Everything posted by nunavilan
-
ஈழவேந்தன் ( தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்) காலமாகிவிட்டார்
ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
60 வயதில் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற அலெஜாண்ட்ரா! உலகை திரும்பி பார்க்க வைத்த அழகி!
அறுபது வயது மாதிரி தெரியவில்லை. வயது ஒரு இலக்கம் என நிறுவி உள்ளார்.
-
அதிசயக்குதிரை
Wife: கல்யாணம் ஆன புதுசுல என்னைய தூக்கிட்டு போவிங்கல்ல அதே மாதிரி தூக்கிட்டு பிரிட்ஜ் கிட்ட போங்க... நான் ஐஸ் க்ரீம் சாப்டனும். Hubby ~ நீ இங்கயே இரு மா, பிரிட்ஜ்'ஜ இங்க தூக்கிட்டு வரேன்..
-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களால் அதிரும் அமெரிக்க பல்கலைகழகங்கள் - பல்கலைகழங்களிற்கு வெளியே முகாமிட்டு மாணவர்கள் தொடர் ஆர்ப்பாட்டம்
- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை) முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்? 1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 3ம் இடம் 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 4ம் இடம் 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 3ம் இடம் 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன் 1ம் இடம் 5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 3ம் இடம் 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 1ம் இடம் 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 3ம் இடம் 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 1ம் இடம் 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 1ம் இடம் 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 1ம் இடம் 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 1ம் இடம் 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 3ம் இடம் 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 1ம் இடம் 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 3ம் இடம் 15) தயாநிதிமாறன்(திமுக) 1ம் இடம் 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 1ம் இடம் 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 2ம் இடம் 18)ரி ஆர் பாலு ( திமுக) 1ம் இடம் 19)எல் முருகன் (பிஜேபி) 3ம் இடம் 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 1ம் இடம் 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக விஜயகாந்தின் மகன்) 1ம் இடம் 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 1ம் இடம் 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 2ம் இடம் 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெறும்? 1) 5% க்கு குறைய 2) 5% - 6% 3) 6% - 7% 4) 7% - 8% 5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? கூட 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 0 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2 28)இந்திய கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 1 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 3 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 0 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 1 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 0 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 0 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்? 15 35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 1 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 3 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 1 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 35 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 19 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 2 41) 9 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 9 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 1 43) 23 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 0 போட்டி விதிகள் hh 1)june 3 ம் திகதிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். 3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள் 4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்- ரஷ்யா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு இலவச விசா
- ரஷ்யா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு இலவச விசா
மேற்படி நாருகளில் இருந்து அதிக உல்லாசப்பயணிகள் வருகையும் மேலும் வருகையை ஊக்கப்படுத்தவுமாக இருக்கலாம். அத்தோடு மேற்கு நச்டுகளின் விசா கட்டணம் டொலர் வருவாய்க்கு தேவை என நினைக்கிறேன்.- டி20 உலகக் கோப்பைச் செய்திகள்
அப்படி தான் செய்திகள் சொல்கிறது பையா. ஓட்டங்களை மெதுவாக எடுக்கிறாராம்.- டி20 உலகக் கோப்பைச் செய்திகள்
கோலிக்கு பதில் சூரியகுமார் யாதவ்? இப்பவே கண்ணை கட்டுது.🙂- கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள கனேடிய பீல் பிராந்திய பொலிஸ்மா அதிபர்
- என் மீது சுமத்தபட்டுள்ள குற்றச்சாட்டுகளை வன்மையாக மறுக்கிறேன் - ஈஸ்டர் தாக்குதலைத் தடுக்கத் தவறியது அப்போதைய CID தலைமையின் தோல்வியே ஆகும் ; கோட்டபாய ராஜபக்ஷ
கோத்தபய உட்பட அனைத்து அரசியல்வாதிகளுக்கும் தெரியாமல் தாக்குதல் நடாத்த சந்தர்ப்பம் இல்லை. இப்போ மற்றவர்களை நோக்கி கையை காட்டி தப்ப முயல்கிறார்கள்.- அமெரிக்கா இரகசியமாக வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது - அமெரிக்க அதிகாரிகள் தகவல்
கிளஸ்ரர் குண்டுகளை கொடுக்கும் போது பகிரங்கப்படுத்தியவர்கள் இதனை மட்டும் ஏன் இரகசியம் பேண வேண்டும்? F16 எப்போ யுக்ரேனுக்கு வருகின்றது?- சுதந்திரப் பலஸ்தீனத்துக்காக அமெரிக்காவில் தீவிரப் போர்!
