-
Posts
32973 -
Joined
-
Days Won
268
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by nedukkalapoovan
-
சர்வ தேசியவாதி க. பத்மநாபாவின் சிலை திறப்பு!
nedukkalapoovan replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
12 வருடங்களுக்கு முன் எழுதியது.... WEDNESDAY, JULY 20, 2011 ஸ்தூபி அரசியல்..! இலங்கைத் தீவு பிரித்தானிய காலனித்துவத்தில் இருந்து 1948 இல் விடுபட்டது முதல்.. ஸ்தூபி அரசியல் என்பதே தமிழர்களின் உரிமையாகி இருந்தது.சந்திகள் தோறும்.. சிங்கள அரசிடம் கெஞ்சிக் கூத்தாடி.. பாரதிக்கு.. வள்ளுவனுக்கு.. ஒளவையாருக்கு.. சிலை அமைப்பதே அன்றைய பொழுதுகளில் தமிழர்களின் தலையாய அரசியல் உரிமையாக காண்பிக்கப்பட்டு வந்தது. அவை பெரிய அரசியல் வெற்றியாகவும் கொண்டாடப்பட்டு வந்தன. 1972 இல் தோன்றிய போராளி அமைப்புக்கள்.. குறிப்பாக விடுதலைப்புலிகள்..1986 முதல்.. ஆயுத வழியில் சிங்கள இனவாத இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கியது முதல் இந்த ஸ்தூபி அரசியல் என்பதை சிங்களமும்.. சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஒத்தூதும் சிறுபான்மை ஆயுத அரசியல் குழுக்களும் கைவிட்டிருந்தன. இப்போ முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னர்.. மிகக் கொடிய.. இனப்படுகொலையின் பின்னர் மீண்டும் இந்த ஸ்தூபி அரசியலே தமிழர்களின் அடிப்படை உரிமையாகி நிற்கிறது. வடக்குக் கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் சுயநிர்ணய உரிமையுடன் சுயாட்சி அதிகாரம் கேட்ட மக்கள்.. இன்று இந்திய சீன மற்றும் சர்வதேசத்தின் திட்டமிட்ட இராணுவத் தீர்வின் திணிப்பால்.. சிங்கள இனவாத ஆக்கிரமிப்புக்குள் கொண்டு வரப்பட்டு.. ஒரு சிலைக்கு உரிமை கேட்டு கெஞ்சும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 1986 இல் சிங்களப் படைகள் முழுவதுமாக முகாம்களுக்குள் முடக்கப்பட்டது முதல் தமிழ் மக்களின் வாழ்விடங்கள் பூரணமாக சிங்கள ஆளுகைக்குள் இருந்து விடுவிக்கப்பட்டன. அதன் பின்னர் மக்கள் தமதுக்கு வேண்டிய வடிவில் தமது அரசியல் அபிலாசைகளை வெளியிட்டு வந்ததோடு தமக்கு விரும்பிய இடங்களில் போராட்ட நினைவிடங்களை ஸ்தூபிகளை மாவீரர் இல்லங்களை மக்கள் நினைவிடங்களை அமைத்து வந்தனர். அவை அரசியலுக்கு அப்பால் மக்களின் அடிப்படை உணர்வியல், பண்பியல் மற்றும் கலாசாரம் சார்ந்து எழுந்து நின்றன. ஆனால்.. 1990 களில் கிழக்கின் பெரு நகரங்களும் வவுனியாவும்.. 1995ல் யாழ் குடாவும் 2006 இல் கிழக்கின் இதர பகுதிகளும்.. 2009 இல் வன்னி உட்பட தமிழர்களின் தாயகப் பிரதேசங்கள் சிங்கள இராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பின்னர் தமிழ் மக்களின் உணர்வியல் சார்ந்து எழுந்து நின்ற நினைவிடங்கள்.. ஸ்தூபிகள்.. மாவீரர் இல்லங்கள்.. மக்கள் நினைவிடங்கள் யாவும் திட்டமிட்டு அழிக்கப்பட்டு விட்டன. மிஞ்சி இருக்கும் தமிழர்களின் வரலாற்றியல் தொன்மை மிக்க சிலைகளையும் அகற்றி வருவதோடு மறு சீரமைப்பு என்ற பெயரில் அவற்றின் தொன்மைகள் அடையாளம் இழக்கச் செய்யப்படுகின்றன. இது தமிழர்களின் வரலாற்றியல் சான்றுகளை அவர்களின் சொந்த நிலத்தில் இருந்து அழிப்பதனை நோக்காகக் கொண்டிருப்பதோடு.. வடக்குக் கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் என்ற கோரிக்கைக்கு ஆதாரம் இல்லாத நிலையை உருவாக்கும் தொலை நோக்கோடு சிங்களமும் அதன் இராணுவமும்.. அதற்கு துணை போய் அவற்றின் தயவில் வாழும் அரசியல் செய்யும் தமிழ் ஆயுதக் கும்பல்களும்.. சில மிதவாத சிங்கள சார்ப்பு தமிழ் அரசியல்வாதிகளும் உதவி வருகின்றனர். குறிப்பாக வன்னியில் இருந்த வன்னியின் கடைசி மன்னனான பண்டாரவன்னியனின் நினைவிடம் 2009 இற்குப் பின்னர் திட்டமிட்டு அழிக்கப்பட்டது. தற்போது யாழ்ப்பாணத்தின் கடைசி தமிழ் மன்னனாக விளங்கிய சங்கிலியனின் சிலையும் அதன் தொன்மை