Everything posted by கிருபன்
-
செயற்திறன் மிக்க தளபதி லெப் கேணல் விநாயகம்
- தமிழீழப் போர் மருத்துவ வரலாற்றில் அசாத்திய ஆற்றல் மேஜர் இறைகுமரன் (திவாகர்)
தமிழீழப் போர் மருத்துவ வரலாற்றில் அசாத்திய ஆற்றல் மேஜர் இறைகுமரன் (திவாகர்) 1990ம் ஆண்டு யாழ் நகரை இரும்பரக்கனாக அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது ஒல்லாந்தர் உருவாக்கிய கோட்டை. இதனை சிறிலங்கா படைகள் பலமான தளமாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றது. பல நூறு ஆண்டுகளின் பின்னர், பகைவன் கோட்டையொன்றைக் கைப்பற்றுவதற்கான முற்றுகையைத் தமிழர் வீரவரலாறு சார்பாகப் புலிகள் நடாத்திக்கொண்டிருக்கின்றார்கள். ஒரு லட்சம் தீவுப்பகுதி மக்கள் ஏதிலிகளாயினர். பல இலட்சம் தீபகற்ப மக்கள் அல்லலுறுகின்றனர். இதற்கு நேரடிக் காரணமான படை முகாம் வீழ்த்தப்பட்டேயாக வேண்டும். இம்முகாமிற்குப் முதன்மை வழங்கற் பாதையாக விளங்கும் பண்ணைப் பாலம் தகர்க்கப்படல் வேண்டும். ஐம்பது மீற்றர் முன்னால் பகைவனின் பதுங்கிக் குறிபார்த்துச் சுடும் வீரர்கள் விழித்திருக்கின்றார்கள். அவர்களின் கழுகுப்பார்வை இவர்களின் பகுதியைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றது. பகைவன் கண்களில் மண்ணைத்தூவி பண்ணைக் கடற்கரை நோக்கி வெடிமருந்துகளை நகர்த்தவேண்டும். எக்கணமும் உயிர் பறிபோகும் ஆபத்தான இப்பணியைத் திவாகர் செய்து கொண்டிருந்தான். எது நடக்கலாகாது என எதிர்பார்க்கப் பட்டதோ இது நடந்தேவிட்டது. ஆனால் சிறு அதிஸ்டத்துடன் எதிரியின் ரவையொன்று இவனது காலைத்துளைத்துச் சென்றுவிட்டது. கண்விழித்துப் பார்க்கையில் யாழ். மருத்துவமனையில் படுத்திருந்தான். காயம் மாறுகையில் அக்காலின் நீளம் ஒரு இஞ்சி கட்டையாகி இருந்தது. கீழ்க்காலின் ஒரு பகுதி தொடுகை உணர்வை இழந்திருந்தது. அக்காலை இழுத்திழுத்தே நடக்கவேண்டியிருந்தது. தனக்கேற்பட்ட வலுக்குறைவை நடையின் வேகத்தைக் கூட்டுவதன் மூலம் ஈடுசெய்ய முற்பட்டான். அம் மருத்துவமனையில் போர்க் காயமுற்ற நூற்றுக்கணக்கான போராளிகள் பண்டுவம் (சிகிச்சை) பெறுகின்றார்கள். அவர்களின் தேவைகளைப் நிறைவும் செய்யும் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்துவது மிகவும் சிரமமாக இருந்தது. இவனது ஆலோசனைகளும் பண்பான செயற்பாடுகளும் அதனை இலகுவாக்கியது. அப்பொறுப்பை முழுமையாகச் செய்யுமாறு கேட்கப்பட்டான். அதற்கு இவன் கால இடைவேளை கேட்டான். அடிப்படைப் பயிற்சி முடிவடைய முன்னரே தான் காயமடைய நேர்ந்ததையும், அதனைத்தான் முழுமைப்படுத்தினால் தான் தன்னால் முழுமையான போராளியின் மனநிலையில் செயற்பட முடியும் என்பதையும் தெளிவுபடுத்தினான். இயலாக் காலுடன் கடின பயிற்சிகளை நிறைவுசெய்து பணிக்குத் திரும்பினான். காயமடைந்தவர்கள் பலரின் மனச் சமநிலையில் மாற்றமிருந்தது. அவர்களுக்குத் தாயாய், தாதியாய், தலைவனின் பிரதிபலிப்பாய், நண்பனாய் எனப் பலராய்ச் செயற்பட்டான். மருத்துவ நிபுணர்கள், மருத்துவம் கற்பவர்கள், ஏனைய மருத்துவப் பணியாளர்கள் அனைவருடனும் அன்பாகவும் போராளிக்குரிய பிரத்தியேக பண்பை வெளிக் காட்டும் வண்ணமும் உறவாடினான். அனைவர் மனதிலும் ஆழ இடம்பிடித்தான். மனித மனங்களையும் வளங்களையும் முகாமைத்துவம் செய்வதிலும் இவன் ஒரு நடைமுறை நிபுணனாகச் செயற்பட்டான். போர்க்காலத்தில் பொருளாதார, மருந்துத்தடை களால் மக்கள் இன்னல்பட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வாழ்க்கைத் தரத்திலும் அக்கறை செலுத்தவேண்டி இருந்தது. தமிழீழ சுகாதார சேவைகள் நிறுவன மயப்படுத்தப்பட்டது. இதன் துணைப்பொறுப்பாளராகப் பணியாற்றப் பணிக்கப்பட்டான். இக்காலகட்டத்தில் தான், வரலாற்றின் மிகப் பெரும் துன்பமாக யாழ்ப்பாண இடப்பெயர்வு நிகழ்ந்தேறியது. யாழ் மருத்துவமனையில் ஆயிரத்திற்கு மேற்பட்ட போராளிகளும் பொதுமக்களும் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தனர். அவர்களைப் பாதுகாப்பாக நகர்த்தவேண்டியிருந்தது. இவ் மனிதாபிமானப் பணியின் பாரத்தின் பெரும்பகுதி இவன் தோள்களில் இறங்கியது. ஒற்றைக்காலில் சுற்றும் பம்பரமாக, இரவு பகல் பாராது இருபத்தினான்கு மணிநேரமும் இவன் சுழன்றது இன்னும் நினைவுகளில் உள்ளது. மக்கள் அனைவரும் வெளியேறிவிட்டனர். இடிவிழுந்த சுடுகாடாக இயல்பிழந்து யாழ்.மண் காட்சியளித்தது. போராளிகளின் கள மருத்துவமனையாக “ஞானம்ஸ்” உல்லாச விடுதிக் கட்டிடம் பயன்பட்டுக்கொண்டிருக்கின்றது. பணியின் களைப்பால் சிறிது கண்ணயர்ந்த திவாகர் திடீரென எழுந்து “எண்பத்தொண்டில் இந்த ஹொட்டல்ல காமினி திசநாயக்கா வந்திருந்தபோதுதான் ஆமிக்காரங்கள் யாழ்ப்பாணம் நூல் நிலையத்தை எரித்தவங்கள். அதுமாதிரி இனியும் ஏதாவது செய்வாங்கள். அதனால், யாழ். மருத்துவபீட நூலகத்தில் உள்ள நூல்களையாவது பாதுகாக்க வேண்டும்” எனக் கூறினான். இவனது எண்ணம் அங்கிருந்தவர்களுக்கு அதீதமாகப்பட்டது. அண்ணளவாக மருத்துவ பீடத்திற்கு முன்னால் 750M தூரம்வரை பகைவன் வந்துவிட்டான். வாகனங்களைக் கிட்டக்கொண்டுபோகும் சத்தம் கேட்டாலே போதும் எறிகணைகளால் பொழிவான். தமிழீழ மருத்துவக் கல்லூரி மாணவர்களைத் துணைக்கழைத்தான். தள்ளி உருட்டிச் செல்லக்கூடிய கட்டில்கள் சிலதைப் பாரஊர்தி களில் ஏற்றினான். புறப்பட்டுவிட்டான். மருத்துவபீடப் பின்பக்க திடலுக்கு வெளியில் பாரவூர்திகளை நிறுத்திவிட்டு, எல்லோரும் உள்ளே சென்றார்கள். கையினால் மின்சூழ் களின் வெளிச்சம் பொத்தி மறைக்கப்பட, மாடியில் இருந்து மனிதச் சங்கிலியாக எல்லோரும் நின்று கைமாறிக் கைமாறிப் புத்தகங்களை உருளும் கட்டில்களில் ஏற்றி, தள்ளிவந்து பாரஊர்திகளில் ஏற்றி, சாவகச்சேரிப் பகுதிக்குப் பாதுகாப்பாக அனுப்பிவைத்தார்கள். யாழ்.நகர் பறிபோகும் கவலையில் அனைவரும் துவண்டிருக்கையில் அவன் அறிவு பூர்வமாகச் சிந்தித்தது மற்றவர்களை வியப்பில் ஆழ்த்தியது. இடம்பெயரும் மக்களுக்கு மனிதாபிமான உதவி களைச் செய்யுமாறு ஐ.நா. தலைமைச் செயலர் அறிக்கை விட்டிருந்தார். எவ்வுதவிகளும் வந்துசேர எவ்வழிகளும் இல்லாத நிலை. மாரி மழையில் வாந்தி பேதியோ, வயிற்றோட்டமோ வந்து பல்லாயிரம் மக்கள் மடிய நேரலாம். எனும் மனித அவலம் எதிர்பார்க்கப்பட்டது. திரவஊடகமோ, நுண்ணுயிர் கொல்லி மருந்துகளோ ஒரு மருத்துவ நெருக்கடியைச் சமாளிக்கக் கூடியவாறு கையிருப்பில்லை. மருத்துவ சேவைக்கான நிர்வாகக் கட்டமைப்போ சீர்குலைந்துள்ளது. அவ்வேளை திவாகர் பின்வருமாறு கூறினான். மக்கள் கல்வியறிவுள்ளவர்கள். அடிப்படைச் சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிப்பவர்கள். திடீரென ஏற்பட்ட இவ்நெருக்கடியால் அவர்கள் கவனம் சிதறும். அதனால் மீண்டும் மீண்டும் சுகாதார விழிப்புணர்வை ஊட்டுவதனூடாகப் பிரச்சினையை வரவிடாமல் தடுக்கலாம். இவனது இக்கருத்து விரைவாகச் செயலுருப் பெற்றதால் எதிர்பார்த்த அவலம் வராமல் தடுக்கப்பட்டது. யாழ் மருத்துவமனை பறிபோனதால் எம் போரிடும் வலு குறைந்துவிட்டது. இதன் தொடராக எதிரி தென்மராட்சி வடமராட்சி பிரதேசங்களைக் கைப்பற்ற முயற்சிப்பான். ஆயிரக்கணக்கில் போராளிகளும் மக்களும் காயமடைவார் கள். இச் சவாலை முகம் கொடுப்பதற்கான வளப்பிரதியீட்டைக் குறுகிய காலத்தில் ஏற்படுத்த வேண்டும். அதற்குத் துறைசார் மருத்துவக் குழுக்களைக் குறிப்பாகச் அறுவைப்பண்டுவத்திற்கான (அறுவைச்சிகிச்சைக்கான) மருத்துவ மாதுக்கள் ஆய்வுகூடத் தொழில்நுட்பவியலாளர்கள் போன்ற ஆளனி வசதியை ஏற்படுத்த வேண்டும். வழமை போல் இவனது லாவகமான செயற்பாட்டால் கைமேல் பலன் கிடைத்தது. இதனை முல்லைச்சமரில் காயமடைந்த ஆயிரத்திற்கு மேற்ப்பட்ட போராளிகளைக் காப்பாற்றியதன் மூலம் உணரமுடிந்தது. நெருக்கடியான நேரங்களில் பொறுப்புக்களை நுணுக்கமாகக் கையாண்டதால் வன்னி மண் மீண்டும் ஒரு பாரிய பொறுப்பினை இவனிடம் ஒப்படைத்தது. ஆம் இங்கு இவன் களமருத்துவப் பொறுப்பாளனாகச் செயற்படப் பணிக்கப்பட்டான். அகண்ட முன் அனுபவ மற்ற பகுதி, ஆங்காங்கே அடிக்கடி அகோரமாக விரியும் சமர்க்களங்கள், ஆங்கிலேயர் காலத்திற்குப் பின் திருத்தப்படாத வீதிகள். எரிபொருள், மருந்துக்கும் தட்டுப்பாடான நிலை. ஒவ்வொருவரையும் பல தடவை சாவின் விளிம் புக்குக் கொண்டுபோய்க் கொண்டுவரும் மலேரியா, காயமடைந்தவர் களை வேகமாக நகர்த்தவோ, வைத்துப்பராமரிக்கவோ போதிய வளங்கள் இல்லாத நிலை. தலையிடி முதல் உடல் துண்டுபடும் காயங்கள் வரை அனைத்துமே சிரமத்தையே பரிசளிக்கும். இவ்வளவிற்கும் இவன் செயற்பட்டான். “கடினமாக உழைத்தோ அல்லது மிதமாக உழைத்தோ பாரிய வெற்றிகளைப் பெறலாம்” இவன் அடிக் கடி கூறும் கருத்தின் முற்பகுதியைத் தன் வாழ்வின் தத்துவ மாக்கியிருந்தான். எதிரி ஜெயசிக்குறு சமர்முனையைத் திறந்து விட்டான். வன்னியை இரண்டறுத்து, புலிகள் பலத்தைச் சிதறடித்து, தமிழர் தேசியத்தைச் செல்லாத விடயமாக்கும் முயற்சியில் பகைவன் மூர்க்கமாகவே ஈடுபட்டான். முதலை க்கு தண்ணியிலும் புலிகளுக்கு வன்னியிலும் பலம் என்பதை அவன் அனுபவத்தில் புரியவிரும்பிய காலம். பகை