Everything posted by nunavilan
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: தூவானம் படம்: ரோமியோ யூலியட் இசை: டி.இமான் பாடியவர்கள்: விசால் டட்லானி, சுனிதா சாரதி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாத்தியார்.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: எனை மாற்றும் காதலே படம்:நானு ரவுடி தான் இசை:அனிருத் பாடியவர்கள்: சிட் சிறிராம், அனிருத்
-
சிந்தனைக்கு சில படங்கள்...
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
விசுகு அண்ணாவுக்கும் மற்றும் பிறந்த நாள் கொண்டாடியவர்களுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.- சிந்தனைக்கு சில படங்கள்...
- உங்களுக்கு தெரியுமா?
இந்தியாவைக் கண்டு உலகே ஆச்சரியப்படும் அரிய தகவல்கள்..!! மாம்பழங்கள் 1000 வகை மாம்பழங்கள் சுவை, நிறம், வடிவம் என இந்தியாவில் 1000வகையான மாம்பழவகைகள் இருக்கின்றன. வேறு எந்த ஒரு கனியும் இவ்வளவு வகைகளில் கிடை ப்பதும் இல்லை. விளைவிக்கப்படுவதும் இல்லை. கால நிலைகள் 6 கால நிலைகள் கோடை பருவ மழை, கோடை காலம், குளிர் பருவ மழை, குளிர் காலம், இலையுதிர் மற்றும் வசந்த காலம் என்று ஆறு கால நிலைகள் இந்தியாவில் நிலவுகி ன்றன. அதிக மசூதிகள் கொண்ட இந்துக்கள் நாடு இந்துக்கள் நாடு எனும் போதிலும் கூட, உலகிலேயே அதிக மசூதிகள் கொண்ட நாடு இந்தியா தான். உலகெங்கிலும் 4 லட்சம் மசூதிகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது சோம்நாத் கோவில் சோம்நாத் கோவிலுக்கும் தென் துருவத்திற்கும் இடை யே எந்த நிலப் பரப்பும் கிடையாது. உலகின் முதல் பல்கலைகழகம் பீகாரில் இருக்கும் தக்ஷில்லா பல்கலை கழகம் தான் உலகின் பழமையான மற்றும் முதல் பல்கலைகழகம். இந்த பல்கலைகழகத்தில் 10,000க்கும் மேற்பட்ட மாண வர்களுக்கு 60வது பாடப்பிரிவுகள் கற்பிக்கப்பட்டுள்ள து. உலகிலேயே நீளமான இராமேஸ்வரம் கோவில் நடைப்பாதை இராமேஸ்வரம்கோவிலில் உள்ள நடைபாதை தான் உலகிலேயே நீளமான கோவில் நடைபாதை ஆகும். 4000 அடி நீளம் கொண்ட இந்த நடை பாதையின் இருப்புரங்களிலும் 985 தூண்கள் இருக்கின்றன. முதல் கண் அறுவைசிகிச்சை கண் மாற்று அறுவை சிகிச்சை செய்த முதல் நாடு என்ற பெருமை இந்தியாவையே சேரும். அரபிக் எண்கள் அரபிக் எண்கள், அரபிக் என்று பெயர் இருந்தாலும், அரபிக் எண்களைக் கண்டுப்பிடித்தவர்கள் இந்தியர்கள் தான். மருத்துவம் மற்றும் அறுவைசிகிச்சையின் தந்தையர்கள் இந்தியர்கள்மருத்துவத்தின் தந்தை 2500ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆயுர்வேதாதான் முதல் மருத்துவ முறையாகும். சுஷ்ருதா, இவர் 2600 வருடங்களுக்கு முன்பே அறுவைசிகிச்சை செய்துள்ளார். அதனால், மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை ஆகியவற்றின் தந்தைகள் இந்தியர்கள் தான். உலகின் பணக்கார கோவில் உலகின்பணக்காரகோவில் எனும்பெருமை பத்மனா ப சுவாமி கோவிலையே சேரும். சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு கண்டெடுக்கப்பட்ட லட்சம் கோடிகளை தாண்டும் அரிய புதையலே இதற்கு காரணம். உலகின் பெரிய தபால் துறை இந்தியாவில் மொத்தம் 1,50,000அஞ்சல் அலுவல கங்கள் இருக்கின்றன. உலகிலேயே பெரிய அஞ்சல் துறை இந்தியாவுடையது தான். வைரத்தை கண்டுபிடித்தவர்கள் இந்தியர்கள் வைரத்தை கண்டுப்பிடித்தவர்கள் 1896 ஆம் ஆண்டு வரை வைரம் இருக்கும் ஒரே நாடாக அறியப்பட்டது இந்தியாதான். மற்றும் வைரத்தை முதல் முதலில் கண்டுபிடித்தவர்களும் இந்தியர்கள் தான்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புத்தன். கு.மா அண்ணா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- சிந்தனைக்கு சில படங்கள்...
