Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. இலங்கை நிதியமைச்சரின் கருத்துக்கு சி.அ.யோதிலிங்கம் கண்டனம்! இலங்கையில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்று இலங்கை நீதி அமைச்சர் தெரிவித்த கருத்திற்கு அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குநருமான சி.அ. ஜோதலிங்கம் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார். இன்று அவர் யாழ்ப்பாணத்திலுள்ள தனது அலுவலகத்தில் நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, அண்மையில் இலங்கை நீதி அமைச்சர் இலங்கையில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களே உள்ளனர் என்றும் தெரிவித்திருந்தார். நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் உள்ளவர்கள் தமது சுயநலத்துக்காக போராடவில்லையென்றும் அவர்கள் தமது இனத்துக்காக போராடியவர்கள் என்றும் அவர்கள் பயங்கரவாதிகள் அல்லர் என்றும், அவர்கள் அரசியல் கைதிகள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை இலங்கை தமிழரசு கட்சி என்பது தமிழ் மக்களுடைய ஒரு அரசியல் இயக்கமாகும். அதன் மத்திய குழுவில் இருப்பவர்கள் ஒரு நம்பிக்கை பொறுப்பாளர்கள் என்றும், அவர்கள் தவறு அழைக்கின்ற போது மக்கள், சிவில் சமூகங்கள் தலையிட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://newuthayan.com/article/இலங்கை_நிதியமைச்சரின்_கருத்துக்கு_சி.அ.யோதிலிங்கம்_கண்டனம்!
  2. திக்கம் வடிசாலை தைப்பூசத்தன்று இயங்க ஆரம்பிக்கும் - அமைச்சர் மற்றும் தலைவர்கள் உறுதி! யாழ்ப்பாணம் - வடமராட்சி திக்கம் வடிசாலை எதிர்வரும் தைப்பூச நாளிலிருந்து இயங்கும் என பனை அபிவிருத்தி சபை தலைவர் சகாதேவன் மற்றும் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் சந்திரசேகரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதேவேளை, இறுதியாக பனை அபிவிருத்தி சபை தலைவராகவிருந்த பெரும்பானமை இனத்தை சேர்ந்த நபர் பல கோடி ரூபா பணத்தை கையூட்டாக பெற்று தனியார் நிறுவனம் ஒன்றிற்கு 25 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளதாகவும், அக்குத்தகையையும் அமைச்சரவை பத்திரம் ஊடக இரத்து செய்யவுள்ளதாகவும், பனை அபிவிருத்தி சபை இவ்வாண்டு முதல் பனை தென்னை வள அபிவிருத்தி சங்கங்களிடம் கையளிக்கப்படும் எனவும் அங்கு இடம் பெற்ற ஊழல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அங்கு உரையாற்றி கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்தார். திக்கம் வடிசாலையை மீள இயங்குவது தொடர்பான கலந்துரைடால் திக்கம் வடிசாலையில், பனை தென்னை வள கூட்டுறவு சங்க கொத்தணியின் தலைவர் தலமையில் நேற்றையதினம் (18) இடம்பெற்றது. இதில், கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் பிரதீப் சுந்தரலிங்கம், யாழப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன், வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளரும் பதிவாளருமான திரு.திருலிங்கநாதன், யாழ். மாவட்டத்தில் உள்ள ப.தெ.வ.அ.கூ.சங்கங்களின் சமாச தலைவர்கள், பொதுமுகாமையாளர், பிரதிநிதிகள், வலிகாமம், வடமராட்சி தென்மராட்சி ஆகிய கொத்தணிகளின் தலைவர்வர்கள், பொதுமுகாமையாளர்கள், நிர்வாக உறுப்பினர்கள், அனைத்து பனை தென்னை கூட்டுறவு சங்களினது தலைவர்கள், பொதுமுகாமையாளர்கள், திக்கம் வரணி வடிசாலை தலைவர் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர். https://newuthayan.com/article/திக்கம்_வடிசாலை_தைப்பூசத்தன்று_இயங்க_ஆரம்பிக்கும்_-_அமைச்சர்_மற்றும்_தலைவர்கள்_உறுதி!
  3. ஆதரவளித்த தமிழ் மக்களை நிச்சயம் ஏமாற்ற மாட்டோம்; அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவிப்பு தமிழ் மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் பொய்த்துப்போக விடமாட்டோம். தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். இவ்வாறு தெரிவித்துள்ளார் புத்தசாசன சமய மற்றும் கலாசார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி. யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தின் பெயரை, திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம் என்று பெயர்மாற்றும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது- வடக்கில் நாம் எதிர்பாராத ஆதரவைப் பெற்றிருக்கின்றோம். மூன்று எம்.பி.க்களை யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக நாம் பெற்றிருக்கிறோம். தமிழ் மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் நாங்கள் நிச்சயம் நிறைவேற்றுவோம். எமது ஆட்சியில் தமிழ் மக்களுக்கு விடிவு கிடைக்கும் என்பதற்கான முதல் அறிகுறியாகவே வடக்கில் தேசிய பொங்கல் விழா ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எமது அரசாங்கம் ஆரம்பித்திருக்கின்றது. எம் மீது நம்பிக்கை கொண்டு எமக்கு வாக்களித்த தமிழ் மக்கள் நிச்சயம் ஏமாற்றப்படமாட்டார்கள் - என்றார். https://newuthayan.com/article/ஆதரவளித்த_தமிழ்_மக்களை_நிச்சயம்_ஏமாற்ற_மாட்டோம்;_அமைச்சர்_ஹினிதும_சுனில்_செனவி_தெரிவிப்பு
  4. அப்படியே வாட்ஸப்பில் @ஈழப்பிரியன் ஐயாவுக்கு அனுப்பிவிடுங்கள்😉
  5. ஆலயங்களை விடுவிப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுப்பேன் - அமைச்சர் செனவி உறுதி 18 Jan, 2025 | 09:40 PM (நமது நிருபர்) ஆலயங்கள் மற்றும் அவை அமைந்துள்ள விடுவிக்கப்படாத நிலங்கள் உள்ளிட்டவற்றை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கைகளை எடுப்பேன் என்று புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் நிகழ்வில் பங்குபற்றுவதற்காக சென்றிருந்த புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்திரலிங்கம் பிரதீப் ஆகியோர் நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரிய தேசிகரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டனர். இதன்போது ரிஷி தொண்டுநாதன் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் உள்ளிட்டவர்களும் பங்கேற்றிருந்தனர். இச்சமயத்தில், செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன், வடக்கு மாகாணத்தில் அதிகரித்துவரும் போதைப்பொருள் வியாபாரம், மற்றும் பாவனைகளை கட்டுப்படுத்துமாறு கோரிக்கை விடுத்தார். அத்துடன், பாடசாலைகள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆலயங்களுக்கு அண்மித்துள்ள மதுவிற்பனை நிலங்கள் ஆகியவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகளையும் தாமதமின்றி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும், கீரிமலை, பலாலி வீதியை 34ஆண்டுகளாக மூடிவைத்திருக்கின்ற நிலையில் இன்னமும் அதனை திறந்துவிடாதிருப்பதில் நியாமில்லை என்று சுட்டிக்காட்டியவர், உயர்பாதுகாப்பு வலயங்கள் மற்றும் விடுவிக்கப்படாத பகுதிகளில் உள்ள ஆலயங்களை பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் அப்பகுதிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறும் கோரினார். அவ்வாறு விடுவிக்கப்படாதுள்ள ஆலயங்கள் மற்றும் அவற்றுக்கான நிலங்கள் சம்பந்தமான விபரங்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநயக்கவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் ஆறுதிருமுருகன் குறிப்பிட்டார். அச்சமயத்தில் கருத்து வெளியிட்ட அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி, யாழ்ப்பாண மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்து வழங்கிய ஆணையை நாங்கள் மதிக்கின்றோம். அதன்காரணமாகவே நாம் தேசிய பொங்கல் விழாவை யாழில் முன்னெடுக்கின்றோம். தற்போது நாட்டில் இன ஐக்கியத்தை கட்டியெழுப்புவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. சமூக ஒழுங்க விழுமியங்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன. கொழும்பில் வெவ்வேறு காரணங்களுக்காக மூடிவைக்கப்பட்டிருந்த வீதிகள் இப்போது திறக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வடக்கிலும் ஏலவே நாம் முக்கிய வீதியொன்றை திறந்துள்ளோம். ஏனைய வீதிகளும் போக்குவரத்துக்கான திறந்து வைக்கப்படும். ஆலயங்கள் பற்றிய விபரங்களை நீங்கள் ஜனாதிபதியிடத்தில் அனுப்பியுள்ள நிலையில் அதுபற்றிய விபரங்களை நான் அவரிடத்தில் பெற்றுக்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்கின்றேன். பாடசாலைகள் மற்றும் வணக்க தலங்களுக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள மதுவிற்பனை நிலையங்கள் சம்பந்தமாக கல்வி அமைச்சுடன் இணைந்ததான செயற்றிட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது. அந்தவகையில் வடக்கு மாகாணம் சம்பந்தமாகவும் நாம் கவனம் செலுத்துவோம் என்றார். இதேவேளை, இந்தச் சந்திப்பில் பங்கேற்றிருந்த பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், யாழ்ப்பாண மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வழங்கிய ஆணை மிகவும் முக்கியமானது. இந்த தருணத்தில் நாம் நல்லிணக்கச் செயற்பாடுகளை முன்னெடுத்து அனைவரும் இலங்கையர்கள் என்ற அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு முயற்சிக்கின்றோம். அந்த வகையில் வடக்கில் கடந்த காலத்தில் இருந்த ஆட்சியாளர்கள் அரசியல் நோக்கங்களுக்காக அதிகளவில் மதுபானசாலைகளுக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளார்கள். அதுதொடர்பில் நாம் ஆராய்ந்து வருகின்றோம். யாழ்ப்பணம் கல்வியில் முன்னிலையில் திகழ்ந்ததொரு மாவட்டமாகும். அதனை மீளவும் ஏற்படுத்துவதற்கான நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு தயாராகவே உள்ளோம் என்றார். https://www.virakesari.lk/article/204194
