Everything posted by கிருபன்
-
80 மீனவர்கள், 237 மீன்பிடிப் படகுகளை விடுவிக்குக: ஸ்டாலின் கடிதம்
80 மீனவர்கள், 237 மீன்பிடிப் படகுகளை விடுவிக்குக: ஸ்டாலின் கடிதம் இலங்கைக் காவலில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமென்று வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு (புதன்கிழமை) கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தின் விவரம் வருமாறு: இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றிய அரசு தூதரக ரீதியாக தலையிட வேண்டும் என்று தான் பலமுறை வேண்டுகோள் விடுத்த போதிலும், இதுபோன்ற கைது சம்பவங்கள் தொடர்வது மிகவும் . 2025 ஆம் ஆண்டில் மட்டும் நடைபெற்ற கைது சம்பவங்களில், இது 17-வது சம்பவம் . தற்போது, 237 மீன்பிடிப் படகுகளும், 80 மீனவர்களும் இலங்கை அதிகாரிகளின் காவலில் இருப்பதாகவும், மீனவர்கள், அவர்களின் ஒரே வாழ்வாதாரமான பாரம்பரிய நீர்நிலைகளில் மீன்பிடிக்கும் உரிமையை இழந்துள்ளனர் என்பதை வேதனையுடன் சுட்டிக் காட்டுகிறேன். எனவே, கைது செய்யப்பட்ட அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிப்பதற்குத் தேவையான உடனடி நடவடிக்கைகளை எடுத்திடுமாறு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். https://www.tamilmirror.lk/செய்திகள்/80-மீனவர்கள்-237-மீன்பிடிப்-படகுகளை-விடுவிக்குக-ஸ்டாலின்-கடிதம்/175-362500
-
இலங்கைக்கான அமெரிக்காவின் வரி விதிப்பு நடைமுறைக்கு வருகிறது!
இலங்கைக்கான அமெரிக்காவின் வரி விதிப்பு நடைமுறைக்கு வருகிறது! adminAugust 7, 2025 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிக் கொள்கையின் கீழ் இலங்கை மீது விதிக்கப்பட்ட புதிய வரிகள் இன்று (07.08.25) முதல் அமலுக்கு வருகின்றன. அதன்படி, இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இன்று முதல் அமெரிக்கா 20 சதவீத வரியை அறவிடவுள்ளது. உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உலகளாவிய வரியை விதிக்க முடிவு செய்தார். குறைந்தபட்ச விகிதம் 10% ஆக இருந்ததுடன், இது சில நாடுகளுக்கு மிக அதிகமாக அறிவிக்கப்பட்டது. இலங்கை மீது 44% வரி விதிக்கப்பட்டது. அத்தகைய சூழலில், இலங்கை அரசாங்கம் உடனடியாக அமெரிக்க வர்த்தக நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கி, இதற்கான திருத்தப்பட்ட ஒப்பந்தங்களை எட்ட நடவடிக்கை எடுத்தது. இலங்கை இது குறித்து மிகவும் நம்பிக்கையுடன் இருந்த நிலையில், கடந்த 12 ஆம் திகதி, அமெரிக்கா இலங்கை மீதான வரியை 30% ஆகக் குறைத்து, புதிய வரி முன்மொழிவை எழுத்துப்பூர்வமாக அறிவித்தது. எனினும் அந்த 30% மேலும் குறைக்க அமெரிக்க வர்த்தக நிறுவனத்துடன் இலங்கை தொடர்ந்து கலந்துரையாடலை நடத்தியதன் பலனாக இலங்கைக்கு 20% வரி அறவிடுவதாக அமெரிக்கா அறிவித்தது. இந்நிலையில், இந்த புதிய வரிக் கொள்கையை அமுல்படுத்தும் நடவடிக்கை கடந்த மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தாலும், அமெரிக்க ஜனாதிபதியால் இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையில், அமெரிக்கா விதித்த வரி விகிதத்தை மேலும் குறைப்பது குறித்து கலந்துரையாடலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவருத்தி சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவித்தார். அமெரிக்கா விதித்த வரி கொள்கையை கையாள்வதில் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் எடுக்க வேண்டிய திட்டங்கள் குறித்து ஏற்றுமதி அபிவிருத்தி சபையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://globaltamilnews.net/2025/218939/
-
இலங்கையில் நாளொன்றுக்கு 8 பேர் தற்கொலை?
இலங்கையில் நாளொன்றுக்கு 8 பேர் தற்கொலை? adminAugust 7, 2025 பல்வேறு சமூகக் காரணிகளால் பாடசாலை மாணவர்கள் தற்போது ஓரளவு மன அழுத்தத்தை அனுபவித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வருடம் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் இந்த விடயம் தெரியவந்ததாக சுகாதார அமைச்சின் உளநலப் பணிப்பாளர் காரியாலயத்தின் பதில் பணிப்பாளர் சமூக மருத்துவ நிபுணர் வைத்தியர் லக்மினி மாகொடரத்ன தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய மருத்துவ நிபுணர் லக்மினி மாகொடரத்ன கருத்து தெரிவிக்கையில், 2024 ஆம் ஆண்டில் இலங்கையில் பாடசாலை சுகாதார கணக்கெடுப்பு நடத்தப்பட்டது, எங்கள் குழந்தைகளின் தரவுகளைப் பார்த்தபோது, 22.4% குழந்தைகள் தனிமையால் பாதிக்கப்பட்டனர். 13-17 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களில் 11.9% பேர் ஏதோ ஒன்றைப் பற்றி கவலைப்பட்டு இரவில் தூங்குவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். சுமார் 18% பேரிடம் மனச்சோர்வின் அறிகுறிகள் தென்பட்டது. 7.5% பேருக்கு நெருங்கிய நண்பர்கள் இல்லை. 25% மாணவர்கள் தங்கள் மனதில் உள்ள ஒரு பிரச்சினையைப் பற்றிப் பேச யாராவது இருப்பதாகக் கூறினர். அதாவது 75% மாணவர்களுக்கு நெருக்கமானவர்கள் யாரும் இல்லை. எனவே இலங்கையில் இது நடக்குமா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மாணவர்கள் அதிக மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். அதே நேரத்தில், பெரியவர்கள் பல்வேறு மன அழுத்தத்தில் இருக்க முடியும். பல்வேறு சமூகப் பிரச்சினைகளும் மன அழுத்தமும் இவர்களையும் பாதிக்கலாம். இதேவேளை, நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலைகள் பதிவாவதாக தேசிய மனநல நிறுவனத்தின் மனநல வைத்தியர் சஜீவன அமரசிங்க தெரிவித்தார். 1996 ஆம் ஆண்டில், தற்கொலைகளின் அடிப்படையில் உலகில் இரண்டாவது இடத்தில் இருந்தோம், ஒரு இலட்சத்திற்கு 47 பேர். அந்த காலகட்டத்தில் ஜனாதிபதி ஆணைக்குழுவுடன் எடுக்கப்பட்ட முடிவுகளால் நாங்கள் மிகவும் வீழ்ச்சியடைந்தோம். இப்போது அது ஒரு லட்சத்திற்கு 15ஆக மாறியுள்ளது. வருடத்திற்கு 3,500 பேர். கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இது அதிகரிக்கவில்லை. நாளொன்றுக்கு சுமார் 8 தற்கொலைகள் நடக்கின்றன. பிரபலமான மரணங்கள் மட்டுமே ஊடகங்களுக்குச் செல்கின்றன. இன்னும் பல தற்கொலைகள் உள்ளன. தற்கொலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் இல்லை என்றாலும், இந்த சர்ச்சைக்குரிய தற்கொலைகள் இப்போதெல்லாம் நடந்து வருகின்றன. ஆனால் ஊடகங்கள் கடந்த காலங்களைப் போல இதுபோன்ற விடயங்களைப் பெரிதாக காண்பிப்பதில்லை. அது ஒரு பெரிய முன்னேற்றம். https://globaltamilnews.net/2025/218936/
-
இளைஞனை நிர்வாணமாக்கி தாக்கிய சம்பவம் - 08 மாத காலம் ஆகியும் பிரதான சந்தேக நபரை கைது செய்யாத காவற்துறை!
இளைஞனை நிர்வாணமாக்கி தாக்கிய சம்பவம் - 08 மாத காலம் ஆகியும் பிரதான சந்தேக நபரை கைது செய்யாத காவற்துறை! adminAugust 7, 2025 யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை நிர்வாணமாக்கி , தாயின் கண் முன்னால் கட்டி வைத்து தாக்கிய கும்பலின் பிரதான சந்தேக நபரை 08 மாத கால பகுதி கடந்தும் பொலிஸார் கைது செய்யாது அசமந்தமாக செயற்படுவதாக பாதிக்கப்பட்ட தரப்பினரின் குற்றம் சாட்டியுள்ளனர். பிரதான சந்தேக நபருக்கும் வடக்கில் உள்ள காவற்துறை உயர் அதிகாரிகளுக்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்புகள் காணப்படுவதனால் , காவற்துறை யினர் அந்நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் , சில காவற்துறை உத்தியோகஸ்தர்கள் அந்நபரை கைது செய்ய முயற்சித்த வேளையிலும் , உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக அந்நபரை கைது செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் , தமது நலன் சார்ந்து மூத்த சட்டத்தரணி ஒருவரை நியமித்து, அவரூடாக யாழ் . நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கினை நகர்த்தல் பத்திரம் ஊடாக விசாரணைக்கு எடுத்து , காவற்துறையினர் பிரதான சந்தேக நபரை 08 மாத காலம் கடந்து கைது செய்யாது , அசமந்தமாக செயற்படுவதாக மன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். அதனை அடுத்து குறித்த சந்தேகநபரை இதுவரையான கால பகுதி வரையில் கைது செய்யாதமைக்கான காரணம் தொடர்பில் மன்றிற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்று காவற்துறையிருக்கு கட்டளையிட்டுள்ளது. பின்னணி இரு குடும்பங்களுக்கு இடையிலான பிரச்சனையில் கடந்த ஜனவரி மாதம் 20ஆம் திகதி இணுவில் பகுதியை சேர்ந்த இளைஞனை அவரது தாய்க்கு முன்னால் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி , சித்திரவதை புரிந்து கட்டி வைத்து மிக மோசமான முறையில் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். சித்திரவதை மற்றும் தாக்குதல்களை மேற்கொள்ளும் போது , தாக்குதலாளிகள் அவற்றை கையடக்க தொலைபேசியில் வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் சுமார் 15 வரையில் காவற்துறையினர் அடையாளம் கண்டு கொண்டனர். அவர்களில் ஒரு சிலரை மாத்திரம் கைது செய்து வழக்கு விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட ஏனைய சந்தேகநபர்களை காவற்துறையினர் 08 மாத கால பகுதி கடந்தும் இதுவரையில் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/218934/
-
புதிய அரசியலமைப்பின் நோக்கம்? — வீரகத்தி தனபாலசிங்கம் —
புதிய அரசியலமைப்பின் நோக்கம்? August 4, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — புதிய அரசியலமைப்பை கொண்டுவரப்போவதாக கடந்த வருடம் தேசிய தேர்தல்களில் இலங்கை மக்களுக்கு வாக்குறுதியளித்த தேசிய மக்கள் சக்தி பதவிக்கு வந்த பிறகு அதற்கான செயன்முறை மூன்று வருடங்களுக்கு பின்னரே முன்னெடுக்கப்படும் என்று அறிவித்தபோது அரசாங்கம் அதன் பதவிக்காலத்தின் பிற்பகுதியில் அவ்வாறு செய்வதில் எழக்கூடிய பிரச்சினைகளை அரசியலமைப்பு நிபுணர்களும் அரசியல் ஆய்வாளர்களும் சுட்டிக்காட்டியிருந்தனர். அரசியலமைப்பை மாற்றும் செயன்முறைகளை பொதுவில் அரசாங்கங்கள் அவற்றின் பதவிக் காலத்தின் ஆரம்பக் கட்டங்களில் செய்வதே வழமை. சுதந்திர இலங்கையில் இரு குடியரசு அரசியலமைப்புகளும் அரசாங்கங்களின் பதவிக்காலங்களின் முற்பகுதியிலேயே கொண்டுவரப்பட்டன. 1970 மே மாதம் பதவிக்கு வந்த பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம் 1972 மே மாதம் முதலாவது குடியரசு அரசியலமைப்பை கொண்டுவந்தது. 1971 ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) ஆயுதக் கிளர்ச்சியினால் இடையூறு ஏற்படாமல் இருந்திருந்தால் அந்த அரசாங்கம் முன்கூட்டியே அரசியலமைப்பை கொண்டுவந்திருக்கவும் கூடும். 1977 ஜூலையில் பதவிக்கு வந்த ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் 15 மாதங்களுக்குள் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பை நிறைவேற்றியது. அதனால், மூன்று வருடங்களுக்கு பிறகு புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைகளை முன்னெடுப்பது என்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அறிவிப்பின் அரசியல் விவேகம் குறித்து சந்தேகம் கிளப்பப்பட்டது. ஆனால், அரசாங்கம் பதவியேற்று பத்து மாதங்கள் கடந்த நிலையில், புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கடந்த வாரம் (ஜூலை 25) பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் அறிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா கிளப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர் தற்போதைய அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னதாக புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் என்றும் கூறினார். இதற்கு முன்னதாக கடந்த ஏப்ரல் முற்பகுதியிலும் பிரதமர் பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைகள் தொடர்பில் காலவரிசை ஒன்றை குறிப்பிட்டிருந்தார். “புதிய அரசியலமைப்பை கொண்டுவருவதற்கு முன்னதாக அரசாங்கம் அவசரமாக முன்னுரிமை கொடுக்க வேண்டிய இரு விடயங்கள் இருக்கின்றன. கடந்த வருடம் அதிகாரத்துக்கு வந்தபோது அரசாங்கம் பொருளாதார உறுதிப்பாட்டை ஏற்படுத்துவதிலும் பல வருடங்களாக தாமதிக்கப்பட்டுவரும் மாகாணசபை தேர்தல்களை நடத்துவதன் மூலம் ஜனநாயகத்தை உறுதிசெய்வதிலும் முழுமையாக கவனத்தைக் குவிக்க வேண்டியிருந்தது. மாகாணசபை தேர்தல்களை நடத்திய பிறகு புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையை அரசாங்கம் தொடங்கும்” என்று அவர் கூறினார். அதேவேளை, இந்த வருடம் இந்த செயன்முறையை முன்னெடுப்பதற்கு பட்ஜெட்டில் நிதியொதுக்கீடு செய்யப்படவில்லை என்பதை ஒத்துக் கொண்ட பிரதமர் பொதுக் கலந்துரையாடல்கள் மூலமாக முன்னைய அரசாங்கத்தினால் ஏற்கெனவே முன்னெடுக்கப்பட்டிருந்த அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையை தொடருவதற்கு அரசாங்கம் உத்தேசிக்கிறது என்று குறிப்பிட்டார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன — பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் (2015 –2019) அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையை தொடர்ந்து முன்னெடுக்கப் போவதாக ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அளித்திருந்த வாக்குறுதியையே பிரதமரும் மீண்டும் பாராளுமன்றத்தில் கூறினார். கடந்த உள்ளூராட்சி தேர்தல்களில் ஆளும் தேசிய மக்கள் சக்தியின் வாக்குகளில் ஏற்பட்ட கணிசமான வீழ்ச்சியை அடுத்து மாகாணசபை தேர்தல்களை நடத்துவதில் தற்போதைக்கு அரசாங்கம் அவரசம் காட்டப்போவதில்லை என்று பரவலாக நிலவிய அபிப்பிராயத்துக்கு மத்தியில் கடந்த வாரம் அமைச்சரும் சபை முதல்வருமான பிமால் இரத்நாயக்க அடுத்த வருட முற்பகுதியில் மாகாணசபை தேர்தல்களை அரசாங்கம் நடத்தும் என்று அறிவித்திருக்கிறார். அவர் கூறியிருப்பதன் பிரகாரம் மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்படுமானால், அடுத்த வருட முற்பகுதியில் இருந்து அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையும் துரிதப்படுத்தப்படும் என்று எதிர்பார்கலாம். முன்னைய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைக்கு பிறகு அன்றைய பிரதமர் விக்கிரமசிங்க இடைக்கால அறிக்கை ஒன்றை 2017 செப்டெம்பரில் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். புதிய அரசாங்கம் அறிவித்திருப்பதன் அடிப்படையில் நோக்கும்போது அந்த இடைக்கால அறிக்கையில் இருந்தே மீண்டும் செயன்முறையை தொடங்க வேண்டும். அரசாங்கம் அது தொடர்பில் எத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் என்பதை செயன்முறை தொடங்கும்போதுதான் தெரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். இந்த