Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. லெப். கேணல் நவம் வீழ்ந்தாலும் வித்துக்களாக மடிந்தாலும் மக்களுக்காக………..! Last updated May 14, 2020 முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்திருந்த இந்திய இராணுவ முகாம் மீதான தாக்குதலில் விழுப்புண்பட்டு தமிழகத்தில் சிகிச்சை பெற்றுவந்த வேளை 15.05.1989 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் லெப். கேணல் நவம் (டடி) ஆகிய மாவீரரின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். படைய ஆய்வு முயற்சி ஒன்றின் போது கையை இழந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கின்றான் ஒரு போராளி. வருவோர் போவோர் எல்லாம் அவனுக்கு ஆறுதலும், இரக்கமும் தெரிவிக்கின்றனர். அது அவனுக்கு சினத்தை மூட்டுகின்றது. இறுதியாக அவனது தாய் வருகின்றாள். நீ போராடியது போதும். இனி உனக்கு ஒரு கையில்லை வீட்டிலேயே இரு. அன்பின் மேலீட்டால் இப்படியோரு வேண்டுகோளை விடுகின்றாள் தாய். அது அவனது மனக்கொதிப்பை அதிகரிக்கினறது. தனக்கு இரக்கம் கூறவந்தவர்களுக்கு சொல்ல வேண்டியதைச் சொல்ல இதுதான் சரியானவேளையெனத் முடிவெடுக்கிறான். “எனக்கு இன்னொரு கை இருக்கு”. உறுதியுடன் தெளிவாக ஒலிக்கின்றது அவனது சொற்கள். அவனுக்கு ஆறுதல் கூற முனைந்தவர்களும் தமது தவறை எண்ணி நாணுகின்றனர். கால் இழந்த போராளிகளுக்கு கிட்டு எப்படி நம்பிக்கை ஒளியாக, வழிகாட்டியாக திகழ்கின்றாரோ அதே போலத்தான் போராட்டத்தில் தமது கரங்களை இழந்த போராளிகளுக்கு வழிகாட்டியாக விளங்குகிறான் அவன். அவன்தான் டடி. டடி-நவம் வன்னிக் காடுகளின் மூலை முடுக்குகள் எல்லாம் இவனுக்கு அத்துப்படி. இக்காடுகள் பற்றிய படம் இவன் நெஞ்சில் நிறைந்திருக்கும். இவன் பிறந்தது மலைப் நாட்டில். போராடியது வன்னிக் காளங்களில். வன்னியை காதலித்த…. வன்னிக் களத்திலே காயமுற்ற இவன் உயிர் பிரிந்தது தமிழகத்தில். பசிலனையும், லோறன்சையும் சேர்த்தால் அதுதான் நவம். இவனுடன் நெருங்கிப் பழகிய ஒரு போராளி கூறிய சொற்கள் இவை. ஒவ்வொரு போராளிக்கும் தனித்துவமாக சில ஆற்றல்கள் இருக்கும். துணிச்சலுக்குப் பெயர் போனவன் பசீலன். சிறந்த மதிநுட்பத்திற்குப் பெயர் போனவன் லோறன்ஸ். இருவரது தன்மைகளையும் ஒருவரிடத்தில் கண்டதால்தான் நவத்தைப் பற்றி அப் போராளி இவ்வாறு குறிப்பிட்டான். விருந்தாளிகளாக வந்தோரால் எதிலியாக்கப்பட்டதுதான் மணலாற்று மக்களின் வரலாறு. இன்றோ தமது சொந்த நிலத்தை தாமே பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வுடன் நிற்கிறார்கள் மணலாறு மக்கள். வரலாற்றில் இந்நிலையை ஏற்படுத்தியதில் கணிசமான பங்காளிகள் நவமும் அவனது தந்தையுமே. எப்போதும் துப்பாக்கியுடன் காணப்படும் ஓமர்முக்தார் என்று போராளிகளால் அழைக்கப்படும் இவனது தந்தையும் இவனும் இந்த மண்ணை விட்டு நாம் எங்கும் போவதற்கில்லை என்ற செய்தியை ஸ்ரீலங்கா அரசிற்கு அடிக்கடி உணர்த்தினார்கள். அரசன் ஒருவன் தான் கைப்பற்றும் இடங்களைத் தன் ஆட்சியின் கீழ் வைத்திருப்பதற்கு அவனுக்கு உதவுவது அங்கு அவன் விட்டுச் செல்லும் அவனது படை முகாம்கள் அல்ல. இதைவிட அவன் தனது இடத்து மக்களை அங்கு குடியேற்றுவதன் மூலம் சிறப்பாகச் செய்யலாம். அங்கு குடியேறும் மக்கள் அங்கு நிரந்தரமாக வசிக்கப் போகிறவர்களாதலால் அவர்கள் எவ்வித இடர்களையும் எதிர் கொள்ளவும், அவ்விடங்களைத் தமதாக்கிப் போராடுவதற்கும் தயாராக இருப்பார். இது இளவரசன் என்னும் நூலில் காணப்படும் மாக்கிய வல்லியின் கூற்று. இதை அப்படியே நடைமுறைப்படுத்தியதால்தான் இன்று அம்பாறை என்றொரு தொகுதியே முழுச்சிங்களத் தொகுதி என்றாகிவிட்டது. இதையே படிப்படியாக திருமலை, மணலாறு என விரிவாக்கி வருகின்றது சிங்கள அரசு. ஆனால் இது தமிழீழ மண் என்று எல்லை போட்டுக் காட்டியது நவத்தின் துப்பாக்கி. குடியேற்றக்காரர்கள் என்பது வல்வளைப்பு படைகளின் ஒரு வடிவமே என்பதை இவன் உணர்ந்து அதுக்கேற்ற நடவடிக்கைகள் மேற்கொண்டபடியால் இன்னொரு ஓதியமலை வரலாறு மீண்டும் நிகழாது தடுக்கப்பட்டது. நெருக்கடி மிகுந்த காலகட்டங்களான, எங்கும் இந்திய இராணுவமணம் வீசிய அந்த நாட்களில் இயக்கத்தையும், இயக்கத் தலைமையயும் பாதுகாக்க இவன் மேற்கொண்ட ஒவ்வொரு நடவடிக்கையும் பற்றி இவனுடன் பழகிய ஒவ்வொரு போராளியும் கண்கள் பனிக்க கதைகதையாய் கூறுகின்றனர். சூழலுக்கேற்ற மாதிரியும், மக்களுக்கேற்ற மாதிரியும் அமைந்த இவனது ஒவ்வொரு செயலும் போராட்டம் பற்றிய தெளிவை புதிதாகப் போராட்டத்தில் இணைந்து கொள்ளும் இளைஞர்களுக்கும், யுவதிகளிற்கும் ஊட்டியது. நெருக்கடியான காலகட்டத்தில் பதட்டபடாமல் செயற்படும் துணிவை சகபோராளிகளுக்கு ஊட்டினான். காட்டில் நவம் நிற்கும் பகுதி ஒரு பாதுகாப்பு வலயம் என்றே கூறலாம். அந்தளவுக்குச் சிறந்த முறையில் ஒரு ஒழுங்கமைப்பை உருவாக்கியவன் அவன். ஒற்றைக் கையால் இவன் செய்யும் வேலைகளைப் பார்த்த ஒவ்வொருவருக்கும், இவனால் இது முடியுமானால் என்னால் ஏன் முடியாது என்ற தன்னம்பிக்கையை ஊட்டியது. அவ்வாறு உருவான போராளிகள்தான் வன்னி மாண்ணைக் காத்து நிற்கின்றனர். கணக்கற்ற களங்களைக்கண்ட இவனை நாம் இழந்தது உண்மைதான். ஆனால் இவனால் ஊட்டப்பட்ட ஒழுங்கமைப்பு, போராட்ட உணர்வு எதையும் மணலாற்று மண் மறந்துவிடவில்லை. அவ்வப்போது மணலாறு பகுதியில் எதிரியிடமிருந்து இவனால் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுடன் திரியும் போராளிகளும், ஊர்காவல் படையும் சொல்லும் செய்தி இதுதான். வெளியீடு :களத்தில் https://www.thaarakam.com/news/130418
  2. பட்டங்கள் – சில குறிப்புகள் -ராணிதிலக் கோடை வெப்பத்தைத் தருகிறது. வெப்பம் காற்றைத் தருகிறது. தென்னைகள், மாமரங்கள் அசைகின்றன. சிறுவர்கள் வந்து சேர்கின்றனர். ஒரு செய்தித்தாளை எடுத்துக்கொண்டார்கள். சச்சதுரமாகக் கத்தரித்தார்கள். ஒரேயொரு தென்னங்குச்சி வைத்தார்கள். குறுக்காக இன்னொரு தென்னங்குச்சி வளைத்துக் கட்டினார்கள். கயிற்றால் சுருக்கு இட்டார்கள். நீண்ட வாலை, அதன் கீழ்ப்பகுதியில் ஒட்டினார்கள். பிறகு அதற்கு கண், வாய், மூக்கு வரைந்தார்கள். இப்படித்தான் பட்டம் உருவானது. சின்னஞ்சிறிய சிறுவர்கள் கடவுளர்களைப் போன்றவர்கள். நான் தனியன் நான் ஒரு பட்டம். எல்லாரும் இப்படித்தான் சொல்கிறார்கள் வானில் ஒரு தன்னந்தனியாக ஒரு பட்டம் பறக்கிறது ஒரு தன்னந்தனியன்களாகப் பல பட்டங்கள் பறக்கின்றன இந்த வானில் நீ தனியன் இல்லை நீங்கள் தனியன்கள் இல்லை எனப் பறவைகள், மேகங்கள் ஒன்றுசேர்ந்து கூடப் பறக்கின்றன ஒன்று, இரண்டு, மூன்று நான்கு, ஐந்து, ஆறு என எண்ணிக் கொண்டிருக்கும் போதே பட்டங்கள் பெருகுகின்றன பட்டங்கள் தம்மைத் தாமே பெருக்கியும் கொள்கின்றன. நான் ஒரு வால் அறுந்த பட்டம். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு நிறத்தில் ஒவ்வொரு வடிவத்தில் ஒரு பட்டம் தேவையாகிறது மொட்டை மாடியிலிருந்து சிறுவர்கள் பட்டம் விடுகிறார்கள் பட்டம் இல்லாத சிறுவன் ஏக்கத்துடன் பார்க்கிறான் நான்தான் உன் பட்டம் நான்தான் உன் பட்டம் என்கின்றன அநேகப் பட்டங்கள் வானில் தனிமை, துயரம், மகிழ்ச்சி, பிரிவு, கண்ணீர், காமம், அனுபவம், படிப்பு, வேலை என்று பட்டங்களுக்கு ஏதும் இல்லை. அதனால்தான், அவற்றால் வானில் ஏகாந்தமாகப் பறக்கமுடிகிறது. ஒரு பட்டம், இன்னொரு மேகத்தைக் கடக்கிறது ஒரு பருந்து, இன்னொரு பட்டத்தைக் கடக்கிறது ஒன்றை ஒன்றுகடக்கும் படிக்கட்டுகளைப்போல தொடர் மலைகளைப்போல. வான் முழுவதும் ஆயிரம் ஆயிரம் பட்டங்கள் அசைந்தாடுகின்றன. வான் முழுவதும் ஆயிரம் ஆயிரம் பாம்புகள் அசைந்தாடுகின்றன. கருப்பு, மஞ்சள், வெள்ளை, சிகப்பு, நீலம் அநேக நிறப் பட்டங்கள் மேலே மேலே ஏறிப் பறக்கின்றன அவனும் அவளும் ஒரே வண்ணத்தைப் பார்க்கிறார்கள் பெரிய ஆகிருதியுடன் சிறிய வாலுடன் ஒரு பட்டம் பறக்கிறது. சிறிய ஆகிருதியுடன் பெரிய வாலுடன் ஒரு பட்டம் பறக்கிறது. இவற்றில் எது ஆண்? பெண்? ஒரு பட்டம் அறுந்து விழும்போது ஏன் எல்லாப் பட்டங்களும் அப்படி நடுங்குகின்றன? எல்லா பட்டங்களும் வெளியில்தான் பறக்கின்றன எல்லா வால்களும் நமக்குள்தான் துடிதுடிக்கின்றன பகல் முழுவதும் ஒரு பட்டம் வெப்பத்துடன் பறக்கிறது. இரவு முழுவதும் ஒரு பட்டம் குளிர்ச்சியாகப் பறக்கிறது. நான் கண்ணைமூடும்பொழுது ஒரு பட்டம் ஒரு பருந்தாகிறது நான் கண்ணைத் திறக்கும்போது ஒரு மேகம் ஒரு பட்டமாகிறது வானம் முழுவதும் பட்டங்கள் அர்த்தமற்ற வார்த்தைகள், வார்த்தைகள், வார்த்தைகள் நான் பட்டம் விடுகிறேன் நான் சிறுவனாகிறேன் நமக்குள் ஒரு பட்டம் அசைந்து அசைந்து பறக்கிறது வளர்கிறது எப்பொழும் அது நமக்குத் தெரிவதில்லை. வானில் பறக்கும் பட்டங்களுக்கு நிழல் இருப்பதில்லை ஒரு பட்டத்தை இன்னொரு பட்டம் அறுத்துக் கீழே தள்ளும்போது அசைந் தசைந் தசைந்தாடி விழுகிறேன் நான். வானில் ஒரு பட்டம் பறந்துகொண்டிருப்பதையே பார்த்துக்கொண்டிருந்தேன். உள்ளுக்குள் ஒரு விடுதலை உணர்வு தளும்பியதை உணரமுடிகிறது. சிலவேளை மனிதனும் இவ்வாறு வானில் பறந்தபடியே காணாமல்போனால் என்ன? என்று தோன்கிறது. அறுந்த பட்டம் ஒன்று, காற்றில் போய்க்கொண்டே இருக்கிறது. சிறுவர்கள் அதை நோக்கி ஓடியடிபடியே இருக்கிறார்கள். என் ஊரும் நாடும் அவ்வளவு பிரமாதம் இல்லை. திரும்பிவராமல் போய்விடு பட்டமே! போய்விடு பட்டமே! பட்டங்களைச் சிறுவர்கள் தரை இறக்குகிறார்கள். பூமி முழுவதும் இருள் சூழ்கிறது. http://kanali.in/pattankal/
  3. ஜோஸியத்தில் நம்பிக்கை வைத்தால் சேதுராமன் ஞானியாகத்தான் தெரிவார்! இதையும் படியுங்கள்.. கொரோனா வைரஸ் தொற்று பெண்கள் ஆளும் நாடுகளில் கட்டுபாட்டில் இருப்பது எப்படி? நியூசிலாந்து முதல் ஜெர்மனி வரை, தைவான் நார்வே போன்ற பெண்களால் ஆட்சி செய்யப்படும் சில நாடுகளில் கோவிட்-19ஆல் ஏற்படும் உயிரிழப்புகள் குறைவாக உள்ளது. மேலும் அந்நாடுகளில் இருக்கக்கூடிய அரசியல் தலைவர்கள் இந்த தொற்று பரவாமல் இருக்க எடுத்த நடவடிக்கைகளை ஊடகங்களும் பாராட்டியுள்ளன. இவர்கள் தலைமைத்துவத்துக்கு ஒரு உதாரணமாக பார்க்கப்படுகின்றனர் என ஃபோர்ப்ஸில் வெளியான ஒரு செய்தி கூறுகிறது. https://www.bbc.com/tamil/global-52429393
  4. பண்பாடு, கலாச்சாரம் எல்லாம் சுருங்கிவரும் உலகில் மாறிக்கொண்டே இருக்கின்றது. பெங்களூரில் வரிசையில் பொறுமையாக நின்று மது வாங்கும் மங்கையர்களுக்கு ஒரு சல்யூட்👍🏾 அருகில் நிற்கும் ஆண்களுக்கும், பொலிஸாருக்கும் பெண்கள் மது வாங்க வரிசையில் நிற்பது ஒன்றும் புதினமாகப்படவில்லை. ஆனால் பல தசாப்தங்களாக மேற்கு நாடுகளில் புலம்பெயர்ந்து வாழுபவர்கள் பெண்கள் மது அருந்துவதையும், மது வாங்க வரிசையில் நிற்பதையும் பார்த்து அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைகின்றார்கள். இவர்கள் புலம்பெயர்ந்த காலத்தில் இருந்த கலாச்சாரமும் பண்பாடும்தான் இப்பவும் தாம் வாழ்ந்த இடங்களில் இருப்பதாக மண்ணுக்குள் தலையை புதைத்து இருக்கும் தீக்கோழிகள் போன்றவர்கள். தலைகள் மண்ணுக்குள் இருப்பதே நல்லது😜
  5. சுவி ஐயாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉
  6. விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு திருப்பு முனை கப்டன் லிங்கம்!  கப்டன் லிங்கம் சிங்காரவேல் செல்வகுமார் வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:16.12.1960 வீரச்சாவு:29.04.1986 நிகழ்வு:யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் ரெலோ கும்பலின் தாக்குதலில் வீரச்சாவு லிங்கத்தின் மறைவு விடுதலைப்போரில் திருப்புமுனை.! யாழ். மாவட்டத்தில் வைத்து ரெலோ துரோகக் கும்பலினால் கடத்திச் செல்லப்பட்ட மேஜர் பசீரும், லெப்டினண்ட் முரளியும் ஆகிய தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களை மீட்பதற்காக தலைமைப் பீடத்தினால் பேச்சுவார்த்தைக்கு அனுப்பப்பட்ட வேளை யாழ். மாவட்டம் கல்வியங்காட்டில் உள்ள டெலோவின் தலைமையகத்தில் வைத்து 29.04.1986 அன்று ரெலோ கும்பலினால் கண்ணில் சுடப்பட்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட (படுகொலை செய்யப்பட்ட) தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் கப்டன் லிங்கம் ஆகிய மாவீரரின் 34ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். லிங்கம் 16.12.1960ல் வல்வெட்டித்துறையில் பிறந்தார். இயற்பெயர் செல்வகுமார். இந்துக்கல்லூரியில், படித்துக்கொண்டிருந்த காலத்திலேயே தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆதரவாளரானார். 1980ம் ஆண்டில், 12ம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது இயக்கத்தின் உதவியாளனாகச் செயல்பட ஆரம்பித்தார். எமது விடுதலை குறித்து சுவரொட்டிகளை ஒட்டுதல், சுலோங்களைச் சுவர்களில் எழுதுதல் போன்ற வேலைகளை ஆர்வத்துடன் செய்தார். விடுதலைப் போராட்டத்தில் மக்கள் அதிகம் ஈடுபாடு காட்டாத அவ்வேளையில் விடுதலைப் புலிகளை வேட்டையாட இரகசிய பொலிசார் மோப்பம் பிடித்துக் கொண்டிருந்த வேளையில் சுவரொட்டி ஒட்டுதல் போன்ற வேலைகளைக்கூட மிகவும் சிரமங்களுக்கிடையிலும், கைதாகும் ஆபத்துக் கிடையிலும் செய்தார். 1981ல் முழுநேர உறுப்பினரான லிங்கம் யாழ்ப்பாணத்தில் அரியாலை சனசமுக நிலையத்தில் உடற்பயிற்சிகளைப் பெற்றார். சிறந்த போர்வீரனாக வரவேண்டும் என்ற ஆர்வத்தில் ‘கராத்தே’ (தற்பாதுகாப்புக்கலை) பழகி பிரவுன் பட்டிக்குத் தகுதி பெற்றார். 1982ல் தலைவர் பிரபாகரனை லிங்கம் சந்தித்தபின் பிரபாகரனின் ஆகர்ஷிப்பில் அமிழ்ந்து போனார். அவருக்கும், இயக்கத்துக்கும் விசுவாசமாக நடப்பதே தன் கடமை என உணர்ந்து இயக்க வேளைகளில் தீவிரமாக ஈடுபட்டார். 1982ம் ஆண்டில் கடைசிப் பகுதியிலும், 1983ம் ஆண்டின் முதற்பகுதியிலும் வன்னிப் பகுதியில், ஒரு காட்டில் அவருக்கு இராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டது. அங்கு சுடப்பழகிக் கொண்டார். கடுமையான பயிற்சிகளையும் மிகுந்த ஆர்வத்துடன் செய்தார். குறிதவறாது சுடுவதில் திறமையைக் காட்டினார். A.K சுரிகுழல் துப்பாக்கி அவருக்கு விருப்பமான ஆயுதம். தலைவர் பிரபாகரனுடன் போட்டி போட்டுக் கொண்டு துப்பாக்கி சுடுவதில் முனைந்து நிற்பார். 300 யார் உயரத்தில் பறந்து கொண்டிருந்த பருந்தொன்றினை தனது A.K சுரிகுழல் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தியமை அவரது கடும் திறமைக்குச் சான்றாகும். சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட பல மோதல்களில் பங்கேற்றுக் கொண்டார். தாக்குதல்களின் போது முன்னின்று சண்டையிடுவார். ஜூலை 1983ல் திருநெல்வேலியில் விடுதலைப் புலிகள் 13 இராணுவ வீரர்களைக் கொன்றொழித்த அத்தாக்குதலில் லிங்கத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது. 1984ம் ஆண்டு மதுரையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறுப்பாளராக கடமையாற்றினார். அக்காலத்தில் அரசியல் பிரச்சாரத்தை திறம்பட நடத்தி, தமிழக மக்களுடன் மிகுந்த நல்லுறவை வளர்த்துக் கொண்டார். 1985ம் ஆண்டுக் காலத்தில் தமிழீழக் காடுகளில் இருந்த பயிற்சி முகாம் ஒன்றின் பொறுப்பாளராகச் செயற்பட்டார். அக்காலத்தில் விசேஷ பயிற்சி பெற்று விடுதலைப் புலிகளின் அதிரடிப்படைப் பிரிவு கப்டன் ஆனார். தலைவர் பிரபாகரனின் மிக நெருங்கியவர்களில் ஒருவராகவும், உதவியாளராகவும், மெய்க்காப்பாளராகவும் செயற்பட்டார். தமிழ்நாடு காமராஜர் காங்கிரஸ் தலைவர் நெடுமாறனும், பின்னர் பிரெஞ்சுப் பத்திரிகையாளர் இருவரும் தமிழர்படும் துன்பங்களையும், அரச பயங்கர வாதத்தையும் அறிந்து வர தமிழீழம் சென்றபோது அவர்களின் பயணப் பொறுப்பு லிங்கத்திடமே கொடுக்கப்பட்டது. லிங்கம் தமது கடமையை பூரணமாக நிறைவேற்றினார். லிங்கம் இயக்க உறுப்பினர்கள் ஒவ்வொருவருடனும் சகஜமாகப் பழகியிருந்ததால் எல்லோரும் அவரிடம் அன்பு கொண்டிருந்தனர். கடமை என்று வரும்போது கண்டிப்பானவராகி விடுவார். அப்படிக் காட்டிக்கொள்வதற்காக முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு கடுகடுப்பாக பேச முயன்றாலும், வெகுளித்தனம் தான் வெளியே தெரியும். கடைசியாகத் கடந்த மார்ச் மாதம் தமிழ்நாட்டிலிருந்து சென்றபோது தனது தோழர்களைப் பிரிந்த வேளையில் கண்களில் நீர் வழிய விடைபெற்றார். புதியவர்கள் அக் காட்சியை ஆச்சரியத்துடன் பார்த்தனர். அவரைப் புரிந்தவர்கள் கேலி செய்து சமாதானப் படுத்தினர். கட்டையான தோற்றம், தீட்சண்யமான கண்கள்; தடிப்பான மீசை; மெதுவான, உறுதியான நடை; அவரது குட்டையான உருவம் குறித்து அவரது நண்பர்கள் கேலி செய்வார்கள். அவர்களுடைய உரையாடலுக்கிடையே ஏதாவது லிங்கம் கூற முனைந்தால் ‘நீ சின்னப் பொடியன்; அங்கால போ’ என்று வேடிக்கையாகக் கூறிச் சிரிப்பார்கள். நண்பர்களின் கேலிப் பேச்சுக்களை ரசிப்புடன் ஏற்றுக் கொள்வார். 27.04.1986 அன்று சிறிலங்காவின் கடற்படையுடன் மோதலில் ஈடுபட்ட மேஜர் அருணாவும் அவருடன் கூடச் சென்ற விடுதலைப் புலி வீரர்களும் தளம் திரும்பவில்லை. அவர்கள் அனைவரும் இறந்து விட்டதாக கருதிய தமிழீழ மக்கள் 28.04.1986 அன்று அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தமிழீழமெங்கும் தோரணங்கள் கட்டப்பட்டன. கறுப்புக் கொடிகள் பறக்க விடப்பட்டன. மேடைகள் அமைத்து அருணாவின் படத்தை வைத்து மக்கள் வீரவணக்கம் செய்தனர். ஒலி பெருக்கிகள் அவரது வீரவரலாற்றை முழங்கின. எவரது தூண்டுதலுமின்றி மக்கள் எழுச்சி பெற்று தமிழீழ விடுதலைப்புலி வீரர்களுக்கு ஏகோபித்த ஆதரவைத் தெரிவித்தது கண்டு எரிச்சலடைந்தனர் டெலோவினர். 24.04.1986ல் கடலில் இறந்த டெலோ உறுப்பினர்களின் பொருட்டு மக்கள் எதுவித அனுதாபமும் தெரிவிக்கவில்லை. 29.04.1986 அன்று ஹர்த்தால் செய்து இறந்த தமது தோழர்களுக்கு அஞ்சலி செலுத்துமாறு மக்களை பலவந்தப் படுத்தினர். இக்கட்டாய ஹர்த்தாலை மக்கள் ஏற்கவில்லை. தாம் ஒழுங்குசெய்த ஹர்த்தாலுக்கு மக்களிடமிருந்து எவ்வித ஆதரவும் இல்லாதது கண்டு ஆத்திரமடைந்தனர் டெலோவினர். தமது கோட்டையாகக் கருதிய கல்வியங்காட்டுப் பகுதியிலேயே மக்கள் விடுதலைப் புலிகளுக்கு அமோக ஆதரவளித்தது கண்டு புழுங்கிய டெலோவினர் மக்களைப் பயங்கரமாகத் தாக்கினர். அருணாவின் படம் வைத்திருந்த அஞ்சலி மேடைகளை உடைத்தெறிந்தனர். அருணாவினதும் மற்றும் தோழர்களினதும் படம் போட்ட சுவரொட்டிகளைக் கிழித்தெறிந்தனர். மக்கள் அராஜக வாதிகளினால் தாக்கப்படுவதைக் தடுக்கச் சென்ற மேஜர் பசீரும், லெப்டினண்ட் முரளியும் டெலோவால் கடத்தப்பட்டனர். கடத்திச் சென்று கொல்வது டெலோவினருக்கு கைவந்தகலை, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய ஆலாலசுந்தரம். தர்மலிங்கம் ஆகியோர் டெலோவால் கடத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர். திருச்சி அகதிகள் முகாமிலிருந்து 3 அகதிகள் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்படனர். பேச்சு வார்த்தைக்கென அழைத்து வஞ்சகமாகக் கொல்வதில் வல்லவர்கள் டெலோவினர். டெலோவின் ராணுவத் தளபதியான தாஸையும் அவரது 3 தோழர்களையும் பேச்சுவார்த்தைக்காக யாழ்ப்பான வைத்தியசாலைக்கு அழைத்துச் சுட்டுக் கொன்றனர். வைத்தியசாலைகளைத் தாக்குதலுக்குள்ளாக்குவது சர்வதேச சட்டங்களுக்கு முரணான செயல். மனித நாகரீகத்துக்கே இழுக்கானது. அங்கு நின்ற ஒரு தாதி உட்பட பல நோயாளிகளுக்கு காயம் ஏற்பட்டதுடன். நீதிபதி ஒருவரும் கொல்லப்பட்டார். மறுநாள் இப்படுபாதகச் செயலை எதிர்த்து ஊர்வலம் சென்ற பொதுமக்கள் மீது டெலோவினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் மூவர் இறந்தனர். மேஜர் பசீரும், லெப்டினண்ட் முரளியும் கொலை செய்யப்படலாம் என்று உணர்ந்த எமது தலைமைப்பீடம் பேச்சுவார்த்தை மூலம் அவர்களை விடுதலை செய்விப்பதற்காக லிங்கத்தை அனுப்பியது. சிறி சபாரத்தினமும் அவரது ஆட்களும் தங்கியிருந்த கல்வியங்காட்டில் உள்ள டெலோவின் தலைமையகத்திற்கு லிங்கம் ஆயுதமேந்தாது சென்றார். சமாதானத் தூதுவனாகச் சென்ற லிங்கம் துப்பாக்கியால் கண்ணில் சுடப்பட்டு படுபாதகமான முறையில் கொல்லப்பட்டார். லிங்கத்தின் வீரமரணம் விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. போராட்டக் களத்தில் போராடிக் கொண்டிருக்கின்ற விடுதலைப்புலிகளின் முதுகில் குத்திக் கொண்டிருந்த டெலோ மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இரு மூத்த உறுப்பினர்கள் கடத்தப்பட்டு அவர்கள் கொல்லப்பட்டு விடுவார்கள் என்ற நிலையில் விடுதலைப் புலிகளை அழிக்க முற்பட்ட டெலோமீது தற்காப்பு யுத்தம் தொடுக்க வேண்டிய கட்டாயத்துக் குள்ளானார்கள் விடுதலைப்புலிகள். நாசகார சக்திகளில் கைப்பொம்மையாக, எதிர்ப்புரட்சி அமைப்பாக, விடுதலைப் போருக்கு முட்டுக்கட்டையாக செயல்பட்டு வந்தது டெலோ. மக்கள் விரோத நடவடிக்கைகளான கோவில் கொள்ளைகள், வாகனக் கடத்தல்கள் போன்றவற்றில் ஈடுபட்டு விடுதலைப் போராட்டத்தின் மீது மக்கள் வெறுப்புக் கொள்ளும்படி செய்தனர். இஸ்லாமிய மக்களைத் துன்புறுத்தி மதரீதியான சண்டைகளை தமிழ் மக்களிடத்தில் ஏற்படுத்தியவர்கள் இவர்கள்தான். சமூக விரோதக் கும்பலை வளர்ந்து அதற்குத் தலைமை தாங்கிய கொள்கையற்ற, பொறுப்பற்ற டெலோ தலைவர்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கையின் போது சொந்த இரத்தத்தையே சிந்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. இந்த நிலைக்கு காரண கர்த்தாக்களாக இருந்த டெலோ தலைமை தண்டிக்கப்பட்டபோது மக்கள் எமது செயலை ஆதரித்தனர்; பாராட்டினர்; ஒத்துழைத்தனர். டெலோவின் அழிவினால் தமிழீழப் போராட்டம் உறுதியான ஒரு தலைமையின் கீழ் மேலும் பல மடங்கு பலம் அடைந்திருந்திருக்கிறது. தமிழீழ விடுதலைப்புலிகள் தனித்த பெரும் சக்தியாக உருப்பெற்று சிறிலங்காவின் முப்படைத் தாக்குதல்களை முறியடித்து வெற்றி கண்டது இதன் நேரடி விளைவாகும். இதனை எதிரிகள் உட்பட உலகமே ஒத்துக் கொள்கிறது. சிங்கள இராணுவத்துடன் பொருதச் சென்ற லிங்கம் துரோகிகளால் கோழைத் தனமாகச் கொல்லப்பட்டார். தமிழீழப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதற்கு காரணமாக நேற்றிருந்த லிங்கம் இன்றில்லை. நாளையும் அதற்கு அடுத்து வருகின்ற காலங்களிலும் லிங்கம் எமது வரலாற்றோடு வாழப் போகிறார். வெளியீடு :விடுதலைப்புலிகள் இதழ் https://www.thaarakam.com/news/126190
  7. தோழர் புரட்சிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉
