Jump to content

nedukkalapoovan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    32973
  • Joined

  • Days Won

    268

Everything posted by nedukkalapoovan

  1. இது பிரான்சுக்கு அடுத்தப்படி எனலாம். ரஷ்சிய - உக்ரைன் போரைச் சாட்டி.. ஈ யூவை மீளக் கட்டியமைக்க முயற்சிக்கினம்.
  2. மிகுதி 27 % கணிசமான அளவு என்று சொல்லலாம் தானே. மேலும் பெரும்பான்மையான இளவயதினர் என்று யாரும் குறிப்பிட்டதாகத் தெரியவில்லையே...??! இதை தான் சொல்வது சப்புக்கட்டென்று. 27 சதவீதம் இளையோர் பிரக்சிட்டுக்கு வாக்களத்திருக்கிறார்கள். இது கணிசமான அளவும் கூட. அதாவது நாலில் ஒருவர் பிரக்சிட்டுக்கு வாக்களித்திருக்கிறார்கள். குறிப்பாக இந்த வயதினருக்கு உல்லாசமே வாழ்க்கை.. குறிப்பாக சமூக வலை தாக்கம் அதிகம்.. என்றிருக்கும் போதும் கூட.. நாலில் ஒருவர் நாட்டைப் பற்றியும் சிந்தித்திருக்கிறார்கள். இத்தாலியும். ஆனால் இத்தாலியில் ஈ யூவுக்கு எதிரான மக்களின் எண்ணம் அதிகரித்தே வருகிறது.
  3. மேலும் நீங்கள் இளையோர் என்று யாரைச் சொல்லுகிறீர்கள் என்பதும் ஒரு பிரச்சனை. உங்கள் வாதத்திற்கு ஏற்ப அதனையும் மாற்றுவீர்கள். இளையோர் என்பதிலும் 18 மற்றும் அதற்கு மேற்பட்ட மாணவர்கள்.. என்பது அடங்கும். மாணவர்கள் மத்தியில் சமூக வலை தாக்கம் அதிகம். இருந்தாலும் அந்தப் பருவத்தினரில் கூட 27 சதவீதம் பேர் பிரக்சிட்டு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இங்கிலாந்தில் லண்டன் பெரும் பகுதியை தவிர (கலப்பினத்தினர் வாழும் பகுதி) மிகுதி இடங்களில் பெரும்பான்மை... பிரக்சிட் வாக்குகளே.
  4. அண்மையிலும் கொசாவோ - சேர்பியப் பிரச்சனையை கிளற முற்பட்டனர். ரஷ்சியா சேர்பியாவை அமைதிப்படுத்தியதால்.. அமுங்கிவிட்டது. ரஷ்சியாவின் இராணுவ கவனத்தை உக்ரைன் பக்கமிருந்து சிதறடிக்க.. நேட்டோ.. கொசவாவோ கைப்பிள்ளையாகப் பாவிக்க முனைந்தது. ஆனால் அது தற்போது கைகூடவில்லை. அதில் நேட்டோவுக்கு தோல்வியே.
