Everything posted by nunavilan
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- கருத்து படங்கள்
- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: ஏய் மாண்புரு மங்கையே படம்:குரு பாடியவர்கள்: சிறினிவாஸ் & சுஜாதா இசை: ஏ.ஆர். ரகுமான்- சிந்தனைக்கு சில படங்கள்...
நெல்லியடி (கரவெட்டி மத்தி) அந்திரான் சனசமுக நிலைய நூலகத் திறப்பு விழாவின் போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படம். யாழ் மண்ணில் முதன் முதலாக பெண்களுக்கென நூலக நேரம் ஒதுக்கி எம்மால் நடாத்தப்பட்ட சன சமுக நிலையம் இது என்பதில் பெருமை. (புகைப்பட உதவி - பாபு)- சிந்தனைக்கு சில படங்கள்...
- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:யெப்பா சப்பா படம்: கணிதன் பாடியவர்கள்: அனிருத்,கல்பனா இசை: சிவமணி- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுவி அண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.- கருத்து படங்கள்
- சிந்தனைக்கு சில படங்கள்...
- மனதைக் கவர்ந்த கவிதைகள்
நான்...இயற்கை பேசுகிறேன்! எங்கு பார்த்தாலும் புலம்பல் இப்படியா பெய்வதென்ற குமுறல்... வெள்ளம் என்கிறீர்கள் வெறுப்பைக்கொட்டி எழுதுகிறீர்கள் உள்ளும்புறமும் தண்ணீரென்று ஊரெல்லாம் அங்கலாய்க்கிறீர்கள்... ஆனால், என்ன குற்றம் செய்தேன் நான்? வாவா என்று வருந்தி அழைத்தீர்கள்... வாடுது பயிரென்று வயலில் நின்று விம்மினீர்கள்... கடவுளே, உனக்குக் கண்ணில்லையா? என்று கையை நீட்டிக் கதறினீர்கள்... கடனைக்கட்ட வழியில்லாமல் கடிதம் எழுதிவிட்டுக் கழுத்தில் கயிற்றை மாட்டிக்கொண்டீர்கள்... கோயில் கண்ட இடமெல்லாம் யாகத்தீ வளர்த்தீர்கள், மழைக்காக ஜெபித்தீர்கள், தொழுகையில் அழுதீர்கள்... கழுதைக்கெல்லாம் கல்யாணம் பண்ணிவைத்து வெய்யில் வானத்தை வெறித்து நின்றீர்கள்... மரங்களுக்குப் பதிலாக மாடிவீடாய் அடுக்கிக்கட்டி இறங்கிவந்து அனைவருமாய் கூட்டுப் பிரார்த்தனை செய்தீர்கள்... ஏரிகளில் இடம்வாங்கி எடுப்பாய் வீடுகட்டி ஏசி போட்டு மாளவில்லை எப்போ வரும் மழையென்றீர்கள்... இத்தனையும் கேட்டுவிட்டு எத்தனை தவிப்பென்று, ஐயோ என இரங்கி ஆறுதலாய்ப் பொழிகையில், குளமாகுது ஊரென்று குமுறிக்குமுறி அழுகிறீர்கள்... ஐப்பசியில் அடைமழை கார்த்திகையில் கனமழை என்று அன்றே எழுதிவைத்த ஆதித்தமிழர் நியதிப்படி கணக்காக வந்தேன், சுணக்கமின்றிப் பொழிகிறேன்... ஆனால், குடத்தைக் கவிழ்த்துவைத்து நடிப்புக்காய்க் கதறினீர்களென்று இப்போது தெரிகையில் எரிச்சல்தான் மிஞ்சுகிறது! http://kurinjimalargal.blogspot.ca/?expref=next-blog- கருத்து படங்கள்
