-
Posts
32991 -
Joined
-
Days Won
268
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by nedukkalapoovan
-
நிலவு விடயத்தில் நாங்கள் விஞ்ஞானத்தைப் பாவிக்கவில்லை. அது மட்டுப்பட்டிருக்குது. அமெரிக்கன் காட்டிற படத்தை தான் பார்க்கிறம். நம்பிறம். நிலவுக்கு போய் நாமாக உண்மையா பொய்யான்னு..ஆராயவில்லை. அது விஞ்ஞானமல்ல. அதே தான் நிலை.. செவ்வாய் விடயத்திலும். பல விண்வெளி ஆய்வுகளிலும். அமெரிக்கன் காட்டிறதை நம்ப வேண்டிய நிலை. அதனால் தான் அவை தியறி... ஒப்சவேசனுக்குள் நிற்குது.
-
லண்டன் மட்டுமல்ல.. பல மேற்கு நாடுகளில் நிலைமை இப்படித்தான் இருக்குது. மக்கள் உணவு வங்கிகளில் தங்கி இருக்கும் நிலைமை அதிகரித்துள்ளது. இலவச உலர் உணவுப் பொதிகளைப் பெற மக்கள் நீண்ட கியூவில் இருப்பதை லண்டனில் அவதானிக்கலாம். முன்னர் இப்படி கண்டதில்லை. தொழில் இழப்பு.. செலவுக்கு ஏற்ப ஊதிய உயர்வின்மை.. இப்படி பல காரணிகள் எல்லாத் தரப்பு மக்களினதும் வாழ்க்கை தரத்தை தரம் தாழ்த்தியே உள்ளது. இதற்கிடையே... நடப்பு பிரித்தானிய அரசு உக்ரைனுக்கு தேவையில்லாமல் கொட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. மத்திய தர வருமானம் பெறும் எங்கள் நிலையையே எடுத்துப் பார்த்தால்.. வரியாக வெட்டப்படுகுது கூடிய தொகை. அதிலும் அந்த வரி இந்த வரின்னு. கார் மற்றும் வீட்டு இன்ஸூரன்ஸ் எல்லாம் 50% தால் அதிகரிச்சிட்டுது. உணவுப் பொருட்கள் எல்லாமே விலையேறிட்டுது. போட்டு குளிக்கிற பொடி வோர்ஸ் கூட... 100 தொடங்கி 150% தால் கூடி விட்டது. ஆனால் சம்பளம்.. 5% - 15% தான் கூட்டி இருக்குது. மக்கள்.. இப்போ உறை உணவுப் பொருட்களை தான் அதிகம் கொள்வனவு செய்கின்றனர். கொவிட்டுக்கு முன்னிருந்த விலையோடு ஒப்பிடும் போது பல பொருட்கள்.. 100 தொடங்கி..150% அதிகரித்துவிட்டன. பிரித்தானிய மத்திய வங்கி ஆளுநனரே (அமைச்சரும் சொல்லி இருக்கிறார்).. சொல்லி இருக்கிறார்.. பிரித்தானிய மக்கள்.. ஏழைகள் என்பதை ஏற்றுக்கொள்ளப் பழகிக்கனுன்னு. இதுக்கு அப்புறம் என்னத்தைச் சொல்லுறது. https://www.theguardian.com/business/2023/apr/25/britons-need-to-accept-theyre-poorer-says-bank-of-england-economist
-
அப்ப செவ்வாய்க்கு ரோவர் ரோவரா விட்டு துளையெல்லாம் போட்டு ஆய்வு செய்தது என்ன பொய்யா. பேசாமல் இவ்வளவு செலவு செய்யாமல்.. சொறீலங்கா கல்லையே நோண்டி இருக்கலாமே..??! நிலவில் 1960களில் கால் பதிச்சதாகச் சொல்லும் அமெரிக்காவினதும் நாசாவினதும்.. அடுத்த நிலவுப் பயணத்துக்கு என்னென்னவோ பிளான் போடிறாங்களாம்.. இன்னும் முடியல்லையாம். அதுக்குள்ள சீனா போயிடும் போல. ஏலவே.. அமெரிக்கா நிலவில் கால்பதிக்கவில்லை.. என்ற தியறிகளும் உலாவுது. இப்ப செவ்வாய் ரோவர்களும் படங்காட்டலோ என்று சொல்லி வைக்கப் போறாய்ங்க. அமெரிக்கன் நல்லா திட்டமிட்டு புளுகுவான். அதில் நாசா வேறு.
