Everything posted by nunavilan
-
தேசிய மக்கள் சக்தி இனவாதத்திற்குப் பதிலாக தேசிய ஒற்றுமையின் புதிய அரசியலை இலங்கையில் நிலைநாட்டும் - லண்டனில் அநுர குமார !
இவர்கள் பிரசங்கம் வைப்பதில் வல்லவர்கள்.🙂
-
வாடகை வீட்டிற்கும் வரி : சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்திற்கு ஆடும் பொம்மை ஆட்சியே நாட்டில் - சஜித் பிரேமதாச
தருகின்ற கடனுக்கு அவர்கள் சொற்படி நடக்க வேண்டிய கட்டாய நிலையில் சிறிலங்கா அரசு உள்ளது. இதில் ரனில் தன்னால் தான் பொருளாதாரம் மேம்படுகிறது. தனக்கு வாக்களிக்கா விட்டால் நாடு திரும்ப கீழே சென்று விடுமாம். இருவரில் ஒருவராவது நாட்டை கொள்ளை அடித்த மகிந்த பற்றி வாயே திறப்பதில்லை.
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
பிரான்ஸ் 1 ஒஸ்ரியா 0 இம்முறை சிறிய குழு ஒன்று இறுதி போட்டிக்கு வந்தாலும் ஆச்சரியமில்லை. சுலவேனியா, ஒஸ்ரியா மிக திறைமையாக விளையாடினார்கள்.
-
பா.ஜ.கவிற்கு பதிலடி கொடுத்துள்ள எலான் மஸ்க்!
இந்தியாவில் குட்டையை குழப்பிய Elon Musk!! EVM
-
காசா- முள்ளிவாய்க்கால் அல்ஜசீராவின் ஒப்பீடு
காசா- முள்ளிவாய்க்கால் அல்ஜசீராவின் ஒப்பீடு | அரசியல் களம் | போரியல் ஆய்வாளர் அருஸ்
-
இனிமேல் நாங்கள் மெலோடி டீம்.. இத்தாலி பிரதமருடன் பிரதமர் மோடியின் செல்பி..!
இனிமேல் நாங்கள் மெலோடி டீம்.. இத்தாலி பிரதமருடன் பிரதமர் மோடியின் செல்பி..! ஜி 7 மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இத்தாலி சென்றுள்ள நிலையில் அங்கு அவர் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐம்பதாவது ஜி 7 உச்சி மாநாடு இத்தாலியில் நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் மோடி உட்பட பல உலக தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியுடன் பிரதமர் மோடி எடுத்துக் கொண்ட செல்வி புகைப்படம் அவருடைய சமூக பல தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் வீடியோ ஒன்றை பதிவு செய்து மெலோடி டீமிடம் இருந்து ஹலோ என்று கூற பின்னால் பிரதமர் மோடி சிரிக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன. மெலோடி என்பதை மெலோனி என்பதன் முதல் எழுத்தும், மோடி என்பதன் கடைசி எழுத்தையும் அவர் சேர்த்து பகிர்ந்து உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி உடன் பிரதமர் மோடி எடுத்துக்கொண்ட செல்பி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மீண்டும் ஒரு செல்பி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/italy-pm-and-pm-modi-selfie-goes-viral-124061500061_1.html
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!
- யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
இன்றைய போட்டி முடிவுகள் போலந்து 1 நெதர்லாந்து 2 ------------------ ஸ்லொவேனியா 1 டென்மார்க் 1 ----------------------- சேர்பியா 0 இங்கிலாந்து 1- மருத்துவக் கலாநிதி ஜெயகுலராஜா காலமானார்
ஆழ்ந்த அனுதாபங்கள்.- பிரதான வேட்பாளர்களுடன் தனித்தனியே பேச்சுவார்த்தை : சம்பந்தன் அறிவிப்பு
குழப்பப்பட்டுள்ள சுமந்திரனின் பெரும் திட்டமிடல்- இலங்கை வரும் இந்திய பிரதமர்
இலங்கை வரும் இந்திய பிரதமர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஓகஸ்ட் மாதமளவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரக தகவல்கள் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளன. இதன்படி இந்திய பிரதமராக நரேந்திர மோடி தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் எதிர்வரும் 20ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சரின் விஜயத்தின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://thinakkural.lk/article/303912- பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த திருகோணமலையை சேர்ந்த சாதனை வீரன் ஹஷன் ஸலாமா!
