Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. ஆனந்தபுர மண்ணில் ஆட்லறி நிலைகளை உருவாக்கிய பிரிகேடியர் மணிவண்ணன்! Last updated Apr 3, 2020 தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்ட மணிவண்ணன். தொடக்க காலத்திலேயே கேணல் ராயு அவர்களுடன் இணைந்து தனது விடுதலையின் பணியை மேற்கொண்டிருந்தார். கேணல் ராயு அவர்களின் வீரச்சாவுக்கு பின்னர் கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதியாக தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்டிருந்தார். கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதியாக நியமிக்கப்பட்ட பிரிகேடியர் மணிவண்ணன் அவர்களின் செயர்ப்பாட்டுக் காலப்பகுதியில் தான் சிறிலங்காப்படைகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்லறித் தாக்குதலில் பாரிய இழப்புக்களை சந்தித்திருந்தது என்பது குறிப்பிடத் தக்ககது. பலாலித் தளம் மீதான ஆட்லறித் தாக்குதல்கள், முகமாலை – பளை மீதான தாக்குதல்கள் மற்றும் வவுனியா ஜோசப் தளம் மீதான ஆட்லறித் தாக்குதல்கள் அதே போன்று மன்னார் சிறிலங்கா படைத்தளம் மீதான ஆட்லறித் தாக்குதல்கள் என்று பிரிகேடியர் மணிவண்ணன் அவர்கள் கேணல் கிட்டுப் பீரங்கிப் படையணியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட காலப்பகுதியில் சிறிலங்கா படைத்தரப்பு பாரிய நெருக்கடிகளை சந்தித்திருந்தது உண்மையே. அதே போன்று முகமாலை சமர்க்களத்திலே ஆட்லறிகளின் நேரடி சூட்டின் மூலம் பல ராங்கிகளை அழித்ததும் இவரின் காலப்பகுதியிலே தான். விடுதலைப்புலிகளின் போராட்டவலுவை அடுத்த கட்ட பரிணாமத்திற்குள் நகர்த்திய அது மோட்டார் பீரங்கிகளும் ஆட்லறி பீரங்கிகளும் தான், ஆட்லறி பீரங்கிப்படையணி தளபதி பிரிகேடியர் மணிவண்ணனின் போராட்டவாழ்க்கையாக இருந்தது. முன்னேறுகின்ற படையினரின் வழங்கல் தளங்களையும், முதன்மையான படைத்தளங்களையும் தாக்கியழிக்கும் கடமையே கேணல் கிட்டுப் பீரங்கிப் படையணிக்கு வழங்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தொடக்க காலத்தில் இவ்வாறான பல தாக்குதல்களை கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணி மேற்கொண்டிருந்தாலும், போர் நெருக்கடியான காலங்களை சந்தித்திருந்த போதிலும் அதாவது வன்னிமண்ணை சிறிலங்காப் படைகள் முற்றுகையிட்டு மண்ணையும் மக்களையும் சுற்றிவளைத்திருந்த காலப்பகுதியில் கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணியின் செயற்பாடுகள் மாற்றமடைந்திருந்தன. அதாவது தொலைதூரத் தாக்குதலுக்கு பதிலாக இராணுவத்துடன் நேரடி சூட்டுத் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தன. இந்த வகையில் தான் புதுக்குடியிருப்பு மண் சிறிலங்கா படைகளின் வல்வளைப்புக்குள் சென்றுகொண்டிருந்தபோது நேரடியாகவே ஆனந்தபுர மண்ணிலே பல ஆட்லறி நிலைகளை உருவாக்கி நேரடியான பல தாக்குதல்களை படையினர் மீது ஏற்படுத்தி பல இழப்புக்களை ஏற்படுத்திய வண்ணம் இருந்தனர். அந்தக் களமுனைகளிலே போராளிகளுக்கு பிரிகேடியர் மணிவாணன் அவர்கள் கட்டளைகளையும் வழங்கிக்கொண்டிருந்தார். இந்த நிலையில்தான் சிங்களப் படையின் தாக்குதலில் ஆனந்தபுர மண்ணிலே பிரிகேடியர் மணிவண்ணன் அவர்களும் இன்னும் சில தளபதிகளும், போராளிகளும் தமிழீழ காற்றோடு காற்றாக கலந்துபோனார். https://www.thaarakam.com/news/60290
  2. சமர்க்களங்களின் துணை நாயகன் பிரிகேடியர் தீபன்! Last updated Apr 3, 2020 கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையை பிறப்பிடமாக கொண்ட தீபனின்(வேலாயுதபிள்ளை பகீரதகுமார்) இயக்கப்பெயர் சிவதீபன்.இவர் சமயங்களில் தவபாலசிங்கம் என்றும் அழைக்கப்பட்டார். யாழ் மாவட்டம் தென்மராட்சியின் வரணி தான் தீபனின் பூர்வீகமாகும். சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் விஞ்ஞான பீட மாணவனாகவிருந்த தீபன் பெற்ற க.பொ.த உயர் தர பெறுபேறுகள் அவருக்கு இலகுவாக பல்கழைக்கழக இடத்தைப் பெற்றுத்தந்திருக்கும் ஆனால் வரலாற்றுக் கடமையை உணர்ந்து போராளியானார் தீபன். தென்மராட்சிப்பிரதேசத்தின் முதலாவது பொறுப்பாளராக விளங்கிய மேஜர் கேடில்ஸின்(மகாலிங்கம் திலீபன் – கண்டாவளை) இளைய மச்சினனாகிய தீபனை இயக்கத்தில் சேர்த்தது கேடில்ஸ் என்று கூறப்படுகிறது. தீபனை இயக்கத்தில் சேர்த்த மேஜர் கேடில்ஸ் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி லெப். கேணல் பொன்னம்மான்,விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர், கப்டன் வாசு,லெப்.சித்தார்த்தன்(கேணல் சங்கரின் சகோதரன்) ஆகியோர் வீரச்சாவடைய காரணமாகவிருந்த‌ 14-02-1987 அன்று கைதடியிலே இடம்பெற்ற‌ வெடி விபத்தில் தானும் காற்றோடு காற்றாகிப் போனார். 1984 ன் முற்பகுதியில் தன்னை இயக்கத்தில் இணைத்துக்கொண்ட‌ பகீரதகுமார், ஆயுதப் பயிற்சி பெற்று தீபனாக மாறினார், இவருடைய தொடர்பாடல் குறிப்புப் பெயர் “தாங்கோ பாப்பா” ஆகும். இவர் புலிகளின் முன்னாள் துணைத்தலைவர் மாத்தையாவின் மெய்ப்பாதுகாவலராக நியமிக்கப்பட்டு பின்னர் பிரதான மெய்ப்பாதுகாப்பாளரானார். 1987 ம் ஆண்டு யூலை 29 ம் திகதி இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பின் இந்திய அமைதிப்படைக்கு எதிரான‌ அக்காலப்பகுதி சண்டையில், தீபன் கிளிநொச்சி இராணுவ பொறுப்பாளராகவும், பால்ராஜ் முல்லைத்தீவின் இராணுவ பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர். அக்காலத்தில் இந்தியப்படையினருக்கெதிரான அதிக தாக்குதல்கள் நடைபெற்ற மாவட்டங்கள் முல்லைத்தீவும் கிளிநொச்சியுமே ஆகும். இக்காலப்பகுதியில் தீபனின் இளைய சகோதரனாகிய வேலாயுதபிள்ளை சிவகுமாரும் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். தனது சகோதரனைப்போலவே வேகமாக வளர்ந்த கில்மன் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக நியமிக்கப்பட்டார். 1993ல் திருகோணமலைக்குப் பொறுப்பாளராக அனுப்பப்பட்ட கில்மன் 1994ல் நடைபெற்ற தவறுதலான வெடிவிபத்தில் லெப்.கேணல் கில்மனாக தன்னை ஆகுதியாக்கிக் கொண்டார். 1988ம் ஆண்டின் பிற்பகுதியில் மன்னார் நீங்கலான வன்னிப்பகுதியின் இராணுவப் பொறுப்பாளராக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். துணை இராணுவப் பொறுப்பாளராக தீபன் இருந்தார். இந்த இரண்டு வீரர்களும் தமது போராளிகளை முன்னின்று வழி நடத்தி பல வெற்றிச் சமர்களுக்கு வித்திட்டார்கள். இந்திய அமைதிப்படை 1990ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஈழத்தை விட்டு அகன்றது. மீண்டும் ஜூன் மாதமளவில் இலங்கைப் படைகளுடனான 2ம் ஈழப்போர் ஆரம்பமானது. பால்ராஜின் தலைமையின் கீழ் புலிகள் பல வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டார்கள், அவற்றில் பிரதானமானவை மாங்குளம் மற்றும் கொக்காவில் முகாம் தகர்ப்பாகும். பால்ராஜும் தீபனும் 1991ல் மேற்கொள்ளப்பட்ட‌ ஆனையிறவு முகாம் மீதான ஆகாய கடல் வெளிச்சமரில் பங்கு பற்றி குறிப்பிடத்தக்களவான வெற்றியைப் பெற்ற போதும் முகாம் தகர்ப்பு என்ற இலக்கு எட்டப்படவில்லை. 1992ல் உருவாக்கப்பட்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். தீபன் வன்னிப்பகுதியின் தளபதியானார். இவர்களின் இணை மண்கின்டிமலை மீதான இதயபூமி நடவடிக்கையில் பங்கு பற்றி புலிகளுக்கு மகத்தான வெற்றியை தேடித்தந்தது. தீபனின் திறமையும் வீரமும் வெளிப்பட்ட இரு சமர்கள் யாழ்தேவி மற்றும் தவளைப்பாச்சல் ஆகும். ஆனையிறவிலிருந்து வடக்காக‌ யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்ட யாழ்தேவியை இடை நடுவில் தடம்புரள் வைத்த பெருமை தீபனையே சாரும். 1993 செப்டெம்பரில் இடம்பெற்ற இந்த இராணுவ நடவடிக்கையின் முதல் நாள் சண்டையிலேயே பால்ராஜ் காயம் காரணமாக களத்திலிருந்து அகற்றப்பட்டார். அதன் பின்னர் தீபனே முறியடிப்புச்சமருக்குத்தலைமை தாங்கினார். தீபனின் தந்திரத்தின்படி மண் கும்பிகளுக்குள் மணித்தியாலக்கணக்காக காத்திருந்த புலிகள் முன்னேறிய‌ இராணுவம் மிக அருகில் வந்ததும் திடீர்த் தாக்குதலைத்தொடுத்து அவர்களை நிலை குலைய செய்ததுடன் புலிகள் இரண்டு ரி‍ 55 டாங்கிகளை கைப்பற்றுவதற்கு வழி சமைத்துக்கொடுத்தது. இந்த‌ இரண்டு ரி‍ 55 டாங்கிகளில் ஒன்றை மண்ணுக்குள் புதைத்து பயன்படுத்தியே இரண்டு டோரா பீரங்கிப் படகுகளை சாலைப்பகுதியில் ஒரே நாளில் புலிகள் தகர்த்து சாதனை புரிந்தனர். 1993 நவம்பரில் நடைபெற்ற ஈருடகச் சமரான தவளைப்பாய்ச்சல் நடவடிக்கையில் பூநகரி முகாமை தீபன் தலைமையிலான போராளிகளும் நாகதேவன்துறை கடற்படைத்தளத்தை பானு தலைமையிலான போராளிகளும் தகர்த்தனர். இங்கே கைப்பற்றப்பட்ட 5 நீருந்து விசைப்படகுகளே கடற்புலிகள் தோற்றம் பெற்று பலம் பெற உறுதுணையாக இருந்தது என்றால் மிகையாகா. 1994ல் தீபன் யாழ்ப்பாணத்துக்கு மாற்றப்பட்டார். அக்காலப் பகுதியில் சந்திரிகா அம்மையார் தலைமையிலான இலங்கை அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் பேச்சு வார்த்தை நடந்தது. 1995ல் முறிவடைந்த பேச்சு வார்த்தை 3ம் ஈழப்போருக்கு வழி சமைத்தது. 1995ல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இராணுவத்தினரின் முன்னேறிப் பாய்தலுக்கெதிரான புலிப்பாய்ச்சலிலும் இடிமுழக்கம் நடவடிக்கைக்கெதிரான சண்டையிலும் தன் காத்திரமான பங்களிப்பை வழங்கினார். சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையை ஆரம்பத்தில் பால்ராஜ் சொர்ணம் தலைமையிலும் பின்னர் தீபன் பானு தலைமையிலும் புலிகள் எதிர்த்துப் போரிட்டனர். தீபன் தலைமையிலான போராளிகள் நவம்பர் 27 மாவீரர் நாள் முடியும் வரை யாழ்ப்பாணம் படையினர் கைகளில் வீழ்வதை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தினர். யாழ்ப்பாணத்தை விட்டு 1996 ஏப்ரல்‍ மே காலப்பகுதியில் வெளியேறிய புலிகள் வன்னியை தளமாக்க முடிவு செய்தபோது அதற்குப் பெருந்தடையாக இருந்தது முல்லைத்தீவு இராணுவ முகாம் ஆகும். அம்முகாமை அகற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர் புலிகள். தீபனை அழைத்த தலைவர் முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான ரெக்கியை ஆரம்பவிக்கவும் தாக்குதல் திட்டத்தை தீட்டவும் உத்தரவிட்டார். தீபனின் திறமையான திட்டத்தினால் 1996 ஜூலை 18ல் முல்லைத்தீவு இராணுவ முகாம் தகர்க்கப்பட்டபோது 1000க்கும் மேற்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இங்கே கைப்பற்றப்பட்ட இரண்டு 122mm ஆட்லறி பீரங்கிகளே பின்னாளில் புலிகள் மரபு ரீதியாக தமது இராணுவத்தைக் கட்டமைக்க உதவின. ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கை 1997ல் ஆரம்பிக்கப்பட்டபோது புளியங்குளத்தை தக்கவைக்கும் பொறுப்பு தீபனிடம் ஒப்படைக்கப்பட்டது. ஓமந்தையையும் நெடுங்கேணியையும் இலகுவாக கைப்பற்றிய இராணுவம் புளியங்குளத்தை கைப்பற்ற முடியாமல் மாற்றுப்பாதையில் கனகராயன்குளத்தையும் கரிப்பட்டமுறிப்பையும் கைப்பற்றியபோது புளியங்குளம் கைவிடப்படவேண்டியிருந்தது. இதன்போது தீபனின் நம்பிக்கைக்குரிய தளபதிகளாக விக்கீஸ், அறிவு மற்றும் லோரன்ஸ் விளங்கினார்கள்.இந்தக்கூட்டணியின் கண்டு பிடிப்பான மண் அணைக்கட்டும் அகழியுமே இலங்கை இராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது என்பது யாவரும் அறிந்ததே. இன்றைய தேச நிர்மாணம் மற்றும் கட்டமைப்பு அமைச்சராக இருக்கும் விநாயகமூர்த்தி முரளீதரன் என்கின்ற கருணா ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கை காலத்தில் தானே வன்னிப்பகுதியின் கட்டளைத்தளபதியாக நியமிக்கப்பட்டேன் என்று கூறி வருகிறார். ஆனால் அவர் தீபனுடன் இணைந்தே இந்தப் பொறுப்பை வகித்தார் என்பதும் இவர் தொடர்பாடல் மற்றும் ஒருங்கிணைப்பு வேலைகளை கவனித்தபோது ஒட்டுமொத்த பொறுப்பாளராக இருந்தவர் தீபன் என்பதையும் குறிப்பிடத்தவறிவிட்டார். 1998ல் ஜெயசிக்குரு கைவிடப்பட முக்கிய காரணமாக இருந்தது, சத்ஜெய நடவடிக்கையின் மூலம் படையினர் கைப்பற்றி வைத்திருந்த கிளிநொச்சியை ஓயாத அலைகள்‍ 2ன் மூலம் புலிகள் மீளக்கைப்பற்றிக்கொண்டதே. இத்தாக்குதலிலும் தீபனின் பங்களிப்பு மிகக்காத்திரமானதாகும். 1999ல் புலிகள் ஓயாத அலைகள் 3ஐ ஆரம்பித்து படையினர் ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கையின் மூலம் 18 மாதங்கள் கஷ்டப்பட்டு பிடித்து வைத்திருந்த பகுதிகளை வெறும் மூன்றே நாட்களில் வவுனியா வரை விரட்டப்பட்டனர். அதனை தொடர்ந்து மணலாறு, மன்னார் பிரதேசங்களிலிருந்து ஓயாத அலைகள் படையணிகளால் விரட்டப்பட்டனர் ஓயாத அலைகள் 3ன் முத்தாய்ப்பாக அமைந்தது ஆனையிறவு முகாம் கைப்பற்றலாகும். 1991ல் ஆகாய கடல் வெளிச் சமரில் பெற்ற பின்னடைவும் படிப்பினைகளும் பின்னாளில் உலகமே வியக்கும் வண்ணம் இடம்பெற்ற குடாரப்புத் தரையிறக்கத்துக்கு வழி சமைத்தது எனலாம். இத்திட்டத்தை தலைவர் சமர்க்களங்களின் நாயகன் பால்ராஜுக்கு விளக்கியபோது சற்றுத்தயங்கினாராம் பால்ராஜ். பின்னர் தீபன் செய்ய வேண்டிய கடமைகளை விளக்கியபின்பு தீபன் மீதிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கை காரணமாக களத்தில் இறங்கினாராம் பால்ராஜ். குடாரப்புத் தரையிறக்கம் இடம்பெற்றபின் செம்பியன்பற்றிலிருந்து வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு வரை நிலை கொண்டிருந்த படையினரை விரட்டி அடித்தும் ஆனையிறவு முகாமை பின் பக்கமாக தாக்கியும் ஆனையிறவு முகாம் கைப்பற்றலில் முக்கிய பங்காற்றினார் தீபன். 2000 ஏப்ரல் 24 ல் இடம்பெற்ற ஆனையிறவை மீளக் கைப்பற்றும் நோக்கிலான படையினரின் தீச்சுவாலை(அக்னிகீல) நடவடிக்கையை சின்னாபின்னமாக்கியது தொட்டு 2009 ஜனவரி வரை 55ம் மற்றும் 53ம் படையனியின் ஆனையிறவை மீளக் கைப்பற்றும் எத்தனையோ முயற்சிகளை தவிடு பொடியாக்கியவர் வட போர்முனைக் கட்டளைத்தளபதி தீபன். அதே போன்று கிளிநொச்சியை சுற்றி 18km நீளமான ‘L’ வடிவிலான மண் அணைக்கட்டு அமைத்து கிளிநொச்சியின் வீழ்ச்சியை பல மாதங்கள்(2009 ஜனவரி 1 வரை) தள்ளிப்போட்டவர் தீபன். கடைசியாக புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தில் ஏப்ரல் 1ம் திகதி பல படையணித்தளபதிகளுடன் சேர்ந்து படையினருக்கெதிராக பாரிய முறியடிப்புச் சமர் ஒன்றைத் திட்டமிட்டார் தீபன். ஆனால் காலன் வேறு விதமாக திட்டமிட்டான் போலும். ஏப்ரல் 1ம் திகதி அன்றும் 2ம் திகதி அன்றும் தீபனுக்கு நெஞ்சிலே காயம் பட்டது.ஆனாலும் தொடர்ந்து போராடிய தீபன் எதிரியின் நயவஞ்சகமான நச்சுக்குண்டுத்தாக்குதலில் வீரகாவியமானார். 25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த இந்தப் புயல் ஏப்ரல் மாதம் 4ம் திகதி புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே நிரந்தரமாக அடங்கிப் போனது. சமர்க்களங்களின் நாயகன் பால்ராஜ் என்றால் எந்தவித சந்தேகங்களும் இன்றி சமர்க்களங்களின் துணை நாயகன் இந்த தீபன் அம்மான் தான். பால்ராஜ் எனும் பாசறையிலே வளர்த்தெடுக்க‌ப்பட்ட இந்த கண்டாவளை கண்டெடுத்த கண்மனி பிரிகேடியர் தீபன், பால்ராஜ் மே 2008ல் மறைந்தபோது அழுதபடியே சொன்ன வார்த்தைகள் இவை “என்னை அருகிலே வைத்திருந்து தளபதியாக வளர்த்தெடுத்த தளபதி, அவர் என் போர் ஆசான்.” தமிழனை தலை நிமிர வைத்த இந்த இரண்டு வீரர்களும் இன்று நம்மிடையே இல்லை என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அவர்களின் நினைவுகள் எம்மனங்களில் நீங்காதிருக்கும் என்பதும். -சாணக்கியன்- https://www.thaarakam.com/news/60261
  3. சண்டை முடியாமல் இந்த இடத்தை விட்டு நான் நகர மாட்டேன்! – பிரிகேடியர் விதுசா.. பிரிகேடியர் விதுசா வார்த்தைகளால் சொல்லிவிட முடியாத ஆளுமையின் வடிவம். பார்த்தவுடனே தளபதி என்கின்ற மரியாதை பார்ப்பவர் அனைவருக்குமே வந்துவிடும். உலகமே விழிநிமிர்த்திப் பார்க்கும் அளவுக்குப் பெண்புலிகளை வழிநடத்தி, வான்முட்டும் வெற்றிகளை, மெய்சிலிர்க்க வைக்கும் அற்புதங்களைப் படைக்க வைத்த இரண்டாம் லெப். மாலதி படையணியின் சிறப்புத்தளபதி. ஓப்பரேசன் லிபரேசனில் தொடங்கிய அவரது களமுனைப் பயணம் விடுதலைப்புலிகளின் இறுதி முற்றுகைச் சமராக இருந்த ஆனந்தபுரத்தில் தனது இறுதி மூச்சைத் தமிழீழ மண்ணுக்காய் அர்ப்பணிக்கும் வரை ஓய்வு என்பதையே அறியாத உழைப்பாளி. எப்போதும் அவரது பேச்சும் மூச்சும் தலைவனின் எண்ணங்களைத் தாங்கியதாகவே இருந்தது. போராளிகளோடு உரையாடும்போதுகூட ‘அண்ணை எதை நினைக்கின்றாரோ அதை நாங்கள் மிகச் சிறப்பாகச் செய்து முடிக்க வேண்டும்” என்ற உறுதி மட்டுமே இருந்தது. விடுதலைப் போராட்டத்தில் மகளிர் படையணி பங்கேற்ற பெரும்பான்மைக் களங்களில் எல்லாம் கட்டளைத் தளபதியாய் நின்று போர் அரங்குகளை வழிப்படுத்துவார். தொலைத் தொடர்புக் கருவி தாங்கிவரும் அவர் குரல் தனித்து நின்றுகூட போராளிகளைச் சாதிக்க வைக்கும் துணிச்சலை அள்ளித்தரும். அந்தக் கட்டளைகளில் இருக்கும் நேர்த்தியும் தெளிவும் புதிய போராளிகளைக் கூட களமுனையின் சாதனைப் புலிகளாய் உருவாக்கிய சம்பவங்களோ ஏராளம். அவ்வளவு போரியல் நுட்பமும் போரியல் தெளிவும் மிக்க போராளி. எல்லோருமே தமது கடைக்குட்டி சகோதரர்களோடு அதிக அன்பு வைப்பது வழமை. விதுசா அக்காவுக்கும் தனது தம்பி மீது அளவுகடந்த பாசம். அவனும் காலஓட்டத்தில் விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்திருந்தான். ஜெயசிக்குறு களமுனை. எதிரியின் உடைப்புச் சமரொன்று. அதனை முறியடிப்புச் செய்யும் களத்தில் கட்டளைகளைப் பிறப்பித்தபடி விதுசா அக்கா நிற்கின்றார். அதே களமுனையில் அவரது தம்பியும் நிற்கின்றான். தொலைத்தொடர்பில் செய்தி வருகின்றது. அவரது சகோதரன் வீரச்சாவடைந்து விட்டதாக, பின்னரங்குக்கு வந்தால் வித்துடலை அனுப்ப முதல் பார்க்கலாம் என, விதுசா அக்காவிடம் செய்தியைச் சொன்னபோது ‘சண்டை முடியாமல் இந்த இடத்தை விட்டு நான் நகர மாட்டேன். தன்னைப் பார்க்க வேண்டாம் வித்துடலை அனுப்புங்கள்” என்று கூறிவிட்டு, அவர் தனது அன்புத் தம்பியின் வீரச்சாவைத் தெரிந்த பின்னரும் உறுதி தளராது மிகத்தெளிவாகக் கட்டளைகளைப் பிறப்பித்து அந்தச் சமரை வெற்றிகரமாக வழிநடத்தினார். இதுதான் விதுசா அக்கா. போர்க்களத்திலே தனது பெரும் பகுதி வாழ்க்கையைக் கழித்த பெண்புலிகளின் பெருந்தளபதி ஆனந்தபுரத்தில் விடுதலைக்கு விதையாகிப் போனார். “தாரகம் இணையத்திற்க்காக” அபிராமி விடுதலைப் புலிகளின் மகளீர் படைப் பிரிவின் தோற்றமும் வளர்ச்சியும் எழுச்சியும் எமது இயக்கம் படைத்த மாபெரும் சாதனைகளில் ஒன்று. ஒரு புதுமைப் பெண்ணை, புரட்சிகரப் பெண்ணை எமது விடுதலை இயக்கம் படைத்திருக்கிறது. இந்த முகவுரை விதுசா பற்றிய நினைவுப் பகிர்வை அறிமுகஞ் செய்யப் போதுமானது. குருக்கள் கந்தையா, ஞானாம்பிகை இணையருக்கு ஞானபூரணி என்ற இயற்பெயர் பூண்ட விதுசா மூத்த மகளாக 1969 செப்ரம்பர் 29ம் நாள் கரவெட்டி கப்புதூவில் பிறந்தார். இவர் தனது பதின்ம வயதில் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரம் வர்த்தகப் பிரிவில் படிக்கும் போது புலிகள் இயக்கத் தொடர்பு ஏற்பட்டது. இக்காலப் பகுதியில் அவர் விடுதலைப் புலிகளின் பகுதி நேரப் பணியாளராக இணைந்தார். 1986 மே மாதத்தில் விடுதலைப் புலி உறுப்பினராக இணைந்தார். அவர் வாழ்ந்த காலம் 40 வருடம். வீரச்சாவடைந்த நாள் 2009 ஏப்ரல் 04ம் நாள். 2001-2009 காலத்தில் அவரோடு நெருங்கிப் பழக நேர்ந்தது. அவருக்கு இலக்கிய தாகம், உலக நிகழ்வுகளை நகர்த்தும் அடிப்படைகள் பற்றிய ஆர்வம், இராணுவத் தொழில்நுட்பத் தகவல்கள் திரட்டும் வேட்கை என்பன மிகுதியாக இருந்தன. உயர் கல்வி கற்றுத் தேறவில்லை என்ற ஏக்கமும் இருந்தது. இயக்கத்தில் இணைந்த சிறிது காலம் அவர் சுதந்திரப் பறவைகள் பிரிவில் இருந்தபடி கிராம ரீதியாகக் கருத்தூட்டல் பணிகளில் ஈடுபட்டார். உற்ற தோழிகளான லெப் நித்தியா பவானி, மேஜர் சஞ்சிகா கலை ஆகியோர் இந்தப் பிரிவின் சுகாதரப் பணிகள், எழுச்சிக் கருத்தரங்குகள் ஆகியவற்றை அவருடன் நடத்தினர். விடுதலைப்புலிகள் மகளீர் 2ம் அணியில் விதுசா ஆயுதப் பயிற்சி பெற்றார். 1987ல் சிங்கள இராணுவம் நடத்திய ஒப்பரேசன் லிபரேசன் என்ற வடமராட்சியைக் கைப்பற்றும் நடவடிக்கையில் அவர் தனது போராட்ட வாழ்வைத் தொடங்கினார். இந்தியப் படைகள் வந்தபோதும் அவற்றிற்கு எதிரான கோப்பாய்ச் சமரில் அவர் முக்கிய பங்கேற்றார். இதன் போது முதலாவது பெண் மாவீரர் மாலதி 10.10.1987ம் நாள் வீரச்சாவடைந்தார். அதன் பிறகு புலிகள் மேற்கொண்ட தந்திரோபாயப் பின்வாங்கலில் வன்னி நிலத்திற்குச் சென்றார். எம் தலைவர் அவர்கள் வழிகாட்டலில் பெண் போராளிகளுக்குப் பயிற்சி வழங்கும் பணியில் வன்னியில் ஈடுபட்டார். பலவீனமான எமது இனத்தின் பலமான பாதுகாப்பு அரணாக அவர் பெண் போராளிகளை உருவாக்கினார். 1988ம் ஆண்டுப் பிற்பகுதியில் யாழ் சென்ற மகளீர் அணியுடன் விதுசா சென்றார். யாழ் குடா முழுவதும் இந்திய இராணுவம் செறிவாக நின்ற காலமாயினும் அவரும் தோழிகளும் புதிய பெண் போராளிகளை இணைப்பதில் தீவிரமாக ஈடுபட்டனர். பொறுப்புக்களைச் சுமக்கும் தகுதி பெற்ற அவர் 3ம், 4ம் மகளீர் அணிகளை உருவாக்கி அவற்றை வன்னிக்கு வழிநடத்திச் சென்றார். அங்கு களமுக அடிப்படைப் பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றினார். விடியல் பாசறையின் பொறுப்பாசிரியராக அவர் தனது ஆளுமையை வெளிப்படுத்தினார். 2ம் கட்ட ஈழப்போர் தொடங்கிய பிறகு கொக்காவில் படை முகாம் தாக்குதலில் பங்கேற்ற விதுசா காலில் காயமடைந்தார். தேறியபின் ஆனையிறவு, யாழ் கோட்டை, பலாலி இராணுவ முகாம்களைச் சுற்றிக் காவல் பணி செய்தார். 1990 கார்த்திகையில் நடந்த தச்சன்காடு மினி முகாம் தாக்குதலில் நெடுநாட் தோழி மேஜர் சஞ்சிகா கலை வீரச்சாவடைந்தார். இந்தப் இழப்பு அவரைப் பலமாகத் தாக்கியது. அதை எண்ணும் போது என் இதயம் வெடித்துவிடும் போல் இருக்கும் என்று அவர் சொன்னார். 1991ல் நடந்த ஆனையிறவுச் சமரில் மாதர் அணியின் ஒரு பகுதித் தளபதியாயகப் பதவி உயர்ந்தார். அவருடைய திறமைக்கு தலைவர் அவர்களின் பாராட்டுக்கள் கிடைத்தன. தலைவரின் சிந்தனைக்குச் செயல் வடிவம் கொடுப்பதில் வல்லவர் என்ற சிறப்பைப் பெற்றார். தலைவர் அவர்களின் இலட்சியக் கனவான தமிழீழ உருவாக்கத்திற்கு அவர் அல்லும் பகலும் உழைத்தார். அவருக்கு சொந்த வாழ்க்கையின் எதிர்காலம் பற்றிய சிந்தனை இருந்ததில்லை “அண்ணையின் கனவை நிறைவேற்றுவது” ஒன்று தான் அவருடைய வாழ்க்கைக் குறியாக இருந்தது. மகளீர் அணியின் துணைத் தளபதியாக நியமிக்கப்பட்ட விதுசா 1992 கார்த்திகையில் இடம் பெற்ற பலாலி 180 காவலரண் தாக்குதலில் காலிலும் தலையிலும் விழுப்புண் அடைந்தார். அறிவிழந்தாலும் கட்டளைகளைப் பிறப்பித்தபடி இருந்ததாக அவர் பிற்காலத்தில் சொன்னார். 1993நவம்பர் 10-13ல் நடந்த பூநகரி ஒப்பரேசன் படை நடவடிக்கையில் அவர் பிற்களப் பணியில் ஈடுபட்டார். அதே வருடம் முதலாவது பெண் மாவீரர் மாலதியின் பெயரில் உருவாக்கப்பட்ட மாலதி படையணியின் கட்டளைத் தளபதியாக கேணல் என்ற பதவியோடு நியமிக்கப்பட்டார். சந்திரிக்கா அரசின் சமாதனத்திற்கான போர் அடுத்த வருடம் தொடங்கிய போது தலைமைப் பொறுப்பேற்று மாலதி படையணியை வழி நடத்தினார். அவருடைய களப் பயணம் 1993 தொடக்கம் வீரச்சாவடையும் 2009 வரை ஒரு போதும் ஓய்ந்ததில்லை. யாழிலும் சரி வன்னியிலும் சரி எண்ணற்ற சமர்களில் பங்காற்றினார். இதயபூமி, இடிமுளக்கம், இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிர்ச்சமரை வழிநடத்தியதோடு புலிப்பாய்ச்சல் ஆகியவற்றில் திறம்படச் செயற்பட்டார். யாழ் தீபகற்பத்தை சிங்கள இராணுவம் கைப்பற்றுவதற்கு நடந்த சூரியக்கதிர் சமரில் அவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. புலிகளின் போராட்ட வரலாற்றில் மிக நெடிய காலம் தொடர்ந்த ஜெயசிக்குறு எதிர்ச்சமரிலும் அவர் அரும்பணியாற்றினார். 1998ல் ஓயாத அலை 2 படை நடவடிக்கையில் முக்கிய பங்கேற்ற அவர் கிளிநொச்சி புலிகள் வசம் வீழ்ந்த போது தேசியக் கொடியை களத்தில் அவரே ஏற்றினார். இது அவருடைய போராட்ட வாழ்வின் உச்சமாகக் கருதப்படுகிறது. 1999 செப்ரம்பர் 18ம் நாள் அவர் தனது இளைய சகோதரன் போராளி விதுசன் கேதீஸ்வரனைக் களத்தில் இழந்தார். ஓயாத அலை 3, தீச்சுவாலை முறியடிப்புச் சமர் ஆகிய வற்றில் அவருடைய வழி நடத்தல் பிரமிப்பூட்டும் விதத்தில் அமைந்தன. சிங்கள இராணுவத்திற்கும் எமக்கும் இடையில் 2008 தொடக்கம் 2009 வரை நடந்த சமச்சீரற்ற போரில் தம்பனையில் இருந்து ஆனந்தபுரம் மந்துவில் வரை விதுசா ஓய்வின்றிக் களமாடினார். உணவின்றி உறக்கமின்றி எதிரியை விரட்டி அடிப்பதில் குறியாக இருந்தார். 2009 சனவரி 26ம் நாள் அவரை சந்திக்க நேர்ந்தது. உடல் மெலிந்து கண்கள் குழிவிழுந்தாலும் உறுதி தளராமல் இருந்தார். எதிரிகளின் சூழ்ச்சியால் ஆனந்தபுரம் சமரில் வீரச்சாவடைந்தார். அவருக்கு பிரிகேடியர் பதவி வழங்கப்பட்டது. அவருடைய வித்துடலைப் பார்க்காமல் விதை குழியில் ஒரு பிடி மண் போடாமல் இருக்கும் எம் போன்றோர் அவருடைய நினைவுகளைச் சுமக்கின்றோம். – விதுரன்- https://www.thaarakam.com/news/60237
  4. யுத்தகளத்தில் தீரமுடன் போராடிய பிரிகேடியர் ஆதவன்.! அது ஓர் அடர்ந்த வனம். அந்த வனத்தின் நடுவே சிறியதோர் வெட்டை. அந்த வெட்டை வெளியில் என்றுமில்லாதவாறு போராளிகள் பலர் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தார்கள். அனைத்துத் தளபதிகளுக்கும் குறிபார்த்துச் சுடும் போட்டிக்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தது. இனம் புரியாத மகிழ்சியோடும், ஒரு விதமான படபடப்போடும் அனைத்துத் தளபதிகளும் தயாராகிக்கொண்டிருந்தார்கள். “ஊஊ” என்ற ஓசையை கிளப்பியபடி விரைந்து வந்த வாகனத்தில் இருந்து இறங்கிய தலைவரை உற்சாகத்தோடு வரவேற்கின்றார்கள் தளபதிகளும், போராளிகளும். எப்போதும் தலைவரோடு கூடவே கடாபி அண்ணையையும் வரவேற்றவர்கள், தமக்குள் பேசிக்கொள்கிறார்கள் “கடாபி அண்ணை சூட்டுப்போட்டியில் கலந்து கொண்டால் தாங்கள் எப்படி வெல்லுறது…” அனைத்துத் தளபதிகளுக்கும் போட்டிக்கான விதிமுறைகள் கூறப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்துக்குள் 10 ரவைகளையும் குறுப்பீங்காய்(துல்லியமான சூட்டு இடைவெளி) அடிப்பவர்களுக்கே முதலிடம். ஒவ்வொருவரும் தங்களுக்கான ரவைகளை அடித்து முடித்தபோது இறுதி சூட்டாளரான கடாபி அண்ணை துப்பாக்கியைத் தூக்கி இலக்கைக் குறிபார்க்கிறார். அனைத்துத் தளபதிகளும் அவரையே கண்ணை இமைக்காமல் பார்க்கின்றனர். கண் இமைக்கும் நேரத்துக்குள் 10 ரவைகளையும் அடித்து விட்டு, கடாபி அண்ணை நிமிரும் போது, கடாபி அண்ணையும் “ஸ்கோரை” (பெறுபேரு) பார்ப்பதற்காக அனைவரும் தலைதெறிக்க ஓடுகின்றனர். “ஒரு ரவுண்ட்ஸ் மட்டும் தான் பிடிச்சிருக்கு” என்று முதல் பார்த்த கமல் சொல்ல, அதைத் தொடர்ந்து எல்லோரும் அதையே சொல்ல, தலைவர் அவர்கள் இலக்கின் பின்பக்கம் செல்கின்றார். என்ன அதிசயம் அனைவரும் பிரமித்துப்போனார்கள். ஒரு ரவை போன அதே பாதையால் பத்து ரவைகளும் போயிருக்கின்றன. கடாபி அண்ணையை அருகழைத்த தலைவர் அவர்கள் ஆரத்தழுவிக்கொண்டார். ஒரு தாய் சாதனை படைத்த தன் பிள்ளையை அணைத்த்துக் கொள்வது போல. அனைவராலும் பிரமிப்போடும் பெருமையோடும் நோக்கப்படும் ஆதவன் என்றளைக்கப்படும் கடாபி அண்ணையின் சாதனைகள் ஒன்றல்ல இரண்டல்ல ஓராயிரம் சாதனைகள். சாதாரண மனிதர்கள் நினைத்துக்கூட பார்க்கமுடியாத அளப்பெரும் தியாகங்களையும் சாதனைகளையும் புரிந்துவிட்டு விழி மூடித் துயில் கொள்ளும் இந்த மாவீரனின் வரலாற்றின் சிறு பகுதியை இங்கு தருகின்றேன். வடமராட்சி என்ற அழகிய ஊரில் 05 சகோதரர்களுக்கு மூத்தவறாகப் பிறப்பெடுத்தவர்தான் கடாபி அண்ணை. வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்த அவருடைய குடும்பத்தின் சுமையை சிறுவயதிலே சுமக்கும் நிலை கடாபி அண்ணைக்கு உருவாகிறது. தந்தையின் வருமானத்தைக் கொண்டு தேவைகளைப் பூர்த்தி செய்யமுடியாமல் திண்டாடிய அம்மாவை சாமதானப்படுத்திய 5ம் வகுப்பு படிக்கும் 11 வயதுச் சிறுவனாகிய கடாபியண்ணை, தன்படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, தந்தையுடன் இணைந்து பேக்கரி (வெதுப்பகம்) வேலைக்குச் செல்கிறார். பகல் முழுதும் ஓய்வின்றி பேக்கரியில் உழைத்துவிட்டு, இரவு நேரங்களில் “ஐஸ்க்ரீம் கொம்பனி” ஒன்றில் வேலைக்குச் செல்கிறார். இரவு பகல் பாராது உழைத்துக் கொண்டிருந்த கடாபி அண்ணைக்குக் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் தியட்டருக்குப் போய் ஆங்கிலச் சண்டைப் படங்களைப் பார்ப்பதே இவரின் பொழுதுபோக்காகின. தன் குடும்பத்தின் முன்னேற்றத்துக்காக உழைத்துக் கொண்டிருந்த கடாபி அண்ணைக்கு மறைந்து வாழும் சில விடுதலைப்புலி உறுப்பினர்கள் அறிமுகமாகிறார்கள். அவர்களுடைய கொள்கைப் பிடிப்பினாலும், இலட்சியப் பற்றினாலும் ஈர்க்கப்பட்ட கடாபி அண்ணை, அப் போராளிகளுக்குப் பல வழிகளில் உதவி புரிகின்றார். எதிரியை உளவு பார்ப்பது, உணவுகள் எடுத்துக் கொடுப்பது, போராளிகள் மறைந்து வாழும் இடங்களில் சாதாரண மாணவன் போல காவல் கடமைகளில் ஈடுபடுவது, தகவல்களைப் பறிமாறுவது போன்ற பணிகளின் மூலம் இவரின் ஆரம்பக் கட்ட விடுதலைப் பணி ஆரம்பமாகியது. தமிழ் மக்களுக்கான விடுதலையின் தேவையை மனசார உணர்ந்து கொண்ட கடாபி அண்ணை அவர்கள் முழுநேர உறுப்பினராக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் தன்னை இணைத்துக் கொள்கிறார். போராளிக்குறிய முழுமையான பயிற்சிகளைப் பெறுவதற்காக இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இவர், 1984ம் ஆண்டு 6வது பயிற்சிப்பாசறையில் பயிற்சியினை ஆரம்பிக்கின்றார். பிருந்தன் மாஸ்டர், பிரிகேடியர் பால்ராஜ், யான் அண்ணை என இன்னும் பல வீரர்களோடு இவரும் ஒருவராகினார். பாலகப் பருவத்திலே பல கஸ்ரங்களைத் தாங்கி, ஓய்வின்றி உழைத்த கடாபி அண்ணாவுக்கு பயிற்சிகள் எதுவும் கடினமாகத் தெரியவில்லை. பயிற்சிகளின் பிரதான பயிற்சியான சூட்டுப் பயிற்சியின் முதல் நாளே இலக்கின் நடுப்புள்ளியில் குறிபார்த்துச் சுட்டு பயிரற்சிப் பொறுப்பாளர் பொன்னம்மான் அண்ணாவின் பாராட்டைப் பெற்றதோடு மட்டும் நின்றுவிடாது, தொடர்ந்து வந்த நாட்களில் பயிற்சிக்காகக் கொடுக்கப்பட்ட அத்தனை ரவைகளையும் இலக்கின் நடுப்புள்ளியில் சுட்டு சிறந்த சூட்டாளராக தலைவர் அவர்களால்த் தெரிவு செய்யப்படுகிறார். கடாபி அண்ணையின் ஒழுக்கத்தையும், நேர்மையையும், திறமையையும் இனங்கண்டு கொண்ட தலைவர் அவர்கள் அவரை தன்னுடைய மெய்ப்பாதுகாவலராக ஆக்கியதோடு விமான எதிர்ப்பு ஏவுகணைகளைச் சுடும் சிறப்புப் பயிற்சிக்காகவும் தெரிவு செய்யப்பட்டார். சாதாரணப் போராளியாக தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் தனது பணிகளை ஆரம்பித்த தளபதி கடாபி அண்ணா அவர்கள் கடின உழைப்பால் தனக்கான தகமைகளை வளர்த்துக்கொண்டு உயரிய இராணுவத் தளபதியாக உருவெடுத்தார். 