Everything posted by கிருபன்
-
அயலகத் தமிழர்களுக்கு ஸ்டாலின் அறிவித்த புதிய திட்டம்!
அயலகத் தமிழர்களுக்கு ஸ்டாலின் அறிவித்த புதிய திட்டம்! christopherJan 12, 2025 12:51PM அயலகத் தமிழக தின விழாவில், அயலகத் தமிழர்களுக்காக ரூ. 10 கோடியில் புதிய திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 12) அறிவித்தார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அயலகத் தமிழர் தின விழாவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இரண்டாவது நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு அயலகத் தமிழர்களுக்கான விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அவர் “நான் முதல்வர் ஆன பிறகு , சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றபோது, தாயகத்தில் வாழுகிற உணர்வை அங்குள்ள தமிழர்கள் எனக்கு ஏற்படுத்தினார்கள். அமெரிக்க பயணத்தில் அயலகத் தமிழர்கள் எனக்கு கொடுத்த வரவேற்பையும், பாசத்தையும் மறக்க முடியாது. எந்த நாட்டுக்கு சென்றாலும், தமிழ் என்ற உணர்வால் நாம் ஒன்றாகிறோம். இங்கு கூடியுள்ள பலரின் முன்னோர்கள் பல காரணங்களுக்காக புவியின் பல்வேறு நாட்டுக்கு சென்றிருப்பார்கள். அயலகத் தமிழர்களால் பாலைகள் சோலைகளாகின. நாடுகள் வளம் பெற்றன. நீங்களும் தமிழகத்தை மறக்கவில்லை. தமிழகமும் உங்களை மறக்கவில்லை. இதுதான் தமிழினத்தின் பாசம். உலகை உலுக்கும் உக்ரைன் போராக இருந்தாலும் சரி. மனதை உருக்கும் இஸ்ரேல் போராக இருந்தாலும் சரி, ஆபத்தில் இருக்கும் தமிழர்களை தேடிச் சென்று ஆதரவுக் கரம் நீட்டி வருகிறோம். வேர்களைத் தேடி திட்டம் எனது அரசியல் வாழ்க்கையின் மைல்கல்லாக உள்ளது. வேர்களைத் தேடி திட்டம் என் மனதுக்கு மிக நெருக்கமான திட்டம். இந்த திட்டத்தின் மூலம் புலம்பெயர் தமிழர்களை அடையாளம் கண்டுபிடித்து, அவர்கள் உறவுகள் இருக்கும் கிராமங்களை தேடி சென்று அதை கண்டடைவது தான் வேர்களை தேடி திட்டத்தின் நோக்கம். இந்த திட்டத்தின் மூலம் 157 இளைஞர்கள் தாயகம் திரும்பி இருக்கின்றனர். அதில் 38 இளைஞர்கள் பயணத்தின் இறுதிநாளான இன்று அரங்கத்தில் இருக்கின்றனர். தமிழும், தமிழ் கலைகளும் உலகம் முழுவதும் சென்றடைய வேண்டும். நாட்டுப்புறக் கலைகள், தமிழ் பண்ணிசைகளை வெளிநாடு வாழ் தமிழர்களின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு நேரடியாக பயிற்றுவிக்கும் வகையில், 100 ஆசிரியர்கள், தமிழ்க் கலைஞர்கள் தமிழர் வாழும் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர். அவர்கள் தமிழ் மொழி, கலைகள் குறித்து 2 ஆண்டுகளுக்கு நேரடி பயிற்சி அளிப்பர். இதற்கான அனைத்து செலவுகளையும் தமிழக அரசே ஏற்கும். இந்த திட்டத்திற்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அதற்கு பதில் வேண்டுகோளாக நான் வைப்பது ஒன்று தான். பூமிப்பந்தில் நீங்கள் எங்கு இருந்தாலும் உங்கள் அடையாளத்தை விட்டுவிடாதீர்கள். தமிழையும், தமிழ் உணர்வையும், தமிழ்நாட்டையும் மறந்து விடாதீர்கள்” என ஸ்டாலின் பேசினார். https://minnambalam.com/political-news/new-project-worth-rs-10-crore-for-neighboring-tamils-stalin-announces/
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
பெரியாரை அவதூறு செய்பவர்களைப் பார்த்தால் எனக்கும் அனுதாபம்தான் வருகின்றது. பெரியாருக்கு எதிராக புலம்புவர்களை கண்டால்… வீடியோ வெளியிட்டு சத்யராஜ் கண்டனம்! christopherJan 12, 2025 11:41AM ஏதோ அரசியல் செய்ய வேண்டும் என்று பெரியார் மீது அவதூறு பேசுபவர்களை பார்த்தால் கோபம் கூட வரவில்லை. பரிதாபமாக இருக்கிறது என சத்யராஜ் விமர்சித்துள்ளார். சமீப காலமாக பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி வரும் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. இதனையடுத்து திமுக, விசிக, காங்கிரஸ், திராவிட இயக்கங்கள் மற்றும் பெரியாரிய அமைப்புகள் சார்பில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. சீமான் மீது தமிழகம் முழுவதும் 70க்கும் அதிகமான வழக்குகள் பதிவாகி இருக்கும் நிலையில், சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் சீமான் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் சீமானின் கருத்துக்கு நடிகர் சத்யராஜ் கண்டனம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ”தந்தை பெரியாருடைய திராவிட கருத்தியலின் அடிநாதமான சமூகநீதி கோட்பாட்டை பொது மேடைகளில் விளக்கி சொல்லி, அதன் உண்மையான விளக்கத்தை கூறி, நாங்கள் வந்தால் இதையெல்லாம் மாற்றி காட்டுவோம் என்று பேசுவதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஏதோ அரசியல் செய்ய வேண்டும் என்று புதிதாக பேசுபவர்களை பார்த்து கோபம் கூட வரவில்லை. பரிதாபமாக இருக்குது. 100 ஆண்டுகளுக்கு மேலாக பேசுகிறார்கள். ஒரே ஆள் பேச முடியாது என்பதால் புது முகங்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். அந்த முது முகங்களை பார்த்து பரிதாபம் தானே பட முடியும்? சமூகநீதி கோட்பாட்டையும், திராவிட கருத்தியலையும் நாட்டின் பெரும்பாலான கட்சிகள் ஏற்றுக் கொண்டுவிட்டன. காங்கிரஸ், கம்யூனிட்ஸ்ட் போன்ற கட்சிகளும் ஏற்றுக் கொண்டுள்ளன. ராகுல் காந்தி நாடாளுமன்றத்திலேயே பெரியாரின் கருத்தியலை பேசி இருக்கிறார். கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் வைக்கம் வீரர் பெரியாருக்கு மிகப்பெரிய விழாவை மு.க.ஸ்டாலின் தலைமையில் நடத்தி இருக்கிறார். திராவிடம் என்ற பெயரை கட்சியின் பெயரிலேயே வைத்திருப்பவர்கள் நிச்சயம் பெரியாரை ஆதரிப்பார்கள். திக, திமுக, மதிமுக, தபெதிக, திராவிட விடுதலை கழகம், திஇதபே, அதிமுக, தேமுதிக என்று இத்தனை கட்சிகளின் பெயர்களிலேயே திராவிடம் உள்ளது. இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் ஒரு கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தங்களின் கொள்கை வழிகாட்டி பெரியார் என்று கூறியிருக்கிறார். விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையும் சூப்பர். அந்த அற்புதமான அறிக்கையை பொதுக்கூட்ட மேடையில் படிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தந்தை பெரியாரின் சமூகநீதி கொள்கையை ஏற்றுக்கொண்டு செயல்படுகிறார். அன்புத்தம்பி விஜய் தவெகவின் கொள்கை தலைவராக பெரியாரை பிரகடனபடுத்தி இருக்கிறார். திராவிடமும், தமிழ் தேசியமும் எனது இரு கண்கள் என தெரிவித்துள்ளார். இவ்வளவு பேர் பெரியாரை ஏற்ற பின் திராவிட கருத்தியலுக்கு எதிராக பேசுபவர்களை பார்த்தால், அவர்கள் மீது பரிதாபம் தான் வருகிறது. பெரியாரின் கருத்தியல் மீது விமர்சனம் வைக்காமல், தனிமனித விமர்சனம் மட்டுமே வைக்கப்படுகிறது. பெரியார் குறித்து புலம்பும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று சத்யராஜ் விமர்சித்துள்ளார். https://minnambalam.com/political-news/defamation-against-periyar-sathyaraj-condemns-by-releasing-video/
-
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஓரிரு நாட்களில் பதவி விலகலா? புதிய தகவல்கள்
கனடாவில் நீடிக்கும் அரசியல் கொந்தளிப்பு – தலைமை பதவி போட்டியில் இருந்து அனிதா விலகல் January 12, 2025 3:32 pm கனடாவில் அரசியல் கொந்தளிப்பு நீடித்துள்ள நிலையில், லிபரல் கட்சியின் தலைமை பதவிக்கான போட்டியில் இருந்து விலகுவதாக அந்த கட்சியின் முக்கிய உறுப்பினரும், அமைச்சருமான அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அண்மையில் பதவி விலகினார். அவரின் பதவி விலகளுக்கு பின்னர் லிபரல் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வியெழுந்துள்ளது. இந்நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் அடுத்த தலைவராக தெரிவுசெய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், தலைமைப் பதவிக்கான போட்டியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். அனிதா ஆனந்த் ட்ரூடோவின் மாற்றாகக் கருதப்பட்டார். இந்நிலையில், லிபரல் கட்சியின் தலைவர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை என்று அனிதா குறிப்பிட்டுள்ளார். மேலும், அடுத்த தேர்தல் வரை தனது தொகுதி மக்களுக்காகவும், நாட்டுக்காகவும் சேவை செய்வேன் என்று கூறிய அவர், தனது எதிர்காலப் பயணத்தைப் பற்றியும் யோசித்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் அவர் அறிவித்தார். தமிழ் தந்தை மற்றும் பஞ்சாபி தாயின் மகளான அனிதா, ட்ரூடோவின் அமைச்சரவையில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். அவர் பாதுகாப்பு மற்றும் பொது சேவை போன்ற அமைச்சகங்களையும் வகித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சராக, ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதற்கான உலகளாவிய முயற்சிகளுக்கு அனிதா தலைமை தாங்கினார். https://oruvan.com/anita-anand-withdraws-from-leadership-race/
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காசா மோதலின் முதல் 9 மாதங்களில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை வெளியானதை விட அதிகம் - ஆய்வில் தகவல் Published By: Rajeeban 12 Jan, 2025 | 01:35 PM இஸ்ரேலிய ஹமாஸ் மோதலின் முதல் 9 மாதங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பாலஸ்தீன சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களை விட மிகவும் அதிகம் என லான்செட் மருத்துவ சஞ்சிகை தெரிவித்துள்ளது. லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் & ட்ராபிகல் மெடிசின், யேல் பல்கலைக்கழகம் மற்றும் பிற நிறுவனங்களில் உள்ள கல்வியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம்மூலம் இது தெரியவந்துள்ளது. 2023 முதல் 2024 ஜூன் இறுதிவரை இஸ்ரேலின் தாக்குதல்களில் ஏற்பட்ட புள்ளிவிபரங்கள் குறித்து ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் 64260 பேர் கடும் காயங்கள் காரணமாக உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் 59.1 வீதமானவர்கள் பெண்கள் சிறுவர்கள் 65வயதிற்கு மேற்பட்டவர்கள் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆராய்ச்சியில் பாலஸ்தீன போராளிகளின் உயிரிழப்பு எண்ணிக்கை குறித்த விபரங்கள் வெளியாகவில்லை. கடந்த வருடம் ஜூன்மாதம் வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37877 என காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தது. காசாவிற்குள் பத்திரிகையாளர்களை இஸ்ரேல் அனுமதிக்காததால் உயிரிழப்பு குறித்த புள்ளிவிபரங்களை உறுதி செய்வது கடினமாக உள்ளது. பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகத்தின் உயிரிழப்புகள் குறித்த மின்னணு பதிவுகளை பேணும் திறன் இஸ்ரேலின் இராணுவநடவடிக்கை காரணமாக பாதிக்கப்பட்டது என லான்செட் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இஸ்ரேல் மருத்துவமனைகள் மருத்துவசதிகள் மீது தாக்குல்களை மேற்கொண்டதையும் டிஜிட்டல் தொடர்பாடல்களை குழப்பியதையும் சுட்டிக்காட்டியது. பாலஸ்தீன சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்களையும்,உறவினர்களின் உயிரிழப்புகள் குறித்து அறிவிப்பதற்காக பாலஸ்தீன அமைச்சு முன்னெடுத்த இணையவழி ஆய்வின் முடிவுகளையும்,சமூக ஊடக மரண அறிவித்தல்களையும் அடிப்படையாக வைத்து தமது முடிவை அறிவித்துள்ள ஆய்வாளர்கள் 2023 ஓக்டோபர் முதல் ஜூன் 2024 வரை 55289 முதல் 78535 பேர் கடும் தாக்குதலால் உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர். சரியாக மதிப்பிட்டால் 64260 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ள ஆய்வாளர்கள் காசாவின் சுகாதார அமைச்சு 41வீத உயிரிழப்புகள் குறித்து மாத்திரமே அறிவித்திருக்கலாம் என குறிப்பிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/203631
-
ரஸ்யாவுடனான போர் முனையில் இரண்டு வடகொரிய படைவீரர்கள் உயிருடன் கைது - உக்ரைன்ஜனாதிபதி
ரஸ்யாவுடனான போர் முனையில் இரண்டு வடகொரிய படைவீரர்கள் உயிருடன் கைது - உக்ரைன்ஜனாதிபதி Published By: Rajeeban 12 Jan, 2025 | 10:28 AM ரஸ்யாவுடனான போர்முனையில் காயமடைந்த இரண்டு வடகொரிய இராணுவத்தினரை கைதுசெய்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. கேர்ஸ்க்கின் ஒப்லாஸ்டில் இரண்டு வடகொரிய இராணுவத்தினரை கைதுசெய்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலென்ஸ்கிதெரிவித்துள்ளார். இருவருக்கும் மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளோம்,அவர்களை உக்ரைன் பாதுகாப்பு சேவையை சேர்ந்தவர்கள் தடுத்துவைத்துள்ளனர் என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். காயமடைந்த வடகொரிய இராணுவீரர்களை கைதுசெய்ய உதவியமைக்காக உக்ரைனின் பரசூட் படைப்பிரிவினருக்கும், விசேட படைப்பிரிவினருக்கும் அவர் நன்றியை தெரிவித்துள்ளார். உக்ரைனிற்கு எதிராக வடகொரிய படையினரை பயன்படுத்துவது குறித்த எந்த ஆதாரத்தையும் ரஸ்யா அழித்துவிடுவது வழமை என்பதால் வடகொரிய படையினரை கைதுசெய்துள்ளமை சாதாரணமான செயல் இல்லை என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இவர்கள் 9 ம் திகதி கைப்பற்றப்பட்டனர் அவர்களிற்கு ஜெனீவாபிரகடனத்தின் அடிப்படையில் அனைத்து மருத்துவ உதவிகளையும் வழங்கியதாக உக்ரைன் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். சர்வதே சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய இடத்தில் அவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது. கைதுசெய்யப்பட்டவர்கள் ஆங்கிலத்திலோ உக்ரைன் மொழியிலோ ரஸ்ய மொழியிலோ உரையாடும் திறன் அற்றவர்களாக காணப்படுகின்றனர் என தெரிவித்துள்ள புலனாய்வு வட்டாரங்கள் தென்கொரியாவின் புலனாய்வு பிரிவின் உதவியுடன் அவர்களுடன் கொரிய மொழியில் உரையாடியதாக தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட இரண்டு வடகொரிய போர்வீரர்களுடன் எஸ்பியுவின் விசாரணையாளர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ள உக்ரைன் ஜனாதிபதி அவர்களை பத்திரிகையாளர்கள் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். என்ன நடக்கின்றது என்ற உண்மையை உலகம் அறியவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/203612
-
புலம்பெயர் இலங்கை ஏதிலிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்!
