Everything posted by கிருபன்
-
சிகரெட் மற்றும் மதுபானம் விலை அதிகரிப்பு
சிகரெட் மற்றும் மதுபானம் விலை அதிகரிப்பு January 10, 2025 11:11 pm நாளை (11) முதல் அமுலுக்கு வரும் வகையில் சிகரெட் விலையை அதிகரிக்க இலங்கை புகையிலை நிறுவனம் தீர்மானித்துள்ளது. கலால் வரி அதிகரிப்புடன் சிகரெட் விலைகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, நான்கு வகையான சிகரெட்டுக்களின் விலை 5 மற்றும் 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை புகையிலை நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, CAPSTAN மற்றும் John Player சிகரெட்டுகளின் விலை 5 ரூபாவாலும் மற்றும் dunhill மற்றும் Gold Leaf சிகரெட்டுகளின் விலை 10 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளது. இதேவேளை, நாளை (11) முதல் அமுலுக்கு வரும் வகையில் மதுபானங்களின் விலைகளை அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மனுபானங்களின் விலைகளை 6 சதவீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=198604
-
பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவராக சாணக்கியன் தெரிவு
அரியம் ஐயாவின் விளக்கம் வட்ஸப்பில் : பாராளுமன்ற ஒன்றியங்கள் பாராளுமன்ற நிலையில் கட்டளைக்கு உள்வாங்கப்படுவதில்லை.. நாடாளுமன்ற குழுக்களின் வகைகள் இலங்கைப் பாராளுமன்றத்தின் குழுக்கள் இரண்டு விரிவான வகுப்புக்களுள் வகைப்படுத்தப்பட முடியும். அவை நிலையியற் குழுக்கள், விஷேட குழுக்கள் என்பன ஆகும். நிலையியற் குழுக்கள், நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் சபாநாயகரால் நியமிக்கப்படுவதுடன் அக்குழுவின் அலுவல் முற்றுப் பெற்றாலும் முற்றுப் பெறாவிட்டாலும் தொடர்ந்து செயற்பட்டவாறிருக்கும். அவைகளின் பதவிக் காலத்தில் சற்று நிரந்தரத்தன்மை காணப்படும். சபையின் குறிப்பிட்ட ஓர் அலுவலை அவை கையாள்கின்றன. விஷேட குழுக்களோ பெரிதும் தற்காலிகமானவையாக இருப்பதுடன் அவற்றின் பணி பூர்த்தியானதும் அவை இல்லாதொழிந்து போகின்றன. இக்குழுக்கள் காலத்திற்குக் காலம் அவற்றுக்கு வழங்கப்படும் இவ்வாறான குறிப்பிட்ட செயற்பாடுகளுக்காகச் செயலாற்றுகின்றன. இவற்றை நாம் தெரிகுழுக்கள் என்றும் அழைக்கலாம். நிலையியற் கட்டளைகளின் படி முழுப் பாராளுமன்றக் குழுவுக்குப் புறம்பாக, இலங்கைப் பாராளுமன்றம் ஐந்து வகையான குழுக்களைக் கொண்டுள்ளது விசேட குழுக்கள் துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள் சட்டவாக்க நிலையியற் குழுக்கள் சிறப்பு நோக்கங்களுக்கான குழுக்கள் பாராளுமன்ற ஒன்றியங்கள் என்பவை பொதுவான நலன்களையும் / இலக்குகளையும் பற்றிக் கலந்துரையாடி, அவற்றுக்காக ஆதரித்துவாதாடுவதற்கான அல்லது பகிரப்பட்ட ஒரு நிகழ்ச்சிநிரலை முன்னெடுப்பதற்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவாகும். ஒன்றியத்தின் பிரதான நோக்கங்கள், நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதும் கொள்கை விடயங்களைக் கலந்துரையாடுவதும் சட்டவாக்க முன்னுரிமைகள் பற்றிய உபாயமார்க்கங்களைத் தயாரிப்பதுமாகும். ஒன்றியங்கள் பொதுவாக சில குறிப்பிட்ட அடையாளம் காணப்பட்ட விடயங்களிலும், சுற்றாடல், மனித உரிமைகள், பொருளாதார அபிவிருத்தி அல்லது ஒரு குறித்த வேறுபட்ட குழுக்கள் (உதாரணம்: பெண்கள் ஒன்றியம், இளைஞர் ஒன்றியம், சிறுவர் ஒன்றியம்) போன்ற தலைப்புக்களிலும் கவனம் குவிக்கின்றன. ஒன்றியத்தின் நடவடிக்கைகள், கிரமமான கூட்டங்களை நடத்துதல், நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல், சட்டாவக்கத்தினை முன்மொழிதல், ஆலோசனைகளை முன்வைத்தல், நடப்பு விவகாரங்களைக் கலந்துரையாடுதல், மற்றும் பங்கீடுபாட்டாளர்களுடனும் பொதுமக்களுடனும் சேர்ந்து செயற்படல் ஆகியவற்றினை உள்ளடக்குகின்றன. பின்வருவன இலங்கையின் கடந்த 2020,ல் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நடப்பு ஒன்றியங்களாகும்: 1 பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் 2 பாராளுமன்ற சிறுவர் ஒன்றியம் 3 திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியம் 4 இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம். 5 விலங்குகள் நலனுக்கான பாராளுமன்ற ஒன்றியம் 6 தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான பாராளுமன்ற ஒன்றியம் 7 மாற்றுத்திறனாளிகள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் 8 மலைநாட்டைப் பாதுகாத்தல் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் 9 மனித உரிமைகள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் 10 இலங்கையில் மலையகப் பெருந்தோட்டத்துறை சமூகத்தின் முன்னேற்றம் பற்றிய ஒன்றியம் 11 காலநிலை பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் 12 மருத்துவர்களாகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் எவ்வாறாயினும், பாராளுமன்ற ஒன்றியங்களுக்கான ஏற்பாடுகள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிலையியற் கட்டளைகளில உள்ளடக்கப்படவில்லை.. நிலையிற்கட்டளைக்கு உள்வாங்கப்படும் பாராளுமன்ற பதவிகள் அனைத்தும் சபாநாயகரால் பாராளுமன்ற அமர்வில் அறிவிப்பார். -பா.அரியநேத்திரன்- 10/01/2024
-
பிரபல பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன் காலமானார்!
காலத்தால் அழியாத பாட்டுக்களைத் தந்த பாடகர் ஜெயச்சந்திரனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள் காற்றில் கலந்த இசை: ஜெயச்சந்திரன் மறைவால் கலங்கும் பிரபலங்கள்! christopherJan 10, 2025 08:46AM பிரபல தென்னிந்திய பின்னணிப் பாடகர் பி. ஜெயச்சந்திரன் கடந்த ஒரு வருடமாக கல்லீரல் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். அவருக்கு வயது 80. திருச்சூர் மாவட்டம் பூக்குன்னத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று (ஜனவரி 9) மாலை 7 மணியளவில் ஜெயச்சந்திரன் திடீரென மயக்கமடைந்தார். இதனையடுத்து அவர் உடனடியாக திரிச்சூரில் உள்ள அமலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக புகழ்பெற்ற பின்னணி பாடகராக வலம் வந்தவர் ஜெயச்சந்திரன். 1944 மார்ச் 3ஆம் தேதி எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ரவிபுரத்தில் பிறந்தார். அவரின் பாடும் திறமையை சிறுவயதிலேயே அறிந்துகொண்ட அவரது அண்ணன் சுதாகரன் தொடர்ந்து ஊக்கப்படுத்தினார். தலைமுறை கண்ட பாடகர் 1965ஆம் ஆண்டு வெளியான ‘குஞ்சாலி மரக்கார்’ படத்தில் பி. பாஸ்கரன் எழுதி சிதம்பரநாத் இசையமைத்த ‘ஒரு முல்லைப்பூ மாலமாய்’ என்ற பாடல் மூலம் ஜெயச்சந்திரன் திரையுலகில் பாடகராக அறிமுகமானார். தமிழ் திரையுலகில் 1973ஆம் ஆண்டு வெளியான ‘அலைகள்’ படத்தில் மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் இசையில் ‘பொன்னென்ன பூவென்ன’ என்ற பாடலைப் பாடி அறிமுகமானார். அதன்பின்னர் இளையராஜா, சங்கர் கணேஷ், தேவா, வித்யாசாகர், ஏ. ஆர். ரகுமான், ஜி. வி.பிரகாஷ் என பல தலைமுறைகளாக பிரபல இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி, ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கிறார். குறிப்பாக, தமிழில் பாரதி ராஜாவின் கிழக்கு சீமையிலே திரைப்படத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் `கத்தாழங் காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி’ பாடலைப் பாடியதற்காக, 1994-ல் தமிழ்நாடு அரசின் சிறந்த பாடகருக்கான திரைப்பட விருது பெற்றார். ஏழைகளின் ஜேசுதாஸ் இளையராஜா இசையில் தாலாட்டுதே வானம், மயங்கினேன் சொல்லத் தயங்கினேன், காத்திருந்து காத்திருந்து, ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு, கொடியிலே மல்லியப்பூ போன்ற பல நெஞ்சம் வருடும் பாடல்களை பாடியுள்ளார். அதே போன்று விஜய்க்காக பூவே உனக்காக படத்தில் ’சொல்லாமலே யார் பார்த்தது’ முதல் அஜித்குமாருக்காக கிரீடம் படத்தில் ‘கனவெல்லாம் பலிக்குதே’ வரை என இன்றைய தலைமுறையின் மனதையும் தனது குரலால் வருடியுள்ளார். ஏழைகளின் ஜேசுதாஸ் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட ஜெயச்சந்திரன், மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் மட்டுமன்றி இந்தியிலும் ஜெயச்சந்திரனின் குரல் ஒலித்திருக்கிறது. மேலும் தனது குரலுக்காக தேசிய விருது, தமிழ்நாடு அரசு விருது, கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றிருக்கிறார். பிரபலங்கள் இரங்கல்! ஜெயச்சந்திரன் மறைவை அடுத்து நடிகர் கமல்ஹாசன் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “மலையாளத்திலிருந்து வந்து தெற்கு மாநிலங்களை நிரப்பிய மணிக்குரலுக்குச் சொந்தக்காரரான ஜெயச்சந்திரன் மறைந்து விட்டார் என்னும் செய்தி மனதை வருத்துகிறது. பாடிய பாடல்களில் எல்லாம் வெற்றிகண்டு காட்டியவர். இசையாக என்றும் நம் மனங்களில் இருப்பார். அவருக்கு என் அஞ்சலி” என தெரிவித்துள்ளார். கன்னியாகுமர் எம்.பி விஜய் வசந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில், “என்றும் மனதில் நிற்கும் மிக சிறந்த பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன்மறைவு சோகம் தரும் செய்தி. அவரை இழந்து வருந்தும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்” என இரங்கல் தெரிவித்துள்ளார். https://minnambalam.com/cinema/celebrities-are-shocked-by-the-demise-of-jayachandran/
-
மன்னாரில் மிகப்பெரிய மனித புதைகுழியிலிருந்து எடுக்கப்பட்ட எலும்புகள் அடங்க 80 பெட்டிகள் குறித்து ஆய்வு
மிகப்பெரிய மனித புதைகுழியிலிருந்து எடுக்கப்பட்ட எலும்புகள் அடங்க 80 பெட்டிகள் குறித்து ஆய்வு January 10, 2025 11:36 am பதினொரு வருடங்களுக்கு முன்னர் மன்னாரில் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பான அறிக்கையை சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதுடன், இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூட்டுத் தொகுதிகள் பரிசோதனைக்காக சட்ட வைத்திய அதிகாரியிடம் கையளிக்கப்பட்டுள்ளன. 2025 ஜனவரி 09 ஆம் திகதி மன்னார் திருக்கேதீஸ்வரம் மற்றும் சதொச ஆகிய இரண்டு மனித புதைகுழிகள் தொடர்பான வழக்கு விசாரணையின் பின்னர், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பில் நீதிமன்றில் முன்னிலையாகும் சட்டத்தரணி சாந்திப்பிரகாசம் நிரஞ்சன் மன்னாரில் ஊடகவியலாளர்களிடம் இந்தத் தகவல்களை வெளியிட்டார். திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட 27 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளின் பாலினம், வயது உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய அறிக்கை சட்ட வைத்திய அதிகாரி சுனில் ஹேவகேவினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாக சட்டத்தரணி சாந்திப்பிரகாசம் நிரஞ்சன் தெரிவிக்கின்றார். “கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி ஹேவகேயினால் பகுப்பாய்வு செய்யப்பட்ட 81 மனித எச்சங்களில் 27 மனித எச்சங்களுக்கான அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டுள்ளன. வயது, பாலினம், இறப்புக்கான காரணம் போன்ற காரணங்களை உள்ளடக்கிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மிகுதி எச்சங்களுக்கான அறிக்கை ஆறு மாத காலத்தில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.” இந்த வழக்கு எதிர்வரும் மார்ச் 12ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் திகதி மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பில் மன்னார் நீதவான் நீதிமன்றில் அதே ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் திகதி மன்னார் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்து நீதிமன்ற உத்தரவுக்கமைய மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் 82 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன. சதொச மனித எலும்புக்கூடுகள் சட்ட வைத்திய அதிகாரியிடம் கையளிக்கப்பட்டது ஆறு வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் அடங்கிய 80 பெட்டிகள் பரிசோதனைக்காக சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவனிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் சட்டத்தரணி சாந்திப்பிரகாசம் நிரஞ்சன் தெரிவிக்கின்றார். “ஏற்கனவே இணங்கியமைக்கு அமைய அகழ்ந்து எடுக்கப்பட்ட எலும்புக்கூட்டு எச்சங்கள் சட்ட வைத்திய அதிகாரியிடம் கையளிக்கப்பட்டது. 76 – 156 வரையான 80 பெட்டிகள் சட்ட வைத்திய அதிகாரியின் மேலதிக பகுப்பாய்விற்காக நீதிமன்றத்தால் கையளிக்கப்பட்டுள்ளன. இதுத் தொடர்பிலான அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.” எலும்புகளை பரிசோதித்ததன் பின்னர் மரணத்திற்கான காரணம், வயது, பாலினம், குற்றச் செயல்களுடன் ஏதாவது தொடர்புகள் உள்ளனவா, என யாழ்ப்பாணம் சட்ட வைத்திய அதிகாரி கந்தையா பிரணவன் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவித்த சட்டத்தரணி, எலும்புக்கூடுகள் அடங்கிய எஞ்சிய 75 பெட்டிகள் ஜனவரி 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவனிடம் நீதிமன்றினால் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் மேலும் தெரிவித்தார். 2018ஆம் ஆண்டு நிர்மாணப் பணிகளின் போது அடையாளம் காணப்பட்ட மன்னார் சதொச மனிதப் புதைகுழியில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது 28 சிறுவர்கள் உட்பட 376 மனித உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. குற்றம் இடம்பெற் இடமாக கருதப்பட்டு மன்னார் சதொச மனிதப் புதைகுழி தோண்டப்பட்டு வருவதாக சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ச 190ஆவது நாள் அகழ்வு விசாரணையின்போது ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தார். மன்னார் சதொச புதைகுழியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட ஆறு எலும்புகளை ஆய்வு செய்த அமெரிக்காவின் மியாமியை தளமாகக் கொண்ட பீட்டா அனலிட்டிக்ஸ் நிறுவனம் (Beta Analytic Inc.) அவை கி.பி.1404 -1635ற்கும் இடைப்பட்ட நூற்றாண்டுகளை சேர்ந்தது என தீர்மானித்தது. ஜூலை 2019 இல், அந்த தீர்மானத்தை கடுமையாக நிராகரித்த களனிப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த தொல்லியல் முதுகலைப் பிரிவின் பேராசிரியர் ராஜ் சோமதேவ, வெகுஜன புதைகுழியின் காலத்தைப் பற்றிய நம்பகமான தீர்மானத்திற்கு வரக்கூடிய வகையில், ஜூலை 2019 இல், மனித எலும்புகளுடன் தோண்டியெடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பொருட்களில் புதிய விசாரணைகளை ஆரம்பித்தார். அப்போது கண்டெடுக்கப்பட்ட எலும்புகளில் சிலவற்றில் ஆழமான வெட்டுக்காயங்கள் காணப்பட்டதுடன், ஒன்றாகக் கட்டப்பட்டதாக தெரிவிக்கப்படும் எலும்புத் துண்டுகளும் மனித புதைகுழியில் காணப்பட்டன https://oruvan.com/மிகப்பெரிய-மனித-புதைகுழி/
-
சிவனேசதுரை சந்திரகாந்தன் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்!
