Everything posted by nunavilan
-
வாக்குகளைக் குறிவைக்கும் கட்சிகள் : தமிழ் மக்களுக்கு நாமல் எச்சரிக்கை!
அண்மைய சஜித்தின் 13 சம்பந்தமான கருத்துக்கு தான் மறைமுகமாக சாடுகிறார். இவர் என்ன முகத்துடன் தமிழ் மக்கள் முன் வருகிறார் என பார்க்கலாம்.
-
Russian warships including nuclear sub arrive in Cuba
Russian warships including nuclear sub arrive in Cuba
-
போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தயார்.. அறிவித்த ஹமாஸ் – ஏற்குமா இஸ்ரேல்?
இஸ்ரேலிய அரச பயங்கரவாதிகள் உலகத்தால் ஒதுக்கப்பட வேண்டும்.
-
தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக வி.கே.பாண்டியன் அறிவித்ததன் பின்னணி என்ன?
- இளைஞர்களைக் கவர்கிறதா நாம் தமிழர் கட்சி?
ராஜீவ் காந்தி கொலைக்கு பின் புலிகளை தமிழ் நாட்டில் என்ன இந்தியாவுக்கே பிடிக்காத போது பிரபாகரனின் படத்துக்கு வாக்கு போடுவார்கள் என எப்படி சொல்கிறீர்கள்?- மலாவி நாட்டின் துணை ஜனாதிபதி சென்ற விமானம் மாயம்…! தேடுதல் பணி தீவிரம்..!
10 பேரும் இறந்து விட்டதாக செய்தி கூறுகிறது.- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
வெற்றியீட்டிய கிருபன், நிழலி, பிரபாவுக்கு வாழ்த்துக்கள். போட்டியை திறம்பட நடாத்திய கந்தப்புவுக்கு நன்றி. பங்கு பற்றிய அனைவரும் மனம் தளராமல் மீண்டும் ஒரு போட்டியில் சந்திப்போம்.- இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர்களை யாழில் சந்தித்து கலந்துரையாடினார் அநுரகுமார
தேர்தல் என்றவுடன் தான் தமிழ் மக்களிடம் ஓடி வருகிறார்கள்.- நன்றி கெட்ட உலகமிது 😡
- பிரான்சில் நடைபெற்ற ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் தீவிர வலதுசாரிக் கட்சி வெற்றி
வலது பக்கம் (பிரான்ஸ்) உள்ளவர் புட்டினிடம் கடன் வாங்கியதாகவும் கடனை திருப்பி கொடுக்கப்போக புட்டின் அதனை தேர்தல் செலவுக்கு வைத்திருக்க சொல்லியுள்ளாராம்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
- தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக வி.கே.பாண்டியன் அறிவித்ததன் பின்னணி என்ன?
தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக வி.கே.பாண்டியன் அறிவித்ததன் பின்னணி என்ன? ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் வலதுகரமாக செயல்பட்டவரும், பிஜு ஜனதா தளத்தின் முக்கியத் தலைவராக விளங்கியவருமான தமிழகத்தைச் சேர்ந்த வி.கே.பாண்டியன், தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். அவரது இந்த அறிவிப்பின் பின்னணி என்ன என்பது குறித்து தற்போது பார்ப்போம். ஐஏஎஸ் அதிகாரியாக சிறப்பாக செயல்பட்டு நற்பெயர் ஈட்டியவர் வி.கே. பாண்டியன். அதன் காரணமாகவே, அவரை நவீன் பட்நாயக் தனது அலுவலக அதிகாரியாக நியமித்தார். சுமார் 12 ஆண்டு காலம் நவீன் பட்நாயக்கின் அலுவலக அதிகாரியாக திறம்பட செயல்பட்ட வி.கே.பாண்டியன், மாநிலத்தின் பல்வேறு துறை வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை வழங்கி இருக்கிறார். அதோடு, கோவிட் பெருந்தொற்று, இரண்டு பெரும் புயல்கள் என அவர் எதிர்கொண்ட சவால்கள் மிக முக்கியமானவை. அவற்றில் எல்லாம் அவர் சிறப்பாக செயல்பட்டதை அடுத்தே, நவீன் பட்நாயக்கின் நம்பிக்கைக்குரியவராக உருவெடுத்தார். அதன் தொடர்ச்சியாக நவீன் பட்நாயக்குக்கு உதவும் நோக்கில் சமீபத்தில் அரசியலில் நுழைந்தார். பிஜு ஜனதா தளத்தின் முக்கிய தலைவராக மாநிலம் தழுவிய அளவில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். எனினும், பிஜு ஜனதா தளத்தின் தோல்வியை அடுத்து தற்போது தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பின் பின்னணி 2 பகுதிகளைக் கொண்டது. ஒன்று, தேர்தலுக்கு முன் நிகழ்ந்த சில முக்கிய நிகழ்வுகள். இரண்டு, தேர்தலுக்குப் பின் நிகழ்ந்த சில முக்கிய நிகழ்வுகள். தேர்தலுக்கு முன்... - மாநிலம் தழுவிய தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் வி.