Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. ரோஹிங்கியாக்களை மியன்மாருக்கு திருப்பி அனுப்பினால், அது நாட்டின் நற்பெயருக்கு ‘களங்கம்’ January 6, 2025 10:37 am முல்லைத்தீவு கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது, போரினால் பாதிக்கப்பட்ட மீனவர்களால் மீட்கப்பட்டு அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் தற்போது முல்லைத்தீவு விமானப்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியா அகதிகள் குழுவை மீண்டும் மியன்மாருக்கு நாடு கடத்த வேண்டாம் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். விமானப்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியா அகதிகளை மீண்டும் மியன்மாருக்கு நாடு கடத்த அரசாங்கம் எடுத்த தீர்மானம் தமக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். போர் அச்சத்தால் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடிக்கொண்டிருக்கும் இந்த 103 ஆதரவற்ற மக்களில் நாற்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகளும் காணப்படுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. பாதுகாப்பான நாட்டில் அரசியல் தஞ்சம் பெறுவதே அவர்களின் நம்பிக்கையாகும். அவர்களை மியன்மாருக்கே திருப்பி அனுப்புவதே அரசின் திட்டம் என பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். ரோஹிங்கியாக்களின் பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியல் அந்நாட்டு அரசாங்கத்திடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இது மியன்மாரில் வசிக்கும் அவர்களது உறவினர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விடயமாகுமென நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். “இது இந்த மக்களின் உயிருக்கு மாத்திரமல்ல, மியன்மாரில் வாழும் அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்பது எங்கள் உறுதியான நம்பிக்கை.” மேலும், அவர்களை மியன்மாருக்கு அனுப்புவது, குறிப்பிட்ட நாட்டில் ஆபத்தில் இருக்கும் மக்களை விருப்பமின்றி திருப்பி அனுப்புவதைத் தடுக்கும் (Non-Refoulement) சர்வதேச சட்டக் கோட்பாட்டை மீறும் செயலாகும் என எதிர்க்கட்சி உறுப்பினர் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார். தற்போதைய ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் நாட்டிற்குள் பிரவேசித்த முதலாவது அகதிகள் குழுவை வலிந்து வெளியேற்றுவது ‘யமனின் வாய்க்கு’ அனுப்புவது போன்றது என சுட்டிக்காட்டியுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர், உலக நாடுகளுக்கு முன்பாக நாட்டின் நற்பெயருக்கு ஏற்படக்கூடிய கதி குறித்தும் எச்சரித்துள்ளார். “உங்கள் ஆட்சியின் போது, நாட்டிற்குள் நுழைந்த முதல் அகதிகள் குழுவை, அவர்கள் வந்த நாட்டின் யமனின் வாய்க்கு அனுப்புவது உலக நாடுகளுக்கு முன் நாட்டிற்கு ஒரு கறையாக மாறும்.” இனக்கலவரங்களால் பாய்ந்த இரத்தத்தில் நனைந்த மண்ணின் மக்கள் அந்த விதியிலிருந்து மீட்கப்படவில்லை என்பது தெரிந்தே, இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட இந்த மண்ணைக் குணப்படுத்துவேன் என தனது கன்னி உரையில் உறுதியளித்து, அரச அடக்குமுறையின் கசப்பான அனுபவங்களைக்க கொண்ட அரச தலைவரான ஜனாதிபதிக்கு இது பொருத்தமான நடவடிக்கையல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். “பல தசாப்தங்களாக பாதாள அரசியலில் ஒளிந்து கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட ஒரு கட்சியின் தலைவரான நீங்கள், அரச அடக்குமுறையின் அளவை கசப்பான அனுபவத்திலிருந்து அறிவீர்கள். ” எனவே, இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியாக்களை பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய வேறு நாட்டிற்கு அனுப்பப்படும் வரையில் அவர்களை மியன்மாருக்கு அனுப்பாமல், அவர்களின் நலனையும், மனித உரிமைகளையும் பாதுகாத்து ஆதரவற்றவர்களுக்கு அடைக்கலம் வழங்கும் இலங்கையின் விருந்தோம்பலின் அதிசயத்தை உலகிற்கு எடுத்துக்காட்டுவதற்கான வாய்ப்பாக இதனைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதியிடம் கோரியுள்ளார். அந்த நல்ல செயலுக்கு ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட அமைப்புக்கள் மாத்திரமன்றி எதிர்க்கட்சிகளின் ஆதரவும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவுக்கு கிடைக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தனது கடிதத்தில் நம்பிக்கை வெளியிட்டுள்ளார் https://oruvan.com/sending-rohingyas-back-to-myanmar-would-be-a-smear-on-the-countrys-reputationty/
  2. பல உயர்மட்ட வழக்கு விசாரணைகளில் தாமதம், சட்டமா அதிபர் ஜனாதிபதி சந்திப்பு January 6, 2025 11:00 am இலங்கையின் ஜனாதிபதியாக அனுர குமார திஸநாயக்க தெரிவாகி 100 நாட்களுக்கு மேலாகும் நிலையில் பல முக்கியமான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டிய கட்டாயம் இலங்கை அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் ஏற்பட்டுள்ளது. ’கொள்ளையர்களை விரைவாக பிடிக்க வேண்டும்’ என்ற அழுத்தம் ஜனாதிபதியின் மீது அதிகரித்து வருவதாகவும், தாமதங்களுக்கு அதிகாரிகளை குறை கூறும் போக்கை காணக்கூடியதாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறான பின்னணியில் குற்றவியல் வழக்குகளில் முழுமையாக விசாரணைகளை நிறைவு செய்யாமல், பொலிசாரால் விசாரணையில் சில பகுதிகளின் அறிக்கைகளை மாத்திரம் அனுப்பப்படும் போது, அப்படியான வழக்குகள் அல்லது குற்றச்சாட்டுக்களை மீண்டும் விசாரிக்கப்போவதில்லை என சட்ட மா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளது. உயர்மட்டத்தில் எழும் குற்றசாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளின் போது, போதிய அரச சட்டத்தரணிகள் இல்லாத காரணத்தால் தாங்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை அடுத்து, சட்ட மா அதிபர் திணைக்களம் அப்படியான வழக்குகளின் விசாரணையை முன்னெடுப்பதில்லை என்ற தீர்மானத்திற்கு வந்துள்ளது. அதிலும் முக்கியமாக தீவிரமான பல வழக்குகளில் பொலிஸ் விசாரணைகள் முழுமையாக நிறைவடையாத காரணங்களினால், தம்மால் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து நீதிமன்றத்தில் வழக்குகளை முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை என அந்த திணைக்களம் தெரிவிக்கின்றது. இது தொடர்பாக நாட்டின் சட்ட மா அதிபர் பரிந்த ரணசிங்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்திக்கவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. ஊழலுக்கு எதிரான சர்வதேச தினத்தையொட்டி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, நீதிமன்றங்களில் வழக்குகளை பதிவு செய்வதில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் தாமதங்கள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். “ஆவணக் கோப்புக்களை சட்ட மா அதிபர் திணைக்களம் ஏழு ஆண்டுகள் வரையில் பூட்டி வைத்திருக்கும் சாத்தியங்கள் காணப்படுகின்றன. சில வழக்குகளில் அவை பதிவு செய்யப்பட்ட நாளுக்கு பின்னர் ‘தூசு தட்டாமல்’ அப்படியே வைத்திருந்து காலம்கடந்து நீர்த்துப்போகச் செய்யப்படுகின்றன”, என ஜனாதிபதி அப்போது சுட்டிக்காட்டியிருந்தார். https://oruvan.com/பல-உயர்மட்ட-வழக்கு-விசார/
  3. நுண்நிதிக் கடன் வலையில் சிக்கி 200 பெண்கள் மரணம்! adminJanuary 6, 2025 இலங்கையில் கடந்த சில வருடங்களில் நுண்நிதிக் கடன் வலையில் சிக்கிய சுமார் 200 பெண்கள் தங்களது உயிர்களை மாய்த்துக் கொண்டுள்ளதாகத் தேசிய மகளிர் ஒன்றியத்தின் தலைவி ஹாஷினி சில்வா தெரிவித்துள்ளார். இந்நாட்டில் 28 இலட்சம் பேர் நுண்நிதிக் கடன் பெறுகின்றனர், அதில் 24 இலட்சம் பேர் பெண்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இலங்கையிலுள்ள நுண் நிதி நிறுவனங்கள் 38 தொடக்கம் 40 சதவீதம் வரை அதிக வட்டிக்கு கடன் வசதிகளை வழங்குவதாகவும், கடனை செலுத்த முடியாத சில பெண்களும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் சில பிரதிநிதிகளினால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாவதாகவும் ஹாஷினி சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலைமையினால் குடும்பங்களுக்கிடையில் முரண்பாடுகள் வளர்ந்து பிள்ளைகள் ஆதரவற்றவர்களாக மாறியுள்ளதாகவும், சில பெண்கள் வேலை செய்ய வீட்டையும் நாட்டையும் விட்டு வெளியேறத் தூண்டப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், சிறு நிதி கடன் பிரச்சினையால் கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் கடுமையான பொருளாதார அழுத்தத்தில் உள்ளனர். அவர்களில் பலர் வருமானம் ஈட்டும் வாய்ப்புகள் இல்லாமல், பதிவு செய்யப்பட்ட வங்கிகளில் கடன் பெற முடியாமல் நுண்கடன் நிறுவனங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிறுவனங்கள் வாரத்திற்கு 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை அதிக வட்டி வீதங்களுடன் வசூலிக்கின்றன, இதனால் பெண்கள் கடனில் தள்ளப்படுகிறார்கள். நுண்கடன் நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலத்தை அரசாங்கம் கொண்டு வந்துள்ள போதிலும், அது இன்னும் சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார் https://globaltamilnews.net/2025/209977/
  4. அரச அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டும் January 6, 2025 11:11 am யாழ். தென்மராட்சியில் சட்ட விரோதமான முறையில் சுண்ணக்கல் அகழப்படுவதாக கூறப்படும் இடங்களை அமைச்சர் சந்திரசேகர் நேற்று (05) பார்வையிட்டார். தென்மராட்சிப் பிரதேசத்தின் சரசாலை வடக்கு மற்றும் மந்துவில் பகுதிகளில் சுண்ணக்கல் அகழப்பட்டுவரும் இடங்களுக்கு நேரில் சென்று ஆராய்ந்தார். அமைச்சருடன் பாராளுமன்ற உறுப்பினர் கணநாதன் இளங்குமரன் மற்றும் அதிகாரிகள் சிலரும் உடன் சென்றிருந்தனர். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கடற்தொழில் அமைச்சர் கருத்து தெரிவிக்கும் போது, யாழில் இடம்பெறும் சுண்ணக்கல் அகழ்வு நடவடிக்கைகளுக்கும் , அதனால் ஏற்படும் விளைவுகளுக்கும் அரச அதிகாரிகளே பொறுப்பு கூற வேண்டும். இது தொடர்பிலான விசாரணைகள் விரைந்து முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார். இதன் போது அமைச்சர் தெரிவித்த கருத்துக்கள் காணொளியில்👇🏿 https://tamil.adaderana.lk/news.php?nid=198347
  5. 2015 முதல் வழங்கப்பட்ட காணிகள் தொடர்பில் விசாரணை January 6, 2025 09:49 am 2015ஆம் ஆண்டு முதல் பல்வேறு தேவைகளுக்காக வழங்கப்பட்ட காணி தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார். விசாரணையின் பின்னர் தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். “எல்ஆர்சி மூலம் தொழிற்சாலைகள் மற்றும் விவசாயத்திற்காக நிலங்கள் விடுவிக்கப்படுகின்றன. ஆனால் சமீப காலமாக பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகள் மற்றும் ஒதுக்கப்பட்ட காணிகள் தொடர்பில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. கடந்த 2015ஆம் ஆண்டு முதல் காணி சீர்திருத்த ஆணைக்குழுவால் யாருக்கு காணி வழங்கப்பட்டுள்ளது? என்ன திட்டங்களுக்கு? எந்த அடிப்படையில்? என்பது தொடர்பில் விசாரணை முடியும் வரை LRC மூலம் காணி வழங்கப்படுவது நிறுத்தப்படும். கூடிய விரைவில் இந்த விசாரணையை நடத்தி இந்த காணிகள் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது, இதில் ஊழல் நடந்துள்ளதா? என்பதைக் கண்டுபிடிப்போம் என்று நம்புகிறோம்" என்றார். https://tamil.adaderana.lk/news.php?nid=198340