படைத் தொடரணியைத் தாண்டிக்குளத்தில் ஊடறுத்துத் தாக் கும் திட்டம் தயாரானது. கைவிடப்பட்ட வயல்களினூடும், காடுகளினூடும் புலிகள் நகரத் தொடங்கிவிட்டனர். சுமார் 30 கிலோ மீற்றர் இயலாத காலுடன் நடந்தான். மேலெழுந்த வாரியாகப் பார்க்கையில் ஒரு பிரிவுப் பொறுப்பாளன் ஒரு குழுவுடன் நகர்வது பொருத்தமற்றதாகத் தென்படலாம். எனினும் சாக்களங்களிலுள் நுழைந்து வெளிவருவது, தொடரும் சமற்களங்களில் சந்திக்கும் சவால்களுக்கு முகம் கொடுப்பதை இலகுவாக்கும் என்பதைத் திடமாக நம்பினான். களம்திறக்கும் இடமெங்கும் திவாகர் நிற்பான் என்பது வெளிப் படையானது. சமர்கள் முடிந்து தளம்திரும்பும் அவன் சில நாள் இடைவெளியில் தொய்திருக்கும் நிர்வாக சேவைகளை வேகமாக ஒழுங்கு படுத்துவான். களமுனைத் தளபதிகளுடன் கலந்தாலோசனை செய்வான். முதன்மை, துணையான களமருத்துவ நிலை களை எங்கெங்கு நிறுவுவதென முடிவெடுப்பான். வரைபடம், குறிப்புப் புத்தக மும் கையுமாக வருமிவன் அவ்வவ் இடங் களில் மண்வெட்டியுடன் நின்று பதுங்குகுழி களை அமைப்பான். ஒவ்வொரு மருத்துவ நிலையையும் மரபுசார் சிறு முகாமாக(மினிமுகாம்) மாற்றுவான். மருத்துவ நிலைகள் சுற்றிவளைக்கப்பட்டால் தாக்குப் பிடிக்கவும், தேவையேற்பட்டால் முற்றுகையை உடைக்கவும் தேவையான அனைத்தையும் படைய அறிவியல் பார்வையோடு செயற்படுத்துவான். புளியங்குளத்திலும், புதூரிலும் அவன் அமைத்த முகாம்கள் இயல்பானபார்வையில் களமருத்துவ முகாம்களாகவும், அலசும் பார்வையில் படைய பயன்பாட்டிற்குரிய முகாம்களாகவும் தென்பட்டன. இவ்விரு இடங்களும் முற்றுகைக்கு உள்ளாகித் தாக்குப்பிடித்து, பின் முற்றுகை உடைத்த நிகழ்வுகள் தமிழீழப் போர் மருத்துவ வரலாற்றில் சாதனைப் பதிவுகளாயின. ஜெயசிக்குறு படை நடவடிக்கை அர்த்தமற்றதாக்கப்பட வேண்டும். அதற்கு சாத்தியமானவைகள் அனைத்தும் செய்யப்பட வேண்டும். அவற்றில் ஒன்றாக கிளிநொச்சி மீண்டும் கைப்பற்றப்படல் வேண்டும். இது நடைபெறுமாயின் ஜெயசிக்குறு படை ரெயில் தடம் புரளும் அல்லது தடம்மாறும். அதற்கான சமர் 10.02.1997 அன்று தொடங்க திட்டமிடப்பட்டது. இச் சமர்க்களத்தின் சுற்றயல் பகுதிகளில் களமருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு. சமர் தொடங்கிவிட்டு. களமருத்துவ முகாமொன்றில் திவாகர் பணியாற்றிக்கொண்டிருக்கின்றான். ஆங்காங்கே வான் தாக்குதல்களும் நடாத்தப்படுகின்றது. இரவு நடைபெற்ற சண்டையின் பிரதிபலிப்பாய் காயக்காரரை ஏற்றிப் பல ஊர்திகள் அவ் மருத்துவ நிலைக்கு வந்துபோகின்றன. காயக்காரர்களுக்கு அவசர உயிர்காப்புச் சிகிச்சைகளும், ஏனையவும் செய்யப்பட்டு விரைவாகப் பின்தளம் அனுப்பப்படுகின்றார்கள். வானில் ஆளில்லா வேவு வானூர்தி ரீங்காரமிடுவது கேட்கின்றது. ஊர்தி ஓட்டங்களை வைத்து இவர்களுடைய முகாம் அடை யாளம் காணப்படலாம் எனும் அச்சம் தலைதூக்குகின்றது. எனினும் அதனைப் பொருட்படுத்தாமல் அவரவர் தம்தம் கடமைகளில் மூழ்கியுள்ளனர். திடீரென செவிப்பறை வெடிக் கும், நிலம் அதிரும் வகையில் இரைச்சல் சத்தம் கேட்கிறது. நிலைமையைக் கணித்த திவாகர் “எல்லோரும் பங்கருக்க பாயுங்கள்” கத்தி முடிப்பதற்குள் படீர் படீர் என கிபிர்க் குண்டுகள் அவ்விடங்களில் விழுந்து வெடிக்கின்றது. வெடி மருந்துப் புகையும், தூசி மண்டலமும் விலக சில நிமிடங்கள் எடுத்தது. கண்டகாட்சி அதிர்ச்சியைக் கொடுத்தது. களமருத் துவ நிலை இருந்தஇடம் கற்குவியலாகக் காட்சியளித்தது. பச்சை மரங்களும், மருந்துப் பொருட்களும், தசைத்துண்ட ங்களும் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. ஆம் களமருத்துவப் பொறுப்பாளன் திவாகர் மற்றும் இரு படைய மருத்துவர்கள் உட்பட நாற்பத்திமூன்று பேர் நேசித்த மண்ணில், போர்ப் பணியாற்றிய இடத்தில் விதையாகிப் போனார்கள். – தூயவன். விடுதலைப்புலிகள் இதழ் (மாசி -பங்குனி, 2006 ) https://www.thaarakam.com/news/8ca5e5eb-d181-497c-85ec-d01aa78f35eb- ஈழத்தமிழர் அரசியல்
ஆபிரிக்க நாடுகளில் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் செயற்பாடுகள் ஈழத்தமிழருக்குக் கற்றுத்தரும் பாடங்கள் சிவா செல்லையா கடந்த 50 வருடகாலத்தில் உலகின் மனிதகுல வரலாற்றில் பாரிய இனப்படுகொலைகள் வெவ்வேறு நாடுகளில் நடந்தேறி உள்ளன. அவ்வினப் படுகொலைகள் ஆட்சியாளர்கள் தமது நலனுக்காக மேற்கொள்ளப்பட்டவை. ரூவண்டா, தென்ஆபிரிக்கா, கென்யா, உகண்டா, லிபியா, சூடான் ஆகிய நாடுகளில் நடந்த இனப்படுகொலைகள் தொடர்பாக சர்வதேச நீதிமன்றில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளும், நீதி வழங்கலில் ஏற்பட்ட தாமதங்களும் ஈழத்தமிழர்களுக்குப் பாதிய நம்பிக்கையீனத்தை இந்த உலகில் ஏற்படுத்தி உள்ளது. வளம்மிக்க நாடுகளின் வளங்களைச் சுரண்டுவதற்காகவும், நவீன காலணித்துவ மேலாண்மையை விருத்தி செய்வதற்காகவும், உலக வல்லரசுகளுக்கு இடையிலான போட்டியில் அகப்பட்டே சிறுபான்மை இனங்கள் ஆட்சியாளர்களால் இனப்படுகொலைக்கு உட்படுத்தப்பட்டமையை ஆபிரிக்கக் கண்டத்தில் கண்கூடாகக் காணலாம். இனப்படுகொலைக்குப் பின்பான சமூகத்தில் உலக வல்லரசுகள் நிலைமாறு நீதி, நல்லிணக்கம் என்ற பெயரில் காலூன்றுவதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இனப்படுகொலைக்குப் பின்பான இத்தகைய நிலைமாறு நீதி, நல்லிணக்கச் செயற்பாடுகளில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளாக அமைவன : (1) நாடு சார்ந்த காரணிகள். (2) நாடுகளுக்கு இடையிலான கூட்டு ஒத்துழைப்புக் காரணிகள். (3) சனநாயகத்தை நிலைநாட்டுவதிலுள்ள தடைகள். (4) சட்டத்தை அமுல்படுத்துவதிலுள்ள சிக்கல்கள். (5) பிரதேசவாதம். (6) அரசியல் கூட்டுக்கள் . ஆபிரிக்க நாடுகளில் இனப்படுகொலைச் சம்பவங்களுக்கு பின்னணியில் ஆட்சியாளர்களுக்கு உலக வல்லரசுகள் ஆதரவு வழங்கியமை புலனாகின்றது. குறிப்பாக ஆபிரிக்காக் கண்டத்தில் சீனாவின் தடம்பதிப்பு இனப்படுகொலைகளின் நிழலிலேயே நிகழ்ந்து உள்ளது. சீனா உலகின் முதல்நிலை வல்லரசாகும் முதலீடு. ஆபிரிக்காக் கண்டத்தின் பல இனப்படுகொலைகளுக்கு காரணமாக அமைந்து உள்ளது. இவ் இனப்படுகொலைகளுக்கான நீதி வழங்கலில் நாடுசார்ந்த காரணிகள், நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புக் காரணிகளான ஆபிரிக்க ஒன்றியம், ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ, சீனப் பொருளாதார ஒத்துழைப்பு என்பன செல்வாக்குச் செலுத்தி உள்ளன. இதனால் இடைக்கால நீதி வழங்கும் பொறிமுறை பல தசாப்தங்கள் பின்னோக்கித் தள்ளப்பட்டு குற்றவாளிகள் தண்டனை பெறுதலில் இருந்து தப்பி உள்ளனர். குற்றவியல் நீதிமன்றத் தீர்ப்புக்களை நடைமுறைப்படுத்துவதில் பாதிப்படைந்த மக்கள் வாழும் நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதிலுள்ள தடைகள், சட்டத்தை அமுல்படுத்துவதிலுள்ள சிரமங்கள், பிரதேச வாதம், அரசியல் கூட்டுக்கள் என்பன தடையாக ஆபிரிக்க நாடுகளில் அமைந்தமை கண்டறியப்பட்டு உள்ளது. ஆசியாக்கண்டத்திலும், சீனாவின் பட்டுப்பாதை நிகழ்ச்சித் திட்டத்தின் முதலீடாகவே இலங்கை, மியான்மார் ஆகிய நாடுகளில் பாரிய இனப்படுகொலைகள் நிகழ்ந்து உள்ளன. இதில் பாதிக்கப்பட்ட சிறுபான்மை இனம் மீண்டெழ முடியாதவாறு ஆபிரிக்காக் கண்டத்தில் நிகழ்வது போல் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைகள் நிகழ்ந்த வண்ணமே உள்ளது. கடந்தகாலத்தில் நிகழ்ந்த இனப்படுகொலைகளுக்கு அப்பால் தற்போது தொடரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைகளே சிறுபான்மை இனத்தை அடையாளம் தெரியாது அழிக்கும். இலங்கை அரசு சீன அரசின் பொருளாதார நிகழ்ச்சித் திட்டத்தில் தனது இன மேலாண்மையைக் காட்டுகின்றது. எனவே ஈழத்தமிழர் தமிழக மக்களுடனான போக்குவரத்து, பொருளாதாரம், கலாச்சாரத் தொடர்புகளை வலுப்படுத்துவதனாலேயே இலங்கையில் தமது இருப்பினைக் காத்துக்கொள்ள முடியும். சர்வதேச நீதி விசாரணை நியமங்கள் யாவும் வல்லரசுகளின் நிகழ்ச்சிநிரலின் அடிப்படையிலேயே அமையும். ஒரு வல்லரசு நிலைமாறு நீதி என்ற போர்வையிலும், மறு வல்லரசு நல்லிணக்கம் என்ற போர்வையிலும் தமது நலன்களைக் கவனிக்க இங்கு கடட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைகள் தொடர்ந்த வண்ணமே இருக்கும். தமிழ் அரசியல் கட்சிகள் வெறுமனே தமது அரசியல் இருப்பிற்கான நிகழ்ச்சிநிரலில் செயற்படாது தமிழின இருப்பினை இலங்கையில் நிலைபெறச் செய்வதற்கான செயற்பாட்டில் தலைப்படல் வேண்டும். http://samakalam.com/ஆபிரிக்க-நாடுகளில்-நடைபெ/- 147 replies
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கலைஞன் என்ற இனிக்கும் கரும்பு 🎉🎉🎉 வாழ்க வளமுடன்🎂 வாலிக்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎂🎊- கேணல் கிட்டு
வீரவணக்கம். மேலே உள்ள நினைவுக்குறிப்புக்கான படங்கள்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாத்திரி🎉🎉🎉 வாழ்க வளமுடன்🎂- மனதைக் கவர்ந்த கவிதைகள்
கல்லில் எரியும் நெருப்பு சேரன் https://maatram.org/?p=9073- சிறந்த தளபதி – திறமையான மருத்துவர் லெப்.கேணல் வேணு அவர்களின் நினைவில்...
