Everything posted by nunavilan
-
நகைச்சுவைக் காட்சிகள்
விவேக்கின் நகைசுவை பகுதி ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
தமிழீழ பாடல்கள்
அம்மா உன் பிள்ளை உயிரோடு இல்லை ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
டிங் டொங் கோவில் மணி இசை: வித்தியாசாகர் பாடியவர்:மதுபாலகிருஸ்ணன் &மதுசிறி ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
த்ரிஷாவும் மோதிர இடுப்பும் தமிழ் சினிமாவில் ஒரு விஷயம் அந்தக் காலம் முதல் இன்று வரை தொன்று தொட்டு தொடர்ந்து வருகிறது. அது, கதாநாயகிகளின் உடல் அழகை, குறிப்பாக இடுப்பழகை வர்ணிக்கும் பாடல்கள். நாயகிகளின் தலை முடி முதல் கனுக்கால் வரை ஒன்று விடாமல் எல்லாவற்றையும் நம்ம ஊர் கவிஞர்கள் போதும் போதும் எனும் அளவுக்கு வர்ணித்து தள்ளி விட்டார்கள். இதில் கவிஞர்களின் கவிப் பார்வையில் அதிகம் பட்டுள்ளது இடுப்புதான். உதட்டை விட நம்ம ஆட்களுக்கு இடுப்பு மீது என்னவோ ஒரு தனி கிக். அந்த இடுப்புக்கு என்னென்ன உவமைகளைக் கூற முடியுமோ அத்தனையையும் கூறி வர்ணித்து விடுவார்கள். கவிஞர்களின் வர்ணணைக்குப் பொருத்தமாக பல நாயகிகளும் கிடைத்தனர் என்பதையும் சொல்ல வேண்டும். அந்தக் காலத்தில் சரோஜாதேவி, காஞ்சனா, வாணிஸ்ரீ என பல இடுப்பழகிகள் தமிழ் சினிமாவை மயக்கி வந்தனர். அப்புறம் வந்தனர் ஸ்ரீதேவி, ஸ்ரீபிரியா வகையறாக்கள். அதற்கு அடுத்த தலைமுறையில் சிம்ரன் இடுப்பு உலகப் பிரசித்தி பெற்றது. இன்றளவும் நடிகைகளில் சிம்ரனின் இடுப்புதான் நாயகர்கள் மற்றும் ரசிகர்களின் பேவரிட். இப்போதும் கூட இடுப்பழகிகளுக்குக் குறைவில்லை என்றாலும் இடுப்பு என்ற பாகத்தைத் தனியாக பார்க்க முடியாத அளவுக்கு பல உப்பல் நாயகிகள்தான் இப்போது நிறைய இருக்கிறார்கள். இருந்தாலும் த்ரிஷா போன்ற சிலரிடம் இடுப்பு சற்றே எடுப்பாக இருப்பதை மறுக்க முடியாது. கொடி இடை, பூ இடை என்று ஆரம்பித்து கொஞ்ச நாளைக்கு முன்பு இஞ்சி இடுப்பு என்பது வரை வந்து விட்டார்கள். ஒரு கவிஞர் இடுப்பை அடுப்புக்கு சமமாக பாவித்து வர்ணித்திருந்தார். காரணம், அந்த அளவுக்கு பெண் உடலிலேயே 'சூடான' ஏரியாவாம் அது. சரி விஷயத்துக்கு வருவோம்.. இடுப்புக்கு இன்னும் கொஞ்சம் மரியாதை கொடுத்து கவிப்பேரரசு வைரமுத்து ஒரு பாட்டைத் தீட்டியுள்ளார். இந்தப் பாட்டுக்கு இடுப்பைக் கொடுத்திருப்பவர் அதாவது நடித்திருப்பவர் த்ரிஷா. ஆதி படத்தில்தான் இந்த இடுப்புப் பாட்டு எடுப்பாக வந்திருக்கிறதாம். ஆதியாக நடிக்கும் விஜய், த்ரிஷாவைப் பார்த்து பாடுவது போல படமாக்கியிருக்கிறார்கள். பாட்டு இப்படி ஆரம்பித்து எப்படி எப்படியோ போகிறது: ''ஒல்லி ஒல்லி இடுப்பே ஒட்டியானம் எதுக்கு? ஒத்த விரல் மோதிரம் போதுமடி உனக்கு...'' இந்தப் பாட்டை சமீபத்தில் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஆல்ப்ஸ் மலையில், நடுங்கும் குளிரில் படமாக்கியுள்ளனர். த்ரிஷாவின் இடுப்பு மடிப்பை, ஆல்ப்ஸ் மலைத் தொடர் மடிப்பில் ஓடியாடி சிலாகித்துப் பாடி சிலிர்ப்பூட்டியிருக்கிறார் விஜய். thatstamil.com
-
தமிழீழ பாடல்கள்
மற்றுமொரு பாடல் An Indian Tamil Contribution to Tamil Eelam ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
தமிழீழ பாடல்கள்
Contribution to EELAM/LTTE from an Indian Tamil
