Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. ஜடெஜாவின் விக்கட்டும் போய் விட்டது.
  2. மீண்டும் போட்டி 10 நிமிடத்தில் தொடங்கவுள்ளது.
  3. பாகிஸ்தான் களதடுப்பை தெரிவு செய்துள்ளது. முதல் ஆறு ரோகிட்
  4. இந்திய அணிக்கு எதிராக குற்றம் சுமத்திய சிஎஸ்கே வீரர் தீக்ஷனா.. டி20 உலகக்கோப்பையில் பாரபட்சம்? 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு மிக மோசமான போட்டி அட்டவணை மற்றும் பயணத்திட்டம் தயாரிக்கப்பட்டு இருப்பதாகவும், அதேசமயம் வேறு சில அணிகள் ஒரே மைதானத்தில் தங்கள் பயிற்சி போட்டி உட்பட நான்கு போட்டிகளில் விளையாடுவதாகவும் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் மதீஸ் தீக்ஷனா குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். அவர் வேறு அணி என குறிப்பிடுவது இந்திய அணியை தான். இந்திய அணி நியூயார்க் நகரின் நாசா கவுண்டி மைதானத்தில் தனது பயிற்சி போட்டி உட்பட குரூப் சுற்றின் முதல் மூன்று போட்டிகளையும் விளையாட உள்ளது. அதிலும் தொடர்ந்து மூன்று போட்டிகளும் அங்கேயே நடைபெற உள்ளது. அதனால் இந்திய அணி பயணம் செய்யத் தேவையில்லை. ஆனால், இலங்கை அணி தனது பயிற்சி போட்டியை ஒரு மைதானத்தில் ஆடிவிட்டு, அதன் பின் முதல் குரூப் சுற்றுப் போட்டிக்கு வேறொரு மைதானத்திற்கு செல்ல வேண்டும். அதன் பின் அடுத்த மூன்று குரூப் போட்டிகளுக்கும் வெவ்வேறு மைதானங்களுக்கு பயணம் செய்து விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அது மட்டும் இன்றி விமான நிலையத்தில் 8 மணி நேரம் அல்லது அதற்கு மேல் காத்திருக்க வேண்டி இருப்பதாகவும், அதனால் பயிற்சி செய்ய முடியவில்லை எனவும் அந்த அணியின் முன்னணி வீரர் தீக்ஷனா கூறி இருக்கிறார். இந்திய அணிக்கு மட்டும் சாதகமான போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டு இருப்பதாகவும், எந்த பிட்ச்சில் ஆடுகிறோம், அதன் தன்மை என்ன என்பது தெரிந்து ஆடக் கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் மற்ற அணிகளுக்கு அது போன்ற வாய்ப்பு கிடைக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தி இருக்கிறார். இது குறித்து தீக்ஷனா பேசுகையில், "எங்களுக்கு நியாயமே இல்லாத வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஒவ்வொரு போட்டி முடிந்தவுடனும் அந்த மைதானத்தை விட்டு உடனடியாக வேறு மைதானம் இருக்கும் நகரத்துக்கு பயணம் செய்ய வேண்டி உள்ளது. ஏனெனில், நாங்கள் நான்கு வெவ்வேறு மைதானங்களில் ஆட உள்ளோம். இது நியாயமே இல்லை. நாங்கள் ஃப்ளோரிடாவில் இருந்து விமானத்தில் பயணம் செய்ய வேண்டும். அதன் பின் மியாமியில் இருந்து பயணம் செய்ய வேண்டும். நாங்கள் ஒவ்வொரு முறையும் விமானத்துக்காக எட்டு மணி நேரம் காத்திருக்க வேண்டியது உள்ளது. அதை நாங்கள் செய்கிறோம். நாங்கள் இரவு எட்டு மணிக்கு விமான நிலையத்துக்கு