1986ம் ஆண்டுக் காலப் பகுதியில் இந்தியாவிலிருந்து மாணலாற்றுக்கு வந்த கடாபி அண்ணை அவர்கள், தலைவரின் நேரடி நெறிப்படுத்தளின் கீழ் பணிபுரிந்தார். இலங்கை இராணுவம், இந்திய இராணுவம் என மாறி மாறி தலைவரை உயிருடன் பிடிக்க முயன்று தோற்றுப்போன அத்தனை நடவடிக்கைகளையும் முறியடித்துப் போராடி தலைவரைப் பாதுகாத்த வீரமும் விவேகமும் கொண்ட போராளிகளில் கடாபி அண்ணையும் ஒருவராகிறார். கொடுக்கப்பட்ட பணி எதுவாயினும் தூரநோக்குச் சிந்தனையோடும், நுணுக்கத்தோடும், அழகாகவும் செய்யும் இவர் திறனை அடிக்கடிப் பாராட்டும் தலைவர் அவர்கள் தமிழ் நாட்டில் இருந்து தன்னைச் சந்திக்க வந்திருந்த வைக்கோ அண்ணையை தமிழ் நாட்டுக்குக் கொண்டு சென்று விடும் மிக மிக முக்கிய பொறுப்பை கடாபி அண்ணையிடம் ஒப்படைக்கிறார். வைக்கோ அண்ணையை பாதுகாப்பாக் கூட்டிச் செல்லும் போது, முல்லைத்தீவு கடற்பகுதியில் ஏற்பட்ட சமரின்போது கடாபி அண்ணை பலத்த காயம் அடைகிறார். அந்நிலையில் கூட தன்னை சுதாகரித்துக்கொண்டு வைகோ அண்ணையை எதிரியிடமிருந்து பாதுகாத்து, தமிழ்நாட்டில் பாதுகாப்பாகச் சேர்ப்பிக்கின்றார். பலத்த காயம் ஏற்பட்டதால் இந்தியாவிலிருந்தே மருத்துவம் பெறவேண்டிய சூழல் கடாபி அண்ணைக்கு ஏற்படுகின்றது. 06 மாதங்கள் இந்தியாவிலிருந்து கொண்டே மருத்துவ உதவியைப் பெற்ற கடாபி அண்ணை மீண்டும் ஈழம் திரும்பி வந்து, தலைவரின் நேரடி நெறிப்படுதலின் கீழ் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, ஆரம்ப காலங்களில் “கடல்புறா” என பெயர் கொண்டழைக்கப்பட்ட கடற்புலிகள் படையணிக்கு கேணல் சங்கர் அண்ணை அவர்களே பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார். சங்கர் அண்ணை அவர்களை வேறு ஒரு பணிக்காக தலைவர் அவர்கள் நியமித்துவிட்டு கடல்புறாவின் தளபதியாக கடாபி அண்ணை அவர்களை தலைவர் அவர்கள் நியமித்தார். கடல்புறாவை செவ்வென கட்டியெழுப்பும் பணியில் கடாபி அண்ணை அவர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை 1991ம் ஆண்டு நடைபெற்ற ஆகாய கடல் வெளி மரபுவழித் தாக்குதலின் போது வெற்றிலைக்கேணிப் பகுதியால் பெரும் படையோடு ஊடறுத்த இராணுவத்தை வழிமறித்துத் தாக்குதல் நடத்தியபோது கடாபி அண்ணை நெஞ்சினில் பலத்த காயம் அடைகிறார். சில மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கடாபி அண்ணை அவர்களை தலைவர் அவர்கள் அழைத்து இம்ரான் பாண்டியன் படையணியின் உள்ளகப் பாதுகாப்புப் பொறுப்பாளராக நியமிக்கிறார். தலைவரின் பாதுகாப்பு, போராளிகளின் தேவைகள், தாக்குதல், பயிற்சி, புலனாய்வு என பன்முகப்படுத்தப்பட்ட பணிகளை செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டபோது ஓய்வின்றி உழைத்தவர் கடாபி அண்ணை. மாத்தையா அவர்களின் துரோகத்தனத்தை இனம்கண்டு, உறுதிப்படுத்திய பின்னர், பல வழிகளில் விசாரணைகள் நடந்தபோதும், மேலதிகமான, கடுமையான, இறுதிக்கட்ட விசாரணைகளை நேரடியாக மேற்கொண்டவரும் கடாபி அண்ணை அவர்களே. முன்னேறிப்பாய்ச்சல்” என்ற பெயரில் இலங்கை இராணுவம் மேடிற்கொண்ட நடவடிக்கைக்கு எதிராக புலிகள் நடத்திய “புலிப்பாய்ச்சல்” நடவடிக்கையைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் படைக் கட்டுமானத்தில் சில மாற்றங்கள் நிகழ்ந்தன. அதுவரை இம்ரான் பாண்டியன் படையணியின் சிறப்புத் தளபதியாக இருந்த மூத்த தளபதி சொர்ணம் அவர்கள் கூட்டுப் படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். அதே நேரம் கடாபி அண்ணை அவர்கள் இம்ரான் பாண்டியன் படையணியின் சிறப்புத்தளபதியாக நியமிக்கப்பட்டார். 1995ம் ஆண்டு யூலை மாதத்திலிருந்து 2002ம் ஆண்டுவரை, அதாவது விடுதலைப்புலிகளுக்கும் அரச படைகளுக்கும் யுத்த நிறுத்தம் ஏற்பட்டவரை கடாபி அண்ணை அவர்களே இம்ரான் பாண்டியன் படையணியின் சிறப்புத்தளபதியாகப் பணியாற்றினார். இம்ரான் பாண்டியன் படையணியென்பது சிறப்பு அணிகளின் கூட்டமைப்பாகவே இருந்தது. கடாபி அண்ணை பல சிறப்பு அணிகளை அப்படையணியின் கீழ் உருவாக்கி விடுதலைப்பயணத்தில் பல சாதனைகளை ஏற்படுத்தினார். கரும்புலி அணி, லெப் கேணல் விக்டர் கவச எதிர்ப்புப்படையணி, லெப் கேணல் ராயன் கல்விப்பிரிவு, மயூரன் பதுங்கிச்சுடும் அணி, செம்பியன் வேவு அணி, கேணல் சங்கர் ஆள ஊடுருவித்தாக்கும் அணி, லெப் கேணல் ராதா வான்காப்புப் படையணி, விடுதலைப்புலிகளின் கவசப்படையணி போன்ற சிறப்புப் படையணிகளும் படையத் தொடக்க கல்லூரிகள் போன்ற படைக்கட்டுமானங்களையும் தலைவரின் எண்ணத்திற்கேற்ப்ப உருவாக்கி, வளர்த்து, வழிநடத்தியதில் கடாபி அண்ணையின் தலமைத்துவப்பணிகளின் சிறப்புகளை காணக்கூடியதாக இருந்தது. இப்பணிகளோடு மேலதிகமாக தலைவரின் பாதுகாப்பு சார்ந்த பணிகளையும் நேரடியாகக் கண்காணித்து வந்த கடாபி அண்ணை விடுதலைப்பணிக்காக ஓய்வின்றி இயங்கிக் கொண்டிருந்தார். ஒரு பயிற்சிப் பணியாக இருந்தாலும் சரி அல்லது வேவுப் பணியாக இருந்தாலும் சரி, அல்லது தாக்குதல் பணியாக இருந்தாலும்சரி நேரமெடுத்து திட்டமிடலுக்காகவே கூடிய நேரத்தை ஒதுக்கி ஒவ்வொரு பணியையும் சரியாக நிறைவேற்றும் பாங்கு கடாபி அண்ணைக்கு உரியதே. பயிற்சித் திட்டமிடல் பற்றிக் குறிப்பிடவேண்டும் என்றால் ஒரு காலத்தில் குறிப்பிட்ட பயிற்சிக்கு மூன்று மாதங்கள் என திட்டமிடப்பட்டிருக்கும். ஆனால் எதிரியின் தாக்குதல் நடவடிக்கைகள் அதிகரிக்கும்போது இப்பயிற்சிக் காலத்தை சுருக்க வேண்டிவரும். அப்போதுகூட குறுகிய கால பயிற்சித் திட்டமிடல் ஒன்றை தயார் செய்துவிட்டே பயிற்சிகள் வழங்கப்படவேண்டும் என்பதில் கவனமாய் இருப்பார். அதே போல் தாக்குதல் நடவடிக்கை ஒன்றைப் பூர்த்தி செய்தாலும் அத்தாக்குதலின் வெற்றி தோல்வி என்பதைவிட அத்தாக்குதல் தொடர்பான விபரங்களை ஆவணப்படுத்துமாறே தாக்குதலணிப் பொறுப்பாளர்களிடம் கண்டிப்பாக கட்டளையிடுவார். அத்தாக்குதல் வெற்றியடைந்ததற்கான காரணங்கள் அல்லது தோல்வியடைந்ததற்கான காரணங்கள் எதிர்காலத்தில் எவ்வாறான விடயங்களை மேம்படுத்தலாம் என்பன போன்ற விடயங்களை உள்ளடக்கியதாகவே அவ் ஆவணங்கள் தயாரிக்கப்படும். அவ்வாறு தயாரிக்கப்படும் ஆவணங்களை தானே சரிபார்த்து போராளிகளுக்குப் புரியவைப்பார். அத்தோடு இவ்வாறு பெறப்படும் ஆவணங்கள் அனைத்தும் பயிற்சி ஆசிரியர்களுக்கு அனுப்பிவைக்கப்படும். அதற்கேற்ப திருத்தங்கள், மாற்றங்கள் பயிற்சிகளில் செய்யப்படும். இவ்வாறு இறுக்கமான கால கட்டங்களின் போதும் மரபுவழி இராணுவங்களுக்கு ஒப்பான திட்டமிடல்களையும், செயற்பாடுகளையும் பேணிவருவதில் மிகமிகக் கவனமெடுத்து செயல்ப்பட்டு வந்தவர்தான் கடாபி அண்ணை. கடாபி அண்ணையை பொறுத்தவரையில் தாக்குதல்களோடு சம்மந்தப்பட்ட தாக்குதலணிகளை மட்டுமன்றி பயிற்சிகள், விசாரணைகள், புலனாய்வு, ஆசிரியர்கள் போன்ற நிர்வாக ரீதியிலான அணிகளையும் நிர்வகிப்பது, முகாம்களை சீரமைப்பது, பராமரிப்பது போன்ற அத்தனை பணிகளையும் சிறப்பாக செய்யும் வித்தகராகத் திகழ்ந்தார். பன்முகப்படுத்தப்பட்ட பணிகளையாற்றிய கடாபி அண்ணை அவர்கள் பெண் போராளிகளின் வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகித்தவராவார். 027ஆரம்ப காலங்களில் பெண்போராளிகளுக்கு கனரக ஆயுதப்பயிற்சியை வழங்கியதுடன் சூட்டுப்பயிற்சி, சீறோயிங் கனரக ஆயுதங்களை கையாள்வது, ஆயுதங்களை பராமரிப்பது என எல்லாவற்றையும் ஆழமாக கற்பித்து பல கனரக ஆயுத பெண் ஆசிரியர்களை உருவாக்கியவரும் இவரே. அத்தோடு கல்வியறிவு இல்லாமல் எழுத வாசிக்க கஷ்டப்படும் போராளிகளுக்கு அறிவூட்டல்களைச் செய்வதோடு கல்வியில் ஆர்வத்தை தூண்டுவதற்காகச் சிறிய விடயங்களைக் கூட பாராட்டி அன்பளிப்புப் பொருட்களைக் கொடுத்து அவர்களை ஊக்குவித்ததோடு கல்வியறிவில்லாமல் யாருமே இருக்கக் கூடாதென்பதில் அதீத கவனமெடுப்பார். அனைவருடனும் சம நிலையில் பழகும் இவருக்கு தனிப்பட்ட நண்பர்கள் என்று யாருமே இருந்ததில்லை. அனைவருடைய கருத்திற்கும் மதிப்புக்கொடுக்கும் இவர் சிறியவர், பெரியவர் என்ற பேதம் பார்ப்பதில்லை. அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் இருக்கிறது என்பதை போராளிகளுக்கு புரியவைத்து, அனைவருடைய கருத்துக்களையும் பொறுமையாகக் கேட்டு, அவர்களுக்குரிய தீர்வுகளை உடனுக்குடன் வழங்குவார். இவருடைய தாக்குதல் நடவடிக்கைகளை பொறுத்தவரை சிறப்பு இராணுவ நடவடிக்கைகளில்தான் இவர் நேரடியாகப் பங்குபற்றினார். பல கரும்புலித்தாக்குதல்களுக்கு பயிற்சிகளை வழங்கியதோடு நின்றுவிடாது பல தாக்குதல்களையும் நெறிப்படுத்தி வெற்றியீட்டிய பெருமை இவரையே சாரும். தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் இவருக்கு வழங்கப்பட்டிருந்த விமான எதிர்ப்பு ஏவுகணையைக் கொண்டு 1995 ம் ஆண்டு எம் இனத்தை குண்டுபோட்டு கொன்றுகுவித்த இரு அவ்றோ விமானத்தை சுட்டு வீழ்த்தி தனித்துவமான பெரும் சாதனையை ஈட்டி தமிழீழ தேசியத்தலைவரின் பாராட்டைப் பெற்றார். 1997 ம் ஆண்டு முல்லைத்தீவு கடலில் உக்கிரமாக சண்டை நடந்துகொண்டிருந்த போது, எதிரியோ மிகப்பலத்தோடு சண்டையிட்டுக்கொண்டிருந்தான். எதிரியின் மிகவும் பலமான தாக்குதலாக உலங்குவானூர்தியால் தாக்கிக்கொண்டிருந்தான். தமிழீழ விடுதலைப் புலிகளின் படகு மூழ்க ப் போகும் சூழ்நிலையில் யாருமே எதிர்பாராத விதமாய் கடாபி அண்ணை அவர்கள் எதிரிக்கு மிகப்பலமாக இருந்த உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்தினார். களத்தில் நிலவரம் மாறியாது. அத்தனை வீரர்களும் எதுவித சேதமும் இல்லாமல் தளம் திரும்புகிறார்கள். தளம் திரும்பிய அந்த வீரர்கள் சாவின் விளிம்பிலிருந்து தம்மைக் காப்பாற்றிய கடாபி அண்ணையைப் பார்த்து கண்ணீர்மல்க நன்றி கூறினார்கள். இப்படித்தான் நீளும் நினைவுகளாக கடாபி அண்ணையின் சாதனைகள் தொடர்ந்தன. ஜெயசிக்குறு சமர் உக்கிரமடைந்து கொண்டிருந்தது. பல சாதனைகளோடும் பல இழப்புகளோடும் அச்சமர் தொடர்ந்து கொண்டிருக்கையில், விஞ்ஞான குளத்தில் எதிரியானவன் பெருமெடுப்பிலான இராணுவ நடவடிக்கையை செய்வதற்குத் திட்டமிட்டிருந்தான். முற்றுமுழுதாக விடுதலைப்புலிகளை சிதைப்பதற்கான ஏற்பாடு. இதை அறிந்துகொண்ட கடாபி அண்ணை அவர்கள் தனது ஆழுகையின் கீழ் இருந்த கரும்புலி அணியொன்றை எதிரியின் கொலைவலயத்திற்குள் அனுப்பி அத்தாக்குதலை முறியடிப்பதற்கான ஏற்பாட்டை செய்தார். அத்தாக்குதலைத் திட்டமிட்டு செயற்படுத்துவதற்காக வந்த அதிகாரிகள் கொண்ட உலங்குவானூர்தியை எதிரியின் பிரதேசத்திற்குள் வைத்து சுட்டுவீழ்த்தி அத்தாக்குதலை முறியடித்து, அங்கிருந்து தப்பி வருகிறார்கள் கரும்புலி வீரர்கள். இத்தாக்குதலை திட்டமிட்டு நேரடியாக நெறிப்படுத்தியவரும் எம் கடாபி அண்ணை அவர்களே. அது போலவே அளம்பில் கடற்பரப்பில் 1999 ம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வந்த டோறாக்களை ராங்கைப் (பிரங்கி) பயன்படுத்தி அழித்தொழித்தவரும் கடாபி அண்ணையே. குறிபார்த்துச் சுடும் தனித்திறமை கொண்ட கடாபி அண்ணை அவர்கள் எப்பணி ஆற்றினாலும் அதில் ஓர் தனித்துவம் இருக்கும். ஒரு தடைவை தமிழீழத் தேசியத்தலைவருக்கு புதிய கனரக ஆயுதமொன்று கிடைக்கப் பெற்றது. அதை இயக்கம் முறைக்குரிய ஆவணம் எதுவும் வரவில்லை. அந்த ஆயுதத்தை எப்படி இயக்குவது, எப்படி கழட்டிப் பூட்டுவது என்பதை கண்டுபிடிக்குமாறு தேசியத் தலைவர் அவர்கள் சில பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்தார். பல ஆங்கிலப் புத்தகங்களை புரட்டியும், தாமாக சில நாட்கள் முயன்றும் முடியாமற் போகவே தேசியத்தலைவர் அவர்களிடம் சொன்னார்கள் “கண்டுபிடிக்க முடியவில்லை” என்று. அவர்களைப் பார்த்து புன்முறுவல் பூத்த தேசியத்தலைவர் அவர்கள் வேறோர் பணிக்காக வேறு இடத்தில் நின்ற கடாபி அண்ணையிடம் அந்த ஆயுதத்தை கையளித்தபோது, அந்த ஆயுதத்தை வாங்கிய கடாபி அண்ணை அவ் ஆயுதத்தை இருபக்கமும் திருப்பிப் பார்த்துவிட்டு குறிப்பிட்ட சில நிமிடங்களுக்குள் பல பாகங்களாகப் பிரித்து வைத்துவிட்டு, இயக்கும் முறையை புரிய வைத்துவிட்டு, தேசியத் தலைவரை பார்த்தபோது தேசியத்தலைவர் அவர்கள் கடாபி அண்ணையின் தோளில்தட்டி “இதுதான் கடாபி” என அனைவரையும் பார்த்துக் கூற, அனைவரும் இணைந்து பாராட்டியபோது எதுவும் நடவாததுபோல் சாதாரணமாகவே இருந்தார் கடாபி அண்ணை அவர்கள். பற்பல ஆற்றல்களைக்கொண்ட இவரிடம் தேசியத்தலைவர் அவர்கள் சொல்கிறார் “கடாபி கடல் இண்டைக்கு அமைதியாக இருக்கா? என்று சூசையை தொடர்பெடுத்து கேளு. கடல் அமைதியாக இருந்தால் நாங்கள் கடற்பயிற்சிக்கு போகலாம்” சொல்லி சில கணங்கள் கூட ஆகவில்லை வானத்தில் உள்ள வெள்ளியை பார்த்துவிட்டு “அண்ணை கடல் இண்டைக்கு நல்ல அமைதியா இருக்கு நாங்கள் கடற்பயிற்சிக்கு போகலாம்” என்றார். வானத்திலுள்ள நடசத்திரங்களை கணித்தே கடலின் நிலவரத்தை சொல்லுமளவிற்கு திறமையுள்ளவர்தான் கடாபி அண்ணை . தமிழீழ தேசியத்தலைவர் அவர்களோடு கூடவே இருந்து பல விடயங்களைக் கற்று அறிந்து செயலாற்றிய வித்தகர்தான் இவர். தனது குடும்பத்தில் அதிக பற்றுக்கொண்டவர் . தனது மனைவி பிள்ளைகளோடு கழிக்கும் நேரம் மிகச் சொற்பமே. என்றாலும் கிடைக்கும் நேரங்களில் தன் பிள்ளைகளுக்கு நல்ல தந்தையாகவும் செயற்பட்டார். நற்சிந்தனைகளையும் தேசப்பற்றையும் ஊட்டியே வளர்த்தார். சின்னச் சின்ன விடயங்களில்கூட அதிக அக்கறை எடுத்து செயல்ப்படும் கடாபி அண்ணை அவர்கள் படையத் தொடக்க பயிற்சிக் கல்லூரிகளில் சிறப்புத் தளபதியாக இருந்த காலங்களில் புதிய போராளிகளை உள்வாங்கி அவர்களுக்கான திட்டமிடல்களை வகுத்து மிகமிக அற்புதமாக புதிய பயிற்சியாளர்களை நல்ல போராளிகளாக்கினார். கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் நான்கு அல்லது ஐந்து பயிற்சி முகாம்களில் பயிற்சிகள் வழங்கப்படும். புதிய போராளிகளுக்குரிய கட்டமைப்புகளை சீரமைத்து, பயிற்சிகளை வழங்கி, நல்ல போராளிகலாக ஆக்குவது மிகமிக கடினமான பணி. ஒவ்வொரு பிரதேசங்களில், இடங்களில் இருந்து வருபவர்கள் வேறுபட்ட குணவியல்புகளோடு இருப்பார்கள். அவர்கள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவருவது அவ்வளவு சுலபமான காரியமல்ல. கடாபி அண்ணை அவர்கள் சரியாக திட்டமிடல்களை வகுத்து பயிற்சி ஆசிரியர்களை அதற்குரிய வகையில் நெறிப்படுத்தி மிகமிக எளிதாக அப்பணியை ஆற்றினார். 2006 ம் ஆண்டிலிருந்து எதிரியின் தொடர் விமானத்தாக்குதலில் அடிக்கடி தமிழீழ விடுதலைப்புலிகளின் இலக்குகள் தாக்கப்பட்டுக்கொண்டிருந்தது. நாளுக்குநாள் போராளிகள், மக்கள் என தினமும் பலர் காயப்பட்டும் இறந்துகொண்டும் இருந்தனர். அந்தக் காலங்களில் பலதடைவைகள் படையத் தொடக்க பயிற்சிக் கல்லூரிகளை இலக்குவைத்து விமானத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஒரு தடைவை கூட ஒரு போராளியோ அல்லது பயிற்சியாளரோ காயப்படவுமில்லை வீரச்சாவு அடையவுமில்லை. அவ்வளவு அழகாக திட்டமிட்டு எந்தச் சந்தர்ப்பத்திலும் போராளிகள் தம்மை பாதுகாத்துக் கொள்ளக் கூடிய வகையில் அனைத்து இடங்களிலும் நிலைகள் அமைக்கப்பட்டிருந்தது. பல தடைவைகள் நடந்த விமானத் தாக்குதலின்போதும் அத்தனை புதிய போராளிகளையும் காப்பாற்றியது கடாபி அண்ணையின் மதிநுட்பமான திட்டமிடலுடன் கூடிய செயல் மட்டுமே. தலைவர் அவர்கள் பல தடைவைகள் பொறுப்பாளர்களுக்கு சொல்லியிருந்தார் “கடாபியால் மட்டும் எந்த இழப்புமின்றி போராளிகளை காப்பாற்ற முடியுதென்றால் ஏன் உங்களால் முடியுதில்லை” என்று. புதிய பயிற்சியாளர்களிடமிருந்து கூட கருத்துக்களை பெறவேண்டும் என்பதில் அக்கறையெடுப்பார். வாரத்தில் ஒருதடைவை தானே சென்று பயிற்சியாளர்களுடன் கதைப்பார். அவர்கள் தாமாக கருத்துக்களை முன்வைக்க மாட்டார்கள் என்பதால் அனைவரிடமும் காகிதமும் பேனாவும் கொடுத்து “உங்கள் பெயர்களை எழுதாமல் சொல்ல விரும்பும் கருத்துக்களை எழுதித்தாருங்கள். நான் ஏதாவது பிழைவிட்டிருந்தால்கூட நீங்கள் எழுதலாம். நீங்கள் எழுதும் விடயம் சரியாக இருந்தால் நிச்சயமாக அதற்கான மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்பார் . அதேபோலவே பயிற்சி ஆசிரியர்களிடம் புதிய போராளிகளை வழிநடத்துவது, அறிவுரைகளை பலதடைவைகள் வலியுறுத்துவார். பயிற்சிகள் வழங்குவதோடு போராளிகள் சரியான முறையில் பராமரிக்கப்பட வேண்டும் என்பதில் மிக மிக கவனமாக இருப்பார். அத்தோடு முன்மாதிரிகளாக ஆசிரியர்கள் திகழவேண்டும் என்பதில் கண்டிப்பாக இருப்பார். எமது போராட்ட வரலாறுகள், ஒவ்வொரு நிகழ்வின் பதிவுகளும் மிகமிக முக்கியமென கருதுவார். எந்த இக்கட்டான சூழலிலும் அனைத்து நிகழ்வுகளும் உண்மையாக பதிவுசெய்து ஆவணப்படுத்த வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை காட்டுவார். அப்பணியை முக்கிய பணியாக கருதி அதற்காக போராளிகளைத் தெரிவு செய்து தானே அப்பணியை நேரடியாக நெறிப்படுத்துவார். இறுதிச்சமர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த வேளைகளில் கடாபி அண்ணை அவர்களில் சண்டைக் களங்களில் பணியாற்றிகொண்டிருந்தார். அந்த நேரத்திலும்கூட அவணங்களை பதிவு செய்து பாதுகாக்கும் போராளியைத் தொடர்புகொண்டு அப்பணியின் முக்கியத்துவத்தை விளங்கப்படுத்தி எச்சந்தர்ப்பத்திலும் இப்பணியை இடைவிடாது தொடருமாறு வலியுறுத்துவார். இவ்வாறு பலவேறு விடுதலைப்பணிகளை முன்னெடுத்துக் கொண்டிருந்த கடாபி அண்ணை அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆனந்தபுரப்பகுதியில் பெருமெடுப்பில் நடந்த யுத்தத்தில் ஒரு பகுதி தாக்குதல் தளபதியாக களமிறங்கினார். தடைசெய்யப்பட அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்தி எதிரியானவன் புலிகளை அழிப்பதில் முனைகிறான். வாழ்வா? சாவா? என்ற பெரும் யுத்தக்கத்தில் ஒவ்வொரு போராளிகளும் உறுதியோடு போரிட்டு வீரச்சாவு அடைகிறார்கள். எதிரியின் துரோகத்தனத்திற்கு பலியாகவேண்டிய இக்கட்டான சூழல் அது. கடாபி அண்ணை அவர்கள் தன் அணிக்கு கட்டளை வழங்கி போரிட்டுக் கொண்டிருந்தவேளை எதிரியின் தாக்குதலில் பலத்த காயமடைகிறார். போராளிகள் பலர் அவரைக் காப்பாற்ற முனைகின்றனர். முடியவில்லை…… தமிழீழத் தேசியத்தலைவரையும், தமிழீழத்தையும் தன் உயிர் மூச்சாகக்கொண்ட கடாபி அண்ணை அவர்கள்…….. “அண்ணையை காப்பாற்றுங்கோ அண்ணைக்கு உறுதுணையாய் இருங்கோ” என அருகில் இருந்த போராளிகளிடம் முணுமுணுத்தபடி அன்னை மண்ணை அரவணைத்தார். அப்பெரும் யுத்தகளத்தில் தீரமுடன் போராடி வீரச்சாவடைந்த பிரிகேடியர் ஆதவன் அல்லது கடாபி என அழைக்கப்படும் சாதனை வீரனை நினைவு கூருவதோடு அக்களத்தில் வீரமுடன் போரிட்டு வீரச்சாவடைந்த அனைத்து போராளிகளையும் நினைவு கூருகிறோம். “உங்கள் தாகம் தீரும்வரை ஓயாது எம் பயணம்” ஆக்கம் சி.கலைவிழி https://www.thaarakam.com/news/60295
  5. கேணல் நாகேஸ் Last updated Apr 4, 2020 மட்டக்களப்பு புல்லுமலையை பிறப்பிடமாகக் கொண்ட கேணல் நாகேஸ் 1985-86 காலப் பகுதியில் தன்னை விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைத்துக் கொண்டார். ஆரம்பகாலத்தில் லெப்.கேணல் றீகன் அவர்களின் அணியில் தனது சமர்க்களப் பணியை ஆரம்பித்தார். காலங்களில் சிறப்பாக செயல்ப்பட்ட அவர் இந்திய ஆக்கிரமிப்பு படைகளுக்கெதிரான யுத்தம் ஆரம்பமானபோது புல்லுமலைப் பகுதி விடுதலைப் புலிகளின் முகாமின் பொறுப்பாளராக நியமிக்கப் பட்டார். இந்தக் காலகட்டத்தில் அவரின் தலைமையில் இந்திய,சிறிலங்கா படையினருக்கெதிரான பல வெற்றிகரத் தாக்குதல்கள் நடத்தப் பட்டன. இத்தாக்குதல் நடவடிக்கைகள் பலவற்றில் ஆயுதங்களும் கைப்பற்றப் பட்டன. கண்ணிவெடித் தாக்குதல்களில் அவருக்கென்று தனியிடமொன்று இருந்தது.நாகேசால் பல வெற்றிகர கண்ணிவெடித் தாக்குதல்கள் நடத்தப் பட்டிருந்தன.ஆயினும் இந்தியப் படைகளின் (“தீப்பெட்டி ஜீப்”) மிகச் சிறிய ஜீப் வண்டிமீது தாக்குதல் நடத்துவது பெருத்த சவாலாக இருந்தது. அதன் பருமன் வேகம் என்பன வெற்றிகரமான கண்ணிவெடித் தாக்குதல் ஒன்றை கேள்விக் குறியக்கிநின்றது. ஆனால் மண்டூர் என்ற இடத்தில் வைத்து நாகேஸ் மேற்கொண்ட தாக்குதலில் அந்த ஜீப் வண்டி சுக்குநூறானது. இந்திய படையினர் வெளியேறியதைத் தொடர்ந்து துரோகிகளுடனான சண்டைகளில் நாகேசின் அணி பல முனைகளிலும் பங்குகொண்டு அவர்களைச் சிதறடித்தது. பின்னர் நடைபெற்ற சிறிலங்கா படைகளுடனான பல்வேறு சண்டைக் காலங்களில் நாகேஸ் தலைமையில் அணிகள் சமரிட்டன. காலத்தின் தேவையை உணர்ந்து தமிழ் ஈழ எல்லைகள் கடந்தும் போரிடவேண்டிய கடமை நாகேசிக்கு வழங்கப் பட்டது. நகேசின் அந்த சிறிய அணி மலையகம் வரை தனது நடவடிக்கைகளை விரிவுபடுத்தியிருந்தது. மலையகத்தில் கூட தாக்குதல் நடத்தி ஆயுதங்கள் கைப்பற்றிய பெருமை கேணல் நாகேஸ் மற்றும் அவருக்கு துணைநின்ற மேஜர் விஸ்ணு (சின்னப் புல்லுமலை) ஆகியோருக்கே உரித்தாகும். மலையகத்தில் மிகச் சிறிய இந்த அணிக்கெதிராக சிறிலங்கா படைத்தரப்பு ஆயிரக்கணக்கில் படையினரை ஈடுபடுத்தியிருந்தது. பூநகரி படைத்தள அழிப்பு நடவடிக்கைகளுக்கென மட்டக்களப்பு அம்பாறைப் பிராந்தியத்தில் இருந்து போராளிகள் புறப்பட்ட போது நகேசின் அணியும் அதில் இடம்பெற்றது. ஜெயந்தன் படையணி உருவாக்கப் பட்டபோது தாக்குதல் தளபதிகளில் ஒருவராக நாகேஸ் நியமிக்கப் பட்டார். நாகதேவன் துறைப் பகுதிக்கு தளபதி அன்பு தலைமையில் சென்ற அணியில் ஜெயந்த படையணியின் ஒரு பிரிவு நாகேஸ் தலைமையில் களமிறங்கியது. அந்தமுனையிலும் ஜெயந்தன் படையணி தனது போர்க்குனத்தக் காட்டியது. பின்னர் பலாலி முனரங்க பகுதிகளில் பாதுகாப்புப் பணிகளில் நாகேஸ் தலைமையிலான அணிசெயட்பட்டது. மீண்டும் தென்தமிழீழம் சென்ற அணிகள் பல்வேறு தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டன. பின்னர் ஜெயசிக்குறு எதிர் சமருக்காக படியங்கள் கிழக்கில் இருந்து வன்னி வந்தபோது நாகேசும் ஜெயந்தன் படையணித் தளபதிகளுள் ஒருவராக களம் வந்தார். ஜெயசிக்குறு களமுனைகளில் பகுதிப் பொறுப்பாளராக கடமையாற்றிய கேணல் நாகேஸ் ஓயாத அலைகள் நடவடிக்கைகளிலும் அணித் தலைமையேற்று வழிநடத்தினார். விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணி யில் நாகேஸ் செயல் பட்டுக் கொண்டிருந்தாலும் மக்கள் நலச் செயற்பாடுகளிலும் அவர் கவனம் செலுத்தத் தவறவில்லை. புல்லுமைப் பிரதேசம் எங்கும் மக்களால் நேசிக்கப் பட்ட ஒரு போராளியாக அவர்.விளங்கினார். இவற்றிக்கு மேலாக மட்டக்களப்பின் எல்லைகளைக் காத்து நின்ற ஒரு வீராகவும் அவர் கொள்ளப் படுகிறார். இப்பகுதி சிங்களப் படையினருக்கும் சிங்களக் காடையருக்கும் நாகேஸ் என்றபெயர் எப்போதும் அச்சமூட்டும் ஒன்றாகவே இருந்துவந்தது. இவ்வாறு இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக தன் உடலெங்கும் விழுப் புண் தாங்கி தமிழீழத்தின் களங்கள் யாவும் ஏன் அதற்கு அப்பாலும் தொடர்ந்து களமாடிய மாவீரன் கேணல் நாகேஸ். அவனுக்கும் மனைவி குழந்தைகள் இருந்தனர் ஆனாலும் அந்த மாவீரன் அவற்றிற்கு மேலாக இந்த மண்ணை மக்களை நேசித்தான். வடக்கென்ன கிழக்கென்ன தமிழீழமே எமது தாயகம் என்று இறுதிவரை களமாடிய அந்த மாவீரன் ஆனந்த புரத்தில் தன்னை ஆகுதியாக்கினான். https://www.thaarakam.com/news/121084
  6. வீரத்தின் விளைநிலம் – எங்கள் இனத்தின் அடையாளம் கேணல் தமிழ்ச்செல்வி Last updated Apr 4, 2020 கேணல் தமிழ்ச்செல்வி, நாகேசுவரன் கமலேசுவரி முல்லைத்தீவு 16.12.1971 – 04.04.2009 “அம்மா….நீங்க செய்தது கொஞ்சம் கூட சரியில்ல….எனக்குச் சுத்தமாப் பிடிக்கேல்லையம்மா… எப்படியம்மா உங்களுக்கு மனசுவந்திச்சு…. அதுவும் உங்கட சொந்த தங்கச்சிக்கு ஒரு பச்சை மண் குழந்தை இருந்திருக்கு நீங்க அதப்பற்றி ஒரு நாள் கூட சொல்லவே இல்லையம்மா… ஏனம்மா… உங்களுக்கு உங்கட தங்கச்சி மேல கொஞ்சம் கூட பாசம் இல்லையாம்மா…, தமிழ்ச்செல்வி வீரச்சாவு அடைந்த பிறகு அவான்ர குழந்தையை நீங்களும் கைவிட்டுட்டுவந்திட்டீங்களேயம்மா… அந்தப்பிள்ள என்னம்மா செய்திருக்கும்… ஏனம்மா நீங்க இவ்வளவு நாளும் அந்தப்பிள்ளையைத் தேடேல்ல… ஆனா நான் மட்டும் உங்கள மாதிரி இருக்க மாட்டன். என்ர அண்ணாச்சிக்கு ஏதுமெண்டா என்ர உயிரைக் கொடுத்தாவது அவனக் காப்பாற்றியிருப்பன்… ஆனா…., நீங்க அப்படியில்லையே..அம்மா… உங்கட தங்கச்சியின்ர கைக்குழந்தையைக்கூட விட்டிட்டு வந்திட்டீங்களே… எனக்கு கவலையா இருக்கம்மா…. உங்களில கோபம் கோபமா வருகுதம்மா….”அவள் படபடத்தாள். அன்று தான் இணையத்தளத்தில் கேணல் தமிழ்ச்செல்விக்காக வெளிவந்த பாடல் வரிகளை அவள் கேட்டிருந்தாள். அதில்தான்அவருக்கொரு குழந்தை இருந்தது என்ற உண்மை அவளுக்குத் தெரிய வந்தது. அதிலிருந்து அம்மாவை அவள் அரிக்கத்தொடங்கி விட்டாள். ”எப்பயம்மா… நாங்க தமிழ்ச்செல்வி அக்கான்ர பிள்ளையைஎப்படித் தேடப்போறம்… அந்தப்பிள்ள இப்ப நல்லா வளர்ந்திருக்குமே அம்மா… நாங்க எங்க போய் எப்படித்தேடப் போறம்….? அவள் அம்மாவை விடுவதாக இல்லை. அம்மாவால் பதில் சொல்ல முடியவில்லை. ”செல்லம் அம்மாவும் தேடிக்கொண்டு தான் இருக்கிறன் கண்ணா… கண்டிப்பா ஒரு நாள் அந்தப் பிள்ளை எங்களுக்கு கிடைப்பா… நீ கவலைப்படாத செல்லம்” அம்மா மகளுக்கு ஆறுதல் சொன்னாள். ஆனால் அந்த ஆறுதலில் எல்லாம் அமைதியாகிப் போகும் ரகம் அவளல்ல… அவள் பிடிவாதக்காரி, வீட்டின் கடைக்குட்டி, கடைக்குட்டி என்பதை விட அவள் தான் அந்த வீட்டின் குட்டித்தேவதை, இளவரசி, மகாராணி, எல்லாமே, அவளுக்கொரு அண்ணா இருந்தான் அவனுக்கும் அவளுக்குமான வயது இடைவெளி கொஞ்சம்அதிகமாகவே இருந்தது. இதனாலோ என்னவோ அவன் தங்கச்சி மீது உயிரையே வைத்திருந்தான். தங்கச்சிக்காக எல்லாவற்றையுமே விட்டுக்கொடுத்துவிடுவான். அவளோடு போட்டி போடுவதற்கோ சண்டையிடுவதற்கோ வீட்டில் யாரும் இல்லை. எல்லோருமே அவளிடம்சரணாகதி அடைபவர்களாகத்தான் இருந்தார்கள். அம்மா, அப்பா, அண்ணா மூவருக்குமே அவள்தான் உலகமாகத் தெரிந்தாள். அதனாலோ என்னவோ பயம் என்பது அவள் அகராதியில் இல்லை. வீட்டில் யார் தவறு செய்தாலும் நேருக்கு நேர்நின்றுநியாயம் கேட்பாள். அப்படித்தான் இன்று அம்மா மாட்டிக்கொண்டார்.”