சிவனேசதுரை சந்திரகாந்தன் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்! 10 Jan, 2025 | 12:23 PM முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் இன்று வெள்ளிக்கிழமை (10) களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார். கடந்த 2021ஆம் ஆண்டு இராஜாங்க அமைச்சராகவும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராகவும் பதவி வகித்த வேளையில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜுடன் காணி தொடர்பாக தொலைபேசி மூலமாக ஏற்படுத்திக்கொண்ட உரையாடலின்போது காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளருக்கு சிவனேசதுரை சந்திரகாந்தன் அச்சுறுத்தல் விடுத்ததாக தெரிவித்து காணி ஆணையாளர் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காகவே சிவனேசதுரை சந்திரகாந்தன் நீதிமன்றில் ஆஜரானார். https://www.virakesari.lk/article/203466
-
தொல்லியல் திணைக்களத்தால் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளமையே நெல் உற்பத்தி குறைவுக்கு காரணம் - நாடாளுமன்ற உறுப்பினர் குகதாசன்
தொல்லியல் திணைக்களத்தால் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளமையே நெல் உற்பத்தி குறைவுக்கு காரணம் தொல்லியல் திணைக்களம் உட்பட அரச திணைக்களங்களினால் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளமையும் நாட்டின் நெல் உற்பத்தி குறைவுக்கு காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் குகதாசன் தெரிவித்தார். நேற்றையதினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நாட்டிலே தற்போது ஏற்பட்டுள்ள அரிசி விலை உயர்வுக்கு வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை பேரிடர்கள் மட்டுமன்றி. அரசினது அங்கங்களானபல்வேறு திணைக்களங்களும் காரணமாக உள்ளன. இதில் முதன்மை வகிப்பது தொல்பொருள் துறையாகும். தொல்பொருள் துறையானது தமிழ் மக்கள் சில நூற்றாண்டு காலமாக விவசாயம் செய்து வருகின்ற விவசாய நிலங்களை தமது தொல்பொருள் இடங்களாக அறிவித்துக் கையகப்படுத்தி வருகிறது. எடுத்துக்காட்டாக. இந்த ஆண்டு தொடங்கி பத்து நாட்கள்கூட முடிவடையாத நிலையில், தொல்லியல் துறையானது ஜனவரி 6 மாலை திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஈச்சிலம்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும் வட்டவான் கிராமசேவகர் பிரிவில் அடங்கும் 224 விவசாயிகளுக்கு சொந்தமான 380 ஏக்கருக்கு மேற்பட்ட நெற்பயிரோடு கூடிய விவசாய நிலத்தை தமது தொல்லியல் பகுதி என அறிவித்துள்ளது. அதேபோன்று குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும்குச்சவெளி கிராம சேவையாளர் பிரிவில், 1985ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே விவசாயிகள் பயன்படுத்தி வந்த நெற்களஞ்சியம் மற்றும் சந்தைப் பகுதியை தொல்லியல்துறை தொல்பொருள் பகுதி என அறிவித்துள்ளது. இதற்கு முன்னரும் தொல்லியல் துறையானது. குச்சவெளிப்பிரதேசசெயலாளர் பிரிவில் உள்ள திரியாய கிராம சேவையாளர் பிரிவில் உள்ளடங்கும். பிரித்தானியர்களால் வழங்கப்பட்ட உறுதிகளைக் கொண்ட 150 ஆண்டுக் காலமாக தமிழ் மக்கள் விவசாயம் செய்து வருகின்ற. அண்ணளவாக ஆயிரம் ஏக்கர் நிலத்தினை விவசாயம் செய்யவிடாமல் எல்லைக் கற்களைப் போட்டு பிடித்து வைத்துள்ளது. இது மட்டுமல்லாமல் இதனை விடவும். குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும் தென்னைமரவாடி, புல்மோட்டை திரியாய, குச்சவெளி. ஜாயாநகர். கும்புறுப்பிட்டி, நிலாவெளி.பெரியகுளம்முதலிய கிராம சேவை பிரிவுகளை உள்ளடக்கிய 1994 ஏக்கர் நிலத்தை எல்லைக்கற்களை இட்டுப் பிடித்து வைத்துள்ளது. இந்த செயலானது நெல் உற்பத்தியில் பாரிய குறைப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதனையும். இது நாட்டுக்கு பேரிழப்பு என்பதனையும். இந்த அவையின் மேலான கவனத்துக்கு கொண்டு வருகிறேன். அதுமட்டுமன்றி தொல்லியல் துறையானது. மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும்.இராஜவந்தான்மலைமுருகன் கோயில், கூனித்தீவுமத்தளைமலை முருகன் கோயில், கிளிவெட்டி முத்துமாரியம்மன் கோயில் அதேபோன்று சேருவில பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும் திருமங்கலாய் சிவன் கோயில், ஈச்சிலம்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும் இலங்கைத்துறை முகத்துவாரம் பெரியசாமி கோயில் மற்றும் கல்லடி மலைநீலியம்மன் கோயில் அதேபோன்று. திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேசசெயலக பிரிவில் உள்ளடங்கும் கன்னியா வெந்நீர் ஊற்று மற்றும் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும். தென்னமரவாடி கந்தசாமிமலை முருகன் கோயில், குச்சவெளி செம்பிமலை சிவன் கோயில் மற்றும் வளத்தான்மலை நாகதம்பிரான் கோயில் முதலிய சைவ கோயில்களையும், அவற்றை சூழவுள்ள விவசாய நிலங்களையும்கையகப்படுத்துகின்ற முன்முயற்சிகளில் தொல்பொருள் துறை ஈடுபட்டுவருவதையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இதற்கு மேல், இலங்கையில் புகழ்பெற்ற கோணேஸ்வரர் கோயில் வளாகத்தில் உள்ள 453 ஏக்கர் நிலத்தையும் தொல்பொருள் துறை கையகப்படுத்தி வைத்துள்ளது. இந்தப் பகுதியில் ஒரு வாழை மரத்தை நடக்கூட தொல்லியல்துறை தடை விதிக்கின்ற அதேவேளை. இங்கு 58 சட்டவிரோத கடைகள் அமைக்கப்பட்டிருப்பது பற்றி தொல்லியல் திணைக்களம் எந்த கவலையும் கொள்ளவில்லை என்பதோடு. பல வேளைகளில் அவர்களுக்கு சாதகமாக நடந்துகொள்வதனையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இதுஒரு இனவாதப் போக்கினை எடுத்துக்காட்டுவதாக அமைகிறது. தொல்பொருள்துறை மட்டுமில்லாமல். திருகோணமலை மாவட்டத்தில் 1983ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், போரின்போது மக்கள் உயிர்பாதுகாப்பு கருதி இடம்பெயர்ந்த வேளையில், அரசின்மற்றுமொரு அங்கமான வனத்துறை மக்கள்விவசாயம் செய்த 41361 ஏக்கர் நிலத்தினை தமது மனம் போன போக்கில் எல்லைக்கற்களை போட்டுப்பிடித்து வைத்துக்கொண்டு காணியினுள்செல்லவோ அல்லது விவசாயம் செய்யவோ விடாமல் தடுத்து வருகிறது. அது மட்டுமல்லாமல் வனத்துறை எல்லைக் கற்களை இடாத பகுதிகளில் கூட மக்கள் தமது காணிகளில் விவசாயத்தில் ஈடுபட வனத்துறையிடம் ஒப்புதலைபெறமுடியாத நிலைகாணப்படுகிறது. இதேபோன்று வனவிலங்கு துறையானது கால்நடை வளர்ப்பாளர்கள் பலதலைமுறைகளாக மேய்ச்சல் தரையாக பயன்படுத்தி வந்த நிலங்களை. அவர்கள் போரின்போது இடம்பெயர்ந்த வேளையில். எல்லைக் கற்களை போட்டுப் பிடித்து வைத்துக்கொண்டு. இந்நிலங்களில் காட்டு விலங்குகள் மட்டுமே மேயலாம். வீட்டு விலங்குகள் மேய முடியாது என்று தடுத்து வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கானகால்நடைவளர்ப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு பல்லாயிரக்கணக்கான கால்நடைகள் போதிய உணவின்றி இன்னலுருகின்றன. எடுத்துக்காட்டாக. ஈச்சிலம்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 600 கால்நடை வளர்ப்பாளர்கள் தமது 28.000 கால்நடைகளுக்கு மேய்ச்சல் தரையின்றி இன்னல் படுகின்றனர். இவர்கள் கால்நடை வளர்ப்பையே தமது வாழ்வாதாரமாக கொண்டவர்களாக காணப்படுகின்றனர். இத்தகைய சிக்கல் தம்பலகாமம். குச்சவெளி கிண்ணியா மூதூர் மொறவௌ முதலிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் காணப்படுகிறது. அதேபோன்று. அரசின் இன்னும் ஓர் அங்கமான துறைமுக அதிகார சபையானது. திருகோணமலையின் பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும் 11 கிராம சேவை பிரிவுகளை உள்ளடக்கிய 5.572 ஏக்கர் நிலத்தினை கையப்படுத்தி வைத்திருக்கிறது. இப்பகுதிக்குள்வாழும் 763 குடும்பங்கள் தமது குடியிருப்பு காணிகளில் எதுவித செயற்பாடுகளையும் மேற்கொள்ள முடியாது இருப்பது மட்டுமின்றி. விவசாய நிலங்களில் பயிர்ச்செய்கை மேற்கொள்ள முடியாத சூழலும் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை அரசு உணவு உற்பத்தியை பெருக்குமாறு கூறுகின்ற அதேவேளை அரசின் அங்கங்களான தொல்பொருள்துறை. வனத்துறை, வனவிலங்குத்துறை. துறைமுக அதிகார சபை முதலியன விவசாய நடவடிக்கைகளை தடுப்பதன் மூலம் உணவு உற்பத்தியை குறைத்தும் வருகின்றமை நகைப்புக்குரிய விடயமாக உள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் அரச திணைக்களங்கள் மட்டுமன்றி. முற்றும் துறந்த பிக்குகளும் மண்ணாசை கொண்டு குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும் 2172 ஏக்கர் நிலத்தினை பிடித்து வைத்துக்கொண்டு, மக்களை விவசாயம் செய்யவிடாமல் தடுத்தும் வருகிறார்கள். இந்த விடயத்தில் ஆளும்தரப்பு உரிய கவனம் செலுத்தி தொல்பொருள்துறை. வனத்துறை வனவிலங்குத்துறை. துறைமுக அதிகார சபை. புத்தபிக்குகள் ஆகியோர் பிடித்து வைத்துள்ள மக்களுடைய காணிகளை விடுவித்து. மக்கள்விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடவும்.அதன்வழிநெல்உள்ளிட்டஉணவு உற்பத்தியினை பெருக்கவும் ஆவண செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் எனவும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/314529
-
இலங்கையில் உணவுக்காக கடன் வாங்கும் பெருமளவு மக்கள்!
இலங்கையில் உணவுக்காக கடன் வாங்கும் பெருமளவு மக்கள்! நாட்டின் பத்து மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், 32 சதவீத குடும்பங்கள் தங்கள் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடன் வாங்குவதாகக் தெரியவந்துள்ளது. உணவு சார்ந்த தகவல் மற்றும் செயல் வலையமைப்பு நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வை நிறுவனத்தின் ஆராய்ச்சி அதிகாரி ஷெஹாரி விஜேசிங்க நடத்தினார். இந்த கணக்கெடுப்பு கடந்த ஆண்டு (2024) மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடத்தப்பட்டது. முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, பதுளை, இரத்தினபுரி, காலி, நுவரெலியா, கொழும்பு, அனுராதபுரம் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 20 பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கி இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கொழும்பு மாவட்டத்தில் உள்ள கொலன்னாவ மற்றும் மஹரகம பிரதேச செயலாளர் பிரிவுகள் இந்த கணக்கெடுப்புக்காக தேர்ந்தெடுக்கப்பட்டன. இதில் 62 சதவீதம் பேருக்கு நிலையான வருமான ஆதாரம் இல்லை என்பதும், கிட்டத்தட்ட 57 சதவீதம் பேருக்கு உணவுப் பாதுகாப்பு இல்லை என்பதும் தெரியவந்தது. இந்த மாதிரியில் 35 சதவீத வீட்டு உரிமையாளர்களின் மாத வருமானம் 49,000 ரூபாவுக்கும் குறைவாக உள்ளது. கணக்கெடுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் தங்கள் வருமானத்தில் 42 சதவீதத்தை உணவுக்காகச் செலவிடுகிறார்கள், அதே நேரத்தில் 6 சதவீதம் மட்டுமே சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுகிறது. மேலும், கல்விக்காக 9 சதவீதம் ஒதுக்கப்படுகிறது. கணக்கெடுக்கப்பட்ட குழுவில் 31.7 சதவீதம் பேர் உணவு வாங்க கடன் வாங்கியுள்ளதாகவும், தங்க நகைகளை அடகு வைப்பதன் மூலமோ, தங்களிடம் இருந்த சொத்துக்களை விற்பதன் மூலமோ அல்லது கடன் வாங்குவதன் மூலமோ உணவுக்கான பணத்தை தேடுவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[ https://newuthayan.com/article/இலங்கையில்_உணவுக்காக_கடன்_வாங்கும்_பெருமளவு_மக்கள்!
-
2025ஆம் ஆண்டில் அரசின் செலவு 4,691 பில்லியன் ரூபாவாக மதிப்பிடு
2025ஆம் ஆண்டில் அரசின் செலவு 4,691 பில்லியன் ரூபாவாக மதிப்பிடு 2025 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் அரசின் செலவு 4,691 பில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பிரதமர் ஹரிணி அமரசூரியவால் இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி தொடங்கி டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் அரச செலவுகள் குறித்து இதில் கணிப்பிடப்பட்டுள்ளதுடன், மொத்த செலவு 4,691 பில்லின்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. இம்முறை ஜனாதிபதியின் கீழ் இயங்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சுக்கே அதிக நிதி ஒதுக்கீடு இடம்பெற்றுள்ளது. இந்த அமைச்சுக்கு 484 மீண்டுவரும் செலவு எனவும் 229 மூலதனச் செலவு எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. அமைச்சுகளுக்கு நிதி ஒதுக்கீடுகள் இடம்பெற்றுள்ள விபரம் வருமாறு, பௌத்தம், மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சு மீண்டுவரும் செலவு – 8.3 பில்லியன் ரூபா மூலதனச் செலவு – 5.4 பில்லியன் ரூபா நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சு மீண்டுவரும் செலவு – 484 பில்லியன் ரூபா மூலதனச் செலவு – 229 பில்லியன் ரூபா பாதுகாப்பு அமைச்சு மீண்டுவரும் செலவு – 382 பில்லியன் ரூபா மூலதனச் செலவு – 60 பில்லியன் ரூபா நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு மீண்டுவரும் செலவு – 38 பில்லியன் ரூபா மூலதனச் செலவு – 16 பில்லியன் ரூபா சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சு மீண்டுவரும் செலவு – 412 பில்லியன் ரூபா மூலதனச் செலவு – 95 பில்லியன் ரூபா வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு மீண்டுவரும் செலவு – 19.4 பில்லியன் ரூபா மூலதனச் செலவு – 2 பில்லியன் ரூபா வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு ,அபிவிருத்தி அமைச்சு மீண்டுவரும் செலவு – 2.6 பில்லியன் ரூபா மூலதனச் செலவு – 397 மில்லியன் ரூபா போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு மீண்டுவரும் செலவு- 52.4 பில்லியன் ரூபா மூலதனச் செலவு – 421 பில்லியன் ரூபா விவசாயம், கால்நடை, நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சு மீண்டுவரும் செலவு- 83 பில்லியன் ரூபா மூலதனச் செலவு – 124 பில்லியன் ரூபா எரிசக்தி அமைச்சு மீண்டுவரும் செலவு- 1 பில்லியன் ரூபா மூலதனச் செலவு – பி 20 பில்லியன் ரூபா நகர அபிவிருத்தி, கட்டுமானம் மற்றும் வீட்டுவசதி அமைச்சு மீண்டுவரும் செலவு- 3 பில்லியன் ரூபா மூலதனச் செலவு – 98 பில்லியன் ரூபா கிராம அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு மீண்டுவரும் செலவு- 24 பில்லியன் ரூபா மூலதனச் செலவு – 05 பில்லியன் ரூபா கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மீண்டுவரும் செலவு- 206 பில்லியன் ரூபா மூலதனச் செலவு – 65 பில்லியன் ரூபா பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மீண்டுவரும் செலவு- 463 பில்லியன் ரூபா மூலதனச் செலவு – 33 பில்லியன் ரூபா பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சு மீண்டுவரும் செலவு- 5.4 பில்லியன் ரூபா மூலதனச் செலவு – 11 பில்லியன் ரூபா தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சு மீண்டுவரும் செலவு- 04 பில்லியன் ரூபா மூலதனச் செலவு – 08 பில்லியன் ரூபா மீன்பிடி, நீர்வாழ் மற்றும் கடல் வள அமைச்சு மீண்டுவரும் செலவு- 6.2 பில்லியன் ரூபா மூலதனச் செலவு – 5.2 பில்லியன் ரூபா சுற்றாடல் அமைச்சு மீண்டுவரும் செலவு- 12 பில்லியன் ரூபா மூலதனச் செலவு – 3.5 பில்லியன் ரூபா பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சு மீண்டுவரும் செலவு- 14 பில்லியன் ரூபா மூலதனச் செலவு – 392 மில்லியன் ரூபா டிஜிட்டல் அமைச்சு மீண்டுவரும் செலவு- 6.7 பில்லியன் ரூபா மூலதனச் செலவு – 6.8 பில்லியன் ரூபா பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு மீண்டுவரும் செலவு- 159 பில்லியன் ரூபா மூலதனச் செலவு – 16 பில்லியன் ரூபா தொழிலாளர் அமைச்சு மீண்டுவரும் செலவு- 4.3 பில்லியன் ரூபா மூலதனச் செலவு – 1.7 பில்லியன் ரூபா இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சு மீண்டுவரும் செலவு- 7.1 பில்லியன் ரூபா மூலதனச் செலவு – 5 பில்லியன் ரூபா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு மீண்டுவரும் செலவு- 2.8 பில்லியன் ரூபா மூலதனச் செலவு – 2.2 பில்லியன் ரூபா சிறப்பு செலவின அலகின் கீழ் பின்வரும் செலவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி – செயல்பாட்டு திட்டம் மீண்டுவரும் செலவு- 2.5 பில்லியன் ரூபா மூலதனச் செலவு – 345 பில்லியன் ரூபா – அபிவிருத்தி திட்டம் மீண்டுவரும் செலவு- 20 மில்லியன் மூலதனச் செலவு – 100 மில்லியன் பிரதமர் அலுவலகம் – செயல்பாட்டு திட்டம் மீண்டுவரும் செலவு- 1 பில்லியன் ரூபா மூலதனச் செலவு – 71 பில்லியன் ரூபா உயர் நீதிமன்ற நீதியரசர்கள் மீண்டுவரும் செலவு- 451 மில்லியன் மூலதனச் செலவு – 30 மில்லியன் அமைச்சரவை அலுவலகம் – செயல்பாட்டு திட்டம் மீண்டுவரும் செலவு- 205 மில்லியன் மூலதனச் செலவு – 25 மில்லியன் என்ற அடிப்படையில் நிதி ஒதுக்கீடுகள் இடம்பெற்றுள்ளன. சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு பெப்ரவரி 17 ஆம் திகதி இடம்பெற்றும். இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் பெப்ரவரி 18 ஆம் திகதி முதல் பெப்ரவரி 25 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், இரண்டாம் வாசிப்பு வாக்கெடுப்பும் பெப்ரவரி 25 ஆம் திகதி இடம்பெறும். பெப்ரவரி 27 ஆம் திகதி முதல் மார்ச் 21 ஆம் திகதிவரை சட்டமூலம் மீதான குழுநிலை விவாதம் இடம்பெற்று மார்ச் 21ஆம் திகதி மூன்றாம் வாசிப்புடன் சட்டமூலம் நிறைவேற்றப்படும். http://www.samakalam.com/2025ஆம்-ஆண்டில்-அரசின்-செலவு-46/
-
ரணில் – சஜித்தை இணைக்க முயற்சி!