வந்தோம். ஆனால் காலை ஐந்து மணிக்கு தான் விமானம் கிடைத்தது. இது நியாயமே இல்லை. ஆனால் போட்டியில் ஆடுவதற்காக இதை நாங்கள் கண்டு கொள்ளாமல் இருக்கிறோம்." என்றார். மேலும், "தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டி முடிந்துள்ள நிலையில் அடுத்த விமானத்தை பிடிக்க போட்டி முடிந்த உடன் ஒரு மணி நேரம் 40 நிமிடத்தில் ஹோட்டல் அறையில் இருந்து கிளம்பி விமான நிலையம் செல்ல வேண்டும். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டிக்கு முன்பு கூட நாங்கள் விடியற்காலை 5 மணிக்கு எழுந்து மைதானத்திற்கு வந்து சேர்ந்தோம். எங்கள் பயணக் களைப்பின் காரணமாக பயிற்சியை கூட நாங்கள் ரத்து செய்தோம்" என்றார் தீக்ஷனா. மேலும், "என்னால் சில அணிகளின் பெயரை சொல்ல முடியாது. அவர்கள் ஒரே மைதானத்தில் தங்கள் குரூப் சுற்று போட்டிகளை விளையாடுகிறார்கள். அதனால் அவர்களுக்கு அந்த மைதானத்தின் தன்மை என்ன என்பது தெரியும். அவர்கள் அதே மைதானத்தில் பயிற்சி போட்டியில் கூட விளையாடுகிறார்கள். வேறு யாருக்கும் அந்த வாய்ப்பு கிடைக்காது. நாங்கள் எங்கள் பயிற்சி போட்டியை ஃப்ளோரிடாவில் விளையாடினோம். ஆனால் மீண்டும் மூன்றாவது போட்டியில் தான் ஃப்ளோரிடாவில் நாங்கள் விளையாட உள்ளோம். அதற்காக நாங்கள் மீண்டும் பயணம் செய்ய வேண்டும். அடுத்த ஆண்டாவது இது போன்ற விஷயங்களை மற்றவர்கள் சிந்திக்க வேண்டும். இந்த ஆண்டு எதுவுமே மாறாது என்பது எனக்கு தெரியும். எங்கள் நிர்வாகம் இன்றைய விமானத்தை சரியாக திட்டமிட முயன்று வருகிறது. ஏனெனில் நாங்கள் இன்று போட்டி முடிந்த உடன் எங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டு விமானத்தில் கிளம்ப வேண்டும்" இவ்வாறு தீக்ஷனா கூறினார். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் போட்டியில் இலங்கை அணி 77 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த போட்டிக்கு பின்பு தான் இலங்கை வீரர்கள் இவ்வாறு தங்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களை தெரிவித்துள்ளனர். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டிக்கு பின் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் தான் இதை அவர்கள் கூறினார்கள். இதில் சோகம் என்னவென்றால் அப்போது அடுத்த விமானத்துக்கான நேரம் நெருங்கியதால் அந்த பத்திரிகையாளர் சந்திப்பையும் அவர்கள் விரைவாக முடித்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.
  5. அமெரிக்கா இறங்குதுறையை வைத்து மக்களுக்கு உதவுவது போல் உளவு வேலையை பார்க்க தான் சந்தேகப்பட்டது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. அப்பாவி மக்களை கொல்லும் பயங்கரவாதிகள் அழிக்கப்பட வேண்டும். இஸ்ரேலால் கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி மக்கள் பற்றி அகதிகளாக உள்ள எம்மவர் கருத்து தெரிவிக்காதது ஆச்சரியம் அளிக்கிறது.
