Everything posted by கிருபன்
-
சம்பந்தர் காலமானார்
சம்பந்தனின் மறைவுக்கு இந்திய பிரதமர் இரங்கல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் மறைவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தன்னுடைய X தளத்தில் பதிவொன்றை இட்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர் இரா. சம்பந்தனின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடனான சந்திப்புகளின் இனிய நினைவுகளை எப்போதும் போற்றுவார். இலங்கையின் தமிழ் தேசங்களுக்கு அமைதி, பாதுகாப்பு, சமத்துவம், நீதி மற்றும் கண்ணியம் நிறைந்த வாழ்க்கையை அவர் இடைவிடாமல் பின்பற்றினார். இலங்கையிலும் இந்தியாவிலும் உள்ள அவரது நண்பர்கள் மற்றும் பின்பற்றுபவர்களால் அவர் இழக்கப்படுவார் என்றும் குறிப்பிட்டுள்ளார். https://www.tamilmirror.lk/செய்திகள்/சம்பந்தனின்-மறைவுக்கு-இந்திய-பிரதமர்-இரங்கல்/175-339688 மூத்த தமிழ் அரசியல்வாதி சம்பந்தன் காலமானார் : அரசியல்வாதிகள், பிரமுகர்கள் இரங்கல் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தன் இயற்கை எய்தினார். உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணித்ததாக குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர். 1933ஆம் ஆண்டு பெப்ரவரி ஐந்தாம் திகதி பிறந்த சம்பந்தன் இயற்கை எய்தும்போது அவருக்கு வயது 91 என்பது குறிப்பிடத்தக்கது. மூத்த அரசியல்வாதியான இரா. சம்பந்தனின் மறைவுக்கு அரசியல்வாதிகள், பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் இரங்கல் ! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் எனது நீண்டகால நண்பர் நாங்கள் கடந்த பல காலங்களாக பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம். சம்பந்தனின் மறைவு இலங்கை அரசியல் சகோதரத்துவத்திற்கும் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஒரு பாரிய இழப்பாகும் என்று மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள இரங்கலில் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் நாமல் இரங்கல் ! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர்.சம்பந்தனின் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த கவலையடைவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். அவரது கொள்கைகளுக்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஒரு நீடித்த பாரம்பரியத்தை விட்டுச்சென்றுள்ளது. இந்த சோகமான தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என மேலும் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் இரங்கல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் இலங்கையின் மூத்த அரசியல்வாதியுமான பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனின் இழப்பு எம் நாட்டு அரசியலுக்கு பேரிழப்பாகும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். அன்னாரின் இழப்பால் துயறுரும் குடும்பத்தினர் மற்றும் நலன்விரும்பிகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இரங்கல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவர்களின் மறைவில் நான் ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைகின்றேன். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நீண்டகால நண்பரும், இலங்கையின் ஒரு முன்மாதிரியான மற்றும் நம்பிக்கைக்குரிய தலைவர் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/304895 சம்பந்தன் மறைவுக்கு அங்கஜன் இரங்கல் இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் மறைவுக்கு யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தவிசாளர் அங்கஜன் இராமநாதன் இரங்கல் தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அன்னாரின் இழப்பு தமிழ்த் தேசிய அரசியல் பரப்புக்கு பேரிழப்பாகும். தனது சட்டத் தொழிலை தியாகம் செய்து தன்னை மக்கள் அரசியலில் ஈடுபடுத்திய பெருமகனார் அவர். தமிழர்களின் மூன்று வகையான போராட்ட காலங்களிலும் தனது அரசியல் சாணக்கியத்தையும், அனுபவத்தையும் பல சந்தர்ப்பங்களில் இராஜதந்திரங்களாக அவர் பயன்படுத்தியிருந்ததை இத்தருணத்தில் நினைவில் கொள்ள வேண்டும். திருகோணமலை மாவட்டத்தின் தமிழர் பிரதிநிதித்துவத்தின் இறுதி நம்பிக்கையாக திகழ்ந்த அவரது இழப்பு ஈடுசெய்யப்பட முடியாதது. வரலாற்று பாரம்பரியம் மிக்க கட்சியையும், வேறுபட்ட நீரோட்டங்களில் பயணித்த கட்சிகளின் கூட்டமைப்பையும் தனது இயலுமைக்காலங்கள் அனைத்திலும் தன் ஆளுமையால் சிதைவடையாது காப்பாற்றியதில் அவருக்கு இணை அவர் மட்டுமே. இலங்கைத் தமிழர்களின் அரசியல் வரலாற்றின் நீண்டகால அனுபவப் பக்கமொன்றை எங்கள் இனம் இன்று இழந்துள்ளது. அன்னாரின் இழப்பால் துயரடைந்துள்ள குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், அரசியல் கட்சியினர், ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். https://www.tamilmirror.lk/செய்திகள்/சம்பந்தன்-மறைவுக்கு-அங்கஜன்-இரங்கல்/175-339678 பாராளமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் அவர்களின் மறைவையொட்டி இந்துக் குருமார் அமைப்பின் இரங்கல் செய்தி ! இரங்கல் பகிர்ந்து, ஆத்ம சிவப்பிராப்திக்கு இறை பிரார்த்தனை செய்கிறோம். எமது தமிழினம் ஓர் பெரும் பலத்தினை இழந்த சூழலில் உள்ளது. சுமார் ஆறு தசாப்தங்களாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினராக விளங்கித் ஆற்றல்மிகு சக்தியாக தமிழ் மக்கள் மத்தியில் விளங்கிய ஓர் பண்புமிக்க அறிவாளனை இழந்துள்ளோம். இராஜதந்திர நகர்வுகளை செய்யும் சிறப்பாளர். பல்வேறு நாட்டு தலைவர்களாலும் இராஜதந்திரிகளாலும் மதிக்கப்பட்டவர். எமது தமிழ் பிரதிநிதிகளை ஓர் அணியாக செயற்பட வேண்டும் என செயற்பட்டவர். நிதானமாக நுண்ணறிவுடன் செயலாற்றிய, தலைமை தாங்கிய தலைவரை இழந்துள்ளோம். இச்சமயத்தில் அமரரது ஆத்ம சிவப்பிராப்திக்கு இந்துக் குருமார் அமைப்பின் சார்பில் இறை பிரார்த்தனை செய்கிறோம். ஓம் சாந்தி. கலாநிதி. சிவஸ்ரீ. கு.வை. க. வைத்தீஸ்வர குருக்கள். தலைவர் இந்துக் குருமார் அமைப்பு. சிவஸ்ரீ. ச. சாந்தரூப குருக்கள். செயலாளர், இந்துக் குருமார் அமைப்பு. https://www.battinews.com/2024/07/blog-post_47.html
-
தொடர் தற்கொலை தாக்குதல்: நைஜீரியாவில் பயங்கரம்
தொடர் தற்கொலை தாக்குதல்: நைஜீரியாவில் பயங்கரம் damithJuly 1, 2024 நைஜீரியாவில் (Nigeria) நடந்த தொடர் தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதுடன் 19 பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்படி தாக்குதல் சம்பவமானது நேற்றுமுன்தினம்(29)இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நைஜீரியாவின் வடகிழக்கு போர்னோ மாநிலத்தில் பெண் தற்கொலை குண்டுதாரிகளால் குவோசா நகரில் திருமணங்கள், இறுதிச் சடங்குகள் மற்றும் மருத்துவமனைகளை குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த தாக்குதல்களில் குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களும் உயிரிழந்துள்ளதாக போர்னோ மாநில அவசர முகாமைத்துவ அமைப்பின் (State Emergency Management Agency) தலைவர் பார்கிண்டோ சைட் உறுதிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, உட்புற உறுப்பு சேதம் முதல் மண்டை ஓடு மற்றும் மூட்டு முறிவு வரை பலருக்கு அதி தீவிரமான காயம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் விபரித்துள்ளார். மேலும், இந்தத் தாக்குதல்களுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை என்று நைஜீரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.thinakaran.lk/2024/07/01/world/69441/தொடர்-தற்கொலை-தாக்குதல்/
-
சம்பந்தர் காலமானார்
சம்பந்தனின் இறுதிக் கிரியைகள் தொடர்பான அறிவித்தல்! உடல் நலக் குறைவு காரணமாக நேற்று (30) இரவு உயிரிழந்த தமிழரசுக் கட்சியின் மூத்த பெரும் தலைவர் சம்பந்தனின் உடல் இறுதிக் கிரியைகளுக்காக சொந்த ஊரான திருகோணமலைக்கு கொண்டுச் செல்லப்படவுள்ளது. அன்னாரின் உடல் கொழும்பில் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் நாடாளுமன்றத்திலும் ஒரு நாள் அஞ்சலிக்காக வைக்கப்படும். அதன் பின்னர், சம்பந்தனின் உடல் திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தன் நேற்று (30) இரவு 11 மணியளவில் காலமானார். அவர் உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார். http://www.samakalam.com/சம்பந்தனின்-இறுதிக்-கிரி/
-
நெடுந்தீவில் 25 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது!
நெடுந்தீவில் 25 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது! adminJuly 1, 2024 இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் 25 தமிழக கடற்தொழிலாளர்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை (01.07.24) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளையே அவர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களின் 4 படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கைதான கடற்தொழிலாளர்கள் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சொல்லப்பட்டுள்ள நிலையில் விசாரணைகளின் பின்னர் கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தினரினர் ஊடாக ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2024/204818/
-
நல்லூர் வீதித்தடைக்கு எதிராக வழக்கு – வீதித்தடையை கோரும் வேலன் சுவாமிகள்!
