Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. மீண்டும் இராணுவ தேவைக்காக சுவீகரிக்கப்படவுள்ள காணிகள்! யாழ்ப்பாணம் - வலி வடக்கில் பல காணிகள் மக்களிடம் மீள கையளிக்கப்பட்டு இருந்தாலும் 2013ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய அது இராணுவ தேவைக்காக சுவீகரிக்கப்பட வேண்டிய காணியாகவே காணப்படுகிறது என மனிதவுரிமை செயற்பாட்டாளர் ஜட்சன் தெரிவித்துள்ளார். வலி. வடக்கில் இராணுவத்தினரின் பிடியில் உள்ள காணிகளின் உரிமையாளர்களின் பிரதிநிதிகள் யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று (22) நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், ”தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் 2,800 ஏக்கர் காணியே விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாக மாவட்ட செயலர் கூறுகின்றார். ஆனால் 2808 ஏக்கர் என பிரதேச செயலக தகவல்கள் கூறுகின்றன ஆனால் 2013ஆம் ஆண்டு வெளியான வர்த்தமானியில் 6,317 ஏக்கர் காணிகள் இராணுவத்தினர் வசமுள்ளதாகவும், அவற்றை இராணுவ தேவைகளுக்காக சுவீகரிக்க உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பின்னரான கால பகுதியில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் கட்டம் கட்டமாக பல பகுதிகளில் உள்ள காணிகள், வீதிகள், ஆலயங்கள் என்பவற்றை மீள மக்களிடம் கையளித்து வந்துள்ளன. அந்த காணிகள் மக்களிடம் மீள கையளிக்கப்பட்ட இருந்தாலும் 2013ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய அது இராணுவ தேவைக்காக சுவீகரிக்கப்பட வேண்டிய காணியாகவே காணப்படுகிறது. அத்துடன், மக்களின் காணிகளில் இதுவரை காலமும் இராணுவத்தினர் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு பெரும் பணம் ஈட்டியுள்ளனர். அவர்கள் தனியார் காணிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காக காணி உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பதுடன், காணிக்கான குத்தகை பணத்தினையும் வழங்க வேண்டும்” என தெரிவித்தார். https://newuthayan.com/article/மீண்டும்_இராணுவ_தேவைக்காக_சுவீகரிக்கப்படவுள்ள_காணிகள்!
  2. காசாவில் உணவு குடிநீர் போன்றவற்றை பெற முயலும் சிறுவர்கள் கூட கொல்லப்படுகின்றனர் - உலக நாடுகள் கடும் கண்டனம் - யுத்தத்தை நிறுத்துமாறு வேண்டுகோள் 22 Jul, 2025 | 11:25 AM காசா யுத்தம் தொடர்பில் இஸ்ரேலை கடுமையாக சாடியுள்ள 25 நாடுகள் யுத்தத்தை உடனடியாக முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். பிரிட்டன் ஜப்பான் கனடா அவுஸ்திரேலியா உட்பட 25 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர். காசா மக்களின் துயரங்கள் முன்னர் இல்லாத அழவிற்கு தீவிரமடைந்துள்ளன என தெரிவித்துள்ள அவர்கள்அடிப்படை தேவைகளான உணவு குடிநீர் போன்றவற்றை பெற முயலும் சிறுவர்கள் உட்பட பொதுமக்கள் மனிதாபிமானமற்ற முறையில் கொல்லப்படுவதையும்,மிகச்சிறிய அளவில் மனிதாபிமான உதவிகள் வழங்கப்படுவதையும் கண்டித்துள்ளனர். மனிதாபிமான உதவி பொருட்களை பெற முயன்ற 800 பொதுமக்கள் கொல்லப்பட்டமை பயங்கரமானது என தெரிவித்துள்ள 25 நாடுகளும் இஸ்ரேலிய அரசாங்கம் மனிதாபிமான உதவியை வழங்குவதற்கு பயன்படுத்தும்முறை ஆபத்தானது இது ஸ்திரமின்மையை உருவாக்குவதுடன் காசா மக்களின் மனிததன்மையை பறிக்கின்றது என தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/220603
  3. புதிய அரசின் பொறுப்புக்கூறல்? லக்ஸ்மன் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர் மாத கூட்டத் தொடர் இலங்கை அரசாங்கத்திற்கு மற்றுமொரு அல்லது புதிய நெருக்கடியாக அமைய வேண்டும் என்பதே தமிழர் தரப்பின் எதிர்பார்ப்பாகும். அது சாத்தியமாவதும் இவ்லாமல் போவதும் கொண்டுவரப்படும் புதிய பிரேரணையிலேயே தங்கியிருக்கிறது. 2022ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் ஏற்படுத்தப்பட்ட பிரேரணைத் தீர்மானத்தின் காலம் முடிவடைய இருந்த நிலையில் கடந்த வருடத்தில் அத் தீர்மானம் ஒரு வருடகாலத்திற்கு நீடிக்கப்பட்டது. அது வருகிற செப்ரம்பரில் முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில், இவ்வருடத்தில் இலங்கை தொடர்பில் புதிய பிரேரணையொன்றினை பிரிட்டன் முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பிரிட்டனுடைய உறுதியான நிலைப்பாடாக இருப்பதாகவே இப்போது வரையில் அறியமுடிகிறது. கொண்டுவரப்படவுள்ள இந்தப் பிரேரணை ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினால் ஏற்கனவே முன்னெடுக்கப்படும் பொறுப்புக் கூறல் செயற்றிட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கான ஏதுக்களைக் கொண்டதாக இருக்கவேண்டும் என்பதுதான் முக்கியமானது. மனித உரிமைப் பேரவையில் எடுக்கப்படும் தீர்மானங்கள், அது தொடர்பிலான இலங்கை அரசாங்கத்தின் வாக்குறுதிகள், அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுதல் என்பன ஒன்றுக்கொன்று சமாந்தரமோ, பொருத்தப்பாடோ இல்லாமல் நகர்ந்து கொண்டிருப்பதே நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் வருகின்ற செப்டெம்பர் மாதத்தில் ஏற்படுத்தப்படும் பிரேரணைத் தீர்மானமானது இவற்றினை உறுதிப்படுத்தும் வகையிலும் உரிய பிரேரணை தீர்மானங்கள் சிறப்பாக நிறைவேற்றப்படும் வகையிலும் இருப்பது அவசியமாகும். 2022ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்பட்ட பிரேரணைத் தீர்மானத்தின்படி ஐ.நா. மனித உரிமைப் பேரவையினால் முன்னெடுக்கப்படும் சாட்சியங்களைத் திரட்டும் பணியும் நீடிக்கப்பட்டிருந்தது. ஆனால், மீண்டும் இதனை நீடிக்க முடியுமா என்பது கேள்விக்குறியானதுதான். அந்த ஒழுங்கில்தான் புதிய தீர்மானத்தின் கட்டாயம் மற்றும் அவசியம் உணரப்பட்டிருக்கிறது. சாட்சியங்களைத் திரட்டும் பணியை நாட்டுக்குள் மேற்கொள்வதற்கு இலங்கையின் கடந்த அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. என்ற வகையில் புதிய அரசாங்கத்திடமிருந்து இவ்வருடத்தில் அதற்கான சாத்தியம் இருக்கிறதா என்பது தெரியாமலிருக்கிறது. ஏனெனில் கடந்த வருடத்தின் கால நீடிப்பு தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எதிர்ப்பினை வெளிக்காட்டியிருந்தது. அந்த வகையில்தான், ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் விவகாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கவேண்டிய அவசியம் காணப்படுகிறது. அத்துடன், மனித உரிமைப் பேரவையின் பிரேரணைத் தீர்மானங்களின் காலத்தை நீடித்தல், புதிய பிரேரணைகளைக் கொண்டுவருதல் மூலம் இலங்கைக்குத் தொடர்ச்சியான அழுத்தங்களைப் பிரயோகித்து தங்களுக்கான நீதியைப் பெற்றுக் கொள்ளத் தமிழர் தரப்பு முயன்று வருகிறது. முள்ளிவாய்க்காலில் 2009 மே மாதத்தில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட யுத்தம் ஓய்ந்து 16 வருடங்கள் கடந்த போதிலும் பொறுப்புக்கூறல் விடயத்தில் நாட்டில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் உரிய அக்கறையினை காண்பித்திருக்கவில்லை. இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட்டுப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்படவில்லை. இதற்கான வலியுறுத்தல்களே இப்போது நடைபெற்று வருகின்றன என்பதுதான் உண்மை. 2012ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது உள்ளக விசாரணைப் பொறிமுறை மூலம் பொறுப்புக்கூறலுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போதைய அரசாங்கம் வாக்குறுதி வழங்கியிருந்தது. ஆனால், அது நடைபெறவில்லை. 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்க காலத்தில் ஐ.