  8. தலைவரின் திட்டத்தை, செவ்வனே செய்து முடித்த லெப் .கேணல் நிர்மா On Apr 28, 2020 “இந்தக் கோட்டையில் என்று புலிக்கொடி பறக்கின்றதோ அன்றுதான் எமக்கு விடிவு பிறக்கும்” லெப். கேணல் திலீபனின் உரையைச் சுமந்த காற்று கோட்டையிலே கம்பீரமாக பறந்து கொண்டிருந்த புலிக்கொடியைத் தழுவி வீசியது. மகிழ்ச்சி, பெருமிதம், இன்னும் இனம் புரியாத உணர்வுகள் எல்லாம் கலந்த ஒரு உணர்வில் தமிழர்கள் ஊறிப்போயினர். ‘ஜீவன்’ கானகப் பாசறை வெற்றியைக் கொண்டாடியது. லெப். கேணல் மாதவி (பின்நாட்களில் கடற்புலிகள் மகளிர் படையணியின் சிறப்புத் தளபதி) யிடம் படையியற் பயிற்சியைப் பெற்றுக் கொண்டிருந்த மகளிர் படையணியின் அந்த அணிக்கு, தாம் பயிற்சி முடித்துப் போய் அடித்துத்தான் கோட்டையைப் பிடிப்போம் என்று சொல்லிச் சொல்லி பயிற்சி எடுத்த அந்த அணிக்கு வெற்றிக் களிப்பையும் மீறி கவலை வந்தது. “எப்போது எங்களுக்குச் சண்டை?” எல்லோர் மனதிலும் இதே கேள்விதான். “நீங்கள் வரப்போறீங்கள் எண்ட பயத்திலேயே அவன் ஓடி விட்டான்.” பயிற்சியாசிரியர்கள் கேலி செய்தனர். “நாங்கள் போக முதலே இப்பிடியெண்டால், போயிருந்தால் என்ன நடந்திருக்கும்” என்று வீரம் பேசிச் சமாளித்துக் கொண்டனர் லெப். கேணல் நிர்மா முதலான பயிற்சியாளர்கள் சண்டை ஒன்று வராமலா போகும் என்று தம்மை ஆறுதற்படுத்திக் கொண்டனர். அது இரண்டாம் இரண்டாம் ஈழப்போர்க் காலம். களங்கள் விரித்திருந்தன. பலாலிப் படைத்தளம் போராளிகளால் காவலிடப்பட்டது. கட்டுவன், வீமன்காமம் போன்ற பகுதிகளில் நிர்மாவும் நின்றார். இயல்பிலேயே ஆளுமையைக் கொண்டிருந்த நிர்மா ஆரம்பத்திலேயே சிறு அணியொன்றின் இரண்டாவது பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் பெரிதும் பேசப்பட்ட எமது முதலாவது மரபு வழிமுறைப் போரான ஆனையிறவுத் தளம்மீதான ஆகாய கடல் வெளிச் சமருக்கும் அணியொன்றின் இரண்டாவது பொறுப்பாளராகவே போயிருந்தார். ஆனையிறவு எமது கையிலவிழாமல் தடுக்குமுகமாக வெற்றிலைக் கேணியில் தரையிறங்கி, ஆனையிறவு நோக்கி நகர்ந்த படையினரை வழிமறித்து வழிமறித்து நடந்த சண்டைகளின்போது புல்லாவெளியில் காயமடைந்தார். காயம் ஆறியதும் கண்ணி வெடிகள் தொடர்பான சிறப்புப் பயிற்சியில் கண்ணிவெடி அணியாகப் பயிற்சி முடித்து எமது அமைப்பின் தலைவர் திரு. வே. பிரபாகரன் அவர்களால் வழங்கப்பட்ட சின்னங்களுடன் பணி செய்வதற்காய் வெளியேறினார். அதன் பின் தொடர்ந்த கஜபார எதிர் நடவடிக்கை (1992), பலவேகய – 02 எதிர் நடவடிக்கை (1992) என்றவாறாக அவரின் களங்கள் தொடர்ந்தன 1992இல் தொண்டமானாற்றி லிருந்து ஒட்டகப்புலம் வரையான 150 காவலரண்கள் தகர்ப்பு நடவடிக்கைக்கு முன்னரான ஒழுங்கமைப்புக்களின்போது பகல்நேர அவதானிப்புக்கென ஒரு பகுதி நிர்மாவிடம் கொடுக்கப்பட்டிருந்தது. இரவு நேரங்களில் எமது வேவு அணிகளுடன் முன்னகர்ந்து, தாக்குதல் அணிகள் உள்நுழையவுள்ள பாதைகளில் கிடக்கும் எதிரிகளின் கண்ணிகளை அகற்றுதல், பகலில் தொடர்ச்சியாக மழையில் நனைந்து வெயிலில் காய்ந்தவாறு அவதானித்தல், மறுபடி இரவு கண்ணிவெடி அகற்றல் என்று கடைசி ஐந்தாறு நாட்களிலும் ஓய்வேயில்லாத கடும் பணி இடையில் நிர்மாவின் அணியை வந்து பார்த்த நிர்மாவின் பொறுப்பாளர், எல்லோரையுமே பின்னணிக்குப் போய்க் குளித்துவிட்டு வருமாறு பணித்தார். பகல் நேர அவதானிப்புத்தானே என்று முழுப் பேருமே போகாமல் தன்னோடு ஒருவரை நிறுத்திக்கொண்டு ஏனையவர்களைக் குளிக்க அனுப்பினார் நிர்மா. சண்டை தொடங்க இன்னும் ஓரிரண்டு நாட்களே இருக்கும் போது தமது கவனக்குறைவால் ஏற்படப்போகும் சிறு தவறுகூட நடவடிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் அவர் மிகக் கவனமாகவே இருந்தார். நிலைமை சிக்கலில்லை என்பதை உறுதிப்படுத்தும் பொறுப்பு நிர்மாவுடையது. பலாலி விமானத் தளப் பகுதியினுள் பகலில் நடமாட்டம் கூடுதலாக இருப்பதால், சாப்பிடு வதற்குக்கூட மரத்தை விட்டு இறங்காமல் தொலைநோக்குக் கருவியால் அவதானித் தவாறே இருந்தார். சண்டை தொடங்கும்போது நிர்மாவுக்கு பின்னணியில் நின்று காயக்காரர்களை வெளியேற்றும் பணி கொடுக்கப்பட்டிருந்தது. நேரடியாகச் சண்டையில் தன் பங்கு இல்லை என்பது நிர்மாவால் ஏற்றுக்கொள்ளமுடியாததாக இருந்தது. இருளில் நகர்ந்து கொண்டிருந்த அணிகளுடன் சேர்ந்து நகரத் தொடங்கிய நிர்மாவை அவரின் பொறுப்பாளரின் கூர்மையான விழிகள் கண்டுகொண்டன. உடனடியாகவே ஆளைப் பின்னணிக்கு அனுப்பி விட்டார். சண்டை தொடங்கி முதற்தொகுதி காயக்காரர்களைப் பின்னணிக்கு நகர்த்திக கொடுத்து விட்டு காவும்குழு மறுமுறை முன்னணிக்கு நகர்ந்தபோது நிர்மா அவர்களோடு இணைந்து கொண்டார். 1993 இல் ஆனையிறவிலிருந்து ‘யாழ்தேவி’ நடவடிக்கையில் திருப்பி அனுப்பப்பட்ட வழியெங்கும் படையினர் விதைத்துச் சென்ற கண்ணிகளை அகற்றும் பணியில் நிர்மாவின் அணியும் ஈடுபட்டது. கண்ணிகளை அகற்றும்போது, வெடிக்காமல் விழுந்து கிடந்த எறிகணை களையும் அகற்றினர். எறிகணைகளைக் கையாளுவது வேறு தனியான அணியினரின் வேலையாக இருந்தபோதும், அது மக்கள் வாழ்ந்த பகுதி என்பதால் திடீரென வருகின்ற மக்களுக்கு ஏற்படக்கூடிய விபத்துக்களைத் தவிர்க்க முயன்றார் நிர்மா. தன் அணியினரைக்கூட அனுமதிக்காது தானே எறிகணைகளை அகற்றினார். வேலைகளைப் பார்வையிட வந்த பொறுப்பாளர் நிர்மாவை மிகவும் கண்டித்து, “வெடிக்காமல் கிடக்கும் எறிகணைகளை எடுக்க உங்களுக்கு அனுமதியே இல்லை” என்று கடுமையாகச் சொல்லும் வரை நிர்மா எறிகணைகளையும் சேர்த்தே அகற்றினார். அதன் பின் எறிகணைகளருகே அடையாளத்துக்காகத் தடிகளைக் குத்தி விட்டு, எழுதுமட்டுவாளிலிருந்து கறுக்காய் வரையான பகுதிக்குள் கண்ணிவெடிகளை அகற்றினார். ஆனால் அந்த வேலை முடிந்ததும் தானாகவே பொறுப்பாளரிடம் கேட்டு, வெடிக்காத எறிகணைகளை அகற்றும் பயிற்சியைப் பெற்றுக்கொண்டார். இதுதான் நிர்மா. தனக்குத் தெரியாது என்று எதையுமே விட்டு வைக்க எப்போதுமே அவர் விரும்பியதில்லை இதன் பின் பூநகரிப் படைத்தளம் மீதான “தவளை” நடவடிக்கையில் பங்கு கொண்டு, அங்கும் கண்ணிவெடிகளை அகற்றும் பணி செய்து இவரது பணியைப் பல களங்கள் வேண்டி நின்றன. “சூரியக்கதிர் – 01” எதிர் நடவடிக்கைக் களமுனையில் கண்ணிகளை விதைக்கும் பணியை இவரின் அணி செய்தது. அது மிகவும் நெருக்கடி மிகுந்த களம். ஒவ்வொரு நாளும் களமுனை இடம் மாறிக்கொண்டேயிருக்கும். சண்டையின் நிலைமைக்கேற்ப, சண்டையணிகளின் நகர்வுக்கேற்ப நிலக்கண்ணிகளை விதைப் பதும், வரைபடத்தில் குறிப்பதும், அணிகள் இடம் மாறும்போது அகற்றுவதும், மறுபடி விதைப்பதுமாக மிகச் சிரமமான பணி அது. கண்ணிவெடி அணியினரின் கைகள் காய்த்து விட்டிருந்தன. இடர்கள் நிறைந்த “சூரியக்கதிர் – 01” களமுனையில் நிர்மா காயமடைந்தார். காயம் ஆறிய பின் புதிய அணி ஒன்றுக்கு கண்ணிவெடிகள் பற்றிய பயிற்சிகளை வழங்கும் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கையில், சூரியக் கதிர் – 02 களம் நிர்மாவை அழைத்தது. மூன்றாம் அங்குலமாகத் தடவி ஆயிரம் ஆயிரம் கண்ணிகளை அகற்றி, பயமின்றி மக்கள் நடமாட வழிவகுத்த பெரும் பணியில் நிர்மாவின் பங்கு முக்கியமானது. வெற்றி நிச்சயம் எதிர் நடவடிக் கைச் சமர்முனையில் கண்ணி வெடிப் பிரிவின் பகுதிப் பொறுப்பாளராகப் பணியாற்றிய கடினமான அந்த நாட்கள்.. “ஓயாத அலைகள் – 02” கிளிநொச்சி மீட்பு நடவடிக்கையில் ஒரு வரையறுக் கப்பட்ட பகுதியின் கண்ணிவெடிப் பொறுப்பாளராகக் கடமையாற்றினார். எறிகணை வீச்சிலே தலையில் காயமடைந்தார். தொடர்ந்தும் எறிகணை வீச்சிலேயே நிர்மா காயமடைவதைத் தோழிகள் கேலி செய்தார்கள். “எறிகணைக்கு என்மேல் அத்தனை அக்கறை. அதுதான் தேடிவருகிறது.” என்று சிரித்தார் நிர்மா. விடுதலைப் புலிகள் மகளிர் படையணியோடு இருந்த கண்ணிவெடி அணி, பின் மாலதி படையணியின் கண்ணிவெடிப் பிரிவாகி, பின் 1999.04.28 இல் லெப். கேணல் பொன்னம்மான் கண்ணிவெடி மகளிர் அணியாகப் புதுத்தோற்றம் பெற்ற போது நிர்மா அந்த அணியின் 2வது பொறுப்பாளராக எமது தலைவர் திரு. வே.பிரபாகரன் அவர்களால் நியமிக்கப்பட்டார். லெப். கேணல் பொன்னம்மான் கண்ணிவெடி அணியை விரிவாக்கம் செய்யவென வந்திருந்த புதிய போராளி களின் தொடக்க படையியற் பயிற்சியையும், மேலதிக சிறப்புப் பயிற்சியையும் நேரடிப் பொறுப்பெடுத்துச் செய்தார். இன்று களமெங்கும் பரந்து நிற்கும் கண்ணிவெடி மகளிர் அணியின் அத்திவாரம் சின்னச்சின்ன விடயங்களில் கூட கவனமெடுத்து நிர்மா போட்ட அத்திவாரமே. பயிற்சி முடித்த புதிய அணி பணி செய்யப் புறப்பட்ட போது நிர்மா கண்ணிவெடி மகளிர் அணியின் நிர்வாகப் பொறுப்பாளராகப் பணி புரிந்தார். அலை மூன்றில் நாம் ஏறி, வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சிக்குள் படை நகர்த்தி எம் பலத்தை பகைவருக்கு உணர்த்திக் கொண்டிருந்த நாட்கள் அவை. களங்கள் அகல விரிந்திருந்தன. பளைப் பகுதியில் கண்ணிவெடி சார்ந்த வேலை களுக்குப் பொறுப்பாக நிர்மா நின்றார். ஓயாத அலைகள்- 01, 02, 03, 04 எல்லாவற்றிலுமே நிர்மாவின் பங்கு கணிச மாக இருந்தது. நாங்கள் அமைதியாக இருந்தோம். பகைவரோ பரபரப்பாக இருந் தனர். ஒருதலைப்பட்ச போர் நிறுத்தத்தை நான்கு மாதங்கள் வரை பொறுமையாகநீடித்தோம். பகைவரோ போர் நிறுத்த மீறல்களிலேயே காலத்தை நீடித்தனர். போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த அந்த நாளில், பகைவரின் பெரும் எடுப்பிலான முன்னேற்ற நடவடிக்கையைத் தடுப்பதற்குத் தயாராக நாம் நின்றோம். அந்நிய நாட்டு நிபுணர்களின் ஆலோசனையோடும், அவர்கள் வழங்கிய ஆயுத, உபகரண உதவிகளோடும் சிறிலங்காப்படைத்தரப்பினர் ஆனையிறவில் சிங்கக் கொடி பறக்கவிடும் கனவோடு செய்த தீச்சுவாலை- 01 படை நடவடிக்கையை எமது பெரும் பலத்தால் மூன்றே நாளில் அணைத்தோம். படையினர் பலர் எறிகணைகளாலும் கண்ணிவெடிகளாலும் பெருமளவில் கொல்லப்பட்டதாகவும், காயமடைந்ததாகவும் படை அதிகாரிகள் தெரிவிக்கும் அளவுக்கு, களத்திலே நிர்மாவின் பங்கு பாரியது. இப்படி இப்படியெல்லாம் கண்ணிகளை விதைக்கு மாறு எமது தலைவர் திரு. வே. பிரபாகரன் அவர்கள் தயாரித்த திட்டத்தை, தனது அணியினரை வைத்துச் செவ்வனே செய்து முடித்த நிர்மா, “எறிகணைகளாலேயே எப்போதும் காயமடைகின்ற நிர்மா, “எறிகணைக்கு என்மேல் அவ்வளவு அக்கறை . அதுதான் தேடி வருகிறது” என்று சிரிக்கின்ற நிர்மாவைத்தேடி அந்த எறிகணை, கடைசி எறிகணை வந்தது. “தீச்சுவாலை- 01” எதிர் நடவடிக்கை வெற்றிகரமாக முடிவடைந்து, அணிகள் மீளமைக்கப்பட்டு, எரிந்த வேலிகளும் சிதைந்த காப்பரண்களும் போராளிகளால் திருத்தப்பட்டுக் கொண்டி ருந்த அந்த வேளையில் இந்தச் செய்தி வந்தது. நிர்மா எங்களோடில்லை. கிளி. சென்திரேசா மகளிர் கல்லூரி தனது பழைய மாணவியை, ஒரு கூடைப் பந்தாட்ட வீராங்கனையை இழந்தது. இழப்புக்கள் எப்போதுமே துயரத் தைத் தருபவை. ஆனால் உலகத்தில் எந்த ஒரு நாடும் இரத்தம் சிந்தாமலும், ஈகங்கள் புரியாமலும் விடுதலை பெற்றதில்லை. எமது தலைவர் அவர்கள் சொல் வது போல் மாவீரர்களது அற்புதமான இலட்சியவாழ்க்கை – அவர்களது அவர்கள் அனுபவித்த துன்ப துயரங்கள், ஏக்கங்கள், அவர்கள் கண்ட கனவுகள்- இவை எல்லாவற்றினதும் ஒட்டு மொத்த வெளிப்பாடாகவே எமது போராட்ட வரலாறு முன்னேறிச் செல்கின்றது. நினைவுப்பகிர்வு: செந்தூர நிலா. -சுதந்திரப்பறவைகள் 2002 https://www.thaarakam.com/news/126163
  9. நாட்டுப்பற்றாளர் தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவு வணக்க நாள் இன்றாகும். Last updated Apr 19, 2020 தமிழீழத்தில் அமைதிப்படை என்ற போர்வையில் பாரதம் புரிந்திட்ட அடக்குமுறைக்கு எதிராக 19.03.1988 இருந்து 19.03.1988 வரையிலான சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் (அகிம்சை வழியில்) தொடர்ந்து உயிர் நீத்த நாட்டுப்பற்றாளர் தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் 32ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும். தமிழீழத்திற்கு அமைதிப் படையின் போர்வையில் வந்த இந்தியப் படைகள் நாளும் தன் அடக்குமுறைகளை கட்டவிழ்த்து, எத்தனையோ கொடுமைகளை விளைவித்தது. எம் தேசத்தின் உரிமைக்காக குரல் கொடுப்போரை பாரதம் அன்றும் இன்றும் ஏளனமாகவே பார்த்தது அது எத்தனையோ உயிர்களையும் பறித்தது. உலகிற்கு அகிம்சையை போதித்த நாடு என்று கூறிக்கொண்டு அடாவடித்தனமான செயல்களில் ஈடுபட்ட இந்திய அரசுக்கு எதிராகவும் அதன் அமைதி காக்கும் படைக்கு எதிராக உண்ணா நோன்பிருந்து உயிர் தியாகம் செய்தவர் அன்னைபூபதி. * இந்திய அமைதிப்படை ஈழத்தில் நடத்தும் போர் நிறுத்தப்பட வேண்டும். * விடுதலைப்புலிகளுடன் பேசி பிரச்சனைகளுக்கு தீர்வு காணவேண்டும். எனும் கோரிக்கைகளை முன் வைத்து 1988 ம் ஆண்டு மாசி மாதம் 16 ஆம் திகதி அமிர்தகழி மாமாங்கேஸ்வர் கோயிலில் அன்னம்மாவின் உண்ணாநோன்புப் போராட்டம் தொடங்கியது. ஆனால் படையினர் உண்ணாவிரத மேடையில் இருந்தவரைக் கடத்திச் சென்றதில் அவரால் தனது போராட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. இந்த நிலையில் தான் பூபதியம்மாள் தன் போராட்டத்தை 1988 ம் ஆண்டு பங்குனி மாதம் 19 ஆம் திகதி தொடங்கினார். முன்னெச்சரிக்கையாக “சுயவிருப்பின் பேரில் உண்ணாவிரதமாயிருக்கிறேன். எனக்கு சுயநினைவிழக்கும் பட்சத்தில் எனது கணவனோ, அல்லது பிள்ளைகளோ என்னை வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சிக்கக் கூடாது” எனக் கடிதம் எழுதி வைத்தார்.பத்துப்பிள்ளைகளுக்கு, தாயார் இவர்.நீர் மட்டும் அருந்தி சாகும் வரை உண்ணாநோன்பு இருந்தார்.இடையில் பல தடங்கல்கள் வந்தன. உண்ணாவிரதத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களையும், அன்னை பூபதியின் பிள்ளைகள் சிலரையும், இந்திய இராணுவம் கைது செய்தது. ஆயினும் போராட்டம் நிறுத்தப்படவில்லை. அவர் உறுதியாகப் போராட்டத்தைத் தொடர்ந்தார். கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில் சரியாக ஒரு மாதத்தின் பின் 19.04.1988 தமிழீழ காற்றில் கலந்து வரலாறாகிச் சென்றார். அந்த இலட்சியத் தாயின் நினைவாக சித்திரை மாதம் 19ம் திகதியை தமிழீழ தேசியத்தலைவர் தேசிய நாட்டுப்பற்றாளார் தினமாக பிரகடனம் செய்தார். தாயக விடியலில் தாகம் கொண்டு பல சர்ந்தப்பங்களில் தங்கள் உயிரை அர்பணித்து அனைத்து நாட்டுப்பற்றாளர்களுக்கும், மாமனிதர்களுக்கும், வெளித் தெரியாது தேசவிடுதலைக்கு உழைத்த மக்களுக்கும் எமது வீரவணக்கங்கள்…! “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” https://www.thaarakam.com/news/124232
  10. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலாமதி அக்கா💐💐💐 அண்மையில் பிறந்தநாளைக் கொண்டாடிய பாஞ்ச் ஐயாவுக்கும் வாழ்த்துக்கள்🎉🎉🎉
  11. பண்பின் உறைவிடம் லெப் கேணல் கலையழகன்…..! Last updated Apr 18, 2020 கலையழகன் என நினைக்கும் போது, என்றும் மாறாத புன்னகை பூத்த முகமே எல்லோருக்கும் நினைவிற்கு வரும். கள்ளம் கபடமற்ற சிரிப்பும், எல்லோருடனும் அன்பாக, பண்பாக பழகும் தன்மையும், அனைவரையும் உபசரிக்கும் இயல்பும் அவனது இலட்சணங்கள். ஆனால் அவனுக்குள் இருந்த அற்புதமான திறமையும், ஆழமான ஆளுமையும், பன்முகத்தன்மையும் பலருக்குத் தெரியாது. குழந்தைத்தனமான முகத்திற்கு சொந்தக்காரன் பல்வேறு பொறுப்புக்களை தோளில் சுமந்து திரிந்த ஒரு அற்புதமான போராளி என்பது சிலருக்கும் மட்டும் தெரியும். தொடக்கப் பயிற்சியை முடித்துக்கொண்ட கலையழகன், 1994ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேசியத்தலைவர் அவர்களால் தொடங்கப்பட்ட கேணல் கிட்டு அரசறிவியல் கல்லூரி மாணவனாக இணைத்துக் கொள்ளப்பட்டான். தலைவர் அவர்களின் எண்ணத்திற்கு ஏற்ப அரசறிவியலும், படையப்பயிற்சியும் இக்கல்லூரி மாணவர்களிற்கு மாறிமாறி வழங்கப்பட்டது. அக்கல்லூரியின் முதன்மை மாணவர்களில் ஒருவனாக மாவீரன் கலையழகன் திகழ்ந்தான். பேச்சாற்றல், நுட்பமாகப் பதில் கொடுக்கும் தன்மையினை கல்லூரியில் அவன் வளர்த்துகொண்டான். அங்கு அவனது ஒழுக்கம், கட்டுப்பாடு, மற்றவர்களோடு பழகும் தன்மை, எல்லோருக்கும் உதவும் பண்பு, நேர்மை என்பன அவனைத் தூய்மையான போராளியாக வெளிச்சம் போட்டுக்காட்டியது. நான்கு வருடங்களிற்கு மேலாக அரசறிவியல் கற்ற கலையழகன் தேசியத்தலைவர் அவர்களது கருத்துரைகளினாலும், தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் தொடர் வகுப்புக்களினாலும் முழுமையான போராளியாகப் புடம் போடப்பட்டான். இந்தக்காலப் பகுதியில் கொமாண்டோப் பயிற்சியிலிருந்து கனரகப்பீரங்கிப் பயிற்சி வரைக்குமான பல்வேறு வகையான படையப்பயிற்சிகளை அவன் பெற்றான். 1995ஆம் ஆண்டு மாதகலில் ஆரம்பித்த அவனது போர் நடவடிக்கைகள் ரிவிரச, சத்ஜெய, ஜெயசிக்குறு, ஓயாத அலைகள்-03, ஆனையிறவுச்சமர் என நீண்டது. அண்மைய முகமாலை தாக்குதல் களத்திலும் அவன் பங்குபற்றியிருந்தான். இக்கல்லூரியின் முதலாவது அணி மாணவர்களின் பட்டப்படிப்பு நிறைவடைந்த போது, மிகச்சிறந்த மாணவர்கள் சிலரில் ஒருவனாக கலையழகன் தெரிவு செய்யப்பட்டு தலைவர் அவர்களினால் சிறப்புப் பரிசும் “திறவோர்“ எனும் பட்ட வழங்கி மதிப்பளிக்கப்பட்டான். அரசியல் அறிவும், படைய அறிவும் ஒருங்கே இணைந்து தலைவர் அவர்கள் எதிர்பார்த்த பல்துறைசார் போராளியாக அவன் இந்தக் காலகட்டத்தில் வளர்ந்திருந்தான். கல்லூரிக் காலங்களில் பகுதி நேரமாக கலையழகன் தொலைத்தொடர்பாளனாக செயற்பட்டான். பின்பு சிறிது காலம் மொழிபெயர்ப்பு அறிவினை பெறுவதற்கான கல்வியையும், பாதுகாப்பு பயிற்சியையும் பெற்ற கலையழகனுக்கு தேசியத்தலைவர் அவர்களைப் பற்றிய வரலாற்றுப் பதிவுகளை ஆவணமாக்கும் பணியில் ஈடுபடும் வாய்ப்பு கிடைத்தது. இவ்வரிய வாய்ப்பினை தனது வாழ்நாளில் தனக்கு கிடைத்த பெரும் பேறாகவே அவன் கருதியிருந்தான். கால ஓட்டத்தில் அவனுக்கு வேலைச்சுமை அதிகரித்த போதும் தலைவர் அவர்களின் வரலாற்றை ஆவணமாக்கும் பணியினை தானே செய்யவேண்டும் என்ற ஆர்வமும் துடிப்பும் அவனுக்கிருந்தது. தலைவர் அவர்களது தொடக்க கால நிகழ்வுகளை தேடி எடுத்து தொகுப்பதிலும், தலைவர் அவர்களின் தொடக்க காலத் தோழர்களிடமும், ஆதரவாளர்களிடமும் தகவல்களைத் திரட்டி அதனைச் சரிபார்த்து ஆவணமாக்குவதிலும் அவன் அதிக ஆர்வம் செலுத்தியிருந்தான், வேறு சில தேசப்பற்றாளர்களுடன் சேர்ந்து கலையழகனின் கடும் உழைப்பின் பயனாகவே “Leader for All Season” என்ற தலைவர் அவர்களைப்பற்றிய புகைப்பட ஆவணநூலும், “விடுதலைப் பேரொளி” என்ற தலைவர் அவர்களைப்பற்றிய தொகுப்பு நூலும் வெளிவந்தன. செஞ்சோலை, காந்தரூபன் சிறார்களுக்கான எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமைவதற்காக, அவர்களிற்கான அழகான, அமைதியான இருப்பிடங்களை அமைத்துக்கொடுக்க வேண்டுமென்ற தலைவர் அவர்களின் பெருவிருப்பத்தினை நிறைவேற்றும் பொறுப்பு கலையழகனிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தப்பணியை விரும்பி ஏற்றுக்கொண்ட கலையழகன் அதற்காக கடுமையாக உழைத்தான் . புலம் பெயர்ந்த மக்கள், அமைப்புக்கள், மத்தியில் இதற்கான நிதி வளங்களை திரட்டுவதற்காக கடும் முயற்சியெடுத்தான். ஏராளமானோரை அவன் சந்தித்தான், கதைத்தான், திட்டங்களை வழங்கினான். இறுதியில் அவன் இந்தப்பணியில் முழுமையாக வெற்றியடைந்திருந்தான். செஞ்சோலை – காந்தரூபன் சிறார்களுக்கான இருப்பிடங்கள் அமைக்கப்பட்டு தலைவர் அவர்களால் அவை திறந்து வைக்கப்பட்டமை அவனுக்குப் பெரும் மன மகிழ்வையும் திருப்தியையும் தந்திருந்தது. அவனது ஆன்மா அன்று நிறைவடைந்திருந்தது. இதே போலவே நவம் அறிவுக்கூட போராளிகளிற்கான அமைவிடத்திற்கும் கலையழகனின் பங்கு கணிசமானதாக இருந்தது. எமது தேசத்திற்கான வெளிநாட்டுத் தொடர்புகளை, அனைத்துலக பணிகளை செய்வதற்கான தயார்ப்படுத்தலுக்காக கலையழகன் பல்வேறு நாடுகளிற்கு அனுப்பப்பட்டான். வெளிநாட்டுப் பயணமானது அவன் கல்லூரியில் கற்ற பல விடயங்களை நேரில் பார்த்து அறியக்கூடியதாக இருந்தது. புலம்பெயர்ந்து வாழும் எமது மக்களின் தாயகப்பற்று, விடுதலையுணர்வு, வாழ்க்கைநிலை என்பவற்றை அவன் அறிந்து கொண்டான். எமது பொறுப்பாளர்கள், செயற்பாட்டாளர்களின் கடின உழைப்புப் பற்றியும், எதிர் கொள்கின்ற பிரச்சினை குறித்தும் இங்கு சகதோழர்களிற்கு எடுத்துரைத்தான். அதே நேரம் தேசியத்தலைவர், விடுதலைப் போராட்டம் குறித்த தெளிவான கருத்துக்களை அவன் செல்லுமிடமெல்லாம் முன்வைத்தான். நட்பு ரீதியாக நிறையப் பேருடன் உறவாடி தொடர்புகளைப் பேணிவந்தான். புலம்பெயர்ந்த எமது உறவுகளின் தாயகம் தொடர்பான பிரச்சினைகளை அந்த மக்களின் நிலையில் நின்று பார்க்க வேண்டுமென்று வலியுறுத்தியவன். குறிப்பாக கனடாவில் வாழும் தமிழர்களிற்கான தாயகப்பணிகளை ஒருங்கிணைப்பதில் அவன் கடுமையாக உழைத்தான். புலம்பெயர் தமிழர்களின் பலத்தை, வளத்தை ஒருங்கிணைப்பதில் அவன் ஆற்றிய பணி அளப்பரியது. அவை வரலாற்றில் பொறிக்கப்படவேண்டியவை. 2006ம் ஆண்டு நடுப்பகுதியில் கலையழகன் அனைத்துலகத் தொடர்பக துணைப்பொறுப்பாளராக நியமிக்கப்பட்டான். இதற்கு இவனது பண்பும், ஆளுமையும், விடயங்களை இலகுவாகக் கையாளும் ஆற்றலும் காரணமாக இருந்தன. சக போராளித் தோழர்களை மதித்து, அவர்களோடு மனம் திறந்து பழகி, அனுசரித்து, அவர்களது தேவைகளை விளங்கி பூர்த்தி செய்யும் பக்குவம் அவனுக்கிருந்தது. போராளிகளை வளர்க்க வேண்டும், வேலைகளுக்குள்ளால் உள்வாங்க வேண்டும், நல்ல நிலைக்கு கொண்டு வரவேண்டுமென்று அவன் விரும்பிச் செயற்பட்டான். அவனை விட வயதில் கூடியவர்களும், அனுபவசாலிகளும் இருக்குமிடத்தில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தன்மை அவனிடமிருந்தது. அந்தக் கவர்ச்சி மிக்க ஆளுமை எல்லோரையும் அவன் பால் ஈர்த்தது. குறுகிய காலத்தில் அவன் மிக வேகமாக வளர்ந்தான். அவனது ஆற்றல், ஆளுமையின் வீச்சு, முதிர்ச்சியடைந்த தன்மை என்பவை மூலம் ஒரு பெரிய பொறுப்பைத் தனியே செய்யக்கூடிய நிலையினை அவன் அடைந்திருந்தான் . அவன் நல்லவனாக மட்டுமல்லாமல் வல்லவனாகவும் திகழ்ந்தான் என்பது தான் உண்மை. இவ்வாறான நேரத்தில் தான் 18.04.2007 அன்று எதிர்பாராத வெடிவிபத்தில் கலையழகன் வீரச்சாவு என்ற செய்தி வந்தவுடன் நாம் எல்லோரும் துடிதுடித்துப் பதறிப்போனோம். ஆழிப்பேரலை வந்து தாக்கியது மாதிரியான உணர்வு, பூமியதிர்ந்து நிலம் பிளந்து போன மாதிரியான நிலை, இதயத்தை யாரோ சம்மட்டியால் அடித்த அதிர்வு. வார்த்தைகளில் வடிக்க முடியாத துயரமும் வலியும். வேதனைச்சகதியில் சிக்கித் தவிக்கின்ற சோகம் . ஏன் இவ்வளவு வேகமாக எமை விட்டுப்பிரிந்தான் என்று மனதில் ஆழமான வலியுடன் எழும்பும் வினா. கலையின் இழப்பின் பெறுமதி, இழப்பின் இதயவலி, அதன் ஒட்டுமொத்தப் பரிமாணம் எனக்கே முழுமையாகத் தெரிந்திருந்தது. என்னையே முழுமையாகத் தாக்கியிருந்தது. அவன் அழகானவன், பண்பானவன், பழகுவதற்கு இனிமையானவன், கள்ளம்கபடமற்ற வெள்ளையுள்ளம் படைத்தவன். ஆளுமையெடுத்து செயற்கரிய பணிகளைச் செய்தவன். முதல் நாள் உயிரோடு வலம் வந்தவனை மறுநாள் விதைகுழியில் விதைத்துவிட்டு வந்தோம். இது எவ்வளவு துயரமாக, கொடுமையாக இருந்தது. ஆனாலும் எவ்வளவு இழப்புவரினும், இடர்வரினும் உறுதி தளரோம். லெப். கேணல் கலையழகனது தலைவர் மீதான பற்றும் பாசமும், விடுதலை வேட்கையும், தேசிய உணர்வும் கொண்ட எண்ணங்களை நெஞ்சினில் சுமந்து அவனது இலட்சியக் கனவை நனவாக்குவோம் என அவனது விதைகுழி மீது சத்தியம் செய்கின்றோம். நினைவுப்பகிர்வு:- வீ .மணிவண்ணன் (காஸ்ரோ) அனைத்துலக தொடர்பகப் பொறுப்பாளர், தமிழீழ விடுதலைப்புலிகள் – தமிழீழம். https://www.thaarakam.com/news/124081
  12. தமிழ்த்தாய் நாட்காட்டியில் ஜனவரி, பெப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, யூன், யூலை, ஆகஸ்ட், செப்டெம்பர், ஒக்ரோபர், நவம்பர், டிசெம்பர் என்றுதான் உள்ளது.