நல்லூர் வீதித்தடைக்கு எதிராக வழக்கு – வீதித்தடையை கோரும் வேலன் சுவாமிகள்! adminJuly 1, 2024 யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ காலத்தில், ஆலயத்தை சூழவுள்ள வீதிகள் பொது போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டு , மூடப்படுவதற்கு எதிராக யாழ்ப்பாண நீதிமன்றில் சில தரப்பினர் வழக்கு தொடரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நல்லூர் கந்தசுவாமி கோயில் மகோற்சவ காலத்தில் முருகப்பெருமான் வலம் வருகின்ற வெளிவீதிச் சூழலில் புனிதத்தையும், பக்தர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துமாறு யாழ் மாநகர சபையிடம் சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் கோரிக்கை விடுத்துள்ளார். காலங்காலமாக நல்லூர் ஆலய மகோற்சவ காலத்தில் யாழ் மாநகர சபையானது தனது பணிகளை செவ்வனே சிறப்பாக நிறைவேற்றி வந்திருக்கிறது. ஆனால் இவ்வருடம் சிலரின் அழுத்தங்கள் காரணமாக, காலங்காலமாக பேணப்பட்டு வந்த நடைமுறைகளை மாற்ற முயற்சிப்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. தன் முன் அனைவரும் சமம் என்ற நல்லூர் கந்தப் பெருமானுடைய தனித்துவத்தை பாதிக்கும் வகையில், ஒருசிலரை முருகப்பெருமான் வலம்வரும் வீதியில் பாதணிகளுடன் அனுமதிப்பது பல்லாயிரக்கணக்கான முருக அடியார்களின் மனதைப் புண்படுத்தும் செயலாகும். அத்துடன் அங்கப்பிரதிஸ்டை செய்கின்ற அடியவர்களுக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும். அத்துடன் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் நடமாடுகின்ற வெளிவீதியில் அத்தியாவசியமான வாகனங்களை தவிர ஏனைய வாகனங்களை அனுமதிப்பது அடியவர்களின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பதோடு பக்தர்களிடையே பாகுபாட்டையும் ஏற்படுத்தும். ஆகவே காலங்காலமாக பேணப்பட்டு வந்த அதே நடைமுறைகளை இவ்வருட நல்லூர் மகோற்சவ காலத்திலும் நடைமுறைப்படுத்துமாறு யாழ் மாநகரசபையை வேண்டிக்கொள்கிறேன் – என்றார். அதேவேளை நல்லூர் ஆலய மகோற்சவ காலமான 27 நாட்கள் ஆலய சூழலில் உள்ள வீதிகள் மூடப்பட்டு இருக்கும். வீதி தடைகளை தாண்டி வாகனங்களை கொண்டு செல்லவோ , பாதணிகள் அணிந்து செல்லவோ அனுமதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2024/204809/
-
சம்பந்தர் காலமானார்
தமிழர்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ள சிங்களவர்களுக்கு மிகவும் விட்டுக்கொடுப்புடனும், கிழக்கு மாகாணசபையை முஸ்லிம்களுக்கு விட்டுக்கொடுத்தும், பதிலுக்கு ஒரு துரும்பைத்தன்னும் பெறாமலேயே தோல்வியடைந்த தமிழ்க்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தரின் மறைவினால் கவலையில் இருக்கும் அவரை நம்பியிருந்தோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
இரணைமடுக்குளத்தில் நீராடச் சென்ற சிறுவன் சடலமாக மீட்பு
இரணைமடுக்குளத்தில் நீராடச் சென்ற சிறுவன் சடலமாக மீட்பு இரணைமடுக் குளத்தில் நீராடச் சென்ற 14 வயது சிறுவன் காணாமல் போன நிலையில் இன்று (30) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி நீர்ப்பாசன குளமான இரணைமடுக்குளத்தில் நீராடுவதற்காக காணாமல் போன சிறுவன், அவனது சகோதரன் உட்பட நால்வர் சென்றுள்ளனர். நேற்று (29) காலை 11.30 மணியளவில் நீராடச் சென்ற இவர்களில் செல்வரத்தினம் றுசாந்தன் எனும் 14 வயதுடைய சிறுவன் நீர்ல் மூழ்கிய நிலையில் அருகில் உள்ள இராணுவ முகாமிற்கும், உறவினர்களிற்கும் தகவல் வழங்கியுள்ளனர். இந்த நிலையில் குறித்த சிவனை தேடும் பணியில் இரணைமடு மீனவர்களுகும், பிரதேச மக்களுமாக நீண்ட நேரமாக தேடி வந்த நிலையில் நேற்று மீட்க முடியாது போனது. இன்று மீண்டும் தேடப்பட்ட நிலையில் குறித்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காணாமல் போன சிறுவன் திருமுறிகண்டி இந்து வித்தியாலயத்தில் தரம் 9ல் கல்வி கற்று வருவதுடன், முறிகண்டி வசந்தநகரில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். (ஏ) https://newuthayan.com/article/இரணைமடுக்குளத்தில்_நீராடச்_சென்ற_சிறுவன்_சடலமாக_மீட்பு
-
தேசியமட்டத்தில் உதைபந்தாட்ட சம்பியனாகி வடமாகாணத் தெரிவு அணி !