நா. மனித உரிமை பேரவையின் செப்டெம்பர் கூட்டத் தொடரில் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு இலங்கை அரசாங்கத்தால் இணை அனுசரணை வழங்கப்பட்டது. அப்போது, சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய உள்ளகப் பொறிமுறையின் கீழ் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சி ஆசையினால் அது நடைபெறாத சூழ்நிலை ஏற்பட்டது. அந்தவகையில், நல்லாட்சி அரசாங்க காலத்திலும் பொறுப்புக்கூறல் விடயமானது கைகூடாமல் போனது. இருந்தாலும், காணாமல் போனோருக்கான அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் ஆகியவற்றுக்கான செயற்பாடுகள் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டிருந்தன. நம்பிக்கையீனம் காரணமாகத் தமிழ் மக்கள் இவற்றினை ஏற்றுக்கொள்ளவில்லை. அதே நேரத்தில், சர்வதேச விசாரணையையே பாதிக்கப்பட்ட மக்கள் கோரினர். ஆனால், உள்ளக விசாரணைப் பொறிமுறையில் நம்பிக்கை இழந்தமையினாலேயே தமிழ் தரப்பினர் சர்வதேச விசாரணையினை வலியுறுத்தி வருகின்றனர். என்பதனை அரசாங்கம் உணர மறுப்பதே இந்த இடத்தில் சிக்கலாகும். இவ்வாறான சிக்கல்களுக்குள்தான் நல்லாட்சி அரசாங்கம் முடிவுக்கு வந்து புதிய அரசாங்கம் உருவானது. ஆனால், 2022ஆம் ஆண்டு ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதையடுத்து நல்லாட்சி காலத்தில் இணை அனுசரணை வழங்கி ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயங்களில் முக்கியமான உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை அமைத்து அதன் மூலம் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் வகையில், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால், மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததுடன் அதுவும் நின்று போனது. இருந்த போதிலும், ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் கடந்த செப்டெம்பர் மாதம் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி வழங்கியிருந்தார். என்பதும், அதற்கான நடவடிக்கைகள் எதுவும் புதிய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் கவனிக்கப்பட வேண்டும். நாட்டில் புரையோடிப்போன இனப்பிரச்சினைக்கான தீர்வினை கடந்த அரசாங்கங்கள் கால இழுத்தடிப்புடனேயே நகர்த்தின, கடந்து போயிருக்கின்றன. யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது வெறுமனே பொறுப்புக்கூறலுடன் முடிந்து போகின்ற விடயமல்ல என்பதும் வெறுமனே வாக்குறுதிகளால் இதனைச் சரி செய்துவிடலாம் என்று எண்ணுவதும் புத்திசாலித்தனமானதல்ல. சீரான முன்னேற்றத்துடன் அது முன்னெடுக்கப்படவேண்டும். அந்த வகையில்தான் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் செப்டெம்பர் மாத அமர்வில், இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணை கொண்டுவரப்படவேண்டும். அதன் மூலம், இலங்கை அரசாங்கத்துக்குத் தொடர்ச்சியான அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் உருவாகி வருகின்றன. பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கும் வரை அழுத்தங்கள் இருந்து கொண்டே இருக்கும். பிரிட்டன் கொண்டுவரவுள்ள புதிய பிரேரணையானது பிரித்தானியாவை தலைமையாகக் கொண்ட இணை அனுசரணை நாடுகளினால் கொண்டுவரப்படவுள்ளதாகவே இருக்கும். என்றவகையில், பலமானதொரு தீர்மானமாக நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை தமிழர் தரப்பிடம் இருக்கிறது. அந்த ஒழுங்கில்தான், இப்போது ஆட்சியிலுள்ள மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பொறுப்புக்கூறல் விடயத்தில் முன்னைய அரசாங்கங்களின் கொள்கைகளையே கடைப்பிடிக்கின்றது என்ற குற்றச்சாட்டு வெளிவர ஆரம்பித்திருக்கிறது. அது தவிர்க்கப்படவேண்டுமாக இருந்தால், புதிய அரசாங்கம் நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும். இல்லாது போனால், நாட்டுக்குள்ளும் சர்வதேசத்திலும் புதிய அரசாங்கத்தின் மீதுள்ள நம்பிக்கை இழப்புக்கு அவர்களே காரணமாவார்கள். அத்துடன், அரசாங்கத்தின் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களையும் விமர்சனங்களையும் ஏற்றுக் கொண்டமைக்கு அது சமமானதாகும். அதே நேரத்தில், இலங்கையின் அரசாங்கங்கள் பொறுப்புக் கூறல் விடயத்தில் உரிய அக்கறை காண்பிக்காமையினாலேயே தமிழ் தரப்பு இப்போதும் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு முன்பாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றமையை மீண்டுமொருமுறை நிரூபிப்பதாகவும் இருக்கும். எது எவ்வாறானாலும், மனித உரிமைப் பேரவையின் செப்டெம்பர் அமர்வில் கொண்டுவரப்படும் பிரேரணையும், அதன் நிறைவேற்றமும் அதற்கு இலங்கை அரசாங்கம் காண்பிக்கும் பிரதிபலிப்பும்தான் இவற்றினைத் தீர்மானிக்கும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/புதிய-அரசின்-பொறுப்புக்கூறல்/91-361507
  4. இலங்கையின் சனத்தொகையில் பெண்கள் முன்னிடம்! இலங்கையில் ஆண்களை விட பெண்கள் வீதம் அதிகரித்துள்ளதாக வடமேற்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அமிந்த மெத்சில் தெரிவித்துள்ளார். நாட்டில் ஆண் மக்கள்தொகை குறைவது எதிர்காலத்தில் பல நெருக்கடிகளை உருவாக்கக் கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 1995 ஆம் ஆண்டில் 100 பெண்களுக்கு 100.2 ஆண்கள் இருந்த நிலையில், தற்போது அது 100 பெண்களுக்கு 93.7 ஆண்களாகக் குறைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். பெண்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு, பெண்களின் பிறப்பு வீதம் உயர்வு, மற்றும் இளம் ஆண்களின் வெளிநாட்டு இடம்பெயர்வு ஆகியவை இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதாக பேராசிரியர் அமிந்த மெத்சில் கூறினார். https://newuthayan.com/article/இலங்கையின்_சனத்தொகையில்_பெண்கள்_முன்னிடம்!
  5. வலி. வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள 234 ஏக்கர் காணியில் மக்களை மீள் குடியேற்ற பேச்சு! adminJuly 22, 2025 விவசாய நடவடிக்கைகளுக்காக எனும் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்களை நிரந்தமாக குடியமர்த்த யாழ்.மாவட்ட கட்டளை தளபதியுடன் பேச்சுக்களை நடாத்தி வருவதாக மாவட்ட செயலர் தெரிவித்துள்ளார். மயிலிட்டி மீள்குடியேற்ற சங்க பிரதிநிதிகள் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனை அவரது அலுவலகத்தில் சந்தித்து காணி விடுவிப்பு தொடர்பாக கலந்துரையாடினர். மயிலிட்டி மீள்குடியேற்ற சங்க பிரதிநிதிகள் கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்தில் குறித்த விடயம் சம்பந்தமாக அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியதன் அங்கமாக, மாவட்ட செயலரை சந்தித்து வர்த்தமானி அறிவித்தல் மூலம் காணிகள் சுவீகரிக்கப்பட்டிருந்த தன்மையை வெளிக்காட்டி அதனை வர்த்தமானி அறிவித்தலில் இருந்து நீக்குவதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் கோரிக்கையை முன்வைத்தனர். அதன் போதே மாவட்ட செயலர் மேற்கண்டவாறு தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில், காணி விடுவிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக தெளிவுபடுத்தியதுடன், அதற்கமாய கட்டம் கட்டமாக காணி விடுவிக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்தார். ஜனாதிபதி கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது, யாழ் மாவட்ட காணி விடுவிப்பு தொடர்பாக தெளிவுபடுத்தப்பட்டதாகவும், மற்றும் பலாலி வீதியின் முக்கியத்துவம் தொடர்பாகவும் பிரஸ்தாபிக்கப்பட்டதற்கமைய, அவ்வீதித் தடை அகற்றப்பட்டு மக்கள் பாவனைக்கு திறக்கப்ட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் ஏற்கனவே விடுவிக்கப்பட்டிருந்த 234 ஏக்கர் காணிகள் விவசாய தேவைகளுக்காக மாத்திரம் விடுவிக்கப்பட்டிருப்பதாவும், குடியிருப்புக்காக அந்த காணிகளை விடுவிப்பதற்கு யாழ் மாவட்ட கட்டளைத் தளபதியுடன் கலந்துரையாடி தொடர் நடவடிக்கைகள் எடுப்பதாகவும் தெரிவித்தார். இக்கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக செயலர் (காணி) திரு. பா.ஜெயகரன், மீள்குடியேற்ற கிளை உத்தியோகத்தர்கள், மீள்குடியேற்ற சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , ஜனாதிபதியாக இருந்த கால பகுதியில் வலி. வடக்கில் 234 ஏக்கர் காணிகள் விவசாய நடவடிக்கைகளுக்கு மாத்திரம் எனும் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டது. குறித்த காணிகள் இன்னமும் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் , விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் காணிகளுக்கு காலையில் சென்று மாலையில் திரும்பி விடவேண்டும், அக்காணிகளில் தங்கி நிற்பதற்கோ , தற்காலிக கொட்டகைகளையோ அமைக்க இராணுவத்தினர் இதுவரையில் அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/218196/
  6. உலக வங்கி பொருளாதார நிபுணர் குழுவினர் யாழ் . பழைய கச்சேரியை பார்வையிட்டனர்! adminJuly 22, 2025 மரபுச் சுற்றுலா மேம்பாடு மற்றும் தொடர்ச்சியாக பேணுதல் என்ற அடிப்படையில் பழைய கச்சேரியினை புனரமைப்பு செய்தல் தொடர்பாக மாவட்ட செயலருடன் உலக வங்கி பொருளாதார நிபுணர் குழுவினர் நேற்றைய தினம் திங்கட்கிழமை (21.07.25) பழைய கச்சேரியினை பார்வையிட்டு ஆராய்ந்தனர். இதற்கு முன்னராக மாவட்டச் செயலகத்தில் உலக வங்கி குழுவினருடன் நடைபெற்ற கலந்துரையாடலில் சுற்றுலாத் துறை அபிவிருத்தி செய்யும் நோக்கில் பழைய கச்சேரி மற்றும் யாழ்ப்பாண கோட்டை புனரமைப்பின் அவசியம் தொடர்பாக – உலக வங்கி குழுவினரிடம் மாவட்ட செயலரினால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. அந்நிலையிலேயே உலக வங்கி பொருளாதார நிபுணர் குழுவினர் பழைய கச்சேரி கட்டடத்தினை பார்வையிட்டுள்ளனர். மேலும், வடக்கு கிழக்கு மாகாணங்களின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் உட்கடுமாணம் மற்றும் சுற்றுலாத்துறையினை விருத்தி செய்தல் தொடர்பிலான ஜனாதிபதியின் வழிகாட்டலுக்கு அமைவாக, கடந்த இரு மாதங்களாக வடக்கின அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் செயற்றிட்டங்களையும் அதன் சாத்தியநிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/218199/