இழக்கும் நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. அதனை காப்பது என்பதே இன்றைய யாழ்ப்பாண அரசியல் என்றாகி நிற்கிறது. இந்த இழுபறிக்குள் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை காட்சிகள் வெற்றிகரமாக மறைக்கப்பட்டு வருகின்றன. சனல் 4 செய்திகள் முக்கியமிழக்கச் செய்யப்படுகின்றன. அதுமட்டுமன்றி.. தமிழர் தாயகப் பகுதிகள் எங்கனும்.. புதிதாக சிங்கள பெளத்த அடையாள சின்னங்கள் கட்டி எழுப்பப்பட்டு வருகின்றன. புத்த விகாரைகள்.. சிங்கள இராணுவ வெற்றி நினைவிடங்கள்.. நிரந்தர சிங்கள இராணுவ படை முகாம்கள்.. இராணுவக் குடியிருப்புக்கள்.. என்று சிங்கள பெளத்த சின்னங்களும் குடியேற்றங்களும் பல்கிப் பெருகி வருவதோடு.. சிங்கள ஆட்சியாளர்களுக்கு துதிபாடிய தமிழ் தலைவர்களான அல்பிரட் துரையப்பா போன்றவர்களை நினைவு கூறவும் சிங்களம் தவறவில்லை. சிங்களச் சிறீலங்காவின் சுதந்திரத்திற்குப் பின்னான 68 ஆண்டு கால அரசியல் தவறுகளில் இருந்து சிங்களம் ஒரு சிறு வரியைத் தானும் கற்றுக் கொண்டுள்ளதாகத் தெரியவில்லை. மீண்டும் மீண்டும் அதே தவறுகளை இழைத்துக் கொண்டிருக்கிறது. அதேபோல் தமிழர்களில் ஒரு பகுதியினர் மீண்டும் மீண்டும் சிங்களம் தவறிழைக்க அதற்கு உதவி வருவதோடு இணக்க அரசியல் மூலம் தமிழ் மக்களுக்கு விடிவு கிடைக்கும் என்ற போலிப் பரப்புரைகளையும் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். சிங்களத்தோடு தமிழர்கள் 1948 இற்கு முன்பிருந்தே இணக்க அரசியல் செய்து வருகின்றனர். ஆனால் இன்று வரை அதனால் தமிழர்கள் அடைந்த பலாபலன் என்பது இனக் கலவரங்களும் இனப்படுகொலைகளும்.. சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புமே ஆகும். வடக்குக் கிழக்கு மட்டுமன்றி மலையகத் தலைமைகளும் இணக்க அரசியல் மூலம் மலையக மக்களுக்கு விடிவை பெற்றுக் கொடுக்கலாம் என்று கனவு கண்டிருந்தனர். ஆனால் சிங்களத்துடனான இணக்க அரசியல் மூலம் மலையக மக்களின் குடியுரிமை.. வாக்குரிமையைக் கூட பெற்றுக் கொள்ள முடியவில்லை. இறுதில் வடக்குக் கிழக்கில் ஆரம்பித்த ஆயுதப் போராட்டக் காரணிகளே அவர்களுக்கு குடியுரிமையும் வாக்குரிமையும் பெற்றுக் கொடுத்தன. அந்த வகையில் இன்றைய ஸ்தூபி அரசியல் என்பது சிங்களத்தின் தமிழ் மக்களை ஏமாற்றும் ஒரு வழிமுறை மட்டுமன்றி தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை சிறுமைப்படுத்தும் ஏளனப்படுத்தும் வகையிலும் அமைந்திருக்கிறது. மகிந்த ராஜபக்ச அரசோடு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பல சுற்றுப் பேச்சுக்களை நடத்திய போதும்.. பேச்சு வார்த்தை ஆரம்பித்த அடிப்படையில் இருந்து எந்த முன்னேற்றங்களும் எட்டப்படாத நிலையில் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை சிங்களம் உள்ளூராட்சி மன்றங்களுக்குள்ளும்.. மாகாண சபைகளுக்குள்ளும்.. சங்கிலியன் சிலைகளுக்குள்ளும் அடக்கி விடச் செய்திருக்கிறது. சங்கிலியன் சிலை இன்று இலங்கைத் தீவின் தீவிர அரசியலாகி நிற்பதற்குக் காரணம் இதுவே ஆகும். சிங்கள பேரினவாத கட்சிகள் இரண்டும்.. இந்த விவகாரத்தை தமது சிங்கள மேலாதிக்க அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப பயன்படுத்த விளைகின்றன என்பதை ரணில் விக்கிரமசிங்க சங்கிலியன் சிலை தொடர்பில் வெளியிட்ட கருத்துக்களும்.. சிங்கள பேரினவாதக் கட்சியான சுதந்திரக் கட்சியோடு ஐக்கியமாகி விட்டுள்ள ஆயுத சன நாய் (நாய்களைச் சுட்டுப்போடும் சன நாய் அகமும் இப்போ ஆரம்பிக்கப்பட்டுள்ளது.) கட்சியான ஈபிடிபி சார்ந்த யாழ்ப்பாண மேயரின் கருத்துகளும் சான்று பகர்ந்து நிற்கின்றன. சாவுக்கு அஞ்சாது சொந்த மண்ணை மீட்டு வந்த தமிழர்கள்.. இன்று சங்கிலியன் சிலைக்காக இரஞ்ச வேண்டி இருக்கும் நிலையை ஏற்படுத்தியதில் இந்தியா மற்றும் சர்வதேசத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்கு இருக்கிறது. அண்மையில் தமிழகத்தில் ராஜீவ் காந்தியின் சிலையை யாரோ உடைத்து