ரணில் – சஜித்தை இணைக்க முயற்சி! எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை ஒன்றிணைக்கும் பொறுப்பை முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தானாக முன்வந்து ஏற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிட வேண்டும் என்று பல தரப்பினர் விடுத்த கோரிக்கைகளை பரிசீலித்த பின்னரே ராஜித சேனாரத்ன இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் குறித்து அரசியல் மேடையில் பேச்சுக்கள் இடம்பெற்று வரும் நிலையில், உள்ளூராட்சி சபைகளுக்கான சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலம் இன்று (9) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி, அரசியல் கட்சிகள் இந்த விடயம் தொடர்பாக விவாதங்களைத் தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், கடந்த தேர்தல்களில் முக்கிய அரசியல் கட்சிகள் பெற்ற பின்னடைவுகளைக் கருத்தில் கொண்டு, சில கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சியின் ‘யானை’ சின்னத்தில் எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிட வேண்டும் என்று கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், முந்தைய தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியை விட ஐக்கிய மக்கள் சக்தி முன்னிலையில் இருந்ததால், மேலும் சில தரப்பினர், சஜித் பிரேமதாசவின் தலைமையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கூறியுள்ளனர். http://www.samakalam.com/ரணில்-சஜித்தை-இணைக்க-முய/
-
பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவராக சாணக்கியன் தெரிவு
பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவராக சாணக்கியன் தெரிவு திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர்களாக பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோர் தெரிவு ஒன்றியத்தின் அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண தெரிவு பிரதி இணைத் தலைவர்கள் நால்வர். பத்தாவது பாராளுமன்றத்தில் மீண்டும் ஸ்தாபிக்கப்பட்ட திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் முதலாவது கூட்டம் 08 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இந்த ஒன்றியத்தின் இணைத் தலைவர்களாக அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இதன்போது ஒன்றியத்தின் இணைத் தலைவராக அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேனவின் பெயரை, பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜனக சேனாரத்ன முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பாக்ய ஸ்ரீ ஹேரத் அதனை வழிமொழிந்தார். பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் அவர்களின் பெயரை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிந்ததுடன், அதனை பாராளுமன்ற உறுப்பினர் நலீன் பண்டார வழிமொழிந்தார். அத்துடன், இந்த ஒன்றியத்தின் அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண தெரிவு செய்யப்பட்டதுடன், பிரதி இணைத் தலைவர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே, சந்தன சூரியஆரச்சி, கௌரவ எஸ். எம். மரிக்கார் மற்றும் சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இங்கு உரையாற்றிய ஒன்றியத்தின் இணைத் தலைவர்கள், பாராளுமன்றத்தை பொதுமக்களுக்கு நெருக்கமடையச் செய்வதற்கு இந்த ஒன்றியத்தின் மூலம் மேற்கொள்ளக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக தெரிவித்தனர். அதற்காக அனைவரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக அவர்கள் தெரிவித்தனர். http://www.samakalam.com/பாராளுமன்ற-ஒன்றியத்தின்/
-
அரிசியின் விலையை கூட்டுறவு தீர்மானிக்க வேண்டும் - கலாநிதி அகிலன் கதிர்காமர்
அரிசியின் விலையை கூட்டுறவு தீர்மானிக்க வேண்டும் adminJanuary 10, 2025 “அரிசியின் சந்தை விலையை தீர்மானிக்கும் சக்தியாக கூட்டுறவு மாற வேண்டும்” என வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் தலைவர் கலாநிதி அகிலன் கதிர்காமர் தெரிவித்துள்ளார். கைதடி ஐக்கிய மகளிர் சங்க ஏற்பாட்டில் கடந்த வாரம் கைதடி சைவ ஐக்கிய சங்க மண்டபத்தில் “அரிசி அரசியலும் அதனை எதிர்கொள்வதில் கூட்டுறவின் வகிபாகமும்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. அதில் வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் தலைவர் கலாநிதி அகிலன் கதிர்காமர் மற்றும் வடகிழக்கு மாகாண விவசாய மேம்பாட்டு கழக உறுப்பினர் தனபாலசிங்கம் துளசிராம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். அதன் போது, அரிசியின் அரசியலை பற்றி விளக்கி கலாநிதி அகிலன் கதிர்காமர் உரையாற்றும் போது, 1953ம் ஆண்டு அரிசியின் விலையை சடுதியாக அரசாங்கம் அதிகரித்ததால் பெரும் ஹர்த்தால் வெடித்தது. இதனால் அன்றைய சட்ட சபை பிரித்தானிய போர் கப்பலில் சந்தித்ததுடன் பின்னர் நடந்த தேர்தலில் அக்கட்சி தோற்றது அவ்வாறான போராட்டத்தால் 25% அரிசியில் தன்னிறைவடைந்திருந்த இலங்கை சில தசாப்த்தங்களிலே 90% தன்னிறைவையடைந்திருந்தது இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி மத்தியில் அரிசியானது எமது உணவுப் பாதுக்கப்பிற்கு முக்கியமானதொன்றாகும். அரிசி நாட்டுக்கு போதுமான அளவு உற்பத்தியாகின்ற போதிலும் அதனை விநியோகிப்பதில் உள்ள பிரச்சினையால் மக்களுக்கு உரிய முறையில் சென்றடையாமல் உள்ளது. இந்த பின்னனியில் தான் கூட்டுறவு முக்கியமான சமூக நிறுவனமாக உள்ளது. கூட்டுறவால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் விஸ்திரப்டுத்துவதுடன் உணவு பாதுகாப்பிற்காக உணவு விநியோகம் செய்யும் பொது நிறுவனமாகவும் தொழிற்படும். கூட்டுறவால் அரிசியின் விலையை சந்தையில் தீர்மானிக்கும் சக்தியாகவும் மாறமுடியும் வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கி வரப்புயர கடன் மூலம் விவசாயிகளுடன் தொடர்பில் உள்ளது. 6 வருடத்திற்கு முதல் செய்த வடக்கில் உள்ள கூட்டுறவுகளின் அரிசி ஆலைகள் தொடர்பான ஆய்வுகளின் அக்னி இங்குள்ள 16 கூட்டுறவுகளின் அரிசி ஆலைகளும் முழு திறனில் இயங்குமானல் 10,000 மெற்றிக் தொன் நெல் அடிக்கலாம். அரசாங்கம் தேசிய உற்பத்தியில் 10% கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளது. இந்நிலையில் வடக்கில் கூட்டுறவும் இந்த பாதையில் இணைந்து கொள்வனவில் ஈடுபடவேண்டும் என மேலும் தெரிவித்தார். தொடர்ந்து பதிலுரையாற்றிய தனபாலசிங்கம் துளசிராம், உணவு பாதுகாப்புடன் தொடர்புபட்டுள்ள அரிசிக்கு அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கியுள்ள நிலையில் அதற்காக அனைத்து விவசாயிகளும் இந்த வாய்ப்பை பயண்படுத்தி் கூட்டுறவாக இனைந்து பணியாற்ற வேண்டும். கூட்டுறவு சங்களினுடாக விவசாயிகள் நெல்லை சந்தைபடுத்துவதன் மூலம் நியாயமான விலையில் நெல்லினை விற்பனை செய்ய முடியும். மேலும் பெரும் போகத்திற்கான அறுவடை இம்மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்க உள்ள நிலையில் அரசாங்கம் விரைவில் நெல்லிற்கான விலையை அறிவித்தல் பொருத்தமானது எனதெரிவித்தார். https://globaltamilnews.net/2025/210113/
-
தென்னன்மரபடி அக்கரைவெளி இணைப்பு வீதியை செப்பெனிட நடவடிக்கை
தென்னன்மரபடி அக்கரைவெளி இணைப்பு வீதியை செப்பெனிட நடவடிக்கை adminJanuary 10, 2025 முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் பிரதேசத்தின் தென்னமரபடி அக்கரைவெளி இணைப்பு வீதியை செப்பெனிடுவதற்காக நேற்றைய தினம் வியாழக்கிழமை முதல் கட்ட களப்பயணம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் UN-HABITAT நிறுவனத்தால் Adaptation Fund நிதி உதவியுடன் சுற்றாடல் அமைச்சு, மாவட்ட சமூகம் சார்ந்த அமைப்புகள் ஊடாக இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியுடன் காலநிலை மாற்றம் மற்றும் கால நிலை மாறுபாட்டை தாங்கும் தன்மை எனும் தலைப்பில் அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக நீண்ட காலமாக புரனமைக்காது காணப்படும் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் பிரதேசத்தின் தென்னமரபடி அக்கரைவெளி இணைப்பு வீதியை செப்பெனிடுவதற்காக முதல் கட்ட களப்பயணத்தை மாவட்ட செயலகப் பிரதிநிதிகள்,UN-HABITAT பிரதிநிதிகள், வன வள திணைக்கள பிரதிநிதிகள்,கமநல சேவை திணைக்கள பிரதிநிதிகள்,விவசாய போதனாசிரியர் கமக்கார அமைப்பு பிரதிநிதிகள், விவசாயிகள் ஆகியோர் இணைந்து மேற்கொண்டார்கள். இந்த களப்பயணத்தின் போது கலந்து கொண்ட விவசாயி கருத்து தெரிவிக்கையில் நீண்ட காலமாக புனரமைக்காது காணப்படும் இவ் வீதியை நம்பி 850 ஏக்கரில் நெல் செய்கை மேற்கொள்ளப்படுகிறது. இவ் வீதி சீராகும் பட்சத்தில் அதிக ஏக்கரில் பயிர் செய்யும் வாய்ப்பு உள்ளது. அத்துடன், இவ் வீதியை புனரமைப்பதால் 250 விவசாய குடும்பங்களின் வாழ்வு ஓளிமயமாகும் என தெரிவித்தார் https://globaltamilnews.net/2025/210108/
-
இங்கிவனை யான் பெறவே
பாரதச் சுருக்கத்தை படித்திருந்தாலும் ஆசான் ஜெயமோகனின் வெண்முரசு ஊடாகவே காவியத்தை புரிந்துகொள்ளமுடிகின்றது. இன்னும் முழுவதுமாகப் படித்து முடிக்க ஒரு வருடம் தேவை (ஐந்து ஆண்டுகளாகப் படிக்கின்றேன்!) இந்தக் கதை வெண்முரசு ஊடாக கர்ணனைப் பற்றி நான் அறிந்துகொண்டதை சுருக்கமாகத் தருவது கதையின் சிறப்பு. ஆனாலும் கர்ணன் எனும் பாத்திரத்தை சிவாஜியின் முகத்தைத் தாண்டி இன்னமும் பார்க்கமுடியவில்லை. அதுபோல கர்ணன் என்றாலே தளபதி பொட்டம்மான் எப்போதும் நினைவுக்கு வருவதையும் தவிர்க்கமுடிவதில்லை!
-
பொங்கல் ரிலீஸ்… ஜெயிக்கப் போவது யாரு?
பொங்கல் ரிலீஸ்… ஜெயிக்கப் போவது யாரு? SelvamJan 09, 2025 17:34PM பண்டிகைக் காலம் என்றாலே உணவு, உடை, இதர ஆடம்பரத் தேவைகள் நினைவுக்கு வருவதைப் போலவே பொழுதுபோக்கு அம்சங்களும் அவற்றின் பின்னே தொடர்வது காலம்காலமாக இருந்து வருகிறது. எந்தக் கொண்டாட்டம் என்றாலும், அதன் அடிப்படை பொழுதுபோக்கு அம்சம் தானே. அந்த வகையில், கடந்த எழுபதாண்டுகளுக்கும் மேலாக நம்மவர்களின் விருப்பங்களில் ஒன்றாக இருந்து வருபவை ‘புதிய திரைப்பட வெளியீடுகள்’. வரவிருக்கும் தைப்பொங்கல் திருநாளை ஒட்டித் தமிழில் சுமார் 5 படங்கள் வரவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அது போகச் சில படங்கள் ‘க்யூ’வில் நிற்கின்றன. அவற்றில் ரசிகர்களின் மனம் கவரப் போவது எந்தப் படம்? பார்க்கலாம்..! வணங்கான் நாச்சியார் படத்திற்குப் பிறகு பாலாவின் இயக்கத்தில் திரையைத் தொடுகிற படம் ‘வணங்கான்’. இதில் அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், மிஷ்கின், சமுத்திரக்கனி, ஜான் விஜய், ராதாரவி, சாயா தேவி, சண்முகராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆர்.பி.குருதேவ் இதற்கு ஒளிப்பதிவு செய்ய, பாடல்களுக்கு ஜி.வி.பிரகாஷும் பின்னணி இசையை சாம்.சி.எஸ்ஸும் அமைத்துள்ளனர். பாலா – அருண் விஜய் காம்பினேஷனில் உருவாகிற படம் என்பதே இதன் யுஎஸ்பி. அதனைத் தக்க வைக்கிற உள்ளடக்கம் இருந்தாலே இப்படத்தின் வெற்றி முக்கால்வாசி உறுதிப்படுத்தப்பட்டுவிடும். இந்த படம் நாளை வெளியாகிறது. மெட்ராஸ்காரன் பொங்கல் வெளியீட்டில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகிற படம், வாலி மோகன்தாஸின் ‘மெட்ராஸ்காரன்’. மலையாள நடிகர் ஷேன் நிகம் இதன் வழியே தமிழில் அறிமுகமாகிறார். கலையரசன், பாண்டியராஜன், நிகாரிகா, ஐஸ்வர்யா தத்தா, கீதா கைலாசம், கருணாஸ், சூப்பர் சுப்பராயன் உட்படப் பலர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இதற்கு இசையமைத்துள்ளார். ஆக்ஷன் ட்ராமா வகைமையில் கதை அமைந்துள்ளது என்பதைக் காட்டியது இப்பட ட்ரெய்லர். ‘ரங்கோலி’ எனும் கவனிக்கப்படாத, சிறந்த படமொன்றைத் தந்தவர் வாலி மோகன்தாஸ் என்பதால், இப்படம் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகமிருக்கிறது. நாளை இப்படம் வெளியாகிறது. மத கஜ ராஜா கிட்டத்தட்ட 13 ஆண்டு காலக் காத்திருப்புக்குப் பிறகு வெளியாகிறது ‘மத கஜ ராஜா’. இயக்குனர் சுந்தர்.சி – விஷால் கூட்டணியில் ஆம்பள, ஆக்ஷன் படங்களுக்கு முன்னதாக வந்திருக்க வேண்டிய படமிது. சந்தானத்தின் நகைச்சுவை, சோனு சூட்டின் வில்லத்தனம், அஞ்சலி மற்றும் வரலட்சுமியின் கவர்ச்சிகரமான திரை இருப்பு ஆகியவற்றோடு நல்லதொரு பொழுதுபோக்கு படமாக இது இருக்கும் என்கிறது படக்குழு. இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் விஜய் ஆண்டனி. மண்ணுக்குள் புதைத்துவைத்த ஒயின் போல இப்படமும் ருசிக்கலாம் என்று காத்திருக்கின்றனர் தீவிர மசாலா பட ரசிகர்கள். வரும் 12ஆம் தேதியன்று வெளியாகிறது ‘மத கஜ ராஜா’. காதலிக்க நேரமில்லை கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் நடித்துள்ள படம் ‘காதலிக்க நேரமில்லை’. இப்படத்தின் ட்ரெய்லர், இது ஒரு நகர்ப்புற காதல் கதை என்பதைக் காட்டியது. நிச்சயமாக இதில் நாயகன் நாயகியின் நடிப்பு பேசப்படும் என்பது புரிகிறது. மொத்தப்படமும் அதற்கேற்ற சுவாரஸ்யத்தைத் தரும் பட்சத்தில், இப்படம் சிறப்பானதொரு காதல் படைப்பாக மாறக்கூடும். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் ஏற்கனவே நம்மை ‘இழு.. இழு..’ என்று இழுத்து வருகின்றன. இப்படம் வரும் 14ஆம் தேதி பொங்கல் அன்று வெளியாகிறது. நேசிப்பாயா அறிந்தும் அறியாமலும், பட்டியல், பில்லா, ஆரம்பம் என்று வித்தியாசமான படங்களைத் தந்த விஷ்ணுவர்தனின் புதிய படைப்பு ‘நேசிப்பாயா’. இதில் அதர்வாவின் சகோதரர் ஆகாஷ் முரளி நாயகனாக அறிமுகமாகிறார். அவரது ஜோடியாக நடித்திருக்கிறார் அதிதி ஷங்கர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சரத்குமார், குஷ்பூ, ராஜா, கல்கி கொச்லின், விக்ரம் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.