  7. காணியை விட்டு வெளியேறுமாறு தையிட்டி விகாரதிபதிக்கு கடிதம்! adminJuly 22, 2025 ஆக்கிரமிக்கப்பட்ட காணியில் இருந்து உடனடியாக வெளியேறுமாறும் , தவறின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தையிட்டி விகாரையின் விகாரதிபதிக்கு வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார். தையிட்டியில் உள்ள தனது காணியில் அடாத்தாக சட்டவிரோத கட்டடம் ஒன்றினை அமைத்து வருவதாக எமக்கு ஒருவர் முறைப்பாடு அளித்துள்ளார். எனவே முறைப்பாட்டாளர் குறிப்பிட்டுள்ள காணியில் , தங்களுக்கு சட்ட ரீதியான உரித்து காணப்பட்டால் , அவற்றுக்கான ஆவணங்களை பிரதேச சபையில் சமர்ப்பிக்கவும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் உடனடியாக அக்காணியில் இருந்து வெளியேற வேண்டும். தவறின் தங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தையிட்டி விகாராதிபதி ஜிந்தோட்ட நந்தரமா தேரோவிற்கு தவிசாளர் சோ. சுகிர்தன் கடிதம் மூலம் அறிவித்துள்ளார். https://globaltamilnews.net/2025/218206/
  8. ‘நட்புறவுப் பாலம்’ என்ற பெயரில் சதி – எதிர்ப்பை வெளிக்காட்டுங்கள் என அழைப்பு! adminJuly 22, 2025 யாழ்ப்பாணத்தில் ‘நட்புறவுப் பாலம்’ என்ற பெயரில் அநுரகுமார திசாநாயக்கவின் அரசு ஒரு பாரிய சதித்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும், எனவே அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அன்றைய தினம் கறுப்புக் கொடி கட்டி தமிழ் மக்கள் தங்கள் எதிர்ப்பையும் துக்கத்தையும் வெளிப்படுத்த வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். கொக்குவிலில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்றைய தினம் (21.07.25) நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், “ஜூலை 23 என்பது தமிழ் மக்களுக்கு கறைபடிந்த ஒரு நாள். 1983ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற பாரிய இனப்படுகொலையை மறைப்பதற்கும், அதன் வரலாற்றை மழுங்கடிப்பதற்கும் அநுர அரசு ஒரு சதித்திட்டத்தை மிகச் சாதுர்யமாக முன்னெடுக்க முயல்கிறது. இதற்காக, தென்னிலங்கையில் இருந்து ஒரு தொகுதி நபர்களை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்து, அநுர அரசின் ஆதரவாளர்களைப் பயன்படுத்தி, மக்களை ஏமாற்றி, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை உருவாக்குவதாகக் கூறி ‘நட்புறவுப் பாலம்’ என்ற நிகழ்வை நடத்த திட்டமிடுகிறது. எனவே தமிழ் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். தென்னிலங்கையிலிருந்து வரவுள்ளவர்களுடன் இணைந்து அநுர அரசின் ஆதரவாளர்களின் இந்த முயற்சியில் தமிழ் மக்கள் பங்கேற்கக் கூடாது. அந்த நாளை ஒரு கறைபடிந்த நாளாகக் கருதி, கறுப்புக் கொடி கட்டி எமது துக்கத்தையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்துவோம் என தெரிவித்தார். https://globaltamilnews.net/2025/218208/
  9. புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது July 21, 2025 10:17 pm விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பின்னர் ராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்ட ரமேஷ் என்பவர் சற்று முன்னர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கிரிபத்கொடை புதிய வீதியில் வைத்து பேலியாகொடை பொலிசார் சந்தேகத்தின் பேரில் அவரைக் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து டி- 56 ரக துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. குற்றச் செயல் ஒன்றை மேற்கொள்ளும் நோக்குடன் குறித்த நபர் துப்பாக்கியொன்றைத் தம் வசம் வைத்திருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர் சிவப்பு நிறக் கார் ஒன்றில் வந்தவர்கள் அவரிடம் துப்பாக்கியைக் கையளித்து தங்களிடம் இருந்து தகவல் வரும் வரை ஹோட்டல் அறையில் ரமேஷைத் தங்கியிருக்குமாறு கூறிச் சென்றுள்ளனர். இதற்கிடையே பொலிசாருக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார் https://oruvan.com/rehabilitated-ltte-member-arrested-with-gun-in-colombo/
  10. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா – கொடிச்சீலைக்கான காளாஞ்சி கையளிப்பு July 21, 2025 10:50 am வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று (21.08.2025) காலை இடம்பெற்றது. வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி மாட்டுவண்டில் மூலம் நல்லூரிலிருந்து கல்வியங்காட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கலாச்சார முறைப்படி பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும், காளாஞ்சியும் கையளிக்கப்பட்டன. ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா இம்மாதம் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://oruvan.com/annual-festival-of-nallur-kandaswamy-temple/
  11. நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கத் தயாராகும் அரசாங்கம் அரசாங்கம் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கத் தயாராகி வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது கடந்த கால தேர்தல் பிரச்சாரத்தின் போது தற்போதைய ஆட்சியாளர்களால் மக்களுக்கு அளிக்கப்பட்ட ஒரு முக்கிய வாக்குறுதியாகும். தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்து புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தார். இருப்பினும், அரசியலமைப்பு வரைவுக் குழுவை நியமிப்பதோ அல்லது அது தொடர்பான எந்தவொரு ஆரம்ப வேலைகளோ இதுவரை செய்யப்படவில்லை. இத்தகைய சூழ்நிலையில், நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான ஒரு திட்டத்தை சமர்ப்பிக்க ஜனாதிபதி தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், அரசாங்கம் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கவில்லை என்றால், எதிர்க்கட்சி ஏற்கனவே அந்த திட்டத்தை ஒரு தனிநபர் பிரேரணையாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. https://akkinikkunchu.com/?p=333556
  12. ஜப்பான் மேற்சபை தேர்தல் - பெரும்பான்மையை இழந்தது ஆளும் கட்சி 21 Jul, 2025 | 10:57 AM ஜப்பானின் மேற்சபையில் ஆளும் லிபரல் ஜனநாயக கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது அந்த நாட்டு அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் பிரதமர் சிகேரு இசிபா பதவி விலகும் எண்ணம் எதுவுமில்லை என தெரிவித்துள்ளார். அதிகரிக்கும் விலைகள் அமெரிக்காவின் வரி அதிகரிப்பு குறித்த அச்சுறுத்தல் போன்றவற்றினால் ஆளும்கட்சி மீது அதிருப்தியில் உள்ள மக்கள் ஞாயிற்றுக்கிழமை மிகவும் கடுமையான போட்டி நிலவிய தேர்தலில் வாக்களித்தனர். 248 உறுப்பினர்கள் கொண்ட மேற்சபையில் தனது கட்டுப்பாட்டை தக்கவைப்பதற்கு ஆளும் கட்சிக்கு 50 ஆசனங்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த கட்சி 47 ஆசனங்களை மாத்திரம் பெற்றுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான அரசமைப்பு ஜனநாயக கட்சி 22 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.மேற்சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஆறுவருடங்கள் . ஜப்பான் நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் ஏற்கனவே பெரும்பான்மையை இழந்துள்ள நிலையிலேயே ஆளும் கட்சி மேற்சபையிலும் பெரும்பான்மையை இழந்துள்ளது. இதேவேளை மிகவும்கடுமையான தேர்தல் முடிவை முழுமனதுடன் ஏற்றுக்கொள்வதாக 68 வயது பிரதமர் சிகேரு இசிபா தெரிவித்துள்ளார். நீங்கள் தொடர்ந்தும் பிரதமராகவும் கட்சி தலைவராகவும் நீடிப்பீர்களா என்ற கேள்விக்கு ஜப்பான் பிரதமர் ஆம் அது சரியானது என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/220518