  6. தமிழ் மக்கள் சுயாட்சியுடன் வாழக்கூடிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும்! January 5, 2025 10:19 pm வடக்கு - கிழக்கு இணைந்த ஒரு மாநிலமாக தமிழ் மக்கள் சுயாட்சியுடன் வாழக்கூடிய அரசியலமைப்பை புதிய அரசாங்கம் உருவாக்க வேண்டும். அத்துடன் மகாணசபை தேர்தலை விரைவாக நடத்தி அதற்கான அதிகாரங்களை முழுமையாக வழங்க வேண்டும் எனவும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியா, கோவில்குளம் பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் இன்று காலை முதல் மாலை வரை இடம்பெற்றது. இதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். நடந்து முடிந்த தேர்தல் தொடர்பாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் இரண்டு தடவை இணைய வழி ஊடாக பேசியுள்ளோம். இன்றைய கூட்டத்தில் வரவிருக்கும் உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் பேசினோம். அத்துடன் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியை கிராம மட்டங்களில் பலப்படுத்தல் தொடர்பாகவும் பல்வேறுபட்ட ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன. முக்கியமாக எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியாக தற்போது அங்கம் வகிக்கும் 5 கட்சிகளும் போட்டியிடும். அத்துடன் எம்முடன் இணைந்து பயணிக்கக் கூடிய ஏனைய தமிழ் தேசியக் கட்சிகளுடனும் பேசி அவர்களும் இணங்கும் பட்சத்தில் இணைந்து போட்டியிடவுள்ளோம். வடக்கு - கிழக்கு மாகாணங்களில் தமிழ் தேசியப் பரப்பில் அங்கம் வகிக்கின்ற தமிழ் கட்சிகளுடன் இது தொடர்பில் பேசுவதாகவும் தீர்மானங்களை எடுத்துள்ளோம். அத்துடன் எதிர்வரும் பெப்ரவரி முதலாவது வாரத்தில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் மாநாட்டை வவுனியாவில் நடத்த தீர்மானித்துள்ளோம். அதற்கு முன்னதாக மாவட்ட நிறைவேற்றுக் குழுக்கள் கூடி என்ன விடயங்கள் பேசப்பட வேண்டும் எனவும் தீர்மானிப்பார்கள். அதற்கான நடவடிக்கைகள் உடனடியாகவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. புதிய ஒரு அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்த வேண்டி தேவையும் பொறுப்பும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணிக்கு இருக்கிறது. தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் என்பது சரியான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும என்பதில் நாம் ஆணித்தரமான கருத்துக்களை கொண்டிருக்கின்றோம். மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டிருக்கக் கூடிய புதிய அரசாங்கம் வந்திருக்கிறது. புதிய அரசாங்கம் ஒரு மாற்றத்தை உருவாக்கப் போவதாக சொல்லியிருக்கிறார்கள். நிர்வாகத்தில் மாற்றம். அரசியலில் மாற்றம். ஊழல் இல்லாத நிர்வாகத்தை ஏற்படுத்துவது. என பல விடயங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் தமிழ் மக்களது தேசிய இனப்பிரச்சனையை தீர்க்கக் கூடிய மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பது எம் மக்களது கருத்தாக இருக்கிறது. அந்த அடிப்படையில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் தொவு செய்யப்பட்டிருந்தாலும் கூட ஒரு மாற்றம் ஏற்படும் என்பதற்காக தான் அந்த வாக்குகளும் அளிக்கப்பட்டதாக நாங்கள் கருதுகிறோம். ஆகவே, தமிழ் மக்கள் மத்தியில் 75 வருடமாக தேசிய இனப்பிரச்சனை புரையோடிப் போயுள்ள பிரச்சனையாக இருக்கிறது. அது தீர்க்கப்பட வேண்டும் என்ற ஒரு நிலைப்பாடு புதிய அரசாங்கத்திடம் இருக்கிறதா என்ற கேள்வியும் எம்மிடம் இருக்கிறது. கடந்த 7 வருடங்களாக மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படவில்லை. மாகாணசபை தேர்தல் என்பது இந்த வருட இறுதியில் நடத்தப்படும் என கூறுகிறார்கள். தாமதமாக நடநத்த வேண்டும் என்ற தேவை இருக்கா. அல்லது அதற்கு முன்பு நடத்தலாமா போன்ற கருத்துக்கள் எம் மத்தியில் பேசப்பட்டது. உள்ளூராட்சி தேர்தல் நடந்து முடிந்து ஓரிரு மாதங்களில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என நாம் நம்புகின்றோம் மாகாணசபைக்கு உரித்தான 1988 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசியல் சாசனத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அனைதது அதிகாரங்களும் மாகாணங்களுக்கு வழங்கப்பட வேண்டும. இந்த அரசாங்கம் மிக விரைவாக அந்த நடவடிக்கைகளை எடுத்தால் மாத்திரம் தான் தமிழ் மக்கள் இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைக்கக் கூடிய ஒரு சூழல் ஏற்படும் எனவும் நாம் கருதுகின்றோம். ஆகவே, அரசாங்கம் வெறுமனே பேச்சில் மாத்திம் இருக்காமல் தமிழ் மக்களது அபிலாசைகளை பூர்த்தி செய்வதற்கு ஒரு புதிய அரசியல் சாசனம் கொண்டு வரப்பட வேண்டும். அது வெறுமனே சிங்கள மக்களது பிரச்சனையை தீர்ப்பதாக இல்லாது புரையோடிப் போயுள்ள தமிழ் மக்களது தேசிய இனப் பிரச்சனையை தீர்கக் கூடியதாக இருக்க வேண்டும். புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குவது தொடர்பாக அரசாங்கம் சரியான அறவிப்புக்களை வெளியிடுமாக இருந்தால் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியானது அனைத்து தமிழ் தேசியக் கட்சிகளுடன் இணைந்து தமிழ் மக்களது தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வாக வடக்கு - கிழக்கு இணைந்த ஒரு தமிழ் மாநிலத்தை உருவாக்கி முழுமையான சுயாட்சியை உருவாக்குவதற்கான கருத்துக்கள அல்லது அறிக்கைகளை எல்லோருடனும் இணைநது புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கும் குழுவிடம் கொடுப்போம். முதலாவது இந்த அரசாங்கம் குழுவை நியமிக்க வேண்டும். அதனை இரண்டு வருடத்திலா அல்லது மூன்று வருடத்திலா அல்லது உடனடியாக நியமிப்பார்களா என்பது எங்களுக்கு தெரியாது. புதிய அரசியல் சாசனம் உருவாக்கும் பட்சத்தில் பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. அத்துடன் மக்கள் மத்தியில் வாக்கெடுப்புக்கும் விடப்பட வேண்டும். அவ்வாறு விடப்பட்டால் தான் அது நிறைவு பெறும். மக்கள் மத்தியில் சென்று அதற்கான ஆதரவை திரட்ட வேண்டுமாக இருந்தால் இந்த அரசங்கம் விரைவாக புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும். அப்போது தான் சாத்தியமாகலாம். காலம் செல்ல ஆட்சியின் மீதும், ஆட்சி அதிகாரம் மீதும் பல்வேறு குறைபாடுகள் வரும். அதற்கு முன்பாக அரசியல் சாசனம் வர வேண்டும் என விருப்புகின்றோம். அதில் முக்கியமாக தமிழ் மக்களது தேசிய இனப் பிரச்சனைக்கு பாதிக்கப்பட்ட அந்த மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக தமிழ் மக்கள் இந்த மண்ணில் முழுமையான சுயாட்சியோடு வாழ்வதற்கு தேவையான விடயங்களை உள்ளடக்கிய ஒரு அரசியல் சாசனமாக இருக்க வேண்டும் என நாம் பேசியுள்ளோம். இது தொடர்பில் ஏனைய தமிழ் தேசிய கட்சிகளுடன் பேசுவதற்கு தீர்மானித்துள்ளோம் எனத் தெரிவித்தார். இதேவேளை, குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், கோ.கருணாகரம், எம்.கே.சிவாஜிலிங்கம், ந.சிறிகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் ப.வேந்தன், பவான் உட்பட முக்கிஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். https://tamil.adaderana.lk/news.php?nid=198332
  7. குற்றமும் தண்டனையும் sudumanal இந்நூல் எம். சுசீலா அவர்களால் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வாசிப்பின் ஓட்டத்தை இடையூறு செய்யாதபடி நகர்கிறது மொழிக் கையாள்கை. தமிழில் 1072 பக்கம் விரிந்துள்ள இந் நூலில் அவரது பெரும் உழைப்பு தெரிகிறது. “குற்றமும் தண்டனையும்” என்ற இந் நாவல் தஸ்தவெஸ்கி அவர்களால் எழுதப்பட்ட பெரும் நாவல். 1866 இல் ரஸ்ய மாதப் பத்திரிகை ஒன்றில் தொடர்ச்சியாக எழுதப்பட்ட இத் தொடர் பின்னர் நாவலாக தொகுக்கப்பட்டு உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. கதை சொல்லல் என்பதையும் தாண்டி தனிமனிதர்களின் மனவமைப்பு, மனச்சாட்சி, ஒழுங்கு, அறம், அன்பு என்பவற்றை தாங்கி நிற்கும் அக வாழ்வின் மீதான விசாரணைகளையும் சட்டம், நீதி, அதிகாரம் என்ற கட்டமைப்பு மனித வாழ்வோடு பொருதுதல் குறித்தான விசாரணைகளையும் தாங்கிய நாவல் இது. மனித உளவியலின் இடுக்குகளை ஆராயும் வலு கொண்டதால் இந் நாவல் 150 வருடங்களுக்கும் மேலாக உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறது. காலத்தையும் இடத்தையும் தாண்டி ஒவ்வொரு மனிதரோடும் பேசும் ஆற்றலின் அதன் இரகசியம் இங்குதானுள்ளது. “எதையாவது எப்போதும் நான் கற்றுக்கொள்ளக்கூடிய ஒரே உளவியலாளர் தஸ்தவேஸ்கிதான்” என நீட்ஷே எழுதினார். இந்த நாவலின் நாயகன் ரஸ்கொல்னிகோவ் (றோடியன்) கிராமப்புறத்தில் ஓர் ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து சென் பீற்றர்ஸ்பேர்க் என்ற பெரு நகரத்துக்கு பல்கலைக்கழகப் படிப்பை மேற்கொள்ள வரும் 24 வயது இளைஞன். எதையும் ஆழமாக சிந்திக்கும் ஆற்றல் கொண்ட அவனின் விளிம்புநிலை வாழ்நிலை, பொந்து போன்ற அறை, அதற்குள்ளான தனிமை, தனது படிப்புச் செலவுக்காக ஏழ்மை தின்ற தாயில் தங்கியிருக்க வேண்டிய நிலை, ஆளுமையானவளாகவும் அதேநேரம் அதி அன்பைச் செலுத்துபவளுமான தங்கை, தனது படிப்புக்காக தாயினதும் தங்கையினதும் அர்ப்பணிப்பும் உழைப்பும், அது அவர்களின் வாழ்நிலையை மோசமாக பாதிக்கிற நிலைமை என பல சிக்கல்களினுள் அல்லாடி, அவன் தனது படிப்பை இடைநிறுத்திவிடுகிறான். இந்த சமூகத்தை பேன் போல பிடித்து இரத்தத்தையும் உழைப்பையும் உறிஞ்சும் மனிதர்கள், அவர்களின் மீதான அறச் சீற்றம், அந்த மனிதர்களுக்கு எதிர்நிலையில் அவனை நிறுத்தியிருக்கும் அறம்சார் சிந்தனைகள் கருத்துகள் என அவன் ஒரு வாழ்நிலைக்குள் தள்ளப்பட்டுவிடுகிறான். தன்னிடமிருந்த சிறு பொருட்களை பணத்தேவைக்காக அடகு வைக்கிறான். தனது தந்தையின் நினைவாக வைத்திருந்த மணிக்கூட்டையும்தான். அதை அறாவிலைக்கு அடகாகப் பெற்று இந்த சமூகத்தின் பேன் போல வாழும் கிழவி அல்யோனா இவானோவ்னா. அவள் தனியாக வாழ்பவள். அவளை அவன் கொன்றுவிடுகிறான். அந்த வேளையில் எதிர்பாராமல் அங்கு வந்த கிழவியின் சகோதரியையும் தாமதிக்காமலே கொன்றுவிடுகிறான். இந்தக் கொலையை தடயங்கள் இல்லாமல் புத்திசாலித்தனமாக அவன் செய்தாலும், அச் சம்பவத்தின் தொடர்ச்சி குட்டிப் பிசாசாய் அவனது மூளைக்குள் புகுந்து வாழத் தொடங்கிவிடுகிறது. மற்றவர் துன்பப்படும்போது தன்னிடமுள்ள கொஞ்சப் பணத்தைக்கூட தானமாய் வழங்கிவிட்டு பட்டினி கிடக்கும் அறம் கொண்ட ஒரு மனிதனை, எதையுமே ஆழ்ந்து சிந்திக்கும் பழக்கமுள்ள ஒருவனை அந்தப் பிசாசு ஆட்டிப்படைக்கத் தொடங்கிவிடுகிறது. Thanks for image: deutschland.de இது ஒரு கொலை பற்றிய சாகசக் கதையல்ல. ஒரு மனிதரை இந்த குற்றச் செயலுக்குத் தள்ளுகிற நிலைமைகள் பற்றியதாக எடுத்துக் கொண்டாலும், அதுகூட நிறைவான விளக்கமல்ல. அவன் இந்தப் பேனை அழித்தது அப்படியொன்றும் குற்றமல்ல. அவள் அழிக்கப்பட வேண்டியவள் என்ற மனவோட்டம் அமைதியாகப் பாய்ந்துகொண்டும் இருந்தது. ஒருவகையில் அவளை அழித்தது சமூகத்துக்கு தான் நல்லது செய்ததாக எண்ண வைக்கிறது. தான் குற்றம் செய்தவனாக தன்னை எண்ணவில்லை. இந்தக் காரண காரியம் அவனை குழப்பமற்ற மனநிலையில் வைத்திருந்தது என்றுமில்லை. இந்த நாவலை ஓர் அணுச் சிமிளுக்குள் அடைத்தால், “குற்றம் என்பது என்ன” என்ற கேள்வியை மையமாகக் கொண்ட வெடிகுண்டு உருவாகும். குற்றம் என்பது என்ன?. தவறு செய்யத் தூண்டுபவர் செய்வது குற்றமல்ல. தூண்டப்படுபவர் செய்வது குற்றமாகிறது. பெரும் சுரண்டல் முறையில் பணக்காரராகுபவர் செய்வது குற்றம் இல்லை. ஆனால் சுரண்டப்படுபவர் செய்யும் சிறு களவு குற்றம் என்றாகிறது. காலனி பிடித்து பெருங்களவாடியவர், போர்கள் செய்து வகைதொகையின்றி கொன்றொழிப்பவர் செய்வது குற்றம் இல்லை, தண்டனை இல்லை. சாமான்யர் செய்யும் சிறு தவறு குற்றம் என்றாகிறது, தண்டனை கிடைக்கிறது. இந்த சட்டம் நீதி என்பது யாருக்கானது. அது வரைவுசெய்யும் குற்றம் என்பதன் பொருள் என்ன. தாம் வரையறுத்து அதிகாரம் செலுத்தும் சட்டதிட்டங்களுக்கு எதிராக மட்டுமல்ல, தான் கொண்ட கோட்பாடுகளுக்காக, தாம் சரியென நம்பும் கருத்துகளுக்காக மக்கள் பெயரில் செய்யப்பட்ட கொலைகளெல்லாம் குற்றமற்றதாகுமா. எந்தத் தரப்பின் நலனில் நின்று இந்த குற்றம் என்பது வரையறுக்கப்படுகிறது. ஆக அதிகாரம் என்பது குற்றம் எது என தீர்மானிக்கிறது. அதிகாரத்திற்கு அடங்கிப் போகிற, அதை சிரமேல் ஏற்றுக் கொள்கிற, அதை மீறுவதை குற்றமாக உணருகிற அல்லது அச்சம் கொள்கிற மனிதர்கள்தான் உலகத்தின் பெருந்தொகையினர். இதற்கு எதிராக சிந்திப்பவர்கள் இந்த எல்லையை கடக்க பெரும் விலையைக் கொடுக்க நேர்கிறது. அவர்கள் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்படுகிறார்கள். பொதுமனித உளவியலை தாண்டுவதற்கான செயல் என்பது அசாதாரண மீறலாகிறபோது அவர்களின் நடவடிக்கைகளும்கூட திடீர் முடிவுகளாலோ குழப்பங்களாலோ வடிவமைக்கப்படும் சாத்தியமும் தோன்றுகிறது. அது தொடர் விளைவுகளை ஏற்படுத்தி அவற்றுடன் தொடர் போராட்டத்தை செய்ய வைக்கிறது. அந்த விளைவுகள் நன்மையாவோ தீமையாகவோ அமையலாம். இந்த நாவலை புரிந்துகொள்ள இந்த அறிதல் அவசியம் என எனக்குப் படுகிறது. ஆனால் அதற்கு வெளியிலான அணுகுமுறைகளும் வாசிப்புகளும் இருக்கவே செய்யும். இங்கு ரஸ்கொல்னிகோவ் (றோடியன்) ஒரு புரட்சியாளன் என்றெல்லாம் அட்டவணைப்படுத்தக் கூடாது. புதிய வடிவில் அதிகாரத்தை தோற்றுவிக்கும் புரட்சியும்கூட அவனது கேள்விகளுக்கு விடையளிக்கும் ஆற்றல் அற்றவை என்பதை நாவலை ஆழ்ந்து வாசிக்கிறபோது உணர முடியும். குற்றம் குறித்த அவனது கேள்விகள் உட்பட, அவனது பகுத்தறிவு சிந்தனைகள் அவனை ஆட்கொள்வதால் அவன் தான் குற்றம் செய்தவனாக உணரத் தயாரில்லாமல் வாழ்கிறான். இந் நாவல் எம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளில் அல்லது அந் நிகழ்வுகளை இயல்பானதாக ஏற்று சமாதானமடையும் மனநிலையில், அல்லது இயலாமையில் அமைதியடையும் மனப் போக்கினை தொந்தரவு செய்கிறது. இதை விளங்கிக் கொள்ள எந்தக் கோட்பாடோ கோதாரியோ தேவையில்லை. எமது வாழ்வனுபவம் போதுமானது. அதனால்தான் இந் நாவலின் உயிர்வாழ்தல் நூற்றாண்டு கடந்தும் நிலைக்கிறது. இதன் வாசக அனுபவம் என்பது மேல்தளத்திலிருந்து அதன் அடியாழம் வரை பல விதமான