சிறந்த தளபதி – திறமையான மருத்துவர் லெப்.கேணல் வேணு அவர்களின் நினைவில்... லெப்.கேணல் வேணு “கண்ணிவெடித் தாக்குதல் நடந்ததாம்; பத்து ஆமி செத்துப் போனாங்களாம்” இரண்டு வரிகளில் இந்தச் செய்தி முடிந்து விடும். ஆனால் இதனுடைய பெறுமதி – இதன் பரிமாணம் – மிகப்பெரியது. இதே வேளை கண்ணிவெடித் தயாரிப்புகளில் – முயற்சிகளில் நாம் இழந்துள்ள செல்வங்களின் பெறுமதியை நினைத்தால் கைதடி – அடம்பன் – நீராவியடி – வஞ்சியன்குளம்….. என்ன தவறு நடந்தது? பெரும்பாலும் இதனைச் சொல்வதற்கு இதனுடன் சம்பந்தப்பட்ட எவருமே மிஞ்சுவதில்லை. இவ்வாறான சம்பவங்களில் ஒன்றுதான் மன்னாரை அதிரப்பண்ணிய வஞ்சியன் குளம் விபத்து. மன்னார்ப் பிராந்தியத் தளபதி லெப். கேணல் வேணு, மேஜர் குகன், மேஜர் சயந்தன், கப்டன் குட்டிமணி ஆகியோரை எம்மிடமிருந்து பறித்தெடுத்த சம்பவம் அது. பூநகரியிலிருந்து முள்ளிக்குளம் வரையிலான இந்தப் பிராந்தியத்திலுள்ள மக்கள் அனைவருக்குமே இவர்கள் நன்கு பரிச்சயமானவர்கள். ஆகையால் இவர்களின் இழப்பு இப்பிராந்தியத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் எதிரொலித்தது. இச்சந்தர்ப்பத்தில் எம்மால் இழக்கப்பட்டவர்களுள் ஒருவரான கப்டன் குட்டிமணி பேசாலையைச் சேர்ந்தவன். 1988 ஆம் ஆண்டு இந்தியப் படையினரின் நடவடிக்கைகள் உச்சகட்டத்தை அடைந்திருந்த காலத்தில் எம்முடன் இணைந்து கொண்டவன். பயிற்சி முடிந்ததும் வெடிகுண்டுகள் தயாரிக்கும் பிரிவில் பணிபுரிந்தான். கண்ணிவெடிகள் வைப்பதில் கைதேர்ந்தவன். இந்தக் காடும், வெளியும் எமக்கே சொந்தம் என்பதை மிதிவெடிகள் மூலம் இந்திய இராணுவத்தினருக்கு உணர்த்திக் காட்டியவன். சொந்தக் காலுடன் வந்த இந்திய இராணுவத்தை செயற்கைக் காலுடன் அனுப்பி வைத்தவன். மேஜர் குகன் – மேஜர் சயந்தன் இருவருமே 1985 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இயக்கத்துடன் இணைந்து கொண்டவர்கள். இவர்களில் குகன் மன்னார்ப் பிராந்தியத்திற்கு அப்பாலும் அநேக போர்க்களங்களைக் கண்டவன். இந்திய இராணுவம் எமது மக்கள் மேல் போர் தொடுத்த போது அதை யாழ்ப்பாணத்தில் பல களங்களில் எதிர் கொண்டவன். முதன்முதல் இந்தியப் படையை ஆயுதங்களுடன் சரணடையச் செய்த தாக்குதலிலும் பங்குபற்றியவன். கொண்டச்சிஇ கஜூவத்தை, வஞ்சியன்குளம் என பல்வேறு இடங்களிலும் சிறீலங்காப் படையினருக்கு பாரிய இழப்பை ஏற்படுத்தியவன். ஒருமுறை இராணுவ நிலைகளை வேவு பார்க்கச் சென்ற போது இளைய தோழன் ஒருவனால் இவனது பிரத்தியேக ஆயுதம் இழக்கப்பட்டது. அந்தச் செய்தி மட்டும் தான் விசேட தளபதி சுபனைச் சந்தித்தது. அடிபட்ட புலியாக திரிந்த இவன் மிகவும் ஆபத்தான பகுதி ஒன்றில் இரவு நேரம் வந்து கொண்டிருந்த ஜூப் ஒன்றின் மீது தாக்குதல் தொடுத்து இவ்வண்டி எரிந்து கொண்டிருக்கையில் நாலுக்கு மேற்பட்ட ஆயுதங்களைக் கைப்பற்றி அவற்றுடன் சென்று தான் விசேட தளபதியைச் சந்தித்தான். இதுதான் புலிகளுக்கேயுரிய பாரம்பரியம். இந்த வழிவழியாக வந்த சொத்து என்னிடமும் உள்ளது என்பதை நிரூபித்துக் காட்டியவன். உப்புக்குளத்தைச் சேர்ந்த மேஜர் சயந்தன் தளபதி வேணுவுடன் இணைந்து மருத்துவக் குழுவில் பணியாற்றியவன். அத்துடன் போர்க்களத்தில் பணியாற்றத் தகுதி படைத்த சாரதியுமாவான். நீண்ட காலம் வைத்தியம் பார்க்கும் வைத்தியர்களே வியக்கும் வண்ணம் மருத்துவப் பணிகளை ஆற்றியவன். தம்பளையில் நிகழ்ந்த சண்டையில் காயமடைந்த போராளிகளைக் காப்பாற்றி வாகனத்தில் கொண்டு செல்லும் போது குண்டு வீச்சு விமானம் ஒன்று அந்த வாகனத்தைத் துரத்தித் துரத்திக் குண்டுகளைப் போட்டது. “எனது வேகத்திற்கேற்ப குண்டு வீசுவதற்கு இனிமேல் தான் நீங்கள் பழக வேண்டும்” என்ற செய்தியை உணர்த்தும் வகையில், மிகவேகமாக வாகனத்தைச் செலுத்தி வந்து அவர்களைக் காப்பாற்றியவன். “ஆட்காட்டி வெளி” இந்தப் பெயரைக் கேட்டாலே சிங்கள இராணுவத்திற்கு மூக்குச் சிவக்கும். பொதுவாக அடம்பனுக்கு அப்பாலுள்ள இடங்கள், அவர்கள் வரைபடத்திலும் உயர இருந்து விமானம் மூலமே பார்க்க வேண்டிய பகுதிகளாகும். இப்பகுதிகளுக்குள் கால் வைக்க முனையும் ஒவ்வொரு கட்டத்திலும் அச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சிங்கள இராணுவத்தினர் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதபடியான தாக்குதல் நடக்கும். இங்கு தான் மன்னார்ப் பிராந்தியத் தளபதி வேணுவும் உருவானான். 1984 ஆம் ஆண்டு இயக்கத்தில் இணைந்து கொண்ட இவன் மன்னார்த் தளபதியாக விளங்கிய லெப். கேணல் ராதாவின் பயிற்சி முகாமில் உருவாகியவன். மன்னார்த் தீவினுள் சிறீலங்கா இராணுவம் எமது இரு போராளிகளைச் சுட்ட போது மன்னார்க் கோட்டைக்குப் பக்கத்தில் லெப். கேணல் ராதாவின் தலைமையிலான அணி பதிலடி கொடுத்தது போல, 1988 ஆம் ஆண்டு அடம்பனில் எமது இரு போராளிகளைக் கைது செய்த சிறீலங்கா இராணுவம் இவர்களை இந்திய இராணுவத்திடம் கையளித்ததிற்கு பதிலடி கொடுக்கத் தீர்மானித்தான். அடம்பன் முகாமுக்கு மிகக் கிட்டிய தூரத்தில் ஜூப்பில் வந்த சிறீலங்காப் படை உயர் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தி இராணுவ ரீதியில் பதிலடி கொடுத்தான். பயிற்சி முகாமிலிருந்து வெளிவரும் போது இவன் ஒரு வைத்தியனாகவே வந்தான். விஞ்ஞானப் பிரிவில் அவன் கற்ற கல்வி மருத்துவப் பயிற்சிகளை அவன் பெற்றுக் கொள்வதற்கு பெரிதும் உதவியது. இவன் பங்கு கொண்ட முதற் தாக்குதல் மன்னார் மாவட்ட போராளிகளைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமானதாகும். மன்னார்த் தீவினுள் அமைந்திருந்த இந்த மாவட்டத்தின் பிரதான பொலிஸ் நிலையத்தின் மீது நிகழ்த்தப்பட்ட இத்தாக்குதலின் போது காயமடைந்த போராளிகளுக்கு வைத்தியனாகச் சென்றான். அன்றிலிருந்து மன்னார் மாவட்டப் போராளிகளைப் பொறுத்த வரை இவனே டாக்டர். ஆனாலும், இடையிடையே கிடைக்கும் போர்க்களங்களிலும் தனது முத்திரையைப் பதிக்க இவன் தவறவில்லை. 17. 01. 1986 அன்று நாயாற்று வெளியில் அப்போதைய மன்னார் மாவட்டத் தளபதி லெப். கேணல் விக்ரரைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஈடுபட்ட இராணுவத்தினரை கண்டல் சந்தியில் வழிமறித்துத் தாக்கிய குழுவில் இவனும் ஒருவனாக இருந்தான். “பிச்சை வேண்டாம் நாயைப்பிடி” என்ற நிலையில், ஓடிய இராணுவம் நீண்ட காலத்திற்கு அந்தப் பக்கத்தையே நினைக்காமலிருந்தது. பரப்புக்கடந்தான், வட்டக்கண்டல் போன்ற மிகப் பின்தங்கிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பலத்த போக்குவரத்துச் சிரமங்களின் மத்தியிலேயே மன்னார் – அடம்பன் போன்ற வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டும். இவனோ இந்த நிலையை மாற்றி மக்களைத்தேடி மருத்துவம் செய்யும் மருத்துவனானான். ஆட்காட்டி வெளியில் வைத்திய நிலையம் ஒன்றினை நிறுவி அப்பகுதி மக்களின் அன்புக்குப் பாத்திரமானான். இரவு – பகல் எந்த நேரமானாலும் பொதுமக்களுக்கோ போராளிகளுக்கோ வேணுதான் டாக்டர். இக்காலத்தில் மக்களிடையே மிகவும் பிரபலமானான் வேணு. அவர்களோடு அவன் பழகிய விதம் – மக்களை அரவணைத்துச் செல்லும் பாங்கு என்பனதான், குடும்பத்தவர் எவருமே இந்த மண்ணில் இல்லாத நிலையில் இவன் மறைந்த போது உனக்குச் சொந்தங்கள் நிறைய உண்டு எனக் கூறிற்று. பல்லாயிரக்கணக்கில் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வரண்ட பூமியாம் மன்னாரைத் தம் கண்ணீரால் ஈரமாக்கினர் அப்பகுதி மக்கள். 07. 11. 1989 அன்று வில்பத்துக் காட்டில் “பச்சைப் புலிகள்” எனப்படும் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட தாக்குதலை இவன் முறியடித்த விதம் சாதனைக்குரியதாகும். பெட்டியுடன் இணைக்கப்பட்ட உழவு இயந்திரத்தில் தனது தோழர்கள் 14 பேருடன் பயணமாகிக் கொண்டிருந்தான் இவன். அப்போது, மறைந்திருந்த சிறீலங்காப் படையினர் இவர்கள்மேல் தாக்குதல் தொடுத்தனர். பாதுகாப்பான நிலைகளில் இராணுவத்தினர் – பாதகமான நிலைகளில் போராளிகள். ஆனாலும் இவன் எதிர்த்தாக்குதல் தொடுத்தான். சண்டையை எமக்குச் சாதகமாக மாற்றினான். அதனால், உயிரிழந்த தமது சகா ஒருவனைக்கூட விட்டு விட்டு சிறீலங்காப் படை தப்பியோடியது. உயிரிழந்த இராணுவத்தினது உடலுடன் ஒரு சில ஆயுதங்களையும் கைப்பற்றி வந்தான் இவன். இத்தாக்குதலில் ஈடுபட்ட அணிக்குத் தலைவனும் இவனே. வைத்தியனும் இவனே. இந்திய இராணுவத்துடனான போர் நிகழ்ந்த காலப்பகுதி இவனை மன்னார் மாவட்டத்தின் எதிர்காலத் தளபதியாக இனங்காட்டியது. இயக்கத்தின் பொருளாதார திட்டங்களை நிறைவேற்றுவதிலும் வல்லவன் இவன். 1991 ஆம் ஆண்டு இவன் மன்னார் மாவட்டத் தளபதியாகப் பொறுப்பேற்றான். அக்காலத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள் தமது திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலைமையைத் தோற்றுவித்தது சிறீலங்கா இராணுவத்தினருக்கு. அன்று அது ஒரு கொடிய நாள். ஏற்கெனவே மிகப்பெரிய வெற்றிகளையெல்லாம் (60 இராணுவத்தினர் பலியான சம்பவம் உட்பட) எமக்குத்தந்த வஞ்சியன் குளத்தில் எமக்கு ஒரு சோகம் காத்திருந்தது. சிறந்த தளபதி – திறமையான மருத்துவன் – மன்னார் மக்களின் அன்புக்குப் பாத்திரமான வேணுவை இழந்தோம். அவனுடன், மேஜர் சயந்தன், மேஜர் குகன், கப்டன் குட்டிமணி என்று நால்வரை – எங்கள் நான்கு கண்மணிகளை வெடிமருந்து விபத்தில் நாம் இழந்தோம். நினைவுப்பகிர்வு: சுரேஸ் விடுதலைப்புலிகள் இதழ் (மாசி – 1992). https://www.thaarakam.com/news/2efdf305-e084-40cb-b069-0d9f9bdad3cd- 5B45524F-6A6F-467E-B9A0-FD08F058E8C3.jpeg
From the album: கிருபன்
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்னியஷ்த்ரா🎉🎉🎉 வாழ்க வளமுடன்🎂- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஏராளன்🎉🎉🎉 வாழ்க வளமுடன்🎂- லெப். கேணல் அப்பையா அண்ணா
