Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. ஸ்ரீலங்காவை உண்மையாகவே ‘கிளீனாக’ வைத்திருக்க வேண்டுமானால்…? January 20, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்கவின் பேரார்வம் மிகுந்த திட்டமாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுக்கும் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka ) செயற்திட்டம் குறித்து நேர்மறையானதும் எதிர்மறையானதுமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆசியப் பிராந்தியத்திலேயே மிகவும் தூய்மையான நாடாக இலங்கையை மாற்றும் நோக்குடன் தனது அரசாங்கம் இந்த விசேட செயற்திட்டத்தை முன்னெடுக்கும் என்று பாராளுமன்ற தேர்தல் பிரசாரங்களின்போது ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு கூறினார். ஆனால், கிளீன் ஸ்ரீலங்காவுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியின் ஆரம்பக்கட்ட அணுகுமுறைகளின் விளைவாக கிளம்பிய விமர்சனங்களை அடுத்து அரசாங்க தலைவர்கள் இந்த செயற்திட்டம் வெறுமனே சுற்றுச்சூழலை துப்புரவாக்குவதுடனோ அல்லது பஸ்களிலும் முச்சக்கர வண்டிகளிலும் பொருத்தப்பட்டிருக்கும் மேலதிக உபகரணங்களை அகற்றுவதுடனோ மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டது அல்ல என்றும் பொதுவில் சமுதாயத்தின் பல்வேறு பிரச்சினைகளையும் கையாளுவதற்கான பரந்த இலட்சியத்தை கொண்டது என்றும் விளக்கம் அளிக்க வேண்டியநிலை ஏற்பட்டது. ஜனவரி முதலாம் திகதி கிளீன் ஸ்ரீலங்கா செயற்திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி திசாநாயக்க புதிய வருடம் இலங்கையில் புதியதொரு அரசியல் கலாசாரத்தின் தொடக்கத்தை குறிக்கிறது என்று பிரகடனம் செய்தார். “குடும்ப ஆதிக்க அரசியல், அதிகார துஷ்பிரயோகம், பொதுநலன்களுக்கு மேலாக தனிப்பட்ட நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசியல் உயர்குழாம் ஒன்றின் உருவாக்கம் போன்ற நடைமுறைகளை ஒழித்துக்கட்டும் இலட்சியத்தை நாம் கொண்டிருக்கிறோம். மக்களின் அபிலாசைகளுக்கு இசைவான அரசியல் கலாசாரம் ஒன்றை தோற்றுவிப்பதில் நாம் பற்றுறுதி கொண்டிருக்கிறோம். அதனால், எமது சமுதாயத்தை குணப்படுத்தி புதிய பண்புகளுடனும் கோட்பாடுகளுடனும் கூடிய ஒரு புதிய முறைமையை உருவாக்க வேண்டியது அவசியமாகிறது” என்றும் அவர் கூறினார். கிளீன் ஸ்ரீலங்கா தொடர்பாக அண்மையில் பாராளுமன்றத்தில் விளக்கமளித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்த செயற்திட்டத்தின் ஊடாக இலங்கை சமுதாயத்தில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வரமுடியும் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாகவும் இலங்கையை அபிவிருத்தியடைந்த ஒரு நாடாக கட்டியெழுப்புவதற்கு சமூக, தார்மீக மற்றும் சுற்றுச்சூழல் கோட்பாடுகளை வகுத்துச் செயற்படுவதற்கு உறுதி பூண்டிருப்பதாகவும் கூறினார். நல்லாட்சிக் கோட்பாட்டின் மூலமாக சமூகத்தின் சகல மட்டங்களிலும் ஊடாட்டத்துக்கும் மனித உறவுகளுக்குமான பண்புகளையும் நெறிமுறைகளையும் வகுத்து ‘சிரிக்கும் மக்களைக்’ கொண்ட ஒரு அழகான தேசமாக இலங்கையை மாற்றுவதே தங்களது இறுதிக் குறிக்கோள் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். கிளீன் ஸ்ரீலங்கா செயற் திட்டம் தொடர்பாக அரசாங்க தலைவர்கள் அளித்திருக்கும் விளக்கங்களின் அடிப்படையில் நோக்கும்போது உறுதியான தார்மீகப் பண்புகளைப் பின்பற்றும் மக்களைக் கொண்ட நாடாக இலங்கையை மாற்றுவதே அவர்களது இலட்சியம் என்பதை புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. சுற்றுச்சூழல் தூய்மையை மாத்திரமல்ல, கலாசாரத் தூய்மையின் அவசியத்தையும் மக்களுக்கு உணர்த்துவதில் அக்கறை கொண்டவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். சிறந்த சமுதாயம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற்கு மக்களின் நடத்தைகளில் பண்புரீதியான மாற்றத்தை ஊக்குவிப்பதில் (எவ்வாறு சிந்திப்பது, எவ்வாறு உணர்வது, எவ்வாறு செயற்படுவது) அரசாங்கம் அக்கறை கொண்டு செயற்படுகிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். முறைமை மாற்றத்தை வேண்டிநின்ற முன்னென்றுமில்லாத வகையிலான ஒரு மக்கள் கிளர்ச்சிக்கு பிறகு பழைய பாரம்பரிய அரசியல் அதிகார வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல் கட்சிகளை நிராகரித்த மக்கள் தேசிய மக்கள் சக்தியை அதிகாரத்துக்கு கொண்டுவந்தார்கள். அவர்கள் ஜனாதிபதி திசாநாயக்கவிடமும் அவரது தலைமையிலான அரசாங்கத்திடமும் முற்றிலும் வேறுபட்ட தலைமைத்துவப் பாங்கையும் ஆட்சி முறையையும் எதிர்பார்க்கிறார்கள். முன்னைய ஒழுங்கு முறையில் மாற்றம் வேண்டும் என்று மக்கள் விரும்பினாலும் கூட, புதிய முறைமையோ அல்லது புதிய அரசியல் கலாசாரமோ எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய தெளிவு சாதாரண மக்களுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. அது விடயத்தில் நாட்டின் அரசியல் தலைமைத்துவமே அவர்களுக்கு வழிகாட்டவேண்டும். இதுகாலவரையில் ஆட்சிசெய்த அரசியல் தலைவர்கள் மக்களை தவறாக வழிநடத்தியது மாத்திரமல்ல, மக்கள் மத்தியில் இருந்த தவறான சிந்தனைகளை தங்களுக்கு அனுகூலமாகப் பயன்படுத்தி அதிகாரத்தை வலுப்படுத்தினார்கள். மக்களுக்கு சரியான பாதையைக் காட்டவேண்டிய தலைவர்கள் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது என்ற போர்வையில் தவறான சிந்தனைகளை மக்கள் மத்தியில் வலுப்படுத்தக்கூடிய அரசியல் கொள்கைகளையும் செயற்பாடுகளையும் முன்னெடுத்தார்கள். நாடு இன்று எதிர்நோக்கும் சகல பிரச்சினைகளுக்கும் அதுவே அடிப்படைக் காரணமாகும். அதனால், முன்னைய அரசியல் தலைவர்கள் பிரச்சினைகளை கையாளுவதற்கு கடைப்பிடித்த அணுகுமுறைகளில் இருந்து எந்தளவுக்கு வேறுபட்ட அணுகுமுறையை ஜனாதிபதி திசாநாயக்கவினால் கடைப்பிடிக்கூடியதாக இருக்கும் என்பதிலேயே புதிய கலாசாரம் மற்றும் புதிய விழுமியங்களைக் கொண்ட சமுதாயத்தை தோற்றுவிப்பது பற்றிய அவரது பிரகடனங்களுக்கு நம்பகத்தன்மை கிடைக்கக்கூடியதாக இருக்கும். கடந்த கால அரசியல் காரணமாக இலங்கை இனரீதியாக பிளவுபட்ட ஒரு சமுதாயமாகவே இருக்கிறது. அந்தச் சமுதாயத்தில் பண்பு ரீதியான எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த வேண்டுமானால் இனங்களுக்கு இடையிலான உறவுகளில் ஆரோக்கியமான மாற்றங்கள் ஏற்பட வேண்டியது இன்றியமையாததாகும். இலங்கையில் இனிமேல் இனவாத அரசியலும் மதத்தீவிரவாதமும் தலையெடுப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதியும் அரசாங்க தலைவர்களும் திடசங்கற்பம் பூண்டிருக்கின்ற போதிலும், இதுகால வரையான இனவாத அரசியல் காரணமாக சமூகங்களுக்கு இடையில் வேரூன்றியிருக்கும் அவநம்பிக்கையையும் ஐயுறவுகளையும் ஓரளவுக்கேனும் தணிக்கக்கூடிய தெளிவான அறிகுறிகளை அவர்களின் நடவடிக்கைகளில் காணமுடியவில்லை. கிளீன் ஸ்ரீலங்காவுக்கு பொறுப்பான ஜனாதிபதி செயலணிக்கு உறுப்பினர்களை நியமித்த விடயத்தில் கூட புதிய காலாசார நாட்டம் வெளிக்காட்டப்படவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. அரசாங்கம் கூறுகின்றதைப் போன்று இலங்கைச் சமூகத்தின் சிந்தனையில் தார்மீக அடிப்படையிலான பண்பு மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டுமானால் இனத்துவ சமூகங்களின் நியாயபூர்வமான அபிலாசைகளை மதிக்கின்ற ஒரு மனமாற்றம் மக்கள் மத்தியில் ஏற்பட வேண்டியது அவசியமாகும். அத்துடன் தேசிய இனப்பிரச்சினை தோன்றியதற்கான அடிப்படைக் காரணிகள் பற்றிய தெளிவான புரிதலும் ஏற்பட வேண்டும். ஆனால், அரசாங்கத் தலைவர்கள் அது விடயத்தில் போதிய அக்கறைகாட்டும் மனநிலையில் இருப்பதாக தெரியவில்லை. இலங்கையின் தேர்தல் வரலாற்றில் முதற்தடவையாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தென்னிலங்கை சிங்கள தலைமைத்துவத்தைக் கொண்ட ஒரு தேசிய அரசியல் கட்சி பாரம்பரியமாக சிறுபான்மைச் சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல் கட்சிகளை விடவும் கூடுதலான பாராளுமன்ற ஆசனங்களை கைப்பற்றியிருக்கிறது. தேசிய மக்கள் சக்தி சாதித்திருக்கும் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியின் மூலமான செய்தியை ஜனாதிபதியும் அரசாங்கமும் உகந்த முறையில் விளங்கிக் கொண்டதாக தெரியவில்லை. தேர்தல் முடிவுகள் தொடர்பான நியாயபூர்வமான அரசியல் விவாதங்களில் முன்வைக்கப்படும் கருத்துக்கள் குறித்து இலங்கையின் முக்கியமான ஒரு அரசறிவியல் நிபுணரான பேராசிரியர் ஜெயதேவ உயன்கொடவின் வார்த்தைகளில் கூறுவதானால், “வடக்கு, கிழக்கில் தாங்கள் அடைந்த தேர்தல் வெற்றியை இனவாத அடிப்படையிலான அரசியல் நிகழ்ச்சி நிரலின் நிராகரிப்பாகவும் இலங்கையில் தேசிய ஐக்கிய அரசியலின் புதிய கட்டத்தின் ஒரு தொடக்கமாகவும் தேசிய மக்கள் சக்தி நோக்குகிறது. தமிழர்களும் முஸ்லிம்களும் பெரும்பான்மையாக வாழ்கின்ற மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த அமோக ஆதரவை அதிகாரப் பரவலாக்கத்தை வேண்டிநிற்கும் அரசியலின் தகுதி மற்றும் தமிழ்த் தேசியவாத அபிலாசைகளின் நிராகரிப்பு என்று மிகைமதிப்பீடு செய்யக்கூடாது. சுதந்திரத்துக்கு பின்னரான தசாப்தங்களில் அரசியல் சமத்துவத்துக்கான சிறுபான்மையினச் சமூகங்களின் கோரிக்கைளை பெறுமதியற்றதாக்குவதற்கான ஆயுதமாக வடக்கு, கிழக்கின் தேர்தல் முடிவுகளை தேசிய மக்கள் சக்தி பயன்படுத்தக்கூடாது.” தேசிய மக்கள் சக்திக்கு நாடுபூராவும் கிடைத்த அமோக ஆதரவை ஜனாதிபதி திசாநாயக்கவும் அரசாங்கமும் சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் அபிலாசைகளுக்கும் அதிகாரப்பரவலாக்கல் கோட்பாட்டுக்கும் பெரும்பான்மைச் சமூகத்தின் மத்தியில் நிலவும் ஆழக்காலூன்றிய தவறான நிலைப்பாடுகளை மாற்றியமைப்பதற்கு பயன்படுத்தினால் மாத்திரமே புதிய கலாசாரம் பற்றிய பேச்சுக்களுக்கு உண்மையில் அர்த்தம் இருக்கும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சமத்துவத்தையும் ஜனநாயகத்தையும் உள்ளூராட்சி, மாவட்ட மற்றும் மாகாண மட்டத்தில் அரசியல் மற்றும் நிருவாக அதிகாரப் பரவலாக்கத்தையும் உத்தரவாதம் செய்யும் என்று தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறிய ஜனாதிபதி திசாநாயக்க இலங்கையின் அரசியலமைப்பில் அதிகாரப்பரவலாக்கம் தொடர்பில் இருக்கின்ற ஒரேயொரு சட்ட ஏற்பாடான 13 வது திருத்தம் குறித்து எதையும் குறிப்பிடவில்லை. 