மனிதர்களுக்கு மட்டும் நட்பு ,பிரிவு இல்லை. ஒரு குச்சி E இல் இருந்து = HOTFL = Hold On Till Father Leave- கருத்து படங்கள்
- கருத்து படங்கள்
- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
- கப்டன் மில்லர்
கரும்புலி கப்டன் மில்லர் 05-07-1987 முதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது ! Black Tigers என்பது தற்கொடைப்பிரிவைச் சேர்ந்தவர்களை குறிப்பதாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கொள்ளப்படுகிறது. இயக்கத்தில் சேர்ந்து விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் எல்லோருக்குமே தன்னுடைய அரிய உயிரை இலட்சியத்திற்காக துறப்பதற்க்கு எப்பொழுதுமே தயாராய் இருக்கின்றனர்.இயக்க உறுப்பினர்கள் அனைவருமே சைனைட் குப்பிகனை கழுத்தில் அணிந்து கொண்டு இருப்பார்கள். மிக இக்கட்டான சூழ்நிலையில் எதிரிகளிடம் பிடிபடாமலும் இயக்கத்தை பாதிப்படையவிடாமலும் செய்ய உயிர் துறந்தவர்கள் எத்தனையோ பேர். ஆனாலும் கரும்புலிப்பிரிவைச் சேர்ந்தவர்கள் நேரடியாகவே தமது உயிரைப் பணயம் வைத்து, அதைவிட தமது உயிரை கொடுத்து சில நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். அரிதாக, மிக அரிதாக அவர்கள் தப்பி திரும்பி வரும் சந்தர்பங்களும் உண்டு. எப்படியிருந்தபோதிலும் அவர்கள் நடவடிக்கையில் இறங்கும்போது தம்முடைய உயிரை அந்த நடவடிக்கைக்காக தியாகம் செய்யத் தயாராகவே இருப்பர். இப்படியாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தற்கொடைத் தாக்குதலில் முதலில் வீரச்சாவடைந்த கப்டன் மில்லரால் நடாத்தி முடிக்கப்பட்ட தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது என்பதை பற்றி சற்றுப் பார்போம். காணொளியில் மில்லர் வடமராட்சியின் துன்னாலைப் பகுதியைப் பிறப்பிடமாக கொண்டவன். அவனுடைய தந்தை இலங்தை வங்கி ஒன்றில் உயர் அதிகாரியாக பணியாற்றி வந்தார். தன்னுடைய தாயகத்தை மீட்க அவன் எப்போதும் சித்தமாக இருந்தான். மில்லர் எமது இயக்கத்தில் சேர்ந்து பல தடவைகள் இராணுவத்துடன் மோதியிருக்கிறான். ஒவ்வொரு மோதலிலும் மீல்லர் தன்னுடைய பணியை தனக்கே உரித்தான அபாரத் துணிச்சலுடன் செய்து பலருடைய மதிப்பை பெற்றவன். வடமராட்சிப் பகுதியை சிறிலங்கா இராணுவத்தினர் முற்றிகையிட்ட போது பிரபாவின் அணியின்ரோடு சேர்ந்து பதில் தாக்குதலில் ஈடுபட்டான். வடமராட்சி யுத்தம் பல நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. பலத்த சேதத்திற்க்கு பின் வடமராட்சியை இராணுவத்தினர் வடமராட்சி பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டனர். வடமராட்சி பகுதியை திரும்ப மீட்க வேண்டுமென்பதில் மில்லர் துடியாய் துடித்தான். பிரபாவும், (பிரபா