  6. ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறை ஏதேனுமொரு பரிமாணத்தில் தொடரவேண்டும் ; அம்பிகா சற்குணநாதன் வலியுறுத்து 18 Jan, 2025 | 09:52 PM (நா.தனுஜா) ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கையின் கடந்தகால மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறையானது ஏதேனுமொரு மட்டத்தில் தொடரவேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ள சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன், ஏனெனில் இலங்கையில் மீறல்கள் எவையும் இடம்பெறவில்லை என அரசாங்கங்கள் தொடர்ச்சியாகக் கூறிவருவதை நிராகரிக்கும் பொறிமுறையாக இதுவே இருக்கிறது எனச் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் காலநீடிப்பு செய்யப்பட்ட 57/1 தீர்மானம் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் முடிவுக்குவரும் நிலையில், இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறை எவ்வகையிலேனும் தொடரவேண்டியது அவசியம் என சித்திரவதைகளுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் நம்பிக்கை நிதியத்தின் உறுப்பினரும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி 24 ஆம் திகதி ஆரம்பமாகி, ஏப்ரல் 4 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. கடந்த செப்டெம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடர் நடைபெற்ற வேளையிலேயே இலங்கையில் ஜனாதிபதித்தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டார். அதனையடுத்து இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் எனும் தலைப்பிலான தீர்மானம் வாக்கெடுப்பின்றி மேலும் ஒருவருடகாலத்துக்குக் காலநீடிப்பு செய்யப்பட்டது. மேற்குறிப்பிட்டவாறு ஓராண்டுக்கு காலநீடிப்பு செய்யப்பட்ட தீர்மானம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடருடன் முடிவுக்கு வருகிறது. இவ்வாறானதொரு பின்னணியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் தொடர்பான அடுத்தகட்ட அணுகுமுறை எவ்வாறிருக்கப்போகிறது என நன்கறியப்பட்ட மனித உரிமைகள் செயற்பாட்டாளரான அம்பிகா சற்குணநாதனிடம் வினவியபோது, உலகளாவிய ரீதியில் பல்வேறு பிரச்சினைகள் முக்கிய கவனம் பெற்றிருப்பதனால், எதிர்வரும் செப்டெம்பர் மாதக்கூட்டத்தொடரின்போது இலங்கை தொடர்பான தீர்மானம் புதுப்பிக்கப்படுமா? அல்லது புதியதொரு பிரேரணை கொண்டுவரப்படுமா? என்பது பற்றி உத்தரவாதமாகக் கூறமுடியாது எனத் தெரிவித்தார். இருப்பினும் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கையின் கடந்தகால மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறையானது ஏதேனுமொரு மட்டத்தில் தொடரவேண்டியது அவசியம் என வலியுறுத்திய அவர், ஏனெனில் இலங்கையில் மீறல்கள் எவையும் இடம்பெறவில்லை என அரசாங்கங்கள் தொடர்ச்சியாகக் கூறிவருவதை நிராகரிக்கும்பொறிமுறையாக இதுவே இருக்கிறது எனச் சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/204191
  7. முதல்முறையாக களத்திற்கு சென்று மக்களை சந்திக்கும் விஜய்: எங்கு? எப்போது? ByKavi Jan 18, 2025 தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரந்தூர் செல்ல காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் முடிவெடுத்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதற்காக 4,800 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இந்த சூழலில் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர் ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட 13 கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2023 முதல் இவர்களது போராட்டம் தொடர்ந்து வருகிறது. பல்வேறு அரசியல் கட்சிகளும் பரந்தூர் போராட்ட குழுவினரை சந்தித்து ஆதரவுதெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யும் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டில் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இந்த சூழலில் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழுவினரை சந்திப்பதற்காக காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் தலைமை சார்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை ஏற்று பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவை சந்திக்க விஜய்க்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி வரும் 20ஆம் தேதி விஜய் போராட்டக் குழுவினரை சந்திக்க உள்ளதாக தவெக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு முதல் முறையாக மக்களை நேரடியாக களத்திற்கு சென்று சந்திக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது போராட்ட குழுவினரிடம் விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகள் பற்றிய விவரங்களை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சேகரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://minnambalam.com/political-news/police-has-been-granted-permission-vijay-to-go-to-meet-parantur-protestors/
  8. பெரியார் அவதூறு: சீமானுக்கு சம்மன்! Bychristopher Jan 18, 2025 பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை ஆலோசித்து வருகிறது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 8ஆம் தேதி கடலூரில் செய்தியாளர்களை சந்தித்தபோது, பெரியார் பற்றி கூறிய பல்வேறு கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. அவரது பேச்சை பாஜகவினர் வரவேற்ற நிலையில் முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திருமாவளவன், செல்வப்பெருந்தகை, அன்புமணி ராமதாஸ் என பல்வேறு கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். சென்னை நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டை தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதோடு, நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் காரையும் அடித்து உடைத்தனர். இதனையடுத்து சீமான் மீது சென்னை, கோவை, நெல்லை, தஞ்சாவூர், ஈரோடு என தமிழகம் முழுவதும் 70க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுகவின் வழக்கறிஞர் அணியினரே பல மாவட்டங்களில் சீமான் மீது புகார் கொடுத்துள்ளனர். அப்போது இந்த விவகாரம் தொடர்பாக பேசிய அமைச்சர் துரைமுருகன், ”எதையாவது செய்து, தமிழ்நாட்டின் அமைதியைக் குலைக்கலாமா என நினைப்பார்களேயானால் சட்டம் தன் கடமையை நிச்சயம் செய்யும்” என்று கூறியிருந்தார். இதனையடுத்து சீமான் எந்நேரத்திலும் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகவுக்கு எதிராக முக்கிய அரசியல் கட்சிகள் போட்டியிடாமல் நாம் தமிழர் கட்சி மட்டுமே போட்டியிடும் நிலையில்… சீமானை கைது செய்தால், இடைத் தேர்தலில் அவருக்கு செல்வாக்கை அதிகரிக்கச் செய்யுமோ என்ற ஆலோசனையும் அரசியல் ரீதியாக ஆட்சி மேலிடத்தில் நடந்தது. அதேநேரம் சீமானை கைது செய்யக் கோரி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் முதல்வரிடம் வலியுறுத்தினர். இந்த நிலையில் “தற்போது உயர் நீதிமன்றம் பொங்கல் விடுமுறை. விடுமுறை கால நீதிபதியாக திரு. ஜி.ஆர். சுவாமிநாதன் இருக்கிறார். இவர் ஏற்கனவே மாரிதாஸ், சவுக்கு சங்கர் ஆகியோர் வழக்கில் அரசுத் தரப்புக்கு எதிரான நிலைப்பாடு எடுத்தவர். அதனால் பொங்கல் விடுமுறை முடிந்து சீமானை கைது செய்யலாம் என்று கூட ஆலோசிக்கப்பட்டது” என்கிறார்கள் திமுகவின் வழக்கறிஞர்கள் வட்டாரத்தில். திங்கள் கிழமை பொங்கல் விடுமுறை முடிந்து வழமையான நீதிமன்றங்கள் செயல்படத் தொடங்குகின்றன. இந்த சூழலில் சீமான் மீது தமிழகம் முழுதும் கொடுக்கப்பட்டுள்ள புகார்கள் தொடர்பாக அவரிடம் முதல் கட்டமாக விசாரணை நடத்துவதற்கு போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக சீமானுக்கு சம்மன் அனுப்பவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடிகை விஜயலட்சுமி விவகாரத்திலும் சீமானுக்கு வளசரவாக்கம் போலீசார் சீமானுக்கு சம்மன் அனுப்பினர். அவரும் விசாரணைக்கு தனது வழக்கறிஞர் மனைவி கயல்விழியோடு ஆஜரானார். அதேபோல பெரியார் விவகாரத்திலும் சீமானுக்கு சம்மன் அனுப்பி அவரை விசாரித்து, விசாரணைக்கு ஒத்துழைக்காத பட்சத்தில் கைது செய்யலாம் என்பதே போலீசாரின் இப்போதைய திட்டம் என்கிறார்கள் காவல் வட்டாரங்களில்! https://minnambalam.com/political-news/பெரியார்-அவதூறு-சீமானுக/
  9. யாழ்ப்பாணம் தெல்லிப்பளை துர்க்கையம்மன் கோவிலில் தேசிய பொங்கல் விழா 18 Jan, 2025 | 05:13 PM யாழ்ப்பாணம் தெல்லிப்பளை துர்க்கையம்மன் கோவிலில் தேசிய பொங்கல் விழா இன்று சனிக்கிழமை (18) வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் பௌத்த சாசன மற்றும் மத விவகார அமைச்சர் சுனில் செனவி, கடல் தொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், அமைச்சர் சரோஜா போல் ராஜ் பிரதி அமைச்சர் கமகதர திசாநாயக்க, பெருந்தோட்ட மற்றும் சமூக கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான க. இளங்குமரன், ஶ்ரீபவானந்தராஜா, ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/204173