கே.பாண்டியன் ஈடுபட்டார். கட்சியில், நவீன் பட்நாயக்குக்கு இருக்கும் முக்கியத்துவம் அவருக்கும் கொடுக்கப்பட்டது. இது பிஜு ஜனதா தளத்தின்(பிஜேடி) அடுத்த தலைவராக குறிப்பாக, நவீன் பட்நாயக்கின் வாரிசாக அவரை அடையாளம் காட்டியது. பாஜக இதனை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது. நவீன் பட்நாயக் அரசு மீது பெரிய குற்றச்சாட்டு எதுவும் இல்லாத நிலையில், பாஜக வி.கே.பாண்டியனை தனது தேர்தல் வெற்றிக்கான துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி காய்களை நகர்த்தியது. பிஜேடி வெற்றி பெற்றால் வி.கே.பாண்டியன்தான் முதல்வராவார் என அவருக்கு எதிராக முதல் விமர்சனத்தை முன்வைத்தது. மண்ணின் மைந்தருக்குப் பதிலாக வேறு மாநிலத்தவர் ஒடிசாவை ஆள்வதா என பாஜக கேள்வி எழுப்பியது. இதனால், ஒடிசாவின் கலாச்சாரத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அது பிரச்சாரம் செய்தது. பாஜகவின் இந்த பிரச்சாரத்துக்கு ஊடகங்கள் மூலம் வி.கே.பாண்டியன் பதில் அளித்தார். தேர்தலில் பிஜேடி வெற்றிபெறும் என்றும், மண்ணின் மைந்தரான நவீன் பட்நாயக்தான் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பார் என்றும் அவர் கூறினார். முதல்வராக வேண்டும் என்ற விருப்பம் தனக்கு இல்லை என்றும் உறுதிபட தெரிவித்தார். அடுத்ததாக, பாஜகவைச் சேர்ந்த அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா 2 வீடியோக்களை வெளியிட்டார். ஒன்று, நவீன் பட்நாயக்கின் கை ஆடுவதை வி.கே.பாண்டியன் மறைக்க முயலும் வீடியோ. ஒரு பொதுக் கூட்டத்தில் நின்றபடி நவீன் பட்நாயக் பேசிக் கொண்டிருக்கும்போது அவரது கை ஆடுவதை கவனித்த வி.கே.பாண்டியன் அந்த கையை உள்ளே இழுத்து வைத்தார். இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட ஹிமந்த பிஸ்வா சர்மா, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை வி.கே.பாண்டியன் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாகவும், அதனை இந்த வீடியோ உணர்த்துவதாகவும் குறிப்பிட்டார். அடுத்ததாக அவர் வெளியிட்ட இரண்டாவது வீடியோ, நவீன் பட்நாயக் அமர்ந்தபடி பொதுக் கூட்டத்தில் பேசும்போது, அவரது கால்களுக்கு கீழே தனது கால்களை வி.கே.பாண்டியன் கொண்டு சென்றதைக் காட்டும் வீடியோ. இந்த வீடியோவை வெளியிட்ட ஹிமந்த பிஸ்வா சர்மா, ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு உள்ள மரியாதை இவ்வளவுதானா என்று கேள்வி எழுப்பி இருந்தார். இந்த வீடியோக்கள் பாஜக எதிர்பார்த்ததைப் போலவே, ஒடிசா மக்களிடமும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இதனையடுத்து, ஒடிசாவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, நவீன் பட்நாயக்கின் உடல்நிலை பாதிப்புக்கு பின்னணியில் சதி இருக்கலாம் என்ற சத்தேகம் எழுந்திருப்பதாகவும், எனவே ஒடிசாவில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த உடன் அது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். இது வி.கே. பாண்டியனுக்கு எதிரான ஒரு பெரிய அறிவிப்பாகப் பார்க்கப்பட்டது. அடுத்ததாக, புரி ஜகந்நாதர் ஆலயத்தின் பொக்கிஷ அறையின் சாவி தொலைந்து போன விவகாரம் பெரிதுபடுத்தப்பட்டது. இதிலும் வி.