Everything posted by கிருபன்
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
விடயத்துக்கு வராமல் சும்மா இழுஇழுஇழு என்று இழுத்து செந்தமிழன் சீமான் “பிக்காளிப் பய” என்று தலைவர் பிரபாகரனின் அண்ணன் மகனைச் குறிப்பிட்டிருக்கின்றார். சீமானுக்கு கார்திக் ஒரு பிக்காளிப் பய (பித்தன், பித்தாளி, முட்டாள் பய), பொட்டம்மான் ஒரு மயிர்! இருக்கிற தலைவர் போன மாவீரர் நாளுக்கு வெளியே வந்திருந்தால் எப்படிச் சொல்லியிருப்பார்? அதுதான் அவர் வெளியே வரவில்லைப் போலிருக்கு. சீமான் கார்திக்கை “பிக்காளிப் பய “ என்று சொல்லாமல் “தே*** பய” என்று சொல்லியிருந்தால் ஓணாண்டியும், பையனும் இன்னும் பிற சீமான் ஆதரவாளர்களும் பொங்கியிருப்பார்களா? மாட்டார்கள்! அதுக்கும் ஒரு சப்பை விளக்கம் வந்திருக்கும்😁
-
பெரியார் – பிரபாகரனைக் கொச்சைப்படுத்துவதை இத்தோடு நிறுத்திக்கீங்க… பழ. நெடுமாறன் எச்சரிக்கை!
நெடுமாறன் ஐயாவுக்கு வயது நன்றாக முதிர்ந்துவிட்டது. நான் சிறுவனாக இருந்தபோதே விடுதலைப் புலிகளின் பிரசுரங்கள் அல்லது புளட், ஈரோஸின் பிரசுரங்கள் மூலம் கொலம்பிய FARC கெரில்லாப் போராட்டத்தில் பெண்போராளிகள் இருந்ததை முதன்முதலாக அறிந்துகொண்டேன். இது முற்றிலும் தவறு. அப்படி ஒரு ஆணையும் இல்லை. யாரும் யாரையும் திருமணம் செய்யலாம். ஒரு போராளி இன்னோர் போராளியை அல்லது பொதுமக்களில் ஒருவரை திருமணம் செய்யும் விருப்பத்தைத் தெரிவித்தால் திருமணத்திற்கான குழு இரு பக்கமும் பேசி திருமணத்தை நடாத்திவைக்கும். கட்டாயப்படுத்துவதும், அழுத்தம் கொடுப்பதும் கிடையாது என்பதுதான் எனது அறிதல்.
-
தமிழ் அரசியல் கட்சிகளின் ஒற்றுமையின்மைக்கு பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டியுள்ளனர்- சிறிநேசன் எம்.பி
தமிழ் அரசியல் கட்சிகளின் ஒற்றுமையின்மைக்கு பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டியுள்ளனர்- சிறிநேசன் எம்.பி தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக இணைந்து பயணிக்க வேண்டும் என்பதையே தமிழ் மக்கள் விரும்புவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். கடந்த பொதுத் தேர்தலில் வடக்கு,கிழக்கில் தமிழ்க் கட்சிகள் தனித்து செயற்பட்டமையால் மக்கள் பாடம் புகட்டியுள்ளதாகவும் ஞானமுத்து சிறிநேசன் கூறினார். சூரியன் வானொலியில் ஒலிபரப்பான விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டார். விழுதுகள் நிகழ்ச்சியின் காணொளி வடிவத்தினை சூரியன் FM News Youtube தளத்தில் பார்வையிட முடியும். காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது..!! https://www.hirunews.lk/tamil/394747/தமிழ்-அரசியல்-கட்சிகளின்-ஒற்றுமையின்மைக்கு-பொதுத்-தேர்தலில்-தமிழ்-மக்கள்-பாடம்-புகட்டியுள்ளனர்-சிறிநேசன்-எம்-பி
-
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி - 132 பேர் கைது
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி - 132 பேர் கைது January 25, 2025 11:12 am வெளிநாடுகளுக்கு செல்வதற்காக சட்டவிரோத நிறுவனங்களுக்கு பணம் வழங்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் மோசடி செய்பவர்களுக்கு பணம் கொடுக்கும் சம்பவங்களில் 27% அதிகரிப்பு காணப்படுவதாக பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டில், வெளிநாடுகளுக்கு செல்வதற்காக சட்டவிரோத நிறுவனங்களுக்கு பணம் செலுத்துவது தொடர்பாக 3675 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில், இது 2024 ஆம் ஆண்டில் 4658 முறைப்பாடுகளாக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, 2024 ஆம் ஆண்டில் குறித்த மோசடிகள் தொடர்பாக 132 பேர் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் கூறியுள்ளார். மேலும், உரிமம் பெற்ற 14 நிறுவனங்களின் உரிமையாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். "2024 ஆம் ஆண்டில், 15 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டு 132 பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன், உரிமம் பெற்ற 14 நிறுவனங்களின் உரிமையாளர்களும் கைது செய்யப்பட்டனர்." இதற்காக, 2024 ஆம் ஆண்டில் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் 900 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. "2023 ஆம் ஆண்டில் 182 மட்டுமே மேற்கொள்ள முடிந்தன" என்றார். https://tamil.adaderana.lk/news.php?nid=199273
-
யோஷித ராஜபக்ஷ கைது
யோஷித ராஜபக்ஷ கைது January 25, 2025 10:08 am முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ இன்று (25) காலை பெலியத்த பகுதியில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். 2006 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் குற்றங்களை யோஷித ராஜபக்ஷ செய்ததற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபர் தெரிவித்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதன்படி, யோஷித ராஜபக்ஷ தொடர்பாக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பதற்காக இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். கதிர்காமம் பகுதியில் உள்ள ஒரு காணியின் உரிமை குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக கடந்த 3ஆம் திகதி யோஷித ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://tamil.adaderana.lk/news.php?nid=199271
-
வேங்கைவயலில் மலம் கலந்தது யார்?
வேங்கைவயல்… ஒரு வழியாய் அவிழ்ந்த முடிச்சு! அந்த மூவரில் ஒருவர் போலீஸ்: அதிர்ச்சி மேல் அதிர்ச்சி! Jan 24, 2025 தமிழ்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள வேங்கைவயல் வழக்கில் மூன்று பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு இன்று (ஜனவரி 24) தெரிவித்துள்ளது. கடந்த 2022 டிசம்பர் 26 ஆம் தேதியன்று புதுக்கோட்டை மாவட்டம் முடுகாடு ஊராட்சிக்கு உட்பட்ட வேங்கை வயல் கிராமத்தில் பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்த, மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டியில் மனித மலம் கலந்திருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ்நாடு அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள், கூட்டணிக் கட்சிகள் என பலரும் கண்டனக் குரல்களை தெரிவித்தார்கள். இந்திய அளவிலும் இது பேசுபொருளானது. இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்படது. சிபிசிஐடி எஸ்.பி. .சண்முக பிரியா மேற்பார்வையில் திருச்சி டி.எஸ்,பி. பால்பாண்டி தலைமையிலான டீம் இதை விசாரித்து வந்தது. பிறகு தஞ்சாவூர் டி.எஸ்,பி. கல்பனா தத் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. புதுக்கோட்டைக்கே வந்து கள விசாரணை செய்த ஆணைய தலைவர் சத்தியநாராயணன், “வேங்கையலில் உள்ள குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டது 2022 டிச.26-ம் தேதி தெரியவந்தது. ஆனால், அதற்கு முன் எப்போது அது கலக்கப்பட்டது என தெரியவில்லை. அதற்கு முன்பு டிசம்பர் 22 ஆம் தேதி குடிநீர் தொட்டியை சுத்தப்படுத்தியிருக்கிறார்கள்” என்று தெரிவித்திருந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை ஆமை வேகத்தில் நகர்வதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில்தான்… இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கேட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜனவரி 24) விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், “வழக்கின் விசாரணை தற்போது முடிந்துவிட்டது. முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துக்கிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.” என நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். வேங்கைவயல் வழக்கே மிகவும் சென்சிடிவ் ஆன வழக்கு என்பதால், இந்த குற்றப்பத்திரிகையில் என்னென்ன தகவல்கள் இருக்கின்றன என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றப்பத்திரிகை என்பது புகார் தாரருக்கும், எதிரிக்கும் மட்டுமே வழங்கப்படும் ஆவணமாகும். இந்நிலையில் வேங்கை வயல் விவகாரத்தில் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றிருக்கும் தகவல்கள் பற்றியும் விசாரணை பற்றியும் சிபிசிஐடி வட்டாரத்தில் மிகத் தீவிரமாக விசாரித்தோம். அதில் மேலும் அதிர்ச்சி தரத்தக்க முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன, “ஜனவரி 20 ஆம் தேதி புதுக்கோட்டை நீதிமன்றத்தில் முரளி ராஜா, சுதர்சனன், முத்துகிருஷ்ணன் ஆகிய மூவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மூவரும் பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் குறிப்பிடத்தக்கது. நூற்றுக்கணக்கானோரிடம் வருடக் கணக்கில் விசாரணை நடத்திய பிறகு பல்வேறு பலத்த வடிகட்டல்களுக்குப் பிறகு இந்த மூவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் இன்னொரு அதிரவைக்கும் முக்கிய செய்தி என்னவென்றால், இந்த மூவரில் முரளி ராஜா தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றுபவர் என்பதுதான். முரளிராஜா 2013 பேட்ச் முதல் நிலை காவலராக புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி காவல்நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இந்த வழக்கு பல கொலை வழக்குகளை விட சென்சிடிவ் ஆன வழக்காக கருதப்படுகிறது. இந்த விவகாரத்தில் சமுதாய ரீதியான பதற்றங்களும் கலந்திருக்கின்றன. அதனால் சட்ட ரீதியாகவும் சரி, விசாரணை ரீதியாகவும் சரி மிகுந்த நிதானத்தோடும் கவனத்தோடும் விசாரிக்க வேண்டியிருந்தது. 