-
மொஸ்கோ எரியும் என்று காத்திருந்த.. மேற்குலக ஜாம்பவான்களுக்கு.. இது சகிக்கக் கூடிய ஒன்றாக இருக்காது. பிரான்ஸ் பொலிஸ் மீது இனத்துவேசக் குற்றச்சாட்டை ஐ நா சுமத்தியுள்ளது. உடனடியாக.. அதை பிரான்ஸ் நடப்பு அரசு மறுதலிச்சிருக்குது. இந்தக் கலவரம் தொடங்கி 3 நாளாகுது. யாழில் முடிந்த அளவு பலரும் அடக்கி வாசிச்சினம். தனக்கு தனக்கென்றால் சுளகு படக்குப் படக்கென்றுமாம்... பழமொழி தான் நினைவுக்கு வருகுது.
-
கருணாநிதிக்கு கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க அனுமதி!
nedukkalapoovan replied to தமிழ் சிறி's topic in தமிழகச் செய்திகள்
கண்ணதாசனும் சினிமா எழுத்தாளர். கருணாநிதியும் சினிமா.. நரித்தன அரசியல் எழுத்தாளர். தமிழ் இலக்கிய கர்த்தாக்களோ.. தமிழ் இலக்கண கர்த்தாக்களோ.. தமிழ் வளர்ச்சிக்கு நவீன மயமாக்கத்துக்குரியவர்களோ அல்ல. அதனால் தானோ என்னவோ.. தமிழகத்தில் தமிழ் தமிழா இல்லை. கருணாநிதி ஆட்சிக்காலத்திலும் சரி ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்திலும் சரி.. தூய தமிழ் இலக்கியங்கள்.. நவீன.. தூய.. தமிழ் மொழிப்பாவனை என்பது அறவே இல்லாமல் போய்விட்டது. கலப்பு மொழிப்பாவனை தான் உள்ளது. 2009 மே க்குப் பின் தாயகத்திலும் இதனை அவதானிக்க முடிகிறது. தமிழ் ஒரு செம்மொழியாக இருக்க.. புலவர்களும்.. பண்டிதர்களும்.. இன்னும் இன்னும் தமிழை ஆராய்ந்து கற்றுணர்ந்து.. செம்மையான மொழியாக நீடிக்க உழைத்தவர்கள் எங்கே.. தங்கள் சுயநல..அரசியல்.. சினிமா பிழைப்புக்கு அதனை பாவித்தவர்கள் எங்கே. கருணாநிதி கண்ணதாசன் வகை 2. அத்தகைய கருணாநிதிக்காக கடலை சிதைத்து..பேனா அதுகூட தமிழ் இல்லை... வைப்பது வெறும் சுயநல அரசியல் தேவைகளுக்கே தவிர.. இதனால்.. தமிழுக்கு என்ன பயன். இந்தக் கோடிகளை தமிழாய்வுக்கு வழங்கலாமே.. கருணாநிதி.. ஒரு தமிழ் மொழிக் காதலன் என்றால்..???! -
கருணாநிதிக்கு கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க அனுமதி!
nedukkalapoovan replied to தமிழ் சிறி's topic in தமிழகச் செய்திகள்
8ம் வகுப்பு படிச்ச கருணாநிதி.. பெரிய தமிழ் இலக்கிய விற்பன்னர் என்ற கருத்தியலை ஏற்க முடியவில்லை. மாறாக... நரித்தன அரசியல்.. மற்றும் சினிமாக்காரர் என்றால் தகும். -
கருணாநிதிக்கு கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க அனுமதி!