நத்தனியாகுவுக்கு மேற்படி போராட்டம் பிடிக்கவில்லை என்பதில் இருந்து தெரிகிறது அமெரிக்க அரசுக்கான பாரிய அழுத்தம் தன்னை வெகுவாக பாதிக்கும் என.- அமெரிக்கா ரூ.5 லட்சம் கோடி ராணுவ உதவி: யுக்ரேன் எத்தகைய ஆயுதங்கள் பெறும்? போரின் போக்கு மாறுமா?
அமெரிக்காவால் ஒதுக்கப்பட்ட 95 பில்லியன் டொலரில் ஆக 6 பில்லியனா யூக்ரேனுக்கு? சண்டைகள் தொடர வேண்டும். ஆயுதங்கள் விற்பனையாக வேண்டும். அதற்கான முதலீடாக கொள்ளலாம்.- ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி
தமிழர் வேண்டாத தெய்வங்களும் இல்லை. வாங்காத அடிகளும் இல்லை.🙂- ரஷ்யாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது-சர்வதேச நாணய நிதியம்!
14 ??ஆவது பொருளாதார தடைக்கு என்ன நடந்தது?- ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி
தெரிந்தே அனுப்பி விட்டு தெரியாத மாதிரி அமைச்சர்களின் வீரவசனம்.- ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி
விசாவும் மோசடி செய்தா வழங்கப்பட்டது???- ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை
கிம் மில்லியன் டொலர் திட்டத்தை சிறிலங்காவில் உருவாக்கினால் அவரை அழைக்கவும் சிறிலங்கா அரசு தயங்காது.- யாழில் பத்திரிகை ஆசிரியருக்கு எதிராக ஆளுநரின் நடவடிக்கை.
யார் என்ன கருத்தை சொன்னார் என குறியீடு சொல்ல தவறி உள்ளது.- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காசாவில் பாரிய மனித புதைகுழிகள் இரண்டு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: யார் வச்சது இசை: சந்தோஸ் நாரயணன்- இஸ்ரேலின் யூத பழமைவாத ராணுவப் பிரிவு மீது தடை விதிக்க அமெரிக்கா திட்டம் - காஸாவில் என்ன நடந்தது?
கண்துடைப்புக்கும் ஒரளவு உண்டு. வீட்டோவை பாவித்து இஸ்ரேலை காப்பாற்றிய சில நாட் களில் தடை என்பது நம்பும் படியாக இல்லை.- இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்
ஆழ்ந்த அனுதாபங்கள். ஏதோ ஒரு பாடப்புத்தகத்தில் இவரின் பெயரும், டங்கன் வைற்றின் பயரும் ஒலிம்பிக்வீரர்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது.- தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
மக்களவைத் தேர்தல் 7 PM நிலவரம்: தமிழகத்தில் 72.09% வாக்குப்பதிவு - கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிக வாக்குகள் திருக்காட்டுப்பள்ளி அருகே சரக்கு வாகனத்தில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விட்டலபுரம் வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு ஊர் திரும்பிய லூர்துபுரம் கிராம மக்கள். சென்னை: தமிழகத்தின் 39 மக்களவைத் தொகுதிகளிலும் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% சதவீதம் வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் 75.64 சதவீத வாக்குகளும், பதிவாகின. மத்திய சென்னையில் குறைந்தபட்சமாக 67.37 சதவீத வாக்குகளும் பதிவாகின. சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியது: “தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவாகியுள்ளது. இன்னும் சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர். விளவங்கோடு இடைத்தேர்தல் நிலவரம் இன்னும் சிறிது நேரத்தில் வெளியிடப்படும். இந்த எண்ணிக்கை சதவீதத்தில், தபால் வாக்குகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. இந்த சதவீத எண்ணிக்கை வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை மட்டுமே. கடந்த 2019 தேர்தலில் 7 மணி நிலவரப்படி கிட்டத்தட்ட 69 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது. அத்துடன் இதை ஒப்பிடுகையில் இந்த வாக்கு சராசரி நன்றாகவே இருக்கிறது. பல இடங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்த காரணத்தால், பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரையிலான நேரத்தில் அதிகமானோர் வாக்களிக்க வந்துள்ளனர். 