Jump to content

விசுகு

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    34037
  • Joined

  • Last visited

  • Days Won

    113

Everything posted by விசுகு

  1. அதே. இது ஒரு இடியாப்ப சிக்கல். எந்த ஒரு தனி நபரோ நாடோ தனி முடிவுகளை எடுத்து தள்ளி நிற்க முடியாது. கூட்டு முயற்சியை விட்டு தனித்தலின் மறுபக்கம் அவர்களையே புதைத்து விடும். நேட்டோவில் கூட அவ்வாறு தான்.
  2. சண்டையை விரும்பாதவர் என்றால் பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வை தரச் சொல்லுங்க பார்ப்போம். ரசியாவை பிடிக்கும் ஆனால் ஈரானை அடிக்க வேண்டும்??
  3. யாரு? எனக்கு சண்டை பயிற்சியாளராகத்தான் டிரம்ப் அறிமுகமானார்.. ஐந்தில் வளையாதது ? தொட்டில் பழக்கம் ???
  4. அண்ணா இந்த பைத்தியம் வென்றதில் ஒரே ஒரு நிம்மதியான விடயம் இரண்டு பைத்தியங்களும் நண்பர்கள் என்பதால் பட்டினை அமுக்குவேன் என்று இனி பயமுறுத்த மாட்டார்கள்.
  5. கமலாவின் தெரிவின் போதே டிரம்ப் தான் வெல்வார் என்பது தெரிந்ததே. ஆனால் நான் டிரம்ப் ஆதரவாளர் இல்லை. அவர் ஒரு இனவாதி மரத்தில் இருந்தபடி மரத்தை தறிக்கும் வேலையை நான் ஒரு போதும் செய்வதில்லை. இவருடைய வெற்றி விரைவில் வேகமாக நாம் வாழும் நாடுகளுக்கும் பரவும்.
  6. நேரம் கிடைக்கவில்லை சிறி. நிச்சயமாக கேட்டு விட்டு எழுதுகிறேன். நன்றி. அழைப்புக்கு.
  7. செய்தவற்றை அமுக்க முடியாது. இனி செய்ய போவதில்லை என்பதனையும் நீங்க நம்பப் போவதில்லை. 🤣
  8. இதுக்கு தான் நான் அரசியலுக்கு வரவில்லை. ஒருத்தியை தொட்டதற்கே சீமான் படும் பாட்டை பார்த்தால் நாம....???🤣
  9. ஆம் அவர்களது வரிப் பணத்தில் ஆடம்பரமாக வாழ்ந்தபடி அனைத்தும் முடிந்ததும் தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திய பின்னர் சென்றது தப்பு தான். தண்டனைக்குரியது தான்.
  10. மூச்சு பேச்சை காணோம். நீங்க மடியில கை வைக்கலாமா? வேறு இடங்களில் வரட்டும் வகுப்பெடுக்க.....
  11. நல்ல விடயம் எமது பலத்தை நாம் தான் அறியாமல் தூங்குகிறோம். ஆனால் சிங்களத்துக்கு நன்றாக தெரியும் தான் மீள் வேண்டும் என்றால் அது தமிழாராலேயே முடியும் என்று. எனவே தான் முகங்களை மாற்றுகிறது. எனக்கு ஒரு கேள்வி. இதுவரை தமிழர் தலைமைகள் கிடைத்த துரும்பை பயன்படுத்தாது நாசம் செய்தார்கள் என்று தவளைக்கத்தல் கத்துபவர்கள் ஏன் இந்த துரும்பை பிடித்து நல்லது செய்ய முயலக் கூடாது. ????
  12. கத்தும் தவளைகள் எந்த செயலிலும் இறங்காதவை. கத்துவதைத்தவிர அவற்றின் பாகம் ஒன்றுமில்லை. எனவே செயற்பாட்டாளர்கள் மீது இவை வாயால் சேறு பூசுவதை அனுமதிக்க முடியாது. ஆயுதத்துக்கு தான் மௌனம். செருப்புக்கு இல்லை. எனவே......
  13. தலைவர் 70 ஆரம்பம் # தளங்களை தான் அழிக்கலாம் . தடங்களை அழிக்க முடியாது என்பதன் அடையாளம் இந்த படைப்பு. அப்படி நிகழ்ந்தால் இவ்வளவுக்கு தூண்டுகின்ற இயற்கை இந்த அற்புத எண்ணமும் திறமையும் உடைய படைப்பாளிகளிடம் ஐரோப்பா மட்டுமல்ல உலகெங்கும் பயணித்து படைப்பாக்கும் வல்லமையை கொடுக்கும். இயற்கை விடுதலை செயும் கடமையை செய் என்ற தலைவரின் தீர்க்கதரினத்தை அடித்துப்போட முடியாது . https://www.facebook.com/share/v/17f1cKCYYe/
