Everything posted by விசுகு
-
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!
வணக்கம் செலுத்துபவர்களிடமும் சரி செலுத்த வேண்டாம் என்று சொல்பவர்களிடமும் சரி இருக்கிறார் என்று சொல்பவர்களிடமும் சரி இல்லை என்று சொல்பவர்களிடமும் சரி நிரூபிக்க தகுந்த எந்த ஆதாரமும் இல்லை. எனவே கண்டதை சொல்லி மக்களை ஏமாற்றாமல் மக்களின் தெரிவு எதுவோ அவர் அதுவாகவே இருக்கட்டுமே.
-
ரஷ்யாவில் நிலநடுக்கம்: அமெரிக்கா, ஜப்பானுக்கும் சுனாமி எச்சரிக்கை - ஃபுகுஷிமாவில் என்ன நடக்கிறது?
ரசியாவில் நடுங்கினா அமெரிக்கா ஜப்பானில் மக்கள் ஓடுகிறார்கள். இதில் நான் பெரிசு நீ பெரிசு நாங்கள் தான் வீரர்கள் என்றபடி...
-
நாமலுக்கு எதிராக பிடியாணை உத்தரவு!
இங்கே தான் கிடக்கிறார்கள். ஆனால் உங்களுக்கு பதில் வராது
-
புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது
இதைத் தான் ஆரம்பத்திலேயே நான் குறிப்பிட்டேன்
-
புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது
ஒரு தவறை சுட்டிக்காட்ட ஒரு பண்பு இருக்கிறது. அது உங்கள் சுட்டிக்காட்டலில் அறவே இல்லை. தவறை சுட்டிக்காட்டுவதை விட அதை வைத்து ஒருவரை கோபப்படுத்துவது அல்லது குத்திக் குத்திக் காட்டுவது அல்லது சறுக்கி விட்டார் என்பதை வைத்து அவரது தேசியம் சார்ந்த பக்கத்தை பந்தாடுவது மட்டுமே இங்கே நான் காண்பது. யாழ் களத்தை அறிவூட்டுகிறோம் அல்லது தவறை சுட்டிக்காட்டி நேர்வழிப்படுத்துகிறோம் என்றபடி யாழில் தற்போது படித்தவர்கள் என்ற ஒரு சிலரது கம்பு சுத்துதல் மட்டுமே என்னால் காணக்கிடைக்கிறது. அதனால் தான் நானே யாழை விட்டு தள்ளிச்சென்று கொண்டிருக்கிறேன். இது தொடர்வதை காண்கிறேன். என் கண்முன்னே இது நடப்பதால் ஒரு அளவுக்கு மேல் கடந்து செல்ல முடியவில்லை
-
புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது
என்னுடைய கோபம் அதுவல்ல. இந்த சிறிய கணக்கு சிறிக்கு தெரியாது அல்லது வேண்டும் என்றே செய்யக்கூடியவர் சிறி என்கிற உங்கள் கலாய்ப்பு தான். இது இரண்டுமே தவறு.
-
புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது
நீங்கள் வேற.. இப்பொழுதெல்லாம் யாழில் ஆராய்ச்சி மட்டுமே நடக்கிறது. அவை கருத்தாளரின் (மங்கிய) மூளை வளர்ச்சி கணக்கில் அவரது தராதரம் அவர் பார்க்கும் படிக்கும் பத்திரிகை மற்றும் பார்க்கும் தொலைக்காட்சி சார்ந்த மட்டமான அறிவுரை அதையும் தாண்டி விட்டால் தேசியப்பற்றாளர் என்று நளினம். 😡
-
ஈழத்தமிழர்களின் அரசியற் தலைவரான சம்பந்தனின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது
என்னை பொறுத்தவரை, என் அனுபவத்தில் அவர் ஒரு வெற்றிடத்தை மிகவும் சுயநலமாக ஆனால் மிகவும் அளவுக்கு அதிகமாக பயன் படுத்தி கொண்டார். அதுவே அவரது சாணக்கியம்.
-
மேலும் 40 நாடுகளுக்கு விசா விலக்கு!
அப்படியே இலவசம் என்று போட்டு விடலாமே... இனி எந்த நாடு தான் பாக்கி???
-
ஈழத்தமிழர்களின் அரசியற் தலைவரான சம்பந்தனின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது
ஒன்றுமே செய்யாது இருப்பதும் நன்மை பயக்கும் என்கிறார். அப்படியானால் சாணக்கியர் என்பது.....??
-
சங்கிலியுடன் எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழைந்தவர் மரணம் - நொடி நேரத்தில் எந்திரத்துக்குள் இழுத்த காந்தபுலம்
நன்றி சின்மயி....😛
-
ஐரோப்பாவில் விமானி உரிமம் பெற்ற மன்னார் இளைஞன்!
1- ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான மகிழ்ச்சி சந்தோசம் திருப்பி மற்றும் சந்ததி பற்றிய தூர நோக்கு இருக்கும். எனது சந்ததி விருத்தி சார்ந்த பயமே அவனை தடுக்க காரணம் 2- அது பரதேசி வாழ்க்கை அல்ல அது வேறு ஓர் வாழ்க்கை பரிமானம். எமது அடுத்த அடுத்த தலைமுறை அதற்குள் தான் பயணிக்கும். என்னால் முடிந்த வரை ஒரு தலைமுறையை தள்ளிவிட்டு உள்ளேன். அவ்வளவு தான்.
-
ஐரோப்பாவில் விமானி உரிமம் பெற்ற மன்னார் இளைஞன்!
எனது இரண்டாவது மகன் இதில் பறக்க விரும்பி படிக்க கேட்டான். மறுத்து விட்டேன். அதற்கு நான் சொன்ன காரணம் அவனுக்கு அதிசயமாக இருந்தது. அப்பா இப்படி எல்லாமா யோசிப்பீங்க என்றான். இப்பொழுது வேறு துறையில் படித்து குடும்பம் குழந்தை என்று நல்ல நிலையில் உள்ளான். இப்ப அப்பா அன்று சொன்னது சரி என்று உணர்ந்து உள்ளான். நான் சொன்னது : விமானிகளுக்கு குடும்பம் பிள்ளை குட்டிகள் சரிவராது. நீ படித்து திருமணம் செய்து பேரப் பிள்ளைகளை பெத்து தரும் எல்லைக்குள் இருந்தால் போதும் என்பது.
-
இனக்கலவரம் யூலை 1983 - ஒரு சாட்சி
இனக்கலவரம் யூலை 1983 - ஒரு சாட்சி ஆமர்வீதிச்சந்தியில் கீழே அண்ணரின் உணவகம் மேலே நாலாம் மாடியில் எனது வசிப்பிடம். யூலை 23 இல் தெற்கின் பல பாகங்களிலும் கலவரம் உச்சமடைந்த போதிலும் இதன் முன்னர் பல இனக் கலவரங்கள் வந்தபோதிலும் எமது உணவகமோ எமது கட்டிடமோ தாக்கப் பட்டிருக்கவில்லை என்ற அதீதமான நம்பிக்கை கைகொடுக்க யூலை 24 அதிகாலை வரை நாம் இருப்பிடத்தில் இருந்து நடப்பவைகளை அவதானித்தபடி.... யூலை 24 அதிகாலையில் மொட்டை மாடியில் நின்றபடி பார்த்தபோது தெமட்டகொட பக்கமாக இருந்து சில குழுக்கள் (அநேகமான பதின்ம வயதினர்) வீதியில் இருந்த தமிழ் கடைகளை உடைத்தும் நெருப்பு வைத்தபடியும் ஆமர்வீதி சந்தி நோக்கி வந்து கொண்டிருந்தனர். ஆனாலும் எமக்கு எந்த பயமோ பதட்டமோ ஏற்படவில்லை. காரணம் எமக்கு கீழே ஆமர்வீதி சந்தியில் இருந்து பொலிஸ் நிலையம் வரை வீதியின் நடுவில் 30க்கும் மேற்பட்ட ஆயுதம் தாங்கிய காவல்துறையினர் காவலில் இருந்தனர். அத்தனை பேரும் தெரிந்தவர்கள் அனைவரும் எமது உணவக இலவச வாடிக்கையாளர்கள். ஆமர்வீதிச்சந்தியில் இருந்து ஒரு நூறு மீட்டர் தூரத்தில் குழுக்கள் வந்து கொண்டிருந்த போது அவர்கள் எம்மை நோக்கி வர வழி விடும்படியாக காவலுக்கு நின்ற காவல் துறையினர் திரும்பி செல்ல திரும்பி காவல் நிலையம் நோக்கி நகரத் தொடங்கிய போது தான் நெஞ்சு சுவாசம் ஓங்கி அடிக்க தொடங்கியது. தப்பி ஓடக்கூட நேரம் சுருங்கி விட்டிருந்தது. நாலாம் மாடியில் இருந்து கீழே இறங்கி வருகிறோம் கீழே இரும்பு கதவை உடைத்து தோற்ற கூட்டம் முதலாம் மாடிக்கு பெற்றோல் குண்டுகளை வீசிக் கொண்டிருக்கு அங்கே தீப்பிடிக்க ஆரம்பிக்கிறது.. முதலாம் மாடியின் பின் புறத்திற்கு ஓடி வருகிறோம் அருகில் இருந்த மரக்கடை எரியத் தொடங்கி இருந்தது. உடுத்தியிருந்த சறம் மற்றும் சேட்டை சிங்களவன் அணிவது போல் மாற்றி கட்டியபடி எங்கள் முதலாம் மாடியில் இருந்து பக்கத்து வீட்டு கூரைகளின் நடந்து பின்னால் இருந்த சிங்கள பாடசாலைக்குள் குதித்து அதே குழுக்களுடன் கலந்து வெளியேறி இன்று உயர் வாழ்கிறேன். ஆனாலும் எப்படி தப்பினேன் என்பது இன்றும் அதிசயமாகவே...... அன்று தெரிந்து கொண்டவை. இது எனது நாடல்ல இது எனது அரசல்ல இது எனது காவல்படை அல்ல. சிங்களவர்கள் எமது சகோதரர்கள் அல்ல.