  10. தடை அல்லது விற்பனை சட்டத்தை எதிர்த்து டிக்டாக் தொடர்ந்த வழக்கு: அமெரிக்க உச்சநீதிமன்றம் தள்ளுபடி January 18, 2025 9:09 am அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை மேற்கோள் காட்டி சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டாக் செயலியை அடுத்த 270 நாட்களுக்குள் விற்பனை செய்வதற்கு அவகாசம் வழங்கும் சட்டத்தை கடந்த ஏப்ரல் மாதம் இயற்றினார். அவ்வாறு விற்பனை செய்யாவிட்டால் ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டிக்டாக் செயலியை அகற்ற உத்தரவிடப்படும் என அந்தச் சட்டத்தில் கூறப்பட்டிருந்தது. இந்தச் சட்டத்திற்கு தடை கோரி பைட்டான்ஸ் நிறுவனம் கடந்த மே மாதம் வாஷிங்டன் நீதிமன்றில் மனுதாக்கல் செய்தது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து பைட்டான்ஸ் நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவில், ஜனவரி 19ஆம் திகதிக்குள் டிக்டாக் செயலியை விற்க வேண்டும் என்ற சட்டத்தால் அமெரிக்க மக்களிடம் மிகவும் பிரபலமாகியுள்ள டிக்டாக் செயலி தடை செய்யப்படுமானால், அந்தச் செயலியை பயன்படுத்தி வரும் மக்களின் கருத்து சுதந்திரம் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த மனுவை கடந்த மாதம் 18ம் திகதி சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்நிலையில், டிக்டாக்கை அதன் சீன தாய் நிறுவனமான பைட் டான்ஸ் லிமிடெட் வரும் 19-ம் திகதிக்குள் அமெரிக்க நிறுவனத்துக்கு விற்க வேண்டும். இல்லையெனில் டிக்டாக்கைத் தடை செய்யப்படும் என அமெரிக்க உச்சநீதிமன்றம் உறுதிபட தெரிவித்தது. தேசிய பாதுகாப்புக்கான வெளிப்படையான ஆபத்து முதல் திருத்த உரிமைகள் தொடர்பான கவலைகளைவிட அதிகமாக உள்ளது எனவும் தீர்ப்பளித்ததுடன், டிக் டாக் தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் கிட்டத்தட்ட 17 கோடி கணக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. https://oruvan.com/tiktoks-lawsuit-against-the-ban-or-sale-law-us-supreme-court-dismisses/
  11. அறுகம்பேவில் தாக்குதல் நடத்தும் திட்டம் – சிறைச்சாலையிலேயே தீட்டப்பட்டுள்ளது January 18, 2025 10:08 am அறுகம்பேவில் தாக்கல் நடத்த சிறைச்சாலையிலிருந்தே திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக பயங்கரவாத விசாரணை பிரிவு நீதிமன்றில் அறிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கு நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே பயங்கரவாத விசாரணை பிரிவு, இந்த விடயத்தை தெரிவிதுள்ளது. விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி சிறையில் இருக்கும் முன்னாள் போராளி ஒருவரின் ஊடாக இந்தத் தாக்குதலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பயங்கரவாத விசாரணை பிரிவு கூறியுள்ளது. அறுகம்பே விவகாரத்துடன் தொடர்புடைய 7 பேர் கைதுசெய்யப்பட்டு 90 தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு அவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. https://oruvan.com/the-plan-to-carry-out-an-attack-in-arugam-bay-was-hatched-in-prison-itself/
  12. காணி மாபியா ஒன்று இயங்கிக் கொண்டு வருகின்றது பரம்பரையாக மேய்ச்சல் தரைகாணியாக பயன்படுத்திவந்த காணிகளை வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அபகரிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதுடன் தமது கால்நடைகளையும் மேய்ப்பதில் பெரும் கஸ்டங்களை எதிர்கொள்வதாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிளியாமடுவில் உள்ள மேய்ச்சல் தரைகளை கொண்டுள்ள பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிளியாமடுவில் மேய்ச்சல் தரைக்காணிகளில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய பயிர்ச்செய்கை மற்றும் குடியேற்றங்கள் தொடர்பில் ஆராயும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தலைமையில் களவிஜயம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதில் பட்டிப்பளை பிரதேச செயலாளர் சுதாகர்,உதவி பிரதேச செயலாளர்,பிரதேச காணி உத்தியோகத்தர்,திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர்கள், கிராமசேவையாளர்கள்,பண்ணையாளர்கள் என பலர் கலந்துகொண்டனர். இதன்போது கெவிளியாமடுவில் மேய்ச்சல் தரைப்பகுதியில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய பயிர்ச்செய்கைகளை பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் தலைமையிலான குழுவினர் அங்கு பண்ணையாளர்களுடன் கலந்துரையாடியதுடன் அங்கு அத்துமீறிய பயிர்ச்செய்கையில் ஈடுபடுவோருடனும் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டது. இங்கு சட்டவிரோத பயிர்ச்செய்கையாளர்களின் அத்துமீறிய செயல்பாடுகள் காரணமாக கால்நடை மேய்ச்சல் தரை அழிக்கப்படுவதாகவும், அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களின் பகுதிக்குள் கால்நடைகள் சென்றால் பண்ணையாளர்களை தாக்குவதாகவும் சிலரை பிடித்து பணம் கேட்பதாகவும் பண்ணையாளர்கள் தெரிவித்தனர். அத்தோடு வன பாதுகாப்புத் திணைக்களத்தினர் மற்றும் மங்கலகம பொலிஸார் தங்களுக்கு எதிராக நீதிமன்ற வழக்கு தாக்கல்களை செய்வதாகவும், லஞ்சமாக பணம் மற்றும் மதுசாரம் கேட்பதாகவும் பண்ணையாளர்கள் கவலை தெரிவித்தனர். கால்நடை பண்ணையாளர்களின் கால்நடைகளை சுருக்கு வைத்து பிடிப்பதாகவும் சில சமயங்களில் கால்நடைகளை கொல்வதாகவும் பண்ணையாளர்கள் தெரிவித்தனர். இப்பகுதியில் சுமார் 300 இற்கும் மேற்பட்ட பண்ணையாளர்கள் சுமார் 150, 000 இற்கும் மேற்பட்ட தங்களது கால்நடைகளை கொண்டு செல்வதாகவும் தாங்கள் பரம்பரை பரம்பரையாக இப்பகுதியிலே கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு வருவதாகவும் கடந்த சில வருடங்களாக இவ்வாறானவர்களின் அத்துமீறிய செயற்பாடுகள் அதிகரித்து இருப்பதாகவும் தெரிவித்தனர். பண்ணையாளர்கள் சிறிய கத்தியினை கையில் வைத்திருந்தாலும் கூட வன பாதுகாப்பு திணைக்களத்தினர் அவர்களை பிடித்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதுடன் தங்களுக்கான தற்காலிக கொட்டில்களை கூட அமைப்பதற்கு அனுமதி வழங்குவதில்லை எனவும் ஆனால் பெரும்பான்மை சமூகத்தினருக்கு இயந்திரங்களைக் கொண்டு காடுகளை அழிப்பதற்கும் கட்டிடங்களை அமைப்பதற்கும் எதுவித தடைகளும் விதிப்பதில்லை எனவும் இதன் போது பண்ணையாளர்கள் தெரிவித்தனர். குறித்த கலந்துரையாடலின் போது அப்பகுதியில் அத்துமீறி பயிற்சிகள் ஈடுபடும் நபர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் கலந்துரையாடியபோது தங்களிடம் உரிய ஆவணங்கள் இருப்பதாகவும் அவற்றை வைத்துக் கொண்டு தாங்கள் இப்பகுதியில் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தனர். இதன் போது பிரதேச செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இருவரும் இணைந்து அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களின் ஆவணங்களை பரிசீலனை செய்வதற்காக அவற்றை எதிர்வரும் வாரம் கிராம சேவகர்களின் ஊடாக வழங்கி அவற்றை உறுதி செய்ய வேண்டுமென பயிர்ச்செய்கையாளர்களிடம் தெரிவிக்கப்பட்டதுடன், பண்ணையாளர்கள் மீது அத்துமீறிய செயற்பாடுகளை முன்னெடுக்கக்கூடாது எனவும் இதன் போது வலியுறுத்தப்பட்டது. “உடனடியாக சட்டவிரோதமாக குடியேறி இருக்கின்றவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் இது மேய்ச்சல் தரையாக அறிவிக்கப்பட வேண்டும். மக்களுக்கு அனுரகுமார திசாநாயக்க அரசாங்கம் நேர்மையாக நடந்து கொள்ளுகின்ற அரசாங்கம் என நம்பிக்கை வருவதாக மேய்ச்சல்தரைக்காணியில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய செயற்பாடுகளை இதனை ஒரு முதலாவது சவாலாக எதிர்வரும் வாரத்தில் பாராளுமன்றத்தில் என்.பி.பி அரசுக்கு முன்பாக நான் இந்த சவாலை முன்வைக்க தயாராக இருக்கின்றேன்” என இங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார். இதன்போது கருத்து தெரிவித்த அவர், மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியே இந்த கெவிலியாமடு இங்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை பெயர் தெரியாதவர்கள் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் வந்து அடைத்து விவசாயம் செய்து கட்டிடங்களை அமைத்து பாரிய அளவில் பண்ணைகளாக மாற்றி செய்து கொண்டிருக்கின்றார்கள். இவை அனைத்தும் வன பரிபாலன சபைக்கு சொந்தமான காணிகள். இன்று வட கிழக்கில் வன பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான காணிகளுக்குள் தமிழ் பண்ணையாளர்கள் மற்றும் தமிழ் விவசாயிகள் சிறிய கத்தியை எடுத்துக்கொண்டு சென்றாலும் கூட உடனடியாக அவர்களை அழைத்துச் சென்று அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகளை தாக்கல் செய்து பாரிய நெற்குவாரங்களை கொடுக்க வன பாதுகாப்பு திணைக்களம் இந்த பிரதேசத்தில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை தனியார் ஒருவர் யானை வேலி கூட அமைத்து வைத்திருக்கின்றார். இவை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சொந்தமான காணிகள். பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட காலத்தில் இருந்து பட்டிப்பளை எல்லையிலே இந்த காணி அவகரிப்பு இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது என்பதனை