முன்னர் மன்னார் பிராந்தியத்தில் விக்ரருடன் பணியாற்றியவன்) மில்லரும் சேர்ந்து நெல்லியடி இராணுவ முகாமுக்குள் வெடிமருந்து வாகனங்களை விடுவதற்க்கு தலைவரிடம் அனுமதி கேட்டு, வெடி மருந்தையும் பெற்று கொண்டனர். ஒன்றன் பின் ஒன்றாக இரு வண்டிகள் விடுவதற்கு திட்டமிட்டனர். முதலாவது வண்டியை மில்லரும் அதன் பின் வண்டியை, அதன் பின் இரண்டாவது வண்டியை ராசிக்கும் ஓட்டிச் செல்ல முன்வந்தனர். திட்டம் உருவானது. இரவு இரவாக நெல்லியடி இராணுவ முகாமிக்குள் வண்டிகளை விடுவது என்றும் ஏனேன்றால் இராணுவத்தினர் இரவு பத்து மணிக்குப் பின்னர் முகாம்களை விட்டு வெளியே வந்து சுற்றாடலில் இருந்த மக்கள் வெளியேறிய வீடுகளில் தங்கிவிடுவார்கள் என்பதால் அதற்கு முன்னர் வெடிமருந்து நிரப்பப்பட்ட வாகனங்கள் உள்ளே விடப்பட வேண்டும். வாகனங்கள் முகாமை நெருங்கிச் செல்லும் பாதைகளில் பல தடைகள் போடப்பட்டு இருந்தன. எனவே வாகனங்கள் புறப்பட்டு முகாமை அடைவதற்கு அத்தடைகள் அகற்றப்படுதல் முக்கியமானதாகும். அந்த வேலையை கமல் பொறுபெடுத்துக் கொண்டான். பகல் வேளையே வாகனங்கள் தயார் செய்யப்பட்டு முகாமுக்கு அருகில் கொண்டு வரப்பட்டு இருக்கும். சரியான நேரம் நெரிங்கியதும் எம்தோழர்கள் முகாமைத் தம்முடைய துப்பாக்கிகளாலும், ரொக்கட்டுகளாலும் தாக்கத் தொடங்குவார்கள். அந்தச் சந்தர்பத்தில் கமலும் அவனுடைய சகாக்களும் தெருவில் உள்ள தடைகளை அகற்றுவார்கள். கமல் தடைகளை முற்றாக அகற்றிய பின் பிரபாவுக்கு அறிவிக்க வெடிமருந்து நிரப்பிய வாகனங்கள் முகாமை சென்றடையும். இதுதான் திட்டம் கமல் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாக கொண்டவன். இவரது தந்தை துரைரத்தினம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர். தந்தையது பாதை எமது தாயகத்தை மீட்டு எடுக்க சரியான தீர்வாகது என்பதை உணர்ந்த கமல், எமது இயக்கத்திலே தன்னை இணைத்து கொண்டு போரடத் தொடங்கினான். பயிற்சியை முடித்து விட்டு மட்டக்கிளப்புக்குச் சென்று சுமார் இரண்டு வருடங்களுக்கு மேல் பணியாற்றிந்தான். கிளக்கில் எமது இயக்க வளர்ச்சியில் கமலின் பங்கு மிகவும் குறிப்பிடக்கூடியது. மட்டக்கிளப்பில் மிகவும் சிக்கலான சூழ்நிலைகளிலும் தன் தனித்திறமையினால் எத்தனையோ அரும் பெரும் காரியங்களை ஆற்றியிருக்கின்றான். தாக்குதல் நடவடிக்கைகள் தீவிரமாக நடை பெற்றுக் கொண்டிருந்தன. மில்லர் மிகவும் கடுமையாக உழைத்தான். இராணுவத்தினர் ஆக்கிரமிப்புகுள் இருந்த நெல்லியடிப் பகுதிக்கு வெடிமருந்துகளையும், வாகனங்களையும் மிகுந்த சிரமப்பட்டு இரவோடு இரவாக கொண்டுவந்து சேர்த்தான். அவ்வேளைகளில் கூட நான் அடுத்த நாள் இறக்க போகிறேன் என்ற விடயம் தெரிந்த மனிதனைப் போல் நடந்து கொள்ளவில்லை. கவலையோ, திகைப்போ, பயமோ அல்லது