2022 டிசம்பர் 26 ஆம் தேதி குடிநீர் தொட்டியில் மலம் கலந்திருந்ததாக அறியப்பட்டது. ஆனால் அது எப்போது, யாரால் கலக்கப்பட்டது என்பதுதான் பெரும் கேள்வியாக இருந்தது. இதற்கு நேரடி சாட்சி கிடையாது, சிசிடிவி ஃபுட்டேஜ் கிடையாது. விஞ்ஞான ரீதியாக சோதனைகள் தேவைப்பட்டன. இதையெல்லாம் தாண்டி சிபிசிஐடி போலீஸார் இந்த விவகாரத்தை வெகு கவனமாக கையாண்டனர். ஏனென்றால் அந்த கிராமத்தில் பட்டியல் சமுதாய மக்கள் ஒரு பக்கமும், முத்தரையர்-முக்குலத்து சமுதாய மக்கள் இன்னொரு பக்கமும் வசித்து வருகிறார்கள். குடிநீர் தொட்டி பட்டியல் சாதியினர் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பட்டியல் சமுதாய மக்கள் எத்தனை பேர், மற்ற சமுதாய மக்கள் எத்தனை பேர் என்று சிபிசிஐடி போலீசார் கணக்கெடுத்தனர். குடிநீர் தொட்டி அருகேயோ மேலேயோ மற்ற சமுதாயத்தினர் இதுவரை வந்திருக்கிறார்களா என்று விசாரித்தனர். மொத்தம் 250 பேருக்கு மேல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர், இந்த 250 பேரிடம் விசாரித்ததில் 48 பேரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது. அந்த 48 பேர்களில் இறுதியாக 18 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களிடம் மீண்டும் விசாரணை நடந்தது. இப்படி படிப்படியாக பல வடிகட்டல்கள் செய்து சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் இறுதியாகத்தான் முரளிராஜா, சுதர்சனன், முத்துகிருஷ்ணன் ஆகியோர் மீது கடுமையான சந்தேக வளையம் விழுந்தது. அவர்களிடம் விசாரித்தபோதுதான் நடந்தது தெரியவந்தது. வேங்கைவயலில் ஒரு பிறந்தநாள் பார்ட்டி நடந்திருக்கிறது. இதற்கான மது விருந்து குடிநீர் தொட்டியின் மேல் பகுதியில்தான் நடந்திருக்கிறது. அதில் சுமார் 15 பேர் வரை பங்கேற்றனர். வேங்கைவயலில் குடிநீர் தொட்டி மீது ஏறி மேல் பகுதியில் அமர்ந்து மது அருந்தும் பழக்கம் அப்பகுதி இளைஞர்களிடையே இருந்துள்ளது. இரவு நீண்ட நேரம் மது அருந்தினாலும் யாரும் கேட்கமாட்டார்கள். அப்படியே மேலேயே தூங்கிவிடலாம் என்பதால் குடிநீர் தொட்டியின் மேல் பகுதியை மது அருந்தும் இடமாக பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். அப்படித்தான் முரளிராஜா, சுதர்சனன், முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட 15 பேர் இரவு குடிநீர் தொட்டியின் மீது ஏறி பிறந்தநாள் மது விருந்து கொண்டாடியிருக்கிறார்கள். அதில் இரவே சிலர் கீழே இறங்கிவிட்டார்கள். சிலர் இரவு முழுதும் மேலேதான் இருந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் செய்த வேலைதான் குடிநீர் தொட்டியிலே மலம் கழித்தது. பழிவாங்குவதற்காக இதை போதையில் செய்திருக்கிறார்கள். சிபிசிஐடி போலீசாரிடம் முதல் நிலை காவலர் முரளிராஜா அளித்த வாக்குமூலத்தில், ‘இந்த டேங்க் ஆபரேட்டராக எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த சண்முகம் வேலை பார்த்து வந்தார். ஆனால் முத்துக்காடு ஊராட்சி மன்றத் தலைவர் பத்மாவின் கணவர் முத்தையா, எங்கள் ஆளான சண்முகத்தை வேலையில் இருந்து தூக்கிவிட்டார். அதற்கு பழிவாங்கும் வகையில்தான் இதை செய்தோம்’ என்று கூறியிருக்கிறார். 26 ஆம் தேதி காலை போதை தெளிந்ததும் முரளி ராஜா ஊருக்குள் சென்று, ‘யாரும் பைப் தண்ணி புடிக்காதீங்க. அதுல ஒரே நாத்தமா அடிக்குது’ என சொல்லியிருக்கிறார். பிறகு முரளிராஜாவும் அவர்களது நண்பர்களும் மேலே ஏறி பார்த்து, ‘குடிநீரில் மலம் கிடக்கிறது’ என்று கூறினார்கள். விசாரணையில் கிடைத்த தகவல் அப்போதே ஊர் மக்கள் மூலம் சிபிஎம் கட்சி நிர்வாகிகள் மூலமும் சிபிஎம் தலைமைக்கு சென்றது. உடனே சிபிஎம் குழுவினர் முதல்வரை சந்தித்து, ‘வேங்கை வயல் விசாரணை பாதிக்கப்பட்ட பட்டியல் சமுதாய மக்களை நோக்கியே செல்கிறது’ என்று புகார் கூறினார்கள். அப்போதே சிபிசிஐடி மேலிடத்துக்கு இந்தத் தகவல் அனுப்பப்பட்டு, விசாரணையை நிதானமாக முன்னெடுக்கும்படி சொல்லப்பட்டது. அதனால்தான் சற்று தாமதித்தோம். தவிர உண்மை இதுதான்” என்கிறார்கள். திமுகவின் கூட்டணிக் கட்சிகளான சிபிஎம், விடுதலை சிறுத்தைகள் ஆகியவை இந்த குற்றப் பத்திரிகையை ஏற்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளன. சிபிஐ விசாரணை வேண்டுமென்று சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் மீண்டும் பரபரப்பாகியிருக்கிறது வேங்கை வயல். நடந்த குற்றத்துக்கு ஒரே சாட்சியாக பேரிகார்டுகளுடன் நின்றுகொண்டிருக்கிறது அந்த குடிநீர் தொட்டி. https://minnambalam.com/political-news/vengaivayal-chargesheet-cbcid-shocking-information/ வேங்கைவயல் விவகாரம்… திருமா முதல் ரஞ்சித் வரை… அரசுக்கு வைக்கும் ஒரே கோரிக்கை! Jan 25, 2025 கடந்த 2022-ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று (ஜனவரி 25) விசாரணைக்கு வந்தபோது, வேங்கைவயல் பகுதியைச் சேர்ந்த முரளிராஜா, சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய மூவர் மீதும் புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்தநிலையில், வேங்கைவயல் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்றும் அதிமுக, திமுக கூட்டணிக் கட்சிகளான விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக அதிமுக அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம்,வேங்கைவயல் கிராமத்தில் மலம் கலந்த சம்பவம் தொடர்பாக எதையோ மூடி மறைக்க காலம் கடந்த அவசர குற்றப்பத்திரிக்கையை அவசர அவசரமாக தாக்கல் செய்துள்ளது ஸ்டாலின் அரசு. சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு விடும் என்று ஆளும் ஸ்டாலின் அரசிற்கு ஏற்பட்ட அச்சத்தில் உருவாக்கப்பட்ட குற்றப்பத்திரிக்கையா? இச்சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்வதற்காக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அதிமுக வலியுறுத்துகிறது. வேங்கைவயல் வழக்கில் ஸ்டாலின் மாடல் அரசின் காவல்துறையின் மீது நம்பிக்கையின்றி திமுக கூட்டணி கட்சியினரே சிபிஐ விசாரணை கோரியுள்ளது வரவேற்கத்தக்கது. பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்காகவும்-உரிமைகளுக்காகவும் இறுதி வரை அதிமுக துணை நின்று போராடும் விசிக தலைவர் திருமாவளவன் வேங்கை வயல் வழக்கில் தமிழ்நாடு காவல்துறை பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மூவரை குற்றவாளிகள் எனக் கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. காவல்துறையின் குற்றப்பத்திரிகையை விசாரணை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளக்கூடாது. மேல்விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். வேங்கை வயல் வழக்கில் உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு காவல்துறையின் சி.பி.சி.ஐ.