nedukkalapoovan replied to தமிழ் சிறி's topic in தமிழகச் செய்திகள்
இது நினைவுச் சின்னமல்ல. தமிழின அவமானச் சின்னம். இந்த பேனையை வைச்சுக் கடிதம் எழுதி எழுதி.. காலத்தையும் காரியத்தையும் கடத்தி கடத்தி தான்.. ஈழத்தமிழின அழிவில்.. கருணாநிதி தன் காத்திரமான பங்களிப்பை வழங்கினார். இன்று வரை.. ஈழத்தில்.. 2009 க்குப் பின் நிகழும் எந்த சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பு.. இராணுவ பிரசன்னத்துக்கும் எதிராக தி மு க ஒரு கண்டனமும் செய்ததில்லை. ஏன் முள்ளிவாய்க்கால் தமிழினப் பேரிழிவு நினைவு கூறலில் கூட பங்களிப்பதில்லை. இதில் இருந்து ஈழத்தமிழின அழிப்பில்.. தி மு கவின் பங்களிப்பு எவ்வளவு காத்திரமாக இருந்துள்ளது என்பதற்கு வேறு சாட்சிகள் தேவையில்லை. இதே தி மு க தலைவர் தான் போர் வெற்றிச் செய்தி கேட்டதும் மகள் கனிமொழியை அனுப்பி.. மகிந்த ராஜபக்சவிற்கு பொன்னாடை போர்த்தினார் என்பதை யாரும் இலகுவில் மறந்துவிட வேண்டாம். -
ரஸ்ஸிய அரசுக்கெதிராகத் திரும்புகிறதா வாக்னர் கூலிப்படைப்பிரிவு?
nedukkalapoovan replied to ரஞ்சித்'s topic in உலக நடப்பு
வாக்னர் குழு தலைவர்..சுட்டு வீழ்த்தியதாக சொன்ன ஊடகங்கள் (நீங்களும் தான்).. இப்ப தாக்கியதாகச் சொல்லினம். அதிலும் பிபிசி.. வாக்னர் குழு தலைவர் ரஷ்சிய விமானப்படையிடம் மன்னிப்பு/வருத்தம் கோருவதாக.. விமானங்கள் சிலவற்றின் திசையை திருப்ப தாக்குதல் செய்ததாகவும் நேற்று இதே உரையில் இருந்து செய்தி போட்டிருந்தது. அதற்கே அவர் ரஷ்சிய விமானப்படையிடம் மன்னிப்பும் வருத்தமும் கோருவதாக சொல்லப்பட்டிருந்தது. சுட்டு வீழ்த்தியது என்பதை பிபிசி இப்பவும் தனது செய்தியாகப் போடவில்லை. வாக்னர் குழு தலைவர் சொன்னதாகவே செய்தி போட்டுள்ளது. சில ரஷ்சிய வீரர்கள் ஆகாயத்தில் கொல்லப்பட்டதாகவும் அதற்கு வருந்துவதாகவும்.. செய்தி போட்டுள்ளது. தரையில் எந்த ரஷ்சிய வீரரும் கொல்லப்படவில்லை என்றும் கூறி இருக்கிறாராம். அந்த செய்தியாக்கத்திலும் தெளிவில்லை. ஹெலிகாப்டர்கள் என்று தொடங்கி வானூர்தி என்று ஒருமையில் முடியுது செய்தி. The mercenary boss acknowledged his march had resulted in the deaths of some Russian troops when Wagner mercenaries shot down attacking helicopters. But he added that "not a single soldier was killed on the ground". "We are sorry that we had to strike the aircraft, but they were striking us with bombs and missiles," he said. (bbc) -
ரஸ்ஸிய அரசுக்கெதிராகத் திரும்புகிறதா வாக்னர் கூலிப்படைப்பிரிவு?
nedukkalapoovan replied to ரஞ்சித்'s topic in உலக நடப்பு
கூடிய விளக்கத்துக்கான திருத்தம் செய்யப்பட்டுள்ளது. -
ரஸ்ஸிய அரசுக்கெதிராகத் திரும்புகிறதா வாக்னர் கூலிப்படைப்பிரிவு?