தயக்கமோ அவனிடம் காண முடியவில்லை. வெடிமருந்துகளை ட்றக் வாகனங்களில் ஏற்றி அவற்றுக்கு இணைப்புகளை கொடுத்து தன்னுடைய சவப் பெட்டிகளை தானே தயாரித்து கொண்டு இருந்தான். அன்று பகல் முழுவதும் வெடிமருந்துகளுடன் இரு வாகனங்கள் தயார் செய்யப்பட்டன. குழுக்கள் யாவும் உசார் நிலைக்கு கொண்டு வரப்பட்டன. நேரம் இரவாகிய போது குழுக்கள் யாவும் முகாமை நோக்கி நகரத் தொடங்கின. மில்லர் தன்னுடைய வாகனத்தில் ஏறி அமர்ந்து கொண்டான். கமலுடைய குழு, வாகனம் முகாமை நோக்கி செல்லத் வேண்டிய பாதையில் போடப்பட்டு இருந்த தடைகள் உள்ள பகுதியை சென்றடைந்தனர். எனைய குழுக்களும் முகாமை நெருங்கி தத்தமது இடங்களில் தயார் நிலையில் நின்றனர். பொறுபாளரிடமிருந்து தாக்குதல் ஆரம்பிக்கும்படி கட்டளை பிறப்பிககப்பட்டது. எல்லோரும் முகாமை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்தார்கள். மில்லர் ஏறி அமர்ந்து இருந்து ட்றக் வண்டியை ஸ்ராட் செய்து எஞ்சினை உறுமி விட்டு அமைதிப் படுத்தினான். பின் தன் வண்டி செல்வதற்கான உத்தரவுக்காக காத்திருந்தான். அப்போது கூட பக்கத்தில் இருந்த பிரபுவோடு ஏதோ யோக் அடித்து கொண்டு சிரித்து கொண்டு இருந்தான். முகாமை நோக்கி எமது தோழர்கள் துப்பாக்கி பிரயோகம் செய்து கொண்டிருக்கையிலேயே கமல் குறுக்கே பாய்ந்து தடைகளை அகற்ற முயன்றான். பெரிய மரக்கட்டைகள் புதைக்கப்பட்டு இருந்தன. தான் கொண்டுவந்த வெடிமருந்துப் பெட்டியை கட்டைகளின் பின் வைத்து விட்டு விலகி மறைவில் படுத்து கொண்டான். வெடி மருந்து வெடித்தது. அத்தோடு கட்டைகள் து}க்கி எறியப் பட்டு பாதை சீராகியது. அதே நேரம் பாதைக்கு நேரே அமைக்கப்பட்டிருந்த காவல் அரணில் இருந்து இராணுவத்தினரின் மெசின்கன்கள் வெடிக்க தொடங்கியது. கமல் தன்னுடைய வாக்கிடோக்கியில் அறிவித்தான். 'தடைகள் அகற்றப்டட்டு விட்டது" ஆனால் புதிய சிக்கல்; பாதைக்கு நேரேயுள்ள காப்பரணில்; இருந்து துப்பாக்கிச் சூடு வருகிறது. சற்றுப் பொறு. மில்லருக்குப் பக்கத்தில் நின்ற பிரபாவின் வாக்கியிலும் அறிவிப்பு தெளிவாக கேட்டது. அதைக் கேட்ட மில்லர் 'பிரபா பரவாயில்லை, வாகனத்தின் முற்பகுதியில் குண்டுகள் துளைக்காத படி தகடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. அதனால் நான் கொண்டு போய் சேர்த்து விடுவேன்." என்றான். மில்லர் சற்று பொறுத்துக் கொள் அந்தப் பங்கர் உடைக்கப் பட்டதும் நீ போகலாம். மிக விரைவாக வண்டியை செலுத்தி விட்டு விட்டு, நீ இறங்கி ஓடி வந்து விடு;. என்றான் பிரபா. மில்லர் ஒரு முறை சற்று சிரித்து கொண்டான். ஏனேன்று புரியவில்லை. அருகில் இருந்த பிரபாவிற்கு கேட்க மனம் துணிய வில்லை. 