Everything posted by கிருபன்
-
“ரணிலிடமிருந்து ரூ.60 கோடி வாங்கினார் சாணக்கியன்” - கோவிந்தன் கருணாகரம்
வாட்ஸப்பில் கண்டது.. நெஞ்சுக்கு நீதி பரபரப்பான பேச்சாற்றல் மிக்க பாராளுமன்ற உறுப்பினர் யாரென்று கேட்டால் பலரது நாவிலும் வரக்கூடிய பெயர் மட்டக்களப்பு சாணக்கியன் என்பதேயாகும். அந்தளவு தூரத்துக்கு கடந்த காலங்களில் அவரது பாராளுமனன்ற உரைகள் அமைந்திருந்தன. குறிப்பாக தொல்பொருள் திணைக்களத்தின் முன்னெடுப்புகள் பற்றிய அவரது உரைகள் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் காலம்சென்ற அமிர்தலிங்கம் அவர்களை நினைவூட்டின. அதன் காரணமாகவே அவர் ஊடகங்களிலும் முன்னிலை வகித்தார். கூடவே அவருக்கிருந்த பன்மொழித் தேர்ச்சியும் அவரைப்பற்றிய பிம்மங்களை கட்டியமைப்பதில் பெரும் பங்கு வகித்தது. ஊடகங்கள் அவரை தங்களது பரபரப்புச் செய்திகளுக்காக நன்கே பயன்படுத்திக்கொண்டனவேயன்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் நடந்துகொண்டிருக்கும் பாரிய அபிவிருத்திப்பணிகளை அவர் குழப்பியடிக்க முனைகின்றார் என்பதையிட்டு அவை கவனம் கொள்ளவில்லை. அதன் காரணமாக சாணக்கியனுக்கு கிடைத்த அத்தகைய ஊடக வெளிச்சங்கள் அவரை வானுக்கும் மண்ணுக்குமாக துள்ளிக்குதிக்க வைத்தன. காலம் செல்லச்செல்ல வெட்டிப் பேச்சுகளில் வீறாப்பு கொண்டலைபவராக அவர் முழுவதுமாகவே மாறிப்போனார். போராட்டப் பாதையில் வந்த சக பாராளுமன்ற உறுப்பினர்களை மாடுமேய்த்தவன்,படிக்காதவன்,கிணற்றுத்தவளைகள்,என்றெல்லாம் நாகரீகமற்ற வகையில் திட்டித்திரிந்தார். தான் வெளிநாடுகளில் கற்றவன்,மொழியறிவு கொண்டவன் என்றெல்லாம் சுய தம்பட்டம் அடித்துக்கொண்டார். மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டங்களை குழப்பியடிப்பதிலே கண்ணும் கருத்துமாக இருந்து மக்கள் நலப்பணிகளை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் இறங்கினார். பிரச்சனைகளைப் பற்றிப்பேசி அவரைத் தீர்ப்பது அவரது நோக்கமாக இருக்கவில்லை. அவற்றைப் பேசுவதன் ஊடாக ஊடகங்களில் இடம்பிடிப்பதே ஒன்றே அவரது நோக்கமாக மாறிப்போனது. அவர் செல்லும் இடமெல்லாம் அவரது மாதாந்த கையூட்டுப்பெறும் ஊடகவியலாளர்கள் அவர் பின்னாலே சென்றனர். கச்சேரி கூட்டங்களில் கூட அவர் முகநூலில் லைஃப் போடுவதற்காகவே முன் தயாரிப்புகளோடு சென்று பேசினார். அரச அதிகாரிகளை கண்டபடி திட்டித்தீர்த்தார். பிரதமர் தினேஷ் குணவர்த்தன அவர்கள் மட்டக்களப்புக்கு வந்தபோது அவர் அமர்ந்திருந்த தலைமை வரிசையிலே தானும் அமர்ந்தால் அபச்சாரம் என்று சொல்லி மக்கள் வரிசையிலே போய் குந்தியிருந்து நாடகமாடினார். மயிலத்தமடு-மாதவனை மேய்ச்சல்த்தரை பிரச்னையை தனது அரசியல் நலனுக்காக பயன்படுத்தி குழப்பியடித்து அம்பாறை மற்றும் பொலன்னறுவை சிங்கள விவசாயிகளை மட்டக்களப்பு நகருக்குள்ளே வந்து ஆர்ப்பாட்டம் செய்ய செய்யத் தூண்டுமளவுக்கு அவரது ஆத்திரமுட்டல்கள் வழிவகுத்தன. ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க மட்டக்களப்புக்கு வருகைதரும் போதெல்லாம் கறுப்புக்கொடி காட்டி அபிவிருத்திப்பணிகளை புறக்கணித்தார். யுத்தத்தின் எச்சங்களாக வாழும் ஆயிரக்கணக்கான பெண் தலைமை குடும்பங்களில் ஏழ்மைமிகு வாழ்வு குறித்தோ காலை உணவு கூட இன்றி பாடசாலை செல்லும் வாகரை மண்ணின் ஏழைக்குழந்தைகள் குறித்தோ தொழிலின்றி அலையும் இளைஞர் கூட்டம் மட்டக்களப்பில் பெருகி வருவது குறித்தோ ஒரு மக்கள் பிரதிநிதியாக அவருக்கு எவ்வித கரிசனையும் இருக்கவில்லை. வீதிகளை அமைப்பதும் குளங்களை தூர்வாருவதும் கால்வாய்களையும் அணைக்கட்டுகளை அமைப்பதையும் அவசியமற்றவையாக அவர் கருதினார். பாடசாலைகளை தரமுயர்த்துவதும் அவற்றிற்கு கணனி மற்றும் நவீன விஞ்ஞான கூடங்கள் அமைத்துத் தருவதும் கேலிக்கூத்தானவை என்பதே அவரது பார்வையாக இருந்தது. இவைதான் நாளும் பொழுதும் அவரும் அவர் சார்ந்த தமிழரசுக் கட்சியினர் உச்சரிக்கும் 'தேசியத்தின் அடிப்படைகள்' என்பதைக்கூட அவர் தெரிந்திருக்கவில்லை. அதனால்தான் 'தமிழ் தேசியம்' 'தமிழரின் உரிமை' என்று வெற்றுக்கூச்சலிடும் வாய் சவடால்களிலேயே அவரது காலம் கழிந்தது. அதனால்தான் எத்தனையோ வருட பட்டறிவுகளைத் தாண்டி அரசுடன் இணைந்து மக்களின் வாழ்வை வளப்படுத்தும் தரப்பினரை ஒட்டுக்குழுக்கள் ஓணான் குழுக்கள் அரசின் கைக்கூலிகள் என்று வாய்க்கு வந்தபடி திட்டித்திரிந்தார். தமிழ் தேசியக்கூட்டமைப்பு சிதைந்து போவதற்கும் அதிலிருந்து டெலோ புளொட் போன்ற அமைப்புக்கள் வெளியேறுவதற்கும் இவரது இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சுமந்திரனும் இவரும் இணைந்து போட்ட காட்டுக்கூச்சல்களே காரணமாய் அமைந்தன. இறுதியாக இவரது மேட்டிமைத்தனங்களும் பரம்பரையாதிக்க மனப்பாங்கும் அவர் அங்கம் வகிக்கும் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மூத்த தலைவர்களைக் கூட மனமுடையச் செய்து வருகின்றது. அனைவரையும் எடுத்தெறிந்து நடக்கும் இவரது நடவடிக்கைகளினால் இவரை ஏன் தேர்ந்தெடுத்தோம் என்று எண்ணும் நிலைக்கு மட்டக்களப்பு மக்கள் வந்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட மக்களது எவ்வித முன்னேற்றங்களிலும் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக சாணக்கியனின் பங்குபற்றுதல்கள் இல்லையென்பதை அவர்கள் உணரத்தொடங்கியுள்ளனர். மக்களுக்கும் அவருக்குமான இடைவெளிகள் அதிகரித்தவண்ணமுள்ளன. அடுத்த பாராளுமன்றத்தேர்தல் அண்மிக்கின்றது என்கின்றபோதுதான் அவருக்கு தான் மீண்டும் மக்களிடம் செல்ல வேண்டும் என்கின்ற ஞானம் பிறந்துள்ளது. அதன்காரணமாகத்தான் எந்த ஜனாதிபதி மட்டக்களப்புக்கு வரக்கூடாது என்று கறுப்புக்கொடி காட்டி கடந்த காலங்களில் கொக்கரித்துத் திரிந்தாரோ அவரை கொழும்புக்குத் தேடிச்சென்று அவரது ஜனாதிபதிக்குரிய விசேட நிதி ஒதுக்கீட்டில் பங்கு கேட்டு காலில் விழுந்திருக்கின்றார். சந்தர்ப்பம் பார்த்திருந்த ஜனாதிபதியும் தனது ஜனாதிபதித்தேர்தலை முன்னிட்டு இவரது வாயை அடைக்க 45 கோடி ரூபாய்களை அவருக்காக ஒதுக்கி வேலையை கச்சிதமாக முடித்துள்ளார். தற்போது 'நக்குண்டார் நாவிழந்தார்' என்னும் நிலையில் சாணக்கியன் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரம சிங்கவுக்கு எதிராக ஒரு துரும்பைத்தானும் தூக்கி போட முடியாதுள்ளார். அதுமட்டுமன்றி அவருக்காக ஆதரவாக பிரச்சாரம் செய்தாக வேண்டிய நிலைக்கு வந்துள்ளார். அண்மையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைத்து கவர்னரை அழைத்து ரணில் விக்கிரம சிங்கவுக்கு ஆதரவான இரகசியப் பிரச்சாரக் கூட்டமொன்றை நாடாத்தியுள்ளார். விரைவில் தேர்தல் மேடைகளில் ஏறி ரணில் விக்கிரம சிங்கவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவும் வாய்ப்புள்ளது. சுருங்கச்சொன்னால் யார் யாரையெல்லாம் கடந்த காலங்களில் வசை பாடித்திரிந்தாரோ இரவும் பகலும் எடுத்துக்கெல்லாம் எவர்களோடு வம்பிழுத்து திரிந்தாரோ அவர்கள் பாதையில் அவர்களுக்கு பின்னே பயணிக்கும் நிலைக்கு வந்துள்ளார். அதாவது வெட்டிப் பேச்சும் வீறாப்பும் வேலைக்குதவாது என்பதை மட்டுமல்ல வானுக்கும் பூமிக்கும் துள்ளிக் குதிப்பதனாலோ கறுப்புக் கொடிகளாலோ காரியமாற்ற முடியாது என்பதை காலம் கெளரவ சாணக்கியன் அவர்களுக்கு உணர்த்தியுள்ளது. அதனால்தான் அவர் தடம் புரண்டு நிற்கின்றார். அரசியலில் அவரவர்க்கு ஒவ்வொரு வழியுண்டு. அதனால்தான் பல்வேறு சிந்தனைகள்,பல்வேறு கட்சிகள். அதுதான் ஜனநாயகம். அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நியாயமுண்டு. ஆனால் நாம் பேசுகின்ற பேச்சுக்கும் நாம் நம்புகின்ற அரசியலுக்கும் உண்மையாக நடப்பதுதான் அரசியல் நாகரீகம், அரசியல் நேர்மை, அதுதான் நெஞ்சுக்கு நீதி. அதன் வழி நடப்பவர்களே தலைவர்கள்.
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
ரஷ்யாவுக்குள் உக்ரைனின் இராணுவ தளம் அமைப்பு gayanAugust 17, 2024 ரஷ்யாவில் தன்னுடைய ஊடுருவலை உக்ரைன் இராணுவத்தினர் தொடரும் சூழலில் ரஷ்யாவின் மேற்கு குர்ஸ்க் பிராந்தியத்தில் இராணுவ நிர்வாக மையத்தை அமைத்துள்ளதாக உக்ரைன் மூத்த இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார். அந்த பிராந்தியத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டவும் அங்குள்ள மக்களின் உடனடி தேவைகளை பூர்த்தி செய்யவும் இந்த அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது என்று இராணுவ தளபதி ஒலெக்ஸாண்டர் சிர்ஸ்கி தெரிவித்தார். உக்ரைன் ஜனாதிபதி செலென்ஸ்கி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைனிய துருப்புகள் 35 கிலோமீற்றர் தூரம் வரை உள்ளே சென்றுள்ளனர் என்றும் 82 குடியிருப்பு பகுதிகள் உட்பட 1,150 சதுர கிலோ மீற்றர் பரப்பை ஆக்கிரமித்துள்ளனர் என்றும் தளபதி சிர்ஸ்கி தெரிவித்தார். 2022ஆம் ஆண்டு ரஷ்யாவின் படையெடுப்புக்குப் பின்னர், கடந்த 10 நாட்களாக உக்ரைன் படைகள் ரஷ்யாவில் முன்னேறி வருகிறது. https://www.thinakaran.lk/2024/08/17/world/79075/ரஷ்யாவுக்குள்-உக்ரைனின்/
-
“ரணிலிடமிருந்து ரூ.60 கோடி வாங்கினார் சாணக்கியன்” - கோவிந்தன் கருணாகரம்
“ரூ.60 கோடி வாங்கினார் சாணக்கியன்” ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், தனிப்பட்ட முறையில் 60 கோடி ரூபாயைப் பெற்றுக்கொண்டுள்ளதாக ரெலோ அமைப்பின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் குற்றஞ்சாட்டியுள்ளார். எவ்வாறாயினும் குறித்த குற்றச்சாட்டுக்குப் பதிலளித்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியே தமக்கு வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். தம்மால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளைக் கருத்திற்கொண்டு, வழங்கப்பட்ட அந்த நிதியில் தற்போது மாவட்டத்தில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில் அரசியல் நோக்கத்திற்காகக் கோவிந்தன் கருணாகரம் இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். R https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/ரூ-60-கோடி-வாங்கினார்-சாணக்கியன்/150-342273
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
வேட்பாளர்கள் சிலரின் தேர்தல் பிரச்சார பேரணி இன்று ஆரம்பம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள ஜனாதிபதி வேட்பாளர்கள் சிலர் இன்று (17) தமது தேர்தல் பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளனர். இவ்வாறாக சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஆரம்பக்கட்ட பேரணி இன்று அனுராதபுரம் சல்காது விளையாட்டரங்கில் நடைபெற்றது. தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க இன்று தென் மாகாணத்தில் தனது ஆரம்பக் கூட்டங்களை ஆரம்பித்துள்ளார். சர்வசன அதிகார கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவின் தேர்தல் பிரச்சார பேரணி இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரசாரம் இன்று கம்பஹாவில் ஆரம்பமானது. https://newuthayan.com/article/வேட்பாளர்கள்_சிலரின்_தேர்தல்_பிரச்சார_பேரணி_இன்று_ஆரம்பம்
-
கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்தில் 34 வருடங்களின் பின் வழிபட அனுமதி
34 வருடங்களின் பின் வழிபட அனுமதி நிதர்ஷன் வினோத் யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை மேற்கு கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு சென்று வழிபட வௌ்ளிக்கிழமை (16) அனுமதி வழங்கப்பட்டது. அங்கு பெருமளவிலான மக்கள் சென்று பொங்கல் பொங்கி சிறப்பு பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர். கடந்த முப்பது வருட காலத்திற்கும் மேலாக இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயத்தினுள்ளே கடற்படையினரின் கட்டுப்பாட்டிலே காணப்பட்ட பழமைவாய்ந்த கீரிமலை கிருஸ்ணர் ஆலய வழிபாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டநிலையில் அங்கு சென்ற பொது மக்கள் ஆலயத்தை சிரமதானம் செய்ததன் பின்னர் பொங்கல் பொங்கி பூஜை வழிபாடுகளை மேற்கொண்டனர். நீண்ட காலத்தின் பின்னர் தமது ஆலயத்திற்குச செல்ல அனுமதிக்கப்பட்டதை மிகவும் சந்தோசமாக வரவேற்ற பொது மக்கள் ஆலயம் சிதைவடைத்திருப்பதை பார்த்து கடும் மனவேதனை அடைந்திருந்தனர். இதன்போது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஶ்ரீமோகன், செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன், கடற்படை அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அந்த வகையில் இன்று முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆலயத்திற்கு சென்று மக்கள் வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை கிருஷ்ணன் ஆலயம் என்ற காரணத்தால் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விசேட தினங்களிலும் வழிபட பொதுமக்கள் அனுமதி கோரியதால் அது தொடர்பாக உரிய தரப்புக்களுடன் பரிசீலிப்பதாகவும் வலிகாமம் வடக்கிலுள்ள ஏனைய காணிகளை விடுவிக்கும் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார். https://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/34-வருடங்களின்-பின்-வழிபட-அனுமதி/46-342288
- சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
-
விடுதலைப் புலிகளை, பயங்கரவாத அமைப்பாக தொடர்ந்தும் நீடித்தது கனடா
விடுதலைப் புலிகளை, பயங்கரவாத அமைப்பாக தொடர்ந்தும் நீடித்தது கனடா: கனடாவின் தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் வரவேற்றது! adminAugust 15, 2024 தமிழ் போராளிகளின் அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக தொடர்ந்தும் நீடிப்பதற்கான கனடாவின் தீர்மானத்தை இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கைய மூலம் வரவேற்றுள்ளது. உலகத் தமிழர் இயக்கத்துடன் விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்புகளாக நீடிக்கும் கனடா அரசின் முடிவை இலங்கை அரசாங்கம் வரவேற்கிறது. அண்மைய மதிப்பாய்வின் படி, விடுதலைப் புலிகளின் எச்சங்கள் சர்வதேச நிதி சேகரிப்பு மற்றும் கொள்முதல் வலையமைப்பைக் கொண்டிருப்பதாக கனடா கூறுகிறது. புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளில் அவர்கள் சார்பாக நிதி திரட்டுவதன் மூலம் குழு தொடர்ந்தும் பங்களிப்பை வழங்கி வருவதாக உலகத் தமிழர் இயக்க மதிப்பாய்வு குறிப்பிடுகிறது. மீளாய்வு செயல்முறைக்குப் பின்னர் எடுக்கப்பட்ட இந்த முடிவு, குறித்த அமைப்புகளால் தொடர்ந்து அச்சுறுத்தலை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 06 ஆம் திகதி குற்றவியல் சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக கனடா அரசாங்கம் முதன்முதலில் பட்டியலிட்டது. மேலும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மறுபரிசீலனை செய்வது சட்டப்பூர்வ தேவையாகும். அண்மைய மதிப்பாய்வு 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நிறைவடைந்தது. அண்மைகாலமாக தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக கனடா அரசாங்கம் தொடர்ந்தும் மூன்றாவது முறையாக பட்டியலிட்டுள்ளது. இந்தியாவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிப்புடன் பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு கோரி முன்வைக்கப்பட்ட மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2024/205863/
-
யாழில் உயிரிழந்த இந்திய இராணுவத்தினருக்கு அஞ்சலி
யாழில் உயிரிழந்த இந்திய இராணுவத்தினருக்கு அஞ்சலி adminAugust 15, 2024 விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற மோதல்களில் கொல்லப்பட்ட இந்தியப் படையினரின் நினைவாக பலாலி இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. 1987 ஆம் ஆண்டிலிருந்து 1990 வரை இலங்கையில் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்தினருக்கும் இடையே மோதல்கள் இடம்பெற்றன. இந்த மோதல்களில் கொல்லப்பட்ட இந்திய படையினர் நினைவாக இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்துக்கு அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி மலரஞ்சலி செலுத்தினர். நிகழ்வில் யாழ். இராணுவ தலைமையகத்தின் இராணுவ உயரதிகாரிகள், யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரங்கத்தின் அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணத்திள்ள இராணுவத்தினர் கலந்துகொண்டனர். https://globaltamilnews.net/2024/205868/
-
பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை : 14 முக்கிய அம்சங்கள்!
பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை : 14 முக்கிய அம்சங்கள்! Aug 15, 2024 16:30PM 78-வது சுதந்திர தினமான இன்று(ஆகஸ்ட் 15), செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவை பல்வேறு துறைகளிலும் உலகின் முன்னணி நாடாக மாற்றுவதற்கு தேவையான, வருங்காலத்திற்கான தொடர் இலக்குகளை எடுத்துரைத்தார். அவை, வாழ்க்கையை எளிதாக்கும் இயக்கம்: ‘வாழ்க்கையை எளிதாக்குதல்’ என்ற தமது தொலைநோக்கு கொள்கையை ஒரு இயக்கமாக செயல்படுத்துவது. முறையான மதிப்பீடுகள், கட்டமைப்பு வசதிகள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதன் வாயிலாக நகர்ப்புறங்களில் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவது. நாளந்தா உணர்வுக்கு புத்துயிரூட்டுதல் : பண்டைக்கால நாளந்தா பல்கலைக்கழக உணர்வுக்கு புத்துயிரூட்ட வேண்டும். உயர்கல்வி கற்றல் மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம், இந்தியாவை உலகளாவிய கல்வி மையமாக மாற்ற வேண்டும். 2024-ல் நாளந்தா பல்கலைக்கழகத்தை தொடங்கியிருப்பதில் இவை அடங்கியுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிப்-செமிகண்டக்டர் உற்பத்தி : செமிகண்டக்டர் உற்பத்தியில் இந்தியாவை உலகின் முன்னணி நாடாக மாற்ற வேண்டும். இறக்குமதியை சார்ந்திருக்கும் நிலையை குறைத்து, தொழில்நுட்ப தன்னிறைவை அதிகரிக்க வேண்டும். திறன் இந்தியா : இந்திய இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளித்து, உலகின் திறன்மிகு தலைநகராக மாற்ற வேண்டும். தொழில் உற்பத்தி மையம் : இந்தியாவை உலகின் உற்பத்தி மையமாக மாற்றியமைப்பது. அதன் பரந்து விரிந்த வளங்கள் மற்றும் திறன் பயிற்சி பெற்ற தொழிலாளர்களை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள் தயாராக உள்ளது. “இந்தியாவில் வடிவமைப்பு, உலகிற்கான வடிவமைப்பு”: உள்நாட்டு வடிவமைப்பு திறன் பாராட்டத்தக்கது. உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்யவேண்டும். உலகளாவிய விளையாட்டுச் சந்தையில் முன்னணி : இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விளையாட்டுப் பொருட்களை சந்தைப்படுத்த, இந்தியா தனது செழுமையான பழங்கால மரபுகள் மற்றும் இலக்கியங்களை ஊக்குவிக்க வேண்டும். உலகளாவிய விளையாட்டுச் சந்தையில் இந்திய வல்லுநர்கள் முன்னிலை வகிக்க வேண்டும், விளையாடுவதில் மட்டுமின்றி விளையாட்டுகளை உருவாக்குவதிலும் முன்னோடியாக திகழ்வதுடன், இந்திய விளையாட்டுகள் உலகளவில் சென்றடைய செய்ய வேண்டும். பசுமை வேலைவாய்ப்புகள் மற்றும் பசுமை ஹைட்ரஜன் இயக்கம் : பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான இந்தியாவின் முயற்சியில் பசுமை வேலை வாய்ப்புகள் முக்கியம். பசுமை வளர்ச்சி மற்றும் பசுமை வேலை வாய்ப்பில் நாடு தற்போது கவனம் செலுத்திவருகிறது. இது சுற்றுச்சூழலைப் பாதுகாக்கக் கூடிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும். பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில் நீடித்த வேலைவாய்ப்புகளை உருவாக்குவது. ஆரோக்கியமான இந்தியா இயக்கம் : 2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய, இந்தியா, ‘ஆரோக்கியமான இந்தியா’ என்ற பாதையை பின்பற்ற வேண்டும். இதற்காக தேசிய ஊட்டச்சத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது . மாநில அளவிலான முதலீட்டுப் போட்டி : முதலீடுகளை ஈர்க்கவும், நல்லாட்சிக்கான உத்தரவாதம் வழங்கவும், சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் நம்பிக்கையை உறுதிப்படுத்தவும், மாநில அரசுகள் தெளிவான கொள்கைகளை உருவாக்க வேண்டும். உலக குறியீடுகளுக்கேற்ப இந்தியாவின் தரம் : தர நெறிமுறைகளை கடைபிடிப்பதற்கான உறுதிப்பாடு அங்கீகரிக்கப்பட வேண்டும் . இந்தியாவின் தர விதிகள் சர்வதேச குறியீடாக மாறுவதற்கு முயற்சிக்க வேண்டும். பருவநிலை மாற்ற இலக்குகள் : 2030-க்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி என்ற இலக்கை அடைவதுதான் இந்தியாவின் குறிக்கோள். மருத்துவக் கல்வி விரிவாக்கம் : அடுத்த ஐந்து ஆண்டுகளில் 75 ஆயிரம் புதிய மருத்துவ இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட இருக்கிறது. நாட்டின் மருத்துவக் கல்வி திறனை விரிவுபடுத்தி, அதிகரித்து வரும் சுகாதார சேவை வல்லுநர்களின் தேவையை பூர்த்தி செய்வது தான் இதன் நோக்கம். அரசியலில் புது ரத்தம் பாய்ச்சுதல் : அரசியலில் ஒரு லட்சம் இளைஞர்களை, குறிப்பாக அரசியல் பின்புலம் இல்லாத குடும்பங்களை சேர்ந்தவர்களை ஈடுபடுத்த வேண்டும். வாரிசு, சாதிய தீமைகளை எதிர்த்துப் போராட, இந்திய அரசியலில் புது ரத்தம் பாய்ச்சுவதே இதன் நோக்கம். https://minnambalam.com/india-news/pm-modi-outlines-plan-for-2047-vision/
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 39 வேட்பாளர்களில் பெயர் பட்டியல்! 2024 ஜனாதிபதி வேட்பாளர்களின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொண்டதன் பின்னர் மூன்று ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆனால் தேர்தல் சட்டத்தின்படி அந்த ஆட்சேபனைகளை நிராகரிக்க தேர்தல் ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி 39 வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 01. திலித் சுசந்த ஜயவீர 02. சரத் மனமேந்திர 03. அபூபக்கர் முகம்மது இன்பாஸ் 04. ஏ. எஸ். பி. லியனகே 05. பானி விஜேசிறிவர்தன 06. பிரியந்த புஸ்பகுமார விக்கிரமசிங்க 07. அஜந்தா டி சொய்சா 08. பத்தரமுல்லை சிரலதன தேரர் 09. சரத் பொன்சேகா 10. நுவன் சஞ்சீவ போபகே 11. ஹிதிஹாமிலாவின் டொன் ஒஷால லக்மால் அனில் ஹேரத் 12. ஜனக பிரியந்த குமார ரத்நாயக்க 13. கே.கே. பியதாச 14. மையில்வாகனம் திலகராஜா 15. சிறிபால அமரசிங்க 16. பாக்கியசெல்வம் அரியநேத்திரன் 17. சரத் கீர்த்திரத்ன 18. கே. ஆனந்த குலரத்ன 19. நாமல் ராஜபக்ஷ 20. அக்மீமன தயாரதன தேரர் 21. கே.ஆர். கிஷன் 22. பொல்கம்பொல ரலாலாகே சமிந்த அனுருத்த 23. விஜயதாச ராஜபக்ச 24. அனுர சிட்னி ஜயரத்ன 25. சிறிதுங்க ஜயசூரிய 26. மஹிந்த தேவகே 27. முகமது இல்லயாஸ் 28. லக்ஸ்மன் நாமல் ராஜபக்ஷ 29. ஆண்டனி விக்டர் பெரேரா 30. கீர்த்தி விக்கிரமரத்ன 31. சஜித் பிரேமதாச 32. ரணில் விக்கிரமசிங்க 33. மரக்கலமான பிரேமசிறி 34. லலித் டி சில ;வா 35. பி. டபிள்யூ. எஸ். கே. பண்டாரநாயக்கா 36. டி.எம். பண்டாரநாயக்கா 37. அனுரகுமார திஸாநாயக்க 38. அகம்பொடி பிரசங்க சுரங்ச அனோஜ் டி சில்வா 39. அனுருத்த ரணசிங்க ஆராச்சிகே ரொஷான https://akkinikkunchu.com/?p=288069
-
பிரித்தானியக் கலவரத்துக்கும் காலனித்துவத்துக்கும் என்ன தொடர்பு?…. நியூசிலாந்து சிற்சபேசன்
பிரித்தானியக் கலவரத்துக்கும் காலனித்துவத்துக்கும் என்ன தொடர்பு?…. நியூசிலாந்து சிற்சபேசன் அண்மையிலே பிரித்தானியாவில் நடைபெற்ற கலவரங்கள் முற்றிலும் எதிர்பார்க்கப்படாத ஒன்றல்ல. அங்கு குடியேறிகள் தொடர்பான ஒவ்வாமை இன்று நேற்று ஏற்பட்டதல்ல. காலாதிகாலமாகத் தொடர்கின்றது. மருத்துவம், கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு போன்றவற்றிலேயே அரசு தொடர்பில் பாமரனின் அபிப்பிராயம் உருவாகின்றது. அவற்றிலே குறைகள் ஏற்படுவது இயல்பானது. அவ்வாறு ஏற்படுகின்றபோது, செல்லும் செல்லாததுக்குச் செட்டியார் என்பதுபோல, குடியேறிகள் மீதான காழ்ப்புணர்வு பொங்கிப்பிரவாகிக்கின்றது. அதுவே, காலவோட்டத்தில் இயல்பாகவும் ஆகிவிடுகின்றது. அதனால், குடியேறிகள் தொடர்பான நல்லெண்ணமின்மை, நாளொருமேனியும் பொழுதொருவண்ணமுமாக, அதிகரிக்கின்றது. நாய்க்கு எங்கே அடித்தாலும் காலைத் தூக்கிக்கொண்டு ஓடும் என்பார்கள். அதுபோல, எந்தவொரு பிரச்சினையிலும் குடியேறிகளை நோக்கிச் சுட்டுவிரல் நீட்டுகின்ற மனப்பாங்கு வானுயரவளர்ந்துவிட்டது. அத்தகையதொரு சூழலிலேயே, ஜூலை 29ம் திகதியன்று, லண்டனிலிருந்து வடமேற்கே சுமார் இருநூறு மைல் தொலைவிலே, ஐரிஷ் கடலோரமாகவுள்ள, சவுத்போர்ட் நகரில் நடைபெற்ற நிகழ்வொன்றிலே மூன்று சிறுமிகள் கொல்லப்பட்டனர். மேற்படி தாக்குதலின் சூத்திரதாரி, படகு மூலம் பிரித்தானியாவுக்கு வந்த அகதி என்னும் தகவல் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியது. அதனால் பதற்றநிலை ஏற்பட்டது. அந்த தகவல் தவறானது என்பதைப் பொறுப்புள்ள தரப்புக்கள் உரத்துச் சொன்னபோதும், சோசியல் மீடியா யுகத்தில் அஃது ஈனஸ்வரமாகியது. தீவிர வலதுசாரி குரல்கள் உரத்து ஒலிக்க ஆரம்பித்தன. அதனுடைய தொடர்ச்சியாக, பிரித்தானியாவின் பல்வேறு நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகின. அவையே கலவரமாக மாறின. “நான் இறக்கும் வரை இங்கிலாந்து தான். எங்கள் நாடு எங்களுக்கு திரும்ப வேண்டும்,” என்னும் பிரித்தானியப் பாடலை ஆங்காங்கே உரத்த குரலில் பாடி உணர்சிகளைக் கொந்தளிக்கச் செய்ததாகவும் சொல்லப்படுகின்றது. மிட்லன்ஸ் என்று சொல்லப்படுகின்ற பிரித்தானியாவின் மையப்பிரதேசங்களில் உருக்கொண்ட கலவரம் தேசத்தின் நாலாபக்கமும் பரவின. பிரித்தானிய அரசு துரிதமாக செயற்பட்டு சட்டம் ஒழுங்கு நடைமுறைகளை நிலைநாட்டியது. அதனால், கலவரங்கள் தணிக்கப்பட்டன. ஆனால், இனங்களிடையேயான முறுகல் தீர்க்கப்பட்டதாக நம்பமுடியவில்லை. அஃது எளிதான காரியமுமல்ல. பிரித்தானியாவின் சனத்தொகைப் பரம்பலை, குடியேறிகளின் வருகை மாற்றியுள்ளமை யதார்த்தமாகும். குடியேறிகள் தொடர்பில், திட்டமிட்ட அணுகுமுறையை இறுக்கமாக நடைமுறைப்படுத்த பிரித்தானியாவினால் முடியவில்லை. அதற்கு வரலாற்றுச் சுமையும் காரணமாகும். பிரித்தானியக் காலனித்துவத்தின் தொடர்ச்சியே குடியேறிகள் என்பது வெள்ளிடைமலையாகும். அன்றோருகாலத்தில் ஐரோப்பியர் வளங்களைத் தேடினார்கள். ஐரோப்பாவிலிருந்து ஆசியாவுக்கான கடல்மார்க்கமான கேப் வழித்தடம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வழித்தடத்தை பயன்படுத்தி திரைகடல் ஓடினார்கள். திரவியம் தேடினார்கள். நாடுகளைக் கைப்பற்றினார்கள். கைப்பற்றிய நாடுகளை, பிரித்தானியாவிலிருந்து, ஆட்சி செய்ய காலனித்துவ முறைமையை உருவாக்கினார்கள். அதுவே பிரித்தானிய சாம்ராஜ்யமாகியது. அவ்வாறு கைப்பற்றிய தூரதேசங்களிலிருந்து கடல்மார்க்கமாக வளங்களை பிரித்தானியாவுக்குக் கொண்டுசென்றனர். இயற்கை வளங்களை மட்டுமல்ல, மனிதவளங்களையும் சேர்த்தே கொண்டுசென்றனர். இந்தியா உள்ளிட்ட பிரதேசங்களிலிருந்து மனிதவளத்தை “கூலி” என்னும் அடையாளத்துடன் வலிந்து கொண்டுசென்றனர். “கூலி” என்பதே, கடல்போக்குவரத்து வேலையிலே “லஸ்கர்” என அடையாளமாகியது. இவ்வாறு “கூலி” என்னும் அடையாளத்துடன் கொண்டுசெல்லப்பட்டவர்களே, பிரித்தானியவில் நுழைந்த ஆரம்பகால “குடியேறிகள்” என பெருவெட்டில் சொல்லலாம். பொதுக்கட்டுமானம், ரயில்கட்டுமானம், மிட்லன்ஸ் என்று சொல்லப்படுகின்ற மன்செஸ்டர், பர்மிங்கம் பிரதேசங்களிலே தொழிற்சாலை, ஹீத்ரோ விமான நிலையக் கட்டுமானம் எனப் பல்வேறு தேவைகளுக்காகவும் “கூலி” களைக் கொண்டுசென்றனர். அவ்வாறு ஹீத்ரோ விமானநிலைய வேலைத்திட்டத்துக்கு கொண்டுசெல்லப்பட்ட பஞ்சாபிகளே, விமான நிலையத்தை அண்டிய சவுத்ஹால் பிரதேசத்தின் அடையாளமாக இன்றும்கூட காணப்படுகின்றனர். ஆக, “குடியேறிகள்” பிரித்தானியாவை நோக்கிச் செல்ல ஆரம்பித்தமைக்கு யார் காரணமென்பது சிதம்பர ரகசியமல்ல. அடுத்த குடியேற்ற அலை, இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியபோது ஏற்பட்டதாகச் சொல்லலாம். அதுவே, பெருமளவிலான குடியேறிகள் பிரித்தானியாவுக்கு வந்து சேர்ந்த காலகட்டம் எனலாம். 1970களில் ஆபிரிக்க நாடுகள் காலனித்துவத்திலிருந்து சிலிர்த்துக்கொண்டன. ஆபிரிக்கர்களுக்கே ஆபிரிக்கா என்னும் கோஷம் வலுப்பட்டது. ஆபிரிக்காவிலே, காலனித்துவக் காலங்களில், வலிந்து குடியேற்றப்பட்டவர்களிலே இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமானதாகும். அத்தகையோரை, உகண்டா, தன்சானியா போன்ற ஆபிரிக்க நாடுகள் துரத்தியடித்தன. அவ்வாறு ஆபிரிக்காவிலிருந்து விரட்டப்பட்ட இந்தியர்களுக்கான போக்கிடம் பிரித்தானியாவேயாகும். அதனாலே, மற்றுமொரு குடியேற்ற அலை ஏற்பட்டது. அதேபோன்று, ஆபிரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளிலிருந்து, காலனித்துவத்தின் தொடர்ச்சியாகபிரித்தானியவை நோக்கிய ஆபிரிக்க குடியேற்ற அலைகள் இடம்பெற்றன. ஆக, பிரித்தானியக் காலனித்துவத்தின் விட்டகுறை தொட்டகுறையாகவே குடியேற்ற அலைகள் ஏற்பட்டதாகச் சொல்லலாம். ஆகப்பிந்திய கணக்கெடுப்பின்படி, மொத்த சனத்தொகையில் ஒன்பது விழுக்காடு ஆசியப் பின்னணியினரும், தலா நான்கு விழுக்காடு ஆபிரிக்க மற்றும் பிற பின்னணியினருமே “குடியேறிகள்” என அடையாளமாகின்றனர். வெள்ளையர் அல்லாதவர்களைக் குடியேறிகள் என வகைப்படுத்துவதிலே கூட பொருள் குற்றம் உண்டு. காரணம்: குடியேறிகள் என்று தற்போது அடையாளப்படுவோரிலே, கணிசமானோர் பிரித்தானியாவில் பிறந்தவர்களாகும். அதனால் குடியேறிகள் அல்லர். எதுஎப்படியாகிலும், இனங்களிடையே பரஸ்பர நம்பிக்கையை வளர்ப்பது இலகுவல்ல. இயல்புநிலை எளிதில் வசப்படக்கூடியதல்ல. ஆக, பாட்டன் போட்ட விதை, பேரனுக்குக் கிடைத்த கனி என்பார்கள். பிரித்தானியாவிலே பாட்டன் போட்ட விதை, பேரனுக்கு எதனைத் தந்திருகின்றது என்பது ரகசியமல்லவே! நியூசிலாந்து சிற்சபேசன் https://akkinikkunchu.com/?p=287960
-
பொதுவேட்பாளர் கண்டுபிடிப்பு: சிறுவர்களின் குரும்பட்டித்தேர்!