  13. ஓட்டுக்குழு கருணா சதிவலையில் சிக்குண்ட லெப். கேணல் நீலன் என்றும் அழியாத சுவடு மட்டு – அம்மாறை மாவட்ட புலனாய்வுத்துறை துணைப் பொறுப்பாளர் லெப். கேணல் நீலன் வீரவணக்க நாள் இன்றாகும். தென் தமிழீழத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒட்டுக்குழு கருணாவின் துரோகத்தனத்தால் துரோகிகள் மேற்கொண்ட தீய செயல்களால் 12.04.2004 அன்று துரோகி கருணாவால் சுட்டபட்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட புலனாய்வுத்துறை துணைப் பொறுப்பாளர் லெப். கேணல் நீலன் உட்பட ஏனைய போராளிகளின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலை போராட்டத்தின் கறுப்பு பங்கங்களில் முதல் பக்கமாக பெயர் கூட குறிப்பிட முடியாத துரோகங்கள் சில நிறைந்துள்ளன. இந்த துரோகக் கும்பலின் சதியில் சிக்குண்டு கடந்த 12.4.2004 அன்று படுகொலை செய்யப்பட்டவர் லெப்டினன்ட் கேணல் நீலன் ஆவார். சீனித்தம்பி சோமநாதன் எனும் இயற்பெயரையும் மட்டக்களப்பு ஆரையம்பதியை சொந்த இடமாகவும் கொண்டவர். தமிழ் தேசியத்தின் பால் அவர் கொண்டிருந்த ஈர்ப்பும் தலமையின் மேல் அவர் கொண்டிருந்த அழியாததும் அசைக்க முடியாததுமான விசுவாசம் அவர் மட்டக்களப்பில் வீரச்சாவடைந்தபோதும் விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் அவரது வித்துடலை விதைக்கவைத்தது. இன்றைய நாள் லெப்டினனட் கேணல் நீலன் அவர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்து வீரவணக்கத்தை செலுத்தும் ஒரு நாள் ஆகும். தமிழீழ தேசியத்தையும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் நேசிக்கின்ற அனைவரும் இன்றை நாளில் நீலன் அவர்களுக்கு வணக்கத்தை செலுத்துகின்றோம். விடுதலைப்போராட்டத்திற்கும் தமிழினத்திற்கும் அவமானத்தை தேடித்தந்த மாபெரும் அழுக்காக, மறையாத கறையாக, களையாக, இருந்து வரும் சிலர் தங்கள் வரலாற்று தவறுகளையும் தங்களின் குற்றங்களையும் கழுவ மாவீரர்களின் குருதியை பாவித்தமை என்றும் அழியாத சுவடு ஆகும் அவ்வாறான ஆயுதத்தின் வெந்தணலில் அகப்பட்டவர் லெப்டினன்ட் கேணல் நீலன் அவர்கள். அவர் மட்டும் அல்லாமல் வேறு பல போராளிகளும் இந்த சுழியில் அகப்பட்டுக்கொண்டார்கள். இவ்வாறு மட்டக்களப்பு மாவட்டத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட ஏனைய போராளிகளுக்கும் இன்றைய தினத்தில் நாம் வீரவணக்கத்தை செலுத்துகின்றோம். இவர்களுக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் தமது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றனர் என்றென்றும் மாவீரர்கள் தியாகம் நிலைத்திருக்கும். தாயகம் மலரும். கனவு நனவாகும் விசேட அணி தமிழீழ விடுதலைப்புலிகள் புலிகளின் முக்கியஸ்தர் நீலனின் படுகொலையில் துலங்கும் உண்மைகள். 01.03.2004 அன்றிலிருந்து கருணாவால் தடுத்துவைக்கப்ட்டிருந்த லெப்.கேணல் நீலன் அவர்களை கருணா தப்பி ஓடும்வேளை கருணாவின் மருதம் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வைத்து சுடப்பட்டுள்ளார் எனவும் இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் வழமையான பணிகளில் ஈடுபட்டிருந்த புலனாய்வுத்துறைப் போராளிகள் பிரத்தியேகமான சந்திப்புக்கென 01.03.2004 அன்று மீனகம் முகாமிற்கு கருணாவிடம் அழைக்கப்பட்டிருந்தனர். மீனகம் முகாமிற்கு கருணாவால் அழைக்கப்பட்ட மேற்படி போராளிகள் நேரடியாக விசாரிக்கப்பட்டிருந்ததுடன் நீலன் அவர்கள் 01.03.04 அன்றிலிருந்தே சக போராளிகளிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டதுடன் அவர் விலங்கிடப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார். 12.04.04 அன்று காலை துரோகி கருணா தப்பி ஓடுவதற்கு முன்பாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நீலன் அவர்களை தான் தங்கியிருந்த மருதம் முகாமிற்கு கொண்டு வரும்படி கூறியுள்ளார். அங்கு அவரைச் சுட்டு விட்டே கருணா தப்பியோடியுள்ளான். அதன் பின்னர் 13.04.04 அன்று மருதம் முகாமில் தேடுதலை மேற்கொண்ட போது நீலன் அவர்களின் வித்துடல் கண்கள் துணியினால் கட்டப்பட்ட நிலையிலும் கைகள் விலங்கிடப்பட்ட நிலையிலும் கண்டு எடுக்கப்பட்டது. தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! https://www.thaarakam.com/news/122751
  14. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாதவூரன்🎉🎉🎉
  15. அம்மா….என்னை தேடவேண்டாம் நான் எல்லோருக்குமாகப் போராடப்போகிறேன்.! - கரும்புலி மேஜர் அறிவுக்குமரன் Last updated Apr 11, 2020 கரும்புலி மேஜர் அறிவுக்குமரன்.! தென் தமிழீழத்திலிருந்து வேவுநடவடிக்கை ஒன்றை முடித்து 11.04.2000 அன்று தளம் திரும்பிக்கொண்டிருந்த போது திருமலைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலில் காவியமான கரும்புலி மேஜர் அறிவுக்குமரன் அவர்களின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழத்தின் போரியல் வரலாற்றில் பல கரும்புலி நடவடிக்கைசென்று மீண்ட வரலாறு இக் கரும்புலிக்கும் உண்டு. ஆண்குரல்:- “அம்மா…. எங்களுடைய தாயகமண்ணின் மீட்சிக்காக…. என்னால் செய்யக்கூடிய தியாகம் எதுவோ…. அதைத்தான் நான் செய்யப்போகிறன்.. அதை மனமகிழ்வோடும் பூரண சந்தோஷத்தோடும் செய்கின்றேன். உங்களுக்கு இது ஜீரணிக்க முடியாத வேதனையாய்த்தான் இருக்கும். எனவே எங்களின் சாவுக்காக கண்ணீர் வடித்து கவலையடைவதை விட நீங்கள் அதை ஏற்றுக்கொள்வதே எனக்கு நீங்கள் செய்யும் இறுதிக்கடனாய் ஆத்மா சாந்தியாய் இருக்கும் அம்மா….. உங்கள் மகன் நினைவுக்கல்லில் நிமிர்ந்து நிற்பான்.. நீங்கள் சுவாசிக்கும் காற்றில் நனையும் மழைத்துளியில் எல்லாம் உங்கள் மகன் கலந்திருப்பான்….” கரும்புலி மேஜர் அறிவுக்குமரனின் அன்புசுமந்த வரிகள் இவை… தன்தாயை நேசித்தது போலவே… தன் தாயகத்தையும் பூசித்த தேசப்பற்றாளன்….. தாய்:- ‘என்ரபிள்ளை… என்ர பிள்ளை எவ்வளவு கஷ்டங்களைத் தாங்கிப்படிச்சது… இப்ப…. இப்ப… அதுக்குப்பலனாய் ஒரு உத்தியோகம் கிடைச்சிருக்கு.. கேள்விப்பட்டால் பிள்ளை எவ்வளவு சந்தோஷம்படுவான்.. ம்… என்ர பிள்ளையின்ர கெட்டித்தனத்துக்கு பரிசு கிடைச்சிருக்கு… மகன்:- ‘அம்மா……. என்னை எங்கையும் தேடவேண்டாம்… நான் எல்லோருக்குமாகப் போராடப்போகிறேன்………’ குரல்:- அவன் தன்னுடையதும்…தன் குடும்பத்தினதும் முன்னேற்றத்தைவிட தேசத்தின் விடுதலையே பெரிதென்று சிந்தித்தான். ‘கொற்றவன் தம்மைக் கண்டு கண்டுள்ளம் குளிர எம் கண்கள் குளிர்ந்தனவே’ என்று எல்லோரும் எண்ண இந்தத் தேசத்தின் புதல்வனாய் தன்னை அர்ப்பணித்துச் சென்றவன் அறிவுக்குமரன். அறிவுக்குமரன் மென்மையின் உறைவிடம்…அவன் மென்மையாய்… புன்னகை சுமந்து திரிந்தாலும் அவனுக்குள்ளே எப்போதும் ஓர் எரிமலை கனன்று கொண்டே திரிந்தது… தனக்கு கிடைத்த எல்லாவற்றையும் விட……. தேசியத்தலைவரையும்……… போராளிகளையும்…….. மக்களையும் உன்னத உறவுகளாய் நேசித்தான்.. தான் எத்தனை துயரங்களை துன்பங்களை அனுபவித்தாலும் தன்சக போராளிகளோ……… தன் நேசத்துக்குரிய மக்களோ துன்பப்படுவதை அவன் தாங்கிக் கொள்ளமாட்டான்… ‘தேசத்தைச் செதுக்கியவர்களே…….. இன்று உங்களுக்காய் கல்லறையில் நினைவுக்கல்லில் உங்கள் பெயர்களைச் செதுக்கப்படாமலும் இன்னும் சிலர் வெளித் தெரியாமலும்…எங்கள் மனதில் மட்டும். உண்ணாமல் பசிகிடந்து… உறங்காமல் விழித்திருந்து கைகள் வலிக்க கடல் தாண்டி ஈழம் வேண்டிடப்போனீர்… நாம்… இதயம் விம்மிட நிற்கின்றோம்… என்று இடியாய்க் கனன்ற கரும்புலிகளை எண்ணி இதயத்தில் துடித்தவன் அறிவுக்குமரன்…. தெளிந்த சிந்தையோடு போராட்டத்தில் இணைந்து கொண்ட அறிவுக்குமரன் தன்னை அழித்தெனினும் தன் தேசத்து மக்களுக்கு சுதந்திரமான வாழ்வை கௌரவமான வாழ்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் எனத்துடித்து நின்றவன். கடுமையான பயிற்சிகளையெல்லாம் தன்மக்களின் விடுதலை வாழ்வை எண்ணி ஏற்றுக் கொண்டவன். அவன் முதலில் கந்தகப்பொதி சுமந்தகளம் ஜெயசிக்குறு சமர்க்களம். விடுதலைப்புலிகள் பலமிழந்திருப்பதாய் கற்பனை பண்ணி விடுதலைப்புலிகளை அழித்துவிடலாமென்ற நம்பிக்கையோடு எதிரி நன்கு திட்டமிட்டு தொடக்கிய சமர்முனை ஜெயசிக்குறு. இந்த ஜெயசிக்குறு மீதான எதிர்ச்சமர்க்காலத்தில் 10.06.97 அன்று தாண்டிக்குளம் படைத்தளம் மீதான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது கரும்புலி ஊடறுப்புத் தாக்குதலும் நடந்தது. இந்தத்தாக்குதலில் அறிவுக்குமரனும் பங்கேற்றான். அந்த ஜெயசிக்குறு மீதான எதிர்ச்சமர்முனையில் தாண்டிக்குளத்தில் வரலாறாய் நிலையான தன் சககரும்புலிகளின் பிரிவு இவனை நெருப்பாய்ச் சுட்டது. தன்னோடு ஒன்றாயிருந்து, ஒன்றாய் உண்டு, ஒன்றாய் வந்தவர்கள் வரலாற்றில் வரலாறான போது இவன் மனம் பெருமையுடன் துயரமும் சுமந்தது. 1997ஆம் ஆண்டின் இறுதிநாட்கள்… ஒரு நாட்பொழுதில் அந்த மகிழ்ச்சிமிக்க சம்பவம் நிகழ்ந்தது. தாக்குதல் ஒன்றுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள கரும்புலிகளில் ஒருவனாய் அறிவுக்குமரனும் தெரிவானான். அவனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லை இல்லாமலிருக்க…. அந்தமகிழ்வை இரட்டிப்பாக்குவது போல தேசியத்தலைவர் அவர்களும்.. அவர்களைச் சந்தித்தார். தலைவரின் சந்திப்போடும்… அறிவுறுத்தலோடும்… ஆசிகளோடும் புறப்பட்ட அறிவுக்குமரன் உட்பட்ட கரும்புலி அணியினர் 02.01.1998 அன்று தமக்குரிய இலக்குள்ள இடத்தை வந்தடைகின்றனர். அதுவும் ஜெயசிக்குறு களமுனைப்பகுதிகளில் ஒன்றான கரிப்பட்டமுறிப்பு ஆக இருந்தது. அங்கிருந்து தான் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கான வான்வழி விநியோகத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தான் எதிரி. அன்று அந்த விநியோகத் தளத்தையும்…. எதிரியின் M.I.17 உலங்கு வானூர்தியையும் ஒருசேர தாக்கி அழித்தார்கள் கரும்புலி அணியினர். தேசியத்தலைவனின் வழிகாட்டலில் எதிரியின் வானூர்தியையும் தளத்தையும் சிதறடித்தவர்களுக்கு உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இந்த துணிகரமான வெற்றியைப் படைத்துவிட்டு வந்தவர்களில் கரும்புலி மேஜர் அறிவுக்குமரனும் ஒருவன். அவனுடைய இயந்திரத்துப்பாக்கி அன்று பேசியவை வெறும் வார்த்தைகளல்ல. மீண்டும் கடுமையான பயிற்சிகள். அறிவுக்குமரன் சோர்ந்து போய் விடவில்லை. தேசியத்தலைவரின் உற்சாகமான வார்த்தைகள் அவர்களை உந்தின. 01.02.1998 இல் இன்னொரு களமுனை ஆனையிறவுத் தளம். அங்கே உப்பளமுகாம் அழிப்புக்காக நுழைந்த கரும்புலிகளில் அறிவுக்குமரனும் அடக்கம். அதிகாலை 1.15 இற்கு தாக்குதல் ஆரம்பமாகிறது எதிரி கடுமையான எதிர்ப்புக் காட்டுகிறான். அந்த கடுமையான எதிர்ப்புகளின் மத்தியிலும் உப்பள முகாம் மீதான தாக்குதல் உச்சம் பெறுகின்றது. கடுமையான காயங்களுக்குள்ளான கரும்புலி சபேசன் வெடியாய் அதிர்ந்து விடுகிறான். எதிரியும் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பின்வாங்குகிறான். கரும்புலி குமரேசுவுக்கும் காயம். கால்கள் இரண்டும் செயலிழந்துவிட்டன. அவனும் வெடியாகிப் போகிறான். எஞ்சியோரைப் பின்வாங்கச் சொல்கிறான் இந்தத் தாக்குதலுக்கு தலைமைதாங்கிய குமுதன். அறிவுக்குமரன் பின்வாங்கி வந்தது இன்னமும் மெய்சிலிர்க்கும் நினைவுகளாகவே உள்ளன. உயிரோடு மீண்டு வந்து நடந்தவற்றை ஏனைய போராளிகளிடம் சொல்லி விடுவதற்காக அவன் அனுபவித்த இன்னல்கள் எல்லாம் வார்த்தைகளுக்கும் வரிவடிவங்களுக்கும் அப்பாற்பட்டவை. எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் உயிர் பறிக்கும் ஆபத்துக்கள் காத்திருந்தன. சாதாரண மனிதப்பிறவிகளால் நினைத்துப்பார்க்க முடியாத அந்த ஆபத்துக்களையெல்லாம் கடந்து அவன் தன் தோழர்களை வந்தடைந்தான். அவன் கடந்த ஒவ்வொரு கணமும் மரணம் அவனைத் துரத்திக் கொண்டிருந்தது. ஒவ்வொரு தடவையும் மரணத்தை நெஞ்சிலுதைத்து வீழ்த்திவிட்டு அவன் நிமிர்ந்தான். இப்போது தாக்குதலுக்கு தலைமை தாங்கிவந்த குமுதனுக்கும் உடல் முழுக்க காயம். “நான் சாச்சை இழுக்கப்போறன். நீங்கள் போங்கோ” அந்த வார்த்தைகளும் அறிவுக்குமரனுக்குள் நுழைந்தன. அறிவுக்குமரன் குமுதனைப் பார்க்கிறான். “நீங்கள் வெளியிலை போகோணும். உங்களுக்குள்ளை கிடக்கிற முழுத்தகவல்களையும் போய்ச்சொல்ல வேணும். அது இன்னொரு சண்டை செய்யிறதுக்கு உதவும்” சிறிது நேரத்தில் அந்த வெடிச்சத்தம் பெரிதாய் ஒலிக்கிறது. இப்போது அறிவுக்குமரன் மட்டுமே. அறிவுக்குமரன் தன்னை எப்படியோ பாதுகாத்துக் கொண்டு, எத்தனையோ இடர்களைத் தாண்டி வெளிவருகிறான். மரணத்தைத் துரத்தி தேசத்தின் புதல்வனாய் வெளியே வந்தவன். தன் உணர்வுகளை கவிதை வரிகளாக்கினான். இனிய சுகங்களை ஒதுக்கியவர்களே…. தமிழர் எம் தேசத்தை செதுக்கியவர்களே.. இன்று உங்களுக்காய் கல்லறையில் நினைவுக் கல்லில் உங்கள் பெயரைச் செதுக்குகின்றோம்… செதுக்கப்படாமலும்… இன்னும்சிலர் வெளித்தெரியாமல் எங்கள் மனதில் மட்டும்’ அறிவுக்குமரன் ஒருபோதும் ஓயாத புயற்காற்று ஆனையிறவுப் படைத்தளப் பிரதேசத்துக்குள்.. வேவுப்பணிகளில் ஈடுபட்டான்…. வேவுப்பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது… கையில் காயமுறுகிறான்.. ஆனாலும்… காயம் மாறமுன்பு… மீண்டும் கடும் பயிற்சிகளில் ஈடுபடுகிறான்… 10.10.1999 அன்று அவன் திருமலைக்கு செல்ல வேண்டும்… அங்கும் அவனது கடமைகள் இருந்தன… அன்று – முதல் பெண்மாவீரர் இரண்டாம் லெப்டினன் மாலதியின் நினைவு நாளில் தன் உள்ளத்து உணர்வுகளைக் கொட்டி அனைவருடனும் பழகுகின்றான்.. அவனது அன்பில் எல்லோரும் திளைத்திருக்க… கையசைத்து படகேறுகிறான் அறிவுக்குமரன். திருமலையில்… அவனுடைய பணிகள் தொடர்ந்து கொண்டிருந்தன…. இரவும் பகலுமாய் அவன் உழைத்தான். கால்களிலும் , கைகளிலும் உள்ள விழுப்புண்கள் வேதனை கொடுத்தாலும்… அவன் அதைப் பொருட்படுத்தவில்லை. ஆறுமாதங்களாய் அவனது அயராத பணிக்கு நடுவே.. அந்த அழைப்பு… அவனை வன்னி பெருநிலப்பரப்புக்கு வருமாறு கேட்கிறது… அவனுக்குள் ஆனந்தம்… மீண்டும் வன்னி மண்ணைப் பார்க்கப் போகும் பரவசம்… அருகே நின்ற தோழனின் கரங்களைப் பற்றி தன் அன்பைத் தெரிவித்தவன்… அவனிடம் இரு கைக்குண்டுகளையும் வாங்கிக் கொண்டு புறப்படுகிறான். 11.04.2000 அன்று…. கடலிலே படகு அறிவுக்குமரனையும் துணைப்படைவீரன் ஜோன்சனையும் ஏற்றிக் கொண்டு விரைகிறது… அறிவுக்குமரனின் முகத்தில் ஆனந்தப் பூரிப்பு. பழைய தோழர்களின் நினைவுகள் கொடிவிட்டுப் பறக்கின்றன. கடலில் எதிரியோடு மோதல் வெடிக்கிறது… அந்த மோதலில் வீரவரலாகிறான் அறிவுக்குமரன்… அறிவுக்குமரனோடு… துணைப்படைவீரன் ஜோன்சனும் அறிவுக்குமரன் கரும்புலி மேஜர் அறிவுக்குமரானாய்.. எல்லோர் மனங்களிலும் நிறைகிறான்… அறிவுக்குமரனுக்குள் ஆயிரம் உணர்வுகள் இருந்தன. அவன் சிறந்த படைப்பாளியாகவும் இருந்தான்…. கவிதைகளை, பாடல்களை, சம்பவங்களை புலிகளின்குரல் நேயர்களுக்காக எழுதினான்… தன்னுடைய அனுபவங்கள்.. தன்னோடிருந்த தோழர்களின் சாதனைகள், அவர்களின் உள்ளத்து உணர்வுகள் மக்களை சென்றடைய வேண்டும் என்று அவன் எண்ணினான்.. புலிகளின்குரல் வானொலியில் அவனுடைய எண்ணங்களும், சிந்திப்புகளும் ஒலிபரப்பாகின. அறிவுக்குமரனை திருமலைக்கடற்பரப்பு தன்னுடன் வாரி அணைத்துக் கொண்டது. அவன் சாதித்துவிட்ட சாதனைகள் எங்களோடு நிறைந்திருக்கின்றன. அவனின் இலட்சியமும் இதயக்கனவுகளும் எங்களோடு ஒட்டியனவாய் என்றுமுள்ளன. நினைவுப்பகிர்வு:- சி.கண்ணம்மா. https://www.thaarakam.com/news/122553
  16. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் யாழுக்கு வரவேண்டியதாகத்தான் இருக்குது. Addicted to Yarl!😜 ஆட்கள் கூடினால் திரிகள் பத்தோணுமே! அப்படித் தெரியவில்லையே!! உள்ளுக்குள்ள இருக்கிறதெல்லாம் கெட்ட கிருமிகள்! 😂 அதுதான் தாக்குப்பிடிச்சுக்கொண்டு நிற்குதுகள்🤣
  17. யாழ் களத்தினுள் உள்ளே நுழைவது கொரோனா காலத்தில் ஷொப்பிங் போவது மாதிரி அதிக நேரம் எடுக்கின்றது. சுத்திக்கொண்டே இருக்கின்றது இன்று.
  18. எனக்கு முகக்குறிகள் 🤗 வேலை செய்யுது. ஆனால் யாழ் இணையம் இடைக்கிடை மெதுவாக சுத்துது!