டி சார்பில் பிரமாண பத்திரமொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் இந்த வழக்கில் கடந்த 20ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதாகவும், மூன்று பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முரளி ராஜா, சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய மூன்று பேர் குற்றவாளிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூவரும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். பட்டியல் சமூகத்தினர் குடிக்கும் தண்ணீரில் மலம் கலந்ததாகத்தான் வழக்கு. அந்த வழக்கில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களே குற்றவாளிகள் என்று காவல்துறை கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது. இது ஏற்கத்தக்கதாக இல்லை. எனவே, சிபிசிஐடி சமர்ப்பித்திருக்கும் குற்றப் பத்திரிகையை விசாரணை நீதிமன்றம் ஏற்கக் கூடாது எனவும் மேல்விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம். வேங்கை வயலில் குடிநீரில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட குற்றம் நிகழ்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆரம்ப நிலையிலேயே இந்த வழக்கில் காவல்துறை பட்டியல் சமூகத்தினருக்கு எதிராக நடந்து கொள்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதனால்தான் சிபிஐ விசாரணை வேண்டுமென்று கோரிக்கைகள் எழுந்தன. அந்தச் சூழ்நிலையில்தான் இந்த வழக்கை 14.01.2023 அன்று சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு ஆணையிட்டது. சிபிசிஐடி இந்த வழக்கில் விசாரணையை மேற்கொண்ட நிலையில்கூட கடந்த இரண்டு ஆண்டுகளாகக் குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் மெத்தனமாகவே இருந்தது. உயர் நீதிமன்றம் ஒவ்வொரு முறையும் இதில் கடுமையாக அறிவுறுத்திய பிறகும்கூட குற்றவாளிகள் யார் எனக் காவல்துறை கூறவில்லை. தற்போது இது தொடர்பாக சிபிஐ விசாரணை கேட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் , சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுவிடுமோ என்ற அய்யத்தில், அதைத் தடுப்பதற்காகவே இந்தக் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகக் கருத வேண்டியுள்ளது. உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கோடு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. எனவே, இந்த வழக்கை விசாரித்து வரும் விசாரணை நீதிமன்றம் சிபிசிஐடி தாக்கல் செய்திருக்கும் குற்றப்பத்திரிக்கையை ஏற்கக் கூடாது என வலியுறுத்துகிறோம். அத்துடன், தமிழ்நாடு அரசே முன்வந்து இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் ஒருவரை பழிவாங்க வேண்டுமென்பதற்காக தாங்கள் குடிக்கும் தண்ணீரில் அவர்களே மலம் கலந்திருப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதாக இல்லை. சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், எப்படியாவது இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென்ற நிர்ப்பந்தம் காரணமாக பாதிக்கப்பட்ட சமூக மக்களே இதற்கு காரணம் என்பது சரியல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம். எனவே, இத்தகைய வன்கொடுமை தொடர்பான வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டறிய இவ்வழக்கை மத்திய குற்றப்புலனாய்வு பிரிவிடம் (சிபிஐ) ஒப்படைக்குமாறு தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்துகிறது. இயக்குனர் பா.ரஞ்சித் வேங்கைவயல் வழக்கில் தமிழ்நாடு காவல்துறையின் சி.பி.சி.ஐ.டி சென்னை உயர்நீதிமன்றத்தில் திடீரென தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், கடந்த 20ஆம் தேதியே இவ்வழக்கில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துவிட்டதாகவும், அதில் மூன்று பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது. அம்மூன்று பேரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது அதிர்ச்சிக்குரியது. இது திட்டமிட்டுச் செய்யப்படும் செயலாகத் தெரிகிறது. கடந்த இரண்டு வருடங்களாகக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாத சி.பி.சி.ஐ.டி அவசரக்கதியில் ஏதோ ஒரு காரணத்திற்காகக் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்திருப்பது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றம் நியமித்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் சி.பி.சி.ஐ.டியின் விசாரணை சரிவர நடைபெறவில்லை என்று தெரிவித்திருந்தார் என்பதையும் நினைவு கூறுகிறோம். வழக்கு சம்பந்தமாக இரண்டு வருடங்களாக சென்னை உயர்நீதிமன்றம் சி.பி.சி.ஐ.டியின் விசாரணை செல்லும் போக்கினை கடுமையாகக் கண்டித்து வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. அப்போதெல்லாம் குற்றவாளிகள் யார் என்று இனம் காணத் தெரியாத சி.பி.சி.ஐ.டி இன்று திடீரென்று குற்றவாளிகள் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்று அறிவித்திருப்பதன் பின்னணி என்னவென்று புரியாமல் இல்லை. இரண்டு வருடங்களாக ஆழ்ந்த நித்திரையில் இருந்த தமிழக சி.பி.சி.ஐ.டி இன்றைக்குத் திடீரென்று விழித்திருப்பதைப் பார்க்கையில், இவர்கள் யாருக்காகப் பணி செய்கிறார்கள் என்கிற சந்தேகம் எழுகிறது. உண்மைக் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காகத்தான் இத்தகைய சூழ்ச்சியைச் செய்கிறார்களோ என்கிற சந்தேகம் வலுக்கிறது. உண்மைக் குற்றவாளிகளைப் பாதுகாக்க, பாதிக்கப்பட்ட தலித் மக்களின் கண்ணியத்தையும் மாண்பையும் இழிவுபடுத்தவும் அரசு துணிந்திருக்கிறது என்பது அதிர்ச்சியளிக்கிறது. இப்பிரச்சினையில் பாதிக்கப்பட்ட தலித் மக்களையே குற்றவாளிகளாகச் சித்திரிப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. நீதிமன்றம் இதனை ஏற்கக்கூடாது. மேலும், இந்த முடிவை தமிழக அரசும் கண்டிப்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழக அரசு இவ்வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் அல்லது சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டணை பெற்றுத்தரவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தரவும் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். https://minnambalam.com/political-news/thiruma-ranjith-urge-tamilnadu-government-to-change-vengaivayal-case-in-cbi/
-
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரத போராட்டத்துக்கு ஊழியர் சங்கமும் ஆதரவு!
யாழ். பல்கலை மாணவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டம் January 24, 2025 09:19 pm யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் 09 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள வகுப்புத்தடைகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன் வைத்து மாணவ ஒன்றிய பிரதிநிதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்கலைக்கழக முன்றலில் இன்றைய தினம் (24) முதல் மாணவ ஒன்றிய பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பில் மாணவர்கள் தெரிவிக்கையில், கடந்த மே மாதம் விஞ்ஞான பீட மாணவர்களின் கற்றல் மண்டபத்தில் மாணவர்கள் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை, மாணவர்களை மண்டபத்தினுள் வைத்து விரிவுரையாளர் ஒருவர் பூட்டிய வேளை விஞ்ஞான பீட மாணவர் ஒன்றிய தலைவர் மண்டப கதவினை திறந்து மாணவர்களை வெளியேற்றி இருந்தார். கதவினை பூட்டை உடைத்தே திறந்ததாக குற்றம் சாட்டி அவர்களுக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டது. அதுபோன்று பல்கலைக்கழத்தினுள் இருந்த ஐந்து கல்லாசனங்களை உடைத்து எறிந்தமை தொடர்பில் கலைப்பீட பீடாதிபதியிடம் கேள்வி எழுப்பிய மாணவர்கள் ஐவருக்கும் வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, புதுமுக மாணவர்கள் தமது வட்ஸ் அப் குழுவில் பல்கலைக்கழகத்தில் தாம் விரும்பும் பாடங்களை கற்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கையை முன் வைக்க வேண்டும் என்றும், கோரிக்கையை ஏற்க தவறினால் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என அவர்களின் குழுவில் கலந்துரையாடியுள்ளனர். அவ்வாறு கலந்துரையாடிய மாணவர்கள் இருவருக்கும் வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுமுக மாணவர்களுக்கான முதல் நாள் விரிவுரைகள் கடந்த திங்கட்கிழமையே ஆரம்பமாகியது. மாணவர்கள் பல்கலைக்கழகத்தினுள் கற்றல் நடவடிக்கைக்கு வர முதலே அவர்களுக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக முதல் நாள் விரிவுரை என்பது மாணவர்களுக்கு முக்கியமான நாளாகும். அந்த நாளில் வகுப்பு தடை விதிக்கப்பட்டு பல்கலைக்கழகத்தினுள் மாணவர்கள் அனுமதிக்கப்படவில்லை. மாணவர்களை கற்றல் மண்டபத்தினுள் வைத்து பூட்டிய விரிவுரையாளருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கல்லாசனங்களை அடித்து உடைத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை. பல்கலை கழகத்தில் விரும்பிய பாடத்தை தெரிவு செய்வதற்கு மாணவர்களுக்கு வசதி ஏற்படுத்தி கொடுக்க வில்லை அவற்றை கேள்வி கேட்ட மாணவர்களுக்கு வகுப்பு தடை விதித்துள்ளார்கள். மாணவர்களின் நலன் சார்ந்து பேச வேண்டிய பல்கலைக்கழக மூத்தவை சபையோ, பேரவையோ கடந்த 08 மாதங்களுக்கு மேலாக தொடரும் இந்த மாணவர்களின் பிரச்சனை தொடர்பில் எந்த கரிசனையும் கொள்ளவில்லை என்பது மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன், மூத்தவை சபை மற்றும் பேரவை ஆகையவை முடங்கியுள்ளமை வேதனையை ஏற்படுத்தி உள்ளது என தெரிவித்தார். https://tamil.adaderana.lk/news.php?nid=199256
-
வேங்கைவயலில் மலம் கலந்தது யார்?