புலம்பெயர் இலங்கை ஏதிலிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்! சென்னையில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோர் தினத்தின் இறுதி நாளான இன்று தமிழகத்தில் வாழும் புலம்பெயர் இலங்கை ஏதிலிகளின் விற்பனை நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன தென்னிந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கத்தினால் இந்தக் கண்காட்சி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. புலம்பெயர் இலங்கை ஏதிலிகளின் தொழில்துறை ஊக்கமானது மிகுந்த மனமகிழ்வை உண்டாக்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். பல காலமாக ஏதிலிகளாக வாழும் இலங்கையர்களை சந்தித்ததுடன் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக சாணக்கியன் தெரிவித்துள்ளார். இதனிடையே தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினையும் தாம் இந்த விழாவின் போது சந்தித்ததாக சாணக்கியன் கூறினார் இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் M.A. சுமந்திரன் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர் https://www.hirunews.lk/tamil/393400/புலம்பெயர்-இலங்கை-ஏதிலிகள்-எதிர்நோக்கும்-பிரச்சினைகள்-தொடர்பில்-கலந்துரையாடல்
-
கிளீன் சிறீலங்கா : வலி நிவாரணி அரசியல் - நிலாந்தன்
கிளீன் சிறீலங்கா : வலி நிவாரணி அரசியல் - நிலாந்தன். adminJanuary 12, 2025 சிறீலங்காவை கிளீன் பண்ணத்தான் வேண்டும். ஆனால் அதை எங்கிருந்து தொடங்குவது? சிறீலங்காவின் கறை எது? அல்லது அசுத்தம் எது? என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். அங்கிருந்துதான் சுத்தப்படுத்தலைத் தொடங்கலாம். சிறீலங்காவின் அசுத்தம் எது? இனப்பிரச்சினைதான். இன மோதல்கள்தான் சிறீலங்காவை உலக அரங்கில் அவமானப்படுத்தின. இனப்பிரச்சினைதான் சிறீலங்காவை ஜெனிவாவில் கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது. இனப்பிரச்சினைதான் தமிழ் மக்களை கூடு கலைந்த பறவைகள் ஆக்கியது. இனப்பிரச்சினைதான் சிறீலங்காவுக்குள் வெளிச் சக்திகள் தலையிடும் வாய்ப்பை வழங்கியது. இனப்பிரச்சினைதான் நாட்டைப் பொருளாதார ரீதியாக நாசமாக்கியது. கடன் வாங்கிச் சண்டை செய்தார்கள். கடனுக்கு வெடிமருந்து வாங்கி தமது சக இனத்தவர்களைக் கொன்றார்கள். காசைக் கரியாக்கினார்கள். விளைவாக நாடு அதன் முதலீட்டுக் கவர்ச்சியை இழந்தது. எந்த நாட்டை சிங்கள மக்களுக்கு வென்று கொடுத்தார்களோ, அந்த நாட்டிலிருந்து இப்பொழுது சிங்கள மக்களும் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டில் மட்டும் மொத்தம் மூன்று லட்சத்திற்கும் அதிகமானவர்கள் வெளியேறியிருக்கிறார்கள். முன்பு யுத்த காலங்களில் தமிழர்கள் வெளியேறினார்கள். காரணம் உயிர்ப் பயம். இப்பொழுது சிங்கள மக்களும் வெளியேறுகிறார்கள். இப்பொழுது வெளியேறும் அதிகமானவர்கள் படித்தவர்கள், துறைசார் நிபுணத்துவம் கொண்டவர்கள். பெரிய பொறுப்புகளில் இருந்தவர்கள். நடுத்தர வயதுக்காரர்கள்… ஏன் வெளியேறுகிறார்கள்?யாருக்காக நாட்டை வென்று கொடுத்தார்களோ,அவர்களே வெளியேறுகிறார்கள். என்றால் அந்த வெற்றியின் பொருள் என்ன? வென்றெடுத்த நாடு யாருக்குச் சொந்தம்? அது இப்பொழுது பேரரசுகளுக்குச் சொந்தமாகி வருகிறது. எல்லாப் பேரரசுகளின் இழு விசைகளுக்குள்ளும் நாடு சிக்கி விட்டது. பொருளாதார நெருக்கடியின் விளைவாக அது கடன் வாங்கிய நாடுகள் மற்றும் உலகப் பொது நிதி நிறுவனங்களின் பிடிக்குள்ளும் வந்து கொண்டிருக்கிறது. அண்மையில் அரசாங்கம் நிலையான வைப்புக்களுக்கான வட்டிக்கு விதிக்கப்படும் வரியை உயர்த்தியிருக்கிறது. ரணில் விக்கிரமசிங்க அந்த வரியை ஐந்து விகிதமாக உயர்த்தினார். அனுர அதனை பத்து விகிதமாக உயர்த்தியிருக்கிறார். அரசாங்கம் பன்னாட்டு நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு கீழ்படிவதாக விமர்சிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் இருபது லட்ஷத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் வந்தார்கள். அதேசமயம் மூன்று லட்ஷத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறியிருக்கிறார்கள். போர் காரணமாக தமிழர்கள் அப்பொழுதோ புலம்பெயரத் தொடங்கி விட்டார்கள். பொருளாதார நெருக்கடியின் பின்னணியில், மீண்டும் தமிழ்ப் புலம்பெயர்ச்சி அதிகரித்திருக்கிறது. இது மூன்றாவது தமிழ்ப் புலப்பெயர்ச்சி அலை. இந்த அலை முன்னைய இரண்டு புலப் பெயர்ச்சி அலைகளில் இருந்தும் துலக்கமான விதங்களில் வேறுபடுகிறது. முதலாவது புலப்பெயர்ச்சி அலையானது 1983யூலைக்கு முந்தியது. அதில் ஆங்கிலம் பேசும், படித்த, பெருமளவுக்கு உயர் குழாத்துத் தமிழர்கள் புலம் பெயர்ந்தார்கள். அவர்கள் சட்ட விரோதமாக புலம்பெயர்ந்தது குறைவு. இரண்டாவது அலை 1983இற்குப் பின்னரானது. அதில் லட்சக்கணக்கானவர்கள் புலம் பெயர்ந்தார்கள். அவர்களில் அதிகமானவர்கள் சட்ட விரோதமாகப் புலம் பெயர்ந்தார்கள். சட்டவிரோத வழிகளின் ஊடாகப் புகலிடந் தேடிச் சென்றவர்கள். இப்பொழுது நிகழும் மூன்றாவது புலப்பெயர்ச்சி அலையும் ஒப்பீட்டளவில் சட்ட ரீதியானது. ஏனென்றால் ஏற்கனவே புலம் பெயர்ந்தவர்கள் அந்தந்த நாடுகளில் செற்றில்ட் ஆகிவிட்டார்கள். அவர்கள் ஊரில் உள்ள தங்கள் உறவுகளுக்கு `ஸ்பொன்சர்` செய்யக்கூடிய அல்லது விசா வாங்கிக் கொடுக்கக்கூடிய தகைமையை அடைந்து விட்டார்கள். இது மூன்றாவது புலப்பெயர்ச்சி அலையின் ஒரு பிரதான வேறுபாடு. அடுத்தது,இப்பொழுது புலம்பெயரும் தமிழர்களில் அநேகர் படித்தவர்கள். நடுத்தர வயதினரும் உண்டு. இங்கு பொறுப்பான பதவிகளில் இருந்தவர்கள், அரசு ஊழியர்கள்,சமூகத்தின் துறைசார் தலைமைத்துவம் என்று வர்ணிக்கத்தக்கவர்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதில் ஒரு பகுதியினர் திரும்பி வருகிறார்கள். தாயகத்தில் தமது பதவி நிலை காரணமாக அனுபவித்த அதேயளவு மரியாதை புலம் பெயர்ந்த நாட்டிலும் கிடைக்காதபோது விரக்தியடைகிறார்கள். குறிப்பாக நடுத்தர வயது கடந்தவர்கள் புலம் பெயர்ந்த நாட்டின் நிலைமைகளோடு தங்களைச் சுதாகரிக்க முடியாதபோது திரும்பி வருகிறார்கள். இதுவும் மூன்றாவது புலப்பெயர்ச்சி அலையின் பிரதான வேறுபாடுகளில் ஒன்று. அண்மையில்,ஐரோப்பாவில் வசிக்கும் ஒரு பிரபல எழுத்தாளர் என்னைக் காண்பதற்கு வந்திருந்தார். அவரோடு ஓர் இளம் அரச ஊழியரும் வந்திருந்தார். அந்த அரச ஊழியர் சொன்னார், தான் புலம் பெயரப் போவதாக. ஏனென்று கேட்டேன். “ ஒரு அரசு ஊழியனாக என்னால் தாக்குப் பிடிக்க முடியாதுள்ளது. ஒரு புதிய வீட்டைக் கட்டினேன். மூன்று மில்லியன்களுக்கும் மேல் கடன். அந்த கடனை அடைப்பதற்காக என்னுடைய சம்பளத்திலிருந்து பெரும் தொகுதி போகிறது. ஜீவனோபாயத்துக்காக அப்பாவும் அம்மாவும் வீட்டில் ஒரு கடை திறந்து வைத்திருக்கிறார்கள். அந்த கடையைத் திறப்பதற்கான முதலீட்டில் ஒரு பகுதியையும் புலம் பெயர்ந்த நண்பர்கள்தான் தந்தார்கள். புலம்பெயர்ந்த தமிழர்களின் நோக்கு நிலையில் இருந்து பார்த்தால் என்னுடைய கடன் ஒரு சிறிய தொகை. ஆனால் அரச ஊழியனாகிய எனக்கோ அது பெரிய தொகை. எனவே கடனாளியாக இருப்பதை விடவும் புலம்பெயரலாம் என்று முடிவெடுத்தேன்” என்று சொன்னார். அவரோடு வந்த எழுத்தாளர் சொன்னார் “அவர் சொல்வது உண்மை. ஏனென்றால் என்னுடைய கிராமத்துக்கு அண்மையில் ஒரு சா வீட்டுக்குப் போயிருந்தேன். என்னுடைய வயதில் உள்ளவர்கள் அங்கே வந்திருந்தார்கள். பெரும்பாலானவர்கள் தோற்றத்தில் கிழண்டிப்போய்க் காணப்பட்டார்கள். அவர்களுடைய வயதைவிட அதிகம் முதுமையான தோற்றம். ஏனென்றால் வாழ்க்கை அந்தளவுக்குக் கஷ்டமாக இருக்கிறது; சுமையாக இருக்கிறது” என்று. இவ்வாறு மூன்றாவது புலப்பெயர்ச்சி அலையின் கீழ் எத்தனை தமிழர்கள் புலம் பெயர்ந்து விட்டார்கள் என்பது தொடர்பாக சரியான புள்ளி விபரம் யாரிடமாவது உண்டா? இப்படியாக போரில் வென்றவர்களும் புலம் பெயர்கிறார்கள்; தோற்றவர்களும் புலம் பெயர்கிறார்கள். இப்பொழுது வெற்றிக்கும் பொருள் இல்லை. தோல்விக்கும் பொருள் இல்லை. இந்த லட்சணத்தில் நாட்டைச் சுத்தப்படுத்துகிறேன் என்று புறப்பட்டு வேண்டுமானால்,வீதிகளைச் சுத்தப்படுத்தலாம். சுற்றுச் சூழலைச் சுத்தப்படுத்தலாம். அதற்கும் வரையறைகள் உண்டு. ஏனென்ன்றால் சுற்றுச் சூழலும் அரசியல்தான். ஒப்பீட்டளவில் ஓரளவுக்காவது சுத்தப்படுத்தக்கூடிய துறை அதுதான். அதுதவிர ஏனைய எந்தத் துறையிலும் நாட்டைச் சுத்தப்படுத்த முடியுமா? முடியாது. ஏனென்றால் ஊழல்,முறைகேடு,அதிகார துஷ்பிரயோகம் போன்றன ஒரு பண்பாடாக வளர்ந்து விட்டன. எங்கிருந்து அவை பண்பாடாக மாறின? எல்லாப் பிரச்சினைகளையும் இனப்பிரச்சினைமூலம் திசை திருப்பலாம் என்ற அரசியல் சூழல்தான் காரணம். எல்லாத் தவறுகளையும் இனமுரண்பாட்டைத் தூண்டுவதன்மூலம் கடந்துவிடலாம் என்ற ஒரு