  19. வெளியேறுங்கள் அண்ணா! – தலைவருக்கு எழுதிய கடைசிக் கடிதம்! – பிரிகேடியர் துர்க்கா “அண்ணா! எங்களை நம்புங்கள், நீங்கள் வெளியே இருந்து கட்டளை இடுங்கள். நாங்கள் அதனைச் செயற்படுத்துகின்றோம். நீங்கள் எங்களுக்கு மட்டுமல்ல எங்கட மக்களுக்குக் கட்டாயம் தேவை. அதனால் தயவு செய்து ஆனந்தபுரத்திலிருந்து வெளியேறுங்கள் அண்ணா இதனை உலகெங்கும் பரந்து வாழ்கின்ற எங்களுடைய தமிழ்மக்கள் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.” இதுதான் அவள் தலைவருக்கு எழுதிய கடைசிக் கடிதம். உண்மையிலேயே ஆனந்தபுரத்திலிருந்து வெளியேறுவது என்ற எண்ணம் தலைவர் அவர்களிடம் ஒருதுளியும் இருக்கவில்லை. இறுதிவரை நின்று போராடுவது என்றே தலைவர் முடிவெடுத்திருந்தார். ஆனாலும், அந்தக் கடிதத்தில் இருந்த “மக்கள் என்கின்ற சொல் தலைவரை மிகவும் நெகிழச்செய்தது. அதுவே தலைவரை ஆனந்தபுரத்திலிருந்து வெளியேற்றியது. அந்தக் கடிதத்தை தலைவர் அவர்களுக்கு எழுதியது வேறுயாருமல்ல சோதியா படையணியின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் துர்க்கா. உண்மையிலேயே அவளது தோற்றத்துக்கும் ஆளுமைக்கும் ஆற்றலுக்கும் கொஞ்சம் கூட சம்மந்தம் இருக்கவில்லை. மெலிந்த சிறிய உருவம். எப்போதும் புன்னகை மாறாத முகம். துள்ளித்துள்ளி ஓடும் மான்குட்டி போல அவள் நடையின் வேகம். முடியாது என்பது அவரது அகராதியில் எப்போதும் இருந்ததில்லை. தெரியாது என்று எதனையும் விட்டுவிட்டு அவள் ஒதுங்கியதும் இல்லை. எல்லாப் போராளிகளையும் புதியவர், பழையவர் , பெரியவர், சிறியவர் என்ற பேதமின்றிப் பார்க்கும் அவரது குணம், கடுமையாகப் பேசவோ, கண்டிக்கவோ தெரியாத அன்பு நிறைந்த அவளது பேச்சு எல்லாப் போராளிகளுக்குமே அவள்மீது பிடிப்பினை ஏற்படுத்தியது. “என்னடாப்பா… நீங்கள்….” இந்த வார்த்தை அவரது வாயிலிருந்து வருகின்றது என்றால் அவர் கடுமையான கோபத்தில் இருக்கின்றார் என்பது அர்த்தம். கோபத்தில் கூட கடிந்து பேசத் தெரியாத போராளி. தலைவர் அவர்கள் பயிற்சியின்போது ஒவ்வொரு போராளிகளையும் நன்கு இனங்கண்டு பயிற்சி நிறைவடைந்தபோது அனைவரையும் ஒவ்வொரு பிரிவுக்குப் பிரித்துவிடுகின்றபோது துர்க்காவுக்கு வழங்கப்பட்டபணி மருத்துவப்பணி. ஒரு மருத்துவப் போராளிக்கு இருக்கவேண்டிய அனைத்துத் தகுதியுமே அவளிடம் நிறையவே இருந்தது. அதேபோல் காலப்போக்கில் புதிய போராளிகளுக்கான பயிற்சிகளை வழங்குகின்ற பாசறைகளை வழிப்படுத்துகின்ற பொறுப்பு அவளுக்கு வழங்கப்படுகின்றது. அதுவும் அவளுக்கு மிகவும் பொருத்தமான பணியாக இருந்தது. தலைவர் அவர்கள் சோதியா படையணியை உருவாக்கி அதனுடைய சிறப்புத் தளபதியாக துர்க்காவை நியமித்தபோது உண்மையிலேயே பலரிடம் பலகேள்வி இருந்தது. ஏனெனில் இந்தப் பெரும்பணியை ஒப்படைக்கும்போது அவள் ஒன்பது பேர் கொண்ட அணிக்குத் தலைவியாக இருந்தாள். படையணிப்பொறுப்பை எடுத்தபோது உண்மையிலேயே அவளுக்குக் குறிபார்த்துச் சுடுவது என்பது சரியாக வராது. படையணிக்கான பயிற்சிகள் நடைபெறும்போது சளைக்காமல் ஓய்வு என்பதே எடுக்காது தான் அந்தப் படையணியின் சிறப்புத் தளபதி என்ற எண்ணம் ஒருதுளிகூட இன்றி, போராளிகளோடு போராளியாக நின்று, ஒவ்வொரு அணியணியாகப் பிரித்து சூட்டுப்பயிற்சிகள் வழங்கப்படும் போது, ஒவ்வொரு அணியோடும் சென்று ஓய்வோ சோர்வோ இன்றி சூட்டுப்பயிற்சியை எடுத்தார். எல்லோருக்கும் ஓய்வு வழங்கப்படும்போது கூட துப்பாக்கியை எடுத்து குறிபார்பதிலேயே அவர் குறியாக இருந்தார். எப்போது பார்த்தாலும் அவளது கை நீட்டிக் குறிபார்த்தபடியே இருக்கும். கடின உழைப்பு, விடாத முயற்சி விரைவிலேயே சிறந்த சூட்டாளராக அவளை மாற்றியது. ஈருந்து ஓடிக்கொண்டே மிகநேர்த்தியாகக் குறிபார்த்துச்சுடும் வல்லமையை அவளுக்குள் உருவாக்கியது. இதுவே விடுதலைப் போராட்டத்துக்குப் புதிய பதிய ஆயுதங்கள் வரும்போது அந்த ஆயுதங்களின் சூட்டுவலுவைச் சீர்செய்து பரீட்சித்துப் பாரக்கும் அளவுக்கு பிரிகேடியர் துர்க்காவை உயர்த்தியது. எத்தனையோ ஈக வரலாறுகளையும், அர்பணிப்புகளையும் தாங்கி நிற்கும் எமது விடுதலைப் போராட்ட வரலாற்றிலே இவள் ஒரு மைல்கல். இறுதிக் கட்டப் போர் மிக இறுக்கமடைந்திருந்த காலப்பகுதி. களமுனைகளோ நாளுக்கு நாள் விரிந்து கொண்டே சென்றது. அவளுடன் நின்ற தோழிகள், அணித்தலைவர்கள் எனப் போராளிகள் ஓர்மத்துடன் நின்று களமுனைகளை எதிர் கொண்டு நின்றனர். போரியலில் நல்ல ஆளுமையைப் போரிடும் பேராற்றலை தனக்குள்ளே வளர்த்துக் கொண்ட துர்க்கா சமர்க்களங்களில் நாயகியாய், களமுனைகளில் போராளிகளை வழிப்படுத்தும் நல்ல தளபதியாய் வெற்றிகள் பலதைப் படைத்துவிட்டு தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றிலே மீண்டும் விடுதலைப்புலிகளின் போரிடும் ஆற்றலை உலகமே விழிநிமிர்த்திப் பார்க்கவைத்த ஆனந்தபுர முற்றுகைச் சமரில் இறுதிவரை போராடி, எம் தேசத் தலைவனை பத்திரமாகக் காப்பாற்றி விட்ட மனநிறைவுடன் ஆனந்தபுர மண்ணில் வரலாறாகிப் போனாள். தாரகம் இணையத்திற்க்காக அபிராமி பிரிகேடியர் துர்க்கா அன்பான முகம். சாந்தமான தோற்றம். எவரையும் பணிவுடன் அணுகும் அவரின் பண்பு. பல ஆயிரக்கணக்கான பெண்களை வழிநடத்தும் தலைமைத்துவப் பாங்கு. அனைத்தும் நிச்சயமாய் அவருக்கே உரித்தானது. ஆனந்தபுரத்தில் 20,000 சிங்களச் சிப்பாய்கள் வெறும் 700 விடுதலைப் புலிகளை மட்டும் பெட்டிச் சண்டையிட்டு 500 மீற்றருக்குள் வைத்து கொலைக்களமாக இரசாயனக் குண்டடித்து கொன்ற களத்தில் அவரும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார் என்பதை சோதியா படையணியில் மாத்திரமல்ல, எந்த ஒரு போராளியாலும், குறிப்பாக எந்த ஒரு பெண் போராளியாலும் தாங்கிக் கொள்ள இயலவில்லை. இரண்டாம் திகதி வரை சுற்றிவளைக்கப்பட்ட பெட்டிக்குள் இருந்த தேசியத் தலைவரை அண்ணா! தயவுசெய்து இங்கிருந்து புறப்படுங்கள் என பணிவாகக் கட்டளைக் கடிதம் எழுதியது கூட எங்களின் பிரிகேடியர் துர்க்கா அக்கா என்றும் சிலர் அக்காவின் வீரச்சாவின் பின்னர் கூறினர். வடபோர்முனைக் கட்டளைத் தளபதி பிரிகேடியர் தீபன், கேணல் கிட்டு பீரங்கிப் படையணி சிறப்புத் தளபதி பிரிகேடியர் மணிவண்ணன், மகளிர் பொறுப்பாளரும் மாலதி படையணியின் சிறப்புத் தளபதியுமான பிரிகேடியர் விதுசா ஆகியோருடன் பிரிகேடியர் துர்க்காவும் வீரச்சாவு என்ற செய்தி அங்கு இருந்த எங்களின் இதயங்களைக் கிழித்தது. மனம் அதை நம்ப மறுத்தது. அனைத்துப் பெண் போராளிகளும் கண்ணீர்விட்டு ஓலமிட்டு அழுதனர். பெண் போராளிகளுக்கு இனி ஒரு தலைமை கிடைக்குமா என அனைத்து உள்ளங்களும் ஏங்கியது. 1971ம் ஆண்டு பங்குனி மாதம் 24ம் திகதி கலைச்செல்வி பொன்னுத்துரை என்னும் பெயர் சூட்டி நான்கு பிள்ளைகளில் மூன்றாவதாகப் பிறந்த பெண் பிள்ளை தான் எங்களின் பிரிகேடியர் துர்க்கா அக்கா. யாழ்ப்பாணத்தில் வலிகாமத்தைச் சொந்த இடமாகக் கொண்ட இவர் விடுதலைப் புலிகளின் நான்காவது மகளிர் பயிற்சிப் பாசறையில் 1989ம் ஆண்டு தனது அடிப்படைப் பயிற்சியைப் பெற்றுக் கொண்டார். தலைவனின் நிழலில் மணலாற்றுக் காட்டில் தலைவரே நேரடியாக பயிற்சியை வழிநடத்திய காலத்தில் வளர்ந்தவர்தான் இவர். கடற்புலி லெப்.கேணல் மாதவி, கடற்கரும்புலி லெப்.கேணல் நளாயினி, கப்டன் வானதி, மேஜர் கஸ்தூரி, கப்டன் பாரதி போன்ற ஒப்பற்ற பெண் போராளிகளும் இதே பாசறையில்தான் தங்களின் பயிற்சியை ஆரம்பித்திருந்தனர். இவரது போராட்டப் பற்றையும், துணிவான கள ஆற்றலையும் கண்ட தேசியத் தலைவர் 1991ம் ஆண்டு மருத்துவப் பிரிவின் பொறுப்பாளராக செயற்பட வைத்தார். இவர் அடிக்கடி மகளிர் பிரிவின் முதல் படைத் தளபதியாக இருந்த மேஜர் சோதியா அக்கா அவர்களை நினைவு கூறுவதோடு அவரில் மிகுந்த பற்றும் பாசமும் வைத்திருந்தார். அவர் காட்டிய அன்பும், இறுக்கமான பண்புமே தங்களை தலைவனை அறிந்து கொள்ளவும் போராட்டத்தின்பால் பற்று மிக்கவராக மாற்றவும் உந்து கோலாக இருந்தது என்றும் அவர் அடிக்கடி கூறுவார். உருவத்தில் மிகவும் சிறிய தோற்றம் கொண்டவராக இவர் இருந்தாலும் சிறப்புத் தளபதியாகத் தனது ஆயுத உறையில் கைச்சுடுகலனைக் கட்டிக் கொண்டு வலம் வரும்போது மிகவும் கம்பீரமாகவே இருக்கும். 1996 க்கு முன்னர் பல சிறிய களமுனைகளைச் சந்தித்து இருந்தாலும் 1996ம் ஆண்டு ஜுன் மாதம் மேஜர் சோதியா படையணியின் தளபதியாக இவர் நியமிக்கப்பட்டு 450 வரையிலான போராளிகளுடன் மூன்று கம்பனிகளுக்குத் தலைமை வகிக்கும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது. அதன் பின்னர் ஓயாத அலைகள் 1, 2, 3 ஆகிய நடவடிக்கைகளுடன் ஜெயசுக்குறு எதிர்ச்சமர் மற்றும் தீச்சுவாலை நடவடிக்கை ஆகியவற்றில் சிறப்பாக செயற்பட்டு அணிகளை வழிநடத்தி வந்தார் பிரிகேடியர் துர்க்கா. தீச்சுவாலை நடவடிக்கையின் போது வயிற்றில் விழுப்புண் அடைந்த நிலையில் களத்தில் எதிரியின் முற்றுகையில் நின்றபடி ‘எங்களைப் பாக்காதீங்க..எங்கட இடத்துக்கு செல்லை அடியுங்க’ என்று மிகவும் துணிச்சலாக அவர் கூறிய பாங்கை பல வருடங்களுக்குப் பின்னரும் இயக்கத்தில் பலரும் பெருமையாகக் கூறுவதைக் கேட்கக் கூடியதாக இருக்கும். எப்பொழுதும் சிரித்த முகம். எந்த ஒரு தரத்தில் உள்ள போராளியையும் எழுந்து நின்று வரவேற்று அமர வைக்கும் பணிவான குணம். அந்த முகத்தை நாங்கள் இனிக் காண மாட்டோம் என்பது இன்னமும் எங்களால் நம்ப இயலாத ஒன்று. வீரர்கள் நிச்சயமாக வீழ்வதில்லை. அவரின் உணர்வும் உருவமும் அப்படித்தான் இன்னமும் எங்களை ஆக்கிரமிக்கின்றது. காலை எழுந்தவுடன் ஒரு மணி நேரம் யோகா செய்வார் பிரிகேடியர் துர்க்கா அக்கா. பயங்கரவாதி என்று எங்களை வர்ணிக்கும் பாதகர்கள் துர்க்கா அக்காவுடன் ஒருநாள் அமர்ந்து கதைத்திருக்க வேண்டும் என நாங்கள் எண்ணிய நாட்கள் பல உண்டு. 2006ம் ஆண்டு சமரில் கம்பனியை வழிநடத்திச் சென்ற லெப். கேணல் ஆர்த்தி வீரச்சாவைத் தழுவிக் கொண்டது துர்க்கா அக்காவின் மனதை வெகுவாகப் பாதித்தது. எதையும் இலகுவில் வெளிக்காட்ட மாட்டார். ஆனால் உள்மனத்தில் அவர் எவ்வளவு கண்ணீர் விட்டார் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். ஒரு சிறந்த புகைப்படவியலாளர், அமைப்புக்குத் தேவையான ஆங்கிலப் படங்களை விரும்பிப் பார்க்கும் ஒருவர், கராத்தே மற்றும் யோகாக் கலையை விரும்பிப் பயின்ற ஒரு அன்பான உள்ளம். இவை எல்லாவற்றுக்கும் மேலாக பெண்புலிகளின் ஒரு படையணியை வழிநடத்திச் சென்ற ஒரு சிறந்த தலைவி. உலகில் எந்த மூலையிலும் எந்தப் பெண்களாலும் செய்ய இயலாத ஒரு செயல் அது. உலகப் போர்களின் போதும் ஏனைய உள்நாட்டு யுத்தங்களின் போதும் முயன்று முயன்று தோற்றுப் போன ஒரு எண்ணக்கரு. முழுவதுமாக, எந்த வித ஆண்களின் தலையீடும் இன்றி, பயிற்சி தொடக்கம், நிர்வாகம், தொழில்நுட்பம், மற்றும் களமுனை வரை பெண்களை மட்டுமே வழிநடத்திச் செய்து முடித்த, செய்து வெற்றி கண்ட பெருமை எங்கள் பிரிகேடியர்களான விதுசா அக்கா மற்றும் துர்க்கா அக்கா ஆகியோரை மட்டுமே சாரும். எந்த ஒரு விடயத்தையும் அக்காவிட்டைக் கேட்டுச் செய்ய வேணும் என்று சொல்லிவிட்டு விதுசா அக்காவின் கருத்தை நாடி கலந்து ஆலோசித்து செய்வார் பிரிகேடியர் துர்க்கா அக்கா. வீரச்சாவிலும் இருவரும் பிரியாமல் சென்றது ஈழப் பெண்களுக்குரிய தலைமைக்கு ஒரு பாரிய இழப்பென்றே சொல்ல வேண்டும். தனக்கென தலைவன் கொடுத்த படையணியை அனைத்துப் பிரிவுகளிலும் சிறந்தவர்களாக, அனைத்துக் கலைகளிலும் சிறந்தவர்களாக வளர்த்தெடுக்க வேண்டும் என்பதை நோக்கியே பிரிகேடியர் துர்க்கா அக்கா அவர்களின் செயற்பாடுகள் இருக்கும். போர்களில் பெண்கள் என்னென்ன வழிகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை அதிகம் அறிந்து கொள்ள ஆர்வம் கொண்டு பல ஆங்கில பொத்தகங்கள் மற்றும் ஒளிநாடாக்களை தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பார்ப்பார். 2001ம் ஆண்டு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் துர்க்கா அக்காவுக்கு கேணல் தரத்தை வழங்கியிருந்தார். விழுப்புண் அடைந்த நிலையிலும் அவரது வேலைகள் அனைத்தையும் அவரே செய்ய வேண்டும் என்பதில் மிகவும் அழுத்தமாக இருப்பார். அவருடன் நிற்கும் போராளிகள், அக்கா பாவம் என்று சொல்லிவிட்டு அவருக்கு கிணற்றில் இருந்து நீர் எடுப்பதற்கு உதவினால் கூட ‘ஏன் எனக்கு எடுக்க இயலாதா… நீங்கள் போய் உங்கட கடமைகளைச் செய்யுங்கள்’ என அன்பாகக் கடிந்து கொள்வார். விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவின் கீழ் இயங்கி வந்த போர்ப்பயிற்சி, தொலைத்தொடர்புப் பிரிவு, கணினிப் பிரிவு, படையப் புலனாய்வுப் பிரிவு, அரசியல்துறை, புலனாய்வுத்துறை, படையத்தொடக்கப் பயிற்சிக் கல்லூரி, படையறிவியல் கல்லூரி, புகைப்படப் பிரிவு, திரைப்படப் பிரிவு, காவல்துறை, நீதித்துறை, ஆகியவற்றினதும் மகளிர் பொறுப்பாளர்களுக்கான மகளிர் பேரவைக் கூட்டம் மாதம் ஒருமுறை நடைபெறும். பெயர் வெளியிடப்படாத இடத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்று பெண் புலிகள் சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டு தீர்வுகள் எட்டப்படும். இதற்கு பிரிகேடியர் விதுசா மற்றும் பிரிகேடியர் துர்க்கா ஆகியோரே தலைமை வகித்தனர். பெண்கள் தொடர்பில் எந்த ஒரு முடிவையும் தாமாகவே எடுக்கும் அதிகாரத்தை தமிழீழத் தேசியத் தலைவர் இவர்களுக்கு வழங்கியிருந்தார். காலையில் ஐந்து மணிக்கு எழுந்திருக்கும் பிரிகேடியர் துர்க்கா அக்கா அவர்கள் ஒரு மணி நேரம் யோகா செய்ததன் பின்னர் மேஜர் சோதியா அவர்களின் படத்துக்கு மெழுகுதிரி கொழுத்தி கைகூப்பி வணங்குவார். அதன்பின்னர் தனது கடமைக்குத் தயாராகி விடுவார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தளமாகச் சென்று போராளிகளுடன் அவர்களின் இன்ப துன்பங்களைக் கதைத்து அறிந்து கொள்வார். 2008ம் ஆண்டு மே மாதம் சோதிய படையணிப் போராளிகள் ஓமந்தைப் பகுதியில் லெப்.கேணல் வரதா தலைமையிலும் மன்னாரில் லெப்.கேணல் செல்வி தலைமையிலும், மணலாற்றில் லெப்.கேணல் தர்மா தலைமையிலும் முகமாலையில் மணிமொழி தலைமையிலும் களத்தில் நின்றிருந்தனர். பிரிகேடியர் துர்க்கா அவர்கள் ஒவ்வொரு களமுனையாக மாறி மாறிச் சென்று அவர்களின் குறை நிறைகளைக் கேட்டறிந்து களமுனைக்கு அவர்களைத் தயார் படுத்தி விட்டு வருவார். விடுதலைப் புலிகள் அமைப்பில் உள்ள பலரும் அவருக்கு இட்ட பெயர் ‘காட்டுக் கோழி’. காடுகளில் தனி பிரியத்தோடு வாழும் அவர் தனது முக்கியமான முகாமை காட்டின் நடுவே வைத்திருந்தார். 1996ம் ஆண்டு வரை தலைவனின் பாசறையாக இருந்த அந்த முகாமை அதற்குப் பின்னர் சோதியா படையணிப் போராளிகள் நிர்வாகம் செய்து வந்தனர். 50 அடி ஆளமான கிணற்றில் தண்ணீர் அள்ளி நூற்றுக்கும் மேற்பட்ட பெண் போராளிகள் குளித்து. காட்டுப் பயிற்சி பெற்று, காட்டுப் பாதுகாப்பை உறுதி செய்ய காட்டு நகர்வுகளுக்குச் சென்று களைப்புடன் திரும்புவார்கள். அங்கே ஒரு சிறிய அறையில் தனக்குத் தேவையான அரசியல், விஞ்ஞானப் புத்தகங்களை அடுக்கி வைத்திருப்பார் துர்க்கா அக்கா. போராளிகளின் கதைத்து, பயிற்சி அளிக்கும் நேரம் போக மிகுதி இருக்கும் நேரங்களில் அந்தப் புத்தகங்களும் அவரின் உடன் பிறந்த சகோதரன் அவருக்குக் கொடுத்த கணினியும்தான் அவரின் நண்பர்கள். காட்டுக்குள் சென்று அங்குள் மரங்கள், இலைகள், பூக்கள், விலங்குகள், பழங்கள், போராளிகள் அனைத்தையும் படமெடுத்து தனது கணினித் திரையை அலங்கரிப்பார். அங்குள்ள காடுகளின் தன்மையை அறிந்து கொள்வதிலும் அதை ஏனைய போராளிகள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதிலும் மிகவும் அக்கறை கொண்டு செயற்படுவார். சமாதான காலத்தில் இங்கு வந்த புலம்பெயர் தமிழர் ஒருவர் இந்தக் காடுகள் மிகவும் வேறுபட்ட தன்மை உடையதாகவும் மிகவும் குறுகிய தூரத்திற்கும் இவற்றின் தன்மை வேறுபடுவதாகவும் கூறியிருந்தது இவருக்கும் மிகவும் ஆர்வமான விடயமாக இருந்தது. உலகில் வேறு எந்தப் பகுதியிலும் இப்படியான காடுகளைக் காண்பது அரிது என்றும் தமிழீழத்தில் மூன்றில் இரண்டு பகுதி காடாக இருப்பது நாட்டின் சூழலுக்கு நன்மை தரும் என்றும் அடிக்கடி குறிப்பிடுவார். இரவு நேரங்களில் பெண் பிள்ளைகள் வெளியில் செல்லக் கூடாது என்று வளர்ந்த சமூகங்களில் இருந்து வந்த பெண்புலிகள் காட்டைப் பாதுகாக்க இரவு நேரக் காவற்கடமைகளில் துணிச்சலாக நின்று பல எதிரியின் வேவுக் காரர்களைப் பிடித்து அடைத்தார்கள் என்பது பல சமயங்களில் வெளியில் தெரிய வராமல் போன உண்மை. களமுனையில் நிற்கும் போராளிகளுக்கு சிற்றுண்டிகள் தொடர்ச்சியாகக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக பல முறைகள் தானே வேறு போராளிகளுடன் சேர்ந்து நின்று சிற்றுண்டி வகைகள் செய்து கொண்டு செல்வார். களமுனையில் நிற்கும் ஆண்போராளிகள் கூட ‘அக்கா வந்து போனவா..கட்டாயம் ஏதாவது கொண்டு வந்திருப்பா… மறைக்காமல் எடுங்கோ..’ என்று உரிமையோடு கேட்கும் அளவுக்கு அனைவரின் மனதிலும் இடம்பிடித்திருந்தார் அவர். கராத்தே கலையில் மிகுந்த ஈடுபாட்டுடனும் அதை பெண் போராளிகளுக்குக் கற்றுக் கொடுப்பதில் முனைப்புடனும் இருந்த அவர் மேஜர் சோதியா அவர்களின் நினைவாக ஒவ்வொரு வருடமும் மேஜர் சோதியா அவர்களின் நினைவு தினத்தன்று பெண்களுக்கான கராத்தே சுற்றுப் போட்டியைத் தனது நண்பரும். கராத்தேயில் கருப்புப் பட்டை பெற்று கடற்புலிகளில் தளபதியாக இருந்த கெங்கா அக்காவுடன் இணைந்து நடத்தி வந்தார். கரும்புலிப் பயிற்சி பெற்றிருந்த கெங்கா அக்கா அவர்கள் 2009 ஆம் ஆண்டு மே மாதம் இறுதி நாட்களில் நடந்த கடற்சமரில் கரும்புலியாகச் சென்று எதிரிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். பிரிகேடியர் துர்க்கா அக்காவுக்கு குழந்தைகளில் அதிகப் பிரியம். செஞ்சோலை நிகழ்வுகளுக்குச் சென்று அந்தக் குழந்தைகளுடன் அளவளாவிக் கொள்வதிலும் அவர்களை விதம் விதமாகப் புகைப்படங்கள் எடுப்பதிலும் எப்போதுமே தன்னை ஈடுபடுத்திக் கொள்வார். திருமணமான பெண் போராளிகளின் குழந்தைகளை விதம் விதமாகப் படங்கள் எடுத்துத் தனது கணினியில் அவர்களை அலங்கரித்துக் கொள்வார். வீரச்சாவைத் தழுவிக் கொள்வதற்கு முன்னர் இறுதியாக களமுனைக்கு வெளியில் நின்ற போராளிகளை அவர் சந்தித்தது மார்ச் மாதம் 21ம் திகதி. புதிதாக போராட்டத்தில் இணைந்த போராளிகளுக்கு எதிரியின் ஆக்கிரமிப்புக்கு எதிராக நாம் எழ வேண்டிய கட்டாயத்தை அன்று அவர் அன்போடு கூறி விளங்க வைத்தார். களமுனையில் எறிகணைகள் மழை போல் பொழியும் நேரத்தில் அங்கிருந்து புறப்பட்டு அடிப்படைப் பயிற்சி முகாமை வந்து சேர்ந்தார். மிகவும் களைப்புடன் இருந்தார். எங்கும் எறிகணைகள் மழை போல் பொழிந்த வண்ணம் இருந்தன. முள்ளிவாய்க்கால் கடலில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு பெண்களுக்கான அடிப்படைப் பயிற்சிப் பாசறையில் இருந்த பனங்கூடலுக்கு இடையில் ஒரு கொட்டகைக்குள் படுத்திருந்தார். களமுனையில் நித்திரையின்றி அவர் உழைத்தது அவரின் உடலில்தான் தெரிந்தது. உணர்வும் உத்வேகமும் இன்னமும் எந்த மாற்றமும் அடையவில்லை. ‘என்னக்கா? அண்ணா என்ன சொல்கிறார்?’ ஒரு இராணுவ வீரன் என்றவன் கடைசி வரைக்கும் எதிரிக்கு எதிராகப் போராடி வீரச்சாவை அடைய வேணும். அதுதான் அவனுக்கு அழகு அப்படித்தான் அண்ணா நினைக்கிறார். எவனிடமும் பணிந்து போயோ அல்லது கைப் பொம்மைகளாகவோ அண்ணா இருக்க விரும்ப மாட்டார்’ என்று கூறிவிட்டு நாங்கள் அனைவருமே இரண்டு மாதங்களாகக் குடித்துக் கொண்டிருந்த அதே அரிசிக் கஞ்சியைக் குடித்துவிட்டு எறிகணைகள் ஓலமிட்டுக் கொண்டிருக்க சற்று நேரம் பாயை விரித்து சாய்ந்து கொண்டார். களமுனையில் பல மணிநேரங்கள் நித்திரை கொள்ளாமல் எதிரியின் எறிகணைக்குள் மாட்டியிருந்து கண்விழித்து எங்களைக் காத்த அந்த உயிர் உறங்குவதை அன்றுதான் நாங்கள் கடைசியாகக் காணப் போகின்றோம் என்பது எங்களுக்கு நிச்சயம் தெரியாது. குறிசூட்டுத் திறனில் மிகவும் சிறப்பாகச் செயற்பட்டுத் தளபதிகளுக்கு இடையிலான போட்டிகளில் அடிக்கடி தேசியத் தலைவரிடம் இருந்து பரிசைப் பெற்றுக் கொண்டு வந்தார் பிரிகேடியர் துர்க்கா அக்கா. தனக்குக் கீழுள்ள போராளிகள் வேவுத் திறன், மறைந்திருந்து தாக்கும் பயிற்சி, வலிந்த தாக்குதல், ஆழ ஊடுருவும் தாக்குதல், பாதுகாப்புச் சமர் ஆகிய அனைத்திலும் ஆண் போராளிகளுக்கு சமமாக தங்களால் எல்லா விதத்திலும் களமுனையில் காட்ட முடியும் என உறுதியோடு நின்று நிரூபித்துச் சென்று விட்டுள்ளார் பிரிகேடியர் துர்க்கா. தலைவனின் ஆணையை அப்படியே ஏற்று நடத்தி வந்த அவரைப் பற்றி அவரின் வீரச்சாவின் பின்னர் ஒரு தனிப்பட்ட சந்திப்பில் தேசியத் தலைவர் அவர்கள் குறிப்பிடும்போது ‘எனக்கு விசுவாசமான தளபதிகளை நான் இழந்திட்டன்’ என்று குறிப்பிட்டிருந்தார். எங்கள் தலைவனின் தங்கையாக, பெண்புலிகளின் தளபதியாக, தன்னிகரற்ற ஒரு தலைவியாக விளங்கிய எங்களின் துர்க்கா அக்கா பிரிகேடியர் துர்க்காவாக 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் திகதி அதிகாலை வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். அவரின் வழிகாட்டுதலை ஏற்றுநின்று இறுதிச் சமரின் நான்கு மாதங்களில் களமாடி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட ஏனைய சோதியா படையணிப் போராளிகளான லெப். கேணல் அகநிலா, லெப்.கேணல் மோகனா, லெப்.கேணல் செங்கையாழினி, லெப்.கேணல் அரசலா, லெப்.கேணல் அறிவு, லெப்.கேணல் சோழநிலா, லெப். கேணல் வரதா, லெப்.கேணல் மொழி, மேஜர் அகல்மதி, மேஜர் விதுரா, மேஜர் செஞ்சுரபி, மேஜர் ஈழக்கனி, மேஜர் இசைபாடினி, மேஜர் இசையறிவு, மேஜர் கலைமகள், மேஜர் ஈழநிலா, கப்டன் அலையரசி ஆகியோருக்கும் புதிதாக இணைந்து மிகவும் தீர்க்கமாகத் துணிவுடன் செயற்பட்டு இறுதியாக பிரிகேடியர் துர்க்கா அவர்களினால் 2ம் லெப் தரம் வழங்கப்பட்டு வீரச்சாவடைந்த 2ம் லெப் தர்சினி மற்றும் மே மாதம் 15ம் திகதி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மூத்த போராளிகளான நயவாணி, கௌசலா மற்றும் இன்னமும் பெயர் குறிப்பிடப்படாத பல நூறு மாவீரர்களதும் கனவும் எங்கள் ஆன்மாவில் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும். நாடு விடுதலை அடையும் நாளில் அவர்களின் துயிலறைகளை அழகுபடுத்தி அலங்கரிக்கும் அந்த நாட்களே எங்களுக்கு வரக்கூடிய பொன்னான நாட்கள். கலை – https://www.thaarakam.com/news/60254