nedukkalapoovan replied to ரஞ்சித்'s topic in உலக நடப்பு
வாக்னர் குழு தலைவரை தான் அப்படிச் சொல்லி இருக்குது. இந்த உலங்கு வானூர்தி விழுத்திய தகவல்களை உக்ரைன் சார்ப்பு பிபிசி கூட உறுதிப்படுத்தப்படாத செய்தின்னு சொல்லி.. கைவிட்டு விட்டது. வாக்னர் குழு தலைவரின் குற்றச்சாட்டே ரஷ்சிய விமானப்படை ஏவுகணைகள் மூலம் தாக்கி தனது வீரர்களை கொன்று விட்டதாக. ஆனால்.. ரஷ்சிய பாதுகாப்பு அமைச்சு அப்படி எதுவும் நடக்கவில்லை என்று கூறிவிட்டது. இந்த நிலையில் தான் வாக்னர் குழு அதன் தலைவர் தலைமையில்.. மாஸ்கோ நோக்கி நீதிக்கான பயணம்.. இது சதிப் புரட்சியோ.. ஆட்சிக்கவிழ்ப்போ அல்ல.. என்று பகிரங்கமாக அறிவித்துக் கொண்டு தான் போனார். மேலும் தனது படைகளை எங்கும் சண்டையிட வேண்டாம் என்று கூறினார். இதன் மூலம்.. ரஷ்சிய அரச படைகளும் சரி.. பொலீஸ் மற்றும்.. இதர ரஷ்சிய ஆதரவுக் குழுக்களும் சரி வாக்னர் குழுவை தாக்கவில்லை. தடுக்கவும் இல்லை. வாக்னர் குழு ஆயுதங்களோடு.. மாஸ்கோ நோக்கிய பயணத்தை யாரும் விருப்பவில்லை. அது எதிரிகளுக்கு சாதகமாக மாறக் கூடியது என்பதால்.. மாஸ்கோ நோக்கிய பயணத்தை தடுக்கவே முயற்சிக்கள் மேற்கொள்ளப்பட்டன. -
ரஸ்ஸிய அரசுக்கெதிராகத் திரும்புகிறதா வாக்னர் கூலிப்படைப்பிரிவு?
nedukkalapoovan replied to ரஞ்சித்'s topic in உலக நடப்பு
மேற்குலக வித்துவான்கள்.. உக்ரைனின் தோல்வியை இயலாமையை மறைக்க இதை தூக்கிப் பிடிக்கினம். வாக்னர் குழு ரஷ்சிய படைகளுடன் சேர்ந்து போரிடும் பல குழுக்களில் ஒன்று. அதில் ரஷ்சியாவுக்கு எதிராக மேற்குலகின் தூண்டலில் ரஷ்சியாவுக்கு உள்ளேயே பிரிவினை வேண்டிப் போராடிய செச்சின் அமைப்புக்களும் சாரும். வாக்னர் குழு கூடிய தன்னிச்சையாக செயற்பட அனுமதிக்கப்பட்டது. அது கூலிக்கு அமர்த்தப்பட்ட குழு ஆகினும்.. ரஷ்சிய குற்றவாளிகளை தெரிந்தெடுத்து பயிற்சி கொடுத்து உருவாக்கப்பட்ட அமைப்பு. ரஷ்சியாவே ஆயுதங்களும் வாகனங்களும் வழங்கியுள்ளது. பார்முட் நகரை வெற்றி கொள்ள இந்தப் படை அதிகம் பயன்படுத்தப்பட்டாலும்.. ரஷ்சிய இராணுவ அதிகாரிகள்... ரஷ்சிய இராணுவத்தின் தங்களின் புகழை அதிகரிக்கும் வகைக்கு இறுதி நேரத்தில் செயற்பட்டதால்.. வாக்னர் குழு இழப்புக்கள் மத்தியில் தான் பார்முட் நகரைக் கைப்பற்றி.. நீண்ட யுத்தத்தில் ரஷ்சியாவின் வெற்றியை உறுதி செய்ய உதவினர். ஆனாலும்.. ரஷ்சிய உளவு பிரிவுகள்.. இந்த கூலிக்குழுக்களால் ஆபத்து வரும் என்பதற்கு அண்மையில்.. ரஷ்சிய எல்லைக்குள் திட்டமிட்டு