'பிரபா முன்பு ஒரு முறை யாழ்பாணத்தில் விடப்பட்ட வாகனம் சரியாக செல்லவில்லை. எனவே இம்முறை நான் நிதானமாகவே வாகனத்தைச் செலுத்துவேன். எப்படியும் கட்டிடத்துக்கு மிக அண்மையில் வாகனத்தை கொண்டு செல்வேன் என்று மில்லர் கூறினான். கமல் தன்னுடைய வோக்கியில் ரொக்கட் லோஞ்சர் வைத்திருப்பவனை அந்த காப்பரணை உடைக்குமாறு கூற ரொக்கட் லோஞ்சரில் இருந்து மிகச் சரியாக ஏவப்பட்ட ரொக்கட் பங்கரை தாக்கியது. மணல் முட்டைகள் சிந்தின. பங்கர் இருந்த இடத்தில் ஒரே புழுதியும் புகையும். கமல் தகவலை தெரிவித்தான். பொறுபாளரிடமிருந்து மில்லரை புறப்படுமாறு பிரபாவிற்க்கு உத்தரவு வந்தது. மில்லர் வண்டியை ஸ்ராட் செய்து மெதுவாக செலுத்தினான். பிரபா வண்டியின் பின்னால் ஏறிக்கொண்டான். வண்டி நெல்லியடிச் சந்தியை வந்தடைந்தது. மில்லர் வண்டியை நிறுத்தி பிரபாவை அழைத்தான்.பிரபா மில்லருக்கு கையை அசைத்துவிட்டு வெடி மருந்து வெடிப்பதற்கான கருவியை இயக்கினான் கருவி இயங்கத் தொடங்கியது. மில்லர் வண்டியை மெதுவாக ஒடவிட்டான் பிரபா வண்டியில் இருந்து குதித்து வண்டியோடு சேர்ந்த ஓடி மில்லரின் பக்கத்தில் வந்து 'மில்லர் எப்படியும் திரும்பி வந்து விடு" மில்லர் அதை புரிந்து கொண்டது போல் வண்டி வேகம் பிடித்தது. பிரபா அப்படியே தெருவில் நின்று வேகமாகச் செல்லும் வண்டியைப் பார்த்துக் கொண்டிருக்க மில்லரையும் வெடிகுண்டையும் சுமந்து கொண்டு வண்டி சென்று கொண்டிருந்தது.. வண்டி முகாமை நோக்கி வருவதை அறிந்து தோழர்கள் முகாமைவிட்டு 100 யார் பின்னுக்கு வந்தனர். கமல் நின்ற இடத்தை தாண்டி வண்டி சென்றதும் கமல் மில்லரை நோக்கி கையசைத்து பின்னுக்கு செல்ல, சில நிமிடத்தில் நிலத்தை அதிரவைத்துக் கொண்டு பெரிய ஓசை எழுந்தது. தோழர்கள் மீண்டும் முகாமை; நோக்கி முன்னேறினார்கள். இராணுத்தினர் தங்கியிருந்த சற்று முன்னர் கூட இராணுத்தினர் நின்று துப்பாக்கி பிரியோகம் செய்த மிகப் பெரிய மாடிக்கட்டிடம் தரைமட்டமாகிக் கிடந்தது. அதில் இருந்த இராணுவத்தினர் கட்டிடத்தின் உள்ளேயே இறந்து போனார்கள். மில்லரின் தாக்குதலை தொடர்ந்து நடந்த அத்தாக்குதலில் கமலும் வீரச்சாவடைந்தான். நெஞ்சிலே காயமடைந்த கமலின் உடல் எடுத்து வரப்பட்டது. ஆனால் மில்லர் திரும்பவே இல்லை. மில்லர் வெடிமருந்தின் அதிர்வலைகனோடு சங்கமாகி அதிர்வலையோடு சேர்ந்து தன் பணியை செவ்வனே முடித்தான் முதல் தற்கொடைப் போராளி கப்டன் மில்லர் வீரச்சாவடைந்த நாள் தான் July 05 கரும்புலிகள் நாளாக நினைவுகூரப்படுகிறது http://eelavarkural.blogspot.ca/2008/09/blog-post_03.html- தமிழீழ பாடல்கள்