-
புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது
புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர் என்பதால் அவரை அவர்களே இருக்கமுடியும். அதற்கான பயிற்சி மற்றும் செயற்பாடுகள் அங்கிருந்தே தொடங்கி இருக்கவேண்டும்.
-
ஐரோப்பாவில் விமானி உரிமம் பெற்ற மன்னார் இளைஞன்!
டென்மார்க் காரர் இப்போது பேனையை தூக்கி எறிந்து பிடித்து செய்தி வாசிப்பதில் பிசியாக இருக்கிறார்🤣 அவரது குறும்படம் ஒன்றின் தெரிவின் போது அவருக்கு பலமாக குட்ட வேண்டியதாயிற்று. அப்புறம் வரதரின் மகளும் தான் தான் முதலாவது ஈழத்து விமானி என்று சொன்னதாக ஞாபகம்.
-
சங்கிலியுடன் எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழைந்தவர் மரணம் - நொடி நேரத்தில் எந்திரத்துக்குள் இழுத்த காந்தபுலம்
அந்தாள் அப்பாவி மனைவி சொல் தட்டாமல் பழகிவிட்டது. என்ன செய்யும்?🤣
-
ஐரோப்பாவில் விமானி உரிமம் பெற்ற மன்னார் இளைஞன்!
நானும் இதனை கவனித்தேன் ஆனால் சான்றோன் எனக்கேட்ட தாய் என்று கடந்து சென்றேன் .
-
பொருளாதார ரீதியில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியல் வெளியானது!
ஏன் சுவிட்சர்லாந்து மற்றும் நோர்வே இதில் இடம் பெறவில்லை. ரசியா???🤣
-
முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை.. அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட புதிய அறிக்கை
அப்பலோ தனது வேலையை சரியாகவே செய்து முடிக்கும். நல்ல செய்திக்கு இடமுண்டு.
-
கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்!
இவர் எம்ஜிஆர் சாயல் கொண்டவர். எல்லாம் அந்த புரட்சிக்கே வெளிச்சம்.
-
பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்துக்கு தந்தையின் பெயர் அவசியமில்லை ; அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்
ஒரு காலத்தில் இவை தேவையானவையாக இருந்திருக்கலாம். ஆனால் இன்று பிள்ளை பெற்றுக் கொள்ள மணம் முடித்து இருக்கவேண்டிய அவசியமில்லை என்பதும் அதற்கும் மேலாக பிள்ளையின் தகப்பனாரின் தகவல்கள் தாய்க்கே தெரிந்து இருக்க வாய்ப்பில்லை என்றாகிவிட்ட நிலையில்...?
-
மூளாயில் பதற்றம் : இரு குழுக்களிடையே மோதல்; பொலிஸார் துப்பாக்கிச் சூடு
அடுத்தது கொலை தானே...
-
குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்
1- அவர்களை குப்பை என்றபடி சுமந்திரனினை குண்டுமணியாக்கும் பணிக்கான எனது கருத்து மட்டுமே. 2- பட்டறிவே பாடம் 3- உலகெங்கும் முக்கியமாக கனடாவில் அவருக்கான ஒருமித்த ஆதரவு இருக்கிறது வெளிக்கொண்டு வர பட்டிருக்கிறது. ஆனால் முள்ளில் விழுந்த சேலையின் நிலை....
-
குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்
தமிழ் எம்பி மட்டுமல்ல அவர் ஒரு கட்சியின் அதிமுக்கிய தலைவர். ஆனால் நான் தொடர்ந்து சொல்வது தான் இது போன்று தலைவர்கள் மக்கள் பணிகள் மூலம் இனம் காணப்பட்டு மக்கள் பிரதிநிதிகளாக வரணும். கரி ஆனந்தசங்கரி ஒரு தேசிய வாதி. முரண்பட்ட இரு தேசங்களை கையாளும் போது....,?