விட்டார்கள் என்பதற்காக காங்கிரஸ் கட்சியினர் பெரிய கலவரம் ஒன்றையே தூண்டி விட்டனர். அதுமட்டுமன்றி சில தினங்களுக்கு முன்னர் யாரோ சென்னையில் சோனியாவின் கட்டவுட்டை கொழுத்தி விட்டனர் என்று காங்கிரஸ் கட்சியின் தங்கபாலு கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால் இதே காங்கிரஸ் கட்சியின் முழு ஆதரவோடு நடத்தப்பட்ட சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பு ஈழத்தமிழர்களின் பாரம்பரிய வரலாற்றியல் அடையாளங்களையே சீரழிக்கின்ற போதும்.. அதையிட்டு எவரும் கவலைப்படுவதாகவோ கருத்துச் சொல்வதாகவோ.. கண்டிப்பதாகவோ இல்லை. இதுவும் சிங்களம் தான்தோன்றித்தனமாக தமிழர்களின் தொன்மைகளை பல வழிகளிலும் அழிக்கவும்.. தனது சிங்கள பெளத்த மேலாதிக்கத்தை இலங்கைத் தீவில் நிறுவவும்.. இனத் துருவமயமாக்கலை துரிதப்படுத்தவும்.. தமிழர்களை சிறுகச் சிறுக அழித்து விரட்டியடிக்கவும்.. முழு இலங்கைத் தீவையும் சிங்கள பெளத்த நாடாக பறைசாற்றவும் வழி சமைத்து வருகிறது. இலங்கைத் தீவு சிங்கள பெளத்த நாடாவதில் வட இந்திய ஆளும் வர்க்கத்திற்கும் தென்னிந்திய தமிழர்கள் அல்லாத திராவிட வர்க்கத்திற்கும் நன்மை இருக்கிறது. வரலாற்றியல் ரீதியில் தென்னிந்தியா என்பது சேர சோழ பாண்டியர் என்ற தமிழ் முப்பெரும் மன்னர்கள் ஆண்ட பகுதி ஆகும். தென்னிந்தியாவில் தமிழர்கள் மட்டுமே தனித் தமிழ் நாடு என்ற பிரிவினைவாத நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர். அந்த நிலைப்பாடு இன்றும் ஆங்காங்கே கனன்று கொண்டு தான் உள்ளது. அப்படியான ஒரு நிலையில் ஈழத்தில் தமிழர்கள் இராணுவ ரீதியில் பலம் பெற்று தமக்கென ஒரு தேசத்தை நிறுவி விட்டால்.. தணிந்து போன தனித் தமிழ் நாட்டுக் கோரிக்கை இந்தியாவின் தென் கோடியில் முளைக்க ஆரம்பிக்கலாம் என்பது வட இந்திய ஆளும் வர்க்கத்தின் பலமான நம்பிக்கை. இந்தியாவின் தென்கோடி என்பது இன்றைய பூகோள இராணுவ மற்றும் பொருண்மிய ரீதியில் இந்தியாவிற்கு குறிப்பாக வட இந்திய இந்தி பேசும் ஆளும் வர்க்கத்திற்கு முக்கியமான ஒன்று. தென்னிந்தியாவே இன்று இந்தியாவின் இராணுவ.. வான்படை. கடற்படை கேந்திர ஸ்தானமாக மாறி இருக்கிறது. வட இந்தியப் பகுதிகளை நோக்கி பாகிஸ்தானும் சீனாவும் எண்ணற்ற ஏவுகணைகளை நிறுத்தி வைத்துள்ள நிலையில் இந்திய ஏவுகணை எதிர்ப்புத் திட்டத்திற்கு முகம் கொடுக்கக் கூடிய தொலைவில் தென்னிந்தியா இருப்பதால்.. தென்னிந்தியாவே இன்று ஒட்டு மொத்த இந்திய தேசத்தின் பாதுகாப்புக் கவசமாக மாறியுள்ளது. அந்த வகையில் தான் ஆட்ட ஆடக் கூடிய அல்லது ஆட்டி வைக்கக் கூடிய ஒரு சிங்கள ஆட்சித் தலைமையின் கீழ் முழு இலங்கைத் தீவும் சிங்கள மயமாவதில் வட இந்திய ஆளும் வர்க்கம் மகிழ்ச்சி அடையவே செய்யும். வட இந்திய ஆளும் வர்க்கத்தின் அந்த மகிழ்ச்சி என்பது வட இந்திய ஆளும் வர்க்கத்தோடு.. இணக்க அரசியல் செய்யும் தென்னிந்திய அரசியல் கட்சிகளுக்கு தமது அரசியல் தேவைகளை தீர்த்துக் கொள்ள ஒரு கருவியாக உள்ளது. அந்த வகையில் தான்.. வட இந்திய ஆளும் வர்க்கத்திற்கு சவாலாக விளங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளை வட இந்திய ஆளும் வர்க்கம் ஒழித்துக்கட்ட தீர்மானித்தது. அதன் தொடர்சியாக ஈழத்தமிழர்கள் வடக்குக் கிழக்கில் அரசியல் உரிமை பெற்று தன்னாட்சி அதிகார பலத்தோடு ஆட்சி அமைப்பதையும் வட இந்திய ஆளும் வர்க்கம் விரும்பவில்லை. விடுதலைப் புலிகளின் சவால் மிகு இருப்பை சமாளிக்க தமிழர்களைக் குழப்பி அடிக்க வடக்குக் கிழக்கு இணைப்பு.. மாகாண சபைகள் குறித்துப் பேசி வந்த வட இந்திய ஆளும் வர்க்கம் தற்போது அதனை கைவிட்டு விட்டு.. காலாவதியாகி தமிழர்களாலும் சிங்களவர்களாலும் கைவிடப்பட்ட 13 வது திருத்தச் சட்டத்திற்கூடாக பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்கிறது. அதுமட்டுமன்றி.. சிறீலங்கா சிங்களப் படைகளின் துணையோடு.. தமிழக மீனவர்களை தொடர்ந்து அச்சுறுத்தி