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் லெப். கேணல் அப்பையா நினைவில்... லெப்.கேணல் அப்பையா ஐயாத்துரை இராசதுரை மானிப்பாய், யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு:16.12.1933 வீரச்சாவு:24.12.1997 நிகழ்வு:வவுனியா மாவட்டத்தில் சிறிலங்கா அரசின் கூலிப்படையினால் கடத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவு 1983-ஆம் ஆண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருநெல்வேலித் தாக்குதலில் பங்குபற்றிய போராளிகளுள் அப்பையா அண்ணையும் ஒருவர். தமிழர்களின் விடிவிற்கான போரின் படிக்கட்டாக அமைந்த அந்தக் கண்ணிவெடியின் பொறிமுறைகளைச் சரிபார்த்து செல்லக்கிளி அம்மானின் கைகளில் ஒப்படைத்திருந்தவர் அவர்தான். அந்த வரலாற்றுத் தாக்குதலின் நினைவுகளை மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் களத்தில் என்ற ஏட்டில் எழுதியிருந்தவற்றை மீட்டிப்பார்பது இங்கு பொருத்தமாக இருக்கும். எமது இயக்கத்தின் மூத்த உறுப்பினர்களுள் ஒருவரான லெப். கேணல் அப்பையா அவர்களின் வீரச்சாவுச் செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. 24. 12. 1997 அன்று மல்லாவிப் பகுதியில் காணாமல் போயிருந்த அவருக்கு நேர்ந்த கதியறியாது எமது தேசம் தவித்திருந்தது. அது ஜெயசிக்குறு நடவடிக்கை மூலம் சிங்களப் படைகள் வன்னியில் அகலக் கால் பதித்திருந்த நேரம். வயதால் முதிர்ந்து நோய்களால் தளர்ந்து போயிருந்த அப்பையா அண்ணனை சிறீலங்காப் படைகளின் கைக்கூலிகள் கடத்திச் சென்றுவிட்டனர். அன்றிலிருந்து அவரைத்தேடி எங்கும் வலைவிரித்திருந்தோம். அப்பையா அண்ணா எமது இயக்கத்தின் தொடக்க காலச் செயற்பாடுகளின் சாட்சியாக இருந்தவர். மக்களுடன் மக்களாக தலைமறைவு வாழ்வில் எமது இயக்கம் வாழ்ந்த காலங்களில் எமது போராளிகளுக்குப் பெரும் பலமாக செயற்பட்டவர். அன்றைய காலங்களில் கண்ணிவெடி உட்பட்ட வெடிபொருள் உருவாக்கத்தில் முன்னின்று உழைத்தவர். அன்றைய நாட்களில், இளையவர்களாகிய எமது போராளிகளினிடையே வயது முதிர்ந்தவரான அப்பையா அண்ணை, சிங்களப் படைகளின் கண்களில் மண்ணைத் தூவி எமது தலைவர் உட்பட்ட தொடக்க காலப் போராளிகளைக் காத்துவந்தார். தாக்குதல்கள் மற்றும் ஏனைய நடவடிக்கைககளிற்குத் தேவையான ஊர்திகளை மக்களிடமிருந்து ஒழுங்கு செய்வது எவரும் ஐயம் கொள்ளாதவாறு போராளிகளுக்குரிய தங்ககங்களை ஏற்படுத்திக் கொடுப்பதென அன்றைய காலங்களில் முக்கியத்துவமான பணிகளை மூத்த போராளியான அப்பையா அண்ணை ஆற்றினார். 1982ம் ஆண்டுகாலப் பகுதியில் பொன்னாலைப் பாலத்தில் வைத்து சிங்களப் படையினர் ஊர்தி ஒன்றின்மீது எமது போராளிகளால் கண்ணிவெடித் தாக்குதல் ஒன்று நடாத்தப்பட்டது. ஆனால் தாக்குதலுக்கிலக்கான எதிரி ஊர்தி மயிரிழையில் தப்பித்துவிட்டது. தப்பித்துக்கொண்ட எதிரிகள் எமது போராளிகளைத் துரத்தியபடி அவ்விடத்தைச் சூழவும் சல்லடை போட்டனர். தாக்குதலுக்காகப் பயன்படுத்தப்பட்ட மின் பிறப்பாக்கி எதிரியின் கையில் சிக்கிவிட்டது. அதை வல்வெட்டித்துறையிலுள்ள கடையொன்றில் கொள்வனவு செய்திருந்த இராசையா என்ற அப்பையா அண்ணை அன்றிலிருந்து யாழ்ப்பாணம் எங்கும் பெரிதாயகத் தேடப்பட்ட ஒருவரானார். 1983ம் ஆண்டு வரலாற்று முதன்மை வாய்ந்த திருநெல்வேலித் தாக்குதலில் பங்குபற்றிய போராளிகளுள் அப்பையா அண்ணையும் ஒருவர். தமிழர்களின் விடிவிற்கான போரின் படிக்கட்டாக அமைந்த அந்தக் கண்ணிவெடியின் பொறிமுறைகளைச் சரிபார்த்து செல்லக்கிளி அம்மானின் கைகளில் ஒப்படைத்திருந்தவர் அவர்தான். அந்த வரலாற்றுத் தாக்குதலின் நினைவுகளை மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் ‘களத்தில்’ என்ற ஏட்டில் எழுதியிருந்தவற்றை மீட்டிப்பார்பது இங்கு பொருத்தமாக இருக்கும். ”1983ம் ஆண்டு யூலை மாதம் 23ம் நாள் இரவு 11. 00 மணியளவில் யாழ் திருநெல்வேலியில் வைத்து சிறீலங்காப் படையினர்மீது ஒரு கண்ணிவெடித் தாக்குதலை நடத்தவென குறிப்பிட்ட ஊர்தி ஒன்றில், தேசியத்தலைவர் அவர்களும் அவருடன் செல்லக்கிளி அம்மான், விக்ரர், பொன்னம்மான், சந்தோசம் மாஸ்ரர், புலேந்தியம்மான், கணேஸ், ரஞ்சன், லிங்கம், பசீர்காக்கா, நான் மற்றும் சில தோழர்களும் அடங்கிய எமது தாக்குதல் குழுவில் ஒருவராக சுமார் ஐம்பது வயதை அடைந்துவிட்ட அப்பையா அண்ணரும் அங்கம் வகித்தார். நாம் திட்டமிட்டபடி தாக்குதலுக்கான குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் எல்லோரும் ஊர்தியை விட்டு கீழே இறங்குகிறோம். எனவே அடுத்ததாக அங்குள்ள ஓர் இடத்தில் கண்ணிவெடித் தொகுதியைப் புதைக்கவேண்டும். அப்பையா அண்ணரும், செல்லக்கிளி அம்மானும், விக்ரரும் கண்ணிவெடிகளைப் புதைக்க ஆரம்பிக்கின்றனர். கண்ணிவெடியைப் புதைப்பதென்பது ஒரு பெரிய வேலை. அதாவது கரடுமுரடான தார்றோட்டில் பிக்கானால் கிடங்கு வெட்டுவதென்பது மிகவும் கடினமானது. அதிலும் கண்ணிவெடித் தொகுதிக்கான வெடிமருந்துகளை அடைப்ப தென்பது அதைவிடப் பெரியவேலை. ஏனெனில் வெடிமருந்துகள் ஆபத்தானவை. எல்லோருக்கும் அந்தவேலை ஒத்துவர மாட்டாது. எனவே வெடிமருந்துடன் நன்கு பழக்கப்பட்ட அப்பையா அண்ணர் அவ்வேலையை திட்டத்திற்கேற்ப மிகவும் வேகமாகவும் அதேவேளை நிதானமாகவும் திறம்படச் செய்துமுடித்தார். இவைக்கப்பால் அப்பையா அண்ணர் எமது இயக்கத்திலேயே மிகவும் வயது முதிர்ந்த மூத்த உறுப்பினர் ஆவார். இருந்தபோதிலும் அவர் மிகவும் சுறுசுறுப்பாகவும் விவேகத்துடனும் சதா இயங்கிக்கொண்டிருப்பார். அத்தோடு எமது உள்ளூர்த் தயாரிப்புகளில் ஓர் முக்கிய வெடிமருந்து நிபுணராகவும் அவர் விளங்கினார்” என மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் அதில் குறிப்பிட்டிருந்தார். அதன் பின்னான காலங்களில் இந்தியாவிற்குப் பயிற்சிக்காக சென்ற போராளிகளுடன் அப்பையா அண்ணையும் ஒருவராக இணைந்திருந்தார். எப்படியாவது தானுமொரு படையப் பயிற்சிபெற்ற விடுதலை வீரனாக உருவாகவேண்டுமென்று அவர் ஆவல் கொண்டிருந்தார். ஆனால், இவரது வயதைக் கருத்தில் கொண்ட இந்தியப் பயிற்சி அதிகாரிகள் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். இருந்தபோதும் நாடு திரும்பிய அப்பையா அண்ணை போராளியாகவே தொடர்ந்தும் பணியாற்றினார். அவரது விடுதலைப் பணிக்கு படையப் பயிற்சி என்றுமே ஒரு தடையாக இருந்ததில்லை. தொடக்க காலங்களில் எமது தாக்குதல்களில் பங்கெடுத்த கண்ணிவெடிகள் பல அப்பையா அண்ணனின் கரங்கள் தழுவப் பெற்றவை. வன்னிப் பகுதியில் நடந்த பல தாக்குதல்களிலும் அவர் பங்கெடுத்தார். அப்பையா அண்ணனின் கண்டுபிடிப்பு முயற்சிகள் இயக்கத்தில் என்றும் பிரபலமாகப் பேசப்படுபவை. அவற்றில் பல களத்தில் பயன்படுத்தப்படாதவையாக இருந்தபோதும்கூட, இளம் போராளிகளிடையே அத்தகைய முயற்சிகளை ஊக்குவித்து இயக்கத்தில் அத்தகைய ஒரு மரபை வளர்த்தெடுக்கும் தலைவர் அவர்களின் எண்ணத்திற்கு அப்பையா அண்ணையின் அத்தகைய முயற்சிகள் வாய்பாக அமைந்தன. அது பின்னைய காலங்களில் இயக்கத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது. பிற்காலங்களில் அந்த முதிய போராளி நன்றாக இழைத்துப் போயிருந்தார். எந்தப் பணியாற்றவும் அவரால் முடியாதிருந்தது. என்றாலும் எமது வரலாற்றுப் பெருமைக்குரியவராய் அவர் இருந்தார். அவரை இயன்றவரை பேணிப்பாதுகாக்க நாம் முயன்றோம். அதனால்தானோ என்னவோ எதிரியும் அவரது வாழ்வை முடிக்க விரும்பினான் போலும். இப்போது அப்பையா அண்ணை எங்களுடன் இல்லை. என்றாலும் அவர் எமது புகழ்பூத்த விடுதலை வரலாற்றில் என்றென்றைக்கும் வாழ்வார். -எரிமலை இதழ் https://www.thaarakam.com/news/7733ee96-3697-4548-8b8c-e39c23ec282a- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி🎉🎉🎉 வாழ்க வளமுடன்🎂- தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு தேசத்தின் குரல்.!
தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு தேசத்தின் குரல்.! தலைமைச்செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம் 2006-12-14 எமது சுதந்திர இயக்கத்தின் அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் எனக்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்ட எமது தேசத்தின் ஒளிவிளக்கு இன்று அணைந்துவிட்டது. ஆலோசனை வேண்டி, ஆறுதல் தேடி ஓடுவதற்கு பாலாண்ணை இன்று என்னுடன் இல்லை. இவரது மறைவு எனக்கு மாத்திரமல்ல தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு. பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே விரியும் காலமாக மனிதவாழ்வு நிலைக்கிறது. இந்த வாழ்வுக்காலம் எல்லா மனிதர்களுக்கும் ஒரேமாதிரியாக, ஒத்ததாக, ஒருசீராக அமைவதில்லை. காலச்சீரற்றதாக ஒருவருக்குக் கூடி, மற்றவருக்குக் குறுகி, இன்னொருவருக்கு அதிகம் நெடுத்து கூடிக்குறைந்து செல்கிறது. துரதிஸ்டவசமாக, பாலாண்ணையினது வாழ்வு இடைநடுவில் நின்றுபோய்விட்டது. தீவிரம்பெற்றுள்ள எமது விடுதலைப்போருக்கு அவர் நிறையப் பணிகளை ஆற்றவேண்டியிருக்கின்ற தருணத்தில் அவருக்கு மரணம் சம்பவித்திருக்கிறது. இதனை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. துயரத்தின் சுமை என் ஆன்மாவை அழுத்துகிறது. என் உள்ளத்தை உடைத்து, நெஞ்சத்தைப் பிளக்கிறது. கட்டுக்கடங்காத காட்டாறு போல சீறிப்பாயும் உணர்ச்சிப் பெருவெள்ளத்தை என்னால் வார்த்தைகளால் கொட்டமுடியாது. மனித மொழியில் இதற்கு இடமுமில்லை. பழக ஆரம்பித்த நாள் முதலே எமக்கிடையே ஒரு இனம்புரியாத புரிந்துணர்வு ஏற்பட்டது. அந்தப் புரிந்துணர்வால் எழும் பற்றுறவால் பிணைந்துகொண்டு, எமது உறவு நல்லுறவாக வளர்ந்து நட்புறவாகப் பரிணமித்தது. சிந்தனையாலும் செயலாலும் ஒன்றுபட்ட மனிதர்களின் சங்கமமாக அந்த உறவு மலர்ந்தது. தினம்தினம் நாம் பகிர்ந்துகொண்ட வாழ்பனுபவத்தில் வலிமைபெற்று வளர்ந்தது. சாதாரண மனித உறவுகளிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டது. காலத்தால் கனிந்து, வரலாற்றால் வடிவம் பெற்ற ஒரு அலாதியான இலட்சிய உறவு அது. பாலாண்ணையை நான் ஆழமாக நேசித்தேன். விடுதலை இயக்கம் என்ற மாபெரும் குடும்பத்தில் ஒரு மூத்த தலைமகனாக பிதாமகனாக மூன்று தசாப்தங்கள் வாழ்ந்தவர் அவர். நானும் அவரை அப்படித்தான் நோக்கினேன். ஒரு குடும்பமாக ஒன்றுசேர்ந்து ஒத்திசைவாக ஒன்றித்திருந்த நாட்களில் அவர் ஒரு சாதாரண மனிதப்பிறவி அல்ல என்பதைக் கண்டுகொண்டேன். மோசமாகச் சுகவீனமுற்று தினம்தினம் சாவோடு போராடியபோதும், தாங்கமுடியாத உடல்உபாதைகளால் வருந்தியபோதும், தளர்ந்துபோகாத உறுதிப்பாடு அவரிடம் இருந்தது. அவரின் இந்த இலட்சிய உறுதி எனது நெஞ்சத்தைத் தொட்டுநின்றது. அவர் துன்பத்தால் துவண்டபோதெல்லாம் எனது ஆன்மாவும் கலங்கியழுதது. எமது இயக்கத்தின் வளர்ச்சியிலும் அதன் இன்றைய விரிவாக்கத்திலும் பாலாண்ணைக்கு ஒரு நிரந்தரமான இடம் இருக்கிறது. ஒரு மூத்த அரசியல் போராளியாக, ஒரு மதியுரைஞராக, ஒரு தத்துவாசிரியராக எல்லாவற்றுக்கும் மேலாக எனது உற்ற நண்பனாக இருந்து எனக்கு ஊக்கமும் உத்வேகமும் அளித்தவர். ஆலோசனையும் ஆறுதலும் தந்தவர். எனது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டு, எனது பழுக்களையும் பங்கிட்டுக்கொண்டவர். எமது விடுதலை இயக்கம் தோற்றம்பெற்ற ஆரம்பகாலம் முதல் என்னோடு இருந்து, எல்லாச் சோதனைகளையும் வேதனைகளையும் சவால்களையும் சங்கடங்களையும் தாங்கிக்கொண்டவர். எமது அரசியல் இராஜதந்திர முன்னெடுப்புக்களுக்கு மூலாதாரமாக, முன்னால் நின்று செயற்பட்டவர். ஈழத்தமிழினம் பெருமைகொள்ளும் வகையில் அரசியல் உலகிலும் இராஜதந்திர உலகிலும் அளப்பெரும் சாதனைகள் புரிந்து, எமது தேசசுதந்திரப் போராட்டத்தை உலக அரங்கில் முன்னிறுத்திய பாலாண்ணையின் மாபெரும் போராட்டப்பணிக்கு மதிப்பளித்து தேசத்தின் குரல் என்ற மாபெரும் கௌரவப்பட்டத்தை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன். பாலாண்ணை உண்மையில் எம்மைவிட்டுப் போகவில்லை. அவர் எமது நினைவலைகளில் என்றும் நீங்காத நினைவுகளாக நிலைத்து நிற்பார். புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் வே. பிரபாகரன் தலைவர் தமிழீழ விடுதலைப் புலிகள் https://www.thaarakam.com/news/79ea8c84-554d-464e-8faa-83dfc4f95bf5- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ரஞ்சித்துக்கும் சகாறா அக்காவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉- இன்று மாவீரர் தினம்!