பொதுவேட்பாளர் கண்டுபிடிப்பு: சிறுவர்களின் குரும்பட்டித்தேர்! August 15, 2024 — கருணாகரன் — தமிழ்ப்பொது வேட்பாளராக(?) ஒருவரை (பா.அரியநேத்திரனை) க் கண்டு பிடித்ததைப் பெருஞ்சாதனையாக தமிழ்ப்பொது வேட்பாளருக்கான(?) பொதுச்சபையினர் அறிவித்து, ஆரவாரப்படுகின்றனர். அரசியல் பெறுமானத்தில் இது நகைப்புக்குரியதாக (கோமாளிதனமாக) இருந்தாலும் அவர்களைப் பொறுத்தவரையில் இது பெரும் சாதனைதான். சிறுவர்கள், குரும்பட்டியில் தேர் செய்வதைப்போல (அது அந்தச் சிறுவர்களுக்கு படு சீரியஸான விடயமாகவே இருக்கும்) விளையாட்டாகத் தொடங்கப்பட்ட “பொதுவேட்பாளர்” விடயம், ஒரு மெய்யான தேராகுவதற்குப் பல சிக்கல்களைக் கொண்டதென்று அவர்கள் எண்ணியிருக்கவில்லை. போகப்போகத்தான் அதனுடைய சிக்கல்களும் சிரமங்களும் விளங்கத் தொடங்கின. (ஒரு கட்டத்தில் பொதுவேட்பாளர் விடயத்தை ஏன் தொட்டோம் என்று எண்ணக் கூடிய அளவுக்கு, இவர்களுடைய தூக்கத்தையே பறித்தது). முக்கியமாக ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுகின்றவருக்கு தேர்தல் விதிமுறைகளின்படி இருக்க வேண்டிய அடிப்படைத் தகுதிகள் என்ன என்பதைக் கூட இவர்கள் விளங்காமலே இருந்துள்ளனர். இதை அவர்களே சொல்கிறார்கள், “தமிழ் மக்கள்பொதுச்சபைக்குள் காணப்படும் கருத்துருவாக்கிகள் ஒரு பொதுவேட்பாளர் தொடர்பாக கட்டியெழுப்பிய கருத்துருவாக்கம்என்னவென்றால், கிழக்கிலிருந்து ஒரு பெண் வேட்பாளர்தான். அவரும் அரசியல் கட்சிகள் சாராதவராக இருந்தால் உத்தமம்என்று கருதப்பட்டது. ஆனால் நடைமுறையில் அப்படி ஒரு பெண்வேட்பாளரைத் தேடிக் கண்டுபிடிப்பதில் நெருக்கடிகள் இருந்தன. மட்டுமல்ல, நாட்களும் குறைவாக இருந்தன. ஒரு பெண்வேட்பாளரைக் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் ஓர் ஆண்வேட்பாளரை அதாவது கட்சிசாரா ஆண் வேட்பாளரைகண்டுபிடிக்கலாமா என்று சிந்திக்கப்பட்டது. ஆனால் அங்கேயும்வரையறைகள் இருந்தன.அதன் பின்னர்தான் கட்சி சார்ந்தயாராவது இருப்பார்களா என்று தேட வேண்டி வந்தது” என. 1. ஒரு சிறிய குழுவினர் கூடித் தம்மைத்தாமே “தமிழ் மக்கள் பொதுச்சபையினர்” என்று அழைத்துக் கொள்கின்றனர். ஒரு அமைப்புக்குரிய விதிமுறைகள், அடிப்படைகளின்படி இந்த அமைப்பின் உறுப்பினர்கள் எவராலும் தெரிவு செய்யப்படவில்லை. மேலும் தம்மைக் கருத்துருவாக்கிகள்(!) என்றும் சொல்லிக் கொள்கிறார்கள். இந்தக் கருத்துருவாக்கிகள் 2009க்குப் பின் (புலிகளின் வீழ்ச்சிக்குப் பின், தம்மை அரசியல் அரங்கில் நிலைப்படுத்துவதற்கு தலைகீழாகக் கூட நின்று பார்க்கிறார்கள். இதற்காக தமிழ்த்தேசியப் பேரவையை உருவாக்கியது தொடக்கம் விக்னேஸ்வரனைத் தமிழர் அரசியலின் மகாமேதை, ஈழத்தின் தலாய்லாமா என்றது வரையில் என்னவோ எல்லாம் செய்து பார்த்தனர். இறுதியாக இப்போது வந்திருக்கும் இடமே தமிழ்ப்பொது வேட்பாளர் என்ற “குரும்பட்டித் தேர்”. 2. தமிழ்ப்பொது வேட்பாளராக கிழக்கிலிருந்து ஒரு பெண் வேட்பாளரை நிறுத்துவதற்கு தாம் யோசித்ததாகக் கூறப்படுகிறது. நல்ல யோசனைதான். ஆனால், சமூக வெளியில் பெண்களையும் இளையோரையும் அரசியல், சமூக ஆளுமைகளாக வளர்க்காமல், தன்னியல்பாக எங்கேனும் ஓரிருவர் எழுந்து வந்தால் அவர்களைக் கொண்டாடாமல் இருந்து விட்டு, இப்படித் திடீரென ஆட் தேடினால் திரவியம் கிடைக்குமா? அதற்கான உழைப்பு (தேடுவதற்கான உழைப்பல்ல. ஆளுமைகளை உருவாக்குவதற்கான உழைப்பு) ச் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். அதுதான் தேசமாகச் சிந்திப்பதன் அடிப்படையாகும். 3. இதேதான் அரசியல் சாராத இன்னொரு ஆளுமையைத் தேடுவதிலும் நிறுத்துவதிலும் வந்த பிரச்சினையாகும். ஆக, தமிழ்ச்சமூகம் (தமிழீழம்) மிகப் பெரிய ஆளுமை வரட்சியில் உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அரசியலில் மட்டுமல்ல, அனைத்துத் துறைகளிலும் இதுதான் நிலைமை. இதையே நாம் தொடர்ச்சியாகச் சுட்டிக் காட்டி வருகிறோம். ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நகைப்புக்குரியதாக்கி நிராகரித்தவர்கள், இப்போது சூழலைக் கரித்துக் கொட்டுகிறார்கள். மாற்றுச் சிந்தனையோடு, புதிதாகச் சிந்திப்போரையும் புத்தாக்கம் காண்போரையும் நிராகரித்து ஒதுக்கி வந்ததன் விளைவையும் இதனுடன் சேர்த்துப் பார்க்க வேண்டும். 4. ‘பொதுவேட்பாளரைக் கண்டு பிடிப்பதற்கு கால அவகாசம் (நாட்களும்) போதாமலிருந்தது’ என்று அழுகிறார்கள். 15 ஆண்டுகளாகப் பொதுவேட்பாளரைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கும் கருத்துருவாக்கிகளுக்கு அதற்கான வேட்பாளராக யாரை – எப்படியானவரை நிறுத்தலாம் என்று யோசிக்க முடியாமல் போய் விட்டது. என்பதால்தான் எல்லா இடமும் தேடிக் கட்டக் கடைசீயாக அரியநேத்திரனைக் கண்டு பிடிக்க முடிந்தது. அல்லது அவருடைய கால்களைப் பிடிக்க வேண்டியிருந்தது. ம்… எல்லாம் ஒரு விதி! இன்னும் இவர்களுடைய கவலைகள் முடியவில்லை. “ஜனாதிபதித் தேர்தல் பொறுத்து பொதுக் கட்டமைப்புக்குசட்டரீதியாக சில வரையறைகள் இருந்தன. தேர்தலில் பதிவுசெய்யப்பட்ட ஒரு கட்சி ஒரு வேட்பாளரை நிறுத்தலாம். அல்லதுஒரு முன்னாள் அல்லது இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்சுயேட்சையாகக் களமிறங்கலாம். இந்த இரண்டுசாத்தியக்கூறுகளுக்குள்ளும் தான் ஒரு பொது வேட்பாளரைத்தேட வேண்டியிருந்தது. அதாவது தேர்தல் சட்டங்களின்படிஒன்றில் பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சி வேண்டும். அல்லதுமுன்னாள் அல்லது இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேண்டும்”என. இப்படிச் சிரமப்படக் காரணம், களநிலை அனுபமும் நடைமுறை அறிவும் இல்லாததே. குறைந்த பட்சம் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கான தகுதிநிலையைப் பற்றிய தேர்தல் சட்டம் என்ன என்று கூடத் தெரியாமலிருந்திருக்கிறது. “கற்பனைக் குதிரையில் சவாரி” செய்வோரின் நிலை இப்படித்தானிருக்கும். இதனால்தான் படாத பாடெல்லாம் பட்டு ஒரு பொதுவேட்பாளரைக் கண்டு பிடிக்கவும் அவரை இணங்க வைக்கவும் வேண்டியிருந்தது. ‘எப்படியோ இறுதியில் ஒரு பலிக்கடா கிடைத்து விட்டது – வசமாக மாட்டி விட்டது’ என்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறார்கள். என்பதால்தான் “பொது வேட்பாளர் வந்து விட்டார்” என்று புளகாங்கிதமடைகிறார்கள். உண்மையில் இப்போதுதான் இவர்கள் நிம்மதிப்பெருமூச்சை விடுகிறார்கள். அது கூட இவர்கள் எதிர்பார்த்த – இவர்கள் கூறிய பரப்பிற்குள் வேட்பாளர் அமையாமல், எதிர்முகாமான தமிழரசுக் கட்சிக்குள்ளேயே தேடவேண்டியிருந்தது. இதற்கொரு சப்பை நியாயத்தைச் சொல்கிறார்கள். “தமிழரசுக் கட்சிக்குள் குழப்பத்தை உண்டாக்கவும் அதை உடைக்கவும் அதற்குள்ளிருக்கும் பொது வேட்பாளருக்கான ஆதரவு – எதிர் என்ற இரு நிலைப்பாட்டை ஒரு வழிக்குக் கொண்டு வருவதற்காகவே தாம் அரியநேந்திரனையும் தவராஜாவையும் இலக்கு வைத்ததாக. (சிரித்து விடாதீர்கள்). இப்படியெல்லாம் கற்பனைக்கதைகள் பல உண்டு. ஆனால், மேற்கூறிய அடிப்படையில் ஒரு பொதுவேட்பாளரை நிறுத்துவதற்கான தகுதியும் வாய்ப்புகளுமுள்ளவர்கள் பொதுக்கட்டமைப்பிற்குள் இருந்தனர். தேவையான சின்னங்களும் அதை வழங்கக் கூடிய கட்சிகளும் இருந்தன. ஆனால், அதற்குத் தயாரான மனநிலை கட்சிகளுக்குள் இருக்கவில்லை என்பதே உண்மை. இதையும் பொதுச்சபையினரே வெளிப்படையாகச் சொல்கிறார்கள், “தமிழ்தேசியப் பொதுக் கட்டமைப்புக்குள் பதிவு செய்யப்பட்ட கட்சிகள்உண்டு. ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற கட்சிகள் அவ்வாறு சின்னத்தைதருவதற்குத் தயாராகக் காணப்பட்டன. சில கட்சிகள் தரத்தயங்கின. பொதுகட்டமைப்புக்கான புரிந்துணர்வுஉடன்படிக்கையில் ஒரு விடயம் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கட்சியின் சின்னத்தை ஒரு பொதுநிலைப்பாட்டுக்காகப் பயன்படுத்தி அதன்மூலம் திரட்டப்பட்டவாக்குகளையும் பிரபல்யத்தையும் அடுத்து வரும் தேர்தலில்அக்கட்சி தனது தனிப்பட்ட கட்சி தேவைகளுக்கு பயன்படுத்துவதுதொடர்பாக ஒர் உடன்படிக்கை எழுதப்பட வேண்டும் என்று அங்கேசுட்டிக்காட்டப்பட்டது. ஆனால் இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும்தேர்தல் ஆண்டுகளாகக் காணப்படும் ஓர் அரசியல் பின்னணியில், ஜனாதிபதித் தேர்தலை உடனடுத்து வரக்கூடிய எந்த ஒருதேர்தலிலும் தமது கட்சி சின்னத்தைப் பயன்படுத்தாமல் விடுவதுதொடர்பில் கட்சிகள் அதிகமாக யோசித்தன” என. ஆக பொதுக்கட்டமைப்பின் விசித்திரம் இப்படித்தானிருக்கிறது. அதில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஒரு வேட்பாளரை நிறுத்துவதற்குத் தாம் ஏற்றுக் கொண்ட உடன்படிக்கையின்படி, அதற்காக எந்த விட்டுக் கொடுப்பையும் செய்யத் தயாரில்லை. அதாவது அவை தாம் இணைந்து மேற்கொள்ளும் தீர்மானத்துக்காக எந்தத் தியாகத்தையும் செய்வதற்குத் தயாராக இல்லை. காரணம், அடுத்த தேர்தலிலேயே அவற்றின் அக்கறையுள்ளது. அதனால் அவற்றுக்கு இந்தப் பொதுவேட்பாளர் விடயத்தில் முழுமையான ஈடுபாடில்லை என்பதேயாகும். சில உறுப்பினர்களின் நிர்ப்பந்தம், அரசியற் தடுமாற்றம் போன்றவற்றினாலேயே பொதுவேட்பாளர் நிலைப்பாட்டை இவை ஆதரிக்கின்றன. குறிப்பாக ரெலோவுக்குள்ளும் புளொட்டுக்குள்ளும் எதிர்நிலைப்பாடுண்டு. இதை அந்தக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தனிப்படவும் பொதுவெளியிலும் (வினோநோகராதலிங்கம் – ரெலோ) வெளிப்படுத்தி வருகின்றனர். இரண்டாவது காரணம், இந்த விளையாட்டுக்காகத் தம்முடைய நீண்டகால அரசியல் நலன்களை அவை இழக்கத் தயாரில்லை என்பதேயாகும். இந்த லட்சணத்தில்தான் சிதறிக் கிடக்கும் தமிழ்த்தேசியச் சக்திகளை தமிழ்ப்பொது வேட்பாளர் என்ற மாயாவி (குறியீடு!) ஒரு புள்ளியில் ஒருங்கிணைத்துத் திரளாகக் கூட்டிக் கட்டுவதைப் பற்றிப் பேசப்படுகிறது. (மேலும் சிரிப்பை அடக்கிக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்). ஆனாலும் பொதுக்கட்டமைப்பிலுள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ் தன்னுடைய சின்னத்தைக் கொடுப்பதற்குப் பெருந்தன்மையுடன் முன்வந்தது என்று சொல்லப்பட்டுள்ளது. அது பொதுச்சபையினரால் ஏற்கப்படவில்லை. (இதற்கான காரணம் இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை). இவ்வளவுக்கும் பொதுவேட்பாளருக்கான தகுதியை வழங்கக் கூடியவாறு பொதுக்கட்டமைப்புக்குள் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் நான்கு உள்ளன. ஆக இவர்களிடம் எந்தத் திரவியங்களுமே இல்லை. விசுவாசமும் தெளிவும் உண்மையும் இல்லை என்பதே நிரூபணம். என்பதால்தான் ஒரு வேட்பாளருக்காகத் தமிழரசுக் கட்சியிடம் போகவேண்டியிருந்தது. – அதற்குள்ளிருந்து ஒரு ஆளை எடுக்க வேண்டியேற்பட்டது. இதைப் புரிந்து கொண்டோ புரியாமலோ அரியநேந்திரனும் உசாரோடு பொதுவேட்பாளராகத் தன்னுடைய தலையைக் கொடுத்துள்ளார். அரியநேத்திரன் தேர்வு செய்யப்பட்டதை ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட், சிறிகாந்தாவின் தமிழ்த்தேசியக் கட்சி போன்றவை அவ்வளவாக விரும்பவில்லை. காரணம், முன்பு இந்தக் கட்சிகளையெல்லாம் அரியநேந்திரன் “ஒட்டுக்குழுக்கள், அரசாங்கத்தின் ஆட்கள், துரோகிகள், காட்டிக் கொடுப்போர், தமிழின விரோதிகள், போராட்டத்தை விலை கூறி விற்பவர்கள் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியும் விமர்சித்தும் வந்தவர். இறுதிவரையிலும் (ஏன் இப்போதும் கூட) அப்படியான ஒரு உளநிலையிலேயே இருக்கிறார் அரியநேந்திரன். எனினும் ஒரு வேட்பாளரை நிறுத்தியே ஆக வேண்டும். இதற்கு மேலும் ஆட்தேடிக் காலத்தை நீடிக்க முடியாது என்ற நிலையில்தான் அவை இதையெல்லாம் பொறுத்துக் கொண்டு அவரை ஆதரிக்கின்றன. இதையெல்லாம் ஏற்று அனுசரித்துப் போக வேண்டிய இக்கட்டான நிலை பொதுச் சபைக்கும் பொதுக் கட்டமைப்பில் உள்ள கட்சிகளுக்கும் வந்து விட்டது. இப்படிப் பல இடியப்பச் சிக்கல்களுக்கு மத்தியில் பொதுவேட்பாளரைக் கண்டு பிடித்து, வேட்பு மனுத் தாக்கல் செய்தாலும் பிணக்கும் பிரச்சினைகளும் முடியவில்லை. அவை உட்கசப்பையே தந்து கொண்டிருக்கின்றன. அவற்றின் வெளிப்பாட்டுக்கு ஒரு சாட்சியமாக – “ஒரு பொதுக் குறியீட்டைஏன் தேட வேண்டி வந்தது? ஏனென்றால் தமிழ் மக்கள் மத்தியில்கட்சித் தலைவர்கள்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்டு. ஆனால் தமிழ் அரசியல் சக்தியை ஒரு புள்ளியில்ஒன்றிணைக்கவல்ல ஜனவசியமிக்க தலைவர்கள் அநேகமாகஇல்லை. தமிழ் மக்களை ஆகக்கூடியபட்சம் ஒரு பொதுநிலைப்பாட்டின் கீழ்; ஒரு பொதுக் கொள்கையின் கீழ்ஒன்றிணைக்கவல்ல ஜனவசியமிக்க தலைமைகள் இருந்திருந்தால்ஒரு பொதுத் தமிழ் வேட்பாளருக்கு தேவையே இருந்திருக்காது. எனவே ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை தேடுவதில் உள்ள சவால்என்னவென்றால், தமிழ் மக்களை ஒரு பொதுக் குடையின் கீழ்ஒன்றிணைக்க வல்ல தலைமைகளுக்கு தட்டுப்பாடு உள்ளதுஎன்பதுதான்” எனப் பொதுச்சபையைச் சேர்ந்த நிலாந்தன் பகிரங்கமாகவே குறிப்பிட்டுள்ளார். பொதுக் கட்டமைப்பில் இணைந்துள்ள கட்சிகளுக்கும் அதற்கு வெளியே உள்ள கட்சிகளுக்கும் அவற்றின் தலைவர்களுக்கும் இதைவிட வேறு கௌரவம் வேண்டுமா? நமக்கும் தெரியும் இதுதான் உண்மை நிலவரம் என்று. இதை நாம் ஏற்கனவே பல தடவை சொல்லி விட்டோம். ஆனால், இவர்களையெல்லாம் தலைவர்கள் என்று ஏற்றுக் கொண்ட பொதுச் சபையினர், ஒன்றாகக் கூடிப் பேசி, தேநீர் குடித்து விருந்துண்டு கொண்டே இப்படியொரு விமர்சனத்தை – குற்றச்சாட்டை பொதுவெளியில் சொல்லியிருப்பதுதான் கேள்வியை எழுப்புகிறது. ஆக மொத்தத்தில் பொதுவேட்பாளர் என்ற விடயத்தை தொடக்கத்திலிருந்து தலையில் தூக்கிச் சுமந்து கொண்டிருப்பது பொதுச் சபையினர் என்றே நிரூபிக்கப்படுகிறது. 15 ஆண்டுகளாக இந்தச் சிந்தனையைப் பொதுச் சபைக்குள்ளிருக்கும் சில கருத்துருவாக்கிகள்தான் (மேதாவிகள்) சுமந்து கொண்டிருக்கின்றனர். இப்போது அதை நடைமுறையாக்க முற்படுவதாகச் சொல்கிறார்கள். அதற்காகத் தாம் பட்ட – படுகின்ற சிரமங்களையும் செலுத்துகின்ற உழைப்பையும் பற்றி விளக்குகிறார்கள். பொதுவேட்பாளரை ஏற்றிருக்கும் கட்சிகள், வெளியே சொல்கின்ற அளவுக்கு இதில் சீரியஸாகவும் இல்லை. நேர்மையாகவும் இல்லை. இதற்காக உழைப்பதாகவும் இல்லை. இதனால்தான் பொதுவேட்பாளர் வேட்புமனுத் தாக்கல் செய்யுமிடத்திற் கூட இவர்களில் பலரும் நிற்கவில்லை. அதற்குள் சிங்களத் தரப்பின் ( எதிர்த்தரப்பின்) வேட்பாளரைச் சந்திப்பதற்காகக் கொழும்புக்கு ஓடி விட்டனர் என்று கவலைப்படுகின்றனர் பொதுக்கட்டமைப்பினர். தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்தியதே எதிர்த்தரப்பினர் மீது நம்பிக்கை இல்லை என்ற அடிப்படையில்தான். அப்படியிருக்கும்போது வேட்பு மனுத்தாக்கல் செய்து விட்டு, ரணில், சஜித், அனுர, நாமல் என்று ஓடித்திரிந்தால் மக்கள் எப்படிப் பொது வேட்பாளரை ஏற்றுக் கொள்வார்கள்? என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர். இதனால்தான் தாம் இந்தச் சந்திப்புகளை நிராகரித்தோம் என்றும் விளக்குகின்றனர். இந்த நியாயம் மதிக்கப்படக் கூடியதே! இதேவேளை தமிழ்ப்பொது வேட்பாளர் என்ற விடயத்தை ஆரம்பித்து வைத்தது தாமே என்று ஈ.பி.ஆர்.எல். எவ் கூறுகிறது. திரு. சுரேஸ் பிரேமச்சந்திரனே இதனை முன்னெடுத்தார் என்கின்றனர் ஈ.பி.ஆர்.எல். எவ்வின் முக்கியஸ்தர்கள். தமிழ்ப்பொது வேட்பாளரைப் பற்றிப் பிள்ளையார் சுழி போட்டதே தமது தரப்பு என்கிறது யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்டியங்கி வரும் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைக்குழுமம் ஒன்று. வேண்டுமென்றால், எங்களுடைய பத்திரிகையைப் புரட்ப் பாருங்கள். அதற்கான ஆதரமிருக்கும் என்று அந்தத் தரப்பிலிருந்து கூறப்படுகிறது. இதெல்லாம் ஒருபுறமிருக்க, வேட்பாளரான அரியநேத்திரன் மீது அவருடைய தமிழரசுக் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்கத் தீர்மானித்துள்ளது. கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாறாக, கட்சிக்குத் தெரிவிக்காமலே அதனுடைய மத்தியகுழு உறுப்பினர் ஒருவர் இப்படிச் செயற்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்குரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று ஒரு காலக்கெடுவை விதித்திருக்கிறது தமிழரசுக் கட்சி. அதுவரையிலும் கட்சிச் செயற்பாடுகளில் அரியநேத்திரனுக்கு இடமில்லை. ஆக, இப்படி ஏகப்பட்ட சிக்கல்கள், முரண்பாடுகள், நம்பிக்கையீனங்களின் மத்தியில்தான் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்பட்டுள்ளார். என்னவோ இதையெல்லாம் பார்க்கும்போது முன்னர் கிராமங்களில் ஆடப்படும் கூத்தில் வருகின்ற பபூன்கள்தான் கண்ணுக்குள் நிற்கின்றனர். https://arangamnews.com/?p=11104
-
தமிழ் வேட்பாளருக்கு சங்கு.
சங்கூதிற வயசுல சங்கீதா!😂🤣
-
பாவம் தமிழ் மக்கள்!