அரசியல் சூழல்தான் காரணம். தமிழ்ப் பகுதிகளில் அரச திணைக்களங்களில் காணப்படும் விமர்சனத்துக்குரிய பெரும்பாலான அம்சங்கள் தொடர்பாக அதிகாரிகளைக் கேட்டால்,”அரசாங்கம் விடுவதில்லை அல்லது மேலதிகாரிகள் இனரீதியாக விவகாரத்தை அணுகுவார்கள் “என்றெல்லாம் சாட்டுச் சொல்லுவார்கள். “நாங்கள் எதையாவது செய்தால் அதனை இனரீதியாக வியாக்கியானப்படுத்தி எங்களைப் பதவி இறக்கி விடுவார்கள். அல்லது நமது பதவி உயர்வுகளை நிறுத்தி விடுவார்கள்” என்று கூறுவார்கள். இப்படியே இரண்டு இனங்கள் மத்தியிலும் காணப்படுகின்ற எல்லா முறைகேடுகளுக்கு இன முரண்பாட்டை ஒரு சாட்டாகச் சொல்லும் பண்பாடு வளர்ந்து விட்டது. ஏன் அதிகம் போவான்? ராஜபக்ச குடும்பத்தில் பசில் ஒரு புரோக்கராக, ஒரு டீல் மேக்கராக எப்படி எழுச்சி பெற்றார்? யுத்த வெற்றிதான் காரணம். யுத்தத்தில் வென்றவர்கள் நாட்டைத் தனிப்பட்ட சொத்தாக மாற்றினார்கள். நாட்டின் கருவூலத்தைத் திருடினார்கள். வெற்றி மயக்கத்தில் குருடாக இருந்த சிங்கள மக்களுக்கு அது முதலில் தெரியவில்லை. அது தெரிந்த பொழுது, நாடு மீள முடியாதபடி பொருளாதார நெருக்கடிக்குள் மூழ்கி விட்டது. இப்பொழுது அனுர வந்திருக்கிறார். இன முரண்பாடுகள் இல்லை என்று சொல்லுகிறார். அது தவறு. இன முரண்பாடுகள் எப்படி இல்லாமல் போயின? தமிழ்ப் பகுதிகளில் அவருடைய வேட்பாளர்களுக்குக் கிடைத்த வெற்றியை வைத்து அவ்வாறு கூறமுடியாது. இனமுரண்பாடு எங்கிருந்து தோன்றியது ?தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக,தேசமாக ஏற்றுக்கொண்டு பல்லினத்தன்மை மிக்க ஒரு நாட்டைக் கட்டியெழுப்பத் தயாரில்லை என்பதுதான் இன முரண்பாட்டின் வேர். எனவே இனமுரண்பாட்டைத் தீர்ப்பது என்பது நாட்டின் பல்லினத்தன்மையை ஏற்றுக் கொள்ளும் கட்டமைப்பு சார்ந்த மாற்றங்களைச் செய்வதுதான். ஆனால் அதைச் செய்வதற்கு அனுர தயார் இல்லை. அனுரவின் இடத்தில் யார் இருந்தாலும் அதைச் செய்ய மாட்டார்கள். ஏனென்றால் இனப்பிரச்சினைதான் நாட்டைக் கடனாளியாக்கியது என்ற விடயத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. பொருளாதார நெருக்கடிக்கு காரணம், ஊழலும்முறைகேடும் என்றுதான் அவர்களிற் பலர் கூறி வருகிறார்கள். சிங்களப் புத்திஜீவிகளில் பெரும் பகுதியினரும் அப்படித்தான் கூறி வருகிறார்கள். பொருளாதார நெருக்கடியின் மூல காரணத்தை ஏற்றுக் கொள்ள மறுப்பதும் ஒரு வகையில் இனவாதம்தான். ஆனால் இப்பொழுது இனப்பிரச்சினையில் கை வைத்தால், அதாவது ஒரு புதிய யாப்பை உருவாக்கும் விடயத்தில் கை வைத்தால், அது இளம் அரசாங்கத்தைக் கவிழ்த்து விடும் என்று ஒரு விளக்கம் கூறப்படுகிறது. எனவே பொருளாதார நெருக்கடியை ஓரளவுக்குத் தணித்தபின், ஜனாதிபதியின் பதவிக்காலத்தின் இறுதிக் கட்டத்தில் இனப்பிரச்சினையில் கை வைக்கலாம் என்றும் ஒரு விளக்கம் கூறப்படுகிறது. இது வண்டிலுக்குப் பின் மாட்டைக் கட்டும் வேலை. நோய்க்கு உரிய உள்மருந்தை வழங்காமல்,வலி நிவாரணிகளை மட்டும் வழங்கும் ஓர் அரசியல். எனவே இந்த இடத்தில் மாற்றத்தைச் செய்ய அனுரவால் முடியாது. அவருக்குக் கிடைத்த வெற்றியின் கைதி அவர். அந்த வெற்றியை மீறி அவர் சிந்திக்க முடியாது. அதனால்தான் கவர்ச்சியான சுலோகங்களை முன்வைக்கின்றார். நாட்டைச் சுத்தப்படுத்தப் போவதாகக் கூறுகிறார். ஆனால் நாட்டின் உண்மையான கறை அப்படியே இருக்கத்தக்கதாக அதன் விளைவாக வந்த கறைகளை அகற்றுவது என்பது வலி நிவாரணி அரசியல்தான். எனவே நாட்டைச் சுத்தப்படுத்துவது என்றால் இனப்பிரச்சினை என்ற கறையை அகற்ற வேண்டும். அங்கிருந்துதான் சிறீலங்காவைக் கிளீன் பண்ணத் தொடங்க வேண்டும். நிலாந்தன் https://www.nillanthan.com/7073/
-
யாழ் போதனாவின் என்புமுறிவு விடுதிகள் புதிய கட்டிடத்தொகுதிக்கு
யாழ் போதனாவின் என்புமுறிவு விடுதிகள் புதிய கட்டிடத்தொகுதிக்கு adminJanuary 12, 2025 யாழ் போதனா வைத்தியசாலை என்புமுறிவு விடுதிகள் (Ward 14 மற்றும் 17) புதிய கட்டிடத்தொகுதிக்கு இடமாற்றப்பட்டுள்ளன. யாழ் போதனா வைத்தியசாலையில் முன்னதாக மருத்துவ கட்டிடத்தொகுதியில் (நுழைவாயில் 6 முன்புறம்) செயல்பட்டு வந்த என்புமுறிவு சத்திரசிகிச்சை விடுதிகள், தற்போது நவீன வசதிகளுடன் விபத்து மற்றும் அவசர சிகிச்சை கட்டடத்தொகுதியின் 3ஆம் மாடிக்கு மாற்றப்பட்டுள்ளது. புதிய விடுதிகளில் நோயாளிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டுள்ளதால், அவர்கள் மிகவும் இலகுவாக சிகிச்சை பெற முடியும். மற்றும் என்புமுறிவு நோயாளிகளை பார்வையிட வருவோர், வைத்தியசாலையின் நுழைவாயில் இலக்கம் 2A என குறிப்பிடப்பட்டுள்ள வழியாக வைத்தியசாலைக்குள் நுழையமுடியும், விபத்து மற்றும் அவசர சிகிச்சை கட்டடத்தொகுதியின் வலதுபுறத்தில் அமைந்துள்ள மின் தூக்கி (elevator) மூலம் மேலே சென்று, குறித்த விடுதிகளில் உள்ள நோயாளியை பார்வையிடலாம். ஒரு நோயாளியை பார்வையிட, பார்வையிடும் நேரங்களில் ஒரே நேரத்தில் இருவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த அறிவுறுத்தலுக்கு இணங்க நோயாளிகளை பார்வையிட வேண்டுமென யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். https://globaltamilnews.net/2025/210156/
-
மாவீரர் துயிலுமில்லம் முன்பாக அமைதியின்மை
மாவீரர் துயிலுமில்லத்தை நிர்வகிப்பது யார்? January 11, 2025 06:58 pm கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்பதற்காக மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பக தரப்புகள் முனைந்த போது குறித்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் நினைவேந்தலுக்காக 2016 ஆம் ஆண்டு அனுமதிக்கப்பட்டது. இதன் போது பிரதான சுடரினை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் ஏற்றி, மாவீரர் குடும்பங்களும் சுடர் ஏற்றி அஞ்சலிக்கப்பட்டது. இந்த நிலையில் தொடர்ந்து 9 ஆண்டுகளாக அஞ்சலிக்கப்பட்டு வருகின்றது. பல்லாயிரம் மக்கள் திரண்டு அஞ்சலிக்கும் குறித்த மாவீரர் துயிலுமில்லம் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், கடந்த வருடம் பிரதான சுடர் ஏற்றுவதில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக குறித்த துயிலுமில்ல நிர்வகிப்பு தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டது. மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம் எனும் அமைப்பு, மாவீரர் துயிலும் இல்லங்கள் பொது மயப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இன்றைய தினம் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் நிர்வாக தெரிவை நடத்த அழைப்பு விடுத்திருந்தனர். இந்த நிலையில், குறித்த பகுதிக்கு சென்றவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், தற்போது உள்ள நிர்வகிக்கும் தரப்பே தொடர்ந்தும் செயற்பட வேண்டும் என வலியுறுத்தினர். இந்த நிலையில் குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது. மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம் எனும் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் அவ்வமைப்பின் அழைப்பில் சென்ற மக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்பகுதியில் அமைதியின்மை தொடர்ந்த நிலையில் கிளிநொச்சி பொலிஸார் அங்கு சென்றனர். அப்பகுதியில் கூட்டமாக நிற்க வேண்டாம் எனவும், பிரச்சினைகள் இருப்பின் பொலிசில் முறைப்பாடு செய்யுமாறும் தெரிவித்து மக்களை வெளியேற்றினர். படிப்படியாக அங்கிருந்த மக்களை வெளியேற்றிய பொலிஸார் அமைதியின்மையை கட்டுப்படுத்தினர். இதே வேளை, குறித்த துயிலுமில்ல வளாகத்திற்குள் அத்துமீறி செல்ல வேண்டாம் என்ற அறிவித்தலை கரைச்சி பிரதேச சபையினர் ஒட்டியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. குறித்த விடயம் தொடர்பில் முன்னாள் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சுப்பையா தெரிவிக்கையில், மக்களின் நினைவேந்தலை தடுக்கும் வகையிலும், நிகழ்ச்சி நிரல் ஒன்றின் அடிப்படையிலும் மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம் எனும் அமைப்பு செயற்படுவதாக தெரிவித்தார். அதற்கு ஒரு போதும் அனுமதிக்க முடியாது. இதுவரை நடந்த நடைமுறைகளே பின்பற்றப்பட்டு நினைவேந்தல்கள் நடைபெறும். மக்கள் தெளிவாக செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம் எனும் அமைப்பின் தலைவர் பார்த்தீபன் தெரிவிக்கையில், மக்கள் மயப்படுத்தப்பட்ட நிர்வாகத்தை அமைக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இன்று சிறிதரனுடன் தொடர்புடைய சிலர் அங்கு குழப்பங்களை ஏற்படுத்தினர். நாகரீகமற்ற வார்த்தைகளை பேசினர். தொடர்ந்தும் சிறிதரனின் அரசியலிற்குள் துயிலுமில்லங்களை அனுமதிக்க முடியாது. சிறிதரன் தனது வாக்குக்காக கனகபுரம், முழங்காவில், தேராவில், சாட்டி ஆகிய துயிலுமில்லங்களை பயன்படுத்துகிறார். அரசியலிற்குள் சிக்கியுள்ள துயிலுமில்லங்களை மக்கள் மயப்படுத்த வேண்டும். அதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுக்க உள்ளோம் என தெரிவித்தார். மாவீரர் துயிலுமில்லங்களை அரசியல் மயப்படுத்தி, முன்னாள் போராளிகளிற்குள் முரண்பாடுகள் ஏற்படுத்துவது தொடர்பில் பலரும் அதிருப்தி வெளியிடுகின்றனர். https://tamil.adaderana.lk/news.php?nid=198633