  20. ஆனந்தபுர மண்ணில் ஆட்லறி நிலைகளை உருவாக்கிய பிரிகேடியர் மணிவண்ணன்! Last updated Apr 3, 2020 தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்ட மணிவண்ணன். தொடக்க காலத்திலேயே கேணல் ராயு அவர்களுடன் இணைந்து தனது விடுதலையின் பணியை மேற்கொண்டிருந்தார். கேணல் ராயு அவர்களின் வீரச்சாவுக்கு பின்னர் கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதியாக தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்டிருந்தார். கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதியாக நியமிக்கப்பட்ட பிரிகேடியர் மணிவண்ணன் அவர்களின் செயர்ப்பாட்டுக் காலப்பகுதியில் தான் சிறிலங்காப்படைகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்லறித் தாக்குதலில் பாரிய இழப்புக்களை சந்தித்திருந்தது என்பது குறிப்பிடத் தக்ககது. பலாலித் தளம் மீதான ஆட்லறித் தாக்குதல்கள், முகமாலை – பளை மீதான தாக்குதல்கள் மற்றும் வவுனியா ஜோசப் தளம் மீதான ஆட்லறித் தாக்குதல்கள் அதே போன்று மன்னார் சிறிலங்கா படைத்தளம் மீதான ஆட்லறித் தாக்குதல்கள் என்று பிரிகேடியர் மணிவண்ணன் அவர்கள் கேணல் கிட்டுப் பீரங்கிப் படையணியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட காலப்பகுதியில் சிறிலங்கா படைத்தரப்பு பாரிய நெருக்கடிகளை சந்தித்திருந்தது உண்மையே. அதே போன்று முகமாலை சமர்க்களத்திலே ஆட்லறிகளின் நேரடி சூட்டின் மூலம் பல ராங்கிகளை அழித்ததும் இவரின் காலப்பகுதியிலே தான். விடுதலைப்புலிகளின் போராட்டவலுவை அடுத்த கட்ட பரிணாமத்திற்குள் நகர்த்திய அது மோட்டார் பீரங்கிகளும் ஆட்லறி பீரங்கிகளும் தான், ஆட்லறி பீரங்கிப்படையணி தளபதி பிரிகேடியர் மணிவண்ணனின் போராட்டவாழ்க்கையாக இருந்தது. முன்னேறுகின்ற படையினரின் வழங்கல் தளங்களையும், முதன்மையான படைத்தளங்களையும் தாக்கியழிக்கும் கடமையே கேணல் கிட்டுப் பீரங்கிப் படையணிக்கு வழங்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தொடக்க காலத்தில் இவ்வாறான பல தாக்குதல்களை கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணி மேற்கொண்டிருந்தாலும், போர் நெருக்கடியான காலங்களை சந்தித்திருந்த போதிலும் அதாவது வன்னிமண்ணை சிறிலங்காப் படைகள் முற்றுகையிட்டு மண்ணையும் மக்களையும் சுற்றிவளைத்திருந்த காலப்பகுதியில் கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணியின் செயற்பாடுகள் மாற்றமடைந்திருந்தன. அதாவது தொலைதூரத் தாக்குதலுக்கு பதிலாக இராணுவத்துடன் நேரடி சூட்டுத் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தன. இந்த வகையில் தான் புதுக்குடியிருப்பு மண் சிறிலங்கா படைகளின் வல்வளைப்புக்குள் சென்றுகொண்டிருந்தபோது நேரடியாகவே ஆனந்தபுர மண்ணிலே பல ஆட்லறி நிலைகளை உருவாக்கி நேரடியான பல தாக்குதல்களை படையினர் மீது ஏற்படுத்தி பல இழப்புக்களை ஏற்படுத்திய வண்ணம் இருந்தனர். அந்தக் களமுனைகளிலே போராளிகளுக்கு பிரிகேடியர் மணிவாணன் அவர்கள் கட்டளைகளையும் வழங்கிக்கொண்டிருந்தார். இந்த நிலையில்தான் சிங்களப் படையின் தாக்குதலில் ஆனந்தபுர மண்ணிலே பிரிகேடியர் மணிவண்ணன் அவர்களும் இன்னும் சில தளபதிகளும், போராளிகளும் தமிழீழ காற்றோடு காற்றாக கலந்துபோனார். https://www.thaarakam.com/news/60290
  21. சமர்க்களங்களின் துணை நாயகன் பிரிகேடியர் தீபன்! Last updated Apr 3, 2020 கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையை பிறப்பிடமாக கொண்ட தீபனின்(வேலாயுதபிள்ளை பகீரதகுமார்) இயக்கப்பெயர் சிவதீபன்.இவர் சமயங்களில் தவபாலசிங்கம் என்றும் அழைக்கப்பட்டார். யாழ் மாவட்டம் தென்மராட்சியின் வரணி தான் தீபனின் பூர்வீகமாகும். சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் விஞ்ஞான பீட மாணவனாகவிருந்த தீபன் பெற்ற க.பொ.த உயர் தர பெறுபேறுகள் அவருக்கு இலகுவாக பல்கழைக்கழக இடத்தைப் பெற்றுத்தந்திருக்கும் ஆனால் வரலாற்றுக் கடமையை உணர்ந்து போராளியானார் தீபன். தென்மராட்சிப்பிரதேசத்தின் முதலாவது பொறுப்பாளராக விளங்கிய மேஜர் கேடில்ஸின்(மகாலிங்கம் திலீபன் – கண்டாவளை) இளைய மச்சினனாகிய தீபனை இயக்கத்தில் சேர்த்தது கேடில்ஸ் என்று கூறப்படுகிறது. தீபனை இயக்கத்தில் சேர்த்த மேஜர் கேடில்ஸ் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி லெப். கேணல் பொன்னம்மான்,விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர், கப்டன் வாசு,லெப்.சித்தார்த்தன்(கேணல் சங்கரின் சகோதரன்) ஆகியோர் வீரச்சாவடைய காரணமாகவிருந்த‌ 14-02-1987 அன்று கைதடியிலே இடம்பெற்ற‌ வெடி விபத்தில் தானும் காற்றோடு காற்றாகிப் போனார். 1984 ன் முற்பகுதியில் தன்னை இயக்கத்தில் இணைத்துக்கொண்ட‌ பகீரதகுமார், ஆயுதப் பயிற்சி பெற்று தீபனாக மாறினார், இவருடைய தொடர்பாடல் குறிப்புப் பெயர் “தாங்கோ பாப்பா” ஆகும். இவர் புலிகளின் முன்னாள் துணைத்தலைவர் மாத்தையாவின் மெய்ப்பாதுகாவலராக நியமிக்கப்பட்டு பின்னர் பிரதான மெய்ப்பாதுகாப்பாளரானார். 1987 ம் ஆண்டு யூலை 29 ம் திகதி இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பின் இந்திய அமைதிப்படைக்கு எதிரான‌ அக்காலப்பகுதி சண்டையில், தீபன் கிளிநொச்சி இராணுவ பொறுப்பாளராகவும், பால்ராஜ் முல்லைத்தீவின் இராணுவ பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர். அக்காலத்தில் இந்தியப்படையினருக்கெதிரான அதிக தாக்குதல்கள் நடைபெற்ற மாவட்டங்கள் முல்லைத்தீவும் கிளிநொச்சியுமே ஆகும். இக்காலப்பகுதியில் தீபனின் இளைய சகோதரனாகிய வேலாயுதபிள்ளை சிவகுமாரும் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். தனது சகோதரனைப்போலவே வேகமாக வளர்ந்த கில்மன் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக நியமிக்கப்பட்டார். 1993ல் திருகோணமலைக்குப் பொறுப்பாளராக அனுப்பப்பட்ட கில்மன் 1994ல் நடைபெற்ற தவறுதலான வெடிவிபத்தில் லெப்.கேணல் கில்மனாக தன்னை ஆகுதியாக்கிக் கொண்டார். 1988ம் ஆண்டின் பிற்பகுதியில் மன்னார் நீங்கலான வன்னிப்பகுதியின் இராணுவப் பொறுப்பாளராக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். துணை இராணுவப் பொறுப்பாளராக தீபன் இருந்தார். இந்த இரண்டு வீரர்களும் தமது போராளிகளை முன்னின்று வழி நடத்தி பல வெற்றிச் சமர்களுக்கு வித்திட்டார்கள். இந்திய அமைதிப்படை 1990ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஈழத்தை விட்டு அகன்றது. மீண்டும் ஜூன் மாதமளவில் இலங்கைப் படைகளுடனான 2ம் ஈழப்போர் ஆரம்பமானது. பால்ராஜின் தலைமையின் கீழ் புலிகள் பல வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டார்கள், அவற்றில் பிரதானமானவை மாங்குளம் மற்றும் கொக்காவில் முகாம் தகர்ப்பாகும். பால்ராஜும் தீபனும் 1991ல் மேற்கொள்ளப்பட்ட‌ ஆனையிறவு முகாம் மீதான ஆகாய கடல் வெளிச்சமரில் பங்கு பற்றி குறிப்பிடத்தக்களவான வெற்றியைப் பெற்ற போதும் முகாம் தகர்ப்பு என்ற இலக்கு எட்டப்படவில்லை. 1992ல் உருவாக்கப்பட்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். தீபன் வன்னிப்பகுதியின் தளபதியானார். இவர்களின் இணை மண்கின்டிமலை மீதான இதயபூமி நடவடிக்கையில் பங்கு பற்றி புலிகளுக்கு மகத்தான வெற்றியை தேடித்தந்தது. தீபனின் திறமையும் வீரமும் வெளிப்பட்ட இரு சமர்கள் யாழ்தேவி மற்றும் தவளைப்பாச்சல் ஆகும். ஆனையிறவிலிருந்து வடக்காக‌ யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்ட யாழ்தேவியை இடை நடுவில் தடம்புரள் வைத்த பெருமை தீபனையே சாரும். 1993 செப்டெம்பரில் இடம்பெற்ற இந்த இராணுவ நடவடிக்கையின் முதல் நாள் சண்டையிலேயே பால்ராஜ் காயம் காரணமாக களத்திலிருந்து அகற்றப்பட்டார். அதன் பின்னர் தீபனே முறியடிப்புச்சமருக்குத்தலைமை தாங்கினார். தீபனின் தந்திரத்தின்படி மண் கும்பிகளுக்குள் மணித்தியாலக்கணக்காக காத்திருந்த புலிகள் முன்னேறிய‌ இராணுவம் மிக அருகில் வந்ததும் திடீர்த் தாக்குதலைத்தொடுத்து அவர்களை நிலை குலைய செய்ததுடன் புலிகள் இரண்டு ரி‍ 55 டாங்கிகளை கைப்பற்றுவதற்கு வழி சமைத்துக்கொடுத்தது. இந்த‌ இரண்டு ரி‍ 55 டாங்கிகளில் ஒன்றை மண்ணுக்குள் புதைத்து பயன்படுத்தியே இரண்டு டோரா பீரங்கிப் படகுகளை சாலைப்பகுதியில் ஒரே நாளில் புலிகள் தகர்த்து சாதனை புரிந்தனர். 1993 நவம்பரில் நடைபெற்ற ஈருடகச் சமரான தவளைப்பாய்ச்சல் நடவடிக்கையில் பூநகரி முகாமை தீபன் தலைமையிலான போராளிகளும் நாகதேவன்துறை கடற்படைத்தளத்தை பானு தலைமையிலான போராளிகளும் தகர்த்தனர். இங்கே கைப்பற்றப்பட்ட 5 நீருந்து விசைப்படகுகளே கடற்புலிகள் தோற்றம் பெற்று பலம் பெற உறுதுணையாக இருந்தது என்றால் மிகையாகா. 1994ல் தீபன் யாழ்ப்பாணத்துக்கு மாற்றப்பட்டார். அக்காலப் பகுதியில் சந்திரிகா அம்மையார் தலைமையிலான இலங்கை அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் பேச்சு வார்த்தை நடந்தது. 1995ல் முறிவடைந்த பேச்சு வார்த்தை 3ம் ஈழப்போருக்கு வழி சமைத்தது. 1995ல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இராணுவத்தினரின் முன்னேறிப் பாய்தலுக்கெதிரான புலிப்பாய்ச்சலிலும் இடிமுழக்கம் நடவடிக்கைக்கெதிரான சண்டையிலும் தன் காத்திரமான பங்களிப்பை வழங்கினார். சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையை ஆரம்பத்தில் பால்ராஜ் சொர்ணம் தலைமையிலும் பின்னர் தீபன் பானு தலைமையிலும் புலிகள் எதிர்த்துப் போரிட்டனர். தீபன் தலைமையிலான போராளிகள் நவம்பர் 27 மாவீரர் நாள் முடியும் வரை யாழ்ப்பாணம் படையினர் கைகளில் வீழ்வதை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தினர். யாழ்ப்பாணத்தை விட்டு 1996 ஏப்ரல்‍ மே காலப்பகுதியில் வெளியேறிய புலிகள் வன்னியை தளமாக்க முடிவு செய்தபோது அதற்குப் பெருந்தடையாக இருந்தது முல்லைத்தீவு இராணுவ முகாம் ஆகும். அம்முகாமை அகற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர் புலிகள். தீபனை அழைத்த தலைவர் முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான ரெக்கியை ஆரம்பவிக்கவும் தாக்குதல் திட்டத்தை தீட்டவும் உத்தரவிட்டார். தீபனின் திறமையான திட்டத்தினால் 1996 ஜூலை 18ல் முல்லைத்தீவு இராணுவ முகாம் தகர்க்கப்பட்டபோது 1000க்கும் மேற்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இங்கே கைப்பற்றப்பட்ட இரண்டு 122mm ஆட்லறி பீரங்கிகளே பின்னாளில் புலிகள் மரபு ரீதியாக தமது இராணுவத்தைக் கட்டமைக்க உதவின. ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கை 1997ல் ஆரம்பிக்கப்பட்டபோது புளியங்குளத்தை தக்கவைக்கும் பொறுப்பு தீபனிடம் ஒப்படைக்கப்பட்டது. ஓமந்தையையும் நெடுங்கேணியையும் இலகுவாக கைப்பற்றிய இராணுவம் புளியங்குளத்தை கைப்பற்ற முடியாமல் மாற்றுப்பாதையில் கனகராயன்குளத்தையும் கரிப்பட்டமுறிப்பையும் கைப்பற்றியபோது புளியங்குளம் கைவிடப்படவேண்டியிருந்தது. இதன்போது தீபனின் நம்பிக்கைக்குரிய தளபதிகளாக விக்கீஸ், அறிவு மற்றும் லோரன்ஸ் விளங்கினார்கள்.இந்தக்கூட்டணியின் கண்டு பிடிப்பான மண் அணைக்கட்டும் அகழியுமே இலங்கை இராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது என்பது யாவரும் அறிந்ததே. இன்றைய தேச நிர்மாணம் மற்றும் கட்டமைப்பு அமைச்சராக இருக்கும் விநாயகமூர்த்தி முரளீதரன் என்கின்ற கருணா ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கை காலத்தில் தானே வன்னிப்பகுதியின் கட்டளைத்தளபதியாக நியமிக்கப்பட்டேன் என்று கூறி வருகிறார். ஆனால் அவர் தீபனுடன் இணைந்தே இந்தப் பொறுப்பை வகித்தார் என்பதும் இவர் தொடர்பாடல் மற்றும் ஒருங்கிணைப்பு வேலைகளை கவனித்தபோது ஒட்டுமொத்த பொறுப்பாளராக இருந்தவர் தீபன் என்பதையும் குறிப்பிடத்தவறிவிட்டார். 1998ல் ஜெயசிக்குரு கைவிடப்பட முக்கிய காரணமாக இருந்தது, சத்ஜெய நடவடிக்கையின் மூலம் படையினர் கைப்பற்றி வைத்திருந்த கிளிநொச்சியை ஓயாத அலைகள்‍ 2ன் மூலம் புலிகள் மீளக்கைப்பற்றிக்கொண்டதே. இத்தாக்குதலிலும் தீபனின் பங்களிப்பு மிகக்காத்திரமானதாகும். 1999ல் புலிகள் ஓயாத அலைகள் 3ஐ ஆரம்பித்து படையினர் ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கையின் மூலம் 18 மாதங்கள் கஷ்டப்பட்டு பிடித்து வைத்திருந்த பகுதிகளை வெறும் மூன்றே நாட்களில் வவுனியா வரை விரட்டப்பட்டனர். அதனை தொடர்ந்து மணலாறு, மன்னார் பிரதேசங்களிலிருந்து ஓயாத அலைகள் படையணிகளால் விரட்டப்பட்டனர் ஓயாத அலைகள் 3ன் முத்தாய்ப்பாக அமைந்தது ஆனையிறவு முகாம் கைப்பற்றலாகும். 1991ல் ஆகாய கடல் வெளிச் சமரில் பெற்ற பின்னடைவும் படிப்பினைகளும் பின்னாளில் உலகமே வியக்கும் வண்ணம் இடம்பெற்ற குடாரப்புத் தரையிறக்கத்துக்கு வழி சமைத்தது எனலாம். இத்திட்டத்தை தலைவர் சமர்க்களங்களின் நாயகன் பால்ராஜுக்கு விளக்கியபோது சற்றுத்தயங்கினாராம் பால்ராஜ். பின்னர் தீபன் செய்ய வேண்டிய கடமைகளை விளக்கியபின்பு தீபன் மீதிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கை காரணமாக களத்தில் இறங்கினாராம் பால்ராஜ். குடாரப்புத் தரையிறக்கம் இடம்பெற்றபின் செம்பியன்பற்றிலிருந்து வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு வரை நிலை கொண்டிருந்த படையினரை விரட்டி அடித்தும் ஆனையிறவு முகாமை பின் பக்கமாக தாக்கியும் ஆனையிறவு முகாம் கைப்பற்றலில் முக்கிய பங்காற்றினார் தீபன். 2000 ஏப்ரல் 24 ல் இடம்பெற்ற ஆனையிறவை மீளக் கைப்பற்றும் நோக்கிலான படையினரின் தீச்சுவாலை(அக்னிகீல) நடவடிக்கையை சின்னாபின்னமாக்கியது தொட்டு 2009 ஜனவரி வரை 55ம் மற்றும் 53ம் படையனியின் ஆனையிறவை மீளக் கைப்பற்றும் எத்தனையோ முயற்சிகளை தவிடு பொடியாக்கியவர் வட போர்முனைக் கட்டளைத்தளபதி தீபன். அதே போன்று கிளிநொச்சியை சுற்றி 18km நீளமான ‘L’ வடிவிலான மண் அணைக்கட்டு அமைத்து கிளிநொச்சியின் வீழ்ச்சியை பல மாதங்கள்(2009 ஜனவரி 1 வரை) தள்ளிப்போட்டவர் தீபன். கடைசியாக புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தில் ஏப்ரல் 1ம் திகதி பல படையணித்தளபதிகளுடன் சேர்ந்து படையினருக்கெதிராக பாரிய முறியடிப்புச் சமர் ஒன்றைத் திட்டமிட்டார் தீபன். ஆனால் காலன் வேறு விதமாக திட்டமிட்டான் போலும். ஏப்ரல் 1ம் திகதி அன்றும் 2ம் திகதி அன்றும் தீபனுக்கு நெஞ்சிலே காயம் பட்டது.ஆனாலும் தொடர்ந்து போராடிய தீபன் எதிரியின் நயவஞ்சகமான நச்சுக்குண்டுத்தாக்குதலில் வீரகாவியமானார். 25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த இந்தப் புயல் ஏப்ரல் மாதம் 4ம் திகதி புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே நிரந்தரமாக அடங்கிப் போனது. சமர்க்களங்களின் நாயகன் பால்ராஜ் என்றால் எந்தவித சந்தேகங்களும் இன்றி சமர்க்களங்களின் துணை நாயகன் இந்த தீபன் அம்மான் தான். பால்ராஜ் எனும் பாசறையிலே வளர்த்தெடுக்க‌ப்பட்ட இந்த கண்டாவளை கண்டெடுத்த கண்மனி பிரிகேடியர் தீபன், பால்ராஜ் மே 2008ல் மறைந்தபோது அழுதபடியே சொன்ன வார்த்தைகள் இவை “என்னை அருகிலே வைத்திருந்து தளபதியாக வளர்த்தெடுத்த தளபதி, அவர் என் போர் ஆசான்.” தமிழனை தலை நிமிர வைத்த இந்த இரண்டு வீரர்களும் இன்று நம்மிடையே இல்லை என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அவர்களின் நினைவுகள் எம்மனங்களில் நீங்காதிருக்கும் என்பதும். -சாணக்கியன்- https://www.thaarakam.com/news/60261
  22. சண்டை முடியாமல் இந்த இடத்தை விட்டு நான் நகர மாட்டேன்! – பிரிகேடியர் விதுசா.. பிரிகேடியர் விதுசா வார்த்தைகளால் சொல்லிவிட முடியாத ஆளுமையின் வடிவம். பார்த்தவுடனே தளபதி என்கின்ற மரியாதை பார்ப்பவர் அனைவருக்குமே வந்துவிடும். உலகமே விழிநிமிர்த்திப் பார்க்கும் அளவுக்குப் பெண்புலிகளை வழிநடத்தி, வான்முட்டும் வெற்றிகளை, மெய்சிலிர்க்க வைக்கும் அற்புதங்களைப் படைக்க வைத்த இரண்டாம் லெப். மாலதி படையணியின் சிறப்புத்தளபதி. ஓப்பரேசன் லிபரேசனில் தொடங்கிய அவரது களமுனைப் பயணம் விடுதலைப்புலிகளின் இறுதி முற்றுகைச் சமராக இருந்த ஆனந்தபுரத்தில் தனது இறுதி மூச்சைத் தமிழீழ மண்ணுக்காய் அர்ப்பணிக்கும் வரை ஓய்வு என்பதையே அறியாத உழைப்பாளி. எப்போதும் அவரது பேச்சும் மூச்சும் தலைவனின் எண்ணங்களைத் தாங்கியதாகவே இருந்தது. போராளிகளோடு உரையாடும்போதுகூட ‘அண்ணை எதை நினைக்கின்றாரோ அதை நாங்கள் மிகச் சிறப்பாகச் செய்து முடிக்க வேண்டும்” என்ற உறுதி மட்டுமே இருந்தது. விடுதலைப் போராட்டத்தில் மகளிர் படையணி பங்கேற்ற பெரும்பான்மைக் களங்களில் எல்லாம் கட்டளைத் தளபதியாய் நின்று போர் அரங்குகளை வழிப்படுத்துவார். தொலைத் தொடர்புக் கருவி தாங்கிவரும் அவர் குரல் தனித்து நின்றுகூட போராளிகளைச் சாதிக்க வைக்கும் துணிச்சலை அள்ளித்தரும். அந்தக் கட்டளைகளில் இருக்கும் நேர்த்தியும் தெளிவும் புதிய போராளிகளைக் கூட களமுனையின் சாதனைப் புலிகளாய் உருவாக்கிய சம்பவங்களோ ஏராளம். அவ்வளவு போரியல் நுட்பமும் போரியல் தெளிவும் மிக்க போராளி. எல்லோருமே தமது கடைக்குட்டி சகோதரர்களோடு அதிக அன்பு வைப்பது வழமை. விதுசா அக்காவுக்கும் தனது தம்பி மீது அளவுகடந்த பாசம். அவனும் காலஓட்டத்தில் விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்திருந்தான். ஜெயசிக்குறு களமுனை. எதிரியின் உடைப்புச் சமரொன்று. அதனை முறியடிப்புச் செய்யும் களத்தில் கட்டளைகளைப் பிறப்பித்தபடி விதுசா அக்கா நிற்கின்றார். அதே களமுனையில் அவரது தம்பியும் நிற்கின்றான். தொலைத்தொடர்பில் செய்தி வருகின்றது. அவரது சகோதரன் வீரச்சாவடைந்து விட்டதாக, பின்னரங்குக்கு வந்தால் வித்துடலை அனுப்ப முதல் பார்க்கலாம் என, விதுசா அக்காவிடம் செய்தியைச் சொன்னபோது ‘சண்டை முடியாமல் இந்த இடத்தை விட்டு நான் நகர மாட்டேன். தன்னைப் பார்க்க வேண்டாம் வித்துடலை அனுப்புங்கள்” என்று கூறிவிட்டு, அவர் தனது அன்புத் தம்பியின் வீரச்சாவைத் தெரிந்த பின்னரும் உறுதி தளராது மிகத்தெளிவாகக் கட்டளைகளைப் பிறப்பித்து அந்தச் சமரை வெற்றிகரமாக வழிநடத்தினார். இதுதான் விதுசா அக்கா. போர்க்களத்திலே தனது பெரும் பகுதி வாழ்க்கையைக் கழித்த பெண்புலிகளின் பெருந்தளபதி ஆனந்தபுரத்தில் விடுதலைக்கு விதையாகிப் போனார். “தாரகம் இணையத்திற்க்காக” அபிராமி விடுதலைப் புலிகளின் மகளீர் படைப் பிரிவின் தோற்றமும் வளர்ச்சியும் எழுச்சியும் எமது இயக்கம் படைத்த மாபெரும் சாதனைகளில் ஒன்று. ஒரு புதுமைப் பெண்ணை, புரட்சிகரப் பெண்ணை எமது விடுதலை இயக்கம் படைத்திருக்கிறது. இந்த முகவுரை விதுசா பற்றிய நினைவுப் பகிர்வை அறிமுகஞ் செய்யப் போதுமானது. குருக்கள் கந்தையா, ஞானாம்பிகை இணையருக்கு ஞானபூரணி என்ற இயற்பெயர் பூண்ட விதுசா மூத்த மகளாக 1969 செப்ரம்பர் 29ம் நாள் கரவெட்டி கப்புதூவில் பிறந்தார். இவர் தனது பதின்ம வயதில் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரம் வர்த்தகப் பிரிவில் படிக்கும் போது புலிகள் இயக்கத் தொடர்பு ஏற்பட்டது. இக்காலப் பகுதியில் அவர் விடுதலைப் புலிகளின் பகுதி நேரப் பணியாளராக இணைந்தார். 1986 மே மாதத்தில் விடுதலைப் புலி உறுப்பினராக இணைந்தார். அவர் வாழ்ந்த காலம் 40 வருடம். வீரச்சாவடைந்த நாள் 2009 ஏப்ரல் 04ம் நாள். 2001-2009 காலத்தில் அவரோடு நெருங்கிப் பழக நேர்ந்தது. அவருக்கு இலக்கிய தாகம், உலக நிகழ்வுகளை நகர்த்தும் அடிப்படைகள் பற்றிய ஆர்வம், இராணுவத் தொழில்நுட்பத் தகவல்கள் திரட்டும் வேட்கை என்பன மிகுதியாக இருந்தன. உயர் கல்வி கற்றுத் தேறவில்லை என்ற ஏக்கமும் இருந்தது. இயக்கத்தில் இணைந்த சிறிது காலம் அவர் சுதந்திரப் பறவைகள் பிரிவில் இருந்தபடி கிராம ரீதியாகக் கருத்தூட்டல் பணிகளில் ஈடுபட்டார். உற்ற தோழிகளான லெப் நித்தியா பவானி, மேஜர் சஞ்சிகா கலை ஆகியோர் இந்தப் பிரிவின் சுகாதரப் பணிகள், எழுச்சிக் கருத்தரங்குகள் ஆகியவற்றை அவருடன் நடத்தினர். விடுதலைப்புலிகள் மகளீர் 2ம் அணியில் விதுசா ஆயுதப் பயிற்சி பெற்றார். 1987ல் சிங்கள இராணுவம் நடத்திய ஒப்பரேசன் லிபரேசன் என்ற வடமராட்சியைக் கைப்பற்றும் நடவடிக்கையில் அவர் தனது போராட்ட வாழ்வைத் தொடங்கினார். இந்தியப் படைகள் வந்தபோதும் அவற்றிற்கு எதிரான கோப்பாய்ச் சமரில் அவர் முக்கிய பங்கேற்றார். இதன் போது முதலாவது பெண் மாவீரர் மாலதி 10.10.1987ம் நாள் வீரச்சாவடைந்தார். அதன் பிறகு புலிகள் மேற்கொண்ட தந்திரோபாயப் பின்வாங்கலில் வன்னி நிலத்திற்குச் சென்றார். எம் தலைவர் அவர்கள் வழிகாட்டலில் பெண் போராளிகளுக்குப் பயிற்சி வழங்கும் பணியில் வன்னியில் ஈடுபட்டார். பலவீனமான எமது இனத்தின் பலமான பாதுகாப்பு அரணாக அவர் பெண் போராளிகளை உருவாக்கினார். 1988ம் ஆண்டுப் பிற்பகுதியில் யாழ் சென்ற மகளீர் அணியுடன் விதுசா சென்றார். யாழ் குடா முழுவதும் இந்திய இராணுவம் செறிவாக நின்ற காலமாயினும் அவரும் தோழிகளும் புதிய பெண் போராளிகளை இணைப்பதில் தீவிரமாக ஈடுபட்டனர். பொறுப்புக்களைச் சுமக்கும் தகுதி பெற்ற அவர் 3ம், 4ம் மகளீர் அணிகளை உருவாக்கி அவற்றை வன்னிக்கு வழிநடத்திச் சென்றார். அங்கு களமுக அடிப்படைப் பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றினார். விடியல் பாசறையின் பொறுப்பாசிரியராக அவர் தனது ஆளுமையை வெளிப்படுத்தினார். 2ம் கட்ட ஈழப்போர் தொடங்கிய பிறகு கொக்காவில் படை முகாம் தாக்குதலில் பங்கேற்ற விதுசா காலில் காயமடைந்தார். தேறியபின் ஆனையிறவு, யாழ் கோட்டை, பலாலி இராணுவ முகாம்களைச் சுற்றிக் காவல் பணி செய்தார். 1990 கார்த்திகையில் நடந்த தச்சன்காடு மினி முகாம் தாக்குதலில் நெடுநாட் தோழி மேஜர் சஞ்சிகா கலை வீரச்சாவடைந்தார். இந்தப் இழப்பு அவரைப் பலமாகத் தாக்கியது. அதை எண்ணும் போது என் இதயம் வெடித்துவிடும் போல் இருக்கும் என்று அவர் சொன்னார். 1991ல் நடந்த ஆனையிறவுச் சமரில் மாதர் அணியின் ஒரு பகுதித் தளபதியாயகப் பதவி உயர்ந்தார். அவருடைய திறமைக்கு தலைவர் அவர்களின் பாராட்டுக்கள் கிடைத்தன. தலைவரின் சிந்தனைக்குச் செயல் வடிவம் கொடுப்பதில் வல்லவர் என்ற சிறப்பைப் பெற்றார். தலைவர் அவர்களின் இலட்சியக் கனவான தமிழீழ உருவாக்கத்திற்கு அவர் அல்லும் பகலும் உழைத்தார். அவருக்கு சொந்த வாழ்க்கையின் எதிர்காலம் பற்றிய சிந்தனை இருந்ததில்லை “அண்ணையின் கனவை நிறைவேற்றுவது” ஒன்று தான் அவருடைய வாழ்க்கைக் குறியாக இருந்தது. மகளீர் அணியின் துணைத் தளபதியாக நியமிக்கப்பட்ட விதுசா 1992 கார்த்திகையில் இடம் பெற்ற பலாலி 180 காவலரண் தாக்குதலில் காலிலும் தலையிலும் விழுப்புண் அடைந்தார். அறிவிழந்தாலும் கட்டளைகளைப் பிறப்பித்தபடி இருந்ததாக அவர் பிற்காலத்தில் சொன்னார். 1993நவம்பர் 10-13ல் நடந்த பூநகரி ஒப்பரேசன் படை நடவடிக்கையில் அவர் பிற்களப் பணியில் ஈடுபட்டார். அதே வருடம் முதலாவது பெண் மாவீரர் மாலதியின் பெயரில் உருவாக்கப்பட்ட மாலதி படையணியின் கட்டளைத் தளபதியாக கேணல் என்ற பதவியோடு நியமிக்கப்பட்டார். சந்திரிக்கா அரசின் சமாதனத்திற்கான போர் அடுத்த வருடம் தொடங்கிய போது தலைமைப் பொறுப்பேற்று மாலதி படையணியை வழி நடத்தினார். அவருடைய களப் பயணம் 1993 தொடக்கம் வீரச்சாவடையும் 2009 வரை ஒரு போதும் ஓய்ந்ததில்லை. யாழிலும் சரி வன்னியிலும் சரி எண்ணற்ற சமர்களில் பங்காற்றினார். இதயபூமி, இடிமுளக்கம், இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிர்ச்சமரை வழிநடத்தியதோடு புலிப்பாய்ச்சல் ஆகியவற்றில் திறம்படச் செயற்பட்டார். யாழ் தீபகற்பத்தை சிங்கள இராணுவம் கைப்பற்றுவதற்கு நடந்த சூரியக்கதிர் சமரில் அவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. புலிகளின் போராட்ட வரலாற்றில் மிக நெடிய காலம் தொடர்ந்த ஜெயசிக்குறு எதிர்ச்சமரிலும் அவர் அரும்பணியாற்றினார். 1998ல் ஓயாத அலை 2 படை நடவடிக்கையில் முக்கிய பங்கேற்ற அவர் கிளிநொச்சி புலிகள் வசம் வீழ்ந்த போது தேசியக் கொடியை களத்தில் அவரே ஏற்றினார். இது அவருடைய போராட்ட வாழ்வின் உச்சமாகக் கருதப்படுகிறது. 1999 செப்ரம்பர் 18ம் நாள் அவர் தனது இளைய சகோதரன் போராளி விதுசன் கேதீஸ்வரனைக் களத்தில் இழந்தார். ஓயாத அலை 3, தீச்சுவாலை முறியடிப்புச் சமர் ஆகிய வற்றில் அவருடைய வழி நடத்தல் பிரமிப்பூட்டும் விதத்தில் அமைந்தன. சிங்கள இராணுவத்திற்கும் எமக்கும் இடையில் 2008 தொடக்கம் 2009 வரை நடந்த சமச்சீரற்ற போரில் தம்பனையில் இருந்து ஆனந்தபுரம் மந்துவில் வரை விதுசா ஓய்வின்றிக் களமாடினார். உணவின்றி உறக்கமின்றி எதிரியை விரட்டி அடிப்பதில் குறியாக இருந்தார். 2009 சனவரி 26ம் நாள் அவரை சந்திக்க நேர்ந்தது. உடல் மெலிந்து கண்கள் குழிவிழுந்தாலும் உறுதி தளராமல் இருந்தார். எதிரிகளின் சூழ்ச்சியால் ஆனந்தபுரம் சமரில் வீரச்சாவடைந்தார். அவருக்கு பிரிகேடியர் பதவி வழங்கப்பட்டது. அவருடைய வித்துடலைப் பார்க்காமல் விதை குழியில் ஒரு பிடி மண் போடாமல் இருக்கும் எம் போன்றோர் அவருடைய நினைவுகளைச் சுமக்கின்றோம். – விதுரன்- https://www.thaarakam.com/news/60237