பாவம் தமிழ் மக்கள்! August 8, 2024 — கருணாகரன் — “தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தைச் சற்றுக் கிண்டலாக நீங்கள் எழுதி வருகிறீர்கள். அதைப் படிக்கும்போது மனதுக்குக் கொஞ்சம் கஸ்ரமாக உள்ளது. அதுவும் நீங்கள் அப்படி எழுதுகிறீர்கள் எனும்போது இன்னும் வருத்தமாக இருக்கிறது. தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது ஒரு தரப்பினரின் அரசியல் நிலைப்பாடல்லவா! அதைச் சொல்வதற்கு அவர்களுக்கு ஜனநாயக உரிமை உண்டு. அது தொடர்பாக உங்களுக்கு மறு பார்வைகள் இருந்தால், அதை அதற்குரிய ஜனநாயகப் பண்போடு முன்வைக்கலாம். விவாதிக்கலாம். அதுதானே நியாயம். அவ்வாறான விவாதத்துக்குரிய கருத்துகளையும் நியாயங்களையும் எதிர்பார்க்கிறேன். அதை விடுத்து, பொதுவேட்பாளர் என்ற நிலைப்பாட்டையும் அதை முன்னெடுப்போரையும் கிண்டலடித்து எழுதுகிறீர்கள். அது கவலையளிக்கிறது. பொதுவாக நீங்கள் எதையும், எவரையும் மதிப்பிறக்கம் செய்யும் உள்நோக்கத்தோடு செயற்படுகின்றவரில்லை. ஆனால், இந்த விடயத்தில் உங்களுடைய எழுத்தும் தொனியும் மாறியிருப்பது ஏன்?… இதைப்பற்றிச் சொல்ல முடியுமா?” என்று வாட்ஸப்பில் ஒரு நண்பர் தகவல் அனுப்பிக் கேட்டிருந்தார். என்மீது அப்படியொரு (நல்ல) அபிப்பிராயம் அவரிடமிருப்பதையிட்டு அவருக்கு நன்றி சொன்னேன். கூடவே அவர் சுட்டிக்காட்ட விரும்பிய முறைமைக்காகவும். மிகச் சிறந்த முறையில் தன்னுடைய அபிப்பிராயத்தை உரியவாறு – பொறுப்போடும் நட்புக்குரிய பண்போடும் தெரிவித்திருந்தமைக்கு அவருக்கு மீண்டும் நன்றி. இந்தப் பண்பை நாம் முன்மாதிரியாகப் பின்பற்ற வேண்டும் என்பதால் அவருடைய ஒப்புதலோடு பின்வரும் விடயங்களைப் பொது வெளியின் (அவருடைய பெயரை மட்டும் குறிப்பிடாமல்) கவனத்திற்காக எழுதுகிறேன். அரசியல் கொள்கைகளும் நிலைப்பாடுகளும் பலவகையானவை. ஜனநாயகச் சூழலில் இது இயல்பானதும் அங்கீகரிக்கப்பட வேண்டிதுமாகும். அதற்கப்பால் மனித வாழ்க்கையில், மானுட இருப்பில், விருப்பில் இப்படிப் பல்விருப்பங்களும் பல்நிலைச் சிந்தனைகளும் நிலைப்பாடுகளும் இருக்கும். அது இயல்பும் வழமையுமாகும். அதுதான் நியாமும் அழகும் கூட. இதை அங்கீகரிக்க வேண்டும் என்பதே நமது நியாயமும். ஆகவே தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை ஒரு தரப்பின் அரசியல் நிலைப்பாடு, உபாய முயற்சி என ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், “அதுதான் சரியானது. அற்புதமானது. அதைத்தான் தமிழ்ச்சமூகம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அல்லது தமிழ்ச்சமூகத்தை அதை நோக்கிக் குவிக்க வேண்டும். அதற்கு மாற்றான அபிப்பிராயத்தை – நிலைப்பாட்டைக் கொண்டோரெல்லாம் சூதானவர்கள், இனவிரோதிகள், தமிழர்களின் ஐக்கியத்துக்கும் விடுதலைக்கும் எதிரானோர், விடுதலை மறுப்பாளர்கள் எனச் சித்திரிக்க முற்படுவதுதான் பிரச்சினைக்குரியதாகிறது. அதாவது இனத்துரோகிகள் என்றவாறாக. இது வழமையைப் போல கறுப்பு வெள்ளை அரசியற் சிந்தனைக்குள்ளிருந்து சிந்திக்கும் – செயற்படும் போக்காகும். ஜனநாயகத்தைப்பற்றிப் போதிப்போரும் நவீன அரசியலைப்பற்றிப் பேசுவோரும் அதற்கு மாறாக இப்படி கறுப்பு – வெள்ளை என குறுகிக் கிடப்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. இதில் சில முற்போக்காளர்களும் பன்மைத்துவத்தைப் பற்றிப் பேசுவோரும் அடக்கம். அவர்களுடைய தடுமாற்றத்தைப் புரிந்து கொள்ள முடியாமலிருக்கிறது. கறுப்பு – வெள்ளைச் சிந்தனையினால் பாதிக்கப்பட்ட – அதற்குப் பெரிய விலைகளைக் கொடுத்த E.P.R.L.F, PLOT, T.E.L.O போன்றவையே இந்தச்சிந்தனைக்கு அடிமைப்பட்டிருப்பதுதான் இங்கே துயரத்துக்குரியது என்பதால்தான் சில முறைகளில் சில விடயங்களைச் சொல்ல முற்பட்டேன். அது சூழலின் தன்மை, அதன் அவசியம் கருதியது. ஒரு கேலிச்சித்திரத்துக்கு (Caricature) அல்லது காட்டூனுக்கு (Cartoon) உள்ள பண்பையும் வலிமையையும் ஒத்தது. இன்னும் சொல்லப்போனால் அங்கத எழுத்து அல்லது அதொரு satiriar column எனலாம். அதை அந்த அடிப்படையில்தான் புரிந்து கொள்வது முக்கியம். அதாவது காட்டூனை ரசிப்பது, ஏற்பது என்ற மாதிரி. எனவே இதில் ஜனநாயக மாண்பை மீறாமல், அந்தப் பண்பைக் கடைப்பிடிக்க முயன்றுள்ளேன். என்னுடய பார்வைகளையும் நியாயங்கள், நிலைப்பாட்டையும் தெளிவாகக் கூறி வந்திருக்கிறேன். இனி – 1. தமிழ்ப்பொது வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் என்பதற்குச் சொல்லப்படும் நியாயங்கள் மிகப் பலவீனமானவை. 40 ஆண்டுகளாகச் சொல்லப்பட்டு வரும் பழைய, தோற்றுப்போன கருத்துகள். புதிதாகச் சிந்திக்க முடியாத, புதிய அரசியற் சூழலை விளங்கிக் கொள்ள முடியாத, புதிதாக அரசியலை முன்னெடுக்க இயலாத, தோல்வியிலிருந்து விடுபட முடியாததன் வெளிப்பாடு. அந்த இயலாமையை மறைப்பதற்குப் பூசப்படும் சலிப்பான வார்த்தைகள். இதைப்பற்றி விரிவாக – விளக்கமாக எழுதியுள்ளேன். பிறரும் எழுதியுள்ளனர். 2. அதற்கான முயற்சிகள். தமிழ்ப்பொதுவேட்பாளர் (இப்படி எழுதும்போதே ஏனோ சிரிப்பும் சலிப்பும்தான் வருகிறது – மன்னித்துக் கொள்ளுங்கள்) ஒருவரை நிறுத்துவதற்கு அரசியல் ரீதியாகவும் ஆளுமை ரீதியாகவும் (ஆள் ஒருவரைத் தேடிப் பிடிப்பதற்கே படுகின்ற அல்லற்பாடுகள்) எடுக்கப்படும் முயற்சிகள் கூட சிறுபிள்ளைத் தனமானவை. இத்தனை ஆண்டுகால போராட்ட அரசியல், அதற்கான உழைப்பு, தியாகம், கற்றுக் கொண்ட படிப்பினைகள் போன்றவற்றிலிருந்து நாம் பெற்றதென்ன? எத்தனை அரசியல் ஆளுமைகளையும் தளபதிகளையும் செயற்பாட்டாளர்களையும் கண்டிருந்தோம். இன்று? மெய்யானோரும் சரியாகச் சிந்திப்போரும் உண்மையாகவே மாற்றத்துக்காக உழைப்போரும் ஓரங்கட்டப்பட்டு, நடிகர்கள் அரங்கேற்றப்பட்டுள்ளனர். அப்படியென்றால், இப்படித்தான் கிலிசை கேடாக நிலைமை இருக்கும். இப்படி நாறிப்போயிருக்கும் பலவீனத்தை மக்களுக்கும் (மேலும் மக்களுக்கு நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளே நடக்கின்றன) அரசுக்கும் இந்தியா உட்பட சர்வதேச சமூகத்துக்கும் காட்ட வேண்டுமா? நாம் பலவீனப்பட்ட நிலையில் இருக்கலாம். அதற்காக நம்முடைய வறுமையை வெளியே சொல்லித்தான் ஆக வேண்டுமா? உங்கள் வீட்டிலிருக்கும் அல்லது உங்கள் குடும்பத்துக்குள்ளிருக்கும் பலவீனமான விடயங்களைப் பகிரங்கப்படுத்துவதை விரும்புவீர்களா? அதையெல்லாம் குடும்பக் கௌரவம், சுயமரியாதை எனக் கவனமாக மறைத்துக் கொள்வீர்கள். சமூகப் பலவீனத்தைத் தக்கமின்றிப் பறை சாற்றுவீர்கள். உண்மையில் இந்தக் குறைபாட்டை உணர்ந்து நாம் அதிலிருந்து மீண்டெழ வேண்டுமே தவிர, அதை எதிர்த்தரப்புப் பயன்படுத்துமளவுக்கு வாய்ப்பளிக்கவோ அனுமதிக்கவோ கூடாதல்லவா! செயற்பாட்டு அனுபவமில்லாதவர்களின் வேலை அல்லது முயற்சிகள் இப்படித்தானிருக்கும். கள அனுபவமற்றவையாக. 3. தமிழ்ப்பொது வேட்பாளரரை நிறுத்த வேண்டும் என நிற்போர். இவர்கள் ஒரு முகப்பட்ட சிந்தனைக் குழாத்தினரல்ல. ஒத்த நிலைப்பாட்டைக் கொண்டோரும் அல்ல. தவிர்க்க முடியாமல் நெல்லிக்காய்களை ஒன்றாகச் சேர்த்ததைப்போல இவர்களை ஓரணியில் சேர்த்தது யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்டியங்கும் ஊடக நிறுவனமொன்றின் இயக்குநர். இன்னொருவர் ஈ.பி.ஆர்.எல்.எவ் வின் தலைவர் திரு. சுரேஸ் பிரேமச்சந்திரன். இதற்கு இணை நின்றவர்கள் பத்தியெழுத்தாளர்கள் இருவர். ஏனையோர் இதில் விரும்பியும் விரும்பாமலும் உள்ளடக்கப்பட்டவர்கள். ‘உள்ளடக்கப்பட்டவர்கள்’ என்று அழுத்தம் கொடுப்பதற்குக் காரணம், அவர்கள் தனிப்பட்ட உரையாடல்களில் தமது விருப்பம் வேறு. தவிர்க்க முடியாமல் நாம் இந்த நிலைப்பாட்டுக்கு சம்மதித்திருக்கிறோம் என்று தொடர்ந்து கூறுவதாகும். அப்படிக் கூறுவது அவர்களுக்கும் அவர்களுடைய அரசியலுக்கும் அழகல்ல. அது அரசியல் செயற்பாட்டுக்கு நல்லதுமல்ல. இருந்தும் அப்படித்தான் அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு தரப்பினரோ இந்தப் பொது வேட்பாளருக்கு மக்களிடம் ஆதரவு கிட்டவில்லை என்றால்…? தம்முடைய அரசியல் எதிர்காலம் என்ன என்ற கேள்வியும் உண்டு. குறிப்பாக ரெலோ, புளொட் ஆகியவற்றுக்கு. ஏனைய சில்லறைத்தரப்புகளுக்கு எல்லாம் ஒன்றுதான். வென்றாலென்ன? தோற்றாலென்ன? ஏதோ நமக்கும் வடையும் தேநீரும் கிடைக்கிறது. அந்தளவே போதும் என்ற நிலைப்பாட்டோடிருக்கிறார்கள். ஆனால், ஈ.பி.ஆர்.எல்.எவ்வுக்கு இந்தப்பிரச்சினை இல்லை. அது ஏற்கனவே மிகச் சிக்கலான நிலையில்தான் உள்ளது. அது முன்னிலை பெறுவதற்கான ஆயிரம் கதவுகளையும் தானாகவே அடைத்துச் சாத்திக் கொண்டு பிடிவாதமாக இருட்டறைக்குள் தியானம் செய்கிறது. ஆகவே அதற்கு வாழ்வும் சாவும் ஒன்றுதான். வென்றால் இன்னொரு சுற்று ஓடலாம். இல்லையென்றாலும் ஏதோ அவ்வப்போது அரங்கில் நாமும் இருக்கிறோம் என்று காட்டிக் கொள்ளலாம். அவ்வளவுதான். சிவில் குழுவினர் (Civil society representatives) என்று தம்மை அடையாளப்படுத்துவோர் ஏனைய தரப்புகளை மறைமுகமாக ஆயுததாரிகள் (Armed parties) அல்லது துணை ஆயுதக்குழுவினர் (paramilitaries) என்ற பழைய மனப்பதிவோடு அல்லது அத்தகைய ஒரு உள்ளுணர்வோடு – விலக்கத்தோடுதான் காரியங்களைச்செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்குள் தாம் கலந்து விடக் கூடாது என்ற எச்சரிக்கையை அவர்களிடம் அவதானிக்க முடிகிறது. இதனால் சற்று விலகி நின்று கொண்டே, “தமிழ்ச்சமூகத்தின் எதிர்காலத்துக்காக சேர்ந்து வேலை செய்கிறோம். கலந்து கொள்ளவும் கரைந்து போகவும் மாட்டோம்” என்று செயற்பாடுகளால் காட்டுகின்றனர். சிவில் தரப்பும் கட்சிகளும் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை கூட அந்த அடிப்படையிலானதுதான். (பாவம் விக்னேஸ்வரன்). ஆக இப்படியான சூழலில் எப்படி இவற்றைக் குறித்துப் பேசாமலிருக்க முடியும்? அந்தளவுக்குத் தமிழ்ச் சமூகம் மொண்ணையில்லைத்தானே! பொய்களையும் மாயைகளையும் களைய வேண்டியது, இனங்காட்ட வேண்டியது, அதை உணர்ந்தறிந்தவரின் கடமை. அதைச் செய்ய முயற்சிக்கிறேன். அவ்வளவுதான். பாவம் தமிழ் மக்கள். https://arangamnews.com/?p=11078
-
பொது வேட்பாளர் வந்து விட்டார் - நிலாந்தன்
பொது வேட்பாளர் வந்து விட்டார் - நிலாந்தன் தமிழ்ப்பொது வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு இப்பொழுது விடை கிடைத்து விட்டது. ஆனால் கடந்த சில வாரங்களாக அந்த கேள்வியை முன்வைத்து பல்வேறு விதமாக விமர்சிக்கப்பட்டது. தமிழ் மக்கள் பொதுச்சபையும் கட்சிகளும் சேர்ந்து உருவாக்கிய பொதுக் கட்டமைப்பினால் ஒரு பொது வேட்பாளரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது ஒரு மிகப்பெரிய பலவீனமாக உருப்பெருக்கிக் காட்டப்பட்டது. ஆனால் உண்மையில் நடந்தது என்ன ? தமிழ் மக்கள் பொதுச்சபை என்று அடக்கப்படும் அமைப்புக்கான முதலாவது கருநிலைச் சந்திப்பு ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வவுனியாவில் இடம் பெற்றது. அதன் பின் தமிழ் மக்கள் பொதுச்சபைக்கும் கட்சிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை ஜூன் மாதம் 29 ஆம் திகதி இறுதியாக்கப்பட்டது. அதன்பின் ஜூலை மாதம் 22 ஆம் திகதி அந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கை உத்தியோகபூர்வமாக கையெழுத்திடப்பட்டது. அதன் அடிப்படையில் ஒரு பொதுக் கட்டமைப்பு இயங்கத் தொடங்கியது. அத் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பானது ஒரு பொது வேட்பாளரை கண்டுபிடிப்பதற்காக அன்றிலிருந்து இயங்கத் தொடங்கியது. கடந்த எட்டாம் திகதி ஒரு பொது வேட்பாளர் அறிவிக்கப்பட்டிருக்கிறார். அப்படிப் பார்த்தால் மொத்தம் 18 நாட்கள்தான் ஒரு பொது வேட்பாளருக்கான தேடல் மும்முரமாக இடம்பெற்றது. ஒரு சமூகத்தின் அரசியல் தலைவிதியை நிர்ணயகரமான விதங்களில் தடம் மாற்றக்கூடிய ஒரு குறியீட்டு வேட்பாளரை கண்டுபிடிப்பதற்கு 18 நாட்கள் சென்றன என்பது ஒப்பீட்டளவில் குறைவுதான். அதற்காக 18 மாதங்களை எடுத்துக் கொண்டால் கூட குற்றமில்லை. ஒரு பொது வேட்பாளர் ஒரு பொதுக் குறியீடு என்று தொடக்கத்திலிருந்தே கூறப்பட்டு வந்தது. அவ்வாறு ஒரு பொதுக் குறியீட்டை ஏன் தேட வேண்டி வந்தது? ஏனென்றால் தமிழ் மக்கள் மத்தியில் கட்சித் தலைவர்கள்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்டு. ஆனால் தமிழ் அரசியல் சக்தியை ஒரு புள்ளியில் ஒன்றிணைக்கவல்ல ஜனவசியமிக்க தலைவர்கள் அநேகமாக இல்லை. தமிழ் மக்களை ஆகக்கூடியபட்சம் ஒரு பொது நிலைப்பாட்டின் கீழ்; ஒரு பொதுக் கொள்கையின் கீழ் ஒன்றிணைக்கவல்ல ஜனவசியமிக்க தலைமைகள் இருந்திருந்தால் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளருக்கு தேவையே இருந்திருக்காது. எனவே ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை தேடுவதில் உள்ள சவால் என்னவென்றால், தமிழ் மக்களை ஒரு பொதுக் குடையின் கீழ் ஒன்றிணைக்க வல்ல தலைமைகளுக்கு தட்டுப்பாடு உள்ளது என்பதுதான். இப்பொழுது தெரிவு செய்யப்பட்டிருக்கும் பொது வேட்பாளர் அவ்வாறு எல்லாத் தகமைகளும் உடையவர் என்று இக்கட்டுரை கூறவரவில்லை. அரசியலில் மட்டுமல்ல நடைமுறை வாழ்க்கையில் எதிலுமே 100% பூரணமானது என்று எதுவும் கிடையாது. இருப்பவற்றில் சிறந்தவற்றை வைத்துத்தான் அரசியலைக் கொண்டு போகலாம். ஏனென்றால் அரசியல் எனப்படுவது சாத்தியக்கூறுகளின் கலை. சாத்தியக்கூறுகள் என்று பார்த்தால் இருக்கின்றவைகள்தான் சாத்தியக்கூறுகள். இல்லாதவைகள் அல்ல. இந்த அடிப்படையில்தான் ஒரு பொது வேட்பாளரை பொதுக் கட்டமைப்பு முன் வைத்திருக்கின்றது. தமிழ்ப் பொது நிலைப்பாடு என்பது தமிழ்த் தேசிய நிலைப்பாடு தான். தமிழ்த்தேசிய நிலைப்பாட்டின் பிரதான மூலக்கூறு தாயக ஒருமைப்பாடு. அந்த அடிப்படையில் வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தை உணர்வுபூர்வமாகவும் நடைமுறைச் சாத்தியமான விதத்திலும் ஒன்றிணைக்கும் தேவைகளை அடிப்படையாக வைத்து கிழக்கிலிருந்து ஒரு பொது வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவர் ஒரு குறியீடுதான். தமிழ் மக்கள் பொதுச்சபைக்குள் காணப்படும் கருத்துருவாக்கிகள் ஒரு பொது வேட்பாளர் தொடர்பாக கட்டியெழுப்பிய கருத்துருவாக்கம் என்னவென்றால், கிழக்கிலிருந்து ஒரு பெண் வேட்பாளர்தான். அவரும் அரசியல் கட்சிகள் சாராதவராக இருந்தால் உத்தமம் என்று கருதப்பட்டது. ஆனால் நடைமுறையில் அப்படி ஒரு பெண் வேட்பாளரைத் தேடிக் கண்டுபிடிப்பதில் நெருக்கடிகள் இருந்தன. மட்டுமல்ல, நாட்களும் குறைவாக இருந்தன. ஒரு பெண் வேட்பாளரைக் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் ஓர் ஆண் வேட்பாளரை அதாவது கட்சிசாரா ஆண் வேட்பாளரை கண்டுபிடிக்கலாமா என்று சிந்திக்கப்பட்டது. ஆனால் அங்கேயும் வரையறைகள் இருந்தன. அதன் பின்னர்தான் கட்சி சார்ந்த யாராவது இருப்பார்களா என்று தேட வேண்டி வந்தது. ஜனாதிபதித் தேர்தல் பொறுத்து பொதுக் கட்டமைப்புக்கு சட்டரீதியாக சில வரையறைகள் இருந்தன. தேர்தலில் பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சி ஒரு வேட்பாளரை நிறுத்தலாம். அல்லது ஒரு முன்னாள் அல்லது இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுயேட்சையாகக் களமிறங்கலாம். இந்த இரண்டு சாத்தியக்கூறுகளுக்குள்ளும்தான் ஒரு பொது வேட்பாளரைத் தேட வேண்டியிருந்தது. அதாவது தேர்தல் சட்டங்களின்படி ஒன்றில் பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சி வேண்டும். அல்லது முன்னாள் அல்லது இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேண்டும். தமிழ் தேசியப் பொதுக் கட்டமைப்புக்குள் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் உண்டு. ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற கட்சிகள் அவ்வாறு சின்னத்தை தருவதற்குத் தயாராகக் காணப்பட்டன. சில கட்சிகள் தரத் தயங்கின. பொதுகட்டமைப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் ஒரு விடயம் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கட்சியின் சின்னத்தை ஒரு பொது நிலைப்பாட்டுக்காகப் பயன்படுத்தி அதன்மூலம் திரட்டப்பட்ட வாக்குகளையும் பிரபல்யத்தையும் அடுத்து வரும் தேர்தலில் அக்கட்சி தனது தனிப்பட்ட கட்சி தேவைகளுக்கு பயன்படுத்துவது தொடர்பாக ஒர் உடன்படிக்கை எழுதப்பட வேண்டும் என்று அங்கே சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால் இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் தேர்தல் ஆண்டுகளாகக் காணப்படும் ஓர் அரசியல் பின்னணியில், ஜனாதிபதித் தேர்தலை உடனடுத்து வரக்கூடிய எந்த ஒரு தேர்தலிலும் தமது கட்சி சின்னத்தைப் பயன்படுத்தாமல் விடுவது தொடர்பில் கட்சிகள் அதிகமாக யோசித்தன. இப்படிப்பட்டதோர் பின்னணியில், ஒரு சுயேச்சை வேட்பாளரைப் பொதுக் கட்டமைப்பு முன்நிறுத்தியமை என்பது கட்சிச் சின்னம் கிடைக்காத காரணத்தால் அல்ல. அதைவிட முக்கியமாக வடக்குக் கிழக்கு ஒருங்கிணைந்த தாயகத்தை பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கு நிலையில் இருந்துதான் என்று , தமிழ் மக்கள் பொதுச்சபையின் உறுப்பினர்கள் கூறுகிறார்கள். மேலும் தமிழரசுக் கட்சிக்குள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஒருவரை பொதுகட்டமைப்பின் வேட்பாளராக நிறுத்துவது என்பது பரந்தகன்ற தளத்தில் கட்சிகளைக் கடந்த தமிழ்ப் பொது நிலைப்பாட்டுக்கான அடித்தளமாகவும் அமையும். கடந்த 15 ஆண்டுகளாக கருத்துருவாக்கமாக காணப்பட்ட ஒரு விடயம், இப்பொழுது அடுத்த கட்ட வளர்ச்சிக்கு வந்து விட்டது. தமிழ்ப் பொது வேட்பாளர் பரந்தகன்ற தளத்தில் தமிழ் மக்களை ஒன்றுதிரட்டுவாராக இருந்தால், அதுவே கடந்த 15 ஆண்டுகளில் கிடைத்த மகத்தான வெற்றியாக அமையும். தமிழ்மக்கள் எங்கே ஒன்றாக நிற்கிறார்கள்? சில நினைவு கூர்தல்களைத்தவிர மற்றெல்லா இடங்களிலும், எல்லாவற்றிலும் தமிழ்மக்கள் இரண்டாகப்; பலவாக நிற்கிறார்கள். வடக்காக,கிழக்காக;சாதியாக,சமயமாக;கட்சிகளாக,கொள்கைகளாக ; தியாகிகளாக, துரோகிகளாக ;கட்சிகளுக்குள் அணிகளாக; முகநூலில் குழுக்களாக; திருச்சபைக்குள் அணிகளாக;ஆலய அறங்காவலர் சபைகளுக்குள் அணிகளாக ; பழைய மாணவர் சங்கங்களுக்குள் அணிகளாக; புலம்பெயர்ந்த நாடுகளில் அமைப்புகளாக; அமைப்புக்களுக்குள் அணிகளாக….எல்லா இடங்களிலும் எல்லாவற்றிலும் தமிழ்மக்கள் இரண்டாகப்,பலவாக நிற்கிறார்கள். எங்கே ஒன்றாக நிற்கிறார்கள்? ஒன்றாக நிற்கக்கூடாது என்பதில்தானே ஒன்றாக நிற்கிறார்கள்? தன் பலம் எதுவென்று தெரியாமல்; தன்னைத் தானே நம்பாமல்; சிதறிக் கொண்டு போகும் ஒரு மக்கள் கூட்டத்தை அகக்கூடிய மட்டும் பெருந் திரளாகக் கூட்டிக்கட்டுவதுதான் தேசியவாத அரசியல். ஏனெனில் தேசம் எனப்படுவது ஒரு பெரிய மக்கள் திரளாகும். தங்களை தேசமாக உணரும் ஒரு மக்கள் கூட்டத்தின் கூட்டு உணர்வே தேசியம் எனப்படுகின்றது. அக்கூட்டு உணர்வுக்கு தலைமை தாங்குவதுதான் தேசியவாத அரசியல். தமிழ் பொது வேட்பாளர் என்று தெரிவின் முதன்மை நோக்கமும் அதுதான். ஒன்று திரண்ட தமிழ் மக்கள் தங்களுக்கு என்ன தேவை என்பதை வெளி உலகத்துக்கு ஒரே குரலில் கூறுவார்களாக இருந்தால், தமிழ் மக்களின் பேர பலம் அதிகரிக்கும். ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரும் கடந்த 15 ஆண்டுகளாக இன அழிப்புக்கு எதிராக நீதி கிடைக்கவில்லை. இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை. 2009 மே மாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது ஆயுதப் போராட்டம்தான். அது ஒரு விளைவுதான்.மூல காரணமாகிய ஒடுக்குமுறை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது. அதாவது இன ஒடுக்கு முறை நிறுத்தப்படவில்லை. இன ஒடுக்குமுறை எனப்படுவது தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமாகத் திரண்டிருப்பதை அழிப்பதுதான். தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டும் காரணிகளை அழிப்பதுதான். அதனால், ஒடுக்குமுறைக்கு எதிராக ஒரு பெரும் திரளாக;தேசிய இனமாக தமிழ் மக்களைத் திரட்டி எடுப்பதுதான் தேசியவாத அரசியல்.தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற முடிவு அந்தக் கொள்கை வழிபட்டதே. எனவே தமிழ் மக்கள் முன் இரண்டே இரண்டு தெரிவுகள்தான் உண்டு ஒன்று ஒரு தேசமாகத் திரள்வது. அல்லது தன் பலம் எதுவென்று தெரியாத; தன்னைத் தானே நம்பாத; ஒரு மக்கள் கூட்டமாகச் சிதறித் தூர்ந்து போவது. https://www.nillanthan.com/6854/
-
சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
இன்று சூரிச் வின்ரர்தூரில் இரண்டாவது நாளாக கொளுத்தும் வெயிலில் நடைபெற்ற விளையாட்டு விழாவுக்குச் சென்றிருந்தேன். பிற நாடுகளைப் போன்றே தாயகச் செயற்பாட்டாளர்கள் எல்லோருக்கும் வயதேறிக்கொண்டு போகின்றது. இளையோர் அரசியலைத் தவிர்த்து தமது விருப்பமான விளையாட்டுக்களில் ஈடுபட்டனர். எனினும் தலைவர் இருக்கின்றார் என்று இப்போதும் நம்பும் அளவிற்கு உலக நடப்பு தெரியாத சிலரும் இருக்கின்றார்கள் என்பதை காதில் விழுந்த கதைகளில் இருந்து அறியக்கூடியதாக இருந்தது! வந்தமா… விளையாட்டைப் பார்த்தமா.. கொத்துரொட்டியை சாப்பிட்டமா.. கூல் ட்றிங்க்ஸைக் குடித்தமா.. என்று வெளியே வந்துவிட்டேன்!
-
திராவிட மாடலைப் புரிந்து கொள்வோம்
திக்குத்தெரியாத மாடலா திராவிட மாடல்..? -சுப. உதயகுமாரன் திராவிட மாடலைப் புரிந்துகொள்வோம் -5 திராவிட மாடல் என்பது என்ன..? அற நிலையத் துறைக்கு தரும் அதிக முக்கியத்துவமா? வாக்கு வங்கியை மையப்படுத்திய திட்டங்களா? மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத திட்டங்களையே தமிழில் மாற்றி புகுத்தும் ராஜதந்திரமா.? டாஸ்மாக் கலாச்சாரமா.? என்ன தான் திராவிட மாடல் என பார்த்து விடுவோமா? ‘திராவிட மாடல்’ எனும் பெயரில் தங்களுக்கென ஓர் ஆட்சி மாதிரியை, சித்தாந்தத் திசைகாட்டியை வைத்திருப்பதற்கும், அதை அன்றாடச் செயல்பாடுகளோடு பொருத்திப் பார்ப்பதற்கும், பேசுவதற்கும் முதல்வர் ஸ்டாலினை நிச்சயமாகப் பாராட்டலாம். ஆனால், அந்த திராவிட மாடல் அவருடைய அமைச்சர்களுக்கேப் புரியாமலிருப்பதும், தெரியாமலிருப்பதும் அந்த மாடலின் ஆழமற்றத் தன்மையை எடுத்துரைக்கிறது. “கலைஞர், மு.க.ஸ்டாலினுக்கு முன்னால் திராவிட மாடல் ஆட்சியை முன்னெடுத்து சென்றிருக்கின்ற, சமூகநீதியின் காவலர் ராமன். சமத்துவம், சமூகநீதி இவற்றையெல்லாம் உலகத்திற்கு எடுத்துச் சொல்லி, எல்லோரும் சமம் என்று சொன்ன ஒரே நாயகன் ராமன். ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயம் எதிர்காலத்தில் உருவாக வேண்டும் என்ற உன்னத லட்சியத்தோடு உருவாக்கப்பட்ட காவியம் தான் ராமர் காவியம்” என்று தமிழக சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி அண்மையில் திராவிட மாடலுக்கு விளக்கமளித்தார். திராவிட இயக்கம் பெரிதும் பெருமை கொள்ளும் ‘பெரியார் மண்’ எப்போது, எப்படி ஆரியக் கூடாரத்தின் ‘இராமராஜ்யம்’ ஆயிற்று? என்பதெல்லாம் இன்னும் யாருக்கும் விளங்கவில்லை. திராவிடம், திராவிடம் என்று முதல்வர் ஸ்டாலின் அனுதினமும் பேசிக்கொண்டிருக்க, அவரின் துணைவியாரோ வீட்டிலும், வெளியிலும் ஆரியப் பார்ப்பனர்களை வைத்து பூசை புனஸ்காரங்கள், யாகங்கள், வேள்விச் சடங்குகள்.. செய்து கொண்டிருக்கிறார். சாதியையும், தீண்டாமையையும் எதிர்ப்பதற்காகவே சனாதன தரும மாநாட்டில் கலந்து கொண்டதாகச் சொன்ன அமைச்சர் சேகர் பாபு, பசுமாட்டுப் பகுத்தறிவையும், மனுஸ்மிருதி சுயமரியாதையையும் சமமாகக் கலந்து விரவி, திராவிட மாடலுக்குள் ஓர் ஆரிய மாடலை அனாயசமாக நடத்திக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் 1,355 கோவில்களில் திருப்பணி முடிக்கப்பட்டு, குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டிருக்கின்றனவாம். ரூ.3,776 கோடியில் 8,436 கோவில்களில் 18,841 திருப்பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, 5,775 பணிகள் முடிக்கப்பட்டுள்ளனவாம். இங்கு கோவில் குட முழுக்குகளை தமிழ்,சமஸ்கிருதம் இரண்டிற்கும் சம வாய்ப்பு தந்து நடத்த வேண்டும் என்ற உயர்நீதிமன்ற ஆணையை மீறி சமஸ்கிருத சனாதன வழியில் மட்டுமே நடத்துவதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதேபோல, 756 கோவில்களில் அன்னதானத் திட்டம் நடைபெறுகிறதாம்..! (இந்து தமிழ் திசை, 29.07.2024). பல முக்கியத் துறைகளில் போதிய நிதி இல்லாமல் ஏழைகள் வாடி வதங்கிக் கொண்டிருக்க, மற்ற பாஜக ஆளும் மாநிலங்களுக்கு போட்டியாக அறநிலையத்துறை அமைச்சர் ரூ.3,776 கோடி செலவு செய்து, பார்ப்பனீயத்துக்கு பால் வார்த்துக் கொண்டிருக்கிறார். ஒருபுறம், திராவிட மாடல் என்பது “எனது தத்துவம்” என்று சொந்தம் கொண்டாடுகிறார் முதல்வர் ஸ்டாலின். இன்னொரு புறம், “’திராவிடவியல் ஆட்சிமுறை’தான் எனது கோட்பாடு” என்று பேசுகிறார். மற்றொரு புறம், “பொருளாதாரம் – கல்வி – சமூகம் – சிந்தனை – செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒரு சேர வளர வேண்டும்” என்று பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் கண்ட வளர்ச்சிக் கனவு தான் “திராவிட மாடல் வளர்ச்சி” என்று விவரிக்கிறார். மொத்தத்தில், திராவிட மாடலின் தத்துவார்த்தப் பின்புலம், அதன் தொடக்கம், தொடர்ச்சி, காலக்கட்டம் போன்றவை தெளிவின்றியே அமைகின்றன. இவை மட்டுமல்ல, இன்னும் ஏராளமானக் குழப்பங்கள் திராவிட மாடலில் அடங்கியுள்ளன. இடது பக்கம் திரும்பப் போவதாக சுட்டு விளக்குப் போட்டுக் கொண்டே, வலதுபக்கமாக ஓட்டிச் செல்லப்படும் வாகனம் போலத் தான் இயங்குகிறது திராவிட மாடல். இன்னொரு விதத்தில் சொல்வதென்றால், திராவிட மாடல் என்பது புலித்தோல் போர்த்திய பசு போன்றது. வெளியே சமத்துவம், சமூக நீதி, சமூக மாற்றம் என்றெல்லாம் புரட்சிகரமாக உறுமினாலும், உள்ளுக்குள் அடிப்படையான சமூக-பொருளாதார-அரசியல் மாற்றங்கள் எவற்றையும் கொண்டுவராத ஒரு பழமைவாத உருட்டலாகத் தான் இருக்கிறது அது. சமூக இயக்கமாக இருந்து, தேர்தல் கட்சியாக மாறி, பின்னர் ஆட்சி அதிகாரத்துக்கு வந்த ’திராவிடவியல் ஆட்சிமுறை’ அடிப்படை மாற்றத்தை விரும்பும் ஒன்றல்ல. “ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்,” “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்,” “இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்,” “மாநிலத்தில் சுயாட்சி, மத்தியிலே கூட்டாட்சி” என்பன போன்ற திமுகவின் கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூக-பொருளாதார-அரசியல் கட்டமைப்பைத் தலைகீழாகப் புரட்டிப்போடும் புரட்சிகரக் கோட்பாடுகள் அல்ல. மேற்குலகின் நவீனம், அறிவியல், தொழிற்நுட்பம், முன்னேற்றம், வளர்ச்சி போன்றவற்றை அசல் தன்மையோ, ஆக்கத் திறனோ ஏதுமின்றி, உள்ளூர் சாதக பாதகங்கள் எவற்றையும் ஆய்ந்தறியாமல், கண்களை மூடிக் கொண்டு அப்படியே ஏற்றுக் கொள்கிறது திமுக. இதன் பிதாமகன் பெரியார் கூட தமிழ்நாட்டின் சமூக-பொருளாதார-அரசியல் யதார்த்தத்தை கருப்பு-வெள்ளையாகவேப் புரிந்துகொண்டார். முழுக்க முழுக்கத் தீதானப் பாரம்பரியத்தில் எந்தவிதமான நன்மையும் இல்லை; அதேபோல, முற்றிலும் நன்றான நவீனத்தில் எந்த விதமானத் தீமையும் இல்லை என்பதுதான் அவரது பரந்துபட்டப் புரிதலாக இருந்தது. பாரம்பரியம் என்பது பார்ப்பனீயம், சாதீயம், கடவுள் நம்பிக்கை, மூடப் பழக்கவழக்கங்கள், பெண்ணடிமைத்தனம், பிற்போக்குத்தனம் போன்றவற்றை மட்டுமே உள்ளடக்கி இருந்தது என்று கருதிய பெரியார், நவீனம் என்பது மேற்கத்திய வளர்ச்சி, மேம்பட்ட வாழ்க்கை, முற்போக்குச் சிந்தனைகள், பெண் விடுதலை, ஆங்கில மொழிப் பாண்டித்தியம் என்றெல்லாம் மிளிர்வதாகவே எண்ணினார். திராவிடச் சித்தாந்தம், கோட்பாடுகள் எல்லாவற்றையும் காற்றிலே பறக்க விட்டுவிட்டு, வேட்பு மனுக்களை கோவில்களில் வைத்துக் கும்பிட்டு தாக்கல் செய்யும் உடன்பிறப்புக்களை உள்ளடக்கிய திமுக, அனைத்து தரப்பினரின் வாக்குகளைக் கவர்வதற்காக நடத்தும் வார்த்தை ஜால தகிடுதத்தங்களாகவே திராவிடவியல் ஆட்சிமுறை, திராவிட மாடல் போன்றவை அமைகின்றன. அண்மையில் நடந்த விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் திமுக நிர்வாகிகள், “மூன்றாண்டு கால திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி, அந்தத் திட்டங்களின் பயன்களை நேரடியாகப் பெற்றுள்ள மக்களிடம் உதயசூரியனுக்கு வாக்களிக்கக் கேட்டுக் கொண்டார்கள்” என்று முதல்வர் குறிப்பிட்டிருப்பது உற்றுநோக்கத்தக்கது (தினகரன், 15.07.2024). மேம்போக்கான வாழ்வியல் ஒத்தடங்களையும், குறைந்த பணப் பரிசில்களையும் ஒன்றாகச் சேர்த்து பொட்டலங்கள் கட்டி, அவற்றின்மீது கவர்ச்சிகரமானப் பெயர்களை ஒட்டி, கிளை, வட்ட, மாவட்ட, மாநிலக் கழக விற்பனையாளர்களின் சந்தைப்படுத்துதலுக்காகவே பலத் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, விடியல் பேருந்து திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை (ஒரு கோடியே பதினைந்து லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1,000), புதுமைப்பெண் திட்டம் (2.73 லட்சம் மாணவியருக்கு மாதம் ரூ.1,000), தமிழ்ப் புதல்வன் திட்டம் (3.28 லட்சம் மாணவர்களுக்கு மாதம் ரூ. 