Everything posted by RishiK
-
மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் : உண்மைகளை உடன் வெளியிடுங்கள்; இல்லையேல், நீங்களும் ஊழல்வாதிகள்தான் - சுமந்திரன்
எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்!!!
-
அரசியல் கைதிகள் எவரும் சிறையில் இல்லை எனக்கூறுவார்களாயின் அவர்களை காணாமல் ஆக்கியது யார்?
சரி அரசியல் கைதி வேண்டாம், பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளை விடுதலை செய்யுங்கள்.
-
சிறுவர்களிடையே உடல்நலப் பிரச்சினைகள் அதிகரிப்பு ; வைத்திய நிபுணர் எச்சரிக்கை
பிள்ளைகளை நல்லாக வெய்யிலில் விளையாடவிடவும்.
-
தவறான உறவுக்காக கசையடி வழங்கிய பள்ளிவாசல் - 6 பேர் கைது, இலங்கையில் சம்பவம்
அடுத்தது தலை துண்டிப்புத்தான்
-
ஊழியர் சேமலாப நிதி கட்டப்படுவதில்லை; தொழில் திணைக்களத்தில் முறைப்பாடு - யாழில் தனியார் துறை ஊழியர்கள் பெரும் பாதிப்பு
இதனால்தான் எல்லோரும் அரசாங்க வேலை என்று பறக்கிறார்கள்.
-
ஜனவரி முதல் ஆரம்பிக்கப்படும் “தூய்மையான இலங்கை” வேலைத்திட்டம்!
போக்குவரத்துப் பொலிஸ் collection update ஏதாவது?
-
கொழும்பில் கட்டப்பட்டுவரும் பல மாடி ஆடம்பர ஹோட்டலிற்கும் இந்தியாவில் இடம்பெற்ற பாரிய பணமோசடிக்கும் தொடர்பா? இந்தியாவில் விசாரணைகள் ஆரம்பம்
கடைசியில் மகிந்தா குடும்பத்தில் வந்து நிற்கும்.
-
பொங்குதமிழ் மக்கள் பேரெழுச்சி பிரகடனத்தின் 24ஆம் ஆண்டு எழுச்சி நாள்!
அமைச்சர் சந்திரசேகரை பிரதம விருந்தினராக அழைக்க வேண்டும்.
-
மன்னார் நீதிமன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு; இருவர் பலி, இருவர் காயம்
இதை கதையாக வைத்து ஒரு படம் எடுக்கலாம் போல இருக்கே, அவ்வளவு ருவிஸ்ட்
-
"வளமான நாடு - அழகான வாழ்க்கை" உருவாக்குவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டத்திற்கு சீனா ஆதரவளிக்கும் - சீனப் பிரதமர் லி சியாங்
சொல்லாமல் சொல்லப்பட்ட விஷயங்கள்: 1. சீன மொழியைப் பாவனையை அதிகரித்தல். 2. சீனக் கரன்சியை பாவித்தல் 3. சீன மருத்துவம் 4.
-
யாழ். நாகர் கோவில் கடற்கரையில் ஒதுங்கிய மிதவையில் 18 புத்தர் சிலைகள்!
அந்த ஊரில் செத்தவீட்டுக்கு வைச்ச படையல் போலிருக்குது.
-
சீனாவுக்கு எதிரான எந்தவொரு செயற்பாடுகளுக்கும் இலங்கையை பயன்படுத்துவதற்கு இடமளிக்கமாட்டேன் - ஜனாதிபதி
நாங்களும் இந்தியாவை கைவிட்டு விட்டு சீனாவை நம்மட பிரச்சனையைத் தீர்க்க கேக்கலாம் என்றால் அதுக்குள்ள தாய்வான் பிரச்சனை ஒண்டு ஓடுது
-
இலங்கையில் இந்தி: முதலாவது திறந்த கற்கை நெறி ஆரம்பம்
கடைசியில் ஹிந்திப்படம் பார்க்க என்றாலும் உதவும்.
-
அநுரவின் சீன பயணத்தில் நடத்தப்பட்ட சந்திப்புகளும், எடுக்கப்பட்ட தீர்மானங்களும்
Basically வடக்கு, கிழக்கு இந்தியாவிற்கு, தெற்கு சீனாவிற்கு அப்ப நமக்கு?