வாழ்த்துக்கள் , முஹம்மட் ஹஷன் ஸலாமாவுக்கு!!!- பொது வேட்பாளர் என்பது அவசியமில்லை – ஈபிடிபியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா
தென்னிலங்கை அரசாங்கமாக இருக்கலாம் இந்திய அரசாங்கமாக இருக்கலாம் அல்லது சர்வதேச சமூகமாக இருக்கலாம் இவர்கள் அனைவரும் தங்களின் நலன்களிலேயே அக்கறையாக இருப்பார்கள் எங்கள் நலனில் அக்கறையாக இருக்க மாட்டார்கள் என ஈபிடிபி செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழிலுள்ள தமது கட்சி அலுவலகத்தில் நேற்று (15) நடாத்திய ஊடக சந்திப்பின் போது 13 ஆவது திருத்தம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் வடக்கு மாகாணத்திற்கு வந்து சென்றிருக்கின்றனர். அவர்கள் வந்து என்ன பேசியிருக்கின்றர் என்பதும் ஏனைய தமிழ்க் கட்சியினர் என்ன கேட்டிருக்கின்றனர் என்பதும் உங்களுக்கு தெரியும். குறிப்பாக இங்குள்ள தமிழ்க் கட்சியினர் அவர்களிடத்தே காவாசி தாறியா, அரைவாசி தாறியா, முக்கால்வாசி தாறியா, என்று கேட்டிருக்கின்றனர். ஆனால் நாங்கள் அப்படி கேட்க வேண்டிய அவசியம் இல்லை. உண்மையில் தமிழ் மக்களின் போராட்டங்கள் தியாகங்களாலே இலங்கை இந்திய ஒப்பந்தம் ஊடாகவே இந்த 13 ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டது. அத் திருத்தம் நமக்கு கிடைக்கின்ற போது அரைவாசி, காவாசி, முக்கால்வாசி என்றெல்லாம் இருக்கவில்லலை. அது முழுமையாகத் தான் இருந்தது. அதனை நடைமுறைப்படுத்துகின்ற காலத்தில் இந்தியா தனது படைகளையும் அனுப்பியிருந்தது. இவ்வாறு ஒருபக்கம் தன்னுடைய படைகளை அனுப்பிய அதேநேரத்தில் இராஜதந்திர ரீதியாகவும் நடவடிக்கைகளை எடுத்திருந்தது. ஆனால் துரதிஸ்டவசமாக பிரச்சனைகள் தீர்க்க விரும்பாதவர்கள் அதிலே ஒன்றுமில்லை என்று அன்றைக்கு கூறிவிட்டார்கள். அது மாத்திரமல்லலாமல் தும்புதடியால் கூட தொடமாட்டோம் என்றும் கூறியிருந்தனர். அன்று இவ்வாறு கூறியவர்கள் இன்று என்ன கேட்கின்றனர் என்று பாருங்கள். இங்கு ஒரு விடயத்தை நான் கூறி வைக்க வேண்டும். அதாவது நீண்ட காலத்திற்கு பின்னர் என்னுடைய நண்பர் சுரேஷ் பிரேமச்சந்திரனும் நானும் ஒரு நிகழ்வில் அருகருகே அமர்ந்திருந்து உரையாடும் சந்தர்ப்பமொன்று ஏற்பட்டிருந்தது. அப்பொழுது அன்றைக்கே இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நாம் ஏற்று இருக்கலாம் என்றும் நாங்கள் எங்கேயோ சென்று இருக்கலாம் எனவும் கூறியிருந்தேன். அதற்கு அவருடைய பதில் என்னுடைய கருத்தை அவர் ஏற்றுக் கொள்வதாகவே இருந்தது. உண்மையில் இதனையே அவர் மனசுக்குள்ளே அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். அதனை செய்ய வேண்டிய நேரத்தில் அனைவருமாக செய்யாமல் நாங்கள் எல்லாம் கோட்டை விட்டுவிட்டது என்பது எங்களுக்கு அசிங்கம் அல்லது அவமானம் என்று தான் நினைக்கிறேன். இன்றைக்கு அந்த சட்டம் கொண்டு வரப்பட்ட போது உண்மையாகவே இதில் தவறிழைத்தது இலங்கையோ இந்திய அரசு அல்லது சர்வதேசமோ அல்ல. அதில தமிழர் தரப்பு தான் முழுமையாக தவறிழைத்து கோட்டை விட்டிருக்கிறோம். இலங்கை இந்தியா ஒப்பந்தத்தோடு தென் இலங்கை ஆட்சியாளர்களின் குணாதிசய ரீதியான மாற்றங்கள் அன்று