-
மாவீரர் துயிலுமில்லம் முன்பாக அமைதியின்மை
கிளிநொச்சி - கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் முன் அமைதியின்மை By Erimalai கிளிநொச்சி - கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தை நிர்வகிப்பது யார்? என்ற சர்ச்சையில் அமைதியின்மை எழுந்த நிலையில் பொலிஸார் தலையீடு செய்து அமைதியை ஏற்படுத்தியுள்ளனர். கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்பதற்காக மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பக தரப்புகள் முனைந்த போது குறித்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. மாவீரர் துயிலுமில்லம் நினைவேந்தலுக்காக 2016ஆம் ஆண்டு அனுமதிக்கப்பட்டது. இதன் போது பிரதான சுடரினை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் ஏற்றி, மாவீரர் குடும்பங்களும் சுடர் ஏற்றி அஞ்சலி செய்யப்பட்டதோடு, தொடர்ந்து 9 ஆண்டுகளாக அஞ்சலிக்கப்பட்டு வருகின்றன. நிர்வாக தெரிவை நடத்த அழைப்பு பல்லாயிரம் மக்கள் திரண்டு அஞ்சலிக்கும் குறித்த மாவீரர் துயிலுமில்லம் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. கடந்த வருடம் பிரதான சுடர் ஏற்றுவதில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக குறித்த துயிலுமில்ல நிர்வகிப்பு தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டது. மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம் எனும் அமைப்பு, மாவீரர் துயிலும் இல்லங்கள் பொது மயப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது. இந்த நிலையில், இன்றைய தினம் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் நிர்வாக தெரிவை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும், குறித்த பகுதிக்கு சென்றவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், தற்போது உள்ள நிர்வகிக்கும் தரப்பே தொடர்ந்தும் செயற்பட வேண்டும் என வலியுறுத்தினர். இதனால், குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது. பிரச்சினைகள் இருப்பின் பொலிஸில் முறைப்பாடு மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம் எனும் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் அவ்வமைப்பின் அழைப்பில் சென்ற மக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்பகுதியில் அமைதியின்மை தொடர்ந்த நிலையில் கிளிநொச்சி பொலிசார் அங்கு சென்று, கூட்டமாக நிற்க வேண்டாம் எனவும், பிரச்சினைகள் இருப்பின் பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறும் தெரிவித்து மக்களை வெளியேற்றினர். படிப்படியாக அங்கிருந்த மக்களை வெளியேற்றிய பொலிசார் அமைதியின்மையை கட்டுப்படுத்தினர். இதே வேளை, குறித்த துயிலுமில்ல வளாகத்திற்குள் அத்துமீறி செல்ல வேண்டாம் என்ற அறிவித்தலை கரைச்சி பிரதேச சபையினர் ஒட்டியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. குறித்த விடயம் தொடர்பில் முன்னாள் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சுப்பையா குறிப்பிடுகையில், மக்களின் நினைவேந்தலை தடுக்கும் வகையிலும், நிகழ்ச்சி நிரல் ஒன்றின் அடிப்படையிலும் மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம் எனும் அமைப்பு செயற்படுவதாக தெரிவித்தார். அதற்கு ஒரு போதும் அனுமதிக்க முடியாது. இதுவரை நடந்த நடைமுறைகளே பின்பற்றப்பட்டு நினைவேந்தல்கள் நடைபெறும். மக்கள் தெளிவாக செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். சட்ட ரீதியான நடவடிக்கைகள் மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம் எனும் அமைப்பின் தலைவர் பார்த்தீபன் தெரிவிக்கையில், மக்கள் மயப்படுத்தப்பட்ட நிர்வாகத்தை அமைக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இன்று சிறீதரனுடன் தொடர்புடைய சிலர் அங்கு குழப்பங்களை ஏற்படுத்தினர். நாகரீகமற்ற வார்த்தைகளை பேசினர். தொடர்ந்தும் சிறீதரனின் அரசியலிற்குள் துயிலுமில்லங்களை அனுமதிக்க முடியாது. சிறீதரன் தனது வாக்குக்காக கனகபுரம், முழங்காவில், தேராவில், சாட்டி ஆகிய துயிலுமில்லங்களை பயன்படுத்துகிறார். அரசியலிற்குள் சிக்கியுள்ள துயிலுமில்லங்களை மக்கள் மயப்படுத்த வேண்டும்.அதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுக்க உள்ளோம் எனவும் தெரிவித்தார். மேலும், மாவீரர் துயிலுமில்லங்களை அரசியல் மயப்படுத்தி, முன்னாள் போராளிகளிற்குள் முரண்பாடுகள் ஏற்படுத்துவது தொடர்பில் பலரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர் https://tamilwin.com/article/kanakapuram-maveerar-thuyilumillam-unrestricted-1736585942
-
தமிழ்ப் பொது வேட்பாளர் திரு.பா. அரியநேத்திரன் அவர்களைக் கட்சியிலிருந்து விலக்க முற்படுவது தொடர்பான – கண்டன அறிக்கை!
பிரான்ஸில் பச்சை மட்டை அடி கொடுக்க விசுகு ஐயா ஏவிவிட்டால் சாத்த ஆட்கள் இருப்பதுபோல ஜேர்மனியிலும் இருக்கின்றார்களா?🤪
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
சமூக விடுதலைப் போராட்டத்தின் கதாநாயகன் பெரியார்: அன்புமணி ராமதாஸ் ஆதங்கம் சென்னை: தந்தைப் பெரியாரை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. பெரியாரின் கொள்கைகளில் உடன்பாடு இல்லாதவர்கள் அவரை கொள்கைரீதியாக விமர்சிக்கலாம்; மாறாக அவர் மீது அவதூறு பரப்புவதை அனுமதிக்க முடியாது பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தந்தைப் பெரியாரின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில், அவரைப் பற்றி அடிப்படை இல்லாத அவதூறுகள் பரப்பப்படுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும். பெரியாரை போற்றுவதற்கு ஆயிரமாயிரம் காரணங்கள் இருக்கும் நிலையில், அவற்றை பயன்படுத்திக் கொள்ளாமல் பெரியாரை சிறுமைப்படுத்தும் வகையிலான எந்த செயலையும் பாட்டாளி மக்கள் கட்சி அனுமதிக்காது. இந்திய விடுதலைப் போராட்டத்தின் கதாநாயகர் மகாத்மா காந்தி என்றால், தமிழ்நாட்டின் சமூக விடுதலைப் போராட்டத்தின் கதாநாயகன் தந்தைப் பெரியார் அவர்கள் தான். தமிழ்நாட்டில் செண்பகம் துரைராஜன் வழக்கில் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட போது, சமூகநீதியைக் காப்பதற்காக, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை திருத்த வேண்டும் என்ற போராட்டத்தை முன்னெடுத்து வெற்றி கண்டவர் தந்தைப் பெரியார் தான். சட்டநாதன் ஆணையத்தின் பரிந்துரைப்படி, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க கலைஞர் அரசு மறுத்த போது, அதைக் கண்டித்ததுடன், அரசுக்கு அழுத்தம் கொடுத்து இட ஒதுக்கீடு 31% ஆக உயர்த்தப்படுவதற்கு காரணமாக இருந்தவர் தந்தைப் பெரியார். அதனால் தான் அவரை கொள்கை வழிகாட்டியாக பாட்டாளி மக்கள் கட்சி ஏற்றிருக்கிறது. தமது கொள்கையில் உறுதியாக இருந்தாலும் தம்மைத் தேடி வந்தவர்களின் உணர்வுகளையும், மத நம்பிக்கைகளையும் மதித்தவர். தமது வீட்டுக்கு வந்த திருவிகவின் நம்பிக்கையை மதித்து, அவர் இட்டுக் கொள்வதற்காக திருநீறு சம்படத்தை ஏந்தி வந்தவர் அவர். 1927ஆம் ஆண்டு குடி அரசு இதழைத் தொடங்கிய போது முதல் இதழிலேயே வள்ளலாரின் வரிகளை பயன்படுத்தியவர் அவர். வள்ளலார் சத்திய ஞானசபைக்கு சென்ற போது, அங்கு ‘‘கொலை, புலை தவிர்த்தவர்கள் மட்டுமே உள்ளே வரவும்’’ என எழுதப்பட்டிருந்தது. அதைக் கண்டதும் ‘‘நான் எல்லா அசைவ உணவையும் சாப்பிடுபவன். உள்ளே வர மாட்டேன்’’ என மறுத்தவர் பெரியார். அவரது வரலாறும், சாதனைகளும் மிக நீண்டவை. அவற்றை முழுமையாக படிக்காமல், அரைகுறை புரிதலுடன் அவற்றை விமர்சிப்பதை ஏற்க முடியாது. அவரது புகழ் வெளிச்சத்தை அரைகுறை அவதூறுகளால் ஒருபோதும் மறைக்க முடியாது. தந்தைப் பெரியாரை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. பெரியாரின் கொள்கைகளில் உடன்பாடு இல்லாதவர்கள் அவரை கொள்கைரீதியாக விமர்சிக்கலாம்; மாறாக அவர் மீது அவதூறு பரப்புவதை அனுமதிக்க முடியாது. இந்த அடிப்படை உண்மையை அனைவரும் புரிந்து கொண்டு அனைவரும் அதற்கேற்றவாறு நடந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' எனத் தெரிவித்துள்ளார் https://www.kamadenu.in/news/tamilnadu/95159-periyar-the-protagonist-of-the-social-liberation-struggle-anbumani-ramadoss-1.html
-
அங்கீகரிக்கப்பட்ட கட்சியானது நாம் தமிழர் கட்சி: சின்னம் கிடைப்பதில் இழுபறி!