தேசியமட்டத்தில் உதைபந்தாட்ட சம்பியனாகி வடமாகாணத் தெரிவு அணி ! 29) நேற்றுச் சனிக்கிழமை யாழ்.துரையப்பா மைதானத்தில் இடம்பெற்ற 48 ஆவது தேசிய விளையாட்டு நிகழ்வின் உதைபந்தாட்ட இறுதியாட்டத்தில் வடமாகாணத் தெரிவு அணி மற்றும் மத்தியமாகாணத் தெரிவு அணிகள் மோதின. ஆட்ட நேர முடிவில் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனிலையில் முடிவுற்றதால் நீண்டநேரச் சமனிலை தவிர்ப்பு உதை முடிவில் வடமாகாண அணி வெற்றிபெற்றுக் ஹற்றிக் சம்பியனுடன் வடமாகாணத் தெரிவு அணி தேசிய சம்பியனாகியது. இதேவேளை, நீண்ட இடைவெளியின் பின் 2019 ஆம் ஆண்டில் இடம்பெற்ற 46 ஆவது தேசிய விளையாட்டு நிகழ்வில் வடமாகாண அணி உதைபந்தாட்டத்தில் தேசிய சம்பியனாகியது. இந் நிலையில் கடந்த- 2023 ஆம் ஆண்டிலும், இவ் வருடத்திலும் தேசிய விளையாட்டு நிகழ்வுகளில் உதைபந்தாட்டத்தில் வடமாகாண அணி தொடர்ச்சியாகத் தேசிய சம்பியனாகித் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. (ப) https://newuthayan.com/article/தேசியமட்டத்தில்_உதைபந்தாட்ட_ சம்பியனாகி_வடமாகாணத்_தெரிவு_அணி_!
-
கச்சதீவு பிரச்சினை தொடர்பில் எவ்வித உடன்படிக்கையும் இல்லை!
கச்சதீவு பிரச்சினை தொடர்பில் எவ்வித உடன்படிக்கையும் இல்லை! adminJune 30, 2024 பாக்கு நீரிணை கடற்பரப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை மற்றும் கச்சதீவு பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் எவ்வித புதிய உடன்படிக்கையும் ஏற்படுத்திக்கொள்ளப்படவில்லையென இலங்கை வௌிவிவகார அமைச்சு தெரிவித்தது. அது தொடர்பிலான எவ்வித பேச்சுவார்தைகளும் இடம்பெறவில்லையென வௌிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். பாக்கு நீரிணை கடற்பரப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை தொடர்பான விவகாரங்கள் மற்றும் கச்சதீவு பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் விரிவான உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. எவ்வாறாயினும், ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் தொடர்பான விபரங்கள் வௌியிடப்படவில்லை. எனினும், அவ்வாறான பேச்சுவார்த்தைகள் இடம்பெறவில்லையென இலங்கை வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். https://globaltamilnews.net/2024/204805/
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
போட்டிக்கு ஆட்களை தேடிப்பிடித்து சேரச் செய்த @வீரப் பையன்26க்கும் @ஈழப்பிரியன் ஐயாவுக்கும் நன்றி பல! 70 பக்கங்கள் வரை நீளச் செய்ய ஓய்வில்லாமல் பதிவுகள் பல போட்ட @வீரப் பையன்26க்கு யாழ்களப் போட்டியின் Cheerleader 📣 விருது கொடுக்கப்படுகின்றது!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2024 இறுதி நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 127 2 ஈழப்பிரியன் 120 3 கந்தப்பு 119 4 குமாரசாமி 114 5 ரசோதரன் 113 6 நீர்வேலியான் 113 7 சுவி 111 8 வீரப் பையன்26 108 9 கோஷான் சே 108 10 தமிழ் சிறி 107 11 கிருபன் 107 12 நிலாமதி 104 13 வாத்தியார் 104 14 எப்போதும் தமிழன் 103 15 வாதவூரான் 100 16 அஹஸ்தியன் 99 17 நந்தன் 99 18 தியா 97 19 P.S.பிரபா 96 20 ஏராளன் 94 21 கல்யாணி 85 22 புலவர் 80 23 நுணாவிலான் 78 உலகக் கிண்ணத் தொடரில் சுப்பர் 8 சுற்றில் இருந்து தொடர்ந்தும் முன்னணியில் நின்றும், வெற்றி பெற்ற அணிகளையும், சாதனை படைக்கும் பல அணிகளையும் சரியாகக் கணித்தும், யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2024 இல் வெற்றியைத் தட்டிச் செல்லும் @பிரபா USA க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! கூடவே தொடர்ச்சியாக முதல் மூன்று இடங்களில் பலநாட்கள் நின்ற @ஈழப்பிரியன் ஐயாவுக்கும், @ரசோதரன் க்கும், கடைசி நாட்களில் முன்னிலைக்கு வந்த @கந்தப்புக்கும், @குமாரசாமி ஐயாவுக்கும் வாழ்த்துக்கள். போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், திரியை கலகலப்பாக வைத்திருக்க உதவிய அனைவருக்கும், குறிப்பாக @வீரப் பையன்26, @ரசோதரன், @ஈழப்பிரியன் ஐயா போன்றோருக்கும், அதிலும் @ஈழப்பிரியன் ஐயா பேத்திக்கு நீச்சல் தடாகத்தில் நடந்த விபத்துக்கு மத்தியிலும் திரியில் தொடர்ச்சியாக கருத்துக்கள் வைத்ததற்கும், நன்றி பல.