ஏற்பட்டிருந்தது. ஆனால் அந்த வாய்ப்பை நாம் பயன்படுத்த தவறிவிட்டோம். எங்களுக்கு வினை விதைத்தது நாமே தானே உரிய வேறு யாரும் அல்ல என்றார். ஆக தென்னிலங்கை அரசாங்கமாக இருக்கலாம் இந்திய அரசாங்கமாக இருக்கலாம் அல்லது சர்வதேச சமூகமாக இருக்கலாம் இவர்கள் அனைவரும் தங்களின் நலன்களிலேயே அக்கறையாக இருப்பார்கள் எங்கள் நலனில் அக்கறையாக இருக்க மாட்டார்கள். இன்று பாலஸ்தீனத்திலும் காசாவிலும் சர்வேச சமூகம் என்ன செய்து கொண்டிருக்கிறது. அந்த போரில் அழிவு முற்றுப்பெறும் வரை தொடர்ந்தும் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதுதான் நமக்கும் நடந்து முடிந்திருக்கிறது. எனவே இவர்களை நம்பிக் கொண்டிப்பதை விடுத்து நம் எமது பிரச்சனைகளை எவ்வாறு தீர்த்துக் கொள்ளலாம் என சிந்தித்து அதற்கேற்ற வகையில் செயற்பட வேண்டியது அவசியம் என தெரிவித்தார். -யாழ். நிருபர் பிரதீபன்- https://tamil.adaderana.lk/news.php?nid=188846- மக்கள் நலன் சார்ந்தே என்னுடைய செற்பாடுகள் அமையும்
மக்கள் நலன் சார்ந்தே என்னுடைய செற்பாடுகள் அமையும் வடமாகாண மீனவர்களுடைய பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கின்றேன். அரசியலுக்காக எதையும் பேசுவதில்லை. மக்கள் நலன் சார்ந்தே என்னுடைய செற்பாடுகள் அமையும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நேற்று (15) நடாத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது இந்திய மீனவர் விவகாரம் தொடர்பிலான கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், எமது கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது. அவ்வாறு அத்துமீறல்கள் இப்ப நடக்காது என்று இப்ப என்னால் உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் இதனை நாங்கள் அனுமதிக்க போவதில்லை என்ற அரசாங்கத்தினுடைய கொள்கையும் இதில் விசேடமாக கடல் தொழில் அமைச்சருடைய எண்ணங்கள் என்பதும் எல்லாருக்கும் தெரியும். அந்த வகையில் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறி எல்லை தாண்டி வந்து சட்டவிரோத தொழில்களில் ஈடுபடுவது எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது அதனை ராஜதந்திர ரீதியாக மட்டுமன்றி சட்டரீதியாகவும் எதிர்கொண்டு தடுக்க தயாராக இருக்கின்றோம். அதற்கான முனைப்புகளிலேயே தற்போதும் ஈடுபட்டு வருகிறோம். இந்தியாவினுடைய தடைக்காலம் நேற்று முன்தினம் முதல் முடிவடைந்திருக்கிறது. எனினும் தடுக்கின்ற நடவடிக்கைகள் எல்லாத்துக்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம். இருந்தும் வந்தால் உரிய நடவடிக்கை எடுப்போம். எமது ஜனாதிபதி இந்தியா சென்றபோது மீனவர் விவகாரம் தொடர்பில் இந்தியப் பிரதமருடன் கதைத்து இருக்கிறார். அதேபோல வெளிவிவகார அமைச்சருடனும் பேசியிருக்கிறார். வடமாகாண மீனவர்களுடைய இந்தப் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கின்றேன். அரசியலுக்காக எதையும் பேசுவதில்லை. மக்கள் நலன் சார்ந்தே என்னுடைய செற்பாடுகள் அமையும் என தெரிவித்தார். -யாழ். நிருபர் பிரதீபன் https://tamil.adaderana.lk/news.php?nid=188843- பா.ஜ.கவிற்கு பதிலடி கொடுத்துள்ள எலான் மஸ்க்!