கட்டத்தில் முக்கியமான கேள்விகளை எழுப்ப வேண்டியிருக்கிறது. புதிய அரசியலமைப்பின் அடிப்படை நோக்கம் என்ன? மக்களுக்கு வாக்குறுதி வழங்கியதன் பிரகாரம் முறைமை மாற்றத்தையும் புதிய அரசியல் கலாசாரத்தையும் கொண்டுவருவதாக இருந்தால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முக்கியமாக கவனத்தில் எடுக்க வேண்டிய அம்சங்கள் எவை? இலங்கை இன்று தீர்க்கமான ஒரு கட்டத்தில் நிற்கிறது. பல தசாப்தகால அரசியல் உறுதிப்பாடின்மை, பொருளாதார நெருக்கடி, நிறுவனங்களின் சிதைவுகளுக்கு பிறகு கடந்தகால தவறான பாதையில் இருந்து விடுபட்டு புதியதொரு பாதையில் நாட்டை வழிநடத்துவதற்கு ஜனாதிபதி திசநாயக்கவுக்கும் அவரது அரசாங்கத்துக்கும் உண்மையில் அக்கறை இருந்தால் முதலில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்க வேண்டும். அடுத்ததாக, பல தசாப்தங்களாக நாட்டின் அமைதியின்மைக்கு அடிப்படைக் காரணமாக அமைந்திருக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வொனறைக் காண்பதற்கு பயனுறுதியுடைய அதிகாரப் பரவலாக்கல் ஏற்பாடு ஒன்றை அரசியலமைப்பில் உள்ளடக்க வேண்டும். இந்த இரு நடவடிக்கைகளையும் தவிர புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையை பொறுத்தவரை கூடுதல் முன்னுரிமைக்குரிய வேறு விடயங்கள் இருக்க முடியாது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி என்பது வெறுமனே குறைபாடுகள் உள்ள ஒரு நிறுவனம் அல்ல. அது முன்னேறிச் செல்வதற்கு இலங்கைக்கு இருந்த ஆற்றல்கள் மற்றும் வாய்ப்புக்கள் சகலதையும் பாழ்படுத்திய ஒரு அரசியல் காலாசாரத்தை உருவகப்படுத்திநிற்கும் ஒரு நிறுவனமாகும். இனமோதல், பொருளாதார அனர்த்தம், மனித உரிமை மீறல்கள், அதிகார துஷ்பிரயோகங்கள் மற்றும் குடும்ப அரசியல் ஆதிக்கம் என்று இலங்கை அனுபவித்து வந்த பேரிடர்களை எல்லாம் மேலும் மோசமாக்கிய மட்டுமீறிய அதிகாரங்களைக் கொண்ட நிறுவனமே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியாகும். இலங்கையின் அரசியல் வரலாறு “ஜனாதிபதி பதவியை ஒழிக்கப்போவதாக மக்களுக்கு வாக்குறுதியளித்த சகல பிரதான அரசியல் கட்சிகளுமே அதை மீறிச்செயற்பட்ட கவலை தருகின்ற” ஒரு முரண்நிலையைக் கொண்டது. அதிகாரத்துக்கு வந்த பிறகு அந்த கட்சிகள் அரசியலமைப்பு சீர்திருத்தங்களை வசதியாக மறந்ததுடன் மாத்திரமல்ல, ஜனாதிபதி பதவியின் அதிகாரங்களை மேலும் அதிகரித்ததை நாம் கண்டோம். அநுர குமார திசநாயக்கவே நாட்டின் கடைசி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என்று 2024 ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களின்போது தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் கூறியதை மக்கள் மறந்து விடவில்லை. புதிய அரசியலமைப்பு அத்தியாவசியமானது என்றும் அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னதாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி ஒழிக்கப்படும் என்றும் கடந்த வாரம் பிரதமர் அமரசூரியவும் பாராளுமன்றத்தில் கூறினார். ஜனாதிபதி பதவி ஒழிப்பு தொடர்பிலான வாக்குறுதி மீறல்கள் வட்டத்தை முறிப்பதற்கு சிறந்த சந்தர்ப்பத்தை தற்போதைய தருணம் தருகிறது. அதை தேசிய மக்கள் சக்தி தவறவிடுமானால், அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவருவதாக வழங்கிய வாக்குறுதியை மீறிய இன்னொரு கட்சி என்று வரலாற்று அபகீர்த்திக்குள்ளாக வேண்டியிருக்கும். கடந்த காலத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழிப்பதற்கு மானசீகமாக விரும்பிய அரசாங்கங்களிடம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் இருக்கவில்லை என்கிற அதேவேளை, போதிய பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டிருந்த அரசாங்கங்களிடம் அந்த பதவியை ஒழிப்பதற்கான அரசியல் விருப்பம் இருக்கவில்லை. சொந்த அரசியல் நலன்களை மனதிற் கொண்டு செயற்படாமல் ஜனாதிபதி பதவியை ஒழிப்பதில் உறுதியாகச் செயற்படக்கூடிய தலைவர்கள் இதுவரையில் இலங்கை மக்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால், ஜனாதிபதி திசநாயக்க அத்தகைய தலைவர்களின் வரிசையில் தானும் இணைந்து கொள்வதற்கு ஒருபோதும் விரும்பமாட்டார் என்று நம்புவோமாக! 13 வது திருத்தத்தின் கதி: அடுத்ததாக, புதிய அரசியலமைப்பில் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்காக எத்தகைய அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டை அரசாங்கம் கொண்டுவரும் என்பது இன்னொரு முக்கியமான கேள்வி. தேசிய மக்கள் சக்தியின் பிரதான அங்கத்துவக் கட்சியான ஜே.வி.பி. இதுகாலவரையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கு முன்னெடுக்கப்பட்ட சகல முயற்சிகளையும் கடுமையாக எதிர்த்துவந்த ஒரு கசப்பான வரலாற்றைக் கொண்டிருக்கிறது. அதனால் புதிய அரசியலமைப்பில் அதிகாரப்பகிர்வு ஏற்பாடுகளை உள்ளடக்குவதில் அரசாங்கத்துக்கு எந்தளவுக்கு அக்கறை இருக்கும் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. இதுவரையில் ஒழுங்காக நடைமுறைப்படுத்தப்படாவிட்டாலும் கூட, இலங்கையில் தற்போது நடைமுறையில் இருக்கின்ற அதிகாரப்பகிர்வு தொடர்பான சட்டரீதியான ஏற்பாடாக அரசியலமைப்புக்கான 13 வது திருத்தமே விளங்குகிறது. இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கைக்கு பின்னர் கடந்த 38 வருடங்களாக பதவியில் இருந்த சகல அரசாங்கங்களுமே அந்த திருத்தத்தின் மூலமாக மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரங்களை படிப்படியாக அபகரித்து வந்திருக்கின்றன. 13 வது திருத்தத்தில் எஞ்சியிருக்கும் அதிகாரங்களையாவது புதிய அரசியலமைப்பில் உள்ளடக்குவதில் அரசாங்கம் நாட்டம் காட்டுமா? அதில் இருப்பவற்றை விடவும் கூடுதலான அதிகாரங்களை புகுத்துவதற்கு அரசாங்கம் முன்வரும் என்று ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது. 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் நாடு பிரிவினைக்கு உள்ளாகும் ஆபத்து இருக்கிறது என்று கூச்சலிடும் தென்னிலங்கை தேசியவாத சக்திகள் புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறை முன்னெடுக்கப்படும்போது அந்த திருத்தத்தை இல்லாமல் செய்து விடுமாறு அரசாங்கத்துக்கு நெருக்குதல்களைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன போன்ற ஏனைய அரசியல் கட்சிகளும் அதிகாரப்பகிர்வு விடயத்தில் தற்போதைய சூழ்நிலையில் அக்கறை காட்டக்கூடிய சாத்தியமில்லை. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிப்பைப் போன்றே தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான முயற்சிகளையும் முன்னெடுப்பதே புதிய அரசியலமைப்பு முயற்சியின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும். அல்லாவிட்டால், புதிய அரசியலமைப்பு நாட்டில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரப் போவதில்லை என்பது நிச்சயமானது. தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஜே.வி.பி.யின் முன்னாள் செயலாளரான லயனல் போபகே கடந்த வாரம் ‘இலங்கைக்கு புதிய அரசியலமைப்பின் முக்கியத்துவம்’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை ஒன்றில் கூறியிருக்கும் முக்கியமான சில கருத்துக்களை இந்த சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்துவது பொருத்தமானதாக இருக்கும். “தற்போதைய அரசியலமைப்பு அடிப்படை உரிமைகள் சிலவற்றை உறுதி செய்கின்ற போதிலும், சிங்களம் தமிழை விடவும் மேலானதாகவும் பௌத்த மதம் மற்றைய மதங்களை விடவும் முதன்மையானதாகவும் பார்க்கப்படுகிறது. சிறுபான்மைச் சமூகங்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யாத இந்த அரசியலமைப்பு இனங்களுக்கு இடையில் பிளவுக்கும் இன மோதல்களுக்கும் வழிவகுத்தது. “புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன் முறையை பரந்தளவிலான பொதுக் கலந்துரையாடலுடன் தொடங்க வேண்டும். சகல இனங்களையும் சேர்ந்த மக்களின் அபிலாசைகளையும் பிரதிபலிப்பதாக அரசியலமைப்பு அமைய வேண்டும். “13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது மாத்திரமல்ல, அதையும் தாண்டிச் செல்ல வேண்டும். அதிகாரப் பகிர்வு ஆட்சிமுறையில் சகல சமூகங்களின் பங்கேற்பையும் உறுதி செயவதற்கான ஒரு வழிமுறையே தவிர, தேசிய ஒருமைப்பாட்டுக்கான அச்சுறுத்தல் அல்ல. அதிகாரப் பரவலாக்கத்தை பிரிவினைவாத நோக்கம் கொண்டதாக சிங்களப் பகுதிகளில் பலர் கருதுகிறார்கள். ஆனால், உண்மையில் அது கல்வி, சுகாதாரம், நிலம் மற்றும் நிருவாகம் போன்ற துறைகளில் மக்கள் தாங்களாகவே தீர்மானங்களை எடுக்க வழிவகுக்கும் ஒரு ஏற்பாடாகும். “அரசியலமைப்புச் சீர்திருத்தங்களை தனது பதவிக்காலத்தின் பிற்பகுதியில் முன்னெடுப்பது குறித்து அரசாங்கம் தெரிவித்தது. ஆனால், தாமதமான தொடக்கம் தோல்விக்கே வழிவகுக்கும் என்பதை வரலாறு எங்களுக்கு கற்றுத்தந்திருக்கிறது. தேர்தல்கள் நெருங்கும்போது அரசியல் துணிவாற்றல் இல்லாமல் போய்விடும். முன்னர் அவ்வாறு நடந்தது. மீண்டும் அதேநிலை ஏற்படக்கூடாது. “இலங்கையை நல்லதொரு எதிர்காலத்தை நோக்கி வழிநடத்துவதற்கான வாய்ப்பு எமக்கு கிடைத்திருக்கிறது. சகல சமூகங்களையும் அரவணைக்கின்ற புதியதொரு ஜனநாயக சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு குடிமகனும் அதில் பங்குபற்றுவதாக உணரக்கூடிய முறையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைய வேண்டும். இது எளிதான செயன்முறை அல்ல. இலங்கையில் அமைதியும் சமூகங்கள் பரஸ்பர மதிப்புடன் வாழ்கின்ற சூழ்நிலையும் ஏற்பட வேண்டுமானால், நாட்டின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கக்கூடிய புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும். இது தொடக்கத்துக்கான நேரம். அதை வீணாக்கக்கூடாது.” https://arangamnews.com/?p=12231
-
184 பேர் படுகொலை செய்யப்பட்ட சத்துருக்கொண்டானில் பாரிய மனிதப் புதைகுழி; இன்றும் பல சாட்சிகள் உள்ளன
184 பேர் படுகொலை செய்யப்பட்ட சத்துருக்கொண்டானில் பாரிய மனிதப் புதைகுழி; இன்றும் பல சாட்சிகள் உள்ளன சத்துருக்கொண்டான் படுகொலை நடைபெற்ற இராணுவமுகாமில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவேண்டும் என சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு தலைவர் வைரமுத்து குழந்தைவடிவேல் கோரிக்கை விடுத்துள்ளார். மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்போது கருத்து தெரிவித்த அவர், மட்டக்களப்பு மாவட்டத்தில்.1990.09.09 அன்று சத்துருக்கொண்டான் பனிச்சையடி கொக்குவில் பிள்ளையாரடி ஆகிய கிராமங்களில் 184 பேர் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றனர். இலங்கை ராணுவத்தினராலும், முஸ்லிம் ஊர்காவல் படையினராலும் இந்த படுகொலை செய்யப்பட்டது. இந்த படுகொலைக்கு நேரடியாக சாட்சியங்களும் இருக்கின்றது. புதிய அரசாங்கத்தில் படுகொலைகள் அனைத்தும் தோண்டப்பட்டு கொண்டிருக்கின்றது. உதாரணமாக செம்மணி படுகொலை தோண்டப்பட்டு இருக்கின்றது. அதே நேரத்தில் கிழக்கு மாகாணத்தில் மிகக் கொடூரமாக நடந்த படுகொலை என்றால் சத்துருக்கொண்டான் படுகொலை. இந்த படுகொலை சத்துருக்கொண்டானில் அமைந்த ராணுவ முகாமில் 184 பேரை அழைத்து கொண்டு செல்லப்பட்டு வாளாளும் கத்தியாலும் வெட்டி டயர்கள் போட்டு எரிக்கப்பட்டனர். இன்று இதற்கான நீதி இதுவரைக்கும் கிடைக்கவும் இல்லை. இரண்டு ஆணைக்குழுவில் நான் சாட்சிகள் தெரிவித்துள்ளேன். ஒன்றும் சந்திரிகா அம்மையார் கால ஆணைக்குழுவில்சாட்சிகள் தெரிவித்திருந்தேன். இதில் நேரடியாக சந்திரிகா அம்மையார் ஒரு ஆனைக்குழுவை நிறுவி இதில் ஓய்வு பெற்ற ஒரு நீதி அரசர் பாலகிட்ணர். விசாரணை செய்ததில் நான்கு இலங்கை ராணுவத்தினர் இனங்காணப்பட்டு பெயர்களும் இங்கே கூறப்பட்டது. இதில் முக்கியமான சூத்திரதாரி பிரிகேடியர் பேர்சி பெனாண்டோ, கேப்டன் ஹெரத், கேப்டன் வர்ணகுலசூரிய, கேப்டன் விஜயநாயக்க இந்த நால்வரும் அந்த ஆணைகுழுவால் இவர்கள்தான் படுகொலைக்கு முக்கிய சூத்திரதாரி என்று இனங்காணப்பட்டு, இதுவரைக்கும் எந்த நீதியும் கிடைக்கப்பெறவில்லை. எனவே இந்த படுகொலையை உடனடியாக புதிய அரசாங்கம் சர்வதேச விசாரணைக்கு கொண்டு செல்ல வேண்டும். உள்நாட்டு விசாரணையில் எந்த நம்பிக்கையும் எங்களுக்கு இல்லை. அதே நேரத்தில் இந்த படுகொலை இடம்பெற்ற முகாம் அமைந்திருந்த இடத்தில் அகழ்வு செய்தால் நிறைய எலும்புக்கூடுகள் எடுக்கலாம் என தெரிவித்தார். https://akkinikkunchu.com/?p=335764
-
இலங்கையில் இஸ்ரேலியர்களுக்கு சிறப்பு பாதுகாப்பா? – அரசாங்கம் விளக்கம்!
அறுகம்பே, வெலிகம பகுதிகளில் இஸ்ரேலியர்களின் சட்டவிரோத வணிகங்களுக்கு எதிராக நடவடிக்கை - அரசாங்கம் உறுதி Published By: VISHNU 06 AUG, 2025 | 03:00 AM (நா.தனுஜா) அறுகம்பே மற்றும் வெலிகம உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேலியர்கள் உள்ளடங்கலாக வெளிநாட்டவர்களால் சட்டவிரோதமாக நடாத்தப்பட்டுவரும் வணிகங்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு செவ்வாய்க்கிழமை (5) கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. அதன்போது இலங்கையில் அறுகம்பே, வெலிகம மற்றும் உனவட்டுன போன்ற பகுதிகளில் அதிகரித்துவரும் இஸ்ரேலியப்பிரஜைகளின் ஆதிக்கம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்டவாறு தெரிவித்தார். அதேபோன்று வாராந்தம் ஒருமுறை இஸ்ரேலியர்கள் கூடும் இடத்துக்கு அவ்வேளையில் பாதுகாப்பு வழங்கப்படுவதற்குக் காரணம் சுற்றுலாப்பயணிகளுக்கு உரிய பாதுகாப்பை அளிக்கவேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு இருப்பதனாலேயே தவிர, வேறெந்த விசேட பாதுகாப்பும் வழங்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அதேவேளை மேற்குறிப்பிட்டவாறு சுற்றுலாப்பயணிகளாக நாட்டுக்கு வருகைதரும் வெளிநாட்டவர்களால் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் உரிய அனுமதிபெறாமல், சட்டவிரோதமான முறையில் நடாத்தப்பட்டுவரும் வணிகங்கள் கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். அத்தோடு இலங்கைக்கு வருகைதரும் இஸ்ரேலிய விமானங்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் தீர்மானம் கடந்த 2023 ஆம் ஆண்டு கடந்த அரசாங்கத்தில் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான குழுவினராலேயே மேற்கொள்ளப்பட்டதாகவும், அத்தீர்மானமே தற்போது நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/221929
-
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கையில் சாரதி அனுமதி பத்திரத்தை எவ்வாறு பெறலாம்?