அடுக்குகளிலும் பலவிதமான வாசக அனுபவத்தைத் தரக் கூடியது. வெவ்வேறு கோணங்களில் சிந்திக்கத் வைக்கிறது. அதுவே திரும்பத் திரும்ப வாசிக்கத் தூண்டும் உள் இரகசியமாகவும் இருக்கிறது. இந்த நாவலில் வரும் மர்மலாதோவ் இன் குடும்பம், அதன் ஒரு அங்கத்தினரான சோனியா என்பவர்கள் விளிம்புநிலை மாந்தர்கள். அதனால் அவனது உறவு அவர்களுடன் தொடங்குகிற விதமும், தொடர்கிற விதமும் அந்தவகை மாந்தர்களுக்கிடையிலான ஆத்மார்த்தங்களை தொட்டுரசியபடி இருக்கிறது. அதை நாவல் முழுவதும் தரிசித்துக் கொண்டே இருக்க நேர்கிறது. அவனது தங்கையும் சோனியாவும் விளிம்புநிலை வாழ்வு புடம்போட்டெடுத்த இரு பெரும் பெண் ஆளுமைகளாக துலங்குகின்றனர். மர்மலாதேவ் குடும்பத்தின் வறுமைநிலை சோனியாவை பாலியல் தொழிலாளியாக நிர்ப்பந்தித்துவிடுகிறது. அவள் மிக மத நம்பிக்கை கொண்டவள். அதனடிப்படையிலான அறத்தைக் கொண்டிருப்பவள். இருந்தாலும், அவள் கதை நாயகனை (ரஸ்கொல்னிகோவ்), அவனது நிலைமையை நன்றாக புரிந்து கொள்கிறாள். அவளது அறம் அவனை ஒதுக்கித் தள்ளவில்லை. மாறாக அவனோடு இறுக்கமாக பிணைத்துவிடுகிறது. தனது கொலை குறித்த இரகசியத்தை றோடியான் இவளோடு மட்டுமே பகிர்ந்து கொள்கிறான். தான் செய்தது குற்றம் இல்லை என்றே அவன் தொடர்ந்தும் நினைக்கிறான். ஆனால் அவனுக்கு இந்தக் கொலையின் தொடர் விளைவுகளானது மனவெளியுள் அகத் தண்டனைகளாக தொடர்கின்றன. அவனது தூக்கத்தைக் கெடுக்கிறது. தனிமையை நேசித்து சுருண்டு படுத்துக் கிடக்கிறான். சில சந்தர்ப்பங்களில் சனக்கூட்டம் மோதுகிற வீதிகளில் இலக்கற்று நடந்தும் திரிகிறான். குற்றம் என்பதை அவன் உணராவிட்டாலும் அல்லது மறுத்தாலும் அவனுக்குள் இயங்கும் ஏதோவொன்று அவனது உளத்தை காயப்படுத்தியிருக்க வேண்டும். அது தாயுடனும் நண்பன் ரஸ்மிகின் உடனும் இயல்பாகப் பேச முடியாத நிலையை பல சந்தர்ப்பங்களில் தோற்றுவிக்கிறது. பிறகு தான் அப்படி நடந்துகொள்ள நேர்வது குறித்து கவலைப்படவும் செய்கிறான். ஏதோ புதிர்களை அமுக்கிவைத்திருப்பது போன்று துலங்க மறுக்கும் தனது மகனின் முகத்தை நினைத்து தாய் வேதனையோடு இருக்கிறாள். தான் அவனை சந்திக்க நினைக்கும் போதெல்லாம் அவன் அதை இடையூறாக எண்ணிவிடுவானோ என அச்சப்படுமளவுக்கு அவள் இருந்தாள். அன்பு குழைந்த சில வார்த்தைகளையாவது அவன் என்னுடன் பேச மாட்டானா என அந்தத் தாய் ஏங்கினாள். அவர்கள் எவருக்குமே அவன் தனது கொலை இரகசியத்தை சொன்னானில்லை. சோனியாவுக்கு மட்டுமே சொல்கிறான். தான் செய்தது குற்றம் இல்லை என சோனியாவிடம் வாதாடுகிறான். சோனியா அதை ஏற்கவில்லை. காவல்துறையிடம் சரணடையக் கோருகிறாள். அவளைப் பொறுத்தவரை, றோடியன் செய்தது சட்டப்படி மட்டும் குற்றமில்லை; அவளது மத நம்பிக்கையின் படியும் குற்றம்தான். சோனியாவின் வேண்டுகோள்படி… காவல்துறையிடம் சரணடையப் போகும் வழியில் தேவாலயத்தின் முன்னாலுள்ள நாற்சந்தியில் அவன் தரையை முத்தமிட்டு வணங்கி “நான் ஒரு கொலைகாரன்” என கதறி அழ வேண்டும். அவன் அந்த நாற்சந்திக்குப் போனான். பூமியை முத்தமிட்டான். ஆனால் “நான் ஒரு கொலைகாரன்” என அவன் கதறவில்லை. தான் குற்றமற்றவன் என்ற சிந்தனையிலிருந்து விடுபட மறுத்தான். குழப்பமான மனநிலையும் சோனியாவின் வேண்டுகோளும் அவனை வழிநடத்த, அவன் காவல்துறையிடம் சரணடையப் போய்க்கொண்டிருக்கிறான். தான் செய்தது குற்றம் என்பதை ஏற்க மறுக்கும் அவன் “ஏன் நான் சரணடைய வேண்டும்” என்ற கேள்விக்கு விடையின்றி காவல்துறைக் கட்டடத்தின் மாடிப் படியில் தயக்கத்துடன் ஏறி போகிறான். திரும்பி சில படிகள் இறங்கி வருகிறான். திரும்ப ஏறுகிறான். பின் காவல்துறை அலுவலகத்துள் போய்விடுகிறான். அங்கு விசாரணை அதிகாரி போர்பிரி பெத்ரோவிச் நிற்கிறார். அவரிடம் தான் வேறு அலுவலாக வந்ததாக சொல்கிறான். தனக்குத் தெரிந்த காவல்துறை அதிகாரி சமெடோவ் இனை சந்திக்க வந்ததாகச் சொல்கிறான். அவர் அங்கு இல்லை என பதில் வரவும், கீழிறங்கி வருகிறான். பயத்தினால் அல்ல. இப்போதும் தான் செய்தது குற்றம் என அவன் ஏற்கத் தயாராக இல்லை. இந்த சட்டம் நீதி எதையுமே அவன் தனது புரிதலில் அல்லது கொள்கையில் ஏற்றுக் கொண்டவனல்ல. சோனியா இவனை நன்றாகப் புரிந்துகொண்டவள். கீழே அவள் காத்திருக்கிறாள். சிலவேளை இவன் திரும்பி வரலாம் என அவள் ஊகித்திருந்திருக்கலாம். றோடியனின் அலைவுறும் மனதுக்கு சோனியா மீண்டும் அதே வழியையே காட்டிவிடுகிறாள். அவன் போய் சரணடையப் போகிறானா? நானே அந்தக் கொலையாளி என அவன் சொல்லப் போகிறானா? என்பதை நீங்கள் நாவலில் வாசித்தறிய விட்டுவிடுகிறேன். * சோனியா தன்னால் அடையும் துன்பமான மனநிலை குறித்து அவன் கரிசனை கொள்கிறான். அவளுக்காக அவளது உணர்வுகள், விருப்பங்கள் இவற்றையெல்லாம் குறைந்தபட்சம் நான் மதிக்கவாவது வேண்டுமல்லவா என்ற உணர்வுநிலைக்குள் அவன் தள்ளப்படுகிறான். மனிதவாழ்வில் உணர்வுநிலை மிக இன்றியமையாதது. என்றபோதும் அது மனிதரை வழிநடத்துவதில்லை. மனிதர்கள் மிக சிக்கலான மனக்கட்டமைப்புக் கொண்டவர்கள். தர்க்கங்கள் நிரம்பிய சிந்தனை முறைமைக்குள் அகப்பட்டுச் சுழல்பவர்கள். அறிவுபூர்வமாகச் சிந்திப்பவர்கள். அதேநேரம் முட்டாள்தனமாகச் செயற்படவும் கூடியவர்கள். நம்பிக்கைகளை உருவாக்கி ஒழுகுபவர்கள். அதேநேரம் பகுத்தறிவோடும் செயற்படுபவர்கள். அறச் சீற்றம் கொள்பவர்கள் அதேநேரம் நிலவும் சூழ்நிலைக்கு சமரசம் செய்து ஓடிக்கொடுப்பவர்கள். இது மந்தைத்தனமாக சமூகத்தோடு சேர்ந்து ஓட மறுக்கும் ஒரு தனி மனிதஜீவிக்குள்ளும் நிகழும் போராட்டம் என்பதுதான் மிக முக்கியமானது. றோடியனின் அலைச்சலுக்கு ஓய்வுநிலை கிடைத்ததா? சோனியாவின் அன்பிற்கும் அரவணைப்புக்கும் ஆளாகி உணர்வுநிலைக்குள் அமைதியுற்றானா, இல்லையா? என்பதும் நீங்கள் வாசித்தறிய வேண்டியவை. இனி அவனது சிந்தனையை யதார்த்த வாழ்வு வழிநடத்தப் போகிறதா, அல்லது தொடர்ந்து பகுத்தறிவு வழிநடத்தப் போகிறதா அல்லது புதிய வாழ்க்கையை தொடங்குவானா என்பதெல்லாம் தெரியாது. அது என்ன யதார்த்தம், அது என்ன புதிய வாழ்க்கை என்பதையெல்லாம் ஒரு வாசகர் தனது சிந்தனையில் தெளிவாக்கவோ, சுபம் என்று கதையை முடிக்கவோ, நிம்மதியுறவோ நாவல் முழுவதும் விரவியிருக்கும் அலைக்கழிப்பு இலகுவாக விட்டு வைக்காது. அவை இந் நாவலின் தொடராக எழுதப்பட வேண்டிய றோடியன் இன் இன்னொரு கதையாகக்கூட ஆகலாம் என்ற நிலையில் எம்மை விட்டுச் செல்கிறார், தஸ்தவெஸ்கி! இந்த நாவலில் வரும் வெவ்வேறு பாத்திரங்களும் தனக்குத் தனக்கான தனித்தன்மைகளை கொண்டு இயங்குகிற போதும், அந்தப் பாத்திரங்களின் உளவியல் தொடர்புபட்டவைகளாகவே நகர்ந்து, அங்கங்கு அவர்களது கதைக் களங்களாகக்கூட மாறிவிடுகின்றன. வாசித்து முடித்த பின்னும் றோடியனைத் தொடர்ந்து அந்தப் பாத்திரங்களும் வாசக மூளைக்குள் இயக்கமுறுகின்றன. தாய் பல்கேரியா, தங்கை துனியா, வழிப் போக்கன் மர்மெலாதோவ், அவனது மனைவி கத்ரீனா, மகள் சோனியா, அடைவுகடைக்காரி அல்யோனா இவானோவ்னா, வேலைக்காரி நற்றாஸ்யா, துனியாவை மணமுடிக்க அலையும் பீற்றர் பெட்ரோவிச் லூசின், துனியாவின் எஜமான் ஸ்விட்ரிகைலோவ், ரோட்யாவின் நண்பன் ரஸ்மிகின், விசாரணை அதிகாரி போர்பிரி பெத்ரோவிச் என்ற பாத்திரங்கள் அவற்றில் முக்கியமானவை. தூக்கலாக, எனது வாசிப்பின் இறுதியில் நண்பன் ரஸ்மிகின் மற்றும், எழுதி முடிக்கப்படாத வாழ்க்கைகளின் சொந்தக்காரிகளான (தங்கை) துனியா, ரோட்யாவை நேசித்த சோன்யா ஆகியோரும் மிகப் பலமான தாக்கத்தை உண்டு பண்ணும் ஆளுமைகளாக தெரிகின்றனர். அவர்கள் மூவரும் -றோடியன் என அழைக்கப்படும்- கதைமாந்தன் ரஸ்கொல்னிகோவ் உடன் சேர்த்து மறக்க முடியாத பாத்திரங்களாக மூளைக்குள் புகுந்துவிடுகின்றனர். ravindran.pa 04012025 * “குற்றமும் தண்டனையும்” ஆசிரியர்: தஸ்தயெவ்ஸ்கி (1866) தமிழில்: எம்.சுசீலா (2017) வெளியீடு: நற்றிணை பதிப்பகம் பக்கங்கள்: 1072 https://sudumanal.com/2025/01/03/குற்றமும்-தண்டனையும்/#more-6867
  8. அநுர சகோதரயவும் இப்படித்தான்😁 பேப்பரில் இருக்கும், பேச்சில் இருக்கும், ஆனால் எதுவும் நல்லது நடக்காது!
  9. பேசாமல் ஊருக்குப் போய் மணல் வியாபாரம் செய்திருக்கலாம் என்று இப்ப நினைக்கின்றேன்😜
  10. சிந்துவெளியில் மறைந்திருக்கும் புதிரை விடுவிக்க… மூன்று மெகா பரிசை அறிவித்த ஸ்டாலின் christopherJan 05, 2025 14:28PM சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கு தொடக்க விழா சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் இன்று (ஜனவரி 5) நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கருத்தரங்கை தொடங்கி வைத்து உரையாற்றினார். கட்சியின் அரசல்ல, இனத்தின் அரசு! அவர், “2021-ஆம் ஆண்டு நம்முடைய அரசு அமைந்ததும், ‘திராவிட மாடல் அரசு’ என்று நாங்கள் அதற்கு பெயர் சூட்டினோம். “இது ஒரு கட்சியின் அரசல்ல, இனத்தின் அரசு” என்று குறிப்பிட்டேன். அதற்கு அடையாளமாக இந்த விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன வரலாற்றை ஆய்வுக் கண்ணோட்டத்தோடு பார்க்கும் முதிர்ச்சியின் அறிவுச்செயல்பாடாக இந்தக் கருத்தரங்கம் நடைபெறுகிறது. சிந்துவெளிப் பண்பாட்டு கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நிறைவு விழாவை நாம் இப்போது கொண்டாடி இருக்கிறோம். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும், இப்படி ஒரு விழாவை அரசே முன்னின்று நடத்தாது என்று சொல்லத்தக்க வகையில், மாபெரும் பண்பாட்டுப் பெருவிழாவாக இது ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் நமக்கான இடத்தை நிலைநிறுத்துவதுதான் நம்முடைய நோக்கம்! அமைச்சருக்கு பாராட்டு! வரலாறும், பண்பாடும், தொல்லியலும், தொலைநோக்குப் பார்வையும் கொண்ட இந்த விழாவை ஏற்பாடு செய்திருக்கும் நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும், நிதித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் தொல்லியல் ஆணையர் உதயச்சந்திரனுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுதல்களையும், நன்றியையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இரண்டு பேரும் தொல்லியல் ஆர்வலர்கள். இப்போது கேட்டாலும், இந்த மேடையில் மணிக்கணக்கில் சிந்துவெளியைப் பற்றி பேசக் கூடியவர்கள். இவர்கள் இந்தத் துறைக்கு கிடைத்திருப்பது இந்தத் துறைக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கே பெருமை கிடைத்திருக்கிறது. ஆரியமும் சமஸ்கிருதமும்தான் மூலம் என்பது கற்பனை! சிந்துவெளி நாகரிகம் முதன்முதலில் 1924-ஆம் ஆண்டு செப்டம்பர் 20-ஆம் நாளன்று உலகுக்கு அறிவிக்கப்பட்டது. ‘தி இல்லஸ்டிரேட்டட் லண்டன் நியூஸ்’ என்ற இதழில் இந்தியத் தொல்லியல் துறை டைரக்டர் ஜெனரல் சர் ஜான் மார்ஷல் அதை அறிவித்தார். இது இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் ஒரு திருப்புமுனையை உண்டாக்கி நம்முடைய கடந்த காலத்தை பற்றிய புரிதலையே மாற்றி அமைத்தது. ஆரியமும் சமஸ்கிருதமும்தான் இந்தியாவின் மூலம் என்று கற்பனையை வரலாறு என்று அதற்கு முன்னர் பலரும் சொல்லிக்கொண்டு வந்தார்கள். அதை மாற்றியது ஜான் மார்ஷல் அவர்களின் ஆய்வுகள்தான். சிந்துவெளி நாகரிகம் ஆரியத்துக்கு முற்பட்டது. அங்கு பேசப்பட்டது திராவிட மொழியாக இருக்கலாம் என்று அவர் நூறாண்டுகளுக்கு முன்பு சொன்ன குரல் இன்றைக்கு வலுப்பெற்றிருக்கிறது. “என்னதான் அங்கு இல்லை!” என்று கேட்கும் அளவுக்கு நன்கு கட்டமைக்கப்பட்ட வளர்ச்சி பெற்ற ஒரு நாகரிகம் சிந்துவெளியில் இருந்ததை அங்கு கண்டெடுக்கப்பட்ட பல்வேறு அடையாளங்கள் காட்டுகிறது. கீழடி – சிந்துவெளி ஒற்றுமைகள்! சிந்து வெளியில் ‘காளைகள்’தான் இருந்தது. இது திராவிடச் சின்னம்! சிந்துவெளியில் இருந்து, இன்றைய அலங்காநல்லூர் வரை காளைகள் இருக்கிறது. பழந்தமிழ் இலக்கியங்களில், ஏறுதழுவுதல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் இருக்கிறது. காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்’ என்று வருகிறது. சிந்துவெளி நாகரிகம் சார்ந்த ஒரு முத்திரையில் காளை உருவமும், அதை அடக்க முயலும் வீரரை அந்த காளை தூக்கி வீசுவதும் இருக்கிறது. அப்படியே மற்றொரு பக்கம் பார்த்தோம் என்றால், குதிரை முத்திரை சிந்துவெளியில் இல்லை. வேத இலக்கியங்களில் பெருநகரங்களும் இல்லை, தாய்த்தெய்வ வழிபாடும் இல்லை. ஆனால், இந்த இரண்டும் சிந்துவெளியிலும் இருக்கிறது. கீழடியிலும் இருக்கிறது. இதையெல்லாம் வைத்துதான் சங்ககாலத் தமிழர்களின் மூதாதையர் இருந்த இடம்தான் சிந்துவெளி என்று நிறுவப்பட்டிருக்கிறது. ஜான் மார்ஷலை பாராட்டிய பெரியார், அண்ணா சிந்துவெளி பற்றி ஜான் மார்ஷல் தன்னுடைய கண்டுபிடிப்பை வெளியிட்டதும், தந்தை பெரியார் அவர்கள் தன்னுடைய விடுதலை நாளிதழில் அதைப் பற்றி கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறார். பேசியும் இருக்கிறார். தந்தை பெரியாரை தொடர்ந்து பேரறிஞர் அண்ணாவும் 1948-ஆம் ஆண்டிலேயே சிந்துவெளி நாகரிகத்தின் அடையாளங்களை வெளிக்கொணர்ந்த சர் ஜான் மார்ஷலின் சாதனைகளை பாராட்டி எழுதியிருக்கிறார். 