வேங்கைவயலில் மலம் கலந்தது யார்? Jan 24, 2025 புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் மூன்று பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஜனவரி 24) தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல வழக்குகள் தொடரப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் அமர்வில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் “சம்பவம் நடைபெற்று இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை” என்று தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், “வழக்கின் விசாரணை தற்போது முடிந்துவிட்டது. முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துக்கிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முத்துக்காடு பஞ்சாயத்து தலைவரின் கணவரை பழிவாங்கும் வகையில் குடிநீரில் நாற்றம் வருவதாக முரளிராஜா பொய்யான தகவலை பரப்பியுள்ளார். அதன்பிறகு குடிநீர் தொட்டியில் ஏறிய முத்துக்கிருஷ்ணன் மற்றும் சுதர்சன் ஆகியோர் இந்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர்” என்று அறிக்கையாக தாக்கல் செய்தார். இதையடுத்து இந்த அறிக்கையை பிரமாண மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் வழக்கின் விசாரணையை மீண்டும் இன்று மதியத்திற்கு ஒத்திவைத்தார். https://minnambalam.com/tamil-nadu/cb-cid-charge-sheet-three-persons-in-vengaivayal-case/
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
பெண் பத்திரிகையாளரிடம் எப்படி பேச வேண்டுமென தெரியாதா? Jan 24, 2025 பெண் பத்திரிகையாளரிடம் இழிவாக பதிலளித்த சீமானுக்கு சென்னை, கோவை பத்திரிகையாளர் மன்றங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஈரோடு இடைத்தேர்தலை முன்னிட்டு பிரச்சாரத்திற்காக இன்று (ஜனவரி 24) கோவை விமான நிலையம் வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது புதிய தலைமுறை ஊடக பெண் பத்திரிகையாளர், நீங்கள் பிரபாகரனுடன் இருந்த புகைப்படம் குறித்து பிரபாகரனின் அண்ணன் மகன் தெரிவித்த கருத்து பெரிய விமர்சனத்துக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறது என்று கேள்வி எழுப்பினார். இதனால் ஆவேசமான சீமான், அநாகரிகமான வார்த்தையை பயன்படுத்தி பதிலளித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார். இந்நிலையில் சீமானுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அதில், பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் கண்ணியக் குறைவான வார்த்தைகளை பயன்படுத்திவரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. ஊடகங்களில் உரையாடும் எளிய மனிதர்களே நாகரிகமான சொற்களை பயன்படுத்தும்போது, ஒரு கட்சித்தலைவரான சீமான் பொது இடங்களிலும் ஊடக சந்திப்புகளிலும், தொடர்ந்து ஆபாச மற்றும் இழி சொற்களை பயன்படுத்திவருவது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. கோவையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், பிரபாகரனின் அண்ணன் மகன் சீமான் மீது எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டுகளை கேள்வியாக முன்வைத்த புதிய தலைமுறை பெண் செய்தியாளரிடம், முகம்சுளிக்கும் வகையில் பதிலளித்திருக்கிறார். சீமான், செய்தியாளரை தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு சொல்லவில்லை என்றாலும், பெண் செய்தியாளருக்கு பதிலளிக்கிறோம் என்ற கவனமும் பொறுப்பும் இல்லாமல் (அச்சிலேற்ற முடியாத வார்த்தைகளைக் கொண்டு) பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. சீமான், பொது இடங்களிலும் ஊடக சந்திப்புக்களிலும் முதிர்ச்சியான சொற்களைப் பயன்படுத்துவதும், கண்ணியம் அறிந்து நடந்துகொள்ள வேண்டும்” என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தியுள்ளது. கோவை பத்திரிகையாளர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பொது வாழ்க்கைக்கு வந்து ஆண்டுகள் பல கழிந்தும் பொதுவெளியில் பெண்கள் மத்தியில் நாகரீகமாக பேசத் தெரியாத ச்ச்ச்சீமானே.. கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தின் வன்மையான கண்டனங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://minnambalam.com/political-news/dont-know-how-to-talk-to-a-female-journalist-chennai-press-club-condemnation-to-seaman/
-
பெரியார் – பிரபாகரனைக் கொச்சைப்படுத்துவதை இத்தோடு நிறுத்திக்கீங்க… பழ. நெடுமாறன் எச்சரிக்கை!
பெரியார் – பிரபாகரனைக் கொச்சைப்படுத்துவதை இத்தோடு நிறுத்திக்கீங்க… பழ. நெடுமாறன் எச்சரிக்கை! Jan 24, 2025 பெரியார் – பிரபாகரனைக் கொச்சைப்படுத்தும் போக்கை நிறுத்துக என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார். பெரியார் குறித்து தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதற்கு பெரியாரிய ஆதரவு அமைப்புகளும், இயக்கங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவரது வீட்டின் முன் முற்றுகையிடும் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இப்படி இரு தரப்பும் மாறி மாறி விமர்சித்து வரும் நிலையில் பழ.நெடுமாறன் இன்று (ஜனவரி 24) அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “உலகத் தமிழர்களின் இருபெரும் ஆளுமைகளான பெரியாரையும், பிரபாகரனையும் ஒருவருக்கெதிராக மற்றொருவரையும் நிறுத்த செய்யப்படும் முயற்சி குறுகிய அரசியல் ஆதாய நோக்கத்தோடு செய்யப்படுவதாகும். இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். பெரியார் பெண்ணுரிமைக்காகத் தொடர்ந்து போராடியவர். அவரது இக்கொள்கையை நிறைவேற்றும் வகையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பெண்களையும் சேர்த்து, ஆயுதப் பயிற்சி அளித்து களத்தில் போராட வைத்தப் பெருமை பிரபாகரனுக்கு மட்டுமே உண்டு. வேறு எந்த நாட்டின் விடுதலை இயக்கத்திலும் பெண் போராளிகள் சேர்க்கப்பட்டதில்லை. 2009ஆம் ஆண்டு இறுதிப்போருக்கு முன்பாக தமிழீழத்தின் பெரும் பகுதி விடுதலைப்புலிகளின் ஆட்சிக் கட்டுப்பாட்டின்கீழ் இருந்தது. அப்போது பெரியாரின் முக்கிய கொள்கைகளில் ஒன்றான சாதி ஒழிப்பினைச் செயல்படுத்திய பெருமை பிரபாகரனுக்கு உண்டு. விடுதலைப்புலிகள் திருமணம் செய்துகொள்ளவேண்டுமானால், சாதி மறுப்புத் திருமணம் அல்லது விதவைத் திருமணம் ஆகிய இரண்டில் ஒன்றை பின்பற்றவேண்டும் என ஆணையிட்டார். அவரது திருமணம் முதல் விடுதலைப்புலிகள் பலரின் திருமணங்கள் இத்தகைய புரட்சிகர திருமணங்களாகவே அமைந்தன. அவற்றைப் பார்த்த மக்களும் அவர்களைப் பின்பற்றி சாதி மறுப்புத் திருமணங்களை செய்துகொள்ள வழிவகுக்கப்பட்டது. சாதி ஏற்றத்தாழ்வுகளைக் கடைப்பிடிப்பவர்கள் மீது விடுதலைப்புலிகள் கடும் நடவடிக்கை எடுத்தனர். மேலும் பல புரட்சிகரமான சீர்திருத்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். பெரியார் உயிரோடு இருந்திருந்தால், தனது கோட்பாடுகளைச் செயல்படுத்தி வரும் பேரன் பிரபாகரனைச் சந்தித்துப் பாராட்ட நேரில் தமிழீழம் சென்றிருப்பார் என்பதில் ஐயமில்லை. பெரியாரைப் பற்றியோ அல்லது பிரபாகரனைப் பற்றியோ எத்தகைய புரிந்துணர்வும் இல்லாமல் அவர்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் பேசுபவர்கள் தங்களின் தகாதப் போக்கினை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். சாதி, சமய வேறுபாடுகளால் பிளவுப்பட்டுக் கிடக்கும் தமிழர்களை ஒன்றுபடுத்தவும், பகுத்தறிவுச் சமதர்மப் பாதையில் தொடர்ந்து நடக்கவும் அரும்பாடுபட்ட இரு தலைவர்களையும் கொச்சைப்படுத்தும் போக்கில் நடந்துகொள்பவர்களைத் தமிழ்கூறும் நல்லுலகம் ஒருபோதும் மன்னிக்காது என எச்சரிக்கையுடன் தெரிவித்துள்ளார். https://minnambalam.com/political-news/please-stop-defaming-against-periyar-and-prabhakaran-pazha-nedumaran-warning/
-
முதல்வர் ஆசை… அந்த கட்சி பெயரை சொல்ல மாட்டேன்.. சீமானை விளாசிய ஸ்டாலின்