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
வஞ்சிகோட்டை வாலிபனில் இருந்து கண்ணும் கண்ணும் கலந்தே
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
ஒரு மாலை இளவெயில் நேரம் படம்:கஜனி இசை: கரிஸ் ஜெயராஜ் பாடியவர்: கார்த்திக் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
உங்களுக்கு தெரியுமா?
10 ஆயிரம் அடி உயரத்தில்... குரங்குகள் மலைப்பகுதிகளில் அதிகம் காணப்படும் என்பது நமக்கெல்லாம் தெரிந்த விஷயம்தான். ஆனால் மிக அதிகமான மலைப் பகுதியில் குரங்குகளை பார்க்க முடியுமா?... முடியும். சீனா திபெத்திய பீட பூமியின் தென்பகுதிகளில் காணப்படும் தங்க நிறக் குரங்குகள் 10 ஆயிரம் அடி உயரமான மலையில் அதிகம் வசிக்கின்றன. இது அபூர்வ வகை இனக் குரங்காகும். பனி காலத்தில் இவை கடும் குளிரைத் தாங்க முடியாமல் மலையடிவாரத்திற்கு வந்து விடும். இதன் உடல் நீள அளவிற்கு வாலின் நீளமும் இருக்கும். வால் இரண்டரை அடி நீளம் வரை வளரும். அண்மையில் சீனாவின் சான்டோங் நகரில் உள்ள மிருகக்காட்சி சாலையில் தங்க நிற பெண் குரங்கு ஒரு குட்டியை ஈன்றெடுத்தது. அந்தக் குட்டியை முதன் முறையாக பொதுமக்களின் பார்வைக்கு அனுமதித்தார்கள். நன்றி தினதந்தி.
-
அதிசயக்குதிரை
வாயில்லாத பிராணி ஆசிரியர்: ஏண்டா நாய் படம் போட்டுட்டு வாய் மட்டும் வரையாம வச்சிருக்கே? மாணவன்: அது வாயில்லாத பிராணி சார்...! ----------------------------------------------------------------------------------------------------------------------------------- மாப்பிள்ளை அழைப்பு "மாப்பிள்ளை அழைப்பு எங்கிருந்து ஆரம்பம்?" "சென்ட்ரல் ஜெயிலில் இருந்து." --------------------------------------------------------------------------------------------------------------------------- நடிகையின் வயசு நடிகைக்கு வயசாயிடுச்சுன்னு அவரோட கணவன் ஓடிப்போயிட்டானாமே அப்படி என்னதான் வயசு அந்த நடிகைக்கு! 93 வயசு. ---------------------------------------------------------------------------------------------------------------------------- சம்பள உயர்வு அவருக்கு சம்பள உயர்வு வராத வெறுப்ப எப்படி காட்டுவார் தெரியுமா? அவர் வீட்டுக்கு யாராவது வரும்போது அதிசயமா சம்பள உயர்வு மாதிரி வந்திருக்கீங்களே அப்டீன்னுவார். ----------------------------------------------------------------------------------------------------------------------------------- இன்டர்வியூ வந்தவங்க என்ன இன்டர்வியூ வந்தவங்க எல்லாருக்கும் தண்ணி கொடுத்து கண்ணுல ஊத்திக்க சொல்றாங்க? வேல கிடைக்கல்லேன்னா எப்படியிருந்தாலும் ஐ வாஷ்னு சொல்லப்போறீங்க அதையும் அவங்களே பண்ணிட்டா பிரச்சனை இல்ல பாருங்க!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
TAMILENTHY, ஔவையார், தேவதை ஆகியோருக்கு பிறந்த தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
-
தமிழீழ பாடல்கள்
பச்சை வயலே ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
நகைச்சுவைக் காட்சிகள்
வடிவேலுவின் நகைசுவை காட்சி
-
தமிழீழ பாடல்கள்
அடிமை விலங்கினை ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
உங்களுக்கு தெரியுமா?