- மாவீரர் நாள்மரபாகி வந்த கதை
மாவீரர் நாள்மரபாகி வந்த கதை November 25, 2020 வைமன் வீதியில் அமைந்திருந்த ஈழநாதம் நாளிதழின் பணிமனைக்கு ஒருமுறை பொ.பாலசுந்தரம் பிள்ளை (பின்னாளில் யாழ்.பல்கலைக்கழக துணை வேந்தராக விளங்கியவர்), வந்திருந்தார். இந்நாளிதழின் ஆசிரியர் பொ.ஜெயராஜைச் சந்தித்த அவர் நாள்தோறும் வெளிவந்த நினைவுகூருகின்றோம்` என்ற தலைப்பிலான விளம்பரம் பற்றிக் குறிப்பிட்டார். முன்னைய ஆண்டுகளில் இதே நாளில் வீரச்சாவெய் திய மாவீரர்களின் பெயர்,முகவரி, சம்பவம் முதலான விடயங்கள் அந்தந்த நாளிதழில் வெளிவந்துகொண்டிருந்தன. அத்துடன் இலங்கைத்தீவில் தமிழராகப் பிறந்ததனால் சிங்களக்காடையர், படையினர் முதலானோரால் கொல்லப்பட்டோர் பற்றிய விபரங்களும் வெளியாகின. இதில் இரண்டாவது விடயம் குறித்தே பேராசிரியர் குறிப் பிட்டார். உலகில் வெவ்வேறு நாடுகளில் யூதர்கள் என்ற காரணத்துக்காக கொல்லப்பட்ட அனைவரது பெயர், சம்பவங்கள் அனைத்தையுமே இஸ்ரேலில் பதிவுக்குள்ளாக்கி வைத்துள்ளனர் எனக் குறிப்பிட்ட அவர் ஒடடுமொத்தமாக யூத இனம் தாம் சந்தித்த இன அழிவுகளை வரலாறாகப் பதிவு செய்வதில் காட்டிய அக்கறையை விலாவாரியாக விபரித்தார். அதனைப் போலவே ஈழநாதம் காட்டும் அக்க றையை குறிப்பிடத்தக்க விடயம் எனப் பாராட்டினார். இறுதி யுத்தம் முடிந்து பதினோரு ஆண்டுகள் கழிந்து விட்டன. இன்னமும் இனப்படு கொலைக்குள்ளாக்கப்பட்ட தமது உறவுகள் பற்றிய பதிவுகளை எம்மினம் பூரணப்படுத்த வில்லை. இறுதி நாட்களில் நடைபெற்ற வீரச்சாவு விபரங்கள் கூட முழுமைப்படுத்தப் பட வில்லை. இந்த விடயங்களில் யாராவது அக்கறை காட்ட முனைந்தால் தலையில் குட்டி அமர வைக்கும் போக்கினையே சிலர் தொடர்ந்துகொண்டிருக்கின்றனர். வரலாற்றை மாற்றி எழுதும் பிரகிருதிகள் தமது கற்பனைகளை ஓரிரு சம்பவங்களில் சோடித்து இணையத்தளங்கள், முகநூல்களில் உலாவ விடுகின்றனர். லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி என்ற இயற்பெயரைக்கொண்ட மாவீரருக்கு சீலன் எனப் பெயர் வைத்தவன் தானே என்றும் தான் ஒரு மூத்த உறுப்பினர் என்றும் அண்மையில் ஒருவர் இணையத்தில் பதிவிட்டிருந்தார்.மூத்த உறுப்பினர் என்று சொல்வதற்கு அவர் தலை நரைக்கும் வரை காத்திருந்தார் போலும். வரலாற்றில் நடைபெறும் திணிப்புக்கள் என்ற விடயத்தில் நாம் எச்சரிக்கையாகத் தான் இருக்கவேண்டும். அந்த விடயத்தில் மாவீரர் துயிலுமில்லங்கள் பற்றியும் குறிப்பிட்டாகவேண்டும். ஏனெனில் இன்றைய நிலையில் மாவீரர் துயிலுமில்லங்களின் செயற்பாடுகள்,முடிவுகள் தொடர்பாக தீர்மானிக்கும் உரிமை தமக்கே உள்ளது என்ற நினைப்பு சிலரிடம் ஊறிவிட்டது போல் உள்ளது. விடுதலைப்புலிகளின் முதல் மாவீரர் சங்கரின் வித்துடல் தமிழகத் தில் எரியூட்டப்பட்டது. (கொள்ளி வைத்தவர் அப்பையா அண்ணர்) இரண்டாவது,மூன்றாவது மாவீரர்களான லெப்.சீலன் மற்றும் ஆனந்தின் உடலங்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்தன. எப்படியோ தகவல் அறிந்த சீலனின் தாயார் தனது மகனின் உடலை தன்னிடமே கையளிக்கவேண்டுமென பொலிஸாரிடம் வேண்டிக்கொண்டார். அவ் வேண்டுகோளை பொலிஸார் நிராகரித்தனர். ஊர்காவற்துறைப் பகுதியிலேயே பொலிஸாரால் இவ்விரு உடல்களும் எரியூட்டப்பட்டன. வரலாற்றுச் சமரான 1983 ஜூலை திருநெல்வேலியில் வீரச்சாவெய்திய லெப். செல்லக்கிளி அம்மானின் வித்துடலைப் புலிகளே கொண்டு சென்றனர். நீர்வேலிப் பகுதியில் இவ் வித்துடல் விதைக்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் இவ் விடயம் பகிரங்கப்படுத்தக்கூடியதாக இருக்கவில்லை. சுவரொட்டிகள் மூலமே இவ்விடயம் வெளிப்படுத்தப்பட்டது. முதல் மாவீரரான சங்கரின் ஓராண்டு நினைவு நாளை யொட்டியே அவரது வீரச்சாவுச் சம்பவமும் வெளிப்படுத்தப்பட்டது . முதல் மாவீரர் சங்கர் அன்றைய காலகட்டத்தில் இருவரின் பாதுகாப்புக் கருதி சங்கரின் வீரச்சாவை உடனடியாக வெளிப்படுத்த முடியவில்லை. பல்கலைக்கழக விரிவுரையாள ரான நித்தியா னந்தனையும், அவரது துணைவியார் நிர்மலாவை யும் கைது செய்ய இராணுவத்தினர் யாழ். நாவலர் வீதியிலுள்ள அவர்களது வீட்டுக்குச் சென்றனர். ”27.10 1982 அன்று இடம்பெற்ற சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதலில் காயமடைந்த சீலன்,புலேந்திரன். ரகு (குண்டப்பா) ஆகியோர் இவர்களது வீட்டிலேயே தங்கவைத்து சிகிச்சை யளிக்கப்பட்டனர்” என்ற தகவல் படையினருக்குக் கிடைத்திருந் தது. படையினர் இவர்களது வீட்டை முற்றுகை யிடச் சென்ற போது அங்கிருந்த சங்கர் அந்த முற்றுகையிலிருந்து தப்ப முயன்றார்.படையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் வயிற்றில் காயமடைந்த அவர் கைலாசபிள்ளையார் கோவிலடிக்கு ஓடி வந்து சேர்ந்த போது துவிச்சக்கர வண்டியில் வந்து கொண்டிருந்தார் அப்போது யாழ்.பல்கலைக்கழக மாணவனும் பின்னாளில் 18 ஆண்டுகளுக்கு மேலாக ஈழநாதம் நாளிதழின் பிரதம ஆசிரியராக விளங்கியவருமான பொ .ஜெயராஜ் . அவர் சங்கரைக்கண்டார். ஏற்கனவே அறிமுகமாயிருந்த சங்கரை தனது துவிச்சக்கர வண்டி யில் ஏற்றிக்கொண்டு சென்றார். யாழ்.பல்கலைக்கழகத்துக்கு எதிரே உள்ள குமாரசாமி வீதியிலுள்ள 41 எண்ணுடைய வீட்டுக் குக்கொண்டுபோனார். இந்தப்போராட்டத்துடன் சம்பந்தமுடைய பல்கலைக்கழக மாணவர்கள் பலர் பழகி வந்த இந்த வீட்டில் இருந்த ஏனையோருடன் இணைந்து சங்கரைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். அன்றைய காலகட்டத்தில் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவது முடியாத விடயம். எனவே மேலதிக சிகிச்சைக்காக சங்கர் தமிழகத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். சிவகுமார் என்னும் இயற்பெயரைக் கொண்ட அன்ரனே இவரைத் தமிழகத்துக்குக் கொண்டு சென்றார். சங்கருக்காக உண்ணாவிரதமிருந்த தலைவர் பொதுவாக எவருமே நினைவு தப்பி வலியில் துடிக்கும் போது “அம்மா ….. அம்மா .. „ என்றே அரற்றுவதுண்டு . ஆனால் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட அந்தச் சமயத்தில் சங்கர் “ தம்பி … தம்பி “ என்றே அரற்றினார். தலைவர் சங்கரின் மனதில் எந்தளவுக்கு ஆழமாக உறைந்திருந்தார் என்பதற்கு இதுவோர் சிறந்த உதாரணம். தமிழர்களின் விடுதலைக்காக இதுவரை 36 ஆயுதப்போராட்ட இயக்கங்கள் தோன்றிய போதும் அதில் புலிகள் மட்டுமே வித்தியாசமாகத் தெரிந்தார்கள் என்றால் அதற்கு இது போன்ற உதாரணங்களை சுட்டிக் காட்டலாம். வேறு எங்கும் காண முடியாத விடயம் இது . அந்தப் பாசப்பிணைப்பே வரலாற்றில் முதல் மாவீரனாக (விடுதலைப் புலிகள் இயக்கத்தின்) பெயர் பதித்த சங்கரின் நினைவு நாளின் போது 1983 இருந்து 2008 வரை நீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதமிருக்கும் எண்ணத்தைக் தலைவருக்கு ஏற்படுத்தியது மாவீரர் நாள் அறிவிப்பு இதன் அடுத்தகட்டம் தான் மாவீரர் நாள் பற்றிய அறிவிப்பு.இந்திய இராணுவம் செயற்பட்ட காலத்தில் 1989 ம் ஆண்டில் இந்த அறிவிப்பு மணலாற்றுக் காட்டில் இருந்த( ’14’முகாம் ) மூலம் சகல பிராந்திய தளபதிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. முதலாம் உலகப்போரின்போது போர்க்களத்தில் உயிர் நீத்த வீரர்களை நினைவுகூரும் வகையில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட பொப்பி மலர் நினைவு நாள் பற்றி சங்கர் என்ற மூத்தபோராளி உரையாடலொன்றின்போது தலைவரிடம் குறிப்பிட்டார் (இவரே பின்னாளில் விமானப் படையின் உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்ததுடன் அதனை வழிநடத்தியவர். (இயற்பெயர் வை.சொர்ணலிங்கம்) இந்த பொப்பி மலர் உதாரணமே இலங்கையில் ‘சூரியமல்’ எனப்படும் சூரியகாந்தி இயக்கத்துக்கு வழி வகுத்தது. அந்தப்பொறியை சங்கர் தட்டியபோதே எங்களது தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஆகுதியாகிய போராளிகளுக்கும் ஒரு நாளைப் பிரகடனப்படுத்த வேண்டுமென்ற சிந்தனை தலைவர் மனதில் உருவானது . அந்தவகையிலேயே புலிகளின் முதல் மாவீரரான சங்கரின் (சத்தியநாதன் ) நினைவு நாளை மாவீரர் நாளாகப் பிரகடனப்படுத்தினார் அவர். இது பற்றி குறிப்பினை தேவர் அண்ணாவும் வெளியிட்டிருந்தார் . கிழக்கில்…! மட்டக்களப்புக்கு இந்த அறிவிப்பு வந்தபோது வடக்கு,கிழக்கில் நிலைகொண்டிருந்த இந்திய இராணுவம் கட்டம்கட்டமாக வெளியேறும் நிலையில் இருந்தது .முதலாவது தொகுதியினர் அம்பாறை மாவட்டத்தை விட்டு 30.10.1989 அன்று முற்றாக வெளியேறிவிட்டனர் ஈ.பிஆர்.எல்.எப் ,ஈ.என்.டி.எல். எப்,டெலோ இயக்கங்களுக்கு கூடுதலான ஆயுதங்களையும் அவர்களால் பிடிக்கப்பட்ட இளைஞர்களுக்கு பயிற்சியும் வழங்கிவிட்டே இம் மாவட்டத்திலிருந்து வெளியேறினர்.இந்தியப்படையினர். இவர்களால் பயிற்சியளிக்கப்பட்டோர் திருக்கோவில் மற்றும் தம்பிலுவில் ஆகிய இடங்களில் இரு பெரும் முகாம்களை அமைத்திருந்தனர் .இந்தநிலையில் அன்றைய அம்பாறை மாவட்டத் தளபதியாக விளங்கிய அன்ரனி தலைமையில் ஒரு முகாமையும் இன்னொன்றை அன்றைய மட்டக்களப்பு மாவட்ட தளபதியாக விளங்கிய ரீகன் தலைமையிலும் 05.11.1989 அன்று தாக்கி கைப்பற்றினர்புலிகள். இந்த நிலையில் அம்பாறையில் அன்ரனி முதல் மாவீரர் நாளை திறம்பட நடத்தினார். திருக்கோயில் பகுதியில் தளபதி அன்ரனி தலைமையில் போராளிகள் பாதுகாப்பு வழங்க அம்பாறை மாவட்ட அரசியல் துறையினர் நிகழ்வை நடத்தினர். ஆனால் மடடக்களப்பு மாவடடத்தில் இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்ததால் பெரும்பாலான கிராமங்களில் மாவீரர்களின் படங்கள் வைத்து தீபம் ஏற்றப்பட்டது.வந்தாறுமூலையில் புலிகளும் மக்களும் கூடியிருந்த இடத்துக்கு எதிர்பாராத விதமாக இந்தியப்படையினர் வந்தபோதும் அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை. திருகோணமலையைப் பொறுத்தவரை இந்திய இராணுவத்தின் நெருக்கடி அதிகமாக இருந்தது. அவ்வாறிருந்தும் சாம்பல்தீவு மகாவித்தியாலயத்தில் நிகழ்வுக்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 150 க்கு மேற்பட்ட பொதுமக்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர். நிகழ்வுக்கான ஏற்பாடுகளின் பாதுகாப்புக்காக ஒரு அணி அனுப்பப்பட்டிருந்தது. இந்த அணிக்கு மேஜர் தர நிலையிலான சுரேஷ் என்ற போராளியையும் (பின்னர் படகு விபத்தில் ஆகுதியானார் ) நிகழ்வைப் பொறுப்பேற்று நடந்த அரசியல் பொறுப்பை ஏற்றிருந்த ரூபனையும் அனுப்பியிருந்தார் பதுமன். அன்றைய காலகட்டத்தில் சங்கரின் புகைப்படம் கூட இவர்களின் கைவசம் இருக்கவில்லை. நிகழ்வு நடைபெறும் தகவல் அறிந்து இந்தியப்படையினர் அங்கு விரைந்தனர். அவர்களை எதிர்த்து புலிகள் போரிட்டனர். ஒரு பக்கம் மோதலில் ஈடுபட்டுக்கொண்டே நிகழ்வையும் நடத்திமுடித்தனர் .