  14. எது கோழைத்தனம்? பொது விடயங்கள் தொடர்பில் பேசப்படும் போது தனிப்பட்ட தனிநபர்கள் பற்றி பேசுவதா? அல்லது உயிரைக் கொடுத்து போராடிக் கொண்டு இருந்தபோது ஒளிந்திருந்து எல்லாம் வாங்கித் தருவோம் என்று முழங்கியதா? அழித்து விட்டும் மற்றவர்கள் மீது பழி போட்டு விட்டு வாழாதிருத்தலா?? நேர்மை என்றால் என்ன என்பது உங்கள் போன்ற பச்சோந்தி பரதேசிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது நெஞ்சை நிமிர்த்தி போராட்டத்தோடு நின்றவர்களுக்கு மட்டுமே உரித்தானது.
  15. புலிகள் வலிமையோடு இருந்தபோது அவர்கள் இல்லாதுவிட்டால் எல்லாம் தருவர் சிங்களவர்கள் என்ற கோஷ்டி இது. இன்று என்ன கிழிக்குது என்றால் கச்சையை யும் கழட்டி ஜேவிபி யிடம் கொடுத்தால் மட்டுமே எல்லாம் கிடைக்கும் தருவர் என்கிறது. தமிழரை ஒன்றுமில்லாமல் உரிச்சு விடும் பணி முடிவுற வேண்டும் அல்லவா.
  16. உண்மை தான் ஆனால் ரணில் நரி என்று இனம் காணப்பட்டவர். இவர்கள் இனவாதிகள் என்று மட்டுமே இனம் காணப்பட்டவர்கள்.
  17. சிங்களவனுக்கு காட்டி கூட்டிக் கொடுத்து உங்கள் போன்ற தீவிர சிங்கள தேசிக்காய்கள் தான் (வேசிக்காய் என்பதே பொருத்தம் என்றாலும் யாழ் களத்தின் நாகரீகம் கருதி அதனை தவிர்க்கிறேன்) இத்தனை அழிவுகளுக்கும் காரணம். இனி இங்கே சிங்கள தேசியக்காய் என்றே நீவீர் அழைக்கப்படுவீர்கள். (தமிழ் தேசிக்காய் என்பதை நிறுத்தும் வரை)
  18. உன்னை திருத்து உலகம் திருந்தும். மற்றவரை நோக்கி உன் சுட்டு விரல் நீளும் போது மற்ற நான்கு விரல்களும் உன்னை நோக்கி கூனி நிற்பதை மறக்காதே....
  19. அண்மையில் ஓவியம் ஒன்றை பார்க்க நேர்ந்தது. வடக்கு கிழக்கை தடை போட்டு பிரித்து விட்டு யாழில் ஒரு வீதியை திறந்து வாக்கை பெறும் அரசியல் செய்கிறது ஜேவிபி என்று.
  20. அடுப்பில் இருந்து நெருப்பில் விழுந்த மாதிரி தான். அங்கத்தவர் நாடுகளைப் பார்த்தாலே தெரியுது அத்தனையும் தம்மால் உருக்குலந்தவை.
  21. •தமிழ்செல்வன், லக்ஸ்மன் கதிர்காமர் இரண்டு கொலைகள், இரண்டு நியாயங்கள்! லக்ஸ்மன் கதிர்காமர் - இவர் ஒரு தமிழர். இவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இல்லை. இவரை நியமன எம்.பி யாக்கி இவருக்கு வெளிநாட்டு அமைச்சு பதவியை சந்திரிக்கா அரசு வழங்கியிருந்தது. சிங்கள ராணுவத்தால் பாலியல் வல்லுறவு செய்து செம்மணியில் புதைக்கப்பட்ட மாணவி கிரிசாந்தியை பயங்கரவாதி என்று கூசாமல் இவர் பொய் சொன்னார். இவர் சிங்கள அரசின் தமிழ் இனப்படுகொலைகளை உலகம் முழுவதும் சென்று நியாயப்படுத்தினார்.. அதாவது இவரை தமிழ் மக்களை அழிப்பதற்குரிய கோடரிக்காம்பாக சிங்கள அரசு நன்கு பயன்படுத்திக்கொண்டது. இவர் கொல்லப்பட்டபோது இலங்கை அரசு உட்பட பல சர்வதேச நாடுகளும் கண்டித்தன. ஒரு வெளிநாட்டு அமைச்சரை கொன்றது தவறு என்று அவர்கள் கூறினார்கள். ஆனால் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்செல்வன் தனது அலுவலகத்தில் தூங்கிக்கொண்டிருந்தபோது இலங்கை அரசால் விமானம் மூலம் குண்டு வீசிக் கொல்லப்பட்டார். தவறுதலாக தமிழ்செல்வன் மீது குண்டு போட்டுவிட்டோம் என இலங்கை அரசு வருத்தம் தெரிவிக்கும் என்று பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தவேளை “எமது இலக்கு தமிழ்செல்வனே. தெரிந்தே அவர் மீது குண்டு வீசிக் கொன்றோம்” என்று இலங்கை அரசு இறுமாப்பாக கூறியது. இங்கு எமது நோக்கம் இவர்களின் கொலை சரியா? பிழையா? என்று ஆராய்வதல்ல. மாறாக, கதிர்காமருக்கு ஒரு நியாயம். தமிழ் செல்வனுக்கு இன்னொரு நியாயம். இது என்ன நியாயம் ? என்று