கணக்கார்வலர்களுக்கு ஒரு சிறிய தகவல்... 5ல் முடியும் எந்தவொரு எண்ணின் வர்க்கத்தை(இருமடியை)யும் எளிதில் கணக்கிடும் முறை... முதலில் எண்ணின் கடைசியிலுள்ள 5ஐ நீக்கிவிட்டு(கவனிக்கவும்...கழ??த்துவிட்டு அல்ல) எஞ்சிய எண்ணை அதற்கு அடுத்த எண்ணுடன் (இங்கு 1ஐக் கூட்டவும்) பெருக்கி வரும் எண்ணுடன் 25ஐ சேர்த்தால்(கவனிக்கவும் இங்கு கூட்டல் அல்ல) தேவையான விடை கிடைத்துவிடும்.. ---------- உதாரணம் ... 25 x 25 = 625 படி.1 ) 25ல் உள்ள 5ஐ நீக்கவும்..........எண் 2 படி.2 ) 2உடன் 1ஐக் கூட்டவும் ...........எண் 3. படி.3 ) இரண்டையும் பெருக்கவும் .......2x3 = 6 படி.4 ) 25ஐ சேர்க்கவும் .........................எண் 625 (தேவையான விடை) எத்தனை இலக்க எண்ணுக்கும் இது பொருந்தும்.. ---------------------------------------------------------------------------------------------------------------------------- 11ன் வர்க்கம் (இருமடி) 121 என்று உங்களுக்கு தெரிந்திருக்கும்..... 111ன் வர்க்கம் என்ன என்று எளிதாக கூறமுடியுமா ?? முடியும்.. 12321 என்று ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் சொல்லமுடியும்.. இதேபோல மற்ற எண்களுக்கும்.... 1111 x 1111 = 1234321 11111 x 11111 = 123454321 111111 x 111111 = 12345654321 ... ... 111111111 x 111111111 = 12345678987654321
-
நகைச்சுவைக் காட்சிகள்
வடிவேலுவின் நகைச்சுவை பகுதி
-
அதிசயக்குதிரை
கந்தப்புவும் - சோமண்ணையும் கந்தப்பு: ஐரோப்பாவில் அகதி வாழ்கையில் பிடிப்பில்லாமல் வாழ்ந்த கன ஆட்களுக்கு பிடிப்பு வந்துட்டுதாம் ! சோமண்ணை: ஐரோப்பிய வாழ்க்கையில் அப்பிடி என்ன பிடிப்பு வந்ததாம் ? கந்தப்பு: நாரிப்பிடிப்பு, முழங்கால்பிடிப்பு, கழுத்துப்பிடிப்பு எண்டு கன பிடிப்புக்கள் வந்திட்டுதாம். சோமண்ணை:- !!!???... -------------------------------------------------------------------------------------------------------------------------------- கந்தப்பு: கோயில் பக்கமே போகாத சுந்தரத்தான் இப்ப அடிக்கடி கோயிலுக்கு போய் பஐனை எல்லாம் பாடுறான். பக்திமானாகிட்டானோ ! சோமண்ணை: பக்தியுமில்லை, கித்தியுமில்லை இப்ப கோயில்வழிய பூசைமுடிய அன்னதானம் குடுக்கினமாம் அதுதான் அடிக்கடி கோயிலுக்கு போறான். கந்தப்பு: !!!???... ------------------------------------------------------------------------------------------------------------------------------- கந்தப்பு: நம்ம தலைவர் பெரிசா ஒரு வீடு கட்டுறாரே... யாருக்கு அந்த பெரிய வீடு? சோமண்ணை: அது அவரோட சின்ன வீட்டுக்குத்தான்! கந்தப்பு: ???!!!... ----------------------------------------------------------------------------------------------------------------------------- கந்தப்பு: எங்கட கோவில் ஐயர் ஏன் அடிக்கடி வேதக் கோவிலுக்குப் போகிறார்? சோமண்ணை: பாவ மன்னிப்பு கேட்கத்தான். கந்தப்பு: !!!???... -------------------------------------------------------------------------------------------------------------------------------- கந்தப்பு: ஆமா, உன் பொண்ணு அந்த நல்ல குணமான உத்தியோகஸ்தனைக் கல்யாணம் செய்ய மறுத்திட்டாளாமே...ஏனாம்..? சோமண்ணை: தன்ர கூந்தலைவிட அவரின் கூந்தல் மிகவும் நீளமாம் அதுதான்! கந்தப்பு: ???!!!...