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி சாதனைகளின் தரவுகளுக்கான கேள்விகள் 80) இலிருந்து 85) வரைக்கான கணிப்புக்களும், சரியான பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன. ---------------------------------------------------------- 80) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Nicholas Pooran (WI) - 98 Runs ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை என்பதால் புள்ளிகள் கிடையாது! போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் Travis Head வீரப் பையன்26 Travis Head சுவி Kane Williamson நிலாமதி Jos Buttler குமாரசாமி Phil Salt தியா Jos Buttler தமிழ் சிறி Jonny Bairstow புலவர் Travis Head P.S.பிரபா Travis Head நுணாவிலான் Travis Head பிரபா USA Travis Head வாதவூரான் Yashasvi Jaiswal ஏராளன் Yashasvi Jaiswal கிருபன் Babar Azam ரசோதரன் Glenn Maxwell அஹஸ்தியன் Jos Buttler கந்தப்பு Phil Salt வாத்தியார் Shimron Hetmyer எப்போதும் தமிழன் Travis Head நந்தன் Yashasvi Jaiswal நீர்வேலியான் Tristan Stubbs கல்யாணி Yashasvi Jaiswal கோஷான் சே Travis Head 81) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) Nicholas Pooran (WI) - 98 Runs சரியாகக் கணித்தவர்கள்: ஈழப்பிரியன் பிரபா USA வாத்தியார் போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் WI வீரப் பையன்26 AUS சுவி IND நிலாமதி ENG குமாரசாமி ENG தியா END தமிழ் சிறி ENG புலவர் IND P.S.பிரபா AUS நுணாவிலான் NZ பிரபா USA WI வாதவூரான் IND ஏராளன் IND கிருபன் AUS ரசோதரன் AUS அஹஸ்தியன் AUS கந்தப்பு AUS வாத்தியார் WI எப்போதும் தமிழன் IND நந்தன் IND நீர்வேலியான் ENG கல்யாணி IND கோஷான் சே IND 82) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Fazalhaq Farooqi (AFG) 5/9 Econ: 2.25 ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை என்பதால் புள்ளிகள் கிடையாது! போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் Josh Hazlewood வீரப் பையன்26 Travis Head சுவி Mohammed Siraj நிலாமதி Wanindu Hasaranga குமாரசாமி Jasprit Bumrah தியா Shamar Joseph தமிழ் சிறி Matheesha Pathirana புலவர் Jasprit Bumrah P.S.பிரபா Matheesha Pathirana நுணாவிலான் Sam Curran பிரபா USA Jasprit Bumrah வாதவூரான் Rashid Khan ஏராளன் Jasprit Bumrah கிருபன் Shaheen Afridi ரசோதரன் Mohammed Siraj அஹஸ்தியன் Trent Boult கந்தப்பு Jasprit Bumrah வாத்தியார் Sam Curran எப்போதும் தமிழன் Jasprit Bumrah நந்தன் Jasprit Bumrah நீர்வேலியான் Jasprit Bumrah கல்யாணி Devon Conway கோஷான் சே Josh Hazlewood 83) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) Fazalhaq Farooqi (AFG) 5/9 Econ: 2.25 சரியாகக் கணித்தவர்: வாதவூரான் போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் SL வீரப் பையன்26 IND சுவி NZ நிலாமதி SL குமாரசாமி IND தியா WI தமிழ் சிறி SL புலவர் IND P.S.பிரபா SL நுணாவிலான் ENG பிரபா USA IND வாதவூரான் AFG ஏராளன் AUS கிருபன் AUS ரசோதரன் IND அஹஸ்தியன் SA கந்தப்பு AUS வாத்தியார் SL எப்போதும் தமிழன் SL நந்தன் SL நீர்வேலியான் AUS கல்யாணி NZ கோஷான் சே SL 84) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Jasprit Bumrah (IND) - consistent bowling throughout the tournament saw him crowned Player of the Tournament ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை என்பதால் புள்ளிகள் கிடையாது! போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் Jos Buttler வீரப் பையன்26 Virat Kohli சுவி David Warner நிலாமதி Virat Kohli குமாரசாமி Jos Buttler தியா Nicholas Pooran தமிழ் சிறி Wanindu Hasaranga புலவர் Virat Kohli P.S.