ஊடுருவித் தாக்குதல் நடத்திய உக்ரைனின் கூலிப்படைகளுக்கும்.. இவர்களுக்கும் தொடர்புகள் இருக்க சந்தேகிக்கப்பட்ட நிலையில்.. இந்த இராணுவக் குழுக்களை நேரடியாக ரஷ்சிய பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வர முயற்சிக்கப்பட்டது. ஏனைய குழுக்கள்.. அதற்கு இசைய... வாக்னர் குழு அதற்கு இணங்க மறுத்த நிலையில் தான்.. வாக்னர் குழு தன்னிச்சையாக.. ரஷ்சிய இராணுவ தளபதிகளுக்கு எதிராகக் குற்றம் சுமத்திக் கொண்டு அவர்களை பதவி கவிழ்க்கப் போவதாகச் சொல்லிக் கொண்டு மாஸ்கோவை நோக்கி போக முற்பட்டனர். அவர்கள் ஒன்றும் போரிட்டோ.. உக்ரைனின்... அமெரிக்காவின் ஆயுதங்களோடோ போகவில்லை. ரஷ்சிய படைகள் அளித்த ஆயுதங்கள் கனரக வாகனங்களோடு போயினர். ஆனாலும்.. எங்கும் சண்டையிடும் நோக்கில்.. ஆயுதங்களைப் பாவிக்கவில்லை. அதேபோல்.. ரஷ்சிய படைகளும் சரி.. பொலிஸும் சரி.. மக்களும் சரி.. இவர்களை எதிரிகளாகவும் பார்க்கவில்லை. அவர்கள் நாட்டுக்காகச் செய்த தியாகத்தி தான் மெச்சினர். வாக்னர் குழு தலைவன் என்ற தனிமனிதனின் செல்வாகினை நிலை நிறுத்த மேற்கொள்ளப்பட்ட ஒரு நகர்வாகத்தான் இதனைப் பார்க்க முடியுமே தவிர ரஷ்சிய அரசுக்கு எதிரான நடவடிக்கையாக இது வாக்னர் குழு தலைவர் உட்பட யாராலும் சொல்லப்படவில்லை. இதில் புட்டினின் சாதுரியம்.. மக்களுக்கோ.. ரஷ்சிய படைகளுக்கோ.. வாக்னர் குழுவினருக்கோ.. இதர ரஷ்சிய ஆதரவுக் குழுக்களுக்கோ.. எந்த இழப்பும் இல்லாமல்.. பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தது தான். இதன் மூலம்.. மேற்குலகம் எதிர்பார்த்த ரஷ்சிய படைகளுக்கு எதிராக வாக்னர் குழு சண்டையிட்டால்.. மாஸ்கோவை பிடிக்கப் போனால்.. ரஷ்சிய படைகளை உக்ரைனில் இருந்து பின்வாங்க வேண்டி வரும்.. அல்லது ரஷ்சிய படைகளின் பல.. கவனம் சிதையும்.. இந்த நேரத்தில்.. தாங்கள் உக்ரைனின் சொலக்கியின் படைகளிடம் எதிர்பார்க்கும் வெற்றியை சுவைக்கலாம்.. மேற்குலக மக்களை ஏய்க்கலாம் என்று கனவு கண்டனர். ஆனால்.. புட்டின் சாமர்த்தியமாக காய் நகர்த்தி மோதல்கள் இன்றி எல்லாத்தையும் 24 மணி நேரத்துக்குள் முடிவுக்கு கொண்டு வந்துவிட்டார். வாக்னர் குழு அல்லாமல்.. வேறு உக்ரைன் சார்ப்புக் குழுக்கள் நுழைந்திருந்தால்.. அண்மையில் அப்படி நுழைந்து அழிந்து போன உக்ரைனின் ஊடுருவல் அணிக்கு நடந்த கதிதான் நிகழ்ந்திருக்கும். மாஸ்கோ செல்லும் வழியில் செல்லக் கூட காலம் இருந்திருக்காது. ஆனால்.. வாக்னர் குழுவை ரஷ்சியா