2010-ஆம் ஆண்டு கோவை தமிழ்ச் செம்மொழி மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய முத்தமிழறிஞர் கலைஞர் செம்மொழி மாநாட்டு இலச்சினையில், குமரி வள்ளுவர் சிலை, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற குறள் வரியுடன் சேர்த்து சிந்துவெளி முத்திரையையும் பதிவிட்டார். அந்த மாநாட்டில் புகழ்பெற்ற அறிஞர்களான அஸ்கோ பர்போலா, ஐராவதம் மகாதேவன், ஆர்.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் சிந்துவெளி பண்பாட்டையும், தமிழ்ப் பண்பாட்டையும் ஒருங்கிணைத்து முக்கியத்துவம் வாய்ந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை வாசித்தார்கள். அந்த மரபின் வழி வந்த நம்முடைய திராவிட மாடல் அரசு சார்பில், இப்போது சிந்துவெளி பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நினைவு பன்னாட்டுக் கருத்தரங்கை நடத்துகிறோம். சிந்துவெளி வரி வடிவங்களும், தமிழ்நாட்டுக் குறியீடுகளும், வடிவவியல் ஆய்வு என்ற நூலையும் இங்கு ஒரு வெளியிட்டிருக்கிறேன். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, ஜான் மார்ஷலின் சிலைக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறேன். சிந்துவெளிப் பண்பாட்டை கண்டுபிடித்தது மூலமாக, நம்முடைய வரலாற்றையும், பெருமையையும் மீட்டவர் ஜான் மார்ஷல், அவரைச் சிறப்பிப்பது தமிழ்நாடு அரசுக்குப் பெருமை. சிந்துவெளிப் பண்பாடு பேசப்படும் வரைக்கும், ஜான் மார்ஷலுக்கு சிலை வைத்தது திராவிட மாடல் அரசு என்ற பெருமையும் நிலைக்கும். தாமிரபரணி நாகரிகம் 3,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது! சிவகங்கை மாவட்டம் கீழடியில் தற்போது நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி உலக அளவில் எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்திருக்கிறது. தமிழ்நாடு தொல்லியல் துறையால், இப்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில் ஆதிச்சநல்லூருக்கு அருகே, சிவகளை ஆய்வு மூலம் ‘தண் பொருநை’ என்று அழைக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் 3,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று அறிவியல் வழிப்பட்ட ஆய்வுகள் அடிப்படையில் உறுதி செய்திருக்கிறோம். கீழடி அருங்காட்சியகம் போலவே பொருநையிலும் ஒரு அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டு வருகிறது. எட்டு இடங்களில் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு! அறிஞர் பெருமக்கள் நிறைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்ச்சியில் தமிழ்ப் பண்பாட்டை பேணிப் பாதுகாப்பதுதான் தமிழ்நாடு அரசின் தலையாய கடமை என்று உலகுக்கு உணர்த்தும் வகையில், மூன்று முக்கியமான அறிவிப்புகளை மிகுந்த மகிழ்ச்சியுடன் நான் வெளியிட விரும்புகிறேன். செழித்து வளர்ந்த சிந்துவெளிப் பண்பாட்டின் எழுத்து முறையை இன்னும் நம்மால் தெளிவாக புரிந்துக்கொள்ள முடியவில்லை. நூறு ஆண்டுகளைக் கடந்தும் தீர்க்கப்படாத இந்த சிந்துவெளிப் புதிர் பற்றி உலகெங்கும் உள்ள தொல்லியல் ஆய்வாளர்கள், மொழியியல் தமிழ் அறிஞர்கள் மற்றும் கணினி வல்லுநர்கள் உட்பட பலரும் இன்றளவும் பெரும் முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். அந்த முயற்சிகளை ஊக்கப்படுத்தும் வகையில், சிந்துவெளிப் புதிருக்கான உரிய விடையை கண்டுபிடித்து, சிந்துவெளி எழுத்து முறையை தெளிவாக புரிந்துக்கொள்ள உதவும் வழிவகையை தொல்லியல் அறிஞர்கள் ஏற்கும்படி வெளிக்கொணரும் நபர்கள் அல்லது அமைப்புக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும் என்பது முத்தான முதல் அறிவிப்பு. சிந்துவெளி பண்பாடு குறித்து தொடர் ஆராய்ச்சிகளை, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையுடன் இணைந்து ரோஜா முத்தையா நூலகத்தின் சிந்துவெளி ஆராய்ச்சி மையம் மேற்கொள்ளும் வகையில் தலைசிறந்த தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் பெயரில் ஓர் ஆய்வறிக்கை அமைக்க 2 கோடி ரூபாய் நல்கை வழங்கப்படும் என்பது இரண்டாவது அறிவிப்பு. தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையை உலகமே தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஓயாமல் உழைக்கும் தலைசிறந்த தொல்லியல் அறிஞர்கள் மட்டுமின்றி. ஆய்வாளர்கள், நாணயவியல் ஊக்கப்படுத்தும் விதமாக, கல்வெட்டியல் வல்லுநர்கள் ஆகியோரையும் ஆண்டுதோறும் இரண்டு அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும் என்பது மூன்றாவது அறிவிப்பு. இந்த மூன்று அறிவிப்புகளும் இந்தத் துறை ஆய்வுகளுக்கு வேகத்தையும், ஊக்கத்தையும் வழங்கும் என்று நான் நம்புகிறேன். சிந்துவெளி முதல் கீழடி வரை தமிழினத்தின் பெருமை நிரம்பி இருக்கிறது. அறிவியல் முறைப்படி சான்றுகள் அடிப்படையில், தமிழ்ச் சமூகத்தின் தொன்மையை அறிவுலகம் இப்போது ஏற்றுக்கொள்ளத் தொடங்கி இருக்கிறது. இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றைத் தமிழைத் தவிர்த்துவிட்டு இனி எழுதமுடியாது என்று நாம் உரக்கச் சொல்வோம்! ஜான் மார்ஷலின் கண்டுபிடிப்பின் நூற்றாண்டில் அவருக்கு நாம் நன்றியை உரித்தாக்கி, அவர் விட்டப் பணியை நாம் தொடர்வோம்” என்று ஸ்டாலின் பேசினார். https://minnambalam.com/political-news/the-mystery-hidden-in-the-indus-valley-stalin-announces-three-mega-prizes/
  11. ஜனாதிபதி அநுரவின் சீன விஜயம் ஏன் முக்கியத்துவம் பெறுகின்றது? January 5, 2025 2:54 pm எதிர்வரும் 12ஆம் திகதி சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீனாவிற்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயம் இராஜதந்திர நடவடிக்கைக்கு அப்பாற்பட்டது என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தியாவை விஞ்சும் முயற்சியாக சீனா இலங்கைக்கு மேலும் கடன் நிவாரணம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை வழங்கக்கூடும் என்று இராஜதந்திர வட்டாரங்கள் ஊகிக்கின்றன. பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் சீனா பல ஆண்டுகளாக இலங்கையின் மிகப்பெரிய முதலீட்டாளராக இருந்து வருகிறது, ஹம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பு துறைமுக நகரம் மற்றும் பல்வேறு உள்கட்டமைப்பு முயற்சிகள் போன்ற திட்டங்களுக்கு நிதியளித்துள்ளது. இந்த திட்டங்கள் இலங்கை தேசத்தை நவீனமயமாக்கியது மட்டுமல்லாமல், அதன் பொருளாதார வளர்ச்சிக்கான அடித்தளத்தையும் அமைத்துள்ளன. இதன்படி, ஜனாதிபதி அநுரவின் சீன விஜயம் இந்த அடித்தளத்தின் அடிப்படையில் ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை ஆராய்வதன் மூலம் கட்டமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஜயத்தின் முக்கிய விளைவாக புதிய வளர்ச்சித் திட்டங்கள் அடையாளம் காணப்படும் எதிர்பார்க்கப்படுகிறது. சீன நிறுவனங்கள் இலங்கையில், குறிப்பாக ஹம்பாந்தோட்டை போன்ற சுதந்திர வர்த்தக மண்டலங்களில் தங்கள் தடத்தை விரிவுபடுத்த ஆர்வமாக உள்ளன. இலங்கையின் தொடர்ச்சியான பொருளாதார மீட்சிக்கு இந்த முதலீடுகள் மிக முக்கியமானவையாகும். மேலும், சீனாவின் லட்சியமான பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியுடனும் (BRI) ஒத்துப்போகின்றன, இது உலகளாவிய வர்த்தக மற்றும் உள்கட்டமைப்பு வலையமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சுற்றுலாவை புத்துயிர் பெறுச் செய்தல் இலங்கையின் பொருளாதாரத்தின் முக்கிய அங்கமான சுற்றுலா, அரசியல் ஸ்திரமின்மை மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக சமீபத்திய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில், சுற்றுலா சந்தையுடன் கூடிய மறுமலர்ச்சிக்கான ஒரு மதிப்புமிக்க வாய்ப்பை சீனா வழங்குகிறது. சீன பயணிகளுக்கு இலங்கையை ஒரு முக்கிய சுற்றுலா தலமாக ஊக்குவிப்பதற்கான திட்டங்கள் நிகழ்ச்சி நிரலில் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகின்றது. சுற்றுலாப் பயணிகளின் எதிர்பார்க்கப்படும் வருகை தொழில்துறையை புத்துயிர் பெறச் செய்யலாம் எனவும் உள்ளூர் வணிகங்கள் மற்றும் சமூகங்களுக்கு மிகவும் தேவையான வருவாயைக் கொண்டு வரும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. சமூக நலனை ஆதரித்தல் உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுலாவைத் தாண்டி, இலங்கைக்கான சீனாவின் ஆதரவு சமூக நல முயற்சிகளுக்கு நீண்டுள்ளது. இலங்கை மாணவர்களுக்கு பாடசாலை சீருடைகள், உணவு மற்றும் நூலகங்களை வழங்கும் திட்டங்கள் மக்களிடையேயான தொடர்புகளை வளர்ப்பதில் சீனாவின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன. இந்த முயற்சிகள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு பொருளாதார நலன்களுக்கு அப்பால் கலாச்சார மற்றும் சமூக பரிமாணங்களை எவ்வாறு உள்ளடக்கியது என்பதை நிரூபிக்கின்றன. புவிசார் அரசியல் இயக்கவியலை சமநிலைப்படுத்துதல் இந்துப் பெருங்கடலில் இலங்கையின் மூலோபாய இருப்பிடம், பிராந்திய மற்றும் உலகளாவிய புவிசார் அரசியலின் மையப் புள்ளியாக அமைகிறது. சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற முக்கிய சக்திகளிடையே போட்டி தீவிரமடைந்து வருவதால், இலங்கை நடுநிலையான நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டு, அனைவருடனும் சமநிலையான உறவுகளைப் பேண முயல்கிறது. ஜனாதிபதி அநுராவின் சீனப் பயணம், அரசியல் சீரமைப்புகளை விட பொருளாதார முன்னுரிமைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் அதே வேளையில், இந்த நடுநிலைமையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்காவை உள்ளடக்கிய ஒரு கூட்டமைப்பான பிரிக்ஸ் அமைப்பில் சேர்வதற்கான இலங்கையின் ஆர்வம், வளர்ந்து வரும் பொருளாதாரங்களுடனான உறவுகளை ஆழப்படுத்தும் அதன் நோக்கத்தை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்தக் குழுவில் உறுப்பினர் சேர்க்கை அதிகரித்த வர்த்தகம், முதலீடு மற்றும் ஒத்துழைப்புக்கான கதவுகளைத் திறக்கக்கூடும், இது உலகளாவிய தெற்கில் இலங்கையின் நிலையை உறுதிப்படுத்துகிறது. இணைப்பு மற்றும் கல்விப் பரிமாற்றத்தை வளர்ப்பது இந்தப் பயணத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் இரு நாடுகளுக்கும் இடையிலான இணைப்பை மேம்படுத்துவதாகும். விமானப் பாதைகள் மற்றும் கல்விப் பரிமாற்றங்கள் அதிகரிப்பது இலங்கை மற்றும் சீன குடிமக்களிடையே அதிக தொடர்புகளை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கல்வி, தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சியில் ஒத்துழைப்புகள் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், இலங்கையின் வளர்ச்சிக்குத் தேவையான அறிவு மற்றும் வளங்களுடன் அதைச் சித்தப்படுத்தவும் உதவும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். https://oruvan.com/why-is-president-anuradhas-visit-to-china-significant/
  12. வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குகையில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் மனுஷ நாணயக்காரவிடம் வாக்குமூலம்! வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குகையில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் மனுஷ நாணயக்காரவிடம் வாக்குமூலம்! வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்கும் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் முன்னாள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் வாக்குமூலம் பெறப்பட உள்ளதாக விசாரணைக் குழுக்கள் தெரிவிக்கின்றன. எதிர்கால விசாரணைகளில் வெளிவரும் தகவல்களின் அடிப்படையில் இது தொடர்பான வாக்குமூலம் பெறப்படும் என விசாரணைகளை முன்னெடுத்து வரும் காவல்துறையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். நிதி மோசடி சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் திசர நாணயக்கார நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பின்லாந்தில் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாகக் கூறி 30 இலட்சம் ரூபாவினை பெற்று மோசடி செய்தமை தொடர்பில் கம்பஹா பகுதியைச் சேர்ந்த ஒருவர் திசர நாணயக்காரவுக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தார். குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் திகதி பிபிலை பகுதியில் வைத்துக் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர். நிதி மோசடி தொடர்பான முறைப்பாடுகள், குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்குத் தொடர்ந்தும் கிடைக்கப்பெறுவதுடன் அது தொடர்பான சாட்சியங்களும் பெறப்பட்டு வருகின்றன. அதனூடாக கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என விசாரணைக் குழுக்கள் குறிப்பிட்டுள்ளன. https://newuthayan.com/article/வெளிநாட்டு_வேலைவாய்ப்பு_வழங்குகையில்_இடம்பெற்ற_நிதி_மோசடி_தொடர்பில்_மனுஷ_நாணயக்காரவிடம்_வாக்குமூலம்!