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப் போவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்ததை தொடர்ந்து மூண்ட சர்ச்சைக்கு மத்தியில் கருத்து தெரிவித்த திசாநாயக்க தமிழ் மக்கள் தங்களுடைய பிரச்சினைகளுக்கு 13 வது திருத்தம் தீர்வாக அமையும் என்று நம்பினால் அந்த திருத்தம் தொடர்பில் தேசிய மக்கள் சக்திக்கு பிரச்சினை இல்லை என்று கூறினார். அரசியலமைப்பில் நீண்டகாலமாக இருக்கும் அந்த திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இன்றைய பிரதமரும் அன்று கூறினார். ஆனால், விக்கிரமசிங்கவின் முயற்சிக்கு தென்னிலங்கை தேசியவாத சக்திகள் மத்தியில் எதிர்ப்பு வலுவடைந்தயைடுத்து இருவரும் அதைப் பற்றி பேசுவதை கைவிட்டு விட்டனர். ஜனாதிபதியாக வந்த பிறகு பொதுவில் அவர் தேசிய இனப்பிரச்சினை குறித்தோ அல்லது 13 வது திருத்தம் குறித்தோ பேசுவதை திசாநாயக்க தவிர்த்துவருகிறார். மூன்று வருடங்களுக்கு பிறகு முன்னெடுக்கப்படவிருப்பதாக அரசாங்கம் கூறுகின்ற புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைகளின் போது 13 வது திருத்தத்துக்கு என்ன கதி நேருமோ எவரும் அறியார். ஆனால், இனப்பிரச்சினையை அலட்சியப்படுத்தினால், எந்த அரசியலமைப்புச் சீர்திருத்தத் திட்டத்துக்கும் நியாயபூர்வத்தன்மையோ அல்லது பொருத்தப்பாடோ இருக்கப்போவதில்லை. ஆனால், தற்போதைய உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியல் நிலைவரங்கள் வேண்டி நிற்பதற்கு இசைவாக தங்களது முன்னைய கொள்கைகளிலும் அணுகுமுறையிலும் பெரும் மாற்றங்களைச் செய்திருப்பதாக பெருமையாகக் கூறிக்கொள்ளும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு மற்றும் அதிகாரப்பரவலாக்கம் தொடர்பில் தங்களது கடும் போக்கான நிலைப்பாடுகளை தளர்த்துவதில் மாத்திரம் ஏன் விதிவிலக்காக நடந்துகொள்கிறார்கள்? இது விடயத்தில் கடும்போக்கு சிங்கள தேசியவாத அரசியல் சக்திகளுக்கும் தங்களுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் தான் விளக்கவேண்டும். புதிய அரசியல் கலாசாரத்தையும் தார்மீகப் பண்புகள் மற்றும் நெறிமுறைளைக் கொண்ட ஒரு சமுதாயத்தையும் உருவாக்குவதற்கு உறுதி பூண்டிருக்கும் ஜனாதிபதி திசாநாயக்க அதிகாரப் பரவலாக்கலுக்கு எதிரான தனது கட்சியின் பிடிவாதத்தை மாற்றுவதற்கு முன்வராமல் மக்களின் சிந்தனையில் எவ்வாறு பண்புரீதியான மாற்றத்தைக் கொண்டுவரப் போகிறார்? அவர் கூறும் பண்பு மாற்றத்தின் மட்டுப்பாடுகள் எவை? 1987 ஜூலை இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கையை ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) எதிர்த்து ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்தாலும் கூட, ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் பிரவேசித்த பிறகு தேர்தல்களில் போட்டியிட்டு மாகாணசபைகளில் அங்கம் வகித்தது. இந்தியாவினால் திணிக்கப்பட்டதாகக் காரணம் கூறி 13 வது திருத்தத்தை ஜே.வி.பி. எதிர்த்திருந்தாலும், தற்போது இந்தியாவுடன் நெருங்கிய உறவுகளை வளர்த்துக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், அதிகாரப் பரவலாக்கல் விடயத்தில் மாத்திரம் விட்டுக் கொடுப்பைச் செய்வதற்கு தயக்கம் காட்டுவது ஏன்? தென்னிலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் நம்பகத்தன்மையைக் கொண்ட ஒரே அரசியல் தலைவராக இன்று விளங்கும் ஜனாதிபதி திசாநாயக்க அவர்கள் பெரும்பான்மையினத்தவர்கள் மத்தியில் சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளுக்கும் அதிகாரப்பரவலாக்கத்துக்கும் எதிராக நிலவும் ஆழமான எதிர்ப்புணர்வையும் தப்பபிப்பிராயங்களையும் தணிக்குமுகமாக அவர்களின் மனங்களை வென்றெடுக்கக்கூடிய ஒரு தகுநிலையில் இருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. முன்னைய ஜனாதிபதிகளைப் போலன்றி வரலாறு தந்திருக்கும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி அவர் அந்த பணியைச் செய்ய முன்வராவிட்டால் வேறு எவரும் அண்மைய எதிர்காலத்தில் அதைச் செய்வதற்கு வாய்ப்பில்லை. புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்கு முன்னரான மூன்று வருட காலப்பகுதியில் மாகாணசபைகளை ஒழிக்கப்போவதில்லை என்று வெறுமனே கூறிக் கொண்டிருப்பதில் எந்தப் பயனும் இல்லை. மாறாக விரைவாக மாகாணசபை தேர்தல்களை நடத்தி 13 வது திருத்தத்தின் அதிகாரங்களைச் சாத்தியமானளவுக்கு நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி அரசியல் துணிச்சலை வரவழைத்துக் கொண்டால், இலங்கைச் சமூகத்தில் அவரும் அரசாங்கமும் ஏற்படுத்த நாட்டம் கொண்டிருக்கும் பண்புரீதியான மாற்றத்தை நோக்கிய செயன்முறைகளுக்கு உத்வேகத்தைக் கொடுப்பதாக நிச்சயம் அமையும். இனவாத அரசியல் மீண்டும் தலையெடுக்காமல் தடுக்கவும் அது பெருமளவுக்கு உதவும். தமிழ்க்கட்சிகள் அந்த திருத்தத்தை விரும்புகிறார்களா இல்லையா என்பதைப் பற்றி ஜனாதிபதி கவலைப்படத் தேவையில்லை. அரசாங்கம் நடந்து கொள்கின்ற முறையில்தான் தமிழ்க்கட்சிகள் தமிழ் மக்களிடமிருந்து மேலும் அந்நியப்படுமா அல்லது இல்லையா என்பது தங்கியிருக்கிறது. உள்நாட்டுப் போரின் முடிவுக்கு பின்னரான கடந்த பதினைந்து வருடங்களுக்கும் அதிகமான காலப் பகுதியில் தமிழ் மக்களை நிலைவரம் வேண்டிநிற்பதற்கு இணங்க நடைமுறைச் சாத்தியமான வழியில் வழிநடத்தத்தவறிய தமிழ்க் கட்சிகள் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் ஆரோக்கியமான சமிக்ஞையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் காண்பிக்காமல் இருப்பதை அடிப்படையாக வைத்து தமிழ் மக்கள் மத்தியில் அவற்றின் செல்வாக்கை மீட்டெடுப்பதில் நாட்டம் காட்டுவதை காணக்கூடியதாக இருக்கிறது. தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் தென்னிலங்கையின் உணர்வுகளில் எந்த விதமான தளர்வும் இல்லாமல் பண்புநிலை மாற்றம் மற்றும் தார்மீக விழுமியங்கள் பற்றி பேசுவதில் அர்த்தமில்லை. அத்துடன் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சகல இனங்களையும் சமமாக மதிக்கிறது என்றும் இனவாத அரசியலை அனுமதிக்கப் போவதில்லை என்றும் கூறிக்கொண்டிருந்தால் மாத்திரம் சிறுபான்மைச் சமூகங்களின் பிரச்சினைகள் தீர்ந்து விடப்போவதில்லை. ஸ்ரீலங்காவை உண்மையாகவே ‘கிளீன்’ செய்வதாக இருந்தால் இனப்பிரச்சினையில் பெரும்பான்மைச் சமூகத்தின் மனநிலையில் அடிப்படை மாற்றத்தை ஏற்படுவதற்கு ஜனாதிபதி தீவிரமாக பாடுபட வேண்டும். கிளீன் ஸ்ரீலங்கா முழுமையானதாக அமைவதற்கு இது இன்றியமையாதது. https://arangamnews.com/?p=11706
  2. பட்டதாரிகளின் போராட்டமும் அரசின் பொறுப்பும் January 19, 2025 — கருணாகரன் — ‘ஆட்சி மாறினாலும் சில காட்சிகள் மாறாது’ என்பார்கள். அப்படித்தானுள்ளது வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டமும். முந்திய அரசாங்கங்களின் ஆட்சிக் காலத்திலும் தமக்கு ‘அரசாங்கம் வேலை வழங்க வேண்டும்‘ என்று கேட்டுப் போராடினார்கள். இப்போதைய ஆட்சியின்போதும் போராடுகிறார்கள். இதற்காக ‘வேலையற்ற பட்டதாரிகள் சங்கம்‘ என்ற பேரில் ஒரு அமைப்பே உண்டு. அந்தச் சங்கம் தொடர்ந்தும் புதுப்பிக்கப்படுகிறது. அதுவே ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் போராட்டங்களை நடத்துகிறது. பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்று வரும் ஒவ்வொரு தலைமுறையினரும் அந்தச் சங்கத்தில் இணைகிறார்கள். அதாவது பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது மாணவர் அமைப்பில் செயற்படுகின்றவர்கள், பட்டம் பெற்றவுடன் அப்படியே வந்து வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தில் இணைந்து விடுகிறார்கள். இதனால் இந்தச் சங்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. தொடர்ந்து உயிர்வாழ்கிறது. இந்தச் சங்கமே யாழ்ப்பாணத்தில் விளக்குமாற்றை ஏந்தியும் தெருவைக் கூட்டியும் ஒரு அடையாளப் போராட்டத்தை நடத்தியுள்ளது. முன்பு ஆளுநர் அலுவலகத்தைச் சுற்றி வளைப்பார்கள். அல்லது மாவட்டச் செயலகத்துக்கு முன்னே நின்று ஆர்ப்பாட்டம் செய்வார்கள். இப்பொழுது சற்று வித்தியாசமாகத் தெருவைக் கூட்டியிருக்கிறார்கள். அதாவது தெருக்கூட்டுவதற்கே தமக்கு வழங்கப்பட்ட பட்டம் உள்ளது அல்லது தாம் பெற்றுக் கொண்ட பட்டம் பயன்படுகிறது என்ற விதமாக. ஆனால், அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாகவே இந்தத் தெருக்கூட்டும் காட்சி எதிர்விளைவை ஏற்படுத்தியிருக்கிறது. அரசாங்கத் தரப்பிலிருந்து மட்டுமல்ல, சமூக மட்டத்திலிருந்தும் இதற்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. வேலையற்ற நிலையை வெளிப்படுத்துவதற்கும் அதற்காகப் போராடுவற்கும் பல வழிமுறைகள் இருக்கும்போது, தெருக் கூட்டுவதாகக் காட்டுவது அந்தத் தொழிலையும் அதைச் செய்யும் தொழிலாளர்களையும் அவமதிப்பதாகும் என்று பலரும் தமது கண்டனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். வேண்டுமானால், நகரத்தையோ தெருவையோ சுத்தப்படுத்துவதாக – ஒரு முற்போக்குச் சிந்தனையை வெளிப்படுத்தியிருந்தால், அது வரவேற்பைப் பெற்றிருக்கும். மதிப்பைக் கூட்டியிருக்கும். அந்தக் கவனம் போராட்டத்துக்கு வலுச் சேர்ப்பதாக அமைந்திருக்கும். அப்படியெல்லாம் நடக்காமல் ஆவேசத்தைக் காட்ட முற்பட்டு மூக்குடைபட்டிருக்கிறார்கள், பட்டதாரிகள். ஆக, மக்களின் ஆதரவையும் இழந்த நிலையிலிருக்கும் இந்தப் போராட்டத்தின் அடுத்த கட்டம் என்ன? அதாவது இவர்களுடைய அடுத்த கட்டம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுவும் புதிய அரசாங்கம் இந்த விடயங்களை (வேலையில்லாப் பட்டதாரிகளை) என்ன செய்யப்போகிறது? அதனுடைய கொள்கை வகுப்பில் இதற்கான தீர்வு என்ன? என்ற கேள்விகள் எழுகின்றன. வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு அரச நிறுவனங்களில் பணி வழங்குதலே இதுவரையான நடைமுறையாக இருந்துள்ளது. குறிப்பாக