https://www.facebook.com/kajan.ellalan/videos/857573424313235/ அல்லி விழியோரம் அடி ஆவதென்ன ஈரம் கல்லறையே அழுதால் இந்தப் பாடல் என்ன ஆகும் அல்லி விழியோரம்...பாசமுள்ள தங்கையே என் ஆறுதலைக் கேழு அழுவதால் என்ன ஆகிவிடும் கூறுகேழு அழுவதால் மட்டும் என்ன ஆகிவிடும் கூறு- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுவி அண்ணா, சாந்தி அக்கா, தமிழ்சூரியன் மற்றும் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:ஏன் இங்கு வந்தாய் படம்: மீகாமன் இசை:எஸ்.தமன் http://www.dailymotion.com/video/x2kyq4p- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: சின்ன சின்ன நட்சத்திரம் படம்: லிங்கா இசை: ஏ.ஆர்.ரகுமான் பாடியவர்கள்: சிறினிவாஸ், அதீதி பால்- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா படம்: நண்பேன்டா பாடியவர்: உன்னி கிருஸ்ணன் கண்களோடு இரு கண்களோடு ஒரு காதல் பூத்ததடி பெண்ணே காற்றில் ஆடி சிறு காற்றில் ஆடி ஒரு கானம் பூத்ததடி கண்ணே நெஞ்சம் கூடி இரு நெஞ்சம் கூடி ஒரு நேசம் வந்ததடி பெண்ணே ஒன்று கூடி மனம் ஒன்று கூடி உயிர் ஒன்றிணைந்ததடி பெண்ணே நம்த நம்த தன தன தன தம்தம் தம்தம் தம்தம் நம்த நம்த தன தன தன தம்தம் தம்தம் தம்தம் ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா உன்னோடு காதல் சொல்லி நயந்தாரா அன்பே உன் பின்னால் யாரும் அலைந்தாரா கண்ணீரும் காதல் கண்டு கலைந்தாரா ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா உன்னோடு காதல் சொல்லி நயந்தாரா அன்பே உன் பின்னால் யாரும் அலைந்தாரா கண்ணீரும் காதல் கண்டு கலைந்தாரா ஊரெல்லாம் என்னை கண்டு வியந்தாரா என்னோடு காதல் சொல்லி நயந்தாரா ஒரு முறை உனை காணும் பொழுது இரு விழிகளில் ரோஜா கனவு வானத்தைக் கட்டி வைக்க விழிகள் உண்டு நாணத்தைக் கட்டி வைக்க வழிகள் இல்லை ஒரு முறை உனை காணும் பொழுது இரு விழிகளில் ரோஜா கனவு வானத்தைக் கட்டி வைக்க விழிகள் உண்டு நாணத்தைக் கட்டி வைக்க வழிகள் இல்லை தங்கம் வெட்கப்பட்டால் மஞ்சள் வண்ணம் மாறும் நாணம் கொண்டதாலே உன் வண்ணம் பொன் வண்ணம் செவ்வண்ணம் ஆச்சி வா கண்ணாலும் கண்ணும் கண்ணும் கலப்போமா காற்றோடு மேகத்துண்டாய் மிதப்போமா அப்பப்பா ரெக்கை கட்டி பறப்போமா ஆகாயம் தாண்டிச் சென்று ரசிப்போமா துணி இறி கொண்டு மார்பை மறைத்தாய் துணிவினைக் கொண்டு மனதினை மறைத்தாய் நேற்றோடு என்னைக் கண்டு மலர்ந்துவிட்டாய் காற்றோடு மொட்டைப் போல உடைந்துவிட்டாய் சிங்கம் கொண்ட பானை வாங்கி வைப்பதென்றால் தங்க கிண்ணம் வேண்டும் கண்ணாலா நான் தானே உன் தங்க கிண்ணம் வா ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா உன்னோடு காதல் சொல்லி நயந்தாரா அன்பே உன் பின்னால் யாரும் அலைந்தாரா கண்ணீரும் காதல் கண்டு கலைந்தாரா ஊரெல்லாம் என்னை கண்டு வியந்தாரா என்னோடு காதல் சொல்லி நயந்தாரா அன்பை என் பின்னால் யாரும் அலைந்தாரா கண்ணா நம் காதல் கண்டு ம்ம்ம்ம்ம்…..- உங்களுக்கு தெரியுமா?