  23. யுத்தகளத்தில் தீரமுடன் போராடிய பிரிகேடியர் ஆதவன்.! அது ஓர் அடர்ந்த வனம். அந்த வனத்தின் நடுவே சிறியதோர் வெட்டை. அந்த வெட்டை வெளியில் என்றுமில்லாதவாறு போராளிகள் பலர் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தார்கள். அனைத்துத் தளபதிகளுக்கும் குறிபார்த்துச் சுடும் போட்டிக்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தது. இனம் புரியாத மகிழ்சியோடும், ஒரு விதமான படபடப்போடும் அனைத்துத் தளபதிகளும் தயாராகிக்கொண்டிருந்தார்கள். “ஊஊ” என்ற ஓசையை கிளப்பியபடி விரைந்து வந்த வாகனத்தில் இருந்து இறங்கிய தலைவரை உற்சாகத்தோடு வரவேற்கின்றார்கள் தளபதிகளும், போராளிகளும். எப்போதும் தலைவரோடு கூடவே கடாபி அண்ணையையும் வரவேற்றவர்கள், தமக்குள் பேசிக்கொள்கிறார்கள் “கடாபி அண்ணை சூட்டுப்போட்டியில் கலந்து கொண்டால் தாங்கள் எப்படி வெல்லுறது…” அனைத்துத் தளபதிகளுக்கும் போட்டிக்கான விதிமுறைகள் கூறப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்துக்குள் 10 ரவைகளையும் குறுப்பீங்காய்(துல்லியமான சூட்டு இடைவெளி) அடிப்பவர்களுக்கே முதலிடம். ஒவ்வொருவரும் தங்களுக்கான ரவைகளை அடித்து முடித்தபோது இறுதி சூட்டாளரான கடாபி அண்ணை துப்பாக்கியைத் தூக்கி இலக்கைக் குறிபார்க்கிறார். அனைத்துத் தளபதிகளும் அவரையே கண்ணை இமைக்காமல் பார்க்கின்றனர். கண் இமைக்கும் நேரத்துக்குள் 10 ரவைகளையும் அடித்து விட்டு, கடாபி அண்ணை நிமிரும் போது, கடாபி அண்ணையும் “ஸ்கோரை” (பெறுபேரு) பார்ப்பதற்காக அனைவரும் தலைதெறிக்க ஓடுகின்றனர். “ஒரு ரவுண்ட்ஸ் மட்டும் தான் பிடிச்சிருக்கு” என்று முதல் பார்த்த கமல் சொல்ல, அதைத் தொடர்ந்து எல்லோரும் அதையே சொல்ல, தலைவர் அவர்கள் இலக்கின் பின்பக்கம் செல்கின்றார். என்ன அதிசயம் அனைவரும் பிரமித்துப்போனார்கள். ஒரு ரவை போன அதே பாதையால் பத்து ரவைகளும் போயிருக்கின்றன. கடாபி அண்ணையை அருகழைத்த தலைவர் அவர்கள் ஆரத்தழுவிக்கொண்டார். ஒரு தாய் சாதனை படைத்த தன் பிள்ளையை அணைத்த்துக் கொள்வது போல. அனைவராலும் பிரமிப்போடும் பெருமையோடும் நோக்கப்படும் ஆதவன் என்றளைக்கப்படும் கடாபி அண்ணையின் சாதனைகள் ஒன்றல்ல இரண்டல்ல ஓராயிரம் சாதனைகள். சாதாரண மனிதர்கள் நினைத்துக்கூட பார்க்கமுடியாத அளப்பெரும் தியாகங்களையும் சாதனைகளையும் புரிந்துவிட்டு விழி மூடித் துயில் கொள்ளும் இந்த மாவீரனின் வரலாற்றின் சிறு பகுதியை இங்கு தருகின்றேன். வடமராட்சி என்ற அழகிய ஊரில் 05 சகோதரர்களுக்கு மூத்தவறாகப் பிறப்பெடுத்தவர்தான் கடாபி அண்ணை. வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்த அவருடைய குடும்பத்தின் சுமையை சிறுவயதிலே சுமக்கும் நிலை கடாபி அண்ணைக்கு உருவாகிறது. தந்தையின் வருமானத்தைக் கொண்டு தேவைகளைப் பூர்த்தி செய்யமுடியாமல் திண்டாடிய அம்மாவை சாமதானப்படுத்திய 5ம் வகுப்பு படிக்கும் 11 வயதுச் சிறுவனாகிய கடாபியண்ணை, தன்படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, தந்தையுடன் இணைந்து பேக்கரி (வெதுப்பகம்) வேலைக்குச் செல்கிறார். பகல் முழுதும் ஓய்வின்றி பேக்கரியில் உழைத்துவிட்டு, இரவு நேரங்களில் “ஐஸ்க்ரீம் கொம்பனி” ஒன்றில் வேலைக்குச் செல்கிறார். இரவு பகல் பாராது உழைத்துக் கொண்டிருந்த கடாபி அண்ணைக்குக் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் தியட்டருக்குப் போய் ஆங்கிலச் சண்டைப் படங்களைப் பார்ப்பதே இவரின் பொழுதுபோக்காகின. தன் குடும்பத்தின் முன்னேற்றத்துக்காக உழைத்துக் கொண்டிருந்த கடாபி அண்ணைக்கு மறைந்து வாழும் சில விடுதலைப்புலி உறுப்பினர்கள் அறிமுகமாகிறார்கள். அவர்களுடைய கொள்கைப் பிடிப்பினாலும், இலட்சியப் பற்றினாலும் ஈர்க்கப்பட்ட கடாபி அண்ணை, அப் போராளிகளுக்குப் பல வழிகளில் உதவி புரிகின்றார். எதிரியை உளவு பார்ப்பது, உணவுகள் எடுத்துக் கொடுப்பது, போராளிகள் மறைந்து வாழும் இடங்களில் சாதாரண மாணவன் போல காவல் கடமைகளில் ஈடுபடுவது, தகவல்களைப் பறிமாறுவது போன்ற பணிகளின் மூலம் இவரின் ஆரம்பக் கட்ட விடுதலைப் பணி ஆரம்பமாகியது. தமிழ் மக்களுக்கான விடுதலையின் தேவையை மனசார உணர்ந்து கொண்ட கடாபி அண்ணை அவர்கள் முழுநேர உறுப்பினராக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் தன்னை இணைத்துக் கொள்கிறார். போராளிக்குறிய முழுமையான பயிற்சிகளைப் பெறுவதற்காக இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இவர், 1984ம் ஆண்டு 6வது பயிற்சிப்பாசறையில் பயிற்சியினை ஆரம்பிக்கின்றார். பிருந்தன் மாஸ்டர், பிரிகேடியர் பால்ராஜ், யான் அண்ணை என இன்னும் பல வீரர்களோடு இவரும் ஒருவராகினார். பாலகப் பருவத்திலே பல கஸ்ரங்களைத் தாங்கி, ஓய்வின்றி உழைத்த கடாபி அண்ணாவுக்கு பயிற்சிகள் எதுவும் கடினமாகத் தெரியவில்லை. பயிற்சிகளின் பிரதான பயிற்சியான சூட்டுப் பயிற்சியின் முதல் நாளே இலக்கின் நடுப்புள்ளியில் குறிபார்த்துச் சுட்டு பயிரற்சிப் பொறுப்பாளர் பொன்னம்மான் அண்ணாவின் பாராட்டைப் பெற்றதோடு மட்டும் நின்றுவிடாது, தொடர்ந்து வந்த நாட்களில் பயிற்சிக்காகக் கொடுக்கப்பட்ட அத்தனை ரவைகளையும் இலக்கின் நடுப்புள்ளியில் சுட்டு சிறந்த சூட்டாளராக தலைவர் அவர்களால்த் தெரிவு செய்யப்படுகிறார். கடாபி அண்ணையின் ஒழுக்கத்தையும், நேர்மையையும், திறமையையும் இனங்கண்டு கொண்ட தலைவர் அவர்கள் அவரை தன்னுடைய மெய்ப்பாதுகாவலராக ஆக்கியதோடு விமான எதிர்ப்பு ஏவுகணைகளைச் சுடும் சிறப்புப் பயிற்சிக்காகவும் தெரிவு செய்யப்பட்டார். சாதாரணப் போராளியாக தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் தனது பணிகளை ஆரம்பித்த தளபதி கடாபி அண்ணா அவர்கள் கடின உழைப்பால் தனக்கான தகமைகளை வளர்த்துக்கொண்டு உயரிய இராணுவத் தளபதியாக உருவெடுத்தார். 1986ம் ஆண்டுக் காலப் பகுதியில் இந்தியாவிலிருந்து மாணலாற்றுக்கு வந்த கடாபி அண்ணை அவர்கள், தலைவரின் நேரடி நெறிப்படுத்தளின் கீழ் பணிபுரிந்தார். இலங்கை இராணுவம், இந்திய இராணுவம் என மாறி மாறி தலைவரை உயிருடன் பிடிக்க முயன்று தோற்றுப்போன அத்தனை நடவடிக்கைகளையும் முறியடித்துப் போராடி தலைவரைப் பாதுகாத்த வீரமும் விவேகமும் கொண்ட போராளிகளில் கடாபி அண்ணையும் ஒருவராகிறார். கொடுக்கப்பட்ட பணி எதுவாயினும் தூரநோக்குச் சிந்தனையோடும், நுணுக்கத்தோடும், அழகாகவும் செய்யும் இவர் திறனை அடிக்கடிப் பாராட்டும் தலைவர் அவர்கள் தமிழ் நாட்டில் இருந்து தன்னைச் சந்திக்க வந்திருந்த வைக்கோ அண்ணையை தமிழ் நாட்டுக்குக் கொண்டு சென்று விடும் மிக மிக முக்கிய பொறுப்பை கடாபி அண்ணையிடம் ஒப்படைக்கிறார். வைக்கோ அண்ணையை பாதுகாப்பாக் கூட்டிச் செல்லும் போது, முல்லைத்தீவு கடற்பகுதியில் ஏற்பட்ட சமரின்போது கடாபி அண்ணை பலத்த காயம் அடைகிறார். அந்நிலையில் கூட தன்னை சுதாகரித்துக்கொண்டு வைகோ அண்ணையை எதிரியிடமிருந்து பாதுகாத்து, தமிழ்நாட்டில் பாதுகாப்பாகச் சேர்ப்பிக்கின்றார். பலத்த காயம் ஏற்பட்டதால் இந்தியாவிலிருந்தே மருத்துவம் பெறவேண்டிய சூழல் கடாபி அண்ணைக்கு ஏற்படுகின்றது. 06 மாதங்கள் இந்தியாவிலிருந்து கொண்டே மருத்துவ உதவியைப் பெற்ற கடாபி அண்ணை மீண்டும் ஈழம் திரும்பி வந்து, தலைவரின் நேரடி நெறிப்படுதலின் கீழ் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, ஆரம்ப காலங்களில் “கடல்புறா” என பெயர் கொண்டழைக்கப்பட்ட கடற்புலிகள் படையணிக்கு கேணல் சங்கர் அண்ணை அவர்களே பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார். சங்கர் அண்ணை அவர்களை வேறு ஒரு பணிக்காக தலைவர் அவர்கள் நியமித்துவிட்டு கடல்புறாவின் தளபதியாக கடாபி அண்ணை அவர்களை தலைவர் அவர்கள் நியமித்தார். கடல்புறாவை செவ்வென கட்டியெழுப்பும் பணியில் கடாபி அண்ணை அவர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை 1991ம் ஆண்டு நடைபெற்ற ஆகாய கடல் வெளி மரபுவழித் தாக்குதலின் போது வெற்றிலைக்கேணிப் பகுதியால் பெரும் படையோடு ஊடறுத்த இராணுவத்தை வழிமறித்துத் தாக்குதல் நடத்தியபோது கடாபி அண்ணை நெஞ்சினில் பலத்த காயம் அடைகிறார். சில மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கடாபி அண்ணை அவர்களை தலைவர் அவர்கள் அழைத்து இம்ரான் பாண்டியன் படையணியின் உள்ளகப் பாதுகாப்புப் பொறுப்பாளராக நியமிக்கிறார். தலைவரின் பாதுகாப்பு, போராளிகளின் தேவைகள், தாக்குதல், பயிற்சி, புலனாய்வு என பன்முகப்படுத்தப்பட்ட பணிகளை செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டபோது ஓய்வின்றி உழைத்தவர் கடாபி அண்ணை. மாத்தையா அவர்களின் துரோகத்தனத்தை இனம்கண்டு, உறுதிப்படுத்திய பின்னர், பல வழிகளில் விசாரணைகள் நடந்தபோதும், மேலதிகமான, கடுமையான, இறுதிக்கட்ட விசாரணைகளை நேரடியாக மேற்கொண்டவரும் கடாபி அண்ணை அவர்களே. முன்னேறிப்பாய்ச்சல்” என்ற பெயரில் இலங்கை இராணுவம் மேடிற்கொண்ட நடவடிக்கைக்கு எதிராக புலிகள் நடத்திய “புலிப்பாய்ச்சல்” நடவடிக்கையைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் படைக் கட்டுமானத்தில் சில மாற்றங்கள் நிகழ்ந்தன. அதுவரை இம்ரான் பாண்டியன் படையணியின் சிறப்புத் தளபதியாக இருந்த மூத்த தளபதி சொர்ணம் அவர்கள் கூட்டுப் படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். அதே நேரம் கடாபி அண்ணை அவர்கள் இம்ரான் பாண்டியன் படையணியின் சிறப்புத்தளபதியாக நியமிக்கப்பட்டார். 1995ம் ஆண்டு யூலை மாதத்திலிருந்து 2002ம் ஆண்டுவரை, அதாவது விடுதலைப்புலிகளுக்கும் அரச படைகளுக்கும் யுத்த நிறுத்தம் ஏற்பட்டவரை கடாபி அண்ணை அவர்களே இம்ரான் பாண்டியன் படையணியின் சிறப்புத்தளபதியாகப் பணியாற்றினார். இம்ரான் பாண்டியன் படையணியென்பது சிறப்பு அணிகளின் கூட்டமைப்பாகவே இருந்தது. கடாபி அண்ணை பல சிறப்பு அணிகளை அப்படையணியின் கீழ் உருவாக்கி விடுதலைப்பயணத்தில் பல சாதனைகளை ஏற்படுத்தினார். கரும்புலி அணி, லெப் கேணல் விக்டர் கவச எதிர்ப்புப்படையணி, லெப் கேணல் ராயன் கல்விப்பிரிவு, மயூரன் பதுங்கிச்சுடும் அணி, செம்பியன் வேவு அணி, கேணல் சங்கர் ஆள ஊடுருவித்தாக்கும் அணி, லெப் கேணல் ராதா வான்காப்புப் படையணி, விடுதலைப்புலிகளின் கவசப்படையணி போன்ற சிறப்புப் படையணிகளும் படையத் தொடக்க கல்லூரிகள் போன்ற படைக்கட்டுமானங்களையும் தலைவரின் எண்ணத்திற்கேற்ப்ப உருவாக்கி, வளர்த்து, வழிநடத்தியதில் கடாபி அண்ணையின் தலமைத்துவப்பணிகளின் சிறப்புகளை காணக்கூடியதாக இருந்தது. இப்பணிகளோடு மேலதிகமாக தலைவரின் பாதுகாப்பு சார்ந்த பணிகளையும் நேரடியாகக் கண்காணித்து வந்த கடாபி அண்ணை விடுதலைப்பணிக்காக ஓய்வின்றி இயங்கிக் கொண்டிருந்தார். ஒரு பயிற்சிப் பணியாக இருந்தாலும் சரி அல்லது வேவுப் பணியாக இருந்தாலும் சரி, அல்லது தாக்குதல் பணியாக இருந்தாலும்சரி நேரமெடுத்து திட்டமிடலுக்காகவே கூடிய நேரத்தை ஒதுக்கி ஒவ்வொரு பணியையும் சரியாக நிறைவேற்றும் பாங்கு கடாபி அண்ணைக்கு உரியதே. பயிற்சித் திட்டமிடல் பற்றிக் குறிப்பிடவேண்டும் என்றால் ஒரு காலத்தில் குறிப்பிட்ட பயிற்சிக்கு மூன்று மாதங்கள் என திட்டமிடப்பட்டிருக்கும். ஆனால் எதிரியின் தாக்குதல் நடவடிக்கைகள் அதிகரிக்கும்போது இப்பயிற்சிக் காலத்தை சுருக்க வேண்டிவரும். அப்போதுகூட குறுகிய கால பயிற்சித் திட்டமிடல் ஒன்றை தயார் செய்துவிட்டே பயிற்சிகள் வழங்கப்படவேண்டும் என்பதில் கவனமாய் இருப்பார். அதே போல் தாக்குதல் நடவடிக்கை ஒன்றைப் பூர்த்தி செய்தாலும் அத்தாக்குதலின் வெற்றி தோல்வி என்பதைவிட அத்தாக்குதல் தொடர்பான விபரங்களை ஆவணப்படுத்துமாறே தாக்குதலணிப் பொறுப்பாளர்களிடம் கண்டிப்பாக கட்டளையிடுவார். அத்தாக்குதல் வெற்றியடைந்ததற்கான காரணங்கள் அல்லது தோல்வியடைந்ததற்கான காரணங்கள் எதிர்காலத்தில் எவ்வாறான விடயங்களை மேம்படுத்தலாம் என்பன போன்ற விடயங்களை உள்ளடக்கியதாகவே அவ் ஆவணங்கள் தயாரிக்கப்படும். அவ்வாறு தயாரிக்கப்படும் ஆவணங்களை தானே சரிபார்த்து போராளிகளுக்குப் புரியவைப்பார். அத்தோடு இவ்வாறு பெறப்படும் ஆவணங்கள் அனைத்தும் பயிற்சி ஆசிரியர்களுக்கு அனுப்பிவைக்கப்படும். அதற்கேற்ப திருத்தங்கள், மாற்றங்கள் பயிற்சிகளில் செய்யப்படும். இவ்வாறு இறுக்கமான கால கட்டங்களின் போதும் மரபுவழி இராணுவங்களுக்கு ஒப்பான திட்டமிடல்களையும், செயற்பாடுகளையும் பேணிவருவதில் மிகமிகக் கவனமெடுத்து செயல்ப்பட்டு வந்தவர்தான் கடாபி அண்ணை. கடாபி அண்ணையை பொறுத்தவரையில் தாக்குதல்களோடு சம்மந்தப்பட்ட தாக்குதலணிகளை மட்டுமன்றி பயிற்சிகள், விசாரணைகள், புலனாய்வு, ஆசிரியர்கள் போன்ற நிர்வாக ரீதியிலான அணிகளையும் நிர்வகிப்பது, முகாம்களை சீரமைப்பது, பராமரிப்பது போன்ற அத்தனை பணிகளையும் சிறப்பாக செய்யும் வித்தகராகத் திகழ்ந்தார். பன்முகப்படுத்தப்பட்ட பணிகளையாற்றிய கடாபி அண்ணை அவர்கள் பெண் போராளிகளின் வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகித்தவராவார். 027ஆரம்ப காலங்களில் பெண்போராளிகளுக்கு கனரக ஆயுதப்பயிற்சியை வழங்கியதுடன் சூட்டுப்பயிற்சி, சீறோயிங் கனரக ஆயுதங்களை கையாள்வது, ஆயுதங்களை பராமரிப்பது என எல்லாவற்றையும் ஆழமாக கற்பித்து பல கனரக ஆயுத பெண் ஆசிரியர்களை உருவாக்கியவரும் இவரே. அத்தோடு கல்வியறிவு இல்லாமல் எழுத வாசிக்க கஷ்டப்படும் போராளிகளுக்கு அறிவூட்டல்களைச் செய்வதோடு கல்வியில் ஆர்வத்தை தூண்டுவதற்காகச் சிறிய விடயங்களைக் கூட பாராட்டி அன்பளிப்புப் பொருட்களைக் கொடுத்து அவர்களை ஊக்குவித்ததோடு கல்வியறிவில்லாமல் யாருமே இருக்கக் கூடாதென்பதில் அதீத கவனமெடுப்பார். அனைவருடனும் சம நிலையில் பழகும் இவருக்கு தனிப்பட்ட நண்பர்கள் என்று யாருமே இருந்ததில்லை. அனைவருடைய கருத்திற்கும் மதிப்புக்கொடுக்கும் இவர் சிறியவர், பெரியவர் என்ற பேதம் பார்ப்பதில்லை. அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் இருக்கிறது என்பதை போராளிகளுக்கு புரியவைத்து, அனைவருடைய கருத்துக்களையும் பொறுமையாகக் கேட்டு, அவர்களுக்குரிய தீர்வுகளை உடனுக்குடன் வழங்குவார். இவருடைய தாக்குதல் நடவடிக்கைகளை பொறுத்தவரை சிறப்பு இராணுவ நடவடிக்கைகளில்தான் இவர் நேரடியாகப் பங்குபற்றினார். பல கரும்புலித்தாக்குதல்களுக்கு பயிற்சிகளை வழங்கியதோடு நின்றுவிடாது பல தாக்குதல்களையும் நெறிப்படுத்தி வெற்றியீட்டிய பெருமை இவரையே சாரும். தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் இவருக்கு வழங்கப்பட்டிருந்த விமான எதிர்ப்பு ஏவுகணையைக் கொண்டு 1995 ம் ஆண்டு எம் இனத்தை குண்டுபோட்டு கொன்றுகுவித்த இரு அவ்றோ விமானத்தை சுட்டு வீழ்த்தி தனித்துவமான பெரும் சாதனையை ஈட்டி தமிழீழ தேசியத்தலைவரின் பாராட்டைப் பெற்றார். 1997 ம் ஆண்டு முல்லைத்தீவு கடலில் உக்கிரமாக சண்டை நடந்துகொண்டிருந்த போது, எதிரியோ மிகப்பலத்தோடு சண்டையிட்டுக்கொண்டிருந்தான். எதிரியின் மிகவும் பலமான தாக்குதலாக உலங்குவானூர்தியால் தாக்கிக்கொண்டிருந்தான். தமிழீழ விடுதலைப் புலிகளின் படகு மூழ்க ப் போகும் சூழ்நிலையில் யாருமே எதிர்பாராத விதமாய் கடாபி அண்ணை அவர்கள் எதிரிக்கு மிகப்பலமாக இருந்த உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்தினார். களத்தில் நிலவரம் மாறியாது. அத்தனை வீரர்களும் எதுவித சேதமும் இல்லாமல் தளம் திரும்புகிறார்கள். தளம் திரும்பிய அந்த வீரர்கள் சாவின் விளிம்பிலிருந்து தம்மைக் காப்பாற்றிய கடாபி அண்ணையைப் பார்த்து கண்ணீர்மல்க நன்றி கூறினார்கள். இப்படித்தான் நீளும் நினைவுகளாக கடாபி அண்ணையின் சாதனைகள் தொடர்ந்தன. ஜெயசிக்குறு சமர் உக்கிரமடைந்து கொண்டிருந்தது. பல சாதனைகளோடும் பல இழப்புகளோடும் அச்சமர் தொடர்ந்து கொண்டிருக்கையில், விஞ்ஞான குளத்தில் எதிரியானவன் பெருமெடுப்பிலான இராணுவ நடவடிக்கையை செய்வதற்குத் திட்டமிட்டிருந்தான். முற்றுமுழுதாக விடுதலைப்புலிகளை சிதைப்பதற்கான ஏற்பாடு. இதை அறிந்துகொண்ட கடாபி அண்ணை அவர்கள் தனது ஆழுகையின் கீழ் இருந்த கரும்புலி அணியொன்றை எதிரியின் கொலைவலயத்திற்குள் அனுப்பி அத்தாக்குதலை முறியடிப்பதற்கான ஏற்பாட்டை செய்தார். அத்தாக்குதலைத் திட்டமிட்டு செயற்படுத்துவதற்காக வந்த அதிகாரிகள் கொண்ட உலங்குவானூர்தியை எதிரியின் பிரதேசத்திற்குள் வைத்து சுட்டுவீழ்த்தி அத்தாக்குதலை முறியடித்து, அங்கிருந்து தப்பி வருகிறார்கள் கரும்புலி வீரர்கள். இத்தாக்குதலை திட்டமிட்டு நேரடியாக நெறிப்படுத்தியவரும் எம் கடாபி அண்ணை அவர்களே. அது போலவே அளம்பில் கடற்பரப்பில் 1999 ம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வந்த டோறாக்களை ராங்கைப் (பிரங்கி) பயன்படுத்தி அழித்தொழித்தவரும் கடாபி அண்ணையே. குறிபார்த்துச் சுடும் தனித்திறமை கொண்ட கடாபி அண்ணை அவர்கள் எப்பணி ஆற்றினாலும் அதில் ஓர் தனித்துவம் இருக்கும். ஒரு தடைவை தமிழீழத் தேசியத்தலைவருக்கு புதிய கனரக ஆயுதமொன்று கிடைக்கப் பெற்றது. அதை இயக்கம் முறைக்குரிய ஆவணம் எதுவும் வரவில்லை. அந்த ஆயுதத்தை எப்படி இயக்குவது, எப்படி கழட்டிப் பூட்டுவது என்பதை கண்டுபிடிக்குமாறு தேசியத் தலைவர் அவர்கள் சில பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்தார். பல ஆங்கிலப் புத்தகங்களை புரட்டியும், தாமாக சில நாட்கள் முயன்றும் முடியாமற் போகவே தேசியத்தலைவர் அவர்களிடம் சொன்னார்கள் “கண்டுபிடிக்க முடியவில்லை” என்று. அவர்களைப் பார்த்து புன்முறுவல் பூத்த தேசியத்தலைவர் அவர்கள் வேறோர் பணிக்காக வேறு இடத்தில் நின்ற கடாபி அண்ணையிடம் அந்த ஆயுதத்தை கையளித்தபோது, அந்த ஆயுதத்தை வாங்கிய கடாபி அண்ணை அவ் ஆயுதத்தை இருபக்கமும் திருப்பிப் பார்த்துவிட்டு குறிப்பிட்ட சில நிமிடங்களுக்குள் பல பாகங்களாகப் பிரித்து வைத்துவிட்டு, இயக்கும் முறையை புரிய வைத்துவிட்டு, தேசியத் தலைவரை பார்த்தபோது தேசியத்தலைவர் அவர்கள் கடாபி அண்ணையின் தோளில்தட்டி “இதுதான் கடாபி” என அனைவரையும் பார்த்துக் கூற, அனைவரும் இணைந்து பாராட்டியபோது எதுவும் நடவாததுபோல் சாதாரணமாகவே இருந்தார் கடாபி அண்ணை அவர்கள். பற்பல ஆற்றல்களைக்கொண்ட இவரிடம் தேசியத்தலைவர் அவர்கள் சொல்கிறார் “கடாபி கடல் இண்டைக்கு அமைதியாக இருக்கா? என்று சூசையை தொடர்பெடுத்து கேளு. கடல் அமைதியாக இருந்தால் நாங்கள் கடற்பயிற்சிக்கு போகலாம்” சொல்லி சில கணங்கள் கூட ஆகவில்லை வானத்தில் உள்ள வெள்ளியை பார்த்துவிட்டு “அண்ணை கடல் இண்டைக்கு நல்ல அமைதியா இருக்கு நாங்கள் கடற்பயிற்சிக்கு போகலாம்” என்றார். வானத்திலுள்ள நடசத்திரங்களை கணித்தே கடலின் நிலவரத்தை சொல்லுமளவிற்கு திறமையுள்ளவர்தான் கடாபி அண்ணை . தமிழீழ தேசியத்தலைவர் அவர்களோடு கூடவே இருந்து பல விடயங்களைக் கற்று அறிந்து செயலாற்றிய வித்தகர்தான் இவர். தனது குடும்பத்தில் அதிக பற்றுக்கொண்டவர் . தனது மனைவி பிள்ளைகளோடு கழிக்கும் நேரம் மிகச் சொற்பமே. என்றாலும் கிடைக்கும் நேரங்களில் தன் பிள்ளைகளுக்கு நல்ல தந்தையாகவும் செயற்பட்டார். நற்சிந்தனைகளையும் தேசப்பற்றையும் ஊட்டியே வளர்த்தார். சின்னச் சின்ன விடயங்களில்கூட அதிக அக்கறை எடுத்து செயல்ப்படும் கடாபி அண்ணை அவர்கள் படையத் தொடக்க பயிற்சிக் கல்லூரிகளில் சிறப்புத் தளபதியாக இருந்த காலங்களில் புதிய போராளிகளை உள்வாங்கி அவர்களுக்கான திட்டமிடல்களை வகுத்து மிகமிக அற்புதமாக புதிய பயிற்சியாளர்களை நல்ல போராளிகளாக்கினார். கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் நான்கு அல்லது ஐந்து பயிற்சி முகாம்களில் பயிற்சிகள் வழங்கப்படும். புதிய போராளிகளுக்குரிய கட்டமைப்புகளை சீரமைத்து, பயிற்சிகளை வழங்கி, நல்ல போராளிகலாக ஆக்குவது மிகமிக கடினமான பணி. ஒவ்வொரு பிரதேசங்களில், இடங்களில் இருந்து வருபவர்கள் வேறுபட்ட குணவியல்புகளோடு இருப்பார்கள். அவர்கள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவருவது அவ்வளவு சுலபமான காரியமல்ல. கடாபி அண்ணை அவர்கள் சரியாக திட்டமிடல்களை வகுத்து பயிற்சி ஆசிரியர்களை அதற்குரிய வகையில் நெறிப்படுத்தி மிகமிக எளிதாக அப்பணியை ஆற்றினார். 