தொடர்ச்சியாக பேசிக் கொண்டு வந்து விடையங்கள். அந்த நேரத்தில் நாங்கள் வந்து பார்வையிட்டத்தின் பின்பு ஒரு சில விடயங்கள் தடுத்து நிறுத்தப்பட்டாலும் கூட அந்த நேரத்தில் இருந்து பிரதேச மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர்கள் இந்த விடயத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு முழுமையாக மறுத்தார்கள். ஏனென்றால் பெரும்பான்மை சமூகத்தினுடைய குடியேற்ற திட்டங்களை எதிர்ப்பதற்கு அவர்கள் விரும்பவில்லை. இன்று புதிய அரசாங்கம் வந்திருக்கின்றது அண்மையில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திலும் கூட இந்த மேய்ச்சல் தரைக்குள் இவ்வாறான அடாவடித்தனமாக பயிர்கள் செய்வார்களா இருந்தால் கால்நடை வைத்திருக்கின்ற பண்ணையாளர்கள் அடுத்த கட்டமாக எங்கே போவது. அநுரகுமார திசாநாயக்க அவர்களுடைய அரசாங்கத்தின் கீழே இந்த விடயங்கள் தொடருமாக இருந்தால் இன்று வடக்கு கிழக்கிலும் சரி இனி இடங்களிலும் சரி அனைத்து மக்களையும் சரிசமமாக பார்த்து செயல்படுவார் என நினைத்து வாக்களித்தாலும் கூட அவருடைய ஆட்சிக்காலத்திலும் இந்த விடயங்கள் தொடர்கின்றது. சிலர் கூறலாம் அவர் ஆட்சிக்கு வந்து இப்போது தான் இரண்டு மாதங்கள் அல்லது மூன்று மாதங்கள் என்று ஆனால் இந்த விடயங்கள் குறித்து மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் பேசப்பட்டு. இந்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்தி இதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக சொல்லியும் கூட இந்த விடயம் இன்று வரை அவ்வாறாகவே கண்முன்னாக இருக்கின்றது. அந்த வகையில் இது உடனடியாக சட்டவிரோதமாக குடியேறி இருக்கின்றவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் இது மேய்ச்சல் தரையாக அறிவிக்கப்பட வேண்டும். அரசாங்கத்தால் போடப்பட்ட யானை வேலிக்கு உள் காணியினை சுத்தப்படுத்தி விவசாயம் செய்கின்றார்கள். யானை வேலி போடுவதன் நோக்கமே இதற்கு மறுபக்கம் வன பாதுகாப்பு திணைக்களத்துக்கு சொந்தம் என்பதனால். இந்த யானை வேலைக்கு உட்பகுதியில் வந்து அவர்கள் விவசாயம் செய்திருப்பதனால் தாங்களாகவே யானை வேலிகளை அமைத்திருக்கின்றார்கள். எமக்கு இங்கே இருக்கின்ற பண்ணையாளர்கள் கூறுகின்றார்கள் இந்த காட்டுப் பகுதிக்குள் ஒரு எஸ்கவேட்டர் இயந்திரத்தினையும் ஒளித்து வைத்திருப்பதாக. அதனை வைத்து தான் காட்டை ஒதுக்குகிறார்கள். சாதாரணமாக தமிழர்கள் ஒருவர் ஒரு சிறிய கத்தியை காட்டுப்பகுதிக்குள் கொண்டு போக முடியாத நிலையிலே இன்று எஸ்கவேட்டர் இயந்திரத்தின் மூலம் காடுகளை அழித்து பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரையினை இல்லாமல் செய்து காணிகளை அபகரிப்பு செய்யும் வரைக்கும் இவர்கள் என்ன பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று எமக்கு பாரிய சந்தேகம் இருக்கின்றது. இந்த விடயம் தொடர்பாக எதிர்வரும் வாரத்தில் பாராளுமன்றத்தில் இது தொடர்பாக நாங்கள் கேள்வி எழுப்பி வன பாதுகாப்பு திணைக்களம் தூங்குகின்றதா என்ற கேள்வியையும் நாங்கள் எழுப்ப வேண்டும். பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு வன பாதுகாப்பு திணைக்களத்தின் நீதி ஒரு மாதிரியாக செயற்படுகின்றது. இங்கே இருப்பவர்கள் மாபியாக்கள். இங்கு இருப்பவர் ஒருவர் கூறுகின்றார் இந்த பகுதியில் தனக்கு பல ஏக்கர் காணிகள் இருப்பதாகவும் இப்பகுதியில் மாமரம் மற்றும் கொய்யா மரம் போன்றவை பயிரிட்டு இருப்பதாகவும் வயல் செய்வதாகவும் கூறுகின்றார் ஒரு தனி நபர். இவர் அம்பாறையில் இருந்து வந்து இங்கு செய்கின்றார். இங்கு சிங்களவர்கள் வந்து 10 அல்லது 15 பேர்ச் எடுத்து செய்யவில்லை. இந்த பிரதேசத்தில் காணிமாபியா ஒன்று இயங்கிக் கொண்டு வருகின்றது. அந்த வகையில் மூன்று மாடி கட்டிடம் கூட அமைத்திருக்கின்றார்கள். இந்த கட்டிடம் அமைக்கும் வரைக்கும் வன பாதுகாப்பு திணைக்களம் எதனை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த வகையில் உடனடியாக சட்டவிரோதமான செயல்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். மக்களுக்கு அநுரகுமார திசாநாயக்க அரசாங்கம் நேர்மையாக நடந்து கொள்ளுகின்ற அரசாங்கம் என நம்பிக்கை வருவதாக இருந்தால் இதனை ஒரு முதலாவது சவாலாக எதிர்வரும் வாரத்தில் பாராளுமன்றத்தில் என்.பி.பி அரசுக்கு முன்பாக நான் இந்த சவாலை முன்வைக்க தயாராக இருக்கின்றேன் என தெரிவித்தார். https://akkinikkunchu.com/?p=308400
  13. இலங்கை தமிழரசுக் கட்சியின் செயற்குழு கூட்டம்! Vhg ஜனவரி 18, 2025 இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று(18-01-2025) சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சீ.வி.கே சிவஞானம் தலைமையில் இந்த கூட்டம் திருகோணமலையில் நடைபெறவுள்ளது. இதன்போது, கட்சிக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு, கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள ஒழுக்காற்று நடவடிக்கை, இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாடு, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://www.battinatham.com/2025/01/blog-post_599.html
  14. ஈழத் தமிழர் விடயத்தில் தலையிட வேண்டிய கட்டாயம் தற்போது இந்தியாவுக்கு இல்லை ந.லெப்ரின்ராஜ் ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியா தலையிட வேண்டிய கட்டாயம் தற்போது இந்தியாவுக்கு இல்லை என்பதைப் புரிந்து கொள்வது அவசியமாகும். இந்தியா இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் காட்டும் அக்கறை படிப்படியாக குறைவடைவதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. தமிழ் நாட்டில் கூட ஈழத் தமிழர்கள் தொடர்பான அக்கறை பூச்சியத்தை அண்மித்ததாகவே உள்ளது என தெரிவித்த இணைந்த வடக்கு – கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள், இலங்கையின் அரச முடிவுகளிலும் நடைமுறைகளிலும் சிங்கள- பௌத்த பேரினவாத சக்திகளின் ஆதிக்கம் இன்னமும் குறைவடையாத நிலையில், அவற்றை மீறி மக்கள் விடுதலை முன்னணியினர் சிங்கள – பௌத்த பேரினவாத சக்திகளை புறக்கணித்து விட்டு புதிய அரசியல் அமைப்பை உருவாக்கி அதில் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை வழங்குவார்கள் என எதிர்பார்ப்பது நகைப்புக்கிடமானதாகும் எனவும் தெரிவித்தார். புதிய ஆட்சி ஏற்பட்டு 100 நாட்களை கடந்திருக்கும் நிலையில் புதிய ஆட்சியாளர்கள் முகம் கொடுக்கவிருக்கும் சவால்கள், தமிழ் மக்களுக்கு இந்த ஆட்சி எவ்வாறானதாக இருக்கும் மற்றும் பூகோள அரசியல் போக்கில் புதிய ஆட்சியாளர்களுக்கு காத்திருக்கும் சவால்கள் தொடர்பில் ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவருடனான நேர்காணல் வருமாறு: கேள்வி:இலங்கையில் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டு 100 நாட்களை கடந்திருக்கிறது.பொருளாதார நெருக்கடி,அரசியல் ஸ்திரமின்மை,அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் என பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் ‘புதியவர்கள்’ ஆட்சி கட்டிலில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். அந்த அடிப்படையில் இந்த ஆட்சியாளர்கள் மேற்படி சவால்களுக்கு முகம் கொடுத்து எவ்வாறு பயணிப்பார்கள் என எதிர்பார்க்கிறீர்கள்? பலரும் கூறியவைதான். கீழ் மத்தியதர வர்க்கப் பின்னணி கொண்டவர்கள்.இன்றைய அரசியல் பொருளாதார கட்டமைப்பில் வாழும் பரந்துபட்ட பொதுமக்களின் கஷ்ட நஸ்டங்கள், துன்ப துயரங்களை அறிந்தவர்கள்.ஆட்சி அதிகார கதிரைகளுக்குப் புதியவர்கள். அதேவேளை, 1970ல் இருந்து 2010 வரை என நான்கு தசாப்தங்களாக – இடையில் ஓர் ஐந்து ஆண்டுகள் தவிர, சுமார் 35 ஆண்டுகள் சிங்கள பேரினவாத அரசியலின் பங்குதாரர்களாக இருந்தவர்கள். 2015ல் அதிலிருந்து சற்று விலகிய தோற்றங்களுடன் தமது புதிய பயணத்தை ஆரம்பித்து 2019ல் இருந்து கடந்த ஆறு ஆண்டுகளாக தமது மக்கள் விடுதலை முன்னணி என்ற கட்சிக்கு மேலாக தேசிய மக்கள் சக்தி என்னும் வடிவில் செயற்பட்டு வந்துள்ளவர்கள். 2022ம் ஆண்டு எழுச்சி பெற்ற மக்களின் அறகலய இயக்கத்தினால் ஆட்சியாளர்களின் ஊழல் மோசடிகளுக்கு எதிராக, இனவாத அரசியலுக்கு எதிராக மற்றும் பாராளுமன்றத்தை நிரப்பியிருந்தவர்களின் போலித் தனங்களுக்கு எதிராக வெளிப்படுத்தப்பட்ட உணர்வுகளை சரியாக அடையாளம் கண்டு தமது அரசியலை மக்கள் விடுதலை முன்னணியினர் முன்னகர்த்தினார்கள். இவர்கள் ஊழல் மோசடிகளற்ற ஆட்சியை ஏற்படுத்துவார்கள், நாட்டு மக்களின் பொருளாதார வாழ்வை மீட்டெடுப்பார்கள் என முழுமையாக நம்பிய மக்கள், வரலாற்றில் இல்லாதவாறு அமோகமாக வாக்களித்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இது வெறுமனே ஒரு கட்சிக்கான ஆட்சி மாற்றமாக இல்லாமல், நாட்டின் அரச கட்டமைப்பில் முற்போக்கான மாற்றங்கள் நிகழ்வதாகவும், அரச நிர்வாக அமைப்புகள் அனைத்தும் ஊழல் மோசடிகள் அற்றவையாக அமைவதாகவும், அரச நிர்வாகிகள் அனைவரும் மக்களுக்கான உண்மையான சேவகர்களாக செயற்படுவதாகவும், நாட்டில் சிறுபான்மையாக வாழும் தேசிய இனங்களில் அடிப்படை ஜனநாயக அபிலாசைகள் பேணப்படுவதாகவும் இந்த ஆட்சி அமைய வேண்டும். அதற்காகவே இலங்கையின் அனைத்து இன மக்களும் ஒரு முகமாக இந்த ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இன்றுள்ள மக்கள் விடுதலை முன்னணி ஆட்சி அதனை நிஜமாக்குமா என்பதனை பொறுத்திருந்துதான் மதிப்பிட வேண்டும். கேள்வி: இலங்கையில் இந்தியாவை விலக்கி வைத்துவிட முடியாது என்பது வரலாறு. காரணம்,எமக்கு அண்மைய நாடு மாத்திரமல்ல, இலங்கை வீழ்ந்தபோதெல்லாம் பல நேரங்களில் கைகொடுத்த நாடு என்ற அடிப்படையிலும் ஈழத்தமிழர்களின் வரலாற்றில் பல இடங்களில்-நேரங்களில் இந்தியாவின் பங்கு இருந்திருக்கிறது என்ற அடிப்படையிலும் இந்த கேள்வியை முன்வைக்கிறேன்.