  5. இளம் வயதினரில் குறிப்பிட்ட ஒரு பகுதியினரில்.. பொருண்மியம் பற்றிய கவலையோ.. குடிவரவுகள்.. சமூகத்தாக்கங்கள் பற்றிய அறிவோ.. அறிய வேண்டிய தேவையோ..புரிதலோ இல்லை. அவர்களுக்கு விசா இன்றிய உல்லாசப் பயணங்கள்.. இலவச மொபைல் சேவைகள்.. குறைந்த பயணக் காப்புறுதித் திட்டங்கள்.. இவை போதும். இந்தக் கூட்டம் எப்படி வாக்குப் போடும் என்பதை மக்களில் அநேகர் அறிவார்கள். ஆனால்.. இளையோரிலும் கணிசமான அளவினர்.. நாட்டு நலனை முன்னிறுத்தி வாக்குப் போட்டுள்ளனர்.. குறிப்பாக வெள்ளையர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில். கலப்பினத்தினர் வாழும் பகுதிகளை விட. இதில் நாங்கள் இளையோரா.. இல்லையா.. என்பதெல்லாம் தலைப்பு சம்பந்தப்படாத விடயம். வீண் சீண்டு முடிதல். அதனால் தான் மக்களிடம் நேரடியாக வாக்குகள் மூலம் கருத்தறியுங்கள் என்று ஆரம்பத்தில் இருந்து சொல்லுறம். அதற்கான சந்தர்ப்பங்களை பிரிட்டனைப் போல் அளியுங்கள் என்கிறோம். அது விளங்காமலா.... இந்தக் கருத்து நீட்சி. 😀
  6. இது ஹங்கேரியால் எடுக்கப்பட்ட புள்ளிவிபரம்.. 2018. இதில் 7 அங்கத்துவ நாடுகளில் 50 அல்லது 50 க்கு கீழ் உள்ளது ஈ யூக்குவான விருப்பம். ஆனால் முன்னர் இணைக்கப்பட்டதில் எதுவும் 50 அல்லது 50க்கு கீழ் இல்லை..???! (கிறீசை தவிர) அந்த வகையில் இந்தக் கருத்துக்கணிப்புக்களின் நடுநிலைத்தன்மை.. ஈ யூவின் செல்வாக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம். எனவே சனநாயக முறைப்படி மக்களிடம் நேரடியாக வாக்குகள் மூலம் கருத்துக் கேட்பதே சாலப் பொருந்தும். அதை ஈ யு முதலில் செய்ய முன்வரவேண்டும். செய்வார்களா..??! நிச்சயமாக இல்லை ஏனெனில்.. அதோடு ஈ யு என்ற பெரும் பண முதலைகளின் தரகுக் கம்பனி.. சிதறும்... என்று அவர்களுக்கே தெரியும்.
  7. மேலே தரப்பட்ட இணைப்பில் இருந்து பெறப்பட்ட இந்த தரவுகளின் படிப் பார்த்தால் கூட.. 2016 இல் பிரிட்டனை விட பிரான்சில் தான் அதிகம் ஈ யூவுக்கு எதிரான கருத்து இருந்திருக்கிறது. 2016 இல் பிரிட்டன் மக்கள் வாக்களிப்பில் ஈ யுவுக்கு எதிராகவே வாக்களித்தனர். ஏன் அந்தச் சந்தர்ப்பத்தை இப்போதாவது பிரான்ஸ் மக்களுக்கு அளித்து கருத்துக் கேட்கக் கூடாது. இந்தக் கருத்துக் கணிப்புக்களில் ஈயுவின் செல்வாக்கில்லை என்று எப்படி நிரூபிக்க முடியும் என்பது அடுத்த கேள்வி..??!