அங்கீகரிக்கப்பட்ட கட்சியானது நாம் தமிழர் கட்சி: சின்னம் கிடைப்பதில் இழுபறி! சென்னை: நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம் வழங்கி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் அக்கட்சிக்கு சின்னம் கிடைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மக்களவைத் தேர்தலில் 8.22 சதவீத வாக்குகளை பெற்றதால், நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதனை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம், அனுப்பியுள்ள கடிதத்தில், ‘தேர்தல் சின்னங்கள் சட்டம் 1968, பிரிவு 6ஏ-ன் விதிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிபந்தனைகளை கடந்த மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி பூர்த்தி செய்திருக்கிறது. எனவே தமிழகத்தின் மாநில கட்சியாக அங்கீகாரம் வழங்கப்படுகிறது. அக்கட்சி தனக்கு 'நிலத்தை உழும் விவசாயி’ அல்லது ‘புலி’ சின்னம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தது. ஆனால் இந்த சின்னங்கள் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டிருப்பதால் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்க முடியாது. எனவே தேர்தல் ஆணைய இணையதளத்தில் உள்ள இலவச சின்னங்களில் மூன்றினை தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாம் தமிழர் கட்சி மீண்டும் 3 புதிய சின்னங்களை தேர்வு செய்து தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும். அதில் ஒரு சின்னம் அக்கட்சிக்கு வழங்கப்படும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் சின்னம் பெறும் முயற்சியில் நாதக இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. https://www.kamadenu.in/news/tamilnadu/95164-naam-tamilar-katchi-is-a-recognized-party.html
-
பிரபல ஐரோப்பிய நாட்டின் பிரதமர் : கொச்சியில் சும்மா சுற்றி திரிந்தது ஏன்?
பிரபல ஐரோப்பிய நாட்டின் பிரதமர் : கொச்சியில் சும்மா சுற்றி திரிந்தது ஏன்? Kumaresan MJan 10, 2025 14:40PM கடந்த ஜனவரி 4 ஆம் தேதி கொச்சியிலுள்ள டல்க் டல்க் ஹோட்டலில் இருந்து கொச்சி போர்ட் பகுதி ஆட்டோ ஓட்டுநரான சித்திக் ஹூசைனுக்கு போன் அழைப்பு வந்துள்ளது. ஆட்டோவில் ஒரு விவிஐபி பயணித்து நகரை சுற்றி பார்க்க ஆசைப்படுகிறார். அதற்காக, 4 ஆட்டோக்கள் வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதையடுத்து, சித்திக் தனது ஆட்டோவுடன் மேலும் 3 ஆட்டோக்களுடன் அந்த ஹோட்டலுக்கு சென்றுள்ளார். பின்னர், ஆட்டோக்கள் முற்றிலும் சோதனையிடப்பட்டுள்ளன. இதை பார்த்ததும் சித்திக்கிற்கு யார் அந்த விவிஐபி என்கிற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. கொஞ்ச நேரத்தில் சாதாரண சட்டை போட்டுக்கொண்டு ஒருவர் வந்துள்ளார். அவரை சித்திக்கிடத்தில் அறிமுகப்படுத்தியுள்ளனர். இவர்தான் விக்டர் ஆர்பின். ஹங்கேரி நாட்டு பிரதமர் என்று அறிமுகப்படுத்தினர். இத்தனை எளிமையா? என்று அவரை பார்த்து சித்திக் ஆச்சரியப்பட்டு போனார். தொடர்ந்து, ஹங்கேரி பிரதமரும் அவரின் இரு மகள்களும் சித்திக்கின் ஆட்டோவில் ஏறி பயணித்துள்ளனர். பாதுகாவலர்கள் மற்ற ஆட்டோக்களில் பின் சென்றுள்ளனர். ஹங்கேரி பிரதமருடன் தனது அனுபவத்தை சித்திக் பகிர்ந்து கொண்டதாவது, ‘ எனது ஆட்டோவில் ஏறிக் கொண்ட ஹங்கேரி நாட்டு பிரதமர் ஆட்டோவை ஓட்டி பார்க்க ஆசைப்பட்டார். ஆனால், அது சட்டத்தை மீறிய செயல் என்பதால் அவரிடத்தில் விளக்கி கூறினேன். பின்னர், டிரைவர் சீட்டில் அமர வைத்து சும்மா ஹேண்ட்பாரை பிடித்து இருக்கும்படி மட்டும் செய்தேன். மட்டஞ்சேரியிலுள்ள டச் அரண்மனை, சாந்தாக்ருஸ் கதீட்ரல் ஆலயம், யூதர்கள் தெரு போன்றவற்றை அவருக்கு சுற்றி காண்பித்தேன். மதியம் லஞ்ச் சாப்பிட ஹோட்டலுக்கு சென்றார்கள். அப்போது, ஹங்கேரி பிரதமர் எங்களையும் கட்டாயப்படுத்தி உணவருந்த செய்தார். அவருக்கு பக்கத்து டேபிளில் இருந்து நாங்கள் சாப்பிட்டோம். கடந்த 28 வருடங்களான ஆட்டோ ஓட்டி வருகிறேன். இந்த வாழ்க்கையில் ஹங்கேரி பிரதமர் என் ஆட்டோவில் பயணித்தது நல்ல நினைவாக அமைந்தது’ என்கிறார். https://minnambalam.com/india-news/when-hungarian-pm-took-autorickshaw-ride-around-fort-kochi/
-
விமர்சனம்: வணங்கான்!
விமர்சனம்: வணங்கான்! KaviJan 11, 2025 12:21PM உதயசங்கரன் பாடகலிங்கம் ’கும்பிடு’ போடும்படியாக இருக்கிறதா? ’நாச்சியார்’ படத்திற்குப் பிறகு ஏழு ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் இயக்குனர் பாலாவின் படம். இதுவே ‘வணங்கான்’ படத்தின் மீதான கவனக்குவியலுக்கான முதல் காரணம். சூர்யாவைக் கொண்டு தொடங்கப்பட்ட இத்திரைப்படத்தில் பின்னர் அருண்விஜய் நாயகனாக நடித்ததெல்லாம் அப்புறம் தான் நம் நினைவுக்கு வரும். படத்தின் ட்ரெய்லர், ஸ்னீக்பீக் எல்லாம் பார்த்தாலும், ‘இந்தப் படத்தில் என்ன செய்திருக்கிறார் பாலா’ என்ற எதிர்பார்ப்பே இதன் யுஎஸ்பி. சரி, ‘வணங்கான்’ படத்தில் நமக்கு எப்படிப்பட்ட திரையனுபவத்தை வழங்கியிருக்கிறார் இயக்குனர் பாலா? பாலா படங்களின் கதை!? ‘எனது படங்களில் கதையை விடக் கதாபாத்திரங்களுக்கே முக்கியத்துவம் அதிகம்’ என்பது இயக்குனர் பாலாவே அடிக்கடி சொல்வது. சேதுவில் விக்ரம், நந்தாவில் சூர்யா, பிதாமகனில் விக்ரம் மற்றும் சூர்யா, நான் கடவுளில் ஆர்யா என்று நாயக பாத்திரங்கள் நம் மனதில் நிற்பதுபோலவே, அப்படங்களில் வரும் மிகச்சிறிய பாத்திரங்களும் கூட நம் ரசனைக்கு நெருக்கமானதாக இருக்கும். ஆனால், நம் வாழ்வில் இருந்து அவை வெகுதொலைவில் இருக்கும். அதுவே பாலா படங்களின் சிறப்பு. ‘வணங்கான்’னைப் பொறுத்தவரை, பாலாவின் இதர படங்களின் சாயலிலேயே இதன் கதையும் இருக்கிறது. ஒரு இளைஞன். வாய் பேச இயலாத, காது கேளாத மாற்றுத்திறனாளி. அவருக்குக் கோபம் இமயமலை அளவுக்கு வரும். அவருக்கு ஒரு தங்கை. சில நேரங்களில் அப்பெண்ணின் வாழ்வு தன்னை நம்பித்தான் இருக்கிறது என்று யோசிக்க முடியாத அளவுக்குக் கோபத்தில் எதையாவது செய்துவிடுவது அந்த நபரின் குணம். அப்படிப் பலரிடம் வம்பு வளர்க்கிறார். அப்படிப்பட்ட நபர் ஒரு மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில் பணியில் சேர்கிறார். அங்கு ஒரு அசம்பாவிதம் நேர்கிறது. அதன்பின் அவர் என்ன செய்தார் என்பதே ‘வணங்கான்’ படத்தின் இரண்டாம் பாதியாக விரிகிறது. இந்த படத்தில் நாயகனின் பெயர் கோட்டி. அவரது தங்கை பாத்திரத்தின் பெயர் தேவி. நாயகனைக் காதலிக்கும் பெண்ணாக வருபவரின் பெயர் டீனா. இன்னும் தேவாலயம் சம்பந்தப்பட்டவர்கள், பஜாரில் கடை வைத்திருக்கும் இஸ்லாமியர், காவல்நிலையம், நீதிமன்றத்தில் பணியாற்றுபவர்கள், மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில் இருப்பவர்கள் என்று சுமார் ஐம்பது, அறுபது பேராவது திரையில் தோன்றியிருப்பார்கள். இப்பாத்திரங்களில் சுமார் நான்கைந்து பாத்திரங்களே நம் மனதில் பதிகின்றன. அவற்றின் பின்னணியை விவரிக்கவே திரைக்கதையில் காட்சிகள் இருக்கின்றன. இந்தக் குறையைப் பாலாவின் முந்தைய படங்களில் நாம் காண முடியாது. ‘வணங்கான்’ படத்தின் பலவீனங்களில் முதலில் கண்ணில் படுவது இதுவே. செறிவு குறைவு! கோட்டியாக வரும் அருண் விஜய்யின் நடிப்பு எப்படியிருக்கிறது என்று தனியாகச் சொல்லத் தேவையில்லை. பாலாவின் நாயகர்கள் எப்படியிருப்பார்களோ, அதன் சாயல் தெரியாதவாறு தன்னை வெளிப்படுத்த ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். டீனாவாக வரும் ரோஷினி பிரகாஷின் காட்சிகள், வழக்கமான கமர்ஷியல் படங்களைப் பிரதிபலிக்கின்றன. நாயகனை ஏன் இந்த நாயகி இவ்வளவு தீவிரமாகக் காதலிக்கிறார் என்பதற்கான விளக்கம் திரைக்கதையில் எங்கும் இல்லாத காரணத்தால், ‘இந்தப் பொண்ணுக்கு ஏன் இந்த வேலை’ என்றே நமக்குத் தோன்றுகிறது. ‘வணங்கான்’னின் பெரிய ப்ளஸ், நாயகனின் தங்கையாக வரும் ரிதா. பதின்ம வயதுப் பெண்ணாகத் திரையில் தெரியாவிட்டாலும், அவரது நடிப்பு அதனை ஏற்கச் செய்கிறது. அருண் விஜய்யோடு அவர் பேசுகிற காட்சிகள் ஆகச் சிறப்பு. காவல் துறை அதிகாரியாக வரும் சமுத்திரக்கனி, நீதிபதியாக வரும் மிஷ்கின் இருவருமே தங்களது பிரபல்யத்தால் தாங்கள் வரும் காட்சிகளை பிரகாசப்படுத்தியிருக்கின்றனர். சண்முகராஜன், அவரது மனைவியாக வருபவர், பிருந்தா சாரதி, பாதிரியாராக வரும் பாலசிவாஜி, பாண்டி ரவி வருமிடங்கள் ‘சீரியசாக’ இருந்தாலும், அக்காட்சிகளில் சில சிரிப்பூட்டுவதாக இருக்கின்றன. முதல் பாதியில் ‘சினிமாத்தனத்தை’ நிறைத்திருக்கிறது ஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவு. இரண்டாம் பாதியில் அந்த எண்ணமே மறைகிற அளவுக்கு உழைப்பைக் கொட்டியிருக்கிறது. படத்தொகுப்பாளர் சதீஷ் சூர்யா, முன்பாதியில் பல விஷயங்களைச் சுருக்கமாகக் காட்ட முயன்றிருக்கிறார். அதேநேரத்தில், அது திருப்தி தரும் விதமாகவும் இல்லை. பின்பாதியில் முழுக்கக் கதை சொல்லலில் கவனம் செலுத்தியிருக்கிறார். இன்னும் ஆர்.பி.நாகுவின் கலை வடிவமைப்பு, ஜி.வி.பிரகாஷின் பாடல்கள், சாம்.சி.எஸ்ஸின் பின்னணி இசை என்று பல தொழில்நுட்ப அம்சங்கள் ‘வணங்கான்’னில் சிறப்பாக அமைந்திருக்கின்றன. ஆனால், அவையனைத்தும் பாலாவின் முந்தைய படங்கள் போன்று மிகச்சிறப்பானதாக இல்லை. அதனால், ‘வணங்கான்’ உள்ளடக்கம் செறிவு குறைவாக அமைந்துள்ளதோ என்ற எண்ணம் நம்முள் படர்கிறது. ‘நாச்சியார்’ படத்திலேயே பாலாவின் அவசரகதியிலான மேக்கிங் குறையாகத் தெரியும். இதிலும் அது நேர்ந்திருக்கிறது. ஒரு காட்சியைத் திரும்பத் திரும்பப் பார்க்கிறபோது, ‘இதைவிடச் சிறப்பாக இக்காட்சியை ஆக்க முடியாது’ என்ற நம்பிக்கையைத் தோன்றச் செய்தவர், ‘வணங்கான்’னில் ‘இன்னும் பெட்டரா பண்ணியிருக்கலாமோ’ என்று எண்ண வைத்திருக்கிறார். திரைக்கதையைச் செப்பனிட்டிருக்கலாம்! நாயகன், அவரது தங்கை, நாயகி பாத்திரங்கள் என்று ஒவ்வொன்றையும் அறிமுகப்படுத்த, குணாதிசயங்களை விளக்க என்று பல காட்சிகளைக் கொண்டிருக்கிறது முன்பாதி. அந்தக் காட்சிகள் ரொம்பச் சாதாரணமாக இருக்கின்றன. அது மட்டுமல்லாமல், கதை நிகழும் களம், கதாபாத்திரங்களின் பின்னணி, மையக்கதையின் வீரியத்தோடு சம்பந்தமே இல்லாமல் அவை அமைந்திருப்பது இப்படத்தின் பலவீனம். சேது, நந்தா, பிதாமகன் போன்ற படங்களில் இது போன்ற குறைகளை நாம் பார்க்க முடியாது. ‘நான் கடவுள்’ போன்ற படங்களில் கதாபாத்திரங்களின் செயல்பாடுகளை சுவாரஸ்யமானதாக வடிவமைத்து அக்குறையைத் தெரியாமல் செய்திருந்தார் பாலா. ‘வணங்கான்’னில் திரைக்கதையைச் செப்பனிட்டு அக்குறைகளைக் களைய பாலா முயற்சிக்கவில்லை. ‘நந்தா’, ‘பரதேசி’ படங்களைப் போலவே இதிலும் குறிப்பிட்ட சில குழுக்களை வம்பிழுத்திருக்கிறார் பாலா. அது மக்களைச் சிரிக்க வைக்கும் என்றும் நம்பியிருக்கிறார். அந்தக் காட்சிகள் சர்ச்சைகளை உருவாக்கலாம். போலவே, இதில் வரும் சில அரைநிர்வாணக் காட்சிகளும் சர்ச்சைக்குரியதாக இருக்கின்றன. அவற்றைக் காட்சிப்படுத்துவதில் தனது மேதைமையை பாலா வெளிப்படுத்தியிருக்கலாம். ஏற்கனவே வந்த பாலாவின் படங்களிலும் சில ரசிகர்கள் குறை சொல்லச் சில விஷயங்கள் உண்டு. ஆனால், அவை அனைத்தும் அந்தந்த ரசிகர்கள் சம்பந்தப்பட்டதாகவே இருக்கும். ‘வணங்கான்’னில் அது பாலாவின் கதை சொல்லல், காட்சியாக்கம் சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. அதுவே இப்படத்தின் பலவீனம். அடுத்த படத்திலாவது, தன் மீது படிந்திருக்கும் புகழ் வெளிச்சத்தை உதறிவிட்டு ‘சேது’ தந்த மனநிலையோடு இயக்குனர் பாலா களமிறங்க வேண்டும். அதன் அவசியத்தை உணர்த்தியிருக்கிறது ‘வணங்கான்’. அந்த வகையில், இந்த படத்திற்கு ஒரு ‘கும்பிடு’ போடலாம். ரசிகர்களின் தனிப்பட்ட ரசனையைப் பொறுத்து அந்த ‘கும்பிடு’களின் தன்மை வேறுபடும்..! https://minnambalam.com/cinema/arun-vijay-vanangaan-movie-review-balas-template-revenge-drama-fails-to-make-us-feel/