2006 ம் ஆண்டிலிருந்து எதிரியின் தொடர் விமானத்தாக்குதலில் அடிக்கடி தமிழீழ விடுதலைப்புலிகளின் இலக்குகள் தாக்கப்பட்டுக்கொண்டிருந்தது. நாளுக்குநாள் போராளிகள், மக்கள் என தினமும் பலர் காயப்பட்டும் இறந்துகொண்டும் இருந்தனர். அந்தக் காலங்களில் பலதடைவைகள் படையத் தொடக்க பயிற்சிக் கல்லூரிகளை இலக்குவைத்து விமானத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஒரு தடைவை கூட ஒரு போராளியோ அல்லது பயிற்சியாளரோ காயப்படவுமில்லை வீரச்சாவு அடையவுமில்லை. அவ்வளவு அழகாக திட்டமிட்டு எந்தச் சந்தர்ப்பத்திலும் போராளிகள் தம்மை பாதுகாத்துக் கொள்ளக் கூடிய வகையில் அனைத்து இடங்களிலும் நிலைகள் அமைக்கப்பட்டிருந்தது. பல தடைவைகள் நடந்த விமானத் தாக்குதலின்போதும் அத்தனை புதிய போராளிகளையும் காப்பாற்றியது கடாபி அண்ணையின் மதிநுட்பமான திட்டமிடலுடன் கூடிய செயல் மட்டுமே. தலைவர் அவர்கள் பல தடைவைகள் பொறுப்பாளர்களுக்கு சொல்லியிருந்தார் “கடாபியால் மட்டும் எந்த இழப்புமின்றி போராளிகளை காப்பாற்ற முடியுதென்றால் ஏன் உங்களால் முடியுதில்லை” என்று. புதிய பயிற்சியாளர்களிடமிருந்து கூட கருத்துக்களை பெறவேண்டும் என்பதில் அக்கறையெடுப்பார். வாரத்தில் ஒருதடைவை தானே சென்று பயிற்சியாளர்களுடன் கதைப்பார். அவர்கள் தாமாக கருத்துக்களை முன்வைக்க மாட்டார்கள் என்பதால் அனைவரிடமும் காகிதமும் பேனாவும் கொடுத்து “உங்கள் பெயர்களை எழுதாமல் சொல்ல விரும்பும் கருத்துக்களை எழுதித்தாருங்கள். நான் ஏதாவது பிழைவிட்டிருந்தால்கூட நீங்கள் எழுதலாம். நீங்கள் எழுதும் விடயம் சரியாக இருந்தால் நிச்சயமாக அதற்கான மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்பார் . அதேபோலவே பயிற்சி ஆசிரியர்களிடம் புதிய போராளிகளை வழிநடத்துவது, அறிவுரைகளை பலதடைவைகள் வலியுறுத்துவார். பயிற்சிகள் வழங்குவதோடு போராளிகள் சரியான முறையில் பராமரிக்கப்பட வேண்டும் என்பதில் மிக மிக கவனமாக இருப்பார். அத்தோடு முன்மாதிரிகளாக ஆசிரியர்கள் திகழவேண்டும் என்பதில் கண்டிப்பாக இருப்பார். எமது போராட்ட வரலாறுகள், ஒவ்வொரு நிகழ்வின் பதிவுகளும் மிகமிக முக்கியமென கருதுவார். எந்த இக்கட்டான சூழலிலும் அனைத்து நிகழ்வுகளும் உண்மையாக பதிவுசெய்து ஆவணப்படுத்த வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை காட்டுவார். அப்பணியை முக்கிய பணியாக கருதி அதற்காக போராளிகளைத் தெரிவு செய்து தானே அப்பணியை நேரடியாக நெறிப்படுத்துவார். இறுதிச்சமர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த வேளைகளில் கடாபி அண்ணை அவர்களில் சண்டைக் களங்களில் பணியாற்றிகொண்டிருந்தார். அந்த நேரத்திலும்கூட அவணங்களை பதிவு செய்து பாதுகாக்கும் போராளியைத் தொடர்புகொண்டு அப்பணியின் முக்கியத்துவத்தை விளங்கப்படுத்தி எச்சந்தர்ப்பத்திலும் இப்பணியை இடைவிடாது தொடருமாறு வலியுறுத்துவார். இவ்வாறு பலவேறு விடுதலைப்பணிகளை முன்னெடுத்துக் கொண்டிருந்த கடாபி அண்ணை அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆனந்தபுரப்பகுதியில் பெருமெடுப்பில் நடந்த யுத்தத்தில் ஒரு பகுதி தாக்குதல் தளபதியாக களமிறங்கினார். தடைசெய்யப்பட அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்தி எதிரியானவன் புலிகளை அழிப்பதில் முனைகிறான். வாழ்வா? சாவா? என்ற பெரும் யுத்தக்கத்தில் ஒவ்வொரு போராளிகளும் உறுதியோடு போரிட்டு வீரச்சாவு அடைகிறார்கள். எதிரியின் துரோகத்தனத்திற்கு பலியாகவேண்டிய இக்கட்டான சூழல் அது. கடாபி அண்ணை அவர்கள் தன் அணிக்கு கட்டளை வழங்கி போரிட்டுக் கொண்டிருந்தவேளை எதிரியின் தாக்குதலில் பலத்த காயமடைகிறார். போராளிகள் பலர் அவரைக் காப்பாற்ற முனைகின்றனர். முடியவில்லை…… தமிழீழத் தேசியத்தலைவரையும், தமிழீழத்தையும் தன் உயிர் மூச்சாகக்கொண்ட கடாபி அண்ணை அவர்கள்…….. “அண்ணையை காப்பாற்றுங்கோ அண்ணைக்கு உறுதுணையாய் இருங்கோ” என அருகில் இருந்த போராளிகளிடம் முணுமுணுத்தபடி அன்னை மண்ணை அரவணைத்தார். அப்பெரும் யுத்தகளத்தில் தீரமுடன் போராடி வீரச்சாவடைந்த பிரிகேடியர் ஆதவன் அல்லது கடாபி என அழைக்கப்படும் சாதனை வீரனை நினைவு கூருவதோடு அக்களத்தில் வீரமுடன் போரிட்டு வீரச்சாவடைந்த அனைத்து போராளிகளையும் நினைவு கூருகிறோம். “உங்கள் தாகம் தீரும்வரை ஓயாது எம் பயணம்” ஆக்கம் சி.கலைவிழி https://www.thaarakam.com/news/60295
  24. கேணல் நாகேஸ் Last updated Apr 4, 2020 மட்டக்களப்பு புல்லுமலையை பிறப்பிடமாகக் கொண்ட கேணல் நாகேஸ் 1985-86 காலப் பகுதியில் தன்னை விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைத்துக் கொண்டார். ஆரம்பகாலத்தில் லெப்.கேணல் றீகன் அவர்களின் அணியில் தனது சமர்க்களப் பணியை ஆரம்பித்தார். காலங்களில் சிறப்பாக செயல்ப்பட்ட அவர் இந்திய ஆக்கிரமிப்பு படைகளுக்கெதிரான யுத்தம் ஆரம்பமானபோது புல்லுமலைப் பகுதி விடுதலைப் புலிகளின் முகாமின் பொறுப்பாளராக நியமிக்கப் பட்டார். இந்தக் காலகட்டத்தில் அவரின் தலைமையில் இந்திய,சிறிலங்கா படையினருக்கெதிரான பல வெற்றிகரத் தாக்குதல்கள் நடத்தப் பட்டன. இத்தாக்குதல் நடவடிக்கைகள் பலவற்றில் ஆயுதங்களும் கைப்பற்றப் பட்டன. கண்ணிவெடித் தாக்குதல்களில் அவருக்கென்று தனியிடமொன்று இருந்தது.நாகேசால் பல வெற்றிகர கண்ணிவெடித் தாக்குதல்கள் நடத்தப் பட்டிருந்தன.ஆயினும் இந்தியப் படைகளின் (“தீப்பெட்டி ஜீப்”) மிகச் சிறிய ஜீப் வண்டிமீது தாக்குதல் நடத்துவது பெருத்த சவாலாக இருந்தது. அதன் பருமன் வேகம் என்பன வெற்றிகரமான கண்ணிவெடித் தாக்குதல் ஒன்றை கேள்விக் குறியக்கிநின்றது. ஆனால் மண்டூர் என்ற இடத்தில் வைத்து நாகேஸ் மேற்கொண்ட தாக்குதலில் அந்த ஜீப் வண்டி சுக்குநூறானது. இந்திய படையினர் வெளியேறியதைத் தொடர்ந்து துரோகிகளுடனான சண்டைகளில் நாகேசின் அணி பல முனைகளிலும் பங்குகொண்டு அவர்களைச் சிதறடித்தது. பின்னர் நடைபெற்ற சிறிலங்கா படைகளுடனான பல்வேறு சண்டைக் காலங்களில் நாகேஸ் தலைமையில் அணிகள் சமரிட்டன. காலத்தின் தேவையை உணர்ந்து தமிழ் ஈழ எல்லைகள் கடந்தும் போரிடவேண்டிய கடமை நாகேசிக்கு வழங்கப் பட்டது. நகேசின் அந்த சிறிய அணி மலையகம் வரை தனது நடவடிக்கைகளை விரிவுபடுத்தியிருந்தது. மலையகத்தில் கூட தாக்குதல் நடத்தி ஆயுதங்கள் கைப்பற்றிய பெருமை கேணல் நாகேஸ் மற்றும் அவருக்கு துணைநின்ற மேஜர் விஸ்ணு (சின்னப் புல்லுமலை) ஆகியோருக்கே உரித்தாகும். மலையகத்தில் மிகச் சிறிய இந்த அணிக்கெதிராக சிறிலங்கா படைத்தரப்பு ஆயிரக்கணக்கில் படையினரை ஈடுபடுத்தியிருந்தது. பூநகரி படைத்தள அழிப்பு நடவடிக்கைகளுக்கென மட்டக்களப்பு அம்பாறைப் பிராந்தியத்தில் இருந்து போராளிகள் புறப்பட்ட போது நகேசின் அணியும் அதில் இடம்பெற்றது. ஜெயந்தன் படையணி உருவாக்கப் பட்டபோது தாக்குதல் தளபதிகளில் ஒருவராக நாகேஸ் நியமிக்கப் பட்டார். நாகதேவன் துறைப் பகுதிக்கு தளபதி அன்பு தலைமையில் சென்ற அணியில் ஜெயந்த படையணியின் ஒரு பிரிவு நாகேஸ் தலைமையில் களமிறங்கியது. அந்தமுனையிலும் ஜெயந்தன் படையணி தனது போர்க்குனத்தக் காட்டியது. பின்னர் பலாலி முனரங்க பகுதிகளில் பாதுகாப்புப் பணிகளில் நாகேஸ் தலைமையிலான அணிசெயட்பட்டது. மீண்டும் தென்தமிழீழம் சென்ற அணிகள் பல்வேறு தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டன. பின்னர் ஜெயசிக்குறு எதிர் சமருக்காக படியங்கள் கிழக்கில் இருந்து வன்னி வந்தபோது நாகேசும் ஜெயந்தன் படையணித் தளபதிகளுள் ஒருவராக களம் வந்தார். ஜெயசிக்குறு களமுனைகளில் பகுதிப் பொறுப்பாளராக கடமையாற்றிய கேணல் நாகேஸ் ஓயாத அலைகள் நடவடிக்கைகளிலும் அணித் தலைமையேற்று வழிநடத்தினார். விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணி யில் நாகேஸ் செயல் பட்டுக் கொண்டிருந்தாலும் மக்கள் நலச் செயற்பாடுகளிலும் அவர் கவனம் செலுத்தத் தவறவில்லை. புல்லுமைப் பிரதேசம் எங்கும் மக்களால் நேசிக்கப் பட்ட ஒரு போராளியாக அவர்.விளங்கினார். இவற்றிக்கு மேலாக மட்டக்களப்பின் எல்லைகளைக் காத்து நின்ற ஒரு வீராகவும் அவர் கொள்ளப் படுகிறார். இப்பகுதி சிங்களப் படையினருக்கும் சிங்களக் காடையருக்கும் நாகேஸ் என்றபெயர் எப்போதும் அச்சமூட்டும் ஒன்றாகவே இருந்துவந்தது. இவ்வாறு இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக தன் உடலெங்கும் விழுப் புண் தாங்கி தமிழீழத்தின் களங்கள் யாவும் ஏன் அதற்கு அப்பாலும் தொடர்ந்து களமாடிய மாவீரன் கேணல் நாகேஸ். அவனுக்கும் மனைவி குழந்தைகள் இருந்தனர் ஆனாலும் அந்த மாவீரன் அவற்றிற்கு மேலாக இந்த மண்ணை மக்களை நேசித்தான். வடக்கென்ன கிழக்கென்ன தமிழீழமே எமது தாயகம் என்று இறுதிவரை களமாடிய அந்த மாவீரன் ஆனந்த புரத்தில் தன்னை ஆகுதியாக்கினான். https://www.thaarakam.com/news/121084
  25. வீரத்தின் விளைநிலம் – எங்கள் இனத்தின் அடையாளம் கேணல் தமிழ்ச்செல்வி Last updated Apr 4, 2020 கேணல் தமிழ்ச்செல்வி, நாகேசுவரன் கமலேசுவரி முல்லைத்தீவு 16.12.1971 – 04.04.2009 “அம்மா….நீங்க செய்தது கொஞ்சம் கூட சரியில்ல….எனக்குச் சுத்தமாப் பிடிக்கேல்லையம்மா… எப்படியம்மா உங்களுக்கு மனசுவந்திச்சு…. அதுவும் உங்கட சொந்த தங்கச்சிக்கு ஒரு பச்சை மண் குழந்தை இருந்திருக்கு நீங்க அதப்பற்றி ஒரு நாள் கூட சொல்லவே இல்லையம்மா… ஏனம்மா… உங்களுக்கு உங்கட தங்கச்சி மேல கொஞ்சம் கூட பாசம் இல்லையாம்மா…, தமிழ்ச்செல்வி வீரச்சாவு அடைந்த பிறகு அவான்ர குழந்தையை நீங்களும் கைவிட்டுட்டுவந்திட்டீங்களேயம்மா… அந்தப்பிள்ள என்னம்மா செய்திருக்கும்… ஏனம்மா நீங்க இவ்வளவு நாளும் அந்தப்பிள்ளையைத் தேடேல்ல… ஆனா நான் மட்டும் உங்கள மாதிரி இருக்க மாட்டன். என்ர அண்ணாச்சிக்கு ஏதுமெண்டா என்ர உயிரைக் கொடுத்தாவது அவனக் காப்பாற்றியிருப்பன்… ஆனா…., நீங்க அப்படியில்லையே..அம்மா… உங்கட தங்கச்சியின்ர கைக்குழந்தையைக்கூட விட்டிட்டு வந்திட்டீங்களே… எனக்கு கவலையா இருக்கம்மா…. உங்களில கோபம் கோபமா வருகுதம்மா….”அவள் படபடத்தாள். அன்று தான் இணையத்தளத்தில் கேணல் தமிழ்ச்செல்விக்காக வெளிவந்த பாடல் வரிகளை அவள் கேட்டிருந்தாள். அதில்தான்அவருக்கொரு குழந்தை இருந்தது என்ற உண்மை அவளுக்குத் தெரிய வந்தது. அதிலிருந்து அம்மாவை அவள் அரிக்கத்தொடங்கி விட்டாள். ”எப்பயம்மா… நாங்க தமிழ்ச்செல்வி அக்கான்ர பிள்ளையைஎப்படித் தேடப்போறம்… அந்தப்பிள்ள இப்ப நல்லா வளர்ந்திருக்குமே அம்மா… நாங்க எங்க போய் எப்படித்தேடப் போறம்….? அவள் அம்மாவை விடுவதாக இல்லை. அம்மாவால் பதில் சொல்ல முடியவில்லை. ”செல்லம் அம்மாவும் தேடிக்கொண்டு தான் இருக்கிறன் கண்ணா… கண்டிப்பா ஒரு நாள் அந்தப் பிள்ளை எங்களுக்கு கிடைப்பா… நீ கவலைப்படாத செல்லம்” அம்மா மகளுக்கு ஆறுதல் சொன்னாள். ஆனால் அந்த ஆறுதலில் எல்லாம் அமைதியாகிப் போகும் ரகம் அவளல்ல… அவள் பிடிவாதக்காரி, வீட்டின் கடைக்குட்டி, கடைக்குட்டி என்பதை விட அவள் தான் அந்த வீட்டின் குட்டித்தேவதை, இளவரசி, மகாராணி, எல்லாமே, அவளுக்கொரு அண்ணா இருந்தான் அவனுக்கும் அவளுக்குமான வயது இடைவெளி கொஞ்சம்அதிகமாகவே இருந்தது. இதனாலோ என்னவோ அவன் தங்கச்சி மீது உயிரையே வைத்திருந்தான். தங்கச்சிக்காக எல்லாவற்றையுமே விட்டுக்கொடுத்துவிடுவான். அவளோடு போட்டி போடுவதற்கோ சண்டையிடுவதற்கோ வீட்டில் யாரும் இல்லை. எல்லோருமே அவளிடம்சரணாகதி அடைபவர்களாகத்தான் இருந்தார்கள். அம்மா, அப்பா, அண்ணா மூவருக்குமே அவள்தான் உலகமாகத் தெரிந்தாள். அதனாலோ என்னவோ பயம் என்பது அவள் அகராதியில் இல்லை. வீட்டில் யார் தவறு செய்தாலும் நேருக்கு நேர்நின்றுநியாயம் கேட்பாள். அப்படித்தான் இன்று அம்மா மாட்டிக்கொண்டார்.”என்னதான் நீங்க ஆயிரம் காரணம் சொன்னாலும் உங்கள என்னாலமன்னிக்கவே முடியாதம்மா… நீங்க செய்தது தப்பு, தப்புத்தான்… அவளது நீதிமன்றில் தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. முட்டிவெடித்த கண்ணீர்த் துளிகளை அவள் அறியாது மெல்லத் தட்டி விட்டார் அம்மா. அவள் சிறுமியாக இருந்தாலும் நல்ல புத்திக்கூர்மைமிக்கவள். எல்லாவற்றையும் துருவித்துருவி அறியும் ஆர்வம் உடையவள். ஏதாவது ஒன்றைப்பற்றிய தேடல் அவளுக்குள் வந்து விட்டால், அதைத்தேடி முழுமையாக அறிந்து கொள்ளாமல் அவள் விடமாட்டாள். பள்ளியிலும் அவள் நல்ல கெட்டிக்காரி. சிறு வயதில் இருந்தே நடனக்கலையில் அவளது ஆர்வம் அதிகமாகவேஇருந்தது. அதனால் நடனம் பயிலத்தொடங்கியிருந்தாள். மகளின் ஒவ்வொரு அசைவிலும் செயலிலும் அம்மா தன்தங்கையைக் கண்டு கொண்டிருந்தாள். மகளிடம் இருக்கும் பிடிவாதம், கோபம் வரும் போது பல்லை நெறுமிக்கொண்டு பேசுவது, எந்தளவுக்கு கோபமும் பிடிவாதமும் அவளுக்குள் இருக்கிறதோ அதற்கு மேலாய் அவள் காட்டும் அன்பு என அவளது குண இயல்புகள் ஒவ்வொன்றும் தமிழ்ச்செல்வியை நேரடியாகப்பார்ப்பது போன்றே அம்மாவுக்குத் தோன்றும்.” அது சரியம்மா… உங்கட தங்கச்சி, அதுதான் தமிழ்ச்செல்வி அக்கா ஏனம்மா இயக்கத்துக்குப்போனவா…..” ”போராடத்தான்….” அப்படியெண்டா….?” அவளின்ர வயதுக்கு எப்படி விளக்கம் தருவது… எப்படிச் சொன்னால் அவளுக்குப் புரியும்… அம்மா ஒரு கணம் தயங்கினார்… ”இதுக்குக் கூட பதில் தெரியாதா… ஏய் அம்மா நோண்டி…அம்மா நோண்டி…” அவள் கைகளைத்தட்டித் துள்ளினாள். “நான் சொல்லட்டா அம்மா…. எங்கட நிலங்களப் பிடிக்கவாற எதிரிகள விரட்டியடித்து…, எங்கட தமிழ் மக்கள மகிழ்ச்சியா தங்கடதங்கட வீட்டில, தங்கட தங்கட ஊரில நின்மதியா வாழ வைக்கத்தான் போராடப் போனவா… சரியா அம்மா…” அம்மாவின்கன்னத்தைச் செல்லமாக வருடினாள் அம்மாவுக்கு ஆச்சரியம்…..! இந்த வயதில் அதுவும் உரிமைக்காகத் தூக்கிய ஆயுதங்கள் மௌனித்துப்போன சூழலில் வளர்ந்துவரும் இந்தக் குழந்தை எவ்வளவு தெளிவாக இருக்கிறது. அம்மா வியந்து போனாள். தன் வளர்ப்பில் தவறில்லை, எங்கு புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தன் தேசத்தின் நினைவுகளோடும், சொந்தமண்ணின் வாசனையோடும், நியாயமான விடுதலைப்போர் பற்றிய தெளிவோடும் மகள் வளர்க்கப்பட்டிருக்கிறாள்,அதுவே அம்மாவுக்குப் பெரும் ஆத்ம திருப்தியாக இருந்தது. தன் மகளை நன்றாக வளர்த்து, நல்ல உயர் கல்வி கற்க வைத்து, நல்ல பட்டம் பதவியில் இருத்தி, அவளுக்கென்று வளமானஎதிர்காலமொன்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதே அம்மாவின் விருப்பம், கனவு எல்லாமே…அந்த இலட்சியம்நிறைவேறும் வரை கண்ணுக்குள் பொத்தி வைத்து அவளைப் பாதுகாக்கும் பெரும் கடமையில இருந்து அம்மாஓயப்போவதில்லை. கேணல் தமிழ்ச்செல்வி, எத்தனையோ ஈகவரலாறுகளையும் தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் தாங்கி நிற்கும் எமதுவிடுதலைப்போராட்ட வரலாற்றில் ஒரு மைல்கல். இறுதிக்கட்டப்போர் மிக இறுக்கமடைந்திருந்த காலப்பகுதி, களமுனைகளோ நாளுக்கு நாள் விரிந்து கொண்டே சென்றது. கூடநின்ற தோழிகள், அணித்தலைவர்கள் என போராளிகள் தங்கள் உயிர்களைக்கொடுத்துப் போராடிக்கொடிருந்தனர். தமிழ்ச்செல்வியின் கையிலோ குழந்தை, அதனால் பின்னரங்கில் இருந்து கொண்டு போராளிகளைக் களமுனைக்குத்தயார்படுத்துவதும் அவா்களுக்குத் தேவையான ஆயுத தளபாடங்களைச் சீர்செய்வதும் என களப்பணியில்ஈடுபட்டுக்கொண்டிருந்தாள். ஆனால் அவள் தனது போராட்டகால வாழ்க்கையில் பெரும்பகுதியை களமுனையிலேயே கழித்தவள். அதிலும் கனரக ஆயுதங்களோடும், அணிகளை வழிப்படுத்தும் கொம்பனித்தலைவியாகவும் இருந்து சண்டைகளைநேருக்கு நேர் எதிர்கொண்ட அவளால், இப்போது களமுனைக்கு அணித்தலைவர்கள் தேவைப்படும் சூழ்நிலையில் பின்னரங்கில்நிற்பது என்பது முடியாத காரியம். அவளது மனச்சாட்சி என்ற தராசில் ஒரு பக்கம் அவளது குழந்தை, மறுபக்கம் அவளது கடமை. இரண்டையும் சீர்தூக்கிப்பார்த்தாள், இறுதியில் அவளது கடமை உணர்வே வென்றது. கணவனிடம் பேசி முடிவெடுத்தாள், அவளது குழந்தையை சகோதரியிடம் ஒப்படைத்து விட்டு களமுனைக்கு விரைந்தாள். மாலதி படையணியின் சிறப்புத் தளபதி பிரிகேடியர் விதுஷாக்கா குழந்தைகளுடன் இருக்கும் போராளித் தாய்மாரைக்களமுனைக்கு அனுப்புவதை ஒரு போதும் விரும்புவதில்லை. அந்தத் தாய்மாருக்கு ஏதாவது நடந்தால் பிள்ளைகளின் எதிர்காலம்கேள்விக்குறியாகிவிடும் என்பது அவரது நிலைப்பாடாக இருந்தது. ஆனாலும் அவள் பிடிவாதமாக இருந்து களமுனையிலே தன் பணியைத் தொடர்ந்தாள். இறுதிக்காலப் போரரங்கு வித்தியாசமாகஇருந்தது. எதிரி எந்தப்பக்கத்தால் நகர்கிறான், எந்தப் பக்கத்தால் உடைப்பை ஏற்படுத்துவான் என எதிர்பார்க்க முடியாததாகக்களம் அமைந்திருந்தது. ஏனெனில் மக்களின் வாழ்விடங்கள் மிகக் குறுகிவிட்டிருந்தன. எந்தப்பகுதியில் மக்கள் செறிவாகவாழ்கிறார்களோ அந்தப்பகுதிகளே எதிரியின் இலக்குகளாக இருந்தன. அப்படித்தான் ஒரு முறை தேவிபுரம் பகுதியில் விதுஷாக்காவோடு அவள் நின்றிருந்தாள். அவர்கள் நின்றது சிறியதொருவெட்டைப்பிரதேசம். முன்னால் அடர்ந்த காடு. வெட்டையைக்கடந்து சற்று முன்னதாய் இருந்த மரமொன்றில் ஏறிசண்டைக்கான கட்டளை மையத்தைத் தயார் செய்வதற்காக தொலைத்தொடர்பு அன்ரனாவைக் கட்ட அவள் முயற்சி செய்துசெய்துகொண்டிருந்தாள். சில நொடிகள் தான், அவர்கள் நின்றிருந்த இடம் எறிகணை மழையில் நனைந்தது. தலைநிமிர்த்தி என்ன நடக்கிறது என்பதை அறிய முடியாத சூழல், தமிழ்ச்செல்வி மரத்திலிருந்து எப்படிக்குதித்தாள், எப்படித்தனக்கான பாதுகாப்பைத்தேடினாள் என்பது தெரியவில்லை. அவளுக்குப்பக்கத்தில் சிறிய பாதுகாப்பகழிக்குள் இருபோராளிகள் வீரச்சாவை அடைந்து விட்டனர். எறிகணைத்தாக்குதல் சற்று ஓய்ந்துவிட்டதால் துப்பாக்கி ரவைகள் தாறுமாறாக பறந்தன. அடுத்து அந்த இடத்தில் எதிரியின்நகர்வு ஆரம்பித்து விட்டது. எதிரி மிக நெருங்கி விட்டிருந்தான். அந்த இடத்தில் இரு போராளிகளின் வித்துடல் கிடந்தது. அதைஅப்படியே விட்டு விட்டு வர அவள் தயாராக இல்லை. எதிரி மிக நெருங்கி விட்ட சூழலிலும் விதுஷாக்காவை பாதுகாத்து பத்திரமாக பின்னகர்த்தி விடுவதில் பிடிவாதமாக இருந்துஅவரை அனுப்பி விட்டு அந்த இடத்தில் நின்று சண்டையிட்டு அந்த இரு போராளிகளின் வித்துடலையும் தமிழ்ச்செல்வி துாக்கிவந்திருந்தாள். அதுதான் தமிழ்ச்செல்விக்கே உரிய பண்பாகும். விடுதலைப்போராட்ட வரலாற்றில் இறுதிப் பெரும் முற்றுகைச்சமராக அமைந்த ஆனந்தபுரம் போரரங்கு போராளிகளின்ஓர்மத்துக்கும், விடாமுயற்சிக்கும் பெரும் எடுத்துக்காட்டாக அமைந்திருந்தது. இந்தக்களத்தில் தேசியத்லைவரே நேரடியாகச் களமிறங்கி இருந்ததையும் யாரும் மறந்து விட முடியாது. பெரும் வேகத்தோடுவந்த எதிரி அசைக்க முடியாது திண்டாடிய பெரும் கோட்டையாக ஆனந்தபுரம் இருந்தது. நாட்கள் நகரநகர எதிரியின் முழுப்படை வலுவும் ஆனந்தபுரத்திலே இருந்தது. அதனால் போர் அரங்கு நாளுக்கு நாள்இறுகிக்கொண்டே போனது. அதனால் தலைவரை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பதே முற்றுகைக்குவெளியேஇருந்த தளபதிகள் போராளிகளினதும், ஒருமித்த வேண்டுதலாக இருந்தது. தவிர்க்க முடியாத சூழலில் தலைவர்முற்றுகைக்குள் இருந்து வெளியில் வர, அன்றைய தினமே ஆனந்தபுர முற்றுகைக்குள் சென்ற அணியில் தமிழ்ச்செல்வியும்இருந்தாள். அவள் அந்த முற்றுகைச் சண்டைக்குள் புறப்படுவதற்கு முன்னதாக தனது கணவனிடம் சென்று விடைபெறும் போது, அவர் தனது துப்பாக்கியை அவளிடம் கொடுத்து உன்னருகில், உனக்குத்துணையாக எப்பவும் நானிருப்பன் வென்று வா! என்றுவிடைகொடுத்து அனுப்பியிருந்தார் அப்போது இருவருக்கும் தெரியாது அது தான் தமது இறுதிச் சந்திப்பென்று. ஆனந்தபுரம் எதிரியின் அதியுயர் தாக்குதல் வலுவின் உச்சமாக மாறியிருந்தது. ஆட்லறி எறிகணைகள், மோட்டார் பீரங்கிகள், கனரக ஆயுதங்கள், சூட்டு வலு வழங்க, வான் படை குண்டு மழைபொழிய, இதற்கு இடையில் நின்று பசி மறந்து, துாக்கம்மறந்து, விழுப்புண்களின் வலிமறந்து, கூட நின்று களமாடி வீழ்ந்த வீரர்களின் இழப்புகளின் துயர் கடந்து, வீரர்கள் விழ விழதங்களின் முழுப்பலத்தையும் மனவைராக்கியத்தையும் பயன்படுத்தி போராளிகள் போராடிக்கொண்டிருந்தனர். அந்தக்களத்தில் தமிழ்ச்செல்வியும் கையில் விழுப்புண் தாங்கியிருந்தாள். இனி அந்த முற்றுகையைத்தக்க வைத்துக்கொள்ளமுடியாத சூழல் உருவாகிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் அந்த முற்றுகையை உடைத்துக்கொண்டு எப்படியாவது வெளியில் வரும்படி அவர்களுக்குகட்டளையிடப்பட்டிருந்தது. 04.04.2009 அதிகாலை பெரும் உடைப்புச்சமர் ஒன்றை களத்தில் நின்ற தளபதிகள் போராளிகள் மேற்கொண்டிருந்த போது, அந்தசமர் பெரும் வெற்றியைத்தரவில்லை. நீண்ட விடுதலைப் போராட்டத்தின் பெரும் தூண்களாக இருந்த பிரிகேடியர் விதுஷா, பிரிகேடியர் துர்க்கா, உட்பட பல தளபதிகள்போராளிகளை இழந்த போது தமிழ்ச்செல்வி மிகவும் மனம் தளர்ந்திருந்தாள். கூட நின்ற தோழியிடம் ”இந்த முற்றுகைக்குள் இருந்து அக்காவைய எப்படியாவது பாதுகாத்துக்கூட்டிச்செல்ல வேண்டும் என்றுநினைச்சன் என்னால அது முடியேல்லே… கடைசியா என்ர பிள்ளைக்கு நல்ல அம்மாவாகவும் இருக்க முடியல்லே…” என்ரபிள்ளை என்று அவள் சொன்ன அந்த நொடி, அவளது துடிப்பும் தவிப்பும் அவளது உணர்வில் தெரிந்தது. ”தானாடா விட்டாலும் தசை ஆடும்” என்பார்கள். அதன் உண்மையை அவளிடம் கண்ட போது, ”தாய்மை” என்கின்ற அந்தப்புனிதமான உணர்வு அவளுக்குள் இருந்ததை அவள் ஒரு போதும் வெளிப்படுத்தியதில்லை. முதல் தடவையாக அவளை இந்தநிலையில் பார்த்த போது மெய்சிலிர்த்துப் போனது. அன்றைய தினம் மிக இறுக்கமான சூழ்நிலையிலும் தொலைத்தொடர்பு சாதனத்தில் தன் நெருங்கிய போராளித் தோழிகள் ஒருசிலரோடு அவள் பேசினாள்.”