  8. பிரிட்டனில் வைச்சது போல.. ஒரு தேர்தலை வைக்கச் சொல்லுங்களேன். கருத்துக் கணிப்பை மக்கள் சொல்லுவார்கள். ஏன் அச்சப்படுகினம்..??! உண்மையான சனநாயகம் இருந்தால் மக்கள் கருத்தறிவதில் என்ன தயக்கம்.. அதுவும் பிரிட்டன் போன்ற முதன்மைச் சக்தி ஒன்று ஒன்றியத்தை விட்டு கழரும் போது.. ஒன்றியம் பற்றிய கருத்தை ஏன் மற்றை நாடுகளில் கேட்கத் தயக்கம். பிரான்சின் தேசியவாதக் கட்சி வாயே திறப்பதில்லை என்றால்.. ஒன்றியத்துக்கு பலமான கருத்து நிலவுகிறது என்பதை நீங்கள் நம்புவீர்களானால்.. ஏன் பிரான்ஸ் ஒன்றியத்தில் தொடர்வதா இல்லையா என்ற கருத்துக் கேட்கத் தயங்கிறது. பிரான்ஸில்.. தான் பிரிட்டனுக்கு முதலே ஒன்றியத்தில் இருந்து விலகுவது குறித்த குரல்கள் எழும்ப ஆரம்பித்தன. Frexit, Nexit or Oexit? Who will be next to leave the EU https://www.theguardian.com/politics/2016/jun/27/frexit-nexit-or-oexit-who-will-be-next-to-leave-the-eu பிரக்சிட்.. முடிவான போது.. எழுந்த இந்தக் குரல்கள் முற்றிலுமாக அடங்கிவிட்டன என்று நீங்கள் நம்பலாம்.. ஆனால்.. மக்கள் நம்ப ஒரு ஆதாரமும் இல்லை. ஏனெனில் மக்களுடன் உரையாடும் போது அவர்களின் விருப்பு வெறிப்பை நன்கு அறிய முடிகிறது. ஆனால்.. நீங்கள் உங்கள் தரப்பு நியாயத்தையே முன்னுறுத்துகிறீர்கள். அது தர்க்கத்திற்கு உதவலாம்.. அதுவே யதார்த்தமாகிடாது.
  9. ஆனால் ஈ யூ வரிச் சுமையை ஏற்றி விடுவார்கள். ஈ யூக்கான யுரோ பங்களிப்பையும் கூட்டுவார்கள். அதன் மூலம் கொடுப்பதை பிடிங்கி விடுவார்கள். ஈ யூவா சும்மாவா. இதனால் தான் பிரிட்டன் ஈயூவை விட்டு வெளியில் வந்தது. இப்ப.. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கனுமான்னு தேர்தல் வைச்சால்.. பெரும்பாலான மக்கள்.. வெளியேறவே வாக்களிப்பார்கள். அந்தளவு கடுப்பில் இருக்கிறார்கள்.
  10. கீழ் மட்டக் களவில் இருந்து உயர் மட்டக் களவு வரை இந்த கிழக்கு மற்றும் பால்கன் ஐரோப்பிய நாட்டவர்கள் செய்யத் துணிந்தவர்கள். முன்னர் எல்லாம் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இந்த இயல்பான பல நல்ல பழக்க வழக்கங்கள் அருகி வருவதை அவதானிக்க முடிகிறது. இங்கிலாந்திலும் எப்ப லேபர் ஆட்சி இவங்களுக்கு வழி திறந்து விட்டிச்சோ அன்றிலிருந்து வீட்டு கேட் கூடக் காணாமல் போயிடுது. அதையும் இரும்புக்கு பெயர்த்து விற்றுவிடுகிறார்கள். பொலிஸுக்கு முன்னாலேயே சிறிய ரக வானை கொண்டு வந்து கேட் களை புடுங்கி ஏத்திறாங்கள். பொலிஸ் வேடிக்கை பார்க்குது. இங்குமட்டுமல்ல.. ஸ்கான்டிநேவியன் நாடுகள்.. பொதுவாக அப்பாவிகள். அங்கு இப்ப நிலைமை படுமோசம். மேலும் போதைப் பொருள் நாற்றம்... மூலைக்கு மூலை. பொதுச் சுத்தம் தொலைந்து போய்விட்டது. எம்மவர்கள் சட்டத்துக்கு பயந்தவர்கள். இவர்களுக்கு ஒரு பயமும் இல்லை. இதுகளை ஐரோப்பிய வலயத்துக்குள் கொண்டு வருவது மிக விரைவில்.. ஐரோப்பிய ஒன்றியம் காணாமல் போவதையே ஊக்குவிக்கும். மேற்கு ஐரோப்பிய மக்கள் அவ்வளவு வெறுப்பில் இருப்பதை அவர்களின் பேச்சுக்களில் இருந்தே உணர முடிகிறது. ஆட்சியாளர்கள் மக்களின் விருப்பறியாமலேயே இவர்களை உள்வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.. யூரே வரவை கணக்கில் வைச்சு.