அந்தந்தக் காலத்தில் ஆட்சியிலிருக்கும் அரசியற் தரப்பினர் தமது அரசியற் தேவைகளோடு இணைந்ததாக இந்தப் பணிச் சேர்ப்பைச் செய்துள்ளனர். ஏறக்குறைய அரசியல் நியமனங்களாக. இதனால், பணியில் சேர்ந்தவர்கள் அந்தந்த அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களைப்போலச் செயற்பட வேண்டிய நிர்ப்பந்தமும் உருவாகியிருந்தது. அதோடு ஆட்சியைப் பிடிப்பதற்காக வேலைவாய்ப்புகளை வழங்குவோம் என்று வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைய பணிச் சேர்ப்பைச் செய்ததால், அரச நிறுவனங்களில் தேவைக்கு அதிகமானவர்கள் குவிந்து போயுள்ளனர். மட்டுமல்ல, வேலை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே புதிய புதிய வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதெல்லாம் அரசாங்கத்துக்கு (மக்களுக்கு) சுமையாகவே இன்று மாறியுள்ளன. நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு இதுவும் ஒரு காரணம் என்று சுட்டிக் காட்டப்படுகிறது. இதனால்தான் அரச பணிகளில் உள்ளோரின் தொகையைக் குறைக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை விதித்தது. இந்த நிபந்தனை ஏற்புடையதே. இதையும் பட்டதாரிகள் அறிந்திருப்பார்கள். ஏற்கனவே பணியாளர் சுமையினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் அரசாங்கம் எப்படிப் புதிதாக நியமனங்களை வழங்கும் என்ற தெளிவு அவர்களுக்கு வந்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் இந்தக் கேள்வியாவது எழுந்திருக்க வேண்டும். எப்படிப் பழைய ஆட்களை – தேவைக்கு அதிகமாக இருப்போரை – வீட்டுக்கு அனுப்பலாம் அல்லது வேறு வழிகளில் அவர்களை ஈடுபடுத்தலாம் என்று அரசாங்கம் யோசித்துக் கொண்டிருக்கும்போது, எங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று பிடிவாதம் செய்தால் என்னதான் செய்ய முடியும்? இங்கேதான் நாம் படிப்பைப் பற்றியும் பட்டத்தைப் பற்றியும் கல்விச் சமூகத்தைப்பற்றியும் கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது. கல்வி என்பதும் உயர் கற்கை என்பதும் மனித அறிவையும் ஆற்றலையும் விருத்தி செய்வதற்கான ஒரு பொறிமுறையும் ஏற்பாடுமேயாகும். குறிப்பாகச் சுயாதீனத்தை உருவாக்க வேண்டும். ஆனால், கவலைக்குரிய விடயமாக இருப்பது, படிக்காதவர்கள் சுயாதீனமாக இயங்குகின்ற அளவுக்குப் படித்தவர்களிற் பலரும் இயங்க முடியாமல் சார்ந்திருக்கவும் தங்கி வாழவும் முற்படுவதாகும். அந்தளவுக்குத்தான் இவர்களுடைய அறிவுத்திறனும் ஆளுமை விருத்தியும் குறைந்து நலிந்து போயுள்ளது. மட்டுமல்ல, பலர் வேலையில்லாமலே உள்ளனர். ஒரு பக்கம் வேலையில்லாப் பட்டதாரிகள் என்றால், இன்னொரு பக்கம் வேலையில்லாப் பணியாளர்கள் என்ற நிலையே காணப்படுகிறது. வெளிக்கள உத்தியோகத்தர்கள் என்ற பேரில் நியமிக்கப்பட்டோரில் பலரும் உரிய வேலைகளைச் செய்வதுமில்லை. பணியிடங்களில் இருப்பதுமில்லை. அவர்கள் அரசாங்கத்தின் (மக்களின்) சம்பளத்தில் தங்களுடைய தனிப்பட்ட வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதுபோலப் பல பணிகளில் நியமிக்கப்பட்டவர்கள் பணிப் போதாமையினால் வேலையற்ற நிலையில் – சும்மா – இருக்கிறார்கள். இதேவேளை பல பணிகளுக்கு ஆட்களே போதாமலுள்ளது. குறிப்பாக தாதிய உத்தியோகத்தர்கள், மருத்துவர்கள், சில பாடங்களுக்கான ஆசிரியர்கள், கிராம அலுவலர்கள் போன்ற பணிகளில். இதனால் மக்களும் மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர். அதேநேரம் பல பணிமனைகளில் தேவைக்கு அதிகமான பணியாளர்கள் உள்ளனர். இதற்குக் காரணம், பணிச் சேர்ப்பில் காணப்படுகின்ற குறைபாடுகளாகும். எந்தெந்தப் பணிகளுக்கு எவ்வளவு பேர் தேவை என்ற மதிப்பீட்டைச் செய்து, அதற்கேற்ப பணிச் சேர்ப்பைச் செய்தால் இந்தக் குறைபாடும் பிரச்சினையும் நேராது. அதற்குப் பொருத்தமான கல்வித் தகமை, துறைசார் படிப்பு போன்றவை அவசியமாகும். அதற்கமைய பாடசாலை மட்டத்திலிருந்தே மாணவர்களை வழிப்படுத்தவும் அறிவூட்டவும் வேண்டும். அதற்கு முன் பெற்றோருக்கு விழிப்புணர்வூட்டப்படுவது அவசியமாகும். படிப்பு அல்லது கற்கை என்பதும் அறிவூட்டல் என்பதும் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையின் வளர்ச்சியோடு, சமூக அபிவிருத்தியையும் அதன் மூலமாகத் தேச வளச்சியையும் நிறைவு செய்வதற்கானதாக அமைய வேண்டும். அதற்கான பொறிமுறைகளை உருவாக்குவதே சிறந்த கல்விக் கொள்கையும் பொருளாதாரக் கொள்கையுமாகும். இரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. ஆனால், எமது நாட்டில் துரதிருஷ்டவசமாக அப்படியான நிலை இல்லை. இங்கே பல பாடசாலைகளிலும் மாணவர்கள் மீது விருப்பத்துக்கு அப்பாலான – தேவைக்கு வெளியேயான பாடங்கள் திணிக்கப்படுகின்றன. இலவச பல்கலை கழக அனுமதியின் போது இவர்களுக்கு வேலை பற்றி உறுதிப்பாடு வழங்கப்பட வில்லை.. பட்டதாரிக்கு அரசவேலை எனும் நியமம் இலங்கையில் இல்லை இவர்கள் சமூகத்தைப்பற்றி படிக்க இன்னும் நிறையவே உண்டு. இவர்களுக்கு உத்தியோகம் கிடைத்தால் அடித்தட்டு மக்களை எவ்வாறு நடாத்துவார்கள். உங்கள் சிந்தனையில் நிறையவே மாற்றம் வேண்டும் பட்டதாரிகளே. அரசாங்கம் எப்போதாவது கூறினார்களா பட்டதாரிகளுக்கு வேலை தருகின்றோம் நிரந்தர நியமங்கள் தருகின்றோம் என்று. வாய்ப்பு கிடைத்தால்மட்டும் போட்டிப்பரீட்சைகளில் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேர்ப்பு என்றுதான் அறிவிக்கின்றார்கள். தற்போதைய வங்குரோத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கே ஓய்வூதியம் கொடுப்பதற்கு திண்டாடுகின்றார்கள். இவ்வாறு திணரும் அரசாங்கம் எவ்வாறு பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பார்கள். அதுவும் எத்தனை ஆயிரம்பேருக்கு கொடுப்பார்கள். ஏற்கெனவே சகல மாகாணங்களிலும் அதிகளவு உத்தியோகத்தர்கள் மேலதிகமாக கடைமையாற்றுவதாக அரச ஊடகங்களில் கூடியிருந்தார்கள். அப்படியென்றால் தற்போது கடமையாற்றும் உத்தியோகத்தர்களை 55 வயதுடன் வீட்டுக்கு அனுப்பினால் தான் புதிய நியமனங்களை எதிரபார்க்கலாம். இவர்களைப் பொறுப்புடையோராக, சமூக நிலவரத்தைப் புரியக் கூடியோராக, திறனாளராக, சுயாதீனமுடையோராக மாற்றுவதற்கு அரசும் கல்வி நிறுவனங்களும் தவறியுள்ளன. என்பதால்தான் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்காத, முகம் கொடுக்க முடியாதவர்களாக ஒரு சமூகம் உருவாகியிருக்கிறது. இது தன்னைத் தப்ப வைக்கவே விரும்புகிறது. இதனால்தான் பலரும் நாட்டைவிட்டுத் தப்பியோடுவோராக மாறியுள்ளனர். பிரச்சினைகளைத் தீர்க்க முடியாத நாட்டினராக, சமூகத்தினராக, மனிதர்களாக, இலங்கையர்களை உருவாக்கியுள்ளது. இந்தப் போக்கும் பண்பும் ஒரு நாட்டுக்கு நல்லதல்ல. உண்மையில், நாடோ, வீடோ நெருக்கடிக்குள்ளானால், அதை மீட்பதற்கு அதனுடைய புதல்வரும் புதல்வியரும் முன்வர வேண்டும். வீட்டை விட்டும் நாட்டை விட்டும் தப்பியோடுவதல்ல. திரைகடலோடித் திரவியம் தேடலாம்தான். அப்படியானால் அவ்வாறு தேடித் திரட்டிய திரவியத்தோடு அவர்கள் நாட்டுக்கும் வீட்டுக்கும் திரும்ப வேண்டும். அப்படித்தான் பிற நாடுகளில் நடந்துள்ளன. இரண்டாம் உலகப்போரில் அழிவைச் சந்தித்த யப்பான் பெரும் நெருக்கடியைச் சந்தித்தது. அதற்காக யப்பானிய மக்கள் நாட்டைவிட்டுத் தப்பியோட முற்படவில்லை. தேசமாகத் திரண்டு நாட்டைக் கட்டியெழுப்பினர். இப்படிப்பல சமூகங்கள் வரலாற்றில் உள்ளன. ஆனால் இலங்கையிலோ நிலைமை வேறு. இங்கே அரசாங்கமே மக்களைத் தப்பியோடத் தூண்டியது. கடந்த ரணில் விக்கிரசிங்கவின் ஆட்சியில் இது பகிரங்கமாகவே நடந்தது. ஆக ஒருபக்கம் நாட்டை விட்டுத் தப்பியோடுவோரையும் படித்தவர்களுக்கு அரசாங்கமே வேலை வழங்கவேண்டுமெனச் சிந்திப்போரையுமே நாடு உருவாக்கியுள்ளது. அதாவது நாட்டை மீட்போருக்குப்பதிலாக, அதை மூழ்கடிப்போராக. மாற்றங்களை உருவாக்க விரும்பும் அரணாங்கம் இதை மனதில் கொள்வது அவசியம். மக்களைப் பாதுகாப்பதென்பது, அவர்களைச் சரியான திசையில் வழிநடாத்துவதேயாகும். அதுவே வேண்டிய மாற்றம். அதுவே தேவையான பணி. அதுவே விடுதலைக்கான, நெரிக்கடியிலிருந்து தீர்வுக்கான வழி. https://arangamnews.com/?p=11702
  3. ‘அஸ்வெசும’ நலன்புரி திட்டம் – மறுபரிசீலனை செய்யப்படுவதாக அரசு தெரிவிப்பு January 21, 2025 12:43 pm வறுமையான அனைவரை உள்ளடக்கும் வகையிலும் நியாயத்தை உறுதி செய்யும் வகையிலும் “அஸ்வெசும” நலன்புரி திட்டத்தின் விரிவான மதிப்பாய்வை அரசாங்கம் தொடங்கியுள்ளது என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும இன்று (21) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நிவாரணம் பெறாத தகுதியுள்ள நபர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு சலுகைகளை வழங்க மதிப்பாய்வுகள் நடந்து வருவதாகசும் அவர் கூறினார். சேகரிக்கப்பட்ட தகவல்கள் மீண்டும் ஆய்வு செய்யப்படுகின்றன. கணிசமான எண்ணிக்கையிலான மக்களிடமிருந்து முறையீடுகள் பெறப்பட்டுள்ளன. அவை முறையான நடைமுறைகளைப் பின்பற்றி முழுமையாக மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் பிரதி அமைச்சர் கூறினார். https://oruvan.com/ashwesuma-welfare-scheme-government-announces-review/