-
அதிசயக்குதிரை
பேங்க் லோன் சார் நாங்க பேங்க்லேர்ந்து பேசறோம்... எங்க கிட்ட புது லோன் ஸ்கீம் வந்திருக்கு சார்... அதுல கேட்டிங்கன்னா... காலைலேர்ந்து சாப்படல... 10 ரூபா லோன் குடுத்தீங்கன்னா... போய் சாப்டுட்டு வந்துருவேன். ------------------------------------------------------------------------------------------------------------------------------------ திருட்டுக் காய்ச்சல் உங்களுக்கு வந்திருக்கறது திருட்டுக் காய்ச்சல் எத வச்சு டாக்டர் இதை திருட்டுக் காய்ச்சல்னு சொல்றீங்க? நீங்கதான சொன்னீங்க, வீட்டுல யாருமே இல்லாதபோது நடு ராத்திரி வந்துச்சுன்னு... ---------------------------------------------------------------------------------------------------------------------------------- காபி பொடி "சார் அந்த ப்ளேயர நீங்க ஏகப்பட்ட பணம் கொடுத்து ஏலம் எடுத்துருக்கீங்கங்கறது உண்மைதான்... அதுக்காக அவரை காப்பி பொடி வாங்க கடைக்கு அனுப்பறது கொஞ்சம் கூட நல்லாயில்ல." -------------------------------------------------------------------------------------------------------------------------- ரிவர்ஸ் அவர் ஏன் கார ரிவர்ஸ்லயே ஓட்டிட்டு போறார். விற்கும் போது கி.மீ. குறைவா காண்பிக்கணுமாம். ---------------------------------------------------------------------------------------------------------------------- டெஸ்ட் மேட்ச் என்ன எல்லா ப்ளேயர்சும் பேப்பரும், பேனாவுமா வந்துருக்காங்களா? இன்னிக்கு டெஸ்ட் மேட்சுங்கறத தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உரிமையடா
-
அதிசயக்குதிரை
மாறாது, மாறாது ஒரு போதும் மாறாது குயில் எங்கை இருந்தாலும் கூ கூ என்று கூவும் காகம் எங்கை இருந்தாலும் கா கா என்று கரையும் தமிழன் எங்கை இருந்தாலும் ஏன் ??? வணக்கம் பிள்ளையள் எப்படி சுகம்? வெயில் தொடங்கிட்டுது. இனி வீட்டுக்குள்ள இருக்க முடியாது. காலம் மாறி மாறித்தான் வரும் ஆனால் நாங்கள் தான் ஓரே அடியாய் மாறிப்போனம், எங்கட குணம் மாறாது பாருங்கோ. அதுக்கு நல்ல உதாரணம் எங்கட கனடா கைலாஸ், அவன்ற கதையை சொல்லுறன் கேளுங்கோ. அப்ப ஊரிலை கமக்கார சின்னத்துரையின்ற மகன்கைலாசநாதன் சின்னனில நல்லா கஷ்டப்பட்டவன். விடிய வெள்ளன எழும்பி தோட்டத்திற்குப்போய் தோட்ட வேலை செய்து சந்தையில் போய் மரக்கறி வித்துப்போட்டுதான் பள்ளிக்குப் போறவன். பள்ளிக்குப்போற நேரம் தவிர மற்ற நேரம் எல்லாம் ஆளை கோமணத்தோடதான் காணலாம். ஏனெண்டால் நெடுக தோட்ட வேலைதான். அதாலை அவனை கோமணக்கைலாசு