வைத்திருக்கவும் விரும்புகிறது. தமிழக மீனவர்களை அச்சுறுத்தி வைத்திருக்க வேண்டிய தேவை ஒன்று வட இந்திய ஆளும் வர்க்கத்திற்கு உண்டு. அதேவேளை அது மீண்டும் வட இந்திய ஆளும் வர்க்கத்திற்கு எதிரான கிளர்ச்சியாக எழக் கூடாது என்ற கவனமும் அங்குண்டு. தமிழக மக்கள் மட்டுப்படுத்திய அளவில் சிங்களத்திடம் இருந்து அச்சுறுத்தலை எதிர்கொள்ள வேண்டும்.. தான் அதனை தீர்ப்பவன் என்கின்ற போர்வையில் தமிழகத்தின் மீது வட இந்திய ஆளும் வர்க்கம் செல்வாக்குச் செய்ய வேண்டும்.. இதுவே அவர்களின் பல்லாண்டு கால நிலைப்பாடு. தமிழக மீனவர்கள்.. தமிழகம்.. தமிழீழத் தமிழர்களோடு இணைவதில் வட இந்திய ஆளும் வர்க்கத்திற்கு சிங்களத்தை விட கொஞ்சமும் விருப்பமில்லை. இன்னொரு புறம் சிங்களமோ.. சீனாவை.. பாகிஸ்தானை அரவணைப்பது போல இனங்காட்டி.. வட இந்திய ஆளும் வர்க்கம் தன்னை விட்டு தமிழர்கள் மீது கூடிய கரிசணை கொள்வதையும் தடுக்க முனைகிறது. இந்திய வட இந்திய ஆளும் வர்க்கமும் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேசத்தின் தேவை கருதியும்.. அவற்றுடனான தனது நெருக்கத்தை அதிகரிக்கவும்.. சிறீலங்காவை சிங்களத்தை அரவணைப்பதன் மூலம்..சிறீலங்காவுக்குள் சீன ஊடுருவலை கட்டுப்படுத்துவதன் வாயிலாக மேற்குலகின் நன்மதிப்பை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று கருதிச் செயற்படுகிறது. இது இந்திய பொருண்மிய வளர்ச்சிக்கும் சீனப் பொருண்மியத்துடனான.. அதன் பிராந்திய ஆதிக்கத்துடனான இந்தியப் போட்டிக்கும் அவற்றின் பால் பிறக்கும்.. சர்வதேசத்தின் நலனுக்கும் அவசியமாகிறது. அந்த வகையில் நோக்கும் போது.. ஈழத்தில் தமிழர் பகுதிகளில் நிகழும் சிங்களத்தின் இன்றைய தமிழர் பாரம்பரிய அழிப்புகள்.. நில ஆக்கிரமிப்புக்கள் தொடர்பில் வட இந்திய ஆளும் வர்க்கம் மகிழ்ச்சிக் கடலில் மிதக்கவே செய்யும். அதன் மகிழ்ச்சிக்கு ஏற்ப தமிழகத்தில் இருந்து வட இந்தியர்களோடு இணக்க அரசியல் செய்பவர்களும் மகிழ்விக்கப்படுகின்றனர். அந்த வகையில் தான்.. ஈழத்தில் நிகழ்பவை அனைத்தும் இருட்டடிப்பு செய்யப்பட்டு வருவதோடு.. ஸ்தூபி அரசியலும் திட்டமிட்டு சிறுமைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் சில சர்வதேச சக்திகளும் பயன்பெறுகின்றனர். இவை குறித்து தமிழக மக்களும்.. தமிழீழ மக்களும்.. புலம்பெயர் தமிழ் மக்களும்.. உலகத் தமிழ் மக்களும் கூடிய அவதானத்தோடு.. விளிப்புணர்வோடும் செயற்பட வேண்டும். இந்த ஸ்தூபி அரசியல் என்பது தெற்காசியாவில் சாதாரணமன்று. தமிழரின் கவனக் கலைப்பானாக.. அவர்களின் தொன்மை கவரும் கபடத்தின் வடிவமாக எழுந்து நிற்கும் இந்த ஸ்தூபி அரசியல் தொடர்பில் மக்களும் அரசியல்வாதிகளும் தமிழகமும் உலகத் தமிழினமும் விளிப்புணர்வு பெற்று.. அதன் பின்னணியில் இருக்கும் பிராந்திய உள்ளூர் சதிகள் குறித்தும் விளங்கிக் கொள்ள வேண்டும். சரியான கலந்தாலோசனைகள்.. திட்டமிடல்கள் மூலம்.. இந்த ஸ்தூபி அரசியலை.. தமிழர்கள் ஒற்றுமையாக கூடி ஆராய்ந்து கையாள முனைவதே இன்றைய பொழுதுகளில் தமிழர்களை கூட்டுச் சதிகளில் இருந்தும் பாதுகாக்க முனையும்.! -
ராடர் தளமொன்றை இலங்கையில் நிர்மாணிக்க சீனா திட்டம் !
nedukkalapoovan replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
ஏன் நேட்டோ (NATO) வில் இருப்பவை எல்லாரும் என்ன ஒன்றுக்குள் ஒன்றாவா இருக்கினம்..??! அல்லது ஈயு (EU) வில.. மற்றும் AUKUS இல் இருக்கிறவை எல்லாம் ஒன்றுக்குள்ள ஒன்றாவா இருக்கினம். ஒரு சில பொதுமைப்பாடான.. இராணுவ பொருண்மிய காரணங்களுக்காக உருவாகும் கூட்டணிகளுக்குள்.. நாடுகளின் தனித்தனி தேவைகள் உட்படுத்தப்படுவதில்லை. இது தெரியாத மாதிரி ஒரு வீம்புக்கேள்வி இது. போலியாக உருவாக்கப்பட்டுள்ள ஹிந்தியா.. என்பது சீனாவால்.. பல சுதந்திர தேசங்களாக பிரிக்கப்பட்டு.. அதில் தமிழகமும் தனிநாடானால்.. சந்தோசமே. -
10வயது சிறுமியை வன்புணர்வு - தமிழர் பகுதியில் அரங்கேறிய கொடூரம்!