ன்ரொமான்ஸ் ஆக்ஷன் த்ரில்லர் வகைமையில் இப்படம் அமைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. கண்ணைக் கவரும் காட்சியமைப்புடன் நல்லதொரு கதை சொல்லலும் இருக்கும்பட்சத்தில் இப்படம் வெற்றியைச் சுவைக்கலாம். இதுவும் வரும் 14ஆம் தேதியன்று வெளியாகிறது. இந்த ஐந்து படங்கள் தவிர்த்து கிஷன் தாஸின் தருணம், சண்முக பாண்டியனின் படைத்தலைவன், சிபிராஜின் டென் ஹவர்ஸ் ஆகியனவும் இந்த ரேஸில் இருப்பதாகக் கூறப்படுகிறது. தெலுங்கில் சங்கராந்தியையொட்டி கேம்சேஞ்சர், டாகு மகராஜ், சங்கராந்திக்கு வஸ்துனாம் ஆகிய மூன்று படங்கள் வெளியாகின்றன. ஷங்கர் – ராம்சரண் கூட்டணியின் ‘கேம் சேஞ்சர்’ நாளை வெளியாகிறது. இது தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. ஊழலை எதிர்த்த தந்தையின் கனவை நிறைவேற்ற, தேர்தல் ஆணையத்தில் பதவி வகிக்கும் ஒரு இளம் ஐஏஎஸ் அதிகாரியின் செயல்பாடுகளை மையப்படுத்தி இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது. பாலகிருஷ்ணா – இயக்குனர் பாபி கொல்லி கூட்டணியின் ‘டாகு மகராஜ்’, ஒரு பள்ளத்தாக்கு பகுதியில் கொடிகட்டிப் பறக்கும் கொள்ளைக்காரர் ஒருவரின் அறியப்படாத பக்கமொன்றைக் காட்டுகிறது. இது வரும் 12ஆம் தேதியன்று வெளியாகிறது. ’பகவந்த் கேசரி’ எனும் வெற்றிப்படைப்பைத் தந்த இயக்குனர் அனில் ரவிபுடி, வெங்கடேஷ் உடன் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் ‘சங்கராந்திக்கு வஸ்துனாம்’. முன்னாள் காதலி உதவி கேட்டார் என்பதற்காக, ஒரு கடத்தல் வழக்கில் துப்பு துலக்க மனைவியோடு விசாரணை மேற்கொள்ளும் ஒரு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியின் திருவிளையாடல்களைச் சொல்கிறது இப்படம். ’தி கோட்’ நாயகி மீனாட்சி சவுத்ரியோடு ஐஸ்வர்யா ராஜேஷ் மல்லுக்கட்டுகிற காட்சிகளே இப்படத்தின் யுஎஸ்பி. அதனால், குடும்பமாக தியேட்டருக்கு வருபவர்களுக்கு இப்படம் கொண்டாட்டம் தரும் என்று நம்பலாம். இப்படம் வரும் 14ஆம் தேதியன்று வெளியாகிறது. இது போக ரேகாசித்ரம் எனும் மிஸ்டரி த்ரில்லர், என்னு ஸ்வந்தம் புண்யாளன் எனும் காமெடி த்ரில்லர் படங்கள் மலையாளத்தில் இந்த வாரம் வெளியாகின்றன. இந்தியில் சோனு சூட் இயக்கி நாயகனாகக் களமிறங்கும் ‘பதேஹ்’ இந்த வாரம் வெளியாகிறது. இது வன்முறையைக் கொட்டித் தீர்க்கும் ஒரு ‘ஹார்டுகோர்’ ஆக்ஷன் படம். இது போக ‘மேட்ச் பிக்சிங்’ எனும் படமும் வெளியாகிறது. இது போக கன்னடம் உட்பட இதர மொழிகளில் வெளியாகும் சில படங்களும் பெருநகர மல்டிப்ளெக்ஸ்களை நிறைக்கவிருக்கின்றன. இவற்றில் பல படங்கள் ஓடிடி தளங்களை வந்தடையும்போது, நிச்சயமாகத் தமிழிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடப்படும். ஆக, இந்த வாரம் அவை பெறுகிற வெற்றியே அதனைத் தீர்மானிக்கும். தமிழில் மெட்ராஸ்காரன், காதலிக்க நேரமில்லை, மலையாளத்தில் என்னு ஸ்வந்தம் புண்யாளன், தெலுங்கில் டாகு மகராஜ், சங்கராந்திக்கு வஸ்துனாம், கேம் சேஞ்சர், இந்தியில் பதேஹ் படங்கள் முதன்மையான கவனத்தைப் பெறும் என்பது எதிர்பார்ப்பு. கடைசி நேர மாற்றங்களும் கள நிலவரங்களும் இதனைத் தலைகீழாக்கலாம். வெற்றி எந்தப் படக்குழுவினருக்கு என்பது அடுத்த வாரம் இந்நேரம் தெரிந்துவிடும்..! https://minnambalam.com/cinema/2025-pongal-movie-release-who-will-win/
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
அடுத்ததாக Elon Musk செந்தமிழன் சீமானுக்கு ஆதரவு தருவார்😂 அண்ணாமலை இனித்தான் பெரியாரின் புத்தகங்களைப் படிக்கப்போகின்றார்! அதுவும் நல்லதுதான்🤣
-
இங்கிவனை யான் பெறவே
இங்கிவனை யான் பெறவே ஆர் வி சுப்பிரமணியன் கர்ணனின் உடல் ஆறு நாழிகையாகக் காத்துக் கொண்டிருந்தது. துச்சாதனனுக்கு கொள்ளி வைத்துவிட்டு அதற்குப் பிறகுதான் துரியோதனன் கர்ணனின் சிதைக்கு வந்திருந்தான். சிதைக்கருகே வந்ததும் அவன் சரிந்து தரையில் உட்கார்ந்தான். அவன் நோக்கு எங்கேயோ வெற்றிடத்தில் நிலைத்திருந்தது. 17 நாட்களில் எத்தனையோ உடல்கள் எரிக்கப்பட்டதில் எலும்புகளின் சாம்பல் வெண்பூச்சாக தரை மேல் படிந்திருந்தது. இன்றைய சிதைகள் அணைந்து கொண்டிருந்தன. மெல்லிய சிவப்பொளியில் இடுகாடு வினோதக் காட்சியாகத்தான் இருந்தது. துரியோதனன் அணிந்திருந்த கறுப்பு உடை அந்த வெண்பூச்சு தரைக்கு பெரிய மாற்றாகத் தெரிந்தது. அவன் தலைமுடியில் அங்கங்கே கரி படிந்திருந்தாலும் அங்கங்கே மட்டும் நரைத்திருந்த அவன் தலை முடியில் அது தெரியவே இல்லை. கருநிற ஆடை சில இடங்களில் பொசுங்கிப் போய் அவன் வெண்ணிற உடல் சிதைகளின் ஒளியில் பளிச்சிட்டது. அறிவிப்பு எதுவும் இல்லாவிட்டாலும் துரியோதனன்தான் சிதைக்கு தீ மூட்டப் போகிறான், விருஷகேது அஸ்தினாபுரத்திலிருந்து வரப் போவதில்லை என்பது எல்லாருக்கும் தெரிந்திருந்தது. ஆனால் எல்லா ஏற்பாடுகளும் முடிந்த பின்னும் துரியோதனன் தீ வைக்க எழவில்லை. இரண்டு நாழிகை காத்திருந்த பின்னர் சகுனி அருகில் சென்று துரியோதனனின் தோளில் கை வைத்து ஏதோ சொல்ல முற்பட்டார். துரியோதனன் கீழ் ஸ்தாயியில் உறுமினான். சகுனி கைகளை விலக்கிக் கொண்டு பின்வாங்கிவிட்டார். போருக்கு முன்னரே இடுகாட்டில் சேகரிக்கப்பட்டிருந்த சந்தனக் கட்டைகள் எப்போதோ தீர்ந்துவிட்டிருந்தன. அரச குடும்பத்தினருக்கு மட்டுமே சந்தனக் கட்டைகள் என்று விதி வகுத்தும் தேவையான சந்தனக் கட்டைகள் இல்லை. இரண்டு நாளாக நெய்யும் தீர்ந்துவிட்டிருந்தது. இன்று இடுகாட்டில் உடைந்த தேர்த்தட்டுகளும், சக்கரங்களும்தான் விறகாகப் பயன்படுத்தப்பட்டிருந்தன. விழுந்திருந்த யானை, குதிரைகளின் உடல் கொழுப்புதான் நெய்யாகப் பயன்படுத்தப்பட்டிருந்தது. அதனால் துர்நாற்றம் ஏற்பட்டிருந்தது, ஆனால் சில நிமிஷங்களில் பழகிவிட்டதால் அதை யாரும் உணரக் கூட இல்லை. நேரம் சென்று கொண்டே இருந்தது. சுபாகு சகுனியிடம் “நீங்கள் இன்னொரு தடவை சொல்லிப் பாருங்கள்” என்று மெதுவாகச் சொன்னான். சகுனி பெருமூச்செறிந்தார். “இல்லை, அவனை அவன் போக்கில் விட்டுவிடுவோம். துச்சாதனனின் இறப்பைக் கூட ஏற்றுக் கொண்டுவிட்டான், ஆனால் அவனால் கர்ணன் இனி இல்லை என்பதை ஏற்க முடியவில்லை. எப்போது அவன் மனதில் அது பதிகிறதோ அப்போது தீ வைக்கட்டும். அவனைத் தனிமையில் விடுவோம், நாம் கிளம்புவோம்” என்று சொன்னார். மரத்தின் மீது சாய்ந்து கொண்டிருந்த அஸ்வத்தாமன் கிருபரை லேசாக உலுக்கினான். நின்ற நிலையிலேயே கண்ணயர்ந்துவிட்ட கிருபர் சிறு அதிர்ச்சியோடு விழித்துக் கொண்டார். “அரசரை அவர் போக்கில் விட்டுவிடுவோம், பாசறைக்குச் செல்வோம் என்கிறார் காந்தாரர்” என்று அவன் முணுமுணுப்பான குரலில் சொன்னதும் கிருபர் தலை அசைத்தார். அனைவரும் சத்தம் வராமல் பின்வாங்கி பாசறை பக்கம் நடந்தனர். துரியோதனனின் மனம் வெறுமையில் ஆழ்ந்திருந்தது. சுற்றிலும் இருந்தவர்கள் சென்றது அவனுக்குத் தெரியவும் தெரிந்தது, அதே நேரத்தில் தெரியவும் இல்லை. அவன் மனதின் ஒரு சரடு உடன் பிறந்தவனும், தனது நிழலானவனுமான துச்சாதனன் மறைவு கூட தனக்கு இத்தனை பெரிய காயத்தை ஏற்படுத்தவில்லை என்பதை உணர்ந்து வியந்தது. திடீரென்று அவன் கண்களில் கண்ணீர் வடிய ஆரம்பித்தது. இரண்டு நிமிஷம் கழித்து பெரிய குரலெடுத்து அழுதான். அழ ஆரம்பித்ததும் சுற்றுமுற்றும் ஒரு முறை பார்த்தான். யாரும் இல்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டதும் இன்னும் பெரிய குரலெடுத்து விம்மினான். “துச்சா! “ என்று அலறினான். நெஞ்சில் அடித்துக் கொண்டான். தாவி எழுந்தான். கர்ணனின் சிதை அருகே சென்று கர்ணனின் கைகளை எடுத்து தன் கண்ணோடு ஒற்றிக் கொண்டு அழுதான். “சுயோதனா!” என்று துயர் ததும்பிய ஒரு பெண் குரல் கேட்டது. தீயை மிதித்தது போல துரியோதனன் அதிர்ந்து திரும்பினான். புதர் மறைவிலிருந்து குந்தியும் யுதிஷ்டிரனும் வெளிப்பட்டனர். துரியோதனன் இன்னும் பெருங்குரலெடுத்து அழுதான். “அன்னையே!” என்று அலறியபடியே குந்தியை அணைத்துக் கொண்டான். அடிபட்ட காட்டு மிருகம் போல கதறினான். குந்தி அவன் மார்பளவுதான் உயரம், அவன் அணைப்பில் மூச்சுத் திணறினாள். யுதிஷ்டிரன் அவன் முதுகைத் தட்டிக் கொடுத்தான். “தருமா!” என்று அழுதபடியே திரும்பி அவனையும் தழுவிக் கொண்டான். “யுதிஷ்டிரா, ஏன் வஞ்சமும் போட்டி மனப்பான்மையும் ஆணவமும் அகங்காரமும் உள்ள க்ஷத்ரியராகப் பிறந்தோம்? வேடனாக, மீனவனாக, இடையனாக, குதிரைச் சூதனாக பிறந்திருந்தால் நூற்றைவரும் எத்தனை மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்கலாம்? அடுத்த ஜன்மம் என்று ஒன்று இருந்தால்…” என்று துரியோதனன் விம்மினான். தருமன் ஒன்றும் பேசவில்லை. வெறுமனே துரியோதனன் கைகளைப் பிடித்துக் கொண்டான். குந்தி துரியோதனன் முதுகை நீவிக் கொடுத்தாள். “குதிரைச் சூதனாகப் பிறந்த இவனையும் நான் நிம்மதியாக வாழவிடவில்லை, அவனையும் அரசனாக்கி இந்த க்ஷத்ரிய நரகத்தில் ஆழ்த்திவிட்டேன்!” என்று துரியோதனன் விசும்பினான். மெதுமெதுவாக துரியோதனனின் மார்பு குலுங்குவது அடங்கியது. மீண்டும் தரையில் சரிந்து உட்கார்ந்தான். யுதிஷ்டிரனின் கைகளைப் பிடித்துக் கொண்டான். தழுதழுத்த குரலில் “உனக்கு ஆயிரம் கொடுமை இழைத்த எனக்கு ஆறுதல் சொல்ல வந்திருக்கிறாய், உன் பெருந்தன்மை யாருக்கு வரும்! துஷ்யந்தனும் பரதனும் யயாதியும் ஹஸ்தியும் குருவும் அல்ல, நீயே குரு வம்சத்து அரசர்களில் அறச்செல்வன்!” என்று துரியோதனன் மேலும் அழுதான். “நான் அத்தனை உத்தமன் அல்லன்” என்று யுதிஷ்டிரன் முனகினான். குந்தி பேச வாயெடுத்தாள்.அவளுக்கு வார்த்தை திக்கியது. மீண்டும் மீண்டும் அவள் தொண்டை ஏறி இறங்கியது. இப்படியே சில நிமிஷங்கள் போனதும் அவள் யுதிஷ்டிரன் பக்கம் பார்வையைத் திருப்பினாள். யுதிஷ்டிரன் இரண்டு கட்டை விரலும் ஒன்றாக சேர்த்து கட்டப்பட்டிருந்த கர்ணனின் பாதங்களையே நோக்கிக் கொண்டிருந்தான். அவனுக்கு அவை குந்தியின் பாதங்கள் போலவே தோற்றம் அளித்தன. அவன் பார்த்த வரையில் கர்ணன், குந்தி இருவருக்கும்தான் பாதத்தின் இரண்டாவது, மூன்றாவது விரல்கள் கட்டை விரலை விட நீண்டவை. திடீரென்று குந்தி தெளிவான, உறுதியான குரலில் “கர்ணன் என் மைந்தன், அவனே நூற்றைவருக்கும் மூத்தவன், அஸ்தினபுரி அரியணை அவனுடையது” என்றாள். களைப்பால் மூடி இருந்த துரியோதனன் விழிகள் சட்டென்று திறந்தன. குதித்து எழுந்தவன் கால் தடுமாறி கீழே விழப் போனான். தருமன் அவனைப் பிடித்துக் கொண்டான். “உன் சிறிய தந்தையை மணம் புரிவதற்கு முன்பே அவனைப் பெற்றேன். பழி அச்சத்தால் அவனை கைவிட்டேன். அவனை என் மகன், அஸ்தினபுரியின் வாரிசு என்று சொல்ல எனக்கு வாய்ப்புகள் இருந்தன, ஆனால் என் தயக்கங்களால் நான் அவற்றை நான் கை தவறவிட்டேன். இந்தப் போருக்கு முன் அவனிடம் உண்மையைச் சொன்னேன், மூத்த பாண்டவனாக அரியணை ஏறும்படி கேட்டேன். கொடை வள்ளல் இரவலனை மறுத்த ஒரே தருணம் அதுதான், துரியோதனனுக்காக மட்டுமே போரிடுவேன் என்று என்னை மறுத்துவிட்டான்” என்று குந்தி தொடர்ந்தாள். துரியோதனனின் மார்பு விம்மி விரிந்தது. “எனக்காக குருதி உறவையும் துறந்தானா?” என்று மெல்லிய குரலில் முனகினான். குந்தியின் குரல் தாழ்ந்தது. “அவனும் என்னிடம் ஒரு வரம் கேட்டான். அவன் இறந்தால் அவன் என் மகன் என்பதை ஊரறியச் சொல்ல வேண்டும், யுதிஷ்டிரன் அவனுக்கு நீர்க்கடன் செய்ய வேண்டும்” என்றாள். துரியோதனனின் மனம் குந்தியின் முந்தைய சொற்களிலேயே சுழன்றுகொண்டிருந்தது. “ஒரு தாய் மக்கள் என்று அறிந்திருந்தும் என் பக்கமே நிலை மாறாது நின்றானா? அட என் சொந்தச் சகோதரன் யுயுத்ஸு கூட எனக்கு எதிராக போரிடுகிறானே!” என்றான் “விசுவாசத்துக்கு, நட்புக்கு இலக்கணம் இவன்தான்! வரலாறு என்னைப் பற்றி நல்லபடியாக ஏதாவது சொல்லும் என்றால் அது நான் கர்ணனின் நண்பன் என்பது மட்டும்தான்” என்று துரியோதனன் சிரித்தான். சில நிமிஷங்கள் முன் வரை துக்கத்தில் முழுகி இருந்த துரியோதனனா இவன் என்று யுதிஷ்டிரன் வியந்துகொண்டான். “நாங்கள் இருவரும் தனியாக இருக்கும்போது அவனை கிண்டல் செய்வேன், உனக்கு அர்ஜுனனின் மூக்கு, யார் கண்டது அர்ஜுனனின் தந்தைதான் உனக்கும் குருதித் தந்தையோ என்னவோ, உன் தாய் உன்னை ஆற்றிலே விட்டுவிட்டாள், அர்ஜுனனின் தாய் அவனை முழுமையாக ஏற்றிருக்கிறாள் என்பேன். அவன் எனக்கு அர்ஜுனன் மூக்கு அல்ல, அர்ஜுனனுக்குத்தான் என் மூக்கு என்று சொல்லிச் சிரிப்பான். ஒரே தந்தை அல்ல, ஒரே தாய்!” குந்தி விம்மினாள். “நான் பீஷ்மரையும் துரோணரையும் என்றும் அஞ்சியதில்லை. அவர்கள் என் மைந்தரை வெல்லலாம், ஆனால் ஒரு நாளும் அவர்கள் கையால் என் மைந்தருக்கு இறப்பில்லை. நான் எப்போதும் அஞ்சியது கர்ணன் ஒருவனைத்தான். உண்மை தெரிந்தால் அவனையும் அஞ்ச வேண்டி இருக்காது என்று நினைத்தேன், ஆனால் உங்களுக்கு ஆறு மைந்தர் எப்போதுமில்லை, ஐந்து மட்டும்தான் என்பதுதான் உங்கள் ஊழ் என்று சொல்லிவிட்டான்” துரியோதனன் திரும்பினான். “இன்னும் என்ன ஒளிவு மறைவு? வாருங்கள்” என்று அழைத்தான். பீமனின் பேருருவம் முதலில் வெளிப்பட்டது. சீரான காலடிகளோடு அவன் முன்னால் வர, மற்ற மூவரும் தயக்கத்துடன் அவனைப் பின் தொடர்ந்து வந்தனர். அவர்கள் பின்னால் வந்த திரௌபதியின் கூந்தலில் அங்கங்கே சிவப்பு நிறம் திட்டுதிட்டாகத் தெரிந்தது. கடைசியாக சிறிதும் மாசில்லாத உடையுடனும் மயில் பீலியுடனும் கிருஷ்ணனும் வந்தான். பீமனின் கண்களில் கேள்வி தெரிந்தது. துரியோதனன் தன் மூக்கின் அடியில் விரல்களை சுழற்றிக் கொண்டான். “உண்மை, நீ காட்டு விலங்குதான், உன் ஓங்கிய உடலையும் உன்னால் புலி மறைந்திருப்பது போல மறைத்துக் கொள்ள முடியும்தான். ஆனால் இடுகாட்டிலும் உன் உடலிலிருந்து வரும் நிண நாற்றம் தனியாக தெரிகிறது பீமா!