  11. 22 சுருங்கி 16 ஆகி இப்ப 10 நிற்குது.. தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்ந்த எம்பிக்கள். ஈபிடிபி ஒன்றில் இருந்து இரண்டாகிட்டு.. அதுவும் வன்னியில் இருந்து ஒருத்தர். சிங்கள எஜமானர்களின் தேவை குசிப்படுத்தலுக்காக.. தமிழ் தேசியத்தை சிதறிக்க கூட்டமைப்பை எப்ப சம் சும் கும்பல் உடைக்க ஆரம்பித்தார்களோ அப்பவே.. ஈபிடிபிக்கு வாக்குச் சேர்க்கவும் ஏன் சிங்களக் கட்சிகளுக்கு தமிழர்களிடம் வாக்குச் சேர்க்கவும் ஆரம்பித்துவிட்டார்கள். சம் சும் வெட்டித் தலைமை உள்ளவரையும் தமிழ் தேசியத்தின் பெயரால் தமிழ் கட்சிகளிடையே பலமான ஒற்றுமை எழாத வரையும்.. ஒட்டுக்குழுக்கள் காட்டில் மழை விட்டு விட்டு அடிக்கும். தவிர்க்க முடியாததே.
  12. கூட்டமைப்பு வெறும் சொல்லாத்தான் இருக்குது. 1998 முதல் 2009 வரை இருந்த கூட்டமைப்பு அல்ல இன்றிருப்பது. எந்த சனநாயகத் தன்மையும் அற்ற பதவி ஆசை பிடித்த சம் சும் கும்பலின் வெட்டி வரட்டுக்கெளரவ அமைப்பாக சிங்கள கூலி அமைப்பாகத்தான் அது இருக்குது இப்ப. அது யாருடன் பேசியும் தமிழ் மக்களுக்கு எள்ளளவும் பயனில்லை.. எதையும் சாதிக்கப் போவதும் இல்லை. இருந்த ஒற்றைமையை குலைப்பதுதான் அதன் நோக்கம். தமிழ் தேசிய சிந்தனையை சிதறடிப்பதுதான் இவர்களுக்கு சிங்களத்தால் வழங்கப்பட்டுள்ள புரஜெக்ட். அதனை நோக்கி தான் அவர்கள் செயற்படுவார்கள். இவர்களிடம் காணாமல் போன உறவுகளின் சொந்தங்கள் கூடிய எதிர்பார்ப்பை வைக்கக் கூடாது. ஏமாற்றங்களே மிஞ்சும். நீங்களாக ஒரு உருப்படியான அமைப்பை உருவாக்கி உங்கள் தேவைகளை நோக்கங்களை சர்வதேசப் பிரதிநிதிகளிடம் கொண்டு செல்லுங்கள். வெறுமனவே ஐநா.. மேற்கு நாடுகள்.. அமெரிக்கவோடு நிற்காமல்.. சீனா.. ரஷ்சியா.. கியூபா உட்பட்ட லத்தீன் அமெரிக்க நாடுகள்.. ஆபிரிக்க நாடுகள் என்று உங்கள் பிரச்சனையை சர்வதேச மயப்படுத்துவதுதான் ஏதேனும் உருப்படியா நிகழ வழி வகுக்கும். சிங்களவனிடமும் சிங்களக் கூலிகளிடம் கதறிக் கொண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை... கொலைகாரனிடமே.. நீதி கேட்பது எப்படி நீதிக்கு வழிவகுக்கும்.
  13. கள உறவுகள் வாசகர்கள் எல்லோருக்கும் இனிய 2023 புதுவருட வாழ்த்துக்கள். புத்தாண்டு சபதம்: யார் மனதையும் இயன்றவரை புண்படுத்தாமல் நடந்து கொள்ள வேண்டும். தெரிந்தோ தெரியாமலோ புண்படுத்தி இருந்தால் மன்னிப்புக் கேட்கனும். அதற்காக சுயத்தை சுய கெளரவத்தை இழக்கும் படி நடக்கக் கூடாது.