  4. “உக்ரைன் போர் முடிவுக்கு வரும்” – அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற ட்ரம்ப் உறுதி January 21, 2025 11:44 am அமெரிக்காவில் கடந்த 2024 நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் அமோக வெற்றி பெற்றார். ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டவர் ஜனவரி 20ஆம் திகதி பதவி ஏற்பது வழக்கம். அதன்படி, பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது. வழக்கமாக, வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டிடமான கேபிடல் வளாகத்தின் திறந்தவெளியில்தான் பதவியேற்பு விழா நடைபெறும். அங்கு கடும் குளிர், மழை காரணமாக விழாவை கேபிடல் கட்டிடத்தின் ரோட்டுண்டா அரங்குக்கு ட்ரம்ப் மாற்றினார். இலங்கை நேரப்படி நேற்று இரவு 10.30 மணிக்கு நடைபெற்ற விழாவில், அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் (78) பதவியேற்றார். அவருக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ட்ரம்பை தொடர்ந்து, துணை ஜனாதிபதியாக ஜே.டி.வான்ஸ் பதவியேற்றார். இந்த விழாவில் 600 விருந்தினர்கள் பங்கேற்றனர். பதவியேற்பு விழாவின் நேரடி ஒளிபரப்பை கேபிடல் ஒன் விளையாட்டு அரங்கில், ட்ரம்ப் ஆதரவாளர்கள் 20,000 பேர் பார்த்தனர். பதவியேற்ற பிறகு, ஜனாதிபதி ட்ரம்ப் உணர்ச்சி பொங்க உரையாற்றினார். அடுத்த 4 ஆண்டுகளில் அவர் மேற்கொள்ள உள்ள திட்டங்களை அறிவித்தார். ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேறும் ஜோ பைடன், துணை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேறும் கமலா ஹாரிஸ், முன்னாள் ஜனாதிபதிகள் பில் கிளின்டன், ஜார்ஜ் டபிள்யூ புஷ், பராக் ஒபாமா ஆகியோரும் பங்கேற்றனர். அமெரிக்க தொழிலதிபர்கள் எலான் மஸ்க், ஜெப் பெசாஸ், மார்க் ஜூகர்பெர்க், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை மற்றும் முகேஷ் அம்பானி உட்பட பலரும் விழாவில் கலந்துகொண்டனர். விழாவில், ‘அழகான அமெரிக்கா’, ‘இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்ட அமெரிக்கா’ போன்ற தேசபக்தி பாடல்களை பிரபல பாடகி கேரி அண்டர்வுட், பிரபல பாடகர் லீ கிரீன் வுட் ஆகியோர் பாடினர். பதவியேற்பு விழாவை தொடர்ந்து ஜனாதிபதி, துணை ஜனாதிபதிகளின் விருந்தினர்களுக்கு கேபிடல் கட்டிட அரங்கில் நாடாளுமன்ற கூட்டுக்குழு சார்பில் மதிய விருந்து அளிக்கப்பட்டது. புதிய அதிபராக பதவியேற்ற பிறகு வெள்ளை மாளிகைக்கு சென்ற ட்ரம்ப், முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். உக்ரைன் போர் முடிவுக்கு வரும்: ட்ரம்ப் பதவியேற்பு விழாவை முன்னிட்டு, வாஷிங்டனில் கேபிடல் கட்டிடத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற வெற்றிக் கூட்டத்தில், தனது ஆதரவாளர்களிடம் ட்ரம்ப் பேசியதாவது: பதவியேற்ற முதல் நாளிலேயே அமெரிக்க குடியேற்றத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும், ஊடுருவலுக்கு முடிவு கட்டப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவேன். அமெரிக்கா சந்திக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும். கடந்த 2021-ல் நடந்த கேபிடல் வளாக வன்முறை தொடர்பாக, தண்டனை விதிக்கப்பட்ட 1,500 பேருக்கு மன்னிப்பு அளிக்கப்படும். உக்ரைனிலும், மத்திய கிழக்கிலும் போரை முடிவுக்கு கொண்டு வந்து, 3-ம் உலகப் போர் நடைபெறுவதை தடுப்பேன். இவ்வாறு ட்ரம்ப் பேசினார். “அமெரிக்காவின் பொற்காலம் இன்று முதல் தொடங்குகிறது. அமெரிக்கா விரைவில் முன்பை விட சிறந்த, வலிமையான நாடாகவும், விதிவிலக்கானதாகவும் மாறும். தேசிய வெற்றியின் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தில் நாம் இருக்கிறோம் என்ற நம்பிக்கையுடன் நான் ஜனாதிாதி பதவிக்குத் திரும்புகிறேன். நாடு முழுவதும் மாற்றத்தின் அலை வீசுகிறது. இந்த வாய்ப்பை முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பயன்படுத்திக் கொள்ள அமெரிக்காவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் முதலில், நாம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து நாம் நேர்மையாக சிந்திக்க வேண்டும். அவை ஏராளமாக இருந்தாலும், அமெரிக்காவில் இப்போது உலகமே பார்த்துக் கொண்டிருக்கும் இந்த மாபெரும் உந்துதலால் அவை அழிக்கப்படும். இந்த நாளிலிருந்து, நமது நாடு மீண்டும் செழித்து வளர்ந்து உலகம் முழுவதும் மதிக்கப்படும். ஒவ்வொரு தேசமும் நம்மைப் பார்த்து பொறாமைப்பட வைப்போம். இனி நம்மை யாரும் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க மாட்டோம். எனது நிர்வாகத்தின் ஒவ்வொரு நாளிலும், நான் அமெரிக்காவை முதன்மையாகக் கருதுவேன். நமது இறையாண்மை மீட்டெடுக்கப்படும். நமது பாதுகாப்பு மீட்டெடுக்கப்படும். நீதியின் அளவுகோல்கள் மீண்டும் சமநிலைப்படுத்தப்படும். மேலும் பெருமைமிக்க, வளமான மற்றும் சுதந்திரமான ஒரு தேசத்தை உருவாக்குவதே எங்கள் முதன்மையான முன்னுரிமையாக இருக்கும். இந்த தருணத்திலிருந்து, அமெரிக்காவின் வீழ்ச்சி முடிந்துவிட்டது. இன்று நமது அரசாங்கம் நம்பிக்கை நெருக்கடியை எதிர் கொண்டிருக்கிறது. பல ஆண்டுகளாக, ஒரு மோசமான மற்றும் ஊழல் நிறைந்த அமைப்பு நமது குடிமக்களிடமிருந்து அதிகாரத்தையும் செல்வத்தையும் பறித்துள்ளது. நமது சமூகத்தின் தூண்கள் உடைந்து முற்றிலும் சிதைந்துவிட்டன. உள்நாட்டில் ஒரு எளிய நெருக்கடியைக் கூட நிர்வகிக்க முடியாத ஒரு அரசாங்கம் இப்போது நம்மிடம் உள்ளது. அது நமது அற்புதமான, சட்டத்தை மதிக்கும் அமெரிக்க குடிமக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது, ஆனால் சிறைச்சாலைகள் மற்றும் மனநல காப்பகங்களிலிருந்து வரும் ஆபத்தான குற்றவாளிகளுக்கு அடைக்கலத்தையும் பாதுகாப்பையும் வழங்குகிறது. அவர்கள் உலகம் முழுவதிலுமிருந்து சட்டவிரோதமாக நம் நாட்டிற்குள் நுழைந்துள்ளனர். வெளிநாட்டு எல்லைகளைப் பாதுகாப்பதற்கு வரம்பற்ற நிதியை வழங்கிய, அதே நேரம் அமெரிக்க எல்லைகளை மிக முக்கியமாக, அதன் சொந்த மக்களைப் பாதுகாக்க மறுக்கும் ஒரு அரசாங்கம் நம்மிடம் உள்ளது. எங்கள் போராட்டத்தைத் தடுக்க விரும்புபவர்கள் என் சுதந்திரத்தைப் பறிக்க முயன்றிருக்கிறார்கள், உண்மையில், என் உயிரையும் பறிக்க முயன்றிருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு, பென்சில்வேனியாவில், ஒரு கொலையாளியின் தோட்டா என் காதில் பாய்ந்தது. ஆனால் அப்போது நான் உணர்ந்தேன், இப்போது இன்னும் அதிகமாக நம்புகிறேன், என் உயிர் ஒரு காரணத்திற்காக காப்பாற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்ற கடவுளால் நான் காப்பாற்றப்பட்டேன்” இவ்வாறு டொனால்ட் ட்ரம்ப் பேசினார். https://oruvan.com/the-war-in-ukraine-will-end-trump-who-took-office-as-us-president-is-confident/
  5. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் – புதிய சட்டம் நிறைவேற்றப்படும் வரை அமுலில் இருக்கும் January 21, 2025 12:20 pm பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் புதிய சட்டம் நிறைவேற்றப்படும் வரை அமுலில் இருக்கும் என அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று சிறப்புரிமை கேள்வியொன்றை முன்வைத்து உரையாற்றிய யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். சிறீதரன் எம்.பி தனது சிறப்புரிமை கேள்வியில், கடந்த வாரம் தாம் இந்தியாவுக்குச் சென்ற தருணத்தில் தமக்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்தியாவுக்குச் செல்ல முடியாது ஆவணங்களை பரிசீலிக்க வேண்டும் என விமான நிலையத்தில் இருக்கும் குடிவரவு – குடியகழ்வு அதிகாரிகள் தடைகளை ஏற்படுத்தியதாகவும் தனக்கு எதிராக எவ்வித வழக்கும் விசாரணைகளும் இல்லாத சூழலில் இவ்வாறு செயல்படுவதை வன்மையாக கண்டிப்பதாகவும் கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தன்னுடன் வருகை தந்திருந்தார். அவர் இந்த விடயங்களை அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்த உதவினார் என்றும் சிறீதரன் எம்.பி தெரிவித்தார். இதன்போது எழுந்த ரவூப் ஹக்கீம், அதிகாரிகளின் இந்த செயல்பாட்டை கண்டித்ததுடன், அரசாங்கம் இந்த விடயம் தொடர்பில் விரைவில் உரிய விசாரணைகளை செய்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இந்த அரசாங்கத்தின் காலத்திலும் பயங்கரவாத எதிர்ச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது.” என்றார். ஆளும் தரப்பில் சிறீதரன் எம்.பியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, ”சிறீதரன் எம்.பிக்கு நேர்ந்த சம்பவம் தொடர்பில் பின்னர்தான் அறிய கிடைத்தது. இதுகுறித்து வருந்துகிறோம். அரசாங்கத்தின் தீர்மானத்தின் பிரகாரம் எவ்வாறு தடைகள் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை. அங்கிருந்த அதிகாரிகள்தான் இதனை செய்துள்ளனர். இதுகுறித்து விசாரணை அறிக்கைகளை கோரியுள்ளோம். இந்த விசாரணை பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்படவில்லை. புதிய சட்டம் இன்னமும் நிறைவேற்றப்படாமையால் பயங்கரவார எதிர்ப்புச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது. இருக்கும் சட்டத்தை பயன்படுத்த முடியும். அதை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில் தான் இருக்கிறது. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை பயன்படுத்துவது எமது நோக்கமல்ல.” என்றார். https://oruvan.com/anti-terrorism-act-will-remain-in-effect-until-new-law-is-passed/
  6. நெஞ்சுவலி… அப்பல்லோவில் அன்புமணி Jan 21, 2025 பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி இன்று ஜனவரி 21ஆம் தேதி சென்னை கிரீம்ஸ் ரோட்டில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதயம் தொடர்பான ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மருத்துவர்களின் கண்காணிப்பில் டாக்டர் அன்புமணி இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் இருந்து தகவல்கள் கிடைக்கின்றன. https://minnambalam.com/uncategorized/anbumani-admitted-in-apollo-hospital-angio-surgery/
  7. அமெரிக்க மெக்சிக்கோ எல்லையில் அவசரகாலநிலை-குடியேற்றவாசிகள் நாடு கடத்தப்படுவார்கள் - டிரம்ப் 20 JAN, 2025 | 11:09 PM அமெரிக்க மெக்சிக்கோ எல்லையில் தேசிய அவசரகாலநிலையை அறிவிக்கும் பிரகடனம் இன்று வெளியிடப்படும் என அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைவது உடனடியாக தடுக்கப்படும் என தெரிவித்துள்ள அவர் மில்லியன் கணக்கான அமெரிக்காவிற்கு சொந்தமில்லாத குற்றவாளிகள் எங்கிருந்து வந்தார்களே அவர்களை அங்கே அனுப்பும் நடவடிக்கை ஆரம்பமாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/204393