- கருத்து படங்கள்
- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: தேன் காற்று படம்: கெத்து இசை: ஹரிஸ் ஜெயராஜ் பாடியவர்கள். சாசா திருப்பதி,.ஹரிசரண்- கருத்து படங்கள்
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: ராதை மனதில் படம்:சிநேகிதியே இசை: வித்தியாசாகர் பாடியவர்கள்: சுஜாதா, சித்ரா, சங்கீதா சஜித் வரிகள்: வைரமுத்து ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுப்பிடிக்க (ராதை மனதில்..) கொள்ளை நிலவடிக்கும் வெள்ளை ராத்திரியில் கோதை ராதை நடந்தாள் மூங்கில் காட்டில் ஒரு கானம் கசிந்தவுடன் மூச்சு வாங்கி உறைந்தாள் பாடல் வந்த வழி ஆடை பறந்ததையும் பாவை மறந்து தொலைந்தாள் நெஞ்சை மூடி கொள்ள ஆடை தேவை என்று நிலவின் ஒளியை எடுத்தாள் நெஞ்சின் ஓசை ஒடுங்கிவிட்டாள் நிழலை கண்டு நடுங்கிவிட்டாள் கண்ணன் தேடி வந்த மகள் தன்னை தொலைத்து மயங்கிவிட்டாள் தான் இருக்கின்ற இடத்தினில் நிழலையும் தொடவில்லை எங்கே எங்கே சொல் சொல் கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுபிடிக்க (ராதை மனதில்...) கண்ணன் ஊதும் குழல் காற்றில் தூங்கி விட்டு காந்தம் போல இழுக்கும் மங்கை வந்தவுடன் மறைந்து கொள்ளுவது மாய கண்ணன் வழக்கம் கால்கள் இருண்டு விட கண்கள் சிவந்துவிட காதல் ராதை அலைந்தாள் அவனை தேடி அவள் கண்ணை தொலைத்து விட்டு ஆசை நோயில் விழுந்தாள் உதடு துடிக்கும் பேச்சு இல்லை உயிரும் இருக்கும் மூச்சு இல்லை வந்த பாதை நினைவு இல்லை போகும் பாதை புரியவில்லை உன் புல்லாங்குழல் சத்தம் வந்தால் பேதை ராதை ஜீவன் கொள்வாள் கண்ணா எங்கே சொல் சொல் கண்ணீரில் உயிர் துடிக்க கண்ணா வா உயிர் கொடுக்க.. (ராதை மனதில்..) கன்னம் தீண்டியதும் கண்ணன் என்று அந்த கண்ணி கண்ணை விழித்தாள் கன்னம் தீண்டியது கண்ணன் இல்லை வெறும் காற்றூ என்று திகைத்தாள் கண்கள் மூடிக்கொண்டு கண்ணன் பேரை சொல்லி கைகள் நீட்டி அழைத்தாள் காட்டில் தொலைத்துவிட்ட கண்ணின் நீர் துளியை எங்கு கண்டுப்பிடிப்பாய் கிளியின் சிறகு வாங்கிக்கொண்டு கிழக்கு நோக்கி சிறகடித்தாள் குயிலின் குரலை வாங்கிக்கொண்டு கூவி கூவி அவள் அழைத்தாள் அவள் குறை உயிர் கறையும்முன் உடல் மண்ணில் சரியும்முன் கண்ணா கண்ணா வா வா கண்ணீரில் உயிர் துடிக்க கண்ணா வா உயிர் கொடுக்க.- கருத்து படங்கள்
- உங்களுக்கு தெரியுமா?