இந்திய எதிர்ப்பு வாதத்தை இதுகாலவரை கடைப்பிடித்து வந்த தரப்பு இன்று இலங்கையின் ஆட்சிக் கட்டிலில் இருக்கிறது. பூகேகாள அரசியலில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் இன்றைய கால சூழ் நிலையில் புதிய ஆட்சியாளர்களுக்கு அது எந்த அளவுக்கு சவாலாக இருக்கும் என பார்க்கிறீர்கள்? பதில்:மக்கள் விடுதலை முன்னணியினரின் இந்திய எதிர்ப்பெல்லாம் அவர்கள் எதிர்க்கட்சி அரசியல் செய்த காலம் வரைதான் என்பது போலவே ஆட்சிக் கதிரைகளில் அமர்ந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியினரின் தற்போதைய அரசியல் பிரதிபலிப்பதாக உள்ளது. தமிழர்களுக்கான அரசியற் தீர்வு தொடர்பாக இந்தியா ஒரு வகையான மிதவாத அணுகுமுறையைக் கடைப்பிடிக்கின்ற வரை இந்தியாவின் செல்வாக்கு மக்கள் விடுதலை முன்னணியினருக்கு எந்த வகையிலும் சவாலாக இருக்கப் போவதில்லை என்றே தெரிகின்றது. கேள்வி: இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின்படி உருவாக்கப்பட்ட மாகாண சபை என்ற நிர்வாக அலகின் முதலாவது முதலமைச்சர் என்ற அடிப்படையில் இந்த கேள்வியை தங்களிடம் முன் வைக்கிறேன். 13வது திருத்தச் சட்டம் என்பது இந்தியாவின் சொத்து என்ற அடிப்படையில் அந்த திருத்தச் சட்டம் உருவாக்கப்பட்ட காலத்தில் அதற்கு எதிராக ஜே.வி.பி. செயற்பட்டமையும், இணைந்த வடக்கு- கிழக்கை பிரித்தமையும் வரலாறு. அந்தவகையில் ஜே.வி.பி.யின் பாசறையில் வளர்ந்து வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் குறைந்த அதிகாரங்களைக் கொண்டதாக இருக்கின்றதாக தமிழ் தரப்புகள் கூறிவரும் 13ஐக் கூட கடந்த காலத்தில் எதிர்த்து வந்த நிலையில், ஈழத் தமிழர்களுக்கு ஒரு தீர்வை வழங்குவதற்கு ஆட்சியாளர்கள் முன் வருவார்கள் என எதிர்பார்க்க முடியுமா? பதில்: முதலாவதாக, 13வது திருத்தம் இந்தியாவின் சொத்து என்பதே தவறாகும். மேண்டுமென்றால், அந்த சொத்தை இந்தியா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி ஈழத் தமிழருக்கு பெற்றுக் கொடுத்தது என்று சொல்லலாம். ஆனால் இந்த சொத்தை ஈழத் தமிழர்களில் மிகப் பெரும்பான்மையானவர்கள் தமது சொத்தாக, அதாவது தமக்கு உரிய சொத்தாகவோ, தமக்கு வேண்டிய சொத்தாகவோ கருதவில்லை என்பது அனைவரும் அறிந்த பொது உண்மை. இந்த சொத்தை இலங்கை மக்களின் ஜனநாயக கட்டமைப்புக்கு அவசியமான சொத்தாக, குறிப்பாக ஈழத் தமிழர்களுக்கான அரசியற் தீர்வுக்கு அடிப்படையாக அமையக் கூடிய சொத்தாக ஆக்க முற்பட்டவர்களெல்லாம் சிங்களப் பேரினவாதிகளின் எதிர்ப்புக்கும் உள்ளாகி, தமிழர்கள் மத்தியில் துரோகிகள் என இழிவு படுத்தப்பட்டமையுமே நடந்து முடிந்தது. இரண்டாவதாக, வடக்கு – கிழக்கு இணைந்த மாகாணசபை ஒன்றுக்கான சாத்தியம் உள்ளதா என்பது பற்றி இப்போது விவாதிப்பதில் பயனில்லை என்றே கருதுகிறேன். அப்படியானதொரு மாகாண சபையை ஏற்பதற்கு மக்கள் விடுதலை முன்னணியினர் மட்டுமல்ல, எந்தவொரு சிங்களத் தலைவரும் தயாராக இல்லை, எந்தவொரு முஸ்லிம் தலைவரும் தயாராக இல்லை என்பதே உண்மை. தமிழர்கள் மத்தியிலும் கணிசமானோர் இப்படியொரு விருப்பம் கொண்டிருக்கிறார்களே தவிர அதனை எப்படி சாத்தியமாக்குவது என்பது பற்றி எந்தத் தமிழரிடமும் எந்தவொரு திட்டமும் இருப்பதாகவோ அல்லது அதற்காக தியாகங்கள் செய்வதற்கு எந்தத் தமிழரும் தயாராக இருப்பதாகவோ தெரியவில்லை. வடக்கு – கிழக்கு இணைப்பு என்பது தமிழர்கள் மத்தியில் அவ்வப்போது வெளிப்படும் ஒரு தேர்தல் அரசியற் கோசம் என்பதற்கப்பால், காரிய சித்திக்கான எந்தவொரு அர்த்தத்தையும் கொண்டிருப்பதாக தெரியவில்லை. மூன்றாவதாக, இப்போது ஆட்சிக் கதிரையில் இருக்கும் மக்கள் விடுதலை முன்னணியினர், தமிழர்களுக்கான அரசியற் தீர்வை புதிய அரசியல் அமைப்பினூடாகவே வழங்கப் போவதாக வாக்குறுதி அளித்துள்ளார்கள். புதிய அரசியல் அமைப்பும் அரசியற் களத்துக்கு வருவதற்கு மூன்று வருடங்களாகும் என்பதை திட்டவட்டமாகவே கூறி விட்டார்கள். அதேவேளை, 13வது திருத்தத்தில் உள்ளபடி கூட பொலிஸ் அதிகாரங்களையோ, காணி அதிகாரங்களையோ வழங்கப் போவதில்லை என்பதை உறுதியாகவும் தெளிவாகவும் வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்த ஆட்சியினர் என்னென்ன அதிகாரங்களை என்னென்ன வகையாக எந்தெந்த அளவில் வழங்கப் போகிறார்கள் என்பதை அறிவதற்கு இப்போதைக்கு வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. பாராளுமன்ற அரசியலில் ஆக்குதலும் அழித்தலுமே உள்ளன, நம்புதல் என்றோ நம்பாமல் இருத்தல் என்றோ எதுவுமில்லை. கேள்வி:புதிய அரசியல் சாசனம் ஒன்று உருவாக்கப்படும் என்றும் அதில் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் எனவும் ஆட்சியாளர்கள் முன்னைய தலைவர்கள் போன்று வழமையான பாணியில் கூறி வருகிறார்கள். அதற்கான சாத்தியங்கள் இருக்கின்றனவா? அப்படி ஒன்று உருவானால் எவ்வாறான தீர்வு திட்டம் தமிழ் மக்கள் சார்பில் முன்வைக்கப்பட வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்? பதில்: இக்கேள்வியின் முதலாவது பகுதியில் அதற்கான பதிலையும் நீங்களே வழங்கி விட்டீர்கள். மக்கள் முன்னணியினர் ஆட்சிக்கு புதியவர்கள் என்பதுவும், மக்கள் முன்னணியின் பிரமுகர்களாக நாடாளுமன்றத்துக்கு தெரிவாகி உள்ளவர்களில் ஒரு சிலரை தவிர ஏனையவர்கள் நாடாளுமன்றத்துக்கு மட்டுமல்ல அரசாட்சியின் கட்டமைப்புக்கே புதியவர்கள் என்பதுவும் ஒருபுறமிருக்கட்டும், ஆயினும் இவர்களைத் ஆட்சிக்கு தெரிவு செய்துள்ள அரசியற் தளங்கள் பழையனவே, இவர்கள் அதிகார தலைமையைப் பெற்றிருக்கும் ஆயுதப் படைகள், பொலிஸ் அமைப்பு, அரச நிர்வாகம், நீதித்துறை, அரச நடைமுறைக்கான சட்டங்கள் அனைத்தும் பழையனவே. மேலும், 2019ல் கோத்தாபயவை ஆதரித்து ஆட்சி பீடத்தில் அமர்த்திய அதே சிங்கள – பௌத்த பேரினவாத சக்திகள் இம்முறை மக்கள் விடுதலை முன்னணியை அதிகாரக் கதிரையில் அமர்த்துவதில் கணிசமான பாத்திரத்தை வகித்திருக்கிறார்கள் என்பதுவும் அனைவரும் அறிந்த ஒன்றே. இலங்கையின் அரச முடிவுகளிலும் நடைமுறைகளிலும் சிங்கள- பௌத்த பேரினவாத சக்திகளின் ஆதிக்கம் இன்னமும் எந்த வகையிலும் குறைந்துவிடவில்லை. எனவே, அவற்றை மீறி மக்கள் விடுதலை முன்னணியினரால் செயற்பட முடியுமா என்பது ஒன்று. மேலும் மக்கள் விடுதலை முன்னணியினர் இந்த சிங்கள – பௌத்த பேரினவாத சக்திகளை புறக்கணித்து விட்டு புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கான அரசியலைக் கொண்டிருக்கிறார்களா என்பதுவும் பிரதானமான கேள்விகளாக உள்ளன. புதிய அரசியல் யாப்பைச் சொல்லி, சந்திரிகா பண்டாரநாயக்கா பத்து ஆண்டுகாலம் நிறைவேற்று ஜனாதிபதியாக தனது காலத்தை நிறைவு செய்து கொண்டார். 13 பிளஸ் என்று சொல்லி மஹிந்த ராஜபக்ஷ தனது பத்து ஆண்டுகளை நிறைவு செய்து கொண்டார். புதிய அரசியல் யாப்பைத் தயாரித்தபடியே மைத்திரி -ரணில் நல்லாட்சி ஐந்து ஆண்டுகளைக் கடத்தி முடித்தது. எனவே புதிய அரசியல் யாப்பு என்பதை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்க இருக்கும் மக்கள் விடுதலை முன்னணினருக்கு மேலும் இரண்டு ஆண்டுகளை அதைப் பேசியபடியே கடப்பதற்கு முடியாதா என்ன! கேள்வி: இந்தியாவைத் தாண்டி தமிழ் மக்களுடைய தீர்வு விடயத்தில் எந்தவொரு வெளிநாட்டு தரப்பும் தலையிடமாட்டாது என்ற வரலாற்றுப் பாடம் நீண்ட காலமாக தமிழர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் இந்தியாவின் அண்மைக்கால போக்கு ஈழத் தமிழர் விடயத்தில் மந்த கதியாக இருப்பதை அவதானிக்க முடிகிறது. குறிப்பாக அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கவின் இந்திய விஜயத்தின் போது கூட 13 பற்றியோ அல்லது தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றியோ இந்தியா பெரிய அளவில் அக்கறை செலுத்தியிருக்கவில்லை. இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்? பதில்:உங்களது இந்த கேள்வியில் உள்ள முதலாவது பகுதியில் கூறப்பட்டிருப்பது இன்னமும் உண்மையே. ஆயினும், ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியா தலையிட வேண்டிய கட்டாயம் தற்போது இந்தியாவுக்கு இல்லை என்பதைப் புரிந்து கொள்வது அவசியமாகும். “இந்தியா அதனது நலன்களுக்காகவே தமிழர்கள் விடயத்தில் தலையிட்டது”, “இந்தியா ஒரு ஆக்கிரமிப்பு நாடு”, “இந்தியாவை தமிழர்கள் நம்ப முடியாது – நம்பக் கூடாது” என்பவைதானே இங்குள்ள தமிழர்களின் பிரதிநிதிகள், சமூகப் பிரமுகர்கள், சமயத் தலைவர்கள், புத்திஜீவிகள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், பத்திரிகையாளர்கள், தமிழ் அரச உத்தியோகத்தர்கள் என தமிழர் சமூகத்திலுள்ள பல்வேறு முக்கியமான பகுதியிடையோரிடமும் உள்ள அபிப்பிராயம். இதனை இந்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் நன்கறிவர். இப்படியான ஒரு நிலையில் இந்தியா இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் காட்டும் அக்கறை படிப்படியாக குறைவடைவதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. தமிழ் நாட்டில் கூட ஈழத் தமிழர்கள் தொடர்பான அக்கறை பூச்சியத்தை அண்மித்ததாகவே உள்ளது. 