வௌிநாட்டினருக்கான சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வௌியான தகவல் ஓகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி முதல் வெளிநாட்டினருக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்காக கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் திறக்கப்பட்ட கருமபீடம் வழியாக 120 வெளிநாட்டினருக்கு சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார். கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரங்களை பெற வெளிநாட்டினரிடமிருந்து அதிகளவான கோரிக்கை இருக்கும் நிலையில், அவ்வாறு அனுமதிப்பத்திரத்திரம் வழங்கப்படாது என்றும் அவர் கூறினார். "சுற்றுலாவை ஊக்குவிக்கவும், சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தைத் தடுக்கவும், ஓகஸ்ட் 3 ஆம் திகதி முதல் இலங்கையில் உள்ள கட்டுநாயக்க விமான நிலையத்தில் தற்காலிக அனுமதிகளை வழங்க கருமபீடத்தை திறந்துள்ளோம். இது 24 மணி நேரமும் திறந்திருக்கும். கோரிக்கைகள் முன்வைத்தாலும் சில அனுமதிகளை வழங்க முடியாது. குறிப்பாக முச்சக்கர வண்டிகள் மற்றும் கனரக வாகனங்களை செலுத்த நாங்கள் அனுமதிப்பதில்லை. அத்தகைய கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகின்றன. வௌிநாட்டினரின் விசா காலத்தின் அடிப்படையில் இரண்டு மாதம் முதல் 5 மாதங்கள் வரை விசா அனுமதிப் பத்திரம் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுப்படியாகும் காலத்திற்கு அமைய தற்காலிக அனுமதி வழங்கப்படுகிறது. மேலும், நாங்கள் ஒரு நிரந்தர அனுமதியை வழங்குகிறோம். நாங்கள் விமான நிலையத்தில் அதை வழங்குவதில்லை. வழக்கம் போல், இது வெரஹெர அலுவலகத்தில் செய்யப்படுகிறது." என்றார். புதிய வாகனங்களை பதிவு செய்வது குறித்தும் கமல் அமரசிங்க தனது கருத்துக்களை வௌியிட்டார். "ஜனவரி முதல், நாங்கள் 133,678 வாகனங்களைப் பதிவு செய்துள்ளோம். இதில் மிகப் பெரிய எண்ணிக்கை மோட்டார் சைக்கிள்கள் ஆகும், அவற்றில் 100,451 பதிவு செய்யப்பட்டுள்ளன. அடுத்த பெரிய எண்ணிக்கையாக 20,535 கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன், இரட்டை பயன்பாட்டு வாகனங்கள், லொறிகள் மற்றும் முச்சக்கர வண்டிகள் போன்ற வாகனங்கள் உள்ளன. பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை நாங்கள் அவதானிக்கின்றோம்." என்றார். https://adaderanatamil.lk/news/cmdziqq8y026sqp4kbwkduttd
-
முஸ்லிம்களின் இழப்புகளும் நீதிக்கான கோரிக்கைகளும்
புலிகள் நிகழ்த்திய காத்தான்குடி, ஏறாவூர் பள்ளிவாசல் படுகொலை குருக்கள்மடம் பிரதேசத்தில் வைத்து முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், காத்தான்குடிப் பள்ளிவாசல்களில் இறைவழிபாட்டில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்களை மிலேச்சத்தனமாகப் புலிகள் கொன்று குவித்த சம்பவத்தின் 35ஆவது நினைவு தினமும் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. ஆபத்து வருகின்றபோது மக்கள் ஒன்றுகூடுகின்ற, அடைக்கலம் தேடுகின்ற இடமாக எப்போதும் வணக்கஸ்தலங்கள் இருக்கின்றன. இறை நம்பிக்கையுள்ள மக்களின் கடைசிப் புகலிடமாகவும் இவை உள்ளன. இதில் எந்த மதக் குழுமத்தைச் சேர்ந்தவர்களும் விதிவிலக்கல்லர். கொழும்பிலும் வேறுபல இடங்களிலும் கத்தோலிக்க தேவாலயங்களில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் மிக மிலேச்சத்தனமானது. இதனை யாருமே ஏற்றுக்கொள்ளவில்லை. இதனோடு சம்பந்தப்பட்டவர்களின் ஜனாஸாக்களை முஸ்லிம்கள் பொறுப்பேற்காமைக்கும், இதுவரை அந்தக் கும்பலுக்காக வக்காலத்து வாங்காததற்கும் காரணம் இது இஸ்லாத்திற்கு விரோதமான, மனித குலத்திற்கு எதிரான செயல் என்பதனாலாகும். அது மட்டுமன்றி, ஒரு புனித நாளில் வழிபாட்டுத் தலங்களுக்குள் தாக்குதல் நடத்துவதற்கு முஸ்லிம் அடிப்படைவாத, பயங்கரவாத குழுவொன்று துணைபோனதை முஸ்லிம் சமூகத்தால் ஒருபோதும் ஜீரணிக்கவே முடியாது. இறைவனின் சந்நிதியிலேயே பலியெடுக்கப்பட்ட மக்களின் வலி கொடியது. அது பெரும் பாவமாகும். ஆனால், இந்த அனுபவத்தை முஸ்லிம்கள் 35 வருடங்களுக்கு முன்னரேயே பெற்று விட்டனர். காத்தான்குடி, ஏறாவூர் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் அக்கரைப்பற்றிலும் பள்ளிவாசல்களில் தொழுகைக்காக ஒன்று கூடியவர்களைத் துளியளவு கூட ஈவிரக்கமின்றி கொலை செய்ததை, எந்தப் போராட்ட கோட்பாட்டினாலும் நியாயப்படுத்தி விட முடியாது. இதுபோல, தலதா மாளிகை போன்ற வழிபாட்டு இடங்களிலும் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்றதை நாமறிவோம். அப்படியென்றால், 90களில் இந்த மோசமான கலாசாரத்தை ஆரம்பித்து வைத்தது விடுதலைப் புலிகளும் அவர்களுடன் சில திட்டங்களில் சேர்ந்த்தியங்கிய ஆயுதக் குழுக்களும் என்றுகூடச் சொல்லலாம். தமிழர்களும் முஸ்லிம்களும் மொழியால் நிலத்தால் மட்டுமன்றி அரசியல், சமூக ரீதியாகவும் பிட்டும் தேங்காய்ப்பூவும் போல, இருந்த காலமொன்று உள்ளது, அப்போதிருந்த மூத்த தமிழ் அரசியல்வாதிகள் முஸ்லிம்கள் தனியான ஒரு இனக் குழுமம் என்ற அடையாளத்தையும் அந்தஸ்தையும் கொடுத்தனர் எனலாம். இருப்பினும், 80களின் நடுப்பகுதியில் பல தமிழ் ஆயுதக் குழுக்கள் அரசியல் கட்சிகளை மேவத் தொடங்கின. ஆயுதங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. கணிசமான தமிழ் அரசியல்வாதிகளும் கட்சிகளும் குறிப்பாக விடுதலைப் புலிகளுடன் ஒத்திசைவாகச் செயற்படத் தொடங்கினர். அப்போது முஸ்லிம்கள் தனிவழியில் பயணிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. முஸ்லிம் காங்கிரஸ் உருவானது இந்த தருணத்தில்தான். நிலைமை இப்படியிருக்கும் போது புலிகளும் இன்னும் ஒருசில தமிழ் ஆயுதக் குழுக்களும் முஸ்லிம்களை நசுக்கத் தொடங்கின. 90களில் இந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தமிழ-முஸ்லிம் உறவில் முதல் கீறல் என்பது கிழக்கு மாகாணத்தில் புலிகள் நடத்திய பள்ளிவாசல் படுகொலைகளில் ஆரம்பித்தது. இரண்டாவது பெரிய உறவு முறிவு வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதில் நடந்தேறியது. வரலாற்றை அறிந்த யாரும் இதனை மறுக்க முடியாது. 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் திகதி முஸ்லிம்கள் வழக்கமாக இரவுத் தொழுகையில் ஈடுபட்டிருந்த வேளை அயற் கிராமங்களின் ஊடாக காத்தான்குடிக்குள் நுழைந்த விடுதலைப் புலிகள் பள்ளிவாசல்களுக்குள் இறைவழிபாட்டில் ஈடுபட்டிருந்த பெரியவர்களும் சிறுவர்களுமாக சுமார் 103 பேரை கொன்று குவித்து விட்டுப் போனார்கள். காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜும்ஆப்பள்ளிவாசல், அதே பகுதியிலுள்ள மஸ்ஜிதுல் {ஹஸைனிய்யா பள்ளிவாசல் ஆகிய இரண்டி லும் தொழுகையி ல் ஈடுபட்டுக் கொண்டிரு ந்த 103 முஸ்லிம்கள் புலிகளால் அன்றைய தினம் சுட்டுக் கொல்லப்பட்டனர். 140 பேர் காயமடைந்தனர்.அன்று வெள்ளிக்கிழமை இரவு இஷாத் தொழுகைக்கான அதான் சொல்லப்பட்டதும் சிறியவர், பெரியவர் என அனைவரும் பள்ளியினுள் சென்று வுழூ செய்து கொண்டு தொழுகைக்காக இமாமின் பின்னால் வரிசையாக நின்று கொண்டிருந்த போது புலிகள் இவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து குண்டுத் தாக்குதலையும் நடத்தினர். இதன்போது, பலரின் உயிர் அவ்விடத்திலேயே பிரிந்தது. புலிகள் பள்ளிவாசலினுள் புகுந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்கின்றார்கள் என்பதை அங்கு தொழுது கொண்டிருந்த பலரும் பின்னர்தான் புரிந்து கொண்டார்கள். பலர் படுகாயங்களுடன் குற்றுயிராய்க் காணப்பட்டு பின்னர் மரணித்தனர். தொழுகைக்காக வந்த சிலரை உள்ளே அவசரமாகச் செல்லுங்கள் என பள்ளிக்குள் அனுப்பி விட்டு அவர்கள் மீது புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக அப்போது பலர் கூறினர். புலிகள் முஸ்லிம்களைப் போல அபாயக் குரல் எழுப்பி, சிறிய காயங்களுடன் கிட ந்தவர்கள் மற்றும் உயிர் த ப்பிக் கிடந்தவர்களையும் எழுப்பி அவர்களையும் தந்திரமாகக் கொன்றதாகவும் சொன்னார்கள். ஒரு சிறுபான்மைச் சமூகத்தின் உரிமைக்காகப் போராடுவதாகக் கூறிய இயக்கம், தமக்குப் பக்கத்திலேயே வாழும் இன்னுமொரு சிறுபான்மைச் சமூகத்தை மிக கீழ்த்தரமான முறையில், ஈவிரக்கமில்லாமல் கொன்று குவித்ததை போல ஒரு பேரவலம் உலகில் வேறெங்கும் நடந்திருக்காது. குருக்கள்மடத்தில் நூற்றுக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்ட சூடு ஆறுவதற்கிடையில் ஒரு மாதத்திற்குள்ளேயே இந்த கைங்கரியத்தைப் புலிகள் மேற்கொண்டனர். முஸ்லிம்களை அழித்தொழிக்கும் திட்டத்தில் புலிகள் எந்தளவுக்கு ஈடுபாடாக இருந்தார்கள் என்பதற்கு இதுவொரு சான்றாகும். அத்தோடு நிற்கவில்லை.இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்தில் அதாவது ஆகஸ்ட் 11ஆம் திகதி ஏறாவூர் பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்கள் 121 பேர் இதே பாணியில் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதே காலப் பகுதியில்தான், அக்கரைப்பற்று பள்ளிவாசலிலும் வேறு இடங்களிலும் புலிகள் தாக்குதல் நடத்தி பலரை கொன்றனர். ஆனாலும், அவர்களின் வெறி அடங்கியிருக்கவில்லை. 1990ஆம் ஆண்டு ஒக்டோபரில் வடக்கில் வாழையடி வாழையாக வாழ்ந்த முஸ்லிம்கள் ஒரு இலட்சம் பேர் உடுத்திருந்த ஆடையோடு மட்டும் சில மணிநேரங்களில் அங்கிருந்து இதே புலிகளால் வெளியேற்றப்பட்டனர். முஸ்லிம் சமூகம், தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்கும் அரசியலுக்கும் செய்த பங்களிப்புக்களையும் வரலாற்று உண்மைகளையும் மறைத்து விட்டு, அற்ப காரணங்களுக்காகவும் முஸ்லிம்களை அடக்குவதற்காகவும் விடுதலைப் புலிகள் மட்டுமன்றி, இன்று ஜனநாயகம் பேசுகின்ற பல தமிழ் குழுக்கள் செய்த கடத்தல்கள், கப்பம்கோரல், அட்டூழியங்கள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த விவகாரங்களை முஸ்லிம்கள் இறைவனிடம் பாரம் கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டனர் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு சில பாதிக்கப்பட்ட குடும்பங்களும் செயற்பாட்டாளர்களும் சில முயற்சிகளைச் செய்தாலும், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இதற்காக நீதி வேண்டிப் பேராராடவில்லை. தமிழர்களுக்கு நடந்த அநியாயங்களுக்காகப் பேசிய, பேசும் தமிழ் அரசியல்வாதிகள் ‘முஸ்லிம்களுக்கும் ஏன் அப்பாவிச் சிங்கள மக்களுக்கும் நடந்ததும் மீறல்தான். அதற்கும் விசாரணைகள் வேண்டும்' என்று கூறியதாக ஞாபகத்தில் இல்லை. இப்படியான ஒரு சூழலில்தான் நல்லிணக்கம் பற்றிப் பேசுகின்றோம். எனவே, வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை, கடத்தல், காணாமலாக்கபடுதல் சம்பங்கள் மற்றும் கிழக்கில் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட பள்ளிவாசல் படுகொலைகள் என, 30-35 வருடங்களாக நீதி நிலைநாட்டப்படாத விவகாரங்களுக்கும் நீதி விசாரணைகள் நடத்தப்படவில்லை என்பதை யாரும் மறந்து விடக் கூடாது. புலிகளில் தலைவர் பிரபாகரன், இவ்வாறான பெரிய அநியாயத்தை ‘ஒரு துன்பியல் நிகழ்வு' என்று ஒரே வசனத்தில் சொல்லி முடித்துக் கொண்டார். அவ்வாறே, விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள் என்று கூறி இந்த சம்பவங்களுக்கான நீதி விசாரணைகளை நடத்தாமல் விட முடியாது. இந்தப் படுகொலைகளுக்கு யார் கட்டளையிட்டார்கள், யார் செய்தார்கள் என்ற உண்மை கண்டறியப்பட்டு அவர்கள் குற்றவாளிகள் என்பது உலகுக்கு அறிவிக்கப்பட வேண்டும். புலிகள் அமைப்பில் மீதமாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருப்போர் பொருத்தமானவர்களாக இருப்பார்களாயின் இதற்கு பொறுப்புக்கூறச் செய்யப்பட வேண்டும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/புலிகள்-நிகழ்த்திய-காத்தான்குடி-ஏறாவூர்-பள்ளிவாசல்-படுகொலை/91-362355
-
இலங்கை முழுவதும் இந்தியாவின் கையில்; விமல் வீரவன்ஸ கொதிப்பு!
இலங்கை முழுவதும் இந்தியாவின் கையில்; விமல் வீரவன்ஸ கொதிப்பு! இந்தியா இலங்கையை முழுவதுமாக ஆக்கிரமித்துவிட்டது என்றும் இலங்கையின் பல முக்கியமான துறைகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன என்றும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது- இந்தியா எமது நாட்டை முழுமையாக ஆக்கிரமித்துள்ளது. டிஜிற்றல் அடையாள அட்டைகளைத் தயாரிக்கும் பணி அந்த நாட்டுக்கு வழங்கப்படுவதன் மூலம் எமது நாட்டுப்பிரஜைகள் அனைவரினதும் தகவல்கள் இந்தியாவிடம் சென்றுவிடும். அதுமட்டுமல்ல, இந்த நாட்டுக்குயாரெல்லாம் சுற்றுலாவிகளாக வருகிறார்கள் என்று அறிவதற்கு இந்தியா முயற்சி செய்கிறது. இதை வெளிநாட்டுச் சுற்றுலாவாசிகள் விரும்பமாட்டார்கள். இந்தியாவின் தொழில்நுட்பத்தை நம்பமுடியாது. இந்தியாவின் தொழில்நுட்பம் என்ற பெயரில் இஸ்ரேலின் தொழில்நுட்பத்தை ஈரானுக்கு வழங்கியது இந்தியா. அதனால்தான் ஈரான் இலகுவாக இஸ்ரேலைத் தாக்கியது. இவ்வாறு துரோகம் செய்கிற நாடு தான் இந்தியா. அது நம்பிக்கைக்குரிய நாடு அல்ல. எமது நாட்டை அது வேறு சக்திகளுக்குக் காட்டிக்கொடுத்துவிடும். துறைமுகத்தின் ஒரு பகுதியை இந்தியாவின் டொக்யார்ட் நிறுவனத்துக்கு வழங்கவுள்ளது இலங்கை அரசு. அந்த இடத்தில் இந்தியப் போர்க்கப்பல்களும் நீர் மூழ்கிக் கப்பல்களும் தயாரிக்கப்படும். இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தங்களைச் செய்துள்ளது இந்த அரசாங்கம். ஆனால், அவற்றை வெளியிட முடியாது என்று சொல்கிறது. ஜே. ஆர். கூட இலங்கை இந்திய ஒப்பந்தத்தை வெளியிட்டார். ரணில்கூட புலிகளுடன் செய்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை வெளியிட்டார். அரசாங்கம் இந்தியாவுடன் செய்த ஒப்பந்தத்தை வெளியிடமறுக்கிறது என்றால் அது பாரதூரமான எமது நாட்டுக்கு எதிரானதாகவே இருக்க வேண்டும். இதற்கு எதிராக எதிர்க்கட்சிகளும் பேசுவதில்லை. ஊடகங்களும் பேசுவதில்லை. ஊடகங்கள் அனைத்தையும் வாங்கிவிட்டது இந்தியா- என்றார். https://newuthayan.com/article/இலங்கை_முழுவதும்_இந்தியாவின்_கையில்;_விமல்_வீரவன்ஸ_கொதிப்பு!
-
செம்மணி உடைமைகளை அடையாளம் காணும் தீர்மானத்தை UN வரவேற்றுள்ளது!
செம்மணி உடைமைகளை அடையாளம் காணும் தீர்மானத்தை UN வரவேற்றுள்ளது! adminAugust 6, 2025 செம்மணி மற்றும் கொக்குத்தொடுவாய் கூட்டுப் புதைகுழி தளங்களில் இருந்து மீட்கப்பட்ட தனிப்பட்ட உடைமைகளை அடையாளம் காண்பதில் பொது மக்களின் உதவியை நாடும் தீர்மானம் இலங்கையில் உண்மை மற்றும் நீதி நல்லிணக்கத்தை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் நீண்டகாலமாக எதிர்ப்பாக்கப்பட்ட ஒரு நடவடிக்கை ஆகும் என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகம் தெரிவித்துள்ளது. https://globaltamilnews.net/2025/218886/
-
இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
இந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரை ஒரு டொகுமென்ரரியாக எதிர்காலத்தில் காட்டுவார்கள். பத்து வருடங்களுக்குப் பிறகு பார்த்தாலும் சுவாரசியம் குன்றாது. நேற்று வேலைக்குப் போவதா, ஓவல் மைதானத்திற்குப் போவதா என்று குழம்பி கடைசியில் வேலைக்கே போயிருந்தேன். ஆனால் 11 இலிருந்து 12 வரை கிரிக்கெட்டைப் பார்த்துக்கொண்டிருந்தோம்😁
-
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!