1,000), மகளிர் திருமண நிதியுதவித் திட்டம் (69,000 பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம், 58,000 பெண்களுக்கு நிதியுதவி), திருநங்கைகள் நலன் (1,482 பேருக்கு மாதம் ரூ.1,500), மீனவர் நலன் (10,20,839 மீனவக் குடும்பங்களுக்கு மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை ரூ.8,000, மீன்பிடிக் குறைவு கால உதவித் தொகை ரூ.6,000) என்றெல்லாம் பல்வேறு திட்டங்கள் திராவிட மாடல் அரசால் அமல்படுத்தப்படுகின்றன. (தினகரன், 15.07.2024, 26.07.2024). கிராமப் புறங்களில் வாழும் பஞ்சப் பராரிகளுக்கு, பரம ஏழைகளுக்கு, இத்திட்டங்கள் கொஞ்சம் உதவலாம். அதேபோல, ஏழை மாணவ மாணவியர் அரசுப் பள்ளிகளில் படிப்பதற்கும், தமிழ்வழிக் கல்வியைப் பெறுவதற்கும் மேற்குறிப்பிட்ட சிலத் திட்டங்கள் ஊக்கமளிக்கலாம். ஆனால் பொதுவாகவே, பணக்கொடைகள் தொலை நோக்குப் பார்வை கொண்டவை அல்ல. அவை எந்தப் பிரச்சினையையும் நிரந்தரமாக தீர்க்க வல்லன அல்ல. மக்களை விடுவிப்பதற்குப் பதிலாக இப்பணக்கொடைகள் அவர்களைக் கட்டிப்போட்டு, ஒரு சார்பு நிலையை உருவாக்குகின்றன என்பதுதான் உண்மை. ஒரு ‘நலன்புரி அரசு’ (Welfare State) என்பது வெறுமனே பணப்பட்டுவாடா செய்வதாக அமையக் கூடாது; நீண்டகாலத் திட்டங்களைக் கொண்டிருக்க வேண்டும். ஏழ்மைக்கோ, உணவின்மைக்கோ, வேலையின்மைக்கோ வழங்கப்படும் உதவிகள்கூட தற்காலிகமான இடைக்கால ஏற்பாடுகளாகத் தான் பார்க்கப்படவேண்டும், பாவிக்கப்பட வேண்டுமே தவிர, அவை நிரந்தரமான தொடர் நடவடிக்கைகளாக இருத்தலாகாது. நம் நாட்டில் பெரும்பாலான அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஒப்பந்தக்காரர்கள் தங்களுக்கான ‘கரப்ஷன், கமிஷன், கலெக்ஷன்’ பற்றி மட்டுமே சிந்தித்துக்கொண்டு இயங்குவதால், ஏற்கனவே புரையோடிக் கிடக்கும் இலஞ்சக் கலாச்சாரம் இன்னோரன்ன பணப் பட்டுவாடாக்களால் மேலும் மோசமாகிறது. இம்மாதிரி பணப் பரிசில்கள் தேர்தலையும், வாக்குகளையும் மட்டுமே குறிவைத்து இயங்கி, ஒட்டுமொத்தச் சமூகத்தின் நலன்களையும், ஈடுபாடுகளையும் உருக்குலைக்கின்றன. ஆயிரம் ஆயிரமாய்க் கொடுக்கிறோம் என்று புளகாங்கிதமடைவதில் அர்த்தமே இல்லை. தமிழ்நாட்டில் ஓர் இடைநிலை அரசியல்வாதியின் அன்றாடச் செலவுகளுக்கு ஆயிரம் ரூபாய் போதாது. ஒரு நகர்ப்புற நோயாளி ஒரு சாதாரண வைரஸ் காய்ச்சலை எதிர்கொள்ள ஆயிரம் ரூபாய் போதாது என்பதுதான் யதார்த்தம். அதேபோல, மேற்குறிப்பிட்டத் திட்டங்களின் ஆண் பயனாளிகளும், பெண் பயனாளிகளின் ஆண் உறவுகளும் (தந்தையர், கணவர்கள், சகோதரர்கள், மகன்கள் போன்றோர்) கடந்த 2023-24 நிதியாண்டில் மட்டும் 4,829 டாஸ்மாக் கடைகள், மற்றும் 2,919 பார்களின் மூலமாக ரூ.45,855.67 கோடிக்கு மது அருந்தி தமிழ்நாடு அரசுக்கு நிதியை வாரி வழங்கியிருக்கின்றனர். சாராயக் கடைகளை மூடி, மக்களை குடிப்பழக்கத்தில் இருந்து மீட்டாலே, ஒவ்வொரு குடும்பத்துக்கும் பல ஆயிரங்கள் மிஞ்சுமே? திராவிட மாடல், ‘கேரளா மாடல்’ போல கல்வி, உடல்நலம் எனும் குறிப்பிட்ட அடிப்படை விடயங்களில் ஆழ்ந்து கவனம் செலுத்தவில்லை. உண்மையில், தமிழ்நாட்டின் கல்வித்தரம் அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடக்கிறது. தமிழ்நாட்டில் கல்வி பயிலும் ஆகப் பெரும்பாலான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு எந்தவொரு பொருள் குறித்தும் பத்து வாக்கியங்கள் கோர்வையாகப் பேசவோ, எழுதவோத் தெரியாது என்பதுதான் ஐம்பதாண்டு கால திராவிட அரசுகள் செய்திருக்கும் அவலமான கல்விப் பணி. போதாக்குறைக்கு தற்போது தேசியக் கல்விக் கொள்கைகள் இங்கு திவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. தேர்தல்கால ஒத்துழைப்புக்காக, உதவிகளுக்காக ஆசிரியர் நலன்களை கவனமாகப் பேணிக் கொள்ளும் இவ்வரசுகள், தமிழக இளைஞர்களின் கல்வியில், தமிழ்நாட்டின் எதிர்காலத்தில் நாட்டம் கொள்ளவில்லை. குறைந்தபட்சம் தமிழ் மொழிதான் தமிழ்நாட்டின் ஆட்சி மொழி, நிர்வாக மொழி, கல்வி மொழி, கலை மொழி, இசை மொழி, தொழில் மொழி, நீதி மொழி, இறைவழிபாட்டு மொழி, எனும் நிலைமையைக் கூட அரை நூற்றாண்டு காலமாக இவர்களால் ஏற்படுத்த முடியவில்லை. தொன்மையும், தொலையாச் சிறப்புக்களும் கொண்ட தமிழ்நாட்டிற்கான தனித்துவமான கல்விக் கொள்கை ஒன்று உருவாக்கப்பட வேண்டும். ஆனால், ஐம்பதாண்டு கால திராவிட ஆட்சிகள் அப்படி ஒரு முயற்சியே எடுக்கவில்லை. ஆனால், தற்போது அதற்கென ஒரு குழுவை அமைத்ததில் அதில் ஒருங்கிணைப்பாளராக இருந்த சிறந்த கல்வியாளர் ஜவகர் நேசன் விலக நேர்ந்ததும், தமிழ்நாட்டிற்கான தனித்துவமான கல்விக் கொள்கை உருவாக்கத்தில் இருந்தே விலகி அந்தக் குழு ஒரு அறிக்கை தந்ததும் சமகால வரலாறு! மக்கள் தற்காலிகமாக பசி தீர்த்துக் கொள்வதற்காக ஒரு மீனை வழங்கி, காலத்தைக் கடத்துவது எப்படி ஒரு ‘மாடல்’ ஆக இருக்க முடியும்? மக்கள் சொந்தக் காலில் நின்று அவர்களாகவே நிரந்தரமாக பசியாற்றிக் கொள்ளும் பொருட்டு அவர்களுக்கு மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பதைத்தானே ஒரு ‘மாடல்’ என்று போற்ற முடியும்? கட்டுரையாளர்; சுப. உதயகுமாரன் https://aramonline.in/18698/diravida-model-stalin-dmk-govt/
-
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
ஈழத்தமிழர் இறைமை தேர்தல் மேடையில் மீளுறுதி செய்யப்படுமளவுக்கே பொதுவேட்பாளர் பா. அரியநேத்திரன் தமிழ்த்தேசியத்தின் சின்னமாவார் | ஆசிரியர் தலையங்கம் August 10, 2024 தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு என்னும் பெயரில் 7 ஈழத்தமிழர் அரசியல் கட்சிகளும் 7 குடிசார் அமைப்புக்களும் ஒன்றிணைந்து இலங்கை அரசுத்தலைவர் தேர்தலில் பொதுவேட்பாளராக முன்னாள் இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அவர்களை அறிவித்துள்ளனர். இது 1976க்குப் பின் கட்சி அரசியலில் மீளவும் கூட்டணி அரசியலை மீள் கட்டமைத்துள்ளது.இதனை உறுதி செய்யக் கூடிய விதமாக தமிழரசுக்கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவுள்ள முன்னாள் மட்டக்களப்பு இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா கலையரங்கில் அளித்த உரையும் அமைகிறது. முதலில் அவ்வுரையைச் சுருக்கமாக எடுத்து நோக்குவோம். “தமிழ்த்தேசியத்தின் குறியீடாக மட்டுமே நான் இருப்பேன். இலங்கை சோசலிசக் குடியரசின் தலைவராக வருவதற்காக நான் போட்டியிடவில்லை. தமிழ்த்தேசிய மண்ணில் இனப்படுகொலை செய்யப்பட்ட இனமாக நாங்கள் இருக்கின்றோம். எங்களுக்கான உரிமை கிடைக்க வேண்டுமென்பதற்காக அனைத்துலகத்திற்கும் தென்னிலங்கைக்கும் வலியுறுத்துகின்ற அடையாளமாக நான் இந்தத் தேர்தலில் பொதுவேட்பாளராக நான் தெரிவுசெய்யப்பட்டுள்ளேன். எனது பணி செப்டெம்பர் 22ம் திகதி வரை மட்டுமே இருக்கும். அதற்குப் பிற்பாடான பணிகளைத் தமிழ் பொதுக்கட்டமைப்பே எடுக்கும்” என்னும் அவரின் உரையின் முக்கிய பகுதி ஈழத்தமிழர் கட்சி அரசியலில் ஏற்பட்டிருந்த தேக்க நிலையைக் கட்டுடைப்பதற்கான அறைகூவலாக அமைகிறது. அடுத்து “அனைத்துலக ரீதியில் நாங்கள் பேச்சுவார்த்தைக்குச் செல்கின்ற பொழுது அனைத்துலகம் ஒருமித்த குரலில் வரவேண்டும் என்றுதான் நமக்குக் கூறியது. நடைபெறவுள்ள இலங்கை அரசுத்தலைவர் தேர்தலில் ஒருகுரலில் ஒருமித்த கருத்துக்களை முன்னெடுத்துச் செல்வதற்காக தமிழ் பொதுவேட்பாளர் அடையாளப்படுத்தப்பட்டு அவருக்கு ஆதரவை மக்கள் வாக்குகளாகச் செலுத்துகின்ற பொழுது தமிழ் மக்களின் இனப்பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாதுள்ளது அவை தீர்க்கப்பட வேண்டும் என்பதை வெளிக்காட்டுகின்ற முயற்சியே இந்தப் பொதுவேட்பாளர் முயற்சி” என்னும் அவரின் விளக்கம் அனைத்துலக நிலையில் உள்ள தேக்கத்துக்கான எதிர்வினையாகவும் உள்ளது. ஆனால் அவர் “பொதுக்கட்டமைப்பு சார்பில் பலரையும் ஆராய்ந்த பின்னர் இறுதியாகச் சட்டத்தரணி தவராசவின் பெயரும் எனது பெயரும் இறுதித் தெரிவில் இருந்தது. நாங்கள் இருவரம் நண்பர்களாகவே இருக்கின்றோம். எவ்வாறாயினும் நானோ அவரோ எவ்விதமான சர்ச்சைகளுமில்லாமல் என்னை தெரிவு செய்தார்கள். இதனால் தமிழ்த் தேசியத்தின் அடையாளமாக நான் இருப்பேன்” என்கின்ற பொழுது; தமிழ்த்தேசியம் என்பது குறித்த விளக்கம் அதன் வரலாற்று வளர்ச்சி தெளிவாக்கப்படாத நிலை உண்டு என்பதை இலக்கு எடுத்துரைக்க விரும்புகிறது. “இலங்கை அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடுகின்றவர்கள் எத்தகையவர்கள் என்பது அனைவரும் அறிந்த விடயம். விடுதலைப்புலிகளை நான்தான் பிரித்தேன். கட்சிகளைப் பிரித்தேன். என்னை மாற்றமாட்டேன் என்றெல்லாம் போட்டியிட்டுபவர்களே அவர்கள். இவ்வாறான நிலையில் மக்களைப் பிரித்தாள்பவர்களுக்கு வாக்குகளை வழங்கப்போகின்றோமா? வடக்கில் ஒன்று தெற்கில் ஒன்று கதைப்பவர்களுக்கு வாக்குகளை வழங்கப் போகின்றோமா? வடக்கு கிழக்கைப் பிரித்தவர்களுக்கு வாக்குகளை வழங்கப் போகின்றோமா? என்பதைத் தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும். தமிழ்த் தேசிய இனத்தின் விடிவுக்காக பல இலட்சம் மக்களையும் போராளிகளையும் இழந்துள்ள நாம் உரிமையற்றவர்களாக இருக்கும் நிலையில் பல அரசுத்தலைவர்களைக் கண்டு ஏமாற்றமடைந்த நிலையில் இன்னும் பேரம்பேசத்தான் போகின்றோமா? இவை தொடர்பில் சிந்திக்க வேண்டும். இவற்றுக்காகத்தான் பொதுவேட்பாளராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளேன். எனவே ஒட்டு மொத்தத் தமிழ் மக்களும் எங்கள் விடிவுக்காக வாக்களிக்க வேண்டும்” என இவர் வாக்களிப்புக்கான காரணத்தைக் கட்டமைக்கையில் இனஅழிப்பு குறித்து எதுவுமே பேசாத நிலையில் இவர் தமிழ் தேசியத்தின் சின்னமாக எவ்வாறு தன்னை வெளிப்படுத்துவார் என்கிற சந்தேகத்தையும் அச்சத்தையும் ஏற்பட வைக்கிறது என்பது இலக்கின் கருத்து. இந்நிலையில் இந்த உரையினை அவர் 1979 முதல் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கும் சிறிலங்கா அரசியலமைப்பின் 1983ம் ஆண்டு ஆறாவது திருத்தத்திற்கும் கட்டுப்பட்ட நிலையிலேயே ஆற்ற வேண்டிய நடைமுறை எதார்த்தம் உள்ளதால் இது குறித்த திறனாய்வுக்குள் இலக்கு மேலும் செல்லாது. இந்த முயற்சியை இலங்கை அரசுத்தலைவர் தேர்தல் மேடையைப் பயன்படுத்தி ஈழத்தமிழர் இறைமையை எவ்வாறு ஈழத்தமிழர் தாயகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் மீளுறுதி செய்யலாம் என்பதை எடுத்து நோக்கலாமெனக் கருதுகிறது. இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்கும் இந்தப் பொதுவேட்பாளரின் நோக்கு என்ன அது எந்த வகையில் ஈழத்தமிழர்களின் தேசியப் பிரச்சினைத் தீர்வுக்கு அவர்களின் ஆதரவையும் ஓத்துழைப்பையும் நாடி நிற்கிறது என்பதைத் தெளிவாக்க வேண்டும் என்பது இலக்கின் முதல் கருத்தாக உள்ளது. இன்னும் குறிப்பாகக் கூறுவதானால் ஈழத்தமிழர்களின் உள்ளக தன்னாட்சி இழக்கப்பட்டுள்ளதைச் சான்றாதாரங்களுடன் எடுத்து விளக்கி இதனை ஈடுசெய்யாது ஈழத்தமிழர்களின் மேலான இனஅழிப்பை நடாத்த மக்கள் மேலான போரை முன்னெடுத்தே முழு இலங்கையரையும் வங்குரோத்து நிலைக்குக் கொண்டு வந்துள்ளன சிங்களக் கட்சிகள் என்பதைத் தெளிவாக்க வேண்டும். ஈழத்தமிழரின் இறைமையின் மீளுறுதி என்பது இலங்கையின் வேறெந்த இனத்துக்கும் எந்த வகையிலும் எந்த இழப்புக்களையும் ஏற்படுத்தாது என்பதையும் மாறாக எல்லா இனங்களுக்குமான எல்லா வளர்ச்சிகளுக்கும் உதவும் என்பதையும் தெளிவாக எடுத்துரைத்தல் முக்கியம் என்பது இலக்கின் நிலைப்பாடாக உள்ளது. இந்தப் பொதுவேட்பாளர் என்பது அனைத்துலகத் தூதுவர்கள் ஈழத்தமிழர் சனநாயக வழிகளில் பங்கெடுக்க மறுப்பதினாலேயே தங்களால் ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினைகளில் உரிய உதவிகளைச் செய்ய இயலாதிருக்கிறது எனக் கூறிவருவதற்கு எதிர்வினையாக அமைகிறது. எனவே ஒவ்வொரு தூதரகங்களுடனும் தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு தொடர்பு கொண்டு தங்களின் இந்த முடிவுக்கான தேவையை எடுத்து விளக்குவது முக்கியம். அனைத்துலக நாடுகளைப் பொறுத்த மட்டில் புலம்பெயர் தமிழர்கள் ஊடகங்கள் வழியாகவும் தங்கள் தங்கள் பாராளுமன்ற மற்றும் உள்ளூராட்சி உறுப்பினர்களிடமும் ஈழத்தமிழர்கள் சனநாயக அரசியலில் பங்கெடுக்காத நிலையில் தவிப்பதற்கான காரணங்களைத் தெளிவாக்க வேண்டும். உலகின் அத்தனை நாடுகளின் தூதுவர்களுக்கும் அனைத்துலக ஆதரவினாலேயே ஈழத்தமிழர்களின் இறைமையை மீளுறுதி செய்யலாம் என்ற உண்மை உணர்த்தப்படல் முக்கியம் என்பது இலக்கின் தலையாய எண்ணம். இறுதியாக இந்தியாவின் கூட்டாண்மை, அமெரிக்க மற்றும் மேற்குலக நாடுகளின் பங்காண்மை, சீனாவின் நட்பாண்மை, ரஸ்யா மற்றும் யப்பான் உட்பட அனைத்துநாடுகளுடனுமான பல்வேறு செயலாண்மைகள் இவற்றின் மூலமே இன்று சிறிலங்கா அரசாங்கம் தன் இறைமையை நிலைப்படுத்துவதால் தமிழ் தேசியப் பொதுக்கட்டமைப்பு பொதுவேட்பாளரை மையப்படுத்தி அனைத்து நாடுகளுடனும் ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு உலக அமைதிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் அறிவியல் தொழில்நுட்ப எழுச்சிக்கும் எந்த அளவுக்கு முக்கியம் என்பதை துறைசார் நிபுணர்களின் ஓத்துழைப்புடன் வெளிப்படுத்தினாலே ஈழத்தமிழர் பாதுகாப்பான அமைதி வாழ்வையும் வளர்ச்சிகளையும் பெற முடியும். இவற்றைச் சரி வரச் சரியான நேரத்தில் செய்யும் திறனே ஈழத்தமிழர்களைத் தமிழ்த்தேசியப் பொதுக்கட்டமைப்பை தமிழ்த்தேசியத்தின் சின்னமாகக் கருதி வாக்களிக்க வைக்குமென்பது இலக்கின் இவ்வார எண்ணமாக உள்ளது. https://www.ilakku.org/ilakku-weekly-epaper-299-august-10-2024-epaper_editorial/
-
தமிழ் பொது வேட்பாளர் என்ற கருத்தை அடியோடு நிராகரிக்கின்றோம் - செல்வராஜா கஜேந்திரன்
தமிழ் பொது வேட்பாளர் என்ற கருத்தை அடியோடு நிராகரிக்கின்றோம் - செல்வராஜா கஜேந்திரன் இந்தத் தேர்தலிலே தமிழர்களுடைய வாக்குகளை பெற்றுக் கொள்ள விரும்புகின்ற, வெற்றி பெறக் கூடிய வேட்பாளர்களிடத்தில் தமிழர்களுடைய கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளக் கூடிய சூழலை உருவாக்குவதும், அதேபோன்று இலங்கையில் தமக்கு சார்பான ஆட்சியாளர்களை தெரிவு செய்ய விரும்புகின்ற இந்திய, அமெரிக்க, ஐரோப்பிய தரப்புக்கள் தாங்கள் விரும்பிய ஒருவருக்கு தமிழர்களது வாக்குகள் செல்ல வேண்டுமாக இருந்தால் தமிழர்களுடைய கோரிக்கைகளை அங்கீகரிப்பதற்கான நிலைமைகளை ஏற்படுத்த அவர்கள் மீது ஒரு அழுத்தங்களை ஏற்படுத்த இந்த பகிஸ்கரிப்பு என்ற ஆயுதத்தை நாங்கள் கையில் எடுத்திருக்கின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பகிஷ்கரிப்பு என்ற முயற்சியை முழுமையாக தோற்கடித்து, தமிழர்களை ஏதோ ஒரு வகையில் இந்த தேர்தலில் வாக்களிக்க செய்வதற்கான முயற்சிகளில் பலதரப்புகளும் ஈடுபட்டு இருக்கின்றார்கள். அதிலே ஒரு சாரார் நேரடியாக பேரினவாத வேட்பாளர்களுக்கு வாக்குகளை பெற்றுக் கொடுப்பதிலும், இன்னுமொரு சாரார் தமிழ் பொது வேட்பாளர் என்ற பெயரிலே தமிழர்களுடைய வாக்குகளை குறிப்பிட்ட நபருக்கு திரட்டி கொடுக்கும் நோக்கத்தோடும் முயற்சிகளில் இறங்கி இருக்கின்றார்கள். அந்தவகையில் சிவில் அமைப்புகளும், காட்சிகளும் இணைந்து பொது கட்டமைப்பு என்ற பெயரிலே பொது வேட்பாளர் ஒருவரை தாங்கள் அறிமுகப்படுத்திருப்பதாக அறிவித்திருக்கின்றார்கள். தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியனேந்திரன் அவர்களுடைய பெயர் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. தமிழ் பொது வேட்பாளர் என்ற கருத்தை நாங்கள் அடியோடு நிராகரிக்கின்றோம். இவர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே எந்த விதமான சம்பந்தமும் கிடையாது. இதிலே ஒரு சில தரப்புகள் தம்மை சிவில் அமைப்புகள் என்று சொல்லிக் கொண்டு, ஒரு சில அரசியல் கட்சிகள் இந்திய நிகழ்ச்சி நிரலிலே, இயங்கிக் கொண்டிருக்கின்ற ஒற்றையாட்சிக்குள் தமிழர்களுடைய அரசியலை முடக்குவதற்காக கடந்த 15 வருடங்களாக செயற்பட்டு கொண்டிருக்கின்ற தரப்புக்கள், தமிழ் மக்களுடைய அபிலாசைகளுக்கு மாறாக செயல்படுகின்ற தரப்புக்கள் ஒன்று கூடி இந்த தமிழ் தேசிய அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கின்ற நோக்கோடு, தமிழர்களை நிரந்தரமாக தோல்வியடை செய்கின்ற நோக்கத்தோடு இங்கே ஒரு வேட்பாளரை கொண்டு வந்து நிறுத்திவிட்டு அவரை பொது வேட்பாளர் என்று சொல்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்ட தரப்பினருடைய வேட்பாளராக அரியனேந்திரனை அவர்கள் ஏற்றுக்கொள்ளலாமே தவிர, அவரை தமிழ் மக்களுடைய ஒரு பொது வேட்பாளர் என ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். https://thinakkural.lk/article/307609