என்னதான் நீங்க ஆயிரம் காரணம் சொன்னாலும் உங்கள என்னாலமன்னிக்கவே முடியாதம்மா… நீங்க செய்தது தப்பு, தப்புத்தான்… அவளது நீதிமன்றில் தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. முட்டிவெடித்த கண்ணீர்த் துளிகளை அவள் அறியாது மெல்லத் தட்டி விட்டார் அம்மா. அவள் சிறுமியாக இருந்தாலும் நல்ல புத்திக்கூர்மைமிக்கவள். எல்லாவற்றையும் துருவித்துருவி அறியும் ஆர்வம் உடையவள். ஏதாவது ஒன்றைப்பற்றிய தேடல் அவளுக்குள் வந்து விட்டால், அதைத்தேடி முழுமையாக அறிந்து கொள்ளாமல் அவள் விடமாட்டாள். பள்ளியிலும் அவள் நல்ல கெட்டிக்காரி. சிறு வயதில் இருந்தே நடனக்கலையில் அவளது ஆர்வம் அதிகமாகவேஇருந்தது. அதனால் நடனம் பயிலத்தொடங்கியிருந்தாள். மகளின் ஒவ்வொரு அசைவிலும் செயலிலும் அம்மா தன்தங்கையைக் கண்டு கொண்டிருந்தாள். மகளிடம் இருக்கும் பிடிவாதம், கோபம் வரும் போது பல்லை நெறுமிக்கொண்டு பேசுவது, எந்தளவுக்கு கோபமும் பிடிவாதமும் அவளுக்குள் இருக்கிறதோ அதற்கு மேலாய் அவள் காட்டும் அன்பு என அவளது குண இயல்புகள் ஒவ்வொன்றும் தமிழ்ச்செல்வியை நேரடியாகப்பார்ப்பது போன்றே அம்மாவுக்குத் தோன்றும்.” அது சரியம்மா… உங்கட தங்கச்சி, அதுதான் தமிழ்ச்செல்வி அக்கா ஏனம்மா இயக்கத்துக்குப்போனவா…..” ”போராடத்தான்….” அப்படியெண்டா….?” அவளின்ர வயதுக்கு எப்படி விளக்கம் தருவது… எப்படிச் சொன்னால் அவளுக்குப் புரியும்… அம்மா ஒரு கணம் தயங்கினார்… ”இதுக்குக் கூட பதில் தெரியாதா… ஏய் அம்மா நோண்டி…அம்மா நோண்டி…” அவள் கைகளைத்தட்டித் துள்ளினாள். “நான் சொல்லட்டா அம்மா…. எங்கட நிலங்களப் பிடிக்கவாற எதிரிகள விரட்டியடித்து…, எங்கட தமிழ் மக்கள மகிழ்ச்சியா தங்கடதங்கட வீட்டில, தங்கட தங்கட ஊரில நின்மதியா வாழ வைக்கத்தான் போராடப் போனவா… சரியா அம்மா…” அம்மாவின்கன்னத்தைச் செல்லமாக வருடினாள் அம்மாவுக்கு ஆச்சரியம்…..! இந்த வயதில் அதுவும் உரிமைக்காகத் தூக்கிய ஆயுதங்கள் மௌனித்துப்போன சூழலில் வளர்ந்துவரும் இந்தக் குழந்தை எவ்வளவு தெளிவாக இருக்கிறது. அம்மா வியந்து போனாள். தன் வளர்ப்பில் தவறில்லை, எங்கு புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தன் தேசத்தின் நினைவுகளோடும், சொந்தமண்ணின் வாசனையோடும், நியாயமான விடுதலைப்போர் பற்றிய தெளிவோடும் மகள் வளர்க்கப்பட்டிருக்கிறாள்,அதுவே அம்மாவுக்குப் பெரும் ஆத்ம திருப்தியாக இருந்தது. தன் மகளை நன்றாக வளர்த்து, நல்ல உயர் கல்வி கற்க வைத்து, நல்ல பட்டம் பதவியில் இருத்தி, அவளுக்கென்று வளமானஎதிர்காலமொன்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதே அம்மாவின் விருப்பம், கனவு எல்லாமே…அந்த இலட்சியம்நிறைவேறும் வரை கண்ணுக்குள் பொத்தி வைத்து அவளைப் பாதுகாக்கும் பெரும் கடமையில இருந்து அம்மாஓயப்போவதில்லை. கேணல் தமிழ்ச்செல்வி, எத்தனையோ ஈகவரலாறுகளையும் தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் தாங்கி நிற்கும் எமதுவிடுதலைப்போராட்ட வரலாற்றில் ஒரு மைல்கல். இறுதிக்கட்டப்போர் மிக இறுக்கமடைந்திருந்த காலப்பகுதி, களமுனைகளோ நாளுக்கு நாள் விரிந்து கொண்டே சென்றது. கூடநின்ற தோழிகள், அணித்தலைவர்கள் என போராளிகள் தங்கள் உயிர்களைக்கொடுத்துப் போராடிக்கொடிருந்தனர். தமிழ்ச்செல்வியின் கையிலோ குழந்தை, அதனால் பின்னரங்கில் இருந்து கொண்டு போராளிகளைக் களமுனைக்குத்தயார்படுத்துவதும் அவா்களுக்குத் தேவையான ஆயுத தளபாடங்களைச் சீர்செய்வதும் என களப்பணியில்ஈடுபட்டுக்கொண்டிருந்தாள். ஆனால் அவள் தனது போராட்டகால வாழ்க்கையில் பெரும்பகுதியை களமுனையிலேயே கழித்தவள். அதிலும் கனரக ஆயுதங்களோடும், அணிகளை வழிப்படுத்தும் கொம்பனித்தலைவியாகவும் இருந்து சண்டைகளைநேருக்கு நேர் எதிர்கொண்ட அவளால், இப்போது களமுனைக்கு அணித்தலைவர்கள் தேவைப்படும் சூழ்நிலையில் பின்னரங்கில்நிற்பது என்பது முடியாத காரியம். அவளது மனச்சாட்சி என்ற தராசில் ஒரு பக்கம் அவளது குழந்தை, மறுபக்கம் அவளது கடமை. இரண்டையும் சீர்தூக்கிப்பார்த்தாள், இறுதியில் அவளது கடமை உணர்வே வென்றது. கணவனிடம் பேசி முடிவெடுத்தாள், அவளது குழந்தையை சகோதரியிடம் ஒப்படைத்து விட்டு களமுனைக்கு விரைந்தாள். மாலதி படையணியின் சிறப்புத் தளபதி பிரிகேடியர் விதுஷாக்கா குழந்தைகளுடன் இருக்கும் போராளித் தாய்மாரைக்களமுனைக்கு அனுப்புவதை ஒரு போதும் விரும்புவதில்லை. அந்தத் தாய்மாருக்கு ஏதாவது நடந்தால் பிள்ளைகளின் எதிர்காலம்கேள்விக்குறியாகிவிடும் என்பது அவரது நிலைப்பாடாக இருந்தது. ஆனாலும் அவள் பிடிவாதமாக இருந்து களமுனையிலே தன் பணியைத் தொடர்ந்தாள். இறுதிக்காலப் போரரங்கு வித்தியாசமாகஇருந்தது. எதிரி எந்தப்பக்கத்தால் நகர்கிறான், எந்தப் பக்கத்தால் உடைப்பை ஏற்படுத்துவான் என எதிர்பார்க்க முடியாததாகக்களம் அமைந்திருந்தது. ஏனெனில் மக்களின் வாழ்விடங்கள் மிகக் குறுகிவிட்டிருந்தன. எந்தப்பகுதியில் மக்கள் செறிவாகவாழ்கிறார்களோ அந்தப்பகுதிகளே எதிரியின் இலக்குகளாக இருந்தன. அப்படித்தான் ஒரு முறை தேவிபுரம் பகுதியில் விதுஷாக்காவோடு அவள் நின்றிருந்தாள். அவர்கள் நின்றது சிறியதொருவெட்டைப்பிரதேசம். முன்னால் அடர்ந்த காடு. வெட்டையைக்கடந்து சற்று முன்னதாய் இருந்த மரமொன்றில் ஏறிசண்டைக்கான கட்டளை மையத்தைத் தயார் செய்வதற்காக தொலைத்தொடர்பு அன்ரனாவைக் கட்ட அவள் முயற்சி செய்துசெய்துகொண்டிருந்தாள். சில நொடிகள் தான், அவர்கள் நின்றிருந்த இடம் எறிகணை மழையில் நனைந்தது. தலைநிமிர்த்தி என்ன நடக்கிறது என்பதை அறிய முடியாத சூழல், தமிழ்ச்செல்வி மரத்திலிருந்து எப்படிக்குதித்தாள், எப்படித்தனக்கான பாதுகாப்பைத்தேடினாள் என்பது தெரியவில்லை. அவளுக்குப்பக்கத்தில் சிறிய பாதுகாப்பகழிக்குள் இருபோராளிகள் வீரச்சாவை அடைந்து விட்டனர். எறிகணைத்தாக்குதல் சற்று ஓய்ந்துவிட்டதால் துப்பாக்கி ரவைகள் தாறுமாறாக பறந்தன. அடுத்து அந்த இடத்தில் எதிரியின்நகர்வு ஆரம்பித்து விட்டது. எதிரி மிக நெருங்கி விட்டிருந்தான். அந்த இடத்தில் இரு போராளிகளின் வித்துடல் கிடந்தது. அதைஅப்படியே விட்டு விட்டு வர அவள் தயாராக இல்லை. எதிரி மிக நெருங்கி விட்ட சூழலிலும் விதுஷாக்காவை பாதுகாத்து பத்திரமாக பின்னகர்த்தி விடுவதில் பிடிவாதமாக இருந்துஅவரை அனுப்பி விட்டு அந்த இடத்தில் நின்று சண்டையிட்டு அந்த இரு போராளிகளின் வித்துடலையும் தமிழ்ச்செல்வி துாக்கிவந்திருந்தாள். அதுதான் தமிழ்ச்செல்விக்கே உரிய பண்பாகும். விடுதலைப்போராட்ட வரலாற்றில் இறுதிப் பெரும் முற்றுகைச்சமராக அமைந்த ஆனந்தபுரம் போரரங்கு போராளிகளின்ஓர்மத்துக்கும், விடாமுயற்சிக்கும் பெரும் எடுத்துக்காட்டாக அமைந்திருந்தது. இந்தக்களத்தில் தேசியத்லைவரே நேரடியாகச் களமிறங்கி இருந்ததையும் யாரும் மறந்து விட முடியாது. பெரும் வேகத்தோடுவந்த எதிரி அசைக்க முடியாது திண்டாடிய பெரும் கோட்டையாக ஆனந்தபுரம் இருந்தது. நாட்கள் நகரநகர எதிரியின் முழுப்படை வலுவும் ஆனந்தபுரத்திலே இருந்தது. அதனால் போர் அரங்கு நாளுக்கு நாள்இறுகிக்கொண்டே போனது. அதனால் தலைவரை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பதே முற்றுகைக்குவெளியேஇருந்த தளபதிகள் போராளிகளினதும், ஒருமித்த வேண்டுதலாக இருந்தது. தவிர்க்க முடியாத சூழலில் தலைவர்முற்றுகைக்குள் இருந்து வெளியில் வர, அன்றைய தினமே ஆனந்தபுர முற்றுகைக்குள் சென்ற அணியில் தமிழ்ச்செல்வியும்இருந்தாள். அவள் அந்த முற்றுகைச் சண்டைக்குள் புறப்படுவதற்கு முன்னதாக தனது கணவனிடம் சென்று விடைபெறும் போது, அவர் தனது துப்பாக்கியை அவளிடம் கொடுத்து உன்னருகில், உனக்குத்துணையாக எப்பவும் நானிருப்பன் வென்று வா! என்றுவிடைகொடுத்து அனுப்பியிருந்தார் அப்போது இருவருக்கும் தெரியாது அது தான் தமது இறுதிச் சந்திப்பென்று. ஆனந்தபுரம் எதிரியின் அதியுயர் தாக்குதல் வலுவின் உச்சமாக மாறியிருந்தது. ஆட்லறி எறிகணைகள், மோட்டார் பீரங்கிகள், கனரக ஆயுதங்கள், சூட்டு வலு வழங்க, வான் படை குண்டு மழைபொழிய, இதற்கு இடையில் நின்று பசி மறந்து, துாக்கம்மறந்து, விழுப்புண்களின் வலிமறந்து, கூட நின்று களமாடி வீழ்ந்த வீரர்களின் இழப்புகளின் துயர் கடந்து, வீரர்கள் விழ விழதங்களின் முழுப்பலத்தையும் மனவைராக்கியத்தையும் பயன்படுத்தி போராளிகள் போராடிக்கொண்டிருந்தனர். அந்தக்களத்தில் தமிழ்ச்செல்வியும் கையில் விழுப்புண் தாங்கியிருந்தாள். இனி அந்த முற்றுகையைத்தக்க வைத்துக்கொள்ளமுடியாத சூழல் உருவாகிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் அந்த முற்றுகையை உடைத்துக்கொண்டு எப்படியாவது வெளியில் வரும்படி அவர்களுக்குகட்டளையிடப்பட்டிருந்தது. 04.04.2009 அதிகாலை பெரும் உடைப்புச்சமர் ஒன்றை களத்தில் நின்ற தளபதிகள் போராளிகள் மேற்கொண்டிருந்த போது, அந்தசமர் பெரும் வெற்றியைத்தரவில்லை. நீண்ட விடுதலைப் போராட்டத்தின் பெரும் தூண்களாக இருந்த பிரிகேடியர் விதுஷா, பிரிகேடியர் துர்க்கா, உட்பட பல தளபதிகள்போராளிகளை இழந்த போது தமிழ்ச்செல்வி மிகவும் மனம் தளர்ந்திருந்தாள். கூட நின்ற தோழியிடம் ”இந்த முற்றுகைக்குள் இருந்து அக்காவைய எப்படியாவது பாதுகாத்துக்கூட்டிச்செல்ல வேண்டும் என்றுநினைச்சன் என்னால அது முடியேல்லே… கடைசியா என்ர பிள்ளைக்கு நல்ல அம்மாவாகவும் இருக்க முடியல்லே…” என்ரபிள்ளை என்று அவள் சொன்ன அந்த நொடி, அவளது துடிப்பும் தவிப்பும் அவளது உணர்வில் தெரிந்தது. ”தானாடா விட்டாலும் தசை ஆடும்” என்பார்கள். அதன் உண்மையை அவளிடம் கண்ட போது, ”தாய்மை” என்கின்ற அந்தப்புனிதமான உணர்வு அவளுக்குள் இருந்ததை அவள் ஒரு போதும் வெளிப்படுத்தியதில்லை. முதல் தடவையாக அவளை இந்தநிலையில் பார்த்த போது மெய்சிலிர்த்துப் போனது. அன்றைய தினம் மிக இறுக்கமான சூழ்நிலையிலும் தொலைத்தொடர்பு சாதனத்தில் தன் நெருங்கிய போராளித் தோழிகள் ஒருசிலரோடு அவள் பேசினாள்.”எவ்வளவு போராடியும் என்னால அக்காக்களப்பாதுகாக்க முடியாமல் போயிற்று… அவைய நான்இழந்திட்டன், அவள் கதறினாள். என்ர குஞ்சுகள் நிறைய வீரச்சாவடைஞ்சிற்று… என்ர செல்வங்கள் எல்லாம் விழுப்புண் தாங்கிதுடித்துக்கொண்டிருக்கினம்…”அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே இராணுவத்தினர் ஒலிபெருக்கியில் போராளிகளைச்சரணடையும்படி அறிவிப்புச்செய்வது மிகத்தெளிவாக கேட்டது. அவள் சொல்லாமலே இராணுவத்தினரும் அவர்களும் மிக அருகில் நின்று களமாடும் களச் சூழலின் இறுக்கமும், நெருக்கமும்மிகத் தெளிவாகப் புரிந்தது. அந்தக்கணத்தில் கூட தான் திரும்பி வரவேண்டும் என்ற எண்ணம் துளியேனும் அவளிடத்தில் இருக்கவில்லை. எப்படியாவதுஅதற்குள் இருக்கும் போராளிகளைக் காப்பாற்றி முற்றுகையை உடைத்து அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம்மட்டுமே அவள் மனதில் இருந்தது. இறுதியாக ஒரேயொருவார்த்தை ”என்ர பிள்ளையைப் பத்திரமாகப் பாருங்கோ…” அது தான் அவளது கடைசித்தொடர்பாடலாக இருந்தது. அன்றைய தினம் இரவே எஞ்சிய போராளிகள் அனைவரையும் ஒருங்கிணைத்துக் கொண்டு மீண்டும் ஒரு உடைப்புச்சமரை மேற்கொள்ள தளபதிகளும் போராளிகளும் தயாராகினர். அந்த உடைப்புச்சமருக்கு எஞ்சிய மகளிர் போராளிகளையெல்லாம் ஒருங்கிணைத்துக்கொண்டு தமிழ்ச்செல்வி களம்இறங்கினாள். அந்த உடைப்புச்சமர் உக்கிரமாய் நடந்து பச்சைப்புல்மோட்டைக் கடல் நீரேரியூடாக ஒரு உடைப்பொன்றை ஏற்படுத்திபோராளிகள் நகர்ந்து கொண்டிருக்கும் போதுதான் தற்துணிவும் விடாமுயற்சியும், வைராக்கியமும் கொண்ட தமிழ்ச்செல்விஎன்கின்ற பெருமலை எதிரியின் குண்டேந்தி அந்த இடத்திலேயே சரித்திரமாய் வீரவரலாற்றின் பக்கங்களில் இடம்பிடித்துக் கொண்டாள். 1991,இன் பிற்பகுதி, உயர்தரம் கற்றுக்கொண்டிருந்த பள்ளித் தோழிகளான கேணல் தமிழ்ச்செல்வியும் மேஜர் எழிலரசியும் விடுதலை நோக்கிய பயணத்தில் தம்மை இணைத்திருந்தனர். மணலாற்றுக் கானகத்தே மகளிர்படையணியின் 20வது பயிற்சி முகாம், 27.02.1992 இல் தொடங்கிய போது அந்தப்பயிற்சி முகாமில்தான் தோழிகள் இருவரும் தமக்கான ஆரம்பப் பயிற்சிகளை ஆரம்பித்திருந்தனர். பயிற்சிகளின் போது அனைவருக்குமே துப்பாக்கிகளுக்குப்பதிலாக கொட்டன்களேவழங்கப்பட்டிருந்தன.ஆனால் கனம்இல்லாத அந்தக்கட்டைகளைத் துாக்கிக்கொண்டு செல்வதற்கு தமிழ்ச்செல்வி தயாராக இல்லை. பாடசாலை நாட்களிலேயே விளையாட்டுத்துறையில் மிகத்திறமையான மாணவியாக அவள் இருந்தவள். பயிற்சி ஆசிரியர்களிடம் சென்று தனக்குப் பாரம்கூடிய குத்திகள் தரும்படி கேட்டாள். பயிற்சி ஆசிரியர்கள் அவளுக்கு எவ்வளவோ எடுத்து கூறினர். இந்தக்கட்டைகளைத் துாக்கிக்கொண்டு தான் ஓட வேண்டும். பயிற்சிகளின் போதும் அதைத்தான் வைத்திருக்க வேண்டும் என்றனர். ” அது பரவாயில்லை,என்னால முடியும்” ஒரு பிடியாக இருந்து பாரம் கூடிய குத்தியை வாங்கி விட்டாள். எல்லோருமே பயந்தார்கள். இவள் என்னென்று இந்தக்குற்றியை வைத்துக் கொண்டு பயிற்சி எடுக்கப்போகிறாள் என்று. ஆனால் அவளுக்கு அது ஒரு பிரச்சனையாகவே இருக்கவில்லை. மிக இலகுவாக எல்லோரையும் போல என்பதை விட மிகச்சிறப்பாக அவள் பயிற்சிகளைச் செய்தாள். அடிப்படைப் பயிற்சிமுகாமிலேயே அவளது திறமை பயிற்சி ஆசிரியர்களால் இனங்காணப்பட்டுவிட்டது. அவர்களது பயிற்சி முகாம் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் போதே, ”ஒபரேசன் கஜபார” என்ற இராணுவ நடவடிக்கையை எதிரிஆரம்பித்திருந்தான். 17.03.1992 மணலாற்றின் நாயாறு,அளம்பில், ஆகிய பகுதிகளை வல்வளைப்புச் செய்யும் நோக்கில்கடல்,வான்,தரையென மும்முனைகளாலும் தாக்குதலைத்தொடுத்தபடி இந்த இராணுவ நடவடிக்கை தொடங்கியிருந்தது. இந்தத்தாக்குதலை முறியடிப்பதற்கான சண்டைகள் மணலாறு – முல்லை மாவட்டதளபதி லெப்டினன் கேணல் அன்பு அவர்களது தலைமையில்நடைபெற்றுக்கொண்டிருந்தது. இதன் போது இந்தத் தாக்குதலுக்கு உதவி அணியாகப்பங்காற்ற பயிற்சி முகாமில் இருந்து மிகத்திறமையாகச் செயற்படக்கூடிய 90 பேர் தெரிவுசெய்யப்பட்டனர். இதில், தமிழ்ச்செல்வி முதலாவது ஆளாக இருந்தாள். முன் பின் தெரியாத அடர்ந்த காடு முன் அனுபவம் இல்லாத களமுனைப் பயிற்சிகள் கூட நிறைவு பெறாத நிலைமை இருந்தபோதிலும் ஒரு குறுகிய காலப் பயிற்சி வழங்கப்பட்டிருந்தது. தற்காப்புக்கான பயிற்சியுடன், துப்பாக்கி குறிபார்த்துச்சுடுவது, குண்டெறிவது, ஆயுதங்களைக் கழற்றி பூட்டுவது, திசைகாட்டியின் உதவியுடன் திசைகளை அறிவது என அடிப்படை இராணுவப்பயிற்சியும் அவர்களுக்கு வழங்கப்பட்டன. பயிற்சியின் போது தமிழ்ச்செல்வி காட்டிய வேகமும் நிதானமும், எல்லாவற்றையும் உடனுக்குடன் புரிந்து, புரியாதவர்களுக்குஅதைத் தெளிவு படுத்தும் விதமும் அவளை 9 பேர் கொண்ட அணிக்கு தலைவியாக்கியது. கஜபார இராணுவ நடவடிக்கையை முறியடித்து இராணுவத்தினரைப் பழைய நிலைகளுக்கே விரட்டியடிக்கும் சமரில் எதிரிகள் தடுமாறி தாம் கொண்டு வந்த கனரக வாகனங்களிற் பூட்டிய கனரக ஆயுதங்களைக் கைவிட்டு விட்டு ஓட்டம் பிடிக்கத்தொடங்கினர். இந்த நிலையில் கனரக வாகனத்தில் பூட்டியிருந்த 30 கலிபர் ஆயுதம் ஒன்றை தமிழ்ச்செல்வி மிக விரைவாகக் கழற்றிஎடுத்தாள். உண்மையிலேயே 30 கலிபர் எப்படி இருக்கும் அதை எப்படிக் கையாளுவது, அதை எப்படிக்கழற்றுவது என்று எதுவும்அவளுக்குத் தெரியாது. ஆனால் அவளது முயற்சியும் சக போராளிகளின் உதவியும் அதைக்கழற்றி எடுக்க வைத்தது. அந்த முதற் களமே அவள் யார் என்பதைத் தளபதிகளுக்கு இனங்காட்டியது. சண்டைக்கு பின்னர் அடிப்படைப்பயிற்சிகளை நிறைவு செய்து கொண்டு சிறப்புப் பயிற்சிக்காகத் தெரிவு செய்யப்பட்ட அணியில்அவளும் ஒருத்தியானாள். தமிழ்ச்செல்வியின் ஆசை, கனவு, இலட்சியம் எல்லாமே ஒன்றாகத்தான் இருந்தது. எப்போது பயிற்சி நிறைவடையும், எப்போதுகனரக ஆயுதத்துடன் தான் சண்டைக்குச் செல்வது என்ற எண்ணம் மட்டுமே அவளிடம் இருந்தது. அந்த எண்ணமும், அவளது மன உறுதியும் அவளைக் கனரக ஆயுதத்தில் சிறப்பு தேர்ச்சி பெற வைத்தது. அவளது திறன் கண்டு லெப்.கேணல் அன்பு அவர்களால் 30 கலிபர் ஆயுதம் ஒன்று அவளுக்குப் பரிசாக வழங்கப்பட்டது. இதன் பின்னர் மணலாற்று அணியில் தமிழ்ச்செல்வி பெரும் சண்டைக்காரி ஆகிவிட்டாள்.இராணுவ ரோந்து அணிகள் மீதானபதுங்கித்தாக்குதல்களில் தனக்கென்றோர் இடத்தைப்பிடித்தாள். அளம்பிற் பகுதி தொடர் காவலரண்கள் மீதான தாக்குதல்,அளம்பிற் பகுதி மீட்புச்சமர், கொக்குளாய், கொக்குத்தொடுவாய்முன்னரங்கக் காவலரண்கள் மீதான தாக்குதல்,மண்கிண்டிமலை இராணுவமுகாம் தகர்ப்பு என மணலாற்றுப்பகுதியில்இடம்பெற்ற அனைத்துத் தாக்குதல் நடவடிக்கைகளிலும் தமிழ்ச்செல்வியின் கை ஓங்கியிருந்தது. விடுதலைப்போராட்டத்தில் இணைந்து மிகக்குறுகிய காலத்திலேயே பெருவளர்ச்சிப் பாதையை நோக்கி அவள் பயணிக்கத்தொடங்கினாள். அவளது இந்த வளர்ச்சிக்குக் காரணமே துணிவு, தன்னம்பிக்கை,விடாமுயற்சி, என்கின்ற மூன்றுமே. முடியாது என்ற சொல் அவள் அகராதியில் கிடையாது போனது. இதன் பின்னர் அவளது செயற்பாடு யாழ் மண்ணை நோக்கிநகர்ந்திருந்தது.அங்கு அவளது முதற்களம் ”யாழ்தேவி” இராணுவ நடவடிக்கை எதிர்ச்சமராக இருந்தது. தொடர்ந்து பூநகரிப்படைத்தளம் மீதான அழித்தொழிப்புச்சமரிலும் அவள் தனது முத்திரையைப் பதித்துக் கொண்டாள். 1994ஆம் ஆண்டின் ஆரம்பக்காலப்பகுதி, விடுதலைப்போராட்ட வரலாற்றில் இதுவரை காலமும் பெண் போராளிகளுக்கானகனரக ஆயுதப் பயிற்சிகளை ஆண் போராளிகளே வழங்கி வந்திருந்தனர். இந்த நிலமையை மாற்றி பெண் போராளிகளுக்குப் பெண் போராளிகளே கனரக ஆயுதப் பயிற்சிகளை வழங்குவதற்காக ஆசிரிய அணிஒன்றை உருவாக்குவதற்காக கனரக ஆயுதங்களில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற போராளிகள் உள்வாங்கப்பட்டிருந்தனர். அந்த அணியில் தமிழ்ச்செல்வியும் ஒருத்தியானாள். இவர்களுக்கான ஆசிரியப் பயிற்சி எழுதுமட்டுவாளில் அமைந்திருந்த ”கஜன்” பயிற்சிப் பாசறையில் இடம்பெற்றது. இதன் போதுதமிழ்ச்செல்வி 30கலிபர் 50 கலிபர் ஆயுதங்களில் ஆசிரியப் பயிற்சியை எடுப்பதற்காகத் தெரிவு செய்யப்பட்டிருந்தாள். ஆரம்ப காலத்தில் பொதுவாக ஆண் போராளிகள் பயிற்சி வழங்கும் போது பெண் பிள்ளைகளால் சில கடின பயிற்சிகளைசெய்ய முடியாது என்ற நிலைப்பாடுஇருந்தது. அதுகும் 50 கலிபர் ஆயுதம் அதன் முக்காலி என்பவற்றைத்தூக்கிப் பயிற்சி எடுப்பது என்பதுகடினமானதொன்று. அதனால் இதனை இவர்கள் இலகுவாகச் செய்யமாட்டார்கள் என பயிற்சி ஆசிரியர்கள் கருதியிருந்தனர்ஆனால் இந்த நிலைப்பாட்டைப் பெண் போராளிகள் தவிடுபொடியாக்கினர். அதிலும் தமிழ்ச்செல்வியின் ஆற்றல் கண்டு பயிற்சி ஆசிரியர்கள் ஒருகணம் பிரமித்துப் போயினர். ஒரு முறை எவ்வளவு துாரத்துக்கு பெண் போராளிகளால் ஆயுதங்களைத் தூக்கிக்கொண்டு பயிற்சி எடுக்க முடியும் எனஆசிரியர்கள் பரீட்சித்துப் பார்த்தார்கள். நாகர்கோயில் சந்தியில் இருந்து ஆரம்பமான அந்தப் பயிற்சியில் தமிழ்ச்செல்வியின் தோளில் 75 கிலோ கிராம் நிறையுடைய 50 கலிபர் ஆயுதத்தைப்பொருத்தும் முக்காலி இருந்தது.ஓய்வில்லாமல் நிலைகள் எடுத்தெடுத்து 10கிலோ மீற்றர்கள் கடந்துநிறைவுற்றது அந்தப்பயிற்சி. அதுவரை அந்தக் கடினப் பயிற்சியில் இருந்து அவள் ஒரு துளி கூட அசந்ததில்லை. பாரத்தைத் தூக்கித் தூக்கி தோள்கள்சோர்ந்தது.ஓடியோடிக் கால்கள் ஓய்ந்திருந்தது. ஆனாலும் மனம் தளராது ஓர்மத்துடன் பயிற்சி ஆசிரியர்களாலே நம்ப முடியாதஅளவுக்கு அவள் செய்து காட்டினாள். அப்போது பயிற்சி தந்த ஆசிரியர் தனது வாயாலேயே பாராட்டினார்.”உங்களை நான் தவறாக எடை போட்டு விட்டேன், உங்களால் எல்லாவற்றையும் செய்ய முடியும்” என்றார். தமிழ்ச்செல்வி ஒன்றை செய்து முடிக்க வேண்டும் என்று நினைத்தால் அதை நுாற்றுக்கு நுாறு வீதம் மிகத்திறமையாகச்செய்து முடிப்பாள். எந்தக் கடினச் சவாலாக இருந்தாலும் எந்தத்தயக்கமும் இன்றி நேருக்குநேர் நின்று முகம் கொடுப்பாள். இதுதான் அவளுக்கே உரிய சிறப்பியல்பாக இருந்தது. இந்தப்பயிற்சியின் நிறைவில் தமிழ்ச்செல்வி சகல ஆயுதங்களையும் பயிற்றுவிக்கும் ஆசிரியராக இருந்தாள். பயிற்சிக்காலத்திலேயே சூரியக்கதிர் 1,2, மண்டைதீவுச்சமரென அவளது களப்பணி விரியத்தொடங்கியது. கனரகப் பயிற்சி ஆசிரியராக அவள் இருந்த போது பயிற்சி நேரத்தில் அவளிடம் இருக்கும் கண்டிப்பு பயிற்சி நிறைவடைந்தமறுநொடியே அவளை விட்டுப்பறந்து விடும்.போராளிகளோடு மிக இறங்கி அவர்களது பிரச்சினை, குறைநிறைகளைக்கண்டறிவதில் அவளுக்கு நிகர் அவளேதான். அவள் போராளிகளை அணுகும் முறையே வித்தியாசமானது.”செல்லம்” ”குஞ்சு” பெரியவர்கள் என்றால் ”அக்காச்சி” என்றும் அன்பு பொழிய அழைக்கும் அவளது பேச்சு வழக்கு அவளது சொந்த இடமானகற்சிலைமடுவின் மண்வாசணையைச்சொல்லும். அந்த அன்பான பேச்சை இறுதிவரை அவள் கைவிட்டதே இல்லை. பொதுவாகப் போராளிகளுக்கு அவள் பயிற்சி ஆசிரியராக வருவது விருப்பமான ஒன்றாக இருந்தது. அதனால் போராளிகள்விரும்பும் நல்லாசானாக அவள் இருந்தாள். 1995ம் ஆண்டு புலிப்பாச்சல் சண்டைக்கான பயிற்சிகளை வழங்கியதோடு களமுனைக்கும் கனரக ஆயுதங்களைஒருங்கிணைத்துச் சண்டை செய்திருந்தாள்.அதன் பின்னர் யாழ் நகரை விட்டு வெளியேறும் வரை 50 கலிபர் ஆயுதத்தோடுகளத்தில் நின்றிருந்தாள். 1996ம் ஆண்டு மகளிர் படையணி 2ஆம் லெப் மாலதி படையணியாக பரிணாமம் பெற்ற போது மாலதிபடையணியின்சிறப்புத்தளபதி பிரிகேடியர் விதுஷாக்காவுடன் அவளது செயற்பாடு தொடர்ந்தது. ஓயாத அலைகள் 1 எனப் பெயரிடப்பட்டு சிறிலங்காப்படைகளால் வல்வளைப்புச் செய்யப்பட்டிருந்த முல்லைச் சமரில்உதவியணிக்குப் பொறுப்பாளராக களம் சென்றிருந்தாள். தொடர்ந்து ”சத்ஜெய” இராணுவ நடவடிக்கை,கிளிநொச்சி நகர்,பரந்தன்சண்டையென ஓய்வின்றி அவள் உழைத்தாள். தமிழ்ச்செல்விக்கென்று ஒரு ராசி இருந்தது. எந்தச்சண்டைக்குச் சென்றாலும் விழுப்புண்தாங்காமல் குறைந்தது ஒரு கீறலாவதுபடாமல் களமுனையை விட்டு அவள் திரும்பமாட்டாள். ”ஜெயசிக்குறு” என்ற பெயரில் எதிரி பெரும் இராணுவ நடவடிக்கையைத் தொடங்கிய போது அந்தக்களமுனைக்குச் செல்லும்போராளிகளுக்கான கனரக ஆயுதப்பயிற்சிகளை வழங்கி அவர்களைக் களமுனைக்குத் தயார்படுத்தும் பணியோடு நேரடியாகவேகளத்திலும் நின்றாள். புளியங்குளம் புரட்சிக்குளம் என்றுகூறுமளவுக்கு போராளிகளின் போரியல் நடவடிக்கை மிகச் சிறப்பானதாக அமைந்திருந்தபுளியங்குளச்சமரில் கொம்பனியை வழிப்படுத்தும் 2ஆவது அணித்தலைவியாகச் செயற்பட்டிருந்தாள். இதுவே புதூரில் ஒரு கொம்பனியைக் கொண்டு நடத்தும் அளவுக்கு அவளை உயர்த்தியது. புதூரில் இருந்து இராணுவத்தினரின் முன்னேற்ற முயற்சிகளை ஒரு அங்குலம் கூட நகரவிடாது போராளிகள் ஓர்மத்துடன் நின்று சமராடிய போது மிகச் சிறப்பாகச் சண்டைகளை வழிப்படுத்தினாள். நீண்டு விரிந்த ஜெயசிக்குறுவைப் போலவே இவளது களப்பட்டியலும் நீண்டு கொண்டேசென்றது. தாண்டிக்குளம், மன்னகுளம் என எல்லாச்சமர்களிலும் அவளது பங்கும் இருந்தது. தீச்சுவாலை இராணுவ நடவடிக்கையின் எதிர்சமரிலும் கொம்பனியை வைத்து திறம்படச் சண்டையிட்டாள். அவளது போரியற் திறனை தளபதிகள் மட்டுமன்றி,தேசியத் தலைவரே பாராட்டும் அளவுக்கு அவளது செயற்பாடுவிரிந்திருந்தது. மன்னார் பள்ளமடுச்சண்டை அவளது போரிடும் திறனுக்கு இன்னும் வலுச்சேர்த்தது. இங்கும் கொம்பனித்தலைவியாகவே எதிரியைத் திணறடித்துக் கொண்டிருந்தாள். எந்த இறுக்கமான சண்டையாக இருந்தாலும் பதற்றமின்றிக் கட்டளைகளை வழங்கிசண்டையிடும் போராளிகளுக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிர்ந்தாள். அவளது குரல் தொலைத்தொடர்புக்கருவியில் ஒலித்தாலே போராளிகளுக்குள் புதுவேகம் பிறக்கும். அதுவே அவர்களைத்திறம்படச் சண்டை செய்ய வைக்கும் அவளது திறன் விரைவிலேயே அவளை மாலதி படையணியின் தளபதியாக மாற்றியது. தளபதியாக அவள் தேர்ந்தெடுக்கப்பட்டபோது களமுனையில் இருந்து அவளைப் பின்னுக்கு எடுக்க வேண்டியிருந்தது. அதனால் மாலதி படையணியின் சிறப்புத்தளபதி விதுஷாக்கா அழைத்தும்அவளுக்கு களமுனையை விட்டு வருவதற்கு விருப்பம் இருக்கவில்லை. ”நான் சண்டையிலேயே நிக்கிறன் பின்னுக்கு வரவில்லை” என விதுஷாக்காவிடம் தெரிவித்தாள். அந்த இடத்தில் விதுஷாக்காமிக இறுக்கமான கட்டளை ஒன்றை பிறப்பித்தார். சண்டையில் நிற்பதாக இருந்தால் குப்பி,தகட்டைக்கழற்றிவிட்டு நிக்கும் படியும்இல்லை என்றால் பள்ளமடுவில் இருந்து தனது இடத்துக்கு நடந்து வரும்படியும் பணித்திருந்தார். தமிழ்ச்செல்விக்கு களமுனையை விட்டு வருவது என்பது முடியாத காரியமாக இருந்தாலும் கட்டளைக்குக் கீழ்ப்படிதல் என்பதுஎவ்வளவு முதன்மையானது என்பது அவளுக்குப் புரியும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் தண்டனையை மகிழ்வோடு ஏற்றுமன்னாரில் இருந்து நடந்து வந்தே விதுஷாக்காவைச் சந்தித்தாள். மாலதி படையணியின் தளபதிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட தமிழ்ச்செல்விக்கு நிர்வாகப் பணி என்பது புது அனுபவமாகவேஇருந்தது.போராட்டத்தில் இணைந்த காலப்பகுதியில் இருந்து ஓய்வின்றிச் சண்டை,பயிற்சி, சண்டை,பயிற்சி, என மாறிமாறிஉழைத்தவளுக்கு நிர்வாகப்பணி என்பது பெரும் சவால் தான். ஆனால் சவால்களையே சாதனையாக்கிக் காட்டிய அவளுக்குநிர்வாகப்பணிகளிலும் சிறப்பாகச் செயற்பட முடிந்தது. தளபதியாக இருந்த போதிலும் அவளது செயற்பாடு களமுனைகளைச் சுற்றிச்சுற்றியே இருந்தது. போராளிகளின் முக்கியத்துவம் புரிந்து நல்ல நிர்வாகியாக அவள் இருந்தாள். இதன் பின்னர் 2004ஆம் ஆண்டு திருமண பந்தத்தில்தன்னை இணைத்துக்கொண்டாள். நிர்வாகத்துறையில் பணியாற்றிக்கொண்டிருந்த பூவண்ணன் என்கின்ற போராளியே அவளது வாழ்க்கைத்துணையாக அமைந்தார். போரியலில் எப்படித்திறம்படச் செயற்பட்டாளோ அதேபோல் இல்லற வாழ்விலும் அவள் தன் கடமைகளைச்சரிவரச்செய்தாள். அவள் இல்லறத்தின் நல்லறப்பயனாய் தாய்மை அடைந்திருந்த நிலையிலும் தனது பணியிலிருந்து சிறிதளவு கூடபின்னிற்கவில்லை. குழந்தை பிறந்த பின்னரும் அவளது செயற்பாடு களம் சார்ந்ததாகவே இருந்தது. கடமைக்குச் செல்லும்பெண் போராளிகளின் குழந்தைகளைப் பராமரிப்பதற்காகத் தளிர்கள் என்ற குழந்தைகள் காப்பகம் ஒன்றுஅமைக்கப்பட்டிருந்தது. அங்கு தான் தமிழ்ச்செல்வி தனது குழந்தையைப் பகல் பொழுதில் விட்டுவிட்டுக் களமுனைகளுக்குச் சென்று வருவாள். எவ்வளவு தான் கடமைகள் இருந்தாலும் அவள் தனது குழந்தைக்கு நல்ல அம்மாவாகவும் இருக்கத்தவறியதில்லை. ஆனால் இறுதிப் போரரங்கு சூடுபிடித்திருந்த நேரத்தில் தானொரு குடும்பப்பெண், தான் ஒரு குழந்தைக்கு அம்மா என்பதையும் கடந்து, தான் ஒரு போராளி என்கின்ற உணர்வே அவளிடத்தில் மேலோங்கி இருந்தது. அதுவே அவளது இறுதி மூச்சு வரை தன் உயிரிலும் மேலாய் நேசித்த மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் தன்னை அர்ப்பணிக்கத் தூண்டியது. விடுதலைப்போராட்ட வரலாற்றில் இறுதிப் பெரும் முற்றுகைச்சமராக அமைந்த ஆனந்தபுரம் போரரங்கு போராளிகளின் ஓர்மத்துக்கும், விடாமுயற்சிக்கும் பெரும் எடுத்துக்காட்டாக அமைந்திருந்தது. இந்தக்களத்தில் தேசியத்லைவரே நேரடியாகச் களமிறங்கி இருந்ததையும் யாரும் மறந்து விட முடியாது. பெரும் வேகத்தோடு வந்த எதிரி திண்டாடிய பெரும் கோட்டையாக ஆனந்தபுரம் இருந்தது. நாட்கள் நகரநகர எதிரியின் முழுப்படை வலுவும் ஆனந்தபுரத்திலே இருந்தது. அதனால் போர் அரங்கு நாளுக்கு நாள்இறுகிக்கொண்டே போனது. அதனால் தலைவரை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பதே முற்றுகைக்கு வெளியே இருந்த தளபதிகள் போராளிகளினதும், ஒருமித்த வேண்டுதலாக இருந்தது. தவிர்க்க முடியாத சூழலில் தலைவர்முற்றுகைக்குள் இருந்து வெளியில் வர, அன்றைய தினமே ஆனந்தபுர முற்றுகைக்குள் சென்ற அணியில் தமிழ்ச்செல்வியும் இருந்தாள். அவள் அந்த முற்றுகைச் சண்டைக்குள் புறப்படுவதற்கு முன்னதாக தனது கணவனிடம் சென்று விடைபெறும் போது, அவர் தனது துப்பாக்கியை அவளிடம் கொடுத்து உன்னருகில், உனக்குத்துணையாக எப்பவும் நானிருப்பன் வென்று வா! என்றுவிடைகொடுத்து அனுப்பியிருந்தார் அப்போது இருவருக்கும் தெரியாது அது தான் தமது இறுதிச் சந்திப்பென்று. ஆனந்தபுரம் எதிரியின் அதியுயர் தாக்குதல் வலுவின் உச்சமாக மாறியிருந்தது. ஆட்லறி எறிகணைகள், மோட்டார் பீரங்கிகள், கனரக ஆயுதங்கள், சூட்டு வலு வழங்க, வான் படை குண்டு மழைபொழிய, இதற்கு இடையில் நின்று பசி மறந்து, துாக்கம்மறந்து, விழுப்புண்களின் வலிமறந்து, கூட நின்று களமாடி வீழ்ந்த வீரர்களின் இழப்புகளின் துயர் கடந்து, வீரர்கள் விழ விழதங்களின் முழுப்பலத்தையும் மனவைராக்கியத்தையும் பயன்படுத்தி போராளிகள் போராடிக்கொண்டிருந்தனர். அந்தக்களத்தில் தமிழ்ச்செல்வியும் கையில் விழுப்புண் தாங்கியிருந்தாள். இனி அந்த முற்றுகையைத்தக்க வைத்துக்கொள்ளமுடியாத சூழல் உருவாகிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் அந்த முற்றுகையை உடைத்துக்கொண்டு எப்படியாவது வெளியில் வரும்படி அவர்களுக்குகட்டளையிடப்பட்டிருந்தது. 04.04.2009 அதிகாலை பெரும் உடைப்புச்சமர் ஒன்றை களத்தில் நின்ற தளபதிகள் போராளிகள் மேற்கொண்டிருந்த போது, அந்தசமர் பெரும் வெற்றியைத்தரவில்லை. நீண்ட விடுதலைப் போராட்டத்தின் பெரும் தூண்களாக இருந்த பிரிகேடியர் விதுஷா, பிரிகேடியர் துர்க்கா, உட்பட பல தளபதிகள்போராளிகளை இழந்த போது தமிழ்ச்செல்வி மிகவும் மனம் தளர்ந்திருந்தாள். கூட நின்ற தோழியிடம் ”இந்த முற்றுகைக்குள் இருந்து அக்காவைய எப்படியாவது பாதுகாத்துக்கூட்டிச்செல்ல வேண்டும் என்று நினைச்சன் என்னால அது முடியேல்லே… கடைசியா என்ர பிள்ளைக்கு நல்ல அம்மாவாகவும் இருக்க முடியல்லே…” என்ரபிள்ளை என்று அவள் சொன்ன அந்த நொடி, அவளது துடிப்பும் தவிப்பும் அவளது உணர்வில் தெரிந்தது. ”தானாடா விட்டாலும் தசை ஆடும்” என்பார்கள். அதன் உண்மையை அவளிடம் கண்ட போது, ”தாய்மை” என்கின்ற அந்தப்புனிதமான உணர்வு அவளுக்குள் இருந்ததை அவள் ஒரு போதும் வெளிப்படுத்தியதில்லை. முதல் தடவையாக அவளை இந்தநிலையில் பார்த்த போது மெய்சிலிர்த்துப் போனது. அன்றைய தினம் மிக இறுக்கமான சூழ்நிலையிலும் தொலைத்தொடர்பு சாதனத்தில் தன் நெருங்கிய போராளித் தோழிகள் ஒருசிலரோடு அவள் பேசினாள்.”எவ்வளவு போராடியும் என்னால அக்காக்களப்பாதுகாக்க முடியாமல் போயிற்று… அவைய நான் இழந்திட்டன், அவள் கதறினாள். என்ர குஞ்சுகள் நிறைய வீரச்சாவடைஞ்சிற்று… என்ர செல்வங்கள் எல்லாம் விழுப்புண் தாங்கிதுடித்துக்கொண்டிருக்கினம்…”அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே இராணுவத்தினர் ஒலிபெருக்கியில் போராளிகளைச் சரணடையும்படி அறிவிப்புச் செய்வது மிகத்தெளிவாக கேட்டது. அவள் சொல்லாமலே இராணுவத்தினரும் அவர்களும் மிக அருகில் நின்று களமாடும் களச் சூழலின் இறுக்கமும், நெருக்கமும்மிகத் தெளிவாகப் புரிந்தது. அந்தக்கணத்தில் கூட தான் திரும்பி வரவேண்டும் என்ற எண்ணம் துளியேனும் அவளிடத்தில் இருக்கவில்லை. எப்படியாவது அதற்குள் இருக்கும் போராளிகளைக் காப்பாற்றி முற்றுகையை உடைத்து அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவள் மனதில் இருந்தது. இறுதியாக ஒரேயொருவார்த்தை ”என்ர பிள்ளையைப் பத்திரமாகப் பாருங்கோ…” அது தான் அவளது கடைசித் தொடர்பாடலாக இருந்தது. அன்றைய தினம் இரவே எஞ்சிய போராளிகள் அனைவரையும் ஒருங்கிணைத்துக் கொண்டு மீண்டும் ஒரு உடைப்புச்சமரைமேற்கொள்ள தளபதிகளும் போராளிகளும் தயாராகினர். அந்த உடைப்புச்சமருக்கு எஞ்சிய மகளிர் போராளிகளையெல்லாம் ஒருங்கிணைத்துக்கொண்டு தமிழ்ச்செல்வி களம்இறங்கினாள். அந்த உடைப்புச்சமர் உக்கிரமாய் நடந்து பச்சைப்புல்மோட்டைக் கடல் நீரேரியூடாக ஒரு உடைப்பொன்றை ஏற்படுத்திபோராளிகள் நகர்ந்து கொண்டிருக்கும் போதுதான் தற்துணிவும் விடாமுயற்சியும், வைராக்கியமும் கொண்ட தமிழ்ச்செல்வி என்கின்ற பெருமலை எதிரியின் குண்டேந்தி அந்த இடத்திலேயே சரித்திரமாய் வீரவரலாற்றின் பக்கங்களில் இடம்பிடித்துக்கொண்டாள். விடுதலை எனும் பெரு இலட்சிய நெருப்பை நெஞ்சினில் சுமந்து ஓயாது அல்லும் பகலும் அதற்காகவே தன்னை அர்ப்பணித்தகேணல் தமிழ்ச்செல்வி காலம் உள்ளவரை தமிழர் தம் நெஞ்சங்களில் மாவீரத் தாயாய் வாழ்வாள். -அ.அபிராமி 25.11.2016 https://www.thaarakam.com/news/121081