-
மாவீரர் துயிலுமில்லம் முன்பாக அமைதியின்மை
முன்னாள் ஈபிடிபி எம்பி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தை பொறுப்பு எடுக்க புதிய குழுவை அமைக்கமுயன்றபோது அமைதியின்மை ஏற்பட்டது.
-
இந்தியா - இலங்கை நட்புறவு பற்றிய உயர்மட்ட வட்டமேசை கலந்துரையாடல்
இந்தியா - இலங்கை நட்புறவு பற்றிய உயர்மட்ட வட்டமேசை கலந்துரையாடல் Published By: Digital Desk 2 11 Jan, 2025 | 11:54 AM “இந்தியா - இலங்கை நட்புறவு பற்றிய உயர்மட்ட வட்டமேசை” கலந்துரையாடல் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தால் நேற்று வியாழக்கிழமை (10) ITC ரத்னதீபவில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவின் வரவேற்பு உரையுடன் இந்த கலந்துரையாடல் ஆரம்பமானது. இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் இருதரப்பு உறவின் முக்கிய அம்சங்களைப் பற்றி விவாதிப்பதற்கும் இரு நாடுகளுக்கு இடையே மேம்பட்ட ஒத்துழைப்பிற்கான வழிகளை முன்மொழிவதற்கும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் சந்தோஷ் ஜா, சிறந்த பொருளாதார வல்லுனரும் வர்த்தக நிபுணருமான கணேஷ் விக்னராஜா,உள்ளூர் சிந்தனைக் குழுக்கள் மற்றும் கருத்துத் தலைவர்களின் பிரதிநிதிகள் மற்றும் உயர் ஸ்தானிகராலயத்தின் தொடர்புடைய பிரிவுகளை வழிநடத்தும் அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/203548
-
படுகொலையாளிகளுக்கு கூட விடுதலை ! போராளிகளுக்கு கிடைக்காதா?
படுகொலையாளிகள் பொதுமன்னிப்பில் விடுவிக்கப்படும்போது தமிழ் மக்களுக்காக போராடியவர்களை ஏன் விடுதலை செய்யக்கூடாது? - சிறிநேசன் கேள்வி 11 Jan, 2025 | 12:32 PM கடந்த ஆட்சிக்காலத்தில் படுகொலையாளிகள் கூட பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில், தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடியவர்களை ஏன் விடுதலை செய்யக்கூடாது என மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் கேள்வியெழுப்பினார். தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி வடகிழக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் கையெழுத்துப் போராட்டம் இன்றைய தினம் (11) கிழக்கு மாகாணத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் வடகிழக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் இந்த போராட்டமானது கிழக்கின் மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்டது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளையும், புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட பின்னர் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்ட பின்பும் மீண்டும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளையும் புதிய அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. போராளிகள் நலன்புரி சங்கத்தினால், அச்சங்கத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் இ.செல்வநாதன் தலைமையில் இக்கையெழுத்துப் போராட்டம் இன்று காலை மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையத்தில் நடத்தப்பட்டது. இதில் மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், மாவட்ட அமைப்பாளர் குககுமார், சிவில் சமூக செயற்பாட்டாளர் எஸ்.சிவயோகநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர். மழைக்கு மத்தியிலும் பெருமளவான மக்கள் ஆர்வத்துடன் வருகைதந்து கையெழுத்துப் போராட்டத்தில் பங்குகொண்டமை முக்கிய விடயமாகிறது. இதன்போது கருத்து தெரிவித்த சிறிநேசன், பல ஆண்டுகளாக சிறையில் வாடிக்கொண்டிருக்கின்ற, எமது விடுதலைக்காக போராடிய தமிழ் கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்கிற அறவழிப் போராட்டத்தினை தற்போது முன்னெடுத்திருக்கின்றனர். பயங்கரவாத தடைச் சட்டம் எனும் பெயரில் மிக மோசமான, மனித குலத்துக்கு எதிரான சட்டம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இதன் மூலம் அப்பாவிகளை கூட பயங்கரவாதிகள் என்ற பார்வைக்கு உட்படுத்தப்படும் மிக மோசமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது. தற்போது ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இந்த சட்டத்தினை நீக்குவோம் என்னும் உத்தரவாதத்தை அளித்தும் கூட இன்னும் அந்த பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த கொடிய பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் எமது பத்து தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் விரைவாக விடுதலை செய்யப்படவேண்டும். இவர்கள் நீண்டகாலமாக சிறைச்சாலையில் நாட்களை கழித்துவிட்டார்கள். இருக்கும் காலத்திலாவது தமது உறவுகளுடன் இணைந்து வாழ்வதற்கு மாற்றத்தினை உருவாக்கப்போவதாகக் கூறும் புதிய அரசாங்கம் அதனை செய்யவேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/203554
-
தமிழ்ப் பொது வேட்பாளர் திரு.பா. அரியநேத்திரன் அவர்களைக் கட்சியிலிருந்து விலக்க முற்படுவது தொடர்பான – கண்டன அறிக்கை!
தமிழ்ப் பொது வேட்பாளர் திரு.பா. அரியநேத்திரன் அவர்களைக் கட்சியிலிருந்து விலக்க முற்படுவது தொடர்பான – கண்டன அறிக்கை! Vhg ஜனவரி 11, 2025 தமிழ்ப் பொது வேட்பாளர் திரு. பா.அரியநேத்திரன் அவர்களைக் கட்சியிலிருந்து விலக்க முற்படுவது தொடர்பான – கண்டன அறிக்கை! தமிழ் தேசிய அரசியல் வரலாற்றில், பல தசாப்தப் பாரம்பரியம் கொண்ட மூத்த தமிழ் கட்சிகளில் ஒன்றான, தமிழரசுக் கட்சியின் சமகாலச் செயற்பாடுகள், கட்சியின் வரலாற்றில் என்றுமில்லாதவாறு மோசமடைந்துள்ளது. தமிழரசு கட்சி எந்தத் தனி நபர்களின் சொத்தும் கிடையாது. இது ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக உருவாக்கப்பட்ட முதுபெருங்கட்சியாகும். கடந்த பல மாதங்களாக இந்தக் கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் சிதைவடைந்து, சில நபர்களின் குழுநிலைவாதச் சர்வாதிகாரக் கையாள்கை தலைதூக்கியுள்ளது. இது போன்ற செயற்பாடுகள் எமக்கும், தமிழரசுக் கட்சியை நேசிக்கும் புலம்பெயர் தமிழ் மக்களுக்கும் மிகுந்த வேதனையைத் தோற்றுவித்துள்ளது. முக்கியமாக, தமிழ் தேசிய கொள்கையின் அடிப்படையில் கடந்த சனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக 83 குடிசார் அமைப்புகள், 7 தமிழ் தேசியக் கட்சிகள், அனைத்துப் புலம்பெயர் அமைப்புகள், வடக்கு, கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், முன்னாள் போராளிகள், தமிழீழ மக்கள் எல்லோரும் இணைந்து, தமிழ் தேசியக் கொள்கையின் அடிப்படையில், கடந்த சனாதிபதித் தேர்தலில், தமிழ் பொது வேட்பாளராகத் திரு.பா. அரியநேத்திரன் அவர்களை முன்நிறுத்தி, அந்த கொள்கைக்காக 2,26,343 தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று, தமிழ் தேசிய உறுதிப்பாட்டை நிரூபித்த, திரு.பா. அரியநேத்திரன் அவர்களை, 28/12/2024 அன்று நடைபெற்ற, தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக் கூட்டத்தில் கட்சியில் இருந்து உத்தியோகபற்றற்ற முறையில் இடைநிறுத்தலாம் அல்லது விலக்கலாமெனக் கட்சியின் பேச்சாளர் திரு. சுமந்திரன் அறிவித்திருப்பது, தமிழரசுக் கட்சி, தான் வகுத்துக் கொண்ட, தமிழ் தேசியக் கொள்கைக்கு முரணாகச் செயற்படுகின்றதா? என்ற வலுவான சந்தேகத்தை எமக்கு ஏற்படுத்தியுள்ளது. அத்தோடு, தமிழ் தேசியக் கொள்கை என்பது, இலங்கைத் தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கும்போது தந்தை செல்வா முன்வைத்த சமஷ்டிக் கொள்கையாகும். தமிழ் தேசியக் கொள்கையின் அடிப்படையில்தான், தமிழ் பொதுவேட்பாளர் சனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு, காத்திரமான வாக்குகளைப் பெற்றிருந்தார். இதற்கு முரணாக, ஈழத் தமிழினத்தின் உரிமைகளை முன்னிறுத்தாமல், சலுகைகளுக்காக காலங்காலமாக இனவாதச் சிங்களக் கட்சிகளை, ஆதரிப்பதும், அதனை ஆதரிக்காத தமிழ்த் தேசியவாதிகளை ஓரங்கட்ட விளைவதும், வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும். முதலில் தமிழரசுக் கட்சியின் அடிப்படைக் கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணாக, மத்திய குழுவைச் செயற்படவைக்கும், உத்தியோகத்தர் சபை உறுப்பினர்களில் சிலரைக் கட்சியிலிருந்து விலக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்தோடு தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் பேச்சாளருமாகிய திரு.ம. சுமந்திரன் அவர்களால் கட்சியில் குழு நிலைவாதச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதை நாம் அவதானித்து வருகின்றோம். முதல் கட்டமாக தனது துதிபாடிகளை வைத்து, கட்சியின் செயற்பாடுகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து, கட்சியின் புதிய தலைமைத்துவத்தையும், கட்சியின் பொதுக் குழுவையும் கூட்ட முடியாதவாறு முடக்கினார். பின்னர் தமக்கேற்றவாறு மாவட்டக் கிளைகளை மாற்றியமைத்தார். மத்திய குழுவில் தான் விரும்புவதை அமுல்படுத்துவதற்குச் சாதகமான அறுதிப் பெரும்பான்மையை திட்டமிட்டுப் பெறுவதற்காக, மத்திய குழுக் கூட்டங்களுக்குத் தமக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் அறிவித்துவிட்டு, தான் எதிர்பார்த்தவாறு சர்வாதிகாரமாகக் கட்சியை வழிநடாத்தி வருகின்றார். இவற்றைத் தட்டிக் கேட்பதற்கு திராணியற்றவர்களாக, தற்போதைய பதில் தலைவர் திரு. சி.வி.கே.சிவஞானம் அவர்களும், தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்களும் இருப்பது, இந்தக் கட்சியின் வருங்கால இருப்புத் தொடர்பான பலத்த அவநம்பிக்கையை எமக்கு ஏற்படுத்தியுள்ளது. “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” திருமதி.ச.அசோகா பொறுப்பாளர் தமிழீழ அரசியல்துறை அனைத்து நாடுகள் https://www.battinatham.com/2025/01/blog-post_30.html
-
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஓரிரு நாட்களில் பதவி விலகலா? புதிய தகவல்கள்
- சிவனேசதுரை சந்திரகாந்தன் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்!