முதல்வர் ஆசை… அந்த கட்சி பெயரை சொல்ல மாட்டேன்.. சீமானை விளாசிய ஸ்டாலின் Jan 24, 2025 நாங்கள் தான் அடுத்த முதல்வர் என சிலர் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 24) மறைமுகமாக விமர்சித்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 3000 பேர் இன்று (ஜனவரி 24) சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசும்போது,”பல்வேறு பொறுப்புகளில் ஒரு இயக்கத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த நீங்கள், அந்த இயக்கத்தின் தலைமை முறையாக இல்லை, நமக்கு மட்டுமல்ல தாய்நாட்டிற்கும் அது துரோகமாக அமைந்துவிடும் என்பதை உணர்ந்து சிறப்பான முடிவெடுத்து திமுகவில் இணைந்திருக்கிறீர்கள். உங்களை நான் திமுக தலைமை கழகத்தின் சார்பில் வரவேற்கிறேன். சில நாட்களுக்கு முன்பு ராஜீவ் காந்தி என்னிடத்தில் வந்து ஆயிரக்கணக்கான தோழர்கள் நம்முடைய கட்சியில் இணைய காத்திருக்கிறார்கள். அழைத்து வரட்டுமா? என்று கேட்டார். இந்த கேள்வியை நீங்கள் கேட்க வேண்டிய அவசியமில்லை. அழைத்து வாருங்கள், வரவேற்க நாங்கள் காத்திருக்கிறோம் என்று நான் சொன்னேன். திமுக என்பது நேற்று முளைத்த காளான் அல்ல. 1949-ஆம் ஆண்டு திமுகவை அண்ணா தொடங்கினார். அதற்கு பிறகு 1957-ஆம் ஆண்டு தேர்தல் களத்தில் நாம் ஈடுபட்டோம். ஆனால், இன்றைக்கு சில பேர் கட்சி துவங்கிய உடனே ஆட்சிக்கு வருவோம் என்று சொல்லக்கூடிய நிலை உள்ளது. நாங்கள் தான் அடுத்த முதல்வர் என சிலர் அநாதை நிலையில் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர் எந்தக் கட்சி தலைவர் என்று சொல்ல நான் விரும்பவில்லை. அவர்களுக்கெல்லாம் அடையாளம் காட்ட நான் தயாராக இல்லை. அவர்கள் பெயரை சொல்லி இந்த மேடைக்குரிய அங்கீகாரத்தை நான் குறைத்துக்கொள்ள விரும்பவில்லை. இந்த மேடையில் நான் உள்பட உதயநிதி, துரைமுருகன் ஆகியோர் மாற்றுக் கட்சியினர் என்று தான் சொன்னோம். அந்த கட்சியின் பெயரைக் கூட சொல்ல எங்கள் வாய் வரவில்லை. எத்தனையோ கட்சி பெயரை சொல்கிறோம். உண்மையிலேயே தமிழர்களுக்காக பாடுபடும் கட்சியாக இருந்தால் அவர்கள் பெயரை சொல்லலாம். வேஷம் போடுபவர்களுக்கு அடையாளம் காட்ட நான் விரும்பவில்லை. திராவிட மாடல் என்று சொன்னாலே சிலருக்கு கோபம் வருகிறது. நாங்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருப்போம். அதற்காக நாங்கள் பயப்படப்பட்டோம். நீங்கள் இப்படி தரக்குறைவாக பேச பேச தான் திராவிட மாடல் அரசு வளர்ந்து வருகிறது. அதனால் தான் உங்கள் கட்சியில் இருந்து எல்லோரும் இங்கு வந்துகொண்டிருக்கிறார்கள்” என்று ஸ்டாலின் தெரிவித்தார். https://minnambalam.com/political-news/mk-stalin-criticized-seeman-in-anna-arivalayam/ பெரியார் சிலை பரிசு… திமுகவில் இணைந்த 3,000 நாம் தமிழர் கட்சியினர்! Jan 24, 2025 நாம் தமிழர் கட்சியில் இருந்து 3,000 பேர் விலகி திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று (ஜனவரி 24) திமுகவில் இணைந்தனர். நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய நிர்வாகிகளை ஒருங்கிணைக்கும் பணியை திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி, திமுக துணை செயலாளர் ஜோயல் உள்ளிட்ட மாணவரணி, இளைஞரணி நிர்வாகிகள் மேற்கொண்டனர். அந்தவகையில், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய 3,000 பேர் திமுகவில் இன்று இணைந்தனர். மாவட்ட செயலாளர்கள் ராமச்சந்திரன், நெல்லை கண்ணன், சுப்பையா பாண்டியன், கலியபெருமாள், நாமக்கல் வினோத், நாகூர் கனி, முன்னாள் மாவட்ட செயலாளர் தேவராஜ், மண்டல செயலாளர்கள், தொகுதி செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் என 30 முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, அண்ணா அறிவாயலம் கலைஞர் அரங்கிற்கு வந்த முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோருக்கு புத்தகம், சால்வை, பெரியார் சிலைகள் வழங்கி நாம் தமிழர் கட்சியினர் திமுகவில் இணைந்தனர். கட்சியில் இணைந்த நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் சால்வை அணிவித்து கெளரவித்தார். https://minnambalam.com/political-news/ntk-cadres-gifts-mk-stalin-to-periyar-statue-joined-dmk/
-
அடுத்த மாவீரர் தினத்திற்கு முன் ‘தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தை விடுவியுங்கள்’
அடுத்த மாவீரர் தினத்திற்கு முன் ‘தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தை விடுவியுங்கள்’ சுமார் 16 வருடங்களாக வன்னியில் இராணுவத்தினரால் பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மிகப் பெரிய மாவீரர் துயிலும் இல்லக் காணியை முழுமையாக விடுவிக்கக் கோரி போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் ஜனாதிபதிக்கு ஆயிரக்கணக்கான கையொப்பங்களுடன் மனு ஒன்றை அனுப்பிவைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற தமிழ் மாவீரர்களின் பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்ட குழுவினர் 2,500 பேர் கையொப்பமிடப்பட்ட மனுவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்குமாறு வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகத்திடம் கையளித்ததாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். எதிர்வரும் நவம்பர் 27 அன்று இடம்பெறவுள்ள மாவீரர் தினத்திற்கு முன்னர் தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தை விடுவிக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இந்த நடவடிக்கைக்கு தலைமைத்தாங்கிய முல்லைத்தீவு, விசுவமடுவில் அமைந்துள்ள தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவின் செயலாளர் சுந்தரலிங்கம் யோகலிங்கம் ஊடகங்களுக்கு தெரிவித்தார். “கையெழுத்துப் போராட்டத்தின் ஊடாக பெறப்பட்ட கையெழுத்துக்கள் அடங்கிய மகஜரை வட மாகாண ஆளுனரிடம் கையளித்துள்ளோம். தேராவில் துயிலும் இல்ல காணியை இராணுவத்தினரிடம் இருந்து மீளப் பெற்றுத்தருமாறும். அந்த இடத்திலே குறைந்தளவு இராணுவத்தினரை வைத்து கள்ளு உற்பத்தி நிலையம் நடத்தப்பட்டு வருகின்றது. ஆகவே எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி நினைவேந்தலை மேற்கொள்ளும் வகையில் அந்த இடத்தை எமக்கு பெற்றுத்தர வேண்டுமென ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் கேட்டுக்கொள்ளும் வகையிலான மகஜரை ஆளுநரிடம் கையளித்துள்ளோம். அவர்கள் எங்களது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு எதிர்வரும் நினைவேந்தல்களை அந்த இடத்தில் சுதந்திரமாக செய்வதற்கு வழியேற்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.” 1995 முதல் 2009 வரையான காலப்பகுதியில் போரில் உயிர்நீத்த எண்ணாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீர, வீராங்கனைகள் அந்த இடத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக, தேராவில் துயிலும் இல்லத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ள மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பதற்காக ஜனவரி 20ஆம் திகதி வடமாகாண ஆளுநரிடம் கையளித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். அந்த நிலம் தங்களுக்கு புனிதமானது என தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஜனாதிபதிக்கு அவர்கள் அறிவித்துள்ளனர். “எங்கள் பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் விதைக்கப்பட்டுள்ள இந்த துயிலும் இல்லம் எங்களுக்கு மிகவும் புனிதமானது, அங்கு சென்று நாங்கள் வீழ்ந்த எமது உறவினர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம்.” இறுதி யுத்த காலத்தில் கனரக வாகனங்களால் வடக்கு கிழக்கில் உள்ள புனித துயிலும் இல்லங்கள் அனைத்தும் அழிக்கப்பட்ட போது தேராவில் மாவீரர் துயிலும் இல்லமும் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் இந்த இல்லமும் இதுவரை காலமும் ஆளும் அரசாங்கங்களால் பல்வேறு இராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டது என்பது மறுக்க முடியாத விடயம் எனவும், இது தமக்கு பெரும் வேதனை அளிப்பதாகவும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிடம் தெரிவித்துள்ளனர். “மிகப் புனிதமான இடமாகக் கருதப்படும் மயானத்தை இழிவுபடுத்துவது எங்களுக்கு மிகுந்த வேதனையையும் மன உளைச்சலையும் தருகிறது.” போர் முடிவடைந்ததில் இருந்து இலங்கை இராணுவத்தின் 573ஆவது படையணி தேராவில் துயிலும் இல்லத்தை வலிந்து தமது ஆக்கிரமிப்பில் வைத்துள்ளதாகவும், 14வது இலங்கை தேசிய படையணி அங்கு சீமெந்து கல் உற்பத்தியில் ஈடுபட்டதாகவும் ஜனாதிபதியிடம் குறிப்பிட்டுள்ளனர். “கல்லறைகளை வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவது சர்வதேச விதிமுறைகள் மற்றும் மரபுகளை அப்பட்டமாக மீறுவதாகும், மேலும் அது புனிதத்தை களங்கப்படுத்துவதற்குச் சமம்.” தேராவில் மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் குறித்த துயிலும் இல்லத்தில் ஐந்து இராணுவத்தினரே தங்கியுள்ளதாக ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளனர். “அங்கு ஐந்து இராணுவத்தினர் மட்டுமே தங்கியுள்ளனர், மேலும் அவர்கள் எந்த வேலையிலும் ஈடுபடவில்லை. இராணுவம் வேண்டுமென்றே அந்த நிலத்தை தங்களின் வலிந்த ஆக்கிரமிப்பின் கீழ் வைத்திருக்க விரும்புகிறது என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது..” தமது பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தை சட்டரீதியாக விடுவித்து, சுதந்திரமாக அங்கு சென்று அஞ்சலி செலுத்துவதற்கான வாய்ப்பை உறுதிப்படுத்துமாறு மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். “அந்த நிலத்தை விடுவிக்கும் போது, அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டவர்களின் குடும்பங்கள் ஆண்டு முழுவதும், குறிப்பாக ‘மாவீரர் நாளன்று’ பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் வந்து அஞ்சலி செலுத்துவதற்கு வசதியாக, தடையற்ற அணுகலை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.” பிரதமர், வடமாகாண ஆளுநர், கடற்றொழில் அமைச்சர், யாழ்ப்பாணம் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு மனுவின் பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் மாவீரர்களாகப் போற்றப்படும் ‘துயிலம் இல்லம்’ எனப்படும் பல மயானங்கள் அரச படைகளினால் அழிக்கப்பட்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் முகாம்களாக மாற்றப்பட்டன. விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பிரதேசங்களை இராணுவம் ஆக்கிரமித்த பின்னர், சுமார் 20,400 தமிழ் போராளிகளின் புதைகுழிகள் அடங்கிய சுமார் 25 மயானங்கள் இலங்கை இராணுவத்தால் புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. தமிழ் மற்றும் சைவ கலாச்சாரத்தின் ஒரு அங்கமான இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவது ஐக்கிய நாடுகள் சபையால் அடிப்படை உரிமையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த உரிமையை ஏற்றுக் கொள்வதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவும் உறுதியளித்துள்ளார். https://akkinikkunchu.com/?p=309178