nedukkalapoovan replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
தாயை மட்டும் குறை சொல்லிப் பிரயோசனம் இல்லை. இந்த நிலைக்கு அந்த நாட்டில் இருக்கும் சமூகப் பாதுகாப்பற்ற சட்டங்களும்.. செயற்பாடுகளும் தான் காரணம். பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிங்கள இராணுவத்தை பாதுகாக்கும் அரசாங்கம்.. சிங்கள பெளத்த பேரினவாதம்.. சிங்கள அரசுக்கு கூலி செய்த தமிழ் - முஸ்லிம் காட்டிக்கொடுப்புக் கூலிகள்.. என்று சமூகத்தில் தண்டிக்கப்பட வேண்டிய.. திருத்தப்பட வேண்டிய குற்றவாளிகள் எல்லோரும் பாதுகாக்கப்பட்டு.. சுதந்திரமாக நடமாட விடப்பட்டிருக்கும் சூழலில்.. எப்படியான சமூகம் கட்டி வளர்க்கப்படும்..?! பாடசாலைகளிலேயே பாலியல் துஷ்பிரயோகம். பாடசாலையில் ஒரு குழந்தை முறைப்பாடு கொடுக்க முடியாது. அப்படிக் கொடுத்தால்.. அந்தக் குழந்தைக்கு பல அவப்பெயர்கள் சூட்டப்படும். கனதியான விடயங்களை அனானிமஸாக முறைப்பாடு செய்ய முடியாது. அப்படிச் செய்தாலும் ரகசியம் காக்கப்படாது. இப்படி அந்த நாட்டில் எதுவுமே உருப்படியாக செயலில் இல்லாத சூழலில்.. என்ன செய்ய முடியும். இந்தச் சூழலை பலர் தவறான வாய்ப்பாக்கி தவறுகளை திரும்பத் திரும்பச் செய்கின்றனர். இப்படியான சூழலில் தான் விடுதலைப்புலிகள்.. மின்கம்பத் தண்டனையை அறிமுகம் செய்ய வேண்டி வந்தது. அப்ப எல்லாரும் பெருமளவில் கட்டுப்பாட்டுக்குள் தான் இருந்தவை. இப்படியான சீர்கேடுகள் வெகுவாகக் குறைந்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. காட்டுமிராண்டிகளோடு.. காட்டுமிராண்டி அணுகுமுறைதான் வேலை செய்யும். -
குருவாயூரப்பன் காக்க மகிந்தவ.. மகிந்த கொல்க தமிழனை. இந்தியாவில் உள்ள கேரளா மாநிலத்தில் இருக்கும் குருவாயூரப்பன் கிருஷ்ணர் ஆலயத்தில் சடங்கு செய்து தமிழர்களைக் கொன்ற மற்றும் கொல்கின்ற பாவம் தீர்க்கும் சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. (2007/8) செய்த செய்யப்போற பாவங்களுக்கு சனிபகவானிடம் தமிழ்நாட்டில் வைத்துப் பரிகாரம் தேடும் ரணில் விக்கிரமசிங்கா. (ஒரு பக்கம் கலைஞர் ரணிலுக்கு கறுப்புப் பூனைகளும் கொடுத்துக் கொண்டு இன்னொரு பக்கம் சுனாமி காலத்து உழுத்துப் போன அரசியையும் ஈழத்தமிழர்களுக்கு பொதி செய்கிறார்..ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..!)(2008) கொழும்பில் பெளத்த பிக்குகள் தகர்த்த கோவில் சிலைகள்.(2008) கிளிநொச்சியில் முருகன் கோவில் மீது குண்டு வீசிய மகிந்தவின் படைகள். இத்தனை அட்டூழியங்களையும் செய்யும்... சிங்கள பெளத்த பேரினவாதிகளுக்கு இந்தியாவில்.. அதே கோவில்களில் பாவமன்னிப்பு அளிக்கப்படுகின்றது. அதுவும் கறுப்புப் பூனைகள் பாதுகாப்புடன்.(2008) மேலதிக தகவல் இங்கு. படங்கள் (தமிழ்நெட்.கொம்) ஆதீனம் ஐயா.. ஒன்றுமே அறியாதது போல.. சும்மா அறிக்கை விடக் கூடாது. புலி அழிப்புக்கு முண்டு கொடுத்ததோடு தமிழ் அரசியல் வியாதிகள் காலாவதியாகி விட்டார்கள். அவர்களால் எதுவும் எனி சாத்தியப்படப் போவதில்லை. இருப்பது ஒரே வழி தான்.. தமிழர்கள் பிரிந்து செல்வதற்கான தேர்தலை நடத்த சர்வதேசத்தை ஐநாவை வற்புறுத்துவதுதான். ஏனெனில்.. இது இன்று நேற்று நடக்கும் பிரச்சனை அல்ல.. 1948 இல் இருந்து நிகழ்கிறது.
-
சர்வ தேசியவாதி க. பத்மநாபாவின் சிலை திறப்பு!
nedukkalapoovan replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
பத்மநாபாவின் கனவுகளில் இதுவும் ஒன்று...?????! காலக்கொடுமை.. எங்கட அரசியல் வியாதிகளுக்கு அரசியல் செய்ய எதுவுமே இல்லை என்ற கணக்கு. -
தமிழ் சிறியின் தங்கையின் கணவர் காலமானார்.
nedukkalapoovan replied to ஈழப்பிரியன்'s topic in துயர் பகிர்வோம்
ஆழ்ந்த இரங்கல்களும் கண்ணீரஞ்சலியும். -
10வயது சிறுமியை வன்புணர்வு - தமிழர் பகுதியில் அரங்கேறிய கொடூரம்!
nedukkalapoovan replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
இதிகாசங்களும் புராணங்களும் பாக்களும்.. இன்றும் பாடப்புத்தகங்களில் உள்ளன. கம்பரின் இராமாயணத்தில் இருந்து பாக்கள் உள்ளன.. செஞ்சோற்றுக்கடன் எனும் அதிகாரம் இருக்கிறது.. நளவெண்பா உள்ளது.. சீராப்புராணம் உள்ளது.. அது நபிகளைப் பற்றிச் சொல்கிறது.. இப்படி புராணங்களும் இதிகாசங்களும் முற்றாக மறைக்கப்பட்ட ஒரு சமூகம் இல்லை. அந்த வகையில்.. அவையும் மக்களின் சுய ஒழுக்கத்தை புத்திப்படுத்த பயன்படுத்தப்படின் அது தொடர்பில் சமூகம் சரியான வழிநடத்தப்படுதல் அவசியம். இது எல்லா மொழிகளிலும் அதன் தொன்மையை.. ஆளுமையை மையப்படுத்தி பயன்படுத்தப்பட்டே வருகிறது. இது புதுமைவாதி நவீனத்துவவாதி இல்லை பின் நவீனத்துவவாதி என்ற சுய பெயர் சூட்டலுக்கான தலைப்பல்ல. நிஜ சமூகத்தில் உள்ள பிரச்சனைகளை சமூகத்தின் வெவ்வேறு மட்டங்களில் இருந்து ஆராய்ந்து தீர்வுக்கு வழிகாட்ட வேண்டிய தலைப்பு. மேலே இணைக்கப்பட்ட கவிதையும் சமூகத்தில் எல்லாத் தரப்புக்கும் புத்திபுகட்ட நினைக்கிறதே தவிர.. பழமைவாதம்.. நவீனவாதம்.. பின்நவீனத்துவாதம் என்ற கற்பிதங்களை காண்பிக்கவில்லை. -
10வயது சிறுமியை வன்புணர்வு - தமிழர் பகுதியில் அரங்கேறிய கொடூரம்!