பா.ஜ.கவிற்கு பதிலடி கொடுத்துள்ள எலான் மஸ்க்! அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில், மின்ணணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ள கருத்து உலக அளவில் புயலைக் கிளப்பியுள்ளது. உலகின் பெரும்பாலான நாடுகளில் தேர்தலில் மின்ணணு வாக்குப்பதிவு இயந்திரம் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் அவை எளிதில் ஹேக் செய்ப்பட அதிக வாய்ப்புள்ளதாக மஸ்க் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "இ.வி.எம் வாக்கு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட அதிக வாய்ப்புபுள்ளது. எனவே தேர்தல்களில் இ.வி.எம் இயந்திரத்தின் பயன்பாட்டை முற்றிலுமாக துடைத்தெறிய வேண்டும். மனிதர்களாலும், ஏ.ஐ தொழில்நுட்பத்தாலும் இ.வி.எம் எளிதில் ஹேக் செய்யப்பட வாய்ப்புகள் அதிகம்" எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் நடக்கும் சமயத்திலும் இ.வி.எம் வாக்கு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியது. இந்த நிலையில்தான் இ.வி.எம் குறித்த தொழிநுட்ப சாம்ராட்டான எலான் மஸ்கின் கருத்து பூகமபத்தை கிளப்பியுள்ளது. எலான் மஸ்க்கின் கருத்துக்கு பாஜகவைச் சேர்ந்த முன்னாள் தகவல் தொழிநுட்பத்துறை இணையமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் எதிர்ப்பு தெரிவித்து வெளியிட்டு எக்ஸ் பதிவில், "இந்திய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மிகவும் பாதுகாப்பானவை, வெளிப்புறத்தில் இருந்து ஹேக் செய்ய முடியாதவை. வேண்டுமானால் எப்படி மின்னணு இயந்திரங்களை தாயரிப்பது என்று நாங்கள் கற்றுத் தருகிறோம்" என்று தெரிவித்திருந்தார். தற்போது இந்த பதிவுக்கு உடனே பதில் அளித்துள்ள எலான் மஸ்க், (Anything can be hacked) எதையும் ஹேக் செய்ய முடியும் என்று ரிப்லை செய்துள்ளார். இவ்வாறாக EVM விடயம் பூதாகரமாக மாறிக்கொண்டிருக்கும் வேலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவில் EVM இயந்திரங்கள் என்பது கறுப்புச் பெட்டியாகவே (BLACK BOX) உள்ளது என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்ததக்கது. https://tamil.adaderana.lk/news.php?nid=188851- யாழில் வைத்தியர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு
- யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
ஸ்பெயின் 3 குரோசியா 0 குரோசியாவின் பெனால்டி உதை மூலமான கோல் கொடுக்கப்படவில்லை.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
India (Group A), Australia (Group B), Afghanistan (Group C), West Indies (Group C), South Africa (Group D) and USA (Group A) ஆகிய ஆறு நாடுகள் super 8க்கு தெரிவாகி உள்ளன.- யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் ஆரம்பமாகின்றது. உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்கு பிறகு, உலக கால்பந்து ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் போட்டித் தொடரான யூரோ கிண்ண தொடராகும். உதைப்பந்தாட்ட உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்கும் பெரும்பான்மையான அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன. இந்தப் போட்டித் தொடரில் நடப்பு சம்பியன் இத்தாலி உட்பட 24 நாடுகள் பங்கேற்கின்றன. கூடவே ஜெர்மனி, இத்தாலி, இஙகிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் என முன்னாள் உலக சம்பியன்களும் களம் காணுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. போட்டியில் பங்கேற்கும் நாடுகள் தலா 4 அணிகள் கொண்ட 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்று இன்று முதல் ஜூன் 26ஆம் திகதி வரை நடைபெறும். தொடர்ந்து சுற்று-16 ஜூன் 29 முதல் ஜூலை 2ஆம் திகதி வரையிலும், காலிறுதி ஆட்டங்கள் ஜூலை 5, 6 திதிகளிலும் நடைடபெறவுள்ளன. மேலும் அரையிறுதி ஆட்டங்கள் ஜூலை 9 ஆம் 10ஆம் திகதிகளில் நடத்தப்பட்டு இறுதி ஆட்டம் ஜூலை 14ம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த ஆட்டங்கள் அனைத்தும் ஜெர்மனியில் உள்ள பெர்லின், முனிக், டோர்ட்மண்ட், ஹாம்பர்க், ஃபிரங்க்பர்ட் உட்பட 10 நகரங்களில் நடைபெற உள்ளன. இன்று நள்ளிரவு நடைபெறும் முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ஜெர்மனி அணி ஸ்காட்லாந்து அணியை எதிர்த்தாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://uthayam.lk/2024/06/14/யூரோ-கிண்ண-கால்பந்துப்-ப/- 13ஐ அமுல்படுத்தினால் இரத்த ஆறு ஓடும் – மேர்வின் சில்வா !
நாங்கள் ரனிலை தெரிவு செய்யாமல் மகிந்தவை தெரிவு செய்தது பிழை என்றளவில் உள்ளோம்.- தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயார் - அனந்தி சசிதரன்
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராகக் களமிறங்கவுள்ளேன்! - அனந்திஅதிரடி அறிவிப்பு- தந்தை செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி மகள் பலி : மன்னார் முருங்கன் பூவரசங்குளம் பகுதியில் சம்பவம்
மிக கவலையான செய்தி. கவலையீனமான பிழைகளால் நடக்கும் தவறுகளை என்னவென்பது? பரிதாபகரமான மரணம்.- ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு ஊடகவியலாளருக்கு யேர்மனியில் அதி உயர் விருது கிடைத்திருக்கிறது
நல்வாழ்த்துக்கள் துமிலனுக்கு.- ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
விவாகரத்து.- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கண்களால் நான் வரைந்தேன் வி.குமாரின் அற்புத இசையில்..... - யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.