கேட்பதே. ஏனெனில் லக்ஸ்மன் கதிர்காமர் கொல்லப்பட்டபோது ஒரு வெளிநாட்டு அமைச்சரைக் கொன்றது தவறு என்று கண்டனம் தெரிவித்த எவரும் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டபோது பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஒரு அரசியல்துறை பொறுப்பாளரைக் கொன்றது தவறு என்று கூறவில்லை. சிலர் “தமிழ்செல்வன் அரசியல்துறை பொறுப்பாளராய் இருந்தாலும் அவரும் புலிதானே. எனவே அவரும் பயங்கரவாதிதான். அதனால் அவரை குண்டு வீசிக் கொன்றது சரிதான்” என்பார்கள். இப்படி கூறுபவர்களிடம் உரையாடுவதற்கு எதுவும் இல்லை. ஏனெனில் இவர்கள்தான் “பிரபாகரன் பயங்கரவாதி. எனவே அவரின் பத்து வயது மகன் பாலச்சந்திரனும் பயங்கரவாதிதான். எனவே அந்த சிறுவனைக் கொன்றதும் சரிதான்” என கூறிக் கொண்டிருப்பவர்கள். குறிப்பு - 02.11.2024 தமிழ்செல்வனின் நினைவுதினம் ஆகும். https://www.facebook.com/share/1D3FdYuaXx/
  22. வாக்குப் பிச்சை ****************** அண்மையில் வேட்பாளர் ஒருவருடனான நேர்காணலில் உங்கள் கட்சி எது? உங்கள் வேட்பாளர் இலக்கம் என்ன? என்று எதுவுமே தெரியாதிருக்கிறது. எப்படி மக்கள் உங்களுக்கு வாக்களிப்பார்கள்? என்ற கேள்விக்கு 'எனக்கு வாக்களியுங்கள்' என்று கேட்பதற்கு கூச்சமாக இருக்கிறது. அது என்னுடைய வேலை அல்ல என்று பதிலளித்திருந்தார். மேலும் அவர், நான் அரசியலுக்குப் புதிது. என்னை ஒரு கட்சியினர் அணுகினார்கள். அவர்கள் கேட்டபோது முதலில் நான் தயங்கினேன். மறுத்தேன். நீங்கள் என்னைத் தெரிவுசெய்ய என்ன காரணம்? என்று அவர்களிடம் எதிர்க்கேள்வியைக் கேட்டேன். உங்கள் தொடர்ச்சியான சமூகப்பணியும், உங்கள் நேர்மையும் உங்கள்மீதான மதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் உங்களை அணுகியிருக்கிறோம் என்றனர். அரசியல் எனக்குப் புதிது. இவ்வளவு நாளும் இல்லாத வில்லங்கம் புதிதாய் ஏன் என்று ஒரு கேள்வி என்னுள் எழுந்தது. ஆயினும், கட்சியின் கொள்கைகளும்;, செயற்பாடுகளும் எனக்கு நெருக்கமாய் இருந்தன. என்னால் மறுக்கமுடியவில்லை. மக்கள் என்னுடைய கடந்தகால செயற்பாடுகளை கவனம் கொண்டு, திருப்தியாயிருந்தால் வாக்களிக்கட்டும்!! அது அவர்களின் பிரச்சினை. நானும் அவர்களில் ஒருவரே! மற்றும்படி, நான் உங்கள் வாழ்வை மேம்படுத்துகிறேன். உங்களுக்காகவே என் உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணிக்கிறேன் என்று வாக்குப்பிச்சை கேட்க எனக்குச் சங்கடமாக இருக்கிறது என்றார். இன்னமொரு சாதாரண பிரஜையை அணுகியபோது, இந்தத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்று சங்கடமாக இருக்கிறது. எல்லாரும் பச்சைக் கள்ளர். ஒருத்தரையும், ஒரு கட்சியையும் நம்ப முடியாதென்றார். நல்ல மண்ணில்தான் நல்ல பயிர் வளரமுடியும். நல்ல சமூகத்திடமிருந்துதான் நல்ல தலைவர்கள் உருவாக முடியும். சமூகத்தில் நாமும் ஓர் அங்கம் என்பதைப் பலரும் மறந்துவிடுகிறோம். 2.11.2024 https://www.facebook.com/share/1DYZffexAg/
  23. நீங்க வேற. மில்லியன் என்று போடுவதே அது வேற லெவலில் மக்களால் பார்க்கப்படும் பேசப்படும் என்ற அரசியல் தானே? நான் இந்த விளையாட்டுக்கு வரலை ராசா. சும்மா உங்களுக்கு பிடிக்கு நானும் உங்களுடன் சேருகிறேன் என்று இங்கே எழுதினால் பல வருடங்களுக்கு பிறகும் வைத்திருந்து தூக்கி கொண்டு வந்து செய்வார்கள் இங்கே. 🤣
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.