  13. "சிறுபான்மை இனம்" என்ற பதத்திற்குப் பதிலாக "சகோதர இனம்" என்ற பதம் அறிமுகம் 21 Jul, 2025 | 10:53 AM கண்டி மாவட்ட சர்வமத அமைப்பும், தேசிய சமாதான பேரவையும் இணைந்து "சிறுபான்மை இனம்" என்ற பதத்திற்குப் பதிலாக "சகோதர இனம்" என்ற பதத்ததைப்பிரயோகிக்கும் வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. மேற்படி வேலைத்திட்டத்தைப் பிரபல்யப்படுத்தும் வகையில் பரவலாக ஸ்டிகர்களையும் சுவரொட்டிகளையும் ஒட்டுப் வேலைத்திட்டம் ஒன்றையும் ஆரம்பித்துள்ளது. கண்டி மாவட்ட சர்வமத அமைப்பின் ஏற்பாட்டாளர் காமினி ஜயவீர இது பற்றித் தெரிவிக்கையில், நாம் நீண்டகாலமாக இன ஒற்றுமைக்காகப் பாடுபட்டு வருகிறோம். அதில் ஒரு அங்கமாக ‘சிறுபான்மை இனம்’ என்ற பதற்குப் பதிலாக ‘சகோதர இனம்’ என்ற சொல்லைப் பாவிப்பது தொடர்பாக நீண்டகாலமாக முயற்சி செய்து வருகிறோம். இதற்காக, தேசிய சமாதான பேரலை எமக்கு ஒத்துழைப்பை வழங்கி வருகிறது. தேசிய மட்டத்தில் இதணை நாம் முன் எடுக்க உள்ளோம். எமது மாதாந்த அமர்வு மற்றும் பல்வேறு வகையான செயலமர்வுகளில் நாம் சகோதர இனம் என்ற சொல்லையே பயன் படுத்துகிறோம். பெரும் பான்மை, அல்லது சிறுபான்மை என்ற பதங்களைப் பயன் படுத்தும் போது ஒரு இனத்தை உயர்த்துவது போன்ற மன நிலையும் மற்றும் ஒரு இனத்தை தாழ்த்துவது போன்ற மன நிலையும் ஏற்படுகிறது. அதே நேரம் சகோதர இனம் என்று கூறும் போது சகோதர உணர்வு ஏற்படுகிறது. எனவே அத்தகைய சொற்பிரயோகத்தை பிரபல்யப்படுத்தும் பல நிகழ்வுகளை ஒழுங்கு செய்து வருகிறோம். அதில் ஒன்றாகவே மேற்படி ஸ்டிகர் போராட்டமும் அமைந்துள்ளது என்றார். https://www.virakesari.lk/article/220516
  14. செம்மணிப்புதைகுழி வழக்கைக் கையிலெடுத்தது குற்றப்புலனாய்வுப் பிரிவு; அகழ்வில் இன்று பிரசன்னமாவர் செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு நடவடிக்கைகளின் அடுத்த கட்டப் பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், இன்று அகழ்வு நடவடிக்கைகளின்போது குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் பிரசன்னமாவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. செம்மணி, சித்துப்பாத்தி மனிதப்புதைகுழி தொடர்பான விசாரணைகள் இதுவரை யாழ்ப்பாணம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இந்த விசாரணைகளை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் கீழ் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கு அமையவே நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. சித்துப்பாத்தி மனிதப்புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டு இன்று மீண்டும் ஆரம்பமாகவுள்ளன. இன்று குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அகழ்வு நடவடிக்கைகளின் போது பிரசன்னமாவார்கள் என்று தெரியவருகின்றது. https://newuthayan.com/article/செம்மணிப்புதைகுழி_வழக்கைக்_கையிலெடுத்தது_குற்றப்புலனாய்வுப்_பிரிவு;_அகழ்வில்_இன்று_பிரசன்னமாவர்
  15. மைத்திரி, ரணில் மற்றும் கோட்டாவை நீதியில் முன்நிறுத்துங்கள் – கத்தோலிக்க திருச்சபை கோரிக்கை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க மற்றும் கோட்டபாய ராஜபக்ச ஆகியோரை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கத்தோலிக்க மக்கள் தொடர்பு பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிருஷாந்த இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட எவரும் அவர்களின் பதவியைப் பொருட்படுத்தாமல் தண்டிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக கடமை தவறிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக மாநில புலனாய்வு சேவையின் முன்னாள் இயக்குநர் நிலந்த ஜயவர்தனவை சேவையிலிருந்து நீக்கியதற்காக அவர் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார். “ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் ஆறு ஆண்டுகளாக முன்வைத்து வரும் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி, ஐஜிபி மற்றும் சிஐடியின் இயக்குநர் ஜெனரலிடம் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். அப்போதுதான் எதிர்காலத்தில் மக்கள் நியாயமாகவும் நியாயமாகவும் வாழக்கூடிய ஒரு நாடு கட்டியெழுப்பப்படும்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.samakalam.com/மைத்திரி-ரணில்-மற்றும்-க/
  16. ஜெனீவாவில் முறையிட, ஓய்வு பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்கம் தீர்மானம்! adminJuly 21, 2025 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் இரத்து செய்வதை எதிர்த்து ஓய்வு பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்கம், ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியத்தில் முறைப்பாடு செய்ய முடிவு எடுத்துள்ளன. இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சங்கத்தின் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமசிறி மானகே,“ முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்ய அமைச்சரவை ஏற்கனவே முடிவு எடுத்துள்ளது. இது மிகவும் நியாயமற்ற முடிவு என்று கூறி தங்கள் மருந்துகளைப் பெற ஓய்வூதியம் வரும் வரை காத்திருக்கும் வயதான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இந்த முடிவால் பெரும் சிக்கலில் சிக்குவார்கள்” என்றும் சுட்டிக்காட்டினார். ஒரு குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளைக் கூட ஓய்வூதியத்தால் பூர்த்தி செய்ய முடியாத சூழ்நிலையில் ஓய்வூதியத்தை இரத்து செய்வதால் ஏற்படும் சூழ்நிலையை பரிசீலிக்குமாறும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார் https://globaltamilnews.net/2025/218142/
  17. கசூரினா கடற்கரையில் தீ! adminJuly 21, 2025 யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல சுற்றுலா தளங்களில் ஒன்றான கசூரினா கடற்கரையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு (20.07.21) பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் அறிந்து கடற்கரைக்கு விரைந்த பிரதேச சபையினர் , கடற்படையினர் ஆகியோர் நீண்ட போராட்டத்தின் பின் தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர். குறித்த தீ விபத்தில் கடற்கரையில் காணப்பட்ட சவுக்கு மரங்கள், பனை மரங்கள் என்பன தீயில் கருகி நாசமாகியுள்ளது தீ விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில், காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://globaltamilnews.net/2025/218136/
  18. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் நிர்வாகத் தெரிவும் கலந்துரையாடலும் செய்திகள் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் நிர்வாகத் தெரிவும் கலந்துரையாடலும் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. வலிந்து காணப்பட்ட உறவுகள் தமது உறவுகளை தேடும் போராட்டத்தினை தொடர்ந்து முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டு எட்டு மாவட்டங்களை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தமது சங்கங்களின் தலைவர் செயலாளர் உள்ளிட்டோரை இன்றைய தினம் தெரிவு செய்தனர். இதன் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் வடக்கு கிழக்கின் தலைவி யோகராஜா கனகரஞ்சினியும், செயலாளராக சி. ஜெனிற்றாவும் தெரிவு செய்யப்பட்டனர். காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் யாழ்ப்பாண மாவட்ட தலைவராக சி. இளங்கோதை, மட்டக்களப்பு மாவட்டம் வ.அமலநாயகி, அம்பாறை மாவட்டம் வ.செல்வராணி, திருகோணமலை மாவட்டம் எஸ்.செபஸ்ரியான்தேவி, வவுனியா மாவட்டம் சி.ஜெனிற்ரா, முல்லைத்தீவு மாவட்டம் ப.வீரமணி, கிளிநொச்சி க.கோகிலவாணி, மன்னார் மாவட்டம் கு.உதயசந்திரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். https://adaderanatamil.lk/news/cmdbw6u5301emqp4kja18plf9