6 மணிக்குள் வந்த பலரும் ஆர்வத்துடன் டோக்கன் பெற்றுக்கொண்டு வாக்களிக்க காத்திருந்தனர். நாளை பகல் 12 மணிக்கு துல்லியமான வாக்குப்பதிவு சதவீதம் வெளியாகும். ADVERTISEMENT முக்கியத் தகவல்: தேர்தல் ஆணையத்தில் இருந்து ஓர் அறிவுறுத்தல் வந்துள்ளது. அடுத்த கட்டமாக கேரளா, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் மட்டும் பாதுகாப்பு படையினர் சோதனை தொடரும். மற்ற இடங்களில் பாதுகாப்பு படையினரை திரும்ப பெற உள்ளோம்” என்று அவர் கூறினார். தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும், பெரிய அளவிலான அசாம்பவித சம்பவங்களின்றி வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு சில இடங்களில் தாமதாக தொடங்கப்பட்டது; சில இடங்களில் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது போன்ற சின்னச் சின்ன சலசலப்புகள் மட்டுமே ஏற்பட்டது. ஒட்டுமொத்தமாக, தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்துள்ளது. வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணிகளில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தொகுதி வாரியான வாக்குப்பதிவு - இரவு 7 மணி நிலவரம்: கள்ளக்குறிச்சி - 75.67% தருமபுரி - 75.44% சிதம்பரம் - 74.87% பெரம்பலூர் - 74.46% நாமக்கல் - 74.29% கரூர்- 74.05% அரக்கோணம் - 73.92% ஆரணி - 73.77% சேலம்- 73.55% விழுப்புரம்- 73.49% திருவண்ணாமலை - 73.35% வேலூர் - 73.04% காஞ்சிபுரம் - 72.99% கிருஷ்ணகிரி - 72.96% கடலூர் - 72.40% விருதுநகர் -72.29% பொள்ளாச்சி -72.22% நாகப்பட்டினம் - 72.21% திருப்பூர் - 72.02% திருவள்ளூர் - 71.87% தேனி - 71.74% மயிலாடுதுறை - 71.45% ஈரோடு - 71.42% திண்டுக்கல் - 71.37% திருச்சி -71.20% கோவை - 71.17% நீலகிரி - 71.07% தென்காசி - 71.06% சிவகங்கை -71.05% ராமநாதபுரம் -71.05% தூத்துக்குடி - 70.93% திருநெல்வேலி - 70.46% கன்னியாகுமரி - 70.15% தஞ்சாவூர்- 69.82% ஸ்ரீபெரும்புதூர் - 69.79% வட சென்னை - 69.26% மதுரை - 68.98% தென் சென்னை -67.82% மத்திய சென்னை - 67.35% ஆளுநர் ரவி மகிழ்ச்சி: “ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது. இதில் நானும் பங்கெடுத்ததில் மகிழ்ச்சி” என்று சென்னையில் வாக்குச் செலுத்திய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் பேசினார். | வாசிக்க > “ஜனநாயகப் பெருவிழா இது!” - சென்னையில் வாக்களித்த ஆளுநர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி சசிகலா நம்பிக்கை: "ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, எங்களுள் உள்ளவர்கள் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு" என்று வாக்களித்த பிறகு வி.கே.சசிகலா நம்பிக்கை தெரிவித்துள்ளார். | வாசிக்க > “எங்களுள் உள்ளவர்கள் திருந்த ஒரு வாய்ப்பு” - வாக்களித்த பின்பு சசிகலா நம்பிக்கை தேர்தல் புறக்கணிப்புகள்: தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் உள்ள ஏகனாபுரம் கிராமம், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல், இறையூர் கிராமங்கள், ஓசூரின் கருக்கனஹள்ளி கிராமம், சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி அருகேயுள்ள சித்தூரணி என பல்வேறு கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். விரிவாக வாசிக்க > ஏகனாபுரம் முதல் வேங்கைவயல் வரை: தேர்தல் புறக்கணிப்பும் பின்புலமும் சேலத்தில் இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு: சேலம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பழைய சூரமங்கலம் தனியார் பள்ளிக்கு மனைவியோடு வாக்களிக்க வந்த பழனிசாமி என்பவர் வரிசையில் நிற்கும் போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவர் ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்து தொடர் மருத்துவத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதேபோல சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கெங்கவள்ளியில் வாக்களிக்க வந்த மூதாட்டி சின்ன பொண்ணு என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாக்குப்பதிவு தொடங்கியவுடனேயே... - தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் முதல் நபராக வாக்களித்துச் சென்றார். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே வரிசையில் காத்திருந்து வாக்குப்பதிவு செலுத்தினார். அதேபோல், சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வாக்களித்தார். தனது குடும்பத்துடன் வந்து வாக்கை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அனைவரும் தவறாமல் தங்களது ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதேபோல் காரைக்குடியில் கண்டனூரில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது வாக்கை செலுத்தினார். ப.சிதம்பரம் வாக்களித்துவிட்டு அளித்தப் பேட்டியில், “தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி அபார வெற்றி பெறும்” என்றார். மலையாளத்தில் வேட்பாளர் பட்டியல்: நீலகிரி மாவட்டத்தில் மக்களவைத் தொகுதி வேட்பாளர்களின் பெயர்கள் மலையாளத்திலும் அச்சடிக்கப்பட்டிருந்தது. நீலகிரி மாவட்டத்தில் உதகை, கூடலூர், குன்னூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் 20 சதவீதம் மலையாள மக்கள் வசிக்கின்றனர். இதனால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள 689 வாக்குச்சாவடிகளிலும் வேட்பாளர் பெயர் பட்டியில் தமிழ் மற்றும் மலையாளத்தில் அச்சடிக்கப்பட்டு, வாக்குச்சாவடிகளில் ஒட்டப்பட்டிருந்தது. தமிழகத்தில் மலையாளம் மக்கள் அதிகம் வசிக்கும் நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் வேட்பாளர் பெயர் பட்டியல் மலையாளத்தில் அச்சடிக்கப்படுவது குறிப்பிடதக்கது. அரசியல் பிரபலங்கள் வாக்களிப்பு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது மனைவி கிருத்திகாவுடன் சென்னை எஸ்ஐடி கல்லூரி வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்று வாக்களித்தார். திருச்சியில் தில்லைநகர் மக்கள் மன்றம் வாக்குச்சாவடி மையத்தில் அமைச்சர் கே.என். நேரு வாக்களித்தார். தென்சென்னை தொகுதியில் சாலிகிராமத்தில் தனது வாக்கை பதிவு செய்தார் முன்னாள் ஆளுநரும், தென்சென்னை தொகுதியின் பாஜக வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன். கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு. திருச்சியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ். தருமபுரி பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி திண்டிவனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் குடும்பத்துடன் வாக்கு செலுத்தினார். திருச்செந்தூர் அருகே உள்ள தண்டுபத்து கிராமத்தில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் குடும்பத்தினருடன் வாக்களித்தார். “கோவையில் ஒரு வாக்காளருக்காவது பாஜக சார்பில் வாக்குக்கு பணம் கொடுக்கப்பட்டது என நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலில் இருந்து விலகத் தயார். பண அரசியலுக்கு மக்கள் முடிவு கட்டும் தேர்தலாக இந்த தேர்தல் இருக்கும்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலினுடன் சென்னை தேனாம்பேட்டை SIET கல்லூரியில் வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்று வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “நான் என்னுடைய வாக்குரிமைக்குரிய ஜனநாயக கடமையை ஆற்றியிருக்கிறேன். அதேபோல் வாக்குரிமை பெற்றிருக்கக்கூடிய அனைவரும் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றிடவேண்டும். மறந்திடாமல், அதை