  7. கேணல் வீரத்தேவன் மகத்தான மாவீரன் கேணல் வீரத்தேவன்! தாயை விட தாய்நாடுதான் முக்கியம் என்பதை சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன் அந்த வார்த்தைகளின் உயிருள்ள உருவத்தை அவனில் நான் கண்டேன். வீரத்தேவனின் துணிகரமான சாதனைகளை என்னால் எழுத்தில் வர்னிக்க முடியாதவை இருந்தாலும் எனது மனதைத்தொட்ட ஒரு நிகழ்வை மட்டும் அவனது மன உறுதியை எழுத உந்தியது.1996ஆம் ஆண்டு 9ஆம் மாதம் ஆரம்பத்தில் மட்டு அம்பாறை மாவட்ட புலனாய்வுப்பகுதிக்குப் பொறுப்பாளராக இருந்த திரு நிக்சன் அவர்கள் வவுனியா மாவட்ட புலனாய்வுப்பொறுப்பை ஏற்றிருந்த காலம் நிக்சன் அவர்களின் பணிகளை செவ்வனே செய்வதற்காக வவுனியாவுக்கான புலனாய்வு வேலைகளைஎற்கனவே செய்த அனுபவம் இருந்ததால் பொட்டு அம்மான் அவர்களால் நியுட்டன் அவர்களின் நிர்வாகத்தில் இருந்த என்னை நிக்சன் அவர்களின் நிர்வாகத்துக்கு மாற்றப்பட்டேன். 09.09.1996ம் ஆண்டு பண்டிவிரிச்சானில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் மிக இரகசியமாக நிக்சன் அவர்களின் வவுனியாவுக்கான நடவடிக்கை முகாம் அமைத்திருந்தது. நானும் நிக்சன் அவர்களும் முதல் முறையாக சந்தித்து பேசினோம். வவுனியாவுக்குள் செய்யவேண்டிய வேலை சம்மந்தமாகவும் தாக்குதல் நடத்தவேண்டிய ஒரு இலக்கு சம்மந்தமாகவும் விரிவாகக் கூறினார். என்னை பாதுகாப்பாக வவுனியாவுக்குள் அழைத்து செல்வதற்காக அணி ஒன்றை அறிமுகம் செய்தார். அதில் பேரின்பம், நிலவழகன், வீரத்தேவன், அறிவாளி ஆகியோர் இருந்தனர். வீரத்தேவனும் அறிவாளியும் தோற்றத்திலும் வயதிலும் சிறியவர்களாக இருந்ததால் இருவரையும் நான் மனதில் போட்டுக்கொள்ளவில்லை. விடுதலைப்புலிகளின் கேணல் ஒருவன் அந்த அணியில் ஒளிந்திருக்கிறான் என்று நான் எள்ளளவும் நினைத்திருக்கவில்லை. மறுநாள் நகர்வுக்கு தயார் செய்யப்பட்டது. எனக்கு பண்டிவிரிச்சான் பகுதி புதிதாக இருந்ததால் நிக்சன் அவர்கள் வீரத்தேவனை அழைத்து என்னை வெளியில் இடம் காட்டும்படி அனுப்பினார் இருவரும் சைக்கிளில் வெளியில் மடுமாதா தேவாலயம்வரை சென்றோம் அப்பகுதியில் இருந்த இடம் பெயர்ந்தோர் முகாமில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வீரத்தேவன் என்னை அழைத்துச்சென்றான். அப்போதுதான் எதிர்பாராத அந்த செய்தி கிடைத்தது. வெளி மாவட்டம் ஒன்றில் இருந்த வீரத்தேவனின் தாயார் இறந்த செய்தியை உறவினர்கள் வீரத்தேவனிடம் சொன்னார்கள் வீரத்தேவனின் கண்களில் இருந்தது கண்ணீர்த்துளிகள் வழிந்தோடத்தொடங்கியது. பின் சிறிது நேரம் வீரத்தேவனின் உறவினர்களுடன் கதைத்துவிட்டு இருவரும் முகாமிற்கு சென்றோம். வழியில் வீரத்தேவன் என்னிடம் சொன்னான் அண்ணே இதை நிக்சன் அண்ணாவிடம் சொல்லவேண்டாம் சொன்னால் இரானுவகட்டுப்பாட்டுப்பகுதிக்கு செல்வதற்கு அனுமதிக்கமாட்டார் அம்மா எமது கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருந்தாலாவது போய்ப்பார்கலாம் சித்தி ஒருவர் தான் அளம்பிலில் இருக்கிறார் உள்ளேபோய் திரும்பி வந்தால் அளம்பில் செல்கிறேன். திரும்பிவராவிட்டால் அம்மாவிடம் செல்கிறேன் என்றான் அவன் இப்படிச்சொன்னதும் எனக்கு அவனை நினைத்து கவலைப்படுவதா? இல்லை பெருமைப்படுவதா? தெரியவில்லை. தாயை விட தாய்நாடுதான் முக்கியம் என்பதை சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன் அந்த வார்த்தைகளின் உயிருள்ள உருவத்தை அவனில் நான் கண்டேன். எமது முகாம் நெருங்க நெருங்க தனது முகத்தையும், கண்களையும் சரி செய்தான். நிக்சன் அவர்களிடம் சொல்லவேண்டாம் என்ற விடயத்தை என்னால் மறைக்க முடியவில்லை காரணம் தாய்ப்பாசம் என்பது மனித உணர்வுகளுக்குள் அல்லாது மேன்மையாகவே நான் கருதுபவன். இதனால் நிக்சனிடம் தெரியப்படுத்தினேன். நிக்சன் அவர்கள் வீரத்தேவனை அழைத்து கதைத்து நகர்வு அணிக்கு வீரத்தேவனுக்கு பதிலாக வேறொருவரை எம்முடன் இணைக்கத்தயாரானார். அதற்கு வீரத்தேவன் தான் நகர்வில் பங்குபெறுவதில் உறுதியாக இருந்தான். அவன் விரும்பியதின் பேரில் எம்முடன் இணைக்கப்பட்டான். நிக்சன் அவர்களும் அனுமதிகொடுத்து தானும் இரானுவ கம்பிவேலிவரை வருவதற்கு தயாரானார் காட்டை ஊடறுத்தபடி இரானுவ காவலரண் நோக்கி அணி வேகமாக நகர்கிறது. அடர்ந்த காட்டுக்குள் செல்வதே கஸ்ரம் அதிலும் இருட்டில் செல்வதென்பது அதைவிட கஸ்ரம். அனுபவப்பட்டவர்களுக்கே அதன் கஸ்ரம் தெரியும். சில இடங்களில் ஒருவரை ஒருவர் தொட்டபடியே நகர்ந்தோம். நாம் இராணுவ காவலரண்களை நெருங்கும் போது அதிகாலை 01 மணியாகிவிட்டது. காவலரண்களில் இருந்து சில மீற்றர் தூரத்தில் இருந்து இராணுவத்தினரின் நடவடிக்கைகளை அவதானித்தோம். அங்கு சக்தி வாய்ந்த மின்குமிழ் வெளிச்சமும் பற்றைகளோ மரங்களோ எதுவுமில்லாமலும் அதன் பின்னால் உயரமான தொடர் அரணும் அதில் 50 மீற்றர் இடைவெளியில் உள்ள காவலரண்களில் இராணுவத்தினரும் இருந்தனர். அவர்கள் கதைக்கும் சத்தம் எமக்கு கேட்டது. இராணுவத்தினர் விழிப்பாக இருந்ததால் காவலரணை கடந்து செல்வது கடினமாக இருந்தது. எனவே அப்படியே எம்மை நிலைப்படுத்திவிட்டு பேரின்பமும் வீரத்தேவனும் பக்கவாட்டாக சத்தமின்றி சென்றார்கள். சில மணிநேரம் கழித்து எம்மிடம் வந்து சில மீற்றர் தூரத்திலிருக்கும் காவலரண் வழியாக செல்லலாம் என எம்மை அழைத்தனர். நாங்களும் சத்தமின்றி அவர்களின் பின் சென்று. நாம் காவலரணை நெருங்கினோம். அங்கு மிகவும் இடரான சூழலை எதிர்கொண்டோம். அதாவது இராணுவத்தின் நாய்கள் நாம் இருந்த திசையைப் பார்த்து குரைக்க ஆரம்பித்தது.;. இராணுவத்தினர் நாய்களைக் கூப்பிடவும் அது போகவில்லை. ஒரு இராணுவவீரன் காவலரணிலிருந்து வெளியே வந்தான். அவனுடைய ஒரு கையில் மின்சூழும் மறு கையில் -2 துப்பாக்கியும் இருந்தது. அவன் நாம் இருந்த பகுதி பற்றையாகவும் இருட்டாகவும் காணப்பட்டதால் வெளிச்சத்தினை எம்மை நோக்கி பாய்ச்சினான். நாம் எல்லோரும் இராணுவ சீருடையும் தலைக்கு பச்சை வர்ணம் பூசப்பட்ட சாக்குத்தொப்பியும் அணிந்திருந்ததனால் அவனுக்கு எம்மை தெரியவில்லை என்று நினைக்கிறேன். எம்மை நோக்கி மின்சூழினை அடிக்கும் போது கண்களை மூடுங்கள் என்று மெதுவாக ஓர் உருவம் சொல்லியது. கடும் இருளாக இருந்ததால் அது யாரென்று அப்போது எனக்கு தெரியவில்லை. அந்த இராணுவவீரன் நாயையும் அழைத்துக்கொண்டு தனது இருப்பிடத்திற்கு சென்றான். நாமும் எமது பளைய நிலைக்கு வந்தோம். அங்கு அப்போது எந்த சத்தமும் இருக்கவில்லை. காவலரணுக்குள் இருந்த இரானுவத்தினர் நித்திரையோ என்னவோ தெரியவில்லை. சிறிது நேரம் நிதானமாக அவதானித்துவிட்டு வீரத்தேவனும் பேரின்பமும் கம்பி வேலியின் கீழாக உள்ளே நுழைந்தனர். நிலத்தோடு ஊர்ந்தபடி இரு இராணுவ நிலைக்குமிடையே செல்கிறார்கள். அரணின் பிற்பகுதிக்கு சென்று சாதகமான சூழலை உறுதிப்படுத்திவிட்டு வீரத்தேவன் மட்டும் கம்பி வேலியின் அருகே படுத்திருந்த எம்மை நோக்கி வந்து விரைவாக வரும்படி சொல்கிறான். எல்லோரும் மிக வேகமாக ஊர்ந்தபடி செல்கிறோம். அரணைக் கடந்ததும் இறுசல் வேலியும் அதன் பின் சில மீற்றர் காடும் அதனைத் தொடர்ந்து சமவெளியும் பின் பிரதான சாலையும் இவ்வளவு தூரத்தையும் கடந்து வரும் காட்டுக்குள் சென்ற பின்தான் ஓரளவு நிம்மதி நாம் கடந்துவந்த பகுதிக்குள் எது வேண்டுமானாலும் எமக்கு நடந்திருக்கலாம். நிச்சன் அவர்களுக்கு நாம் பாதுகாப்பாக காவலரனை கடந்ததனை நடைபேசி ஊடாக செய்தி தெரிவித்து முகாமிற்கு திரும்பி செல்லும்படி கூறிவிடடு தொடர்ந்து நடக்கதொடங்கினோம். முதல்நாள் மாலை 05 மணியிலிருந்து நடந்ததால் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு திசையறி கருவியின் உதவியுடன் மீண்டும் நடக்க ஆரம்பித்தோம். விடிவதற்குள் சில இடங்களை கடந்து செல்லவேண்டிய நிர்ப்பந்தம் எமக்கிருந்ததால் தொடர்ந்து நடந்தோம். சில இடங்களை பகலிலும் சில இடங்களை இரவிலும் கடக்க வேண்டியிருந்ததால் இருளும் வரை நீண்ட நேரம் காத்திருக்கவேண்டியும் இருந்தது. எமது உணவு பி ஸ்கட், சாக்லெட், முட்டை மா போன்ற உலர்உணவுதான். எமது துன்பத்திற்கு மேலும் மெருகூட்ட மழையும் பெய்தது. நான் வேறு நிர்வாகத்திலிருந்து வந்ததால் என்னிடம் மழைக்கவசம் இருக்கவில்லை. அறிவாளி நீளமான பொலீத்தினை எடுத்து எல்லோருக்கும் கொடுத்தான். அதன் ஒரு பகுதியை முடிந்துவிட்டு மறு பகுதியால் உள்ளே இறங்கி ஒரு கையால் பிடித்துக்கொண்டு படுத்திருந்தோம். வீரத்தேவனிடமும் மற்றும் ஒரு சிலரிடம் மட்டுமே மழைக்கவசம் இருந்தது. நான் அவஸ்தைப்படுவதைப் பார்த்த வீரத்தேவன் தனது மழைக்கவசத்தை என்னிடம் தந்தான். நான் வாங்கவிலலை அவன் வற்புறுத்தி தந்து விட்டு சொன்னான் அண்ணா நீங்கள் நனைந்தாலும் வைத்திருக்கும் ஆவணம் நனையக் கூடாது அதற்காகயாவது போடுங்கள் என்றான் எனக்கு உண்மையிலே சங்கடமாகவே இருந்தது அவனுடைய செயல். நீண்டதுன்பத்தின் பின்னர் நான்காம் நாள் இரவு நானும் பேரின்பமும் சாதாரண உடைகளை அணிந்து கொண்டு காட்டிலிருந்து வீதிக்கு வந்தோம். பேரின்பம் தன்னுடைய முகவரொருவரின் வீட்டிலிருந்து துவிச்சக்கர வண்டி ஒன்றை கொண்டுவந்தார். இருவரும் வவுனியா நகர்ப்பகுதியிலிருந்த என்னுடைய முகவரின் வீட்டிற்கு சென்றோம். அங்கு தங்கியிருந்து கொண்டு நிக்சன் அண்ணன் அவர்களால் குறிப்பிட்ட இலக்கு. எனக்கும் எனது முகவரிற்கும் தெளிவாக தெரிந்திருந்ததால் எனது முகவரினூடாக தகவலை சேகரிப்பதில் ஈடுபட்டேன். இரண்டு நாட்களிற்கு பின் வீரத்தேவன் மற்றும் போராளிகளுக்கு உணவுகள் எடுத்துக்கொண்டு இருவரும் காட்டுக்குள் சென்றோம். அங்கு சென்று நிக்சன் அண்ணாவுடன் நடைபேசியூடாக தொடர்பு கொண்டு இலக்கு தொடர்பான பிரச்சனைகளை தெரிவித்தேன். அதற்கு பதிலாக வேறு ஒரு தாக்குதல் திட்டத்தையும் சொன்னேன். அதற்கு அவர் மீண்டும் முயற்சிக்கும் படியும் அல்லது என்னை முடிவெடுக்கும் படியும் கூறினார். மீண்டும் இருவரும் எனது முகவரின் வீட்டிற்கு வந்தோம். எனக்கு வவுனியாப்பகுதி நன்கு பரிட்சயமானதால் எனக்கு தெரிந்த வேறு இரு முகவர்களை சந்தித்து இலக்கு பற்றிய தகவல்களை திரட்டியதனால் இலக்கு வவுனியாவில் இல்லை என்பது தெளிவாகிவிட்டது. அடுத்த தாக்குதல் திட்டத்தைப்பற்றி பேரின்பத்திற்கு கூறினேன். மீண்டும் இரண்டு நாட்களிற்கு பின் எமது அணிக்கு தேவையான உணவுகளையும் பொருட்களையும் எடுத்துக்கொண்டு இருவரும் காட்டுக்குள் சென்றோம். தாக்குதலுக்காக இன்னுமொருவரை அழைத்து வர வேண்டியதாக இருந்தது. இதனால் உடனே திரும்பாமல் துவிச்சக்கர வண்டியையும் காட்டுக்குள் மறைத்து வைத்துவிட்டு அணியுடன் தங்கினோம். விடிந்ததும் தாக்குதல் திட்டத்தையும் இடத்தையும் கூறினேன். உடனே எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு தாக்குதல் நடத்தமுன்வந்தாகள் வந்தார்கள். ஆனால் தாக்குதலுக்கு போரின்பன் உட்பட ஒருவர்மடடுமே தேவைப்பட்டது யாரைத்தெரிவு செய்வது என்பதே பெரிய சிக்கலாகிவிட்டது. பின் நிலவழகனை கூட்டிச்செல்வது என்று தீர்மாணிக்கப்பட்டது. வீரத்தேவனுக்கோ மிகுந்த கவலை. இருட்டிய பின் தான் காட்டிலிருந்து வெளியேற வேண்டும். அத்துடன் ஆயுதங்களும் கொண்டு செல்ல வேண்டியிருந்தது. சந்திரிக்கா பையின் உதவியுடன் மூவரும் ஒரு துவிச்சக்கர வண்டியில் சென்று மறு நாள் இரவு வெற்றிகரமாக தாக்குதலை முடித்துவிட்டு ஓட்டமும் நடையுமாக காட்டுக்குள் போய்ச் சேர்ந்தோம். வீரத்தேவனுக்கு தான் தாக்குதலில் பங்குபற்றவில்லை என்பது மிகவும் கவலை. தன் தாய் இறந்த செய்தி கேட்டபோது எப்படி இருந்தானோ அப்படியே இப்போதும் இருந்தான். அறிவாளியும் வீரத்தேவனைப் போலவே கவலைப்பட்டான். பேரின்பன் இருவரையும் சமதானப்படுத்தியும் அவர்கள் முகம் பழைய நிலைக்கு வரவில்லை. பின்னர் அதிகாலையில் எமது கட்டுப்பாடடு பகுதி நோக்கி நகரத் தயாரானோம். அப்போது வீரத்தேவன் நான் அணிந்திருந்த சேட்டை உற்றுப்பார்த்தான். நான் இராணுவ சீருடை அணியும் போது நான் அணிந்திருந்த சேட்டினைக் கழற்றி வீரத்தேவனிடம் கொடுத்தேன். அதற்கு வீரத்தேவன் நீங்கள் சேட்டைத் தந்து என்னை சமாளிக்கிறீர்கள் எனக்கு வேண்டாம் எனக் கூறினான். பின் எல்லோரும் வந்த பாதையினுடாக திசையறி கருவியின் உதவியுடன் இரண்டு நாட்களாய் நடந்து வரும்போது பயனபடுத்திய இராணுவ காவலரனின் பின்பக்கம் வந்து கண்கானித்தோம். நாம் கடந்துவந்தபாதையில் மேலதிக முற்கம்பிகள் போடப்பட்டிருந்தது. திரும்பி சென்று வேறு பாதை தேடினோம். எல்லாப்பக்கமும் விழிப்பாக இருந்ததால் எமது பகுதிக்கு செல்ல முடியவல்லை. மறு நாள் வேறு பாதை பார்த்து நடந்தோம். இருளும் சூழத்தொடங்கியது. திடிரென சிங்களத்தில் கதைப்பது மிக அருகில் கேட்டது. உடனே வீரத்தேவன் எல்லோலையும் பின்நோக்கி நகர சொல்லிசைகை காட்டியபடி எமக்கு காப்புக்கொடுத்துக் கொண்டு நின்றான். நாம் அந்த இடத்தை விட்டு நகர்ந்த பின் தான் வீரத்தேவன் இறுதியாக வந்தான். மறுநாள் மீண்டும் பழைய பாதைக்கே வந்தோம். கடந்துசெல்ல கூடியதான நிலமை இருந்ததால் வீரத்தேவனும், அறிவாளியும் இராணுவ நடமாட்டத்தை பார்த்து எமக்கு காப்புக் கொடுக்க நாம் மெதுவாக எமது பகுதிக்குள் நகர்ந்தோம். மறு நாள் காலையில் முகாமை அடைந்தோம். நிக்சன் அண்ணன் தாக்குதல் சம்பந்தமாக எல்லோருடனும் கதைத்த பின்னர் நான் புதுக்குடியிருப்பிலுள்ள முகாம் ஒன்றுக்கு போகும் போது வீரத்தேவனும் தனது தாயாரின் சோக செய்தியை விசாரிப்பதற்கு அளம்பிலிற்கு செல்வதற்கு தயாரனான் எரிபொருள் பிரச்சனை இருந்ததால் பேருந்திலேயே செல்லவேண்டியிருந்தது இருவரும் ஒன்றாகவே போகிறோம். ஏதோ ஒரு காரணத்துக்காக புதுக்குடியிருப்புடன் பேரூந்து நிற்கிறது. நான் புதுக்குடியிருப்பு கோம்பாவிலில் உள்ளமுகாம் அருகில் உள்ளதால் நான் நடந்துசெல்வேன் ஆனால் வீரத்தேவன் வாகனம் ஏதும் வந்தால்தான் அளம்பில் போகலாம் இந்தநிலையில் அளம்பில் நோக்கிச்செல்லும் வாகனங்கள் எதும் வரும்வரை நடந்தேபோகிறேன் என்று கூறி முல்லைத்தீவு வீதியை நோக்கி அந்த கேணல் நடந்தே போகிறான். பிற்பகுதியில் வீரத்தேவன் செய்த தாக்குதலகள் எத்தனையோ தென்னிலங்கையில் வீரத்தேவனால் ஒழுங்கு செய்து இலங்கையை உலுக்கிய சம்பவங்கள் பாதுகாப்புக் காரணத்துக்காக இங்கு குறிப்பிடவில்லை. பின்னர் நான் எத்தனையோ நகர்வுகளை எதிரியின் பிரதேசத்தில் செய்திருந்தாலும் எனது முதல் நகர்வில் என்னுடன் பங்குபற்றிய என் இனிய தோழர்கள் எவரும் தற்போது உயிருடன் இல்லை. என் இனியவர்களே நீங்கள் விட்டுச்சென்ற பணிகளை தொடர்ந்து செய்கிறேன். உங்களோடு வரும் வரை தொடர்ந்து செய்வேன். என்றும் உங்கள் நினைவுடன். சுதா. https://www.thaarakam.com/news/121091
  8. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுமே ஆன்ரி, ராஜன்விஷ்வா🎉🎉🎉
  9. லெப். கேணல் அசோக் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். On Apr 2, 2020 லெப். கேணல் அசோக் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். விடுதலையின் கனவுகளுடன் வெற்றிகளுக்கு வித்திட்டு கல்லறையில் உறங்கும் மாவீரர்கள். 02.04.2000 அன்று கிளிநொச்சி மாவட்டம் முகாவில் பகுதியில் “ஓயாத அலைகள் – 03“ தொடர் நடவடிக்கையின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் அரசி / இதயா, மேஜர் லக்சனா, லெப்டினன்ட் மணிநிலா, 2ம் லெப்டினன்ட் கிளிமொழியாள், வீரவேங்கை கலைமகள், வீரவேங்கை பூங்கொடி, வீரவேங்கை தமிழிசை / மதுரா ஆகிய வேங்கைகளின் 20ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும். 02.04.2000 அன்று “ஓயாத அலைகள் – 03“ தொடர் நடவடிக்கையின்போது இத்தாவில் பகுதியில் கண்டிவீதியை ஊடறுத்து நிலைகொண்டிருந்த வேளை இராணுவத்தின் முன்னேற்ற முயற்சியின்போது எமது மோட்டார் எதிரியின் கையில் அகப்படக்கூடாது என்பதற்காக மற்றவர்களை தளம் அனுப்பிவிட்டு மேட்டாருடன் குண்டை வெடிக்கவைத்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 2ம் லெப்டினன்ட் இசைவளவன் / நறுமுத்து அவர்களின் 20ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும். 02.04.2000 அன்று கிளிநொச்சி மாவட்டம் பளைப் பகுதியில் “ஓயாத அலைகள் – 03“ தொடர் நடவடிக்கையின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்டினன்ட் புவீந்திரன் / மண்ணரசன், லெப்டினன்ட் கூத்தரசன் / நிலவன் ஆகிய வேங்கைகளின் 20ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும். 02.04.2000 அன்று கிளிநொச்சி மாவட்டம் முகமாலை பகுதியில் “ஓயாத அலைகள் – 03“ தொடர் நடவடிக்கையின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வீரவேங்கை குயில்வண்ணன், வீரவேங்கை தமிழன்பன் ஆகிய வேங்கைகளின் 20ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும். 02.04.2000 அன்று மணலாறு கோட்டத்தில் மருதவோடைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் கிட்டு, மேஜர் அன்பு, 2ம் லெப்டினன்ட் ஜெயசீலன், 2ம் லெப்டினன்ட் சங்கர்ராஜ் ஆகிய வேங்கைகளின் 20ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும். 02.04.2000 அன்று திருமலை மாவட்டம் மூதூர் பகுதியில் சிறிலங்கா கடற்படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்டினன்ட் இளமாறன் அவர்களின் 20ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும். 02.04.2000 அன்று மட்டக்களப்பு மாவட்டம் சின்னவத்தை பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வீரவேங்கை குருமதன் அவர்களின் 20ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும். 02.04.2007 அன்று மட்டக்களப்பு மாவட்டம் கரடியனாறு கோட்ட கோப்பாவெளிப் பகுதியில் முன்னேற முயன்ற சிறிலங்கா இராணுவத்தினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் நவசங்கர், மேஜர் விழியரசன், மேஜர் ஜெகநாதன், லெப்டினன்ட் எழில்நிலா, 2ம் லெப்டினன்ட் நிமலன், வீரவேங்கை புவனேந்திரன், வீரவேங்கை சுடரோன், வீரவேங்கை செந்தமிழினி, வீரவேங்கை வசீகமாறன் ஆகிய வேங்கைகளின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். 02.04.2007 அன்று வவுனியா மாவட்டத்தில் சிறிலங்கா இராணுவத்தினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் திராவிடன் / ஆரியன், லெப்டினன்ட் நெடியோன் ஆகிய வேங்கைகளின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். 02.04.2007 அன்று யாழ். மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரவேங்கை சுபதீபன் அவர்களின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தாய்மண்ணின் விடிவிற்காக 02.04.2008 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் இளம்புலி, கப்டன் புரட்சித்தம்பி, கப்டன் அமலன், லெப்டினன்ட் கரிகாலினி / மதியருவி, லெப்டினன்ட் பரணி, லெப்டினன்ட் கதிரவன், லெப்டினன்ட் பகீரதன், லெப்டினன்ட் குயிலினி, 2ம் லெப்டினன்ட் போர்வாணன், 2ம் லெப்டினன்ட் இளங்கீரன், வீரவேங்கை பொய்கைக்கிளி ஆகிய வேங்கைகளின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். 02.04.2009 அன்று முல்லை மாவட்டம் புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருட னான நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் அசோக் அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும். https://www.thaarakam.com/news/120724
  10. களத்தில் ஒரு காட்டாறு லெப். கேணல் பரிபாலினி On Apr 1, 2020 லெப்.கேணல் பரிபாலினி சந்திரசேகரன் சுரனுலதா நல்லூர், யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு:06.07.1973 வீரச்சாவு:01.04.2000 நிகழ்வு:கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் “ஓயாத அலைகள் – 03“ நடவடிக்கையின்போது வீரச்சாவு களத்தில் ஒரு காட்டாறு லெப். கேணல் பரிபாலினி அன்றைய நாள், நாம் எதிர்பார்த்ததிற்கு முற்றிலும் மாறான களநிலைமை அது. எதிரி உசாரடைந்து, எமது நகர்வுகளையே அவதானித்துக்கொண்டிருக்க வேண்டும். நாலா புறமும் கவச வாகனங்களையும், கனரக ஆயுதங்களையும் நிலைப்படுத்திக் காத்துக் கிடந்தவரின் குகைக்குள் புகுந்த எமதணிகளை நோக்கி வாய் பிளந்தன இரும்புக் குழல்கள். எங்கும் நெருப்பு மழை, அந்த அக்கினிக் குழம்புகளுக்கு மத்தியில் இருந்து ஒலித்த அந்தக் குரல் தொலைத் தொடர்புக் கருவியூடாக எல்லோர் செவிகளிலும் ஒலித்துக் கொண்டிருந்தது. நீண்ட நெடுநேரம், அந்தத் தன்னம்பிக்கையான, உறுதியான, தெளிவான குரலை ஒலிபரப்பிக் கொண்டிருந்த தொலைத் தொடர்புச் சாதனம் அமைதியானது. “பரி… பரி… பரி…” “பரி… பரி…” என அனைத்துக் கருவிகளும் அலற அந்தப் பெயருக்குரியவள், அந்தக் குரலுக்குரியவள் அடங்கிப் போனாள். 1990 காலப்பகுதியில் பயிற்சிப் பாசறைகள் நோக்கி படையெடுத்த பெண்களில் இவளும் ஒருத்தி. எப்போதுமே அமைதியாகக் காணப்படும் இவள் எல்லோராலும் ‘நல்லூர் நோனா’ என அழைக்கப்பட்டவள். மணியடித்தால் சாப்பாட்டிற்கு முன்னின்று, வகுப்புக்குப் பின்நின்று, பயிற்சிக்கு முன்னின்று லெப். கேணல் மாதவியால் புடம் போடப்பட்டு, பரிபாலினியாக வெளிவந்த இவள்; 1992 முற்பகுதி வரை பலாலி, பத்தமேனி, தட்டுவன்கொட்டி என பல முன்னணிக் காவலரண்களிலும், வரலாற்றுச் சிறப்புமிக்க ஆகாய கடல்வெளிச் சமர், மின்னல் எனவும் பல சிறு சிறு சண்டைகளிலும் ஒரு போராளியாகவே தடம் பதித்தவள். 1992 ஆரம்பகாலம், எமது இதயபூமியான மணலாற்றை எதிரியின் ஆக்கிரமிப்புக்களிலிருந்து பாதுகாக்கும் பணியில் பெண் போராளிகளையும் ஈடுபடுத்துவதற்கென புதிய அணியொன்று உருவாக்கப்படுகின்றது. பத்தே பத்துப் போராளிகளுடனும், இருநூற்றைம்பது பயிற்சி எடுக்காத புதிய போராளிகளுடனும் மணலாறு சென்ற அந்த அணி, அவர்களைப் பயிற்றுவித்தே தமது பணியைத் தொடங்க வேண்டும். பொறுப்பாகச் சென்றவருக்கு தன்னுடன் வந்த பத்துப் போராளிகளும் என்ன நிலையில் இருக்கின்றனர் என்பதே தெரியாது. அவர்களில் பரிபாலினியும் ஒருவர். இவள் அங்கே பயிற்சிக்கான துணை ஆசிரியராக நியமிக்கப்படுகின்றாள். பயிற்சிக்கான ஒழுங்குகள் செய்து, பயிற்சியும் ஆரம்பமாகி ஆறே ஆறு நாட்கள். கொக்குத்தொடுவாய் இராணுவ முகாமிலிருந்து நாயாறு வரை மும்முனைகளில் முன்னேறி கரையோரப் பகுதியைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதன் மூலம், தமிழர் தாயகத்தை துண்டாடுவதுடன், வடக்கிலிருந்து கிழக்கிற்கான எமது விநியோகப் பாதையைத் துண்டிப்பதற்காகவும், மூவாயிரம் சிங்களப் படைகள் ‘கஜபார’ கட்டம் ஆறு (ஒப்பரேசன் சிக்கர் கஜபார) என்ற பெயருடன் பெரும் எடுப்பிலான நகர்வை மேற்கொண்ட போது, வழிமறித்து நடந்த சண்டைக்குக் காவும் குழுவாகச் செல்லத் தயாராகின்றனர். எல்லோருக்குமே காடு புதிது, புதிய போராளிகள் வேறு. எவருக்குமே ‘கொம்பாஸ்’ தெரியாது. மூன்று நாட்களில் ‘கொம்பாஸ்’ பயின்று, பரிபாலினியுடன், இன்னுமொரு போராளியுடனும் புதிய போராளிகள் களம் இறங்கினர். ஆறு நாட்களே பயிற்சி எடுத்த போராளிகள், காட்டு அனுபவங்களும், சண்டை அனுபவங்களும் குறைந்தவர்கள். சீனத்தயாரிப்பு டாங்கிகளும், கவச வாகனங்களும், பீரங்கிகளும், விமானங்களும், உலங்கவானூர்திகளும், கடல் பீரங்கிப்படகுகளும் குண்டு மழை பொழிய, அந்த அடர்ந்த காடுகளுக்கூடாகவும், திறமையாகத் தனது பணிகளைச் செய்து, ஆண்டாள் என்ற ஒரு புதிய போராளியை இழந்து, அவர்களின் பணிக்கு பரிசாகக் கிடைத்த ஐந்து ஏ.கே.யுடன் ஒரு ஏ.கே.எல்.எம்.ஜீ உடனும் முகாம் திரும்பியது அந்த அணி. பரிபாலினியின் சந்தோசத்திற்கு அளவேயில்லை. ‘பாத்தீங்களா, நாங்கள் சண்டைக்குப் போகாமல் சப்பிளைக்குப் போயே அஞ்சு ஏ.கே.யும்இ ஒரு எல்.எம்.ஜீ.யும் எடுத்திட்டம்’ என்று சொல்லிச் சொல்லி துள்ளித் திரிந்தாள். அன்று ஆறு நாட்களே பயிற்சி எடுத்த அந்தப் போராளிகளின் முதுகெலும்பாக நின்று செயற்பட்டவளே இவள்தான். எந்தவொரு இக்கட்டான நிலையிலும் சற்றேனும் பதட்டம் இருக்காது இவளிடம். அன்றிலிருந்து இன்றுவரை இது அவளிடம் ஒன்றிவிட்ட ஒன்று. இந்தப் பழக்கம்தான் பொறுப்பாளர்களிடம் பரிபாலினியை இனங்காட்டியது. இரண்டரை மாதப் பயிற்சிக்காலங்களில் துணைப் பயிற்சியாசிரியராக இருந்தது மட்டுமல்லாமல், முதல் பயிற்சியிலேயே எதிரியை எப்படிக் குறிபார்த்துச் சுடுவது என்பதைப் பயிற்றுவித்து, இடையிடையே நடக்கும் பதுங்கித் தாக்குதல்களுக்கு அவர்களுடன் சென்று மீண்டு, மீண்டும் பயிற்சியைத் தொடர்ந்து… ஐந்து இராணுவத்தைத் தாக்குவது என்றாலும் அதற்கும் இவர்கள் சென்று… எண்ணிக்கையில் அடங்காத பதுங்கித்தாக்குதல்கள். “தலைவர் அடிக்கடி சொல்லுவார், ‘ஆயிரம் முயல்களை ஒரு சிங்கம் வழி நடத்தலாம். ஆயிரம் சிங்கத்தை ஒரு முயல் வழிநடந்த ஏலாது’ என்று. அதேமாதிரி புதிய போராளிகளைக் கொண்டு செய்யிறது என்பது, அதுவும் காட்டுச் சண்டை, சண்டைச் சூழலே பிள்ளைகளுக்குத் தெரியாது. பரிபாலினியில் இருந்த நம்பிக்கையில்தான் முழுப் பிள்ளையளையும் விடுறம்” என்றார்; மணலாற்றின் ஆரம்பகால மகளிர் பொறுப்பாளர் சீத்தா அவர்கள். பயிற்சிகள் முடித்து இரு அணிகளாகப் பிரிக்கப்பட்ட படையணியில் ஒரு அணி பரிபாலினியின் தலைமையில் களம் இறங்குகின்றது. நூறு பேர் கொண்ட ஒரு அணிக்குப் பொறுப்பாளராகவும், அதே நேரம் இருநூறு பேரைக் கொண்ட முழு அணிக்கும் துணைப்பொறுப்பாளராகவும், நியமிக்கப்பட்ட பரியின் நிலை தர்மசங்கடமாகிப் போனது. தான் சண்டைக்கு முதலில் போகமுடியாதே என யோசித்தவள், ஐம்பது பேர் கொண்ட அணியைப் பொறுப்பெடுத்து முதலில் நகர்ந்து விட்டாள். ‘ஒப்பரேசன் செவன்பவர்’ (ஏழு சக்திகள்) முல்லைத்தீவு இராணுவ முகாமிலிருந்து முல்லைத்தீவு கொக்கிளாய் பிரதான வீதியூடாகச் செம்மலைஇ குமுழமுனை ஆகிய பகுதிகளை நோக்கி முன்னேறிய இராணுவத்தினருக்கு உதவியாக செம்மலைஇ அளம்பில் கடல் பிரதேசங்க@டாக தரையிறக்க முனைந்த இராணுவத்தினரை, கரையோரம் நின்ற பரிபாலினியின் அணி எதிர்கொண்டது. ஒரே நேரத்தில் மூன்று கடல்கலங்கள் சரமாரியாக குண்டுகளை வீசியவாறு கரையை நோக்கி வருவதும்இ இவர்களின் துப்பாக்கிகள் சடசடக்க பின்வாங்குவதும் பின் வருவதும் போவதும், வருவதும் போவதுமாகத் திணறிய கலங்கள் இறுதியில் ஓடியேவிட்டன. மணலாற்றின் வரலாற்றுச்சமர்களில் பெரும் எதிர்ச்சமரான இந்தச் சமரில்இ எதிரியின் கடல்வழி விநியோகத்தைத் தடுத்து நிறுத்திய பெரும் பணியில் எமது இன்றைய தளபதியான இவளின் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகவே இருந்தது. அன்றொருநாள் சண்டை முடிந்து அனைத்து அணிகளும் திரும்பிக்கொண்டிருந்தது. பரியைக் காணவில்லை. ‘எமது எதிர்காலத் தளபதியை இழந்து விட்டோமா’ என எல்லோர் மனங்களும் அங்கலாய்த்துக் கொண்டிருந்தது. ‘பரிபாலினி வீரச்சாவாம்’ என்ற செய்தியும் வந்துவிட்டது. ஆனால் மனங்கள் மட்டும் ஏற்க மறுத்தது. காயமடைந்தும், வீரச்சாவடைந்தும் வரும் ஒவ்வொருவரையும் ஓடி ஓடிப் போய்ப் பார்த்தார்கள். ஒவ்வொரு முறையும் ஏமாற்றம். மனமும் சோர்ந்து போய்க் கொண்டிருந்த அந்தக் கணத்தில் நான்கு பேர்களின் தோள்களில் ஒரு ‘ஸ்ரெச்சர்’ ஒரு நப்பாசையுடன் ஓடிப்போய்ப் பார்த்தால் பரிபாலினி. சீராக மூச்சு வந்து கொண்டிருந்தது, உயிர் பிரியவில்லை என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டோம். கால்கள், வயிறு, ஒருபக்கத் தாடை எனப்பிய்ந்து தொங்கக் கட்டுப்போட்டபடி…… பல மைல்களுக்கப்பால் உள்ள கொக்குத்தொடுவாய் இராணுவ முகாமை நோக்கி நடையாய் நடந்து, பல இராணுவ அரண்களை தாக்கியழித்த அந்தச் சமரில் இவள் படுகாயமடைய, சிலர், ‘வீரச்சாவு’ எனக்கூற, சிலர் ‘இல்லை’யென, ‘இவ்வளவு தூரம் கொண்டு போகிறதுக்கிடையில் ஆள் முடிஞ்சிடும்’ என்று இன்னொருவர் சொல்ல, அவள் வளர்ந்த குஞ்சுகளின் தோள்களில் மூச்சுப்பேச்சற்ற நிலையில் எதுவுமே அறியாதவளாய் வந்து சேர்ந்தாள். காயங்கள் ஆறி, மீண்டும் கானகம் வந்தவளை எல்லோருமே கிண்டலடிப்பார்கள்; அவளின் ஆறு பற்களையும் இழந்த வாயைப்பார்த்து. இவளுக்கும் சிரிப்பு வரும். ஆனால் சிரிக்க முடியாதவளாக கைகளால் மூடி சிரமப்பட்டுச் சிரிப்பாள். தொடர்ந்தும் கானகம் அவளைக் களம் நோக்கி அழைத்தது. கடும் பயிற்சி, கோட்டைக்கேணிக்கும் கொக்குத்தொடுவாய்க்கும் இடையில் ரோந்துவரும் இராணுவத்தினரை மறைந்திருந்து தாக்க வேண்டும். அந்த முகாமிலிருந்து இந்த முகாமுக்குக் கையசைத்தால் தெரியும். இரண்டு முகாம்களுக்கிடையில் உள்ள வெட்டை வெளியில் புல்லோடு புல்லாக இவர்கள். 8.30 மணிக்கு அவ்வழியால் வரும் இராணுவம் வரவில்லை. இவர்கள் திரும்பவும் வழியில்லை. இருட்டிய பின்னர்தான் அசையலாம். அதிகாலை 4.00 மணிக்கு நிலையெடுத்தவர்கள் ‘குளுக்கோஸ்’ பக்கற்றும், தண்ணீர் பக்கற்றும்தான் ஆளுக்கொன்று கொண்டு சென்றார்கள். அதுதான் அன்றைய சாப்பாடு. மாலை 5.00 மணி அவர்கள் காத்துக்கிடந்த இரைகள் கிடைத்தன. நல்ல சண்டை, கைப்பற்றிய ஆயுதங்களுடன் திரும்பினர். “மணலாற்றிலிருந்து வந்த இவ்வளவு வருடங்களாகியும், இன்றும் சகபோராளிகளிடம் பரிபாலினியின் செயற்பாடுகளை குறிப்பிட்டுக்கொள்கிறேன் என்றால், அதற்குக் காரணம் அவரின் திறமையான செயற்பாடுகள்தான்” என்றார் முன்னாள் மணலாறு மாவட்டத் துணைத் தளபதி பாண்டியன் அவர்கள். அடிக்கடி பதுங்கித் தாக்குதல்கள், பதுங்கித் தாக்குதல்கள் என விரிந்த களம் இதயபூமி – 01 உடன் அவளுக்கு முற்றுப்பெற்றது. ‘பரி அக்கா உங்களை பிள்ளைகளுக்கு வகுப்பு எடுக்கட்டாம்’ என்றால் அந்த ஏரியாவுக்குள்ளேயே பரிபாலினியைக் காணமுடியாது. படிப்பதென்றால் பச்சைக்கள்ளி. அப்படிப்பட்டவள் கல்விப்பிரிவுக்கென அனுப்பப்படுகிறாள். அந்தக் காலப்பகுதியில்தான் மணலாறு மாவட்டச் சிறப்புத் தளபதி லெப். கேணல் அன்பு வீரச்சாவடைய பரிபாலினி அழுத அழுகை. அன்றுதான் அவள் அழுததை எல்லோரும் பார்த்திருக்கின்றோம். அவரின் வித்துடலுக்குக்கூட அஞ்சலி செலுத்த சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இன்றுவரை அவளுக்கு அது அழியாத கவலை. இவளுக்கு ஒரு அறை, ஒரு மேசை, கதிரை, அறை எப்பொழுதுமே பளிச்சென்று இருக்கும். மேசையில் ஒழுங்காக உறைகள் இட்டு அடுக்கப்பட்ட கொப்பிகள், நேரே சுவரில் நாளிதழில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட அன்பண்ணையின் படம் ஒவ்வொரு நாளும் முற்றத்தில் இருந்த மல்லிகையில் பூக்கொய்து படத்துக்கு வைத்து அஞ்சலி செய்து, அவளை போரியலில் வளர்த்த ஆசான் அல்லவா லெப். கேணல் அன்பு. இந்தக் காலங்களில் ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என்று இவர்களுக்குக் கட்டளை. முகாமில் ஒரே ‘கஸ்புஸ்’தான். அரைவாசித்தமிழ் அரைவாசி ஆங்கிலம். ‘சிஸ்ரர் நவணி…… வோட்டர் டாங்…..’ நிரப்பும்படி சைகையில் முடிப்பாள் பரி. பூச்செடிகளுக்கு தண்ணீர் உற்றும் போது யாரும் வந்து ‘என்ன செய்கிறீர்கள்?’ என்று கேட்டால் பரி ஒருமுறை சுற்றும் முற்றும் பார்த்து முழுசிவிட்டு, ‘பிளவர் றீ வோட்டர்’ மிகுதி சைகையில். கலை நிகழ்ச்சி என்றால் பரிக்கு சரியான விருப்பம். ஆனால் மேடையில் ஏறி எல்லோர் முன்னாலும் செய்வதென்றால் பயம், கூச்சம் இங்கேயோ செய்துதான் ஆகவேண்டும் என்ற கட்டாயம். என்ன செய்வது? அன்று மேடை ஏறிய பரி எல்லோரையுமே வாய்பிளக்க வைத்தாள். “அதிசயத்தின்மேல் அதிசயம். பரிபாலினியா இப்படி நடித்தாள்” என்று அனைவருமே ஆச்சரியப்பட்டனர். ஏனென்றால் இந்தப் பரிக்குள் இப்படியொரு கலைத்திறன் இருக்குமென்று எவருமே நம்பவில்லை. ஒருநாள் இவர்களின் தமிழ் ஆசிரியர் எல்லோரையும் தூய தமிழில் ஆக்கம் ஒன்று எழுதும்படி கூறினார். பரியின் பெரும் முயற்சியில் சிறுகதை ஒன்று உருப்பெற்றது. அதை இன்னொருத்தியிடம் வாசிக்கும்படி கொடுத்தாள், அவளும் இலேசுப்பட்டவள் அல்ல நடிப்பதென்றால் அவளுக்குக் கைவந்த கலை. பரியின் சிறுகதையை ஏற்ற இறக்கங்களுடன் பெரிதாக வாசிக்கத் தொடங்கினாள். “அந்தப் பெண்ணின் கண்களிலிருந்து சிறுநீர் வழிந்தது” எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினர். பரிக்கு ஒன்றுமே விளங்கவில்லை. ‘ஏனப்பாஇ ஏனப்பா என்ன எல்லோரும் சிரிக்கிறீங்கள்’ என்றவளிடம் ‘சிறுநீர் என்றால் என்னப்பா?’ ‘சிறிய நீர்இ சொட்டு நீர்’ என விளக்கியவள் தன் பிழை விளங்கவும் எல்லோருடனும் சேர்ந்து தானும் சிரித்து…… சேர்ந்து படித்து…… போராளிகளுக்கு வகுப்பெடுத்து…… புதிய போராளிகளை இணைத்து…… வெளியில் சிறுபிள்ளைத் தனத்துடன் காணப்படும் இவளிடம் முழுமையான ஒரு ஆளுமைத்தன்மையும், தன்னம்பிக்கையும் இன்னும் இன்னும் நிறையவே செய்ய வேண்டுமென்ற வெறித்தனமும் நிறையவே இருந்தது. இவளின் உருவத்திற்கும், செயல்பாடுகளுக்கும் எந்த ஒரு சம்பந்தமுமே இல்லை என்பது மாதிரியான ஒரு தோற்றம். இவளின் செயல்பாடுகளின் வெற்றிகளே இதற்கான சான்றுகள். மீண்டும் பரிபாலினியின் சண்டைக்களங்கள் விரியத்தொடங்கியது. 1996 இல் புதிதாகப் பயிற்சிகளை முடித்துக்கொண்டு வெளிவந்த ஒரு அணிக்குப் பொறுப்பாளராக, அரசியல்துறை மகளிரணியாக…… அந்த அணி களம் இறங்குகின்றது. அவர்கள் எதிர்கொண்ட சிக்கல்களோ எண்ணிலடங்காதவை. நீண்ட காலமாகச் சண்டைகளில் பங்குபற்றாது வெளி வேலைகளில் ஈடுபட்டிருந்த போராளிகள். இவர்களுடன் புதிய போராளிகள், இவர்கள் நல்லமுறையில் சண்டை பிடிப்பார்களா? என்ற கேள்வி ஏனைய தாக்குதல் அணிகளுக்கு எனினும் ‘சத்ஜெய’ இராணுவ நடவடிக்கைக்கு எதிராக நின்று போரிட்டது இவர்களின் அணியும். பரந்தன் – ஆனையிறவு மீதான தாக்குதல் ஒன்றுக்கு பல அணிகள் பயிற்சி எடுத்தது. யார் யார் எந்தப் பகுதிகளுக்கென அவ் அணிகள் பிரிக்கப்பட்டபோது, ஒரு அணிக்கு உதவி அணியாக இவர்கள் பிரிக்கப்பட்டனர். ஆனால் இவர்களின் அணியை அவர்கள் “தமக்கு வேண்டாம்” எனக்கூறிவிட்டனர். பரிபாலினி, மேஜர் நித்தியா, கப்டன் ஜெயஜோதி உட்பட அனைத்துப் போராளிகளும் இறுகிப் போயினர். “இவங்களுக்குச் செய்து காட்டுறம்” என்ற சாவாலோடு களமிறங்கியவர்கள் சண்டையிட்டனர். காலையிலேயே விழுப்புண்ணடைந்த பரிபாலினி மாலை வரை களத்திலிருந்து வெளியேற மறுத்துவிட்டாள். பின்னரும் கட்டாயப்படுத்தியே வெளியேற்றப்பட்டாள். தொடர்ந்து ‘ஜெயசிக்குறுய்’ களம், முன்னர் இவர்களை மறுத்தவர்கள், சளைக்காது போரிட்ட இவர்களைக் கேட்டுப் பெறும் அளவுக்கு வளர்ச்சிகண்டு…… ஓயாத உழைப்பும், கடுமையான பயிற்சியும்…… எல்லாவற்றிற்கும் அடிநாதமாய் பரிபாலினி…… ஓமந்தை இராணுவ முகாம் மீதான தாக்குதலுக்கு தாமே தடையுடைத்து, ஏனைய அணிகளுடன் தமது அணி ஒன்றுடன் பரிபாலினியும் உள்நுழைந்து, பல இராணுவக் காவலரண்களைத் தாக்கியழித்து மீண்டபோது, கப்டன் ஜெயஜோதியுடன் இன்னும் சில போராளிகள் திரும்பவில்லை. ஆனால் இவர்களைப் பாராட்டாத தளபதிகளே இல்லை. புளியங்குளத்தில் ஒரு பகுதிக்குப் பொறுப்பாக நின்று புளியங்குளத்தை ‘புலிகள் புரட்சிக் குளமாக’ மாற்றியதில் இவளின் பெரும் உழைப்பும் உள்ளது என்றால் மிகையானது. அந்தச் சமருக்குப் பொறுப்பாக நின்ற தளபதி பிரிகேடியர் தீபன் அவர்கள் கூறும்போது, “பரிபாலினியைப் பொறுத்த வரையில் குறிப்பாக நல்ல விசயங்களைப் பார்த்தனான், நல்ல ஒரு நிர்வாகி, துணிச்சலான சண்டைக்காரி மற்றது எல்லாத்திலேயும் ஒரு ஆர்வம் உள்ளவர் இந்த மூன்றையும் நான் அவளிடம் நேரடியாகப் பார்த்தனான்” என்றார். “ஜெயசிக்குறுய்” களமுனையில் இருந்து எடுக்கப்பட்ட அரசியல்துறை மகளிர் அணியின் போராளிகள் ஒவ்வொருவரும் அவரவரின் முன்னைய பணிகளைத் தொடரும்படி கூறிய தலைவர், பரிபாலினியை சமராய்வு பகுப்பாய்வுப் பிரிவுக்குத் தெரிவு செய்கின்றார். சண்டையில் நிற்கும் ஒவ்வொரு போராளிகளினதும் திறமைகளையும், செயல்பாடுகளையும், நிலமைகளுக்கேற்ப முடிவெடுக்கும் தன்மைகளையும், சண்டையின் வெற்றி தோல்விகளுக்கான காரணிகளையும், பகுப்பாய்வு செய்வதுமே இதன் நோக்கமாகும். ஆரம்பகாலத்தில் பரிபாலினியின் பொறுப்பில் பெண்போராளிகளே செயல்பட்டு வந்தனர். இந்தப் பணிகளில், எள் எனும் முன் எண்ணெய்யாக நிற்பாள் பரிபாலினி. கனவிலும் நினைவிலும் “அண்ணை எங்கள நம்பி விட்டிருக்கிறார். நாங்கள் திறமையாகச் செயற்பட வேண்டும்” என்பதே அவளின் தாரகமந்திரமாக இருந்தது. 01.02.1998 இல் ஆனையிறவு பரந்தன் சண்டையில் ஆரம்பமாகி 1999 இல் ஆண் போராளிகளையும் இணைத்து பிரிகேடியர் சொர்ணம் தலைமையில், எந்த மூலை முடுக்குகளில் நடைபெறும் சிறு சிறு தாக்குதல்கள் என்றாலும் அங்கெல்லாம் பரியும் சென்று வந்தாள். போகும் போது பாதை மாறி எதிரியின் பிரதேசங்களுக்கு முன்னால் சென்று மீண்ட சம்பவங்கள் பல. ஓயாத அலைகள் மூன்றின் ஆரம்ப நடவடிக்கையின் போது சமராய்வு பகுப்பாய்வுப் பிரிவினரைக் கொண்டு களமிறங்கி மீட்கப்பட்ட பிரதேசங்களைப் பாதுகாக்கும் பணியில் மணலாற்றில் ஈடுபட்டு, மீண்டும் பகுப்பாய்வு வேலைகள் செய்து… தொடரும் ஓயாத அலைகளின் வீச்சால் எமது களமுனைகள் விரிவடைய, விரிவடைய தற்காலிகமாக சமராய்வு பகுப்பாய்வுப் பிரிவிலிருந்த ஒவ்வொருவரும் வெவ்வேறு படையணிகளுடன் இணையுமாறு பணிக்கப்பட, இவளின் பயணம் சோதியா படையணியை நோக்கித் தொடர்ந்தது. “என்ர சண்டை அனுபவங்களைக் கொண்டு துர்க்காவுக்கு உதவியா நின்று, படையணியை நன்றாக வளர்த்து, அண்ணை பிள்ளையள எப்படியெல்லாம் வளர்க்க வேணும் என்று நினைக்கிறாரோ அதற்கெல்லாம் நாங்கள் செயலுருவம் கொடுக்க வேணும்” என்று கூறிச் சென்றவளை முதல் சமரிலேயே நாம் இழந்துவிட்டோம். 01.04.2000 நள்ளிரவு கடந்த விடிகாலை இயக்கச்சி இராணுவத்தளம் புகுந்து திரும்பாத தோழிகளுள் பரிபாலினியும் ஒருத்தியாக… பரிபாலினி மணலாற்றுக் காட்டின் மரவேர்களில் காவலிருந்து. காட்டுப் பறவைகளையும் விலங்குகளையும் நேசித்து, பொதிகள் பல சுமந்து, ஆழக்கிணறுகள் வெட்டி, பலம் மிக்க பாசறைகள் அமைத்து, உரமேறிய கைகளுடன் எதிரியுடன் பொருதி, பல துறைகளிலும் வளர்த்து தலைவனின் பெரும் கனவுகளுக்கேற்ப பிரகாசிக்கத் தொடங்கிய ஒரு இளம் தளபதி…… அடிக்கடி ரவைகளால் துளைக்கப்பட்டு, குண்டுச் சிதறல்களால் பிய்க்கப்பட்டு, இரத்தம் கொட்டி, வீரத் தழும்புகளால் நிறைந்த அவள் உடல்…… தனது சொத்தி வாயை நெளித்து, ‘இஞ்சேருமப்பா இஞ்சேருமப்பா…’ என்று எம்மைச் சுரண்டும் அந்த அழகான சின்ன உருவம்…… ஓ… அவள் ஓயவில்லை. இன்னும் எம்முன் நிழலுருவமாக உலாவிக் கொண்டிருக்கிறாள். நினைவுப்பகிர்வு: உலகமங்கை. நன்றி – களத்தில் இதழ் (31.08.2000). https://www.thaarakam.com/news/120583
  11. பல வெற்றிக்கு வித்திட்ட வீரத்தளபதி லெப். கேணல் அமுதாப் ! Last updated Mar 31, 2020 சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி லெப்.கேணல் அமுதாப் அவர்களின்11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள். லெப். கேணல் அமுதாப் சிதம்பரப்பிள்ளை சிவநாயகம் பிறப்பு- 15.04.1976 வீ.சாவு-31.03.2009 சொந்த முகவரி- தவசியாகுளம்,சாஸ்திரிகூழாங்குழம்,வவுனியா 18 ஆம் ஆண்டில் காலடி வைக்கும் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் கடந்த காலச் சாதனைகளை அப்படையணியின் துணைத் தளபதி அமுதாப் விபரித்துள்ளார். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி, 18 ஆம் ஆண்டில் கால் பதிப்பதனையிட்டு கடந்த வியாழக்கிழமை (10.04.08) நடைபெற்ற நிகழ்வில் அவர் பேசியதாவது: இன்று நெருக்கடியான கால கட்டத்தில், நெருக்கமான களங்களில் நின்று கொண்டு நெருக்கடிகளைச் சந்தித்து சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கின்ற சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் 18 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் இந்நாளில் சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நான் நினைக்கின்றேன். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் 2 ஆம் கட்ட ஈழப்போர் தொடப்பட்ட போது வன்னியைக் கைப்பற்றுவதற்றாக சிங்களப் படைகள் தயாராகிய நேரத்தில் அந்தச் சிங்களப்படை நடவடிக்கையை தடுத்து நிறுத்துவதற்காக ஒரு மரபு வழிப்படையணியை தேசியத் தலைவர் உருவாக்கினார். 10.04.1991 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாளில் சகல மாவட்டங்களில் இருந்தும் ஒன்றிணைக்கப்பட்ட போராளிகளைக் கொண்டு சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி உருவாக்கப்பட்டது. 05.05.1991 ஆம் ஆண்டு வடபிராந்திய இராணுவத்தளபதி லெப். ஜெனரல் டென்சில் கொப்பேக்கடுவ தலைமையில் வன்னியைக் கைப்பற்றுவதற்காக “வன்னி விக்கிரம” படை நடவடிக்கை தொடங்கப்பட்டது. அந்த நடவடிக்கையை முதல் களமாக சந்தித்த சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி 20 போராளிகளை இழந்து அந்தப் படை நடவடிக்கையை முற்று முழுதாக முறியடித்து தனது முதலாவது போர்க்களத்தில் சாதனையை நிகழ்த்தியது. தலைவர் எதிர்பார்த்ததனை கேணல் பால்ராஜ் தளபதியாக இருந்து லெப். கேணல் ராஜன் வழிநடத்தி அந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது. அன்று டென்சில் கொப்பேக்கடுவவை களத்தில் சந்தித்தோம். இன்று மன்னார் களத்தில் லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவின் வழிநடத்தலில் உள்ள படைகளை சந்தித்து 18 ஆண்டுகால போர் வரலாற்றை நாம் தகர்த்துக் கொண்டிருக்கின்றோம். தமிழீழ விடுதலைப் போராட்ட மவரலாற்றில் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணிக்கு ஒரு தனி வரலாறு இருக்கின்றது. 17 ஆண்டு காலமாக இந்தப் போராட்டக் களத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இராணுவச் சாதனைகளில் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தனக்கு என ஒரு தனி முத்திரையைப் பதித்திருக்கின்றது. இன்று வரைக்கும் இந்த தமிழீழப் போர் அரங்கில் தென் தமிழீழம், வட தமிழீழம் எங்கும் தனது போர் நடவடிக்கையில் இப்படையணி ஈடுபட்டிருக்கின்றது. 5 சிறப்புத் தளபதி 4 தளபதி ஒரு துணைத்தளபதி 12 தாக்குதல் தளபதிகள் உட்பட அற்புதமான 1,200 போராளிகளை இழந்து இப்படையணி நிமிர்ந்து நிற்கின்றது. களங்களில் சிங்களப் படைகளுக்கு எதிராக துணிந்து நிமிர்ந்து நின்று களமாடி வருகின்றது. தலைவர் எதிர்பார்ப்பதனை சிங்களப் படைகளின் களமுனைளில் சண்டையின் ஊடாக சாதனைகள் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. சண்டை என்பது சாதாரண விடயமல்ல. இரத்தங்களையும் பிணங்களையும் கடந்து துன்பங்களையும் துயரங்களையும் கடந்து வார்த்தைகளாலும் சொற்களாலும் சொல்லமுடியாத கள யதார்த்தத்திற்குள் நின்று இராணுவ நடவடிக்கைக்கு எதிராக களமாடி உயிரையும் இரத்தத்தையும் சிந்தி போரை வெல்வது என்பது சாதாரண விடயமல்ல. அந்தச் சாதாரண விடயம் என்று சொல்லப்படுகின்ற விடயத்தை சாதாரண விடயமாக உங்களின் பிள்ளைகள் எமது போராளிகள் களத்தில் நிகழ்த்திக் கொண்டிருக்கின்றனர். களம் என்பது நாளாந்தம் கடுமையானதாக இருக்கும். அந்தக் களத்தில் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையிணியின் பெருமை சாதனை என்பது இன்று நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றது என்று சொன்னால் இந்தக்களத்தில் தமது உயிரைத் தியாகம் செய்த அதிமுக்கியத்துவம் வாய்ந்த தளபதிகளின் இப்படையணியில் இருந்து தமது உயிர்களை அர்ப்பணித்த போராளிகளின் அதிமுக்கியமான சாதனைகளின் ஊடாகத்தான் இப்படை நிமிர்ந்து நிற்கின்றது. எனவே தான் இப்படையணியின் போரியல் வரலாற்றில் இப்படையணியை வழிநடத்திய சில தளபதிகளின் குறிப்புக்களை அவர்களின் சாதனைகளை அவர்கள் அந்தக் கட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளை குறிப்பிட்டுச் சொல்ல முடியும். தமிழீழப் போர் அரங்கில் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணிச் சிறப்புத் தளபதியாக இருந்த போது லெப். கேணல் ராகவன் ஒரு சுத்தப் போர் வீரன். தனது வாழ்க்கையைக் களத்தில் நகர்த்திய ஒரு வீரன். இந்தக் கள நடவடிக்கையால் படிப்படியாக சண்டைக்களங்களில் புடம்போடப்பட்டு வளர்க்கப்பட்ட ஒரு சிறந்த தளபதியாக அடையாளம் காணப்பட்டு சிறப்புத்தளபதியாக நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பில் நியமிக்கப்பட்ட போது “ஜெயசிக்குறு” படை நடவடிக்கை நிகழ்ந்தது. ஒட்டிசுட்டான், மாங்குளம், பள்ளமடுவில் நிற்கின்ற போது விடுதலைப் புலிகளின் கதை முடியப் போகின்றது- என்ற சொல்லப்படுகின்ற நேரம் அது. “ஓயாத அலைகள் – 03” இராணுவ நடவடிக்கையை நாம் தொடங்கியிருக்கின்றோம். 02.11.1999 ஆம் ஆண்டு ஒட்டிசுட்டானில் அதனைத் தொடங்குகின்றோம். இக்கட்டான களமுனையாக இருந்தபோது அந்தக்களத்தில் தனது படையணிச் சாதனைகளைப் படைக்க வேண்டும் என்பதற்காக களத்தில் முதலாவது தளபதியாக நின்று களமுனையை உடைத்துக்கொண்டு உள்நுழைகின்ற போது ஒட்டிசுட்டான் மண்ணில் “ஓயாத அலைகள் – 03” இன் முதலாவது வித்தாக எமது சிறப்புத் தளபதி தம்பிவேவி தனது உயிரை அர்ப்பணித்தார். அந்த வீச்சு அதன் இழப்பு களத்திலே நின்ற சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி போராளிகளுக்கு ஒரு வேகத்தை தந்தது. ஒரு விவேகத்தை தந்தது. சிங்களப் படைகளைக் கொல்ல வேண்டும் என்ற ஓர்மத்தை தந்தது. அந்த ஓர்மம்- “ஓயாத அலைகள் – 03” இராணுவ நடவடிக்கையினால்- சிங்கள அரசாங்கத்தின்- சிங்களப் படையினரின்- கோட்பாடுகள் தகர்த்து எறியப்பட்டு இராணுவச் சாதனை நிகழ்த்தப்பட்டது. அக்களங்களில் எல்லாம் எமது சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியோடு சகோதர படையணிகளாக பல படையணிகள் களமுனையில் தமது சாதனைகளை நிகழ்த்தியிருக்கின்றன. இதே படையணிக்கு சிறப்புத் தளபதியாக இருந்து நாகர்கோவில் மண்ணில் “ஓயாத அலைகள் – 04” நடவடிக்கையைச் செய்ய முற்பட்ட நேரம் அது. தனது படையணியை வைத்துக்கொண்டு குறைந்த இழப்புக்களோடு கூடிய வெற்றியைப் பெறுவதற்காக களமுனையில் வேவு நடவடிக்கையில் ஈடுபட்ட போராளிகள் வந்து தகவல்களைச் சொன்னபோது அத்தகவலை நேரடியாகப் பார்க்கச் சென்ற நிலையில் சிங்கள இராணுவத்தின் தாக்குதலுக்கு இலக்காகி காயப்பட்டு 23.10.2000 ஆம் ஆண்டு தனது உயிரை அர்ப்பணித்தார் லெப். கேணல் சேகர். இவ்வாறாகத் தான் வரலாறுகள் களத்தில் நிகழ்த்தப்பட்டன. இவ்வாறு ஒவ்வொரு தளபதியின் வழிகாட்டலும் வழிநடத்தலும் களத்தில் நின்று போரை வழிநடத்தியதால் தான் இன்றும் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி என்று சொன்னால் சிங்களப் படைகளுக்கு அவர்களை அறியாமலே பயம் குடிகொண்டிருக்கின்றது. அந்த வகையில் இந்தப் படையணி சாள்ஸ் அன்ரனி எந்த மண்ணில் பிறந்தாரோ எந்த மண்ணில் பிறப்பு எடுத்தாரோ அதே மண்ணுக்குப் போய் இந்தப் படையணி சண்டையிட வேண்டும் என்று சொல்லி தலைவர் விரும்பினார். இதன் அடிப்படையில் 1995 ஆம் ஆண்டு லெப். கேணல் கில்மன் சிறப்புத் தளபதியாக இருந்தபோது இப்படையணி தலைநகர் நோக்கி நகர்ந்தது. அங்கே சாள்ஸ் அன்ரனியின் பெயரைச் சொல்லி களமாடியது. 10 மாதங்களாக திருகோணமலை மாவட்டத்தில் இப்படையணி அங்கே சாதனைகளை நிலைநாட்டியது. இவ்வாறாக கடந்த 18 ஆண்டு காலமாக களங்களில் சிங்களப் படைகளோடு களமாடியிருக்கின்றது. போர்களையும், பிணங்களையும் கடந்து துன்பங்களைனயும், துயரங்களையும் கடந்து வீரத்தோடும், ரோசத்தோடும், மானத்தோடும் சிங்களவனை அழிக்க வேண்டும் என்ற நோக்கோடு நாம் போராடியிருக்கின்றோம். போராடி வருகின்றோம். இன்றும் களங்களில் போராடுகின்றோம். கடந்த ஆண்டு இதே நாள் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி முள்ளிக்குளத்தில் சிங்களப் படைகளின் ஒரு தாக்குதலை எதிர்கொண்டது. கடந்த ஆண்டின் இதே மாதம் சாள்ஸ் அன்ரனியின் 17 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைத்தபோது புதிதாக இணைக்கப்பட்ட போராளிகள் இப்படையணியில் இணைக்கப்பட்டிருந்தனர். பெற்றோரை சந்தித்த 4 ஆவது நாள் மன்னார் முள்ளிக்குளத்தில் சிங்களப் படைகளோடு சாள்ஸ் அன்ரனி படை மோதியது. போர் மூண்டது. சில மணிநேரச் சண்டை… புதிய போராளிகள் உள்வாங்கப்பட்டது என்று நாம் சொல்கின்றோம். பெற்றோர் சந்திப்பை முடித்த 4 ஆவது நாள் களத்திற்குச் சென்ற போராளி, இந்த சாள்ஸ் அன்ரனியின் பெயரைத்தாங்கி இடி என புயல் என சிங்களப்படையோடு மோதினான். 20-க்கும் அதிகமான சிங்களப் படைகள் கொல்லப்பட்டு 12-க்கும் அதிகமான ஆயுதங்கள் எடுக்கப்ட்டன. 8 உடல்கள் கைப்பற்றப்பட்டன. 17 ஆவது ஆண்டை வெற்றியோடு நாம் நகர்த்தினோம். இன்று ஒரு ஆண்டைப் பூர்த்தி செய்து கொண்டிருக்கின்றது. இன்று வரைக்கும் அந்த அணியை வழிநடத்திய தாக்குதல் தளபதிகள் அனைவரும் மன்னார் களமுனையில் ஓய்வில்லாமல் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர். களத்தில் வெற்றி இலக்காகக்கொண்ட படையணியில் இருக்கின்ற போராளிகள்- தளபதிகள் அனைவரும் போரின் மையத்தில் நின்றுதான் சண்டையை வழிநடத்திக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறாகத் தான் சண்டைக்களங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனையிறவு- பரந்தன் கூட்டுப்படைத்தளம் இருந்தபோது 09.01.1997 ஆம் ஆண்டு ஒரு தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தத் தாக்குதலை வெற்றி கொள்வதற்காக அணிகள் நகர்ந்து கொண்டிருந்தன. கம்பிவேலி தடைகளைத் தகர்த்தெறிகின்ற டொபிடோ என்று சொல்லப்படுகின்ற வெடிமருந்து நிரப்பிய டொபிடோவை வைத்து கம்பிகளை அகற்றிக்கொண்டிருந்த போது ஒரு டொபிடோ வெடிக்காத போது ஒரு கம்பிவேலி அகற்ற முடியாத சூழல் காணப்பட்டது. எதிரியின் துப்பாக்கி ரவைகளுக்குள் எமது போராளிகள் நகர்ந்து கொண்டிருந்தனர். சிறிய வயது நிரம்பிய லெப். சுயாந்தன் என்கின்ற போராளி முடிவெடுத்தான்- உடனடியாக களத்தில் நின்று இரத்தத்திற்குள் நின்று பிணங்களுக்குள் நின்று மரணத்தின் வாசலில் நின்று முடிவெடுத்தான். தனது தியாகத்தின் மூலம் செய்வதன் ஊடாக படையணியை நகர்த்தமுடியும் என்று முடிவெடுத்தான். உடனடியாக கம்பிவேலிக்கு மேல் தனது உடலைச் சாய்த்து கம்பிவேலியை அமர்த்தி அப்படியே படுத்திருந்தான். அவனுக்கு மேல் ஒவ்வொரு போராளியும் அவனுடைய உடலுக்கு மேலாகப் போய் 1997 ஆம் ஆண்டு அன்றைய நாள் உப்பளப்பகுதியில் 10-க்கும் அதிகமான ஆட்லறிகள் அழிக்கப்பட்டு அச்சண்டையில் சுயாந்தன் என்ற போராளி ஒரு அணியை உட்பகுதிக்குள் நகர்த்திய பெரும் சாதனையை நிகழ்த்தினான். பின்னர் அந்தப் போராளி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த “ஜெயசிக்குறு” சமர்க்களத்தில் தனது உயிரை அர்ப்பணித்தார். இவ்வாறு நிறைய வராறுகள் இருக்கின்றன. ஒரு காலை இழந்த நிலையில் லெப். கேணல் மதன் தனது சுயவிருப்பத்தின் பேரில் இத்தாவில் களத்திற்குள் நின்று 40,000 படைகள் (யாழில் உள்ள ஒட்டுமொத்தப் படையினரின் எண்ணிக்கை) சுற்றி நின்ற போது சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணிக்கு முக்கிய பணி வழங்கப்பட்டிருந்தது. கண்டி வீதியில் சண்டை நடைபெற்றுக் கொண்டிருந்தது. இத்தாவில் சமர்க்களத்தில் நின்று சிங்களப் படைகளுடன் ஒரு காலை இழந்த நிலையில் சமராடி தனது உயிரை அர்ப்பணித்தார் அந்தப் போராளி. அங்கங்களை இழந்தபோதும் தனது கொள்கையில் தன்னுடைய வீரத்தில் அவர் உறுதியாக இருந்தார். மன்னார் மாவட்டத்தில் தனது சொந்த இடத்தில் சிங்களப்படைகளைக் கொல்லவேண்டும் என்ற வெறியோடு சிறப்புத் தளபதியிடம் அனுமதி கேட்டு மன்னாருக்குள்ளே சென்று அங்கே சில நடவடிக்கைகளை செய்கின்ற போது சொந்த மண்ணில் தனது உயிரை அர்ப்பணித்தான் லெப். கேணல் ரமணண் . சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி என்று சொல்லப்படுகின்ற போது தளபதிகள் உட்பட 1,250-க்கும் அதிகமான ஒவ்வொரு மாவீரர்களின் வரலாறு என்பது நீண்டது. ஒவ்வொரு மாவீரனுக்கும் ஒவ்வொரு வரலாறு பொதிந்து கிடக்கின்றது. மாங்குளத்திற்கு அண்மையில் இருக்கின்ற இந்த ஒலுமடுப்பகுதியில் சண்டையை உக்கிரமாக நிகழ்த்திக் கொண்டிருந்தான். பல டாங்கிகளுடன் எமது காவலரனை நிர்மூலமாக்கிக் கொண்டிருந்தான் எதிரி. ஒரு டாங்கி வந்து எமது காவலரணுக்கு மேலே ஏறிநிற்கின்றது. அந்தக் காவலரணை அன்று கைப்பற்றுவதோடு அன்று அந்த நடவடிக்கையை நிறுத்தப்படுவதாக இருந்தது. இரண்டு குண்டுகளை வைத்திருந்த அன்பழகன் ஒரு குண்டை வீசுகின்ற போது அது டாங்கியின் பக்கத்தில் விழுந்து சேதத்தை ஏற்படுத்துகின்றது. அடுத்த கைக்குண்டோடு டாங்கியின் மேலே ஏறி நின்று அந்தக் குண்டை வெடிக்க வைத்து அந்த டாங்கியை செயலிழக்கச் செய்து தனது உயிரை அர்ப்பணித்தார். இவ்வாறாக வரலாறுகள் பொதிந்து கிடக்கின்றன. இன்றைய களச்சூழல் போர் என்பது மிக, மிகக்கொடுமையானது. அந்தப் போருக்குள் தமிழ் மக்களின் இன்பமான வாழ்வு இருக்கின்றது என்பதால் உங்களின் பிள்ளைகளாகிய நாம் உங்களின் உடன்பிறப்பாகிய நாம் களங்களில்- தளங்களில் நிமிர்ந்து நிற்கின்றோம். சிங்களப் படையைக் கொல்லும் வரைக்கும் எம்மோடு நீங்கள் நம்பிக்கையாக இருக்க வேண்டும். உங்களின் பிள்ளைகளாகிய நாம், எமது உயிர்களைக் களத்தில் கொடுத்து எதிரியை அழிப்போம் என்கின்ற திடசங்கற்பர்த்தினை இந்த சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணின் 18 ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்ற இந்நாளில் படையணி சார்பாக நாம் உறுதி எடுத்துக்கொள்கின்றோம். சிங்களப் படைகளை நாம் அறிந்தவர்கள். பல களமுனைகளில் சிங்களப் படைகளின் முன்னணி நிலைகளை களமுனைகளில் பல மீற்றர் தூரத்தில் சண்டையிட்டவர்கள். சண்டையின் ஊடாக எமது மக்களுக்கு ஒரு சுபீட்சமான சுதந்திரமான தமிழீழத் தாயகத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையில் நாம் போராடி வருகின்றோம். போரின் மூலமாகத்தான் எமது தாய்நாட்டை மீட்டெடுப்போம் என்ற அசையாத நம்பிக்கையால் எமது தலைவரும், நாமும், நீங்களும் ஒன்று சேர்ந்து களங்களில் நிற்கின்றோம். களங்களில் நாம் நிற்கின்றோம். நீங்கள் தளங்களில் எமக்குப் பின்னணியாகவும் உதவியாகவும் காப்பவர்களாகவும் எப்போதும் எமக்கு மனோபலத்தைத் தருபவர்களாக எப்போதும் படைபலத்தைத் தருபவர்களாக நீங்கள் இருக்கின்ற போது நாம் என்ன வேலை செய்யவேண்டுமோ அதனை நாம் செய்வோம். அதனை நாம் செய்து கொண்டிருக்கின்றோம். எனவே, உங்களின் பிள்ளைகளாகிய நாம் உங்களுக்காக உங்களின் உயிர் வாழ்வுக்காக எமது உயிர்களைத் தியாகம் செய்து நாங்கள் சாதிப்போம். தளங்களில் நாம் வெல்வோம். அந்த நம்பிக்கை உங்களுக்கு இருக்கட்டும். தலைவர் எதிர்பார்ப்பதனையும் எமது மக்களாகிய நீங்கள் எதிர்பார்ப்பதனையும். களங்களில் நாம் செய்வோம். நாம் செய்து முடிப்போம் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கட்டும். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” https://www.thaarakam.com/news/120313
  12. யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்💐🎉🎉🎉 யாழ் களத்தில் அதிக வயது கூடிய யாயினிக்கு மிகவும் வயதில் குறைந்த தமிழ் சிறி தாத்தா வாழ்த்துதும் நடக்குது😜