  19. யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா ? - நிலாந்தன் ஒரு காலம் சேவல் கூவி எமது இரவுகள் விடிந்தன. பிறகு ஒரு காலம் ஏறி கணைகளின் வெடித்துப் பகல் விடிந்தது. ஆயுத மோதல்களுக்குப் பின் பேக்கரி வாகனங்களின் இசையோடு பகல் விடிகிறது. ஆனால் அண்மை ஆண்டுகளாக பேக்கரி வாகனங்களோடு சேர்த்து மற்றொரு வாகனமும் ஊர் ஊராக வருகிறது. அதுதான் தண்ணீர் விற்கும் வாகனம். அதுவும் இசையோடுதான் வருகிறது. அதாவது நீரை விலைக்கு வாங்கும் ஒரு சமூகமாக நாங்கள் எப்பொழுதோ மாறி விட்டோம். சில ஆண்டுகளுக்கு முன்பு கலாநிதி ஆறு.திருமுருகன் இதுதொடர்பாக பகிரங்கமாக பேசியிருந்தார். ”ஆலயங்களில் காணப்படும் பொதுக் கிணறுகளில் உள்ள நீரை தீர்த்தம் என்று கூறி ஊர் முழுதும் அருந்தியது. ஆனால் இப்பொழுது பெரும்பாலானவர்கள் வடிக்கப்பட்ட நீரைக் குடிக்கிறார்கள்” என்ற பொருள்பட அவர் கவலைப்பட்டிருந்தார். அது மட்டுமல்ல. “கிணற்று நீரை குடிக்கலாமா இல்லையா என்பதனை இதுதொடர்பாக துறைசார் நிபுணர்கள் தெளிவுபடுத்த வேண்டும்” என்றும் அவர் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் அந்த வேண்டுகோளுக்கு எனக்கு தெரிந்தவரை இன்றுவரையிலும் யாரும் உத்தியோகபூர்வமாக பதில் சொல்லவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் சுன்னாகத்தில் நடந்த ஒரு சந்திப்பின்போது இது தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபடும் பேராசிரியர் சிறீஸ்கந்தராஜாவிடம் இந்த கேள்வியை நான் கேட்டேன். அவர் சிரித்துக் கொண்டே சொன்னார்… ஒஸ்ரேலியாவில் தான் மேற்படிப்பு படிக்கும் பொழுது இந்த கேள்வியை ஒருவர் தமது விரிவுரையாளரிடம் கேட்டாராம். அதற்கு அந்த விரிவுரையாளர் சிரித்துக்கொண்டே சொன்னாராம், ”யாழ்ப்பாணத்தவர்கள் கெட்டிக்காரர்கள் என்று கூறுகிறோம். அந்தக் கெட்டித்தனத்துக்கும் அவர்களுடைய கிணத்து நீருக்கும் தொடர்பு இருக்குமா ?” என்று. ஆனால் நடப்பு நிலைமைகளைத் தொகுத்துப் பார்த்தால் அதாவது ஈழத் தமிழர்களின் சமூகப் பொருளாதார அரசியல் நடப்புகளைத் தொகுத்துப் பார்த்தால் ஈழத் தமிழர்கள் தங்களைக் கெட்டிக்காரர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்க முடியுமா என்ற கேள்வி பாரதூரமாக மேல் எழுகிறது. சில மாதங்களுக்கு முன்பு யாழ்ப்பாணம் கொழும்புத் துறைப் பகுதியை சேர்ந்த ஒரு நாடகச் செயற்பாட்டாளரை ஒரு நீர் விற்கும் கடையில் கண்டேன். அவரிடம் கேட்டேன் “உங்களுடைய கிணற்று நீரை அருந்த முடியாதா?” என்று. அவர் சொன்னார் “எனது பகுதிகளில் நீர் பெருமளவுக்கு உவராகிக் கொண்டு வருகிறது” என்று. அவர் அப்படி கூறுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே யாழ் கடல் நீரேரியை அண்மித்திருக்கும் கோப்பாய் இருபாலை ஆகிய பகுதிகளில் நீர் உவராகி வருவதாக முறைப்பாடுகள் உண்டு. ஆனால் இது இன்றைக்கு நேற்றைக்கு வந்த பிரச்சினை அல்ல. ஒரு நூற்றாண்டு கால பிரச்சனை. பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் 1894 ஆம் ஆண்டு பொது வேலைகள் திணைக்களத்தின்(PWD) ஆணையாளருடைய அறிக்கையில் பின்வருமாறு கூறப்படுகிறது…”யாழ்ப்பாணத்துக்கான நீர் வழங்கல் குறுகிய காலத்தில் ஒரு மிக முக்கியமான பிரச்சினையாக உருவெடுக்கக்கூடும். யாழ்ப்பாணத்தில் உள்ள கிணறுகளில் பெரும்பாலானவை படிப்படியாக உவர்த்தன்மை கொண்டவையாக மாறிவருவது உண்மை. எடுத்துக்காட்டாக, பொது வேலைகள் பகுதியின் வளவுக்குள் இருக்கும் கிணறு 15 ஆண்டுகளுக்கு முன்னர் நல்ல தண்ணீரைக் கொண்டிருந்தது. அந்த வளவிலிருந்து நீர் பாய்ச்சி மிகச் சிறப்பான திராட்சைக் கொடிகளை வளர்த்தனர். ஆனால், இப்போது நீர் உவர்த்தன்மை கொண்டதாக மாறிவிட்டது. திராட்சைக் கொடிகளும் அழிந்துவிட்டன…..கச்சேரி வளவுக்குள் உள்ள பெரும்பாலான கிணறுகளுக்கும் இதே நிலைதான். தற்போது முற்றவெளியில் உள்ள இரண்டு கிணறுகளும், சுண்டிக்குழிக் குருமனை வளவில் உள்ள ஒரு கிணறும் மட்டுமே நல்ல தண்ணீர்க் கிணறுகள். முற்றவெளிக் கிணறுகளிலிருந்து தொடர்ச்சியாக நீரை அள்ளுவதால்,அவை நீண்டகாலம் தாக்குப் பிடிக்கும் என்பது ஐயத்துக்குரியது. இந்த நல்ல நீர்த் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஏதாவது ஒரு வழியில் தயாராவதற்காகப் புத்தூர்க் கிணற்றுத் திட்டத்தைக் சுவனத்தில் எடுத்துள்ளோம்…..” மேற்படி தகவல்களை அண்மையில் வெளியிடப்பட்ட “யாழ்ப்பாண நகரத்தின் வரலாறு” என்ற நூலில் காணலாம். தமிழ் விக்கிபீடியாவை ஸ்தாபித்தவர்களில் ஒருவராகிய, கட்டடப்படக் கலைஞர் மயூரநாதன் அந்த நூலை எழுதியுள்ளார். ஆகவே இது ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே மேலெழுந்த ஒரு பிரச்சினை. அதுவும் குடித்தொகை பெருகாத,தொழில்நுட்பம் இப்போதிருக்கும் வளர்ச்சியை அடைந்திராத,ஒரு காலகட்டத்தில் உணரப்பட்ட ஒன்று. ஆனால் அதிலிருந்து ஒரு நூற்றாண்டுக்கு மேலான பின்னரும் இந்த விடயத்தில் தமிழ் மக்கள் விழிப்ப்பில்லாமல் இருப்பதன் விளைவாகத்தான் குடிக்கும் நீரை விலைக்கு வாங்கும் ஒரு நிலை வளர்ந்து வருகிறதா? இவ்வாறு தெருத்தெருவாக நீர் விற்கும் கடைகள் மற்றும் வாகனங்களில் எத்தனை அதற்குரிய பதிவுகளோடு இயங்குகின்றன? யாழ் மாநகர சபையில் மணிவண்ணன் மேயராக இருந்த காலத்தில் மாநகர சபை உறுப்பினரான பார்த்திபன் இது தொடர்பான தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார். தொடக்கத்தில் ஆறுக்கும் குறையாத நீர் விற்கும் கடைகள் இருந்தன. இக்கடைகள் எவையும் நீரை விற்பதற்கு அனுமதி பெற்றவை அல்ல. வியாபார அனுமதியை மட்டும் பெற்றவை. இதுதொடர்பாக பொருத்தமான சட்ட ஏற்பாடுகள் இல்லை என்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது. இக்கடைகளை விட முதலில் ஊர் ஊராக வாகனங்களில் நீர் விற்கப்படுவதை கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு பார்த்திபன் மேற்படி தீர்மானத்தை கொண்டு வந்தார். எனினும் அந்த தீர்மானத்தை முழுமையாக அமல்படுத்துவதற்கு போலீசார் போதிய ஒத்துழைப்பை தரவில்லை என்று கூறப்படுகிறது. மாநகர சபை ஊழியர்கள் அந்த வாகனங்களை தடுத்து நிறுத்த முடியாதவர்களாகக் காணப்பட்டார்கள். இப்பொழுது கிடைக்கும் தகவல்களின்படி யாழ் நகரப் பகுதிக்குள் 30க்கும் குறையாத நீர் விற்கும் கடைகள் வந்துவிட்டன. தான் ஆணையாளராக இருந்த காலகட்டத்தில் மொத்தம் ஆறு கடைகளில் இருந்ததாக முன்னாள் ஆணையாளர் ஜெயசீலன் தெரிவித்தார். இப்பொழுது புதிய மாநகர சபை நிர்வாகம் வந்துவிட்டது. யாழ்ப்பாணத்தின் குடிநீர் உவராகும் ஆபத்தைக் குறித்தும் யாழ்ப்பாணத்தின் நகரப் பகுதியில் உள்ள பெரும்பாலான கிராமங்கள் வடிக்கப்பட்ட நீரை விலைக்கு வாங்குவது தொடர்பாகவும் கவனம் செலுத்தவேண்டிய ஒரு நிர்ப்பந்தம் புதிய நிர்வாகத்துக்கு உண்டு. யாழ் மாநகர சபைக்கு மட்டுமல்ல புதிதாக தெரிவு செய்யப்பட்ட எல்லா உள்ளூராட்சி சபைகளுக்கும் அந்த பொறுப்பு உண்டு. கிட்டத்தட்ட நூற்றாண்டு காலமாக ஒரு பிரச்சினை படிப்படியாக வளர்ந்து வந்து இப்பொழுது காசுக்கு நீர் வாங்கிக் குடிக்கும் ஒரு நிலைமை தோன்றி விட்டது. தமிழ்ச் சமூகம் தன்னை மெத்தப் படித்த சமூகம் என்று நம்புகின்றது.ஆனால் தன் சொந்தக் கிணத்து நீரை குடிக்கலாமா இல்லையா என்ற கேள்விக்கு விடை காண முன்னரே பல கிணறுகள் உவராகி வருகின்றன. அண்மையில் ஐரோப்பிய நாடொன்றில் இருந்து வந்த ஒருவர் சொன்னார் யாழ்ப்பாணத்தில் விற்கப்படும் நீரைக் குடித்த பொழுது அது கனமில்லாமல் இருந்ததாக தான் உணர்ந்ததாக. லண்டனில் தான் குடித்த நீரோடு ஒப்பிடுகையில் இங்குள்ள வடித்த நீர் இலேசானதாக இருப்பதாகவும் அவர் கூறுகிறார். இவ்வாறு உடலுக்குத் தேவையான கனியுப்புக்கள் வடிக்கப்பட்ட நீரைக் குடிப்பதால் வரும் பாதகமான விளைவுகள் எவை ? “யாழ்ப்பாணத்தின் ஆழக் கிணறுகளில் ஏடுக்கும் நீரில் படியும் கல்சியத்தை அந்நியப் பொருளாக யாழ்ப்பாணத்தவர்கள் பார்க்கத் தேவையில்லை. அது யாழ்ப்பாணத்துக்கு அந்நியமானது அல்ல. சுண்ணக் கற் பிரதேசத்தில் பிறந்தவர்களுக்கு கல்சியம் ஒரு புறத்திப் பொருள் அல்ல” என்று பேராசிரியர் சிறீஸ்கந்தராஜா கூறுகிறார். புதிய உள்ளூராட்சி சபைகள் இந்த விடயத்தின் மீது கவனத்தைக் குவிக்க வேண்டும். முதலில் வடித்து விற்கப்படும் நீரைக் குடிப்பதில் உள்ள நன்மை தீமைகளை ஆராய வேண்டும். இரண்டாவதாக தமிழ் மக்கள் நிலத்தடி நீரைப் பாதுகாக்க வேண்டும்;பெருக்க வேண்டும்.அதாவது உள்ளூராட்சி சபைகள் அதற்குப் பொருத்தமான பசுமைப் பொருளாதாரத் திட்டங்களை வகுக்க வேண்டும். இதுதொடர்பான துறைசார் ஆராய்ச்சிக்காக தாயகத்திலேயே வந்து தங்கி இருக்கின்ற பேராசிரியர் சிறீஸ்கந்தராஜா போன்றவர்களின் துறைசார் ஞானத்தை உள்ளூராட்சி சபைகள் பெற்றுக்கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட அரச திணைக்களங்களில் பொறியியலாளர்கள் மத்தியில் இது தொடர்பான விழிப்புடையவர்கள் பலர் உண்டு.எல்லாரையும் அழைத்து இதுதொடர்பாக கருத்தரங்குகளை ஒழுங்குபடுத்தி தமிழ் மக்கள் தமது நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் பசுமைத் திட்டங்களை வகுக்க வேண்டும். சில கிழமைகளுக்கு முன்பு பேராசிரியர் சிறீஸ்கந்தராஜா தலைமையிலான ஒரு குழுவினர் வழுக்கி ஆற்றின் தடங்களைப் பின்தொடர்ந்து சென்று யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீரை பாதுகாப்பது தொடர்பான களஆய்வுகளை மேற்கொண்டார்கள். வழுக்கையாறு ஓடியதாகக் கருதப்படும் தடங்களில் காணப்படும் குளங்களையும் நீர்நிலைகளையும்,நீர் தேங்குமிடங்களையும், நீரோடும் வழிகளையும் பாதுகாப்பதன்மூலம் நிலத்தடி நீரைப் பாதுகாக்கலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள்.இதுதொடர்பில் உள்ளூர் மக்களின் அனுபவத்தையும் ஆதரவையும் பெற்றுக்கொண்டு யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீரைப் பாதுகாப்பதற்கான தொடர்ச்சியான ஆராய்ச்சிகளில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். புதிய உள்ளூராட்சி சபைகளில் கட்சி முரண்பாடுகளும் மோதல்களும் நிறைய உண்டு.ஆனால் அவர்கள் போட்டிபோட வேண்டிய இடம் அதுவல்ல.தங்கள் உள்ளூராட்சிப் பிரதேசங்களை எப்படிப் பசுமைப் பிரதேசங்களாக மாற்றுவது என்பதில்தான் அவர்கள் போட்டி போட வேண்டும்.ஒவ்வொரு உள்ளூராட்சி சபை உறுப்பினரும் தனது வட்டாரத்தைத் தூய்மையானதாக, குப்பையற்றதாக, பசுமை வட்டாரமாக மாற்றுவது என்று உறுதிபூண வேண்டும். அவருடைய பதவிக்காலம் முடியும் பொழுது அவர் நட்ட மரங்களும் அகழ்ந்த குளங்களும் தூர் வாரிய வாய்க்கால்களும் என்றென்றும் அவருடைய சந்ததிக்கு அவருடைய புகழைச் சொல்லும். https://www.nillanthan.com/7543/