கே.பாண்டியனை பாஜக இழுத்தது. அந்த சாவி, தமிழ்நாட்டுக்குச் சென்றுவிட்டதாக பிரதமர் மோடி கூறினார். அதோடு, பாஜக ஆட்சி அமைந்ததும் பொக்கிஷ அறையின் சாவி காணாமல் போனது குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்படும் என்றும் மோடி அறிவித்தார். இதன்மூலம் வி.கே பாண்டியன் மீண்டும் குறிவைக்கப்பட்டார். தேர்தல் நெருங்க, நெருங்க பாண்டியனுக்கு எதிரான இந்த விவகாரங்கள் கூர்மையடையத் தொடங்கின. அந்த வகையில், ஒடிசா மாநில தேர்தல் பாண்டியனை மையப்படுத்தியதாகவே மாறிப்போனது. இதை உணர்ந்த நவீன் பட்நாயக், பாண்டியன் தனது அரசியல் வாரிசு அல்ல என அறிவித்தார். மேலும், தனது உடல் நிலை நன்றாக இருப்பதாகவும் கூறினார். எனினும், தேர்தல் நெருக்கத்தில் கூறிய இந்த விளக்கம் உரிய முக்கியத்துவத்தைப் பெறத் தவறியது. வி.கே.பாண்டியனுக்கு எதிராக தேர்தல் பிரச்சாரத்தை வெற்றிகரமாக திருப்பிய பாஜக, நவீன் பட்நாயக் மீதான விமர்சனத்தை பெருமளவில் தவிர்த்துவிட்டது. நவீன் பட்நாயக்குக்கு எதிராக அது முன்வைத்த ஒரே ஒரு விமர்சனம், அவரது தலைமையில் ஒடிசாவின் வளர்ச்சி மெதுவாக இருக்கிறது என்பது மட்டுமே. பாஜகவின் இந்த தேர்தல் உத்தி அதற்கு கை கொடுத்ததன் காரணமாகவே, தேர்தலில் முன் எப்போதும் இல்லாத வெற்றியை பதிவு செய்து ஆட்சியைக் கைப்பற்றியது. தேர்தலுக்குப் பின்... - அடுத்ததாக, தேர்தல் முடிவுகளுக்குப் பின் வி.கே.பாண்டியன் தொடர்பாக என்னென்ன நடந்தது என்பது குறித்து தற்போது பார்க்கலாம். கடந்த 2000 முதல் 14 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வராக உள்ள நவீன் பட்நாயக் முதல் முறையாக மீண்டும் முதல்வராவதற்கான வாய்ப்பை இழக்கிறார். சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 147 தொகுதிகளில் பிஜேடி 51 இடங்களில் மட்டுமே வெற்றி பெறுகிறது. மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 21 தொகுதிகளில் 20-ஐ பாஜக கைப்பற்றுகிறது. ஒன்றை காங்கிரஸ் கைப்பற்றுகிறது. பிஜேடி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. தேர்தலில் தோல்வி அடைந்த பிஜேடி கட்சியைச் சேர்ந்த சில தலைவர்கள் உள்பட அந்தக் கட்சியைச் சேர்ந்த பலர், தேர்தல் தோல்விக்கு வி.கே.பாண்டியன்தான் காரணம் என குற்றம்சாட்டத் தொடங்கினர். இது கட்சிக்குள்ளும் பாண்டியனின் பிடி தளர்வதைக் காட்டுவதாக இருந்தது. திருமணம் செய்து கொள்ளாதவரான நவீன் பட்நாயக், தனக்கு அடுத்து கட்சியின் வாரிசு யார் என்பதை தேர்தலுக்கு முன்பே அறிவித்திருந்தால் அது கட்சிக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும். பாண்டியனுக்கும் இத்தகைய நெருக்கடி ஏற்பட்டிருக்காது. மென்மையான போக்கு கொண்டவர் நவீன் பட்நாயக். ஆட்சி அதிகாரமும் தற்போது அவரிடம் இல்லை. இத்தகைய சூழலில், புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்கும் பாஜக, மீண்டும் தன்னை குறிவைத்து பழிவாங்குமானால் அதனை தன்னால் எதிர்கொள்ள முடியுமா என்ற கேள்வி வி.கே.பாண்டியனுக்கு எழ அதிக வாய்ப்பிருக்கிறது. எனவே, இனியும் நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசு போன்ற ஒரு தோற்றத்தில் தொடருவது தனது எதிர்காலத்துக்கு உகந்ததாக இருக்காது என அவர் கருதியிருக்கக் கூடும். அதோடு, தேர்தலுக்கு முன்பாக வி.கே.பாண்டியனின் மனைவி சுஜாதா மீதும் பாஜக குற்றம்சாட்டியது. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் விவகாரத்தில் அவர் தேர்தல் பிரச்சாரம் செய்வதாக பாஜக குற்றம் சாட்டியது. அதாவது, அரசிடம் கடன்பெறும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஆளும் பிஜேடிக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என அதிகாரத் தோரணையில் அவர் கூறி வருவதாக பாஜக குற்றம் சாட்டியது. இதனால், தானும் குறிவைக்கப்படுவதாக சுஜாதா கருதியிருக்கக்கூடும். இந்த பின்னணியிலேயே தேர்தல் முடிவுகள் வந்த பிறகு இருவரும் வெளியே சென்றுவிட்டார்கள். அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாத நிலையில், பாண்டியன் தலைமறைவாகிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின. அதன் பிறகு 6 மாத விடுப்பில் சுஜாதா சென்றிருப்பதாக செய்தி வெளியானது. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வி.கே.பாண்டியன், ஒடிசாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஐஏஎஸ் அதிகாரியாக சிறப்பாக செயல்ப்பட்டவர். எனினும், அரசியல் அவரை அதிரவைத்துவிட்டது. அரசு உயரதிகாரியாக இருந்து திடீர் அரசியல்வாதியாக மாறிய வி.கே.பாண்டியன், அதே வேகத்தில் தற்போது தீவிர அரசியலில் இருந்தும் விலகியுள்ளார். https://www.hindutamil.in/news/india/1262790-vk-pandian-said-that-he-is-withdrawing-from-active-politics-what-is-the-background-of-this-big-announcement-4.html- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- நான்கு பணயக் கைதிகளை மீட்பதற்கு 200 பலஸ்த்தீனர்களைப் படுகொலை செய்த இஸ்ரேல்
- தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
துரோகிப் பட்டத்துக்கு பயப்படமாட்டேன்- யாழில் தமிழரசு கட்சியினரை சந்தித்தார் சஜித் பிரேமதாச
சஜித் வெல்லப்போவதில்லை. ஆதரித்து என்ன பலன்?🙂- நான்கு பணயக் கைதிகளை மீட்பதற்கு 200 பலஸ்த்தீனர்களைப் படுகொலை செய்த இஸ்ரேல்
பலஸ்தீன பெண்களை எப்படி சிறையில் இஸ்ரேலியர்கள் நடாத்துகிறார்கள் என்பதை அல்ஜசீரா பல காணொளிகளை வெளியிட்டு இருந்தது. உண்மைகளை வெளியில் உடனுக்குடன் வெளியிடுவதால் இஸ்ரேல் அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றியமை குறிப்பிடதக்கது.- நன்றி கெட்ட உலகமிது 😡
16 வீத வாக்குகளை எடுத்து 2 ம் இடத்தை எப்படி எடுக்கலாம்???- நன்றி கெட்ட உலகமிது 😡
ஜேர்மனியில் இனவாத கட்சி இரண்டாவதாக வந்தது இனவாத மக்களின் வாக்குகளால் என எடுக்கலாமா?- நான்கு பணயக் கைதிகளை மீட்பதற்கு 200 பலஸ்த்தீனர்களைப் படுகொலை செய்த இஸ்ரேல்
இல்லை. உங்கள் வாதம் அப்படி இருப்பதால் தான் கூறினேன்.- நான்கு பணயக் கைதிகளை மீட்பதற்கு 200 பலஸ்த்தீனர்களைப் படுகொலை செய்த இஸ்ரேல்
ஊடக தர்மம் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும். இப்பணய கைதி விடுவிக்கப்பட்டவுடன் சொன்னவைக்கும் மேற்படி காணொளியில் சொல்வதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.- Benny Gantz resigns from Israel’s war cabinet
Benny Gantz resigns from Israel’s war cabinet- நான்கு பணயக் கைதிகளை மீட்பதற்கு 200 பலஸ்த்தீனர்களைப் படுகொலை செய்த இஸ்ரேல்
கடந்த 9 மாதங்களில் 40 ஆயிரம் அப்பாவி பலஸ்தீனிய குழந்தைகள், தாய்மார் (பெரும்பாலும்) கொல்லப்பட்டதற்கு ஒரு வரி கூட எழுதாமல் 4 பணய கைதிகளுக்கு வக்காலத்து வாங்குவதன் நோக்கம் என்ன?- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
85 ஓட்டங்கள் 85 பந்துகளில் பாகுஸ்தான் எடுக்க வேண்டும்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பாபர் வெளியே - இளைஞர்களைக் கவர்கிறதா நாம் தமிழர் கட்சி?
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.