பிரபா Shivam Dube நுணாவிலான் Mohammad Rizwan பிரபா USA Travis Head வாதவூரான் Quinton de Kock ஏராளன் Mitchell Starc கிருபன் Virat Kohli ரசோதரன் Brandon King அஹஸ்தியன் Virat Kohli கந்தப்பு Travis Head வாத்தியார் Andre Russell எப்போதும் தமிழன் Jos Buttler நந்தன் Virat Kohli நீர்வேலியான் Virat Kohli கல்யாணி Mohammad Rizwan கோஷான் சே Jofra Archer 85) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) Jasprit Bumrah (IND) - consistent bowling throughout the tournament saw him crowned Player of the Tournament சரியாகக் கணித்தவர்கள்: வீரப் பையன்26 நிலாமதி பிரபா USA கந்தப்பு போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் WI வீரப் பையன்26 IND சுவி ENG நிலாமதி IND குமாரசாமி ENG தியா WI தமிழ் சிறி SL புலவர் AUS P.S.பிரபா AUS நுணாவிலான் PAK பிரபா USA IND வாதவூரான் ENG ஏராளன் AUS கிருபன் AUS ரசோதரன் WI அஹஸ்தியன் AUS கந்தப்பு IND வாத்தியார் WI எப்போதும் தமிழன் AUS நந்தன் PAK நீர்வேலியான் WI கல்யாணி PAK கோஷான் சே AUS
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி சாதனைகளின் தரவுகளுக்கான கேள்விகள் 74) இலிருந்து 79) வரைக்கான கணிப்புக்களும், சரியான பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன. ---------------------------------------------------------- 74) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) WI 218/5 சரியாகக் கணித்தவர்கள்: ஈழப்பிரியன் தியா வாத்தியார் போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் WI வீரப் பையன்26 IND சுவி IND நிலாமதி IND குமாரசாமி IND தியா WI தமிழ் சிறி IND புலவர் IND P.S.பிரபா IND நுணாவிலான் SA பிரபா USA SA வாதவூரான் IND ஏராளன் IND கிருபன் ENG ரசோதரன் AUS அஹஸ்தியன் IND கந்தப்பு ENG வாத்தியார் WI எப்போதும் தமிழன் AUS நந்தன் IND நீர்வேலியான் IND கல்யாணி SA கோஷான் சே SL 75) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) UGA 39/10 சரியாகக் கணித்தவர்கள்: P.S.பிரபா அஹஸ்தியன் கந்தப்பு எப்போதும் தமிழன் நீர்வேலியான் கல்யாணி போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் PNG வீரப் பையன்26 CAN சுவி OMA நிலாமதி CAN குமாரசாமி CAN தியா CAN தமிழ் சிறி PNG புலவர் PNG P.S.பிரபா UGA நுணாவிலான் NED பிரபா USA NEP வாதவூரான் PNG ஏராளன் PNG கிருபன் CAN ரசோதரன் PNG அஹஸ்தியன் UGA கந்தப்பு UGA வாத்தியார் OMA எப்போதும் தமிழன் UGA நந்தன் PNG நீர்வேலியான் UGA கல்யாணி UGA கோஷான் சே PNG 76) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Rahmanullah Gurbaz (AFG) - 281 ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை என்பதால் புள்ளிகள் கிடையாது! போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் Rachin Ravindra வீரப் பையன்26 Virat Kohli சுவி Travis Head நிலாமதி Virat Kohli குமாரசாமி Yashasvi Jaiswal தியா Virat Kohli தமிழ் சிறி Babar Azam புலவர் Rachin Ravindra P.S.பிரபா Daryl Mitchell நுணாவிலான் Glenn Phillips பிரபா USA Virat Kohli வாதவூரான் Travis Head ஏராளன் Virat Kohli கிருபன் Mohammad Rizwan ரசோதரன் Brandon King அஹஸ்தியன் Virat Kohli கந்தப்பு Travis Head வாத்தியார் Virat Kohli எப்போதும் தமிழன் Virat Kohli நந்தன் Travis Head நீர்வேலியான் Travis Head கல்யாணி Virat Kohli கோஷான் சே Rachin Ravindra 77) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) Rahmanullah Gurbaz (AFG) - 281 ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை என்பதால் புள்ளிகள் கிடையாது! போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் AUS வீரப் பையன்26 IND சுவி IND நிலாமதி IND குமாரசாமி IND தியா IND தமிழ் சிறி PAK புலவர் NZ P.S.பிரபா NZ நுணாவிலான் NZ பிரபா USA AUS வாதவூரான் AUS ஏராளன் IND கிருபன் IND ரசோதரன் WI அஹஸ்தியன் ENG கந்தப்பு ENG வாத்தியார் IND எப்போதும் தமிழன் AUS நந்தன் PAK நீர்வேலியான் IND கல்யாணி IND கோஷான் சே AUS 78) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Fazalhaq Farooqi (AFG) - 17 Ave: 9.41, Econ: 6.31 ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை என்பதால் புள்ளிகள் கிடையாது! போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் Jason Holder வீரப் பையன்26 Jasprit Bumrah சுவி Jasprit Bumrah நிலாமதி Jasprit Bumrah குமாரசாமி Jasprit Bumrah தியா Jasprit Bumrah தமிழ் சிறி Jasprit Bumrah புலவர் Jasprit Bumrah P.S.