தலைவர் அவர்களின் திரு உருவப்படம் மக்களுக்கு வழங்கப்பட்டது 02.08.2025---சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வீரவணக்க நிகழ்வில் தலைவர் அவர்களின் திரு உருவப்படம் மக்களுக்கு வழங்கப்பட்டது காணொளி: 👇🏿 https://methaku.com/home/video_description/77/தலவர-அவரகளன-தர-உரவபபடம-மககளகக-வழஙகபபடடத
-
சுவர் முகம் - ஷோபாசக்தி
சுவர் முகம் August 4, 2025 ஷோபாசக்தி பாரிஸ் நகரக் காவல்துறைத் தலைமையகத்தில் அந்தச் சுவர் இருக்கிறது. சுவரோடு சேர்த்து அய்ந்து மனிதர்கள் நிறுத்தப்பட்டிருந்தார்கள். ஒவ்வொருவருடைய மேலங்கியிலும் வட்டமாக இலக்கத் தகடு பொருத்தப்பட்டுள்ளது. மூன்றாவது இலக்கத்தின் பெயரை ‘டேவிட்’ என வைத்துக்கொள்வோம். வயது 46. கருப்பு நிறம். உயரம் 5 அடி 8 அங்குலம். தலைமுடி படிய வாரப்பட்டுள்ளது. நரையேறிய தாடி. ஒல்லியான உடல்வாகு. இலங்கையைச் சேர்ந்தவர். 2009-இல் பிரான்ஸில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார். டேவிட் இதற்கு முன்னரும் சிலதடவை இவ்வாறு சுவரோடு நிறுத்தப்பட்டிருக்கிறார். அவர் பிரான்ஸுக்கு வந்து ஆறு வருடங்கள் முடிந்திருந்தபோது, காவல்துறையிடமிருந்து அவருக்கு ஓர் அழைப்பு வந்திருந்தது. அந்த அழைப்பு தனது அகதி வழக்குச் சம்பந்தமானது என்றுதான் டேவிட் முதலில் நினைத்தார். டேவிட் தன்னுடைய அகதி வழக்கு விசாரணையின்போது, பிரான்ஸில் அகதித் தஞ்சம் கோருவதற்கான காரணங்களை விரிவாகச் சொல்லியிருந்தார். “அய்யா! நான் <அடைக்கலம்> என்ற சிறிய தொண்டு நிறுவனத்தில் தன்னார்வ ஊழியனாகப் பணியாற்றினேன். இந்த நிறுவனத்தைப் பாதிரியார் செபமாலைநாதர் நடத்திவந்தார். இறுதி யுத்தத்தின்போது, நாங்கள் பத்துப் பேர் ‘மோதல் தவிர்ப்புப் பகுதி’ என அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பகுதியில் காயமடைந்தவர்களைப் பராமரிக்கும் தொண்டைச் செய்துவந்தோம். அங்கிருந்த மருத்துவமனையின் மீது இராணுவத்தினர் ஏப்ரல் 10-ஆம் தேதி அதிகாலை தொடக்கம் இரவுவரை தொடர்ச்சியாகப் பலநூறு கொத்துக்குண்டு எறிகணைகளை வீசினார்கள். முந்தைய இரவு கடுமையாக மழை பெய்திருந்ததால், அங்கிருந்த பாதுகாப்புப் பதுங்குகுழிகள் எல்லாமே வெள்ளத்தால் நிறைந்திருந்தன. பதுங்குவதற்கு இடமின்றி 317 நோயாளிகள் எறிகணைகளால் கொல்லப்பட்டார்கள். எங்களது தொண்டு அணியிலும் ஏழுபேர் கொல்லப்பட்டார்கள். எல்லாம் முடிந்து இராணுவத்திடம் சரணடையும் நாளும் வந்தது. காயமடைந்திருந்த மூன்று புலிப் போராளிகள் பாதிரியார் செபமாலைநாதர் மூலமாக இராணுவத்திடம் சரணடைய விரும்பினார்கள். அவர்களையும் அழைத்துக்கொண்டு பாதிரியார் தலைமையில் நாங்கள் வெள்ளைக்கொடியை ஏந்தியவாறே இராணுவத்தை நோக்கிச் சென்றோம். எங்களது ஆடைகளைக் களைந்துவிட்டு முழு நிர்வாணமாகச் சரணடையுமாறு இராணுவம் கட்டளையிட்டது. நாங்கள் சரணடையும்போது, சிறு துண்டு வெள்ளைக்கொடியைத் தவிர வேறெந்தத் துணியும் எங்களிடம் இல்லை. நாங்கள் சரணடைந்த இடத்தில் விமானத் தாக்குதலால் இடிந்துபோன வீட்டின் மொட்டைச் சுவர் மட்டுமே இருந்தது. அந்தத் சுவரோடு சேர்த்து நாங்கள் ஆறுபேரும் நிர்வாணமாக நிறுத்தப்பட்டிருந்தோம். பாதிரியார் முதலாவது ஆளாக நின்றிருந்தார். நான் கடைசி ஆளாக நின்றிருந்தேன். எங்கள் மீது பெற்றோல் ஊற்றப்பட்டது. அப்போது எங்களைப் பார்வையிட வந்த இராணுவ அதிகாரி குலத்துங்கே என்னோடு வவுனியாப் பல்கலைக்கழகத்தில் பயின்றவன். அவனால் நான் கடைசி நேரத்தில் காப்பாற்றப்பட்டேன். சுவரோடு நிறுத்தப்பட்டிருந்த மீதி அய்ந்து பேரும் என் கண் முன்னாலேயே உயிரோடு தீவைத்துக் கொளுத்தப்பட்டார்கள். இந்தப் படுகொலைக்கு நான்தான் சாட்சி. அப்போது அதிகாரி குலத்துங்கே என்னைக் காப்பாற்றிவிட்டாலும், பின்னர் யுத்தக் குற்ற விசாரணை அது இதுவென்று ஏதாவது வந்தால் சாட்சியான நானும் நிச்சயமாக அரசாங்கத்தால் தேடிக் கொல்லப்படுவேன். அதுதான் இப்போது இலங்கையில் நடந்துகொண்டிருக்கிறது. யுத்த சாட்சிகள் வெள்ளை வேனில் கடத்தப்பட்டுக் கொல்லப்படுகிறார்கள். அதனால்தான் நான் இலங்கையிலிருந்து தப்பிவந்து உங்களிடம் அரசியல் தஞ்சம் கோருகிறேன்.” டேவிட் எல்லாவற்றையும் விரிவாகச் சொல்லியிருந்தாலும், அகதி வழக்கு விசாரணை அதிகாரிகள் இவற்றுக்கான ஆதாரங்களைக் கேட்டார்கள். பல்லாயிரக்கணக்கான உயிர்கள் அடையாளமும் ஆதாரமும் பதிவும் இல்லாமல்தானே இறுதி யுத்ததத்தில் அழிக்கப்பட்டன. ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாததால் டேவிட்டின் அகதி வழக்கு இன்னும் முடியாமலேயே இருக்கிறது. பிரான்ஸிலிருந்து வெளியேறுமாறு டேவிட்டுக்குக் காவல்துறை எந்த நேரத்திலும் உத்தரவிடக் கூடும். எனவே, பாரிஸ் காவல்துறைத் தலைமையத்திலிருந்து முதற்தடவை அழைப்பு வந்தபோது, டேவிட் நிறையக் குழப்பங்களோடும் சந்தேகங்களுடனும்தான் அங்கே சென்றார். ஆனால், அவர்கள் அழைத்தது அகதி வழக்குக் குறித்தல்ல. காவல்துறைக்கு டேவிட்டிடமிருந்து ஓர் உதவி தேவைப்பட்டது. நகரத்தில் நடந்த ஒரு கொடூரமான குற்றச் செயலில் சந்தேக நபராக ஒரு தென்னாசிய நாட்டவர் கைதாகியிருந்தார். காவல் நிலையத்தில் அந்த நபர் அடையாள அணிவகுப்பில் நிறுத்தப்படயிருந்தார். இவ்வாறான அணிவகுப்பில் அவரை ஒத்த உருவமுள்ள நான்கு பேர் அவருடன் நிறுத்தப்படுவார்கள். பொதுவாக அந்த நான்கு பேரும் நாடக நடிகர்கள் அல்லது தன்னார்வலர்களாக இருப்பார்கள். சந்தேக நபர் டேவிட்டை ஒத்த உருவமுள்ளவர் என்பதால், அந்த அடையாள அணிவகுப்பில் கலந்துகொள்ளுமாறு டேவிட்டிடம் காவல்துறை கேட்டுக்கொண்டது. இந்த வேலைக்குச் சிறியதொரு சம்பளமும் உண்டு. விஸாவும் வேலையுமில்லாமல் திண்டாடிக்கொண்டிருந்த டேவிட்டுக்கு அந்தச் சிறிய சம்பளம் பெரும் தொகைதான். ஒரு மாதத்தை ஓட்டிவிடுவார். ஆனால், அதைவிடவும் டேவிட்டுக்கு வேறொரு விஷயமே முக்கியமாகப்பட்டது. காவல்துறைக்கு உதவி செய்தால் அது தனது அகதி வழக்குக்குச் சாதகமாக இருக்கலாம் என டேவிட் நினைத்தார். அகதி வழக்கில் வெற்றி பெற்றால், இலங்கையிலிருக்கும் அவருடைய மனைவியையும் குழந்தைகளையும் பிரான்ஸுக்கு அழைத்துக்கொள்ளலாம். இலங்கையில் இவ்வாறான அடையாள அணிவகுப்புகள் சிறைகளில்தான் நடத்தப்படும். அணிவகுப்புக்குச் சிறைக் கைதிகள்தான் பயன்படுத்தப்படுவார்கள். ஆனால், பிரான்ஸில் அடையாள அணிவகுப்பு முறை வேறாக இருந்தது. என்ன குற்றம், யார் சந்தேக நபர் என எதுவுமே அணிவகுப்பில் கலந்துகொள்பவர்களுக்குச் சொல்லப்படுவதில்லை. ஒரே மாதிரியாக உடைகள் அணிவிக்கப்பட்டு அணிவகுப்பில் நிறுத்தப்படும் அய்வருக்கும் ஒருவரையொருவர் முன்பே தெரிந்திருக்கக்கூடாது. குற்றத்தால் பாதிக்கப்பட்ட தரப்புடனோ அல்லது குற்றவாளியை அடையாளம் காட்ட இருப்பவருடனோ இவர்களுக்கு எந்தத் தொடர்பும் இருந்திருக்கக் கூடாது. முக்கியமாக இந்த நபர்கள் குற்றம் நடந்த எல்லைப் பிரதேசத்திற்கு அப்பால் வசிப்பவர்களாக இருக்க வேண்டும். அணிவகுப்பில் இருக்கும் அய்ந்து நபர்களுக்கும் இலக்கம் கொடுக்கப்படும். சாட்சி இவர்களைப் பார்வையிட்டு எந்த இலக்கமுடையவர் குற்றவாளி என நீதிபதியிடம் இரகசியமாக் கூறுவார். திரும்பத் திரும்ப மூன்றுதடவை இந்த அணிவகுப்பு நடைபெறும். ஒவ்வொரு தடவையும் உடைகளும் இலக்கங்களும் மாற்றப்படும். முதல் அணிவகுப்பு நடந்தபோது, டேவிட்டுக்கு நீலக் காற்சட்டையும் வெள்ளைச் சட்டையும் கறுப்புக் காலணிகளும் காவல்துறையால் தனியறையில் வழங்கப்பட்டன. அவற்றை அணிந்ததுகொண்டதும் 5-ஆம் இலக்கம் அவரது சட்டையில் குத்தப்பட்டது. அவரை அதிகாரிகள் அணிவகுப்பு அறைக்கு அழைத்துச் சென்றபோது, அங்கிருந்த சுவரோடு வரிசையாக ஏற்கனவே நான்குபேர் நின்றிருந்தார்கள். அவர்களோடு டேவிட்டும் நிறுத்தப்பட்டார். அணிவகுப்பின் போது உடலை அசைக்கவோ முகத்தில் எந்தவிதப் பாவனையையும் காட்டவோ கூடாது என டேவிட் பலமுறை காவல்துறையால் அறிவுறுத்தப்பட்டிருந்தார். உண்மையில், சுவரில் புதைந்திருந்த அய்ந்து பொம்மை முகங்கள் போலவே அங்கே இவர்கள் இருந்தார்கள். அந்தக் காட்சி டேவிட்டுக்குப் பெரிய பதற்றத்தை உண்டாக்கிற்று. அவரது மனம் பல்வேறு உணர்ச்சிகளால் கொந்தளித்துக்கொண்டிருந்தது. கால்கள் தரையிலிருந்து வழுவி உடல் சரிந்துவிடப் போவது போல அவர் உணர்ந்தார். எனினும், எந்த உணர்ச்சியையும் காட்டாது முகத்தைக் கறுப்புக் காகிதம் போல வைத்திருந்தார். இவர்களுக்கு எதிரே ஒரு கண்ணாடிச் சுவர் இருந்தது. அந்தச் சுவருக்கு அப்பால் இப்போது ஒரு முதிய வெள்ளைக்காரர் தோன்றினார். அவர்தான் குற்றவாளியை அடையாளம் காட்டப் போகிறவர். அந்த முதியவர் அய்ந்து முகங்களையும் பார்ப்பதற்கு நீண்ட நேரத்தை எடுத்துக்கொண்டார். காவல்துறை தலைமையத்தில் கையெழுத்துப் போட்டுச் சம்பளத்தை வாங்கிக்கொண்டு வரும்போது, பெரும் மன உளைச்சலில்தான் டேவிட் வெளியே வந்தார். நேரே மதுச்சாலைக்குச் சென்று மூக்கு முட்டக் குடித்தார். பின்பு ஒரு பை நிறைய மிட்டாய்களை வாங்கிக்கொண்டு போதையில் தள்ளாடியடியே ரயிலைப் பிடித்துத் தனது அறைக்கு வந்து சேர்ந்தார். அவரது அறை பாரிஸின் புறநகரில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்தது. அந்த அறை ஒரு குப்பைத் தொட்டி போலத்தான் இருக்கும். அறைக்கு வந்ததும் உடைகளைக் கூட மாற்றாமல், உடைந்து கிடந்த கட்டிலில் டேவிட் குப்புறப் படுத்துக்கொண்டார். கட்டில் அங்குமிங்குமாக ஆடிக்கொண்டிருந்தது. அவரது மூளையின் இருள் மடிப்புகளுக்குள் எரிந்துகொண்டிருந்த தீ அவரில் இப்போது முழுமையாகப் பற்றிக்கொண்டது. சுவரில் முகங்கள் என்ற படிமம் அவரைப் பெருத்த அச்சத்திற்குள் வீழ்த்தியது. முள்ளிவாய்க்காலின் மொட்டைச் சுவரில் வரிசையாக இருந்த அய்ந்து முகங்கள் இங்கே அடையாள அணிவகுப்பில் இருந்ததுபோல மரத்துப்போய் இருக்கவில்லை. ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு உணர்ச்சியைக் காட்டின. ஒருமுகம் பிரார்த்தித்தது. மறுமுகம் கெஞ்சியது. இன்னொரு முகம் அழுதது, அடுத்த முகம் கசப்பைப் காட்டியது. கடைசி முகம் வேதனையோடு புன்னகைத்தது. அந்த முகங்களில் பெற்றோல் ஊற்றப்பட்டபோது, முகங்கள் ஒருசேரக் கண்களை மூடிக்கொண்டன. நிரம்பிய மதுபோதையில் இருந்த இராணுவவீரன் தீப்பந்தத்தை எடுத்துக்கொண்டு அய்ந்து முகங்களையும் நெருங்கும்போது அவனின் உதடுகள் ஒரு சிங்களப் பாடலை முணுமுணுத்ததை அந்த அய்ந்து முகங்களும் கேட்டிருக்கலாம். ஒவ்வொரு முகத்திலும் அந்த இராணுவவீரன் கொள்ளி வைத்ததும் எழுந்த கூட்டு ஓலத்தின் போதுகூட அவன் பாடலை முணுமுணுப்பதை நிறுத்தவில்லையே. தீ வைக்கப்பட்டதும் ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு திசையாக ஓடிச் செல்லும் என்றுதான் இராணுவத்தினர் நினைத்திருக்க வேண்டும். ஓடுபவர்களின் கால்களில் துப்பாக்கியால் சுடுவதற்கு அவர்கள் தயாராக நின்றார்கள். ஆனால், தீ வைக்கப்பட்டதும் சொல்லி வைத்ததுபோல அந்த அய்ந்து நிர்வாண உடல்களும் ஒரு துயர நடனக் காட்சி போல அசைந்து ஒன்றையொன்று தழுவிக்கொண்டே, அய்ந்து முகங்களும் ஒருமுகமாகி எரிந்தன. கடைசியில் பின்னியிருந்த அய்ந்து கரிக்கட்டைகள் எஞ்சின. அவற்றை இராணுவத்தினரின் நாய்கள் எந்தத் தடயமுமில்லாமல் தின்று முடித்தன. சில வருடங்கள் கழித்துக் காவல்துறையிடமிருந்து மீண்டுமொரு அழைப்பு டேவிட்டுக்கு வந்தது. முதலில் போக வேண்டாம் என்றுதான் நினைத்தார். ஆனால், அவருக்குப் பணம் தேவைப்பட்டது. இந்தமுறை சுவரோடு நிறுத்தப்பட்டபோது, டேவிட் பச்சைச் சட்டையும் வெள்ளைக் காற்சட்டையும் அணிந்து முகத்தை