-
புலம்பெயர் தமிழர்களின் பூச்சிய விளைவு முதலீடுகள்
புலம்பெயர் தமிழர்களின் பூச்சிய விளைவு முதலீடுகள் கடந்த பத்துவருட புள்ளிவிபரங்களின் சராசரிகளில் வருடாந்தம் 400 அகதிகள் இலங்கையில் இருந்து வெளியேறி பல்வேறு நாடுகளில் தஞ்சம் கோருகின்றார்கள் இவர்களில் இலங்கையின் சிறுபான்மை இனமான 11.20 சதவீதமான இலங்கைத் தமிழர்கள் 65 சதவீதத்திற்கு மேற்பட்ட தொகையில் காணப்படுகின்றார்கள். இது தவிர நிபுணத்துவ வெளியேற்றத்தில் தமிழர்களது வெளியேற்றமும் கணிசமான சதவீதத்தினால் அதிகரித்தே வருகின்றது. இவை அனைத்தும் ஒரு முரண் நிலைத் தாக்கத்தினை தாய் நாட்டின் மீது மேற்கொள்கின்றது என்ற ஒரு மறைகாரணி தொடர்பில் நாம் சிந்திக்க மறந்ததொரு சமூகமாக மாறி வருகின்றோம். வடபுலத்தில் மட்டும் ஆண்டு தோறும் உற்சவங்கள் நடைபெறும் கோவில்கள் அண்ணளவாக 2800 என திணைக்கள மயப்படுத்தப்பட்ட தரவுகள் காண்பிக்கின்றன. இவை அனைத்திலும் மகோற்சவம் அல்லது அலங்கார உற்சவம் என சராசரியாக 10 நாட்களுக்கு குறையாத திருவிழா நாட்களை காண்கின்றன. தமிழ் மக்களது நிதி நடவடிக்கைகள் வடபுலத்தில் மாத்திரம் அண்ணளவாக 6000 புரோகிதர் குடும்பங்கள் வாழ்வதாக தரவுகளின் அடிப்படையில் அறிய முடிகின்றது. அதில் தொழில் முறை புரோகிதத்தினை 2850 பேர் அளவிலேயே மேற்கொண்டு வருகின்றனர். இக் கோவில்கள் அனைத்தும் பக்தர்களுக்கு அமைவாக குறித்த காலப்பகுதிகளில் பாலஸ்தானம் செய்யப்பட்டு முறையாக கும்பாபிசேகம் காண்கின்றன. சாராசரியாக ஒவ்வொரு வருடமும் 60 கோவில்களுக்கு வடபுலத்தில் மாத்திரம் இராசகோபுரம் கடந்த 10 ஆண்டுகளில் அமைக்கப்பட்டு வருகின்றது. இவை தவிர அயல் நாட்டு செண்டி மேளம் தொடக்கம் இசைக் கச்சேரி வரைக்கும் இசைத்து நாகரீகமாக கொண்டாடப்படுகின்றது. இவைகள் அனைத்தும் ஒரு சிறிய பகுப்பாய்வுச் சுட்டிகளாக எடுத்து நோக்க வேண்டியதொரு நிலையில் இருக்கின்றோம் என்பதன் அடிப்படையில் புலம் பெயர் தேசத்து வடக்கு கிழக்கு தமிழ் மக்களது நிதி நடவடிக்கைகளில் 70 வீதமானவைகள் கோவில்களை மையப்படுத்தி மாத்திரம் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றின் ஊடாக பன்னிரண்டு இலட்சத்தினை அண்மித்த வடக்கு மாகாண வாழ் மக்களுக்குள் வெறும் 25000 பேருக்கு உட்பட்டவர்களுடைய அதாவது ஆலய நடவடிக்கைகளில் நேரடியாக ஊதியம் அல்லது நிதி பெறும் தரப்பினர் ஆனவர்கள் உடைய பயனுக்காக புலம்பெயர் தேசத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும் நிதியில் 70 சதவீதமானவை முன்னுள்ள இருபத்தைந்து வருடங்களில் செலவு செய்யப்பட்டுள்ளது என்பதை தொகுத்து நோக்கும் போது எவ்வளவு பாரியதொரு தொகை இலங்கையை நோக்கி நகர்த்தப்பட்டுள்ளது என்பதை மிகத் தெளிவாக அடையாளம் காண முடியும். வங்கிகளில் வைப்புக்கள் மக்கள் வங்கியின் தலைமைக் காரியாலய நிர்மாணிப்பில் வடபகுதியில் உள்ளவர்களது பாவனையில் இல்லாத வங்கிக் கணக்கு நிலுவைகளில் தான் கட்டப்பட்டதாக ஒரு கதையும் உண்டு ஆனால் இதனை உத்தியோகபற்றுடைய வகையில் உறுதிசெய்ய முடியவில்லை. இதில் தெளிவாக நாங்கள் அறிய வேண்டிய விடயம் யாதெனில் வங்கிகளில் வைப்புக்கள் இடுவதை மாத்திரம் முதலீடு எனக் கருதும் சமூகம் வடபகுதியில மாத்திரம் செறிந்திருக்கின்றது என்பது கண்கூடு. ஒரு பொருளாதாரத்தில் நிதி உட்பாய்ச்சல் ஏற்படும்போது அது உண்மையில் உள்ளகத்தில் புரளும் வேகத்திலும் கனதியிலும் தான் அதன் அனுகூலங்களை ஒரு சமூகம் அதியுச்சமாக அடைய முடியும். ஆனால் வரும் நிதியானது குறைந்தது இரண்டு அல்லது மூன்று கொடுக்கல் வாங்கல்களுடன் ஒரு இடத்தில் அடங்கி உறக்கம் கொள்கின்றது. இந்த வடபுலத்து நிதி வருகையால் வெளிநாட்டு நாணயக் கையிருப்பினை அரசாங்கம் பெற்றுக்கொள்கின்றது. அதனை யாரும் மாற்றிவிட முடியாது அது நியமமானது. அடுத்த தளத்தில் குறித்த நிதியானது ஒரு மிக குறுகிய சனத்திரளுக்குள் மாத்திரம் உட்புகுந்து கொள்கின்றது. அது அவர்களது அதியுச்ச நுகர்வுகளுக்கு வெளிப்படுபவைகள் தவிர வேறு எங்கோ ஒரு வகையில் வங்கிகளில் வைப்பிலிடப்படுகின்றன. இந்த நிதியானது புரள்வுக்கு உட்படும் ஒரு தொழில்துறையில் அல்லது சமூகத்திற்கு நிதியளிக்கும் தொழில்முயற்சியில் உட்புகுத்தப்படவில்லை. அரசுக்கு வரி அனைத்துக்கும் மேலாக வருமானத்தினை காண்பித்து அரசுக்கு வரி செலுத்தும் வகைக்குள் கூட அகப்படுவதில்லை. வட பகுதியை நோக்கி புலம்பெயர் சமூகங்களில் இருந்து நகர்த்தப்படும் ஒவ்வொரு நிதியும் ஒரு திறனற்ற நிதியாக இருப்பதற்கு இந்த ஆலயங்கள் என்ற விடயம் பிரதானமான காரணமாகின்றது. கோவில் என்பது மத சூழலில் மத சடங்குகளை பின்பற்றுவதற்குரிய ஒரு அடிப்படையாக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கட்டமைப்பாகவும், வரலாற்றுக்காகவும், புனிதத்திற்காகவும் கட்டமைக்கப்பட்ட ஒரு விடயதானமுமாகும். தற்போதைய வாழ்க்கை முறைக்கு பக்தர்களுக்கு வழிபட நேரம் இல்லை ஆனால் கோவில்கள் பெருகிக் கொண்டு இருக்கின்றன. அவற்றின் பௌதீக வளங்கள் பெருகிக் கொண்டிருக்கின்றன. அவற்றை பரிபாலனம் செய்யும் முகமைகள் திறன் வழிகாட்டல்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவைகளில் நுழைகின்றன. பல்வேறு தொழில் நுட்ப உதவிகளுடன் அவ்வளங்களைப் பாதுகாக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள். கடவுள் இருக்கும் ஆலயத்தினையே கண்காணிப்பு கமராவால் கட்டுப்படுத்த வேண்டிய முரண்நிலை தத்துவத்திற்குள் நகர்கின்றது. இவை அனைத்திற்கும் காரணம் அவசியமற்ற வளவிருத்தியாகும். ஆலயங்களில் மணி அடிக்க ஆள் இல்லாததால் தானியங்கி மணி மேளம் செட் வாங்கி வருகின்றோம். சமூக வளர்ச்சி சுவாமி சுற்றுவதற்கு ஆட்கள் இல்லாததால் புதிதாக சிறிய சிறிய பாரம் குறைந்த வாகனங்கள் செய்து வருகின்றோம். இன்னும் சில நாட்களில் வீதி வழித்தடத்திற்கு சேக்கிட் இட்டு அதில் ஒரு தொகுதியைப்பொருத்தி சுவாமியைச் சுற்ற விட்டு சூம் இல் திருவிழா பார்க்கும் ஒரு சமூக வளர்ச்சியில் நாங்கள் பயணித்துக்கொண்டு இருக்கின்றோம். அனைத்து விகாரைகளிலும், அனைத்து பள்ளிகளிலும், அனைத்து தேவாலயங்களிலும் பூசைகள் மற்றும் அனுட்டானங்கள் ஒரு நியம நேரத்தில் இடம்பெறும் ஆனால் அனைத்து கோவில்களிலும் ஒரு நியம நேரத்தில் பூசை பார்க்க முடிவதில்லை, காரணம் புரோகிதர் தட்டுப்பாடு, ஒவ்வொரு கோவிலாக தான் அவரால் தரிசனம் செய்ய முடியும், ஆலயத்தில் சுவாமி தரிசனம் பார்ப்பதை விடவும் புரோகிதர் தரிசனம் பார்ப்பதே நெருக்கடியாக மாறிவருகின்றது. ஆலயம் கூட்டுவதற்கு சம்பள ஆள், அன்னதானம் சமைப்பதற்கு சமையலாளர், சாப்பிடும் நபர்களுக்கு நிலத்தில் உட்கார்ந்து சாப்பிட முடியாத உடல்வாகு, நெகிழிப் பைகளில் வீடுகளுக்கு அனுப்பும் துர்பாக்கியம், உண்மையாக உணவுக்கு நெருக்கடியாக சமூகம் இன்னமும் எங்கோ ஒருபுறம் வடக்கிலும் வாழ்ந்துகொண்டு தான் இருக்கின்றது. ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவிலும் இவ்வாறான 500 பேருக்கு குறையாத தொகையுடைய அதிவறுமைக் குடும்பங்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இவை சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவுதான் உண்கின்றன. ஒவ்வொரு பாடசாலைகளிலும் காலை உணவினை பொருளாதார நெருக்கடி காரணமாக தவிர்த்து வரும் மாணவர்கள் 5 சதவிகிதம் பேர் இருந்துகொண்டுதான் இருக்கின்றார்கள். இந்த பொருளாதார நெருக்கடியை குறைப்பதற்கு தனிலும் எங்களது சமூகத்திடம் எவ்வித திட்டங்களும் இல்லை. பொது விடயங்களில் உதவி செய்கின்றோம், ஒத்துழைப்பு வழங்குகின்றோம் என்று பல பல நிறுவனங்கள் அமைப்புக்கள் நாட்டிலும் சர்வதேசங்களிலும் முளைவிட்டு இருக்கின்றன. அரசியல் தீர்வுகள் ஆனால் இன்றுவரை முறையான முன்னேற்றத்தினை எமது சமூகத்தில் காண்பிக்க முடியவில்லை என்பது வருத்தமானது. இதனை பொறுப்புடன் பகுப்பாய்வு செய்து உத்தியோகபற்றுடைய வகையில் தரவுகளை வெளியிடவேண்டிய பல்கலைக் கழகங்கள் அரசியல் முனைவாக்கம் செய்கின்றன, ஆலயங்கள் அத்திரட்சியால் நிதி காண்கின்றன, அரசியல்வாதிகளுக்கு இவ்விடயதானம் தெரியவே இல்லை, அவர்கள் வாழ்க்கையை வாழவே முடியாத ஒரு சமூகம் இருக்கும் போது அதன் அரசியல் தீர்வுதேடி அலைகின்றார்கள். அதனை நாட்டிலும் பற்றாக்குறைக்கு சர்வதேசத்திலும் தேடிச் சென்று ஆற்றுப்படுத்த முனைவதாக காண்பிக்கின்றார்கள். கோவில்கள் மீதான அனைத்து நிதியீட்டங்களும் ஒரு வகையில் மட்டுப்படுத்தப்பட்டு கிரமப்படுத்தப்பட்டு முதலீடுகள் தொடர்பாக மீளாய்வுகளுக்கு உட்படுத்தப்பட்ட வேண்டும். மிக முக்கியமாக பொது வேட்பாளர் நிறுத்துவது தொடக்கம் அரசியல் தீர்வுகளை பெற்றுத்தருபவர்கள் முதல் வடக்கு கிழக்கினை கனவுகாண்பவர்கள் வரைக்கும் சற்றே விழிப்படைந்து கனவில் இருந்து வெளிவந்து ஒரு முழுமையான சமூக பொருளாதார ஆய்வினை மேற்கொள்ள வேண்டும். அதனை ஒரு சிறந்த நிபுணத்துவம் மிக்க முறையில் மேற்கொள்ள வேண்டும். அதன் விளைவுகளை அடிப்படையாக கொண்டு தமிழ் சமூகம் ஒற்றுமையாக ஒரு திட்டம் வகுத்து பொருளாதார மேம்பாட்டிற்கு பணியாற்ற வேண்டும். சர்வஜன வாக்கெடுப்பை கோரும் தமிழ் தரப்பு முறையானதொரு சமூக பொருளாதார ஆய்வினை முறையான வகையில் மேற்கொண்டு அவற்றின் அடைவுகளின் பால் செயலாற்றினால் பதினொரு சதவீத மக்களது கைகளில் இலங்கையின் பொருளாதாரத்தினை தங்கியிருக்க வைக்க முடியும். முழுமையுமாக பொருளாதார போசாக்கின் ஊடாக தமிழ் மக்களது அரசியல் பிரச்சினை அணுகப்பட வேண்டும். இலங்கை அரசினால் தமிழ் மக்களது செயற்பாட்டினை முடக்கிவிட முடியாது காரணம் இலங்கையில் இருக்கும் தமிழ் மக்களது தொகையிலும் கணிசமானவர்கள் சர்வதேசங்களிலும் வாழ்கின்றார்கள். புத்தியுடைய ஒரு சமூகமாக ஒற்றுமையாக நாம் பயணிப்போம் ஆனால் எமது பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய தகுதி உடையவர்களாக தமிழர்கள் ஆகிய நாமே மாறிவிட முடியம். இல்லையேல் செண்டி மேளத்திற்கும் இராச கோபுரத்திற்கும் திருவிழாக்களில் தமன்னாக்களிற்கும் நிதி வழங்கும் ஒரு சமூகமாக தான் வாழ்வோம். https://tamilwin.com/article/zero-impact-investments-by-diaspora-tamils-1723265938
-
ஈழத்தமிழர் இறைமை மீட்புப் போராட்டத்தின் அரைநூற்றாண்டு வரலாற்றின் முக்கிய கட்டங்கள் - சூ.யோ. பற்றிமாகரன்
ஈழத்தமிழர் இறைமை மீட்புப் போராட்டத்தின் அரைநூற்றாண்டு வரலாற்றின் முக்கிய கட்டங்கள்: வரலாற்றைத் திரிபுபடுத்தும் ஈழத்தமிழ் அரசியல் வாதிகளுக்காக மீள் நினைவூட்டுகின்றோம்- அரசியல் ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன் August 9, 2024 ஈழத்தமிழர்களின் பிரித்தானிய காலனித்துவத் திடம் 1796 முதல் 1948 வரை 152 ஆண்டுகள் நேரடியாகவும் 1972 வரை 176 ஆண்டுகள் சோல்பரி அரசியலமைப்பின் 29(2) அரசியலமைப்புப் பாதுகாப்பு மூலம் பிரித்தானிய முடிக்குரிய அரசுடனான பகிர்வுடனும் இருந்து வந்த ஈழத் தமிழர்களின் இறைமையைச் சிறிமாவோ பண்டாரநயாக்காவைப் பிரதமராகக் கொண்ட சிறிலங்கா சுதந்திரக்கட்சி இடதுசாரிக்கட்சிகள் கூட்டணி சோல்பரி அரசியலமைப்பையும் பிரித்தானிய பிரிவிக் கவுன்சிலின் கோடீஸ்வரன் வழக்குத் தீர்ப்பையும் வன்முறைப்படுத்தி, காலனித்துவ பிரித்தானிய அரசால் ஈழத்தமிழர்களின் விருப்புப் பெறப்படாது உருவாக்கப்பட்ட இலங்கை அரசாங்கத்தின் பாராளுமன்ற மரபு ரீதியான வளாகத்துக்கு வெளியே நவரங்கலா என்னும் மண்ட பத்தில், பாரளுமன்றம் என்ற பெயரையும் தம் விருப்புக்குச் சிறிலங்காத் தேசிய சபை என மாற்றி ஈழத்தமிழர்களின் பாராளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டுக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றாத சிறிலங்காச் சிங்கள பௌத்த குடியரசு பிரகடனத்தின் மூலம் ஈழத்த மிழர்களை ஆளும் அரசியலமைப்புத் தகுதியை இழந்த ஆக்கிரமிப்பு அரசை 22.05.1972 இல் பிரகடனப்படுத்தினர். இதன் விளைவாக அரசற்ற தேசஇனமாக்கப்பட்ட (Nation Without State) ஈழத் தமிழர்களிடம் அவர்களின் இறைமை மக்கள் இறைமையாக வந்தடைந்தமை வரலாறு. சிறிலங்காவின் சிங்கள பௌத்த நாடாக்கும் 1972ம் ஆண்டு அரசியலமைப்பு ஈழத்தமிழர் களால் என்றுமே ஏற்கப்பட மாட்டாதது என்பதை உலகுக்கு வெளிப்படுத்த அக்காலத்து ஈழத் தமிழர்களின் அரசியல் தலைவராக விளங்கிய சா.ஜே. வேலுப்பிள்ளை செல்வநாயகம் அவர்கள் தனது காங்கேசன்துறைப் பாராளுமன்ற உறுப்பு ரிமையை 22.10.1972 இல் விட்டு விலகி அந்தத் தொகுதிகான தேர்தலை ஈழத்தமிழர்களின் தன்னாட்சி உரிமைக்கான அடையாளக் குடிய யொப்பமாக உலகுக்கு அறிவித்தார். வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக இலங்கைத் தீவில் தொன்மையும் தொடர்ச்சியுமான இறை மையுடன் வாழ்ந்து வரும் ஈழத்தமிழர் தங்களில் நிலைகொண்டுள்ள இறைமையின் அடிப் படையில் தன்னாட்சி உரிமையைப் பயன்படுத்தித் தங்களின் அரசியல் எதிர்காலத்தை முடிவுசெய்யும் ஈழத்தமிழர் இறைமையை மீளுறுதி செய்யும் அரசியல் போராட்டத்தை அனைத்துலகச் சட்டங்களுக்கு ஏற்ப சனநாயக வழியில் இவ் அறிவிப்பு தொடக்கியது. இதனை அடுத்து ஈழத்தமிழர்களின் பண்பாட்டு இனஅழிப்பின் மூலம் சிங்கள பௌத்த பேரினவாத ஆக்கிரமிப்பு ஆட்சியை உறுதிப் படுத்தவெனத் திட்டமிட்ட சிறிலங்கா அரசாங்கம் 1974ம் ஆண்டு ஜனவரி 10 நாள் யாழ்ப் பாணத்தில் நடாத்தப் பெற்ற 4வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் தனது பண்பாட்டு இனஅழிப்பைத் தொடக்கி 11 ஈழத்தமிழர்களை இனப்படுகொலைக்கு உள்ளாக்கியது. இப்பண் பாட்டு இனஅழிப்பு ஈழத்தமிழர்களின் உயிரையும் உடமைகளையும் நாளாந்த வாழ்வையும் பாதுகாப்பதற்கான ஈழத்தமிழர் தேசிய விடுதலைப் போராட்டம் 1974 முதல் மக்கள் இறைமை நிலை கொண்டுள்ள வரலாற்றுத் தாயகத்தை மீட்டெடுக்கும் மண்மீட்புக்கான ஆயுதப் போராட்டமாகத் தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் பரிணாம வளர்ச்சி பெற வைத்தது. காங்கேசன்துறை அடையாளக் குடி யொப்ப இடைத்தேர்தலை நடத்தாது மூன்று ஆண்டுகள் சிறிலங்கா அரசாங்கம் இழுத்தடித்து 06.02. 