-
அரியநேத்திரனை கட்சியிலிருந்து நீக்கும் தீர்மானத்தை மறுபரீசிலனை செய்யுங்கள் - ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் நடவடிக்கைக்குழு
அரியநேத்திரனை கட்சியிலிருந்து நீக்கும் தீர்மானத்தை மறுபரீசிலனை செய்யுங்கள் தமிழரசுக்கட்சிக்குள் இருக்கும் சில தமிழ்த்தேசிய விரோத சக்திகளின் செயற்பாடுகள் எமக்கு பெரும் கவலையை ஏற்படுத்துகின்றன. இச்செயற்பாடுகள் எமது மக்களின் அபிலாஷைகளுக்கு எதிரானவையாக இருப்பதுடன் மாத்திரமன்றி, தமிழ் மக்களை சிங்களவர்களின் ஆதிக்கத்தின் கீழ் நிரந்தரமாக அடக்குவதற்கும் பங்களிக்கின்றது. அதன்படி ஈழத்தமிழர்களின் அபிலாஷைகளை முழுமையாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரியநேத்திரனை கட்சியிலிருந்து நீக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை மறுபரீசிலனை செய்யுமாறு வலியுறுத்துகிறோம் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் செயற்குழு உறுப்பினர்களுக்கு எழுதியிருக்கும் பகிரங்க கடிதத்தில் புலம்பெயர் தமிழர் அமைப்பான ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் நடவடிக்கைக்குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவ்வமைப்பினால் வெளியிடப்பட்டிருக்கும் பகிரங்க கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: ஈழத்தமிழ் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மிகப்பெரிய பிரதான அரசியல் கட்சியாக உள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சி, எமது மக்களின் அரசியல் சுதந்திரத்தையும், விடுதலையையும், உரிமையையும் நோக்கி சகலரையும் வழிநடத்தவேண்டிய பொறுப்புவாய்ந்த நிலையில் இருக்கின்றது. ஆனால் கட்சியின் சமீபத்திய தீர்மானங்களும், செயற்பாடுகளும் எமக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்களின் உணர்வையும், அபிலாஷைகளையும் பிரதிபலிக்கவேண்டிய இலங்கைத் தமிழரசுக்கட்சி, எமது பிரச்சினைகளை சர்வதேச அரங்குக்குக் கொண்டுசெல்வதற்கான முக்கிய வாய்ப்புக்களைத் தவறவிட்டதுடன் மாத்திரமன்றி, எமது மக்களின் உண்மையான அபிலாஷைகளைப் பிரதிநிதித்துவப்படுத்த முயன்றவர்களைக்கூட தண்டித்ததாகவே தோன்றுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் இணைந்து ஈழத்தமிழர்களின் அபிலாஷைகளை உலகுக்குக் காண்பிப்பதற்காக அரியநேத்திரனை தமிழ் பொதுவேட்பாளராகக் களமிறக்கினர். அவர் 226,343 வாக்குகளைப் பெற்று ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்தினார். அதனைத்தொடர்ந்து நடைபெற்ற பொதுத்தேர்தலில் 257,813 வாக்குகளைப்பெற்ற இலங்கைத் தமிழரசுக்கட்சி, பாராளுமன்றத்தில் 8 ஆசனங்களைக் கையகப்படுத்தியது. இரண்டு தேர்தல்களிலும் தமிழர்கள் சார்பாக இருதரப்பினருக்கும் கிடைக்கப்பெற்ற வாக்குகள் ஏறத்தாழ சமனாகவே இருக்கின்றது. இம்முடிவுகள் தமிழ் மக்களின் அரசியல் தீர்மானத்தையும், வலிமையையும் பிரதிபலிக்கின்றன. இருப்பினும் ஈழத்தமிழர்களின் அபிலாஷைகளை முழுமையாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரியநேத்திரனை தமிழரசுக்கட்சியிலிருந்து நீக்கியிருப்பதாக நாம் அறிகின்றோம். தமிழ் மக்களால் அவருக்கு வழங்கப்பட்ட ஆணையையும், அங்கீகாரத்தையும் கருத்திற்கொண்டு இத்தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். இலங்கைத் தமிழரசுக்கட்சிக்குள் இருக்கும் சில தமிழ்த்தேசிய விரோத சக்திகளின் செயற்பாடுகள் எமக்கு பெரும் கவலையை ஏற்படுத்துகின்றன. இச்செயற்பாடுகள் எமது மக்களின் அபிலாஷைகளுக்கு எதிரானவையாக இருப்பதுடன் மாத்திரமன்றி, தமிழ் மக்களை சிங்களவர்களின் ஆதிக்கத்தின்கீழ் நிரந்தரமாக அடக்குவதற்கும் பங்களிக்கின்றது. இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த தேர்தல்களில் எமது மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி மதிப்பளிக்கவேண்டும் என விரும்புகிறோம். எமது மக்களின் ஆணையையும், அங்கீகாரத்தையும் பெற்றவர்களை நீக்குவதும், எமது மக்களால் நிராகரிக்கப்பட்ட நபர்களுக்கு புதிய பதவிகளை உருவாக்கி வழங்குவதும் எம்மால் பெரிதும் மதிக்கப்படுகின்ற கட்சியின் எதிர்காலத்துக்கும், எமது மக்களின் எதிர்காலத்துக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே மேற்குறிப்பிட்ட தீர்மானத்தை மீள்பரிசீலனைக்கு உட்படுத்துமாறு வலியுறுத்துகிறோம் என அந்தப் பகிரங்கக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://akkinikkunchu.com/?p=309234
-
பழிவாங்கு படலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: மன்னார் துப்பாக்கிச்சூடு குறித்து செல்வம் எம்.பி வலியுறுத்தல்
பழிவாங்கு படலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: மன்னார் துப்பாக்கிச்சூடு குறித்து செல்வம் எம்.பி வலியுறுத்தல் January 24, 2025 மன்னாரில் நீதிமன்றத்திற்கு முன்னால் துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு தரப்பினரின் அசமந்த போக்கே இந்த நிலைமைக்கு காரணம். நானும் இலக்காக்கப்படலாம். பழிவாங்கு படலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதன் மூலம் தூய்மையான இலக்கை நோக்கிய இலட்சியத்தை அடைய முடியும் என ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) நடைபெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் 2413/37 ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி, செயல்நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் சட்டத்தின் மீதான ஒழுங்குவிதிகள் உட்பட பல கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, அரசாங்கத்தின் தூய்மையான இலங்கை என்ற திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். இந்த திட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை. முன்னாள் ஜனாதிபதி இல்லம் தொடர்பான தீர்மானம் மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவை விசாரணைக்கு அழைக்க நடவடிக்கை எடுத்தமை வரவேற்கத்தக்கது.. இது உள்ளூராட்சித் தேர்தலுக்கான யுக்தியாக அமைய கூடாது. தூய்மையான இலக்கை நோக்கிய இலங்கை என்ற அடிப்படையில் பல விடயங்களை மேற்கொள்வதன் ஊடாக இதனை வெற்றிக்கொள்ள முடியும். வடக்கு மற்றும் கிழக்கை பொறுத்த வரையில் முப்படையினரும் பொதுமக்களின் காணிகளை அபகரித்துள்ளனர். தேவாலயங்கள், கோயில்களின் காணிகளும் அபகரிக்கப்பட்டுள்ளன. இதேவேளை திணைக்களங்களின் செயற்பாடுகள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லாததை போன்றே இருக்கின்றன. வன ஜீவராசிகள் திணைக்களம்,தொல்பொருள் திணைக்களம் ஆகியனவை தனி அரசாங்கங்கள் போன்றே செயற்படுகின்றது. அது பொதுமக்களின் காணிகளையும் விவசாயிகளின் காணிகளை அபகரிக்கின்றது. அந்தக் காணிகளை விடுவிப்பதன் ஊடாகவே தூய்மையான இலங்கை திட்டத்தை வெற்றிப்பெற முடியும். ஆகவே அரசாங்கம் இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். விவசாயிகள் செல்வந்தர்களல்ல அவர்கள் ஏழ்மை நிலைமையிலேயே வாழ்கின்றனர். அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நெல்லுக்கான உத்தரவாத விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். அத்துடன் அவர்களின் உற்பத்திகளுக்கு நியாயமான விலையை கொடுக்க வேண்டும். இதேவேளை ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும், திணைக்களங்கள் தொடர்பிலும் அவதானம் இருக்க வேண்டும். சில அதிகாரிகளின் தன்னிச்சையாக செயற்படுகின்றனர். அவர்கள் அந்த அதிகாரத்தில் இருந்து மாற்றப்பட வேண்டும். இந்த விடயங்களின் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். மன்னாரில் நீதிமன்றத்திற்கு முன்னால் துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர். இவ்வாறான சம்பவங்களை தடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதுகாப்பு தரப்பினரின் அசமந்த போக்கே இந்த நிலைமைக்கு காரணம். நானும் இலக்காக்கப்படலாம். பழிவாங்கும் படலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். இதன் மூலம் தூய்மையான இலக்கை நோக்கிய இலட்சியத்தை அடைய வேண்டும் என்றார். https://www.ilakku.org/பழிவாங்கு-படலத்திற்கு-மு/
-
சீனாவிற்கு எதிராக வரிகளை அதிகரிப்பதை தவிர்க்கின்றாரா டிரம்ப் - பேட்டியில் தெரிவித்திருப்பது என்ன?