பிள்ளையானால் எனக்கு தொடர்ச்சியாக அச்சுறுத்தல் முன்னர் பதவி வகித்த அரசாங்கங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இராஜாங்க அமைச்சராகவும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராகவும் இருந்த சிவனேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) , அவருக்குரிய சிறப்புரிமையையும் பாவித்து பாராளுமன்றத்திற்குள்ளும், அவருக்கு இருக்கின்ற அரசியல் செல்வாக்கை பாவித்து பாராளுமன்றத்திற்கு வெளியிலும் தொடர்ச்சியாக தனக்கு அச்சுறுத்தல் விடுத்து வந்ததாக காணி சீர்திருத்த ஆணைக் குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் தெரிவித்துள்ளார். சிவனேசதுரை சந்திரகாந்தன் இராஜாங்க அமைச்சராகவும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராகவும், பதவி வகித்த வேளையில் தனக்கு விடுக்கப்பட்டிருந்த அச்சுறுத்தல் தொடர்பில் அவர் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றில் தொடர்ந்த வழக்கு வெள்ளிக்கிழமை(10) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே மாவட்ட பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வாறான அச்சுறுத்தல்கள் தொடர்பில் நான் அவ்வப்போது பொலிஸ் நிலையத்திலே முறைப்பாடு செய்திருந்தேன். இந்த முறைப்பாடு தொடர்பாக, என்னை மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து உடனடியாக இடமாற்றம் பெற்றுச் செல்லுமாறும், அவ்வாறு செல்லாது இருந்தால் அங்கு போவேன், இங்கு போவேன் எனக் கூறினார். இது கோட்டபாய ராஜபக்சவின் அரசாங்கம் இதில் என்ன நடக்கும் எனத் தெரியும்தானே, நான் உன்னை கௌரவமாக அனுப்ப வேண்டும் என நினைக்கின்றேன் இல்லையேல் நீ அவமானப்பட்டு போக வேண்டி வரும் என என்னை அவர் எச்சரித்து அச்சுறுத்தி இருந்தார். அது மாத்திரமன்றி அவருடன் சேர்ந்த இன்னும் இருவர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவருடைய செயற்பாடுகளுக்கு என்னை ஒத்துப் போகுமாறும் இல்லாவிட்டால் பிரச்சினைகள் வரும் எனவும் என்னிடம் தெரிவித்திருந்தார்கள். அது தொடர்பான ஒலிப் பதிவுகள் அனைத்தையும் நான் பொலிசாரிடம் ஒப்படைத்திருக்கின்றேன். இந்த வழக்குத் தொடர்பில் பொலிசாரினால் எனக்கு கடிதம் தரப்பட்டிருக்கிறது. அந்தக் கடிதத்திலேயே குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினரை பொலிசார் தொடர்பு கொள்வதாகவும் அவரது வாக்குமூலத்தை பெறமுயற்சிப்பதாகவும் அது சம்பந்தமாக நீதிமன்றத்திலே அறிக்கையிடப்பட்டுள்ளதாகவும் பொலிசார் என்னிடம் தெரிவித்தனர். ஆனால் அவரிடம் வாக்குமூலம் பெறவில்லை என்பதை அவர்கள் அப்போது குறிப்பிட்டிருக்கவில்லை. நான் என்னுடைய தனிப்பட்ட சட்டத்தரணி மூலம் நீதிமன்றத்திலே சமர்ப்பணம் செய்து அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. அவர் இரண்டு நோட்டீஸ்கள் வரவில்லை எனத் தெரிவித்திருந்தார். பின்னர் அவருடைய காரியாலயத்தின் கதவினிலே ஒரு நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இந்நிலையில்தான் அவர் இன்று(வெள்ளிக்கிழமை) நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். அவரால் எனக்கு குறிப்பிடப்படுகின்ற விடயம் என்னவெனில், அவருடைய காலப் பகுதியில் அவருடைய செயற்பாடுகளுக்கு நான் துணை போகவில்லை என்பதேயாகும்.அவர் எனக்கு திட்டமிட்டு பல அச்சுறுத்தல்களை விடுத்திருந்தார். அந்த அச்சுறுத்தலின் விளைவாக அரச உத்தியோகத்தர் ஆகிய நான் நிற்கதிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளேன். ஏற்கனவே நான் அரச கடமையில் இருந்த போது துப்பாக்கிச் சூட்டிற்கும் உள்ளானேன். அதன் பின்னர் எனக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. அந்தப் பாதுகாப்பை கூட மீளப் பெறுவதற்கு அவருடன் சேர்ந்த இன்னும் சிலர் ஒன்று சேர்ந்து பிழையான அறிக்கைகளை விடுத்து என்னுடைய பாதுகாப்புகளை நீக்குவதற்காக செயற்பட்டிருந்தார்கள். அதற்காகவும் நான் உயர் நீதிமன்றில் வழக்கொன்றை தாக்கல் செய்திருக்கின்றேன். அது மாத்திரமின்றி மட்டக்களப்பு மாவட்டத்திலே அவருடைய பதவிக் காலத்திலே அரசாங்க கடமையை மேற்கொள்வது என்பது பெரும் துர்ப்பாக்கிய நிலைமையாகவே இருந்தது. இதனை அனைவரும் அறிவார்கள். யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் , தனவந்தர்களுக்கும், நான் காணி கொடுத்ததாக தெரிவித்து வருகின்றார். காணி மோசடியிலே நான் ஈடுபட்டிருந்தால் பொலிசார் இருக்கின்றனர், இலஞ்ச ஊழல் ஆணைக் குழு காணப்படுகிறது, அரசு இருக்கின்றது. இவ்வாறான இடங்களில் இன்று வரை எனக்கு எதிராக, நான் மோசடியாக செயற்பட்டதாக, காணிகளை விற்பனை செய்ததாக, மோசடியாக செயற்பட்டதாக எந்த விதமான விசாரணைகளோ வழக்குகளோ இல்லை. யாரும் தாக்கல் செய்யவுமில்லை எனத் தெரிவித்தார். https://akkinikkunchu.com/?p=307328- இந்தியா செல்லச் சென்ற போது விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சிறிதரன்
இந்தியா செல்லச் சென்ற போது விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சிறிதரன் தமிழக முதலமைச்சரின் விசேட அழைப்பிற்கிணங்க அங்கு சனிக்கிழமை ஆரம்பமாகும் அயலகத் தமிழர் தின நிகழ்வில் பங்கேற்பதற்காக வெள்ளிக்கிழமை மாலை கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட எம்.பியான எஸ்.சிறீதரன் ‘பயணத் தடை’ உள்ளதாக தெரிவித்து விமான நிலைய அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டதால் இருதரப்புக்கும் இடையில் கடும் தர்க்கம் ஏற்பட்ட நிலையில் அவர் பயணத்தை தொடர அனுமதிக்கப்பட்டார். தமிழ்நாட்டு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை நடத்தும் ‘அயலகத் தமிழர் தினம் 2025’ 11ஆம் திகதி சனி மற்றும் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் நிலையில், இலங்கை தமிழரசுக் கட்சியின் எம்.பியான சிறீதரன், முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான ரவூப் ஹக்கீம் எம்.பி ஆகியோர் தமிழக முதலமைச்சரால் நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் வெள்ளிக்கிழமை மாலை கட்டுநாயக்கா விமான நிலையம் ஊடாக சென்னைக்கு புறப்பட்டுச் செல்வதற்காக சென்ற போது, சிறீதரன் எம்.பிக்கு பயணத் தடை இருப்பதாக தெரிவித்து விமான நிலைய அதிகாரிகளால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். என்ன காரணத்திற்காக பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது என சிறீதரன் எம்.பி வினவிய போதும் அவர்கள் எவ்வித விளக்கத்தையும் வழங்கவில்லை. விமான நிலைய அதிகாரிகளின் இந்நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்ட ரவூப் ஹக்கீம் எம்.பி, சிறீதரன் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அவருக்கு இராஜதந்திர கடவுச் சீட்டு உள்ளது. அவரை இவ்வாறு திடீரென தடுத்து நிறுத்த முடியாது. அவ்வாறெனில் தகுந்த காரணம் காண்பிக்கப்பட வேண்டும். எனவே அவரின் பயணத்தை தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் பயணம் முடித்து வந்த பின்னர் தேவையானால் நீங்கள் விசாரணைகளை நடத்த முடியுமென வாதிட்டார். இதனையடுத்து சிறீதரன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோரின் தொலைபேசி இலக்கங்களை பெற்றுக்கொண்ட விமான நிலைய அதிகாரிகள் சிறீதரனின் பயணத்தை தொடர அனுமதித்தனர். https://akkinikkunchu.com/?p=307331- இனி இரவு நேரங்களிலும் சிகிரியாவை பார்வையிடலாம்
இனி இரவு நேரங்களிலும் சிகிரியாவை பார்வையிடலாம் January 11, 2025 11:33 am தொல்பொருள் மதிப்புடைய பல இடங்களை இரவு நேரங்களிலும் சுற்றுலாப் பயணிகளுக்காக திறந்து வைப்பது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள சீகிரியாவை அதற்காக முதலில் தெரிவு செய்துள்ளதாக புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதியமைச்சர் கமகெதர திஸாநாயக்க குறிப்பிட்டார். அதன்படி, சிகிரியா இரவு நேரங்களிலும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது. https://oruvan.com/sigiriya-can-now-be-visited-at-night-as-well/- ஜேவிபி மனோரீதியாக வன்முறையைக் கைவிடவில்லை- விளக்கமளிக்கிறார் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன்!