ஆண் குரலுக்கும் பெண் குரலுக்கும் வித்தியாசம் இருப்பது ஏன்? ஆண் குரலுக்கும் பெண் குரலுக்கும் வித்தியாசம் இருப்பது ஏன்? நாம் எவ்வாறு பேசுகிறோம்? எல்லோருக்கும் வணக்கம், இயற்கையின் படைப்பில் ஒரு மனிதனின் குரல், இன்னொரு மனிதனின் குரலைப்போல இருப்பதில்லை என்பது ஒரு ஆச்சிரியமான விஷயம் தானே நண்பர்களே. உதாரணத்திற்கு நம்மை சுற்றியுள்ள மனிதர்களை எடுத்துக்கொள்வோம் யாருடைய குரலாவது இன்னொருவரின் குரலோடு 100%பொருந்துகிறதா என்று பார்த்தோமானால் நிச்சயமாக இல்லை என்று தான் கூற வேண்டும், இன்னும் சொல்லப்போனால் குரலின் வழியே குறிப்பிட்ட மனிதனை நம்மால் அடையாளம் காணமுடியும் என்பதுதான் உண்மை. சரி இது ஒரு பக்கம் இருக்கட்டும் பொதுவாக ஒரு குரலை கேட்டவுடன் அந்த குரலுக்கு சொந்தக்காரர் ஆணா அல்லது பெண்ணா என்று நம்மால் இலகுவாக கூறிவிட முடிகிறதுதானே, எப்படி நம்மால் கண்டறிந்துகொள்ள முடிகிறது என்றால், ஆண்களின் குரல் பெண்களின் குரலைக்காட்டிலும் சற்று தடிமனாகவும் கொஞ்சம் கரகரப்பாகவும் இருப்பதால் தான். அதேவேளையில் பெண்களின் குரலை எடுத்துக்கொண்டோமானால் அவர்களின் குரல் மென்மையாகவும் (Soft) இனிமையாகவும் இருக்கும் அந்த மென்மைதான் ஆண்களின் குரலிலிருந்து பெண்களின் குரலை முற்றிலும் வேறுபடுத்திக் காட்டுவதற்குறிய முக்கிய காரணி ஆகும்.இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் குழந்தைகள் வளர வளரத்தான் குரலில் ஆண் பெண் என்ற வித்தியாசம் தெரிய ஆரம்பிக்கும், பிறந்து மூன்று நான்கு வயது வரையிலான குழந்தைகளிடம் இந்த குரல் வித்தியாசத்தை நம்மால் அதிகம் உணர்ந்து கொள்ள முடியாது. இதற்க்குறிய காரணத்தை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு முதலில் நாம் எப்படி பேசுகிறோம் என்பதை பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள். நாம் எப்படி பேசுகிறோம் என்பது பற்றி விளக்கமாக கூறினால் இந்த பதிவு நாம் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற விலங்கியல் பாட பிரிவை நினைவு கூர்ந்துவிடும் அபாயம் இருப்பதால் என்னால் இயன்றவரை நாம் எப்படி பேசுகிறோம் என்பதை சுருக்கமாக இங்கே தருகிறேன். மனிதர்களின் தொண்டைப்பகுதியில் குறிப்பாக குரல்வளையில் கிடைமட்டமாக அமைந்து இருக்கும் ஒரு ஜோடி தசைமடிப்புகள் தான் மனிதன் பேசுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று சொன்னால் மிகையில்லை. குரல்நாண்கள் (Vocal Cords)என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த தசைமடிப்புகள் நாம் மூச்சை உள்ளிழுக்கும் போது தளர்ந்த நிலையிலும், நாம் பேச முயற்சிக்கும் போது வீணையில் இழுத்துக் கட்டப்பட்டிருக்கும் நரம்பைப் போல விறைப்பான (Temper) நிலையிலும் இருக்கும். நாம் மூச்சை உள்ளிழுக்கும் போது நுரையீரலை சென்றடையும் காற்று நாம் பேச முயற்சிக்கும் போது திரும்பி வந்து விறைப்பாக நிற்கும் குரல் நாண்களின் மீது குறிப்பிட்ட அழுத்தத்தில் மோதி