“ என்று துரியோதனன் சொன்னான். பீமன் புன்னகைத்தான். “என்னடா இது வெறும் தசை மலையான உன்னிடம் விற்போரில் எப்படி பதினான்காம் நாள் தோற்றான் என்று வியந்து கொண்டிருந்தேன், இன்றுதான் புரிகிறது, அவனுக்கும் தானாடாவிட்டாலும் தன் சதை ஆடிவிட்டது” என்று துரியோதனன் சிரித்தான். பீமன் புன்னகைப்பதை நிறுத்தவில்லை, ஆனால் அவன் கண்ணோரம் ஈரம் தெரிந்தது. “தம்பியர் உயிர் அவன் கொடுத்த கொடை! உன் உயிர் கூடத்தான் பார்த்தா!” என்றான். அர்ஜுனன் தன் தலை முடியை சிலுப்பிக் கொண்டான். கண்ணன் அவன் காதருகே ஏதோ முணுமுணுத்தான். “ஆம் எனக்கு இப்போதுதான் எல்லாம் புரிகிறது. என் தோழனின் வள்ளன்மையைப் பற்றி உனக்கு ஏதாவது ஐயம் இருந்தால் உன் தோழனிடம் கேட்டுக் கொள்! அவன் நினைத்திருந்தால் போருக்கு வந்த முதல் நாளே உன்னைத் தேடி வந்து போரிட்டிருக்கலாம், சக்தி ஆயுதம் உன்னைக் கொன்றிருக்கும். ஒரு வேளை உன் சாரதி அன்று நீங்கள் நேருக்கு நேர் போரிடுவதைத் திறமையாகத் தவிர்த்திருந்தாலும், அடுத்த இரண்டு நாட்களில் அவன் சம்சப்தகனாக உன்னை எதிர்த்திருக்கலாம், இந்த மாயவனாலும் ஒன்றும் செய்திருக்க முடியாது. ஜயத்ரதனை நீ தேடி வந்தபோது உன் தமையன் உன்னைக் கொன்றிருக்கக் கூட வேண்டாம், உன்னோடு நேரடியாகப் போரிட்டிருந்தாலே போதும், உன்னால் அவனை மீறி ஜயத்ரதனை அணுகி இருக்க முடியாது, நீயே தீக்குளித்து இறந்திருப்பாய், உன் உயிர் அவன் போட்ட பிச்சை!” துரியோதனன் குரல் ஓங்கி ஒலித்து அடங்கியது. அவனுக்கு மூச்சிரைத்தது. பாண்டவர்களும் திரௌபதியும் குந்தியும் குனிந்த தலை நிமிரவில்லை. கண்ணன் மட்டுமே புன்னகை மாறாத முகத்தோடு துரியோதனை நேருக்கு நேர் பார்த்தான். துரியோதனனின் முகம் பிரகாசித்தது. அவனது நெஞ்சுக் கூடு மேலும் விம்மி விரிந்தது. அவனது ஒரு மயிர்க்காலிலும் மகிழ்ச்சியும் பெருமிதமும் சுடர் விட்டன. “இவனும் பீஷ்மரும் துரோணரும் இருந்தும் தோற்கிறோமே என்று என் மனதில் இருந்த உறுத்தல் இப்போதுதான் தீர்ந்தது. என் தோழன் போட்ட பிச்சைதானா உங்கள் வெற்றி! இனி நீங்கள் வென்றால்தான் என்ன?!” என்று சிரித்துக் கொண்டான். நாலடி எடுத்து குந்தியின் அருகே சென்றான். குந்தியின் மோவாயில் கையைக் கொடுத்து அவள் முகத்தை நிமிர்த்தினான். “அது எப்படி அன்னையே? பிறந்ததும் அவனை ஆற்றில் விட்டீர்கள். அவனிடம் ஒரு வார்த்தை கருணையுடன் பேசியதில்லை. குதிரைச் சாணத்தின் நாற்றம் வீசுகிறது என்று இந்த பீமன் இழித்துரைக்கும்போது தமையன் என்று சொல்ல உங்கள் ஆசைகள் உங்களைத் தடுத்தன, சரி. ஆனால் இது முறைமை அல்ல, அவனை இழிவாகப் பேசாதே என்று பட்டும் படாமலும் அறிவுரைக்கக் கூட உங்களுக்கு மனம் வரவில்லையே! போர் உறுதியான பிறகு மட்டுமே புத்திரபாசம்! நீ மூத்தவன், அரியணை உனக்குத்தான் என்று ஆசை வேறு காட்டி இருக்கிறீர்கள்! இதோ இந்த பாஞ்சாலி உனக்கும் துணைவி ஆவாள் என்று கூட சொல்லி இருப்பீர்கள்! இதெல்லாம் இந்தக் மாயக்கண்ணனின் ஆலோசனையாகத்தான் இருக்கும், இருந்தாலும் உங்கள் நா கூசவில்லையா அன்னையே!” என்று மெல்லிய குரலில் கேட்டான். பீமன் மடிந்து தரையில் அமர்ந்தான். “என் தமையன்! அவனை, அவன் ஆற்றலை என்றும் பழித்திருக்கிறேன். பதிலுக்கு பதிலாகக் கூட உன் மேல் அடுப்புக்கரி வாசம் என்று அவன் சொன்னதில்லை” என்று அழுதான். குந்தியின் கண்ணிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வடிந்தது. துரியோதனன் புன்னகைத்தான். “அவன் கேட்டிருக்க மாட்டான், அவனுக்காக நான்தான் கேட்க வேண்டும். நீ என் மகன், உன் சகோதரர்களோடு போரிடாதே என்று அவனிடம் சொன்னீர்களே, ஏன் இந்தப் பார்த்தனிடம் கர்ணன் உங்கள் தமையன், அவனோடு போரிடாதே என்று சொல்லவில்லை? கர்ணன் தன் தம்பிகளுடன் போரிடுகிறான் என்பதை உணர வேண்டும், தம்பி ஆயிற்றே என்று அவன் வில் ஒரு கணமாவது தயங்கும், பார்த்தனுக்கு அப்படி எந்தத் தயக்கமும் இருக்கக் கூடாது, அவன் கர்ணனை இரக்கமில்லாமல் கொல்ல வேண்டும் என்பதுதானே உங்கள் திட்டம்?” குந்தியின் வாய் சிறிய வட்ட வடிவில் திறந்தது. அவள் அப்படியே ஸ்தம்பித்து நின்றாள். அவள் கண்ணீர் கூட நின்றுவிட்டது. துரியோதனன் சுற்றுமுற்றும் பார்த்தான். பீமனின் அருகே சென்று முழந்தாளிட்டான். “நீயும் நானும் அவனும் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாதவர்கள். பீமன் கௌரவனாக இருந்திருக்க வேண்டும் என்று அவன் அடிக்கடி சொல்லுவான், அவன் – நானும் – நெருக்கமாக உணர்ந்த எதிரி நீயே, என்றாவது நீ வீர சுவர்க்கம் போனால் உன்னை மெய் தழுவி வரவேற்கப் போகும் முதல் வீரன் அவனாகத்தான் இருப்பான். நாம் நம் வஞ்சங்களுக்கு அடிமையானோம், ஆனாலும் அவன் ஆசி – என் ஆசியும் – உனக்கு எப்போதும் உண்டு” என்று அவன் தலையைத் தொட்டான். பீமன் அவன் கையைப் பிடித்துக் கொண்டு விசும்பினான். துரியோதனன் எழுந்தான். கர்ணனின் உடலருகே சென்று அவன் வலது கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டான்.“செத்தும் கொடுக்கிறாய் கர்ணா! நானும் உன் பின்னால் தொடரத்தான் போகிறேன், ஆனால் உன் நண்பன் என்ற பெருமிதத்தோடு இறப்பேன். அற்பர்களால் உன்னை நேர்மையான போரில் வெல்ல முடியுமா என்ன?” என்று தழுதழுத்தான். பிறகு யுதிஷ்டிரன் பக்கம் திரும்பினான். “யுதிஷ்டிரா, அவனைத் திட்டமிட்டு கொன்ற உன் அன்னை இன்று வந்து கண்ணீர் வடிப்பது நீலித்தனம். நீங்களே அவனைக் கொன்றுவிட்டு கொள்ளியும் வைப்பீர்களா? அவனே வரமாகக் கேட்டிருந்தாலும் சரி, உனக்கு இவன் சிதைக்கு தீயூட்டும் தார்மீக உரிமை இல்லை. நீங்கள் போகலாம்” என்று திட்டவட்டமாக அறிவித்தான். பிறகு மீண்டும் திரும்பி கர்ணனின் உடலை நோக்கினான். இரண்டு நிமிஷத்தில் அவன் தோளில் ஒரு கை படிந்தது. நீளமான அழகிய கருமை நிற விரல்கள். எதுவுமே நடக்காத மாதிரி துரியோதனன் காட்டிக் கொள்ள விரும்பினாலும் அவன் உடல் இறுகியது. அவன் உதடுகள் அழுந்தின. “இல்லை கண்ணா, என் உறுதி மாறாது” என்றான். “கர்ணனின் உடலுக்கு யார் தீயூட்டுவது என்பது உன் முடிவு மட்டுமே. நானோ, அத்தையோ, யுதிஷ்டிரனோ அதைத் தீர்மானிக்க முடியாது. கர்ணனே தருமன்தான் தன் உடலுக்கு தீயூட்ட வேண்டும் என்று அத்தையிடம் வரம் கேட்டிருந்தாலும் அதையும் மாற்றும் உரிமை உனக்குண்டு” என்று மிருதுவான குரலில் துரியோதனனின் தோளை அழுத்திக் கொண்டே கண்ணன் சொன்னான். துரியோதனன் திரும்பி கண்ணனை கண்ணீருடன் பார்த்தான். “அவன் அபூர்வமாக இன்னொருவரிடம் ஒன்றைக் கேட்டிருக்கிறான், அதையும் அவனுக்கு மறுக்கிறேனே” என்றான். “வீர சொர்க்கத்திலிருந்து அவன் உன் முடிவை நிச்சயம் ஏற்றுக் கொள்வான், உனக்கு எந்த யோசனையும் வேண்டாம்” என்று கண்ணன் புன்னகையோடு சொன்னான். “இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்!” என்று துரியோதனன் மிருதுவான குரலில் புலம்பினான். கண்ணன் அவனை அணைத்துக் கொண்டான். யுதிஷ்டிரனுக்கு கண் காட்டினான். அவர்கள் மெதுவாக இடுகாட்டை விட்டு விலகத் தொடங்கினர். கண்ணனும் தன்னை விடுவித்துக் கொண்டு அவர்களைத் தொடர்ந்தான். அவனுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த நகுலனிடம் “இது பெரும் துக்கம். ஒரே நாளில் துச்சாதனனும் இவனும் இறந்திருக்கக் கூடாது” என்று சொன்னான். துச்சாதனனின் பேரைக் கேட்டதும் துரியோதனனின் முகம் இறுகியது. அவன் தாவி கண்ணனின் வலது கையைப் பிடித்தான். கண்ணன் திரும்பி தன் கண்களாலேயே என்ன என்று வினவினான். துரியோதனன் பதில் எதுவும் சொல்லவில்லை. அவன் மனதில் ஏதோ தீவிர சிந்தனைகள் ஓடுவது தெளிவாகத் தெரிந்தது. பாண்டவர்கள் காத்து நின்றனர். ஒரு நிமிஷம் கூட சென்றிராது, ஆனால் அது ஒரு யுகமாகத் தெரிந்தது. துரியோதனன் “அடப்பாவி” என்று முனகினான். மீண்டும் மௌனமானான். கண்ணனைத் தவிர்த்த மற்றவர்கள் ஒன்றும் புரியாமல் திகைத்து நின்றனர். மேலும் இரண்டு நிமிஷம் கழித்து வலுத்த குரலில் “துரோகி!” என்று உறுமினான். அருகே இருந்த நெய்ப்பந்தத்தை எடுத்து யுதிஷ்டிரனை நோக்கி எறிந்தான். பீமன் பாய்ந்து அது தருமன் மீது படாமல் பிடித்துக் கொண்டான். “அவன் என் தோழன் அல்லன், உங்கள் தமையன் மட்டுமே!” என்று கத்தியபடியே தன் நெஞ்சில் மாறி மாறி அறைந்து கொண்டான். “தன் தம்பியரின் உயிரைக் காக்க என் தம்பியரை, ஏன் என்னையே பலி கொடுத்துவிட்டான்!” சிங்கத்தைப் போல உறுமிக் கொண்டே அருகில் இருந்த அடிமரத்தை உதைத்தான். மரம் ஆடி மீண்டும் நிலை கொண்டது. “நான் இவனைத்தான் முழு மனதாக நம்பினேன், பீஷ்மரையும் துரோணரையும் நம்பி போர் தொடுக்கவில்லை. வாழ்நாள் முழுவதும் தன்னை நிராகரித்த அன்னை ஒரு வார்த்தை சொன்னதும் மற்ற நால்வரையும் கொல்லேன் – அதுவும் என்னைக் கொல்லப் போவதாக சூளுரைத்திருக்கும் இந்த பீமனையும் கொல்லேன் – என்று வாக்களித்திருக்கிறான். அர்ஜுனனைக் கொல்லக் கிடைத்த வாய்ப்புகளையும் அவன் வேண்டுமென்றேதான் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அன்னை என்று தெரிந்த அன்றே பாண்டவர் வெல்ல வேண்டும், நான் தோற்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறான், தன் மேல் பழி வரக்கூடாது என்பதற்காக தன் உயிரைக் கொடுத்திருக்கிறான். பீமனிடமிருந்து இவனைக் காக்க எத்தனை தம்பியர் அன்று ஒரே நாளில் உயிர் இழந்தனர்? அடப்பாவி! இதுதானா உன் செஞ்சோற்றுக்கடன்? குதிரைச் சாணம் பொறுக்க வேண்டிய உன்னை அரசனாக்கி தோழன் என்று மார்போடு அணைத்து கொண்ட எனக்கு நீ காட்டிய விசுவாசம் இதுதானா? சுப்ரியையை சேடியாக அல்ல, சகோதரியாகவே கருதினாளே பானு! உங்கள இருவருக்கும் எத்தனை விமரிசையாக திருமணம் செய்து வைத்தாள்? அவளுக்கும் துரோகமா? உன்னை நம்பி மோசம் போனேனே! துச்சா! துச்சா!” என்று அலறினான். “அய்யோ! அய்யோ!” என்று தலையில் அடித்துக் கொண்டான். ஓநாய் போல ஊளையிட்டான். சகதேவன் தவிர்த்த மற்ற பாண்டவர்களும் குந்தியும் திகைத்து நின்றனர். யாருக்கும் வார்த்தையே எழவில்லை. கிருஷ்ணன் தனது வழக்கமான புன்னகையோடு நின்றிருந்தான். சகதேவன் மட்டும் முன்னகர்ந்து துரியோதனனை அணைத்துக் கொண்டான். துரியோதனன் சகதேவன் தோளில் சாய்ந்து அழுதான். சகதேவன் துரியோதனனின் தலை முடியைக் கோதினான். “உங்கள் துக்கம் எங்களுக்கும் உண்டு அண்ணா! என்ன செய்வது, இவை அனைத்தும் சூதாட்டத்தின்போதே முடிவாகிவிட்டது. ஆனால் இரண்டு பக்கத்திலும் அடி மனதில் இன்னும் பாசம் வற்றவில்லை. இரண்டாமவரின் ரத்தத்தை தலையில் பூசிக் கொண்டபோது பாஞ்சாலியும் கண்ணீர் உகுத்தாள் என்பது உங்களுக்கு வியப்பளிக்கலாம், ஆனால் உண்மை” என்றான். துரியோதனன் நிமிர்ந்து திரௌபதியைப் பார்த்தான். பெருங்குரலெடுத்து அழுதான். “உயிர் நண்பன் என்று நம்பியவன் துரோகம் செய்துவிட்டான். நான் இழிவுபடுத்திய எதிரிகள் என் மீது பாசம் காட்டுகிறீர்கள்” என்று விக்கிக் கொண்டே சொன்னான். தருமன் தன் கச்சையிலிருந்து ஒரு மதுக் குப்பியை எடுத்து நீட்டினான். துரியோதனன் விம்மிக் கொண்டே இரண்டு மிடறு மதுவை அருந்தினான். மது அவன் வாயோரம் கொஞ்சம் வழிந்தது. பீமன் திடீரென்று கடகடவென்று நகைத்தான். “அவன் உடலுக்கு தீயூட்டும் தார்மீக உரிமை எங்களுக்கு இல்லைதான். ஆனால் உனக்கும்தான் இல்லை. இறந்த பிறகும் அவனுக்கு விடிவுகாலம் இல்லை. அவன் உடலை நாயும் நரியும் தின்னத்தான் விடப் போகிறோம்! உன் விதி அதிசயமானதுதான் அண்… அண்… அண்ணா!” அதே மூச்சில் அவன் நகைப்பு அழுகையாக மாறியது. துரியோதனன் புரியாமல் தலையை உயர்த்தினான். “மூடா, எனக்கு எல்லா உரிமையும் இருக்கிறது, விருப்பம்தான் இல்லை. அவன் வாழ்வே நான் போட்ட பிச்சை” என்றான். “பிச்சை போட்டிருக்கிறாய். அதாவது, நீ புரவலன், அவன் இரவலன். நீ எஜமானன், அவன் பணியாள். சமமான தோழர்கள் இல்லை” என்று பீமன் முகத்தை சுளித்தான். துரியோதனன் அடிபட்டது போல தள்ளாடினான். “இல்லை…” என்று வாயெடுத்தான், உடனே மௌனமானான். “அவனை அரசனாக்கினேன், க்ஷத்ரியன் என்று ஏற்றுக் கொண்டேன் என்று பெருமை பேசுகிறாயே, நீ ஏன் துச்சளையை அவனுக்கு மணம் செய்து வைக்கவில்லை? அவன் வீரமும் கவசமும் குண்டலமும் கொடையும் குணமும் அப்போது உன் கண்ணில் படவில்லையா?” “இல்லை… அதாவது… வந்து… தந்தையும் அன்னையும் மறுத்திருப்பார்கள்” “ஓ! தந்தை சொல்லை மீறமாட்டாய்! அப்புறம் எப்படி கண்ணன் தூதை மறுத்தாய்?” “கர்ணன் துச்சளைக்கு சகோதரன் முறை, அவனுக்கு எப்படி துச்சளையை…” “அது இப்போதுதானே உனக்குத் தெரியும்!” துரியோதனன் மௌனமானான். ஆனால் பீமன் நிறுத்தவில்லை. “சரி ஏதோ உள்ளுணர்வால் உறவு முறையைப் புரிந்து கொண்டிருந்தாய் என்றே வைத்துக் கொள்வோம். நூற்றுவரின் மனைவியர் எவருக்கு தங்கைகள் இல்லையா? நீ அழுத்தம் கொடுத்திருந்தால் மறுக்க முடிந்திருக்குமா என்ன? அது என்ன சூதப் பெண்ணும் சேடிப் பெண்ணும்தான் அவனுக்கு மனைவியரா? உன் பட்டமகிஷியின் சேடியை அவனுக்கு மனைவி ஆக்கி இருக்கிறாய்! நாய் மீது மிகுந்த அன்பு செலுத்துகிறோம்தான், ஆனால் அதற்காக நாயை நம் இலையிலிருந்தே சாப்பிடவிடுவதில்லை. அவனை நீ நாயாகத்தானே பார்த்திருக்கிறாய்?” துரியோதனன் தலையைக் குனிந்து கொண்டு நிலத்தை நோக்கினான். “உண்மையைச் சொல், அவன் ஏறக்குறைய அர்ஜுனனுக்கு சமமான வீரனாக இல்லாவிட்டால் உன் தோழன் என்று சொல்லிக் கொண்டிருப்பாயா?” துரியோதனன் குனிந்த தலை நிமிரவில்லை. பீமன் தொடர்ந்தான். “அவன் வாழ்நாள் முழுவதும் தேடியது அங்கீகாரம். உனக்கு அவன் தோழன் அல்ல, வெறும் தொண்டு செய்யும் அடிமை. அவனை ஒரு க்ஷத்ரியனாக நீயும் முழு மனதாக ஏற்கவில்லை. எங்கள் கதையோ, என்னத்தைச் சொல்ல! பிதாமகர் அவனை நல்ல வீரனாக அங்கீகரிக்கவில்லை. துரோணர் அவனை நல்ல மாணவனாக அங்கீகரிக்கவில்லை. பரசுராமரைப் பற்றி சொல்லவே வேண்டாம். உன்னிடம் கிடைத்த குறைந்த பட்ச அங்கீகாரத்துக்காக, வெறும் சோற்றுக் கடனிற்காக உயிரைக் கொடுத்திருக்கிறான். என் தாய் தானம் கேட்டபோது அவனால் வாழ்க்கையில் முதல் முறையாக சூதன் என்ற இடித்துரைப்புகளிலிருந்து விடுபட முடிந்திருக்கிறது. அதற்காக என்ன விலை வேண்டுமானாலும் தர அவன் தயாராக இருந்திருக்கிறான்” என்று கசப்போடு நகைத்தான். கண்ணனே பீமனை வியந்து நோக்கினான். பீமனின் முகம் இறுகிக் கிடந்தது. “அவனை இத்தனை தூரம் புரிந்து கொண்டிருப்பது எனக்கே அதிசயமாகத்தான் இருக்கிறது, கண்ணா! ஆனால் இந்த நால்வரையும் எத்தனை தூரம் அறிவேனோ அதே போலத்தான் இப்போது இவனையும் அறிந்திருக்கிறேன். மூத்த பாண்டவன்! கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்!” என்று பீமன் விரக்தியோடு நகைத்தான். சிறிது நேரம் யாரும் எதுவும் பேசவில்லை. பிறகு துரியோதனன் அங்கிருந்த பந்தத்தை எடுத்தான். பீமனின் உடல் தன்னிச்சையாகத் துள்ளியது. ஆனால் துரியோதனன் சிதை பக்கம் போகவில்லை, பந்தத்தை யுதிஷ்டிரனிடம் கொடுத்தான். யுதிஷ்டிரனின் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அவன் திருப்பி பந்தத்தை துரியோதனனின் கையிலேயே திணித்தான். துரியோதனன் யுதிஷ்டிரனின் கையோடு சேர்த்து பந்தத்தைப் பிடித்துக் கொண்டான். இருவரும் முன்னகர்ந்து ஒன்றாக சிதைக்கு தீயூட்டினர். குந்தி பெருங்குரலெடுத்து ஓலமிட்டாள். https://solvanam.com/2024/10/13/இங்கிவனை-யான்-பெறவே/