மழுங்கச் சிரைத்திருந்தார். அந்த அணிவகுப்பில் 1-ஆம் இலக்கம் டேவிட்டுக்குக் கொடுக்கப்பட்டது. சாட்சி ஒரு கருப்புப் பெண். அவள் தனது முகத்தை மறைத்திருந்தாள். சுவரில் இருக்கும் பொம்மை முகங்கள் டேவிட்டை அச்சப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. இப்போதெல்லாம் அவர் அச்சத்தைத் தின்று அச்சத்தைக் குடித்து வாழ்க்கிறார். அச்சம் மெல்லிய மனநோயாக மாறிக்கொண்டிருக்கிறது. மூன்றாவது தடவையாக அவர் காவல்துறைத் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டபோது, அவருடைய அகதி வழக்கு விசாரணை முடிவுற்றுத் தீர்ப்புக்காகக் காத்திருந்தார். இந்த முறை அகதி விஸா கிடைத்துவிடும் என்று டேவிட்டின் வழக்கறிஞர் உறுதியாகச் சொல்லியிருந்தார். எனவே, காவல்துறையோடு நெருக்கம் வைத்திருப்பது நல்லது என நினைத்துப் போனதுதான் அவரை உயிர் ஆபத்தில் கொண்டுவந்து நிறுத்தியது. இந்தமுறை சாட்சியாக வந்தவர் ஒரு நடுத்தர வயதுச் சீக்கியர். அவரும் நீண்ட நேரமாகச் சுவர் முகங்களைப் பார்த்தார். அந்தச் சீக்கியரை டேவிட் மறுபடியும் சந்திக்க நேரிட்டது. அந்த அணிவகுப்பு முடிந்து ஒரு வாரத்திற்குப் பிறகு டேவிட்டுக்கு அகதி விஸா கிடைத்தது. வேலை தேடித் திரிந்துவிட்டு அவர் தனது அறையை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தபோது, தன்னை ஒரு வெள்ளை வேன் பின்தொடர்வது போல உணர்ந்தார். டேவிட் வேகமாக நடந்து அடுக்குமாடிக் குடியிருப்பை நெருங்கியபோது, அவருக்குப் பின்னால் வந்த வேன் சட்டென நிறுத்தப்பட்டது. வேனில் இருந்து அந்தச் சீக்கியர் குதித்து இறங்கி ஓடிவந்து டேவிட்டின் சட்டையைப் பிடித்துக்கொண்டு கூச்சலிட்டார். “வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த எனது சின்னஞ்சிறு மகளை நீதான் கடத்திச் சென்று கொன்றாய். நான் ஜன்னல் வழியாக உன்னைப் பார்த்தேன். முட்டாள் காவல்துறை உன்னை விட்டுவிட்டது. ஆனால் நான் விடமாட்டேன்.” டேவிட் திகைத்துப் போய்விட்டார். குடியிருப்புவாசிகள் அங்கே கூடிவிட்டார்கள். “இவன் சிறுமிகளை நாசம் செய்து கொல்பவன்” என்று அந்தச் சீக்கியர் திரும்பத் திரும்பக் கூச்சலிட்டார். “இல்லை அய்யா… நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள். நான் அடையாள அணிவகுப்பில் கலந்துகொள்ளக் காவல்துறையால் அழைக்கப்பட்டவன்” என்று டேவிட் கெஞ்சினர். இதற்குள் யாரோ காவல்துறையை அழைத்துவிட்டார்கள். அவர்கள் வந்து சீக்கியரை எச்சரித்து விலக்கிவிட்டபோது கூட “உன்னைக் கொல்லுவேன்” எனச் சொல்லியவாறேதான் சீக்கியர் அங்கிருந்து சென்றார். குடியிருப்புவாசிகளில் பலர் டேவிட்டைச் சந்தேகத்துடன் பார்ப்பது போலவே டேவிட் உணர்ந்தார். குடியிருப்பு முற்றத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் சிறார்களுக்கு மிட்டாய் கொடுப்பது டேவிட்டின் வழக்கம். இலங்கையிலிருக்கும் தன்னுடைய மூன்று பெண் குழந்தைகளின் முகத்தைத்தானே இந்தச் சிறுமிகளிடம் அவர் பார்த்தார். இனி எந்த முகத்தோடு அவர் சிறுமிகளுக்கு மிட்டாய் கொடுப்பார்! இவர் கொடுத்தாலும் சிறுமிகள் வாங்க மாட்டார்களே. மூன்று நாட்களாக அவர் அறையைவிட்டு வெளியே வரவேயில்லை. நான்காவது நாள் டேவிட் காவல்துறை தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டபோது மிகுந்த பதற்றத்துடனேயே சென்றார். அந்தச் சீக்கியர் விடுத்த கொலை மிரட்டல் ஏற்கனவே பல வருடங்களாக மன உளைச்சலிலும் அச்சத்திலும் இருந்த அவரது நடுமூளையில் கூரிய ஆணியாக இறங்கியிருந்தது. காவல்துறை தலைமையகத்தில் அந்தச் சீக்கியரும் இருந்தார். டேவிட்டுக்கு முன்பாகவே அந்தச் சீக்கியரிடம் காவல் அதிகாரி “இந்த மனிதர் காவல்துறைக்கு நீண்டகாலமாக உதவி செய்பவர். இவர் சந்தேக நபர் கிடையாது. நீங்கள் அடையாள அணிவகுப்பில் தவறாக இவரை அடையாளம் காட்டியிருக்கிறீர்கள்” எனச் சொன்னார். “எனது கண்கள் ஒருபோதும் பொய் சொல்லாது” என்றார் அந்தச் சீக்கியர். “நீங்கள் மறுபடியும் இந்த மனிதரைத் தொந்தரவு செய்தால் உங்கள் மீது வழக்குப் பதிவு செய்வேன்” எனக் காவல் அதிகாரி சீக்கியரை எச்சரித்தார். அப்போது அந்தச் சீக்கியர் டேவிட்டின் கண்களைக் கூர்மையாகப் பார்த்துக்கொண்டே இகழ்ச்சியான புன்னகையொன்றை வீசியபோது, உண்மையில் டேவிட் அச்சத்தால் உயிரோடு செத்துப்போனார். அவரது மூன்று குழந்தைகளதும் முகங்கள் அவரது இருதயத்தில் வரிசையாகத் தோன்றின. அவரது கண்களில் நீர் கொப்பளித்துச் சிதறியது. தன்னுடைய அறை இருக்குமிடம் சீக்கியருக்குத் தெரிந்திருப்பதால், அறையில் இருப்பதற்கே டேவிட் அஞ்சினார். சீக்கியரின் இகழ்ச்சியான புன்னகை ஒரு பளபளக்கும் கூரிய கத்தி போல அவருக்குத் தோன்றியது. அறையைக் காலி செய்துவிட்டுப் புதிய இருப்பிடம் தேடலாம் என்றால் பணத்திற்கு வழியில்லை. ஆனால், உலகத்தின் எந்த மூலையில் ஒளிந்துகொண்டாலும் சீக்கியரின் கூரிய பார்வை தன்னைக் கண்டுபிடித்துவிடும் என அஞ்சினார். நகரத்தில் அவர் வேலை தேடித் திரிந்தபோது, எங்கேயாவது சீக்கியத் தலைப்பாகை தென்படுகிறதா என்பதே அவரது முதல் கவனமாக இருந்தது. அவ்வாறு தலைப்பாகையோடு யாரைப் பார்த்தாலும் உடனேயே அங்கிருந்து நழுவிச் சென்று குறுக்குச் சந்துகளுக்குள் புகுந்து மறைந்து போனார். ஆனால், பிரான்ஸில் இருக்கும் எல்லாச் சீக்கியர்களும் தலைப்பாகை அணிவதில்லை என்பதையும் அவர்களில் சிலர் மழித்த முகத்தோடு அய்ரோப்பியர்களின் சாயலில் இருப்பதையும் அவர் அறிந்தபோதுதான் தன்மீதும் காவல்துறை மீதும் எல்லாவற்றின் மீதும் அவர் நம்பிக்கையை இழந்தார். தன்னுடைய மரணம் நெருங்கி வருவதை அவர் தெளிவாக உணர்ந்துகொண்டார். மதிய நேரத்தில் லூவர் அருங்காட்சியகத்திற்கு அருகேயுள்ள உணவகங்களில் வேலை கேட்டுத் திரிந்துவிட்டு, எப்போதும் போல ஏமாற்றத்துடன் அருங்காட்சியத்தின் வெளி வாசலருகே நின்றிருந்த டேவிட் தனது இடுப்பின் இடதுபுறத்தில் சுருக்கென வலி தோன்றுவதை உணர்ந்து குனிந்து பார்த்தார். இடுப்பிலிருந்து பலூன் போல ஏதோவொன்று ஊதிக்கொண்டு குபுகுபுவென வெளியே வந்தது. அது அவரது குடல். இரண்டு கைகளாலும் குடலை எந்தியவாறே கீழே விழுந்துவிட்டார். அவரைக் கத்தியால் குத்தியவன் அவரை நோக்கிக் குனிந்து எச்சிலைக் கூட்டி அவரது முகத்தில் உமிழ்ந்தான். அவனது முகத்தை ஒருபோதும் டேவிட்டால் மறக்க முடியாது. தலைமுடி ஒட்டவெட்டப்பட்டு, மழுங்கச் சிரைக்கப்பட்ட முகத்துடன் இருந்தான். அவனுக்கு இருபது வயது இருக்கும். அவனது கண்கள் டேவிட்டைப் பார்த்து இழிவாகப் புன்னகைத்த சீக்கியரின் கண்கள் போலவே இருந்தன. மருத்துவமனையில் டேவிட் ஒன்றரை மாதம் இருந்துவிட்டுத் தனது அறைக்குத் திரும்பியதற்குப் பின்னர் முறை வைத்து மதியத்தில் இரண்டு மணிநேரமும் அதிகாலையில் இரண்டு மணிநேரமும் மட்டுமே தூங்கினார். அது கூட அரை உறக்கம்தான். எந்த நேரமும் தான் கொலை செய்யப்படலாம் என அவர் அஞ்சிக் கிடந்தார். ‘சாவு என்பது ஒரு கடவுள் போன்றது’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். வெளியே செல்லும்போது ஒவ்வொரு முகத்தையும் உற்றுப் பார்த்து விலகி நடந்தார். முதலில் சீக்கிய முகங்களுக்கு அஞ்சியவர் இப்போது உலகிலுள்ள எல்லா முகங்களுக்கும் அஞ்சினார். சுவரில் ஒருமுகம் வரையப்பட்டிருந்தால் கூட அந்தச் சுவரிலிருந்து அச்சத்தோடு விலகி நடந்தார். கொல்லப்பட்ட அந்தச் சீக்கியச் சிறுமியின் மூத்த சகோதரனே டேவிட்டைக் குத்தியிருந்தான். மூன்று மாதங்களுக்குப் பின்பாக அந்த இளைஞன் ஸ்பெயினில் வைத்துக் கைது செய்யப்பட்டுப் பாரிஸுக்குக் கொண்டுவரப்பட்டான். இந்த முறை கண்ணாடிக்கு இந்தப் பக்கமாகச் சாட்சியாக டேவிட் இருந்தார். எதிரே சுவரில் இருந்த அய்ந்து முகங்களை நிமிர்ந்து பார்க்கவே அவர் அச்சப்பட்டுக் கண்களை மூடியிருந்தார். நீதிபதியும் காவல்துறை அதிகாரிகளும் பெரும் பிரயத்தனத்துடன் டேவிட்டுக்குத் தைரியம் ஊட்டினார்கள். உண்மையில் அவர்களது தொந்தரவாலேயே டேவிட் கண்களைத் திறந்தார். அவரது உள்ளம் அச்சத்தால் இருண்டே இருந்தது. எதிரே சுவரில் ஒரே மாதிரியாக அய்ந்து முகங்கள். டேவிட்டால் அய்ந்து விநாடி கூட அந்த முகங்களைத் தைரியமாகப் பார்க்க முடியவில்லை. எனினும், தன்னைக் குத்திய இளைஞனை டேவிட் மூன்று முறையும் சரியாகவே அடையாளம் காட்டினார். தான் அடையாள அணிவகுப்பில் கலந்துகொள்ளவோ சாட்சியாகவோ காவல்துறைத் தலைமையத்திற்கு வருவது இதுவே கடைசி முறை என நினைத்துக்கொண்டு அங்கிருந்து திரும்பினார். சீக்கிரமே தெற்குப் பிரான்ஸிலுள்ள சிறு கிராமத்திற்குக் குடிபெயர்ந்து சென்றுவிட்டார். அந்தக் கிராமத்தில் ஒரேயொரு தென்னாசியர் கூடக் கிடையாது. அங்கே விவசாயப் பண்ணையொன்றில் நல்ல வேலையும் கிடைத்தது. சீக்கிரமே மனைவி, குழந்தைகளைப் பிரான்ஸுக்கு அழைத்துக்கொண்டார். டேவிட் அச்சத்திலிருந்து மெதுவாக வெளியே வந்துகொண்டிருந்த காலத்தில்தான் காவல்துறை டேவிட்டை மறுபடியும் அடையாள அணிவகுப்பில் நிறுத்தியிருக்கிறது. இம்முறை அவருக்கு 3-ஆம் இலக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. சுவரோடு நிறுத்தப்பட்டிருந்த அய்ந்து முகங்களும் ஒரேமாதிரியான தோற்றத்துடனும் தாடியோடும் உடைகளோடும் அய்ம்பது வயதை நெருங்கியவர்களாகவும் இருந்தார்கள். நடுமுகம் டேவிட்டுடையது. கண்ணாடிச் சுவருக்கு அந்தப் பக்கத்தில் சாட்சி வரும்போதே டேவிட் சாட்சியின் முகத்தை அடையாளம் கண்டுவிட்டார். அந்த முகம் முள்ளிவாய்க்காலில் பாதிரியார் செபமாலைநாதருடன் இராணுவத்திடம் சரணடைந்து சுவரோரமாக நிர்வாணமாக நிறுத்தப்பட்டிருந்த ஆறாவது முகம். அதிகாரி குலத்துங்கேவால் கடைசி நேரத்தில் காப்பாற்றப்பட்ட முகம். நடந்த யுத்தக் குற்றத்திற்கு ஒரே சாட்சி. அந்தச் சாட்சி எந்தத் தடுமாற்றமும் இல்லாமல் அணிவகுப்பின் நடுமுகத்தையே பார்த்துக்கொண்டிருந்தது. அந்தச் சாட்சியின் முன்னே இரண்டு தடவைகள் அணிவகுப்பு நடந்து முடிந்து மூன்றாவது தடவையாக டேவிட் அணிவகுப்பில் நின்றிருந்தபோது, டேவிட்டின் உதடுகள் ஒரு சிங்களப் பாடலை முணுமுணுத்தன. மொட்டைச் சுவரோடு நிறுத்தப்பட்டிருந்த அய்ந்து முகங்களின் மீதும் டேவிட் பெற்றோலை ஊற்றிக் கொள்ளி வைத்தபோது ‘சாவு ஒரு கடவுள் போன்றது’ என்ற இந்தப் பாடல்தான் டேவிட்டின் நாவில் இருந்தது. (ஆனந்த விகடன் – ஜூலை 2025) https://www.shobasakthi.com/shobasakthi/2025/08/04/சுவர்-முகம்/?fbclid=IwQ0xDSwL9gi9leHRuA2FlbQIxMQABHudbGtZFYAu6hJv3wHzCCn6NODHXoaEHgJ5qf4i5ATO1AKFmzL11sxrNMJ_R_aem__IgadcQPKVZeVUMPtzadqA
-
வாழ்வோரும் இறந்தோரின் எலும்புகளும் நீதியையே, மாற்றத்தையே விரும்புகின்றன — கருணாகரன் —