மாவீரர்களின் பெற்றோரின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு சுருக்கமாக நிகழ்வு நடந்தன. ரூபன் சுடரேற்றி வைத்தார்.அதேவேளை இந்தியப்படையினரைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட லெப்.ரிச்சாட் (இராமசாமி குணராசா, இறக்கண்டி, திருகோணமலை.)என்ற போராளி களப்பலியானார். இன்னுமொரு போராளியும் இந்தச் சமரில் காயமடைந்தார்.மாவீரர் நாளின் மாண்பைப் பேணவும் மாவீரரின் பெற்ரோரைக்காக்கும் முயற்சியி லும் தன்னை ஆகுதியாக்கிய முதல்மாவீரனாக ரிச்சாட்டின் வரலாறு அமைந்தது. வடக்கில்..! கிளிநொச்சி மாவட்டத்தின் நிகழ்வு பிரதேசப் பொறுப்பாளராக இருந்த அத்தாரின் ஏற்பாட்டில் நடைபெற்றது. உருத்திரபுரம் சிவன்கோயி லடி, அக்கராயன்,கிளிநொச்சி ஆகிய இடங்களில் இந்திய இராணுவ முகாம்கள் இருந்தபோதும் இவற்றுக்கு நடுவில் இருந்த கோணாவில் அ.த.க பாடசாலையில் நிகழ்வுகள் நடைபெற்றன. வாடகை மோட்டார் வண்டியில் ஒலி பெருக்கி பூட்டி நிகழ்வு பற்றி அறிவிப்புச் செய்யப்பட்டது. சில வேளை இவர்களுக்கு இந்தியப்படையினரால் தொந்தரவு ஏற்படலாம் எனக்கருதி, நகரில் இருந்த சகல ஒலிபெருக்கி மற்றும் வாடகை மோட்டோர் வண்டிகளின் உரிமையாளர்கள் நிகழ்விடத்துக்கு அழைக்கப்பட்டனர். “வானம் பூமியானது பூமி வானமானது” என்ற பெருமாள் கணேசனின் பாடலை பின்னாளில் பிரபல எழுச்சிபாடகராக விளங்கிய S .G சாந்தன் பாடினார். அடிமைத்தனத்துக்கு எதிரான சினிமாப் பாடல்களை மாணவர்கள் பாடினர். (சத்தியமே இலட்சியமாய் கொள்ளடா , உள்ளத்திலே உரம் வேண்டுமடா போன்ற) “ஓநாயும் ,சேவல்களும்” என்ற நவீன குறியீட்டு நாடகமும் மேடையேற்றப்பட்டது.வன்னியில் முதன்முதல் மேடையேற்றப்பட்ட இக் குறியீட்டு நாடகத்தை நா. யோகேந்திரநாதன் எழுதியிருந்தார். அன்ரன் அன்பழகன் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். மாவீரர் நாளுக்கான சுடரேற்றல் முதலான நிகழ்வுகளுடன் மிகச் சிறப்பான முறையில் அனைத்தும் நடைபெற்றன.மூன்று முகாம் களிலிருந்தும் இந்தியப்படையினர் வந்தால் எதிர்கொள்ளத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதும் அசம்பாவிதம் ஏதுமின்றி அனைத்தும் நடைபெற்றன. மன்னார்ப் பிராந்தி யத்தின் சகல மாவீரர் விபரங்களை யும் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் அமுதன் (சுரேஷ் ) தலைவரிடம் சமர்ப்பித்திருந்தார். பண்டிவிரிச்சான் , நானாட்டான், கறுக்காய்க் குளம், முழங்காவில் ஆகிய இடங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. பண்டிவிரிச்சான் பாடசாலையில் பிரதேசப்பொறுப் பாளர் கணேஷின் ஏற்பாட்டில் நிகழ்வு நடைபெற்றது. கவிதை, பேச்சு, நாடகம் என பல்வேறு நிகழ்வுகளின் போட்டிகளும் முன்கூட்டியே ஏற்பாடு செயப்பட்டிருந்தன. நானாட்டான் நெல் களஞ்சியத்தில் பிரதேசப் பொறுப்பாளர் ஞானியின் ஏற்பாட்டில் நிகழ்வுகள் நடந்தன. பின்னாளில் தமிழீழ நிர்வாக சேவையில் பிரமுகராக விளங்கிய சின்னப்பா மாஸ்டர் இந் நிகழ்வை திறம்படச் செய்வதற்கான ஒத்துழைப்பை வழங்கியிருந்தார். கறுக்காய்க் குளத்திலும் நெற்களஞ்சியத்திலேயே நிகழ்வுகள் நடைபெற்றன. பிரதேசப்பொறுப்பாளர் பாரதி இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்.பூநகரி பிரதேசத்துக்கான நிகழ்வு முழங்காவில் மகா வித்தியாயத்தில் நடைபெற்றது. பிரதேசப் பொறுப்பாளர் சாம் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார். யாழ்.மாவட்டப் பொறுப்பாளராக பொட்டுவே செயற்பட்டார். அவர் தன்னுடன் பணியாற்றிக் கொண்டிருந்த ராஜன் (பின்னாளில் யாழ்.மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக விளங்கியவர்) சூட் ( தவளை நடவடிக்கையின் போது வீரச்சாவெய்தி யவர்) ஜக்சன் (தற்போது புலம்பெயர் நாடொன்றில் வசிப்பவர்) முதலானோரிடம் மாவீரர் நாள் அறிவிப்பு பற்றிக் குறிப்பிட்டார். இந்தியப் படையினரின் நடவடிக்கை தீவிரமாயிருந்ததால் சிறு சிறு குழுக்களாக காலத்துக்கேற்ப செயற்பட்டுக் கொண்டிருந்தனர் புலிகள். நீர்வேலி வாதரவத்தை, குப்பிளான், மாதகல் போன்ற இடங்களில் இந்த நகரும் குழுக்கள் பெரும்பாலும் தங்கியிருந்தன. பகிரங்க நடவடிக்கைகள் மேற்கொள்வது சிரமமென்பதால், சுவரொட்டிகள் அடித்து சாத்தியமான இடங்களில் ஒட்டுவோம் என ராஜனிடம் தெரிவித்தார் பொட்டு. முதல் சுவரொட்டி திலீபன் காலத்தில் அரசியற் பணிகளை மேற்கொண்டவர் என்ற வகையில் நடைமுறைச் சாத்தியமான விடயங்கள் பற்றி ராஜனின் அபிப்பிராயங்கள் கவனத்திற் கொள்ளப்பட்டன. ‘‘உங்கள் சுவடுகளில் தொட ரும் பாதங்கள்’’ என்றொரு வசனத்தை (சுலோகம் என்றும் சொல்லலாம்) எழுதிக் கொண்டுபோய் பொட்டுவி டம் காட்டப்பட்டது. அவர் அதை ஏற்றுக் கொண்டார். எனினும் மக்கள் மனதில் இன்னும் ஆழமாகப் பதிய வைப்பது எப்படி என்று சிந்தித்த வாறே தொடர்ந்து செயலில் இறங்கினார். எங்கேயாவது கறுப்பு வர்ணம் (பெயின்ற்) எடுத்து வரும்படி சொன்னார். வெளியே சென்றவர்கள் ஒரு வாளியில் அதனைக் கொண்டு வந்தனர். வெள்ளைத் தாள் ஒன்றை எடுத்த பொட்டு அருகில் நின்ற சூட்டை அழைத்து அவரது காலின் அடிப்பாதத்தில் பெயின்றை அடித்து அத்தாளில் பதிய வைத்தார். அச்சொட்டாக கால் பதிந்தது. எனினும் அங்கு நின்ற அன்னையொருவர் இவரது கால் சிறியதாக உள்ளது; வேறொருவரின் கால் பெரிதாக இருக்குமாயின் நன்றாக இருக்கும் எனத் தனது அபிப்பிராயத்தை வெளியிட்டார். அது சரியாகவே இருந்தது பொட்டுவுக்கு. உடனே அருகில் நின்ற ஜக்சனின் காலில் மை பூசப்பட்டது. அது மிகப் பொருத்தமாக இருந்தது. ராஜன் எழுதிய வசனத்தில் பாதங்கள் என்ற சொல்லை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக …. (டொட் டொட்) என குறிப்பிட்டார் பொட்டு. அந்த வகையில் தயாரிக்கப்பட்ட சுவரொட்டியே முதன் முதலில் மாவீரர் நாளுக்கென மக்களின் பார்வைக்கு வந்தது. துவிச்சக்கரவண்டி மூலமாக பல்வேறு இடங்களுக்கும் கொண்டு சென்று ஒட்டினர் புலிகள். ஒதுங்கிய இராணுவம் புத்தூர் முகாமிலிருந்து புறப்பட்ட இந்திய இராணுவத்தினரை நாடகக் கலைஞர் செல்வம் மற்றும் பாலன் முதலானோர் வழி மறித்தனர். மாவீரர் நாள் தொடர்பான விடயங்கள் இருப்பதால் வெளியே வராமலிருக்குமாறு அவர்கள் இராணுவத்திடம் கூறினர். தாங்கள் எப்படியும் வெளியேற வேண்டியவர்கள் தானே என்ற நினைப்பிலோ என்னவோ மக்களின் கருத்துக்கு மதிப்பளித்து திரும்பிச் சென்றனர் இந்தியப் படையினர். புலிகளின் கட்டளைப் பணியகமான மணலாறு’ 14: முகாமில் தேவர் அண்ணாவோடு இணைந்து ஏற்பாடுகளை கவனிக்குமாறு தலைவர் அறிவுறுத்தியிருந்தார். அந்த வகையில் பெண் போராளிகள் உட்பட அனைவரும் உணர்வுபூர்வமாக பணிகளில் ஈடுபட்டனர். புலிகளைத் தவிர வேறு எந்த விடுதலை இயக்கமும் காட்டுக்குள் இருந்து ஒலிபெருக்கி மூலம் பாடல்களை இசைக்க விட்டு தமது தோழர்களை நினைவுகூர்ந்தி ருக்காது. இந்நிகழ்வுகள் நடைபெறும்போதும் இந்தியப் படை வந்தால் எதிர்கொள்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் தளர்ச்சி ஏதும் இருக்கவில்லை. நிகழ்வுகளை கார்த்திக் மாஸ்டர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். இவருக்கு ஏற்கனவே காட்டுக்குள் வைத்தே புகைப்படக் கருவியைக் கையாள்வது, அதன் நுணுக்கங்கள் என்பவற்றைக் கிட்டு கற்பித்திருந்தார். தலைவரின் உரை முதலான விடயங்கள் அடங்கிய நிகழ்ச்சி நிரலை சங்கர் மற்றும் தேவர் அண்ணா திட்டமிட்டிருந்தனர். 1990 ஆம் ஆண்டு நள்ளிரவு 12 மணிக்கு மாவீரர் நாள் நிகழ்வுகள் ஆரம்பமாகின. 12 மணி இரு நிமிடத்துக்கு சுடரேற்றுமாறு விடுத்த அழைப்புக்கு மதிப்பளித்திருந்தனர் மக்கள். ஆலயங்களில் மணிகள் ஒலிக்க வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து மக்கள் சுடரேற்ற தலைவரின் உரை வானொலியில் ஒலிபரப்பானது. வீட்டு வாசலில் சுடரேற்றிய சமயம் மழை பெய்தது. அதனால் சுடர் அணைந்து விடாமலிருக்க குடை பிடித்தனர். இந்தக் காட்சி ஒரு ஓவியரின் மனதில் தைத்தது. அவர் இக்காட்சியைத் தத்ரூபமாக வரைந்திருந்தார். தீபமேற்றல், மணியோசை ஒலிக்கச் செய்தல் முதலான விடயங்க ளெல்லாம் கவிஞர் புதுவை அண்ணாவின் ஆலோசனையே. அதனைத் தலைவர் ஏற்றிருந்தார். மாவீரரின் பெயரை வீதிகளுக்கு சூட்டுவதும் நடைபெற்றது. மாவீரர் பெற்றோரைக் கெளரவித்தல் நிகழ்வும் இந்த ஆண்டிலேயே ஆரம்பமாகிவிட்டது. வலிகாமம் பகுதி மாவீரர்களது பெற்றோர் கோப்பாய் ஆசிரிய கலாசாலையிலும் வடமராட்சியைச் சேர்ந்தோர் நெல்லியடி மத்திய கல்லூரியிலும் தென்மராட்சியைச் சேர்ந்தோர் டிறிபேர்க் கல்லூரியிலும் தீவகத்தைச் சேர்ந்தோர் வேலணையிலும் கெளரவிக்கப்பட்டனர். புதிய உடைகள், அன்பளிப்புகள் வழங்கல், விருந்தோம்பல் முதலான விடயங்கள் பெற்றோரை நெகிழ வைத்தன. தாங்கள் இழந்த பிள்ளைகளை அங்கிருந்த போராளிகளின் வடிவில் கண்டனர். இந்திய இராணுவ காலத்தில் ஒரு போராளி வீரச்சாடைந்தார். அவரது உடல் ஓரிடத்தில் எரியூட்டப்பட்டது. ஏதோ அனாதைகள் போல எங்கள் சகாவை எரிப்பது ஒரு போராளியின் மனதைத் தைத்தது. விடுதலைக்காகப் புறப்பட்ட வர்கள் என்றாலும் அவர்களுக்கான நிகழ்வு கெளரவமாக நடத்தப்பட வேண்டும்– எங்கள் கட்டுப்பாட்டில் ஒரு நிலம் இருக்குமாயின் தனிப் போராளிகளுக்கென ஒரு சுடலை அமைக்க வேண்டும் என ராஜன் நினைத்தார். துயிமில்லங்களின் உருவாக்கம் நெருக்கடிகள் தானே புதிய சிந்தனைகளை தோற்றுவிக்கும். எம்.ஜி.ஆர். இளமையில் வறுமை காரணமாக பட்டினி கிடக்க வேண்டியேற்பட்டது. அந்த வலி மனதில் ஆழமாகப் பதிந்திருந்ததால் தான், தாம் முதலமைச்சராக வந்தபோது சத்துணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். தான் சாப்பிடக் கூடிய நிலையில் இருந்திருந்தால் நிச்சயம் கல்வியை இடைநிறுத்தியிருக்க மாட்டார். இந்த நிலை தனது ஆட்சியில் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடாது . முதலில் உணவுக்காகவேனும் பாடசாலைகளுக்குப் பிள்ளைகள் வரட்டும் என நினைத்தார். அதுபோல் வாழைத்தோட்டத்தில் சேரி வாழ்க்கையை அனுபவித்ததால்தான் ஒவ்வொரு குடும்பத்துக்குத் தனித்தனி வீடுகள் அமைக்கப்பட வேண்டுமென்று பிரேமதாஸ நினைத்தபடியால்தான் வீட்டுத் திட்டத்தில் அதீத அக்கறை காட்டினார். 