எதிரியாகப் பார்க்கவில்லை. புட்டினும் பார்க்க விரும்பவில்லை. அதற்கு காரணம்.. வாக்னர் குழு ரஷ்சிய மக்களால் கட்டி அமைப்பட்ட ஒரு தனியார் இராணுவக் குழு. வாக்னர் தலைவர் புட்டினை ஒருபோதும் குற்றம் சாட்டியதில்லை. இராணுவ தலைமைகள் சிலவற்றோடு தான் அவருக்கு முரண்பாடிருந்தது. அவர்கள் மாஸ்கோவை தளமாகக் கொண்டியங்கிய படியால் தான்.. வாக்னர் மாஸ்கோ நோக்கி தன் படையோடு போனார். அப்படி போயிருந்தாலும்.. இராணுவத் தலைமைகளை அகற்ற கோரி இருப்பாரே தவிர.. ஒருபோதும்.. புட்டினையோ.. புட்டின் ஆட்சியையோ கவிழ்க்க நினைத்திருக்கமாட்டார். மேற்குலகம் ஊதிப் பெருப்பிப்பது போல ஒன்றும் நடந்திருக்காது. நடக்கவும் விட்டிருக்க மாட்டார்கள். -
டைட்டானிக் சுற்றுலாப்பயணிகளிற்கான நீர்மூழ்கி காணாமல்போயுள்ளது
nedukkalapoovan replied to ஏராளன்'s topic in செய்தி திரட்டி
போனது எல்லாம் பெரிய பணக்காரர்கள். அது Titanic.. இது Titan. இதற்கு முதல் இந்த இடத்தை எத்தனையோ தரம் போய் பார்த்தெல்லாம் வந்திருக்கினம்.. ஆக இது ஒரு புது இடமல்ல. இது என்னவோ சதியா இருக்குமோ என்ற சந்தேகம் தான் மிஞ்சுது. என்ன இன்னும் சில வருடங்களில் ஹொலிவூட்டுக்கு காசு பார்க்க.. ஒரு கதை ரெடி. அதற்குப் பெயர்..Titan. உக்ரைனில்.. ஹொலிவூட் காட்சிகள் அரங்கேறும் ஸ்ரார் வோர் ரேஞ்சில.. உக்ரைன் அடிக்கும் என்று கனவு கண்ட மேற்குலக ஊடகங்களுக்கும் மைன்ட் செட்டுக்கும்.. ஒரு மாற்றம் அவசியம் தானே. -
போனது எல்லாம் பெரிய பணக்காரர்கள். அது Titanic.. இது Titan. இதற்கு முதல் இந்த இடத்தை எத்தனையோ தரம் போய் பார்த்தெல்லாம் வந்திருக்கினம்.. ஆக இது ஒரு புது இடமல்ல. இது என்னவோ சதியா இருக்குமோ என்ற சந்தேகம் தான் மிஞ்சுது. என்ன இன்னும் சில வருடங்களில் ஹொலிவூட்டுக்கு காசு பார்க்க.. ஒரு கதை ரெடி. அதற்குப் பெயர்..Titan. உக்ரைனில்.. ஹொலிவூட் காட்சிகள் அரங்கேறும் ஸ்ரார் வோர் ரேஞ்சில.. உக்ரைன் அடிக்கும் என்று கனவு கண்ட மேற்குலக ஊடகங்களுக்கும் மைன்ட் செட்டுக்கும்.. ஒரு மாற்றம் அவசியம் தானே.
-
தென்னிலங்கையில் இரண்டு பெரும் கிளர்ச்சிகளில் ஈடுபட்ட ரோகண விஜவீரவின் உடலத்தை வெளிக்காட்டும் போது வராத தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்... இல்லாத பிரபாகரனதும்.. குடும்பத்தினதும்.. பொட்டம்மானினதும்.. மரணச் சான்று.. மரபணுச் சான்று அறிக்கையை கொடுப்பதால்.. மட்டும் அச்சுறுத்தப்படுமாம்..?????! பார்ப்போம்.. மேன்முறையீட்டில் என்ன வெளிச் சொல்லினம் என்று..??!