1987ம் ஆண்டின் இந்திய-இலங்கை சமாதான உடன்பாட்டின் ஊடாக இந்தியா தனக்கு வேண்டியனவற்றை சாதித்துக் கொண்டது. இன்றைக்கும் அது இந்தியாவின் நலன்கள் தொடபில் வலுவானதாகவே உள்ளது. ஆனால் அந்த உடன்பாடடின் மூலமாக ஈழத் தமிழர்களுக்கு கிடைத்தனவற்றை, “தங்களைக் கேட்காமலே ஆக்கப்பட்டது”, “தங்கள் மீது திணிக்கப்பட்டது”, “தங்களது தியாகங்களுக்கு அது தகுதியற்றது”, “ஏற்றுக் கொள்ளத் தகாதது”, அனுமதிக்கப்படக் கூடாதது”, தும்புக் கட்டையால் கூட தொடக் கூடாதது” என்று சொல்லி சொல்லியே ஈழத் தமிழர் சமூகம் தானாகவே தனக்கு கிடைத்ததை தொலைத்து விட்டது. இதற்கு ஈழத் தமிழர் சமூகத்தின் பிரதானமான அனைத்து பகுதியினரும் பொறுப்பாவர். கேள்வி:தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் இருக்கின்ற தலைமைகளுக்கிடையில் தமிழ் மக்களுக்கு என்ன தீர்வு தேவை என்பதிலேயே குழப்பங்கள் இருக்கிறது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தீர்வை தூக்கி வைத்துக் கொண்டு அரசியல் செய்வதை அவதானிக்க முடிகிறது. இது ஈழத் தமிழர் விவகாரத்தில் எவ்வாறான தாக்கத்தை செலுத்தும் என எதிர்பார்க்கிறீர்கள்? பதில்:தமிழ்த் தேசியப் பரப்பினர் என முத்திரை இடப்பட்டவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் சிறு சிறு வித்தியாசங்களுடன், “ வடக்கு – கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் சுய நிர்ணய உரிமையுடன் கூடிய சமஸ்டி அமைப்பே” தமிழர்களுக்கான அரசியற் தீர்வு எனக் கூறுகின்றனர். இவர்களிடையே ஒற்றுமை இல்லையே என தமிழர்களிற் பெரும்பான்மையினர் வெவ்வேறு முறைகளிலும் வழிகளிலும் கவலை தெரிவிக்கின்றனர்.இப்படியான “தமிழ்த் தேசிய”பட்டயக்காரர்கள் ஒற்றுமையாக ஆனாலென்ன அல்லது வெவ்வேறாக இருந்தால்த்தான் என்ன? இவர்கள் ஒன்றாகக் கோரினால் என்ன, தனித்தனியாக கோரினால் என்ன, இவர்களது கோரிக்கையை ஏற்பதற்கு – காது கொடுத்து கேட்பதற்குக் கூட ஏனைய சிறுபான்மை இனத்தவர்கள் மட்டுமல்ல, எந்தவொரு வெளிநாடும் எந்தவொரு சர்வதேச அமைப்பும் தயாராக இல்லை என்பது அனைத்து தமிழர்களுக்கும் தெரிந்த ஒன்றே. இந்த தேசிய பட்டயகாரர்களை மீண்டும் மீண்டும் தூக்கி நிறுத்தி தமது பிரதிநிதிகளாக – தமது தலைவர்களாக கொண்டாடுவதை தமிழர் சமூக பிரமுகர்களும் புத்திஜீவிகளும் நிறுத்தப் போவதில்லை. அதனால் இந்த தமிழ்தேசிய பட்டயக்காரரும் தம்மை நம்பும் தமிழ் மக்களுக்கு உண்மையாகவும் நேர்மையானவர்களாகவும் தம்மை ஆக்கிக் கொள்ளப் போவதுமில்லை. பொய்களும் போலித்தனங்களும் நிறைந்த தமிழ்த் தேசிய புலுடா அரசியலே தமிழர்கள் மத்தியில் வெற்றி பெறுகிறது. எங்கும் வென்றவனே வீரனாவான். அவனுக்கே வெற்றிக் கிண்ணம். எப்படி வெற்றி பெற்றான் என்பதெல்லாம் வெற்றிப் பரிசுக்கு சம்பந்தமில்லாத இரண்டாம் பட்ச விவாத விடயமாகிவிடும். இங்குள்ள அரசியற் பிரமுகர்களின் பிரதானமான இலக்கெல்லாம் தேர்தலில் எப்படி வெற்றி பெறுவது என்பது மட்டுமே. இங்கு சமூக மரியாதையும் அரங்க அங்கீகாரமும் அதற்கு மட்டுமே. ஈழத் தமிழர் சமூகத்தில் வாழ்ந்த காத்திரமான சமூகப் பிரிவினர்களில் பெரும்பான்மையோர் ஐரோப்பிய, அமெரிக்க மற்றும் அவுஸ்திரேலிய கண்டங்களுக்கு முற்றாக புலம்பெயர்ந்து போய்க் குடியேறி விட்டார்கள். அவர்களின் அடுத்த தலைமுறையினர் அந்த நாடுகளில் வாழும் இலங்கை வம்சாவழியினர் என்பதற்கப்பால் வேறொன்றுமில்லை. அவர்கள் வாழும் நாடுகளில் எந்த நாட்டு வம்சாவழியினர் என்பது ஒரு பிரச்சினை அல்ல. ஆனால், இந்த புலம் பெயர்ந்தோர் தமது கனவுகளையும், சிங்கள ஆட்சியாளர் மீது கடந்த காலங்களில் தாம் கொண்டுள்ள ஆத்திரங்களையும் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் மீது திணிக்கும் வல்லமையைக் கொண்டிருக்கிறார்கள். மிகப் பலயீனமான நிலையில் இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்கள் தமக்குச் சாத்தியமானதொரு அரசியற் தீர்வை சாதிப்பதற்கான பாதையில் பயணிக்க முடியாமைக்கு இந்த புலம் பெயர்ந்த தமிழர்களின் பண பலமும் பிரச்சார பலமும் பிரதானமான காரணியாக அமைகிறது. எனவே, ஈழத் தமிழர் சமூகம் தன்னைத் தானே அழிக்கும் நோயை தானே பராமரிக்கும் தன்மையுடையதாக உள்ளது. இதற்கு ஏது வைத்தியம் என்பது விடை கண்டு பிடிக்கப்படாத கேள்வியாக மட்டுமே உள்ளது. கேள்வி: பூகோள அரசியலில் இலங்கையின் புதிய ஆட்சியாளர்களின் பயணம் சவாலானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் ஒரு சூழ்நிலையிலும், இந்திய-சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் கடும் போட்டியில் இருப்பதாக கூறப்படும் ஒரு சூழ்நிலையிலும் 2009 இறுதி யுத்தத்தின் போது இடம் பெற்றதாக கூறப்படும் காணாமல் போனோர் விவகாரம் மற்றும் மானிட இனத்துக்கு எதிரான குற்றச்செயல்கள் தொடர்பான விவகாரத்துக்கு என்ன நடக்கும் என எதிர்பார்க்கிறீர்கள்? பதில்: 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது காணாமற் போனதாக கூறப்படுவோர் விவகாரம் இப்போது முற்றாக அதன் முக்கியத்துவத்தை இழந்து விட்ட ஒன்றாகவே தெரிகிறது. இந்தியாவோ சீனாவோ இவ்விடயத்தில் எக்காலத்திலும் அக்கறை காட்டியதில்லை. அதேவேளை, இலங்கையை இவ்விடயத்தில் சர்வதேச விசாரணைக்குள் கொண்டு செல்வதை இந்தியாவோ சீனாவோ அனுமதிக்கத் தயாராக இல்லை என்பது எப்போதும் தெளிவாகவே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளே இவ்விடயத்தில் ஐ. நா.வின் மனித உரிமை மாநாட்டின் ஊடாக அக்கறை காட்டி வந்தன. 2015 ல் ஏற்பட்ட நல்லாட்சிக்குப் பின் அது படிப்படியாக குறைவடைந்து, இப்போது கேட்கக் கூடியதாக எந்தவொரு குரலும் எழுப்பப்படுவதாக காணவில்லை. தமிழ்த் தேசிய பட்டயக்காரக் கட்சிகளிற் சில முன்னர் பெரும் அக்கறை காட்டின. இப்போது அவையும் ஆடிக்கு ஒருக்கால், அமாவாசைக்கு ஒருக்கால் என அறிக்கை வெளியிடுவதற்கு அப்பால் எதுவும் செய்வதாக இல்லை. காணாமற் போனோரின் பெற்றோரும் களைத்துப் போய்விட்டார்கள் போல் தெரிகின்றது. இதனைப் பெரிதாக செய்தியாக்கிக் கொண்டிருந்த சர்வதேச தமிழ் ஊடகங்களும் இப்போது அமைதியாகி விட்டன. முன்னர் புலி அரசியலை வியாபாரமாக ஆக்கி பெரும் முதலாளிகளாக ஆகிக் கொண்ட ஊடகங்களின் உரிமையாளர்கள் இப்போது இலங்கையில் தமது வியாபார பெருக்கங்களுக்காக ஆட்சியாளர்களோடு நட்பு டீல்களில் உள்ளதாக கூறப்படுகிறது. கடைசியாகப் பார்த்தால் “சண்டை என்றால் சட்டை கிழியத்தானே செய்யும்” என்பதாக சாதாரணமாக்கி விட்டார்கள் என்றே தெரிகிறது. இலங்கை ஆட்சியாளர்களைப் பொறுத்த வரையில் இப்போது நஸ்ட ஈடு கொடுக்க வேண்டிய கஸ்டத்தில் இருந்தும் மீண்டு விட்ட நிம்மதியோடு இருக்கிறார்கள் போலிருக்கிறது. தேர்தல் வேட்பாளராக ஜனாதிபதி அநுரா அவர்கள் யாழ்ப்பாணத்தில் பிரச்சாரம் செய்தபோது காணாமற் போனோர் விடயத்தை அவர் கையிலெடுப்பார் என்றார்கள். அவர் எந்த காணாமற் போனோர் விடயத்தைக் கையிலெடுப்பார் என்பது இன்னமும் தெளிவாக இல்லை. கேள்வி: பொருளாதார தளத்தில் புதிய ஆட்சியாளர்களின் செயற்பாடுகள் எவ்வாறு இருக்கின்றன? பதில்:பொருளாதார நெருக்கடியால் இலங்கையை வங்குரோத்து நாடு என பிரகடனம் செய்து விட்டு கோத்தாபய நாட்டையும் பதவியையும் விட்டு ஓடியதன் பின்னர் ராஜபக்சக்களால் ஜனாதிபதியாக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பொருளாதார தந்திரோபாயங்களையே இப்போது ஆட்சியிலுள்ள மக்கள் விடுதலை முன்னணியினரும் தொடர்கிறார்கள். சர்வதேச நாணய நிதியமே இன்னமும் இப்போதும் நாட்டின் பொருளாதார மீட்சிக்கான ஆலோசகராக செயற்படுகின்றது. முக்கியமான பொருளாதார பதவிகளில் சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் ஊழியர்களையே ரணில் விக்கிரமசிங்க இருத்தினார். அவர்களே அந்தப் பதவிகளில் இப்போதும் உள்ளனர். நாணயக் கொள்கைகள் தொடர்பான முடிவுகளையும் நடைமுறைகளையும் அவர்களே தொடர்ந்து மேற்கொள்ள ஜனாதிபதி அநுர அவர்களுக்கு பூரண அனுமதி அளித்துள்ளார். எனவே, எளிய முறையில் சொல்வதானால் நாட்டின் பொருளாதார நிர்வாகம் மக்கள் விடுதலை முன்னணியின் ஆட்சியிடம் இல்லை. மாறாக, அது சர்வதேச நாணய நிதியத்திடமே விடப்பட்டிருக்கின்றது. இந்த ஆண்டில் கார்களின் இறக்குமதி தொடர்பான முடிவையும் மத்திய வங்கியின் ஆளுனரே எடுத்திருக்கிறார் என்பது தெளிவாக உள்ளது. நிதி அமைச்சராக உள்ள ஜனாதிபதி அநுர அவர்கள் அதனை சட்டபூர்வமாக அமைச்சரவை முடிவாக வெளியிடும் கடமையைச் செய்வார். ரணிலின் ஆட்சியின் போது கடைப்பிடித்த பொருளாதார தந்திரங்களே இன்னமும் நடைமுறையாகின்றன. அநுர ஆட்சியின் பொருளாதார கெட்டித் தனங்கள் 2025ன் முடிவிலேதான் தெரிய வரும். 2023 மற்றும் 2024 இன் பொருளாதாரம் நாட்டு மக்களிற் பெரும்பான்மையோரின் வாயையும் வயிற்றையும் கட்டி வைத்து, இலங்கையின் அந்நிய செலாவணி இருப்பை கணிசமாக அதிகரித்து விட்டதாக பெருமிதம் கொள்கிறது. நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை கீழ் நிலையில் வைத்தபடியே அரசாங்கத்தின் வரி வருமானத்தை துரிதமாக அதிகரித்து விட்டதை சாதனையாக காட்டுகிறது. 