10 லட்சம் வீட்டுத் திட்டத்தை நிறைவேற்றினார். அதைப் போன்றதே போராளிகளுக்கான தனிச் சுடலை என்ற சிந்தனையும். ராஜன் யாழ்.மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளரானதும் தனது எண்ணத்தைச் செயற்படுத்த முனைந்தார். முதலில் நிலம் வேண்டுமே? சிறைச்சாலைத் திணைக்க ளத்துக்கு சொந்தமான நிலம் கோப்பாய்– இராசபாதையில் உள்ளது என்ற தகவலை ஒரு போராளி தெரிவித்தார். அதனையே போராளிகளின் சுடலையாக்குவோம் என முடிவெடுத்தார் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் ராஜன். காணியைத் துப்புரவாக்குதல் போன்ற பணிகளில் பொ.ஐங்கரநேசனின் ‘தேனீக்கள்’ அமைப்பைச் சேர்ந்த மாணவர்களும் ஈடுபட்டனர். அடுத்து சுட லையையும் வடிவமைக்க வேண்டும். யாழ்.நகரப் பொறுப்பாளராக இருந்த கமல் மாஸ்டர் (வீரச்சாவடைந்துவிட்டார்) தனது பணிமனைக்கு முன்னால் வெளிநாட்டிலிருந்து வந்த கட்டட வடிவமைப்பாளர் ஒரு வர் இருக்கிறார் என்று தெரிவித்தார். அவரையே வரவழைத்து சுடலைக்கான வடிவம் அமைக்கப்பட்டது. வடிவமைப்பாளர் கோரியபடி கந்தர்மடத்திலிருந்த பொறியியலாளர் பங்களிப்பும் கிடைத்தது. ஏற்கனவே அறிமுகம் இல்லாதபோதும் இருவரும் ஆர்வமுடன் இப்பணியில் ஈடுபட்டனர். பொற்பதி வீதியிலுள்ள கட்டடத் தொழிலாளிகளின் பங்களிப்பில் நடந்த பணிகளில் உடலை எரிப்பதற்கான மேடையும் அடங்கியிருந்தது. இதன்பின்னர் வீரச்செய்தியவர் ஒரு கிறிஸ்தவர். அவரை எப்படி எரிப்பது என்ற பிரச்சினை. அதுவும் தனிச் சுடலையில் ஏன் எரிப்பான் என்பது அடுத்த கேள்வி. விவகாரம் எழுந்ததும் ராஜன் அங்கு சென்றார். ‘‘பொதுச் சுடலையில் கண்ட காவாலி, கழிசறைகளையும் எரித்திருப்பார்கள். எங்கள் மகனோ புனிதமான மாவீரர். காவாலிகளை எரித்த இடத்தில் இவரையும் எரிப்பதை ஏற்கமாட்டார்கள் தானே?” எனக் கேட்டார். யதார்த்தத்தைப் புரிந்தனர் பெற்றோர். மேடையில் இவரது சடலம் எரிப்பதை ஒளிப்படமாக எடுத்து தலைவருக்குக் காண்பிக்கப்பட்டது. ‘‘தனி மயானம் நல்லதுதான்; நாங்கள் ஏன் எரிக்க வேண்டும்? புதைக்கலாமே?’’ இந்தக் கேள்வி தான் வித்துடல்களைப் புதைக்கும் வழக்குக்கு அத்திபாரம். அடுத்ததாக வீரச்சாவெய்துபவரின் வீட்டுக்கு சென்றபோது அங்கும் பிரச்சினை எழுந்தது. ஏன் எங்கள் பிள்ளையைச் சுடலையில் எரிக்காமல் புதைக்க வேண்டும்? என்று கேட்டனர். நீங்கள் மகனின் நினைவு எழும் போதெல்லாம் அந்த இடத்துக்குச் சென்று கும்பிடலாம். அழலாம். பூப்போடலாம் என்று விளக்கமளிக்கப்பட்டது. வரலாற்றில் துயிலுமில்லத்தில் முதன் முதலாக விதைக்கப்பட்டவர் என்ற வரலாறு சோலை என்ற மாவீரருக்குக் கிடைத்தது. மாவீரரை விதைக்குமுன் வாசிக்கப்படும் வாசகங்களையும் (மாவீரர் பெயர் தவிர்த்தது )புதுவை அண்ணாவே எழுதினார். மாவீரர் பதிவுகள் இந்தக்காலப் பகுதிகளிலே மாவீரர் பணிமனை முழு அளவில் செயற்பட ஆரம்பித்தது. இந்தியப் படையினரின் வருகைக்கு முன்னர் மாவீரர்களின் விபரம் பேணப்பட்டிருந்தது. எனினும் இந்தியப் படையினரின் காலத்தில் புதிதாக இணைந்து கொண்டோர் பற்றிய விவரம் தலைமைக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்தக் காலத்திலேயே இணைந்து அக்காலப் பகுதியிலேயே சிலர் மாவீரராகியும் இருந்தனர். எனவே இவ்வாறான விடயங்களைத் தெரிவிக்கும்படி பகிரங்க அறிவிப்பு விடுக்கப்பட்டது. இதற்கு பொன்.பூலோகசிங்கம் என்ற சட்டத்தரணியின் பங்களிப்பு காத்திரமானதாக இருந்தது. அவர் நாள்தோறும் தினக்குறிப்பு (டயரி) எழுதும் பழக்கமுடையவர். பத்திரிகைகளில் வரும் மாவீரர் இழப்பு, பொதுமக்கள் இழப்பு (படையினர் மற்றும் இனவாதிகளால் ஏற்படுத்தப்பட்டவை) குறித்து அவர் எழுதிய குறிப்புகளே மாவீரர் பட்டியலை கணிசமான அளவு சரியாக்க உதவிற்று. தாவடியில் தும்புத் தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்ட விமானக் குண்டு வீச்சில் லூக்காஸ் என்பவர் மாவீரரானார். ஆனால் இந்த மாவீரர் பற்றிய விவரம் எவருக்கும் தெரியாது. நாவலப்பிட்டியைச் சேர்ந்தவர் என்று மட்டுமே தெரியும். 1990 இல் ஈழநாதம் நாளிதழ் ஆரம்பிக்கப்பட்டபோது வீரவணக்க விளம்பரங்கள் வெளிவந்தன. தங்கள் பிள்ளைகளை, உறவுகளை, நட்புகளை நினைவுகூர வசதியான சிலரால் மட்டுமே முடிந்தது. அதேசம்பவங்களில் வீரச்சாவெய்திய ஏனைய மாவீரர்களை எவரும் நினைவுகூரவில்லை. இதனைக் கண்ணுற்ற ஒரு போராளி அப்போதைய அரசியல் தலைமையை வகித்த மாத்தயாவிடம் இவ்விடயம் பற்றிக் குறிப்பிட்டார். நாளாந்தம் அதே நாளில் வீரச்சாவெய்தியோர் விவரம் வெளியிடப்பட வேண்டும் என்ற ஆதங்கத்தைத் தெரிவித்தார். வருடம் 365 நாளில் மட்டுமல்ல 4 வருடங்களுக்கு ஒருமுறைவரும் (லீப்வருடம் ) பெப்ரவரி 29 இல் கூட மாவீரர் விவரம் உண்டு என்பதும் தெரியவந்தது. இதற்கென இயங்கிவந்த பணிமனை இரண்டு மாவீரர்களின் தந்தையான பொன்.தியாகம் அப்பாவின் பொறுப்பில் ஆரம்பிக்கப்பட்டு மாவீரர் பணிமனையுடன் இணைக்கப்பட்டது. (பின்னர் இவர் மூன்று மாவீரர்களின் தந்தையானார். பள்ளமடுவில் இவரது மகளும் வீரச்சாவடைந்தார்) பெயரில், திகதியில், முகவரியில் என பல்வேறு தவறுகளுடன் இருந்த பட்டியல்கள் தியாகம் அப்பாவின் முயற்சியால் திருத்தப்பட்டன. மாவீரர் நிகழ்வுகள் பற்றிய சுற்றுநிருபங்கள் இந்தப் பணிமனையினால் விடுக்கப்பட்டன. இந்தப்பணிமனை கோரும் விவரங்களை உடனடியாக வழங்க வேண்டும் என பிராந்தியத் தளபதிகளுக்கும் தலைவரும் உத்தரவு பிறப்பித்திருந்தார். எந்தெந்தத் துயிலுமில்லங்களில் யார் ,யார் விதைக்கப்பட்டார்கள், வித்துடல் கிடைக்காத யார் யாருக்கு எங்கெங்கு நினைவுக்கல் உள்ளன போன்ற முழு விவரங்களும் இந்தப்பணிமனையில் இருந்தது.இதன் மூலம் மிகவும் காத்திரமான பணியை செய்துவந்தார் பொன் தியாகம் அப்பா. ‘‘தாயகக் கனவுடன்..” 1992 ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தலைவர் தலைமையில் நடந்தது. அப்போது மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளராக விளங்கிய ஜெயா ஒரு ஆலோசனையை முன்வைத்தார். மாவீரர் பெற்றோரும் போராளிகளும் இணைந்து பாடக் கூடிய ஒரு பாடல் உருவாக்கப்பட வேண்டும் என்றார். உடனே தலைவர் புதுவை யண்ணா வைப் பார்க்க கையைப் பொத்தி பெருவிரலை உயர்த்திக் காட்டினார் புதுவையண்ணா. ஈழநாதம், விடுதலைப் புலிகள், சுதந்திரப் பறவை வெளிவந்த மாவீரர்கள் பற்றிய கட்டுரைகளை தனியான நூல்களாக வெளியிட வேண்டும் என்ற அறிவனின் யோசனையும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. துயிலு மில்லத்துக்கு வருவோர் தமது பிள்ளைகளின் நினைவாக வீடுகளில் நாட்டுவதற்கு அவர்களின் கல்லறைகள் மற்றும் நினைவுக் கற்களுக்கு முன்னால் தென்னை போன்ற பயன்தரு மரங்களை வைக்க வேண்டும் என்று பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தினரால் வைக்கப்பட்ட யோசனையும் ஏற்கப்பட்டது. இந்த யோசனை இன்று பல்வேறு வகையிலும் பின்பற்றப்படுவது ஆரோக்கியமான விடயம். ஜெயாவின் கருத்தை உடனடியாக செயலாக்கினார் புதுவையண்ணா. அதுதான் ‘‘தாயகக் கனவுடன்’’ என்று ஆரம்பிக்கும் மாவீரர் பாடல். மனதைப் பிழியும் இப்பாடல் இன்றுவரை மாவீரர் குடும்பத்தினர், முன்னாள் போராளிகள்மற்றும் தமிழ் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது. கண்ணன் இசையமைக்க வர்ணராமேஸ்வரன் குரலில் ஒலித்த பாடல் இது. கோப்பாய் துயிலுமில்லத்தில் தனக்குப் பக்கத்தில் நின்று நேரில் அதனைப் பாடவேண்டும் என்று அப்போதைய அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச் செல்வன் வர்ணராமேஸ்வரனின் வேண்டிக் கொண்டார். ஒலிபெருக்கியிலும் இந்தப்பாடல் இசையுடன் ஒலித்தது. முதன்முதலாக இவ்வரிகளைக் கேட்ட மாவீரர் குடும்பத்தினர் கதறி அழுதனர். இப்பாடலின் ஒலிநாடாவை ஒரு போராளியிடம் (கரும்பறவை) வழங்கிய புதுவையண்ணை முதன் வரிகளைக் கேட்கும்போது உங்களுக்கு நினைவில் வரும் சம்பவங்களையும் கருத்துக்களையும் எழுதித் தாருங்கள் என்றார். அந்த விடயம் வெளிச்சம் இதழில் வெளிவந்தது. ஒரு மாவீரனின் தாயாரான மலரன்னையும் அன்றைய மாவீரர் நாள் குறித்து கட்டுரை எழுதியிருந்தார். மாறிய நேரம் 1992 மாவீரர் நாள் பொதுச்சுடரை தமிழ்ச்செல்வன் ஏற்றினார்.1991 இல் இதனை மாத்தயா ஏற்றியிருந்தார். மாவீரர் பாடலில் வரும் ‘‘நள்ளிரா வேளையில் நெய் விளக்கேற்றியே நாமுமை வணங்குகிறோம்’’ என்ற வரி ‘‘வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்’’ எனப் பின்னாளில் மாற்றப்பட்டது. ஏனெனில் முன்னர் நள்ளிரவிலேயே மாவீரர் நாள் நினைவுகூரப்பட்டது. பின்னரே தற்போதுள்ள மாலை 6.05 க்கு மாவீரர் சுடர் ஏற்றும் முறை வழக்கத்துக்கு வந்தது . தற்போதைய நேரமே முதல் மாவீரரான சங்கர் வீரச்சாவெய்திய கணம், 2009 மே 15 ஆம் நாள் வரை 35 ஆயிரம் அளவில் மாவீரர்களின் விவரம் கிடைத்தன. இதன் பின்னர் தரவுகளைப் பேணவோ வழங்கவோ இயலக் கூடிய நிலையில் சூழல் அமையவில்லை. https://www.meenagam.com/மாவீரர்-நாள்மரபாகி-வந்த/- ஒரு துரோகத்தின் நாட்காட்டி
பழையவற்றில் இருந்து பாடங்களைப் படிக்காதவரை அவற்றை நினைவூட்டத்தான் வேண்டும். கடந்த 16 வருடங்களில் தமிழ் மக்களுக்குக் சாதகமாக எதுவும் நடக்கவில்லை. தற்போதைய தமிழ் அரசியல் தலைமைகள் ஒரு தீர்வைப் பெறவோ, பொருளாதர முன்னேற்றத்தை உருவாக்கவோ, அல்லது அவலவாழ்வில் இருக்கும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவோ ஒரு உருப்படியான திட்டத்தையேனும் சிந்திக்கும் ஆற்றல் இல்லாதவர்கள். ஆனால் இவைகளை வைத்து கட்சி அரசியல் செய்து தங்களை வளப்படுத்திக்கொள்வார்கள். தமிழ்த்தேசியத்திற்கு எதிர்நிலையில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் முன்னெடுக்கும் அபிவிருத்தி அரசியலில் இலாபம் அடைவதும் சிங்கள அரசும், சிங்கள முதலாளிகளும், சிங்கள படையினரும்தான். தமிழர்களுக்கு தலையில் தொடர்ந்தும் மிளகாய் அரைக்கப்படும்.- தீரமுடன் போராடிய எல்லைப்படை மாவீரர்கள் நினைவில்....