  13. கேணல் கோபித் மறக்க முடியாத வீரத்தின் இருப்பிடம்! வைத்திலிங்கம் சந்திரபாலன் என்ற மல்லாவி பாடசாலை மாணவன் கோபித் என்கிற தமிழனாக தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டபோது அவனுக்கு வயது பதினான்கு ஆரம்ப கல்வி மட்டுமே அவன் பயின்று இருந்தாலும் அழகாக எழுதுவதிலும் படங்கள் கீறுவதிலும் அவன் வல்லவனாய் இருந்தான். இளம் மாணவனுக்குரிய குழப்படிகளும் விளையாட்டுக் குணங்களும் நிறைந்திருந்தன, அவனுடைய தந்தை யாலும் பாடசாலை ஆசிரியர்களாலும் கற்பிக்கப்பட்ட ஒழுக்கமும் பொறுப்புணர்வும் அவனுடைய செயல்களில் ஒரு நேர்த்தியை உருவாக்கி விட்டிருந்தன. வன்னிக்காடுகளிலும்,யாழ்குடா நாட்டிலும் இளம் போராளியாக தன் களப்பணியைத் துவங்கிய கோபித், தனது இயல்பான தலைமைத்துவப் பண்புகளால் இயக்கத்தில் படிப்படியாக வளர்ந்தான். யாழ்குடா நாட்டில் எதிரியின் தொடர் காவலரண்கள் மீதான ஒரு தாக்குதல் நடவடிக்கைக்கு இயக்கம் திட்டமிட்டபோது, அந்தக் களமுனையின் வரைபடத்தைத் தயாரித்துத் தருமாறு மூத்த தளபதி பால்ராஜ் அவர்கள் கோபித்தைப் பணித்தபோது அவனுக்கு வயது பதினேழு. அந்த வரைபடத்தை வைத்து அணித்தலைவர்கள் மற்றும் தளபதிகளுக்கு குரூப் லிடுராக திட்டங்களை விளங்கப்படுத்தியபோது அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. மேலும் அந்தத் தாக்குதல் மிகப் பெரும் வெற்றியடைந்தது. இதனால் இளம் கோபித்தின் தன்னம்பிக்கையும் முன்முயற்சிகளும் ; பலமடங்கு உயர்ந்தன. ஆரம்பத்தில் செக்சனில் இண்டுக்காரானா தொடங்கிய கோபித்தின் களப்பயணம் விரைவிலேயே மூன்றுபேர் குழுவுக்குத் குழுத் தலைவனாக தொடர்ந்து யாழ்குடா நாட்டில் எதிரியுடனான ஒரு மோதலில் இவனுடைய செக்சன் ஈடுபட்டிருந்தபோது, தீவிரமான தாக்குதலில் செக்சன் லீடர் வீரச்சாவடைய மிகுந்த அதிர்ச்சிக்குள்ளான கோபித் ஒரு நிமிடத்தில் தன்னை திடப்படுத்திக் கொண்டு, செக்சன் லீடரின் நடைபேசியை எடுத்து சண்டை நிலவரங்களை முதுநிலை அணித்தலைவர்களுக்கும் தளபதிகளுக்கும் அறிவிக்கத் தொடங்கினான். இளம் கோபித்தின் இந்த உடனடிச் செயற்பாடு அன்றைய சண்டையின் போக்கை மிகச்சரியாக நடத்திக் கொண்டு சென்று போராளிகளுக்கு பெரும் வெற்றியை ஈட்டித்தந்தது. இளம் கோபித்தின் இச்செயற்பாட்டால் தளபதிகளின் பார்வை இவன்பக்கம் திரும்பவே, அவனுக்கு தொலைத் தொடர்பிலும் வரைபடத்திலும் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு தாக்குதல் அணியின் செக்சன் லீடராக உயர்த்ப்பட்டான். செக்சன் லீடராக களப்பணியைத் துவங்கிய கோபித் விரைவிலேயே வேவு அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டான். அச்சமறியாத இயல்பு, ஓயாத தேடல், விரைவான நகர்வு முதலிய சீரிய பண்புகளால் சிறந்த வேவுப்போராளியாக உருவெடுத்தான். இயக்கத்தின் புகழ் பூத்த வேவுப் போராளியாக உருவெடுத்தான். இயக்கத்தின் புகழ்பூத்த வேவுப் போராளிகளான வீரமணியுடனும் சத்யாவுடனும் இணைந்து முல்லைத்தீவு படைத்தளம், ஆனையிறவு பரந்தன் பகுதிகள், மன்னார் தள்ளாடி படைத்தளம் ஆகிய பகுதிகளில் இவர்கள் மேற்கொண்ட வேவு நடவடிக்கைகள் மிகப் புகழ்பெற்றவைகளாக விளங்கின. மேலும் கோபித் தனது தாக்குதல் அணிகளை எதரியின் முகாம்வரை பாதுகாப்பாக அழைத்துச் செல்வதிலும், நெருக்கடியான நேரங்களில் மாற்றுப்பாதைகளைத் தெரிவு செய்வதிலும் தேர்ச்சிபெற்று விளங்கினான் இதனால் பல சமயங்களில் தேவையில்லாத இழப்புக்களைத் தவிர்த்தான். கோபித்தின் களத்திறன்களைத் தொடர்ந்து கண்காணித்து அவனை ஊக்கப்படுத்தி வந்த ”லீமா” ஒரு கட்டத்தில் அவரைத் தன் கட்டளை மையத்தில் எடுத்து, தொலைத்தொடர்பு, வேவு, கனரக ஆயுதங்கள் பாவனை, வரைபடம், இளம் அணித் தலைவர்களுக்கான பயிற்சித் திட்டம் முதலான பல்வேறு கடமைகளில் ஈடுபடுத்தினார். லீமாவிடமிருந்து தேர்ந்த செக்சன் லீடராக தாக்குதலணிக்குத் திரும்பிய கோபித் எதிரியின் ஜெயசிக்குறு முறியடிப்புச் சண்டையில் ஓய்வொழிச்சல் இன்றறி போராடினான். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதிகள் ராகவன், மதன் ஆகியோரின் வழிநடத்தலில் கோபித் மிகச் சிறப்பாகச் செயற்பட்டான். பின்னர் மூத்த தளபதி தீபன் அவர்களின் கட்டளை நிலையத்தில் வேவுப் போராளியாகவும் வரைபடக்காரனாகவும் கடமையாற்றினான். அடர்ந்த காட்டில் திசைகாட்டியின் துணையுடன் நகருகின்ற ஒரு பயிற்சியில் இயக்கத்தின் பல பிரிவுகளிலிருந்து வந்த அணித்தலைவர்களுடன் இணைந்து கோபித் ஈடுபட்டிருந்தபோது சமயோசித அறிவுக்கூர்மையுடன் திறமையாகச் செயற்பட்டு, குறுகிய நேரத்திற்குள் குறிக்கப்பட்ட இடத்தை முதலாவதாக அடைந்து அனைவரையும் வியப்பிலாழ்த்தினான். அவனுடைய திறமைகளைப் பாராட்டிய மூத்த தளபதி சசிக்குமார் ஆசிரியர் அவர்கள் அந்தப் பயிற்சித்திட்டம் முழுமைக்கும் கோபித்தைப் பொறுப்பாளானாக்கி மேலும் அவனுடைய திறமைகளை வளர்த்தெடுத்தான். மூத்த தளபதி தீபன் அவர்களிடமிருந்து மீண்டும் படையணிக்குத் திரும்பிய கோபித் பிளாட்டுனுக்குத் தலைமையேற்றுக் களமாடினான். மேலும் சிறுரக மோட்டார் பீரங்கிச் சூட்டாளனாகவும் வரைபடக்காரனாகவும் எறிகணைத் திருத்தங்களைச் சொல்லும் கண்காணிப்புப் போராளியாகவும், வேவுப் போராளியாகவும் ஒரே சமயத்தில் பல தளங்களில் செயற்பட்ட சிறப்புக்குரிய போராளியாக கோபித் விளங்கினான். கிளிநொச்சி நகரை மீட்ட ஓயாத அலைகள் 02 நடவடிக்கையில் கோபித் பிளாட்டூன் லீடராகத் தடையுடைப்பு அணிக்குத் தலைமை ஏற்று திறம்படச் செயற்பட்டான். படையணியின் சிறப்புத் தளபதி சேகர் அவர்களும் தளபதி ராகவன் அவர்களும் கோபித்தை மிகச் சிறப்பாக வழிநடத்தி அவனுடைய களத்திறன்களை மேன்மேலும் வளர்த்தெடுத்தனர். கிளிநொச்சி மீட்புக்குப் பிறகு படையணியில் கொம்பனி லீடராக கோபித் சிறப்புத் தளபதி சேகர் அவர்களால் நியமிக்கப்பட்டான். கொம்பனி மேலாளராக நியூட்டன் கடமையிலிருந்து கோபித்துடன் இணைந்து செயற்பட்டார். சில மாதங்களின் பின் படையணியின் சிறப்புத் தளபதியாக ராகவன் அவர்கள் பொறுப்பேற்றபின் கோபித்தின் இணைபிரியாத் தோழர்களாக பிரபல்யன், ஐயன், வல்லவன், மலரவன், அமுதன், முத்தரசன், ஜீவன், அனல்மணி, பருதி, தேவன், தென்னரசன் போன்ற அணித்தலைவர்கள் கோபித்துடன் இணைந்து செயலாற்றினர். அணித் தலைவர்களிடையே நிலவும் சகோதரத்துவம், கட்டுப்பாடுகள், கூட்டுச் செயற்பாடுகள் ஆகியவற்றிற்கு இவர்களை மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கினார்கள். கோபித்தின் தனிப்பட்ட இயல்புகளைப் பொறுத்தவரையில் அவன் மிகவும் கலகலப்பான ஒரு போராளியாக விளங்கினான். பழகுவதற்கு எளிமையும், இளகிய மனம் படைத்தவனாகவும் தோழமைக்கு முக்கியத்துவம் தவருபவனாகவும் திகழ்ந்தான். கோபித் இருக்குமிடம் எப்பொழுதும் உற்சாக மிகுதியில் நிறைந்திருக்கும். அனைவரையும் கவரும் வகையில் கதைப்பதிலும் சமயங்களுக்கேற்ப பகிடிகள் விடுவதிலும் கோபித்திற்கு இணையானவர்கள் படையணியில் இல்லை என்றே கூறலாம். இதனாலேயே இறுக்கமான களச் சூழ்நிலைகளில் கூட கோபித்துடன் இருப்பவர்கள் இயல்பான மனவூக்கத்துடன் காணப்படுவர். புதிய போராளிகள் முதல் களமுனையின் முதுநிலை அணித்தலைவர்கள், தளபதிகள் வரை அனைவரோடும் சமமாகப் பழகும் மனிதநேயம் கோபித்தின் தனிச்சிறப்பு. போராளிகளின் தனித்திறன்களை அடையாளம் காண்பதிலும் அவற்றை போராட்டத்தின் தேவகைளுக்கேற்ப வளர்த்தெடுப்பதிலும் கோபித் ஆர்வம் காட்டினான். மதிநுட்பத்தோடும் தொலைநோக்கோடும் கோபித் எடுத்த பல முன்முயற்சிகள் எதிர்காலத்தில் படையணியின் களச்செயற்பாடுகளிலும் படையணியின் வளர்ச்சியிலும் பெரும் பாய்ச்சலை உருவாக்கியிருந்தன. காவலரண்களை வலிமையாகவும் தந்திரோபாயத்தாலும் அமைப்பதோடு மட்டும் கோபித் மன நிறைவு சொள்ளமாட்டான். மேலும் அவை கலை நயமும் தூய்மையும் கொண்டவைகளாகவும் இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவான். கோபித்தின் பிளாட்டூன் லீடர்களும் சென்சன் லீடர்களும் அவனுடைய ஆலோசனைகளுக்கும் அறிவுறுத்தல்களுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து செயற்பட்டனா் இதனாலேயே கோபித் பொறுப்பெடுத்த எந்த வேலையும் நேர்த்தியும் கலைநயமும் கொண்டவையாக இருக்கும். கோபித் தன்மானமும் கௌரவமும் பிடிவாதமும் கொண்ட ஒரு அணித்தலைவானக இருந்தான். தவிர்க்க இயலாத தருணங்களில் தனது பிடிவாத குணத்தைக் கைவிட்டாலும் சுயமரியாதையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டான். மேலும் அவனுடைய தன்னம்பிக்கை அளப்பரியது. இது வறட்டுத்தனமான, மனம்போன போக்கில் உதிக்கும் தன்னம்பிக்கையல்ல. நீண்ட பட்டறிவாலும் கூர்மையான மதிநுட்பத்தாலும் தளராத ஊக்கத்தாலும் விளைந்தவை அவை. அவனுடைய போராட்ட வாழ்க்கையில் இந்தத் தன்னம்பிக்கை எமக்கு மிகப்பெரிய வெற்றிகளை ஈட்டித்தந்திருக்கின்றன. சுட்டித்தீவிலிருந்து ஊரியான் வரையிலான முன்னரண் வரிசையில் சிறப்புத் தளபதி ராகவன் அவர்களின் வழிநடத்திலில் கொம்பின லீடராக கோபித் பணியாற்றிய காலங்களில் ராகவனின் நம்பிக்கைக்குரிய அணித்தலைவனாக பல்வேறு கடமைகளில் ஈடுபட்டான். தனது பகுதியில் விரைவிலேயே காவலரண்கள், நகர்வகழிகள் அமைக்கும் பணிகளை முடித்துக்கொண்ட கோபித் ராகவன் வகுத்த பயிற்சித் திட்டங்களை பொறுப்பேற்று செயற்படுத்தினான். தடையுடைப்புப் பயிற்சி, திசைகாட்டி மற்றும் புவிநிலை காண் தொகுதி (G.P.S) பயிற்சி, கண்காணிப்பு (O.P) பயிற்சி முதலியவற்றிக்கு பொறுப்பாளனாக இருந்து போர்ப்பயிற்சி ஆசிரியர்கள் சின்னமணி, கீதன், கில்மன் ஆகியோருடன் இணைந்து பயிற்சித்திட்டங்களை திறம்பட நடத்தினான். இக்கால கட்டத்தில் ஓய்வில்லாது நடமாடிக் கொண்டேயிருப்பான். தொடர் முன்னரண் வரிசை, கிளிநொச்சி, உருத்திரபுரம், திருவையாறு, குஞ்சுப்பரந்தன், முதலான பயிற்சித்தளங்கள் என எங்கும் கோபித்தின் பாதங்கள் படாத இடமே இல்லை என்று கூறும் அளவுக்கு அவனுடைய செயற்பாடுகள் பரந்து விரிந்து இருந்தன. சூனியப் பகுதிக்குள் எதிரியின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும், முன் தளத்தில் போராளிகள் பயிற்சிகளில் இருந்தபோது முன்னரண் வரிசைப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் ராகவன் அவர்கள் சிறிய பதுங்கித் தாக்கும் அணிகளை உருவாக்கி சூனியப் பகுதிகளில் நிலைப்படுத்தினார். அதில் செக்சன் லீடர் விஜித்திரனின் தலைமையில் ஒரு குழுவை கோபித் பொறுப்பேற்று நடாத்தினான். அந்த அணி பலமுறை எதிரியின் ஊடுருவல் முயற்சிகளை இடைமறித்துத் தாக்கியது. விஜிதரனின் சீரிய செயற்பாடுகளை இந்நடவடிக்கையில் கோபித் மேம்படுத்தி வளர்த்தான். ஓயாத அலைகள் – 03 நடவடிக்கை ஓட்டுசுட்டானில் துவங்கயிபோது கோபித் தடையுடைப்பு அணியின் கொமாண்டராகக் களமிறங்கினான். படையணியை சிறப்புத் தளபதி ராகவன் அவர்களும் கோபித்தின் மேலாளரும் இளம் தளபதியுமான நியூட்டன் அவர்களும் மேலும் சாரங்கள், சூசை உள்ளிட்ட அணித்தலைவர்களும் ஓட்டுசுட்டானில் வீரச்சாரைவத் தழுவிக்கொண்ட நிலையில், துணைத்தளபதி இராசிசிங்கத்தின் வழிநடத்தலில் கோபித் கடுமையாக போரில் ஈடுபட்டான். அம்பகாமம் களமுனையில் துணைத் தளபதி இராசசிங்கத்தின் வழிநடத்தலில் கோபிததின் செயற்பாடுகள் மிகத்தீவிரமாக இருந்தன. கனகராயன் குளத்திலிருந்து எதிரியின் மிகப்பெரிய படைத்தளத்தை தாக்கியழித்துக் கைப்பற்றிய சமரில் கோபித் முக்கிய பங்காற்றினான். இத்தாக்குதலில் கோபித் கனரக ஆயுதங்களை மிகச் சிறப்பாகக் கையாண்டு எதிரிகளை விரட்டியடித்தான். ஓயாத அலைகள் – 03 தொடர்நடவடிக்கையால் மன்னார் களமுனை திறக்கப்பட்டு மன்னார் மாவட்டத்தின் பெரும்பகுதிகள் எம்மால் மீட்கப்பட்ட பிறகு அங்கிருந்த தாக்குதலணிகள் சற்றே இளைப்பாற பின் தளத்திற்கு தள்ளப்பட்டபோது அப்பகுதிகளின் பாதுகாப்புக்கடமை சாள்ஸ் அன்ரனி சிறப்புத் படையணியிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில் பள்ளமடுவில் இருந்து மடு – தம்பனை வரையிலான வீதிகளையும் காட்டுப்பகுதிகளையும் பாதுகாக்கும் பொறுப்பில் சிறப்புத் தளபதி இராசசிங்கத்தால் கோபித் நியமிக்கப்பட்டான். அப்பொழுது பரப்புக்கடந்தான் காலையிலிருந்து பாப்பாமோட்டை வரையிலான பகுதிகளையும் கட்டுக்கரைக் குளம் காட்டுப்பகுதிகளையும் பாதுகாக்கும் பொறுப்பு வீரமணியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது, இக்கடமையின்போது இரு அணித்தலைவர்களும் இணைந்து சிறு வேவு அணிகள், பதுங்கித் தாக்கும் அணிகள், றோந்துக்குழுக்கள் முதலானவற்றை உருவாக்கி மிகச் சிறப்பாக செயலாற்றினர். மேலும் தள்ளாடி முகாம் தாக்குதலுக்கான ஆயத்தப்பணிகளிலும் இருவரும் ஈடுபட்டனர். ஓயாத அலைகள் – 03 நடவடிக்கையின் தொடர்ச்சியாக பரந்தன் மீட்புச்சமர் துவங்கியபோது சிறப்புத் தளபதி இராசசிங்கம் அவர்களின் பாதையில் தடையுடைப்பு அணியின் கொமாண்டராக கோபித் களமிறங்கினான். கோபித்தின் பாதையில் எதிரி மிக வலிமையான காவலரண்களை அமைத்து கனரக ஆயுதங்களால் காவல் செய்து வந்தான். இதனால் போராளிகளுக்கு சாதகமற்ற நிலை அங்கே நிலவியதை தனது தேர்ந்த அனுபவத்தால் அறிந்து கொண்ட கோபித் அங்க தனது அணிக்கு நிகழவிருந்த பெரும் அழிவைத் தவிர்த்துக் கொண்டு மற்றப்பாதையால் செல்ல முடிவெடுத்தான் அங்கு புலனாய்வுத் துறை தளபதி அறிவு அவர்கள் உடைத்த பாதையில் தனது அணியினை நகர்த்திய கோபித் எதிரியின் தொடர் காவலரண்களைத் தகர்த்தழித்துக்கொண்டு முன்னேறினான் A-9 வீதியில் கோபித்தின் தோழன் வீரமணி பிளாட்டூன் லீடர் மஞ்சுதனைக் கொண்டு தடையைத் தகர்த்தெறிந்து பரந்தன் சந்தியை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த அதேவேளையில் கோபித் யு-9 வீதியின் வலப்பக்கமிருந்த வலிமையான காவலரண்களைத் தகர்த்தெறிந்து கொண்டு காளிதாஸ் வீடு என்று அழைக்கப்பட்ட எதிரியின் முக்கிய தளத்தைக் கைப்பற்றி போராளிகளின் நிலைகளைப் பலப்படுத்தினான். இந்தச் சமரில் முன்னனித் தாக்குதலணியிலிருந்து சண்டையிட்டுக் கொண்டே எறிகணைத் திருத்தங்களைச் சொல்லும் கண்காணிப்பு போராளிகாளாகவும் செயற்பட்ட பெருமையைப் பெற்றான முன்னாட்களில் பரந்தன் பகுதிகளில் மேற்கொண்டிருந்த வேவு நடவடிக்கைளின் அனுபவம் இந்தச் சமரில் அணிகளை இலகுவாக நடத்திச் செல்ல கோபித்திற்கு பெரிதும் உதவியாக இருந்தது. ஓயாத அலைகள் – 03 நடவடிக்கையின் தொடர்ச்சியாக இத்தாவில் தரையிறக்கச்சமருக்கான ஆயத்தவேலைகளில் கோபித் முழுவீச்சுடன் ஈடுபடுத்தப்பட்டான். குடாரப்பில் முதலாவதாக தரையிறங்கும் அணிக்கு கொமாண்டராகப் பொறுப்பேற்று களமிறங்கினான். ஐயன், இலக்கியன், பருதி, வீரன், இயல்வாணன் போன்ற அணித்தலைவர்களைக் கொண்டு விசேடமாக உருவாக்கப்பட்ட இவ்வணி குடாரப்புவில் முதலாவதாகத் தரையிறங்கி அங்கிருந்த சிறு முகாம்களையும் காவலரண்களையும் தகர்த்தழித்துக்கொண்டு இத்தாவில் பகுதிக்குள் நுழைந்து கணிசமான தொலைவை மிகவும் இரகசியமாகவும் விரைவாகவும் கடந்து ஏ-9 வீதியை அடைந்து, அங்கு சுமார் ஒரு கிலோமீட்டர் சாலையை உள்ளடக்கி இருபுறமும் மறிப்பைப்போட்டு, நான்கு பக்கங்களிலும் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொண்டு தாக்குதலணி பாதுகாப்பாக உள்ளே வர வழிகோலினான். கோபித்தின் அணி அன்று அமைத்த பெட்டி வியூகம் ஒரு மாதத்திற்கும் மேலாக எதிரியால் உடைக்கப்படமுடியாமல் பாதுகாக்கப்பட்டு இறுதியில் ஆனையிறவை மீட்டுத்தந்தது. இத்தாவில் பெட்டி வியூகத்தின் ஏ-9 சாலையின் நாயகர்களாக நின்ற ஐயன், வீரன் சிந்து, இயல்வாணன், இலக்கியன், பருதி ஆகியோரை கோபித் மிகச் சிறப்பாக வழிநடாத்தினான். சாலைக்கு வலதுபுறம் வீரன் அணியும் இடது புறம் தேவனின் அணியும் முழுமையாக கோபித்தின் கட்டளையின் கீழ் செயற்பட்டன. சாலையைக் கைப்பற்ற எதிரி மேற்கொண்ட கடுமையானதொரு ”டாங்கி” தாக்குதலில் கோபித்தின் நிலை தகர்கப்பட்டு காவலரணிலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டான். சில விநாடிகள் மூர்ச்சையாகிக் கிடந்த கோபித் மீண்டும் துடித்தெழுந்து அந்த சண்டையைத் தொடர்ந்து செய்தான். அன்று ஐயனும் பரிதியும் வீரச் சாவை தழுவிக்கொள்ள ஆவேசமடைந்த கோபித் இலக்கியன், தேவன், வீரன் முதலான அணித்தலைவர்களைக் கொண்டு மூர்க்கமாகிப் போராடி எதிரியை முறியடிக்க யு-9 வீதியை தக்கவைத்துக் கொண்டான். ஐயனுக்குப் பிறகு அணித்தலைவன் சிந்துவைக் கொண்டு வலிமையான பாதுகாப்பை அமைத்தான் கோபித்; கட்டளைத் தளபதி லீமா, சிறப்புத் தளபதி இராசிங்கம், இணைத்தளபதி நேசன் ; ஆகியோரின் சீரிய வழிநடத்தலோடு கோபித்தின் வேகமும் விவேகமிக்க செயற்பாடுகள் இறுதிவiரை இத்தாவலில் பகுதியின் ஏ-9 வீதியை பாதுகாத்து நின்றன. இயக்கச்சித் சந்தியிலிருந்த எதிரியின் பலம்மிக்க முகாம்களையும் நிலைமைகளையும் வீரமணி தகர்த்தெறிந்த மின்னல் வேகப் பாச்சலில் பளையைக் கடந்து இத்தாவிலில் இணைந்தபோது ஆனையிறவோடு சேர்ந்து பெரும்பகுதிகள் எம்மால் மீட்கப்ட்டன. இச்சமரில் கோபித்தின் பங்களிப்பு அளப்பரியதாக இருந்தது. தேசியத் தலைவர் அவர்களாலும் மூத்த தளபதி காளலும் கோபித் வெகுவாக பாராட்டப்பட்டான். இயக்கத்தின் நிதிப்பொறுப்பாளர் தமிழேந்தி அவர்கள் புதிய உந்துருளியொன்றை பரிசளித்து கௌரபவப்படுத்தினார். இச்சமருக்குப் பிறகு தேசியத் தலைவரும் தனிப்பட்ட பார்வையும் அக்கறையும் கோபித்தின் மீது திரும்பியது. தேசியத் தலைவர்கள் அவர்கள் கோபித்தைப் பாராட்டி மேலும் பல்வேறுவிதமான ஆலோசனைகளை வழங்கி ஊக்கப்படுத்தினார். ஆனையிறவு மீட்கப்பட்ட பிறகு தனங்கிழப்பு கிழக்கு அரியாலையிலிருந்து முன்னேறிய எமது படைப்பிரிவுகள் கனகம்புளியடி, கைதடிப்பகுதிகளை கைப்பற்றிக்கொண்டு யாழப்பாணம் நோக்கி நகர்ந்துகொண்டிருந்தனர். இந்நிலையில் நாகர் கோவில் கைப்பற்றுவதற்கான ஆயத்தப் பணிகளில் கோபித் ஈடுபடுத்தப்பட்டான். எதிர்பாராத விதமாக சிறப்புத் தளபதி இராசசிங்கம் அவர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொள்ள அடுத்த சிறப்புத் தளபதியாக பொறுப்பேற்றார் சேகர் அவர்கள். நாகர் கோவில் பகுதியில் தாக்குதலுக்கான ஆயத்தப் பணிகளில் கோபித்தை முழுமையாக ஈடுபடுத்தினார். படையணியின் தாக்குதல் தளபதியாக கோபித் தீவிரமாகச் செயற்பட்டான். ஒயாத அலைகள் – 04 நடவடிக்கைக்காக தாக்குதலணி நகர்வதற்கான பாதையை உறுதிப்படுத்தும் பணியில் சேகர் அவர்கள் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக எதிரியின் பதுங்கித் தாக்கும் அணியினரின் தாக்குதலுக்குள்ளான சேகர் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் வீரச்சாவை தழுவிக்கொண்டார். சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி ஒருவருடத்திற்குள் மூன்று சிறப்புத் தளபதிகளை இழந்திருந்த மிகப் பெரிய சோக நிகழ்வினூடே தேசியத் தலைவர் அவர்கள் புதிய பொறுப்பாளர்களை படை யணிக்கு நியமித்தார். வீரமணி சிறப்புத் தளபதியாகவும் நகுலன் தளபதியாகவும் கோபித் துணைத் தளபதியாகவும் தலைவரால் நியமிக்கப்பட்டனர். ஓயாத அலைகள் – 04 நடவடிக்கை எதிர்பார்த்த இலக்கை அடையாவிட்டாலும் நாகர் கோவிலின் ஒரு பகுதியையும் எழுது மட்டுவாள் முகமாலையின் கணிசமான பகுதிகளை எமது படைப்பிரிவுகள் மீட்டன. இந்நடவடிக்கையில் கோபித் ஒரு பகுதியின் பொறுப்பாளராக இருந்து திறம்படச் செயற்பட்டார். 2001ம் ஆண்டு தைமாதத்தில் எமது தேசியத் தலைவர் அவர்களால் யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சிறப்புத் தளபதி வீரமணி எமது பகுதியில் காவலரண்களை அமைக்கும் பணிகளை மேற்பார்வை செய்துகொண்டிருந்த பொழுது எதிரி ஒரு பாரிய முற்றுகை நடவடிக்கையை மேற்கொண்டான். வீரமணி அவர்களும் அவருடன் இருந்த அணிகளும் முற்றுகையை உடைத்து வெளியேறுவுதற்காக தாக்குதலை தீவிரமாக தொடுத்த பொழுது கோபித் முற்றுகைக்கு வெளியேயிருந்து மிகச்சரியாகத் திட்டமிட்டு ஒரு பாதையை தெரிவு செய்து கனரக மோட்டார் மற்றும் பீரங்கிச் சூட்டாதரவை வீரமணிக்கு வழங்கி தனது சிறப்புத்தளபதி பாதுகாப்பாக வெளியேவர வழிகோலினான். இந்நடவடிக்கையில் வீரமணியுடன் நின்று களமாடிய முதுநிலை அணித்தலைவன் சேந்தனும் மோட்டார் அணியின் கொமாண்டராக தீவிரமாக செயற்பட்ட பிருந்தாவனும் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். எதிரியின் இம்முற்றுகையை உடைத்த சண்டையில் துணைத்தளபதி கோபித்தின் மதி நுட்பமும் விவேகமுமான செயற்பாடுகள் மிகவும் காத்திரமாக இருந்தன. இதன் பின்னர் முகமாலைக் களமுனையில் முன்னரண் வரிசை பாதுகாப்புக் கடமையில் படையணி ஈடுபடுத்தப்பட்டபோது கோபித் துணைத்தளபதியாகவும் ஒருபகுதியின் பொறுப்பாளராகவும் செயற்பட்டார். முன்வரிசையை வலிமைப் படுத்தியதோடு மட்டுமன்றி பின்தள கட்டளை நிலையங்கள் மற்றும் ஆதரவுத் தளங்கள் அனைத்தையும் வலிமைமிக்தாக கட்டமைத்து ஒரு முழுமையான முறியடிப்பு சண்டைக்கு தனது பகுதிகளை கோபித் தயார்படுத்தியிருந்தார். எதிரி மீண்டும் ஆனையிறவைக் கைப்பற்ற மேற்கொண்ட பாரிய நடவடிக்கையாலும் ஷதீச்சுவாலை| நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரை துணைத்ளபதி கோபித் மிகச் சிறப்பாக வழி நடாத்தினார். இந்தச் சமரில் கோபித்தின் கட்டளை மையம் எதிரியால் பலமுறை முற்றுகையிடப்பட்ட போதும் அவர் சிறிதும் கலங்காது முன்னரண் வரிசைச் சண்டையைத் தீவிரமாக நடத்தினார். இந்தச் சமரின் இறுதிக்கட்டத்தில், கோபித் நேரடியாகத் தனது குழுவுடன் முன்னரண் வரிசையில் இறங்கி, மிகத் தீவிரமான அதிரடித் தாக்குதல் மூலம் எதிரியை விரட்டியடித்து எமது பகுதிகளை முழுமையாக மீட்டெடுத்தார். கோபித்தின் தீர்க்கமான முடிவுக்கும்,கட்டளைகளும் இச்சமரின் வெற்றியில் பெரும் பங்காற்றின. இதன்பின்னர் நாகர் கோவிலில் படையணி நிலைகொண்ட போது அங்கு பகுதிப் பொறுப்பாளராகச் செயற்பட்டார். 2002ல் சிறப்புத் தளபதி வீரமணி அவர்களின் பணிப்பின் பேரில் பின்தள ஆழுகைக் கடமைகளில் நியமிக்கப்பட்டார். இக்காலத்தில் படையணியின் பின்தள முகாம்களைப் புனரமைப்பதிலும் படையணிக்குத் தேவையான வளங்களைப் பெற்றுக் கொள்வதிலும் கோபித் கூடுதல் கவனம் செலுத்தினார். புதிய மருத்துவத்தளம். ஆளுமைத் தளங்கள் புதுப்பிப்பு, மாவீரர் மண்டபம் அமைத்தல் போன்ற பல புதிய முயற்சிகளை முன்னெடுத்து அவற்றை வெற்றிகரமாக செய்து முடித்தார். படையணியின் ஆளுகைப் போராளிகளிடையே கட்டுப்பாட்டையும் ஒழுக்க நெறிமுறைகளையும் பேணுவதில் கோபித் மிகுந்த அக்கறையெடுத்தார். ஆளுகையில் புதிய கட்டமைப்புக்களை உருவாக்கி வழிநடத்தினார். மாதந்தோறும் நிர்வாக ஒன்று கூடல்களை நடத்தி தெளிவான செயற்திட்டங்களை வகுத்துச் செயற்பட்டார். தளபதியாக தனது கடமைகளை விரிவுபடுத்தினார். ஆளுகைப் போராளிகள் அனைவரும் நாள்தோறும் குறுகிய நேரப் பயிற்சிகளில் ஈடுபட வழிகோலினார். இளம் அணித்தலைவர்களை ஊக்கப்படுத்தி மேலும் அவர்களுடைய திறமைகளை வளர்த்தெடுத்தார். குமுதன், சிலம்பரசன், தேவமாறன், கடற்கதிர் போன்ற இளம் அணித் தலைவர்களை பெரிதும் ஊக்கப்படுத்தி வளர்த்தார். யாழ் இன்பன், தமிழமுதன் போன்ற இளம் போராளிகள் பள்ளிக் கல்வியைத் தொடர வழி அமைத்ததோடு மேலும் அவர்ளை போராட்டத்தின் தேவைகளுக்கேற்ப பல்வேறு பயிற்சிகளில் ஈடுபடுத்தி வளர்த்தெடுத்தார். ஆளுகைப்போராளிகள் சூட்டுப் பயிற்சிகளிலும் முறையான விளையாட்டுக்களிலும் ஈடுபடுத்தப்பட்டனர்.பயிற்சி, வேலைத்திட்டம், ஓய்வு, பொழுதுபோக்கு, விளையாட்டுக்கள் என ஆளுகைப் போராளிகளுக்கு அன்றாட நிகழச்சி நிரலை முறைப்படுத்தி நடாத்தினார். புதிய போராளிகளின் தனித்திறன்களை அடையாளம் கண்டு அவற்றை வளர்த்தெடுப்பதில் கோபித் தனிக் கவனம் செலுத்தினார். போராளிகளின் கல்வி அறிவை மேம்படுத்தி பல்வேறு முன்முயற்சிகளை எடுத்துச்செயற்படுத்தினார். அணித் தலைவர்களுக்கான பயிற்சித் திட்டங்களை உருவாக்கி ஆளுகைப் போராளிகளின் பல்வேறு கடமைகளூடே பயிற்சித் திட்டங்களையும் சரியாக நெறிப்படுத்தினார்.ஓயாத அலைகள் 03 நடவடிக்கை ஓட்டுச்சுட்டானில் துவங்கியபோது கோபித் தடையுடைப்பு அணியின் கொமாண்டவராகக் களமிறங்கினான். படையணியின் சிறப்புத் தளபதி ராகவன் அவர்களும் கோபித்தின் மேலாளரும் இளம் தளபதியுமான நியூட்டன் அவர்களும் மேலும் சாரங்கன், சூசை உள்ளிட்ட அணித்தலைவர்களும் ஓட்டுச்சுட்டானில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட நிலையில், துணைத் தளபதி இராசசிங்கத்தின் வழிநடத்ததில் கோபித் கடுமையாக போரில் ஈடுபட்டான். அம்பகாமம் களமுனையில் கோபித்தின் செயற்பாடுகள் மிகத்தீவிரமாக இருந்தன. கனகராயன் குளத்திலிருந்த எதிரியின் மிகப்பெரிய படைத்தளத்தை தாக்கியழித்துக் கைப்பற்றிய சமரில் கோபித் முக்கியப் பங்காற்றினான். இத் தாக்குதலில் கோபித் கனரக ஆயுதங்களை மிகச் சிறப்பாகக் கையாண்ட எதிரிகளை விரட்டியடித்தான். ஓயாத அலைகள் 03 தொடர் நடவடிக்கையில் மன்னார் களமுனை திறக்கப்பட்ட மன்னார் மாவட்டத்தின் பெரும்பகுதிகள் எம்மால் மீட்கப்பட்ட பிறகு, அங்கிருந்த தாக்குதல் அணிகள் சற்றே இளைப்பாற பின்தளத்திற்கு நகர்த்தப்பட்ட போது, அப்பகுதிகளின் பாதுகாப்புக் கடமை சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில் பள்ளமடுவிலிருந்து மடு – தம்பனை வரையான வீதியையும் காட்டுப் பகுதிகளையும் பாதுகாக்கும் பொறுப்பில் சிறப்புத் தளபதி இராசசிங்கத்தால் கோபித் நியமிக்கப்பட்டான். அப்பொழுது பரப்புக் கடந்தான் சாலையிலிருந்து பாப்பாமோட்டை வரையிலான பகுதிகளையும் கட்டுக்கரைக் குளம் காட்டுப் பகுதிகளையும் பாதுகாக்கும் பொறுப்பு வீரமணியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இக்கடமையின் போது இவ்விரு அணித்தலைவர்களும் இணைந்து சிறு வேவு அணிகள், பதுங்கித்தாக்கும் அணிகள், றோந்துக் குழக்கள் முதலானவற்றை உருவாக்கி மிகச் சிறப்பாக செயலாற்றினார். மேலும் தள்ளாடி முகாம் தாக்குதலுக்கான ஆயத்தப் பணிகளிலும் இருவரும் ஈடுபட்டனர்.ஓயாத அலைகள் 03 நடவடிக்கையின் தொடர்ச்சியாக பரந்தன் மீட்புச் சமர் துவங்கி யபோது சிறப்புத் தளபதி இராசசிங்கம் அவர்களின் பாதையில் தடையுடைப்பு அணியின் கொமாண்டராக கோபித் களமிறங்கினான். வீரமணி தடையுடைப்பு அணியின் கொமாண்டராக களமிறங்கினான். கோபித்தின் பாதையில் எதிரி சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் வரலாற்றைத் தொகுக்கும் முயற்சியாக வெளியிடப்பட்ட நெருப்பாற்று நீச்சலில் பத்தாண்டுகள்| நூலை வெளிக்கொண்டு வருவதில் கோபித் பெரும் பங்காற்றினார். இந்நூல் வெளியீட்டு விழாக்களை உணர்வு பூர்வமாகவும் கலைநயத்துடனும் நடத்துவதில் மிகுந்த அக்கறையெடுத்தச் செயல்படுத்தினார். இராகசீலம் இசைக்குழு உருவாக்குவதிலும் அதில் போராளிக் கலைஞர்களைப் பயிற்றுவித்து வளர்ப்பதிலும் கோபித் பெரும் பங்காற்றினார். போராளிகளின் புதிய முயற்சிகளை எப்பொழுதும் வரவேற்று ஊக்கப்படுத்தும் கோபித் போர்ப்பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற எமது இசைக்குழு நிகழ்ச்சியில் சின்னமணி ஆசிரியருடன் இணைந்து ஒரு பாடலைப் பாடி சிறந்த பாடகராக விளங்கினார். 2006ம் ஆண்டு படையணியின் சிறப்புத் தளபதியாக தேசியத் தலைவர் அவர்களால் கோபித் நியமிக்கப்பட்டார். சிறப்புத் தளபதியாக பொறுப்பெடுத்துக் கொண்ட சில மாதங்களிலேயே முகமாலைச் களமுனையில் சண்டை துவங்கியது. இச்சமரில் கோபித் சிறப்புத் தளபதியாகவும் பகுதிப் பொறுப்பாளராகவும் இருந்து செயற்பட்டார். பல்வேறு காரணங்களால் இச்சமர் எதிர்பார்த்த வெற்றியை எமக்குத் தராவிட்டாலும் படையணியின் செயற்பாட்டில் வீரியமும், வீச்சும் குறையாமல் கோபித் வழிநடத்தினார். படையணியின் தாக்குதல் தளபதிகளான தென்னரசன், வீரன், நாகதேவன், குட்டி உள்ளிட்ட பல அணித்தலைவர்களும் போராளிகளும் இச்சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட நிலையிலும், ஏ- 9 வீதியையொட்டி நாம் கைப்பற்றிய பகுதிகளை இளம் தளபதி பாவலனைக் கொண்டு இறுதிவரை தக்க வைத்திருந்து கோபித் தனது திறமையை வெளிப்படுத்தினார். இச்சமரில் மோட்டார் அணித் தலைவர்கள் சிலம்பரசன், ஜெயசீலன் உள்ளிட்டோரை கோபித் மிகச் சிறப்பாக வழிநடத்தி அவர்களை மேலும் வளர்த்தெடுத்தார்.இதனையடுத்து 2006ம் ஆண்டு 10ம் மாதம் எதிரி பலையைக் கைப்பற்றமேற்கொண்ட பாரிய நடவடிக்கையை தடுத்து நிறுத்திய முறியடிப்புச் சண்டையை கோபித் சிறப்பாக வழிநடத்தினான். இச்சமரில் எதிரியிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதோடு எதிரி முற்று முழுதாக முறியடிக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டான். மிகச்சிறிய காலத்தில் காலத்தில் இம்முறியடிப்புச் சமருக்கான திட்டங்களை வகுத்துச் செயற்படுத்தி பெரும் வெற்றியை கோபித் ஈட்டினார். இந்நடவடிக்கைக்குப் பின்னர் படையணிக்கு புதிய போராளிகள் அணியணியாக வந்த வண்ணமிருந்தனர். புதிய போராளிகளை களச்சூழலுக்குக்கேற்ப கோபித் பயிற்றுவிப்பதிலும் அவர்களின் உளவுதிரனை மேம்படுத்துவதிலும் கோபித் கூடுதல் கவனம் செலுத்தினார். புதிய பயிற்சித் தளங்களை நிறுவி இளம் அணித்தலைவர்களை உருவாக்குவதில் கோபித் பெரும் முயற்சி எடுத்தார். தாக்குதல் அணியால் களச்சூழலுக்கேற்ப விசேட அணிகளை உருவாக்குவதில் கோபித் மிகுந்த முக்கியத்துவம் எடுத்தார். படையணியின் தாக்குதல் தளபதிகளான வரதன், புரட்சி ஆசிரியர், செங்கோலன், விவேகானந்தன், அமுதாப், முத்தழகன், பாவலன், செல்லக்கண்டு முதலான தீரம்மிக்க போராளிகளை கோபித் சிறப்பாக வழிநடத்தினான். அணிகளைப் பிரித்துக் கொடுத்து கடமைகளில் ஈடுபடுத்தினார். பயிற்சிக் கல்லூரியில் அவர் மேற்கொண்ட கடும் உழைப்பின் பயன் பின்னாட்களில் நிகழ்ந்த சண்டைக் களங்களில் எமக்குப் பல வெற்றிகளை ஈட்டித்தந்தன. எதிரி மன்னார் ஊடாக தமிழர் தாயகத்தை ஆக்கிரமிக்க பாரிய நடவடிக்கைகளை துவங்கியபோது அவற்றைத் தடுத்து நிறுத்த தேசியத் தலைவர் அவர்கள் கோபித்தை மன்னார் களமுனைக்கு மாற்றினார். மடு, தம்பனை, இரணை, இலுப்பைக்குளம் பகுதிகளிலும் பனங்காமம், நட்டாஸ் கண்டல் பகுதிகளிலும் படையணி களமிறக்கப்பட்டது. இந்நாட்களில் எதிரியின் தொடர்ச்சியான முன்னேற்ற முயற்சிகளை கோபித் தடுத்து நிறுத்தியதோடு எமது பகுதிகளில் புதிய நிலைகளையும், வியூகங்களையும் அமைத்துப் பாதுகாப்பதிலும் கோபித் கடுமையாகப் பாடுபட்டார். தலைவரின் நேரடிப் பணிப்பின் பேரில் பல்வேறு அதிரடித் தாக்குதல்களை எதிரி மீது மேற்கொண்டு பல வெற்றிகளைப் பெற்றார். எமக்கு எதிராக மிகப்பெருமளவில் சதிச்செயல்களும் படைபலமும் எதிரியால் ஏவிவிடப்பட்டபோதும் கோபித் உறுதியுடன் நின்று தலைவரின் கட்டளைகளை நிறைவேற்றினார். மன்னார் பெரிய தம்பனையில் படையணியின் தாக்குதல் தளபதிகள் வீரமைந்தன் அணியையும் வாணன் அணியையும் கொண்டு கோபித் நடாத்திய மிகக்கடுமையான முறயடிப்புத் தாக்குதல்கள் எதிரியின் முன்னேற்றத்தைக் கணிசமான நாட்களுக்குத் தடுத்து நிறுத்தின. மிகவும் வஞ்சகமான சதிச்செயல்களால் இயக்கத்தின் பாதுகாப்பு வியூகங்களில் எதிரி முட்டுப்படாமல் தவிர்த்துக்கொண்டு காட்டின் வெவ்வேறு வழிகளில் முன்னேறிக்கொண்டிருந்தான். இந்நாட்களில் எதிரியின் நகர்வைச் சரியாக இனங்கண்டு வழிமறித்துத் தாக்குவதிலும், மேலும் முன்னேற விடாமல் தடுப்பதிலும் கோபித் கடுமையாகப் பாடுபட்டார். 2008ல் படையணியின் சிறப்புத் தளபதியாக விமலன் அவர்களை நியமிக்கப்பட்டு, கோபித் தேசியத் தலைவரின் நேரடிக் கட்டளையின் கீழ் மன்னார் களமுனையின் கட்டளைத்துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். முழங்காவில் பகுதியில் எதிரியைப் பல நாட்கள் தடுத்து நிறுத்திப் போரிட்ட கோபித் வன்னேரிக் குளத்தில் எதிரியின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்திக் கடுமையான சமர்களைப் புரிந்தான். இதன் பின்னர் எமது வியூகங்களை மீறி தொடர்ந்து முன்னேறிய எதிரியை அக்கராயன் குளத்தில் கோபித் இடைமறித்து கடுமையாகத்தாக்கினான். இச்சமரில் கோபித் பல வெற்றிகளைப் பெற்ற போதிலும், எதிரி மேற்கொண்ட வஞ்சக செயல்களால் அங்கிருந்து பின்வாங்கி கிளிநொச்சியைப் பாதுகாப்பதில் முனைப்புடன் ஈடுபட்டான். கிளிநொச்சியைச் சுற்றிலும் மிகச் சிறப்பான பாதுகாப்பு வலயமொன்றை உருவாக்கி இரண்டு மாதத்திற்கும் மேலாக எதிரியை கிளிநொச்சிக்குள் நுழைய விடாமல் பாதுகாத்து நின்றான். 2009ல் தந்திரோபாய ரீதியாக கிளிநொச்சியிலிருந்து இயக்கம் பின்வாங்கியபோது, கோபித் கட்டளைத் தளபதி தீபன் அவர்களின் வழிநடத்தலின் கீழ் பிரமந்தனாறியிலிருந்து விசுவமடு வரையான பகுதிகளில் புதிய அரண்களை அமைத்துப் பாதுகாக்கும் கடமைகளில் ஈடுபட்டிருந்தார். இந்நாட்களில் எதிரியின் பெருமளவான ஆயுதங்கள் மற்றும் பீரங்கிகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்ட சமர்களில் கோபித் பெரும் பங்காற்றினார். தொடர்ந்து எமக்கு இழைக்கப்பட்ட துரோகங்களாலும் எதிரியின் மிகப்பெரும் அளவிலான படையெடுப்பாலும் விசுவமடு உடையர்கட்டிலிருந்து பின்வாங்கி வள்ளிபுனம், கைவேலிப் பகுதிகளை உள்ளடக்கி புதுக்குடியிருப்பைப் பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பு வியூகங்களை வகுத்து நடைபெற்ற சண்டைகளில் கோபித் தீவிரமாக ஈடுப்பட்டார். இந் நடவடிக்கைகளின் போது படுகாயமுற்ற கோபித், மருத்துவ வசதிகள் மிகக் கடுமையாகப் பாதிப்படைந்த நிலையில் சில நாட்கள் தற்காலிக மருத்துவக் கொட்டிலில் சிகிச்சை பெற்று, ஓரளவு குணமடைந்தவுடனேயே மீண்டும் களமுனைக்கு திரும்பினார். தனது படைப்பிரிவைத் தீவிரமானதொரு தாக்குதலுக்குத் தயார்படுத்திக் கொண்டிருந்த நிலையில் மீண்டும் படுகாயமடைந்த கோபித் தனது உயிரை தமிழ் மண்ணின் விடுதலைக்காக ஈந்து வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். தமிழ் மக்களின் விடுதலைக்காகவும், கௌரவத்திற்காகவும் தனது இளமைக்காலம் முழுவதையும் அர்ப்பணித்து தீரத்துடன் போராடிய தளபதி கேணல் கோபித் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒரு மாபெரும் வீரனாகவும், தளபதியாகவும் திகழ்ந்தார். அவருடைய போராட்ட வாழ்வும் வரலாறும் தமிழினத்திற்குப் பெரும் உந்து சக்தியாகவும் நம்பிக்கையாகவும் இருந்து எமது இனத்தை விடுதலை வாழ்வு நோக்கி நடத்திச் செல்லும் என்பது உறுதி. நினைவுப்பகிர்வு :தமிழகத்தில் இருந்து ஓர் உறவு……….