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர் Jan 09, 2025 11:36AM IST ஷேர் செய்ய : தந்தை பெரியார் குறித்து அவதூறு பரப்பியதாக சீமானை கண்டித்து அவரது வீட்டை முற்றுகையிட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று (ஜனவரி 9) முயன்ற நிலையில் கைது செய்யப்பட்டனர். கடலூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளார் சீமான், “பெரியார் கொள்கை வழிகாட்டியா? உனக்கு உடல் இச்சை வந்தால், பெற்ற தாயோ, மகளோ, அக்காவோ, தங்கையோ, அவர்களுடன் உறவை வைத்துக்கொண்டு சந்தோஷமாக இரு என்று பெரியார் சொன்னது பெண்ணிய உரிமையா?” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இராமகிருஷ்ணன் கண்டனம்! இதுதொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் இராமகிருஷ்ணன் வீடியோ வெளியிட்டு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும், ”பெரியார் அப்படி சொன்னார் என்பதற்கான ஆதாரத்தை காட்டவில்லை என்றால், நாளை காலை 10 மணிக்கு நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு நான் செல்ல இருக்கின்றேன். பெரியார் சொன்னதற்கான ஆதாரத்தை சீமான் என்னிடம் காட்ட வேண்டும். அப்படி அவர் காட்டவில்லை என்றால் மக்கள் பார்த்துக்கொள்வார்கள்” என்று தெரிவித்திருந்தார். தபெதிகவினர் போராட்டம் – கைது! அதன்படி சென்னை நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டை முற்றுகையிட ராமகிருஷ்ணன் தலைமையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று காலை முயன்றனர். ஆனால் 200 அடிக்கு முன்னதாகவே அவர்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும் தொடர்ந்து சீமானுக்கு எதிராக முழக்கமிட்டு அங்கு போராட்டம் நடத்திய தபெதிகவினர் கைது செய்யப்பட்டனர். இதே போன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சீமானுக்கு எதிராக தபெதிகவினர் போராட்டம் நடத்தி வருகிறனர். https://minnambalam.com/political-news/defamatory-remarks-about-periyar-tabethikas-who-tried-to-blockade-seemans-house-arrested/
-
முடியைத் தொட்டாலே கையோடு வந்து விடுகிறது…மராட்டியத்தில் பரவும் மர்ம நோய்
முடியைத் தொட்டாலே கையோடு வந்து விடுகிறது…மராட்டியத்தில் பரவும் மர்ம நோய் January 9, 2025 12:35 pm மராட்டிய மாநிலம் புல்தானா மாவட்டத்திலுள்ள கல்வாட், பாண்ட்கான், ஹிங்னா ஆகிய கிராமங்களில் வசிக்கும் ஆண், பெண், சிறுவர்கள் உட்பட அனைவருக்கும் கடந்த ஒரு வாரத்தில் திடீரென முடி கொத்து கொத்தாக உதிர்ந்து வழுக்கையாகி வருகின்றது. முதலில் உச்சந் தலையில் சிறிது அரிப்பு ஏற்பட்டு சில நாட்களில் ரோமத்தின் தன்மை சொரசொரப்பாக மாறி 72 மணித்தியாலத்துக்குள் முடி தானாக உதிர்ந்து வழுக்கையாகிவிடுவதாக கூறப்படுகிறது. தலைமுடியை மெதுவாக வருடி விட்டால் கூட கையோடு வந்து விடுவதாகவும் இதுவரையில் அந்தக் கிராமத்தில் சுமார் 50 பேர் வரை இந்த மர்ம நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆண்களுக்கு தலை முடி மட்டுமல்லாமல் தாடியும் உதிர்ந்து விடுவதாக கூறுகின்றனர். இந்த முடி உதிர்வுக்கான காரணம் என்னவென்று இதுவரையில் கண்டறியப்படவில்லை. ஆனாலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அக் கிராமத்துக்கு சென்று அங்கு விநியோகிக்கப்படும் தண்ணீர், முடி, தோல் மாதிரிகள் போன்றவற்றை சோதனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். தலை முடியை தொடும்போதே கையோடு வருவதனால் மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர் https://oruvan.com/if-you-touch-your-hair-it-will-come-with-your-hands-a-mysterious-disease-spreading-in-maharashtra/
-
கானல் நீரில் தாகம் தீர்த்தல்!
கானல் நீரில் தாகம் தீர்த்தல்! -நஜீப் பின் கபூர்- முதலில் 2025ம் புத்தாண்டுக்கான வாழ்த்துக்களை நமது வாசகர்களுக்கு கூறிக்கொண்டு கானல் நீரில் தாகம் தீர்த்தல் தொடர்பான கதையையும், கடந்து போன நூறு நாட்களில் நாட்டில் நடந்த மாற்றங்கள் பற்றியும் இங்கு பேசலாம் என்று எதிர்பார்க்கின்றோம். அதற்கு முன்னர் நாம் கடந்த ஆண்டில் துல்லியமாக வாசகர்களுக்கு வழங்கி இருந்த தகவல்களை மீண்டும் ஒரு தடவை நினைவுபடுத்த விரும்புகின்றோம். இதற்கு முன்னரும் இப்படியான வார்த்தைகளை நாம் உச்சரித்திருந்தாலும் அதனை கூறியது கூறலாக நமது வாசகர்கள் எடுத்துக் கொள்ளமாட்டார்கள் என்று நாம் நம்புகின்றோம். அனுரவுடன் மோதுவதாக இருந்தால் மெகா கூட்டணி போட்டுக் கொள்ளுங்கள் என்று எதிரணிகளுக்கு சொல்லி இருந்தோம்.அது அப்படி நடக்காததன் விளைவை அனுர அரசியல் எதிரிகள் இப்போது அனுபவித்து வருகின்றார்கள். மெகா கூட்டணி சமைத்திருந்தாலும் அனுர வெற்றியைத் தடுத்திருக்க முடியாது. ஆனால் சேதத்தை குறைத்திருக்க முடியும். அவ்வளவுதான். அடுத்து முதலில் பொதுத் தேர்தலை நடத்துவதுதான் அனுர எதிரிகளுக்கு ஆரோக்கியம் என்றும் எச்சரித்தோம். அதுவும் ஆகவில்லை. ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்குத்தான் வாய்ப்பு-வெற்றி என்று ஊடகங்களும் அவரது சகாக்களும் அப்போது கூவிக் கொண்டிருக்கின்ற போது மனிதன் கோதாவுக்கு வெளியேதான் இருக்கின்றார். அவர் ஜனாதிபதித் தேர்தலில் பிரதான ஒரு போட்டியாளரே கிடையாது என்றும் சொல்லி இருந்தோம். ஜனாதிபதித் தேர்தல் நேரத்தில் அனுர களத்தில் தனிக் குதிரையாகத்தான் இருக்கின்றார். அவருக்கு போட்டியே கிடையாது என்றோம். அப்படித்தான் ஜனாதிபதி தேர்தல் முடிவுகளும் வந்தது. பொதுத் தேர்தலிலும் இதே கதை. ரணில் தலைமையிலான அணிக்கு படுதோல்வி வரும் என்று அடித்துச் சொன்னோம். அதுதானே நடந்தது. தேர்தலுக்குப் பின்னர் சஜித்துக்கு நெருக்கடி. அவர் கூட்டணியில் பிளவு வரும் என்றும் சொன்னோம். அந்தக் காட்சிகள்தான் இப்போது நடந்து வருகின்றது. கூட்டணிக் கட்சிகள் ஜனாதிபதி அனுரவுடன் நெருக்கமாக பயணிக்க முயல்வார்கள் என்றும் சுட்டிக்காட்டி இருந்தோம். அத்துடன் இவற்றுக்கு குறிப்பிட்ட தலைப்புகளிலே கட்டுரை போட்டும் தகவல்களை விரிவாகவும் சொல்லி வந்தோம். 2024 வருடம் முடிந்து 2025 புத்தாண்டு தொடங்கியிருப்பதால் செய்திகளை மீண்டும் ஒரு முறை மீட்டிருக்கின்றோம் என்று இதனை எடுத்துக் கொள்ளுங்கள். அனுரவின் நூறு நாட்கள்! இப்போது ஜனாதிபதி அனுரகுமாரவின் கடந்து போன நூறு நாட்கள் பற்றி முதலில் பார்ப்போம். ஜனாதிபதி அனுரகுமார பதவிக்கு வந்து ஜனவரி இரண்டாம் திகதியுடன் நூறு நாட்கள் கடந்து போய் இருக்கின்றது. இப்போது குறிப்பாக பி.பி.சி சிங்கள செய்தி சேவைக்கு ஜனாதிபதி அனுர நூறு நாட்களில் தாம் செய்வதாக சொன்ன விடயங்கள் எந்தளவுக்கு இதுவரை நிறைவேறி இருக்கின்றது என்று பார்த்தால் அதற்கு இப்படி ஒரு விளக்கத்தை முதலில் சொல்லி வைக்கலாம். “என்னதான் அரசு புரட்சிகரமான சிந்தனைகளை மக்கள் மயப்படுத்தி அதில் வெற்றி கண்டாலும் துருப்பிடித்து-இத்துப்போன ஒரு நிருவாக இயந்திரத்தை வைத்துக் கொண்டுதான் அரசு காரியங்களைச் செய்ய வேண்டி இருக்கின்றது.” எனவே ஏட்டுச் சுரக்காய் நிலைதான் நூறு நாள் நிருவாகம் பயணித்து வந்திருக்கின்றது. எனவே மாற்றங்கள் அல்லது நல்லவை நடக்க குடிமக்கள் இன்னும் சற்றுப் பொறுமை காக்க வேண்டி இருக்கும். நமது அரசியலில் நூறுநாள் வேலைத்திட்டம் தொடர்பான எண்ணக்கரு முதன் முதலில் மைத்திரி-ரணில் நல்லாட்சியில்தான் அறிமுகமாகி இருந்தது. இப்படித்தான் ஜனாதிபதி அனுரவும் ஒரு பட்டியலை 100 நாட்களுக்கு வரிசைப்படுத்தி இருந்தார். ஆனால் அது எந்தளவுக்கு நிறைவேறி இருக்கின்றது என்பதில் நிறையவே குளறுபடிகள் இருக்கின்றன. எனவேதான் ஜனாதிபதி அனுர குமார நிருவாகத்துறையினரை மீண்டும் மீண்டும் மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து நடந்து கொள்ளுமாறு கேட்டு வருகின்றார். இப்போது அவர் அனைத்துத் துறையில் இருக்கின்ற நிருவாகிகளை எச்சரிக்கின்ற ஒரு தொணியில் பேசுவது போல தெரிகின்றது. இது எதனைச் சுட்டிக் காட்டுகின்றது என்றால் அவரது எதிர்பார்ப்புகளுக்கு அமைய நிருவாகம் இன்னும் செயல்படவில்லை என்பதைத்தான் இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகின்றது. எனவேதான் துருப்பிடித்த இயந்திரத்தில்தான் உற்பத்திகள் என்று நாம் முன்பு சுட்டிக் காட்டி இருந்தோம். ஆனால் இப்படி ஜனாதிபதி அனுர தொடர்ந்தும் பேசிக் கொண்டிருக்க முடியாது. இப்படியே தொடர்ந்தால் ஒரு கட்டத்தில் இது அரசுக்கும் அதிகாரிகளுக்கும் இடையிலான ஒரு மோதலாகக் கூட மாறலாம் என்று நாம் எச்சரிக்கின்றோம். கடந்த ஆட்சிக் காலங்களில் அரசியல்வாதிகள் சுதந்திரமாகக் கொள்ளையடித்ததால்-ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு இலாபமீட்டியதை வாய்ப்பாக வைத்துக் கொண்டு அதன் மூலம் தாமும் இலாபம் சம்பாதித்த ஒரு நிருவாக வர்க்கமே இன்னும் நாட்டில் அனைத்துத் துறைகளிலும் பதவிகளில் இருந்து வருகின்றது. எனவே இந்த அரசாங்கம் தமது வருமானத்துக்கு-பிழைப்புக்கு ஆப்பு வைத்தால் அதனை எப்படியாவது கவிழ்த்து விட வேண்டும் என எண்ணுகின்ற ஒரு கூட்டமும் இந்த நிருவாகத்தில் இருக்கின்றது. இதற்கு நல்ல உதாரணம்தான் கடந்த காலங்களில் ஊழல் மோசடிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை அரசியல் காரணங்களினால்-தேவைகளினால் கிடப்பில் போட்டது அல்லது கண்டு கொள்ளாமல் விட்டது மற்றும் அதற்கான ஆதாரங்களை சிதைத்தமை போன்ற குற்றச்சாட்டுக்களை நாம் இங்கு சுட்டிக்காட்ட முடியும். சில அதிகாரிகள் கடந்த ஆட்சிக் காலத்தில் பயணித்த தண்டவாளத்தில் பயணிப்பதில்தான் ஆர்வமாக இருக்கின்றார்கள் அல்லது அடம்பிடிக்கின்றார்கள். எனவே அரசுக்கும் அதிகாரிகளுக்கும் ஒரு கயிறிழுப்பு நிலை பல இடங்களில் காணப்படுகின்றது. மேலும் கடந்த ஆட்சிக்காலத்தில் தமது பிழையான தீர்மானங்கள்-நடவடிக்கைகள் தம்மைக் காட்டிக் கொடுத்து விடும். எனவே புதிய அரசாங்கத்தை இவர்கள் பயங்கரவாதிகளாக பார்க்கின்ற ஒரு நிலைதான் நாட்டில் தொடர்கின்றது என்றும் நாம் வாதிட முடியும். மேலும் இதற்கு நல்ல உதாரணம் ஒன்றை நமக்கு இங்கு கூற முடியும். கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தனது அமைச்சின் நல்ல திட்டங்களுக்கு திணைக்களத்தில் இருக்கின்ற அதிகாரிகள் தடையாக இருக்கின்றார்கள் என்பதனை பகிரங்கமாக ஒரு கூட்டத்தில் கூறி இருப்பதுடன், இதனால் தனது அமைச்சிலே போராட்டங்களை நடத்த வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலை இங்கு இருக்கின்றது என்றார். இந்த அரசில் ஹந்துன் செல்வாக்கான ஒரு அமைச்சர். அவருக்கே இந்த நிலை என்றால் சற்று சிந்தித்துப் பாருங்கள்? இந்த முட்டுக் கட்டைகளை அகற்றிக் கொண்டு பயணிப்பதில் அரசுக்கு பல நெருக்கடிகள் என்பது தெளிவு. அத்துடன் அனுர அரசு பதவிக்கு வந்து நூறு நாட்கள் கடந்து போய் இருக்கின்ற இந்த நேரத்தில் மக்கள் மத்தியில் ஆட்சியாளர்கள் மீது ஒரு நல்லெண்ணம் தொடர்ந்தும் இருந்து வருகின்றது. சில விடயங்களில் எதிர்பார்த்த வேகம் இல்லாமல் போனாலும் ஆட்சியாளர்கள் மீது ஊழல் செய்கின்றார்கள், கொமிஸ் வியாபாரம் செய்து பணம் குவிக்கின்றார்கள் என்று எவரும் இதுவரை குற்றம் சுமத்தவில்லை. அந்த வகையில் ஆட்சியாளர்கள் மோசடிக்காரர்கள் அல்ல என்று மக்கள் நினைக்கின்றார்கள். அவர்கள் நேர்மையான ஒரு ஆட்சியை முன்னெடுக்கின்ற போரட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்பது குடிகளுக்குப் புரிகின்றது. ஆட்சியாளர்கள் எதிர்நோக்குகின்ற சவால்களை மக்கள் புரிந்து கொண்டு வருவதும் நல்ல செய்திதான். பொருட்கள் மீது திட்டமிட்ட தட்டுப்பாடுகளை உண்டு பண்ணுவது, இது விடயத்தில் மாபியாக்களின் செயல்பாட்டை அனுர அரசு சொன்னது போல இன்னும் கட்டுப்படுத்த முடியவில்லை என்ற குற்றச்சாட்டும் ஏற்றுக் கொள்ளக்கூடியதே. அதற்காக அனுர ஒரு ஹிட்லராகவோ இடி அமீனாகவோ செயலாற்றவும் முடியாது. உள்நாட்டில் ஜனாதிபதி அனுர மீது மக்கள் மத்தியில் நல்லெண்ணம் இருப்பது போல சர்வதேச அளவிலும் அவரது இமேஜ் உயர்ந்து கொண்டுதான் வருகின்றது. இது மேற்கு – கிழக்கு என்று சகல இடங்களிலும் தெரிகின்றது. சுருக்கமாக அனுர கடந்து வந்த நூறு நாட்கள் நம்பிக்கையும் எச்சரிக்கைகளும் முட்டுக்கட்டைகளும் நிரம்பியதாகத்தான் காணப்படுகின்றது. இதனை வெற்றியும் தோல்வியில் இல்லாத ஐம்பதுக்கு ஐம்பது என்றுதான் நாம் பார்க்கின்றோம். ஜனாதிபதி அனுர ‘கிளீன் லங்கா’ என்ற நிகழ்வில் பேசுகின்ற போது தனக்குள்ள இரு முகங்கள் பற்றி அவர் சூசகமாக சுட்டிக்காட்டி இருந்தார். இதனை பசுமையும் நெருப்பும் என்று சொல்ல முடியும். அது பற்றி பிறிதொரு இடத்தில் சற்று விரிவாக பேச இருக்கின்றோம். பலமான ஒரு நாடாளுமன்றத்தை நிறுவுவோம். நீதித்துறையில் மாற்றங்கள், கிடப்பில் போடப்பட்ட வழக்குகளைத் தூசி தட்டுதல், குறிப்பாக ஈஸ்டர் தாக்குதல் விசாரணை விடயத்தில் முன்னேற்றம், கிரிக்கட் நிருவாக சபைக்கு வாக்களிப்போர் எண்ணிக்கையில் குறைப்பு, ஆளும் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் கடத்தல்கள் பற்றிய விசாரணைகளைத் துரிதப்படுத்தல், போன்றவற்றில் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றது. அதேநேரம் புதிய