nedukkalapoovan replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
சரியான பாலியல் கல்வி... பாலியல் சுகாதாரம்.. பாலியல் துஷ்பிரயோக வடிவங்கள்.. அவற்றை இனங்காணக் கற்றுக்கொடுத்தல்.. தற்காத்தல்.. முறையீடு செய்து பாதுகாப்புப்பெறுதல்.. தனிமனித ஒழுக்கத்தை போதிக்கக் கூடிய செயல்வடிவில் காட்டக் கூடிய குடும்பத்தலைமைகள்.. குடும்ப கட்டமைப்புப் பலம்.. தமிழரின் பண்பாட்டு விழுமியங்களின் உயர் தார்ப்பரியம்.. இவற்றினூடான தனி மனித ஒழுக்கம் பற்றிய புத்திப்புகட்டல்.. இவை எல்லாம் ஒற்றிணைந்து இல்லாமல்.. உயர் கல்வி அறிவு.. பொருண்மிய உச்ச அளவை எட்டுவதன் மூலம்.. இந்த பாலியல் சீரழிவுகளில் இருந்து சிறுவர் சிறுமிகள் உட்பட வளர்ந்தோரையும் காப்பது கடினம். இது பொருண்மிய ரீதியில் வளர்ந்த நாடுகளில் கூட சவாலுக்குரிய விடயமாகவே இருக்கிறது. ஆனால்.. தமிழர் நிலத்தில்.. இந்த நிலை அருகி இருந்த காலமும்.. தனி மனித ஒழுக்கம் உச்சம் பெற்றிருந்த காலமும் உண்டு. அது ஆண்டவர்களின் நிஜமான சமூக அக்கறையால் பிறந்த ஒன்று. -
10வயது சிறுமியை வன்புணர்வு - தமிழர் பகுதியில் அரங்கேறிய கொடூரம்!
nedukkalapoovan replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
இதென்ன அர்த்தப்படுத்துகிறது. புராணங்கள்.. இன்று சொல்லிக் கொடுக்கப்படுவதில்லையோ..??! பாட நூல்களில் இல்லையோ...??! மேலும்.. இதையும் சுட்டிக்காட்டுகிறது. கவிதை எல்லாச் சூழலையும் உள்வாங்கி எழுகிறது. தாங்கள் தான் பிற்போக்குக்கண்ணாடி போட்டுக் கிட்டுப் பார்கிறீர்கள். அதனால் அவை பளிச்சென்று பிற்போக்காகத் தெரிகிறது. அவ்வளவே. இதையும் படியுங்கள்.. ஆண்களில் எவரை எல்லாம் குறி வைக்கிறது என்பதாகும். -
10வயது சிறுமியை வன்புணர்வு - தமிழர் பகுதியில் அரங்கேறிய கொடூரம்!
nedukkalapoovan replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
உங்களுக்கு ஆக்கத்தின் அர்த்தம் புரியவில்லை என்பதைத் தவிர.. அண்ணன் மீதான கடுப்புத் தெரிகிறது. -
10வயது சிறுமியை வன்புணர்வு - தமிழர் பகுதியில் அரங்கேறிய கொடூரம்!
nedukkalapoovan replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
தாங்கள் இந்தக் காலத்தில் வாழாதிருந்திக்கலாம்.. அல்லது பயந்து ஓடிஒளிந்திருக்கலாம். அதனால் அந்தக் காலத்தின் தன்மை புரியவில்லை. கவிதை கடந்த கால நிஜம்.. காணாமல் போன.. ஏக்கங்களை விதைக்கிறதையே புரியமுடியவில்லை.. தங்களால். -
10வயது சிறுமியை வன்புணர்வு - தமிழர் பகுதியில் அரங்கேறிய கொடூரம்!