கடாபியின் மறுபக்கம்...... 1. லிபியாவில் மின்சார கட்டணம் கிடையாது, மின்சாரம் இலவசம். 2. வங்கிகளில் வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி கிடையாது. 3. வீடு மனை என்பது லிபியாவில் மனித உரிமைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது , லிபியாவில் வாழும் அனைத்து மக்களும் வீடுகள் பெரும் வரை தனக்கோ தனது பெற்றோருக்கோ வீடு கட்டமாட்டேன் என்று கடாபி சபதம் பூண்டிருந்ததால், அவரது பெற்றோர்கள் இறக்கும் போது அவர்கள் வீடுகள் இல்லாமல் கூடாரங்களிலேயே இறந்தனர் . 4.அந்த நாட்டில் மனம் முடிக்கும் ஒவ்வொரு புதுமணத் தம்பதியினர்களுக்கும் அந்நாட்டின் அரசு 60,000 தினார், அதாவது அமெரிக்க பணம் 50,000 டாலர் அதாவது இந்திய பணம் சுமார் 28,00,000 ரூபாய் பணத்தை இலவசமாக வழங்கியது. 5.லிபியாவில் கல்வி மற்றும் மருத்துவம் முற்றிலும் இலவசம், கடாபி அதிகாரத்தை கைப்பற்றும் பொழுது லிப்ய மக்களில் எழுத படிக்கத் தெரிந்தோர் வெறும் 25% மட்டுமே , ஆனால் அவர் ஆட்சிக்கு வந்ததன் பின் அது 83% உயர்ந்தது. 6.எந்த ஒரு லிப்யனும் விவசாயம் செய்ய விரும்பினால் அவன் விவசாயம் செய்யும் இடத்தில் வாழ்வதற்கு அவசியமான ஒரு வீடும், விவசாயம் செய்வதற்கு தேவையான காணி நிலமும் விவசாய உபகரணங்களும், விதைகளும் பசளைகளும் இன்னும் இதற்கு அவசியமான அனைத்தும் முற்றிலும் இலவசம். 7. லிப்யர்களுக்கு லிபியாவில் மருதுவ வசதி பெறுவதற்கோ அல்லது வெளிநாட்டில் மேற்படிப்பு தொடர்வதற்கோ வசதி இல்லை எனில் அந்த நாட்டு அரசு இலவசமாக அவர்களுக்கு உதவிகள் வழங்கும். 8. எந்த ஒரு லிபியனும் ஒரு வாகனம் வாங்கும் போதும் அதன் மதிப்பில் அரைவாசித் தொகையை அந்நாட்டின் அரசு இலவசமாக வழங்கும். 9. அந்த நாட்டில் ஒரு லிட்டர் பெற்றோலின் விலை வெறும் $0.13 மட்டுமே. 10. லிப்யா உலக வங்கிகளிடம் இருந்து இதுவரை கடன் வாங்கியது கிடையாது. 11. உயர் கல்வி கற்று பட்டதாரி ஆகும் மாணவர்கள் தமக்குரிய வேலை வாய்ப்பு கிடைக்காது போகும் பட்சத்தில், அவர்களுக்குரிய தகுந்த தொழில் கிடைக்கும் வரை அந்தத் தொழிலுக்குரிய சம்பளத்தை அந்த அரசு மாத மாதம் வழங்கி வந்தது. 12. அந்த நாட்டிற்கு கிடைக்கும் எண்ணெய் வருமானத்தில் ஒரு தொகையை அந்த நாட்டு மக்களின் வங்கிக் கணக்கில் சேமிப்பில் இடும் அந்த அரசு. 13. ஒவ்வொரு குழந்தை பிரசவத்தின் போதும் அந்தத் தாயிற்கு அந்த நாட்டு அரசு 5500 அமெரிக்க டாலர் நாணயத்துக்கு பெறுமதியான லிபிய தினாரை வழங்கும் அதாவது இந்திய பணம் மூன்று லட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய். 14. 40 ரொட்டிகள் வெறும் $ 0.15 தினார் மட்டுமே. 15. 25% லிப்யர்கள் பல்கலைக்கழக பட்டதாரிகளாவர். 16. உலகிலேயே மிகப்பெரிய செயற்கை ஆறை உருவாக்கி லிபியாவின் பாலை நிலத்தை பசுமையாக்கியவர் என்ற பெருமை கடாபிக்கு உண்டு. fb- கருத்து படங்கள்
- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: உனை மட்டும் சுத்த வச்சியே படம்: சண்டமாருதம் இசை: ஜேம்ஸ் வசந்தன். singers:James Vasanthan, R. Sarath Kumar, Cassandra Premji- கருத்து படங்கள்
- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: தேவதையை தேட தேவை இல்லையே படம்:தேவதை இசை:யுவன் பாடியவர்:நிவாஸ் வரிகள்: நா.முத்துக்குமார்- தமிழீழ பாடல்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.