கிரிக்கட் யாப்பு, அதிபர்கள்- ஆசிரியர்கள் சம்பள முரண்பாடுகளைக் களைதல்,35000 பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு போன்ற விடயங்களில் இதுவரை எந்த நடவடிக்கைகளும் அனுர அரசால் மேற்கொள்ள முடியவில்லை. எனவே நாம் முன்பு சொன்னது போது வெற்றி தோல்வி இல்லாத ஒரு முடிவாக இந்த நூறு நாட்களை நாம் கூற முடியும். இப்போது நாம் தலைப்பில் சொல்லி இருக்கின்ற கானல் நீரில் தாகம் தீர்க்கின்ற கதை பற்றிப் பார்ப்போம். அனுர தரப்பினருக்கு வெற்றி வாய்ப்பே கிடையாது என்று தேர்தல் மேடைகளில் சொன்னவர்கள், அப்படித்தான் அவர்கள் அபூர்வமாக வெற்றி பெற்றாலும் அவர்களுக்கு ஆட்சி அதிகாரம் செய்த அனுபவம் கிடையாது. இதனால் ஒரு வாரத்துக்கு மேல் அவர்களது ஆட்சி நீடிக்காது. மேலும் இவர்களின் கடந்த காலங்கள் இரத்தக்கறை படிந்திருப்பதால் இவர்களுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்காது என்றும் பரப்புரைகள் நடந்தது. ஆனால் அனுரவுக்கு இந்தியா, சீனா ஏன் அமெரிக்க அரசியல் தலைமைகளிடமிருந்து கூட அழைப்பு – நேசக்கரம் நீட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எனவே ஆங்கில அறிவு கிடையாது, அனுபவம் கிடையாது என்று சொல்லப்பட்ட அனைத்துக் கதைகளும் வஞ்சக நோக்கத்துடன் முன்வைக்கப்பட்ட பரப்புரைகள் என்பது இப்போது உறுதியாகி இருக்கின்றது. எனவே அனுர அரசு உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் மிகவும் வலுவாக இருக்கின்றது. ஆனாலும் அவரது அரசியல் எதிரிகள் அரசு இன்று கவிழும் நாளை கவிழும் என்று மக்கள் மத்தியில் கதை விட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதற்கென பல சமூக ஊடகங்களை அவர்கள் வாடகைக்கு அமர்த்தி புரளிகளைப் பரப்பிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனாலும் குடிமக்கள் புத்தி கூர்மையுடன் சிந்திப்பதால் அனுர ஆட்சிக்கு எந்த ஆபத்தும் கிடையாது. நமது கணிப்புப்படி மாற்று அணிகளில் இருக்கின்ற இன்னும் இருபத்தி ஐந்து வரையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி அனுர தரப்பு மேற்கொள்கின்ற நல்ல திட்டங்களுக்கு துணைக்கு வருவதற்கு தயாராக இருக்கின்றார்கள். இதில் பெரும் எண்ணிக்கையானவர்கள் சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தப் பின்னணியில் சில வங்குரோத்து அரசியல்வாதிகள் அனுர அரசுக்கு ஆயுள் கம்மி இவர்களுக்கும் கோட்டாவுக்கு நடந்ததுதான் நடக்கும் என்று மக்களை ஏமாற்றிக் கொண்டு கதைகளைச் சொல்லி வருகின்றார்கள். அத்துடன் ஜே.வி.பி.க்கும் என்.பி.பி. க்கும் மோதல், பிரதமர் ஹருணியை பதவியில் இருந்து விரட்டப் போகின்றார்கள் என்றெல்லாம் கட்டுக் கதைகள். அப்படி எந்த மோதல்களும் சச்சரவுகளும் ஆளும் கட்சியில் இல்லை. இல்லாத ஒன்றுக்கு உருவம் கொடுத்து அவர்கள் சந்தோசப்பட்டுக் கொண்டு குடி மக்களை தவறாக வழி நடத்த முனைகின்றார்கள். இது இவர்களது பகல் கனவு மட்டுமே. இதனைத்தான் கானல் நீரைப் பருகி சுகம் காண்கின்ற அரசியல் என்று நாம் அடையாளப்படுத்துகின்றோம். https://thinakkural.lk/article/314513
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
பேரழிவு மற்றும் திகிலூட்டும் இரவுகள் ; லொஸ் ஏஞ்சல்ஸ் காட்டு தீ Published By: Rajeeban 09 Jan, 2025 | 12:04 PM லொஸ் ஏஞ்சல்ஸின் பல பகுதிகளில் வேகமாக பரவிவரும் காட்டுதீ காரணமாக ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். காட்டுதீயில் சிக்குண்டு 1500க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இந்த பகுதியில் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன. இதேவேளை காட்டுதீயை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு படையினர் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காற்றின் வேகம் குறைவடைந்துள்ளதால் தீயணைப்பு படையினர் நிம்மதியடைந்துள்ள போதிலும் ஆபத்து இன்னமும் முடிவிற்கு வரவில்லை. ஹொலிவூட் ஹில்ஸ் பகுதியில் புதிதாக காட்டுதீ மூண்டுள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் லொஸ் ஏஞ்சல்ஸின் சன்டா மொனிகாவில் வசிக்கும் மக்களையும் அங்கிருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். ஆயிரம் கட்டிடங்கள் அனேகமாக வீடுகள் முற்றாகதீக்கிரையாகியுள்ளன.நகரப்பகுதியிலிருந்து 13000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். பசுபிக் கரை முதல் பசெடானா வரையில் உள்ள பகுதிகளை சேர்ந்த மக்களே பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். நாங்கள் இன்னமும் ஆபத்தான நிலையிலிருந்து விடுபடவில்லை என லொஸ் ஏஞ்சல்ஸின் தீயணைப்பு பிரிவின் தலைவர் கிறிஸ்டின் எம் குரோலி தெரிவித்துள்ளார். பேரழிவு மற்றும் திகிலூட்டும் இரவுகள் லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் காட்டு தீ ஆபத்து செல்வாய்கிழமையே உருவானது. ஒரு சக்திவாய்ந்த காற்று புயல் இயற்கை எழில் கொஞ்சும் பசுபிக்கின் பாலிசோட்ஸ் சுற்றுப்புறத்தில் தீப்பிழப்புகளை மூண்டெழச்செய்த போது ஆயிரக்கணக்காணவர்கள் அங்கிருந்து தப்பி விரைவாக வெளியேறவேண்டிய நிலை உருவானது. கடும் காற்றுகாரணமாக தீயை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு வீரர்கள் திணறியதால் இரவில் அவசரநிலைமை தீவிரமடைந்தது.அந்த இரவை நகரின் வரலாற்றில் மிகவும் அழிவுகரமான திகிலூட்டும் இரவு என அதிகாரியொருவர் வர்ணித்துள்ளார். அந்த பகுதியை சுற்றிவளைத்திருந்த நான்கு காட்டுதீயை கட்டுப்படுத்துவதற்கு உடனடியாக மறுநாள் காலை கலிபோர்னியாவிலிருந்து தீயணைப்பு வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். காட்டுதீ காரணமாக பலர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.20க்கும் மேற்பட்டவர்களி;ற்கு சிகிச்சை வழங்கப்பட்டதாக மருத்துவமனைகள் தெரிவித்துள்ளன. நான்கு பகுதிகளில் இவ்வளவு ஆக்ரோசமாக பரவிவரும் காட்டுதீயை கட்டுப்படுத்துவதற்கு எங்களிடம் போதிய தீயணைப்பு வீரர்கள் இல்லை என லொஸ் ஏஞ்சல்ஸின் தீயணைப்பு பிரிவின் தலைவர் கிறிஸ்டின் எம் குரோலி தெரிவித்தார். நாங்கள் இரண்டு மூன்று காட்டுதீ பரவலிற்குதான் தயாராகயிருந்தோம் நான்கு ஐந்தை எதிர்பார்க்கவில்லை,அன்று மாலை அது ஆறாக மாறிவிட்டது என அவர் குறிப்பிட்டார். பாலிசேட்ஸ் காட்டுதீயே லொஸ்;ஏஞ்சல்ஸின் நவீன வரலாற்றில் மிகவும் அழிவை ஏற்படுத்திய ஒன்று என அதிகாரிகள் கருதுகின்றனர்.இதுவரை மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் 50 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் . தீயினால் அந்த பகுதியின் நீர் ஆதாரங்களும் பாதிக்கப்பட்டன.அதிகரித்த தேவை காரணமாக தீயணைப்பு வீரர்கள் சில இடங்களில் நீரை பெறுவதற்கு மிகவும் சிரமப்பட்டனர். பொதுமக்களை நீரை சேகரிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். லொஸ் ஏஞ்சல்ஸின் சில பகுதிகளில் காட்டுதீ மிகவேகமாக பரவியதால் அப்பகுதி மக்கள் தாங்கள் கார்களை விட்டுவிட்டு இறங்கி ஓடவேண்டிய நிலைக்கும் நடந்து செல்ல வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டனர். ஹெலிக்கொப்டரிலிருந்து காட்டுதீயை அணைப்பதற்காக நீர் வீசப்பட்டவேளையே எனக்கு எங்கள் பகுதியில் காட்டுதீ மூண்டுள்ளமை தெரியும்,என அந்த பகுதியை சேர்ந்த ஷெரீஸ் வலஸ் என்ற பெண் தெரிவித்துள்ளார். எனது சகோதரி என்னை அழைத்து அதனை தெரிவித்தார் என்கின்றார் அவர். நான் மழை பெய்கின்றது என நினைத்தேன் என தெரிவிக்கும் அவர் எனது சகோதரி இல்லை உங்கள் பகுதியில் காட்டு தீ மூண்டுள்ளது அதனை அணைக்க முயல்கின்றனர் நீங்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறவேண்டும் என தெரிவித்தார் என வலஸ் தெரிவித்துள்ளார். நான் வீட்டு கதவை திறந்ததும் காட்டுதீக்கு எதிரே நின்றேன், என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/203378
-
பிரபல தவில் வித்துவானின் மகன் விபத்தில் உயிரிழப்பு
பிரபல தவில் வித்துவானின் மகன் உயிரிழப்பு January 9, 2025 11:07 am அச்சுவேலி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட யாழ்ப்பாணம் வடமராட்சி வீதி வல்லை பகுதியில் ஏற்பட்ட விபத்தில் பிரபல தவில் வித்துவானின் மகன் உயிரிழந்துள்ளார். வல்லைப் பகுதியில் நேற்று (08) இரவு 7.30 மணியளவில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் குறித்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். யா/ நெல்லியடி மத்திய கல்லூரி பழைய மாணவனும் பிரபல தவில் வித்துவான் வியஜகுமாரின் புதல்வன் யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த வேளை வல்லைப் பகுதியில் மாட்டுடன் மோதி எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது. படுகாயமடைந்த இளைஞர் மந்திகை ஆதார வைத்தியச்சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் பருத்தித்துறை புற்றாளை பகுதியைச் சேர்ந்த பிரபல தவில் வித்துவான் விஜயகுமார் மணிகண்டன் (வயது 21) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக மந்திகை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://tamil.adaderana.lk/news.php?nid=198528
-
வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு!
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு - IMF எதிர்ப்பில்லை January 9, 2025 11:59 am எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு செய்யப்படவுள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று (09) நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதில் சர்வதேச நாணய நிதியத்திற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் பிரதி அமைச்சர் கூறினார். https://tamil.adaderana.lk/news.php?nid=198534
-
முல்லைத்தீவில் துப்பாக்கி சூடு ; ஒருவர் படுகாயம்
முல்லைத்தீவில் துப்பாக்கி சூடு ; ஒருவர் படுகாயம் January 9, 2025 முல்லைத்தீவு கூழாமுறிப்பு பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமுற்று மாஞ்சோலை வைத்தியசாலையில் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று புதன்கிழமை (08) மாலை நடைபெற்றுள்ளது.ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பினை சேர்ந்த 46 வயதுடைய குடும்பஸ்தரே படுகாயமடைந்துள்ளார். முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு பகுதியில் அக்காவின் கணவருக்கும் தம்பிக்கும் இடையில் ஏற்பட்ட மனகசப்பு கைக்கலப்பாக மாறியுள்ளது. அதனையடுத்து, கோபடைந்த தம்பி கத்தியால் அத்தானை வெட்டியுள்ளார். அது பலனளிக்காத நிலையில் காட்டுக்குள் சென்று இரு இடியன் துப்பாக்கிகளை எடுத்து வந்து தனது அக்காவின் கணவருக்கு சுட்டுள்ளார். இதன்போது படுகாயமடைந்த அக்காவின் கணவர் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த சம்பவத்தை நடாத்திய 24 வயதுடைய சந்தேகநபர் சுட்டுவிட்டு தலைமறைவாகியுள்ளார். சந்தேகநபரை கைது செய்யும் நடவடிக்கையில் ஒட்டுசுட்டான் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். https://eelanadu.lk/முல்லைத்தீவில்-துப்பாக்/
-
வடக்கிற்கான புகையிரத சேவையை விரிவுபடுத்த வேண்டும்-கஜேந்திரகுமார்!
வடக்கிற்கான புகையிரத சேவையை விரிவுபடுத்த வேண்டும்-கஜேந்திரகுமார்! வடக்கு மாகாணத்துக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ள புகையிரத சேவையை விரிவுபடுத்த போக்குவரத்து அமைச்சு விசேட கவனம் செலுத்த வேண்டும். தமிழர்கள் அதிகமாக வசிக்கும் வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி புகையிரத நிலையங்களில் வடக்கு மாகாணத்துக்கான புகையிரதங்களை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் மருந்து விநியோக சேவைகளுக்கான நேர்முகத் தேர்வுக்கு விண்ணப்பதாரிகள் அழைக்கப்பட்டு, தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் பட்டியல் இருக்கின்ற போதும் இதுவரையில் நியமனங்கள் வழங்கப்படவில்லை. வடக்கு மாகாணத்தில் இந்த பதவிக்கு 40 வெற்றிடங்கள் காணப்படுகின்றன. ஆனால் பிற மாவட்டங்களைச் சேர்ந்தோர் அழைக்கப்படுகின்றனர். நியமனம் வழங்கப்படாத காரணத்தால் சுகாதார சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு - யாழ் புகையிரத சேவை விடயம் தொடர்பிலும் சுட்டிக்காட்ட எதிர்பார்க்கின்றேன். இந்திய நிதி திட்டத்தின் கீழ் வடக்கு புகையிரத பாதை புனரமைக்கப்படுகிறது. தினசரி கொழும்பு - யாழ். இடையே நான்கு புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அநுராதபுரம் முதல் வவுனியா வரையிலான புகையிரத பாதை புனரமைப்பு பணி காரணமாக அந்த புகையிரத சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன. அந்த நான்கு சேவைகளில் இரண்டு சேவைகள் கிழக்கு மாகாணத்திற்கு முன்னெடுக்கப்பட்ட போதும் யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் கொண்டுவரப்படவில்லை. தற்போது யாழ்ப்பாணத்திற்கு ஒரு புகையிரத சேவையே உள்ளது. அத்துடன் அதிவேக புகையிரத சேவை சனி மற்றும் ஞாயிறு தினங்களில் முன்னெடுக்கப்படுகிறது. இது எமக்கு போதுமானது அல்ல. நான்கு சேவைகளை மேற்கொள்ள வேண்டிய நிலையில் இரண்டு சேவைகளே தற்போது முன்னெடுக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பில் புகையிரத திணைக்களமும், போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் யாழ்ப்பாண புகையிரத சேவை கொழும்பு வரையிலேயே முன்னெடுக்கப்படுகிறது. கல்கிசை வரையில் நடத்தப்பட வேண்டும் என்பதுடன் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் வெள்ளவத்தை,பம்பலப்பிட்டி ரயில் நிலையங்களில் நிறுத்தக் கூடியவாறும் சேவைகள் நடத்தப்பட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்கின்றேன் என்றார்.[ஒ] https://newuthayan.com/article/வடக்கிற்கான_புகையிரத_சேவையை_விரிவுபடுத்த_வேண்டும்-கஜேந்திரகுமார்!