  20. வரதரின்(2025) புதிய முயற்சிகள் July 19, 2025 — கருணாகரன் — ஈ.பி.ஆர்.எல்.எவ் வின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனும் வடக்குக் கிழக்கு இணைந்த மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாளும் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். இருவரும் ஒரு காலத்தில் பத்மநாபா தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ் என்ற ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இயக்கத்தில் பொறுப்பான பதவிகளில் செயற்பட்டவர்கள். 1988 இல் வடகிழக்கு இணைந்த மாகாணசபையில் கூட முதன்மைப் பொறுப்புகளில் இருந்தவர்கள். பின்னாளில் வெவ்வேறு நிலைப்பாடுகளால் இருவேறு அணிகளாகியிருந்தனர். இப்போது கூட வெவ்வேறு அணிகளாக இருந்தாலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். இந்தச் சந்திப்பு தனிப்பட்டதல்ல. அரசியல் ரீதியானதே. சந்திப்பில் சுரேஸ் அணியின் தரப்பில் வட மாகாணசபையின் முன்னாள் கல்வி அமைச்சரும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் முக்கியஸ்தருமான சர்வேஸ்வரன், ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் யாழ்ப்பாணக் கொமிட்டியின் செயலாளர் கமலாகரன் (குகன்) மற்றும் சிவா ஆகியோரும் வரதரோடு தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் செயலாளர் கிருபாகரன் உட்பட மேலும் இருவர் கலந்துகொண்டுள்ளனர். ஆனால், இது சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ்வுக்கும் வரதராஜப்பெருமாள் செயற்பட்டுவரும் தமிழர் சமூக ஜனநாயகக்கட்சிக்கும் இடையிலான கட்சிசார் அரசியற் சந்திப்பு இல்லை என்று சம்மந்தப்பட்ட தரப்புகள் தெரிவித்துள்ளன. கட்சிசார் அரசியற் சந்திப்பாக இருந்தால் அதில் முக்கியமாக தமிழர் சமூக ஜனநாயகக்கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருக்கும் சுகு ஸ்ரீதரன், மோகன் போன்றோரும் பங்கேற்றிருப்பார். மட்டுமல்ல, அதனுடைய தன்மையும் வேறாகவே இருந்திருக்கும். அப்படியென்றால் இந்தச்சந்திப்பில் என்ன முக்கியத்துவம் என்று யாரும் கேட்கலாம். ஏற்கனவே எதிரும் புதிருமாக இருந்த பல தரப்புகள் அரசியல் உரையாடலையும் உறவாடலையும் அரசியற்கூட்டுகள், தேர்தற்கூட்டுகளையும் வைத்துள்ளன. இந்த நிலையில் சுரேஸ் – வரதர் சந்திப்பு ஒன்றும் ஆச்சரியமானதல்ல. அரசியலில் இதெல்லாம் சாதாரணமானதுதான். ஆனாலும் இந்தச் சந்திப்புச் சற்று வித்தியாசத்துக்குரியது என்றே கருதப்பட வேண்டியுள்ளது. ஏனென்றால், இந்தச் சந்திப்பு கட்சி அரசியல், தேர்தல் அரசியலுக்கு அப்பாலானதாக இருக்கிறது. அதை வரதராஜப்பெருமாளும் சுரேஸ் அணித் தரப்பும் சொல்லியுள்ளது. மட்டுமல்ல, சுரேஸ் பிரேமச்சந்திரனின் அணியைச் சந்தித்ததைப்போல, 17.07.2025 இல் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தையும் வரதராஜப்பெருமாள் சந்தித்துப்பேசியிருக்கிறார். அதற்கு அப்பால், யாழ் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கோசலை மதன் உட்பட வேறு சிலரையும் சந்தித்துப்பேசியிருக்கிறார். இந்தச் சந்திப்புகள் தொடர்பாக வரதராஜப்பெருமாளுடன் பேசியபோது, தன்னுடைய இந்தப்பயணமும் சந்திப்புகளும் தேர்தல் அரசியல், கட்சி அரசியல் போன்றவற்றுக்கு அப்பாலானது. தேர்தல் அரசியலிலும் கட்சி அரசியலிலும் தனக்கு இப்பொழுது ஆர்வமில்லை. அந்த அரசியலை முன்னெடுக்கும் தரப்புகள், கட்சிகள் பற்றித் தான் எத்தகைய விமர்சனங்களையும் கருத்துகளையும் சொல்லப்போவதில்லை என்று கூறினார். மேலும் தன்னுடைய ஆர்வமும் நிலைப்பாடும், மாகாணசபைத் தேர்தலை வலியுறுத்துவது, மாகாணசபையை வினைத்திறனுள்ளதாக, ஆற்றல் மிக்கதாக வலுப்படுத்துவது, தமிழ்பேசும் மக்களின் அரசியல் உரிமைகளுக்கான போராட்டத்தை – அதற்கான செயற்பாட்டு முனைப்பை அதற்குரிய தரப்புகளிடம் பேசி, இணைந்து செயற்பட்டுக்கூர்மைப்படுத்துவது போன்றதே என்றார். மாகாணசபையை வலுவாக்கம் செய்வதைப் பற்றிப் பேசினாலும் சமஸ்டி, தனிநாடு போன்றவற்றைப் பேசுவோர், அதற்காகச் செயற்படுவோரை தாம் மறுக்கப்போவதில்லை. அவற்றைத் தான் வரவேற்கிறேன். சமஸ்டியோ தனிநாடோ கிடைக்குமாக இருந்தால் எதை யார்தான் வேண்டாம் என்று சொல்லப்போகிறார்கள் என்று கேட்கிறார் வரதராஜப்பெருமாள். ஆனால், அது கிட்டும் வரையில் மாகாணசபைகளை ஆற்றலுள்ளவையாக, வினைத்திறன் மிக்கவையாக இயங்க வைப்பது அவசியம். ஏனென்றால் இப்போதுள்ள சூழலில் தமிழ் பேசும் மக்களுடைய பாதுகாப்பு, முன்னேற்றம், சுயாதீனம் போன்றவற்றுக்கு மாகாணசபைகள்தான் யதார்த்தமாக உள்ளன. மத்தியில் குவிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை குறிப்பாக ஜனாதிபதியை மையப்படுத்திக் குவிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை மாகாண சபைகள்தான் பகிரக்கூடிய பொறிமுறையாக உள்ளது. எங்கே அதிகாரம் குவிக்கப்படுகிறதோ, அங்கே ஊழல் தொடக்கம் அதிகார துஸ்பிரயோகங்கள் வரையில் அத்தனை பிரச்சினைகளுக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். அதிகாரங்களைப் பகிரும்போது ஒன்றை ஒன்று கட்டுப்படுத்திக்கொள்ளவும் கண்காணித்துக்கொள்ளவும் கூடிய வாய்ப்பு ஏற்படுகிறது. ஆகவேதான் நாம் மாகாணசபைகளை பல்வேறு அடிப்படைகளில் வலியுறுத்துகிறோம். இது அனைத்து மக்களுக்கும் பயன்தரக்கூடிய ஒரு கட்டமைப்பாகும். என்பதால்தான் சகல தரப்புகளோடும் இதை வலியுறுத்திய ஒரு உரையாடலைச் செய்ய விரும்புகிறேன். தமிழ், முஸ்லிம், மலையக அரசியற் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள், சமூகச் செயற்பாட்டியக்கத்தினர், பல்கலைக்கழக சமூகத்தினர், மதகுருக்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரோடும் பேசுவதற்கு ஆர்வமாக உள்ளேன். மாகாணசபை முறைமையிலும் வடக்குக் கிழக்குத் தவிர்ந்த ஏனைய மாகாணங்களுக்குப் பெரிய பிரச்சினை இல்லை. ஏனென்றால், அந்த மாகாண சபைகள் பெரும்பான்மைச் சமூகமாகிய சிங்களத் தரப்பினரால் ஆளப்படுவது. சிங்களத் தரப்பே எப்போதும் ஆளும் தரப்புமாக இருப்பதால் அங்கே அதிகாரம் குறைந்திருந்தாலும் அது அவர்களைப் பாதிக்காது. ஆனால், வடக்குக் கிழக்கின் நிலை அப்படியல்ல. அது பெரும்பாலும் தமிழ், முஸ்லிம் தரப்புகளால் நிர்வகிக்கப்படுவது. இதனால் அதிகாரம் இல்லை என்றால், உரிய ஆதரவையும் ஆற்றலையும் பெறுவது கடினமாகும். இதைக்குறித்து நாம் தெளிவாக உரையாடி வேண்டியுள்ளது. சிறுபான்மைத் தேசிய இனங்களின் பிரச்சினை என்பது இலங்கையின் தீராத அரசியல் நெருக்கடியாக நீண்டு செல்கிறது. அரசியல் நெருக்கடி இருக்கும் வரையிலும் பொருளாதார நெருக்கடியும் இருக்கும். இரண்டும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. இதை வெறுமனே நல்லிணக்கம், சமாதானம் போன்ற வார்த்தைகளால் தீர்த்து விட முடியாது. அதற்கப்பால் பாதிக்கப்பட்ட மக்களும் ஒடுக்கப்பட்ட மக்களும் திருப்தி அடையக் கூடிய, நம்பிக்கை கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் முக்கியம். அரசியற் தீர்வுக்கு முன்பு, அவ்வாறான நடவடிக்கைகளை – அதாவது நம்பிக்கை அளிக்கக் கூடிய நடவடிக்கைகளை அரசாங்கம் செய்ய வேண்டும். அதைத் தாராளமாகச் செய்யலாம். அதையும் நாம் வலியுறுத்த வேண்டும். நடைமுறைச் சாத்தியமான நல்லிணக்கம் என்பதற்கான அடிப்படைகளை உருவாக்காமல், எத்தனை தடவை அந்தச் சொற்களை உச்சரித்தாலும் நல்லிணக்கமோ சமாதானமோ கிட்டாது. ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நல்லிணக்கம் என்ற சொல் இலங்கையில் உச்சரிக்கப்படுகிறது. நேர்மையாகச் சொல்லுங்கள். எந்தச் சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளது. ஆகவேதான் நடைமுறைகளே எதையும் தீர்மானிக்கின்றன என்பதை நாம் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும் என்கிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக பொருத்தமானதொரு அரசியல் யாப்பைக் குறித்த உரையாடல்களை நாம் செய்ய வேண்டும். இதையெல்லாம் கட்சி அரசியலுக்கு அப்பால், சமூக ஒருங்கிணைப்போடு செய்யலாமா என்று முயற்சித்துப் பார்ப்பதே தன்னுடைய நோக்கமாகும் எனமேலும் சொல்கிறார் வரதர். அரசியற் தீர்வுக்கு முன்பு, அவ்வாறான நடவடிக்கைகளை – அதாவது நம்பிக்கை அளிக்கக் கூடிய நடவடிக்கைகளை அரசாங்கம் செய்ய வேண்டும். அதைத் தாராளமாகச் செய்யலாம். அதையும் நாம் வலியுறுத்த வேண்டும். நடைமுறைச் சாத்தியமான நல்லிணக்கம் என்பதற்கான அடிப்படைகளை உருவாக்காமல், எத்தனை தடவை அந்தச் சொற்களை உச்சரித்தாலும் நல்லிணக்கமோ சமாதானமோ கிட்டாது. ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நல்லிணக்கம் என்ற சொல் இலங்கையில் உச்சரிக்கப்படுகிறது. நேர்மையாகச் சொல்லுங்கள். எந்தச் சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளது. அறுதியிட்டுக் கூற முடியாது. “இருந்தாற்போல திடீரென்று ஏதோ ஞானோதயம் கிடைத்ததைப்போல வந்து நிற்கிறார். இதற்கான பின்னணி என்ன? உண்மையான நிலவரம் என்ன?” என்று சிலர் குழம்பக்கூடும். எல்லாவற்றுக்கும் அப்பால், தன்னுடைய முதிர்வு, அரசியல் அனுபவம் என்பவற்றின் அடிப்படையில் தன்னால் முடிந்தவற்றை, தனக்குத் தெரிந்தவற்றையும் தனக்குரிய வாய்ப்புகளைப் பயன்படுத்தியும் தமிழ் பேசும் மக்களுக்கும் இலங்கைத்தீவுக்கும் எதையாவது செய்ய வேண்டும் என்று உண்மையாகவே வரதர் வந்திருக்கலாம். உண்மையான ஈடுபாட்டின் விளைவாகவே அவருடைய முயற்சிகள் இருக்கலாம். வரதர் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ள விருப்பத்தையும் அந்த மெய்யான நோக்கத்தையும் சந்தேகித்தோ சந்தேகிக்காமலோ யார் யாரெல்லாம் பேசப்போகிறார்கள்? அவர் சொல்வதிலுள்ள நியாயங்களை யார் யாரெல்லாம் புரிந்து கொள்ளப்போகிறார்கள், ஏற்றுக் கொள்ளப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்தே பார்க்க முடியும். ஆனால், வரதருடைய இந்தச் சந்திப்புகளைக் குறித்தும் இந்த உரையாடல் முயற்சிகளைப் பற்றியும் ஒரு நேர்மறையான தோற்றமே – அணுகுமுறையே – இதுவரையிலும் அவதானிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பு – உரையாடல்கள் – பற்றிய முதல் ஊடகச் செய்திகளும் வரவேற்கக் கூடியவையாகவே உள்ளன. இந்தப் பத்தியாளர் கவனப்படுத்த விரும்புவது, எதிரும் புதிருமாக இருந்த பல தரப்புகள் தமக்கிடையில் இணக்கங்களைக் கண்டு வரும் ஒரு சூழல் மலர்ந்து வருகிறது. துரோகி – தியாகி என்ற பிரிவுக்கோடு மெல்ல அழிந்தோ மங்கியோ வருவதாகத் தோன்றுகிறது. மூத்தவர்கள், அனுபவஸ்தர்கள் யதார்த்த நிலையை உணர்வதாகத் தெரிகிறது. அதாவது பலரிடத்திலும் ஒரு சிறிய மாற்றத்தை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இதொரு தொடக்க நிலைதான். ஆனால், வரவேற்கக் கூடிய தொடக்கம். அந்த வகையில் வரதர் எடுத்துள்ள முயற்சி வரவேற்க வேண்டியது. கட்சி, இனம், மதம், பிரதேசம் என்ற எந்த வேறுபாடும் பாரபட்சமும் இல்லாமல் அனைத்துத் தரப்பினரோடும் பேசுவதற்கு தான் முயற்சிக்கிறேன் என்பது வரவேற்க வேண்டியதே. எப்போதும் உரையாடல்கள் முக்கியமானவை. அதில் தயக்கங்களும் தாமதங்களும் விடுபடல்களும் புறக்கணிப்புகளும் தேவையில்லை. இந்த உலகம் உரையாடல்களினால்தான், இணக்கங்களினால்தான் ஏராளம் விடயங்களைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது; சாதித்திருக்கிறது. இந்த உண்மையையும் யதார்த்தத்தையும் வரதர் புரிந்திருப்பது நல்லது. அதனால்தான் அவர் தானாகவே முன் வந்து எல்லோருடைய கதவுகளையும் தட்டுகிறார். எல்லோருடைய கைகளையும் குலுக்குகிறார். எல்லோருடனும் ஒரு தேநீரைப் பருகவும் பகிரவும் தயாராக இருக்கிறார். வரதராஜப்பெருமாளுடைய அரசியல் வரலாறும் அனுபவமும் நீண்டது, பரந்தது. எந்த வரலாறும் நேர்கோட்டில் பளிச்செனத் துலங்கிச் செல்வதில்லை. பல நூறு சுழிப்புகளையும் முடிச்சுகளையும் ஏற்ற இறக்கங்களையும் இருளையும் ஒளியையும் தன்னுள் கொண்டே வரலாறு நகர்கிறது. வரதருடைய அரசியல் வரலாறும் இந்த அடிப்படையிலானதுதான். வரதருடையது மட்டுமல்ல, அனைவருடையதும் அப்படியானதுதான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 1970 களின் தொடக்கத்திலிருந்து இன்று வரையான தன்னுடைய அரசியல் வரலாற்றில், போராட்டம், சிறை, வடகிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர், தலைமறைவு வாழ்க்கை எனப் பலதையும் சந்தித்தவர் வரதராஜப்பெருமாள். மாகாணசபை முறைமையைப் பற்றிய தெளிவான அறிவும் அனுபவமும் வரதருக்குண்டு. அரசியலமைப்பு மற்றும் பொருளாதார அடிப்படைகளைப் பற்றிய புரிதலும் அறிவும் கொண்டவர். கூடவே இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பான நேரடி அனுபவத்தையும் அறிவையும் கொண்ட இந்தியாவின் இறுதித் தலைமுறையுடன் தொடர்பும் பரிச்சயமும் உள்ளவர்களில் ஒருவர். இலங்கைச் சூழலிலும் அறியப்பட்ட ஓர் அரசியல் ஆளுமை. இத்தகைய ஒருவர் கட்சி அரசியல், தேர்தல் அரசியல் போன்றவற்றுக்கு அப்பாலான அரசியல் இயக்கமொன்றை (Political movement) பற்றிச் சிந்திப்பது இன்றைய சூழலில் நல்லதே. பலருடனும் பேசி, உரையாடி, விவாதித்து, பொருத்தமான அடிப்படைகளை உருவாக்குவதைப்பற்றிய இத்தகைய அரசியல் முன்னெடுப்பு – அரசியற் பண்பாடு – நம்மிடையே வளர்ந்து செழிக்க வேண்டும். எத்தகைய எதிரெதிர் நிலைப்பாடு, கோட்பாடு, கொள்கை போன்றவற்றோடு இருந்தாலும் பரஸ்பரப் புரிதலோடு பேசிக் கொள்வது அவசியமானது. கைகளைப் பற்றிக் குலுக்கி, முகத்தை முகம் நேரில் பார்த்து, நெகிழ்ச்சியோடு தொடர்ந்து உரையாடும்போது பரஸ்பர நெருக்கமும் புரிதலும் ஏற்படும். பேச்சுகளில் – உரையாடல்களில் ஒவ்வொருவருக்கும் அல்லது ஒவ்வொரு தரப்புக்கும் உள்ளோட்டங்களும் தனியான நிகழ்ச்சி நிரலும் இருக்கலாம். அல்லது உள்ளே ஒன்றை வைத்துக் கொண்டு வெளியே சம்பிரதாயமாக வேறொன்றைப் பேசலாம். எதுவாயினும் பரவாயில்லை. முதலில் சந்திப்பதும் பேசுவதும் அவசியமானது. அதொரு சிறந்த பண்பாடு. உயர்ந்த நாகரீகம். பேசாதிருப்பது, முகத்தைத் திருப்பிக் கொள்வது, தனிமைப்படுவது, தனிமைப்படுத்துவது எல்லாம் பயனற்றவை. கீழ்மையானவை. தீங்கானவை. இதனால் நாம் சந்தித்த இழப்புகளும் பின்னடைவுகளும் ஏராளம். தமிழ் அரசியலில், ஊடகத்துறையில், இலக்கியவெளியில், சமூக நிலையில் மட்டுமல்ல, இலங்கை முழுவதிலும் ஏறக்குறைய தடைகள் – விலக்கல்கள், விலகல்கள், ஒதுக்கங்கள், ஒதுங்குதல்கள்தான் நீண்ட வரலாறாகும். அந்த வரலாற்றை மாற்றுவது – மாற்றி எழுதுவது நல்லது. அவசியமானது. மாற்றத்துக்கான எத்தனையோ முயற்சிகளையும் முன்னெடுப்புகளையும் பலரும் முன்னெடுத்திருக்கிறார்கள். இதுவரையில் எதுவும் சாத்தியமானதில்லைத்தான். ஆனாலும் அதைக் கை விட முடியாது. ஏனென்றால், மாற்றம் வேண்டும். மாற்றம் ஒன்றே வேண்டும். மாற்றத்துக்காகவே இந்த உலகம் இடையறாது பாடுபடுகிறது. https://arangamnews.com/?p=12166
  21. யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கான 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு: மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சர்ச்சை! யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு மத்திய அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம், ஜூலை 17ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் (DCC) கூட்டத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. வரலாற்றுச் சிறப்புமிக்க நூலகத்தின் டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட இந்த நிதி பின்வருமாறு விநியோகிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்: 4.5 கோடி ரூபாய் புனரமைப்புப் பணிகளுக்காக (பொது கழிவறை அமைத்தல் உட்பட) 2 கோடி ரூபாய் டிஜிட்டல் சேவைகளுக்காக * 3.5 கோடி ரூபாய் கணினிகள் மற்றும் உபகரணங்கள் கொள்வனவுக்காக எனினும், புனரமைப்பு நிதியின் கணிசமான பகுதியை தனியான கழிவறை வசதியை நிர்மாணிப்பதற்குப் பயன்படுத்துவதற்கான யோசனைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. டிஜிட்டல் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதே நிதியின் அசல் நோக்கம் என்று வாதிட்டப்பட்டது. யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் டிஜிட்டல் வசதிகளை மேம்படுத்துவதே இதன் நோக்கம் என்பதால், முழு நிதி ஒதுக்கீட்டையும் அதன் அசல் நோக்கத்திற்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். சூடான விவாதத்தைத் தொடர்ந்து, நிதி டிஜிட்டல் சேவைகளின் மேம்பாட்டிற்காக மட்டுமே முறையாகவும் கண்டிப்பாகவும் செலவிடப்பட