எவ்வளவு போராடியும் என்னால அக்காக்களப்பாதுகாக்க முடியாமல் போயிற்று… அவைய நான்இழந்திட்டன், அவள் கதறினாள். என்ர குஞ்சுகள் நிறைய வீரச்சாவடைஞ்சிற்று… என்ர செல்வங்கள் எல்லாம் விழுப்புண் தாங்கிதுடித்துக்கொண்டிருக்கினம்…”அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே இராணுவத்தினர் ஒலிபெருக்கியில் போராளிகளைச்சரணடையும்படி அறிவிப்புச்செய்வது மிகத்தெளிவாக கேட்டது. அவள் சொல்லாமலே இராணுவத்தினரும் அவர்களும் மிக அருகில் நின்று களமாடும் களச் சூழலின் இறுக்கமும், நெருக்கமும்மிகத் தெளிவாகப் புரிந்தது. அந்தக்கணத்தில் கூட தான் திரும்பி வரவேண்டும் என்ற எண்ணம் துளியேனும் அவளிடத்தில் இருக்கவில்லை. எப்படியாவதுஅதற்குள் இருக்கும் போராளிகளைக் காப்பாற்றி முற்றுகையை உடைத்து அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம்மட்டுமே அவள் மனதில் இருந்தது. இறுதியாக ஒரேயொருவார்த்தை ”என்ர பிள்ளையைப் பத்திரமாகப் பாருங்கோ…” அது தான் அவளது கடைசித்தொடர்பாடலாக இருந்தது. அன்றைய தினம் இரவே எஞ்சிய போராளிகள் அனைவரையும் ஒருங்கிணைத்துக் கொண்டு மீண்டும் ஒரு உடைப்புச்சமரை மேற்கொள்ள தளபதிகளும் போராளிகளும் தயாராகினர். அந்த உடைப்புச்சமருக்கு எஞ்சிய மகளிர் போராளிகளையெல்லாம் ஒருங்கிணைத்துக்கொண்டு தமிழ்ச்செல்வி களம்இறங்கினாள். அந்த உடைப்புச்சமர் உக்கிரமாய் நடந்து பச்சைப்புல்மோட்டைக் கடல் நீரேரியூடாக ஒரு உடைப்பொன்றை ஏற்படுத்திபோராளிகள் நகர்ந்து கொண்டிருக்கும் போதுதான் தற்துணிவும் விடாமுயற்சியும், வைராக்கியமும் கொண்ட தமிழ்ச்செல்விஎன்கின்ற பெருமலை எதிரியின் குண்டேந்தி அந்த இடத்திலேயே சரித்திரமாய் வீரவரலாற்றின் பக்கங்களில் இடம்பிடித்துக் கொண்டாள். 1991,இன் பிற்பகுதி, உயர்தரம் கற்றுக்கொண்டிருந்த பள்ளித் தோழிகளான கேணல் தமிழ்ச்செல்வியும் மேஜர் எழிலரசியும் விடுதலை நோக்கிய பயணத்தில் தம்மை இணைத்திருந்தனர். மணலாற்றுக் கானகத்தே மகளிர்படையணியின் 20வது பயிற்சி முகாம், 27.02.1992 இல் தொடங்கிய போது அந்தப்பயிற்சி முகாமில்தான் தோழிகள் இருவரும் தமக்கான ஆரம்பப் பயிற்சிகளை ஆரம்பித்திருந்தனர். பயிற்சிகளின் போது அனைவருக்குமே துப்பாக்கிகளுக்குப்பதிலாக கொட்டன்களேவழங்கப்பட்டிருந்தன.ஆனால் கனம்இல்லாத அந்தக்கட்டைகளைத் துாக்கிக்கொண்டு செல்வதற்கு தமிழ்ச்செல்வி தயாராக இல்லை. பாடசாலை நாட்களிலேயே விளையாட்டுத்துறையில் மிகத்திறமையான மாணவியாக அவள் இருந்தவள். பயிற்சி ஆசிரியர்களிடம் சென்று தனக்குப் பாரம்கூடிய குத்திகள் தரும்படி கேட்டாள். பயிற்சி ஆசிரியர்கள் அவளுக்கு எவ்வளவோ எடுத்து கூறினர். இந்தக்கட்டைகளைத் துாக்கிக்கொண்டு தான் ஓட வேண்டும். பயிற்சிகளின் போதும் அதைத்தான் வைத்திருக்க வேண்டும் என்றனர். ” அது பரவாயில்லை,என்னால முடியும்” ஒரு பிடியாக இருந்து பாரம் கூடிய குத்தியை வாங்கி விட்டாள். எல்லோருமே பயந்தார்கள். இவள் என்னென்று இந்தக்குற்றியை வைத்துக் கொண்டு பயிற்சி எடுக்கப்போகிறாள் என்று. ஆனால் அவளுக்கு அது ஒரு பிரச்சனையாகவே இருக்கவில்லை. மிக இலகுவாக எல்லோரையும் போல என்பதை விட மிகச்சிறப்பாக அவள் பயிற்சிகளைச் செய்தாள். அடிப்படைப் பயிற்சிமுகாமிலேயே அவளது திறமை பயிற்சி ஆசிரியர்களால் இனங்காணப்பட்டுவிட்டது. அவர்களது பயிற்சி முகாம் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் போதே, ”ஒபரேசன் கஜபார” என்ற இராணுவ நடவடிக்கையை எதிரிஆரம்பித்திருந்தான். 17.03.1992 மணலாற்றின் நாயாறு,அளம்பில், ஆகிய பகுதிகளை வல்வளைப்புச் செய்யும் நோக்கில்கடல்,வான்,தரையென மும்முனைகளாலும் தாக்குதலைத்தொடுத்தபடி இந்த இராணுவ நடவடிக்கை தொடங்கியிருந்தது. இந்தத்தாக்குதலை முறியடிப்பதற்கான சண்டைகள் மணலாறு – முல்லை மாவட்டதளபதி லெப்டினன் கேணல் அன்பு அவர்களது தலைமையில்நடைபெற்றுக்கொண்டிருந்தது. இதன் போது இந்தத் தாக்குதலுக்கு உதவி அணியாகப்பங்காற்ற பயிற்சி முகாமில் இருந்து மிகத்திறமையாகச் செயற்படக்கூடிய 90 பேர் தெரிவுசெய்யப்பட்டனர். இதில், தமிழ்ச்செல்வி முதலாவது ஆளாக இருந்தாள். முன் பின் தெரியாத அடர்ந்த காடு முன் அனுபவம் இல்லாத களமுனைப் பயிற்சிகள் கூட நிறைவு பெறாத நிலைமை இருந்தபோதிலும் ஒரு குறுகிய காலப் பயிற்சி வழங்கப்பட்டிருந்தது. தற்காப்புக்கான பயிற்சியுடன், துப்பாக்கி குறிபார்த்துச்சுடுவது, குண்டெறிவது, ஆயுதங்களைக் கழற்றி பூட்டுவது, திசைகாட்டியின் உதவியுடன் திசைகளை அறிவது என அடிப்படை இராணுவப்பயிற்சியும் அவர்களுக்கு வழங்கப்பட்டன. பயிற்சியின் போது தமிழ்ச்செல்வி காட்டிய வேகமும் நிதானமும், எல்லாவற்றையும் உடனுக்குடன் புரிந்து, புரியாதவர்களுக்குஅதைத் தெளிவு படுத்தும் விதமும் அவளை 9 பேர் கொண்ட அணிக்கு தலைவியாக்கியது. கஜபார இராணுவ நடவடிக்கையை முறியடித்து இராணுவத்தினரைப் பழைய நிலைகளுக்கே விரட்டியடிக்கும் சமரில் எதிரிகள் தடுமாறி தாம் கொண்டு வந்த கனரக வாகனங்களிற் பூட்டிய கனரக ஆயுதங்களைக் கைவிட்டு விட்டு ஓட்டம் பிடிக்கத்தொடங்கினர். இந்த நிலையில் கனரக வாகனத்தில் பூட்டியிருந்த 30 கலிபர் ஆயுதம் ஒன்றை தமிழ்ச்செல்வி மிக விரைவாகக் கழற்றிஎடுத்தாள். உண்மையிலேயே 30 கலிபர் எப்படி இருக்கும் அதை எப்படிக் கையாளுவது, அதை எப்படிக்கழற்றுவது என்று எதுவும்அவளுக்குத் தெரியாது. ஆனால் அவளது முயற்சியும் சக போராளிகளின் உதவியும் அதைக்கழற்றி எடுக்க வைத்தது. அந்த முதற் களமே அவள் யார் என்பதைத் தளபதிகளுக்கு இனங்காட்டியது. சண்டைக்கு பின்னர் அடிப்படைப்பயிற்சிகளை நிறைவு செய்து கொண்டு சிறப்புப் பயிற்சிக்காகத் தெரிவு செய்யப்பட்ட அணியில்அவளும் ஒருத்தியானாள். தமிழ்ச்செல்வியின் ஆசை, கனவு, இலட்சியம் எல்லாமே ஒன்றாகத்தான் இருந்தது. எப்போது பயிற்சி நிறைவடையும், எப்போதுகனரக ஆயுதத்துடன் தான் சண்டைக்குச் செல்வது என்ற எண்ணம் மட்டுமே அவளிடம் இருந்தது. அந்த எண்ணமும், அவளது மன உறுதியும் அவளைக் கனரக ஆயுதத்தில் சிறப்பு தேர்ச்சி பெற வைத்தது. அவளது திறன் கண்டு லெப்.கேணல் அன்பு அவர்களால் 30 கலிபர் ஆயுதம் ஒன்று அவளுக்குப் பரிசாக வழங்கப்பட்டது. இதன் பின்னர் மணலாற்று அணியில் தமிழ்ச்செல்வி பெரும் சண்டைக்காரி ஆகிவிட்டாள்.இராணுவ ரோந்து அணிகள் மீதானபதுங்கித்தாக்குதல்களில் தனக்கென்றோர் இடத்தைப்பிடித்தாள். அளம்பிற் பகுதி தொடர் காவலரண்கள் மீதான தாக்குதல்,அளம்பிற் பகுதி மீட்புச்சமர், கொக்குளாய், கொக்குத்தொடுவாய்முன்னரங்கக் காவலரண்கள் மீதான தாக்குதல்,மண்கிண்டிமலை இராணுவமுகாம் தகர்ப்பு என மணலாற்றுப்பகுதியில்இடம்பெற்ற அனைத்துத் தாக்குதல் நடவடிக்கைகளிலும் தமிழ்ச்செல்வியின் கை ஓங்கியிருந்தது. விடுதலைப்போராட்டத்தில் இணைந்து மிகக்குறுகிய காலத்திலேயே பெருவளர்ச்சிப் பாதையை நோக்கி அவள் பயணிக்கத்தொடங்கினாள். அவளது இந்த வளர்ச்சிக்குக் காரணமே துணிவு, தன்னம்பிக்கை,விடாமுயற்சி, என்கின்ற மூன்றுமே. முடியாது என்ற சொல் அவள் அகராதியில் கிடையாது போனது. இதன் பின்னர் அவளது செயற்பாடு யாழ் மண்ணை நோக்கிநகர்ந்திருந்தது.அங்கு அவளது முதற்களம் ”யாழ்தேவி” இராணுவ நடவடிக்கை எதிர்ச்சமராக இருந்தது. தொடர்ந்து பூநகரிப்படைத்தளம் மீதான அழித்தொழிப்புச்சமரிலும் அவள் தனது முத்திரையைப் பதித்துக் கொண்டாள். 1994ஆம் ஆண்டின் ஆரம்பக்காலப்பகுதி, விடுதலைப்போராட்ட வரலாற்றில் இதுவரை காலமும் பெண் போராளிகளுக்கானகனரக ஆயுதப் பயிற்சிகளை ஆண் போராளிகளே வழங்கி வந்திருந்தனர். இந்த நிலமையை மாற்றி பெண் போராளிகளுக்குப் பெண் போராளிகளே கனரக ஆயுதப் பயிற்சிகளை வழங்குவதற்காக ஆசிரிய அணிஒன்றை உருவாக்குவதற்காக கனரக ஆயுதங்களில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற போராளிகள் உள்வாங்கப்பட்டிருந்தனர். அந்த அணியில் தமிழ்ச்செல்வியும் ஒருத்தியானாள். இவர்களுக்கான ஆசிரியப் பயிற்சி எழுதுமட்டுவாளில் அமைந்திருந்த ”கஜன்” பயிற்சிப் பாசறையில் இடம்பெற்றது. இதன் போதுதமிழ்ச்செல்வி 30கலிபர் 50 கலிபர் ஆயுதங்களில் ஆசிரியப் பயிற்சியை எடுப்பதற்காகத் தெரிவு செய்யப்பட்டிருந்தாள். ஆரம்ப காலத்தில் பொதுவாக ஆண் போராளிகள் பயிற்சி வழங்கும் போது பெண் பிள்ளைகளால் சில கடின பயிற்சிகளைசெய்ய முடியாது என்ற நிலைப்பாடுஇருந்தது. அதுகும் 50 கலிபர் ஆயுதம் அதன் முக்காலி என்பவற்றைத்தூக்கிப் பயிற்சி எடுப்பது என்பதுகடினமானதொன்று. அதனால் இதனை இவர்கள் இலகுவாகச் செய்யமாட்டார்கள் என பயிற்சி ஆசிரியர்கள் கருதியிருந்தனர்ஆனால் இந்த நிலைப்பாட்டைப் பெண் போராளிகள் தவிடுபொடியாக்கினர். அதிலும் தமிழ்ச்செல்வியின் ஆற்றல் கண்டு பயிற்சி ஆசிரியர்கள் ஒருகணம் பிரமித்துப் போயினர். ஒரு முறை எவ்வளவு துாரத்துக்கு பெண் போராளிகளால் ஆயுதங்களைத் தூக்கிக்கொண்டு பயிற்சி எடுக்க முடியும் எனஆசிரியர்கள் பரீட்சித்துப் பார்த்தார்கள். நாகர்கோயில் சந்தியில் இருந்து ஆரம்பமான அந்தப் பயிற்சியில் தமிழ்ச்செல்வியின் தோளில் 75 கிலோ கிராம் நிறையுடைய 50 கலிபர் ஆயுதத்தைப்பொருத்தும் முக்காலி இருந்தது.ஓய்வில்லாமல் நிலைகள் எடுத்தெடுத்து 10கிலோ மீற்றர்கள் கடந்துநிறைவுற்றது அந்தப்பயிற்சி. அதுவரை அந்தக் கடினப் பயிற்சியில் இருந்து அவள் ஒரு துளி கூட அசந்ததில்லை. பாரத்தைத் தூக்கித் தூக்கி தோள்கள்சோர்ந்தது.ஓடியோடிக் கால்கள் ஓய்ந்திருந்தது. ஆனாலும் மனம் தளராது ஓர்மத்துடன் பயிற்சி ஆசிரியர்களாலே நம்ப முடியாதஅளவுக்கு அவள் செய்து காட்டினாள். அப்போது பயிற்சி தந்த ஆசிரியர் தனது வாயாலேயே பாராட்டினார்.”உங்களை நான் தவறாக எடை போட்டு விட்டேன், உங்களால் எல்லாவற்றையும் செய்ய முடியும்” என்றார். தமிழ்ச்செல்வி ஒன்றை செய்து முடிக்க வேண்டும் என்று நினைத்தால் அதை நுாற்றுக்கு நுாறு வீதம் மிகத்திறமையாகச்செய்து முடிப்பாள். எந்தக் கடினச் சவாலாக இருந்தாலும் எந்தத்தயக்கமும் இன்றி நேருக்குநேர் நின்று முகம் கொடுப்பாள். இதுதான் அவளுக்கே உரிய சிறப்பியல்பாக இருந்தது. இந்தப்பயிற்சியின் நிறைவில் தமிழ்ச்செல்வி சகல ஆயுதங்களையும் பயிற்றுவிக்கும் ஆசிரியராக இருந்தாள். பயிற்சிக்காலத்திலேயே சூரியக்கதிர் 1,2, மண்டைதீவுச்சமரென அவளது களப்பணி விரியத்தொடங்கியது. கனரகப் பயிற்சி ஆசிரியராக அவள் இருந்த போது பயிற்சி நேரத்தில் அவளிடம் இருக்கும் கண்டிப்பு பயிற்சி நிறைவடைந்தமறுநொடியே அவளை விட்டுப்பறந்து விடும்.போராளிகளோடு மிக இறங்கி அவர்களது பிரச்சினை, குறைநிறைகளைக்கண்டறிவதில் அவளுக்கு நிகர் அவளேதான். அவள் போராளிகளை அணுகும் முறையே வித்தியாசமானது.”செல்லம்” ”குஞ்சு” பெரியவர்கள் என்றால் ”அக்காச்சி” என்றும் அன்பு பொழிய அழைக்கும் அவளது பேச்சு வழக்கு அவளது சொந்த இடமானகற்சிலைமடுவின் மண்வாசணையைச்சொல்லும். அந்த அன்பான பேச்சை இறுதிவரை அவள் கைவிட்டதே இல்லை. பொதுவாகப் போராளிகளுக்கு அவள் பயிற்சி ஆசிரியராக வருவது விருப்பமான ஒன்றாக இருந்தது. அதனால் போராளிகள்விரும்பும் நல்லாசானாக அவள் இருந்தாள். 1995ம் ஆண்டு புலிப்பாச்சல் சண்டைக்கான பயிற்சிகளை வழங்கியதோடு களமுனைக்கும் கனரக ஆயுதங்களைஒருங்கிணைத்துச் சண்டை செய்திருந்தாள்.அதன் பின்னர் யாழ் நகரை விட்டு வெளியேறும் வரை 50 கலிபர் ஆயுதத்தோடுகளத்தில் நின்றிருந்தாள். 1996ம் ஆண்டு மகளிர் படையணி 2ஆம் லெப் மாலதி படையணியாக பரிணாமம் பெற்ற போது மாலதிபடையணியின்சிறப்புத்தளபதி பிரிகேடியர் விதுஷாக்காவுடன் அவளது செயற்பாடு தொடர்ந்தது. ஓயாத அலைகள் 1 எனப் பெயரிடப்பட்டு சிறிலங்காப்படைகளால் வல்வளைப்புச் செய்யப்பட்டிருந்த முல்லைச் சமரில்உதவியணிக்குப் பொறுப்பாளராக களம் சென்றிருந்தாள். தொடர்ந்து ”சத்ஜெய” இராணுவ நடவடிக்கை,கிளிநொச்சி நகர்,பரந்தன்சண்டையென ஓய்வின்றி அவள் உழைத்தாள். தமிழ்ச்செல்விக்கென்று ஒரு ராசி இருந்தது. எந்தச்சண்டைக்குச் சென்றாலும் விழுப்புண்தாங்காமல் குறைந்தது ஒரு கீறலாவதுபடாமல் களமுனையை விட்டு அவள் திரும்பமாட்டாள். ”ஜெயசிக்குறு” என்ற பெயரில் எதிரி பெரும் இராணுவ நடவடிக்கையைத் தொடங்கிய போது அந்தக்களமுனைக்குச் செல்லும்போராளிகளுக்கான கனரக ஆயுதப்பயிற்சிகளை வழங்கி அவர்களைக் களமுனைக்குத் தயார்படுத்தும் பணியோடு நேரடியாகவேகளத்திலும் நின்றாள். புளியங்குளம் புரட்சிக்குளம் என்றுகூறுமளவுக்கு போராளிகளின் போரியல் நடவடிக்கை மிகச் சிறப்பானதாக அமைந்திருந்தபுளியங்குளச்சமரில் கொம்பனியை வழிப்படுத்தும் 2ஆவது அணித்தலைவியாகச் செயற்பட்டிருந்தாள். இதுவே புதூரில் ஒரு கொம்பனியைக் கொண்டு நடத்தும் அளவுக்கு அவளை உயர்த்தியது. புதூரில் இருந்து இராணுவத்தினரின் முன்னேற்ற முயற்சிகளை ஒரு அங்குலம் கூட நகரவிடாது போராளிகள் ஓர்மத்துடன் நின்று சமராடிய போது மிகச் சிறப்பாகச் சண்டைகளை வழிப்படுத்தினாள். நீண்டு விரிந்த ஜெயசிக்குறுவைப் போலவே இவளது களப்பட்டியலும் நீண்டு கொண்டேசென்றது. தாண்டிக்குளம், மன்னகுளம் என எல்லாச்சமர்களிலும் அவளது பங்கும் இருந்தது. தீச்சுவாலை இராணுவ நடவடிக்கையின் எதிர்சமரிலும் கொம்பனியை வைத்து திறம்படச் சண்டையிட்டாள். அவளது போரியற் திறனை தளபதிகள் மட்டுமன்றி,தேசியத் தலைவரே பாராட்டும் அளவுக்கு அவளது செயற்பாடுவிரிந்திருந்தது. மன்னார் பள்ளமடுச்சண்டை அவளது போரிடும் திறனுக்கு இன்னும் வலுச்சேர்த்தது. இங்கும் கொம்பனித்தலைவியாகவே எதிரியைத் திணறடித்துக் கொண்டிருந்தாள். எந்த இறுக்கமான சண்டையாக இருந்தாலும் பதற்றமின்றிக் கட்டளைகளை வழங்கிசண்டையிடும் போராளிகளுக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிர்ந்தாள். அவளது குரல் தொலைத்தொடர்புக்கருவியில் ஒலித்தாலே போராளிகளுக்குள் புதுவேகம் பிறக்கும். அதுவே அவர்களைத்திறம்படச் சண்டை செய்ய வைக்கும் அவளது திறன் விரைவிலேயே அவளை மாலதி படையணியின் தளபதியாக மாற்றியது. தளபதியாக அவள் தேர்ந்தெடுக்கப்பட்டபோது களமுனையில் இருந்து அவளைப் பின்னுக்கு எடுக்க வேண்டியிருந்தது. அதனால் மாலதி படையணியின் சிறப்புத்தளபதி விதுஷாக்கா அழைத்தும்அவளுக்கு களமுனையை விட்டு வருவதற்கு விருப்பம் இருக்கவில்லை. ”நான் சண்டையிலேயே நிக்கிறன் பின்னுக்கு வரவில்லை” என விதுஷாக்காவிடம் தெரிவித்தாள். அந்த இடத்தில் விதுஷாக்காமிக இறுக்கமான கட்டளை ஒன்றை பிறப்பித்தார். சண்டையில் நிற்பதாக இருந்தால் குப்பி,தகட்டைக்கழற்றிவிட்டு நிக்கும் படியும்இல்லை என்றால் பள்ளமடுவில் இருந்து தனது இடத்துக்கு நடந்து வரும்படியும் பணித்திருந்தார். தமிழ்ச்செல்விக்கு களமுனையை விட்டு வருவது என்பது முடியாத காரியமாக இருந்தாலும் கட்டளைக்குக் கீழ்ப்படிதல் என்பதுஎவ்வளவு முதன்மையானது என்பது அவளுக்குப் புரியும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் தண்டனையை மகிழ்வோடு ஏற்றுமன்னாரில் இருந்து நடந்து வந்தே விதுஷாக்காவைச் சந்தித்தாள். மாலதி படையணியின் தளபதிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட தமிழ்ச்செல்விக்கு நிர்வாகப் பணி என்பது புது அனுபவமாகவேஇருந்தது.போராட்டத்தில் இணைந்த காலப்பகுதியில் இருந்து ஓய்வின்றிச் சண்டை,பயிற்சி, சண்டை,பயிற்சி, என மாறிமாறிஉழைத்தவளுக்கு நிர்வாகப்பணி என்பது பெரும் சவால் தான். ஆனால் சவால்களையே சாதனையாக்கிக் காட்டிய அவளுக்குநிர்வாகப்பணிகளிலும் சிறப்பாகச் செயற்பட முடிந்தது. தளபதியாக இருந்த போதிலும் அவளது செயற்பாடு களமுனைகளைச் சுற்றிச்சுற்றியே இருந்தது. போராளிகளின் முக்கியத்துவம் புரிந்து நல்ல நிர்வாகியாக அவள் இருந்தாள். இதன் பின்னர் 2004ஆம் ஆண்டு திருமண பந்தத்தில்தன்னை இணைத்துக்கொண்டாள். நிர்வாகத்துறையில் பணியாற்றிக்கொண்டிருந்த பூவண்ணன் என்கின்ற போராளியே அவளது வாழ்க்கைத்துணையாக அமைந்தார். போரியலில் எப்படித்திறம்படச் செயற்பட்டாளோ அதேபோல் இல்லற வாழ்விலும் அவள் தன் கடமைகளைச்சரிவரச்செய்தாள். அவள் இல்லறத்தின் நல்லறப்பயனாய் தாய்மை அடைந்திருந்த நிலையிலும் தனது பணியிலிருந்து சிறிதளவு கூடபின்னிற்கவில்லை. குழந்தை பிறந்த பின்னரும் அவளது செயற்பாடு களம் சார்ந்ததாகவே இருந்தது. கடமைக்குச் செல்லும்பெண் போராளிகளின் குழந்தைகளைப் பராமரிப்பதற்காகத் தளிர்கள் என்ற குழந்தைகள் காப்பகம் ஒன்றுஅமைக்கப்பட்டிருந்தது. அங்கு தான் தமிழ்ச்செல்வி தனது குழந்தையைப் பகல் பொழுதில் விட்டுவிட்டுக் களமுனைகளுக்குச் சென்று வருவாள். எவ்வளவு தான் கடமைகள் இருந்தாலும் அவள் தனது குழந்தைக்கு நல்ல அம்மாவாகவும் இருக்கத்தவறியதில்லை. ஆனால் இறுதிப் போரரங்கு சூடுபிடித்திருந்த நேரத்தில் தானொரு குடும்பப்பெண், தான் ஒரு குழந்தைக்கு அம்மா என்பதையும் கடந்து, தான் ஒரு போராளி என்கின்ற உணர்வே அவளிடத்தில் மேலோங்கி இருந்தது. அதுவே அவளது இறுதி மூச்சு வரை தன் உயிரிலும் மேலாய் நேசித்த மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் தன்னை அர்ப்பணிக்கத் தூண்டியது. விடுதலைப்போராட்ட வரலாற்றில் இறுதிப் பெரும் முற்றுகைச்சமராக அமைந்த ஆனந்தபுரம் போரரங்கு போராளிகளின் ஓர்மத்துக்கும், விடாமுயற்சிக்கும் பெரும் எடுத்துக்காட்டாக அமைந்திருந்தது. இந்தக்களத்தில் தேசியத்லைவரே நேரடியாகச் களமிறங்கி இருந்ததையும் யாரும் மறந்து விட முடியாது. பெரும் வேகத்தோடு வந்த எதிரி திண்டாடிய பெரும் கோட்டையாக ஆனந்தபுரம் இருந்தது. நாட்கள் நகரநகர எதிரியின் முழுப்படை வலுவும் ஆனந்தபுரத்திலே இருந்தது. அதனால் போர் அரங்கு நாளுக்கு நாள்இறுகிக்கொண்டே போனது. அதனால் தலைவரை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பதே முற்றுகைக்கு வெளியே இருந்த தளபதிகள் போராளிகளினதும், ஒருமித்த வேண்டுதலாக இருந்தது. தவிர்க்க முடியாத சூழலில் தலைவர்முற்றுகைக்குள் இருந்து வெளியில் வர, அன்றைய தினமே ஆனந்தபுர முற்றுகைக்குள் சென்ற அணியில் தமிழ்ச்செல்வியும் இருந்தாள். அவள் அந்த முற்றுகைச் சண்டைக்குள் புறப்படுவதற்கு முன்னதாக தனது கணவனிடம் சென்று விடைபெறும் போது, அவர் தனது துப்பாக்கியை அவளிடம் கொடுத்து உன்னருகில், உனக்குத்துணையாக எப்பவும் நானிருப்பன் வென்று வா! என்றுவிடைகொடுத்து அனுப்பியிருந்தார் அப்போது இருவருக்கும் தெரியாது அது தான் தமது இறுதிச் சந்திப்பென்று. ஆனந்தபுரம் எதிரியின் அதியுயர் தாக்குதல் வலுவின் உச்சமாக மாறியிருந்தது. ஆட்லறி எறிகணைகள், மோட்டார் பீரங்கிகள், கனரக ஆயுதங்கள், சூட்டு வலு வழங்க, வான் படை குண்டு மழைபொழிய, இதற்கு இடையில் நின்று பசி மறந்து, துாக்கம்மறந்து, விழுப்புண்களின் வலிமறந்து, கூட நின்று களமாடி வீழ்ந்த வீரர்களின் இழப்புகளின் துயர் கடந்து, வீரர்கள் விழ விழதங்களின் முழுப்பலத்தையும் மனவைராக்கியத்தையும் பயன்படுத்தி போராளிகள் போராடிக்கொண்டிருந்தனர். அந்தக்களத்தில் தமிழ்ச்செல்வியும் கையில் விழுப்புண் தாங்கியிருந்தாள். இனி அந்த முற்றுகையைத்தக்க வைத்துக்கொள்ளமுடியாத சூழல் உருவாகிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் அந்த முற்றுகையை உடைத்துக்கொண்டு எப்படியாவது வெளியில் வரும்படி அவர்களுக்குகட்டளையிடப்பட்டிருந்தது. 04.04.2009 அதிகாலை பெரும் உடைப்புச்சமர் ஒன்றை களத்தில் நின்ற தளபதிகள் போராளிகள் மேற்கொண்டிருந்த போது, அந்தசமர் பெரும் வெற்றியைத்தரவில்லை. நீண்ட விடுதலைப் போராட்டத்தின் பெரும் தூண்களாக இருந்த பிரிகேடியர் விதுஷா, பிரிகேடியர் துர்க்கா, உட்பட பல தளபதிகள்போராளிகளை இழந்த போது தமிழ்ச்செல்வி மிகவும் மனம் தளர்ந்திருந்தாள். கூட நின்ற தோழியிடம் ”இந்த முற்றுகைக்குள் இருந்து அக்காவைய எப்படியாவது பாதுகாத்துக்கூட்டிச்செல்ல வேண்டும் என்று நினைச்சன் என்னால அது முடியேல்லே… கடைசியா என்ர பிள்ளைக்கு நல்ல அம்மாவாகவும் இருக்க முடியல்லே…” என்ரபிள்ளை என்று அவள் சொன்ன அந்த நொடி, அவளது துடிப்பும் தவிப்பும் அவளது உணர்வில் தெரிந்தது. ”தானாடா விட்டாலும் தசை ஆடும்” என்பார்கள். அதன் உண்மையை அவளிடம் கண்ட போது, ”தாய்மை” என்கின்ற அந்தப்புனிதமான உணர்வு அவளுக்குள் இருந்ததை அவள் ஒரு போதும் வெளிப்படுத்தியதில்லை. முதல் தடவையாக அவளை இந்தநிலையில் பார்த்த போது மெய்சிலிர்த்துப் போனது. அன்றைய தினம் மிக இறுக்கமான சூழ்நிலையிலும் தொலைத்தொடர்பு சாதனத்தில் தன் நெருங்கிய போராளித் தோழிகள் ஒருசிலரோடு அவள் பேசினாள்.”எவ்வளவு போராடியும் என்னால அக்காக்களப்பாதுகாக்க முடியாமல் போயிற்று… அவைய நான் இழந்திட்டன், அவள் கதறினாள். என்ர குஞ்சுகள் நிறைய வீரச்சாவடைஞ்சிற்று… என்ர செல்வங்கள் எல்லாம் விழுப்புண் தாங்கிதுடித்துக்கொண்டிருக்கினம்…”அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே இராணுவத்தினர் ஒலிபெருக்கியில் போராளிகளைச் சரணடையும்படி அறிவிப்புச் செய்வது மிகத்தெளிவாக கேட்டது. அவள் சொல்லாமலே இராணுவத்தினரும் அவர்களும் மிக அருகில் நின்று களமாடும் களச் சூழலின் இறுக்கமும், நெருக்கமும்மிகத் தெளிவாகப் புரிந்தது. அந்தக்கணத்தில் கூட தான் திரும்பி வரவேண்டும் என்ற எண்ணம் துளியேனும் அவளிடத்தில் இருக்கவில்லை. எப்படியாவது அதற்குள் இருக்கும் போராளிகளைக் காப்பாற்றி முற்றுகையை உடைத்து அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவள் மனதில் இருந்தது. இறுதியாக ஒரேயொருவார்த்தை ”என்ர பிள்ளையைப் பத்திரமாகப் பாருங்கோ…” அது தான் அவளது கடைசித் தொடர்பாடலாக இருந்தது. அன்றைய தினம் இரவே எஞ்சிய போராளிகள் அனைவரையும் ஒருங்கிணைத்துக் கொண்டு மீண்டும் ஒரு உடைப்புச்சமரைமேற்கொள்ள தளபதிகளும் போராளிகளும் தயாராகினர். அந்த உடைப்புச்சமருக்கு எஞ்சிய மகளிர் போராளிகளையெல்லாம் ஒருங்கிணைத்துக்கொண்டு தமிழ்ச்செல்வி களம்இறங்கினாள். அந்த உடைப்புச்சமர் உக்கிரமாய் நடந்து பச்சைப்புல்மோட்டைக் கடல் நீரேரியூடாக ஒரு உடைப்பொன்றை ஏற்படுத்திபோராளிகள் நகர்ந்து கொண்டிருக்கும் போதுதான் தற்துணிவும் விடாமுயற்சியும், வைராக்கியமும் கொண்ட தமிழ்ச்செல்வி என்கின்ற பெருமலை எதிரியின் குண்டேந்தி அந்த இடத்திலேயே சரித்திரமாய் வீரவரலாற்றின் பக்கங்களில் இடம்பிடித்துக்கொண்டாள். விடுதலை எனும் பெரு இலட்சிய நெருப்பை நெஞ்சினில் சுமந்து ஓயாது அல்லும் பகலும் அதற்காகவே தன்னை அர்ப்பணித்தகேணல் தமிழ்ச்செல்வி காலம் உள்ளவரை தமிழர் தம் நெஞ்சங்களில் மாவீரத் தாயாய் வாழ்வாள். -அ.அபிராமி 25.11.2016 https://www.thaarakam.com/news/121081

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.