  6. அண்ணாமலை உண்மையில் தனக்கென்று தலைவருக்குண்டான தகுதியோ செல்வாக்கோ இல்லாத நபர் என்று தான் போட்டியிட்ட கோவை தெகுதியில் நிருபித்திருக்கிறார். அண்ணாமலை பெற்றது மிகப்பெரிய தோல்வி அந்த தொகுதியில் ஏற்கனவே கோவை தொகுயில் 2014 ல் பாசக தனித்து போட்டியிட்டது 2014 நிலவரம் பதிவான வாக்குகள் -1159192 ராதாகிருஷ்ணன் பாசக -389701 அதிமுக -431717 திமுக -217083 காங்கிரஸ் -56902 2024 பதிவான வாக்குகள் 1366177 பாசக -450132 திமுக -568200 அதிமுக -236490 நாதக-82657 இப்போது புரிகிறதா ஏற்கனவே மிக வலுவான வாக்கு வங்கி உள்ள இடத்திலேயே புதிய வாக்காளர் இரண்டு லட்சம் சேர்த்து கூட அண்ணாமலையால் இந்த தொகுதியில் தலைவர் என்ற முறையில் செயிக்க முடியவில்லை வாக்கு வங்கியையும் உயர்த்த முடியவில்லை. ஆனால் தான் போலி தலைவர் என்ற உண்மை தெரிந்தும் தன்னால் பாசக வளர்ந்து வாக்கு வங்கி உயர்ந்து விட்டது என்று பிம்பத்தை கட்டமைக்க முயல்கிறார். இதே போல் தான் நாகர்கோவில் கன்னியாகுமரி தொகுதிகளும். இவரை தலைவர் என்று ஒரு அறிவிலி கூட்டம் நம்பிகொண்டிருக்கிறது
  7. இஸ்ரேலால் கைது செய்யப்பட்ட பல பலஸ்தீனியர்களையும் இஸ்ரேல் விடுவித்திருக்கலாம். மக்களுக்கு உதவ என சென்ற அமெரிக்க உதவி நிறுவனம் தாங்களாகவே மக்களுக்கு உதவுவதாக கூறி மக்களுக்குள் மக்களாக நின்று காட்டிக்கொடுத்ததாக பலஸ்தீனிய செய்திகள் கூறுகின்றன.
  8. அமெரிக்காவின் கொல்லைப்புரத்தில் Russia ராணுவம்!
  9. அமெரிக்காவின் எல்லைக்குள் செல்லும் ரஸ்ய ஆயுதங்கள் | அரசியல் களம் | போரியல் ஆய்வாளர் அருஸ்
  10. மேகநாதன் முனுசாமி · உண்மை நிகழ்வு.. தமிழரை திருமணம் செய்த நியுசிலாந்து வெள்ளைகார பெண் தன் தமிழ் கணவர் மற்றும் குடும்பத்துடன் இரயிலில் திருச்சிக்கு பயணம் செய்துகொண்டிருந்தார்..அவரிடத்தில் அவரின் கணவர் மூலம் அறிமுகமான நான் பேசிகொண்டிருந்தபோது.. அவர் சொன்னார் தான் முதல்முறையாக தமிழ்நாட்டுக்கு வருவதாகவும் தன் கணவர்மூலம் தனக்கு தமிழ் நன்றாக பேச தெரியும் என்றும்..தன் கனவரின் சொந்த ஊருக்கு போய் கொண்டிருப்பதாகவும் சொன்னார்கள்.. பேச்சுவாக்கில் தமிழ் திரைபடங்கள் மற்றும் தமிழ் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் அதிகம் பார்த்திருப்பதாகவும்..அதில் வரும் நடிகர் நடிகைகளை பார்த்து தமிழ்நாட்டில் அனைவரும் வெள்ளையாக இருப்பார்கள் என்று தான் நினைத்ததாகவும்.. ஆனால் தமிழ்நாட்டுக்கு வந்து பார்த்தால் தமிழ்மக்கள் பெரும்பாலும் கருப்பாகத்தான் இருக்கிறார்கள் ஏன் இந்த முரண்பாடு என்று கேட்டார்.. நான் அவர்களிடத்தில் சொன்னது !உலகில் ஆப்பிரிக்கர்களுக்கு எதிராக ஐரோப்பியர்கள் கட்டமைத்தை கருப்பு வெள்ளை நிற பேதத்தைவிட தமிழர்கள் மீது தமிழ்நாட்டுக்கு வந்த பிழைப்புகாக வந்த வெளிஆட்கள் கட்டமைத்த நிறபேதம்தான் மிக சூழ்ச்சியானது கொடுமையானது..