வாழ்வோரும் இறந்தோரின் எலும்புகளும் நீதியையே, மாற்றத்தையே விரும்புகின்றன August 3, 2025 — கருணாகரன் — யாழ்ப்பாணம் – செம்மணிப்பகுதியில் அகழப்படும் மனிதப்புதைகுழிகளிலிருந்து இதுவரை(30.07.2025) 115 க்கு மேற்பட்டமனித எலும்புக்கூடுகள்(எச்சங்கள்) மீட்கப்பட்டுள்ளன. இவற்றில் பெண்கள், குழந்தைகள் அல்லது சிறார்களின் எலும்புத் தொகுதிகளும் இனங்காணப்பட்டுள்ளன. இதயத்தை உலுக்கும் விதமாக இருப்பது, இந்த எலும்புக்கூடுகளோடு குழந்தைகளின் பாற்புட்டிகளும் விளையாட்டுப்பொருட்களும் சேர்ந்து கிடப்பது. அகழ்வுப் பணிகள் தொடர்கின்றன. இன்னும் இன்னும் என்னென்னவெல்லாம் மீட்கப்படுமோ? என்று தெரியவில்லை. ஆனால், ஒன்றுமட்டும் உண்மை. இந்த மீட்பில் ஒரு கூட்டுக் கொலை நடந்திருக்கிறது என்பது நிரூபணமாகியுள்ளது. இருந்தாலும் இதையிட்டு அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் நாம் உடனடியாக வந்து விடமுடியாது. காரணம், இது முறைசார் ஆராய்ச்சிக்குரியது. முறையான ஆராய்ச்சிக்குப் பின்னரே தெளிவான முடிவுகளை- தீர்வை நோக்கிச் செல்லமுடியும். மட்டுமல்ல, சட்டம், நீதி, நீதிகோரல் எனப் பல அடுக்குகளோடு தொடர்புபட்டது. என்பதால் நிதானமாகவே இதைக் கையாள வேண்டும். இதுவரையில் மீட்கப்பட்ட எலும்புத் தொகுதிகள் சில உண்மைகளைச் சொல்லவிளைகின்றன. சம நேரத்தில் சில கேள்விகளையும் எழுப்புகின்றன. உண்மைகள்: 1. குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். செம்மணியில் பலர் கொன்று புதைக்கப்பட்டுள்ளனர் என்று நீண்டகாலமாகவே தெரிவிக்கப்பட்டு வந்த உண்மை நிரூபணமாகியுள்ளது. 2. மீட்கப்பட்டுள்ள எலும்புக்கூடுகளோடு அடையாளம் காணப்பட்டுள்ள உடை, பிள்ளைகளின் விளையாட்டுப்பொருட்கள் போன்றவை எந்தக் காலகட்டத்துக்குரியவை என்பதைச் சொல்கின்றன. அல்லது அவற்றை வைத்து காலகட்டத்தை ஓரளவு தீர்மானிக்கலாம். முறைசார் ஆய்வுகளுக்கு இவையும் வலுச்சேர்க்கக்கூடியன. ஆகவே கொலைகள் நடந்த காலத்தைத் தெளிவாக அடையாளம் காண முடியும். 3. இவை அரசியல் ரீதியான படுகொலைகள். 4. இந்தக் கொலைகளுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். 5. மிகப் பெரிய துயரம். மிகப் பெரிய அநீதி. மிகப்பெரிய அவலம். மிகக்கொடிய செயல். மனச்சாட்சியை உலுக்கும் இந்த விடயம். 6. கொல்லப்பட்டவர்களை வெறுமனே இறந்தவர்கள் என்ற கணக்கில் சேர்க்க முடியாது. அப்படிச்சேர்த்தால், அப்படிச் சேர்ப்பதற்கு அனுமதித்தால் அது கொல்லப்பட்டோருக்கு இழைக்கும் அநீதியாகும். கொலைகளுக்கு உடந்தையாகும். 7. இது மிக மோசமானமனித உரிமை மீறல் செயல். மக்களின் வாழும் உரிமை மறுதலிக்கப்பட்டுள்ளது. ஆகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை அரசாங்கமும் சர்வதேச சமூகமும் வழங்க வேண்டும். இப்படி இந்த உண்மைகளின் பட்டியல் நீள்கிறது. அடுத்த்தாக இது குறித்து எழுகின்ற கேள்விகள் – 1. இந்தப் புதைகுழிகளைக் குறித்து சமூகத்தின் புரிதல் என்ன? இந்தக் கேள்வி ஏன் எழுகின்றதென்றால், தினமும் மீட்கப்படும் எலும்புக்கூடுகள் வெறுமனே புள்ளிவிவரங்களாக முடிந்து விடுவதாகவே தெரிகிறது. அதைக் கடந்து, இவை சமூகத்தில் வேறு எத்தகைய உணர்வலைகளையும் ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை. அரசியற்கட்சிகள், ஊடகங்கள், மனிதஉரிமை அமைப்புகள், ஆர்வலர்கள் போன்ற தரப்புகளும் சரியான அவதானத்தைக் கொள்ளாமலே உள்ளன. அல்லது இது குறித்து எத்தகைய நிலைப்பாட்டை எடுப்பது? இந்தப்பிரச்சினையை எப்படிக்கையாள்வது என்பது தொடர்பில் அவற்றுக்குக் குழப்பங்கள் இருக்கலாம். ஆனாலும் இந்தத் தடுமாற்றமும் குழப்பமும் தாமதமும் ஏன்? 2. புதைகுழிகளில் மீட்கப்படும் என்புக்கூடுகள் சொல்லுகின்ற சேதிகளின் அடிப்படையில் நோக்கினால், இவற்றில் குடும்பங்களாகக் கொல்லப்பட்டிருக்கக் கூடிய சூழலும் உண்டு. அல்லது, தாய் அல்லது தந்தை அல்லது கொல்லப்பட்டோருடன் கூட இருந்த சிறுவர்கள், குழந்தைகளும் சேர்த்துக்கொலை செய்யப்பட்டிருக்கலாம். அப்படியென்றால், அது யார்? அதைக் கண்டறிவதில் ஏன் தாமதங்கள்? குடும்பங்களாகக் கடத்தப்பட்ட, கைது செய்யப்பட்ட, காணாமலாக்கப்பட்ட விவரங்களைத் தேடினால் இதைக் கண்டறியக்கூடியதாக இருக்கும். ஆனால், அப்படியான சம்பவங்கள் கடந்த காலத்தில் பெருமளவில் நடந்திருக்கிறதா? அதற்கான முறைப்பாடுகள் எங்காவது பதிவு செய்யப்பட்டுள்ளனவா? என்பது பற்றிச் சரியாகத் தெரியவில்லை. அப்படியில்லை என்றாலும், அவ்வாறு காணாமலாக்கப்பட்டோர் அல்லது கைது செய்யப்பட்டோர் பற்றி சம்மந்தப்பட்ட உறவினர்கள் எவராவது இப்போது கூட முறையிடலாம். விவரங்களை வெளியிடலாம். அது ஏன் நிகழாதிருக்கிறது? 3. இந்தப் புதைகுழி விடயம்1996 லிருந்து நீடிக்கிறது. அதாவது, செம்மணிப்பகுதியில் 600 க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டது. ஏறக்குறைய அது மெய்யென இன்றைய இந்த எலும்புத்தொகுதிகளின் மீட்புகள் உரைக்கின்றன. என்றால், இதைச் சர்வதேச மட்டத்திலும் உள்நாட்டிலும் நீதிக்கான கோரிக்கையாக ஏன் முன்னிறுத்த முடியாமலுள்ளது? 4. 100 க்கு மேற்பட்ட மனித எலும்புத்தொகுதிகளும் அவற்றோடான எச்சங்களும் மீட்கப்பட்டன என்ற சேதிக்கு அப்பால், இது தொடர்பாக அரசாங்கம் மேற்கொள்ளப்போகும் நடவடிக்கைகள் என்னவாக இருக்கவுள்ளது? இந்த அகழ்வுக்கு அரசாங்கம், நீதி அமைச்சின் வழியாக ஒரு தொகை பணத்தை உத்தியோகபூர்வமாக வழங்கியுள்ளது. என்றால், இந்த அகழ்வை அரசாங்கம் ஆதரிக்கிறது என்றே அர்த்தமாகும். அப்படியென்றால், அடுத்த கட்டமாக இதைப்பற்றிய முறைசார் ஆய்வுக்கும் அரசாங்கம் ஒத்துழைக்கும் எனத் தெரிகிறது. அந்த முறைசார் ஆய்வு சர்வதேச நிபுணத்துவத்துடன் நடக்குமா? உள்நாட்டு மட்டத்தில் நடக்குமா? என்பது கேள்வியே! சரி, அப்படித்தான் ஆய்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வந்தால், அடுத்த கட்டமாக இவற்றோடு தொடர்பான ஏனைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கும். முக்கியமாக கொலையாளிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் மீதான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இது எந்தளவுக்குச் சாத்தியமாகும்? இதைச்சாத்தியப்படுத்துவது எப்படி? அதில் எத்தகைய பங்களிப்புகளை – தூண்டல்களை – யாரெல்லாம் செய்யவேண்டும்? 5. செம்மணிப் புதைகுழியை மட்டும் கவனப்படுத்தப்பட வேண்டுமா? மன்னார், கொக்குத்தொடுவாய் மற்றும் கிழக்குமாகாணத்தில் பல்வேறு இடங்கள் என அடையாளம் காணப்பட்ட – சந்தேகிக்கப்படும் புதைகுழிகளைப் பற்றிய கரிசனைகள் எந்தளவுக்கு உள்ளன? அவற்றில் புதைக்குப்பட்ட உண்மைகளுக்கும் புதைக்கப்பட்டோருக்குமானா நீதி என்ன? அதை எப்படிப் பெறுவது? அதற்கான குரல்கள் ஏன் கூட்டாக முன்னெடுக்கப்படாமல் உள்ளன? 6. இந்த மாதிரியான புதைகுழிகளைக் குறித்து சிங்கள, முஸ்லிம், மலையக மக்களின் புரிதல் – அக்கறைகள் என்ன? சிங்கள, ஆங்கில ஊடகங்களின் கவனம் எப்படியுள்ளது? ஏன் இவை கவனிக்கப்படாமல் உள்ளன? அல்லது மந்தமாக இருக்கின்றன? 7. சர்வதேச சமூகம் என்று சொல்லப்படும் தரப்புகள் இவற்றைக் குறித்து எந்தளவுக்கு அக்கறை கொள்கின்றன? அந்த அக்கறையின் அளவும் பயனும் என்ன? இப்படிப் பல கேள்விகள்எழுகின்றன. இப்பொழுது நம்முன்னுள்ள பிரச்சினை, இந்த உண்மைகளை நாம் எப்படி முன்கொண்டு செல்லப்போகிறோம்? அதாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியாக இதை எப்படி மாற்றப்போகிறோம்? இரண்டாவது, இந்தக் கேள்விகளுக்கான பதிலை எப்படிக் காணப்போகிறோம்? இதற்கு ஏனைய தரப்புகளை எப்படி ஒருங்கிணைக்கலாம்? அதற்கான பொறிமுறைகள், செயற்பாட்டுத்திட்டங்கள் என்ன? போர் முடிந்து விட்டது. ஆட்சிகள்பல மாறி விட்டன. காலம் நீண்டு 15 ஆண்டுகள் கடந்து விட்டன. தீர்வுக்கான பரிந்துரைகள் பல தரப்புகளாலும் முன்வைக்கப்பட்டன. பல்வேறு யோசனைகள் பரிசீலிக்கப்பட்டன. ஆனாலும் துயரும் பிரச்சினைகளும் முடியவில்லை. போர் முடிந்தால் நாட்டின் பிரச்சினைகள் எல்லாம் தீரும் என்றே பெரும்பாலான மக்களும் நம்பினார்கள். அல்லது அப்படி நம்ப வைக்கப்பட்டனர். குறிப்பாக தென்பகுதி மக்களின் நம்பிக்கை அதுவாகவே இருந்தது. ஆனால், போர் முடிந்த பிறகும் பிரச்சினைகள் தீரவில்லை. எல்லாமே கொதிநிலையில்தான் உள்ளன. குண்டுகளும் துப்பாக்கிகளும் வெடிக்கவில்லை. கொலை மற்றும் உயிர் பற்றிய அச்சம் குறைந்துள்ளதே தவிர, இதற்கு அப்பால் வேறெதுவும் நடக்கவில்லை. பொருளாதார நெருக்கடி தணியவே இல்லை. அரசியற் பிணக்குகள் – அதிகாரப் போட்டிகள், அதிகாரப் பகிர்வுப் பிரச்சினைகள் அப்படியேதான் உள்ளன. அப்படியென்றால், அடிப்படையில் பெருங்கோளாறு இருக்கிறது என்றுதானே அர்த்தம்? உண்மையும் அதுதான். இலங்கையை மீட்க வேண்டுமானால், இலங்கையை சரியாக முகாமைத்துவம் செய்ய வேண்டும் என்றால், அடிப்படைகளைச் சரியாக்க வேண்டும். அடிப்படைகள் பல வழிகளிலும் தகர்க்கப்பட்டுள்ளன. அதைச் சரிப்படுத்தாத வரையில் யார் ஆட்சிக்கு வந்தாலும் மாற்றம் – முன்னேற்றம் – தீர்வு எதுவும் கிட்டப்போவதில்லை. செம்மணிப் புதைகுழி உள்ளிட்ட விடயங்கள் அப்படிச் சீர்ப்படுத்த வேண்டியவற்றில் ஒன்று. இப்படி ஒவ்வொன்றாகச் சீர்ப்படுத்தினால்தான் நாட்டில் மாற்றம் ஏற்படும். குறிப்பாக நீதியுணர்ச்சி வலுத்து, நடைமுறையாக வேண்டும். அரசியலில் நீதியுணர்ச்சி என்பதற்கு ஏராளம் வியாக்கியானங்கள் உண்டு. அப்படி ஒன்று இல்லை என்ற கருத்தும் உண்டு. ஆனாலும் சட்டமும் நீதியும் மக்களின் நம்பிக்கையோடும் நாட்டின் நலனோடும் சம்மந்தப்பட்டது. அதை நோக்கிச் செல்ல வேண்டும் என்றே செம்மணி என்புக்கூடுகளும் வலியுறுத்துகின்றன. ஆம், உயிரோடு உள்ளவர்கள் மட்டுமல்ல, இறந்தவர்களின் (கொல்லப்பட்டவர்களின்) எலும்புக்கூடுகளும் நீதியை – மாற்றத்தை – யே விரும்புகின்றன. அதுவே தேவை. https://arangamnews.com/?p=12224
-
வடக்கின் கல்வித் துறை பின்னடைய நிர்வாக பிரச்சனையே காரணம்!
வடக்கின் கல்வித் துறை பின்னடைய நிர்வாக பிரச்சனையே காரணம்! adminAugust 4, 2025 வட மாகாணத்தில் கல்வி நிலைமை பின்தங்கியுள்ளமைக்கு நிர்வாக பிரச்சனையே காரணமாக இருப்பதாக தெரிவித்த, பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய விரைவில் கல்வி நிர்வாக அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடி தீர்வினை காண இருப்பதாகவும் தெரிவித்தார். வவுனியா மாவட்ட கல்வி நிலைமை மற்றும் கல்வி மறு சீரமைப்பு தொடர்பான தெளிவூட்டல் நிகழ்வு நேற்று (03.08.25) வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. பிரதமரும், கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் வவுனியா மாவட்ட கல்விசார் திணைக்களங்கள் மற்றும் பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்தது. ஆசிரியர்கள், அதிபர்கள் பற்றாக்குறை அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஆசிரியர் தொழிற்சங்கங்கள், அதிபர் தொழிற்சங்கங்கள், கல்வி நிர்வாக அதிகாரிகள் சங்கம் மற்றும் பாடசாலை மட்டங்களில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அதிபர்கள், ஆசிரியர்கள் சிலரும் கருத்துக்களை தெரிவித்து இருந்தனர். இக்கருத்துக்களை செவிமடுத்த பிரதமர் கருத்து தெரிவித்த போது, “ஆசிரியர் நியமனங்கள் கடந்த ஐந்து வருடங்களாக வழங்கப்பட முடியாமல் இருப்பதற்கு அபிவிருத்தி உத்தியோதர்களாக உள்வாங்கப்பட்டவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டதன் பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அவ் வழக்கு விசாரணையில் இருப்பதே காரணம். விரைவில் இதற்கான தீர்ப்பு கிடைக்கும் என நம்புகின்றேன். அதன் பின்னர் ஆசிரியர் நியமனங்களை வழங்கவுள்ளோம். 2 “கல்வி மாணவர்களுக்கானது. அதனை நாம் சரியாக வழங்க வேண்டும். 50 மாணவர்களுக்கு குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாக கவனம் செலுத்தப்படும். வட மாகாணத்தில் கல்வி நிலைமை பின்தங்கியுள்ளமைக்கு நிர்வாக பிரச்சனையே காரணம். விரைவில் கல்வி நிர்வாக அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடி தீர்வினை காண இருக்கின்றேன் எனத் தெரிவித்தார். https://globaltamilnews.net/2025/218785/
-
பிரித்தானிய நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்ற நூல்களை வன்பிரதியாகப் யாழ். நூலகத்திற்கு பெற்றுக்கொள்ள நடவடிக்கை!