  14. இவர் வாயால் வடை சுடலாம் என்று நினைக்கிறார் போல. முதலில்.. நீங்கள் எல்லாம் வயலும் வாழ்வுக்கும் இறங்குங்கள். வெள்ளை சுள்ளையோடு அலைந்ததும் அறிக்கை விட்டதும் காணும். நீங்களும் இந்தப் பூமியில் சாதாரண மனிதர்கள் தானே.. இந்த வெள்ளை சுள்ளைகளை.. அடுத்தவன் சூடிய பட்டங்களை கழற்றி வீசினால்....
  15. ரஷ்சியாவின் தகர டப்பாவை அடிக்க.. இஸ்ரேல்.. அமெரிக்கான்னு ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகளை கொடுத்தும்.. தகர டப்பா இறங்க வேண்டிய இடங்களில் இறங்கிக்கிட்டே தான் இருக்குது.
  16. எல்லாம் ஈபிடிபிக்கு வாக்குப் போடுற மந்தைகளாலும்.. தமிழ் தேசிய கட்சிகளுக்கிடையே இல்லாத ஒற்றுமையாலும் வாற பிரச்சனை. இதற்கு சம் சும் கும்பல் தான் கால்கோள். தமிழ் தேசியக் கட்சிகள் மக்களுக்காக ஒற்றுமைப்பட்டிருந்தால்.. பதவி ஆசைக்கு இடம் கொடுக்காமல் இருந்திருந்தால்.. இந்த சபையை அறுதிப் பெரும்பான்மையோடு ஆட்சி செய்திருக்கலாம். மக்களுக்கு நல்ல சேவைகளை வழங்கி இருக்கலாம். ஒட்டுக்குழு ஓணான் குழுவை சார்ந்திருக்க வேண்டியதில்லை. 16+13=29 தேவை 23 இடங்கள் தான் பெரும்பான்மைக்கு
  17. இவர் எழுதிய நூலை படித்தேன். அமெரிக்காவோ மேற்குலகோ ஒரு வேற்று நாட்டவர் உயர்ந்த இடத்துக்கு வருவதற்கு எத்தனை சவால்களை சந்திக்கனுன்னு தெளிவாக எழுதி வைச்சிருக்கிறார். இன்றைய கிரிப்டே கரன்சியின் முன்னோடி இவர் என்றால் தவறில்லை. இவரை உளவு பார்க்க.. எவ் பி ஐ ஏஜென்டே.. வேலைக்கு போயிருக்கிறார். அவர் தமிழரல்ல. வெள்ளை.
  18. இதுதான் சொல்லுறது ரெளடிகளை அமைச்சராக்கக் கூடாதுன்னு. சிவில் சேவையில் உள்ள ஒருவர் சிவில் பிரிச்சனைகளுக்கு எதற்கு இராணுவ அதிகாரிகளை சந்திக்கனும். அதுகும் 35 வருடங்களாக ஒரு இனத்தின் மீது அடக்குமுறை தாக்குதல்களையும் ஆக்கிரமிப்பு இன அழிப்புத் தாக்குதல்களையும் செய்த இராணுவத்தை பாதுகாப்புக்கு அழைக்க முடியும்..??! ஒட்டுக்குழு என்ற வகையில் குத்தியருக்கு சிங்கள இராணுவத்தோடு பல தொடர்புகள் இருக்கலாம். இருக்குது. பல மனிதப் படுகொலைகளை வீடழிப்புகள்.. ஊரழிப்புகளில் இவர்களுக்கு நேரடி பங்களிப்பு இருக்குது. அது அவர்களுக்குரிய விடயம். ஆனால்.. சொறீலங்கா சனநாயக நாடு என்ற பெயரில் இராணுவ நிர்வாகத்தை வடக்குக் கிழக்கில் கொண்டிருப்பது வெளி உலகிற்கு தெரியுமா..??! இப்படியான சந்திப்புக்கள் அதைத்தான் சொல்கின்றன. சிவில் பிரச்சனையை கையாள்வது சனநாயக நாடுகளில் காவல்துறை தானே. அதுதான் சிவில் கட்டமைப்பு..?!