குரல்நாண்களை அதிரச் செய்து சப்தத்தை உண்டாக்குகிறது. வீணையில் இழுத்துக்கட்டப்பட்ட நரம்புகளை விரல்களால் மீட்டும் போது எப்படி சப்தம் உண்டாகிறதோ அதுபோலவே விறைப்பாக நிற்கும் குரல் நாண்களின் மீது அழுத்தப்பட்ட காற்று வந்து மோதும்போதும் சப்தம் உண்டாகிறது. சாதாரணமாக குரல்நாண் வளர்ந்த ஆணில் 17.5mm முதல் 25mm வரையிலும், வளர்ந்த பெண்ணில் 12.5mm – 17.5mm வரை நீளமும் இருக்கும். இவை சப்தத்தை உண்டாக்க வளர்ந்த ஆண்களில் வினாடிக்கு 120 – 130முறையும் வளர்ந்த பெண்ணில் 200 முதல் 220 முறையும் குழந்தைகளில் 300 முதல் 310முறையும் அதிர்கிறது. நாம் ஒவ்வொருவரும் பிறக்கும் போது நம்முடைய குரல்நாண் மிகச் சிறியதாகவும் விறைப்பாகவும் இருக்கும். நாம் வளரவளர நம்முடைய குரல்நாணும் வளர்ச்சியடையும். மூன்று அல்லது நான்கு வயது வரை ஆண் பெண் ஆகிய இருபாலருக்கும் குரல்நாணின் வளர்ச்சி ஒரே அளவில் தான் இருக்கும் ஆகையால் நான்கு வயதுவரையுள்ள குழந்தைகளின் குரலில் ஆண் மற்றும் பெண் என்ற வித்தியாசத்தை காண முடியாது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஆண்களின் குரல்நாண்கள் பெண்களின் குரல் நாண்களை காட்டிலும் வேகமாக வளர ஆரம்பித்துவிடுகிறது. ஆண்களில் குரல்நாண் வளர வளர அதன் விறைப்புத்தன்மை குறைந்து விடுகிறது இதனால் குரலில் மென்மை குறைந்து ஒருவித கரகரப்பு தொற்றிக் கொள்கிறது. ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களின் குரல் நாண்கள் அளவிலும் சரி வளர்ச்சியிலும் சரி குறைவாக இருப்பதால் பெண்ணில் குரல்நாண்கள் விறைப்படைந்து குரலில் மென்மை கூடுகிறது. இதனால் தான் ஆண்களின் குரலிலிருந்து பெண்களின் குரல் முற்றிலும் வித்தியாசப்படுகிறது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி ஒருவர் பனிரெண்டு வயதை எட்டும் போது அவருடைய குரல்நாண் அதன் முழுவளர்ச்சியை எட்டிவிடும். இதன் காரணமாகத்தான் பனிரெண்டு வயதிற்குப்பிறகு ஆண், பெண் குரல்கள் முற்றிலும் வேறுபடத் துவங்குகிறது. பெண்களுக்கு மென்மையான குரல் அவர்களுடைய 50-வயது வரை நீடிக்கும் அதன் பிறகு அவர்களுக்கும் குரல்நாண் நெகிழ்ச்சியடைய துவங்குவதால் ஐம்பது வயதிற்கு பிறகு பெண்களில் சிலருக்கு ஆண்களை போலவே குரல் தடிமனாக மாறிவிடுகிறது, அறுபதுவயதிற்கு பிறகு ஆண் பெண் இருபாலரின் குரல்நாண்களும் ஒன்றுடன் ஒன்று உரசிக்கொள்ள ஆரம்பித்துவிடுவதால் அவர்கள் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி குரலில் தளர்ச்சியும் நடுக்கமும் உண்டாகிறது. இதன் காரணமாகத்தான் அறுபது வயதிற்கு மேற்பட்ட சிலருக்கு வார்த்தைகளை தெளிவாக உச்சரிக்க முடியாமல் போகிறது. நாம் நமது தொண்டையிலுள்ள குரல்நாண்களை தளர்வடையாமல் பார்த்துக்கொண்டோமானால் நம்முடைய குரல் எந்த வயதிலும் மாறாமல் இனிமையாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளலாம். இதற்க்காக நாம் சிலவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக மது