எண்டும் கூப்பிடுறவை. கடைசியிலை அவன் நல்லா படிச்சு டாக்குத்தராய் வந்திட்டான். வந்ததும் இல்லாமல் கனடாவுக்கும் டாக்குத்தராய் போட்டான். அவன் போய் இப்ப 20 வருஷத்திற்கு மேல் ஆகிவிட்டது. கமக்கார கைலாசு என்று கூப்பிட்டகாலம் போய் கனடா டாக்குத்தர் கைலாசு என்றால்த்தான் ஊரிலை தெரியும். கனடாவுக்கு போனவன் 2 வருஷத்தால ஊருக்கு வந்து நல்ல சீதனத்தோட நகைநட்டு, தோட்டம், துறவு, வீடு வளவுகளோட ஓரு கலியாணமும் முடிச்சுக் போனவன் போனதுதான். பிறகு ஊர் பக்கமே ஆளைக்காணோம். அப்ப இப்படி நாட்டுப்பிரச்சனை இல்லைத்தானே. வடிவாக வந்து போயிருக்கலாம் வரவே இல்லை இப்ப எண்டாலும் ஆமி பிடிச்சுப்போடும் நாட்டுப்பிரச்சனை என்று சொல்லலாம். அவன் அப்பவே வராதவன் இப்ப எங்க வரப்போறான் எண்டுட்டு கனடா போன இடத்திலை அவனை ஒருக்கா போய்ப்பார்ப்போம் எண்டுட்டு அவனைப்பார்க்கப்போனன் பாருங்கோ. அவனைக்கண்டு கைலாசு எப்படிச்சுகம் ? என்னை தெரியுதோ ? எண்டு கேட்டன் பாருங்கோ. அதுவும் தமிழிலைதான் கேட்டனான். அவன் என்னைப்பார்த்து ஹலோ கூ ஆர் யு? வட் இஸ் யுவர் நேம்? எண்டு இங்கிலிசிலை கேட்டதும் எனக்கு தூக்கிவாரிப்போட்டிட்டுது. அவனை சொல்லி என்ன குற்றம். இப்ப எங்கட தமிழ்சனத்தில சிலதுகளுக்கு தாய் தகப்பனையே மறந்து போகுது. உவன் பாவிக்கு 20 வருஷத்துக்கு முன்னம் கண்ட பக்கத்து வீட்டுக்காரன் என்னை எங்க தெரியப் போகுது. என்னை தெரியாட்டிலும் பறுவாயில்லை. நான் தமிழிலை கதைச்சதற்கு அவன் தமிழிலை எண்டாலும் பதில் சொல்லியிருக்கலாம்தானே. காகத்தின்ர கூட்டிலை குயில் முட்டை போடுது. காரணம் குயிலுக்கு அடைகாக்க தெரியாதாம். காகம் அடைகாத்து பொறிச்ச குயில் குஞ்சு கூ கூ எண்டு கூவுது. காகத்திண்ட குஞ்சு கா கா எண்டு கத்துது. அது, அது தன்ர குரலாலைதான் தங்களை யார் எண்டு இனம் காட்டுது. ஆனால், இந்த தமிழ் இனத்திலை சிலர் தங்களை வெள்ளையன் எண்டு காட்ட தங்கட தாய்பாசையை கதைக்க வெக்கப்படுகினம். உது எல்லாம் ஒருவகை வருத்தம் கண்டியலோ. உதுகளை எப்படி மாற்றுறது எண்டு உங்களிட்டத்தான் கேட்கின்றன். நீங்கள்தான் பதில் சொல்ல வேணும். உப்படியான ஆட்களைக் காணேக்க எனக்கு ஒரு சினிமாப் பாட்டுத்தான் ஞாபகம் வருது. அது என்ன பாட்டு எண்டால் "வானத்தில் மீது பறந்தாலும் காக்கை கிளியாகமாறாது. கோட்டையின் மேலே நின்றாலும் ஏழையின் பெருமை உயராது". எமக்கு எண்டு ஒரு நாடு வரும்வரை இந்த அகதி என்ற பெயர் மாறாது பாருங்கோ. அகதி என்ற பெயர் மாறினாலும் எங்கட சனம் மாறவே மாறாது. எனக்கும் நேரமாகுது போட்டுவாரன் எல்லா தமிழ் மக்களுக்கும் மங்களம் உண்டாகட்டும்
-
உங்களுக்கு தெரியுமா?