  8. கூட்டுறவு சங்க தேர்தல் தோல்வியின் மூலம் அரசாங்கத்தின் சரிவு ஆரம்பித்துள்ளது - கம்மன்பில தெரிவிப்பு 20 Jan, 2025 | 11:14 PM (எம்.ஆர்.எம்.வசீம்) பல பிரதேசங்களில் இடம்பெற்ற கூட்டுறவு சங்க தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தி தோல்வியடைந்துள்ளதன் மூலம் அரசாங்கத்தின் சரிவு ஆரம்பித்துள்ளது. தாேல்வியை தடுப்பதற்கே அரசாங்கம் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார். பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (20) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஹோமாகம, கொரட்டுவ, களனி,போருவளை போன்ற, தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற தேர்தலில் அதிக பெரும்பான்மை வாக்குகளால் வெற்றிபெற்ற தேர்தல் தொகுதிகளில் கூட்டுறவு சங்க தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளது. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறி வருவதன் அரசாங்கத்தின் மீதான மக்களின் விரக்தி, கூட்டுறவு சங்க தேர்தல் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையை இழந்துவருவதை அரசாஙகமும் தற்போது உணர ஆரம்பித்துள்ளது. அதன் பிரதிபலனாகவே அரசாங்கம், 3 வருடங்களுக்கு மின் கட்டணத்தை குறைக்க முடியாது என தெரிவித்து வந்த நிலையில், தற்போது நூற்றுக்கு 20வீதம் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது. நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 3 வருடங்களுக்கு பின்னரே கூட்டுறவு சங்க தேர்தலில் தோல்வியடைய ஆரம்பித்தது. ஆனால் இந்த அரசாங்கம் பாராளுமன்ற தேர்தல் இடம்பெற்று 3 மாதங்களில் தோல்வியடைய ஆரம்பித்துள்ளதன் மூலம் அரசாங்கத்தின் சரிவு ஆரம்பித்திருப்பது தெரியவருகிறது. அதனால் அரசாங்கம் இந்த சரிவை கையால் பிடித்து சரி செய்ய முடியாது என்பதை ஜனாதிபதி அநுரகுமார தெரிந்துகொள்ள வேண்டும். மாறாக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதன் மூலமே இந்த சரிவை நிறுத்த முடியும். அதனால் அரசாங்கம் மக்களுக்கு அளி்த்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், வைறாக்கியத்தை பரப்புவதன் மூலம் அரசாங்கத்தின் மீது மக்களின் எதிர்பார்ப்பு, நம்பிக்கை மேலும் இல்லாமல் போகும் நிலையே ஏற்படும். அத்துடன் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் உத்தியோகபூர் இல்லத்தை மீள பெறுவதாக தெரிவித்திருக்கிறார். இது ஜனாதிபதியின் அனுபவமில்லாமை அல்லது வைறாக்கியத்தில் மேற்கொள்ளும் செயலாகும். ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை எதிர்காலத்தில் அரச தலைவர்களாக வருபவர்கள், பயங்கரவாதிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாதால உலக கோஷ்டியினரை கட்டுப்படுத்த உறுதியான தீரமானங்களை எடுப்பதற்கு பின்வாக்கும் அபாயம் இருக்கிறது. யுத்தத்தை வெற்றிகொள்ள நடவடிக்கை எடுத்த முன்னாள் ஜனாதிபதிக்கு பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் எப்போதும் இருக்கும். அதனால் அதிகாரத்தில் இருந்து சென்ற பின்னரும் அவருக்கு பாதுகாப்பு வழங்க முடியுமான உத்தியோகபூர் வாசஸ்தலம் வழங்குவது கட்டாயமாகும் என்றார். https://www.virakesari.lk/article/204376
  9. வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுப்பு Published By: Vishnu 21 Jan, 2025 | 04:02 AM யாழ் வீரசிங்க மண்டபத்திற்கு முன்பாக அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூதியின் முன்றலில் கூடிய பட்டதாரிகள் சங்கத்தினர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் கவனஈர்ப்பு போராட்டத்தினை ஆரம்பித்தனர். இதன் பொழுது வேலை வேண்டும் வேலை வேண்டும் பட்டதாரிகளுக்கு வேலை வேண்டும், படித்தும் பரதேசிகளாக இன்றும் தொடரும் அவலம், பல பரீட்சைகளை தொடர்ந்து என்ன பிரியோசனம் என்றவாறு பல கோஷங்களை எழுப்பிய வண்ணம் உலகதழிராய்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியில் இருந்து யாழ் நகரினூடாக ஆளுநர் அலுவலகத்திற்கு சென்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பொழுது கருத்து தெரிவித்த வடமாகாண பட்டதாரிகள் சங்க தலைவர் இன்று பல்வேறுபட்ட திணைக்களங்களில் வடமாகாணத்தில் வேலைவாய்ப்பு வெற்றிடம் காணப்படுகின்றது. அந்த வேலைவாய்ப்புக்கள் எமது பட்டதாரிகளுக்கு வழங்கப்படவேண்டும். இதேவேளை இன்று இந்த கல்வி திட்டத்தின் ஊடாக முறையான தகுதி திறனை நாம் கொண்டிருக்கின்றோம். எமக்கு வேலைவாய்ப்பு வழங்கபடவில்லை எனில் அதற்கு முழுப் பொறுப்பும் இந்த கல்வி திட்டத்தினை கொண்டிருக்ககூடிய அரசினதே ஆகும். எம்மால் கடந்த முறை சுத்திகரிப்பு தொழிலாளர் வேடமிட்டு போராட்டம் நடத்தப்பட்டமை தொடர்பில் பலர் சமூக ஊடகங்களில் எமக்கு எதிராக பிரசாரங்களை முன்னெடுத்தனர். எமக்குள்ளும் பல கூலி தொழிலாளிகள் இன்று காணப்படுகின்றனர். எமது பெற்றோர்களும் பல கூலி தொழில்களை முன்னெடுத்து வியர்வை சிந்தியே இந்த இடத்திற்கு எம்மை கொண்டு வந்தார்கள். கூலி தொழில் சுத்திகரிப்பு தொழில் நகைப்புக்குரிய தொழில் அல்ல. இலங்கை அரச கட்டமைப்பின் பட்டபடிப்பு மூலம் நாம் பெற்றது என்ன அரிசிற்கு அழுத்தம் கொடுக்கவே நாம் இவ்வாறாக ஈடுபட்டோம். இது தொடர்பில் அன்றைய போராட்டத்தின் பொழுதே முழுதெளிவினையும் வழங்கியிருந்தோம். இன்றைய தினமும் எமது அறவழிப்போராட்டம் வீதியூடாக கோஷங்களை எழுப்பி ஆளுநர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு கோரிக்கை கடிதம் ஒன்றினை வழங்கவுள்ளோம். அரசாங்கம் உருவாகி நான்கு மாதங்களே கடக்கின்றது. எமக்கான பதில் அழுத்தம் மூலமே கிடைக்கபெறுமானால் அதனை முன்னெடுக்க நாம் தயாராக உள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார் . யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் ஆரம்பமாக குறித்த போராட்டம் யாழ். நகரத்தின் ஊடாக பயணித்து ஆளுநர் அலுவலகத்தை வந்தடைந்தது. இதன் போது போராட்டக்காரர்கள் ஆளுநரை சந்திக்க முற்பட்டனர் இருப்பினும் ஆளுநரின் செயலாளர் ஒருவர் குறித்த போராட்டக்காரர்களை சந்தித்து நான்கு பேர் மாத்திரம் ஆளுநருடன் பேச முடியும் கோரிக்கை மகஜர் கையளிக்க முடியும் என தெரிவித்தார். தமக்கு அரசாங்க வேலை பெற்றுத் தருவேன் என உறுதியளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் வீதியை மறிக்க முற்பட்டதால் பொலிசாருடன் தர்க்கம் ஏற்பட்டது அதனைத் தொடர்ந்து குறித்த சிலரை ஆளுநர் பேசுவதற்கு அழைத்தார். போராட்டக்காரர்களைச் சந்தித்த ஆளுநர் வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சனை நாடு முழுவதும் இருப்பதாகவும் இது தொடர்பான ஒரு பொறிமுறை உருவாக்கப்பட்டு அது தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். என தெரிவித்ததாக குறிப்பிட்டார் இதனை அடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். https://www.virakesari.lk/article/204395
  10. பொது மக்கள் தொடர்பாடல் அலுவலகம் January 20, 2025 09:01 தேசிய மக்கள் சக்தியின் 'பொது மக்கள் தொடர்பாடல் அலுவலகம்' யாழ்ப்பாணத்தில் இன்று (20) திறந்து வைக்கப்பட்டது. யாழ். பலாலி வீதி, கந்தர்மடத்தில் இந்த அலுவலகம் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில்,பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன், கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://tamil.adaderana.lk/news.php?nid=199047
  11. நல்லது @வீரப் பையன்26! நாளைக்கே கேள்விக்கொத்தைப் பதிகின்றேன். இன்று ஜனாதிபதி ட்ரம்ப் அவரது பிராட்டியார் மெலானியாவைப் பார்க்கவே நேரம் பத்தவில்லை 😀
  12. Elon Musk நாஜி சல்யூட் அடிக்கிறமாதிரிப் போட்டிருக்கலாம்..
  13. தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களில் ஈடுபட்ட கம்பனிகளின் பெயர் விபரம் வெளியாகியது! தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களில் ஈடுபட்டுள்ள கம்பனிகளின் பெயர் விபரங்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாக இலங்கை மத்திய வங்கி இதனை வெளிப்படுத்தியுள்ளது. 21 கம்பனிகள் திருத்தப்பட்டவாறான 1998 ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் 83 (இ) பிரிவின் தடைசெய்யப்பட்ட திட்டமொன்றில் ஈடுபட்டுள்ளன என இலங்கை மத்திய வங்கி விசாரணைகளை நடத்தி தீர்மானம் மேற்கொண்டுள்ளது. இதேவேளை வங்கித்தொழில் சட்டத்தின் 83(இ) பிரிவின் கீழ் இலங்கை மத்திய வங்கியினால் தீர்மானிக்கப்பட்டுள்ள கம்பனியொன்றின் பெயரை வெளிப்படுத்தலானது அந்தக் கம்பனி தொடர்பாக வழங்கப்பட்டுள்ள நீதிமன்ற கட்டளையொன்றின் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது https://www.hirunews.lk/tamil/394191/தடைசெய்யப்பட்ட-பிரமிட்-திட்டங்களில்-ஈடுபட்ட-கம்பனிகளின்-பெயர்-விபரம்-வெளியாகியது
  14. அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் இன்று பதவியேற்பு! ஜனவரி 20ஆம் திகதியான இன்று டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்கிறார். நாட்டின் 47 ஆவது ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்பது பாரம்பரியத்திலிருந்து ஆடம்பரமான முறிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பதவியேற்பு நிகழ்வானது 2020 தேர்தலில் ஜோ பைடனின் வெற்றியை முறியடிக்க முயன்ற கலகக்காரர்களால் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கைப்பற்றப்பட்ட கேபிட்டல் கட்டிட வளாகத்தின் திறந்த வெளியில் நடைபெறுவது வழக்கம். எனினும், அங்கு நிலவும் கடும் குளிர் நிலவும் என வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டதால், பதவியேற்பு நிகழ்ச்சி கேபிடல் கட்டிடத்தின் ரோட்டுண்டா அரங்கில் நடத்தப்படும். பதவியேற்ப்பினை அடுத்து, அமெரிக்க ஜனாதிபதியாக தனது இரண்டாவது பதவியேற்புடன் டிரம்ப் மீண்டும் வெள்ளை மாளிகைக்கு திரும்புவார். அதேநேரம், துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜே.டி.வான்ஸும் பதவிப் பிரமாணம் செய்துகொள்வார். பதவியேற்பு விழாவைக் காண முதல்முறையாக வெளிநாட்டு தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் அர்ஜென்டினா ஜனாதிபதி ஜேவியர் மிலி மற்றும் இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி போன்ற பழமைவாத உலக தலைவர்களை பதவியேற்புக்கு அழைத்துள்ளார். -(3) http://www.samakalam.com/அமெரிக்க-ஜனாதிபதியாக-டி/
  15. @வீரப் பையன்26 , யாழ்கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி வைக்கலாம் என்று நினைக்கின்றேன். 10 பேர் பங்குபற்றுவார்களா?