பிரித்தானிய நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்ற நூல்களை வன்பிரதியாகப் யாழ். நூலகத்திற்கு பெற்றுக்கொள்ள நடவடிக்கை! adminAugust 4, 2025 யாழ்ப்பாண நூலகம் தொடர்பில் தான் முன் வைத்த வேண்டுகோள்களை செயற்படுத்தத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ள பிரதமர் பூரண சம்மதத்தை வழங்கியுள்ளார் என யாழ் . மாநகர சபை உறுப்பினர் சு. கபிலன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய பிராந்தியங்கள் சார்ந்து 1800 கள் தொடக்கம் 1950 வரையான காலப்பகுதிக்குட்பட்டு வெளியிடப்பட்ட அல்லது சேகரித்து பாதுகாக்கப்பட்டு தற்போது பெரிய பிரித்தானியாவினுடைய நூலகத்தில் இலத்திரனியல் பிரதியாக்கம் செய்யப்பட்டுள்ள நூல்களை யாழ்ப்பாண நூலகத்திலிருந்தும் கையாளக்கூடிய வகையில் இணையவழியில் இணைப்பித்தல். மற்றும் யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய பிராந்தியங்கள் சார்ந்து 1800 கள் தொடக்கம் 1950 வரையான காலப்பகுதிக்குட்பட்டு வெளியிடப்பட்ட அல்லது சேகரித்து பெரிய பிரித்தானியாவினுடைய நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்ற நூல்களை வன்பிரதியாகப் பெற்றுக்கொள்ளல் அல்லது வன்பிரதியாக்கம் செய்து பெற்றுக்கொள்ளல். அத்துடன் நெதர்லாந்து பல்கலைக்கழகங்களிலும் எமது நூல்கள் இருப்பதாக அறியக்கிடக்கிறது. அவை தொடர்பிலும் உரிய தகவல்கள் ஆதார பூர்வமாகக் கிடைக்கப்பெற்றதும் கவனம் செலுத்தப்படும். இவற்றின் மூலமாக எமது யாழ்ப்பாண நூலகத்தில் 1981 ல் எரித்து அழிக்கப்பட்ட சில அரிய நூல்கள் மற்றும் ஆவணங்களை மீளப்பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்திருந்த பிரதமரிடம் கோரியுள்ளார். https://globaltamilnews.net/2025/218779/
-
மதில்மேல் குப்பை: ஓரு கூட்டுப் பொறுப்பு - நிலாந்தன்
மதில்மேல் குப்பை: ஓரு கூட்டுப் பொறுப்பு - நிலாந்தன் நான் வசிக்கும் பகுதியில் கிழமை தோறும் கழிவகற்றும் வண்டி வரும் நாட்களில் சில வீட்டு மதில்களில் குப்பைப் பைகளை அடுக்கி வைத்திருப்பார்கள். அல்லது மதிலில் ஒரு கம்பியை கொழுவி அந்த கம்பியில் குப்பைகளைக் கழுவி வைத்திருப்பார்கள். ஏனென்றால்,குப்பை அகற்றும் வண்டி உரிய நேரத்துக்கு வருமா வராதா என்ற சந்தேகம். அது வரத் தவறினால் நிலத்தில் வைக்கும் குப்பைகளை நாய்கள் குதறிவிடும். கட்டாக்காலி நாய்களை இன்றுவரை கட்டுப்படுத்த முடியவில்லை. இது யாழ் பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள ஒரு பகுதி. இன்னொரு பகுதி குரு நகரில். “தாங்கள் தொழில் செய்யும் கடலிலேயே அப்பகுதி மக்கள் கழிவுகளை கொட்டுகிறார்கள்” என்று ஒரு மதகுரு தெரிவித்தார். அப்பகுதியில் சூழலில் செயற்பாடுகளில் ஈடுபடும் ஒருவர் சொன்னார் குருநகர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் உள்ள கடலில் இருந்து தொடங்கி குறிப்பிடத்தக்களவு தூரம் அவ்வாறு கடற்கரையில் பிளாஸ்டிக் கழிவுகளும் உட்பட அனைத்து விதமான கழிவுகளையும் காணக்கூடியதாக இருக்கும் என்று. சில சமயம் செத்த நாயை கொண்டு வந்து போடுகிறார்கள். சில சமயம் பழைய ஆடைகள் கடலில் மிதக்கும். இவற்றோடு வழமை போல பிளாஸ்டிக் கழிவுகளும் காணப்படும் என்று. மேற்குறிப்பிட்ட மதகுரு சொன்னார், “கரையோரக் குடியிருப்புகளில் வீடுகளுக்கு முன்னாலும் நிலம் இல்லை பின்னாலும் நிலம் இல்லை. எனவே வீட்டுக் கழிவுகளை அவர்கள் எங்கே கொட்டுவது? சாப்பாட்டுக் கழிவுகளை வீட்டுக்குள் வைத்தால் சில நாட்களில் அவை புழுக்கத் தொடங்கி விடும். எனவே இந்த கழிவுகளை அகற்றுவதற்கு ஒரு பொருத்தமான வழிமுறை வேண்டும். ஒவ்வொரு கிழமையும் ஒரு நாள் தான் கழிவு அகற்றும் வண்டி வரும் என்றால் ஏனைய நாட்களில் கழிவுகளை எங்கே கொட்டுவது? ஏனென்றால் ஒவ்வொரு நாளும் சாப்பாட்டுக்கழிவு வருந்தானே?” என்று. ஒவ்வொரு நாளும் கழிவை அகற்றுவதற்கு போதிய வாகனங்கள் இல்லை என்று மாநகர சபை நிர்வாகம் கூறுகின்றது. மாநகர சபையில் மட்டுமல்ல இந்த பிரச்சினை உள்ள எல்லா உள்ளூராட்சி சபைகளிலும் அதுதான் நிலைமை. போதிய அளவு வாகனங்கள் இல்லை வளங்களும் இல்லை. கழிவை முகாமை செய்வதற்கு போதிய அளவுக்கு பொருத்தமான வளங்கள் இல்லை என்பது ஒரு புறமிருக்க, கழிவை முகாமை செய்வது என்பது தனிய உள்ளூராட்சி சபையின் பொறுப்பு மட்டுமல்ல. அது மக்களுடைய பொறுப்பும் தான் என்று அண்மையில் சாவகச்சேரியைச் சேர்ந்த ஒரு செயற்பாட்டாளர் முகநூலில் எழுதியிருந்தார். சுத்தமாக இருப்பது ஒர் ஒழுக்கம். தமது சூழலை சுத்தமாக வைத்திருப்பது என்பது ஒரு பொறுப்பு; ஒரு பண்பாடு. வட்டாரங்கள்தோறும் கழிவை சேகரிக்கும் மையங்களை உருவாக்க வளங்கள் இருக்கின்றதோ இல்லையோ அவ்வாறு உருவாக்கப்படும் மையங்களில் மக்கள் கழிவுகளை எவ்வாறு போடுகிறார்கள் என்றும் பார்க்க வேண்டும். அதற்கென்று வைக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் தொட்டிகளில் பக்குவமாகக் கழிவைக் கொண்டு போய்ப் போடுவது எத்தனை பேர்? பதிலாக வாகனத்தில் நின்றபடியே தொட்டியை நோக்கி அதை வீசுபவர்கள் எத்தனை பேர்? இதற்கு முன்பு அவ்வாறு கழிவு சேகரிக்கும் மையங்களை உருவாக்கிய பொழுது அந்தப் பகுதியையே குப்பையாக்கிவிட்டார்கள். யாழ்ப்பாணத்தில் முறையற்ற கழிவகற்றல் உயிர் பல்வகமைக்கு ஆபத்து விளைவிக்கும் என்கிறார் யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் கணபதி கஜபதி. இது ஒரு சமூகப் சமூகப் பொறுப்பு. தன் வீட்டுக்கு குப்பையை மற்றவரின் தலையில் கொட்டுவது.தான் சுத்தமாக இருந்தால் போதும் மற்றவர்கள் எப்படியும் அழுகி நாறட்டும் என்ற சிந்தனை. இந்த சுயநலம் இருக்கும்வரை ஒருவர் மற்றவரை நேசிக்க முடியாது. ஒரு சமூகமாகத்தானும் திரள முடியாது. இதற்கு சட்டம் இயற்றி கமராவைப் பூட்டி எத்தனை நாட்களுக்கு கண்காணிப்பது? தண்டனைகளின் மூலம் மட்டும் சமூகப் பொறுப்பை, கழிவு முகாமைத்துவப் பண்பாட்டை உருவாக்க முடியுமா? அண்மையில் பொது இடங்களில் வெற்றிலை துப்பியதற்காக ஏழு பேர் கைது செய்யப்பட்டதாக ஒரு தகவல் வெளிவந்தது. இதுதொடர்பாக ஏற்கனவே நான் எழுதியிருக்கிறேன். பெரும்பாலான சந்தைகளில் மூலைகளில் வெற்றிலை துப்பல்களை பார்க்கலாம். அது மட்டுமல்ல வாகனம் ஓடிக் கொண்டிருக்கும் பொழுதே வாகனத்தின் சாரதி அல்லது பேருந்தில் பயணிப்பவர்கள் வெற்றிலையைத் துப்புவார்கள் அது காற்றில் பறந்து வந்து உங்களுடைய முகத்தில் படும். எச்சில் நெடி அன்றைய நாளையே அருவருப்பானதாக ஆகிவிடும். இங்கே இந்த இடத்தில், இலங்கைத் தீவின் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவுக்கு கிடைத்த ஒரு அனுபவத்தைக் குறிப்பிட வேண்டும். பிரேமதாச ஊரில் அதிகம் பிரபல்யமாகாத ஒருவராக இருந்த காலத்தில் தன்னுடைய முதலாவது நேர்முகத் தேர்வுக்காக புதிய ஆடைகளை அணிந்து கொண்டு பேருந்தில் ஏறுவதற்கு மத்திய பேருந்து நிலையத்துக்கு வந்திருக்கிறார். அங்கே நகர்ந்து கொண்டிருந்த பேருந்தில் இருந்த ஒருவர் தன் வெற்றிலை எச்சிலை வெளியே துப்பியிருக்கிறார். அது பிரமதாசாவின் முகத்திலும் தலையிலும் சட்டை முழுவதிலும் பட்டிருக்கிறது. திகைத்துப்போன பிரேமதாச துக்கத்தோடு தாயாரிடம் திரும்பி ஓடி வந்திருக்கிறார். தாயார் மகனைத் தேற்றி நம்பிக்கையூட்டியிருக்கிறார். நீ முழுகிவிட்டு வா நான் இருப்பவற்றில் நல்ல உடுப்பை அயர்ன் பண்ணித் தருகிறேன் என்று கூறியிருக்கிறார். தாய் கொடுத்த உற்சாகத்தோடு வேறு ஓர் உடுப்பை அணிந்து கொண்டு நேர்முகத் தேர்வுக்கு போன பிரேமதாச அங்கே நூலக உதவியாளராக தெரிவு செய்யப்படுகிறார். அங்கிருந்துதான் அவருடைய அரசியல் வாழ்வு தொடங்குகிறது. பேருந்தில் பயணம் செய்பவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஜன்னலுக்கு வெளியே துப்புகிறார்கள். மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் துப்பிவிட்டுப் போகிறார்கள். அது காற்றில் பறந்து வந்து பின்னால் வருகிறவரின் முகத்தில் துர் நெடியோடு படியும். எவ்வளவு அருவருப்பு? அது இப்பொழுது தண்டனைக்குரிய குற்றம். தன் குப்பையை மற்றவர்களின் தலையில் கொட்டுவதும் குற்றம். தண்டனைகளால் மட்டும் அவ்வாறான சமூகப்பொறுப்பை பண்பாட்டை உருவாக்க முடியுமா? திருநெல்வேலி சந்தைக்குள் காறித் துப்பும் ஒருவர் தன் வீட்டுக்குள் அதைச் செய்ய மாட்டார். ஏனென்றால் அது அவருடைய சொந்த வீடு. தான் சுத்தமாக இருந்து கொண்டு மற்றவர்கள் வாழும் சூழலை அசுத்தமாக்குவது ஒரு நாகரிகம் அடைந்த மக்கள் கூட்டம் செய்கிற வேலையல்ல. கழிவை அகற்றுவது என்பதற்கு பதிலாக கழிவை முகாமை செய்வது என்று சிந்திப்பதே பொருத்தமானது என்று சமூகச் செயற்பாட்டாளராகிய செல்வின் கூறினார். கழிவு முகாமைத்துவத்தை வளர்ச்சியடைந்த நாடுகள் லாபகரமான ஒரு தொழிலாக மாற்றி விட்டன. அங்கெல்லாம் கழிவு விற்கப்படுகிறது; வாங்கப்படுகிறது; மீள சுழற்சிக்கு உள்ளாக்கப்பட்டு மீண்டும் விற்கப்படுகிறது. எனவே கழிவு முகாமைத்துவத்தை எப்படி வணிகப் பண்புடையதாக மாற்றலாம் என்று சிந்திக்கலாம். அது ஒரு கூட்டுப் பொறுப்பு. ஆனால் அந்த கூட்டுப் பொறுப்பை மக்களுக்கு உணர்த்துவது யார்? உள்ளூர்த் தலைவர்கள் உள்ளூர் முன்னுதாரணங்களாக மாறினால்தான் அவ்வாறு கூட்டுப் பொறுப்பைக் கட்டியெழுப்பலாம். உள்ளூர்த் தலைவர்கள் முதலில் பிரதேச சபைக்குள் தமது கூட்டுப் பொறுப்பை நிரூபிக்க வேண்டும். குறிப்பிட்ட உள்ளூராட்சி மன்றத்துக்குள் கட்சி வேறுபாடுகளைக் கடந்து முடிவெடுக்க வேண்டிய விடையங்களில் புதிய உள்ளூராட்சி மன்றங்கள் கூட்டுப் பொறுப்பை நிரூபிக்குமாக இருந்தால் மக்களிடமும் கூட்டுப்பொறுப்பை எதிர்பார்க்கலாம். குப்பை விடயத்தில் மட்டுமல்ல எல்லா விடயத்திலும் கூட்டுப் பொறுப்பை எதிர்பார்க்கலாம். தலைவர்கள் எவ்வழியோ மக்களும் அவ்வழி. https://www.nillanthan.com/7603/#google_vignette
-
‘சோமரத்ன ராஜபக்ச மனைவியின் கோரிக்கையை ஏற்று, அனுர தன்னை நிரூபிக்க வேண்டும்” மனோ
‘சோமரத்ன ராஜபக்ச மனைவியின் கோரிக்கையை ஏற்று, அனுர தன்னை நிரூபிக்க வேண்டும்” மனோ “..கிருஷாந்தி குமாரசுவாமி மட்டும் அல்ல, இன்னமும் பல நூற்று கணக்கானோர் கொலை செய்ய பட்டனர். இதை நான் 1998ம் வருடமே என் சாட்சியத்தில் சொன்னேன். இன்று ஐந்து அல்லது ஆறு மனித புதை குழிகள் கண்டு பிடிக்க பட்டுள்ளன. நான் சொன்னது உண்மை ஆகி உள்ளது. மொத்தமாக 250 முதல் 300 பேர் வரை சித்திரவதைக்கு உள்ளாகி கொன்று புதைக்க பட்டார்கள். இன்று தண்டனைக்கு உள்ளாகி இருக்கும் நானும், ஏனைய நால்வரும் மட்டும் இத்தனை பேரை கைது செய்து, சித்தரவதை செய்து, கொன்று, குழி வெட்டி, புதைக்க முடியுமா.?” “..யாழ்ப்பாணத்துக்கு செல்லும் பிரதான, சாலையில் அமைந்துள்ள, செம்மணி காவல் சாவடியில், பகல் நேரங்களில், அடையாளம் காட்ட படுவோர், உடன் கைது செய்ய பட்டு. இராணுவ ட்ரக்கில், ஏற்ற பட்டு, 7ம் இராணுவ படை தலைமையகத்துக்கு கொண்டு செல்ல பட்டு, விசாரணை என்ற பெயரில், சித்திரவதைக்கு உள்ளாக்க பட்டு, கொல்ல பட்டு, சடலங்களாக இரவு மீண்டும் செம்மணி காவல் சாவடிக்கு கொண்டு வரப்படுவர். மேலதிகாரிகளின் கட்டளை படி நாம் அந்த சடலங்களை அங்கே புதைப்போம். தொடர்ந்து புதைத்தோம். இதுதான் நடந்தது. கொலை செய்த மேலதிகாரிகள் தப்பி விட்டனர். புதைத்த நாம் தண்டனைக்கு உள்ளாகி உள்ளோம். சில மேலதிகாரிகள் கைதாகி வழக்கு தொடர பட்டு, பின் அந்த வழக்கு நின்று போய் விட்டது. அதிகாரிகள் தப்பி விட்டார்கள். நாம் அகப்பட்டு உள்ளோம். இது அநீதி. சர்வதேச விசாரணை நடக்கும் பட்சத்தில் நான் சாட்சியம் அளித்து குற்றம் இழைத்த அதிகாரிகளின் பெயர்களை வெளி படுத்த தயாராக உள்ளேன்..” லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச, தனது மனைவி திருமதி எஸ்.சி.விஜேவிக்கிரம மூலம் இவ்வாறு கூறி உள்ளதாக தெரிவித்த, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், இவ்விதம், வெளி கொணர பட்டுள்ள கிருஷாந்தி குமாரசுவாமி கொலை வழக்கின் புதிய திருப்பம் தொடர்பில் மேலும் கூறியுள்ளதாவது; கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை குற்றவாளி லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவின் மனைவி திருமதி எஸ்.சி.விஜேவிக்கிரம, ஜனாதிபதி அனுர குமாரவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதன் நகல்களை பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் அனுப்பி உள்ளார். ஐநாவுக்கும் அனுப்பி உள்ளார். அக்கடிதத்தில் தனது கணவர் தன்னிடம் கூறிய மேற்கண்ட விடயங்களை, அவர் எழுதியுள்ளார். ஆகவே இன்று இந்த கடிதம், அனுரகுமார திசாநாயக்கவின் “கோர்ட்டில்” இன்று நிற்கிறது. சர்வதேச கண்காணிப்பு விசாரணைக்கு ஜனாதிபதி அனுர உடன் பட வேண்டும். அதிலே லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச சுதந்திரமாக சாட்சியம் அளிக்க வேண்டும். ஆனால், இவற்றுக்கு முன், இன்று சிறையில் இருக்கும் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவுக்கு, உடனடியாக அங்கே அதி உயர் விசேட பாதுகாப்பு வழங்க பட வேண்டும். இது தொடர்பில், அரசியல் சிவில் சமூகமாக நாம் கூட்டு மேல் நடவடிக்கைக்கு தயார் ஆவோம். ஐநா மனித உரிமை ஆணையர் வொல்கர் டர்க்கிடம் கோரிக்கை நாம் அதிகார பூர்வமாக கோரிக்கை விடுப்போம். பிரசித்தி பெற்ற சித்திரவதை, பாலியல் வல்லுறவு, படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளி லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச, தனக்கு ஆணை இட்ட மேலதிகாரிகளை அடையாளம் காட்ட தயார் என்கிறார். இலங்கை வரலாற்றில் இப்படி ஒரு இராணுவதை சேர்ந்த நபர் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்து, தனக்கு ஆணை இட்ட மேலதிகாரிகளை அடையாளம் காட்ட தயார் என கூறவில்லை. ஆகவே, இதை ஏற்று மேல் நடவடிக்கை எடுக்க அனுர குமார அரசாங்கம் முன் வர வேண்டும். சர்வதேச நெருக்குதல்களை முறையாக தர ஐநா மனித உரிமை ஆணையகமும் முன் வர வேண்டும். இதை செய்ய முடியா விட்டால், இது ஒரு அரசாங்கமாகவோ, அது ஒரு ஐநா சபையாகவோ இருக்க முடியாது. இது இன்று சர்வதேச விவகாரம் ஆகி விட்டதை அனுர குமாரவும், வொல்கர் டர்க்கரும் உணர வேண்டும். அதனால்தான், அனுரவுக்கு செம்மணி விவகாரம் ஒரு அக்னி பரீட்சை என்று அன்றே சொன்னேன். இன்று மீண்டும் கூறுகிறேன். https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/சோமரத்ன-ராஜபக்ச-மனைவியின்-கோரிக்கையை-ஏற்று-அனுர-தன்னை-நிரூபிக்க-வேண்டும்-மனோ/150-362216
-
கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கோரி பேரணி
கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கோரி பேரணி எம்.எஸ்.எம்.நூர்தீன் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட முஸ்லிம்களுக்கும் நீதி கோரி காத்தான்குடியில் கவனஈர்ப்பு பேரணி ஒன்று ஞாயிற்றுக்கிழமை(03) அன்று முன்னெடுக்கப்பட்டது. காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை இடம்பெற்று 35ஆவது வருட ஷுஹதாக்கள் தினம் ஞாயிற்றுக்கிழமை (03) அன்று அனுஷ்டிக்கப்பட்ட நிலையில், காத்தான்குடி முதலாம் குறிச்சி பிரதான வீதியில் இந்த கவன ஈர்ப்பு பேரணி நடத்தப்பட்டது. அதன் பின்னர் பிரகடனம் வெளியிடப்பட்டது. காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் காத்தான்குடி கிளை தேசிய ஷுஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த பேரணியை ஏற்பாடு செய்திருந்தது. இலங்கையில் கடந்த காலத்தில் நடைபெற்ற யுத்தத்தின்போது, பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கும் நீதியும் நியாயமும் வேண்டி கடத்தி காணாமல் ஆக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் புதை குழிகள் தோண்டப்பட்டு அங்கிருந்து எடுக்கப்படும் ஜனாஸாக்களை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பேரணியின்போது வலியுறுத்தப்பட்டது.பேரணியின் இறுதியில் ஷூஹதாக்கள் தின பிரகடனம் ஒன்றும் வாசிக்கப்பட்டது. இதன்போது, சிறப்புரையை சம்மேளன தலைவரும் ஓய்வுபெற்ற அதிபருமான சத்தார் நிகழ்த்தினார் பிரகடனத்தை சம்மேளன செயலாளர் மௌலவி ரமீஷ் ஜமாலி வாசித்தார். ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களுக்கு அனுப்பி வைக்கும் பொருட்டு இந்த பிரகடனம் காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாரா மெளஜூத் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தின் போது, முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டார்கள் என்பதை வலியுறுத்தியும் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பில் நீதியான விசாரணை நடத்தவும், முஸ்லிம்கள் இழந்த காணிகளை மீள வழங்கவும் வேண்டும் எனவும் விகிதாசாரப்படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கான காணி பங்கீடு செய்யப்பட வேண்டும் எனவும் விகிதாசாரப்படி, அரசு உயர் பதவிகளில் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் அமர்த்தப்பட வேண்டும் எனவும் இந்த பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பேரணியில், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதிநிதிகள் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் காத்தான்குடி கிளை பிரதிநிதிகள் தேசிய ஷுஹதாக்கள் நிறுவனத்தின் பிரதிநிதிகள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர் இதன்போது, கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த உறவினர்கள் படுகொலை செய்யப்பட்டவர்களின் புகைப்படங்களைத் தாங்கி நின்றனர். https://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/கடத்தி-காணாமல்-ஆக்கப்பட்ட-முஸ்லிம்களுக்கு-நீதி-கோரி-பேரணி/46-362217
-
இந்தியாவின் ரஷ்ய எண்ணெய்க் கொள்வனவு குறித்து அமெரிக்கா கோபத்தில்!