சீனாவிற்கு எதிராக வரிகளை அதிகரிப்பதை தவிர்க்கின்றாரா டிரம்ப் - பேட்டியில் தெரிவித்திருப்பது என்ன? Published By: Rajeeban 24 Jan, 2025 | 10:52 AM சீனாவிற்கு எதிரான வரிஅதிகரிப்பை தான் தவிர்த்துக்கொள்ளகூடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். பொக்ஸ் நியுஸ் பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். சீன ஜனாதிபதிக்கும் டிரம்பிற்கும் இடையிலான உறவு குறித்து பதிலளித்துள்ள அவர் சமீபத்தில் சிறந்த நட்புறவுடனான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். கொவிட்டிற்கு முன்பாக தனக்கும் சீன ஜனாதிபதிக்கும் சிறந்த உறவுகள் காணப்பட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். சீனாஒரு பேராவல் உள்ள நாடு சீன ஜனாதிபதியும் பேராவல் உள்ள நபர் என தெரிவித்துள்ள டிரம்ப் அவர் எனது நண்பர் போன்றவர் சிறந்த நட்புறவுள்ளது என குறிப்பிட்டுள்ளார். சீனாவிற்கு எதிரான வரிகளை அதிகரிக்கும் திட்டத்தை நியாயப்படுத்தியுள்ள டிரம்ப் சீனா அமெரிக்காவிடமிருந்து அதிகளவு பணத்தை பெறுகின்றது அந்த பணத்தை கொண்டு தன்னை அபிவிருத்தி செய்கின்றது என தெரிவித்துள்ளார். சீனா மீது எங்களிற்கு ஒரு பலம்தான் உள்ளது அது வரி என தெரிவித்துள்ள டிரம்ப் அவர்கள் அதனை விரும்பவில்லை ,நான் சீனாவிற்கு எதிரான வரிகளை அதிகரிப்பதை தவிர்க்கலாம்,என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/204749
-
பெண்களிற்கு எதிரான பாரிய மனித உரிமை மீறல்கள் - தலிபானின் தலைவர்களை கைதுசெய்வதற்கு சர்வதேச நீதிமன்ற அதிகாரிகள் முயற்சி
பெண்களிற்கு எதிரான பாரிய மனித உரிமை மீறல்கள் - தலிபானின் தலைவர்களை கைதுசெய்வதற்கு சர்வதேச நீதிமன்ற அதிகாரிகள் முயற்சி Published By: Rajeeban 24 Jan, 2025 | 12:35 PM பெண்கள் யுவதிகளை துன்புறுத்தியமைக்காகவும் அவர்களிற்கு எதிராக மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமைக்காகவும் ஆப்கானிஸ்தானின் தலிபான் அமைப்பின் தலைவர்களை கைதுசெய்வதற்கான முயற்சிகளில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஈடுபட்டுள்ளது. பெண்கள் யுவதிகள் துன்புறுத்தப்படுகின்றமை தொடர்பில் தலிபான் அரசாங்கத்தின் சிரேஸ்ட தலைவர்களை கைதுசெய்வதற்கான பிடியாணையை பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபடவுள்ளதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்குரைஞர் தெரிவித்துள்ளார். தலிபானின் உயர்தலைவர் ஹைபதுல்லா அகுந்த்சாதாவும், பிரதம நீதிபதியும் பாலின அடிப்படையில் மனித குலத்திற்கு இழைக்கப்பட்ட குற்றங்களிற்கு பொறுப்பானவர்கள் என சந்தேகிப்பதற்கான வலுவான காரணங்கள் உள்ளன என சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்குரைஞர் கரீம்ஹான் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் பெண்கள் யுவதிகளை குற்றவியல் அடிப்படையில் துன்புறுத்துவதற்கும் அத்துடன் தலிபானின் பாலின கருத்தியலுடன் ஒத்துப்போகவில்லை என கருதப்படும் நபர்கள் துன்புறுத்தப்படுவதற்கும் பெண்கள் யுவதிகளின் நண்பர்கள் என கருதப்படுபவர்கள் துன்புறுத்தப்படுவதற்கும் இந்த இருவருமே காரணம் என அவர் தெரிவித்துள்ளார். தலிபானிற்கு எதிரான எதிர்ப்பை,கொலை, சிறைத்தண்டனை,சித்திரவதை பாலியல் வன்முறை உட்பட ஏனைய பாலியல் கொடுமைகள் மூலம் அடக்குகின்றனர் என அவர்தெரிவித்துள்ளார். பிடியாணையை பிறப்பிப்பதா என சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதிகள் தற்போது தீர்மானிப்பார்கள். https://www.virakesari.lk/article/204765
-
கூட்டுறவு பயிற்சி நிலையத்தை விடுவிக்க இராணுவம் இணக்கம்
கூட்டுறவு பயிற்சி நிலையத்தை விடுவிக்க இராணுவம் இணக்கம் January 24, 2025 10:05 am 15 வருடமாக இராணுவத்தின் வசமுள்ள வவுனியா கூட்டுறவு பயிற்சி நிலையத்தை விடுவிக்க இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் கிளீன் சிறிலங்கா விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா மாவட்டத்தில் காணப்படும் கூட்டுறவு பயிற்சி நிலையமானது கடந்த 15 வருடமாக இராணுவத்தின் பயன்பாட்டில் காணப்பட்டு வந்தது. கடந்த மாதம் இராணுவத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். அவர்கள் விடுவிப்பதாக உறுதியளித்துள்ளார்கள். வடக்கு மாகண சபை ஆட்சியின் போது வவுனியாவில் அமைக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் இதுவரை காலமும் திறக்கப்படாது பூட்டிய நிலையில் காணப்படுகின்றது. எதிர்வரும் காலத்தில் அதாவது வரும் மாதத்தில் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் அதனை திறந்து மக்களது பயன்பாட்டிற்கு விடவுள்ளோம். வன்னிப் பிரதேசத்தில் மகாவலி கங்கை நீர் இதுவரை வழங்கப்படவில்லை. எமது ஆட்சியில் மகாவலி கங்கை நீர்வளமானது வன்னிக்கும் வழங்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் வளமான எதிர்காலத்தையும், வளமான வாழ்க்கையையும் வன்னி மக்களுக்கு பெற்றுக் கொடுப்போம் எனத் தெரிவித்தார். https://tamil.adaderana.lk/news.php?nid=199218
-
யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்திற்கு “ திருவள்ளுவர் கலாச்சார மையம்“ என பெயர் மாற்றம்
'யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம்' என பெயர் மாற்றம் January 24, 2025 11:38 am இந்திய நிதியுதவியில் யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடத்திற்கு 'யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம்' என தற்போது பெயர் பலகை பொருத்தப்பட்டுள்ளது. கடந்த 18 ஆம் திகதி இலங்கையின் பிரதி கலாசார அமைச்சரும் இலங்கைக்கான இந்திய தூதுவர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் அக்கட்டத்திற்கு'திருவள்ளுவர் கலாசார மையம்' என பெயர் சூட்டி பெயர் பலகையை திறந்து வைத்தனர். 'யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையம்' என்ற பெயர் மாற்றப்பட்டு, 'திருவள்ளுவர் கலாசார மையம்' என பெயர் சூட்டியமைக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள அரசியல்வாதிகள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் தமது கண்டனத்தை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இன்று (24) குறித்த கட்டடத்தில், 'யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம்' என பெயர் பலகை பொருத்தப்பட்டுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=199225
-
புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ். மாவட்டத்தில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் முதலிடத்தில்
புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ். மாவட்டத்தில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் முதலிடத்தில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் 186 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளார். 2024 ஆம் ஆண்டு இடம்பெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறு 22ம் திகதி மாலை வெளியாகியது. இதில் இதுவரை கிடைத்த தரவுகளின் அடிப்படையில் யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் பரமேஸ்வரன் பிரசோதன் 186 புள்ளிகளைப் பெற்று சாதனை புரிந்துள்ளார். இதேநேரம் யாழ் தொன் பொஸ்கோ மாணவர் ஒருவர் 185 புள்ளிகளைப் பெற்றுள்ளார். http://www.samakalam.com/புலமைப்-பரிசில்-பரீட்சை-15/
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
குழுநிலைப் போட்டிகளுக்கு புள்ளி பின்வருமாறு வழங்கப்படும்😀
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
பல ஆவணங்கள் தமிழீழ ஆவணக்காப்பகம் இணையத்தில் உள்ளன. https://tamileelamarchive.com விடுதலைப் புலிகள் பத்திரிகை இணைப்பு https://tamileelamarchive.com/article_pdf/article_603a5d3c689251d2d3de9131b8e2f59d.pdf
- IMG_9886.jpeg
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
நான்கு பக்கமும் கிடைக்கவில்லை.. ஆனால் கிடைத்த ஒருபக்கம் போதும்..
