "கொயத வடக்கருவே" "வெர்ஸ்ட் ஜொப்" "கம ஹொயத" "யாப்பானய" "அப்பே(சி) பலன(சி) எஸ்பீரியன்ஸ் மான்(சி)" பைலை மூடி அவனிட்ட கொடுத்து விட்டார்கள். இவர்களை எங்கயோ கண்ட மாதிரி இருக்கே என நினைத்த படி வீடு வந்தான். "என்னடா இன்டெர்வியூ எப்படி" "சரிவரவில்லையப்பா" "சவுதிக்கு போட்ட வேலைக்கு வரச்சொல்லி போட்டிருக்கிறாங்கள்" என சொல்லிய படியே அந்த கடிதத்தை கொடுத்தார் . "அப்பா இன்றைக்கு போன கொம்பனியில் இன்டர்வியூ பண்ணினவர்களை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு" " எந்த கொம்பனி?பெயரை சொல்லு?" "GoMaBa" "அவன்கள் தான்டா ஊரில பரணகொர்ட் வியாபாரம் செய்தாங்கள் இப்ப அவன்கள் பெரிய வியாரிகள் அவனின்ட தம்பி ஒருத்தன் ஆர்மியில் இருக்கிறான்" "அடகோதாரி " "நான் சொன்னான் தானே அவ‌ன்கள் உங்கட்ட நவீன வடிவான பொருட்களை தந்து போட்டு பாரம்பரிய விலையுயர்ந்த பொருட்களை எடுத்து கொண்டு விற்று பெரிய பணக்காரங்கள் ஆகிட்டாங்கள் கள்ள பயல்கள்" அவனும் சவுதி சென்று அங்கிருந்து அவுஸ்ரேலியா சென்று ,வருடங்கள் கழிந்தன ,தந்தையும் தாயும் மரணமடைந்து விட்டனர் .சிறிலங்கா செய்திகளை படிப்பதை நிறுத்தவில்லை ..சகோதரர்கள் ஒன்றிணைந்து சிறிலங்கா மாதவை தூக்கி பிடிப்பதாக வரும் செய்திகளை படித்து மகிழ்வது உண்டு திடிரேனே சிறிலங்கா மாதா ஆட்டம் கண்டதை தொலைகாட்சியில் காட்டினார்கள் .தொடர்ந்து இரண்டு மாதங்கள் தான் மக்களுக்கு உணவு,எரிபொருட்கள் வழங்க முடியும் என சொன்னார்கள் ,மக்கள் போராட்டத்தில் குதித்திருந்தனர். தொலைகாட்சியை பார்த்தபடியே கதிரையில் கண்ணயர்ந்துவிட்டான் குகன். கோர்ட் சூட் போட்ட ஒருத்தர் சைக்கிளில் சிறிலங்காவை சாக்கில போட்டு இரண்டு பக்கமும் தொங்க விட்டபடி "டொலர் இருக்கா டொலர்,தங்கம் இருக்கா தங்கம்,மருந்து இருக்கா மருந்து ,யுவான் இருக்கா யுவான்" என்று கத்தியபடி கடலில் இறங்கி கொண்டிருந்தார் திடுக்கிட்டு எழுந்தான்
  17. அதற்காக தான் உதயகம்பன் பிலா,விமல் வீரவம்சா,இன்னும் சில இடசாரிகளை வெளியனுப்பியதாக கதை அடிபடுகிறது ....அரசாங்கத்திலிருந்து இந்தியாவுக்கு எதிராக குரல் கொடுக்க முடியாது ....வெளியில் போய் இந்தியாவுக்கு எதிராக குரல் கொடுக்க சொன்னதும் ராஜ்பக்சா குடும்பமாம்....
  18. அருமை சுவியர் .... என்றும் தீராது மனிதனின் அதிகார பசி ஆக்கிரமிப்பு பசி ஆத்மீக பசி புகழ் பசி கெளரவ பசி இவை இருக்கும் வரை கொலை களம் நிரந்தரம்
  19. அதிலயும் சிவன் ஒரு படி மேல, உன்னில் என்னை தேடு என்று சொல்லி ஒதுங்கிட்டான்... தொடருமா? அவர் சொல்லவே இல்லை நான் வர மாட்டேன் வாசிக்க மாட்டேன்....நான் யாழ் வாரிசு ஆக்கும்🤣🤣
  20. இன்றைய லங்கா மாதவின் பரிதாப நிலைக்கு என்ன காரணம் என்பதை அழகாக எழுதியுள்ளீர்கள்
  21. என்ன தான் இருந்தாலும் 30 வயசில -ஹார்மோனியம் வாசிக்கும் பொழுது இருந்த வேகம் இப்பொழுது விரல்களுக்கு இல்லையே என உள் மனதில் ஒர் கவலை அவருக்கு எட்டி பார்த்திருக்கும்
  22. சத்தியமா அது ஒர் வல்லிய சோகமானு🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.