ராஜவன்னியன் ஐயாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. இனி இவரது பிறந்தநாள் பலன்கள்..
எட்டாம் இலக்கத்தில் பிறந்த உங்களுக்கு அரசியல் ஈடுபாடுகள் அதிகம். அதனால் குடும்பத்தில் சிற்சிறு மனக்கசப்புகள் வந்து நீங்கும். இந்த ஆண்டின் முற்பகுதியில் பணவரவு இருக்கும். பழைய கடன்கள் தீரும். பிரிந்த உறவுகள் வந்து சேர்வர். குழந்தைச் செல்வம் அமையும் வாய்ப்புகள் உருவாகும்.
ஆண்டின் பிற்பகுதியில் எழுதும் கணினி வரிகள் சந்தத்தில் இணையாமல் தனியாக சிந்து பாடும். முதலாளி தலையைப் பிய்த்துக் கொள்ளும் நிலையில் இருப்பார்.
பரிகாரம்: காரைக்கால் சனீஸ்வரர் கோயிலில் வாரம் இரண்டுமுறை நெய் விளக்கேற்ற சாபங்கள் விலகும்.. பாவங்கள் தணியும். நல்வாழ்வு அமையும்..