  16. காசாவில் யுத்த நிறுத்தம் - வீதிகளில் மக்களும் ஹமாஸ் உறுப்பினர்களும் - குடும்பத்தவர்களின் கல்லறைகளிற்கு செல்லும் சிலர் –ரொய்ட்டர் Published By: Rajeeban 19 Jan, 2025 | 08:04 PM இஸ்ரேலிற்கும் ஹமாசிற்கும் இடையிலான யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து காசாவில் மக்கள் வீதிகளிற்கு வந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதேவேளை சிலர் தங்கள் குடும்பத்தவர்களிற்கு கல்லறைகளிற்கு சென்றுகொண்டிருக்கின்ற அதேவேளை ஏனையவர்கள் தங்கள் இஸ்ரேலின் தாக்குதலின் பின்னர் என்ன எஞ்சியிருக்கின்றது என பார்ப்பதற்காக தங்கள் பகுதிகளிற்கு சென்றுகொண்டிருக்கின்றனர். 15மாதங்கள் பாலைவனத்தில் அலைந்த பின்னர் குடிப்பதற்கு நீர் கிடைத்தது போல உணர்கின்றேன் என காசாநகரத்தை சேர்ந்த இடம்பெயர்ந்த பெண் அயா தெரிவித்துள்ளார். காசாவின் மத்திய பகுதியில் உள்ள டெய்ர் அல் பலாவில் கடந்த ஒருவருடகாலமாக தஞ்சமமைந்திருந்த அவர் தனது உணர்வுகளை வட்ஸ்அப்மூலம் ரொய்ட்டருடன் பகிர்ந்துகொண்டுள்ளார். இஸ்ரேலின் கடும் தாக்குதல்களும் ஹமாஸ் அமைப்பினருடனான மோதல்களும் இடம்பெற்ற காசாவின் வடக்கில் முற்றாக அழிக்கப்பட்டு சிதைவுகள் இரும்புதுண்டங்களுடன் காணப்படும் பகுதி ஊடாக நூற்றுக்கணக்கான மக்கள் வீதிகளிற்கு வந்தனர். தென்பகுதி நகரான கான் யூனிசில் மக்களின் கரகோசங்களிற்கு மத்தியில் ஹமாஸ் உறுப்பினர்கள் வாகனங்களில் வீதிகளில் வலம்வருகின்றனர். இஸ்ரேலின் விமானதாக்குதல்களில் இருந்து தப்புவதற்காக பல மாதங்களாக மறைந்திருந்த ஹமாசின் பொலிஸ்பிரிவினர் நீலநிற சீருடையில் காணப்படுகின்றனர். ஹமாஸ் உறுப்பினர்களிற்கு வாழ்த்துவதற்காக கூடியிருந்த மக்கள்அதன் ஆயுதபிரிவான அல்அசாம் பிரிகேட்டிற்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர். இஸ்ரேலிய பிரதமரின் நடவடிக்கைகளிற்கு மத்தியிலும் போராடும் அனைத்து தரப்பினரும் தாக்குப்பிடித்து நிற்கின்றனர் என போராளியொருவர் தெரிவித்தார். இது யுத்த நிறுத்தம் ஆண்டவன் விரும்பினால் முழுமையானதாக நீடிக்கும்,என அவர் தெரிவித்துள்ளார் https://www.virakesari.lk/article/204294 மூன்று பணயக்கைதிகளை செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைத்தது ஹமாஸ் 19 Jan, 2025 | 09:59 PM ஹமாஸ் அமைப்பு மூன்று பணயக்கைதிகளை செஞ்சிலுவை சங்கத்திடம் கையளித்துள்ளது. ரோமிகோனேன்,டோரன் ஸ்டெய்ன் பிரெச்சர்,எமிலி டமரி ஆகிய மூன்று பெண் பணயக்கைதிகiளே ஹமாஸ் ஒப்படைத்துள்ளது. இவர்களை 2003ம் ஆண்டு ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் பணயக்கைதிகளாக பிடித்திருந்தது. காசா நகரின் அல்சரயா சந்தியில் இவர்களை ஒப்படைக்கும் நிகழ்வு இடம்பெற்றவேளை பெருமளவு மக்கள் திரண்டிருந்தனர். ஹமாஸ் மூன்று பணயக்கைதிகளை ஒப்படைத்துள்ளதை இஸ்ரேலிய இராணுவம் உறுதி செய்துள்ளது. இறுதியாக கிடைத்த தகவல்களின்படி இவர்களை செஞ்சிலுவை சங்கம் இஸ்ரேலிய இராணுவத்திடம் கையளித்துள்ளது.அவர்கள் இஸ்ரேலிற்குள் வந்துள்ளனர் என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. அவர்கள் தங்கள் தாய்மார்களுடன் சேர்க்கப்படுவார்கள்,தென் இஸ்ரேலில் அவர்களை ஆரம்பகட்ட மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் இஸ்ரேலிய தலைநகருக்கு மருத்துவபரிசோதனைக்காக கொண்டு செல்வோம் என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/204297
  17. கிளீன் சிறீலங்கா:பொதுக் கழிப்பறைகள் - நிலாந்தன் கிளீன் சிறீலங்கா தொடர்பாக கடந்த வாரம் நான் எழுதிய கட்டுரையை வரவேற்று ஒரு நண்பர் கருத்து தெரிவித்திருந்தார். ஸ்ரீலங்காவை ஓரளவுக்காவது கிளீன் பண்ணக்கூடிய இடம் சுற்றுச்சூழல் விவகாரங்கள்தான் என்பதை ஏற்றுக் கொண்ட அவர் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டியிருந்தார். நீண்ட தூரப் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களை சிரம பரிகாரத்துக்காக நிறுத்தும் இடங்களில் உள்ள சுகாதாரக் கேடுகளை அவர் சுட்டிக் காட்டினார். குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்கும் இடையிலான போக்குவரத்து வழியில் பேருந்துகள் இடைநிறுத்தப்படுகின்ற உணவகங்களில் உள்ள கழிப்பறை வசதிகளைக் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தை அவர் சுட்டிக் காட்டினார். நண்பர் அதை எனக்குக் கூறுவதற்கு முன்னரே நாட்டின் அரசுத் தலைவராகிய அனுர, கிளீன் ஸ்ரீலங்காவை அறிமுகப்படுத்தும் பொழுது நாடாளுமன்றத்தில் பின்வருமாறு உரையாற்றியிருந்தார்…..”நம் நாட்டுப் பெண்கள் கழிப்பறைக்குச் செல்ல இந்த நாட்டில் சுத்தமான கழிப்பறை அமைப்பு இருக்கிறதா என்பதும் கேள்விக்குரியாகும், தூர இடங்களில் இருந்து கொழும்புக்கு வரும் சில பெண்கள் வீடு வரும்வரை தண்ணீர் அருந்துவதில்லை. சுத்தமான கழிப்பறை கட்டமைப்பொன்று இல்லாமையே அதற்கு காரணமாகும். கழிப்பறை கட்டமைப்பு கட்டப்பட்டாலும், சமூகத்தில் நல்ல மனப்பான்மை கட்டியெழுப்பப்படவில்லை. சாதாரண மக்களுக்கு பொது இடமாக அன்றி அவை அழிவுகரமான இடமாக மாறியுள்ளன. இதனால் என்ன தெரிகிறது? இது எமது நாட்டு ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவிடம் காணப்படுகின்ற அணுகுமுறையாகும். எனவே,தூய்மையான இலங்கை வேலைத் திட்டத்தின் ஊடாக அவ்வாறான மனோபாவத்தையும் மாற்ற எதிர்பார்க்கின்றோம்.” அனுர அவ்வாறு பேசியபோதுதான் எனக்கு ஒரு விடயம் தெரிந்தது என்னவென்றால், தமிழ்ப் பெண்களைப் போலவே சிங்கள, முஸ்லிம் பெண்களுக்கும் உள்ள பொதுவான பிரச்சினை அதுவென்று. யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையிலான பயணப் போக்குவரத்து நேரம் கிட்டத்தட்ட ஏழு மணித்தியாலம். இக்காலப் பகுதியில் பெரும்பாலான பெண்கள் நீர் அருந்துவதில்லை. ஏன் என்று கேட்டால் இடையில் அவர்கள் சிறுநீர் கழிப்பதற்காக நிறுத்தும் இடங்களில் சிறுநீர் கழிக்க முடியாது. அவை அசுத்தமாகவும் அருவருப்பாகவும் இருக்கும். அந்த இடத்தை நெருங்கும் பொழுதே துர்வாடை வீசும். அந்த இடத்தில் கால் வைப்பதற்கே கூசும். முறிகண்டியில் கட்டணம் செலுத்தும் கழிப்பறைகள் உண்டு. அங்கேயும் நிலைமைகள் பாராட்டும் அளவுக்குச் சுகாதாரமாக இல்லை. பொதுக் கழிப்பறைகளை தொடர்ச்சியாகக் கழுவி, துப்புரவாகப் பேண மாட்டார்கள். அந்த அசிங்கத்துக்குள் போனால் சகல நோய்களும் தொற்றிக்கொண்டு விடும் என்ற அச்சம் ஏற்படும். எனவே சிறுநீர் கழிப்பதற்கு ஒரு நரகத்துக்குள் போவதை விடவும், சிறுநீரை 6 மணித்தியாலங்களுக்கு அடக்கி கொண்டிருப்பதை விடவும், நீரைக் குடிக்காமல் விடலாம் என்று ஒரு பகுதி பெண்கள் கருதுகிறார்கள். இதுவும் ஆபத்தானது. நீண்ட தூர, நீண்ட நேரப் பயணங்களில் நீரிழப்பால் உடலுக்கு ஏற்படக்கூடிய ஆபத்து அதிகம். அது சொகுசு வாகனம்தானே? குளிரூட்டப்பட்டதுதானே? நீர் இழப்பு குறைவாக இருக்கும் என்று ஒரு விளக்கம் கூறப்படலாம். அவ்வாறு சொகுசு வாகனம், சொகுசுப் பயணம் என்று கூறி அதற்குத் தனியாகப் பணம் அளவிடும் வாகன உரிமையாளர்கள் ஏன் தாங்கள் வாகனங்களை நிறுத்தும் இடங்களிலும் சொகுசான, வளமான, சுகாதார வசதிகளைக் கொண்ட கழிப்பறைகளைக் கட்டக் கூடாது? பொதுப் போக்குவரத்து வாகனங்களை சாப்பாட்டு இடைவேளைக்காக அல்லது சிரம பரிகாரத்துக்காக எங்கே நிறுத்துவது என்பதனை பயணிகள் தீர்மானிக்க முடியாது. வாகன உரிமையாளர்களும் சாரதிகளும்தான் அதைத் தீர்மானிக்கிறார்கள். அது வாகன உரிமையாளருக்கும் குறிப்பிட்ட சாப்பாட்டுக் கடைக்கும் இடையிலான ஒரு வணிக உடன்படிக்கை. இருதரப்புக்கும் அங்கு லாபம் உண்டு. பயணிகளை வைத்துப் பணம் சம்பாதிக்கும் இந்த இரண்டு தரப்புக்கும் பயணிகளுக்கான கழிப்பறைகளை சுகாதாரமாக பேண வேண்டிய பொறுப்பு உண்டு. அவர்கள் வாங்கும் பயணச் சீட்டுக்குள் அந்தச் செலவும் அடங்குகிறது. பயணிகளின் கழிப்பறை வசதிகளை சுகாதாரமாகப் பேண வேண்டியது அவர்களுடைய பொறுப்பு. அதற்கும் சேர்த்துத்தான் கட்டணம் அளவிடப்படுகிறது. எனவே இந்த விடயத்தில் நீண்ட தூரப் பயணங்களில் ஈடுபடும் வாகன உரிமையாளர்களுக்கும் சாரதிகளுக்கும் அவர்கள் எந்தெந்த இடங்களில் நிறுத்துகிறார்களோ அந்த இடங்களில் உள்ள உணவக உரிமையாளர்களுக்கும் கூட்டுப் பொறுப்பு உண்டு. இவை அனைத்தையும் நிர்வகிக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. இந்த விடயத்தில் பெண்கள் படும் அவஸ்தை தெரிந்த ஒருவர் இப்பொழுது அரசுத் தலைவராக இருக்கிறார். எனவே அவர் இந்த விடயத்தில் உடனடியாகக் கை வைக்கலாம். வசதியான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்,தனி வாகனங்களில் பயணம் செய்கிறவர்கள் விரும்பிய,சுகாதாரமான, வசதியான இடத்தில் நிறுத்திச் சிறுநீர் கழிக்கலாம். குறைந்தது காட்டுப்பகுதிகளிலாவது வாகனத்தை நிறுத்திச் சிறுநீர் கழிக்கலாம்.தென்னிலங்கை நகரங்களில் வளமான ரெஸ்ரோரன்களில் சுகாதார வசதிகள் கூடிய கழிப்பறைகள் உண்டு. ஆனால் பொதுப் போக்குவரத்து வாகனங்களைப் பயன்படுத்தும் பெண்களுக்குத்தான் இந்தத் தண்டனை. நாட்டின் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களில் சிறுநீரை அடக்கிக் கொண்டு பயணம் செய்கிறார்கள் அல்லது சிறுநீர் கழிப்பதை தவிர்ப்பதற்காக நீர் அருந்தாமல் சிறுநீர் பையை பழுதாக்குகிறார்கள் என்பது நாட்டின் வாழ்க்கை தரத்தை காட்டும் ஒரு குறிகாட்டி. சுகாதாரம், பால் சமத்துவம், பாதுகாப்பான பயணம் போன்ற பல்வேறு நோக்கு நிலைகளில் இருந்தும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய ஒரு விடயம். ஒரு நாட்டின் பொதுச் சுகாதாரக் குறிக்காட்டிகளில் ஒன்று பொதுக் கழிப்பறையாகும். மேற்கத்திய பண்பாட்டில் பொதுக் கழிப்பறைகள் பெரியவைகளாகவும் சுத்தமானவர்களாகவும் இருக்கும். அவற்றைத் தொடர்ச்சியாகப் பராமரிப்பார்கள். அவை பெருமளவுக்கு உலர் கழிப்பறைகள்தான். அவற்றை தொடர்ச்சியாகச் சுத்தமாகப் பேணும் ஒரு பண்பாடு அங்கு வளர்ந்திருக்கிறது. கழிப்பறைகளைப் பராமரிப்பது மட்டுமல்ல பொதுமக்கள் கழிப்பறைகளைச் பொறுப்போடு சுத்தமாக சுகாதாரமாகப் பயன்படுத்துவதும் ஒரு பண்பாடுதான். அந்தப் பண்பாடு அங்கே வளர்ந்திருக்கிறது. அது அந்த சமூகங்களின் சமூகத் தராதரத்தை; விழுமியங்களை,கூட்டுப் பொறுப்புணர்ச்சியை வெளிக்காட்டும் விடயங்களில் ஒன்று. ஆனால் ஆசிய ஆபிரிக்க நாடுகளில் நிலைமை அவ்வாறு இல்லை.