புறக்கணித்திடாமல், தங்களது ஜனநாயக கடமையை ஆற்றிடவேண்டும் என்று உங்கள் மூலமாக நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.” என்றார். திமுகவுக்கான வெற்றி வாய்ப்பு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்ப, “நீங்கள் நினைப்பது போல இந்தியாவுக்கு வெற்றிதான்” எனக் கூறிச் சென்றார். இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்... - மேலும் முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில், “நாடு காக்கும் ஜனநாயகக் கடமையை ஆற்றினேன்!. அனைவரும் தவறாது வாக்களியுங்கள். குறிப்பாக, First time voters-ஆன இளைஞர்கள் ஆர்வத்தோடு வாக்களியுங்கள்! நம் இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்... #Elections2024” என்று பதிவிட்டுள்ளார். வாக்குப்பதிவு நிலவரம்: முன்னதாக, காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 12.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் காலை 11 மணி நிலவரப்படி 24.37 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. தொடர்ந்து கள்ளுக்குறிச்சியில் வாக்குப்பதிவு அதிகமாகப் பதிவாகி வருகிறது. படம்:ஜெ.மனோகரன் வேங்கைவயலில் வாக்குச் செலுத்த யாரும் வரவில்லை: வேங்கைவயல் கிராமத்தில் இதுவரை பொதுமக்கள் யாரும் வாக்குச்செலுத்த வரவில்லை. ஏற்கனவே, அவர்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாக அறிவித்து இருந்தனர். இந்நிலையில், தற்போது வரை பொதுமக்கள் யாரும் வாக்குச் செலுத்த வரவில்லை. ரஜினி வாக்களிக்கும் வாக்குச்சாவடியில் இயந்திர கோளாறு: சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இந்த வாக்குச்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாக்களிக்க உள்ளனர். இயந்திர கோளாறு காரணமாக நடிகர் கவுதம் கார்த்திக் உட்பட பொதுமக்கள் சிறிது நேரம் வரிசையில் காத்திருந்தனர். பின்னர் சிறிது நேரத்தில் கோளாறு சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. வேலூரில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு: வேலூர் காந்திநகர் பகுதியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் காலை 7 மணிக்கு முன்னதாகவே வாக்குப்பதிவு செய்ய வந்த பொதுமக்கள் வரிசையில் நீண்ட நேரமாக காத்துக்கிடக்கின்றனர். 7 கட்டங்களாக தேர்தல்: இந்தியாவின் 18-வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகள் மற்றும் 19 மாநிலங்களில் 62 தொகுதிகள் என 102 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதுதவிர, தமிழகத்தில் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலும் இன்று நடைபெற்றது. தமிழகத்தில் 39 மக்களவை தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. மாலை 6 மணிக்கு வாக்காளர்கள் அதிக அளவில் காத்திருந்த வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கி, அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். களத்தில் 950 வேட்பாளர்கள்: தமிழகத்தை பொருத்தவரை 39 தொகுதிகளில் 874 ஆண்கள், 76 பெண்கள் என 950 வேட்பாளர்கள் மக்களவை தொகுதிகளில் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில், தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த தேர்தலில், 10.92 லட்சம் முதல்முறை அதாவது 18-19 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதுதவிர, பதிவு செய்ததன் அடிப்படையில் 85 வயதுக்கு மேற்பட்ட 6.14 லட்சம் வாக்காளர்கள், 4.61 லட்சம் மாற்றுத் திறன் வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.hindutamil.in/news/tamilnadu/1233008-lok-sabha-elections-2024-phase-1-voting-live-updates-in-tamil-nadu.html - யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.