வான வேடிக்கை கடந்த July 4 ஆம் தேதி டெம்பல்-1 என்ற வால் நட்சத்திரத்தில் மனிதனால் உருவாக்கப்பட்ட விண்கலனை மோதி நாசா விஞ்ஞானிகள் சாதனை புரிந்தார்கள் அல்லவா? டீப் இம்பாக்ட் என்று பெயரிடப்பட்ட இந்த முயற்சிக்கு விதை 1998 ஆம் ஆண்டிலேயே விதைக்கப்பட்டது. அப்போது பரபரப்பாகப் பேசப்பட்ட ஹhலி வால் நட்சத்திரத்திலுள்ள கருமையான மேற்பகு தியை ஆராய்வதற்காக ஒரு விண்கலனை அதில் மோதவிட முயற்சிக்கப்பட்டது. ஆனால் விண் கலனை சரியான பாதையில் செலுத்தக்கூடிய உயர் தொழில்நுட்பம் இல்லாததால் அப்போது அந்த முயற்சி கைவிடப்பட்டது. ஆனால் தற்போது விண்ணியல் தொழில் நுட்பங்கள் பெருமளவு முன்னேற்ற மடைந்துள்ளதால் நாசா விஞ்ஞானிகள் தைரியத்துடன் இந்த முயற்சியில் ஈடுபட்டு வெற்றி கண்டனர். முயற்சியெல்லாம் சரி, ஆனால் எதற்காக இந்த மோதல்? இதனால் என்ன இலாபம்? நாம் முன்பே வால் நட்சத்திரங்களை பற்றி கூறும் போது அவை 450 கோடி ஆண்டுகளுக்கு முன் Nரியன் உருவான காலக்கட்டத்தில் வாயுக் களும், தூசு மேகங்களும் சேர்ந்து உருவானவை ஆகையால் அவற்றின் மேற்பரப்புக்கு அடியிலுள்ள பகுதிகளை ஆராய்ந்தால் Nரியன் உருவான வரலாற்றை பற்றி மேலும் பல முக்கிய தகவல்கள் கிடைக்கும் என விஞ்ஞானிகள் நம்பினர். ஆனால் பூமிக்கு கொண்டு வந்து ஆராய்வதற்கு இவை ஒன்றும் சிறு கற்களல்லவே, ஒவ்வொன்றும் பல மைல்கள் அளவுக்கு நீண்ட இராட்சத விண் பாறைகளாகையால் இங்கிருந்து ஒரு விண்கலனை ஏவி அதனை வால் நட்சத்திரத்துடன் மோதினால் அதன் மேற்புறத்துக்கு அடியிலுள்ள பகுதிகள் வெளியே தெரியும். அவற்றை ஆராய்ந்து Nரியன் மற்றும் பூமி உருவான வரலாற்றை பற்றி புதிய தகவல்களை அறிய முடியும். பூமியிலிருந்து ஒரே பகுதியாக ராக்கெட் மூலம் அனுப்பப் பட்ட டீப் இம்பாக்ட் விண்கலம் டெம்பல்-1 வால் நட்சத் திரத்தை நெருங்குகையில் இரண்டாக பிரிந்து அதில் ஒரு பகுதி டெம்பல்-1 நோக்கி மோதுவதற்கு புறப்பட்டது. மற்றெhரு பகுதி இந்த மோதலை படமெடுத்து பூமிக்கு அனுப்பி வைக்கிறது. தாய்க் கலத்திலிருந்து பிரிந்த 24 மணி நேரத்தில் 371 கிலோ எடையுள்ள மோதும் கலன் மணிக்கு 70,000 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று டெம்பல்-1 வால் நட்சத்திரத்தை தாக்கி பெரும் தீப்பிழம்பு களுடன் வெடித்து சிதறியது. இது பார்ப்பதற்கு வாண வேடிக்கையை போல தோற்றமளித்தது. இந்த மோதலின் மூலம் 5 டன் எடை வெடிப் பொருட்களுக்கு இணையான சக்தி டெம்பல்-1 வால் நட்சத்திரத்தில் உண்டாகியது. இதனால் 325 அடி அகலமும், 80 அடி