பொதுக் கழிப்பறை என்றாலே அசுத்தமானது, அடிவருப்பானது, துர் வாடை வீசுவது, இலையான் மொய்ப்பது என்று நிலைமைதான் பொதுப் போக்காக உள்ளது. மேட்டுக்குடி அரசியல் பாரம்பரியத்தில் வராத அனுர இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் உரையாற்றியது வரவேற்கத்தக்கது. அதேசமயம் அவர் கூறுவதுபோல நெடுந்தூரப் பயணங்களில் தமிழ் நோக்கு நிலையில், இது ஒன்று மட்டும்தான் விவகாரம் இல்லை என்று வாகன உரிமையாளர்களும் சாரதிகளும் முறைப்பாடு செய்கிறார்கள். நீண்ட தூரப் பயணங்களில் குறிப்பாக இரவு வேளைகளில் யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையிலான பயண வழியில் தமது வாகனங்கள் அடிக்கடி பொலிசாரால் மறிக்கப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.அவ்வாறு மறிக்கப்பட்டு போலீஸ் நிலையத்துக்கும் நீதிமன்றத்துக்கும் அலைக்கழிக்கப்படுவதை விடவும் அவர்கள் கேட்கும் காசைக் கொடுத்துவிட்டு ஓடித் தப்புவதுதான் புத்திசாலித்தனமானது என்று பல சாரதிகள் கருதுவதாக ஒரு பொதுவான அபிப்பிராயம் உண்டு. இந்த நடைமுறை தமிழர்களுடைய பயண வழிகளில்தான் அதிகமாக உண்டு என்றும் தென்னிலகையில் ஏனைய நெடுந்தூரப் பயண வழிகளில் இந்தளவுக்குச் சோதனைகள் இல்லை என்றும் ஓர் ஒப்பீடு உண்டு. போர்க் காலங்களில் தமிழ் மக்கள் அதனை தமக்கு எதிரான கூட்டுத் தண்டனையின் ஒரு பகுதியாக விளங்கி வைத்திருந்தார்கள். ஆனால் கடந்த 15 ஆண்டுகளாகவும் அந்தத் தண்டனை தொடர்கிறதா? அப்படியென்றால் அதை உடனடியாக நிறுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. ஏனென்றால் நிறைவேற்று அதிகாரமுடைய அரசுத் தலைவரால் தமிழ்ச் சாரதிகளும் வாகன உரிமையாளர்களும் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் உண்மையானவையா இல்லையா என்பதனை விசாரித்து அறிவது கடினமானது அல்ல. மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்ட ஒரு அரசாங்கமும் நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்ட ஓர் அரசுத் தலைவரும் நினைத்தால் முடிவுக்கு கொண்டு வரக்கூடிய விடையங்கள் இவை. அரசியல்,பொருளாதாரத் தளங்களில் அரசாங்கத்துக்கு வரையறைகள் உண்டு.வெளி நிர்பந்தங்கள் இருக்கலாம்.ஆனால் பொதுக் கழிப்பறைகள் சுகாதாரமாகப் பேணப்படுகின்றனவா என்பதைக் கண்காணிப்பதற்கும் பொது போக்குவரத்து வாகனங்கள் குறிப்பாக தமிழ் வாகனங்கள் போலீசாரால் அதிகம் மறைக்கப்படுகின்றனவா என்பதனை விசாரிப்பதற்கும் அரசாங்கத்தால் முடியும்.உடனடியாக முடியும். சிறீலங்காவை கிளீன் பண்ணக்கூடிய சாத்தியமான இடங்கள் இவை. அரசாங்கம் அதைச் செய்யுமா ? கடந்த தைப் பிறப்பிலன்று வன்னியிலிருந்து ஒரு குடும்பம் வாகனத்தில் யாழ்ப்பாணத்துக்கு வந்தது. முன்னிரவு வேளை. கும்மிருட்டுக்குள் நின்று போலீசார் மறித்தார்கள்., கள்வர்களைப் பிடிப்பதுபோல மறைவில் நின்றார்கள். அங்கே தெருவிளக்குகள் இருக்கவில்லை.போலீசாரிடம் டோர்ச் லைட்கள் இருக்கவில்லை.பதிலாக கைபேசி டோர்ச் லைட்டுகளைப் பயன்படுத்தினார்கள். வாகனத்தின் இலக்கத்தையும் ஏனைய விபரங்களையும் பதிய வேண்டும் என்று கூறி சாரதியை இறக்கிக் கொண்டு போனார்கள். கைபேசியின் டோர்ச் லைட் வெளிச்சத்தில் பதிந்தார்கள். அப்பொழுது சாரதி கேட்டார்,ஏன் உங்களிடம் டோர்ச் லைட் இல்லையா? இந்தக் கைபேசி டோர்ச் லைட்டை வைத்துக் கொண்டு கள்ளர்களை எப்படிப் பிடிப்பீர்கள்?” என்று. அதற்கு ஒரு போலீஸ்காரர் தமிழில் சொன்னார் “துப்பாக்கி வைத்திருக்கிறோம் சுட்டுப் பிடிப்போம்” என்று. கிளீன் சிறீலங்கா? https://www.nillanthan.com/7083/
  18. 2500 பேருக்கு ஒரே நேரத்தில் பொது மன்னிப்பு வழங்கிய பைடன் கடந்த நவம்பர் 5 ஆம் திகதி நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை பதவியேற்க உள்ளார். எனவே தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் தனது அதிகாரத்தை முடிந்தவரை பயன்படுத்தி முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். குற்ற வழக்கில் சிக்கிய தனது மகன் ஹண்டர் பைடனுக்கு பொது மன்னிப்பு வழங்கியது, ரஷியா மீது கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி கொடுத்தது உள்ளிட்டவை அதில் அடங்கும். இந்நிலையில் பதவிக்காலத்தின் இறுதி நாட்களில் இருக்கும் ஜோ பைடன் ஒரே நாளில் 2500 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். வன்முறையற்ற சாதாரண போதைப் பொருள் குற்றங்களுக்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சுமாா் 2,500 பேருக்கு தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜோ பைடன் பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். அமெரிக்க வரலாற்றிலேயே ஒரே நாளில் இத்தனை பேருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது இதுவே முதல் முறை. வன்முறையில் ஈடுபடாதபோதிலும் மிகக் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக பைடன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் முன்னதாக அமெரிக்காவின் மத்திய நீதிமன்றங்களால் 37 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து கடந்த மாதம் ஜோ பைடன் உத்தரவிட்டிருந்தார். அவர்கள் செய்த கொலை கண்டிக்கத்தக்கதாக இருப்பினும் மத்திய அளவில் மரண தண்டனை விதிக்கப்படுவது தவறு என்பதால் அவா்களுக்கான தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைப்பதாக பைடன் கூறினாா். கடந்த 2003 முதல் மத்திய நீதிமன்றதனால் விதிக்கப்படும் மரண தண்டனைகள் நிறைவேற்றப்படாமல் இருந்த நிலையில் 2016 இல் பதவியேற்ற டொனால்டு டிரம்ப் மீண்டும் அதை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தார். வரும் ஜனவரி 20 முதல் டொனால்டு டிரம்ப் அதிபராக உள்ளார் என்பதால் அவரிடம் இருந்து மரண தண்டனை கைதிகளை பாதுகாக்க ஜோ பைடன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டாா். https://akkinikkunchu.com/?p=308493
  19. சீனாவை தொடர்ந்து அமெரிக்கா பறக்கிறார் ஜனாதிபதி அநுர ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது அடுத்த வெளிநாட்டு விஜயமாக அமெரிக்கா செல்லவுள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்தா தெரிவித்தார். அதன் பின்னர் ஜனாதிபதி ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்வார் என அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு, பிராந்திய வல்லரசுகளாக இந்தியா மற்றும் சீனாவுக்கு விஜயம் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார். உலகின் அனைத்து நாடுகளுடனும் பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை மேம்படுத்தும் வகையில் இந்த விஜயங்கள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார். https://akkinikkunchu.com/?p=308530
  20. நாடு முழுவதுமான நெல் களஞ்சியங்கள் துப்பரவு பணிகளில் இராணுவம் January 19, 2025 9:41 am இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் முப்படைகளின் சேனாதிபதியுமான அனுரகுமார திஸாநாயக்கவின் வழிகாட்டுதலின் கீழ், நாடு முழுவதும் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் ‘தூய இலங்கை’ தேசிய திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பெரும்போக பருவத்தின் நெல் அறுவடையை கொள்முதல் செய்வதற்கான திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதுடன் நெல் கொள்முதல் செய்த பிறகு, நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான 209 நெல் களஞ்சியசாலைகளில் சேமித்து வைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. நெல் சந்தைப்படுத்தல் சபைக்குச் சொந்தமான நெல் களஞ்சியசாலைகள் மற்றும் சுற்றியுள்ள நிலம் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதால், அவற்றைப் பயன்படுத்த ஏற்றதாக மாற்றவும், சிறிய பழுதுபார்ப்புகளை மேற்கொள்ளவும் அவற்றைச் சுத்தம் செய்ய வேண்டியுள்ளதுடன் தேசிய நலனுக்காக பாதுகாப்புப் படையினர் ஆதரவு வழங்கும் வகையில், பாதுகாப்புச் செயலாளரின் அறிவுறுத்தல்களின்படி, இலங்கை இராணுவத் தளபதியான லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீயின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதலின் கீழ் 2025 ஜனவரி 18 முதல் 2025 ஜனவரி 27 வரை அனைத்து பாதுகாப்புப் படைத் தலைமையகங்களாலும் நாடு முழுவதும் நெல் களஞ்சியசாலைகளை சுத்தம் செய்யும் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளதுடன் ஒரு தொடக்கமாக, நேற்று (18) இலங்கை இராணுவ படையினர் பல பகுதிகளில் நெல் களஞ்சியசாலைகளை சுத்தம் செய்தல் மற்றும் பழுதுபார்ப்பதில் பங்களித்தனர். https://oruvan.com/நாடு-முழுவதுமான-நெல்-களஞ/
  21. விடுதலை செய்யப்படவுள்ள பணயக்கைதிகளின் பெயர்களை ஹமாஸ் வெளியிடும்வரை யுத்தநிறுத்தம் இல்லை - நெட்டன்யாகு திடீர் அறிவிப்பு 19 Jan, 2025 | 11:50 AM ஹமாஸ் அமைப்பு தான் விடுதலை செய்யவுள்ள பணயக்கைதிகளின் பெயர் விபரங்களை வெளியிடும் வரை காசாவில் யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வராது என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு அறிவித்துள்ளார். காசாவில் இன்று காலை யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வரவிருந்த நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து ஹமாஸ் தன்னிடமுள்ள சில பணயக்கைதிகளை விடுதலை செய்யும் என எதிர்பார்ப்பு நிலவுகின்றது. இந்த நிலையிலேயே ஹமாஸ் அமைப்பு தான் விடுதலை செய்யவுள்ள பணயக்கைதிகளின் பெயர் விபரங்களை வெளியிடும் வரை காசாவில் யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வராது என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு அறிவித்துள்ளார். இது குறித்து பெஞ்சமின் நெட்டன்யாகு இஸ்ரேலிய இராணுவத்தினருக்கு அறிவித்துள்ளார் என அவரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/204217