-
விசா வழங்கும் போது பிரித்தானிய தூதரகம் நிறுவனப் பதிவுகளை பரிசோதிக்காமலா.. விசா வழங்குது.. எங்கேயோ இடிக்குதே..??! இப்படியான விசா.. வேலை விசா.. படிப்பு விசா எடுத்து பிரித்தானியாவுக்கு வாறவை..பிரித்தானிய அரச இணையத்தில்.. யார் யாருக்கு.. இந்த விசா எடுத்த ஆக்களை அழைக்க அனுமதி இருக்கு என்ற லிஸ்ட் இருக்குது. அதனை பயன்படுத்தினால்.. ஏமாற்றம் வராதே. https://www.gov.uk/government/publications/tier-2-employers-in-the-health-care-sector/list-of-tier-2-employers-in-the-health-care-sector-categorised-by-region-and-the-industry-sectors https://www.gov.uk/government/publications/register-of-licensed-sponsors-workers https://www.gov.uk/government/publications/register-of-licensed-sponsors-students
-
யாழ். பல்கலை துணைவேந்தர் பதவிக்கு நால்வர் போட்டி
nedukkalapoovan replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
சொறீலங்காவில் உள்ள பல்கலைக்கழகச் சூழலை மேற்கு நாடுகளில் உள்ள சூழலோடு ஒப்பிட முடியாது. ஏனெனில் சொறீலங்காவில்.. சிங்கள பெளத்த பெரும்பான்மை பேரினவாத அரசின் நிகழ்ச்சி நிரல்களுக்கு உட்பட்டே பல்கலைக்கழக துணை வேந்தர்கள்.. பல்கலைக்கழகங்களை இயக்க வேண்டிய சூழல்.. இருக்கிறது. சனாதிபதி நியமிக்கும் அரச பிரதிநிதி போலவே உபவேந்தர் செயற்படுகிறார். இந்தச் சூழலில்.. தமிழர் பகுதிகளில்.. சிங்களவர் ஒருவர் துணைவேந்தரானால்.. நிகழக்கூடிய சம்பவங்கள் அப்பிராந்திய மாணவர்களின்.. சமூக மக்களின் நலனில் எவ்வளவு அக்கறையோடிருக்கும் என்பதை போர்காலத்தில் தென்னிலங்கைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுப் பெற்ற அனுபவத்தில் இருந்து சொல்ல முடியும். எங்களின் பாதுகாப்பை நாமே தீர்மானிக்கும் வகையில்.. ஆபத்தான சூழல்களுக்குள் தள்ளிவிடப்பட்ட எத்தனையோ சம்பவங்களை தாண்டி வந்தவர்கள்.. தென்னிலங்கை பல்கலைக்கழகங்களால்.. தமிழ் மாணவர்கள் என்பதற்காகவே அனாதைகளாக விடப்பட்டவர்கள் என்ற வகையில்.. வெளிநாட்டுப் பல்கலைக்கழங்களுக்கு இணையாக.. சொறீலங்கா பல்கலைக்கழக சூழல்களை எதிர்பார்க்க முடியாது. அதுவும் சுதந்திர தாயக வேட்கை கொண்ட மக்களின் இயங்கு சக்தியாக இருந்த பல்கலைக்கழகங்களில்.. சுதந்திர கல்வி சமூகச் செயற்பாட்டை சிங்கள பெளத்த ஆளும் வர்க்கமும் ஆக்கிரமிப்பு இராணுவ இயந்திரமும் மனமுவந்து அங்கீகரிக்கும் என்று. இதற்குள் நீங்கள்.. சாதிய.. மத.. இன வகுப்புவாதங்களை வேறு திணித்து சூழலை சிக்கலாக்குகிறீர்கள். நீங்கள் குறிப்பிட்டதற்காகச் சொல்கிறேன்.. யாழ் பல்கலைக்கழக பீடாதிபதிகள் தரத்தில்.. பல வகுப்புவாத பின்னணி