ஆழம் கொண்ட பள்ளம் இந்த வால் நட்சத்திரத்தில் உருவாகி யுள்ளது. இந்த மோதல் முயற்சிக்கான மொத்த செலவு எவ்வளவு தெரியுமா 1500 கோடி ரூபாய்கள். டீப் இம்பாக்ட் விண்கலன் பூமியிலிருந்து 13 கோடி கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதால் இங்கிருந்து நாம் அதனை கட்டுப்படுத்த நாம் இடும் கட்டளைகள் 7-1 2 நிமிடங்களுக்கு பிறகு தான் விண்கலனுக்கு போய் சேரும். இதனால் விண்கலனை நகர்த்துவதற்கு முன்கூட்டியே அதன் பாதையை தெரிந்து வைத்து அதற்கேற்ப கட்டளை களை இங்கிருந்து செயல்படுத்த வேண்டும். இந்த டீப் இம்பாக்ட் மோதலினால் டெம்பல்-1 வால் நட்சத்திரத்தின் பாதையில் பெருமளவு மாற்றங்கள் நிகழப் போவதில்லை. அதன் வேகம் மட்டும் மணிக்கு 0.014 அங்குலம் என்ற ரீதியில் குறைகிறது. இதனால் பூமிக்கோ, டெம்பல்-1 வால் நட்சத்திரத்துக்கோ எந்த ஆபத்துமில்லை. தினகரன்-
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நெடுக்ஸ், பிறந்த தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
-
அதிசயக்குதிரை
கந்தப்புவும் - சோமண்ணையும் கந்தப்பு: திருவள்ளுவர் ஐரோப்பாவிற்கு வந்திருந்தால், எப்படி குறள் எழுதியிருப்பார்? சோமண்ணை: "வட்டிக்கு விட்டவன் வயிறு எரிய வாழ்வான். சீட்டுப்பிடித்தவன் சீரழிஞ்சு போவான்" என்று எழுதியிருப்பார். கந்தப்பு: ???!!!... ----------------------------------------------------------------------------------------------------------------------------------- கந்தப்பு: உங்கட மகன்ரை பண்பாட்டைப் பார்த்துத்தான் என் மகள் விரும்பினாள். சோமண்ணை: என்ன பண்பாடு? கந்தப்பு: "ரீ" "யூஸ்" குடிக்கும் போதும் "சியேஸ்" சொல்லுறாரே... -------------------------------------------------------------------------------------------------- கந்தப்பு: என்ன சோமண்ணை தாயின்ர செத்த வீட்டில மூத்தமகன் சுந்தரத்தைக் காணக்கிடைக்கல... சோமண்ணை: வட்டிக்காசு வாங்கப் போனவர் வர சுணங்கிட்டுதாம்! கந்தப்பு: ???!!!... ------------------------------------------------------------------------------------------------------ சோமண்ணை: ஐரோப்பாவில வெள்ளையன் 800 பேர் இருக்கக்கூடிய பிளேனை செய்துமுடிச்சு வெள்ளோட்டம் விட்டவங்களாம். கந்தப்பு: ஏன்! எங்கட ஆட்களும் வருசா வருசம் ஐரோப்பாவில வெள்ளோட்டம் விடுகினம் தானே! சோமண்ணை: என்னத்தை விடுகினம்? கந்தப்பு: 800 பேர் இழுக்கக்கூடிய தேரை செய்து முடிச்சு வெள்ளோட்டம் விடுகினம்தானே. சோமண்ணை: ????!!!... - ----------------------------------------------------------------------------------------------------------------- கந்தப்பு: லண்டன் மாப்பிள்ளை ஏன் எரிஞ்சு எரிஞ்சு விழுகிறார்? சோமண்ணை: அவர் எரிபொருள் விற்பனை நிலையத்தில் வேலை செய்கிறார். அதுதான் எரிஞ்சு, எரிஞ்சு விழுகிறார்.