nedukkalapoovan replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
விலாசம் இன்றிய விந்துகளின் சேமிப்பிடங்களாய் எம் தமிழ்ப் பெண்கள்..! பத்தினிகளும் பதிவிரதைகளும் புராணங்களில்… பால பாடங்களில்… பக்கம் பக்கமாய் படித்த மண்ணில் படி தாண்டிய பத்தினிகளும் மாதவிகளும் பெருகி விட்ட நிலை..! மாங்கல்யம் இன்றி மண மேடையின்றி கன்னிகள் வாழ்வு…! விலாசமின்றிய விந்துகளின் சேமிப்பிடங்களாய் அவர் தம் தேகம் இன்று..! சராசரி பாலியல் அறிவு கூடவா இல்லை… ஆண்டு ஒன்பதில் கற்றது கூடவா நினைவில் இல்லை…. தனி மனித ஒழுக்கம் என்ன பல்கலைக்கழகப் பாடமா வாத்தியார் கற்றுத்தர..?! முளைக்க முதல் பொத்திப் பிடிக்கும் கூட்டம் இன்று சந்தி தோறும் முந்தி விரித்துக் கிடக்கிறது.. ஏனிந்த அவலம்..???! பெண்கள்… புலிகளாய் வாழ்ந்த மண்ணில் வீரம் விதைத்து வீழ்ந்த இடத்தில் இன்று அந்நியரின் அயோக்கியரின் அனாதை விந்துகளின் அநியாயப் பாய்ச்சலில் சரிகிறார் மங்கையர்..! தூக்கிலும் கிணற்றிலும் சாவுகள்..! இது என்ன இன அழிப்பா சுய இருப்பழிப்பா.. சிந்தியுங்கள்..! முதிர் கன்னிகளாய் இளம் கன்னிகளாய் பள்ளிச் சிறுமிகளாய் பேரிளம் பெண்களாய் எல்லா நிலையிலும் அவர் வாழ்வு சீரழிவு..! அன்று அண்ணன் வழியில் அடைந்த ஒழுக்கம் இன்று அந்நியர் வழியில் அடைகிறது சாவு..! இப்படியே போனால் புவிதனில்.. எங்கே வாழும் எம் தமிழினம்..???! முடிவு தான் என்ன..????! சத்தமின்றி யுத்தமின்றி தமிழினம் தானே அழியும்..! 2012 இல் எழுதியது.. இன்னும் தொடருது அதே துன்பம். https://kuruvikal.wordpress.com/page/21/ -
அடம்பிடிக்கும் ஆகாசவாணி..! ஆகாசவாணி… டெல்லியின் குரலாய் தமிழ் ஈழ மண்ணில் ஒளிவு மறைவு வாழ்வில் சந்துபொந்தில் நடந்த அந்த ஓரிரு நிகழ்வுகள் கூட ஒளிப்பு மறைப்பின்றிச் சொன்னது ஓர் காலம்..! காலை மதியம் மாலை என்று முறுக்கிவிட்ட வானொலிகள் மத்திய மாநிலச் செய்திகள் காவி வர களத்தில் நின்ற வீரனும் நிகழ்வின் விளைவறிவது அங்கு தான்..! அமைதிப் படை என்று அரக்கர் படை ஒன்று வந்து சேர ஆகாசவாணியும் அண்டப்புளுகிற்கு அடிபணிந்து கொண்டது. லங்காபுவத்தோடு காதலொடு கூடலும் கண்டு கொண்டது..! அன்று தொற்றிய வியாதி இன்றும் ஆறவில்லை. இத்தனை ஆயிரம்.. தமிழர் சாவுகள் கண்டும் இரங்கவில்லை… அண்டப்புளுகொடுதான் அதன் அந்தியக்காலம் என்று அடம்பிடிக்குது..! இந்தியாவின் இந்துக்கள் கட்சியாம் ஈழ மண்ணில்.. தமிழ் பேசும் இந்துக்கள் அழிவை சிங்களம் செய்தால் மன்னிக்குமாம்.. மறக்குமாம்..! ஹிந்தி பேசும் இஸ்லாம் செய்தால் கொலைக் கருவி ஏந்துமாம்…! சரத்பவாராம் அன்னை இந்திராவோடு ஒட்டிய போது ஈழத்தமிழருக்காய் ஓர் விரதம் அன்னை சோனியாவோடு ஒட்டிய பிறகு விரதமும் தாபமாச்சு..! ஆகாசவாணிகளே ஆகாயம் விட்டு வர வேண்டாம் இடையில் இனிப்பாய் அமைந்திட்ட சிங்கள உறவுகள் அறுக்க வேண்டாம். அண்டை அயலில் நடந்த இன அழிப்புக்கு ஓர் ஒப்பாரி… மனிதாபிமானம் இருந்தால் காட்டுங்கள்..! கலைஞரும் கழன்றுவிட்ட பிறகு கட்சிகள் சாட்டி கழுத்தறுப்பது தொடர வேண்டுமா..??! ஆகாசவாணிக்கு ஈழத்தமிழன் தந்த ஆதரவுக்கு நன்றிக்கடன் வேண்டாமோ..??! கொடுஞ் சிங்களத்திற்கு கொடுத்தது போக.. நன்றி மிச்ச சொச்சம் எஞ்சி இருந்தால்…… பாரதத்தில் கீதை சொன்னபடி.. ஐநாவில் அதை அழிந்து போன தமிழருக்கு.. காட்டி நிற்க..!!! 2013 இல் எழுதியது.. அப்பவே இதுக்கு விடை சொல்லியாச்சு. https://kuruvikal.wordpress.com/page/16/
-
சிறுக ஓர் தேர் கட்டி ஊர் கூடி இழுக்க ஆசை வைச்சு.. தமிழ் தேசியம் சில்லாய் வைச்சு கருத்துக்கள் எனும் தடம் பதித்து ஆண்டுகள் 25 தானிழுக்க வெள்ளித் தேராய் ஓடுகிறது அதுவே யாழ் களம்..! களத்தின் நாயகனே மோகன் எனும் முதல்வரே தேரோட்டியாய் தாங்கள் என்றும் அமைய வேண்டும்...! விலகி நின்றாலும் நீங்கள் வழிநடத்த வெள்ளித் தேரது பொன்னாக வேண்டும் அதன் காலக் கண்ணாடியில்...! வம்புகள் தும்புகள் வந்தாலும் போனாலும் சம்பவங்கள் நொடி மறந்து கருத்தால் வேறுண்டாலும் தமிழால் இணைந்து நவீனத்துவம் உள்வாங்க தொடரட்டும் யாழ் எனும் வெள்ளித் தேர் இழுப்பு...!! இன்று போல் என்றும் ஊர்கூடி இழுக்கட்டும் பொழுதுகள் இனிதே பயனடைய.. மொழியும் மக்களும் தெளிவடைய...!! ஆக்கம்: நெ.போ (31-03-2023)
-
யாழ் இணையம் - 25 ஆவது அகவை - வாழ்த்துக்கள்
nedukkalapoovan replied to கிருபன்'s topic in வாழிய வாழியவே