பிரபா Jasprit Bumrah நுணாவிலான் Sam Curran பிரபா USA Jasprit Bumrah வாதவூரான் Wanindu Hasaranga ஏராளன் Trent Boult கிருபன் Adam Zampa ரசோதரன் Pat Cummins அஹஸ்தியன் Jasprit Bumrah கந்தப்பு Jasprit Bumrah வாத்தியார் Jasprit Bumrah எப்போதும் தமிழன் Jasprit Bumrah நந்தன் Adam Zampa நீர்வேலியான் Jasprit Bumrah கல்யாணி Matheesha Pathirana கோஷான் சே Mark Wood 79) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) Fazalhaq Farooqi (AFG) - 17 Ave: 9.41, Econ: 6.31 ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை என்பதால் புள்ளிகள் கிடையாது! போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் IND வீரப் பையன்26 IND சுவி ENG நிலாமதி IND குமாரசாமி IND தியா IND தமிழ் சிறி IND புலவர் IND P.S.பிரபா IND நுணாவிலான் ENG பிரபா USA IND வாதவூரான் SL ஏராளன் NZ கிருபன் ENG ரசோதரன் AUS அஹஸ்தியன் SA கந்தப்பு IND வாத்தியார் IND எப்போதும் தமிழன் AUS நந்தன் AUS நீர்வேலியான் ENG கல்யாணி SL கோஷான் சே IND கேள்விகள் 79) வரைக்கான பதில்களின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 121 2 ஈழப்பிரியன் 117 3 கந்தப்பு 116 4 குமாரசாமி 114 5 ரசோதரன் 113 6 நீர்வேலியான் 113 7 சுவி 111 8 கோஷான் சே 108 9 தமிழ் சிறி 107 10 கிருபன் 107 11 வீரப் பையன்26 105 12 எப்போதும் தமிழன் 103 13 நிலாமதி 101 14 வாத்தியார் 101 15 அஹஸ்தியன் 99 16 நந்தன் 99 17 தியா 97 18 வாதவூரான் 97 19 P.S.பிரபா 96 20 ஏராளன் 94 21 கல்யாணி 85 22 புலவர் 80 23 நுணாவிலான் 78
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அப்ப ஜேர்மனி நல்லா விளையாடமலே வென்றுவிட்டது என்பதை ஒத்துக்கொள்கின்றீர்கள்!😛
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இன்றைய T20 உலகக் கிண்ண கிரிக்கெட் 2024 இல் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ஆரம்பத்தில் 3 விக்கெட்டுகளை 34 ஓட்டங்களிலேயே இழந்து தடுமாறினாலும் விராட் கோலியின் நிதானமான அரைச் சதத்தினதும், அக்சர் படேல், சிவம் டுபேயினதும் அதிரடி ஆட்டங்களாலும் இறுதியில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குப் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி ஆரம்பத்தில் இரு விக்கெட்டுகளை வேகமாக இழந்தாலும், ஓட்ட விகிதத்தில் பின்தங்கவில்லை. ஹென்றிக் க்ளாஸனின் நெருப்படியான அரைச் சதத்துடன் ஒரு கட்டத்தில் 30 பத்துகளில் 30 ஓட்டங்கள் வெற்றி இலக்காகி இருந்தது. எனினும் இந்திய வேகப் பந்துவீச்சாளர்களின், குறிப்பாக ஜஸ்ப்ரிற் பும்ராவின், துல்லியமான பந்துவீச்சால் விக்கெட்டுகள் சரிய இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: இந்திய அணி 7 ஓட்டங்களால் வெற்றியீட்டி T20 கிரிக்கெட் 2024 க்கான உலகக் கிண்ணத்தைச் சுவீகரித்துக்கொண்டது. யாழ்களப் போட்டியாளர்களில் இங்கிலாந்தின் வெற்றியை சரியாகக் கணித்த @வீரப் பையன்26, @நிலாமதி, @குமாரசாமி, @தமிழ் சிறி, @கிருபன், @நீர்வேலியான் ஆகியோருக்கு மாத்திரம் 5 புள்ளிகள் கிடைக்கின்றன. மற்றையவர்களுக்கு புள்ளிகள் கிடையாது! இன்றைய இறுதிப் போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 121 2 ஈழப்பிரியன் 114 3 குமாரசாமி 114 4 ரசோதரன் 113 5 கந்தப்பு 113 6 சுவி 111 7 நீர்வேலியான் 110 8 கோஷான் சே 108 9 தமிழ் சிறி 107 10 கிருபன் 107 11 வீரப் பையன்26 105 12 நிலாமதி 101 13 எப்போதும் தமிழன் 100 14 நந்தன் 99 15 வாத்தியார் 98 16 வாதவூரான் 97 17 அஹஸ்தியன் 96 18 தியா 94 19 ஏராளன் 94 20 P.S.பிரபா 93 21 கல்யாணி 82 22 புலவர் 80 23 நுணாவிலான் 78 @குமாரசாமி ஐயா மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். வெற்றிக் கனியைத் தட்டிப் பறிப்பாரா?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அப்படி நடக்காட்டியும் ஊத்தலாம்🥃😜
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஆம். ஒரு average இலும் economy rate இலும் ஃபஸல்ஹக் ஃபரூக்கிதான் முன்னணியில் உள்ளார்! இதுக்கு மேல வென்றால் நேரடியா கப்தான்!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
Economy Rate இன்படி தெரிவாகுவார்!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இந்தியா வெற்றி! இத்தாலி வெளியே !