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா இனி எரிபொருள் வாங்காது என கேள்விப்பட்டேன்; அது நல்லது: ட்ரம்ப் 03 AUG, 2025 | 12:21 PM ரஷ்யாவிடம் இருந்து இந்தியா இனி எரிபொருட்களை வாங்காது என்று கேள்விப்பட்டேன். அது ஒரு நல்ல நடவடிக்கை" என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ரஷ்யாவிடம் இருந்து இனி இந்தியா எரிபொருள் வாங்காது என்று புரிந்து கொள்கிறேன். அதைத்தான் கேள்விப்பட்டேன். சரியா தவறா என எனக்குத் தெரியாது ஆனால் அது ஒரு நல்ல நடவடிக்கை. என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்.” என தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலை நிறுத்துவதில் டொனால்ட் ட்ரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். இதற்கான முயற்சியாக ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் பிற நாடுகளையும் அது எச்சரித்து வருகிறது. அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி இந்தியா சீனா உள்ளிட்ட சில நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து எரிபொருட்களை வாங்கி வருகின்றன. சந்தை விலையை விட ரஷ்யா குறைவாக விற்பதால் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் வாங்குவதில் இந்தியா ஆர்வம் காட்டி வருகிறது. இதை தடுக்கும் நோக்கில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25மூ வரி விதிக்கப்படும் என டொனால்ட் ட்ரம்ப் கடந்த புதன் கிழமை அறிவித்தார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் “இந்தியா எங்கள் நண்பர். எனினும் பல ஆண்டுகளாக நாங்கள் அவர்களுடன் சிறிய அளவிலான வர்த்தகத்தையே மேற்கொண்டு வருகிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில் அமெரிக்க பொருட்களுக்கு இந்தியாவின் வரி விதிப்பு மிக அதிகமாக உள்ளது. அமெரிக்க பொருட்களுக்கு உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியா உள்ளது. இதனால்தான் அவர்களுடனான எங்களது வர்த்தகம் குறைந்த அளவில் உள்ளது. மேலும் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு. அவர்கள் கடுமையான பணம் சாரா வர்த்தக தடைகளையும் அமல்படுத்துகின்றனர். உக்ரைனில் மேற்கொண்டு வரும் கொலைவெறித் தாக்குதலை ரஷ்யா நிறுத்த வேண்டும் என்று அனைவரும் விரும்பும் நேரத்தில்இ அந்த நாட்டிடமிருந்து தங்களுக்கு தேவையான ராணுவ உபகரணங்களை அதிக அளவில் இந்தியா வாங்கியுள்ளது. சீனாவுடன் சேர்ந்த ரஷ்யாவின் மிகப்பெரிய எரிசக்தி இறக்குமதியாளராகவும் இந்தியா உள்ளது. இவை அனைத்தும் சரியான விஷயங்கள் அல்ல.” என தெரிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக ட்ரம்ப் வெளியிட்ட மற்றொரு பதிவில் “ரஷ்யாவுடன் இந்தியா வைத்துள்ள உறவு குறித்து எனக்கு கவலை இல்லை. ஆனால் அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா விதிக்கும் வரிகள்தான் உலகிலேயே மிக அதிகமாக உள்ளது. எனவேதான் அவர்களுடன் ஒப்பீட்டளவில் சிறிய வணிகத்தையே செய்து வருகிறோம். அதேநேரம் ரஷ்யாவுடன் அமெரிக்க வர்த்தக உறவு கொண்டதில்லை. இந்தியா மற்றும் ரஷ்யாவும் செயலிழந்துபோன தங்களின் பொருளாதாரங்களை இன்னும் நாசமாக்கட்டும்” என்று கடுமையாக கூறியிருந்தார். இந்நிலையில் ரஷ்யாவுடன் வர்த்தக உறவில் ஈடுபடும் நிறுவனங்கள் அமெரிக்காவில் வர்த்தகத்தில் ஈடுபட தடை விதிப்பதற்கான நடவடிக்கைகளையும் ட்ரம்ப் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதனால் சில இந்திய நிறுவனங்கள் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருட்களை வாங்குவதை நிறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. எனினும் இது தொடர்பாக மத்திய அரசு எவ்வித தகவல்களையும் தெரிவிக்கவில்லை. இந்த பின்னணியில் டொனால்ட் ட்ரம்ப்பின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/221686
-
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம்: கையெழுத்து விவகாரம் குறித்து தமிழரசுக்கட்சியின் தீர்மானம் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
முன்னணி தயாரித்த கடிதத்தில் கையொழுத்திடோம் – சுமந்திரன் உறுதி! adminAugust 3, 2025 தமிழ் தேசிய மக்கள் முன்னணி சில சிவில் அமைப்புக்களுடன் தயாரித்த ஜெனீவா தொடர்பான கடிதத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கையொப்பம் இடாது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உயர்மட்ட குழு கூட்டத்திற்கு பின்னர் ஊடகங்களின் கேள்விக்கு பதில் வழங்கியபோதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ஜெனீவா தொடர்பான கடிதத்தை தயாரிக்க தமிழ் தேசிய மக்கள் முன்னணி சில சிவில் அமைப்புக்களுடன் ஒரு கூட்டத்தை கூட்டியிருந்தார்கள். நாங்கள் அந்த கூட்டத்திலே பங்கு கொள்ளவில்லை. அதற்கான காரணங்களை ஏற்கனவே எமது கட்சி தலைவர் ஊடகங்களுக்கு சொல்லி இருக்கிறார். அவர்கள் அந்த கூட்டத்தில் ஏதோ ஒரு கடிதம் ஒன்றை கொடுக்க வேண்டும் என்று கடிதத்தை தயாரித்திருக்கின்றார்கள். தயாரித்த கடிதத்தை எனக்கும் தலைவருக்கும் அனுப்பி வைத்தார்கள். கடிதம் தொடர்பாக நாங்கள் கூடி பேசி ஒரு தீர்மானத்தை எடுப்போம் என தலைவர் அவர்களுக்கு சொன்னார். அதை சொன்ன பிறகும் கூட எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் அதனை தனித்தனியாக அனுப்பி அவர்களுடைய கையொப்பத்தையும் கேட்டிருக்கிறார்கள். எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருமே கட்சி தீர்மானமாக தான் நாங்கள் செயல்படுவோம். நாங்கள் தனியாக கையொப்பம் வைக்கமாட்டோம் என்று அறிவித்திருக்கிறார்கள். வேறு பல முக்கியமான விடயங்கள் சம்பந்தமாக நாம் கூடியிருந்தாலும் கூட இந்த விடயமும் ஒன்று இருந்த அடிப்படையினால் அதைப்பற்றி நாங்கள் இறுதியில் பேசியிருக்கிறோம். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தமிழ் மக்கள் சார்பாக எப்படியான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது சம்பந்தமாக நாங்கள் பலதரப்பட்ட எங்களுடைய பிரதிநிதித்துவத்தை சொல்லியிருக்கிறோம். அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வந்தபோது கூட 2021ம் ஆண்டு நானும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இறுதி செய்த ஆவணம், அது சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் கையெழுத்திட்டார்கள். அது எமது நிலைப்பாடு. அதில் மாற்றமில்லை. ஆனால் இன்றைய சூழலில் நாங்கள் எதை சொல்ல வேண்டும். அதை எப்படியாக சொல்ல வேண்டும் என்பது குறித்து நாங்கள் ஒரு கருத்து பரிமாற்றம் செய்திருக்கிறோம். அதன் அடிப்படையில அவர்கள் தாங்களாக தயாரித்துவிட்டு எங்களுடைய மேசையிலே வைத்து கையொப்பம் கேட்கிற கடிதத்தில் நாங்கள் கையொப்பம் இடவில்லை. நாங்கள் அதைவிட தீர்க்கமாக பல விடயங்களை ஆராய்ந்து, நாங்கள் சொல்ல வேண்டிய விதத்தில் சொல்ல வேண்டிய முறையிலே தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிற பிரதான கட்சி என்ற வகையிலே, உகந்த தருணத்திலே சரியான நேரத்திலே நாங்கள் அதை வெளிப்படுத்துவோம். கடிதம் மூலமாகவோ வேறு விதமாகவோ அதனை செய்வோம். ஆனால் தற்போதைக்கு அவர்கள் தாங்களாக தயாரித்துவிட்டு நீங்களும் கையொப்பம் வையுங்கள் என்று சொல்லி தரும் கடிதத்தில் கையொப்பம் இடுவதில்லை என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது – என்றார் https://globaltamilnews.net/2025/218756/
-
புதிய கல்வி சீர்திருத்தம் – பிரதமர் ஹரிணியின் சீர்திருத்தம் அல்ல
புதிய கல்வி சீர்திருத்தம் – பிரதமர் ஹரிணியின் சீர்திருத்தம் அல்ல adminAugust 2, 2025 புதிய கல்வி சீர்திருத்தம் கல்வி அமைச்சின் அல்லது ஜனாதிபதி அனுரவின் அல்லது பிரதமர் ஹரிணியின் சீர்திருத்தம் அல்ல, மாறாக அனைவரின் புரிதல், யோசனைகள் மற்றும் பரிந்துரைகளுடன் நேர்மறையான மாற்றங்களைச் செய்வதன் மூலம் குழந்தைகளுக்கு கூட்டாக நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு பொறுப்பு என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். புதிய கல்வி சீர்திருத்தம் குறித்து வடக்கு மாகாண கல்வி அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்துவதற்காக இன்றைய தினம் சனிக்கிழமை வடக்கு மாகாண செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு கூறினார். மேலும் தெரிவிக்கையில், புதிய கல்வி சீர்திருத்தத்தில், ஒரு மாகாணம், மாவட்டம் அல்லது பிராந்தியம் மட்டுமல்ல, ஒவ்வொரு மாகாணம், மாவட்டம் மற்றும் பிராந்தியமும் முக்கியமானது. சமத்துவம் அங்கிருந்து தொடங்குகிறது. நம் நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் சம வாய்ப்புகளை வழங்க விரும்பினால், அனைத்து வளங்களையும் ஒரு பிராந்தியத்திற்கு, ஒரு மாவட்டத்திற்கு ஒதுக்க முடியாது. அது நியாயமாக விநியோகிக்கப்பட வேண்டும். அங்கு, கடினமான மற்றும் வளம் குறைவாக உள்ள பகுதிகளுக்கு அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். கடினமான பாடசாலைகளுக்கு அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். ஆசிரியர் வெற்றிடங்களுக்கு தீர்வுகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அனைத்து பாடசாலைகளிலும் டிஜிட்டல் வசதிகள், கற்றல் வசதிகளுடன் கூடிய வகுப்பறைகள், சுகாதார வசதிகள், தண்ணீர், விளையாட்டு மைதானங்கள், ஆய்வகங்கள், புதுமை இடங்கள் மற்றும் அழகியல் அலகுகள் வழங்கப்பட வேண்டும். அதற்கான நல்ல திட்டம் எங்களிடம் உள்ளது. அதற்காக, இந்த பொது விவாதத்தை நாங்கள் நடத்துகிறோம். ஏனெனில் இது கல்வி அமைச்சகம் அல்லது ஹரிணி அமரசூரிய அல்லது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் சீர்திருத்தம் அல்ல. இது இலங்கையில் தேசிய கல்வியின் சீர்திருத்தம். நாம் அனைவரும் இதைப் பற்றி ஒரு யோசனை பெற வேண்டும். நாம் அனைவரும் இதில் ஈடுபட வேண்டும். கல்வி சீர்திருத்தம் பற்றிய உரையாடலை உருவாக்குங்கள். ஆசிரியர் சங்கங்களுடனும், நிபுணர்களுடனும், பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடனும் நாங்கள் ஏற்கனவே கலந்துரையாடியுள்ளோம். நாங்கள் தொடர்ந்தும் அவ்வாறு செய்வோம். பெற்றோர்கள் உட்பட சமூகத்தின் அனைத்துத் துறையினரும் இதில் ஈடுபட வேண்டும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார் https://globaltamilnews.net/2025/218729/
-
கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் அமைக்க முயற்சி ?
கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் அமைக்க முயற்சி ? adminJuly 31, 2025 யாழ்ப்பாணம் கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் அமைப்பதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டால் அதற்கு எதிராக நீதிமன்ற நாட தயாராக இருப்பதாக வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் திராகராஜா பிரகாஸ் தெரிவித்துள்ளார். யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, நேற்றைய தினம் புதன்கிழமை (30.07.25) தவிசாளர் திராகராஜா பிரகாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் தொடர்பில் உறுப்பினர்கள் பிரஸ்தாபித்திருந்தனர். அதன் பின்னர் தவிசாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், யாழ்.வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட கந்தரோடை பகுதியில் அமைந்திருக்கும் தொல்பொருள் திணைக்களத்துக்கு சொந்தமான இடத்தில் பௌத்த மக்கள் தொடர்ச்சியாக பார்வையிடுவதற்காக வந்து கொண்டிருக்கிறார்கள். குறித்த பகுதியில் பிக்கு ஒருவர் காணி ஒன்றை கொள்வனவு செய்து பௌத்த மத்திய நிலையம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதற்காக பொதுமக்களிடமிருந்து நிதி வசூலிப்பு செய்கின்ற ஒரு பெயர் பலகையும் அந்த இடத்தில் வைக்கப்பட்டிருக்கின்றது. சட்டவிரோத கட்டடத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதன் முதற்கட்டமாக அவருக்கு அறிவித்தல் வழங்கப்பட்டிருக்கின்றது, குறித்த பகுதியில் கட்டிட நிர்மாணத்தை நிறுத்துமாறு என்னால் பிரசுரம் ஒட்ப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக அங்கு வரும் மக்களுக்கு தமிழ் பௌத்தம் இருந்த வரலாற்றை அத்தோடு இந்துமத, சைவமத வரலாற்றை மறைக்கும் முகமாக அங்கே வருகின்ற கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றது. இது ஒரு தவறான செயல் இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். அந்த இடத்தில் தொல்பொருள் திணைக்களத்துக்கு சொந்தமான பகுதிகளில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று அகழ்வாராய்ச்சியை செய்து வருகின்றது. அருகில் இருக்கும் காணிகளில் இந்த அகழ்வாராட்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அண்மையில் நான் அறிந்தேதேன் ஆய்வுகளின் போது மூன்று அடி உயரமான ஒரு கிருஷ்ணர் சிலை அங்கே கிடைக்கப் பெற்றிருக்கின்றது. அதனை மூடி மறைத்து குறித்த பகுதியில் ஆய்வுகளை மேற்கொள்ளாமல் வேறு இடங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த பௌத்த மயமாக்கல் என்பது எங்களுடைய பிரதேசத்தில் அதாவது தயிட்டியை போல், மீண்டும் கந்தரோடையிலும் தொல்லியல் திணைக்களத்தின் அனுசரணையுடன் தற்போதைய அரசாங்கமும் பௌத்த மாயமாக்கலை எமது பிரதேசத்தில் அமூல்ப்படுத்த நினைக்கின்றது. இந்த நடவடிக்கைகளை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் அதற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைக்கு செல்வதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம் என தெரிவித்தார். https://globaltamilnews.net/2025/218594/
-
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!
இப்பவும் நம்பிக்கை தளராமல் நாலு பேர் இருக்கின்றார்கள் போலிருக்கு!