  13. அதானியின் எரிசக்தி திட்டம் அமைச்சரவைக்கு செல்கிறது! adminJanuary 5, 2025 இலங்கையில் அதானியின் எரிசக்தி திட்டங்களை பரிசீலிக்க குழுவொன்றை நியமிப்பதற்கான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. நாளை (6.01.24) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்படும் என எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். மன்னார் மற்றும் பூநகரி பிரதேசங்களில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலை மின் திட்டங்கள் தொடர்பிலேயே இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட உள்ளது. மன்னார் மற்றும் பூநகரி பிரதேசங்களில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலை மின் திட்டங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின் அலகு ஒன்றுக்கு 8.26 சதம் டொலர் வீதம் செலுத்துவதற்கு கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவை இணக்கம் தெரிவித்திருந்தது. குறித்த உடன்படிக்கையை மீள்பரிசீலனை செய்வதற்காக இந்த குழு நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://globaltamilnews.net/2025/209952/
  14. சிறுபான்மை இனமா, சகோதர இனமா? - மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் விளக்கம் கோரிய சர்வமத அமைப்பு 05 Jan, 2025 | 02:48 PM 'சிறுபான்மை இனம்' என்ற சொல்லுக்குப் பதிலாக “சகோதர இனம்” அல்லது வேறு ஏதும் ஒரு பொருத்தமான சொல்லைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டி மாவட்ட சர்வமத அமைப்பு மனித உரிமைகள் ஆணையாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவாவிடம் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) வேண்டுகோள் விடுத்துள்ளது. கண்டி மாவட்ட சர்வமத அமைப்பின் செயலாளர் காமினி ஜயவீர எழுத்து மூலம் விடுத்துள்ள நீண்ட வேண்டுகோளில் மேலும் தெரிவித்திருப்பதாவது, தமது அமைப்பு நீண்டகாலமாக இனங்களுக்கிடையே சகோதரத்துவம் மற்றும் சகவாழ்வு என்பவற்றை ஏற்படுத்துவது தொடர்பாக இயங்கி வருவதாகவும் அதன் அடிப்படையிலே இதனை வேண்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மை எனும்போது இயல்பாகவே தாம் சிறியவர்களாக தாழ்த்தப்படும் மனோ நிலை ஏற்படுவதாகவும் அதேநேரம் பெரும்பான்மை எனும்போது அது குறிப்பிட்ட ஒரு சாராரை உயர்த்தி மதிப்பிடும் ஒரு மனோபாவத்தையும் ஏற்படுத்துவதாகும். எனவே, சிறுபான்மை என்ற பதம் பொதுவான இடங்களில் பயன்படுத்தப்படுவதற்குப் பதில் மாற்றீடான ஒரு சொல் பயன் படுத்தப்படுவது இன ஒற்றுமைக்கு நல்லது எனவும் தெரிவித்துள்ளது. அந்த வகையில் சகோதர இனம் என்ற சொல்லையே தமது அமைப்பு பயன் படுத்துவதாகவும் இதனை பரவலாக்குவது நல்லதென தமது அமைப்பு கருதுவதாகவும் அவர் அதில் தெரிவித்துள்ளார். அதே நேரம் இலங்கையில் தமிழ், முஸ்லிம் இனங்களை 'சிறுபான்மை' என்ற சொல் கொண்டு அழைப்பதால் அவர்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாக கணிக்கப்படுவதாகவும் ஆனால் அவர்களும் சம உரிமையுடன் வாழ்வதற்கு உரித்துடையவர்கள் என்பதால் அதற்குப் பொருத்தமான ஒரு பதத்தை அறிமுகம் செய்யும்படியும் சகோதர இனம் என்பது பொருத்தம் போலிருப்பின், அது தொடர்பாக சமூகத்தில் ஒரு கருத்துப் பறிமாற்றத்தை ஏற்படுத்தும் படியும் அவர் கேட்டுள்ளார். இது தெடர்பக மனித உரிமைகள் ஆணைக்குழுவுன் கவணத்தை ஈர்க்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/203000
  15. ஜெனிவா பொறுப்புக்கூறல் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க விசேட இராஜதந்திர குழுவை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை 05 Jan, 2025 | 12:32 PM (லியோ நிரோஷ தர்ஷன்) ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் பொறுப்புக்கூறல் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில், விசேட இராஜதந்திர குழு ஊடாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன், 58ஆவது அமர்வுக்கு முன்னர் சிறப்பறிக்கையை வெளியிடவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. மேலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், மனித உரிமை பேரவையின் அமர்வில் சமர்ப்பிக்கப்படும் எந்த தீர்மானத்தின் 51/1 நகல்வடிவையும் இலங்கை தொடர்ந்து எதிர்க்கும். இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் குறித்த ஆதாரங்களை சேகரிக்கும் வெளிப்புற பொறிமுறைக்கான அதிகாரங்களை நீடிக்கும் எந்த தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் இறுதி அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்தின் நகல்வடிவை நிராகரிப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. எனினும் உள்நாட்டு பொறிமுறை மூலம் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை பிரச்சினைகளுக்கு தீர்வினை காண்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது. ஆனால் ஜெனிவா தீர்மானத்தில் உள்ள பல விடயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். எவ்வாறாயினும் பொறுப்புக்கூறும் விடயத்தை பிரதிபலிக்கக்கூடிய நேர்மையான அறிக்கையை கூடிய விரைவில் அரசாங்கம் முன்வைக்க உள்ளது. இந்த அறிக்கையானது ஜெனிவாவுக்கு பதிலளிப்பதாக அல்லாது எமது அரசாங்கத்தின் நிலைப்பாட்டை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்துவதாகவே இருக்கும். குறிப்பாக தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மையை பிரதிபலிக்கும் வகையிலேயே எமது சிறப்பறிக்கை அமையும். இதற்காக இலங்கையின் விசேட இராஜதந்திர குழு செயற்படுவதாகவும் குறிப்பிட்டது. https://www.virakesari.lk/article/203002
  16. குமார் பொன்னம்பலத்தின் 25 ஆவது நினைவு தினம் January 5, 2025 02:53 pm தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வினை வழங்குவதற்கு இந்தியா துணைநிற்குமானால் வடகிழக்கு தமிழர்கள் இந்தியாவுக்கான ஆதரவினை நூறு வீதம் வழங்குவார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். மக்கள் மிகத் தெளிவாக நிற்க வேண்டும். தமிழ் தேசியம் தோற்குமாக இருந்தால் இந்த இலங்கை தீவில் தமிழர்கள் அடிமைகள் அல்லது தமிழர்கள் துடைத்து எறியப்படுவார்கள் எனவும் தெரிவித்தார். இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 25 ஆவது நினைவு தினம் இன்று (05) அனுஸ்டிக்கப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு,பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு பகுதியில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. ஓய்வு நிலை அதிபர் சத்தியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் குககுமார் உட்பட கட்சி ஆதரவாளர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர். இதன்போது நினைவுச்சுடர் தேசிய அமைப்பாளரால் ஏற்றப்பட்டதுடன் கட்சி உறுப்பினர்களினாலும் பொதுமக்களினாலும் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் ஆத்மசாந்திக்காக ஒரு நிமிட அகவணக்கமும் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் நினைவுகள் என்னும் தலைப்பிலும் சமகால அரசியல் நிலைமைகளும் தமிழ் தேசிய அரசியலும் என்னும் தலைப்பில் தேசிய அமைப்பாளராலும் சிறப்புரைகள் நிகழ்த்தப்பட்டன. இதன்போது கருத்து தெரிவித்த அவர், மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்கள் சட்டத்தில் தேர்ச்சி பெற்ற ஒருவர் இலங்கையை பொறுத்த அளவில் இலங்கை தீவை மையப்படுத்தி ஒரு பூகோள அரசியல் ஆதிக்க போட்டி நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றது. அந்த பூகோள அரசியல் போட்டியில் எங்களுடைய தமிழ் மக்கள் சிக்குண்டு இந்த சிங்கள தேசத்தினால் இன அழிப்புக்கு உட்படுத்தப்பட்டிருந்த காலகட்டத்தில் எமது மக்களுக்காக இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராடிக் கொண்டிருந்த வேளையில் எங்களுடைய அந்த போராட்டம் என்பது ஒரு பயங்கரவாத போராட்டம் என உலகத்திற்கு இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்ற ஒவ்வொரு அரசியல் தலைவர்களும் அந்த ஆட்சியாளர்களும் ஒரு பிழையான பிம்பத்தை இந்த சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக் கூறி வந்திருந்தனர். அந்த நிலையில் எங்களுடைய மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்கள் இலங்கையினுடைய தலைநகர் கொழும்பில் இருந்து கொண்டு தமிழ் மக்களது விடுதலைப் போராட்டம் என்பது ஒரு நியாயமான ஒரு போராட்டம் எங்களுடைய தமிழ் மக்களை பாதுகாப்பாதற்காகத்தான் இந்த இளைஞர்கள் அனைவரும் ஆயுதம் ஏந்தி இருக்கின்றார்கள் என்கின்ற நியாயப்பாட்டை உலகத்திற்கு எடுத்துக் கூறினார். அந்தக் காலப்பகுதியில் 2000 ஆம் ஆண்டு சந்திரிகா அம்மையாரின் காலம் அவருடன் தான் இவர் படித்தார் அவ்வாறு படித்த ஒரு பெரிய மாமனிதர். மிகவும் தமிழ் மக்களுக்காகவோ அல்லது வேறு தரப்புக்காக இல்லாது நீதிக்காக குரல் கொடுக்கின்ற ஒருவர். அந்த அடிப்படையில் தான் அவர்கள் எங்களுடைய விடுதலைப் போராட்டம் என்பது ஒரு நியாயமான போராட்டம் என்பதனை சர்வதேசத்திற்கு சொல்லிக் கொண்டிருக்கின்ற காலகட்டத்திலேயே அந்த சந்திரிக்காவின் ஆட்சி காலத்தில் சந்திரிகாவினால் கொழும்பு வெள்ளவத்தை ராமகிருஷ்ண மிஷனுக்கு முன்னால் வைத்து அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்தமையினால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார.; இது உலகத்தில் இருக்கின்ற அனைத்து விதமான மனித நேய அமைப்புகளுக்கும் மிக முக்கியமான நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் தூதுவர்களுக்கும் நாட்டினுடைய மிக முக்கியமான தலைவர்களுக்கும் தெரியும். இன்று இந்த நாட்டை மையப்படுத்தி இடம் பெற்றுக் கொண்டிருக்கின்ற தமிழ் மக்களது விடுதலைப் போராட்டம் என்பது தணியவில்லை. ஆயுதப் போராட்டம் 2009 ஆம் ஆண்டு மௌனிக்கப்பட்டாலும் எங்களுக்கான இனத்துக்கான விடுதலை போராட்டம் இன்னமும் மௌனிக்கவில்லை. இதனை எமது மக்கள் அனைவரும் நன்கு அறிய வேண்டும். புலம்பெயர்ந்த மக்கள் எமது மக்களின் விடுதலைக்காக மிக கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள். சிங்கள தேசம் ஒரு கனவு கண்டிருக்கின்றது 2009 உடன் எல்லாம் முடிந்து விட்டது என்று. ஆனால் அவ்வாறு இல்லை எங்களுடைய போராட்டம் எழுச்சி பெற்று இருக்கின்றது. புலம்பெயர் தேசத்தில் இருக்கின்ற இளையவர்கள் இன்றும் எமது விடுதலைக்காக தாயகத்தில் இருக்கின்ற எமது தமிழ் மக்களது விடுதலைக்காக அவர்கள் எங்கெல்லாம் செல்ல முடியுமோ அங்கு சென்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். எமது மக்கள் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். இன்று இந்த நாட்டில் ஒரு பாரிய ஆட்சி மாற்றம் வந்திருக்கின்றது. இந்த ஆட்சி மாற்றம் என்பது அவர்கள் ஊழல் ஒழிப்போம் என்பதன் அடிப்படையில் அவர்கள் வந்திருக்கின்றார்கள் இவர்கள் ஏற்கனவே தமிழ் மக்கள் மீது மிக மோசமாக தமிழ் மக்களை அடக்கி ஒடுக்குவதற்காக செயற்பட்டவர்கள். இங்கு வந்திருக்கின்ற அநுர அரசு என்பது அவர்கள் ஜே.வி.பியின் முகம். இவர்கள் அரசியல் ரீதியாக வந்து ஜே.வி.பி ஆனால் நடைமுறையில் என்.பி.பி யாக இருக்கின்றார்கள். ஆகவே அரசியல் ரீதியான ஆதிக்கம் தான் இங்கு அதிகமாக காணப்படுகின்றது. அவர்களது அரசியல் என்பது ஒட்டுமொத்த நாடும் ஒரு சிங்கள தேச நாடு பௌத்த நாடு இதனை நாங்கள் கட்டாயம் சிங்கள மக்களுக்காக தொடர்ந்து போராடுவோம். தொடர்ந்தும் குரல் கொடுப்போம் என்பதன் அடிப்படையில் தான் அவர்கள் தென்பகுதியில் வேலை செய்திருக்கின்றார்கள்.இவர்கள் இன்றும் தென்பகுதி மக்களுடன் கதைக்கும் போது தாங்கள் சொல்வதை தமிழ் மக்கள் கேட்காவிட்டால் ஆயுத ரீதியாக ஆயுதம் தூக்கி அவர்களை அடக்குவோம் என்று பல கூட்டங்களில் தென்பகுதியில் கூறியிருக்கின்றார்கள். இன்று தலைவராக இருக்கின்ற அனுமார திசாநாயக்க அவர்தான் முள்ளிவாய்க்காலில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக சர்வதேச சமூகங்கள் முன்வந்த நிலையில் இலங்கையில் இருந்த இந்த இராணுவத்தினர் எமது விடுதலை இயக்கத்தினால் அடி வாங்கி தளர்வு நிலையில் இருந்த போது தென்பகுதியில் இளைஞர்களை சேர்த்து 50,000 இராணுவ வீரர்களை கொடுத்து மக்களை இனப்படுகொலை செய்ததில் மிக முக்கியமான நபர் இவர். நாங்கள் மறுபடியும் கூறுகின்றோம் எங்களுடைய மாமனிதர்கள் செய்த தியாகங்கள் நீங்கள் சாதாரணமாக யோசித்து விடக்கூடாது. இந்த இனம் வாழுவதற்காக எத்தனையோ மகான்களை நாங்கள் கொடுத்திருக்கின்றோம். எங்களைப் பொறுத்தளவில் மக்கள் இந்த அரசியல் நிலைப்பாட்டில் மிகவும் தெளிவடைய வேண்டும.; எங்களுடைய மக்கள் தமிழ் தேசியத்திலிருந்து ஒரு நாளும் விடுபடவில்லை. யாழ்ப்பாணத்தில் மூன்று ஆசனங்கள் என்.பி.