அருந்துதல் கூடாது, மது அருந்தும் போது தொண்டையிலுள்ள அனைத்து தசைகளும் பாதிப்படைவதால், மதுவை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. மேலும் புகை பிடித்தலையும் மாசு நிறைந்த காற்றுகளை சுவாசிப்பதையும் கூடுமானவரை தவிர்க்க வேண்டும், முக்கியமாக தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும் தொண்டையை வற்றச் செய்யாமல் எப்போதும் ஈரமாக வைத்திருந்தால் எந்த வயதிலும் நம்முடைய குரலில் இளமையை கட்டிவைத்திருக்க முடியும். குரல்நாண்கள் சப்தத்தை உண்டாக்குவதோடு மட்டுமல்லாமல் அவற்றை பண்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது, ஆகையால் தான் நம்மால் வார்த்தைகளை தெளிவாக உச்சரிக்க முடிகிறது. மனிதனை தவிர ஏனைய விலங்குகளில் இந்த குரல்நாண்கள் (Vocal Cords) அமைப்பு இல்லாததால் மற்ற விலங்குகளால் ஒலியை உருவாக்க முடிந்தாலும் கூட அவற்றை பண்படுத்த முடியாமல் போவதால் அவற்றால் மனிதர்களைப் போல வார்த்தைகளை தெளிவாக உச்சரிக்க இயலுவதில்லை. http://tamilarkalinsinthanaikalam.blogspot.ca/2014/04/blog-post_7.html- மனதைக் கவர்ந்த கவிதைகள்
Santhalingam Karthygesu · **பாவற்காயின் புலம்பல் ** *** இந்த நீதிமன்றத்தில் இருப்போர் விசித்திரம் நிறைந்த காய் கறிகளை உண்டிருக்கலாம் புதுவகையான பழ வகைகளைக் கண்டிருக்கலாம் ! என் புலம்பல் வெறும் அலம்பலும் அல்ல-- இந்தப் பூமியில் நான் புதியவனும் அல்ல ! தாவர இனங்களில் நானும் ஒருவன் !! கடிக்கும் போது உள் நாக்கு வெறுக்கின்றது- சமைக்கும் போது ..கறி எல்லாம் கசக்கின்றது ! இப்படி எல்லாம் .குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றேன் !! நீங்கள் எதிர்பாப்பீர்கள் ..நான் இதையெல்லாம் மறுக்கப் போகின்றேன் என்று இல்லை --இல்லவே இல்லை -- எனது காய்களில் கசப்பை இணைத்துக்கொண்டேன் இனிக்கும் காய்கறிகளை நீங்கள் உண்டு உங்கள் இதயம் நின்றுவிடக் கூடாது என்பதற்காக !! சமைக்கும் பாத்திரம் எல்லாம்-- கசப்பை ஊற்றெடுக்க வைத்தேன்--!! சக்கரை நோயினால் நீங்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக !! எனக்குப் பந்தல் கட்டி-- எனது குடும்பங்களை சூறையாட முனைந்தவர்கள் ஏராளம்..!! இதோ உங்கள் முன் நிற்கின்றானே-- உடம்பெல்லாம் தங்கநகை போட்டுக்கொண்டு !! அன்னிய நாடுகளுக்கு எங்களை அனுப்பி கொள்ளை இலாபம் அடித்த கொலைகாரன் இவன் !! நாங்கள் கோபுரத்தில் ஏறியதில்லை.. ஆனால் கோழிக் கூட்டைத் தாண்டியதுண்டு ..!! வரம்புகளில் வளர்ந்தது இல்லை-- வேலிகளில் படர்ந்ததுண்டு !! குண்டாக இருக்கும் உங்கள் மேனியினை- எனது குடிநீர் மூலம் வாழைத் தண்டாக மாற்றிக் காட்டுபவன் நான் ! நான் வளர்வது ஒரு நாடு.. நீங்கள் வாங்குவது ஒரு நாடு..! இன்று என்மீது குற்றம் சுமத்துகின்றீர்கள் ..!! கசப்பாக இருக்கும் உன்னை விருந்துக்கு வருவோருக்கு-- மருந்துக்கும் உன்னை -- சமைத்துக் கொடுக்க மாட்டோம் என்று !! கனம் நீதிபதி அவர்களே கருணை காட்டுங்கள் தமிழர்களின் விருந்தோம்பல்களில் சன்றோர் சபைகளில் என்னை வீற்றிருக்க வழிசெய்யுங்கள் !! ************************ நன்றியுடன் வேலணையூர் லிங்கா !!- தமிழீழ பாடல்கள்