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
கேளாமல் படம்: அழகிய தமிழ்மகன் இசை: ஏ.ஆர்.ரகுமான் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> பெண் : கேளாமல் கையிலே வந்தாயே காதலே கேட்டு ரசித்த பாடல் ஒன்றை மீண்டும் இந்த ஞாபகம் தூண்ட கேட்டு ரசித்த பாடல் ஒன்றை மீண்டும் இந்த ஞாபகம் தூண்ட என்னை உன்னை எண்ணி யாரோ எழுதியது போலவே தோன்ற.... என்னை உன்னை எண்ணி யாரோ எழுதியது போலவே தோன்ற.... ஆண் : கேளாமல் கையிலே வந்தாயே காதலே என் பேரை கூறிடும் உன்பேரும் கோகிலம் பெண் : கோகிலம்.. கோகிலம் ... கோகிலம்.. நெஞ்சிலே காதலின் கால்தடம்.. கேளாமல் கையிலே வந்தாயே.. காதலே என் ராமன் நீயெனில் உன்கையில் நான் அணில் ஆண் : இனிமேல் இனிமேல் இந்த நானும் நானில்லை போய்வா போய்வா என்றே எனக்கே விடைகள் தந்தேன் பெண் : மெலிதாய் மெலிதாய் நானிருந்தேன் மிக எளிதாய் எங்கும் நடந்தேன் இன்று உனை நெஞ்சில் சுமந்தேன் நான் நடந்தேன்.. நடந்தும் விழுந்தேன் ஆண் : கூந்தலென்னும் ஏணி ஏறி முத்தமிட ஆசைகள் உண்டு பெண் : நெற்றி மூக்கு உதடு என்றே இறங்கி வர படிகளும் உண்டு ஆண் : கேளாமல் கையிலே வந்தாயே காதலே என் பேரை கூறிடும் உன்பேரும் கோகிலம் பெண் : பார்த்தும் பாராமலே போகும் மேகங்களே பார்த்தும் பாராமலே போகும் மேகங்களே ஏதோ நடக்கின்றதே ...?... பார்த்தும் பாராமலே போகும் மேகங்களே கண்ணை கண்ணை சிமிட்டும் நொடியில் உன் உருவம் மறையும் மறையும் அதனால் இமைகள் வேண்டாம் என்பேன் ஆண் : பார்வை ஒன்றால் உனை அள்ளி என் கண்ணின் சிறையில் அடைப்பேன் அதில் நிரந்தரமாய் நீ இருக்க இமைகள் வேண்டும் என்பேன் பெண் : மேற்கு திசையை நோக்கி நடந்தால் இரவு கொஞ்சம் சீக்கிரம் வருமா ஆண் : தூங்கும் தேவை ஏதுமின்றி கனவுகளும் கைகளில் விழுமா பெண் : கேளாமல் கையிலே வந்தாயே.. காதலே என் ராமன் நீயெனில் உன்கையில் நான் அணில் ஆண் : கோகிலம்.. கோகிலம் ... கோகிலம் நெஞ்சிலே காதலின் கால்தடம் பெண் : கோகிலம்.. கோகிலம் ... கோகிலம் நெஞ்சிலே காதலின் கால்தடம்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
வசீகரா உன் நெஞ்சினிக்க படம்: மின்னலே இசை: கரிஸ் ஜெயராஜ்