1975இல் நடாத்திய பொழுது பெற்ற 72.55 வீத மான வாக்குகளான 25927 வாக்குகள் அளித்த 15470 பெரும்பான்மை வாக்குகளால் பெற்ற மக்கள் ஆணையைக் கொண்டு அதுவரை கால் நூற்றாண் டாக ஈழத்தமிழர் சிங்களவர் இறைமைகள் பொது வாக இருக்கும் நிலையே ஈழத்தமிழர்களின் அடிப் படை உரிமைகளை மறுத்து அடிமைகளாகச் சிங்கள அரசுக்கள் ஈழத்தமிழர்களை நடாத்த இட மளிப்பதால் சிறிலங்காப் பாராளுமனறத்தில் இருந்து விலகித் ஈழத்தமிழர்களின் தன்னாட்சியை அமைப்பது தனது கட்சியின் செயற்பாடாக அமையுமென்ற ஈழத்தமிழர் தன்னாட்சிப் பிரகடனத்தை அனைத்துலகச் சட்டங்களுக்கு அமைய சனநாயக வழியில் சிறிலங்காப் பாராளுமன்ற அமர்வில் உலகுக்கு வெளிப்படுத்தி பாராளு மன்றத்தை விட்டு வெளியேறினார். இதனை அடுத்து சிறிலங்கா அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தின் கீழ் பொலிசாரைப் பயன்படுத்தியும் காடையர்களைப் பயன்படுத்தி யும் மீளவும் அரசபயங்கரவாதத்தை ஈழத்தமிழர், மலையகத் தமிழர், தமிழ் பேசும் இலங்கை முஸ்லீம்கள் மேல் 1975க்கும் 1976க்குமிடை வாழ்வுக்கு இனங்காணக்கூடிய அச்சத்தை ஏற் படுத்தி அவர்களின் அரசியல் பணிவைப் பெறும் சிங்கள பௌத்த பேரினவாதக் கொள்கையாகச் செயற்படுத்தியது. சித்திரவதைகளையும் காரண மின்றிக் கைது செய்து நூற்றுக்கு மேற்பட்டோரை விசாரணையின்றித் தடுத்து வைத்தலையும் கோயிலில் வழிபாடு செய்துவிட்டுத் திரும்பி வந்த வங்கி எழுதுவினைஞர் பரராசா மற்றும் மலையகத் தோட்டத் தொழிலாளி இலட்சுமணன் ஆகியோரைச் சுட்டுக் கொன்றும் பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 7 முஸ்லீம்களைக் கொன்றும் வெளியில் இரண்டு முஸ்லீம்களை உயிருடன் எரித்தும் முஸ்லீம்களின் 200 வீடு களையும் 50 கடைகளையும் அழித்தும் இந்த அரசபயங்கரவாதம் இடம்பெற்றதெனச் சச்சி பொன்னம்பலம் அவர்களால் எழுதப்பெற்று இலண்டன் தமிழர் தகவல் மையத்தால் 1983இல் வெளியிடப்பெற்ற சிறிலங்கா – தமிழர் தேசியப் பிரச்சினையும் தமிழர் விடுதலைப் போராட்டமும் என்னும் நூல் பக்கம் 185இல் பதிவாக்கியுள்ளது. இந்த அரசியல் சூழ்நிலையிலேயே ஈழத்தமிழர் தன்னாட்சிப் பிரகடனத்தை 1976இல் ஈழத்தமிழர்களின் முக்கிய அரசியல் கட்சிகள் தமிழர் கூட்டணியாக ஒருங்கிணந்து வட்டுக் கோட்டையில் நடாத்திய சந்திப்பில் ஏற்று அந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை பண்ணாக மத்தில் நடாத்திய தமிழர் கூட்டணி மாநாட்டில் ஈழத்தமிழர்களின் அரசியல் கொள்கையாக உலகுக்கு அறிவித்து தங்கள் கூட்டணியையும் ஈழத்தமிழர் விடுதலைக் கூட்டணியாக ஈழத் தமிழரின் விடுதலைக்காகப் போராடும் அமைப் பாகப் பெயர் மாற்றம் செய்தன. தொடர்ந்து 1977 இல் ஈழத்தமிழர் தாயகத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலை “ஈழதேச இனம் ஏற்கனவே அவர்களிடம் நிலை கொண்டுள்ள இறைமையைப் பயன்படுத்தி ஈழதேச மக்கள் தங்களை விடுவித்துச் சுதந்திரமான, இறைமையுள்ள, மதசார்பற்ற, சோசலிச அரசை தமிழ்பேசும் மக்களின் வரலாற்றுத் தாயகத்தில் சனநாயக வழியிலோ அல்லது வேறு எந்த வழி களிலோ நிலைப்படுத்துவதற்கான மக்கள் ஆணை” பெறும் குடியொப்பமாகத் தமிழர் விடுதலைக் கூட்டணி அறிவித்தது. இவ்விடத்தில் தமிழர் விடுதலைக் கூட்ட ணியின் தேர்தல் கொள்கைத் திரட்டினை மீள்பதிவு செய்ய வேண்டியது சமகாலத்தின் தேவையாகிறது. “தமிழ்த்தேசஇனம் தன்னுடைய தாயகத் தில் தன்னுடைய தன்னாட்சி உரிமையின் அடிப் படையில் தன்னுடைய இறைமையை நிலைநிறுத்த வேண்டும் என்னும் முடிவை எடுத்துள்ளது. இந்த முடிபைச் சிங்கள அரசாங்கத்துக்கும் உலகுக்கும் அறிவிப்பதற்கான ஒரே வழியாகத் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வாக்களித்தல் உள்ளது. அளிக்கப்படும் இவ்வாக்குகளால் தெரிவாகும் தமிழ் பேசும் பிரதிநிதிகள் இலங்கைத் தேசிய சபையின் உறுப்பினர் கள் என்ற இருப்புடன் தங்களைத் தமிழீழத் தேசிய சபையினராகவும் கட்டமைத்து தமிழீழ அரசுக்கான அரசியலமைப்பை வரைந்து தமிழீழத்தின் சுதந்திரத்தை அந்த அரசியலமைப்பை அமைதி யான வழிகளாலோ அல்லது வேறெந்த நேரடி வழிகளாலோ அல்லது போராட்டத்தாலோ செயல் முறைக்குக் கொண்டு வருவர்” இந்த தேர்தல் கொள்கை 86.7 வீத தமிழர் தாயக மக்கள் வாக்களிப்பில் பங்கு பற்றி 24 தொகுதிகளில் 18 தொகுதிகளில் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வைத்ததின் மூலம் ஈழத்தமிழ் மக்களின் குடியொப்ப ஆணையாக தமிழீழ அரசு என்பது இன்று வரை உள்ளது. இந்த மக்களாணையை முன்னெடுக்கும் ஈழத்தமிழர் தேசிய விடுதலைப்போராட்டம் 1978 முதல் 2009 வரை இலங்கைத் தீவு இரு அரசுக்களின் இருப்பு என்ற வரலாற்று உண்மையின் அடிப் படையில் தமிழீழத் தேசியத்தலைவராக வேலுப் பிள்ளை பிரபாகரனை கொண்ட சீருடை தாங்கிய முப்படைகளும் நிர்வாகக் கட்டமைப்புக்களும் சட்டவாக்க சட்ட அமுலாக்க முறைமைகளும் நீதிமன்றங்களும் கொண்ட நடைமுறையரசை உலகுக்கு வெளிப்படுத்தியது. 1992ம் ஆண்டு உலக தந்திரோபாய அளவை நூல் “ இலங்கையில் இரு அரசுக்கள் உள்ளன அதனைக் கொழும்பு அரசு ஏற்குமா?” என்கிற கேள்வியை எழுப்பியதும் 2009ஆம் ஆண்டு: முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பு வரை பல்வேறு நிலைகளில் ஈழத் தமிழர்களின் இருப்பைத் தாக்கி அழிக்கும் இனஅழிப்பு இனத்துடைப்பு பண்பாட்டு இன அழிப்புக்கள் வழி 31 ஆண்டுகள் சிறிலங்கா தனது ஈழத்தமிழ் மக்கள் மேலான “மக்கள் மேலான போரை” நடாத்தி இறுதியில் 17.05.2009 இல் 176000 ஈழத்தமிழர்களைத் தேசமாகவே இனஅழிப்புச் செய்து தமிழீழ அரசின் அனைத்துக் கட்டுமானங்களையும் செயலிழக்க வைத்து அன்று முதல் இன்று வரை மீளவும் படைபலத்தின் மூலம் ஈழத்தமிழர்களின் அரசியல் பணிவைப் பெறும் தந்திரேபாயத்தைத் தொடர்கின்றது. இந்த வரலாற்று உண்மையினை மறவாது அது தந்துள்ள பாடங்களின் அடிப்படையில் சனநாயக வழிகளில் ஈழத்தமிழர்களின் இறை மையை மீளுறுதி செய்யும் ஈழத்தமிழர் தேசிய விடுதலைப் போராட்டத்தை தொடர வேண்டிய பொறுப்பும் கடமையும் உள்ளவர் களாகவே தமிழர் தாயகத்து எந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளும் ஒற்றுமை யாக இல்லாவிட்டாலும் மக்களைப் பாதிக்கும் விடயங்களில் ஒருமுகப்பட்டு அரசியல் பணி யாற்ற வேண்டியவர்களாக உள்ளனர். ஆனால் அதற்குச் சிறிலங்காவின் அரசியலமைப்பு ஆறாம் திருத்தமும் சிறிலங்காவின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களும் ஈழத்தமிழரின் அடிப்படைய மனித உரிமைகளை மறுக்கின்ற சூழலில் உலகெங்கும் அரசியல் புகலிடம் கோரியும் மறுக்கப்பட்ட கல்வி தடுக்கப்பட்ட வேலை வாய்ப்புக்களாகவும் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் அந்த அந்த நாட்டின் குடிகளாகக் கூட தங்களின் பூர்விகத் தாயகத்துக்கானதும் அங்கு வாழும் தங்களின் கிட்டிய குடும்ப உறுப்பின ர்கள் உறவினர்கள் நண்பர்கள் ஊரவர்களுக்காகவும் உண்மைக்கான நீதிக்கான குரலாக ஒலிக்க முடியாமலும் புனர்வாழ்வு கனர் நிர்மாணப் பணிகளில் அடிப்படைய மனித உரிமைகளைப் பேணும் நிலையில் கூடச் செயற்பட இயலாமலும் 31 நாடுகளில் உள்ள ஈழத்தமிழர்களின் போராட்ட அமைப்புக்கள் செயற்பாட்டாளர்கள் மேலான பங்கரவாதிகள் என்ற சட்டங்கள் தடுக்கின்றன. இந்தச் சூழ்நிலை தாயகத்திலும் உலகிலும் ஈழத்தமிழ் மக்களின் ஒருங்கிணைக்கப்பட்ட செயற்பாடு மூலம் உலக மக்களுக்கு உண்மைகள் உணர்த்தும் செயற்பாட்டால் மட்டுமே மாற்றப்பட முடியும். இது தவிர எந்த நாடுகள் தங்கள் சந்தை மற்றும் இராணுவ நலன்களுக்காக உலகின் பாதிக்கப்பட்ட மக்கள் இனமொன்றின் தன் தாயகத்தில் வாழ்வதற்கான போராட்டத்தைப் பிரவினையென்றும் பெரும்படைகளால் நடாத் தப்படும் அழிவை தடுக்கும் ஆயுத எதிர்ப்பைப் பயங்கரவாதம் என்றும் இந்தத் தடைகளைப் போட்டு சிறிலங்காவுக்கு தங்கள் நிபந்தனையற்ற ஆதரவுகளை எல்லா நிலையிலும் வழங்கி அதனை சிங்கள இனத்தின் நாடு, பௌத்த ஆகமச் சட்டங்களை அனைவரும் ஏற்று வாழ வேண்டிய நாடு என்ற சிறிலங்கா அரசின் ஈழத்தமிழின இறைமை மறுப்புக் கொள்கைளையும் கோட்பாடுகளையும் ஊக்கப்டுத்தி வருகின்றனவோ அவற்றுடனனோ அவற்றின் மேலாதிக்கங்கள் உள்ள எந்த ஒரு அனைத்துலக நிறவனங்கள் அமைப்புக்களுடனோ ஒட்டி உறவாடி ஈழத்தமிழர்களின் இறைமையை மீளுறுதி செய்ய முடியாது. ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல உலகிலேயே மக்கள் சத்தி பெறுவதற்குத் தடையாக உள்ள அறியாமை, வறுமை என்னும் மானிடத்தின் இரண்டு பெரும் பகைமைகளுக்கு எதிரானதாகவே எப்பொழுதும் எந்தச் சூழந்நிலையிலும் எந்த அடக்குமுறை ஒடுக்குமுறைகளுக்கு இடையிலும் செயற்பாடுகள் அமைய வேண்டும். இதற்கு சமகாலத்துக்கான சமுக பொருளாதார அரசியல் ஆன்மிக அறிவுகளில் பயறிசிகளில் வளர்ந்து கொண்டிருக்கும் இளையவர்களின் பங்களிப்புக்கு முதியவர்கள் இடமளித்து வழிகாட்லுக்கும் நெறிப்படுத்தலுக்கும் தங்கள் அனுபவங்களைப் பகிரும் பண்பாடு பரிணமிக்க வேண்டும். சிறிலங்கா அரசத்தலைவர் தேர்தல் மட்டு மல்ல அதன் பாராளுமன்றத் தேர்தல்களும் கூட எக்காலமும் ஈழத்தமிழர்களின் இறைமை ஒடுக் கம், தேசிய நீக்கம், பொருளாதார ஆக்கிரமிப்பு, அரசியல் பிளவுகள், ஆன்மிக மயக்கங்களை வளர்க்கின்ற தன்மை கொண்டதாகவே வரலாற் றுப் பதிவாகியுள்ளது. இதனால் ஈழத்தமிழ் அரசியல் வாதிகள் சமஸ்டி, பதின்மூன்றாவது திருத்தம், என்கின்ற புலம்பல்களை விடுத்து ஈழத்தமிழரின் வரலாற்றின் அனுபவங்களின் உண்மைகளையும் மக்களின் விருப்புக்கள் தேவகைளின் அடிப் படையிலும் தப்பிப்பிழைக்கும் வாழ்வியல் நிலையிலும் உண்மைகளும் நீதியும் நிலைக்கத் தக்க வகையில் செயலாற்ற வேண்டிய நேரமிது என்பதை அனைவருக்கும் மீள் நினைவுறுத்துவதே இச்சிறு கட்டுரையின் நோக்கு. ஈழத்தமிழர் இறைமையை முன்னிறுத்தி சனநாயக வழிகளில் வன்முறைகளற்று செயல்கள் மூலம் முயலுங்கள் முடியாதது என்று எதுவுமேயில்லை. https://www.ilakku.org/ஈழத்தமிழர்-இறைமை-மீட்புப/
-
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
அரியநேத்திரன் தொடர்பில் 11 ஆம் திகதி முடிவெடுக்கப்படும் : தமிழரசு கட்சியின் தலைவர் மாவை தெரிவிப்பு ! kugenAugust 9, 2024 ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ள தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் அரியநேத்திரன் தொடர்பில் 11 ஆம் திகதி முடிவெடுக்கப்படும் என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழரசு கட்சி ஐனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை எவ்வித முடிவுகளையும் மேற்கொள்ள முன்னர் அக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினரான அரியநேத்திரன் பொது வேட்பாளராக 2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். வரும் 11.08.2024 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கட்சியின் மத்திய குழு கூடி ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கலந்துரையாடி முடிவுகளை மேற்கொள்ளவுள்ளது. அதன் பின்னரே கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் அறிவிக்கப்படும். இந்நிலையில், கட்சி ஒரு நிலைப்பாட்டை எடுக்க முன்னர் கட்சியின் உறுப்பினர் பொது வேட்பாளராக போட்டியிட தீர்மானித்த விடயம் தொடர்பில் அக் கூட்டத்தில் கலந்துரையாடப்படும் எனத் தெரிவித்த அவர் பொது வேட்பாளராக அரியநேத்திரன் அறிவிக்கப்பட்ட பின்னர் என்னை வந்து சந்தித்து விடயத்தை தெரியப்படுத்தி சென்றுள்ளார் என்றும் தெரிவித்தார். https://www.battinews.com/2024/08/11_9.html
-
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
தமிழ்ப் பொதுவேட்பாளர் காலத்தின் தேவையே! ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு வலியுறுத்து! ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்த வேண்டியது காலத்தின் தேவை. பொருளாதாரப் பிரச்சினைகளில் தமிழரின் உரிமைப் பிரச்சினை கரைந்து போகக்கூடிய அபாயநிலையில் தமிழ்ப் பொதுவேட்பாளர் ஊடாக தமிழர் தம் திரட்சியை மீளவும் காண்பிக்க வேண்டிய தேவை உள்ளது என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு நேற்று வியாழக்கிழமை மாலை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் உள்ளதாவது: மட்டக்களப்பு மாவட்டத்தின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பா.அரியநேந்திரன் அப்பழுக்கற்ற தமிழ்த் தேசியவாதி. தமிழ்த்தேசிய ஆயுதப் போராட்டத் தலைமைத்துவத்தின் ஆசிர்வாதத்துடன் மக்கள் பிரதிநிதியாக 2004ஆம் ஆண்டில் நாடாளுமன்றம் புகுந்தவர். தமிழ்ப் பொதுவேட்பாளர் விடயத்தில் தமிழ்த்தேசியப் பரப்பிலுள்ள கட்சிகள், சிவில் அமைப்புக்கள் இணைந்துள்ளமை சிறப்பான விடயம். அதே நேரம் வேட்பாளர் ஊடாக தமிழரசுக்கட்சியும் அந்தக் களத்துக்கு வந்துள்ளது. ஏற்கனவே தாயகக் கோட்பாட்டின் அடிநாதமாக விளங்குகின்றதும், சமகாலத்தில் உச்சப்பட்ச சவால்கள் எதிர்நோக்கியுள்ளதுமான கிழக்கு மண்ணிலிருந்து மீன்பாடும் தேன் நாடு, தென் தாய்மண் மட்டக்களப்பிலிருந்து ஒருவர் முழுத் தமிழ்மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி தேர்வு செய்யப்பட்டமை பொதுக் கட்டமைப்பின் நடுநிலைப் பார்வையை உயர்த்தி உள்ளது. தமிழ்த்தேசியத் தேரை முன்நோக்கி இழுத்து, தமிழ்த்தேசியத் திரட்சியை வெளிக்காட்டுவதற்கும், தேக்க நிலையை உடைத்துப் புதிய அத்தியாயம் படைக்கவும் முன்வருவோம்- என்றுள்ளது. (ச) https://newuthayan.com/article/தமிழ்ப்_பொதுவேட்பாளர்_காலத்தின்_தேவையே!
-
தமிழ்ப் பொதுவேட்பாளர் யார்? – வவுனியாவில் இன்று தீர்மானம்!
தமிழ்த்தேசிய பெரும்புள்ளிகளின் வாட்ஸப் குறூப்பில் அதனை இயக்கும் எனது நெருங்கிய நண்பர் சேர்த்துவிட்டிருக்கின்றார்! அரியம் ஐயாவும் இருக்கின்றார். என்ன சொல்கின்றார் என்று பார்க்கின்றேன்😀
-
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்! adminAugust 8, 2024 தமிழ் பொது வேட்பாளராக இலங்கைத்தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பா. அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார். சிவில் அமைப்புகளின் ஒருங்கிணைவுடன் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பொதுச்சபையின் ஏழு பிரதிநிதிகளும் தமிழ்த் தேசிய அரசியல்கட்சிகள் ஏழினது பிரதிநிதிகளும் கூட்டிணைந்து தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பை உருவாக்கியிருந்தனர். அவ்வாறு உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை (08.08.24) கூடி தமிழ் பொது வேட்பாளரை அறிவித்துள்ளனர். அதேவேளை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் ஆகியோரது பெயர்களும் இறுதிப் பட்டியலில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2024/205696/