2022ம் ஆண்டுக்குப் பின்னரான இலங்கையின் பொருளாதாரம் மக்களை பிச்சைக்காரர்களாக்கி பட்டினி போட்டு நோயாளிகளாக்கி விட்டு, அதன் மீது நின்று நாட்டின் பொருளாதாரத்தை மீட்டு விட்டதாக எகத்தாளம் பண்ணுகிறது. இந்தியாவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அநுரா தாராளமாகவே உடன்பாடுகளை வழங்கியுள்ளார். ஒரு பகுதி கொழும்புத் துறைமுகம், அம்பாந்தோட்டை மத்தள விமான நிலையம், மட்டக்களப்பின் அபிவிருத்தி, சம்பூர் மின் உற்பத்தி, திருகோணமலையில் எஞ்சியிருந்த அனைத்து எண்ணெய் தாங்கிகளும், காங்கேசன் துறைமுகம், பலாலி விமான நிலையம், பூநகரி மின் நிலையம், தலைமன்னார் – இராமேஸ்வரம் போக்குவரத்து, எல்லாவற்றிற்கும் மேலாக, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் தொப்புள் கொடி இருக்கிறதோ இல்லையோ இப்போது இந்தியாவையும் இலங்கையையும் எரிவாயு பைப் இணைக்கவுள்ளது. இன்னும் பல தொடரும் என்கிறார் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத். சீனாவுக்கு செல்லும் ஜனாதிபதி அநுர சீனாவுக்கும் தாராளமாகவே உடன்படுவார் என்பது தெரிகிறது. அமெரிக்காவுக்கும் அவர் கஞ்சத்தனம் செய்ய மாட்டார் எனலாம். இதுதான் இன்றைய இலங்கையின் பொருளாதார நிர்வாகம் – அந்நியச் செலாவணி நெருக்கடி, உள்நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு, அதனால் நாட்டின் உழைப்பாளர்களின் வருமானத்தின் மெய்யான பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, அதேவேளை உற்பத்திகள் மற்றும் வர்த்தகம் தொடர்பில் நிலவும் பொருளாதார மந்தம், வேலையின்மையின் அதிகரிப்பு, மக்களின் வாழ்க்கைத்தர வீழ்ச்சி, அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு போன்றன தொடர்பாக அரசாங்கம் தற்காலிகமான சமாளிப்புகளை மேற் கொண்டு வருகிறது. புதிய பொருளாதார கொள்கைகளையெல்லாம் முயற்சிக்கப் போவதாக அறிக்கைகள்.எவ்வாறாயினும் வளர்ச்சிப் பாதையில் முன்னேறுவதற்கான பொருளாதார மீட்சிப் பாதையில் நாடு காலடி எடுத்து வைப்பதற்கு இன்னமும் நீண்ட தூரம் செல்ல வேண்டி உள்ளது. ஆபத்துக்களைத் தாண்டி விட்டது என்றில்லை. பொருளாதார விடயத்தில் நாடு உண்மையான முன்னேற்றப் பாதையில் காலடி எடுத்து வைத்தால் அது சர்வதேச நாணய நிதியத்தினதும், இந்திய மற்றும் சீனாவினதும் ஒத்துழைப்புகளாலும் பெற்ற வெற்றியாகவே கூறப்படும். அநுராவின் ஆட்சிக்கும் பாராட்டு கிடைக்கும். மாறாக தோற்றால், அதாவது மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடிக்குள் நாடு வீழ்ந்தால் அதன் பழி மக்கள் விடுதலை முன்னணி ஆட்சியின் மீது மட்டுமே போடப்படும்.கரணம் தப்பினால் மரணம். எவ்வாறாயினும் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் கொண்டாட்டமே. https://thinakkural.lk/article/314590
  15. யுத்தநிறுத்த உடன்படிக்கைக்கு இஸ்ரேலின் அமைச்சரவையும் அனுமதி Published By: Rajeeban 18 Jan, 2025 | 09:23 AM காசா யுத்தநிறுத்த உடன்படிக்கைக்கு இஸ்ரேலிய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை யுத்தநிறுத்த உடன்படிக்கைக்கு அனுமதி வழங்கலாம் என தெரிவித்திருந்த நிலையில் இஸ்ரேலின் அமைச்சரவையும் உடன்படிக்கைக்கு அனுமதி வழங்கியுள்ளது. இஸ்ரேலிய நேரப்படி நள்ளிரவு வரை தொடர்ந்த கடும் விவாதங்கள் கருத்துபரிமாற்றங்களின் பின்னர் அமைச்சரவை இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. இரண்டு வலதுசாரி அமைச்சர்கள் ஹமாசுடன் உடன்படிக்கை செய்துகொள்வதை கடுமையாக எதிர்த்துள்ளனர். ஒருமாதகாலமாக கட்டாரில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர் யுத்த நிறுத்தம் குறித்து இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கை குறித்த விபரங்கள் வெளியாகாத போதிலும்,ஆறுவார கால ஆரம்பகட்ட யுத்தநிறுத்தத்திற்கு இரு தரப்பும் இணங்கியுள்ளதாகவும்,இதன்போது இஸ்ரேலிய படையினர் படிப்படியாக காசாவிலிருந்து விலக்கிக்கொள்ளப்படுவார்கள் என இஸ்ரேலிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இக்காலப்பகுதியில் ஹமாசின் பிடியில் உள்ள பணயக்கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ள விடயமறிந்த வட்டாரங்கள் இஸ்ரேலிய சிறையில் உள்ள பாலஸ்தீனிய கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளன. இக்காலப்பகுதியில் 33 இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள்,எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹமாசிடம் பணயக்கைதிகளாக உள்ள 50வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பெண்களும் மற்றும் சிறுவர்களும் விடுதலை செய்யப்படவுள்ளனர் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. யுத்தநிறுத்தத்தின் 16 வது நாள் இரண்டாவது கட்டத்தினை நடைமுறைப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகும்,இதன்போது அனைத்து பணயக்கைதிகளையும் விடுதலை செய்வது , நிரந்தர யுத்த நிறுத்தம்,இஸ்ரேலிய படையினரை காசாவிலிருந்து முற்றாக விலக்கிக்கொள்வது குறித்து ஆராயப்படும் https://www.virakesari.lk/article/204121
  16. டிரம்ப் பதவியேற்ற ஓரிரு மணித்தியாலங்களில் குடியேற்றவாசிகளுக்கு எதிரான கடும் நடவடிக்கைகள் - சி.என்.என். Published By: Rajeeban 18 Jan, 2025 | 11:53 AM டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு சில மணித்தியாலங்களில் குடியேற்றவாசிகள் குறித்து மிகக்கடுமையான உத்தரவுகள் வெளியாகலாம் என தெரிவித்துள்ள சிஎன்என் டிரம்பின் குழுவினர் இதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர் என செய்தி வெளியிட்டுள்ளது. சிஎன்என் இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளவர் பதவியேற்று ஒரு சில மணித்தியாலங்களில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படும் மிகக்கடுமையான குடியேற்ற உத்தரவுகளை டிரம்பின் குழுவினர் உருவாக்கிவருகின்றனர். இந்த உத்தரவுகள் அமெரிக்க மக்களிற்கு கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என விடயமறிந்த இரு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. டிரம்பின் இந்த நடவடிக்கைகள் அமெரிக்காவின் குடியேற்றகொள்கையில் பாரிய மாற்றத்தை கொண்டிருக்கும் மேலும் அமெரிக்காவில் ஏற்கனவே வசிக்கும் அமெரிக்கர்கள் அமெரிக்காவில் குடியேற விரும்புபவர்களிற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும். அமெரிக்காவின் குடியேற்றவாசிகளை இலக்குவைத்து அமெரிக்க குடிவரவுதுறை அதிகாரிகள் மற்றும் சுங்கத்துறையினர் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்,பென்டகனின் வளங்கள் அமெரிக்காவின் தென்பகுதி எல்லைக்கு அனுப்பப்படும், மேலும் அமெரிக்க எல்லைக்குள் நுழைய தகுதியானவர்கள் யார் என்பது குறித்து மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். டிரம்ப் ஜோபைடன் காலத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைகளை கைவிடுவார். குடியேற்றவாசிகளை வெளியேற்றுவதற்கான திட்டங்கள் வெளியாகும்,கைதுகள் இடம்பெறுவது குறித்த தகவல்கள் வெளியாகும், என சிஎன்என்னிற்கு விடயமறிந்த வட்டாரமொன்று தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/204138
  17. மன்னார் துப்பாக்கிச் சூடு ; சந்தேக நபர்களை கைது செய்ய பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார் 18 Jan, 2025 | 12:33 PM மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக கடந்த வியாழக்கிழமை (16) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு துப்பாக்கி தாரிகளை கைது செய்ய மன்னார் பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர், அங்கு இருந்த நான்கு நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றிருந்தனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நால்வரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்களில் இருவர் உயிரிழந்தனர். இதனையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், நீதிமன்றத்துக்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு துப்பாக்கி தாரிகளின் தேற்றத்திற்கு சமமான இரண்டு படங்களை வெளியிட்டுள்ளனர். இந்த படங்களில் உள்ள நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் மன்னார் பொலிஸ் நிலையத்தின் 071 859 1363 அல்லது 023 222 3224 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/204145
  18. சந்தோஷ் ஜா யாழ்ப்பாணத்துக்கு விஜயம் - கடற்றொழில் அமைச்சர், வடக்கு ஆளுநர் முதலிய அரசியல் பிரமுகர்களுடனும் சந்திப்பு! 18 Jan, 2025 | 12:41 PM யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அரசியல் பிரமுகர்களுடன் முக்கிய சந்திப்பில் ஈடுபட்டார். யாழ்ப்பாண நகரில் உள்ள தனியார் விடுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (17) இரவு விருந்துடன் இச்சந்திப்பு இடம்பெற்றது. இந்த ஒன்றுகூடலில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கருணநாதன் இளங்குமரன், ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், சிறீபவானந்தராஜா முதலானோர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/204141