வெள்ளி விழா காணும் யாழ் இணையத்திற்கும் அதன் கருத்துக்களத்திற்கும் சவால்கள் தாண்டி நீண்டு நீடித்து நிலைக்க வாழ்த்துக்கள். யாழில் ஏ ஐயில் உரையாடும் காலமும் வர வேண்டும். இந்த இடத்தில் யாழின் ஸ்தாபகர் மோகன் அண்ணா.. யாழில் இயக்கத்தின் ஆரம்பத்தில் அவருக்கு துணை நின்ற சுரதா யாழ்வாணன் அண்ணா.. மற்றும் மறைந்த உறவுகளான சோழியன் அண்ணா.. சோம்பு அண்ணா உள்ளிட்ட யாழின் வளர்ச்சியோடு காலத்துக்கு காலம் கூடிப் பயணித்த பயணித்துக் கொண்டிருக்கும் சக யாழ் சொந்தங்களுக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகுக.! -
சீனா – ரஸ்யா உறவு அமெரிக்காவின் வியூகங்களின் தோல்வி – பொம்பியோ
nedukkalapoovan replied to கிருபன்'s topic in உலக நடப்பு
நாங்க எங்கும் அமைச்சர் பிரக்சிட்டை காரணியாக்கியுள்ளார் என்று எழுதவே இல்லை. பிரக்சிட்டை இங்கு முதன்மைப்படுத்தியது வேறொரு கருத்தாளர். -
சீனா – ரஸ்யா உறவு அமெரிக்காவின் வியூகங்களின் தோல்வி – பொம்பியோ
nedukkalapoovan replied to கிருபன்'s topic in உலக நடப்பு
உங்கள் கருத்துப் புரிதலில் தவறுள்ளது. அமைச்சர் பிரக்சிட் பாதிப்புப்பற்றிச் சொல்லவில்லை. சொன்னது OBR chairman Richard Hughes. அமைச்சர் உக்ரைன் யுத்தத்தை முதன்மையாகவும்.. கோவிட் பான்டமிக்கை அடுத்தும் குறிப்பிட்டுள்ளார். -
சீனா – ரஸ்யா உறவு அமெரிக்காவின் வியூகங்களின் தோல்வி – பொம்பியோ
nedukkalapoovan replied to கிருபன்'s topic in உலக நடப்பு
அமைச்சரே போரை தான் முதன்மையாகக் குறிப்பிட்டுள்ளார். இணைத்தவர் எல்லாக் கருத்தையும் தான் இணைத்துள்ளார். அமைச்சரின் முதல் காரணியே.. உக்ரைன் போர் தான். -
முழு நாடும் சிங்களவர்களுக்கே சொந்தம்! - விமல்
nedukkalapoovan replied to புரட்சிகர தமிழ்தேசியன்'s topic in ஊர்ப் புதினம்
நேற்றுவரை மகிந்தரோடு நின்று நாட்டைக் கொள்ளையடிச்சதும் இதே இனவாதி தான். இவருக்கு நாடு என்ற ஒன்றிருந்தால் தானே. அது இப்ப சீனாவுக்கும்.. ஹிந்தியாவுக்கும்.. ஐ எம் எவ்வுக்கும் அடமானம் வைக்கப்பட்டுவிட்டது தெரியாது போலும். -
சீனா – ரஸ்யா உறவு அமெரிக்காவின் வியூகங்களின் தோல்வி – பொம்பியோ
nedukkalapoovan replied to கிருபன்'s topic in உலக நடப்பு
அவையே ஒத்துக்கொள்ளினம் இந்த பிச்சைக்கார நிலைக்கு உக்ரைன் யுத்தமும் பகுதிக்காரணம் என்று.. நீங்க என்னடான்னா. அப்ப வரியை வாங்காமல் விடலாமே..??! ஆக்களும் வேணும்.. சேவையும் வேணும்.. வரியும் வேணும். சும்மாவா இருக்க விடினம். -
சீனா – ரஸ்யா உறவு அமெரிக்காவின் வியூகங்களின் தோல்வி – பொம்பியோ
nedukkalapoovan replied to கிருபன்'s topic in உலக நடப்பு
UK is poorer as a country, says Michael Gove. The UK is poorer than it would have been, partly due to the war in Ukraine, but also the pandemic, Levelling Up Secretary Michael Gove has admitted. But he said ministers were taking action on the soaring cost of living, including giving help on energy bills. The head of the independent forecaster, the Office for Budget Responsibility (OBR), said living standards were seeing their biggest squeeze on record. Richard Hughes said Brexit and poor productivity had also hurt growth. And he warned living standards would not return to pre-pandemic levels for at another five to six years. https://www.bbc.co.uk/news/business-your-money-65079792 உக்ரைன் யுத்தத்திற்கு அமெரிக்க வாலாகப் போய் வால்பிடிக்கப் போய் வளர்ந்த நாடுகளில் ஏழை நாடானது தான் மிச்சம். ரஷ்சியா கூட இவ்வளவு நெருக்கடிகளை சமாளிச்சுக் கொண்டு முன்னேறி வர. இவைக்கு அமெரிக்காவா கைகொடுக்கப் போகுது. இருக்க விட்ட பாவத்திற்கு உழைச்சு 40 சதவீதத்திற்கும் மேல் வரியாக் கட்டிக்கிட்டு இருக்கமே அது போதாதா. அதையும் உக்ரைன் யுத்தத்தில் கொட்டி கரியாக்குவதற்கும் நாமா பொறுப்பு. பொறுப்பற்ற கொள்கை வகுப்பாளர்களும்.. அவர்தம் எடுபிடி அரசியல்வாதிகளினதும் விளைவு.. பிரிட்டனை பிச்சைக்கார நாடாக்கியது தான். -
சீனா – ரஸ்யா உறவு அமெரிக்காவின் வியூகங்களின் தோல்வி – பொம்பியோ
nedukkalapoovan replied to கிருபன்'s topic in உலக நடப்பு
தென்சீனக் கடல்.. தாய்வான்.. வடகொரியான்னு பூச்சாண்டி காட்டினாலும்.. சீனா அசையுற மாதிரி இல்லை. இப்ப ஐரோப்பாவும் பாதுகாப்பில்லாத இடமாப் போச்சு. ரஷ்சியா சோவியத் வீழ்ச்சியின் பின் முதல்முறையாக தனது அணு ஆயுதங்களை பெலரூசுக்குள் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.