பி க்கு கிடைக்கப்பெற்று இருக்கிறது என்றால் அது ஏற்கனவே டக்லஸ் தேவானந்தா மற்றும் அங்கஜனுக்கும் அரசாங்கத்துடன் இருந்தவர்கள். அந்த வாக்குகள் ஒரு கட்சிக்கு சென்றதனால் தான் மூன்று ஆசனங்கள் அங்கு கிடைக்கப்பெற்று இருக்கிறது. ஆகவே தமிழ் தேசியத்துடன் தான் யாழ்ப்பாண மாவட்ட மக்கள் இருக்கின்றார்கள். அதில் எந்த தயக்கமும் கிடையாது. அதே போன்று மட்டக்களப்பிலும் தமிழ் தேசியத்திற்கு அதாவது சைக்கிளுக்கும் அல்லது வீட்டிற்கும் வாக்களிக்கும் நிலைப்பாட்டில் தான் மக்கள் இருந்தார்கள். வாக்குகள் பிரிந்திடும் என்கின்ற அடிப்படையில் சிலர் குழப்பினாலும் இன்று தமிழ் தேசியம் வென்று இருக்கின்றது. ஆனால் இந்த இடத்தில் மக்கள் மிக நிதானமாக இருக்க வேண்டும். நாங்கள் ஆசாபாசங்களுக்கு முகம் கொடுக்கக் கூடாது. நாங்கள் அந்த சலுகைகள் மாட்டி விடக்கூடாது. இந்த மண்ணில் அனேக படுகொலைகள் இடம்பெற்று இருக்கின்றது. எமது முதலாவது மாமனிதர் குமார் பொன்னம்பலம் ஐயா. அதனைத் தொடர்ந்து விடுதலைப் போராட்டத்தின் மீதும் மக்கள் மீதும் நமது மண்ணின் மீதும் தமிழ் மக்கள் மீதும் அக்கறை கொண்ட எத்தனையோ எழுத்தாளர்கள் இங்கு படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். கடத்தப்பட்டிருக்கின்றார்கள், காணாமல் செய்யப்பட்டிருக்கின்றார்கள். அண்மையில் கூட எக்னெலியகொட எனப்படுகின்ற தென்பகுதி ஊடகவியலாளர் ஒருவரை கடத்திக்கொண்டு மட்டக்களப்பில் வைத்து அவரை படுகொலை செய்து பெரிய களம் எனப்படுகின்ற எருமை தீவு பகுதியில் உள்ள ஒரு மரத்தின் கீழ் புதைத்து வைத்திருப்பதாக வெளிநாட்டில் இருக்கின்ற ஒரு முன்னாள் கடற்படை பிரதானி கூறி இருக்கின்றார். இவ்வாறு பல படுகொலைகள் இடம்பெற்று இருக்கின்றது. இந்த மாவட்டத்தில் முன்னர் பிரதி அமைச்சர்களாக இருந்தவர்கள் எமது மக்களை கடத்திக் கொண்றிருக்கின்றார்கள். இந்த உண்மைகள் கட்டாயமாக வெளியே வரும். நேற்றைய முன்தினம் முன்னாள் ராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் சாரதியாக இருந்தவர் கைது செய்யப்பட்டு இருக்கின்றார். ஏன் கைது செய்யப்பட்டிருக்கின்றார் அவரின் வீட்டின் முன்னால் ஒரு சூட்டு சம்பவம் இடம்பெற்றது. உண்மைகள் வெளிக் கொண்டு வரப்பட வேண்டும் ஊழல்கள் ஒழிக்கப்பட வேண்டும் அதில் மாற்று கருத்து கிடையாது. அதற்கு நாங்கள் முழுமையாக ஒத்துழைப்போம். ஆனால் தமிழ் மக்களின் மீது ஏறிக்கொண்டு தமிழ் மக்களது அரசியல் அபிலாசைகளை நசுக்கிக் கொண்டு முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி எந்த விதத்திலும் அனுமதிக்காது. எங்கிருந்தாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே ஆகுவோம். எமது மக்கள் எங்களை தோற்கடித்தாலும் இன்று வீதியில் இருந்து போராடுகின்றோம் என்றால் எங்களுக்கு பதவிகள் அதில் இருக்கின்ற சலுகைகள் முக்கியமில்லை. இந்த மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு இருக்கின்றது. அந்த அரசியல் நிலைப்பாடு எங்களுக்கு இருக்கின்றது. நீங்கள் பார்த்திருப்பீர்கள் ஊடகங்களில் எமது தலைவர் அழைப்பு விடுத்திருக்கின்றார். நாங்கள் தமிழ் தேசியத்துடன் நிற்கின்ற கட்சிகளை அழைத்து இருக்கின்றோம். நாங்கள் எமது மக்களுக்கு ஒரு ஆபத்து நிகழப் போகின்றது. வரலாற்றிலே தமிழர்கள் நிராகரிக்கப்பட்டு வந்த ஒற்றை ஆட்சி அரசியல் அமைப்பு அதனை நிறைவேற்றுவதற்கான சதிகள் இடம்பெறுகின்றது. அந்த சதி திட்டத்தை முறியடிப்பதற்காக குறைந்தபட்சம் நீங்கள் அத்தனை கட்சிகளும் அது வீட்டு கட்சியாக இருக்கலாம், செல்வம் அடைக்கலநாதன் போன்றவர்களாய் இருக்கலாம் யாராக இருந்தாலும் அனைவரும் ஒன்றாக வந்து அதனை முறியடிக்க வேண்டும் என்று கேட்டிருக்கின்றோம். இந்த அழைப்பினை நாங்கள் விட்டிருக்கின்றோம். அத்தோடு பல தலைவர்களை எமது தலைவர் சந்தித்திருக்கின்றார். நேற்றைக்கு முன் தினம் கூட இந்த விடயங்களை கூறி இருக்கின்றோம் வாருங்கள் ஒன்றாக கூடி எமது மக்களின் நலன்களுக்காக தயவுசெய்து ஒன்றாகக்கூடி நாங்கள் முறியடிப்போம் என்று. இந்தியா உட்பட ஒவ்வொரு நாட்டிற்கும் வெளியுறவு கொள்கைகள் இருக்கின்றது. அந்த வெளியுறவு கொள்கையில் இந்தியாவுக்கு இலங்கையினை தன்னுடைய கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்காக பல ஒப்பந்தங்களை செய்வதற்கு எத்தனை இருக்கின்றது. இருந்த போதிலும் இந்த நாட்டை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்ப வேண்டுமாக இருந்தால் இந்தியா சில முன்மொழிவுகளை வைத்திருக்கின்றது. இந்த இரு நாட்டிற்கு இடையில் ஒரு பாலம் போட வேண்டும் மின்சார இணைப்புகளை செய்ய வேண்டும் அதேபோன்று எரிபொருளினை குழாய் ரீதியாக இணைத்து அவற்றை செய்ய வேண்டும். ஆனால் இந்த ஒப்பந்தங்கள் செய்யப்படவில்லை என்றால் இலங்கையை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு. இவற்றைப் பொறுத்தளவில் தமிழர்களுக்கு எது வித தயக்கமும் இல்லை இலங்கை இந்தியாவின் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதற்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் தமிழ் மக்களது இன பிரச்சினைக்கான தீர்வினை இந்தியா செய்யுமாக இருந்தால் 100வீதம் நாங்கள் இந்தியாவுடன் இணைந்து கொள்வோம். இந்தியாவை விட்டு வேறு ஒரு இடத்திற்கும் நாங்கள் செல்ல மாட்டோம். வடகிழக்கில் சீனா உட்பட எந்த நாட்டிற்கும் இடமில்லை. இந்தியாவுக்கு மாத்திரம்தான் தமிழர்கள் அனுமதிப்பார்கள். ஏனென்றால் அவர்கள் தான் இந்த நாட்டை பாதுகாக்க கூடிய அத்தனை வல்லமையும் கொண்டிருக்கக் கூடிய ஒரு சக்தி. அவர்கள் எமது தொப்புள் கொடி உறவுகள். ஆகவே இந்தியா இந்த விடயங்களை கவனமாக கையாண்டு எமது மக்களின் நீண்ட கால பிரச்சனைக்கான தீர்வை காண வேண்டும். ஒரு நீண்ட காலம் புரையோடிப் போய் இருக்கின்ற பிரச்சினை இந்தியாவின் கையில் இந்த நாடு சிக்கி 4.5 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெற்று இருக்கின்றது. இந்த நாடு இந்தியாவிற்கு கடமைப்பட்டிருக்கின்றது. ஆகவே இந்தியாவின் கைக்குள் தான் இலங்கை இருக்கின்றது இந்தியா மிக இலகுவாக இந்த நாட்டை இந்த நாட்டினுடைய தலைவரை இலகுவாக கொண்டு வரலாம் இலகுவாக வெளியில் தூக்கி மறியலாம். அந்த அடிப்படையில் தமிழ் மக்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இந்தியா முன் நின்று செயல்பட வேண்டும். அதற்காக இங்கு இருக்கின்ற அனைத்து தமிழ் தலைவர்களும் இந்த விடயத்தை ஆணித்தரமாக வலியுறுத்த வேண்டும் என்பதனை நான் கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன் என தெரிவித்தார். -மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்- https://tamil.adaderana.lk/news.php?nid=198317
  17. 2025: தமிழ் மக்களின் ஆண்டுப் பலன்? - நிலாந்தன் adminJanuary 5, 2025 தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஆதரவான தமிழ்ப் புத்திஜீவிகளில் சிலர் தமிழ்க் கிராம மட்டத்தில் விவசாய அமைப்புகளைச் சந்தித்து, விவசாயிகளின் குறைகளைக் கேட்டு வருகிறார்கள். இன்னொரு பக்கம் கடற் தொழில் அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் சந்திரசேகரன் தமிழ்ப் பகுதிகளில் கடல் தொழிலாளர் சங்கங்கள் மத்தியில் தேசிய மக்கள் சக்தியின் பிடியைப் பலப்படுத்தி வருகிறார். கடந்த மாத இறுதிப்பகுதியில் யாழ்ப்பாணத்தில், தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவான மற்றொரு குடிமக்கள் அமைப்பு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. “மறுமலர்ச்சிக்கான மக்கள் இயக்கம்” என்று அழைக்கப்பட்ட அந்த அமைப்பை “மாற்றத்துக்கான மக்கள் அமைப்பு” என்று சம்பந்தப்பட்டவர்கள் அழைக்கிறார்கள். அது யாழ் ஊடக அமையத்தில் ஒர் ஊடகச் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது. நாட்டை இப்பொழுது ஆளும் தேசிய மக்கள் சக்தி என்பது ஜேவிபியும் உட்பட 21 அமைப்புகள் இணைந்து உருவாக்கிய ஒரு கட்டமைப்பு ஆகும். இக்கட்டமைப்புக்குள் தொழிற்சங்கங்கள், இடது சாய்வுடைய அமைப்புக்கள், துறைசார் தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்புகள், மாணவ அமைப்புகள், மகளிர் அமைப்புகள், என்றிவ்வாறாக சமூகத்தின் பல்வேறு துறைகளை அல்லது பல்வேறு பிரிவினரை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்கல் உண்டு. இதில் இடதுமரபில் வராதவர்களையும் உள்ளீர்க்கத் தேவையான விரிவு, நெகிழ்ச்சி ஜேவிபியிடம் ஏற்பட்டிருக்கிறது. இப்போதுள்ள பிரதமர் ஹரிணி ஜேவிபி உறுப்பினர் அல்ல. வளமான குடும்ப பின்னணியை கொண்டவர். அவரைப் போன்றவர்களையும் உள்ளீர்க்கத்தக்க விரிவு ஜேவிபியிடம் ஏற்பட்டிருக்கிறது. ஜேவிபியானது சீனச்சார்பு கொமியுனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி வந்தவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு இயக்கம். அதனால் அந்த அமைப்பிடம் இடதுசாரி இயக்கங்களிடம் காணப்படும் பெரும்பாலான ஒழுக்கங்கள் உண்டு. அது இப்பொழுது நடைமுறையில் ஒரு கொமியுனிஸ்ட் அமைப்பாக இல்லை. சீனக் கொமியூனிஸ்ற் கட்சியைப்போலவே அதுவும் பெருமளவுக்கு தேசியவாதப் பண்புமிக்க ஒரு கட்சிதான். ஆனால் கொம்யூனிஸ்டுகளிடம் காணப்படும் அமைப்பாக்க ஒழுக்கம் அவர்களிடம் உண்டு. அதைவிட முக்கியமாக தன் சொந்தச் சாம்பலில் இருந்து மீண்டெழுந்த அனுபவம் ஜேவிபிக்கு உண்டு. இரண்டு தடவைகள் நசுக்கப்பட்ட அமைப்பு; இரண்டு தடவைகள் தடை செய்யப்பட்ட ஒர் அமைப்பு. அத்தனை அழிவுகளில் இருந்தும் மீண்டெழுந்த அரை நூற்றாண்டுக்கும் மேலான அனுபவம் அந்த அமைப்புக்குண்டு. அதைவிட மேலதிகமாக இப்பொழுது கடந்த ஆண்டு பெற்ற இரண்டு தேர்தல் வெற்றிகளும் அவர்களுக்கு புதிய உத்வேகத்தைக் கொடுத்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக தமிழ்ப் பகுதிகளில் கிடைத்த வெற்றிகளால் அவர்கள் அதிகம் உற்சாகமடைந்திருக்கிறார்கள். எனவே தென்னிலங்கையில் இருப்பது போன்ற கட்டமைப்புகளை, வலைப்பின்னலை தமிழ்ப் பகுதிகளிலும் பரவலாக்க முயற்சிப்பார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் என்பிபியால் நிறுத்தப்பட்டு ஆசனங்களை வென்றவர்களில் பெரும்பாலானவர்கள் ஜேவிபியின் கொள்கை வழி வந்தவர்களோ அல்லது புரட்சிகரமான உள்ளடக்கங்களைக் கொண்டவர்களோ அல்ல. அவர்கள் தமிழ் மக்களுடைய போராட்டங்களிலும் காணப்பட்டதில்லை. கொழும்பில் ஜேவிபி நடத்திய ஆபத்துக்கள் மிகுந்த போராட்டங்களிலும் காணப்பட்டதில்லை. இந்த விடயத்தில் வடக்கு கிழக்கில் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும்போது எண்பிபி,ஏனைய தென் இலங்கை மையக் கட்சிகளைப் போலத்தான் செயற்பட்டிருக்கிறது. இதில் திருக்கோணமலையிலிருந்து தெரிவு செய்யப்பட்டவரும், பதில் வெளிவிவகார அமைச்சராக இருப்பவருமாகிய அருண் ஹேமச்சந்திர ஓரளவுக்கு விதிவிலக்கு எனலாம். எனவே நாடாளுமன்றத் தேர்தலில் தன் வேட்பாளர்களைத் தெரிவதில் இருந்த பலவீனங்களை அடுத்தடுத்த தேர்தல்களில் இல்லாமல் செய்வதற்கு என்பிபி முயற்சிக்கும். குறிப்பாக யாழ் பல்கலைக்கழகத்தில் என்பிபிக்குச் சார்பான அறிவு ஜீவிகளின் அணி துடிப்பாகச் செயல்படுகின்றது. ஆனால் தமிழ் மாணவர்கள் மத்தியில் என்பிபிக்கு குறிப்பிட்டுச் செல்லக்கூடிய பலமான கட்டமைப்பு கிடையாது. 2009க்குப் பின் ஒரு மூத்த ஜேவிபி உறுப்பினர் எனக்குச் சொன்னார், இலங்கைத் தீவிலேயே அதிகம் போராட வேண்டிய ஒரு பல்கலைக்கழகம் யாழ் பல்கலைக்கழகம்தான். ஆனால் போராட முடியாமல் இருப்பதும் அதே பல்கலைக்கழகந்தான் என்று. அவர் சொன்னது முழுவதும் சரியல்ல. 2009க்குப் பின் வந்த ஆண்டுகளில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் துணிச்சலாகப் போராடியிருக்கிறார்கள். ஆனாலும் கடந்த சில ஆண்டுகளாக ஒரு சோர்வு காணப்படுகிறது. குறிப்பாக, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்திய தமிழ் மக்கள் பொதுச்சபை என்ற மக்கள் அமைப்புக்குள் பல்கலைக்கழக மாணவ அமைப்புகள் காணப்பட்டன. ஆனால் பொது வேட்பாளருக்கு ஆதரவாக பகிரங்கமாக களமிறங்கி செயல்படுவதற்கு மாணவர் அமைப்பு தயங்கியது. ஆங்காங்கே உதிரிகளாக அல்லது சிறு குழுக்களாக அவர்கள் பங்களித்திருக்கலாம். ஆனால் “பொங்கு தமிழ்”, அல்லது “எழுக தமிழ்”களுக்காக உழைத்ததுபோல பொது வேட்பாளருக்காக பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு சமூகமாகச் உழைக்கவில்லை. நாங்கள் பொதுச் சபையை ஏற்றுக்கொள்கிறோம்; ஆனால் பொது வேட்பாளரை ஏற்கவில்லை என்ற ஒருவித நழுவலான நிலைப்பாடு அங்கே காணப்பட்டது. பொது வேட்பாளரை முன்னிறுத்திய கட்சிகளோடு இணைந்து செயல்படுவதற்கு அவர்களுக்குத் தயக்கம் இருந்திருக்கலாம். அல்லது ஒரு தேர்தல் நடவடிக்கையில் நேரடியாக ஈடுபடுவதற்கும் அவர்கள் தயங்கியிருக்கலாம். ஆனால் யாழ்.பல்கலைக்கழகமோ கிழக்கு பல்கலைக்கழகமோ பொது வேட்பாளருக்கு ஆதரவாக மக்களைத் திரட்டும் பணியில் ஒரு மாணவ சமூகமாகத் தீவிரமாக,எழுச்சிகரமாகச் செயல்படவில்லை. அப்படித்தான் யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கமும் புலமைசாரா ஊழியர் சங்கமும் பொது வேட்பாளருக்காக ஒரு சமூகமாக இறங்கிச் செயற்படவில்லை. முன்பு ஐந்தாண்டுகளுக்கு முன்பு தமிழ் மக்கள் பேரவையில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் ஊழியர் சங்கமும் ஒப்பீட்டளவில் உற்சாகமாக இறங்கி வேலைசெய்தன. ஆனால் பொது வேட்பாளருக்காக அவ்வாறு உழைக்கவில்லை. புலமைசாரா ஊழியர் சங்கம் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவாக நின்றது. விரிவுரையாளர்களைப் பொறுத்தவரை அரசறிவியல் துறையின் தலைவராகிய பேராசிரியர்.