  19. அப்ப உள்ளூராட்சி தேர்தல் வரப்போகுது. அதுதான் குத்தியர் அடி எடுத்து வைக்கிறார். இந்த யாழ் மாநகர சபை ஈபிடிபியின் பொன் முட்டையிடும் வாத்து. இதை வைச்சு அடிச்ச கொள்ளைகள் ஏராளம். இருந்தும்.. இவங்களுக்கு வாக்குப் போட ஒரு கூட்டமிருக்குது. அதுகளை மீண்டும் ஏமாற்ற.. மணிவண்ணனை வெளில தூக்கிக் கடாச வேண்டிய தேவை இருக்குது. ஏனெனில்.. மணிவண்ணன்.. புலிப் பினாமியாக பிம்பப்படுத்தப்பட்டவர். மேலும் ஆட்சியில் இருந்த சபையில் எதிர்கட்சி வரிசைக்குக் கூட ஆட்கள் கிடைக்காத நிலையில்... மணிவண்ணனை வைச்சு.. ஈபிடிபி புகுந்து விளையாடலாம் என்று நினைக்க.. மணிவண்ணணோ ஈபிடிபிக்கு கணக்கு விட்டுக் கொண்டிருந்ததால்.. கடைசி நேரத்தில் இந்த கழுத்தறுப்பு. இதனை ஈபிடிபிக்கு எதிராகவும் தனக்கான வாக்கிற்காகவும் மணிவண்ணன் பாவிப்பாரா.. இல்லையா பொறுத்திருந்து பார்ப்போம். ஈபிடிபி தோளில் இருந்து சதுராட்டம் போட அனுமதிக்க முடியாது என்று அதன் செயலாளர் நாய் அகம்.. அறிக்கை விட்டது நினைவு படுத்தத்தக்கது. குத்தியருக்கு இப்ப போட்டி ஆயுத அரசியல் செய்ய புலிகள் இல்லாத நிலையில்.. மணிவண்ணன் போன்றவர்களை வைச்சு குத்தியர் சவாரி செய்வதே நிகழ்கிறது. சிங்கள எஜமானர்களின் முன் தான் புறக்கணிக்கப்பட முடியாத கொம்பு என்று காட்ட வேண்டிய தேவை இப்ப குத்தியருக்கு எழுந்திருப்பதன் விளைவே இதெல்லாம். ரணில்.. ராஜபக்ச கும்பல் போல் அல்ல. வைக்க வேண்டியவர்களை வைக்க வேண்டிய இடத்தில் வைப்பதில் கில்லாடி நரி. கருணா என்றவர் இப்ப முகவரியில்லாமல் போயிருப்பது கவனிக்கத்தக்கது.
  20. அன்று ஒரு வீர மைந்தன் சிங்கக் கொடியை தமிழீழத் தலைநகரில் (திருமலை)யில் எரித்து.. தமிழரின் சுதந்திர வேட்கைக்கு தூபமிட்டார்... அதே திருமலையில் இருந்து வந்த இவர்களோ.. சிங்கக் கொடியை தூக்கிப் பிடிச்சு.. சொந்த மக்களின் சுதந்திர வேட்கைக்கு சவக்குழியிட்டனர். இப்படியானவர்கள் உள்ள நிலையில்.. நரி என்ன செய்யும். இதையும் செய்யும் இன்னும் செய்யும். தமிழர்கள் இழிச்சவாயர்கள் என்று அவர்கள் வாக்குப்போடுபவர்களே தீர்மானிக்கும் போது எதிரி..??!