  14. லெப். கேணல் தேவன்.! Last updated Mar 28, 2020 இரவின் இருள் சூழ்ந்த நேரம். படைக் காப்பரணில் வெளிச்சம் தெரிகின்றது. அணி நகர்ந்துகொண்டிருந்தது. அந்த அணிக்குள் தேவன் மட்டுமல்ல அவனது ஒன்றரை அகவை நிரம்பிய குழந்தை, அவனது மனைவியென அவனது குடும்பமே நகர்ந்துகொண்டிருந்தது. வவுனியா படை வல்வளைப்புப் பகுதியிலிருந்து படைக் காவலரணை ஊடறுத்து வன்னி நோக்கி இரகசியமாக அவர்கள் வந்துகொண்டிருந்தார்கள். படையினரின் காப்பரண் வரிசையைக் கடக்கும்போது சத்தமில்லாமல் கடக்கவேண்டும் அப்போது ஏதும் அறியாக் குழந்தை சத்தமிட்டால் நிலைமை விபரீதமாகிவிடும். அதனால் ஏற்கனவே குழந்தையை ஆழ்ந்து உறங்கச் செய்திருந்தார்கள். ஆனாலும் இராணுவ வேலியைக் கடக்கவிருந்த வேளையில் வெளிச்சத்தைக் கண்டவுடன் குழந்தை விழித்துக்கொள்கிறது. குழந்தை சத்தமிட எத்தனிக்கின்றது. குழந்தையின் வாயைப் பொத்தினார்கள். ஒருவாறு காப்பரணைக் கடந்துவிடுகின்றார்கள். தேவனின் போராட்ட வாழ்வு இப்படித்தான் கழிந்தது. தேவன் இந்தப் போராட்டத்திற்காக எத்தனை அர்ப்பணிப்புணர்வுடன் செயற்பட்டான் என்பதற்கு இதுவொரு எடுத்துக்காட்டு மட்டுமே. அவனது வாழ்வில் தனித்து ஒருவனாய் அல்லாமல் போராளி அல்லாத தனது மனைவியுடனும் குழந்தையுடனும் அவன் சாதித்த சாதனைகள் நிறையவே இருக்கின்றன. தேவனின் போராட்ட வாழ்வு சண்டையில்தான் தொடங்குகின்றது. சண்டையில்தான் நகர்கின்றது. சண்டையில்தான் முடிகின்றது. 1988இல் தன்னைக் களவாழ்வுக்குள் இணைத்துக்கொண்ட நாள்முதல் வீரச்சாவடையும் வரை தேவன் அதிகம் சந்தித்தது சண்டைகளைத்தான். அவனது கன்னிச்சமர் இந்திய படைகதோடுதான். அந்தப் பட்டறிவோடுதான் வவுனியாக் கோட்டத் தாக்குதல் அணிக்குள் ஒருவனாய் தேவன் செயற்பட்டான். இந்தக் காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் தாக்குதல் அணிகள் கோட்ட ரீதியாக பிரிக்கப்பட்டிருந்தன. 1991ஆம் ஆண்டு தேசவிரோதிகள் மீது தாக்குதல் ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிடப்படுகின்றது. அந்த அணியில் தேவனும் தெரிவுசெய்யப்பட்டிருந்தான். தாக்குதல் நடைபெறவிருந்த இடம் எமக்குப் பாதுகாப்பற்றதும் யாரும் அந்தப் பகுதிக்குப் பெரிய அளவில் செல்ல முடியாததுமான இடமாகும். ஆனால் தாக்குதலை நடாத்தியே ஆகவேண்டும். விடுதலைப்புலிகளின் அணி நகர்ந்துசெல்கிறது. சண்டை தொடங்குகிறது. தேசவிரோதிகளின் முகாம் தகர்க்கப்படுகிறது. வெற்றியோடு அணி தளம் திரும்பியது. இந்தச் சண்டையில் தேவன் இதுவரை பெற்றிருந்த கள பட்டறிவை நன்கு பயன்படுத்தினான். அதில் திறமையாகச் செயற்பட்டான். தேவன் ஒரு சண்டைக்காரனாக அறிமுகமாகினான். அவனது சண்டைத்திறனும் அவனது ஆளுமைத்திறனும் அவனை வவுனியாக்கோட்டச் சிறப்புப் பொறுப்பாளர் ஆக்கியது. தேவனின் சிந்தனைகள் எப்போதும் சண்டைகளைப் பற்றியே இருக்கும். போராளிகளுடன் எப்போதும் அதைப்பற்றியே கதைத்துக்கொண்டிருப்பான். அப்போது பெரிய அளவில் தாக்குதல் மேற்கொள்வதைவிட சிறு சிறுதாக்குதல்களே மேற்கொள்ளப்பட்ட காலம். படைக் காவலரண்கள் முகாம்கள் அமைந்திருக்கும் இடங்களை வேவு பார்ப்பது, பார்க்கப்பட்ட வேவுத் தகவல்களின் படி தாக்குதல்களை மேற்கொள்வதுதான் தேவனின் பணியும் பொழுதுபோக்கும். எப்படியாவது கிழமைக்கு ஒரு தாக்குதலாவது மேற்கொள்ளவேண்டுமென ஏராளமான பொழுதுகளை அதற்கே செலவுசெய்தான். தேவனின் சமராற்றலை வெளிப்படுத்திய மற்றொரு தாக்குதல் இது. 1992ஆம் ஆண்டு காலப்பகுதியில் வவுனியா பிரப்பமரப் பகுதியில் சிறிலங்கா படை கவசஊர்திகளுடன் முன்னேற்ற நகர்வொன்றை மேற்கொண்டது. உடனடியாகவே முன்னேறிவரும் படையினரை வழிமறித்து அடித்து விரட்டுவதற்குத் தேவன் தலைமையிலான அணி களம் விரைகின்றது. சண்டை தொடங்குகின்றது. சிங்களப் படைகள் தங்கள் கவசஊர்திகளிலிருந்து தானியங்கித் துப்பாக்கிகளால் தாக்கினார்கள். தேவன் தனது அணியைச் சாதுரியமாய் நகர்த்தினான். சிங்களப்படைகளைச் சுற்றி வளைக்கின்றான். சிங்களப் படை திகைப்படைந்து பவள் கவசஊர்தி ஒன்றைக் கைவிட்டுவிட்டு ஓட்டம் எடுத்தது. தேவனின் திறமையான வழிநடத்தல் சண்டையை வெற்றியாக்கியது. பவள் கவசவாகனத்தில் இருந்த L3 ஆயுதம் கழற்றியெடுக்கப்பட்டது. வன்னிமாவட்டத்தில் முதல் முதல் L3 ஆயுதத்தைக் கைப்பற்றியது தேவன்தான். அன்றைய நாளில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாய் பதிவாகியது. சண்டை நடந்த இடத்திலிருந்து பவள் கவசஊர்தியைக் கொண்டுவர முடியாதிருந்ததால் அது தகர்க்கப்பட்டது. இப்படியாகத் தேவன் சென்ற சண்டைகள் எல்லாம் வெற்றியாய்த் தான் முடிந்தன. ஏனெனில் அதற்காய் அணுவணுவாய் உழைத்தான. வேவு பார்ப்பதிலிருந்து தாக்குதல் நடாத்தும் வரை எல்லாவற்றிற்கும் அவன் நிற்பான். எதையுமே தான் நேரில் நின்று உறுதிப்படுத்தினால் தான் அவனிற்கு நிறைவு வரும். அன்றைய நாட்களில் இப்போது போன்று முழுமையான கட்டுப்பாட்டுப்பகுதிகள் என்று இருந்தது குறைவு. படையினர் எமது பகுதிக்குள் ஊடுருவி வருவார்கள். அந்தச் செய்தி அறிந்து உடனேயே அணிகள் ஒழுங்குபடுத்தப்பட்டு களம் விரையும். சிங்களப் படைகள் அடிவாங்கியபடி பின்வாங்கிவிடும். அதேபோல் எங்களது அணிகளும் நீண்டதூரம் கால்நடையாகச் சென்று தாக்குதல் நடாத்தி எதிரிக்குச் சேதத்தை விளைவித்துவிட்டு தளம் திரும்புவர். இந்த நீண்டதூரப் பயணங்களில் எல்லாம் தேவன் முன்னணியில் செல்வான். சண்டைகளில் அதிகம் சாதிப்பான். இந்தச் சண்டைக்காரன் சுயவிருப்பின் பெயரில் சிறிதுகாலம் இயக்கத்திலிருந்து விலகியிருந்தான். 1997ஆம் ஆண்டு தேவனுக்கு திருமணம் நடக்கிறது. சுசித்திரா என்ற பெண்ணை அவன் தனது துணைவியாக்கிக்கொண்டான். இந்த நாட்களில் வவுனியாவில் இரணைஇலுப்பைக்குளத்தில்தான் தேவன் குடும்பம் வசித்துவந்தது. 1999ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிங்கள படை இந்தப் பகுதிகளில் முன்னகர்வுகளை மேற்கொண்டு எமது நிலங்களை வல்வளைத்துக் கொண்டிருந்தது. சிங்களப் படைகளால் வல்வளைக்கப்பட்ட இடங்களில் வாழ்ந்த மக்களுக்கு நெருக்கடிகள் அதிகரித்தன. படையினரால் இனங்காணப்படுவோர் தினமும் படை முகாமிற்கு வந்து கையெழுத்திடுமாறு மிரட்டப்பட்டனர். இந்த மிரட்டல்கள் தேவனுக்கு கடும் சினத்தையும் அதேவேளை படையினர் மீது நகைப்பையும் ஏற்படுத்தியது. எத்தனை களங்களுள் படையினரைச் சின்னாபின்னமாக்கி, சடலங்கள் ஆக்கிய அந்தச் சண்டைக்காரனுக்கு இந்த மிரட்டல்கள் எம்மாத்திரம்?. கையில் ஆயுதம் இல்லாமல் அவன் வீட்டில் இருந்தாலும் எத்தனை களங்களைக் கண்டு எத்தனை போராளிகளோடு உறவாடி அந்த நினைவுகளை மனசுக்குள் சுமந்த அவன் முடிவெடுக்கின்றான். எந்த நிலைவரினும் படையினரிடம் மண்டியிடுவதில்லையென்று. அன்றிலிருந்து தேவனின் தலைமறைவு வாழ்க்கை தொடங்குகின்றது. அப்போது அவனிற்கும் இயக்கத்திற்கும் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. அவன் தலைமறைவாகினாலும் அவனிடம் தற்பாதுகாப்பிற்கு ஆயுதமும் இருக்கவில்லை. தொடக்கத்தில் அவன் வைத்திருந்தது கத்தியொன்றைத்தான். போராளிகளுடன் தொடர்பை மேற்கொள்ள அவன் முயற்சித்தபோதும் தொடர்புகள் கிடைக்கவில்லை. தேவன் ஆயுதம் ஒன்று கிடைக்குமா என்று தேடிக்கொண்டிருந்தான். அவனது முயற்சிக்கு ஒரு “சொட்கண” கிடைத்தது. அதை வைத்துக்கொண்டு படையினர் மீது தாக்குதலை மேற்கொண்டு ஆயுதம் ஒன்றைக் கைப்பற்ற அவன் முயற்சித்துக் கொண்டிருந்த போது போராளிகளின் தொடர்பு அவனுக்குக் கிடைத்தது. தேவன் தலைமறைவானதுமே சிங்களப் படையினர் அவனைத் தேடினார்கள். தேவனின் வீட்டிற்குச் சென்று அவனது மனைவியை மிரட்டினார்கள். இராணுவத்தின் தொல்லை அதிகரித்ததால் அவளும் அவளது குழந்தையும் தேவனுடன் சேர்ந்து தலைமறைவா கினார்கள். ஒரு குழந்தை யுடன் தலைமறைவு வாழ்க்கை என்பது எத்தனை கடினமானது. ஒவ்வொரு இரவுகளும் அவர்களுக்கு நெருக்கடியைக் கொடுத்தன. ஆனால் அந்த நெருக்கடி களுக்குள்ளாலும் தேவனின் திட்டங்களிற்கு அவள் ஒத்துழைப்புக் கொடுத்தாள். வவுனியாவிற்குள் சென்ற போராளிகள் தேவனின் விருப்பத்தைத் தங்கள் தலைமையகத்திற்குத் தெரிவித்து அனுமதி பெற்று அவனை இணைத்துக்கொண்டார்கள். தேவன் வவுனியாவின் ஊர்களையெல்லாம் நன்கறிவான். அந்த ஊர்களின் ஒவ்வொரு சந்துபொந்துகளும் அவனுக்கு நன்கு பரிச்சயமானவை. தாக்குதலுக்கான வேவுகள் பார்க்கப்பட்டன. எதிரி வல்வளைத்த பகுதிக்குள் மறைந்து வாழ்ந்தபடி எதிரிக்குத் தொல்லைகொடுக்கத் தொடங்கினார்கள். எப்போதும் எந்தக் கணத்திலும் எதிரியால் உயிர் அச்சுறுத்தல் இருந்தபோதும் அவனது மனைவியும் குழந்தையும் தலைமறைவு வாழ்க்கையையே வாழ்ந்தனர். தலைமறைவு வாழ்க்கையின் அத்தனை கடினங்களையும் சிலகாலம் அவர்கள் அனுபவித்தனர். இந்தக் கடினங்களைத் தாங்கியபடி தேவன் நடாத்தவிருக்கும் தாக்குதலுக்கு அவனது துணைவியும் குழந்தையும் வேவு பார்த்துக்கொண்டிருந்தனர். அவள் குழந்தையைத் தூக்கிக்கொண்டு படைக் காப்பரண்கள் அமைந்திருக்கும் இடம், அவர்கள் வைத்திருக்கும் ஆயுதங்கள், அங்கு நிலைகொண்டுள்ள படையாட்களின் எண்ணிக்கை போன்ற விடயங்களை அவதானித்து வந்து தேவனிற்குக் கொடுப்பாள். போராளிகள் சேர்த்த வேவுத் தகவல்களோடு இந்தத் தகவல்கள் சரிபார்க்கப்பட்டு அதன் பின் தாக்குதல் நடக்கும். இரணைஇலுப்பைக் குளத்தில் தேவனால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு இப்படித்தான் வேவு பார்க்கப்பட்டது. தாக்குதல் நடைபெறவிருந்த அன்றைய நாள் காலையும், தேவனின் மனைவி வேவு பார்த்துக்கொடுத்தாள். வேவுத் தகவல்களின்படி அங்கு காப்பரண் அமைத்திருந்த சிங்களப் படைகள் மீது அதிரடித்தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. திட்டத்தின்படி தாக்குதல் வெற்றிகரமாக நடந்துமுடிந்தது. ஐந்து படையினர் கொல்லப்பட்டனர். நான்கு துப்பாக்கிகளும் இதர பொருட்களும் கைப்பற்றப்பட்டன. இதேபோல தட்சணாமருதமடுப் பகுதியில் குளத்தில் குளிப்பதற்கு வரும் படையினர் மீது தேவன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதலில் நான்கிற்கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டனர். ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. இப்படி தட்சணாமருதமடு, முள்ளிக்குளம், மடு, பாலம்பிட்டி என பல பகுதிகளிலும் தேவனின் தாக்குதல்கள் நடைபெற்றன. தேவனுடன் சண்டைக்குச் செல்வதென்றால் போராளிகள் போட்டிபோட்டுக்கொண்டு முன்வருவார்கள். ஏனெனில் தேவனில் அத்தகைய நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. அவன் சண்டைகளைத் திட்டமிடும்போது இழப்புக்கள் இல்லாமல் எப்படி வெற்றிகரமாகத் தாக்குதலை நடத்தமுடியுமோ அப்படிச் செய்யக்கூடிய வகையில் நன்கு திட்டமிடுவான். களத்தில் முதலாளாய் தானே நிற்பான். நிலைமைகளுக்கு ஏற்றவாறு முடிவெடுத்துச் சமர்க்களங்களைச் சாதுரியமாய் வழிநடத்துவான். எந்தப் போராளியும் தேவனுடன் சண்டைக்குப் போவதென்றால் சம்மதித்துப் போய்விடுவான். தேவன் அத்தகைய சாதனைகளைச் சண்டையில் சாதித்திருக்கின்றான். துணிந்தவனே சமரில் வெற்றியடைவான். தேவன் துணிந்தவன். அதனால் வெற்றிகளுக்குச் சொந்தக்காரனாகினான். தேவனின் துணிவிற்கு அவனால் மேற்கொள்ளப்பட்ட “கிளைமோர்” தாக்குதல் ஒன்று சான்று பகர்கின்றது. கவசஊர்திகளில் சுற்றுக்காவல் செய்யும் படையினர் மீது “கிளைமோர்” தாக்குதலுக்கு இடம் பார்க்கப்பட்டு நாளும் குறிக்கப்பட்டது. தேவன் தெரிவுசெய்த இடம் தாக்குதலை நடாத்துவதற்கு முற்றிலும் சாதகமற்ற இடம். தாக்குதலில் சின்னப் பிசகு நடந்தாலும் தாக்குதலுக்குச் செல்லும் அத்தனைபேரும் சந்தேகத்திற்கு இடமின்றி அந்த இடத்திலேயே எதிரியால் கொல்லப்படக்கூடும். இதனால் இந்த இடத்தைத் தெரிவுசெய்யவேண்டாமெனப் போராளிகள் அவனிற்கு ஆலோசனை கூறினார்கள். அந்த இடத்தில் சிறு சிறு பற்றைகளே இருந்தன. எழுந்து நின்றால் எதிரியால் உடனடியாகவே இனங்காணப்படக்கூடிய சாத்தியம் அதிகம் இருந்தது. தேவனிற்கு இவையெல்லாம் சின்னப் பிரச்சினைகள். இந்தத் தாக்குதலை இந்த இடத்தில்தான் நடாத்தவேண்டும் என அவன் உறுதியாய் நின்றான். “கிளைமோர்” வெடிக்கவைக்கும் ஆழியை இயக்கும் பொறுப்பையும் தானே எடுத்துக்கொண்டான். அவனுடன் சென்ற போராளிகளை நிலையெடுக்கச் செய்துவிட்டு சிறு பற்றை மறைவில் இருந்தபடி ஊர்தியை அவதானித்து கிளைமோரை வெடிக்கவைத்தான். பதட்டம் இல்லாமல் அந்தச் சிறுபற்றைக்குள் இருந்தபடி படையினருக்கு ஏற்பட்ட இழப்புக்களை அவதானித்தான். இந்தத் தாக்குதலில் 18மேற்பட்ட சிங்களப் படைகள் கொல்லப்பட்டனர். தேவனின் வெற்றிகரமான இந்தத் தாக்குதல்களால் எதிரி சினமடைந்தான். தேவனை எப்படியாவது கொன்றுவிடவேண்டுமென்று அலைந்துதிரிந்தான் எதிரி. ஒருநாள் தேவனின் குடும்பம் மறைவிடம் ஒன்றில் இருந்தபோது சிறிலங்கா படை சுற்றிவளைத்துக்கொள்கின்றது. தேவனின் குழந்தை பச்சைச் சீருடையுடன் வருவது போராளிகள் என நினைத்து அவர்களை நோக்கிச் சென்றது. நிலைமை இப்போது விபரீதமாகிவிட்டது. குழந்தையை விட்டுவிட்டு இருவரும் தப்பிக்கமுடியாது. உடனடியாகவே முடிவெடுக்கின்றனர். தேவனை ஓடித்தப்புமாறு சொல்லிவிட்டு மனைவி படையினருக்குத் தன்னை வெளிக்காட்டிக்கொள்கின்றாள். சிறிலங்கா படை அவளை அடித்துத் துன்புறுத்தியது. தேவன் இருக்கும் இடத்தைக் காட்டுமாறு மிரட்டியது. அவர்கள் நினைத்தது நடக்கவில்லை. அவளது தாயை அழைத்துத் தேவனிடம் இனி இவளை அனுப்பவேண்டாம் என சொல்லி ஒப்படைத்தார்கள். தேவன் இப்படி பல நெருக்கடிகளைச் சந்தித்தான். அவனது களவாழ்விற்குள் ஒரு பொழுதில் அரவம் தீண்டி கடும் உபாதைக்கு உட்பட்டான். இனி தப்பமுடியாது என்று எண்ணும் அளவிற்கு நிலைமை விபரீதமாக இருந்தது. தேவனிற்குப் பாம்பு கடித்த செய்தி படையினரின் காதுக்கு எப்படியோ தெரிந்துவிட்டது. தேவன் இனி செத்துவிடுவான் என மகிழ்ச்சிக்கொண்டாட்டம் போட்டார்கள். ஆனால் தேவன் தப்பிவிட்டான். தேவனை எமது கட்டுப்பாட்டுப் பகுதிக்கு நடவடிக்கை ஒன்றிற்காக வருமாறு பணிப்பு வந்தது. ஆனால் தேவன் அதை மறுத்துவிட்டான். இயக்கத்திலிருந்து சிறிதுகாலம் தான் ஒதுங்கியிருந்ததால் சண்டைகளில் நிறையச் சாதித்தபின்னரே தான் வருவேன் என அடம்பிடித்தான். எனினும் அவன் கட்டாயம் வரவேண்டும் என மீள வலியுறுத்திய பின்னரே விடுதலைப்புலிகளின் வன்னித்தளம் நோக்கி வருகின்றான். 1999ஆம் ஆண்டின் 10 மாதம் தேவனின் குடும்பம் இரவோடு இரவாக எதிரியின் காவலரணூடாக பல இடர்களைத் தாண்டி வன்னித்தளம் வந்தடைந்தது. பின்பும் அதிக நாட்களை வவுனியா படை வல்வளைப்புப் பகுதியிலேயெ கழித்தான். படையினருக்குத் தொல்லைகொடுக்கும் பல தாக்குதல்களை அங்கிருந்தபடி மேற்கொண்டான். தேவனிற்கு எப்போதும் பிடித்தது சண்டைதான். அதற்கேற்றபடியே தனக்குக் கீழிருக்கும் போராளிகளை வழிநடத்துவான். அவனது குடும்பம் வன்னிக்கு வந்தபின் அவர்களுக்குப் பாதுகாப்புக் கிடைத்ததால் தனது நேரம் முழுவதையும் போராளிகளுடனேயே செலவு செய்யவிரும்பினான். வீட்டிற்குச் சென்றாலும் “அங்க என்னபாடோ தெரியாது” என்று சொல்லிவிட்டுப் போய்விடுவான். “உங்கட சேவைக்காலம் காணும்தானே” என்று கேட்டால் “நான் சண்டைபிடித்து வீரச்சாவுதான் அடையவேண்டும் அதுதான் என்ர விருப்பம்” என்று சொல்லுவான். “அப்பிடி நடக்காட்டி என்ர பிள்ளையள் வளர்ந்த பிறகு நான் அவயளுக்குச் சண்டை பழக்கி அவையும் சண்டை பிடிக்கத் தொடங்கினாத்தான் நான் சண்டையில இருந்து ஓய்வு பெறலாம்” என்று சண்டையைப் பற்றியே கதைத்துக்கொண்டிருப்பான். இந்திய படைக் காலத்திலிருந்து இற்றைவரை பல சண்டைக்களங்களைத் தேவன் சந்தித்திருக்கின்றான்படை நகர்வு முறியடிப்புக்கள், பதுங்கித் தாக்குதல்கள், காவலரண் மீது தாக்குதல்கள், தேச விரோதிகள் மீதான தாக்குதல், கடற்புலிகள் அணியில் சிறிதுகாலம் இருந்தபோது கடற்சண்டை என இதுவரை 55இற்கும் மேற்பட்ட களங்களைச் சந்தித்துச் சாதனை படைத்தவன் தேவன். இந்த நீண்ட களச் சாதனைகளின்போது பலமுறை அவன் விழுப்புண் அடைந்திருக்கின்றான். அவனது உடலெங்கும் காயத்தழும்புகள் சாட்சியமாய் இருக்கிறது. தலையில், தோள்மூட்டில், நெஞ்சுப் பகுதியில், மூச்சுப் பையில், தொடையில், காலில் என உடலின் பல்வேறு பகுதிகளிலும் விழுப்புண் தழும்புகள். இந்த விழுப்புண்களை அவன் ஒரு பொருட்டாகக் கருதியதில்லை. தன் தாய்நாட்டிற்காகத் தான் மட்டுமல்லாது போராளி அல்லாத தன் மனைவியோடும், குழந்தையோடும் தேவன் அதிகம் சாதித்த மாவீரன். ஒரு போர் வீரன். களத்தில் சண்டையிடுவதற்கு குடும்பம் ஒரு சுமையல்ல. அது துணையென்று நிரூபித்தவன் தேவன். இறுதி நாட்களில் அவன் மணலாறு மாவட்டத்தில் பகுதிப் பொறுப்பாளராகக் கடமையாற்றினான். தன் பணியைச் சரிவர நிறைவேற்றுவதில் இங்கும் கடுமையாய் உழைத்தான். இந்த வீரன்தான் 29.03.2007 அன்று மணலாற்றுப் பகுதியில் எதிரியுடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வித்தாகிப் போனான். வித்துக்கள் புது வீரியத்தோடு முளைவிடும். அந்த வீரியம் இந்தத் தேசத்தை எப்போதும் காத்துநிற்கும். நினைவுப்பகிர்வு:- புரட்சிமாறன். வெளியீடு : விடுதலைப்புலிகள் (பங்குனி, சித்திரை 2007) “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” https://www.thaarakam.com/news/119864
  15. சுனிதா ஜெயின் -கவிதை தமிழாக்கம்: கோரா அமெரிக்கன் தேசி* நீ பதினேழு வயதினள். அத்துடன் இன்னும் முத்தமிடப்படாத வாயில் கசப்பாக உணர்கிறாய், உன் பள்ளித் தோழிகள் அனைவரும் கன்னிமை இழந்தவர்கள் என்று அறிந்து கொண்டதால். வீட்டில், நீ அழுகிறாய். “என் கைகளைப் பிடித்துக்கொள், அப்பா நான் மிகவும் அச்சுறுத்தப் பட்டவளாகவும் தன்னந்தனியளாகவும் உணர்கிறேன்,” என்கிறாய். ஆனால் நீ வாழ்நாள் முழுதும் அறிந்திருக்கும் உன் அப்பா உன்னைத் தடுத்தவாறு எங்கோ பார்க்கிறார் உன் பெண்ணுடல் அவர் கண்களைச் சுடுகிறது நீ பதினேழு வயதினள் ஆனாலும் உன் தாய் உன்னைக் கடிந்து கொள்கிறாள் தன் இயல்பான திறமையுடன் – “அது சரியல்ல, கேட்கவே வேண்டாம். அவர்களைப் போன்றவர் அல்லர் நாம். எப்போதும் காம இச்சை கொண்டிருக்கும் மிருகங்கள்; நாம் வேறு வகை. நினைவுறுத்திக் கொள்வாயா?” எதை நினைவில் வைப்பது, அம்மா ? என் இதயம் விரைந்தோடும் குதிரை. என் ரத்தம் துள்ளி ஓடுகிறது கணைகள் பறக்கின்றன நாளெல்லாம். மேலும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் தம் காருக்குள் ஒருவரோடு ஒருவர் மோதிச் சல்லாபிக்கையில் அவர்களின் பரிகாசத்துக்கு இலக்காகிறவள் நான். நீ பதினேழு வயதினள். மேலும் கன்னிமை இழந்தவள் அவர்கள் உனக்குப் பயண ஏற்பாடு செய்கிறார்கள், வேறு நாட்டிலுள்ள உன் சொந்த ஊருக்கு. அங்கே உன் உண்மையான ஆரம்பங்களின் வேர்களை அறிந்து கொள்ளக் கூடும். சுட்டெரிக்கும் புழுதிக் காற்றில் , உன் தொடைகள் வியர்வையில் நனைந்திருக்க, சரித்திரம் கசிந்து கொண்டிருக்கும் கடைத்தெருக்கள் வழியே நீ நடக்கிறாய். ஒரு கை உன் முலையைத் திடீரெனப் பிடிக்கிறது. கள்ளத் தனமாக, ஒரு விரல் உன் ஆசன மேட்டைக் கிள்ளுகிறது. நீ பதினேழு வயதினள். கைகளை மடக்கி மூடு திரையாக்கி உன் வெட்கத்துக்குரிய மார்பு வரியைப் போர்த்துகிறாய். வளைந்தும் நெளிந்தும், பாம்புத் தீண்டலை, காம வெறி கொண்ட கண்ணை, மொழி சாராத கண்ணியமற்ற காம அழைப்பைத் தவிர்க்கிறாய். “புதைத்து விடு அம்மா என்னை, ஒரு தொன்மையான குழியில்,” எனக் கதறுகிறாய். *** மூலக் கவிதை ஆசிரியர் வாழ்க்கைக் குறிப்பு : சுனிதா ஜெயின் (1940-2017) படிப்பு : BA MA Ph .D (university of nebraska-Lincoln) கவிஞர், எழுத்தாளர், பேராசிரியர் (ஹிந்தி, இங்கிலிஷ் ) பத்மஸ்ரீ மற்றும் பல விருதுகள் பெற்றவர். மொழி பெயர்ப்புக்கான கவிதை: American Desi and other Poems என்னும் கவிதைத் தொகுப்பிலிருந்து எடுக்கப் பட்டது . மூலக் கவிதை : AMERICAN DESI You are seventeen And your unkissed mouth is bitter With the knowledge That your friends at school Have lost their virginity. At home, you cry, “Holdme, Daddy I am so frightened And lonely.” But he Whom you have known all your life Looks away forbiddingly. Your woman’s body Scalds his eyes. You are seventeen And your mother pickles you With her native skills- “No. Don’t even ask. We are not like them. Always rutting. Such animals: We are different . Remember?” Remember what, mother? My heart’s a horse. My blood trots. The darts fly all day, And when they pound each other In their parked cars The butt of jokes is me. You are seventeen and lost. They arrange a trip to your Origins-another country. There you may learn the roots Of your real beginning. In the hot dusty wind, Your thighs moist with sweat. You walk through bazaars Oozing history. A hand grabs your breast Surreptitiously, a finger Pinches your butt’s reef. You are seventeen. You fold your arms Like a scarf over your shameful Bust line. You wriggle free Of the snacking touch,the leering Eye, the lewd calls in a language With broken hinges. “Bury me , mother,” you weep, “In some ancient pit of time”. https://solvanam.com/2020/03/21/சுனிதா-ஜெயின்-கவிதை/
  16. நண்பர் கொழும்பானுக்கும் முனிவர்ஜீ ஆகிய தனிக்காட்டுராஜாவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉
  17. சிறுத்தையணியில் சீற்றமுடன் பகையளித்து நின்ற லெப்.கேணல் வானதி.! Last updated Mar 20, 2020 விடுதலைப் போராட்ட வரலாறுகளில் முதன்மையான தமிழீழ விடுதலை போராட்டமானது தன்னகத்தே பெரும் போராளிகள் மக்களின் தியாகங்களை சுமந்த வலராறுகள் நாம் அறிவோம். ஆனாலும் மறைமுக கரும்புலிகள் போராளிகளிகளின் உள்ளுணர்வுகளும் தியாகங்களும் பலரது மனங்களுள்ளே மறைந்து போகிறது ஆனாலும் அவர்களின் வாழ்வும் மண்ணிற்க்காய் தம்மை அர்ப்பணித்த தற்க்கொடையும் எம்மையெல்லாம் எம் இலக்கு நோக்கிய பயணத்தில் உந்தி தள்ளும் விசையாக செயற்பட ஏதுவாகிறது. தாயக களங்களில் சமர்களிலெல்லாம் போராளிகளின் தன்னலமற்ற செயற்பாடுகளே வெற்றிகளை எமதாக்கியது. குடும்ப வாழ்வில் இணைந்த பெண் போராளிகளாயினும் போராட்ட வாழ்வின் முன்னுதாரணங்களாக மேஜர் நிர்மலா, லெப்.கேணல் கமலி, மேஜர் சுடரேந்தி, லெப்.கேணல் வரதா, கேணல் தமிழ்செல்வி, லெப்.கேணல் இசைப்பிரியா ஆகியோரின் வரிசையில் லெப்.கேணல் வானதியும் இணைந்து கொண்டாள். ஆம் குடும்ப சுமைகளை தாங்கும் குடும்பத்தலைவிகளாகவும் தாயக சுமைகளை தாங்கும் வீராங்கனைகளாகவும் போராடும் வாழ்வின் ஆதாரங்களாக மனதின் துணிவு எங்கிருந்துதான் கிடைக்க பெற்றது இவர்களிடம்…..!!!!!!!! சிறுத்தை படையணியின் இரண்டாவது பயிற்சி முகாமிலே பயிற்சிகளை நிறைவு செய்தவள் லெப்.கேணல் கிருபா/ வானதி. தொடக்க காலம் முதல் லெப்.கேணல் சுதந்திராவின் வழிகாட்டலில் சிறுத்தை படையணிகளால் நடாத்தபட்ட பாரிய வலிந்த தாக்குதல்கள், ஊடுருவி தாக்குதல்கள், வேவு நடவடிக்கைகள் போன்றவற்றில் மிகவும் திறமையாக செயற்பட்டாள். சமகாலத்தில் கவிகை, கட்டுரை, நாடகங்களென இவளது கலைத்திறமைகளும் வெளிவந்து கொண்டிருந்தன. அமைதியான இயல்பிற்கு சொந்தகாரி இவள். ஆனாலும் போராளிகளின் மத்தியில் கல, கலப்பாகவும் போராளிகளை மகிழ்வித்த வண்ணமிருப்பாள். பல சமர்களில் விழுப்புண்களை ஏற்ற உடலுடன் தொடர்ந்தும் களப்பணிகளில் இவளது பயணம் தொடர்ந்தது. சிறுத்தை படையணி சோதியா படையணியுடன் இணைக்கப்பட்ட பின்னர் வலிந்த தாக்குதல் நடவடிக்கைகான பயிற்சி நடவடிக்கைகள், மாதிரி பயிற்சி நடவடிக்கைகள்களை தானே முன்னின்று நடாத்த சமருக்கான வெற்றிக்கு வழிசமைத்தாள். மேஜர் சோதியா படையணியில் பிரிகேடியர் துர்க்கா அவர்களின் நிர்வாக பொறுப்பாளாராக பல ஆண்டுகள் பணியாற்றினாள். போர் அமைதி காலத்தின் போது யாழ்.மாவட்டத்திற்கு அரசியல் பணிக்காக தெரிவு செய்யப்பட்ட சோதியா படையணி போராளிகளிற்கு பொறுப்பாளாராக நியமிக்கபட்டாள். அமைதிக் காலமென்றாலும் பல புல்லுருவிகளின் செயற்பாடுகள், இராணுவ புலனாய்வாளர்களின் ஊடுருவல் முயற்சிகளிலிருந்து பெண் போராளிகளை காக்கும் பணி இவளின் முதன்மை செயற்பாடாகவிருந்தது. 2005 ம் ஆண்டு காலப்பகுதியில் தலைவர் அவர்களின் வேண்டுகோளுக்கமைய தான் வாழ்க்கை துணைவராக நேசித்த புலனாய்வுத்துறை பொறுப்பாளர்களில் ஒருவரான வினோதன் எனும் போராளியை கரம் பிடித்து திருமணபந்தத்தில் இணைந்துகொண்டாள். திருமணபந்தத்தில் இணைந்துகொண்ட போதிலும் தனது கள செயற்பாட்டில் எவ்வேளையிலும் பின் நிற்காது தொடர்ந்தும் சமர்களிலும், நிர்வாக செயற்பாடுகளிலும் உழைத்தாள். 2006 ம் ஆண்டு பண்ணரசன் எனும் குழந்தைக்கு தாயான போதும், அவளது போராட்டச் செயற்பாடுகள் தொடர்ந்த வண்ணமிருந்தன. இறுதி சமர் வன்னியெங்கும் விரிந்திருந்த போதும், குடும்ப வாழ்வும், களமுனை வாழ்வுமாக இவளது பயணம் தொடர்ந்தது. தான் வளர்த்து விட்ட தோழிகளின் இழப்புக்கள், மக்களின் பேரழிவுகள், தொடர் வான் தாக்குதல்கள், இடப்பெயர்வின் அவலங்கள், மனதினை தாக்கிய போதும் கூட தனது குடும்பம், தனது குழந்தையென எவற்றையும் எண்ணாது தாயகத்தை எதிரியின் வல்வளைப்பிற்குள் செல்லாது தடுக்கும் பணியில் இரவு பகல் பாராது ஈடுபட்டாள். துணைவன் ஒரு சமர் களத்தில், இவளோ எதிரியின் வரவை எதிர்பார்த்து வேறொரு சமர் களத்தில், இவர்களின் குழந்தை செல்வமோ உறவினர்கள், நண்பர்களின் பராமரிப்பில் மாதமொருமுறை ஒரு சில மணித்துளிகளே குடும்பங்களுடனான சந்த்திப்புக்கள். இப்படியாகத்தான் இறுதிப் போர் காலங்களில் போராளிக் குடும்பங்களின் வாழ்விருந்தது. இறுதிப் போர்க்காலங்களில் தொடர்ச்சியாக எதிரின் வல்வளைப்புக்களிற்கு எதிரான சமர்களில் ஈடுபட்ட லெப்.கேணல் வானதி 21.03.2009 அன்று தாக்குதல் நடவடிக்கை ஒன்றிற்கான திட்டமிடல் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது எதிரியின் எறிகணை வீச்சில் வீரச்சாவை அணைத்துக் கொண்டாள். விடுதலைக்காய் வீச்சாகி -நின்றவள் களங்களிலே கனலாகி நின்றவள் சிறுத்தையணியில் சீற்றமுடன் பகையளித்தவள் சோதியா படையணியின் சோதியாய் நின்றவள் கனவுகள் தாங்கி நினைவெல்லாம் நடப்போம். – ஈழமதி https://www.thaarakam.com/news/118264
  18. பல களமுனைகளில் வெற்றியை அள்ளித்தந்த கேணல் இளங்கீரனின்.! On Mar 19, 2020 கேணல் இளங்கீரன் அவர்களின் 11 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும் வன்னியில் நடைபெற்று வரும் சமரில் 19.03.2009 அன்று விடுதலைப்புலிகளின் சமர்க்களத் தளபதிகளில் ஒருவரான கேணல் இளங்கீரன் வீரச்சாவடைந்தார். சேட்டன் என அழைக்கப்படும் கேணல் இளங்கீரன் மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர். நீண்டகாலம் இம்ரான்-பாண்டியன் படையணியில் பணியாற்றியவர். நிறையச் சமர்க்களங்களைச் சந்தித்தவர். லெப்.கேணல் அக்பரின் தலைமையில் லெப்.கேணல் விக்ரர் கவச எதிர்ப்பு அணி செயற்பட்ட காலத்தில் அவ்வணியின் தாக்குதற் தளபதிகளுள் ஒருவராகப் பணியாற்றியவர். ஓயாத அலைகள் – 3 இன்போது குடாரப்பில் தரையிறங்கிய புலியணிகள் இத்தாவிலில் பிரிகேடியர் பால்றாச்சின் தலைமையில் சண்டையிட்டபோது விக்ரர் கவச எதிர்ப்பு அணியையும் சமர்க்களத்தின் ஒரு பகுதியையும் வழிநடத்தியவர் இளங்கீரன். https://www.thaarakam.com/news/117915
  19. இணையவனுக்கு இனிய 50வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 🎉🎉🎉 என்றும் குன்றா இளமையோடு இருக்க வாழ்த்துக்கள்😊