  22. சீனாவின் உதவிகள் கடன்பொறியா? -அனுரகுமார திசநாயக்க மறுப்பு - சீனா இலங்கையை இராணுவமயப்படுத்தவில்லை என்றும் தெரிவிப்பு Published By: Rajeeban 19 Jan, 2025 | 10:55 AM by Xinhua writers Ma Zheng, Liu Chen சீனாவின் கடன்பொறி குறித்தும் சீனா இலங்கையை இராணுவமயப்படுத்துவதாகவும் மேற்குலக ஊடகங்கள் வெளியிடும் செய்திகளை கருத்துக்களை நிராகரித்த இலங்க ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க உலகின் தென்பகுதி நாடுகளிற்கு அபிவிருத்தி அவசியம்,வெளிநாட்டு முதலீடுகள் கடன்கள் இல்லாமல் அவற்றை சாதிக்க முடியாது அவ்வாறான உதவிகளை கடன்பொறியாக நாங்கள் கருதுவதில்லை என தெரிவித்துள்ளார். சீனாவின் சின்ஹ_வாவிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையும் சீனாவும் இரு தரப்பு உறவுகளில் புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கின்றன என இலங்கை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் திசநாயக்க செவ்வாய்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அவர் சீனாவிற்கு மேற்கொள்கின்ற முதலாவது விஜயமிது. 2004 இல் நான் முதல்தடவையாக சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டேன்,20 வருடங்களிற்கு பின்னர் திரும்பிவரும் நான் பாரிய மாற்றங்களை பார்க்கின்றேன் என திசநாயக்க தெரிவி;த்தார். இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டது முதல் கடந்த 68 வருடங்களாக நேர்மையான பரஸ்பர உதவி மற்றும் என்றும் நிலைத்திருக்கும் நட்புறவின் மூலம் சீனாவும் இலங்கையும் தங்கள் மூலோபாய ஒத்துழைப்பு கூட்டாண்மையை ஆழமாக்கியுள்ளன. இருதலைவர்களிற்கும் இடையில் புதன்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர் புதியபட்டுப்பாதை திட்ட ஒத்துழைப்பு,விவசாய ஒத்துழைப்பு, சமூக நலம் ஊடகம் உட்பட பல விடயங்;கள்தொடர்பில் இரண்டு நாடுகளும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன. வறுமை ஒழிப்பு தொழில்நுட்ப முன்னேற்றம் உட்கட்டமைப்பு அபிவிருத்தி உட்பட பல விடயங்களில் இலங்கை தற்போது பல சவால்களை எதிர்கொண்டுள்ளது என தெரிவித்த திசநாயக்க இந்த சவால்களில் இருந்து மீள்வதற்கு சீனா குறிப்பிடத்தக்க அளவில் இலங்கைக்கு உதவமுடியும்என தெரிவித்தார். சீன அரசாங்கம் என்பது மக்களை அடிப்படையாக கொண்டது மக்களின் தேவைகள் குறித்து கவனம் செலுத்துகின்றது என்பதை நான் அவதானித்தேன் இலங்கையின் புதிய அரசாங்கமும் மக்களிற்கு சேவையாற்றுவதை நோக்கமாக கொண்டது என இலங்கையின் 56 வயது புதிய ஜனாதிபதி தெரிவித்தார். வறுமையை ஒழிப்பதில் சீனாவின் சாதனைகளை பாராட்டிய திசநாயக்க சீனாவின் வறுமை ஒழிப்பு திட்டம் என்பது உலகத்திற்கான முன்மாதிரி ஐக்கிய நாடுகளும் அதனை பாரட்டியுள்ளது சீனாவும் அதிலிருந்து கற்றுக்கொள்வதற்கு நிறைய விடயங்கள் உள்ளன என தெரிவித்தார். சீனாவின் கம்யுனிஸ்ட் கட்சியின் அருங்காட்சியகம் தன்னைமிகவும் கவர்ந்ததாக தெரிவித்த திசநாயக்கஅது சீனா எப்படி கம்யுனிஸ்ட் கட்சியின் தலைமைத்துவத்தின் கீழ் சவால்களை எதிர்கொண்டு தற்போது வெற்றியை பெற்றுள்ளது என்பதை வெளிப்படுத்துகின்றது என குறிப்பிட்டார். இது சீன மக்களிற்கு மாத்திரம் முக்கியமானதில்லை, இது அனைவருக்கும் வளர்ச்சிக்கான புதிய முன்னோக்குகளை வழங்குகின்றது என தெரிவித்தார். கடந்த வருடங்களில்புதிய பட்டுப்பாதை திட்ட ஒத்துழைப்பு தொடர்பில் இலங்கையும் சீனாவும் நிலையான முன்னேற்றத்தை கண்டுள்ளன.சீனாவின் நிறுவனங்கள் துறைமுகங்கள் பாலங்கள் மருத்துவநிலையங்கள் மின்னிலையங்கள் போன்றவற்றை அமைத்துள்ளன.இதன் மூலம் அவை இலங்கையின் உட்கட்டுமானத்திலும் முதலீட்டு சூழ்நிலையிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் வேலைவாய்ப்பை அதிகரித்துள்ளன. சீனா இலங்கையின் முக்கிய வர்த்தக சகா, ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு முதலீடுகளிற்கு முக்கியமான நாடு,அபிவிருத்தி உதவிகளை வழங்கும் முக்கியநாடு. இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான புதிய பட்டுப்பாதைதிட்ட ஒத்துழைப்பில் கொழும்பு துறைமுக நகரமும் அம்பாந்தோட்டை துறைமுகமும் மிகவும் முக்கியமானவை. இந்த இரண்டுதிட்டங்களும் இலங்கைக்கு நீண்டகால அளவில் பெரும் பொருளாதார நன்மைகளை கொண்டுவரும் இதில் சந்தேகமில்லை என திசநாயக்க தெரிவித்தார். அம்பாந்தோட்டை துறைமுகம் கொழும்புதுறைமுக நகரம் ஆகியவற்றிற்கு அருகில்கைத்தொழில் பேட்டைகள் உருவாக்கப்படும் என தெரிவித்த திசநாயக்க இதன் மூலம் அதிகளவு முதலீட்டை பெறமுடியும் இலங்கை மக்களின் வாழ்க்கை தரத்தில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என குறிப்பிட்டார். சீனாவின் கடன்பொறி குறித்தும் சீனா இலங்கையை இராணுவமயப்படுத்துவதாகவும் மேற்குலக ஊடகங்கள் வெளியிடும் செய்திகளை கருத்துக்களை நிராகரித்த திசநாயக்க உலகின் தென்பகுதி நாடுகளிற்கு அபிவிருத்தி அவசியம்,வெளிநாட்டு முதலீடுகள் கடன்கள் இல்லாமல் அவற்றை சாதிக்க முடியாது அவ்வாறான உதவிகளை கடன்பொறியாக நாங்கள் கருதுவதில்லை என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/204210
  23. இலங்கை நிதியமைச்சரின் கருத்துக்கு சி.அ.யோதிலிங்கம் கண்டனம்! இலங்கையில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்று இலங்கை நீதி அமைச்சர் தெரிவித்த கருத்திற்கு அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குநருமான சி.அ. ஜோதலிங்கம் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார். இன்று அவர் யாழ்ப்பாணத்திலுள்ள தனது அலுவலகத்தில் நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, அண்மையில் இலங்கை நீதி அமைச்சர் இலங்கையில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களே உள்ளனர் என்றும் தெரிவித்திருந்தார். நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் உள்ளவர்கள் தமது சுயநலத்துக்காக போராடவில்லையென்றும் அவர்கள் தமது இனத்துக்காக போராடியவர்கள் என்றும் அவர்கள் பயங்கரவாதிகள் அல்லர் என்றும், அவர்கள் அரசியல் கைதிகள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை இலங்கை தமிழரசு கட்சி என்பது தமிழ் மக்களுடைய ஒரு அரசியல் இயக்கமாகும். அதன் மத்திய குழுவில் இருப்பவர்கள் ஒரு நம்பிக்கை பொறுப்பாளர்கள் என்றும், அவர்கள் தவறு அழைக்கின்ற போது மக்கள், சிவில் சமூகங்கள் தலையிட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://newuthayan.com/article/இலங்கை_நிதியமைச்சரின்_கருத்துக்கு_சி.அ.யோதிலிங்கம்_கண்டனம்!
  24. திக்கம் வடிசாலை தைப்பூசத்தன்று இயங்க ஆரம்பிக்கும் - அமைச்சர் மற்றும் தலைவர்கள் உறுதி! யாழ்ப்பாணம் - வடமராட்சி திக்கம் வடிசாலை எதிர்வரும் தைப்பூச நாளிலிருந்து இயங்கும் என பனை அபிவிருத்தி சபை தலைவர் சகாதேவன் மற்றும் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் சந்திரசேகரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதேவேளை, இறுதியாக பனை அபிவிருத்தி சபை தலைவராகவிருந்த பெரும்பானமை இனத்தை சேர்ந்த நபர் பல கோடி ரூபா பணத்தை கையூட்டாக பெற்று தனியார் நிறுவனம் ஒன்றிற்கு 25 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளதாகவும், அக்குத்தகையையும் அமைச்சரவை பத்திரம் ஊடக இரத்து செய்யவுள்ளதாகவும், பனை அபிவிருத்தி சபை இவ்வாண்டு முதல் பனை தென்னை வள அபிவிருத்தி சங்கங்களிடம் கையளிக்கப்படும் எனவும் அங்கு இடம் பெற்ற ஊழல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அங்கு உரையாற்றி கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்தார். திக்கம் வடிசாலையை மீள இயங்குவது தொடர்பான கலந்துரைடால் திக்கம் வடிசாலையில், பனை தென்னை வள கூட்டுறவு சங்க கொத்தணியின் தலைவர் தலமையில் நேற்றையதினம் (18) இடம்பெற்றது. இதில், கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் பிரதீப் சுந்தரலிங்கம், யாழப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன், வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளரும் பதிவாளருமான திரு.திருலிங்கநாதன், யாழ். மாவட்டத்தில் உள்ள ப.தெ.வ.அ.கூ.சங்கங்களின் சமாச தலைவர்கள், பொதுமுகாமையாளர், பிரதிநிதிகள், வலிகாமம், வடமராட்சி தென்மராட்சி ஆகிய கொத்தணிகளின் தலைவர்வர்கள், பொதுமுகாமையாளர்கள், நிர்வாக உறுப்பினர்கள், அனைத்து பனை தென்னை கூட்டுறவு சங்களினது தலைவர்கள், பொதுமுகாமையாளர்கள், திக்கம் வரணி வடிசாலை தலைவர் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர். https://newuthayan.com/article/திக்கம்_வடிசாலை_தைப்பூசத்தன்று_இயங்க_ஆரம்பிக்கும்_-_அமைச்சர்_மற்றும்_தலைவர்கள்_உறுதி!
  25. ஆதரவளித்த தமிழ் மக்களை நிச்சயம் ஏமாற்ற மாட்டோம்; அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவிப்பு தமிழ் மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் பொய்த்துப்போக விடமாட்டோம். தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். இவ்வாறு தெரிவித்துள்ளார் புத்தசாசன சமய மற்றும் கலாசார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி. யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தின் பெயரை, திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம் என்று பெயர்மாற்றும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது- வடக்கில் நாம் எதிர்பாராத ஆதரவைப் பெற்றிருக்கின்றோம். மூன்று எம்.பி.க்களை யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக நாம் பெற்றிருக்கிறோம். தமிழ் மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் நாங்கள் நிச்சயம் நிறைவேற்றுவோம். எமது ஆட்சியில் தமிழ் மக்களுக்கு விடிவு கிடைக்கும் என்பதற்கான முதல் அறிகுறியாகவே வடக்கில் தேசிய பொங்கல் விழா ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எமது அரசாங்கம் ஆரம்பித்திருக்கின்றது. எம் மீது நம்பிக்கை கொண்டு எமக்கு வாக்களித்த தமிழ் மக்கள் நிச்சயம் ஏமாற்றப்படமாட்டார்கள் - என்றார். https://newuthayan.com/article/ஆதரவளித்த_தமிழ்_மக்களை_நிச்சயம்_ஏமாற்ற_மாட்டோம்;_அமைச்சர்_ஹினிதும_சுனில்_செனவி_தெரிவிப்பு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.