-
கோட்டாபய சிஐடியில் ஆஜர்
வாழ்க்கை ஒரு வட்டம்
-
வடக்கு கடற்றொழிலாளர்களை ஏமாற்ற முயலும் அரசியல்வாதிகள் : டக்ளஸ் குற்றச்சாட்டு
இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் தொடர்பில் தமிழ்நாட்டு முதலமைச்சருடன் பேசப்போவதாக கூறி வடபகுதி கடற்றொழிலாளர்களை சில அரசியல்வாதிகள் ஏமாற்ற முயற்சிப்பதாக முன்னாள் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா(douglas devananda) குற்றம் சாட்டினார். தமிழ்நாட்டில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்(stalin) தலைமையில் இடம்பெற்ற அயலவர்கள் நிகழ்வில் பங்கேற்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இலங்கை - இந்திய கடற்றொழிலாளர்கள் தொடர்பில் முதலமைச்சரிடம் பேசாமை தொடர்பில் அவரிடம் கருத்து கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பங்கேற்றார்கள். குறித்த நிகழ்வில் இலங்கையிலிருந்து (sri lanka)சென்ற சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்பி எடுத்தமை சமூக ஊடகங்களில் வெளியாகியது. இலங்கை இந்திய கடற்றொழிலாளர் விவகாரம் பல வருடங்களாக பேசுபொருளாக இருக்கின்ற நிலையில் எல்லை தாண்டிய இந்திய கடற்றொழிலாளர்களை கட்டுப்படுத்துமாறு தமிழக முதல்வரிடம் நிகழ்வில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசியிருக்கலாம், ஆனால் அவர்கள் அவ்வாறு பேசியதாக தெரியவில்லை. வடபகுதி கடற்றொழிலாளர்களை ஏமாற்றும் நாடகம் குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தமிழக முதல்வருடன் கடற்றொழிலாளர்கள் விவகாரம் தொடர்பில் பேசுவதற்கு தயாராக இருப்பதாகவும் அதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளதாகவும் தெரிவித்திருந்தார். அவரது கருத்தானது வடபகுதி கடற்றொழிலாளர்களை ஏமாற்றும் ஒரு நாடகமாக நான் கருதுகிறேன். தமிழ்நாட்டில் தமிழக முதல்வரின் அருகில் அமர்ந்திருக்கும் போது கடற்றொழிலாளர்கள் விவகாரம் தொடர்பில் பேசி இருக்கலாம். அல்லது குறித்த நிகழ்வு முடிவடைந்த பின் தமிழக ஊடகங்களுக்கு இந்த கடற்றொழிலாளர்கள் விவகாரத்தில் உண்மைத் தன்மையை தொடர்பில் தெரியப்படுத்திருக்கலாம், ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. சந்தர்ப்பம் பார்த்து சாதித்தேன் நான் கடற்தொழில் அமைச்சராக இருந்தபோது இந்திய கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டுகின்ற பிரச்சினை தொடர்பில் இரு நட்டுகடற்றொழிலாளர்களையும் அழைத்து தமிழ்நாட்டில் பேசுவதற்காக தமிழக தலைவர்களுடன் பேசினேன். நேரில் பேசுவதற்கு நேரம் தருவதாக கூறினார்கள் துரதிஷ்டம் அதிகாரம் தற்போது என்னிடம் இல்லை. நான் தற்போது அதிகாரத்திலிருந்து குறித்த நிகழ்வுக்கு தமிழ்நாடு சென்று இருந்தால் தமிழக முதலமைச்சருடன் பேசி இரு நாட்டு கடற்றொழிலாளர்களையும் அழைப்பது தொடர்பில் முடிவு எடுத்திருப்பேன். இதையே நான் கூறுகிறேன் என்றால் எனது அரசியல் வரலாற்றில் தமிழ் மக்களுக்காக பல விடயங்களை சந்தர்ப்பம் பார்த்து பலவற்றை சாதித்திருக்கிறேன். உதாரணமாக கூற வேண்டுமானால் அறிவியல் நகர் பல்கலைக்கழகத்தை இராணுவத்தின் பிடியிலிருந்து விடுவிப்பதற்கு மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த போது அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவரிடம் பேசி சம்மதத்தை பெற்றேன். ஒருவேளை அறிவியல் நகர் பல்கலைக்கழகத்தை விடுவிப்பது தொடர்பில் பேசுவதற்கு நேரம் கேட்டிருந்தால் ஒரு வேளை அது நடைபெறாமல் போயிருக்கும். இது போன்ற பல உதாரணங்களை என்னால் குறிப்பிட முடியும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு இதை ஏன் நான் கூறுகிறேன் என்றால் தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களை அழிவு பாதைக்கு கொண்டு சென்றதும் அவர்களின் சுயலாப அரசியலுக்காக. போர் முடிவடைந்து 15 வருடங்கள் ஆகின்ற நிலையில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு இன்னும் கிடைக்கவில்லை அதற்கான பல சந்தர்ப்பங்கள் இருந்த போதும் அதனை தமிழ் அரசியல் தலைமைகள் பயன்படுத்தவில்லை. இப்போது இந்தியா கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய விவகாரம் வடபகுதி கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அதனையும் தமிழ் அரசியல்வதிகள் தமது சுயலாப அரசியலுக்காக பயன்படுத்தி வருகின்றார்கள். நான் அமைச்சராக இருந்தபோது வாருங்கள் இந்தியா சென்று கடற்றொழிலாளர்கள் விவகாரம் தொடர்பில் பேசுவோம் என்றேன் ஒரு சிலரை தவிர ஏனையவர்கள் மறுத்து விட்டார்கள். தேர்தலின் போது நான் பல ஆசனங்களை கேட்கவில்லை சில ஆசனங்களை எனக்கு தாருங்கள் மக்களின் அரசியல் அன்றாட பிரச்சனை மற்றும் அபிவிருத்தி என்பவற்றை தீர்த்து வைக்கிறேன் என வெளிப்படையாகவே கூறி வந்தேன். ஆனால் மக்கள் ஏதோ ஒன்றை நம்பி வாக்களித்து தற்போது ஏமாற்றம் அடையும் நிலையை எதிர்நோக்கி உள்ளனர் .