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .- கருத்து படங்கள்
- கருத்து படங்கள்
- மனதைக் கவர்ந்த கவிதைகள்
கரியல் சைக்கல்!................................"ரெலீ'என்பது கம்பனிப் பேருஇங்கிலாந்துதான் அது பிறந்த ஊரு அதுதான் எங்கு வாப்பாட காறு என்னை ஊரெல்லாம் ஏற்றியோடும் தேரு!காலயில கல்முனைக்கு போகும்அது திரும்பி வர பலமணி நேரமாகும் பாதையில காற்றுப்போனா வீடு வந்து சேர்வதற்கும் காலதாமதமாகும்!சைக்களின் பின்னால இருக்கும் ஒரு மரக் கரியல்அதில தெரியும் கலம்பக் கயிற்று வரியல் !கரியலில் ஏறிக்குந்துவோம்இருபக்கமும் கால்போட்டு அமருவோம் சொரியலில் இருந்த அரிசியை சாக்கிலே அள்ளிக்கட்டுவோம்கடைகளுக்கு கொண்டு விற்ப்போம்!கல்முனை சந்தைக்குப்போய்வாப்பா வரும்போது கரியலின் முதுகிலே ஒரு உரப்பை அமர்ந்திருக்க அதனுள்ளே சொரியலில் பல சாமான்கள் இருக்கும் இருபக்கமும் அரைவாசி பழுத்த வாழைக்குலைகள் தொங்கிவரும் சில வேளை அவை நிலத்திலே அரைத்துவரும்!சந்தையில் இருந்து வாப்பா வரும்வரை காத்திருக்கும் எங்களை தூரத்தே வரும் சைக்கிள்கிரீஸ் போடாததால் ஏற்படும் கிரீச்சிடும் ஒலி கவர்ந்திடும் !நன்கு கனிந்த கொய்யா நான் உள்ளே இருக்கின்றேன் என்பதை பையை அவிழ்க்கமுன்னரேநாறிச் சொல்லிடும்!செருப்புப்போடாத சில்லுகள்தெருப்பொருக்கிகளான பளுத்துக்காய்ந்த நெருஞ்சிகளால்பதம் பார்க்கப்படும்போது புஸ்சென்று காற்றுப்போய் பயணங்கள் பாதியிலே நின்று விடும்! ஏற்றங்கள் கால்களுக்கு சவாலாக இறக்கங்கள் "பிரேக் "உடன் சண்டை பிடிக்கும் மணியடிக்காத சந்திகள் மோதலுடன் மட்டுமன்றி சண்டைகளையும் பிறப்பிக்கும்!சொகுசு வாகனமும் அதுதான் எங்கள் கனரக வாகனமும் இதுதான் புதுசு வாங்க ஏலா நிலைதான் இதுவும் காலால் மீன் பிடிக்கும் வலைதான்கரியல் சைக்கலில்கன எடை ஏற்றினால் கம்பிக்கட்டு விட்டுப்போகும்பூட்டாத சைக்கிளை பெருந்தெருவிலே விட்டால்அது உன் கைவிட்டுப்போகும்!அரிகாற்றுப் போனால் பரிகாரமாய் கொஞ்சம் பட்டுத்தேயிலையை டியூப்பிற்குள் போட்டடித்தால் சரியாகிப்போகும்!கணக்குப்பாடத்துக்கு கொண்டு சென்றால் எல்லோரும் அதுபோடும் சத்தத்ததையும் அதன் அலங்கோலத்தையும் பார்த்து ஏளனமாய் சிரிப்பார்கள் ,அதனால் நான் நடந்து செல்வது வழக்கமாகிவிட்டது!வாப்பா காலஞ்சென்ற பின்னால் கவனிப்பரற்றுக்கிடந்தது அந்த ஈருருளி!கனக்க உழைத்து கரளாலே கருத்து உருக்குலைந்த சைக்கிளை ஒவ்வொரு நாளும் பார்க்கையில் என் வாப்பாவின் உருவமும் நான் கடந்து வந்த பாதையும் தெரியும்!பாதுகாக்க நினைத்து புழக்கடையில் பதுக்கிவைத்தேன் பாவி யாரோ எடுத்துவிட்டான் என் கனவுகளை கலைத்துவிட்டான்! மு.இ.உமர் அலி http://omaaraly.blogspot.ca/Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- கருத்து படங்கள்