  20. உயிர் கூட்டிலிருந்து பிரிந்தபறவை கடற்கரும்புலி லெப்.கேணல் சிலம்பரசன் Last updated Mar 9, 2020 ” ஜெயரஞ்சன் A/L சோதினையில் பாஸ் பண்ணிட்டானாம். அவனுக்கு பி.கொம் கிடைச்சிருக்காம் ” என்ற செய்தி அப்பாவின் காதுக்கெட்டியது. வீட்டில் எல்லோருக்கும் அவனை நினைக்கப் பெருமிதமாயிருன்தது. அப்பா அந்தச் செய்தியையும் காவிக்கொண்டு ரஞ்சனிடம் போனார். ஆனால் அந்தச் செய்தி அவன் காதுகளுக்கு எட்டமுன்பே அவன் தன திறமைகளை இந்த தேசத்திற்க்கா அர்ப்பணிக்கத் தயாராகியிருந்தான். அப்பாவினால் அவன் முன்வைத்த வினாவிற்கு பதிலளிக்க முடியவில்லை. ஏனென்றால் அவை மறுக்கப்பட முடியாததாயிருந்தது. அப்போது அவன் பல்கலைக்கழகப் படிப்பிர்க்குள் முடங்கிபோகாமல் அவன் எடுத்த முடிவு எங்கள் கடற்செனையில்ன் ஒரு கடற்தளபதி என்ற நிலைக்கும் எழுதுகோல்களுக்குள் புகுத்தமுடியாத அவன் சாதனைகளுக்கும் வழிவகுத்தன. அந்த வீரனைப் பற்றி இப்போது சொல்லக் கூடியவற்றை மட்டும் சுமந்தபடி அவனின் கடந்தகால வாழ்க்கைக்குள் எண்ணங்கள் நுழைகின்றன. 1992ம் ஆண்டு காலப்பகுதியில் இந்தப் போராட்டத்தின்பால் ஈர்க்கப்பட்டுச் செயர்ப்பட்டவன். 1994ம் ஆண்டளவில் தன்னை முழுமையாக இயக்கத்தில் இணைத்துக் கொண்டான். அந்த நாட்களில் அவனுக்கு முதலில் கிடைத்தது அரசியற்பணி. இளம் வயதிலேயே ஒரு முதிர்ச்சியாளனுக்கேயுரிய அறிவைக்கொண்டு அரசியற்பணியை சரிவரச்செய்த்து வந்த அவனுக்கு 1995ம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற யாழ்குடாநாட்டிலிருந்தான இடப்பெயர்வு பெரும் சவாலாக அமைந்தது. குறுகிய கால அவகாசத்திற்குள் எமது போராளிகளையும் எமது வளங்களையும் ஒருங்கிணைத்து வன்னிக்கு அனுப்ப வேண்டிய பாரிய பொறுப்பு அவனிடம் ஒப்படைக்கப்படுகிறது. குறைந்தளவு வளங்களோடு கூடியளவு செயர்த்திறனைக் காட்ட வேண்டிய நிலை அவனுக்கு. ஆனாலும் துணிவோடு அதைச் சவாலாக ஏற்று குருநகர் ஐந்து மாடிக்கட்டிடத்தில் நின்றபடி கடற்புலிகளின் போராளிகளுக்கு நிதானமானது சாதிரியமானதுமான கட்டளைகளை வழங்கி சிக்கலான அந்தப் பணியைச் செய்து முடித்தது. அவன் திறமையின் முதற்சான்றாய் அமைந்தது. ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு துறையில் ஈடுபாடும் திறமையும் உள்ளதென்பது சாதாரணமான விடயம். ஆயினும் எல்லத்திரமைகளையும் தன்னகத்தே கொண்டு இயங்குபவர்கள் பலர் இருக்கமுடியாது. இந்த சிலம்பரசன் அந்தச் சிலருக்குள் அடங்குகிறான். ஒரு விடுதலைப்போராட்ட அமைப்பான எங்களின் கடல் அணியில் இருந்தபடி தான் வாழ்ந்த காலத்தில் கடந்து வந்த கடினபாதையின் எல்லாச் சுமைகளிலும் தொல்கொடுத்துச் சுமந்தவனவன். அது 1998ம் ஆண்டின் நாட்கள். யாழ்ப்பாணத்தினை ஆக்கிரமித்துள்ள சிங்கலபடைகள் கடல்வழியை நம்பியே உயிர்வாழ்வதால் அதற்குத் துணைபோகும் கடற்கலங்களை வழிமறித்து தாக்கி அழிக்கத்திட்டம் திட்டப்படுகிறது. சிங்கள கடற்படையின் கப்பல்கள் பயணம் செய்யும் ஒரு இரவுப்பொழுதில் கடற்புலிகளின் தளத்தில் இருந்து லெப் கேணல் நிரோஜனின் கட்டளையின் கீழ் கடற்சமர்க்களம் புக கடற்புலிகள் தயாராகினர். அங்கே தாக்கப்ப்படும்போகும் கப்பலொன்றை அழிக்கும் பொறுப்பு சிலம்பரசனிடம் வழங்கப்பட்டுகின்றது. சிலம்பரசன் தன் திட்டத்திற்குச் செயல்வடிவம் கொடுக்கவும் போராளிகளையும் கடற்கலங்களையும் தயாராக்கினான். புறப்படுவதற்கு முன்பாகவே தன் போராளிகளுடன் சேர்ந்து , கப்பலை அழிக்காது தளம் திரும்புவதில்லை என்று உருதியெத்துக்கொள்கிறான். புலிகளின் கடற்கலங்கள் கடலுக்குள் இறக்கப்பட்டு கடற்சமர்க்களம் நோக்கி புறபடுகிறன. கூடவே கடற்கரும்புலிப்படகுகளும் புறப்படுகின்றன. மூன்று சண்டைப் படகுகளும் – இரண்டு கரும்புலிப் படகுகளும் கொண்ட கடற்புலிகளின் தாக்குதலணி எதிரியின் பாரிய வழங்கல் அணியில் பயணித்த ” பபதா ” – ” வலம்புரி ” ஆகிய கப்பல்கல்களையும் ஒரு தரையிறங்கு காலத்தையும் அவர்ரிர்க்குப் பாதுகாப்பாக பயணித்த அதிவேக டோறாப்படகுகள் ஆறினையும் அவற்றிற்கான துணைபடகு நான்கினையும் எதிர்கொள்ளப் போகிறன. படகுகளின் பலம் என்று பார்க்கும் பொழுது கடற்புலிகளின் பலம் எதிரியுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாததாய் இருந்தது. அனாலும் துணிச்சல் மிக்க வீரர்களால் அந்தக்கடற்சமர் எதிர்கொள்ளப்படுகிறது. முல்லைத்தீவுக்கு நேராக அந்தக் கடற்படையின் கப்பல் அணியை தடுத்துச் சமர்புரிய முனைந்தபோதும் அவை தாக்குதலில் இருந்து தப்பிக்க முயன்றன. ஆனாலும் பருத்தித்துறைக்கு நேரே கடற்புலிகள் கடற்படையின் கப்பல்களை வழிமறித்துச் சமர்புரியத் தொடங்கினர். கடற்புலிகளின் தலைமையகத்துடன் தொடர்பில்லாதது முற்றிலும் சாதகமற்றதும் எதிரியின் எல்லைகளுக்குள்ளும் நின்றபடி கடற்சமரை லெப் கேணல் நிரோஜன் வழிநடத்த அதற்குத் துணையாக சிலம்பரசன் தன்படகை வழிநடத்தி சமர்புரிந்து கொண்டிருந்தான். அந்தக்கப்பற் தொகுதியில் பயணித்த வலம்புரிக்கப்பல் மீது இலக்கு வைத்து சிலம்பரசனின் படகு தாக்குதல் நடாத்தியது. எதிரியின் கப்பல்களை நெருங்க விடாது டோறாக்கள் நெருப்பு மழை பொழிந்த போதும் துப்பாக்கிச் சன்னங்களிடையே தன்னுடன் வந்த கரும்புலிப்படகிற்குப் பாதை அமைத்துக் கொடுத்து வலம்புரிக் கப்பலை அழிக்கும் நடவடிக்கையில் வெற்றிகண்டான் சிலம்பரசன். வலம்புரிக்கப்பலும் – பபதாக்கப்பலும் கடலில் மூழ்கிக்கொண்டிருக்க சாதகமற்ற சூழலுக்குள் இருந்து தளம் திரும்பின கடற்புலிகளின் அணிகள். கடற்புலிகள் அணியின் பல்துறை சார்ந்த செயற்பாடுகளில் எந்த செயற்ப்பாட்டிலும் இருக்கநிலை வந்து அடுத்த கட்டங்களிற்கு நகருவதற்கு தடை ஏற்படின் அந்தத் தடைகளை உடைக்கும் முதல் மனிதனாக சிலம்பரசனின் உருவம் கடற்புலிகளின் சிறப்புத்தளபதியின் முன் தோன்றும். அவ்வாறுதான் கடற்புலிகளின் விநியோக அணியானது நெருக்கடி நிலையைச் சந்தித்தபோது தமிழீழத் தேசியத்தலைவராலும் கடற்புலிகளின் சிறப்புத் தளபதியாலும் அந்தப்பணிக்கு சிலம்பரசன் நியமிக்கப்பட்டான். இயல்பாயே தனித்துவமான திறமைகளைக் கொண்டிருந்த சிலம்பரசன் கடல்சார்ந்து தான் பேரிருந்த கல்வி மூலமும் தனது துணிவும் மதிநுட்பமான செயற்திறன் முலமும் நெருக்கடிகளைத் தாண்டி கடலில் கடற்புலிகள் விநியோகப்பணியை வெற்றிகரமாக நிறைவு செய்து எமது விடுதலைப் போராட்டங்களில் ஏனையபோராளிகள் காலங்களில் புரிந்த பல சாதனைகளுக்கு வெளித்தெரியாமல் உழைத்தவன். கடற்புலிகளின் விநியோகப்பணியில் ஈடுபட்ட நாட்களில் தனது விநியோக அணியின் உதவியுடன் சிறிலங்காவின் கடற்களைங்க்களை அழிக்க வென்றும் என்ற எண்ணமும் அவன் மனதில் எழுந்தது. தன் எண்ணக்கருவைச் செயல் வடிவமாக்க கடற்புலிகளின் சிறப்புத் தளபதியின் அனுமதியுடன் திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணிக்கும் உகின கப்பல் மீதான் தாக்குதல் நடவடிக்கைக்கு லெப் கேணல் பழனி தலைமையில் கடற்புலிகளின் தாக்குதற் படகுகள் கடலிற்குள் இறக்கப்படுகிறன. முல்லைத்தீவுக்கு நேரே 50 மைல்களைக் கடந்த தூரத்தில் கப்பலை வழிமறித்துத் தாக்க கடற்புலிப்படகுகள் பயணித்துக்கொண்டிருந்தன. ஆனால் அந்தப் பயணத்தின் போது கடல் ஒத்துழைக்க மறுத்துக்கொண்டிருந்தது. அதிகரித்து வீசிய கடற்காற்றின் வேகம் படகுகளைச் சரியான இலக்கை நோக்கி நகர்த்தத் தடையாய் இருந்தது. ஆனாலும் எடுத்த முயற்சியிலிருந்து பின்வாங்குவதில்லை என்பதற்காய் கடல் கொந்தளித்துக்கொண்டிருந்த இரவுப்பொழுதில் இலக்கிற்க்காகக் காவலிருந்து தாக்குதலைத் தொடுத்தனர் கடற்புலிகள். தாக்குதலின் உச்சக்கட்டம் கரும்புலிப்படகுகள் கப்பலை மோதித் தகர்க்கப்போகின்றன. அந்த வெடியதிர்வின் பின்னால் நான்கு கடற்கரும்புலிகள் இந்த மண்ணிற்காய் மடியப்போகிரார்கள். சமர்க்களத்தை நோக்குகிறான் சிலம்பரசன். எதிரியிடமிருந்து கிடைக்கும் எதிர்ப்பு சற்றுத்தணிந்து கொண்டு போகிறது. உடனடியாக இரண்டு கடற்கரும்புலிகளை கடலுக்குள் குதிக்கும்படி கட்டளை வழங்குகின்றான். இரண்டு கடற்கரும்புளிகளுடன் அந்தக் கரும்புலிப்படகு ” உகின ” கப்பலில் மோதி வெடிக்கின்றது. நிலையிலாது தளம்பிக்கொண்டிருக்கும் ஒரு படகில் நின்றபடி தன் கடல்சார்ந்த அறிவின் மூலம் அந்தக் கடற்சமர்க்களத்தில் அவன் எடுத்த முடிவானது இரண்டு கடற்கரும்புலிகளை அந்த தாக்குதலில் இழக்காது அந்தக் கப்பலை அழிப்பதற்காக நாங்கள் செலுத்த வேண்டிய உயிர்விளையைக் குறைத்திருந்தது. அந்த இரு கரும்புலிகளையும் தனது படகில் ஏற்றியபடி தளம் திரும்பினான் சிலம்பரசன். இப்படியான அவனின் நிதானித்த செயற்பாடுகள் பல கடினமான பணிகளை நிறைவேற்றக்கூடிய மனிதனாக அவனை இனக்காட்டியது. அதனால்த்தான் ஓயாத அலைகள் 3 நடவடிக்கையின் முதற்கட்டத்தில் கடற்புலிகளுக்கு வழங்கப்பட்ட பணி சிலம்பரசனின் வழிநடத்தலில் விடப்பட்டுகின்றது. இதுவரை அவன் எதிர்கொண்ட சமர்களுடன் ஒப்பிடும்போது இது சற்று வித்தியாசமானதாயிருந்தது. இதுவரை கடலிலிருந்து கொண்டு கடலிற்குள் நிற்கும் எதிரியுடன் தான் சமர் புரிந்தார்கள். ஆனால் இங்கே கடலில் நின்றபடி தரையில் இருக்கும் எதிரிக்குத் தாக்கும் பணி. கடற்புலிகள் இப்படியான சமரைச் சந்திப்பது இதுவே முதற்தடவை. சமர்க்களம் தரைப்புலிகளால் தொடங்கிவைக்கப்படுகின்றது. கட்டைக்காடு முன்னரங்க நிலைகளை உடைத்து உள்நுழையும் முயற்சியில் தரைப்புலிகள் ஈடுபட்டனர். சிலம்பரசன் தனது படகுடன் ஏனைய கடற்புலிப் படகுகள் சிலவற்றையும் அழைத்துக்கொண்டு கட்டைக்காடு – வெற்றிலைக்கேணி கரையோரமாக உள்ள காவலரண்களை துடைத்தழிக்கும் நடவடிக்கையில் இறங்குகிறான். தரையில் நிலையாக மூடியாடைக்கப்பட்ட காப்பரணுக்குள் நின்றபடி துப்பாக்கி சன்னங்களையும் குண்டு மழையினையும் பொழியும் எதிரி மீது கடலில் நின்றபடி தாக்குவதென்பது இலகுவானதாயிருக்கவில்லை. கடற்புலிகளின் படகுகள் கடலில் நின்றபடி தாக்குதல் நடாத்தத் தொடங்கியதும் சிங்களப் படையின் டோறாப்படகுகள் கடற்புலிகளின் படகுகளைத் தாக்கத் தொடங்கின. அன்றைய சூழ்நிலையும் கடற்புலிகளின் சிறிய சண்டைப்படகுகளுக்கு உகந்ததாக இருக்கவில்லை. கடற்காற்று பலமாக வீசிக்கொண்டிருந்ததால் இலக்குகளை குறிவைத்து தாக்குவது சிரமமாகவிருந்தது. ஆனாலும் அன்றைய சமர்க்களத்தில் அது முக்கியமான பணியாகவிருந்தமையினால் அவன் தொடர்ந்தும் எதிரியின் இருப்பிடங்கள் மீது கடலில் நின்றபடி தாக்கிக்கொண்டிருந்தான். அந்தப் பணியின் ஒரு கட்டத்தில் சிங்கள விமானப்படையின் உலங்கு வானூர்த்தித் தாக்குதலில் அவன் தலையில் காயப்ப்படும்வரை எதிரியின் இலக்குகளை அழித்துக்கொண்டிருந்தான். அந்தச் சமரின் முடிவில் அந்த ஊர்கள் எங்களது கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தன. இப்படியான அவனின் வெற்றிகளுக்கு காரணமாய் இருந்தவை எல்லாம் அவனின் திறமைகளே …! எந்தச் சமர்க்களத்திலும் எந்த இறுக்கமான கட்டத்திலும் நிதானித்து பதட்டமிலாமல் முடிவெடுத்துச் செயற்படுவது அவனது வெற்றிகளுக்கு முதல் காரணாமாய் இருந்தன. சண்டைகளுக்காகவோ அல்லது விநியோகங்களுக்காகவோ அவன் செல்லும் போது ஆண் போராளிகளுக்குச் சமமாக பெண்போராளிகளையும் அழைத்துக் கொண்டு செல்வான். இன்று கடற்புலிகளின் கட்டளை அதிகாரியாக செயற்படும் ஆண் – பெண் போராளிகளை வளர்த்தெடுத்ததில் கணிசமான பங்கு சிலம்பரசனுக்கே உரியது. பெண் போராளிகளும் கடலில் சாதிக்க முடியும் என்பதை கடலில் நீருபித்த கடற்புலிப்பெண் போராளிகளின் வளர்ட்சிக்கு சிலம்பரசன் கொடுத்த ஊக்குவிப்பும் , சர்ந்தப்பமும் முக்கியமானது. ஒவ்வொரு தாக்குதலின் முடிவிலும் அல்லது ஒவ்வொரு விநியோகப் பனியின் முடிவிலும் தன்னுடன் செயற்பட்ட போராளிளை ஒய்வாயிருகும் நேரங்களில் அழைத்து அந்தப் பணியில் அவர்களின் செயற்ப்பாட்டில் இருந்த சரியான , தவறான செயற்ப்பாடுகளைச் சுட்டிக்காட்டி அடுத்த கட்டத்தில் அதை எப்படி முன்னெடுக்கலாம் என்பதை அவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பான். அவன் சாள்ஸ் படையணியின் பொறுப்பாளனாக இருந்த காலங்களிலெல்லாம் தான் ஒரு கட்டளை அதிகாரி என்ற நிலையில் மட்டுமே நின்று கொள்ளாது , ஒரு கடற்புலிப்போராளியின் பல்வேறு வகையான பணிகளுக்குள் தானும் முகம் கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்தி விளைவுகளை பயன்மிக்கதாய் ஆக்கும் திறமை அவனிடமிருந்தது. ஒரு போராட்ட அமைப்பகவிருந்து வளர்ந்து கொண்டிருக்கும் படை என்கின்ற ரீதியில் வீணாக எந்தவொரு வளத்தையும் இழந்து விடக்கூடாது என்பதில் அவன் அக்கறையாய் இருந்தான் என்பதை அவன் கடற்சமர்கலங்களில் எடுக்கும் முடிவுகள் காட்டிநின்றன. ஒருமுறை வன்னித்தளம் நோக்கி போராளிளை ஏற்றி இறக்கும் பனி கடற்புலிகளிடம் ஒப்படைக்கப்படுகிறது. அந்தப் பணியில் சிலம்பரசனும் சென்றிருந்தான். போராளிகளை இடமாற்றும் இந்தச் செயற்ப்பாட்டைஎதிரி அறிந்து கொண்டதால் எதிரி கடலில் வைத்து சண்டை புரிவதற்குத் தயாராகயிருந்தான். போராளிகளை ஏற்றிய படகுகள் பயணிக்க அவற்றிற்குக் காவலாய் கடற்புலிகளின் சண்டைப்படகுகளும் வந்துகொண்டிருந்தன. எதிர்பார்த்திருந்த கடற்படையின் தாக்கும் கலங்கள் போராளிகளின் படகுகள் மீது குறி வைக்கின்றன. நாங்கள் கொண்டு செல்லும் போராளிகளுக்கு எதுவும் நடக்கக் கூடாது என்பதற்காக கடற்புலிகளின் சண்டைப் படகுகள் முன்சென்று எதிரியை எதிர்கொண்டன. கடற்புலிகளின் படகுகளை செல்லவிடாது எதிரிதடுத்துச் சண்டையை இடைவிடாது தொடர்ந்த வண்ணமிருந்தான். சண்டையின் ஒரு கட்டத்தில் கடற்புலிகளின் சண்டைப்படகு தாக்குதலுக்குள்ளாகிறது. அதிலிருந்த போராளிகள் சிலர் வீரச்சாவடைகின்றனர். படகின் இயந்திரங்கள் செயலிழக்கின்றன. படகின் கட்டளை அதிகாரியாகச் செயற்ப்பட்ட அவனுக்கு படகை இயக்க முடியாவிட்டால் அதனை அளித்துவிட்டு வரும்படி கடடளை கிடைக்கின்றது. ஆனாலும் சிலம்பரசன் அந்தப் படகை இழக்க விரும்பவில்லை. ஏனெனில் அந்தப்படகை கடற்புலிகளின் தாக்குதற் காலமாக மாற்றுவதற்காய் பட்ட சுமைகளை தாங்கியத்தில் அவனுக்கும் பங்கிருந்தது. அதனை விட அவன் படகின் கட்டளை அதிகாரியாக மட்டுமல்லாமல் படகின் ஏற்ற நிலைமையையும் கையாளக்கூடிய திறமையிருந்ததால் , அவன் அந்தப் படகின் இயங்க மறுத்த இயந்திரங்களை இயக்கம் நிலைக்கு கொண்டுவர கடும் முயற்சி செய்தான். அவன் முயற்சியின் பலநாள் அன்றைய நாளில் இழக்கப்பட வேண்டிய அந்தப்படகு இழக்கப்படாமல் இருந்தது. இப்படித்தான் சின்ன சின்னச் சின்ன விடயங்க்களிலேலாம் முன் மாதிரியாகச் செயற்ப்பட்டுப் போராளிகளுக்கு கடலின் நுட்பங்களைச் சொல்லிக் கொடுத்தான். ஒரு படகில் பல்வேறுபட்ட வேலைகளை ஒவ்வொரு நிலையிலும் நிற்பவர்கள் செயற்படுவார்கள்…. ஒரு கட்டளை அதிகாரியாக , படகொட்டுபவனாக , தொலைத்தொடர்பாளனாக , இயந்திரத் துப்பாக்கி சூட்டாளனாக என விரியும் பணிகளில் எல்லாப் போராளிகளும் எல்லா நிலைகளுக்கும் உரியவர்களாக வளர்க்கப்பட வேண்டும் என்பதில் அவன் கவனமெடுத்துச் செயற்ப்பட்டான். அதற்கேற்றால் போல் தன் கீழ் பணிபுரியும் போராளிகளுக்கு சர்ந்தப்பங்க்களை ஏற்படுத்திக்கொடுத்து அவர்களின் வளர்ட்சிக்கு உருதுணையாயிருந்தான். ஏனெனில் சண்டைக் களங்களில் படகின் ஏதாவது ஒரு நிலையில் நிற்கும் போராளி செயலிழந்துவிட்டால் அதை உடன் நிவர்த்தி செய்யக் கூடியவாறு இருக்க வேண்டும் என்பதை அவன் அனுபவங்களின் ஊடாக உணர்ந்திருந்தான். இந்த அனுபவங்களோடுதான் வரலாற்றுச் சிறப்பு மிக்க குடாரப்புத் தரையிறக்கப் படைநடவடிக்கையின் ஆரம்பத்தில் ஒரு படகுத் தொகுதியின் கட்டளை அதிகாரியாகச் செயற்பட்டான். விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் சவாலாக ஏற்றுச் செய்த இந்தப்பணியில் சிலம்பரசனின் பங்க்குமிருந்தது. கட்டைக்காடு – வெற்றிலைக்கேணி பகுதியைக் கைப்பற்றும் சமரில் தலையில் விழுப்புண் பட்டு அதன் வேதனைகள் முழுமையாக ஆறுவதற்கு முன் இந்தச் சண்டையிலும் அவன் கலந்து கொண்டான். இதனால் சண்டையில் ஒரு கட்டத்தில் அவன் கடலிலிருந்து கரைக்கு அழைக்கப்பட்டான். கரையில் நின்றபடி கடற்புலிகளின் சிறப்புத் தளபதியின் கடடளைக்கேற்றபடி போராளிகளையும் , தரையிறங்கிய போராளிகளிற்குரிய ஆயுத – உணவு விநியோகங்களை ஒழுங்குபடுத்தி நகர்த்திக்கொண்டிருந்தான். இந்தச் சண்டைகள் முடிந்து ஊர்கள் பல எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் சிலம்பரசனுக்கு கடற்புலிகளின் அரசியல்ப்பணி மீண்டும் வழங்கப்பட்டது. கைபற்றப்பட்ட ஊர்களை மீண்டும் புதுப்பித்து வளமாக்குவதற்க்காக அவன் உழைத்துக்கொண்டிருந்தான். அதிலும் வடமராட்சி கிழக்கில் ஒரு மாவீரர் துயிலுமில்லம் ஒன்றினை நிறுவவேண்டும் என்ற விருப்போடு தமிழீழ மாவீரர் பணிமனையுடன் தொடர்பு கொண்டு அதற்கான ஏற்பாடுகளையும் செய்துவந்தான். மீண்டும் அவன் தன் கடமையைப் பொறுப்பேற்கும் காலம் வந்தது. எந்த வேளையிலும் , எந்த வேலையையும் செய்யக்கூடிய ஆற்றலும் திறமையும் அறிவும் மிக்க அந்தவீரன் அந்தப்பணியை பொறுப்பெடுத்துக்கொண்டான். ஒரு கப்பலின் கப்டனாக அவன் கடலில் பயணித்த போது இந்த சமாதான காலத்தின் விலையாய் அவனையும் அவன் தோழர்கள் பத்துப்பேரையும் இழந்துபோனோம். அவன் ஆசைப்பட்டபடி அவனது ஊரில் ஒரு துயிலுமில்லம் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் முதற்கல்லாய் அவன்தான் வருவானென்று நாங்கள் கனவிலும் எண்ணவில்லை. நினைவுப் பகிர்வு:- புரட்சிமாறன். விடுதலைப்புலிகள் இதழ் (பங்குனி, சித்திரை 2004) “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” https://www.thaarakam.com/news/116545
  21. சூரியனும் சந்திரனுமாய் தலைவரைத் தாங்கிய சிகரங்கள்.! Last updated Mar 2, 2020 யாழ் மாவட்டம் காரைநகர் பகுதியில் 09.01.1988 அன்று இந்தியப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டவேளை எதியியிடம் பிடிபடாமல் தன்னைத் தானே சுட்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட யாழ். மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் பாண்டியன் அவர்களின் 32ம் ஆண்டு வீரவணக்க நாள் சூரியனும் சந்திரனுமாய் தேசியத் தலைவரைத் தாங்கிய தோழமையின் சிகரங்கள் இம்ரான் – பாண்டியன். விடுதலைப் புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவரான பாண்டியன் யாழ் மாவட்டத் தளபதியாக பணியாற்றியவர். இம்ரான் – பாண்டியன் இருவரும் உற்ற நண்பர்கள். அவர்கள் யாழ்ப்பாணத்தில் கொக்குவில் பிரம்படி என்ற இடத்தில் பிறந்து பக்கத்துப் பக்கத்து வீட்டில் வாழ்ந்த நண்பர்களாக இருந்து நண்பர்களாகவே போராட்டத்தில் இணைந்து நண்பர்களாகவே களமுனைகளில் களமாடி நண்பர்களாகவே தங்களுடைய இலட்சியத்திற்காக வீரச்சாவைத் தழுவிக் கொண்டவர்கள். எங்களுடைய புகழ் பூத்த மூத்த தளபதி கேணல் கிட்டு அண்ணாவின் தலைமையில் யாழ் மாவட்டம் எங்களுடைய முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போது சுன்னாகம் சிறிலங்கா காவல் நிலையம் முற்றுகையிட்டு தாக்கப் பட்டது. சுன்னாகத்திலிருந்த சிறிலங்கா காவல்துறையினர் அனைவரும் தப்பியோடினர். சிறிலங்கா காவல் நிலையத்தை கைப்பற்றும் நோக்கோடு இறங்கிய அணித் தலைவர்களில் இம்ரானும் ஒருவர். இம்ரான் அந்தக் காவல் நிலையத்துக்குள் நுழையும் போது அவர்களுடைய சூழ்ச்சிப் பொறியில் சிக்கி அவரது வலது தொடை எலும்பு முறிந்து பாரிய ஒரு விழுப்புண்ணை அடைந்தார். அந்தத் தாக்குதல் என்பது எங்களுடைய ஒரு வரலாற்றுப் பதிவாக இன்றும் நாம் பேசக்கூடிய ஒரு தாக்குதலாக உள்ளது. கால் முறிந்தவுடன் இம்ரான் மருத்துவத்திற்காகத் தமிழ்நாட்டுக்குச் சென்றார். அப்போது யாழ் மாவட்டத்தில் கிட்டண்ணாவினுடைய தலைமையில் பாண்டியன் பல்வேறு தாக்குதல்களில் பங்கேற்று தனது கடமையைச் செய்தார். அதே காலத்தில் தலைவர் தன்னுடைய பாதுகாப்பிற்காக ஒரு அணியை ஒழுங்கு செய்து கொண்டிருந்தார். அந்தப் பாதுகாப்பு அணியில் இம்ரான் இணைக்கப் படுகின்றார். இம்ரானுடைய அந்த வருகை பாண்டியனையும் அந்த அணிக்குள் உள்வாங்கக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்துகின்றது. தலைவருடைய பாதுகாப்பிற்குக் களங்களில் நின்ற, அனுபவம் வாய்ந்த போராளிகளைத் தெரிவு செய்யும் போது பாண்டியனும், இம்ரானும் உற்ற சிநேகிதர்கள். அவர்கள் ஒன்றாகப் படித்து ஒன்றாக விளையாடி ஒன்றாகப் போராளிகளாக இணைந்து ஒன்றாகக் களமாடியவர்கள். அவர்களுடைய அந்த ஒற்றுமை, அவர்கள் களங்களில் காட்டிய வீரம் ஆகியவற்றால் அந்தப் பாதுகாப்பு அணிக்கு அவர்கள் தெரிவு செய்யப் பட்டனர். இருவருமே பாதுகாப்பு அணியில் ஒரு முக்கிய தளபதிகளாகப் பொறுப்பாளர்களாக, நடத்துனர்களாகத் தலைவருடைய பாதுகாப்பு அணிகளை ஒழுங்கு செய்து கொண்டிருந்தனர். அந்தச் சூழலில் இந்திய இராணுவம் வந்தது. யாழ் மாவட்டம் முற்று முழுதாக இந்திய ஆக்கிரமிப்புப் படையால் கைப்பற்றப்பட்டு எங்களுடைய போராளிகளுக்குப் பின்னடைவு நிலையை ஏற்படுத்தின யாழ் மாவட்டத்தினுடைய தளபதியாக பாண்டியன் பொறுப்பேற்றார். பாண்டியன் பொறுப்பெடுத்து குறிப்பிட்ட காலங்களிலேயே அவர் முற்றுகையிடப்பட்டு அவர் தன்னைத் தானே சுட்டு எதிரியிடம் பிடிபடாது வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். அதன் பின்பு இம்ரான் அந்தப் பொறுப்புக்கு தலைவரால் நியமிக்கப் பட்டார். இம்ரானும் எங்களுடைய இயக்கத்தினுடைய செயற்பாடுகளுக்கு வடிவம் கொடுத்து தாக்குதல்களை நடத்தினார். இந்திய இராணுவத்தினருடனான நேரடி மோதல் ஒன்றின் போது அவரும் வீரச்சாவை அடைந்தார். அவர்கள் இருவரும் தலைவருடைய மெய்ப்பாதுகாப்பு அணியிலே இருந்து பொறுப்புகளை ஏற்று, களங்களில் வீரச்சாவை அடைந்தவர்கள். கட்டைக்காட்டு முகாம் மீதான தாக்குதலின் போது எங்களுடைய படையணிக்கு பெயர் சூட்டுவதற்காக நாங்கள் தலைவரோடு பேசிய போது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் படுகின்ற மாவீரர்களான “இம்ரான் – பாண்டியன்” பெயரை அவர் சூட்டினார். அது எங்களுக்கு பெருமையாக இருந்தது. ஏனெனில் எங்களுடைய பாதுகாப்பு அணியை யுத்த களங்களிலும் மற்றும் தேவைகளின் போதுமான அந்தப் படையணியை உருவாக்குவதற்காக அவர்கள் அயராது பாடுபட்டு உழைத்தவர்கள். இந்த இம்ரான்-பாண்டியன் படையணி, தொடக்க காலத்தில் தலைவருடைய மெய்ப்பாதுகாப்பு அணியாக வலம் வந்தது. “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” https://www.thaarakam.com/news/107711
  22. The Two Popes இளங்கோ-டிசே Tuesday, February 25, 2020 படத்தில் தலைப்பைப் போல இது இரண்டு போப்புகளைப் பற்றியபடம். மரபுவாதியான ஜேர்மனியப் போப் பெனடிக்கிற்கும், மறுமலர்ச்சியைக் கொண்டுவர விரும்பும் ஆர்ஜெண்டீனிய போப்பிரான்ஸிற்கும் இடையிலான உறவையும், முரணையும் இந்தப் படம்முழுவதும் நாங்கள் பார்க்கின்றோம். போப் பெனடிக் போப்பாக இருக்கும் கடைசிக்காலங்களில்கார்டினலாக இருக்கும் பிரான்ஸில் ஆர்ஜெண்டினாவிலிருந்துதனது பதவியை இராஜினாமாய்ச் செய்வதற்காக ரோமுக்குவருகின்றார்.அப்போது போப் பெனடிக் வத்திக்கானில் நடக்கும்சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கின்றார். மரபுவாதியானபெனடிக் ஒருவகையில் சமகால உலகை விட்டுவிலகிப்போய்க்கொண்டிருப்பவர். ஏற்கனவே இருந்த போப்புக்கள்வகுத்த வழிமுறையில் பாதை தவறாது பயணித்துக்கொண்டிருப்பவர். கத்தோலிக்க மதத்திற்குள், தேவலாயங்களுக்குள் பல சர்ச்சைகள்வெடிக்கத் தொடங்கின்றன. தற்பால்உறவுகள், பாலியல் வன்முறைகள், இலஞ்சம் எல்லாம் வத்திகானைச்சுற்றிச் சுழல்கின்றன. பாவமன்னிப்பைவழங்கிவிட்டால் எல்லாம்யதார்த்தத்திற்கு வந்துவிடும் என போப்பெனடிக் நம்புகின்றார். கார்டினல்பிரான்ஸிலோ தேவாலயங்கள்பாவத்தின் கறைகளைப் பற்றிஅக்கறைப்படுகின்றதே தவிர, அதுஏற்படுத்தும் காயங்களைப் பற்றிக்கவலைப்படுவதில்லை என்று மறுத்துப் பேசுகிறார். மேலும் தவறைச்செய்தவர்க்கு பாவமன்னிப்பை வழங்குவதன் மூலம் பாவத்தைச்செய்தவர் நிம்மதி அடைகின்றார். ஆனால் அவரால் பாவம்இழைக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட அநீதிகளைப் பற்றி தேவாலயம்கவலைப்படுகின்றதா என்கின்ற முக்கிய கேள்வியை எழும்புகின்றார். முரண் உரையாடல்களினால் இவர்கள் இருவருக்கும் இடையில்நட்பு ஏற்படுகின்றது. மரபுவாதியான போப் பெனடிக் நல்லதொருபியானோ வாசிப்பாளர் என்பதையும், பீடில்ஸின் இரசிகர்என்பதையும் கார்டினல் பிரான்ஸில்வெளிக்கொண்ர்ந்துவிடுகின்றார். இந்தத் தடைகள் எதுவும்கார்டினல் பிரான்ஸிற்கு இருப்பதில்லை. டாங்கோ ஆடுபவராக, உதைபந்தாட்டத்தை தன்னை மறந்து இரசிப்பவராக, வறியமக்களிடையே இறங்கி வேலை செய்பவராக அவர் இருக்கின்றார் . ஆனால் அவருக்கும் ஒரு இருண்ட காலம் என்பதை நாம்இத்திரைப்படத்தின் இரண்டாம் பகுதியில் பார்க்கின்றோம். 1970களில் ஆர்ஜெண்டீனா ஒரு சர்வாதிகாரியின் ஆட்சிக்குள்போகின்றது. இடதுசாரிகள், அரசவிழ்ப்பாளர்கள் மட்டுமின்றி, பாதிரிமார்களையும் கொடுங்கோல் ஜனாதிபதியின் இராணுவம்வேட்டையாடத் தொடங்குகின்றது. பல்வேறு தேவாலயங்கள்பைபிளை சற்று ஒதுக்கிவைத்து மார்க்கிசம் பற்றியும், புரட்சிபற்றியும் பேசத் தொடங்குகின்றன. பாதர் பிரான்ஸில் தனதுநண்பர்களைக் காப்பாற்றுவதன் பொருட்டு அரசுடன் இரகசியமாகப்பேச்சுவார்த்தைகளை நடத்துகின்றார். அந்தப் பொழுதுகளில்பாதர் பிரான்ஸின் இரண்டு பாதிரித்தோழர்கள் கடத்தப்படும்போது, பிரான்ஸிசே இராணுவத்துக்குக் காட்டிக்கொடுத்தவர் எனக்குற்றஞ்சாட்டப்படுகின்றார். இந்தப் பொழுதிலேயே அவரதுகாதலியாகவும், பிறகு தோழியாகவும் மாறியவரை, கொடுங்கோல்ஆட்சிக்கு எதிராகப் போராட்டம் செய்த காரணத்தால்பிரான்ஸிஸ்ல் இழக்கின்றார். இவ்வாறு குற்றஞ்சாட்டல்களுக்கும், இழப்புகளுக்கும் இடையில்ஆர்ஜெண்டீனா சர்வாதிகாரத்திலிருந்து ஒருமாதிரி விடுபடுகின்றது. வத்திகானின் பேச்சை இந்தக் காலங்களில் கேட்கவில்லையெனஒதுக்குப்புறமான மலைக்கிராமத்துக்கு எல்லாப் பதவியும்பறிக்கப்பட்டு, பிரான்ஸில் சேவைக்காக அனுப்பப்படுகின்றார். அங்கிருக்கும் மக்களோடு பழகி, அவர்களுக்கு பாவமன்னிப்புவழங்குவதுடன், தன்னையும் மாற்றிக்கொள்ளும் பிரான்ஸிஸ்மீண்டும் ஆர்ஜெண்டீனா மக்களின் நன்மதிப்புக்கு உள்ளாகின்றார். பின்னர் வத்திகானால் கார்டினாலாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றார். இதே காலகட்டத்தில் 2013ல், பல்வேறு சர்ச்சைகளால் தனதுவயதைக் காரணங்காட்டி போப் பெனடிக் தனது பதவியைஇராஜினாமாய்ச் செய்யும்போது, அடுத்த போப்பாக, கார்டினல்பிரான்ஸிஸ் தேர்ந்தெடுக்கப்படுகின்றார். அப்போது ஓரிடத்தில்போப் பிரான்ஸில் பெனடிக்கை நோக்கிச் சொல்வார், நீங்கள்பாரத்தை இறக்கிவைத்துவிட்டீர்கள், நான் இனிச் சுமக்கவேண்டிஇருக்கின்றது' என்று. பில்லியன்கணக்கான மக்களின் நம்பிக்கைக்குரியவரான ஒருபோப்பின் பதவி என்பது மிகக் கடினமான ஒன்றுதான். போப் பெனடிக் தனதுபதவியைத்துறக்கப்போகின்றேன் என்றுசொல்லும்போது பிரான்ஸிஸ்அவரை ஓரிடத்தில் தடுப்பார். அப்போது போப் பெனடிக்சொல்வார், கடவுளின்குரலைக் கேட்கமுடியாதஎன்னால் இந்தப் பதவியில்தொடர்ந்து இருக்கமுடியாது என்று. அந்தக் கடவுளின் குரலைபிறகு போப்பாக வந்த பிரான்ஸிஸால் கேட்கமுடிந்ததா என்பதுநமக்குத் தெரியாவிட்டாலும், அவர் ஏழைமக்களைத்தேடிப்போவதிலும், அவர்களோடு சாதாரணமாகப் பேசுவதன்மூலமாகவும் கடவுளின் குரலைக் கேட்கமுடியும் என நம்புவதாகபோப் பிரான்ஸின் பாத்திரத்தினூடாக அறிந்துகொள்கின்றோம்.. இந்தத் திரைப்படம் நீண்டகாலமாக வத்திகான் மீதும், பாதிரிமார்கள் மீதும் வைக்கப்படும் முக்கிய எந்தக் குற்றச்சாட்டைநோக்கியும் நகரவில்லை என்பதை, அப்படி நகர்வதற்குஇடமிருந்தும் அங்கு போகவில்லை என்பதை ஒரு குறையாகத்தான்சொல்லவேண்டும். ஆனால் வத்திகானில் மாற்றங்களைக்கொண்டுவர முயலும் ஒரு போப்பை நாம் இங்கே காண்கின்றோம். மரபுவாதியாக இருந்தாலும் இன்னொரு போப்பையும் அவரின்குறைபாடுகளுடன் சரி ஒருபக்கமாய் இப்படி இருந்துவிட்டுப்போகட்டுமென ஆறுதல்கொள்கின்றோம். அதிலும் மனம் உடைந்துபோய் இருக்கும் போப் பெனடிக்கிற்கு, கார்டினல் பாவமன்னிப்பைவழங்கி ஆசிர்வதிக்கும் இடம் அவ்வளவு நெகிழ்வானது. இறுதியில் இந்தத் திரைப்படத்தில் இன்னாளும், முந்தியதுமானபோப்புக்கள் இருவரும் 2014ல் நடக்கும் ஆர்ஜெண்டீனா- ஜேர்மனிஉதைபந்தாட்ட இறுதி ஆட்டத்தைப் பார்க்கும் காட்சிகள்சுவாரசியமானது.. ஒருவகையில் இந்தத் திரைப்படம்போப்புக்களையும் சாதாரண மனிதர்களாக்கி நம்மைப் பார்க்கவைக்கின்றது. அவர்கள் அதிகாரம் நிரம்பியவர்களோ, திருவுருவாக்க வேண்டியவர்களோ அல்ல, இரத்தமும் சதையுமானநம்மைப்போலவே தவறுகளை விடக்கூடியவர்களும், மனம்வருந்தக்கூடியவர்களுமே என்ற நிலைக்கு இறுதியில்வந்தடைகின்றோம். அதுவே மதங்களையும், போப்புக்களையும் சற்று விலத்திப் பார்க்கும்என்னைப் போன்றவர்களுக்கு அவசியமான புள்ளியெனநினைக்கின்றேன். ஆக, நாங்கள் எவருக்கும் உயர்ந்தவர்களுமல்ல, தாழ்ந்தவர்களுமல்ல என்ற புள்ளியை வந்தடைகின்றோம்.. ................................................ (Dec 21, 2019) http://djthamilan.blogspot.com/2020/02/the-two-popes.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.