ஜேவிபி மனோரீதியாக வன்முறையைக் கைவிடவில்லை- விளக்கமளிக்கிறார் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன்! January 11, 2025 11:00 am ஜேவிபி தலைமையிலான அநுரகுமார திஸாநாயக்க அரசாங்கம் மனோரீதியாக வன்முறையைக் கைவிட்டுள்ளார்கள் என்பதை தான் நம்பவில்லை எனவும் செயல் ரீதியாக உடைமாற்றம் செய்துள்ளதாகவும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும், வடமாகாண முன்னாள் ஆளுநருமான கலாநிதி சுரேன் ராகவன் சுட்டிக்காட்டியுள்ளார். “ஒருவன்” செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போதே அவர் இவ்விடயத்தை வலியுறுத்தினார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியானது பெயர் மாற்றம் செய்து அதிகளவான மக்கள் ஆணையைப் பெற்றாலும் கூட அது ஒரு பெயர் மாற்றம் மாத்திரம் தானா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஒரு காலத்தில் நாடாளுமன்றத்தை ஒரு இரவில் எரித்து கைப்பற்றுவோம் எனக் கூறிய கட்சி தான் இந்த ஜேவிபி எனவும் அவர் தெரிவித்தார். இதேவேளை, அநுர அரசாங்கம் சர்வதேசத்தின் கைபெ்பொம்மையாக மாறிவிடுமா என்ற அச்சம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். ஜேவிபி எனப்படும் தேசிய மக்கள் சக்தி கட்சியானது தனது திட்டங்களிலும், கொள்கைகளை கடைப்பிடிப்பதிலும் உறுதியாக இல்லை என்பது தற்போது தெளிவாகிறது. சுமார் மூன்று ஆண்டுகளாக நாடு பல நெருக்கடிகளையும் சவால்களையும் தொடர்ச்சியாக சந்தித்து வந்த நிலையில் நாட்டிற்கு உரிய ஒரு அஸ்திவாரம், அடித்தளம் இப்போது வரையில் சரியாக அமையவில்லை. அதற்கான காரணம் சுமார் 76 வருடங்களாக ஊழல்வாதிகள் மாறி மாறி ஆட்சியமைத்தமையே ஆகும். ஒரு வகையில் இலங்கை அபிவிருத்தி அடைந்திருந்தாலும் கூட அந்த அபிவிருத்திகளின் பின்னணியில் பல ஊழல் மோசடிகள் தான் மறைந்து கிடக்கின்றன. இவ்வாறான காரணங்கள் தான் காலிமுகத்திடல் போராட்டத்திற்கு வித்திட்டது. மாபெரும் மக்கள் போராட்டமாக அது வளர்ந்தது. அன்று எப்படி நாட்டு மக்கள் போராட்டக் களத்தில் ஒன்றிணைந்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒரு ஜனாதிபதியை ஆட்சிக் கதிரையில் இருந்து துரத்தினார்களோ அதே மக்கள் சக்தி தான் இன்று பல ஆண்டுகளாக ஆயுத இயக்கமாக இருந்த ஒரு இயக்கத்துடன் சார்ந்த கட்சியை அதே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கதிரையில் அமர்த்தியது. ஆக, மக்கள் அதிகாரம் என்பது தற்போது நாட்டில் தலைதூக்கியுள்ளது. 2024ஆம் ஆண்டு இலங்கை மக்களுக்கு மாற்றத்திற்கு வித்திட்டது. அந்த விதை 2025ஆம் ஆண்டில் வேரூன்றிய விருட்சமாகுமா அல்லது வாடிவிடுமா என்ற கேள்வி அரசாங்கத்திற்கு எதிரான விமர்சனமாகவே முன்வைக்கப்பட்டு வருகிறது. அந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அரசாங்கமும் விமர்சிப்பவர்களை விமர்சித்து எதிர்க்கட்சிகளைப் போல குற்றம் சுமத்தி வருகிறது. தேர்தல் மேடைகளில் வழங்கும் அனைத்து வாக்குறுதிகளையும் ஆட்சிக் கதிரையில் அமர்ந்து நிறைவேற்ற முடியுமா? அது நடைமுறைக்கு சாத்தியமாக அமையுமா என்பது தொடர்பில் கலாநிதி சுரேன் ராகவனிடம் கேள்வி எழுப்பினோம். அதற்கு அவர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இருதயத்தில் இந்த நாட்டுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற அவா உள்ளதை தான் நம்புவதாக தெரிவித்தார். சாதாரண ஒரு மனிதனாக இருந்த ஒருவர் ஜனாதிபதியாக உள்ளமை மகிழ்ச்சி. இருப்பினும் அவரது ஆட்சியின் ஆரம்பத்தில் விட்ட பிழையை மறுக்க முடியாது. ஒரு அரசாங்கத்தின் முதலாவது நியமனம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். எனினும் அவருடைய அந்த முதல் நியமனத்தை தவறாக தான் பார்க்கிறேன் ஏனெனில் அவருடைய அந்த நியமனத்தில் அரசியல் ஞானம் இல்லை என கலாநிதி சுரேன் ராகவன் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் அனுபவின்மை வெளிப்பட்டது மாத்திரமன்றி சபாநாயகர் விடயத்திலும் அரசாங்கம் விட்ட பிழை மாறாத கரையாக படியும் என அவர் சுட்டிக்காட்டினார். அநுர அரசாங்கத்தின் ஒரு கறுப்பு புள்ளியாக சபாநாயகர் அசோக ரன்வலவின் இராஜினாமா பார்க்கப்படுகிறது. போலியான கல்வித் தகைமைகளை மக்களுக்கு காட்டியது மட்டுமன்றி அதனை நிரூபிப்பதாக வாக்குறுதியளித்து இன்று வரையில் அதை நிரூபிக்க முன்வரவில்லை. ஆக, இவ்விடயம் அநுர அரசாங்கத்திற்கு அரசியல் ஞானம் இல்லை என்பதை வெளிப்படையாக எடுத்துக்காட்டுகிறது. இவ்வாறான பின்னணியில், இலங்கையின் 76 வருட கால ஆட்சியமைப்பை மாற்றியமைக்கும் விதத்தில் வரலாற்றில் இடம்பிடித்த அறுரகுமார திஸாநாயக்கவின் வெற்றியானது உள்நாட்டில் மாத்திரமன்றி வெளிநாடுகளில் அதிக அவதானத்திற்கு உள்ளான ஒரு விடயம் ஆகும். தேர்தல் திகதி அறிவிக்கப்படுவதற்கு முன்னர் இருந்தே ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு, அதற்காக பல வெளிநாடுகளிலும் சென்று பிரசாரத்தை மேற்கொண்ட தேர்தல் வேட்பாளராக அநுரகுமார திஸாநாயக்க சர்வதேசத்தில் அவதானிக்கப்பட்டார். ஆகவே, அநுர சார்ந்த தேசிய மக்கள் சக்தி ஆட்சி பீடம் ஏறிய பின் அவர்கள் மீதான சர்வதேசத்தின் அவதானம் இன்னுமும் மும்முரமாகியது. அநுரவின் கொள்ளை விளக்க உரையில் ஆரம்பித்து அவருடைய முதல் சர்வதேச பயணம் வரையில் அதிக அவதானங்கள் அநுர மீது செலுத்தப்பட்டன. அதில் மிக முக்கியமான இரு நாடுகளாக இந்தியா, சீனா ஆகியவை காணப்பட்டன. தேசிய மக்கள் சக்தியின் ஆரம்பமான ஜேவிபியின் வரலாறு இந்தியாவுடன் சார்பானதாக எப்போதும் இருந்ததில்லை. எனினும், சீன கம்யூனிஸ்ட் கொள்கைகளை கையாண்டு வந்த ஜேவிபியின் நவீன கட்சி தேசிய மக்கள் சக்தி தலைவரின் முதலாவது சர்வதேச பயணம் இந்தியாவுடன் அமைந்திருந்தமை மேலும் ஒரு குழப்ப நிலையை உருவாக்கியது. அண்மையில் அரச ஊடகங்களை சீன ஊடகக் குழுமத்துடன் ஒப்பந்தம் செய்வதற்கான அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டதையடுத்து, இந்த குழப்பம் இன்னுமும் மேலோங்கியது. தற்போதைய ஜனாதிபதிக்கும் அமெரிக்காவுக்கும் நல்ல நட்பு உள்ளதாகவும், அமெரிக்காவிடம் ஆலோசனை கேட்க தயார் என்பதும் தெளிவாகிறது எனவும் சுரேன் ராகவன் கூறினார் . ஆக, இதன் விளைவாக ஜேவிபி தலைமையிலான அரசாங்கம் சர்வதேசத்தின் கைப்பாம்மையாக மாறிவிடுமோ என்ற அச்சம் உள்ளதாகவும் அவர் பகிரங்கப்படுத்தினார். தான் எந்தப் பாதையிலே பயணிக்கின்றோம் என்பதில் திட்டமும் நோக்கமும் இல்லாத ஒருவரால் விபத்து மாத்திரமே ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார். கட்டாயமாக அநுரவின் அடுத்த கட்ட நகர்வு இந்தியாவுடன் இருக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார். மேலும், தற்போதைய அரசாங்கம் தமிழர்களின் பிரச்சினையை பேசத் தயங்குவது தவறு எனவும் தமிழர்களுக்கென தற்போது இருக்கும் உரிமைகளையும் அரசாங்கம் பறிக்குமாக இருந்தால் வன்முறையற்ற அரசியலின் எதிர்ப்பை செய்வோம் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் வலியுறுத்தினார். அநுரகுமார திஸாநாயக்க டில்லிக்கு சென்றிருந்த போதும் தமிழ்நாட்டில் சுமார் 40 வருடங்களாக அகதிகளாக வேதனைப்பட்டு வருபவர்களை பார்க்க செல்லாதமை தொடர்பில் சுரேன் ராகவன் குற்றம் சுமத்தினார். இந்த புதிய அரசியல் வாய்ப்பின் அரசியல் மொழியில் நாம் கவனம் செலுத்த வேண்டும் எனவும், இனி நாங்கள் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் சர்வதேசத்துக்கு எங்களை உரக்க கூறக் கூடிய ஒரு அரசியல் பாதையை நாங்கள் கண்டுபிடிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார். தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் தனித்தனியாக செல்லாமல் ஒரு குழுவாக இணைய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். தமிழர்களுடைய பிரச்சினைகளை சர்வதேசத்துக்கு கொண்டு செல்ல தமிழ் அரசிய்லவாதிகளுக்கு ஒரு பாரிய பொறுப்பு உண்டு. எனினும், தற்போதைய தமிழ் அரசியல்வாதிகள் சரியாக செய்கின்றார்களா என்ற எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு விளக்கமளித்தார். இதனை மேலும் விளக்கிய அவர், தமிழ் அரசியல் சாதாரண அரசியல் அல்ல. வடக்கு கிழக்கு மாகாணத்தில் மட்டும் தமிழர்கள் மத்தியில் பதிவு செய்யப்பட்ட 40 கட்சிகளுக்கு மேல் காணப்படுகின்றன. தங்களை வெற்றிக் கொள்வதற்கான செயற்பாடுகளை அல்லாமல் ஒன்றாக இணைந்து தமிழர் பிரச்சினையில் தலையிட வேண்டும்.’ என அவர் விளக்கமளித்தார். எவ்வாறாயினும், இலங்கைத்தீவு குறிப்பிட்ட சில வருடங்களாகவே பல சவால்களையும், நெருக்கடிகளையும் சந்தித்து வந்தது. பல நெருக்கடிகளால் தவித்த மக்கள் ஆணைக்கு நிச்சயமாக அநுர தரப்பு உண்மையாக இருக்க வேண்டும். ஐந்து வருட ஆட்சியை நூறு நாட்களுக்குள் நடத்தி முடிக்க முடியாது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று இருப்பினும் நிறைவேற்று அதிகாரத்தையும், அறுதிப் பெரும்பான்மையையும் தன்னகத்தே வைத்துக் கொண்டு சிறுபிள்ளைப் போல விமர்சனம் செய்து கொண்டும், எதிர்க்கட்சிகளைப் போல கடந்த அரசாங்கங்கள் மீது குற்றம் சுமத்திக் கொண்டும் இருப்பது என்பது நடைமுறைக்கு சாத்தியமல்ல. இதன்மூலம் ஆநரகுமார தலைமையிலான அரசாங்கத்திற்கு அரசியல் ஞானமும், தெளிவும் இல்லை என்பது தெளிவாகிறது. ஆக, “அனுபவமற்றவர்கள்” என்ற பெயரை நீக்க அநுர தரப்பு முன்வரும் என்று எதிர்ப்பார்க்கிறோம். (கனூஷியா புஷ்பகுமார்) நேர்காணலை முழுமையாக பார்வையிட, https://oruvan.com/jvp-has-not-given-up-violence-mentally-explains-former-state-minister-suren-raghavan/- கனிமொழியை சந்தித்த தமிழரசுக் கட்சி
கனிமொழியை சந்தித்த தமிழரசுக் கட்சி January 11, 2025 11:34 am தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்திய பாராளுமன்றின் திராவிட முன்னேற்றக் கழக சார்பான தலைவர் கனிமொழியை சந்தித்துள்ளனர். இந்தியா - தமிழ் நாட்டு அரசின் அழைப்பின் பேரில் இந்த சந்திப்பு சென்னையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, ஈழத் தமிழ் மக்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சினைகள் சம்பந்தமாகவும் மத்திய அரசில் தமிழ் நாட்டின் குரலை எமக்காக தொடர்ந்து எழுப்புவது சம்பந்தமாகவும் கலந்துரையாடியுள்ளனர்.. https://tamil.adaderana.lk/news.php?nid=198615 - சிவனேசதுரை சந்திரகாந்தன் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.