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கான உத்தியோகபூர்வமான தளத்தில் இருந்து.. https://antonbalasingham.com/archives/205
-
இராணுவ ‘கூலி’ கொலையாளிகள் பற்றி ஜனாதிபதி வெளிப்படுத்துகிறார்
இராணுவ ‘கூலி’ கொலையாளிகள் பற்றி ஜனாதிபதி வெளிப்படுத்துகிறார் January 22, 2025 12:11 pm பாதாள உலகக் கைக்கூலிகள் குழுவொன்று இராணுவத்தினரே என ஆயுதப் படைகளின் கட்டளைத் தளபதியான ஜனாதிபதி தெரிவிக்கின்றார். அச்சத்தை ஏற்படுத்தும் இந்த தகவலை ஜனாதிபதி வெளிப்படுத்துவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர், மன்னாரில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர், கடமையிலுள்ள இராணுவச் சிப்பாய் என, இலங்கை பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவருக்கு ஆதரவாக இருந்த பிரதான சந்தேகநபர் ஓய்வுபெற்ற இராணுவ உறுப்பினர் என்பதுடன் 2023 இல் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரே அவர் எனவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். தேர்தல் வெற்றியை கொண்டாடும் பொதுக்கூட்டத்தில் இலங்கையை ‘குற்றவியல் நாடு’ எனக் கூறிய ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, இராணுவத்தின் 73 தானியங்கி துப்பாக்கிகள் பாதாள உலகத்தின் கைகளில் சிக்கியுள்ளதாக தெரிவித்து நாட்டின் அவல நிலையை மக்களுக்கு தெளிவுபடுத்தினார். அதில் சுமார் பாதி துப்பாக்கிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக (கைப்பற்றப்பட்டுள்ளதாக) ஜனாதிபதி தெரிவித்திருந்தார். “இந்த நாடு இருக்கும் பயங்கரமான சூழ்நிலையை நான் உங்களுக்குச் சொல்கிறேன். இராணுவ முகாம்களில் இருந்து ஆயுதங்கள் வெளியே வந்துள்ளன. ஒரு முகாமில் இருந்து எழுபத்து மூன்று T56 (தானியங்கி துப்பாக்கிகள்) பதாள உலகத்திற்கு வந்துள்ளன. ஏற்கனவே 38 ஐ நாங்கள் கைது செய்துள்ளோம். மேலும் 35 ஐ நாங்கள் தேடி வருகிறோம். இது இப்படித்தான் நடந்துள்ளது. நேற்று, ஒருவர் T56 உடன் கைது செய்யப்பட்டார். அவர் சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்.” ஏற்கனவே 13 பாதாள உலக உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மேலும் வலியுறுத்தினார். “எங்களிடம் ஒரு பெரிய மற்றும் மதிப்புமிக்க இராணுவம் உள்ளது. இராணுவத்தின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் ஏராளமானோர் உள்ளனர். இவ்வளவு பேர் இருக்கின்றபோதிலும், இராணுவத்திற்குச் சொந்தமான ஆயுதங்கள் பாதாள உலகத்திற்கு வந்துள்ளன. நாட்டின் நிலைமை இதுதான். பாதாள உலக கோஷ்டியினரின் கூலிக்கு துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு மீண்டும் முகாமுக்கு திரும்பும் சிலர் இராணுவத்தில் உள்ளனர். பதின்மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வாறான குற்றவியல் அரசு ஒன்று எம்முன்னே இருக்கிறது. யாரை நம்புவது? எங்கே நம்புவது? நாடு அத்தகைய நிலைக்குச் சென்றுள்ளது.” கடந்த 19ஆம் திகதி கட்டுகுருந்த பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய, இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மூன்று மாதங்களுக்கு முன்னர் பதவியேற்ற அனுர குமார திஸாநாயக்க, தனது ஆட்சியின் கீழ் உள்ள ‘குற்றவியல் அரசை’ சுத்தம் செய்வதாக உறுதியளித்ததுடன் பாதாள உலகத்திற்கு அரசியல் ஆதரவு கிடைப்பதாகவும் வலியுறுத்தினார். “முகாம்களில் உள்ள ஆயுதங்கள் அரசியல் ஆதரவுடன் பாதாள உலகத்திற்கு வருகின்றது எனச் சொன்னால், பாதாள உலகத்தின் கூலிக்கு, இராணுவத்தில் இலட்சக்கணக்கானோர் உள்ளனர். பெரியளவிலானோர் அல்ல, கையில் உள்ள விரல்களை விட கொஞ்சம் அதிகமானோர், கூலிக்கு வெளியே சென்று, கொலை செய்துவிட்டு முகாமுக்குத் திரும்புகிறார்கள். 13 பேர் கைது செய்யப்பட்டனர். நாட்டின் நிலைமை இதுதான். எனவே, இது ஒரு குற்றவியல் அரசு. இது எந்த நேரத்திலும் எதையும் நம்ப முடியாத ஒரு வகையான அரசு. அத்தகைய ஒரு அரசில்தான் நாங்கள் (உட்கார்ந்து) இருக்கிறோம். இதை ஒவ்வொன்றாக நாம் சுத்தம் செய்வோம்.” மன்னார் இரட்டைக் கொலை அண்மையில் கைது செய்யப்பட்ட பலரைப் பற்றி பொலிஸார் வழங்கிய தகவல்களுக்கு அமைய பணத்திற்காக செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வடக்கில் இடம்பெற்ற தொடர் கொலைகளில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் இராணுவத்துடன் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் ஜனவரி 16ஆம் திகதி இருவரைக் கொன்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் ஜனவரி 18ஆம் திகதி களனி பிரதேசத்தில் உள்ள மடு பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டதாக இலங்கைப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவர் நாரஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலையில் வைத்திய உதவியாளராக கடமையாற்றும் 34 வயதுடைய சீதுவ, அமந்தொலுவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்கள் 2022ஆம் ஆண்டு மாட்டு வண்டி சவாரி போட்டியின் போது இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இருவரைக் கொலை செய்தமை தொடர்பான வழக்கின் சந்தேகநபர்கள் என பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். மன்னார், நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய சவேரியன் அருள் மற்றும் 42 வயதுடைய செல்வகுமார் ஜூட் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இருவரும் ஆண்கள், ஆனால் ஒருவர் பெண் என பொலிஸ் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கு அமைய, நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் பதிவாகிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உதவிய பிரதான சந்தேகநபர் ஒருவரும் ஜனவரி 18ஆம் திகதி பேசாலை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். பேசாலை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், மாத்தளை, கைகாவல பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ சார்ஜன்ட் எனவும் அவர் களனியில் தற்காலிகமாக வசிப்பவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலதிக விசாரணைகள் மற்றும் ஆய்வின் அடிப்படையில் 24.08.2023 அன்று அடம்பன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முள்ளிகண்டல் பகுதியில் துப்பாக்கியால் சுட்டு இரட்டை கொலையை செய்த குற்றத்தின் பிரதான சந்தேகநபரே இந்த சந்தேகநபர் என தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் மன்னார் உயிலங்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற மாட்டு வண்டிச் சவாரி போட்டியின்போது உயிலங்குளம் மற்றும் நொச்சிக்குளம் ஆகிய இரு பிரதேசங்களைச் சேர்ந்த இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் உயிலங்குளத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதோடு அதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக 2023 ஓகஸ்ட் மாதம் மன்னார் அடம்பன் பொலிஸ் பிரிவில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பிரதேச ஊடகவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். https://oruvan.com/president-reveals-about-military-hired-killers/