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
சூரியகுமார் பிடிச்ச catch சரியா?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கடைசி ஓவர்! மில்லரின் கையில் கப்! ஹார்டிக் 16 ஓட்டங்களை பாதுகாப்பாரா?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
சுவிஸ் ரக்பி விளையாடுகின்றார்களா? இந்தியா தோல்வியை நோக்கி போகின்றது. க்ளாஸன் அடிக்கிற அடியைப் பார்த்தால் கெதியா முடியும்!0
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இப்ப போயிட்டார்!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
எல்லோரும் ஆவலுடன் காத்திருக்கும் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் 2024 இன் இறுதிப் போட்டி நாளை சனி (29 ஜூன்) நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 73) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) சனி ஜூன் 29: 3:30 PM, பார்படோஸ், தென்னாபிரிக்கா அணி எதிர் இந்தியா அணி SA எதிர் IND ஒரே ஒருவர் மாத்திரம் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்துள்ள்ளார். ஆறு பேர் இந்திய அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். 16 பேர் பிற அணிகள் வெல்வதாகக் கணித்தமையால் அவர்களுக்குப் புள்ளிகள் கிடையாது! தென்னாபிரிக்கா அஹஸ்தியன் இந்தியா வீரப் பையன்26 நிலாமதி குமாரசாமி தமிழ் சிறி கிருபன் நீர்வேலியான் போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் WI வீரப் பையன்26 IND சுவி AUS நிலாமதி IND குமாரசாமி IND தியா WI தமிழ் சிறி IND புலவர் AUS P.S.பிரபா AUS நுணாவிலான் PAK பிரபா USA AUS வாதவூரான் SL ஏராளன் AUS கிருபன் IND ரசோதரன் WI அஹஸ்தியன் SA கந்தப்பு AUS வாத்தியார் WI எப்போதும் தமிழன் ENG நந்தன் AUS நீர்வேலியான் IND கல்யாணி NZ கோஷான் சே ENG நாளைய இறுதிப் போட்டியில் 5 புள்ளிகளைப் பெற்றுக்கொள்ளும் அதிர்ஷ்டம் யாருக்கு வாய்க்கும்? தென்னாபிரிக்கா வெல்லும் எனக் கணித்த @Ahasthiyan க்கா? இந்தியா வெல்லும் எனக் கணித்த @வீரப் பையன்26, @நிலாமதி, @குமாரசாமி, @தமிழ் சிறி, @கிருபன், @நீர்வேலியான் ஆகியோருக்கா? குறிப்பு: யாழ் களப் போட்டியில் வெற்றிவாகை சூடுபவர் உலகக் கிண்ணப் போட்டி 2024 இன் சாதனைப் தரவுகளுக்கான இன்னும் 12 கேள்விகளுக்கான பதில்களுக்குப் பின்னரே அறிவிக்கப்படுவார்!!!
-
பைடன்- ட்ரம்ப் நாளை நேருக்கு நேர் விவாதம்!
வளர்ச்சி அடைந்த நாடுகளில் வலதுசாரிகளும், அப்பட்டமான இனவாதிகளும் ஆட்சிக்கு வரவேண்டும். அதேபோல வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் சர்வாதிகாரிகளும், பின்தங்கிய நாடுகளில் இராணுவ ஆட்சியும் வரவேண்டும். இப்படி உலகம் முழுவதும் கொடூரமான ஆட்சிகள் வந்தால்தான் 8 பில்லியன் தாண்டிய உலகின் சனத்தொகை வளர்ச்சியைக் குறைக்கலாம். வேகமாக பூமியைச் சூடாக்கவும், போர்களை நடாத்தி மக்களைக் கொல்லவும், பஞ்சம், பட்டினிகளை உருவாக்கவும் இவர்களை விட்டால் சிறந்தவர்கள் கிடையாது.😎