  19. 25ஆம் திகதி சந்திப்பு முக்கிய திருப்புமுனையின் ஆரம்பப் புள்ளி ; கஜேந்திரகுமார் நம்பிக்கை 18 Jan, 2025 | 11:17 AM (எம். நியூட்டன்) தமிழ்த் தேசிய அரசியலில் முக்கிய திருப்புமுனையின் ஆரம்பப் புள்ளியாக, எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ள சந்திப்பு அமையும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (17) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது, அவர் இதனைத் தெரிவித்தார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவித்ததாவது: சில கட்சிகள், தங்களது தேவைக்காக அல்லது புறக்கணிக்கப்பட்டதாக உணர்ந்து, தனித்து செயல்பட முயல்கின்றன. ஆனால், கடந்த பாராளுமன்ற அமர்வின் போது, பாராளுமன்ற குழுத் தலைவர்கள் மத்தியில் கலந்துரையாடல் நடந்தது. அது, அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்கவேண்டிய நோக்கில் அமைந்தது. இதனைத் தொடர்ந்து, எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ள சந்திப்பில், பாராளுமன்ற குழுத் தலைவர்களைத் தாண்டி, கட்சியின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதோடு, இனப்பிரச்சினை தொடர்பாக அறிவியல் மற்றும் அதிகார ரீதியான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் நபர்களையும் இணைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இந்த சந்திப்பு ஆக்கபூர்வமாக அமைய வேண்டும். கட்சி ரீதியாக பேசப்பட்டு, ஒருமித்த முடிவுக்கு வரவேண்டியது அவசியம். நாம் கலந்துரையாடிய பிறகு, கட்சியின் அனுமதியைப் பெற வேண்டும் என்பதே முறையாகும். எந்த ஒரு குழுவும் கட்சியின் அனுமதியின்றி செயல்படக்கூடாது. எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறும் சந்திப்பு, தமிழ்த் தேசிய அரசியலில் ஒரு திருப்புமுனையாக அமையும். அரசாங்கம் தனது வசதிக்கேற்ப தமிழ்த் தேசிய அரசியலை நசுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை வலியுறுத்தும் தரப்புக்கள் ஒன்று கூட வேண்டும். தமிழர்களின் பாரம்பரிய அரசியல் நிலைப்பாட்டை மக்கள் மதிக்க வேண்டும். தமிழ் தேசிய அரசியல், உரிய கௌரவத்துடன், எதிர்காலம் நோக்கி முன்னேற, அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இதனை உணர்ந்து செயற்படுவதற்காகவே, இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்றார். https://www.virakesari.lk/article/204131
  20. யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்திற்கு “ திருவள்ளுவர் கலாச்சார மையம்“ என பெயர் மாற்றம் 18 Jan, 2025 | 12:44 PM இந்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்திற்கு 'திருவள்ளுவர் கலாசார மையம்' என இன்று சனிக்கிழமை (18) பெயர் மாற்றம் செய்யப்பட்டது. திருவள்ளுவரைக் கௌரவிக்கும் வகையில் குறித்த பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்தது. இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சுனில் செனவி, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் சாய் முரளி, யாழ் மாநகர ஆணையாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/204144
  21. போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பிலான வாக்கெடுப்பு - முதலாவது பணயக் கைதி நாளை விடுவிக்கப்படும் சாத்தியம் ஹமாஸூடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை அங்கீரிப்பதற்கு பரிந்துரைத்துள்ள நிலையில், குறித்த ஒப்பந்தம் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்துவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் கூடுகிறது. குறித்த ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டால் நாளைய தினம் முதலாவது பணயக் கைதி விடுவிக்கப்படுவார் என எதிர்பார்ப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே எட்டப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமைய நாளை முதல் போர் நிறுத்தம் அமுல்ப்படுத்தப்படும். மூன்று கட்டங்களாக அமுல்ப்படுத்தப்படவுள்ள இந்த போர் நிறுத்தத்தின் முதற்கட்டமாக பல பலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்ததன் பின்னர், 33 பணயக் கைதிகளை ஹமாஸ் தரப்பினர் விடுவிப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம், போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் காசாவில் இஸ்ரேலின் தாக்குதல் தொடர்வதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. குறித்த தாக்குதல்களில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 116 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தரப்பினரால் நடத்தப்படும் சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. https://www.hirunews.lk/tamil/393989/போர்-நிறுத்த-ஒப்பந்தம்-தொடர்பிலான-வாக்கெடுப்பு-முதலாவது-பணயக்-கைதி-நாளை-விடுவிக்கப்படும்-சாத்தியம்
  22. மன்னார் சம்பவத்தை ஏற்றுக் கொள்ள முடியாது ; பதில் பொலிஸ்மா அதிபர் அதிரடி மன்னார் நீதிமன்றத்தின் முன் வியாழக்கிழமை(16) இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழந்துள்ள சம்பவத்தை வழி நடத்தியவர் வெளிநாட்டில் இருப்பதாகவும், அவருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கையை பெற்றுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீர சூரிய நேற்று தெரிவித்துள்ளார். மன்னார் நீதிமன்றத்தின் முன்னால் வியாழக்கிழமை(16) இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் போது இருவர் உயிரிழந்துள்ளனர். மாட்டு வண்டி சவாரியை அடிப்படையாக கொண்டு முரண்பாடு காணப்பட்டது. முதல் சம்பவத்தில் 2022ஆம் ஆண்டு இருவர் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து ஒருவர் வாகனத்தினால் மோதப்பட்டு கொலை செய்யப்பட்டார். 2023 ஆம் ஆண்டு இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தனர். இறுதியாக வியாழக்கிழமை(16) மன்னார் நீதிமன்றத்திற்கு முன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர். இவர்கள் இருவரும் முதலாவதாக இடம் பெற்ற இருவரின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களாவர். எவ்வாறாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. சம்பவம் தொடர்பில் துரித விசாரணைகளை முன்னெடுத்துள்ளோம். குறித்த சம்பவத்தை வழி நடத்தியவர் வெளிநாட்டில் இருக்கின்றார். அவருக்கு எதிராக நாம் சிவப்பு எச்சரிக்கையை பெற்றுள்ளோம் என தெரிவித்தார். இதேவேளை மன்னார் நீதிமன்றத்தின் முன்னால் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்க நான்கு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். R https://www.tamilmirror.lk/வன்னி/மன்னார்-சம்பவத்தை-ஏற்றுக்-கொள்ள-முடியாது-பதில்-பொலிஸ்மா-அதிபர்-அதிரடி/72-350496
  23. ’சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு தேவை’ ஈழத்தமிழர்களின் அரசியல் உரித்துகளை நிலைநாட்ட சமஷ்டி முறையிலான அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வே காலத்தின் தேவையானது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன் ஐரோப்பிய ஒன்றியத்தினரிடம் வலியுறுத்தியுள்ளர். ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல் கண்காணிப்புக் குழுவின் தலைமை கண்காணிப்பாளர் நாச்சோ சான்செஸ் அமோர், ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் கார்மன் மொறேனோ உள்ளிட்ட குழுவினருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று கொழும்பில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். (a) https://www.tamilmirror.lk/செய்திகள்/சமஷ்டி-முறையிலான-அதிகாரப்-பகிர்வு-தேவை/175-350492
  24. இந்தியத் தூதுவர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் Freelancer / 2025 ஜனவரி 18 , மு.ப. 03:48 - 0 இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா நேற்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தார். யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள அவர் நேற்று மாலை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனைச் சந்தித்துக் கலந்துரையாடினார். பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது வடக்கு சமாசத்திற்கு உட்பட்ட தொழிலாளர்களுக்கு வலைகள் வழங்கும் வைபவத்திலும் கலந்துகொண்டார். இன்று காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் கலாசார மண்டபத்தில் இடம்பெறும் நிகழ்வொன்றில் அவர் கலந்துகொள்வார். இதேநேரம் இன்று மதியம் தெல்லிப்பழையில் நடைபெறும் தேசிய பொங்கல் விழாவிலும் அவர் பங்கேற்றுவிட்டு கொழும்பு திரும்புவார். (a) https://www.tamilmirror.lk/செய்திகள்/இந்தியத்-தூதுவர்-யாழ்ப்பாணத்துக்கு-விஜயம்/175-350491
  25. ரயிலில் சுற்றுலாப் பயணிகளுக்கு மசாஜ் ; ரயில் திணைக்களம் விசாரணை! வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ரயிலில் மசாஜ் செய்வது போன்று காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானதை அடுத்து ரயில் திணைக்களம் விசாரணையை ஆரம்பித்துள்ளது. இது தொடர்பில் ரயில் திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவிக்கையில், இந்த ரயில் சுற்றுலாவுக்காக தனியார் நிறுவனம் ஒன்றினாால் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்களை கட்டணம் செலுத்தி வாடகைக்கு எடுக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு மசாஜ் சேவை வழங்குவது குறித்து திணைக்களத்திற்கு அறிவிக்கப்படவில்லை. வழக்கமாக சேவையில் ஈடுப்படும் பயணிகள் ரயிலில் இந்த சம்பவம் நடைபெறவில்லை. விசாரணை நடந்து வருகிறது, மேலும் சுற்றுலாப் பொலிஸாரையும் ஈடுபடுத்தியுள்ளோம். ஏதேனும் இழப்பு ஏற்பட்டால் பொறுப்பானவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். https://newuthayan.com/article/ரயிலில்_சுற்றுலாப்_பயணிகளுக்கு_மசாஜ்_;_ரயில்_திணைக்களம்_விசாரணை!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.