வேண்டும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. யாழ்ப்பாணத்தில் சரியான பொது கழிப்பறை வசதிகள் இல்லாததாலும், தற்போதுள்ள கழிப்பறைகள் நகர சபையால் மோசமாகப் பராமரிக்கப்படுவதாலும், பல பொதுமக்கள் யாழ்ப்பாணம் பொது நூலகத்தின் கழிப்பறைகளைப் பயன்படுத்துவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதைக் காரணம் காட்டி, நூலகத்தில் ஒரு தனி கழிப்பறை வசதியை உருவாக்க முடிவு செய்யப்பட்டதாக அவர்கள் கூறினர். எனினும், டிஜிட்டல் சேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியின் ஒரு கணிசமான பகுதியை திசை திருப்புவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த நியாயத்தை கடுமையாக எதிர்த்தனர். யாழ்ப்பாண மாநகர சபையும் ஏனைய உள்ளூர் அதிகாரிகளும் தற்போதுள்ள பொது கழிப்பறைகளை முறையாகப் பராமரிப்பதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். மேலும், ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை தொடர்பில்லாத உள்கட்டமைப்புக்காக திசை திருப்பக்கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர். அத்துடன், வட மாகாண சுற்றுலாத்துறை அமைச்சகம் இப்பிராந்தியத்தில் தேவையான இடங்களில் பொது கழிப்பறைகளை நிர்மாணிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தனர். https://akkinikkunchu.com/?p=333517
  22. மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அர்ஜுன மகேந்திரனுக்கு உயர் பதவி மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், தற்போது சிங்கப்பூரில் உள்ள “விஸ்டம் ஓக்” என்ற முன்னணி முதலீட்டு நிறுவனத்தில் மூத்த பதவியில் உள்ளார் என்று இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் இந்த நிறுவனத்தில் முதலீட்டு நிபுணராகப் பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது. நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் முதலீடுகளைக் கட்டுப்படுத்துதல், நிதி வளங்களை நிர்வகித்தல், பங்குச் சந்தை மற்றும் பத்திர முதலீடுகள் தொடர்பான ஆலோசனை சேவைகளை வழங்குதல் ஆகியவை அவரது முக்கிய பொறுப்புகளில் அடங்கும் என்பதை சமூக ஊடக அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன. 2016இல் நிறுவப்பட்ட விஸ்டம் ஓக், முக்கியமாக சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் செயல்படுகிறது. நிறுவனம் தற்போது 7 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் முதலீடுகளை நிர்வகிப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிறுவனத்துடன் அவர் செய்த பணிக்காக மகேந்திரன் பல சர்வதேச விருதுகளை வென்றுள்ளார் என்றும் மேலும் தெரிவிக்கப்படுகிறது. 2016 இல் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை விட்டுவிட்டு, பிணைமுறி மோசடி வழக்கை எதிர்கொள்ள சிங்கப்பூர் சென்ற மகேந்திரனை நாடு கடத்த அரசாங்கம் முயற்சித்தது. எனினும், சிங்கப்பூர் இதுவரை அவரை ஒப்படைக்க மறுத்துவிட்டது. இதன் விளைவாக, அவர் எந்தத் தடையும் இல்லாமல் சிங்கப்பூரில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார் என தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. https://akkinikkunchu.com/?p=333526
  23. யாழ்ப்பாண யுவதி விமான நிலையத்தில் கைது! Vhg ஜூலை 20, 2025 கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 26 வயது யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அதிகாரிகளின் கூற்றுப்படி, சந்தேகநபர் போலி கடவுச்சீட்டு, போலி விமான அனுமதி அட்டை (boarding pass) மற்றும் போலி குடிவரவு முத்திரைகளுடன் பிடிபட்டுள்ளார். யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்ட இந்த யுவதி, குடிவரவு அதிகாரிகளை ஏமாற்றி, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி டுபாய் வழியாக இத்தாலி செல்ல திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. போலித் தகவல்களை வழங்கியமை, உத்தியோகபூர்வ ஆவணங்களைத் திரிபுபடுத்தியமை, மற்றும் போலியான வீசாவுடன் சட்டவிரோத வெளிநாட்டுப் பயணத்திற்கு முயற்சித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. https://www.battinatham.com/2025/07/blog-post_743.html
  24. 'இதுபடுகொலை" காசாவில் உணவுவிநியோகம் இடம்பெறும் பகுதிகளை நோக்கி சென்றுகொண்டிருந்தவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் - 35 பேர் பலி Published By: RAJEEBAN 20 JUL, 2025 | 12:25 PM காசாவில் உணவுவிநியோகம் இடம்பெறும் இரண்டு பகுதிகளில் காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 38 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். அந்த பகுதியி;ல் படுகொலை இடம்பெற்றதாக சம்பவங்களை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளதுடன் மனிதாபிமான பொருட்கள் வழங்கப்படும் பகுதிகளை நோக்கி சென்றுகொண்டிருந்தவர்கள் மீது - அனேகமாக இளையவர்கள் மீது இஸ்ரேலிய படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் என தெரிவித்துள்ளனர். கான்யூனிசிற்கு கிழக்கே உள்ள உணவு விநியோக மையங்களில் இருந்து இரண்டு கிலோமீற்றர் தொலைவில் உள்ள டெய்னாவில் கொல்லப்பட்டவர்களில் அதிகளவானவர்கள் இஸ்ரேலிய படையினரின் துப்பாக்கி பிரயோகம் காரணமாக கொல்லப்பட்டனர் என காசாவின் சிவில் பாதுகாப்பு அமைப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். காயமடைந்த பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என மருத்துவவட்டாரங்கள் இஸ்ரேலின் ஹெராட்ஸ் செய்தித்தாளிற்கு தெரிவித்துள்ளன. கொல்லப்பட்டவர்கள் காயமடைந்தவர்களில் அதிகளவானவர்கள் சிறுவர்கள் பதின்மவயதினர் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். 25 பேரின் உடல்கள் தங்களிற்கு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள கான் யூனிசின் நாசர் மருத்துவமனை காயமடைந்த பலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது. முன்னர் ஒருபோதும் இல்லாத அளவிற்கு குறுகிய நேரத்தில் உயிரிழந்தவர்களும் காயமடைந்தவர்களும் காணப்படுகின்றனர் என தெரிவித்துள்ள மருத்துவமனையின் இயக்குநர் அடெல் அவ் ஹெளட் உயிரிழப்புகள் அதிகமாகலாம் என தெரிவித்துள்ளார். போதியளவு உபகரணங்கள் மருத்துவ பணியாளர்கள் மருந்துகள் இல்லாததால் எங்களால் போதிய சிகிச்சையை வழங்க முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை இது குறித்து அறிக்கையொன்றை விடுத்துள்ள இஸ்ரேல் அமெரிக்க காசா மனிதாபிமான பவுண்டேசன் தனது பகுதிகளிற்கு அருகில் துப்பாக்கி சூடு இடம்பெறவில்லை தன்னுடைய உணவு விநியோக தளங்களில் இருந்து வெகுதொலைவில் துப்பாக்கி சூடு இடம்பெற்றதாக தெரிவித்துள்ளது. இதேவேளை தங்களின் எச்சரிக்கையை மீறி சந்தேகநபர்கள் படையினரை நோக்கி வந்தவேளை எச்சரிக்கை வேட்டுக்களை தீர்த்ததாக தெரிவித்துள்ள இஸ்ரேலிய இராணுவம் உயிரிழப்புகள் குறித்த விபரங்கள் குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது. நான் உணவுவிநியோக மையத்தை நோக்கி பலருடன் நடந்துசென்றுகொண்டிருந்தவேளை - அனேகமாக இள வயதினர் -இஸ்ரேலிய படையினர் எச்சரிக்கை வேட்டுக்களை தீர்த்த பின்னர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் என மஹ்மூட் மொக்கெய்மார் என்பவர் ஏபிக்கு தெரிவித்துள்ளார். இது ஒரு படுகொலை ஆக்கிரமிப்பு இராணுவத்தினர் எங்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர் என தெரிவித்துள்ள அவர் நான் ஒருவாறு உயிர் தப்பினேன் ஆனால் மூன்று உடல்களை பார்த்தேன் காயமடைந்திருந்த பலரையும் பார்த்தேன் என குறிப்பிட்டுள்ளார். டாங்கிகள் மற்றும் ஆளில்லா விமானங்களில் இருந்து தாக்குதல்கள் இடம்பெற்றது அவர்கள் எங்களை சுற்றிவளைத்து துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் உயிரிழந்த பலரை பார்த்தேன் என அவர் ஏபிக்கு தெரிவித்துள்ளார்.' அந்த பகுதியிலிருந்து தப்பியோடியவேளை உயிரிழந்த நிலையில் பலரை கண்டதாக 55 சனா ல் ஜபேரி தெரிவித்துள்ளார்.' நாங்கள் உணவு உணவு என சத்திமிட்டோம் ஆனால்அவர்கள் எங்களுடன் பேசாமல் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் என அவர் தெரிவித்துள்ளார். அவர்கள் எங்கள் மீதுதுப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர் நாங்கள் நிலத்தில் வீழ்ந்து கிடந்தோம் டாங்கிகள் ஜீப்புகளில் எங்களை நோக்கி வந்த இஸ்ரேலிய படையினர் அதிலிருந்து இறங்கி துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் என 24 வயது டமெர் அபு அக்பர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/220449

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.