கொண்டவர்களும் இருந்தே உள்ளனர். நாங்கள் கல்விச் சூழலில் எந்த வகையான வகுப்புவாதங்களையும் அங்கீகரிப்பதில்லை என்பதால்.. எல்லாரும் மாணவர்களே.. கல்விச் சமூகத்தவர்களே என்ற சிந்தனையை மட்டும் ஏற்றுக் கொண்டிருப்பதாலும்.... சொறீலங்காவில் உள்ள சிங்கள பெளத்த தேசிய வாத ஆதிக்கத்தின் தாக்கம் எவ்வளவு தீவிரமான ஊடுருவல்களை பலகலைக்கழகச் சூழலுக்குள் கொண்டுள்ளது என்பதை உணர்ந்திருப்பதாலும்.. இதனை குறிப்பிட்டுச் சொல்ல முடியும். -
நல்ல காலம் இந்தச் சிக்கல்களுக்குள் மாட்டுப்படவில்லை.. எங்கள் மாணவப் பருவம். 😄 வெளிநாட்டில் தமிழ்மொழியை கற்பது தெரிவாக இருப்பது தவறே அல்ல. ஆனால் போட்டிப் பரீட்சைகளுக்காக மொழியை கற்பிப்பது என்பது... மொழி ஆற்றலை.. ஆளுமையை வளர்க்குமா.. பரீட்சையோடு மொழி அறிவு மடியுமா... என்பதை இட்டுத்தான் அந்தக்ச் சிக்கல் உள்ளது. ஏனெனில்.. அந்தந்த நாட்டு மொழிகளில் கற்று பரீட்சைகளில் தேறியதையே ஞாபகம் வைச்சுப் பாவிக்கத் தெரியாத பலரை தான் இப்ப காண முடியும்.. புலம்பெயர் நாடுகளில்.
-
யாழ். பல்கலை துணைவேந்தர் பதவிக்கு நால்வர் போட்டி
nedukkalapoovan replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
இதற்குள் சாதி.. மத.. இன.. வகுப்புவாதங்களுக்கு அப்பால்.. சொறீலங்கா சனாதிபதி தான் எல்லாமே. முதலில் இந்தச் சர்வாதிகாரத்தை ஒழிக்கனும். அப்புறம் கல்வித் தகுதி அடிப்படையில்.. தனிமனித ஒழுக்கம் உட்பட பல விடயங்களை கருத்தில் கொண்டு.. யாழ் பல்கலைக்கழக.. மற்றும் அந்த பல்கலைக்கழகம் அமைந்திருக்கும் சூழல்.. சமூகத்தை நன்கு அறிந்த ஒருவர் துணை வேந்தராவதே பல்கலைக்கழக நடவடிக்கைகளுக்கு சிறப்பாகும். அவரை கல்விச் சமூகம் தேர்வு செய்ய வேண்டுமே.. தவிர.. நாட்டின் சனாதிபதி.. அரசியல்வாதி.. மத இன..சாதி அடையாளங்கள்.. தெரிவு செய்ய அனுமதிக்கக் கூடாது. தமக்கான தமது எதிர்கால மாணவ சமூகத்தின்.. தம் பிராந்திய சமூகத்தின் நலனில் அக்கறையுள்ள ஒருவரை துணைவேந்தராக்குவதில் மாணவர்களின் உரிமையும் பாதுகாக்கப்படனும். -
வர வர மனிதனின் புத்தி வக்கிரமாகிக்கிட்டே போகுது. இதிலும்.. போதை ஊசி பாவிச்சு விளையாடுவினமோ..???! மேற்கு ஐரோப்பா.. மிக மோசமான சிந்தனையில் போய்க்கிட்டு இருக்குது.
-
எரிவாயு விலையை மீண்டும் குறைக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு
nedukkalapoovan replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
சனாதிபதி என்ன பொருளாதார நிபுணரா..?! விலைகளை தீர்மானிப்பது ஏற்றுமதி இறக்குமதியை தீர்மானிப்பது எல்லாமே அவராக இருக்குது. சொறீலங்காவில் இந்த ஒற்றையாட்சி.. சனாதிபதி சர்வாதிகார முறைமை ஒழியாமல்.. நாட்டுக்கு விமோசனம் இல்லை.