கணேசலிங்கம் தமிழ் மக்கள் பொதுச்சபையில் ஒரு அங்கம் வகித்தார். பொதுக்கட்டமைப்புக்குள்ளும் இருந்தார். அவரைத்தவிர வேறு சில விரிவுரையாளர்கள் பொது வேட்பாளருக்கு ஆதரவாக உதிரிகளாகக் காணப்பட்டார்கள். ஆனால் ஒரு அறிவாளிகள் சமூகமாக அவர்கள் திரண்டு பொது வேட்பாளரை ஆதரிக்கவில்லை. ஒப்பீட்டளவில் பொது வேட்பாளருக்கு ஆதரவான விரிவுரையாளர்கள்தான் அதிகம். ஆனால் அவர்கள் அமைப்பாக்கப்படவில்லை. குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சில புத்திஜீவிகள் என்பிபிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து ஊடக சந்திப்பை நடத்தினார்கள். எனினும் அதில் அவர்கள் திட்டவட்டமாக தெளிவாக என்பிபியை ஆதரிக்குமாறு கூறுவதற்குத் தயங்கினார்கள். ஆனால் அந்த தயக்கம் தேர்தல் வெற்றிகள் பின் இப்பொழுது மறைந்துவிட்டது. அவர்கள் தயங்கித்தயங்கி யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று மக்களுக்கு வழிகாட்டிய போது அவர்களுக்கு எதிராக கேலிச்சித்திரங்கள் வரையப்பட்டு பல்கலைக்கழகத்தில் ஒட்டப்பட்டன. அவர்களைக் கருத்து ரீதியாக வென்றெடுப்பதற்கோ அல்லது தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட பல்கலைக்கழக ஆசிரியர்களை ஒரு அமைப்பாகத் திரட்டுவதற்கோ முயற்சி எடுக்கப்படவில்லை. மாணவ அமைப்புகளும் அந்த விடயத்தில் திடகாத்திரமாகச் செயற்படவில்லை. இப்படிப்பட்டதோர் பின்னணியில், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பு தயங்கி தயங்கி தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்திய என்பிபிக்கு ஆதரவான புத்திஜீவிகள் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின் துணிச்சலாக முன்வந்து தமது அரசியல் சாய்வை வெளிப்படுத்தினார்கள். தமிழ்த் தேசியவாத அரசியலை “மலட்டு அரசியல்” என்றும் அழைத்தார்கள். இது யாழ்.பல்கலைக்கழகத்தின் இப்போதுள்ள அரசியல் சூழலைக் காட்டுகின்றது. தமிழ் பகுதிகளில் உள்ள ஒர் உயர்கல்வி நிறுவனத்தின் நிலைமை இதுவென்றால், ஏனைய துறைசார்ந்த கட்டமைப்புகளைக் குறித்துச் சிந்திக்கத் தேவையில்லை. அதைவிட மோசமான ஒரு விடயம், தமிழ்த்தேசியக் கட்சிகளிடம் பொருத்தமான மக்கள் கட்டமைப்புகள் அநேகமாக இல்லை. ஏனென்றால் அவர்களுக்குத் தேசியவாத அரசியல் என்றால் என்னவென்று தெரியவில்லை. தேசியவாத அரசியல் என்பது மக்களை ஆகப்பெரிய திரளாகக் கூட்டிக்கட்டுவது. எப்படிக் கூட்டிக் கட்டுவது? அவர்களை அரசியல் மயப்படுத்த வேண்டும்;அல்லது குறைந்தது இனமான உணர்வின் அடிப்படையிலாவது திரட்டவேண்டும்; அமைப்பாக்க வேண்டும். ஆனால் எத்தனை தமிழ்க் கட்சிகளிடம் அவ்வாறான கட்டமைப்புகள் உண்டு? ஆனால் இந்த வெற்றிடத்தை என்பிபி விளங்கி வைத்திருக்கின்றது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென்னிலங்கை பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவ அமைப்புகளோடு தொடர்புடைய தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் என்பிபிக்கு ஆதரவாகத் தமிழ்க் கிராமங்கள் சிலவற்றில் வேலை செய்திருக்கிறார்கள். எனவே இப்பொழுது தேர்தல் வெற்றிகள் தந்த உற்சாகத்தோடு,அரச பலத்தோடு என்பிபி தமிழ்ப் பகுதிகளில் தனது கட்டமைப்புகளை ஆழமாகப் பலப்படுத்தி விரிவுபடுத்தி வருகிறது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ஒரு தேர்தல் ஆண்டாக அமையக்கூடிய வாய்ப்புகள் அதிகம் தெரிகின்றன. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் பெரும்பாலும் முதலில் நடத்தக்கூடும். காசு வேண்டும். ஆனாலும் கடந்த ஆண்டு கிடைத்த தேர்தல் வெற்றிகளை அடுத்தடுத்த கட்டத்துக்குப் பலப்படுத்துவது என்றால் தேர்தல்களை வைக்கவேண்டும். குறிப்பாக இந்தியாவைச் சமாதானப்படுத்த மாகாணசபைத் தேர்தலை வைக்க வேண்டியிருக்கும். எனவே இந்த ஆண்டும் ஒரு தேர்தல் ஆண்டாக அமையக்கூடிய வாய்ப்புகளே அதிகம். இப்படிப்பட்டதொரு பின்னணியில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்மக்கள் தங்களுக்கு வழங்கிய தீர்ப்பிலிருந்து கற்றுக்கொண்டு, என்பிபியையும் அர்ஜுனாக்களையும் எதிர்கொள்வதற்குத் தமிழ்த் தேசியக் கட்சிகள் தயாரா? அல்லது,சிவப்பு மஞ்சள் கொடியைக் காட்டினால் தமிழ்த் தேசிய வாக்குகள் கொத்தாக வந்து விழும் என்று கற்பனையில் மூழ்கியிருக்கிறார்களா? தமிழ் மக்களை அமைப்பாக்கவில்லை யென்றால் அர்ஜுனாக்கள் மேலும் பெருகுவார்கள். தமிழ் மக்களின் சின்னச்சின்ன பிரச்சனைகளை, சின்னச் சின்னக் கவலைகளை; குறைகளைக் கேட்பதற்கும் அறிவதற்கும் அந்தந்தத் துறைக்குரிய மக்கள் கட்டமைப்புகள் வேண்டும். அவை இல்லாத வெற்றிடத்தில் தான் அர்ஜுனாக்கள் வெற்றி பெறுகிறார்கள். எனவே இந்த ஆண்டு நடக்கக்கூடிய தேர்தலில் தேசத்தைத் திரட்டி வெற்றி பெறுவதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகளிடம் ஏதாவது புதிய உபாயங்கள் உண்டா? இருப்பதில் பெரிய கட்சி தமிழரசு கட்சி இப்பொழுதும் நீதிமன்றத்தில் நிற்கின்றது. இனிமேலும் நிற்கப் போகிறது என்றுதான் தெரிகிறது. அதன் உட்க்கட்சிப் பிரச்சினைகளைத் தீர்க்க அதனால் முடியவில்லை. எப்படி ஏனைய கட்சிகளை இணைப்பது? தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தோல்விகளில் இருந்து கற்றுக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. அந்த அடிப்படையில்தான் அவர்கள் அரசியல் தீர்வை நோக்கிய ஒன்றிணைப்பு முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். ஆனால் தமிழரசுக் கட்சிக்குள் பலமாகக் காணப்படும் சுமந்திரன் அணி அதற்கு ஒத்துழைக்குமா? மேலும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த விடயத்தில் முன்னணியை நம்புமா? அந்தக் கூட்டமைப்பைச் சேர்ந்த கட்சிகள் மீது முன்னணி கடந்த காலங்களில் உமிழ்ந்துவிட்ட கீழ்த்தரமான குற்றச்சாட்டுகளை முன்னணி கைவிட்டு விட்டதா? இவை தவிர தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசிய பசுமை இயக்கம், உள்ளிட்ட ஏனைய கட்சிகளையும் ஒன்றிணைக்கும் வேலைத்திட்டம் ஏதாவது உண்டா ? முன்னணியின் ஐக்கிய முயற்சிகள் யாப்புருவாக்க நோக்கிலானவை. அவை தேர்தல் தேவைகளுக்கானவை அல்ல என்று தெரிகிறது. ஆனால் தேர்தல்கள் முதலில் வரும். யாப்பு வருமா வராதா என்பது நிச்சயமில்லை. ஏனென்றால் நாட்டின் பொருளாதாரத்தை ஓரளவுக்காவது நிமிர்த்தாமல் யாப்பில் கை வைப்பது ஆபத்தானது என்று என்பிபிக்கு விளங்கும். குறிப்பாக மகா சங்கத்தினர் இப்போதைக்கு ஒரு புதிய யாப்பை உருவாக்கும் முயற்சிக்கு ஆதரவாக இல்லை என்றும் கூறப்படுகிறது. எனவே யாப்புருவாக்கத்தை விடவும் அவசரமானது தேர்தல்கள்தான். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் என்பிபி புதிய வெற்றிகளைப் பெறுமாக இருந்தால்,அது யாப்புருவாக்க முயற்சிகளில் செல்வாக்குச் செலுத்தும். அவர்கள் தமிழ்த் தரப்பில் பொருட்படுத்த வேண்டிய தேவை இப்பொழுது இருப்பதைவிட மேலும் குறையும். அதை தமிழ்த் தரப்பு எப்படித் தீர்க்கதரிசனமாக ஐக்கியமாக எதிர்கொள்ளப் போகின்றது? https://www.nillanthan.com/7064/
  18. சுண்ணக்கல் விவகாரம் – கனியவள திணைக்களத்திடம் அறிக்கை பெற்ற பின்னரே சட்ட நடவடிக்கை! adminJanuary 5, 2025 யாழ்ப்பாணத்தில் சுண்ணக்கல்லுடன் கைப்பற்றப்பட்ட கனரக வாகனங்கள் தொடர்பில் கனிய வள திணைக்களத்தின் அறிக்கை பெறப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ளப்படும் என யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் காவற்துறை மா அதிபர் காளிங்க ஜயசிங்க தெரிவித்தார். சாவகச்சேரி பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனால் சோதனையிடப்பட்டு காவற்துறையினரால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மாவட்ட பிரதிப் காவற்துறை மா அதிபர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், சுண்ணக்கல் அகழ்வு என்பது காவற்துறையினருக்கு பொறுப்பான காரியம் அல்ல. அது கனிய வளங்கள் திணைக்களத்துடன் சம்பந்தப்பட்ட விடயம். இது தொடர்பில் கனிய வளங்கள் திணைக்களமே நடவடிக்கை எடுக்க வேண்டும். சில நாட்களுக்கு முன் சாவகச்சேரி காவல் நிலையத்தில் சுண்ணக்கற்களுடன் வாகனம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. அதற்குரிய ஆவணங்கள், அறிக்கைகள் அனைத்தும் கனிய வளங்கள் திணைக்களத்திடம் பெற்றுக் கொண்டு விரைவில் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். https://globaltamilnews.net/2025/209946/
  19. சுமந்திரன் மக்களால் நிராகரிக்கப்பட்டாலும், தமிழரசின் மத்திய செயற்குழுவை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு, பொதுக்குழுவால் தலைவராகத் தெரிவுசெய்ய்பட்ட சிறிதரனை ஓரங்கட்டி தனிமைப்படுத்துகின்றார். சுமந்திரனின் இந்த சுத்துமாத்து வேலைகள் தமிழர்களுக்கு ஓர் நியாயமான தீர்வைப் பெற்றுக்கொள்ளவா அல்லது அவரது சுயநல தேவைகளுக்கா என்பதில் எனக்கு தெளிவு நன்றாக இருக்கின்றது😎 தமிழர்களுக்கு நடந்தது இனவழிப்பு என்று வாதிட விரும்பாத சுமந்திரன் ஒரு போதும் தமிழர் நலனை முன்னெடுக்கப்போவதில்லை. தமிழரசுக் கட்சியை ஒட்டுமொத்தமாக தமிழர் புறக்கணிக்கவேண்டும், ஆனால் பிற தேசியக் கட்சிகள், சைக்கிள் கட்சி உட்பட, இன்னும் மோசமானவை! இதனால் மக்கள் இன்னும் பல “அர்ச்சுனா”க்களை தெரிவு செய்தாலும் பரவாயில்லைப் போலுள்ளது! டக்ளஸுக்கு துதிபாடுவன் என்று கண்டுபிடித்த உங்கள் கெட்டித்தனத்தைப் பார்த்து உருண்டு பிரண்டு சிரிக்கின்றேன்😂🤣
  20. கப்பித்தான், அழகு குணசீலன் புள்ளையானின் அபிமானி! அவர் அப்படி இப்படி எழுதினாலும், சுமந்திரன் விசயத்தில தெளிவாத்தானே இருக்கார். நீங்கள் சுமந்திரன் அபிமானி என்பதால் பொங்குகின்றதாக்கும்!😁
  21. 20 ஆம் திகதி பதவியேற்பு; 10 ஆம் திகதி ட்ரம்புக்கு தண்டனை! அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய டொனால்ட் ட்ரம்ப் எதிர்வரும் 20 ஆம் திகதி ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஆபாசப் பட நடிகையான ஸ்டோமி டெனியல்ஸ்,கடந்த 2006 ஆம் ஆண்டு ட்ரம்ப் தன்னுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டதாகவும் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு தன்னுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டதை வெளியில் கூறாமல் இருக்க தனக்கு பணம் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி தேர்தல் பிரச்சாரத்துக்காக திரட்டப்பட்ட நிதியிலிருந்து போலியான வணிகப் பதிவுகளை உருவாக்கி சுமார் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டொலர்களை அந் நடிகைக்கு ட்ரம்ப் வழங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தன. இது தொடர்பில் பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் அவரை குற்றவாளி என கடந்த ஆண்டு ஜூன் மாதம் மன்ஹாட்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், இவ் வழக்கு தொடர்பில் டொனால்ட் ட்ரம்புக்கு அடுத்த வாரம் 10 ஆம் திகதி நீதிமன்றம் தண்டனை அறிவிக்கிறது. தண்டனை அறிவிக்கப்படும்போது நேரிலோ அல்லது காணொளி மூலமாகவோ ட்ரம்ப் கலந்துகொள்ள வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார். இவ் வழக்கு தொடர்பில் ட்ரம்புக்கு தண்டனை அளிக்கப்படாமல் அபராதத் தொகை விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 20 ஆம் திகதி ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள நிலையில் 10 ஆம் திகதி தண்டனை அறிவிக்கப்படும் நிகழ்வு பெரும் பேசுபொருளாகியுள்ளது. https://akkinikkunchu.com/?p=306264
  22. வனஇலாகாவின் ஆக்கிரமிப்பால் வன்னிமக்கள் நிர்க்கதியில்: ரவிகரன் எம்.பி January 4, 2025 வன்னியில் வனவளத் திணைக்களத்தின் அத்துமீறிய அபகரிப்புக்காரணமாக தமிழ் மக்கள் தமது பூர்வீக குடியிருப்புக்காணிகளையும், பூர்வீக விவசாய வாழ்வாதாரக் காணிகளையும் இழந்து நிர்க்கதியாக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியதுடன், வனஇலாவின் இச்செயற்பாட்டுக்கு தனது கடுமையான எதிர்ப்பினையும் வெளியிட்டார். மன்னார் – மடு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் 03.01.2025 நேற்று இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் மடு பிரதேசசெயலகப் பகுதிக்குட்பட்ட சோதிநகர், இரணைஇலுப்பைக்குளம், மழுவராயர் கட்டையடம்பன், கரையார் கட்டினகுளம் உள்ளிட்ட பகுதிகளில் வனவளத் திணைக்களம் மக்களுக்குரிய பெருமளவான காணிகளை அபகரித்துள்ளதாக கிராமமட்ட பொதுஅமைப்புக்களால் தெரிவிக்கப்பட்டது. இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தனது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், வனவளத் திணைக்களத்தின் அபகரிப்பு நிலமைகள் தொடர்பில் ஒவ்வொரு அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்கழுக் கூட்டங்களிலும் பேசுகின்றோம். வனவளத் திணைக்களத்தின் எல்லைமீறிய அபகரிப்பிற்கு முல்லைத்தீவு மாவட்டத்தின் விபரமொன்றை இதில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2009ஆம் ஆண்டிற்கு முன்னர் 2,22006ஏக்கர் நிலங்களே வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலிருந்தது. இந் நிலையில் 2009ஆம் ஆண்டிற்குப் பிற்பாடு 4,35000ஏக்கர் நிலம் தற்போது வனவளத்திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலிருக்கின்றது. இவ்வாறாக மிகப்பாரிய அபகரிப்புக்களை தமிழர் தாயகப் பகுதியெங்கும் வனவளத் திணைக்களம் மேற்கொண்டுவருகின்றது. இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் அனைத்தும் எமது மூதாதையர்களுடைய பூர்வீக காணிகளாகும். வனவளத்திணைக்களம் பிரதேசசெயலருக்கோ, கிராமஅலுவலருக்கோ, கிராம