-
போர் உலா - நண்பர்களை உருவாக்குவதற்கான போர்…
மலரவனின் 'போர் உலா'வை முன்னிட்டு சில நினைவுகள்.. ********** 1. மலரவன் எழுதிய 'போர் உலா'வை மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றேன். இதை எனது பதின்மத்தின் தொடக்கத்தில் தமிழில் வந்தபோது வாசித்திருக்கின்றேன். அப்போது யாழ்ப்பாணம் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. 'போர் உலா'வை சுன்னாகம் பேருந்து நிலையத்துக்கருகில் இருந்த புத்தகசாலையில் வாங்கி வாசித்திருக்கின்றேன். 13/14 வயதுகளில் கையில் காசு புழங்குவதே அரிதென்பதால், புதுப் புத்தகங்களை வாங்கி வாசிப்பதென்பது பெரும் சாதனை போல அன்று இருக்கும். அப்படி காசு கொடுத்து புதிதாய் வாங்கிய இன்னொரு புத்தகம் புதுவை இரத்தினதுரையின் ' பூவரம் வேலியும், புலுனிக் குஞ்சுகளும்' என்ற கவிதைகளின் பெருந்தொகுப்பு. இப்போது 'எழுநா'வில் எழுதுவதற்காக ஆங்கிலத்தில் வந்த 'போர் உலா'வை மீண்டும் வாசிக்கின்றேன், இந்த நூலை தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த மாலதியை நான் வன்னியில் நேரில் சந்தித்திருக்கின்றேன். முப்பது வருடங்களுக்கு மேல் நியூசிலாந்தில் வசித்துவிட்டு மீண்டும் தாய்நிலம் அவர் அப்போது திரும்பியிருந்தார். மனிதவுரிமைகள் சம்பந்தமாக செஞ்சோலைக்கு வந்து அடிக்கடி பேசிக் கொண்டிருந்தார். மாலதி, செஞ்சோலைக்குப் பொறுப்பான ஜனனி அக்காவிடம், 'இப்படி அநாதரவராக இருக்கும் பெண்பிள்ளைகளை, இயக்கப் போராளிகளான நீங்கள் வளர்ப்பதால் அவர்களும் இயக்கத்தில் இயல்பாக சேர்ந்து விடுவார்களே, இது சரியில்லை அல்லவா?' எனக் கேட்டபோது நானும் சாட்சியாக இருந்திருக்கின்றேன். அதனால்தான் அவர்களை இப்போது உள்ளே வைத்து படிப்பிக்காமல், மற்றவர்களும் போகும் சாதாரண பாடசாலைகளுக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றோம் என்று பல உதாரணங்களை ஜனனி அக்கா சொல்லிக் கொண்டிருந்தார். நானும், பின்னர் அங்கிருந்த செஞ்சோலைக்குப் பொறுப்பான பெண் போராளிகளிடம், இங்கே வளரும் பிள்ளைகள் இயக்கத்தில் போய்ச் சேர்வதில்லையா எனக் கேட்டேன். அவர்கள் அப்படிச் சேர நாங்கள் இயக்கத்தில் விடுவதில்லை. என்றாலும் சில பேர் அப்படி இங்கிருந்து தப்பியோடி வேறு பெயரில் இயக்கத்தில் இணைந்திருக்கின்றார்கள் என்றும், அவர்களை மீண்டும் இங்கே மீட்டுக் கொண்டு வந்திருக்கின்றோம் என்றும் சொன்னார்கள். அப்படி ஓடிப்போய் இயக்கத்தில் சேர்ந்து திரும்பி வந்த சிலரை செஞ்சோலைக்குள் சந்தித்திருக்கின்றேன். இவற்றையெல்லாம் ஏன் சொல்கின்றேன் என்றால் இயக்கத்தை விளங்கிக் கொள்வதென்பது மிகச் சிக்கலான விடயம். அதுவும் 30 வருடங்களுக்கு மேலாக இயங்கிய, தம்மை மீறி எவரையும் இயங்க விடாத ஒரு இயக்கத்தை ஒற்றைப்படையாக வைத்து எதையும் எளிதில் விளங்கிவிடவும் முடியாது. எனவேதான் இப்போது புலிகளை ஆதரித்தோ, எதிர்த்தோ மிகைப்படுத்தி வரும் படைப்புக்களை மெல்லிய புன்முறுவலோடு விமர்சிக்கக்கூட விருப்பில்லாது கடந்து போய்விட முடிகின்றது. மனிதவுரிமைகள் சம்பந்தமாக பேசிக்கொண்டிருந்த இதே மாலதி வன்னிக்குள் இறுதியுத்தம் முடியும்வரை புலிகளின் சமாதானக் காரியாலயத்தில் இயங்கியிருக்கின்றார் என்பதைப் பின்னர் அறிந்துகொண்டேன். யுத்தம் மிக மோசமாக நடந்த காலங்களிலே, வேறு எதுவும் செய்வதற்கு வழியற்றபோது, மாலதி இந்தநூலை வன்னிக்குள் இருந்தபடி தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருக்கின்றார் என்ற குறிப்பு இந்த ஆங்கில நூலில் இருக்கின்றது. இறுதி யுத்தம் அவரை அதிஷ்டவசமாக உயிர் தப்ப விட்டிருக்கின்றது. அதனால் மலரவனின் 'போர் உலா'வை நாங்கள் ஆங்கிலத்திலும் இப்போது வாசிக்க முடிகின்றது. ஆங்கிலப் பதிப்பை பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டிருக்கின்றது. 2. ஈழப் போராட்ட வரலாற்றிலே 'போர் உலா' மிக முக்கியமான பிரதி. மாங்குளம் இலங்கை இராணுவம் முகாமை அழிக்க, மணலாற்றில் இருந்து (இப்போது சிங்களக்குடியேற்றம் நிகழ்ந்து வெலிஓயா என அழைக்கப்படுகிறது), மாங்குளம் செல்லும் பயணத்தையும், அம்முகாம் மீட்கப்பட்டதையும் மலரவன் இதில் லியோ என்கின்ற கதாபாத்திரத்தினூடாக எழுதுகின்றார். மணலாற்று காட்டிலிருந்து தொடங்கும் பயணம் இறுதியில் மாங்குளம் இராணுவ தகர்ப்புடன் முடிவடைகின்றது. ஆனால் அந்தப் பயணத்தில் லியோ என்கின்ற பாத்திரம் சந்திக்கும் மக்கள், வறுமை/சாதியப் பெருமிதங்கள், இராணுவத்தால் கொல்லப்பட்ட மனிதர்களின் உறவுகள் என்று பலவற்றை அவர் தொட்டுச் செல்கின்றார். ஒருவகையில் இது அந்தக்காலத்தைய வன்னி மக்களின் வாழ்க்கையை சொல்லும் ஓர் முக்கிய ஆவணமாகவும் ஆகின்றது. மேலும் அவர் மக்களை/போராட்டத்தை/யுத்தத்தை மட்டுமில்லாது மிக நிதானமாக இயற்கையை விவரித்துச் செல்வது அவ்வளவு அருமையாக இருக்கின்றது. இதைவிட வியப்பாக இருப்பது, மலரவன் போர் உலா'வை எழுதும்போது அவருக்கு 18 வயதேதான். இத்தகைய ஓர் நடந்த சம்பவங்களை புனைவிற்குரிய மொழியில் ஒருவர் தனது பதின்மத்திலேயே எழுதிவிட்டார் என்கின்றபோது ஒரு வியப்பு வருகின்றது. மலரவன் பின்னர் அவரது 20 வயதில் பலாலியில் நடந்த முக்கிய தாக்குதலில் இதன் பிறகு இரண்டு வருடங்களில் இறந்துவிடுகின்றார். அந்தப் பலாலி தாக்குதல் என் நினைவில் நன்கு இருக்கின்றது. ஏனெனில் எங்கள் கிராமங்களை அச்சுறுத்தும் முக்கிய இராணுவ/விமானத் தளமாக பலாலி கூட்டுப்படைத்தளம் அன்று இருந்தது. அந்தத் தாக்குதலில் இயக்கத்தின் முக்கியமானவராக செல்வராஜா மாஸ்டர் என்பவர் உள்ளிட்ட 50இற்கும் மேற்பட்ட போராளிகள் இறந்திருந்தனர். எனினும் 'போர் உலா' எழுதிய மலரவனும் இறந்தார் என்பதை அப்போது அறிந்தேனில்லை. இந்தப் பிரதி மலரவன் இறந்தபின்னே அவரது உடமைகளோடு கண்டுபிடிக்கப்பட்டு இயக்கத்தால் வெளியிடப்படுகின்றது. இருபது வயதுக்குள் உக்கிரமான சமர்க்களத்தில் களமாடியபடி மலரவன் தனியே 'போர் உலா' மட்டும் எழுதவில்லை. 'புயல் பறவை' என்ற நாவலையும், வேறு பல கவிதைகளையும், கட்டுரைகளையும், சிறுகதைகளையும் எழுதியிருக்கின்றார். அவரின் ஒன்றிரண்டு புனைவு நூல்கள் கிடைக்காமலே அழிந்து போயிருக்கின்றன எனச் சொல்லப்படுகின்றது. 'போர் உலா' முடியும்போது அவர் அடுத்து பங்குபற்றிய சிலாவத்துறை இராணுவ முகாம் தாக்குதல் பற்றியும் எழுத இருப்பதான குறிப்பையும் பார்க்கின்றோம். அதை எழுத முன்னர் மலரவன் காலமாகிவிட்டார் என்பது துயரமானது. அந்தச் சிலாவத்துறை சமரிலே மலரவன் படுகாயமுற்று தனது சிறுநீரகம் ஒன்றையும் இழக்கின்றார். 'புயல் பறவை' நூல், பின்னர் மலரவனின் தாயால் வெளியிடப்பட்டிருக்கின்றது. 'புயல் பறவை' யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து இயக்கத்தில் போகின்றவர்களையும், இயக்கத்தில் பெண்களைச் சேர்ப்பது குறித்த உரையாடல்களும் இருக்கின்றன என அறிகின்றேன். (இந்நூல்களைத் தேடுபவர்க்கு, 'போர் உலா', 'புயல் பறவை' இரண்டையும் 'விடியல்' பதிப்பகம் இப்போது வெளியிட்டிருக்கின்றது). மலரவன் சிலாவத்துறை சமரில் (சிறுநீரகம் ஒன்றை இழந்து) காயங்களை ஆற்றுப்படுத்திக் கொண்டிருந்தபோது அவரின் தாயாரோடு இந்தப் பிரதிகளைப் பற்றிப் பேசியும், திருத்தங்களையும் செய்திருக்கின்றார் என்று அவரது தாயான எழுத்தாளரான மலரன்னை ஓரிடத்தில் குறிப்பிட்டிருக்கின்றார். மலரவன் இயக்கத்தில் இருந்தபோது அப்போது முக்கிய ஒரு படைத்துறையாக வளர்ந்து கொண்டிருந்த பசீலன் -2000 பீரங்கிப்படையில் முன்னணிப் படைவீரராக இருந்தவர். இது இயக்கத்தின் உள்ளூர்த் தயாரிப்பு மோட்டார்களைக் கொண்டிருந்தது. யாழ் கோட்டையை அன்று இயக்கம் கைப்பற்றியதில் இந்தப் படையணியின் பங்கும் அளப்பரியது என்பதை அன்றையகாலத்தில் யாழில் இருந்தவர்க்கு தெரியும். பசீலன் என்பவர் வன்னி மாவட்டத் தளபதியாக இருந்து இந்திய இராணுவ காலத்தில் கொல்லப்பட்டவர். அவர் நினைவாக இந்தப் படையணி தொடங்கப்பட்டது. போர் உலாவிலும் மலரவன் இந்தப் படையணியின் ஒருவராகவே தாக்குதலுக்கு வருகின்றார். மணலாற்றில் இருந்து பீரங்கிகளையும் நகர்த்த வேண்டும். அதேசமயம் இலங்கை இராணுவத்தின் விமானங்களின் கண்களுக்கும் தெரியக் கூடாது. இதை நகர்த்தும்போது சாதாரண மக்களும் காணக்கூடாது. இல்லாவிட்டால் ஒரு தாக்குதல் நடக்கப்போகின்றது என்ற செய்தி பரவி, முழுத்தாக்குதலுமே தோல்வியில் முடியும் ஆபத்தும் இருக்கின்றது. 3. மலரவன், மாங்குளம் முகாம் உள்ளிட்ட சில தாக்குதல்களின் பங்குபற்றியபின், அவருக்கு இருந்த எழுத்துத் திறமையால் புலிகள் அவரை ஒவ்வொரு சண்டையின்போதும் நடப்பவற்றையும், அதை ஆராய்ந்து எழுதுவதற்குமென நியமித்திருக்கின்றனர் (பசீலன் -2000 அணியையும் பின்னர் இயக்கம் கலைத்து விட்டிருந்தது). மலரவன் எழுதிய முக்கிய இன்னொரு சண்டை அனுபவம், அவரின் பொறுப்பாளரான அப்போது இருந்த தமிழ்ச்செல்வனால் பாராட்டப்பட்டபோதும், நிறைய இராணுவ இரகசியங்கள் அதில் இருந்ததால் அது பிரசுரிக்காமலே போய்விட்டது. அதுவும் வெளிவந்திருந்தால் இன்னொரு 'போர் உலா' போல முக்கியமான படைப்பாக ஆகியிருக்கும். மாங்குள முகாம் தகர்ப்பு பெரும் செய்தியாக எங்களின் காலத்தில் பேசப்பட்டது. அதில்தான் புலிகளின் முக்கியமான ஒருவராக இருந்த லெப்.கேணல் போர்க் தற்கொலைப்போராளியாக சென்று முகாம் தகர்ப்பைத் தொடக்கி வைத்தவர். எங்கள் காலத்தில் ஒருவருக்கு லெப்.கேணல் என்ற பதவி கொடுக்கப்பட்டால், பின்னரான காலத்தில் கேணல்/பிரிகேடியர் போன்ற பெரும் தளபதிகளுக்கு நிகர்த்தது அது. புலிகளின் மாவட்டப் பொறுப்பாளர்களாக இருந்த தளபதிகளான ராதா, விக்டர் போன்ற மிகச் சிலருக்கே இந்த லெப்.கேணல் பதவி அப்போது கொடுக்கப்பட்டிருந்தது ( எங்களின் காலத்தில் முதலாவது கேணல் பட்டம் பின்னர் கிட்டுவோடு தொடங்கியிருக்க வேண்டும்). போர்க்கின் புகைபடத்தோடு வந்த மாங்குளம் முகாம் தகர்ப்பை அவ்வளவு பதைபதைப்புடன் அன்று வாசித்ததும் நினைவில் இருக்கின்றது. இந்த வாழ்க்கைதான் எவ்வளவு விசித்திரமானது. அதுபோல இன்னொரு சுவாரசியமான (அப்படிச் சொல்லலாமோ தெரியாது) விடயமும் நினைவுக்கு வருகின்றது. வன்னியில் இருந்த சமயம், எனக்கு பால்ராஜோடு பேசும் ஒரு சந்தர்ப்பம் நண்பர்களோடு வாய்த்தது. அப்போது பிரிகேடியர் தரத்தில் இருந்த பால்ராஜ், தற்செயலாக மாங்குளம் முகாம் தகர்ப்புப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். மலரவன் எழுதிய போர் உலாவில் வந்த தாக்குதலை முன்னின்று நடத்திய அன்றைய வன்னித் தளபதியாக பால்ராஜே இருந்தவர். பால்ராஜ் அங்கே நடந்த தாக்குதலையோ, அவருக்கு நெருக்கமாக இருந்த போர்க் தற்கொலைப்போராளியாகப் போனது பற்றியோ எதுவும் பேசவில்லை. அவர் எங்களுக்கு அந்த சமரில் களமாடிய வீரமிக்க இலங்கை இராணுவ மேஜர் ஒருவரைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார் அந்த மேஜர்தான் அந்த இராணுவ முகாமிற்குப் பொறுப்பாக இருந்தவர்களில் ஒருவர். புலிகள் கிட்டத்தட்ட முகாமைத் தகர்த்து வெல்லும் நிலை வந்துவிட்டது. அந்த இராணுவ மேஜர் உயிரோடு இருந்த மற்றவர்களையெல்லாம் தப்பிப் போகச் சொல்லிவிட்டு, அந்த முகாமைவிட்டு வெளியேறாமல் இறுதிவரை சண்டையிட்டு உயிர் நீத்தவர் என்று சொல்லிக் கொஞ்சம் இடைவெளி விட்டு, 'அவன் ஒரு மரியாதைக்குரிய வீரன்' என்றார். அப்போது நான் அவரில் பார்த்தது எதிர்த்தரப்பின் வீரத்தை மதிக்கும் ஓர் உயரிய தளபதியின் ஆளுமையை. 4. மலரவனின் படைப்பும், வீரமும் நின்று இயங்கிய ஓர்மத்தை, தமிழ்ச்செல்வன் இந்த நூலின் பிற்பகுதியில் எழுதிய அஞ்சலிக் குறிப்பில் குறிப்பிடுகின்றார். சிலாவத்துறை இராணுவ முகாம் தாக்குதலில், பசீலன் -2000 அணி கடும் இழப்பைச் சந்திக்கின்றது. இந்த அணியில் மலரவனோடு பல சண்டைகளில் சேர்ந்து நின்ற அவரது நண்பன் (மேஜர்) லம்பா இறந்துவிடுகின்றார். அவ்வளவு வேதனையோடும், கோபத்தோடும் இருக்கும் மலரவனை விட்டால் அவனும் உணர்ச்சி நிமித்தம் இராணுவ எல்லைக்குள் புகுந்து இறந்துவிடுவான் என்று தமிழ்ச்செல்வன் அஞ்சுகின்றார். அந்தக் கோபத்தை, அந்த உக்கிர சண்டையின் நடுவிலும் எங்கோ ஒரு மூலையில் ரோர்ச் லைட்டின் உதவியுடன், லம்பா பற்றிய நினைவுக்குறிப்பை எழுதிவிட்டு அதை பத்திரிகைக்கு அனுப்பிவிடுங்கள் என்று மலரவன் கொன்டு வந்து தந்தான் என்று தமிழ்ச்செல்வன் குறிப்பிடுகின்றார். அதேபோன்று சிலாவத்துறை தாக்குதலில் இறுதிநாள்களில் பீரங்கியை இராணுவத்துக்கு அருகில் நகர்த்தி அவ்வளவு உக்கிரமானமாக சண்டை செய்தான் என்றும், இவன் இனி தப்பியே வரமாட்டான் என்று நம்பியவளவுக்கு அவனது மூர்க்கம் அப்படி இருந்தது என்றும் தமிழ்ச்செல்வன் பதிவு செய்கின்றார். இச்சமரிலே மலரவன் காயமடைந்து அவரது சிறுநீரகமொன்றையும் இழந்திருக்கின்றார். மலரவன் போல அன்றைய காலங்களில் பல போராளிகள், படைப்பாளிகளாகவும் பரிணமித்தார்கள். மேஜர் பாரதி, கப்டன் கஸ்தூரி, 2ம். லெப்.வானதி, பின்னர் மலைமகள் என பெண்களிடையேயும் வீரியமிக்க பல படைப்பாளிகள் தோன்றினார்கள். அவர்களின் பெரும்பாலான படைப்புக்கள் அன்றைய காலங்களில் தொகுப்புக்களாகியபோதும் இப்போதைய தலைமுறைக்குக் கிடைப்பதில்லை. இந்தப் பெண்களின் சிலர் இயக்கம் படுமோசமாக முதலில் தோற்ற ஆனையிறவு முகாம் ('ஆகாய கடல் வெளி சமர்') தகர்ப்பில் இறந்துபோனவர்கள். இன்று சிலர், தாம் ஒன்றிரண்டு வருடங்கள் இயக்கங்களில் இருந்து தம்மைத் தொடர்ந்து முன்னாள் போராளிகளாக முன்வைக்கும்போது, மேலே குறிப்பிட்டப்பட்டவர்கள் போராளிகளாகவும் படைப்பாளிகளாகவும் இருந்து மரணித்தவர்கள் என்பதை நாம் நினைவில் இருத்தவேண்டும். அவர்களே மிகுதி அனைவரையும் விட போராளிப் படைப்பாளிகளாக முன்னிலைப்படுத்தப்பட வேண்டியவர்கள். ஒருவர் தன்னை கடந்தகாலத்தில் போராளியாகவோ அல்லது ஆதரவாளராகவோ முன்வைத்து பொதுவெளியில் பேசினால், அவர்கள் எந்தக்காலத்தில், எப்போது அப்படி இருந்தார்கள் என்பதை தமது நூல்களில் தம்மைப் பற்றிய அறிமுகத்தில் முன்வைக்க வேண்டியது குறைந்தபட்ச அறமாகும். ஏனெனில் அதுவே தமது முழு வாழ்க்கையையே களத்தில் காவுகொடுத்த மலரவன், பாரதி, கஸ்தூரி, வானதி, மலைமகள் என்கின்ற எண்ணற்ற போராளிப் படைப்பாளிகளுக்கு நாம் கொடுக்கக்கூடிய குறைந்தபட்ச மரியாதையாக இருக்கும். ***************** இளங்கோ டிசே - முகநூலில்