  21. இலங்கை: பொருண்மிய நெருக்கடி தொடர்ந்தாலும் மக்கள் மீதான நெருக்கடி குறையும் முதன்மை அரசியலில் பெரிய மாற்றங்கள் நிகழாது. சில தேர்தல்கள் நிகழ வாய்ப்புண்டு. தமிழர்கள் தொடர்ந்தும் தீர்வின்றி ஏமாறுவார்கள். ஹிந்தியா: சீன - ஹிந்திய உறவில் புதிய புடுங்குப்பாடு வரும். தமிழகம்: திமுக வின் திட்டமிடலற்ற ஆட்சியின் விளைவு.. பொருண்மிய சிக்கலை நோக்கி நகரும். ரஷ்சியா - உக்ரைன் மோதல்கள் ஒன்றில் இராணுவ ரீதியாக முடிவுக்கு வரும் அல்லது ராஜதந்திர ரீதியான முடிவு எட்டப்படும். இயற்கை: பூமியின் சூடாதல் விளைவின் தாக்கம் அதிகரிக்கும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடைமுறைகள் தீவிரமாகும் நாடுகளில். விண்வெளி: சந்திரனுக்கான பயணங்களில் நாடுகளுக்கிடையே மிகுந்த போட்டி நிகழும். செவ்வாய்க்கான பயணங்கள் தொடரும். விண்வெளி சுற்றுலாவில் புதிய மைல் கல் நிகழ்வு நிகழும். நான்: புதிய இடத்தில் வேலை செய்வேன்.
  22. ரம்புக்வெலவும் போதையில்.. அவுஸில் மாடியில் இருந்து குதிச்சவர்.. நல்ல காலம் புலிகள் இருக்கேல்ல. இல்லாடி அங்க தான் பழி வந்திருக்கும். இவரும் எப்படி இறந்தார் என்றில்லை.. உடன புட்டின். ஆனால் நிறைய கார் குண்டு வெடிப்பு.. கார் விபத்தென்று உக்ரைன் காரர்கள்.. பல ரஷ்சிய விசுவாசிகளை மேல அனுப்பிட்டினம். அதைப் பற்றி இங்க யாரும் மூச். இஸ்ரேல்காரன் ஊரெல்லாம் மேஞ்சு மேஞ்சு போட்டுத்தள்ளுறான் அப்பவும் மூச். சி ஐ ஏ காரன் நாடு நாடா பூந்து போட்டுத்தள்ளுறான் அப்பவு மூச். பிரித்தானிய உளவு (MI6- SIS)) மற்றும் ஆழ ஊடுருவும் கும்பல் (SAS) எத்தனையோ கொடும் செயல் எல்லாம் செய்யுது அப்பவும் மூச். ஆக புட்டின் செய்தால் தான் நாங்க வாக் வாக் என்று கத்துவம்.
  23. இன்னும் ஒரு தெரிவுண்டு. உக்ரைன் அடிக்கிற அடியில்... ரஷ்சியா நேட்டோவிடம் முழுமையாக சரணடைந்து அகண்ட நேட்டோ கூட்டமைப்பு ஜப்பானில் போய் முடிந்து அடுத்த அடி.. வடகொரியாவுக்கு.. அதன் பின் சீனா காலி. போற வழியில ஈரான் துடைத்தழிக்கப்பட்டு.. இஸ்ரேல் வசமாகும் என்று ஒன்றுண்டு. அதனை 7வதாக வைச்சுக் கொள்ளச் சொல்லி பிபிசிக்கு சொல்லிப் பாருங்கள். பிரித்தானிய இராணுவ அமெரிக்க வால்பிடி ஆய்வாளர்களுக்கு உது விளங்க இன்னும் வசதி வரல்லைப் போல.
  24. ஒமிக்குரோனுடன் கொரோனா முடியுது என்று எழுதின ஆக்களும் இருக்கினம். அப்படித்தான் இதுகும்.. முடியும்..??!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.