மக்களுக்கோ எவ்வித அறிவிப்புக்களையும் செய்யாது தான்தோன்றித்தனமாக எல்லைக்கற்களையிட்டு இவ்வாறு மக்களுடைய பூர்வீக காணிகளை ஆக்கிரமிப்புச்செய்கின்றது. எமது தமிழ்மக்கள் கடந்தகாலங்களில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகாரணமாக தமது இடப்பெயர்வைச் சந்தித்திருந்தனர். குறிப்பாக கடந்த 1983ஆம் ஆண்டுகாலப்பகுதியில்கூட பல தமிழ் கிராமங்கள் இடப்பெயர்வைச் சந்தித்தன. இவ்வாறு இடப்பெயர்வினைச் சந்தித்த மக்கள், 2010ஆண்டிற்குப் பிற்பாடே தமது இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டனர். தற்போதும் மீள்குடியேற்றம் செய்ரப்படாத கிராமங்களும் இருக்கின்றன. இவ்வாறு மக்கள் நீண்டகால இடப்பெயர்வைச் சந்தித்ததால், மக்கள் பயன்படுத்திய, மக்கள் குடியிருந்த காணிகள் தற்போது பற்றைக்காடுகளாக காட்சியளிக்கின்றன. இவ்வாறு பற்றைக்காடுகளாக காணப்படுகின்ற எமது மக்களின் பூர்வீகக்காணிகளை வனவளத்திணைக்களம் ஆக்கிரமிப்புச்செய்கின்றது. நாட்டில் காடுகள் உருவாக்கப்படவேண்டும்தான். அதற்காக வன்னியிலிருக்கும் எமது மக்களின் பூர்வீககாணிகளை அபகரித்து நாட்டிற்கான ஒட்டுமொத்த காட்டையும் உருவாக்க முயற்ச்சிக்கக்கூடாது. எமது மக்களின் பூர்வீக விவசாய வாழ்வாதாரக்காணிகளும் இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன. இதன்மூலம் எமது மக்களின் வாழ்வாதாரத்திற்கு வனவளத்திணைக்களம் முட்டுக்கட்டையாக இருந்துவருகின்றது. இதுமாத்திரமின்றி படையினர், வனஜீவராசிகள் திணைக்களம், தொல்லியல்திணைக்களம் என அனைத்து அரச கட்டமைப்புக்களாலும் இவ்வாறு எமது மக்களின் பூர்வீகக்காணிகள் அபகரிக்கப்படுகின்றன. இந்த அரச கட்டமைப்புக்கள் எமது நிலங்களை ஆக்கிரமிக்கின்ற வேலைகளை மாத்திரமே கச்சிதமாக மேற்கொண்டுவருகின்றனவேதவிர வேறெதுவுமில்லை. தென்பகுதிகளில் இவ்வாறான நிலமைகள் இல்லை. வடக்கு, கிழக்கிலேயே இவ்வாறு மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு எமது மக்கள் நிர்க்கதியாக்கப்படுகின்றனர். வன்னி என்பது கடந்தகாலங்களில் விவசாயத்தில் சிறந்து விளங்கிய பகுதியாகக் காணப்பட்டது. ஆனால் தற்போது மக்களின் விவசாயக் காணிகள் அனைத்தும் வனவளத் திணைக்களத்தாலும், ஏனைய அரசதிணைக்களங்களாலும் பறிக்கப்பட்டநிலையில், மக்கள் விவசாயம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே புதிதாகப் பொறுப்பேற்றுள்ள இந்த அரசாங்கம் தமிழ் மக்களுடைய காணிகள் அந்த மக்களுக்கே கிடைப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் – என்றார் https://www.ilakku.org/the-people-of-vanni-are-in-misery-due-to-the-encroachment-of-the-forest-department-ravikaran-mp/
  23. இளங்குமரன் MPக்கு எதிராக யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் முறைப்பாடு! தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.இளங்குமரனுக்கு எதிராக யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக சுண்ணக்கல் ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் வர்த்தக நிலையமொன்றின் வாகனமொன்று, நேற்று முன்தினம் இரவு நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனால் இடைமறிக்கப்பட்டு சாவகச்சேரி காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், தமது வர்த்தக நிறுவனம் சட்டரீதியாகவே சுண்ணக்கல் வியாபாரத்தில் ஈடுபடுவதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தமக்கும், தமது நிறுவனத்துக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் தாம் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்ததாகவும் அவர் தெரிவித்தார். இந்தநிலையில், குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். https://www.hirunews.lk/tamil/392659/இளங்குமரன்-mpக்கு-எதிராக-யாழ்ப்பாணம்-காவல்நிலையத்தில்-முறைப்பாடு
  24. நாடாளுமன்ற பதவிகளுக்கு வெளியிலிருந்து அதிகாரிகளை நியமிக்க தீர்மானம் – எழும் கடும் எதிர்ப்புகள்! நாடாளுமன்ற பதவிகளுக்கு வெளியிலிருந்து உயர் அதிகாரிகளை நியமிக்கும் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு நாடாளுமன்ற ஊழியர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக , தற்போது பணிபுரியும் அதிகாரிகளின் பதவி உயர்வு முறைக்கேற்பவே அதிகாரிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இவ்வாறு, வெளியிலிருந்து ஆட்களை பணிக்கு அமர்த்துவதால் நீண்டகாலமாக சேவை புரியும் அதிகாரிகளுக்கு பாரிய அநீதி இழைக்கப்படுவதாக நாடாளுமன்றத்தில் அநேகமானோர் சுட்டிக்காட்டியுள்ளனர். நாடாளுமன்றத்தின் அரச நிர்வாக சேவையின் உயர் பதவிகளுக்கு இவ்வாறு ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில், நாடாளுமன்ற உயர் அதிகாரிகளின் கலந்துரையாடலில் இவ்விடயம் தொடர்பில் விரிவாகப் பேசப்பட்டது பொருளாதார பிரச்சினைகளை கருத்திற் கொண்டு நாடாளுமன்ற ஊழியர்களுக்கான விடுமுறை கொடுப்பனவை நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கு ஊழியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த கொடுப்பனவு பல ஆண்டுகளாக ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/article/நாடாளுமன்ற_பதவிகளுக்கு_வெளியிலிருந்து_அதிகாரிகளை_நியமிக்க_தீர்மானம்_–_எழும்_கடும்_எதிர்ப்புகள்!
  25. வடமாகாணத்தில் தற்போது பால் யுத்தம் நடைபெறுகின்றது adminJanuary 4, 2025 வடக்கு மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற பால் வட மாகாணத்திற்குள் முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்றும் தென்பகுதியில் உள்ள தனியார் துறையுடன் போட்டி போடக்கூடிய பல சிறந்த தரமான பால் உற்பத்தி மையங்கள் வட மாகாணத்தில் கூட்டுறவு துறையினூடாக உருவாக்கப்பட வேண்டும் என வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் தலைவர் கலாநிதி அகிலன் கதிர்காமர் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட கூட்டுறவு சபை மற்றும் வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியும் இணைந்து தந்தை செல்வா ஞாபகார்த்த மண்டபத்தில் கால்நடை வளர்ப்பாளர்கள், விவசாய உற்பத்தியாளர்கள் மற்றும் சுயதொழில் முயற்சியாளர்களுடன் “உற்பத்தி கூட்டுறவு சங்கங்களின் உற்பத்தி திறனை அதிகரித்து கிராமிய மற்றும் பிராந்திய பொருளாதாரத்தை மேம்படுத்துதல்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. அதில் வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் தலைவர் கலாநிதி அகிலன் கதிர்காமர் யாழ் மாவட்ட கூட்டுறவு சபையின் தலைவர் க.மகாதேவன் மற்றும் யாழ் மாவட்ட கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு சங்க சமாச் தலைவர் திரு ஸ்டீபன் ஆகீயோர் சிறப்புரையாற்றினார்கள். கிராமிய பொருளாதாரத்தின் முக்கியத்துவத்தை விளக்கி அகிலன் கதிர்காமர் உரையாற்றுகையில், பன்மைத்துவ வருமானம் பற்றியும் குறிப்பிட்டு இருந்தார். 1977 ஆம் ஆண்டு இலங்கையில் திறந்த பொருளாதார கொள்கையானது அமுல்படுத்தப்பட்ட போது உள்ளூர் உற்பத்திகள் குறைவடைந்து இறக்குமதிகள் அதிகரித்தமையினால் கிராமிய பொருளாதாரம் படிப்படியாக வீழ்ச்சி அடைந்தது. கிராமிய பொருளாதாரமானது தனியே கால்நடை வளர்ப்பு துறை, விவசாயம் துறை, பனை தென்னை வள அபிவிருத்தி என பிரித்து பார்க்க முடியாது என்றும் எல்லா துறையையும் சேர்த்து தான் கிராமிய அபிவிருத்தி ஏற்படுத்தமுடியும். பன்மைத்துவ வருமானமானது பண அடிப்படையாகவும் பொருள் அடிப்படையாகவும் வரும் வருமானங்கள் ஆகும். கிராமபுறங்களின் நிதி நிலைமையை மேம்படுத்துதல் மற்றும் வாழ்வாரத்தை பன்முகப்படுத்தலுக்கு பன்மைத்துவ வருமானம் இன்றியமையாதது. வடக்கு மாகாணத்தில் உள்ள மக்களின் வாழ்க்கை தேவையை பூர்த்தி செய்யக்கூடிய அளவான பாலனாது வடக்கு மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றது. ஆனால் தரமான பால் உற்பத்தி திறன் மற்றும் பெறுமதிசேர் உற்பத்தி மையங்கள் இல்லாமையினால் பெருமளவு பாலானது தென்பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களினால் கொள்வனவு செய்து பெறுமதி சேர் உற்பத்தி பொருட்களாக அதிக விலையில் மீளவும் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றது வடபகுதியில் தனியார் நிறுவனங்களினால் 160 தொடக்கம் 170 ரூபாய்க்கு கொள்வனவு செய்யப்படும் பாலானது பதப்படுத்தப்பட்ட பெட்டி பாலாக 580 ரூபாய்க்கு நவீன அங்காடிகளில் விற்பனை செய்யப்படுகின்றது. இச் செயற்பாட்டு பொறிமுறையில் யாருடைய உழைப்பு யாருடைய இழப்பு யாருக்கு இலாபம் என மக்கள் சிந்திக்க வேண்டும் என்றார். அதேவேளை பால் உற்பத்தியின் தன்னிறைவான இறைமையை பற்றிய விளக்கிய அகிலன் கதிர்காமர் பால்சார் உற்பத்தியில் தனியார்ஆதிக்கம் பற்றியும் விளக்கியிருந்தார். மேலும், உணவு இறைமையானது உணவு பாதுகாப்பில் இருந்து வித்தியாசப்பட்டது எனவும் உணவு இறைமை என்பது அந்தந்த பிரதேசத்தில் அந்தந்த மக்களுக்கு பொருத்தமான மற்றும் தேவையான உணவை அந்தப் பிரதேசத்தில் உற்பத்தி செய்துவிற்பனை செய்தல். உணவு இறைமை உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் பால்சார் உற்பத்தியில் தனியாரது ஆதிக்கமானது கிராமிய மட்டத்தில் பால் உற்பத்தியின் வளர்ச்சியிலும் தன்னிறைவான பொருளாதாரத்திலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. எமது நாட்டின் பால் இறைமையானது நியூசிலாந்தில் இருக்கின்ற தனியார் கம்பெனியிடம் இருக்கின்றது. எமது உள்ளூர் பால்பண்ணையாளர்கள், கூட்டுறவு சங்கங்களுக்கு முன்னுரிமை அளித்து பால் பெறுமதி சேர் உணவு உற்பத்திய உற்பத்தி செய்து பாதுகாப்பான முறையில் பதப்படுத்தி நுகர்வதற்கான ஆற்றலை வடமாகாணத்தில் உருவாக்குவதன் மூலம் வடமாகணத்தின் பால் இறைமை பூர்த்தி செய்ய முடியும் தேசிய மட்டத்தில் சாதகமான பார்வையானது மாகாண மட்டத்திலும் கிராம மட்டத்திலும் கூட்டுறவு துறைக்கான வாய்ப்பபை தற்போது ஏற்படுத்தி உள்ளது. ஆட்சி மாற்றமானது பல முயற்சிகளுக்கும் பல வாய்ப்புகளும் வழிவகுக்கின்றது. சிறந்த ஒரு வருட திட்டமிடலானது பத்து வருட கால அபிவிருத்திக் வித்திடும் பால் உற்பத்தியில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் நமது வடமாகணத்தின் பால் இறைமையை கைப்பற்ற முடியும் வடக்கு மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற பால் வட மாகாணத்திற்குள் முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்றும் தென்பகுதியில் உள்ள தனியார் துறையுடன் போட்டி போடக்கூடிய பல சிறந்த தரமான பால் உற்பத்தி மையங்கள் வட மாகாணத்தில் கூட்டுறவு துறையினூடாக உருவாக்கப்பட வேண்டும். காலநிலைகளுக்கு ஏற்ப பால் உற்பத்தியானது மாறுபடும். வருடம் முழுவதும் பால் தன்னிறைவை பூர்த்தி செய்கின்ற வினைத்திறனான தரமான பலவிதமான பெறுமதி அதிகரிப்புத்து திட்டங்களை கூட்டுறவு துறையினூடாக முன்னெடுக்க வேண்டும். பால் உற்பத்தியில் நாலு தொடக்கம் ஆறு மாடுகள் வைத்திருக்கும் பண்ணியாளர்களை சிறந்தவினைத்திறனான பண்ணையாளர்கள். சிறு பண்ணையார்களுக்கு தேவையான உள்ளீடுகளை ஏற்படுத்தி கொடுப்பதன் மூலம் வினைத்திறனான பண்ணையாளர்கள் ஆக்க முடியும். சிறந்த தரமான பால் உற்பத்தி மையங்களை உருவாக்குவதற்கான விஷேட நிபுணத்துவம் பெற்ற பயிற்சியாளர்களை வரவழைத்து வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியானது பயிற்சி நெறிகளை வழங்கி வருகின்றது. இச்செற்பாட்டை மேலும் முன்னெடுத்துச் செல்லும். பால் பண்ணையாளர்களுக்கு உற்பத்தி செலவுகளை கணித்து நியாயமான லாபத்தில் பாலுக்கான கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும். எமது எதிர்கால சந்ததிகளின் ஆரோக்கியத்தை பேணுவதற்காக நுகர்வோருக்கு கணிசமான விலைக்கு பாலானது விற்கப்பட வேண்டும் . வடமாகணத்தில் தற்போது பால் யுத்தம் நடைபெறுகின்றது. தென் பகுதியிலிந்நது யுத்தமானது வவுனியா மன்னர் கிளிநொச்சி யாழ்ப்பாணம் என முன்நகர்கின்றது. வடமாகணத்தில் பால்புரட்சியை மேற்கொள்வதற்கு ஒவ்வொரு கால்நடை வளர்ப்பு கூட்டுறவு சங்கங்களும் ஒரு கூட்டு இயக்கமாக இணைந்து பால் யுத்தத்துக்கு தயாராக வேண்டும் . தற்போதைய வடமாகண ஆளுநர் நா.வேதநாயகன் கூட்டுறவின் நண்பர். இக் கலந்துரையாடலின் அடுத்த கட்ட முன் நகர்வாக கால்நடை பிரதிநிதிகளையும் கால்நடை வளர்ப்புதுறையில் தொடர்புடைய திணைக்களங்களையும் ஒன்றிணைந்து ஆளுநர் உடன் இன்னும் ஒரு கலந்துரையாடலினை ஒழுங்கமைக்க உள்ளோம் என தெரிவித்தார். யாழ் மாவட்ட கூட்டுறவு சபை தலைவர் வடமாகணத்தில் தரமான பால் உற்பத்தி மையங்கள் வடக்கு கூட்டமைப்பு வங்கியின் தலைவர் அகிலன் கதிர்காமர் தலைமையிலும் அனுசரணையுடனும் உருவாக்கப்பட வேண்டும் எனவும் வேண்டுகோளை முன் வைத்தார். யாழ் மாவட்ட கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு சங்க சமாச் தலைவர் திரு ஸ்டீபன் கால்நடைகளை வளர்ப்பதற்கு பண்ணையாளர்கள் பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர் எனவும் கால்நடை தீவனப் பிரச்சினைகளுக்காக பதப்படுத்தப்பட்ட பசுந்தீவனங்களை(Silage) உற்பத்தி நடவடிக்கைகள் வங்கியானது முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார் https://globaltamilnews.net/2025/209912/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.