சில தமிழ் அரசியல்வாதிகளுக்கு இந்திய கடற்றொழிலாளர்கள் விவகாரத்தை கையில் எடுத்தால் இந்தியா தம்மை பகைத்து விடும் மக்கள் என்ன துன்பத்தை அனுபவித்தாலும் பரவாயில்லை தமது இருப்பை தக்க வைக்க வேண்டும் என்ற நினைப்புடன் பயணிக்கிறார்கள். புதிய கடற்தொழில் அமைச்சரும் பேசவில்லை புதிய கடற்தொழில் அமைச்சரும் தமிழ்நாட்டில இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த நிலையில் அவரும் தமிழக முதலமைச்சருடன் பேசவில்லை. முதலமைச்சருடன் பேசாதது ஒருபுறம் இருக்க அந்த நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் வெளியில் காத்திருந்த தமிழக ஊடகங்களுக்கு முன்னால் தமிழக எல்லை தாண்டிய கடற்றொழிலாளர்களால் எமது வடபகுதி மீனவர்கள் படும் துன்பத்தை எடுத்து கூறி இருக்கலாம் அவ்வாறு கூறவில்லை. ஆகவே கடற்றொழிலாளர்களான மக்கள் சரியான தீர்மானங்களை சரியான இடங்களில் எடுக்காததன் விளைவு எதிர்காலத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுப்பதை தவிர்க்க முடியாது போகும் என அவர் மேலும் தெரிவித்தார். வடக்கு கடற்றொழிலாளர்களை ஏமாற்ற முயலும் அரசியல்வாதிகள் : டக்ளஸ் குற்றச்சாட்டு - ஐபிசி தமிழ்
-
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான காரியாலயத்தை திறந்த மொட்டுக்கட்சி
கொழும்பு - பத்தரமுல்லை, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான தகவல்களை முன்வைக்க புதிய காரியாலயம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் இந்த புதிய காரியாலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய காரியாலய திறப்பு விழாவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான காரியாலயத்தை திறந்த மொட்டுக்கட்சி - ஜே.வி.பி நியூஸ்
-
மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் : உண்மைகளை உடன் வெளியிடுங்கள்; இல்லையேல், நீங்களும் ஊழல்வாதிகள்தான் - சுமந்திரன்
என்னால் இன்னும் பொறுக்க முடியாது, நான் பாராளமன்றம் போகவேண்டும்.
-
"வளமான நாடு - அழகான வாழ்க்கை" உருவாக்குவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டத்திற்கு சீனா ஆதரவளிக்கும் - சீனப் பிரதமர் லி சியாங்
பிறகென்ன பெரியண்ணை பச்சைக் கொடி காட்டி விட்டார்
-
யாழில் செப்பு கம்பிகளுக்காக அறுக்கப்படும் தொலைபேசி இணைப்புக்கள்
பிறகுதான் தெரிஞ்சிருக்கும் பாலத்தையே கம்பி வைக்காமல் கட்டியிருக்கின்றாங்கள் என்று
-
மன்னார் நீதிமன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு; இருவர் பலி, இருவர் காயம்
இறந்தவர்கள் வழக்காளிகளா அல்லது சாட்சிகளா? குற்றவாளிகளாக இருக்க சான்ஸ் குறைவு
-
யாழில் செப்பு கம்பிகளுக்காக அறுக்கப்படும் தொலைபேசி இணைப்புக்கள்
இலட்சிய கள்வர்கள் புராதனமான செப்புக்கம்பி இணைப்புகளை விட்டு அலைபேசிக்கு மாறும்படி மக்களை அறிவூட்டுகின்றார்கள்.
-
யாழில் அதீத போதையுடன் இரு மாணவர்கள் கைது
கவலையான விடயம், ஆனால் சகல போதைவஸ்துகளையும்-மதுபானம் உட்பட- முற்றாக அழிக்க வழியுண்டா? “பழைய” சட்டங்களை கொண்டு வந்தால் சில வேலை நடக்கலாம்.
-
யாழ்ப்பாணத்தில் வேலையில்லா பட்டதாரிகள் வித்தியாசமான முறையில் போராட்டம்!
யாழில் வித்தியாசமானப் போரட்டமாகத்தெரியலாம் ஆனால் மேலை நாடுகளில் எம்மில் பலர் மொப் வாளியுடன் தான் வாழ்க்கையைத் தொடங்குகினார்கள், ஆனால் இன்று எட்டிப்பிடிக்க முடியாத இடத்தில் இருக்கிறார்கள்.
-
தேசிய மக்கள் சக்தியின் நிர்வாக காரியாலயம் வடமராட்சி கிழக்கில் திறந்துவைப்பு!
இலங்கை வங்கி முகாமையாளருக்கு அரசியல் கட்சி காரியாலத் திறப்பு விழாவில் என்ன வேலை?