இது ஒருவகையான உளவியல் தாக்குதல்.. வெள்ளையாக இருக்கும் வெளிமாநில நடிகர்கள்கள் இங்கே திரைபடத்தில் நுழைந்து சினிமா தோன்றிய காலத்திலிருந்து இங்கே ஆக்கிரமித்து கொண்டு தமிழக அரசியலில் நுழைந்து முதலமைச்சர் ஆவதுவரை நடந்துகொண்டிருப்பதற்கு காரணம் தமிழர் மீது இவர்கள் கட்டமைத்த இந்த கருப்பு தாழ்வு வெள்ளை உயர்வு என்கிற நிறபேதமே!.. சினிமா தொடக்ககாலத்தில் பெரும்பாலும் வெள்ளையாக இருக்கும் வெளிமாநில தெலுங்கர்களும்,மலையாளிகளும் கண்ணடர்களும் தமிழ் சினிமாவில் வாய்ப்பு பெற்றனர்..அது இப்போது வட இந்தியர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில் தொடங்கி எமி சாக்சன் என்கிற வெளி நாட்டு வெள்ளைகாரிக்கு வாய்ப்பு கொடுப்பதுவரை போய்விட்டது.. இதனுடைய உளவியல் தாக்குதல் என்னவென்றால் கருப்பாக ஒரு தமிழ் மாப்பிள்ளை கருப்பாக இருக்கும் பெண்ணை பெண் கருப்பு என்று ஒதுக்குகிற அவலம் இங்கே நிகழ்ந்துகொண்டுருக்கிறது.. அது இப்பொழுது திரைபடம் மட்டும் இல்லாமல் தொலைகாட்சி அரசியல் விவாதம் என அனைத்திலும் நடபக்கிறது இவ்வளவு ஏன் தமிழ் செய்தி வாசிப்பாளர்கள்கூட இங்கே வெள்ளையாகத்தான் இருக்கவேண்டும் என்று கட்டமைத்து இருக்கிறார்கள்..இதனால் தமிழை தாய்மொழியாக கொண்ட செய்திவாசிப்பாளர்களை கருப்பாக இருப்பதால் அவர்களை ஒதுக்கிவிட்டு தமிழ் நன்றாக தெரிந்த வெள்ளையாக இருக்கும் வேற்று இனத்தவர்களுக்குத்தான் இன்று தமிழ் நாட்டு செய்தி சேனல்கள் வாய்ப்பு கொடுக்கின்றன..ஆப்பிரிக்க கண்டத்தில் இருக்கும் எந்த நாட்டு மக்களுக்கும்கூட இப்படி சொந்த நாட்டு மக்களை நிறபேதத்தால் ஒடுக்கும் நிலை வந்ததில்லை.. தமிழர் என்கிற தேசிய இனத்தின் முகங்களாக இருப்பது பெரும்பாலும் வெள்ளையாக இருக்கும் வெளிமாநிலத்தவரே.. இதனால் தமிழர்களின் நிலை அனைத்துமட்டத்திலும் தாழ்ந்து இருக்கிறது என்று தலை குனிந்து சொன்னேன்.. So sad என்று சிரித்துகொண்டே சொன்னார்.. https://www.facebook.com/groups/186225785430860/?hoisted_section_header_type=recently_seen&multi_permalinks=1436666207053472
  11. ஈழப்போராட்ட வரலாற்றில் வீரச்சாவை தழுவிய முதல் போராளி பொன் சிவகுமாரனின் 50 ஆவது ஆண்டு நினைவு தினத்தின் பிரதம விருந்தினராக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டார். தமிழ் மக்களின் கெளரவமான அரசியல் வாழ்விற்காக உழைத்து உயிர் தியாகம் செய்த தியாகி பொன். சிவகுமாரனுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழரசுக் கட்சி மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப்., ரெலோ ஆகிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் மறுவன்புலவு சச்சிதானந்தம் உட்பட பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
  12. சித்தார்த்தன் பொது வேட்பாளருக்கு தான் (புளட்) ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளாராம்.
  13. மிகுதி தகவல் என்னிடம் கிடைக்கவில்லை. நண்பர் ஒருவர் முகப்புத்தகத்தில் பகிர்ந்ததை யாழில் நானும் பகிர்ந்தேன்.
  14. அவர் வழமை போல நேரத்துக்கு ஏற்ப கருத்துக்களை அள்ளி வீசும் சராசரி அரசியல்வாதி தான். சாதிய கட்சி நடாத்துவதால் அவரின் சாதியினரின் வாக்கு வங்கி அவருக்கு (அவரது கட்சிக்கும்) உண்டு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.