தீரமுடன் போராடிய எல்லைப்படை மாவீரர்கள் நினைவில்.... எல்லைப்படை மாவீரர்கள் எல்லைத் திசையெங்கும் நிலையாகினர்- எங்கள் உரிமைக்கு பலம் தேடி வித்தாகினீர் மகிழ்வோடு ஈழம் காணப் படையது சேர்ந்தீர்- வேங்கை வீரரென விடுதலைக்கு உயிர் கொடுத்தீர் -அன்பரசு ஒரு விடுதலைப் போராட்டம் வெற்றி பெற வேண்டுமானால் அது மக்கள் இயக்கமாக இடம் பெற வேண்டும். போராடுவோர் வேறாகவும் மக்கள் வேறாகவும் பிரிந்து நிற்கும் போது வெற்றி வாய்ப்புக்கள் அரிதாகக் கிடைக்கின்றன. உலக விடுதலை வரலாற்றில் மக்கள் பங்களிப்பின் சிறப்பை எம்மால் உணர முடியும். மக்களும் போராடுவோரும் ஒரேயணியாக நிற்கும் போது எந்த சக்தியாலும் அவர்களை வெல்ல முடியாது. மக்களின் அரசியல் வளர்ச்சியும், போராட்டம் பற்றிய விழிப்பும் மிகப் பெரிய பின்னணி சக்தியாக இடம்பெறுகின்றன. மக்களின் நேரடிப் பங்களிப்பு அதன் அடுத்த கட்டமாக அமைகிறது. அந்த நிலை வரும் போது மக்களும் போராளிகளும் ஒன்றாகி விடுகின்றார்கள். வியட்னாம் போரின் போது விவசாயிகள் ஒரு தோளில் கலப்பையையும் அடுத்த தோளில் துவக்கும் சுமந்த படி வயற்காட்டிற்குச் சென்றுள்ளார்கள். மக்கள் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் அவ் வேளையில் அவர்கள் போராட்டத்திலும் பங்களிப்புச் செய்தார்கள். எமது விடுதலைப் போரின் பரிணாம வளர்ச்சியாக எல்லைப் படையின் தோற்றத்தைக் கணிப்பிடலாம். எல்லைப் படையினருக்கு குடும்ப வாழ்வும் குடும்பப் பொறுப்பும் உண்டு. அவர்கள் பொது மக்களின் அங்கமாவர். ஏன்றாலும் அவர்களால் பார்வையாளர்களாகத் தூர நிற்க முடியவில்லை. தேவை உணர்ந்து எல்லைப் படையில் இணைந்தார்கள். தீரமுடன் போராடினார்கள். மாவீரானர்கள் தலைவன் கண்கலங்க ஒரு போர்வீரன் சாவானாகில் அந்தச் சாவைத் தேடிப் பெற வேண்டும் என்று தமிழ் இலக்கியம் கூறுகின்றது. எல்லைப் படைவீரர்கள் இத் தகுதியைப் பெற்று விட்டார்கள். மனைவி, பிள்ளைகள், வாழ்க்கைப் பணி என்பவற்றை ஒரு புறம் வைத்து விட்டு அவர்கள் களமாட வந்தார்கள். தமது வரலாற்றுக் கடமையை உணர்ந்து அவர்கள் ஆயுதம் ஏந்தினார்கள். எமது எல்லைப்படை மாவீரர்களில் பெண்களும் இருக்கிறார்கள். தமிழ் இருக்கும் வரை அவர்கள் புகழ் பாட்டாகவும் நூலாகவும் வெளிவரும். 1778 இல் நடந்த அமெரிக்கச் சுதந்திரப் போரில் மொல்லி மெக்கோலி என்ற குடும்பப் பெண் பங்கு பற்றினாள். அவள் போராளியல்ல. பீரங்கிப் படையில் போராடிய கணவனுக்கு உதவ வந்தவள். ஒரு கட்டத்தில் அவளே பீரங்கியை இயக்கும் கட்டம் தோன்றியது. அமெரிக்கச் சுதந்திரப் போராட்டத்தின் கதாநாயகி என்ற சிறப்பு இப் பெண்ணுக்கு உண்டு. ஒரு இனம் ஒரு தேசமாக எழுச்சி அடைவதற்கும் சுயநிர்ணயக் கோரிக்கையை முன்வைப்பதற்கும் மக்கள் சக்தி அடித்தளமாக அமைகின்றது. ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராட்டம் மக்கள் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படும் போது சுதந்திரம் நிச்சயம் கிடத்தே தீரும். எல்லைப் படை மாவீரர்களின் தியாகம் ஒரு போதும் வீண் போக மாட்டாது. அவர்கள் பங்களிப்பு அளப் பெரியது. அவர்களுடைய வரலாற்றுப் பதிவை இதன் மூலம் வெளிப்படுத்துகின்றோம். முதல் எல்லைப்படை மாவீரர் முதல் பெண் எல்லைப்படை மாவீரர் “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” -சூரியப்புதல்வர்கள் 2005 -https://www.thaarakam.com/news/efea3df5-6f1a-4fb0-a8c9-6883533fefd6- விடுதலைப்படைப்பாளி கப்டன் மலரவன் வீரவணக்க நாள்
- எங்கள் கண்மணிகள் கண்திறக்கின்ற காலம் மாவீரர் வாரம் நவம்பர் 21 - 27
எங்கள் கண்மணிகள் கண்திறக்கின்ற காலம் மாவீரர் வாரம் நவம்பர் 21....27 தமிழ்மக்களின் விடுதலைக்காகவும் சுதந்திரமான வாழ்விற்காகவும் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நவம்பர் 27 ஆம் திகதி தமிழ் மக்கள் நினைவிற்கொள்வது தொன்று தொட்டு வந்துள்ள நிலையில் 2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் தாயகத்தில் இன அழிப்பினை மேற்கொண்ட பேரினவாத சிறீலங்கா அரசு அதன் பின்னர் தமிழர்களின் சுதந்திரங்ளை பறிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்போரின் போது முதற்க களச்சவாவடைந்த லெப்ரினன் சங்கர் அவர்களின் நினைவாக நவம்பர் 27 ஆம் நாள் ஆண்டு தோறும் மாவீரர் நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. 1990 ஆம் ஆண்டு மாவீரர் வாரமாக 21-27 வரை கடைப்பிடிக்கப்பட்டு பின்னர் மாவீரர் எழுச்சி நாட்களாக 25,26,27 ஆம் நாட்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன இந்த நாட்களில்தான் மாவீரர் பெற்றோர்கள் கௌரவிக்கப்படுவதும் வீதிகள் தோறும் அலங்காரம் செய்வதும் மாவீரர்களின் எழுச்சி நாளுக்காக மக்கள் அனைவரும் எழுச்சி பதாகைகைள கட்டுவதுமாக தாயகம் அன்று எழுச்சிகோலம் பூண்ட காலம். இன்று அடக்கு முறைக்கு மத்தியில் சிங்கள இனவெறியர்கள் மாவீரர்களை புதைத்த இடங்களில் நிலைகொண்டுள்ளதுடன் மாவீரர்களின் தடையங்கள் அனைத்தும் சிங்கள காடையர்களால் அழிக்கப்பட்டு இல்லாமல் செய்யப்பட்டு துடைத்தொழிக்கப்பட்ட நிலையில் சிங்கள காடையர்களின் நினைவுத்தூபிகள் அங்காங்கே எழுந்து நிக்கின்றன அது இனவெறியின் அடையாளமாக இன்றும் தமிழ்மக்களால் காணக்கூடியதாக இருக்கின்றது. போரில் உயிரிழந்தவர்கைள நினைவிற்கொள்ள எவரும் தடைவிதிக்கமுடியாது என்று உலகநாடுகள் சொன்னாலும் பேரினவாத சிறீலங்கா அரசாங்கம் பல அடக்குமறைகளை மறைமுகமாக கையாள்கின்றது. இன்னிலையில் உலகையே அச்சுறுத்தும் கொரோன மத்தியிலும் 2020 ஆம் ஆண்டு மாவீரர் நாள் நினைவு நிகழ்வுகளை தமிழ் மக்கள் தங்கள் வீடுகளில் நினைவிற்கொள்வார்கள் கார்த்திகை பூ பூக்கின்ற மாதம் எங்கள் கண்மணிகள் கண்திறக்கின்ற மாதம்,வானம் மழைத்துளியாய் கண்ணீர் சிந்துகின்ற காலம் இது மாவீரர் வாரம் வீரம் செறிந்த மண்ணின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த எங்கள் தெய்வீக பிறவிகளை நினைவிற்கொள்ளும் மாவீரர் வாரம் நவம்பர் 21. https://www.thaarakam.com/news/21d1a2b6-e6eb-4851-9d47-2c5ead9ddf6e- எங்கள் தேசம் நிமிர்வுற நிமிர்ந்தவன் லெப். கேணல் மல்லி.!
எங்கள் தேசம் நிமிர்வுற நிமிர்ந்தவன் லெப். கேணல் மல்லி.! எங்கள் தேசம் நிமிர்வுற நிமிர்ந்தவன் மல்லி.! லெப். கேணல் மல்லி, விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவன். இவன் விடுதலைப்போராட்ட காலத்தில் பல களங்களில் தன் முத்திரையைப் பதித்தவன்.இரு தேசங்களின் ஆக்கிரமிப்பு இராணுவங்களுடன் இவன் போராடினான். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு என்னும் இடத்தில் பிறந்தான். நீண்ட போராட்ட வாழ்வில் ஒயாது கடுமையாக உழைத்தவன். தனைவருத்தி தன்னொளி பார்த்தவன். அமைதிப் போர்வையுடன் வந்த இந்தியப் படைகள் முள்ளியவளையில் முகாம் இட்டிருந்தன. 1990ம் ஆண்டில் இம்முகாம் மீதான தாக்குதலில் பங்கேற்று நின்றான். இந்தக் காலப்பகுதியிலேயே அவர்களோடு கூட்டாக நின்ற கும்பல்கள், கிளிநொச்சி 18ம் போர் எனும் இடத்தில் முகாம் அமைக்க முற்பட்ட வேளையில் தேசத்துரோகிகள் மீதான தாக்குதலில் ஈடுபட்டான். 1991களில் கொக்காவில், முல்லைத்தீவு, மாங்குளம் என தொடர்ந்து வீழ்ந்த இராணுவ முகாம்களின் தாக்குதல்களில் முன்நின்றான். 1991 ஆ.க.வெ என விடுதலைப் புலிகளால் பெயர் சூட்டப்பட்டு நடாத்தப்பட்ட ஆனையிறவு முகாம் மீதான தாக்குதல்களிலும் 1992ல் வண்ணாங்குள முகாம் தாக்குதல்களிலும் 1993ல் பூநகரி முகாம் தாக்குதல்களிலும் புயலென நின்றான். 1990ம் ஆண்டு மாங்குள முகாமிலிருந்து மல்லாவிப் பக்கமாக முன்னேற முயன்ற இராணுத்தினருடன் நேரடி மோதலில் நின்றான். சிலாவத்துறையில் இருந்து அளம்பில் நோக்கி முன்னேற முயன்ற இராணுவத்தினருடனான நேரடி மோதலில் குதித்தான். யாழ்தேவி எனப் பெயரிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை அது. கட்டைக்காட்டிலிருந்து புலோப்பளையை நோக்கி முன்னேற முயன்ற யாழ்தேவியை தடம்புரள வைத்தான். அன்பும் பண்பும் அகத்திருத்திய மனிதரைச் சுமந்து யாழ்தேவி வரின் வரலாமேயன்றி ஆக்கிரமிப்பு எண்ணங்கொண்டு எவரும் வருதல் இயலாது என்று எதிர் நின்றான். தாயை தாய்த் தேசத்தை தன் உயிரினும் மேலாகப் பூசிக்கின்றவன். போர் என்றால் நெஞ்சம் பூரித்து தோள்கள் வலுவுற நிமிர்ந்து நடந்தவன். எங்கள் தேசம் நிமிர்வுற நிமிர்ந்தவன். போர் ஓய்வு மீறல்…..! திருமதி சந்திரிகா குமாரணதுங்க ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்த ஒருவாரப் போர் ஓய்விற்கு எதிராக சிறிலங்காப் படையினர் 17.11.1994 நெடுங்கேணியில் பதுங்கித் தாக்கியதில் எமது மூத்த தளபதி லெப்.கேணல் மல்லி வீரச்சாவை அடைந்தான். அவனது தலையை படையினர் கோரமாக வெட்டி எடுத்துச் சென்றனர். விடுதலைப் புலிகள் அறிவித்த ஒரு வார கால போர் ஓய்வையும், இப்போர் ஓய்வு தொடர்பாக ‘விடுதலைப் புலிகள் போர்நிறுத்தத்தைக் கடைப்பிடித்தால் அரசாங்கம் அதற்குப் பிரதிகூலமாக நடந்துகொள்ளும். மோதல்கள் தவிர்க்கப்படுமானால் அது சம்பிரதாயபூர்வ போர் நிறுத்தத்திற்கு இட்டுச் செல்லும்’ என்று சிறிலங்காவின் பிரதிப் பாதுகாப்பமைச்சர் கேணல் அனுரத்த ரத்வத்த அறிவித்ததையும் உதாசீனப்படுத்தும் வகையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறாக நடாத்தப்பட்ட தாக்குதல் ஆறாவது போர் ஓய்வு மீறல் நடவடிக்கையாக இருந்தது. அக்காலத்தில் அதே பகுதியில் இரு பொதுமக்கள் சிறிலங்கா இராணுவத்தினரால் சுட்டுக் காயப்படுத்தப்பட்டு அரசகரும மொழியினால் தூசிக்கப்பட்டிருக்கிறார்கள். இதைவிடவும் மட்டக்களப்பு அரிப்பு கடல் பகுதி, வடமராட்சிக் கடற்பகுதி ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதும் சாவகச்சேரியில் பயணிகள் பேருந்து உலங்குவானூர்தியிலிருந்து தாக்குதலுக்குள்ளானதும் குறிப்பிடத்தக்கது. நெடுங்கேணியில் வீரச்சாவெய்திய மூத்த தளபதி லெப்.கேணல் மல்லியின் தலையை வெட்டிய சிறிலங்கா இராணுவத்தினர் அதனைத் தம்முடன் எடுத்துச் சென்றனர். 1990க்குப் பின்னர் இவ்வாறான செயலில் இப்பகுதி இராணுவத்தினர் ஈடுபடுவது இரண்டாவது தடவையாக இருக்கின்றது. 1987இல் மன்னார் ஆட்காட்டி வெளியில் மன்னார் மாவட்டத் தளபதி லெப்.கேணல் விக்டரின் புதைகுழியைத் தோண்டிய சிறிலங்கா இராணுவத்தினர் அவரது தலையையும் வெட்டியெடுத்துச் சென்றிருந்தனர். கொலைவெறியும், ஒழுக்கமும்,கட்டுப்பாடும் அற்ற ஆக்கிரமிப்பு இராணுவத்தினரின் செயல்கள் கட்டுமீறிச் செல்கின்ற வேளையில் எல்லாம் சிம்ம சொப்பனமாய் நின்ற அந்த வீரர்களின் பெயர்களைக் கேட்டாலே நடுங்குகின்றவர்களாய் இராணுவம் இருந்ததின் எதிர் விளைவுகளாய் அவர்களது இச் செயல்கள் அமைகின்றன. மனித நாகரிகமே வெட்கித் தலைகுனியும் இவ் இழி செயலுக்குரியவரின் கூடாரமாய் சிறிலங்கா இராணுவம் மாறிவருவதை இச்செயல்கள் காட்டுகின்றன. ஆர்த்தெழும் கடலென மக்கள்…..! இத் தாக்குதலில் வீரமரணமடைந்த மல்லிக்கும் அவருடன் வீரமரணமடைந்த வீரவேங்கை அருளப்பனுக்கும் அஞ்சலி செலுத்த பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டிருந்தார்கள். புதுக்குடியிருப்பு மாவீரர் மண்டபத்திற்கு மாவீரரின் பூதவுடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது. அங்கு மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஒலிபெருக்கி வாகனம் முன்செல்ல புதுக்குடியிருப்பு மகாவித்தியாலய மாணவர்களின் ‘பாண்ட்’ வாத்திய இசையுடன் மாணவர்கள் தொடர அரச ஊழியர்கள், விடுதலைப் புலிகள், காவல்துறையினர் அனைவரும் அணிவகுத்துச் சென்றனர். வன்னி மாவட்ட அரசியற்துறை துணைப் பொறுப்பாளர் புவிதரன் – முல்லைக்கோட்ட அரசியல் பொறுப்பாளர் இசையருவன் ஆகியோர் அஞ்சலியுரையாற்றினர். மல்லியின் வீரச்சாவினால் புதுக்குடியிருப்பு சோகமாயிருந்தது. வீதியெங்கும் கறுப்புக் கொடிகள் பறந்தன. தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன; வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. இதுவரை காணாத அளவிற்கு பெருந்தொகையான மக்கள் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்கள். வெளியீடு :-எரிமலை இதழ் “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” https://www.thaarakam.com/news/5002f4cb-31a2-49e2-b653-ec7c64e51c50- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழரசுவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நான் அலுவலக கணணியில் யாழைப் பார்ப்பது குறைவு. இடைக்கிடை login செய்யாமல் பார்க்கும்போதெல்லாம் term & conditions ஐ accept பண்ணச் சொல்லிக் கேட்கின்றது. Accept பண்ணாமல் உள்ளே போகமுடியாது. ஆனால் இப்படி பல blog களிலும், website களிலும் நடக்கின்றது. Mobile இல் Login பண்ணி உள்ளே வந்தால் ஒரு தடவைக்கு மேல் accept பண்ணச் சொல்லிக் கேட்பதில்லை.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாத்தியார் ஐயா!🎉🎉🎉 - தமிழீழப் போர் மருத்துவ வரலாற்றில் அசாத்திய ஆற்றல் மேஜர் இறைகுமரன் (திவாகர்)
Important Information
By using this site, you agree to our Terms of Use.