Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஞ்சித்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரஞ்சித்

  1. அநுரவை தேசியத் தலைவருக்கு நிகரானவர் என்று வர்ணித்து வணங்குவதும், வேறு சிலர் அவரை தமிழர்களின் காவலன் என்று கூறுவதும், மீதிப்பேர் இவரை இதுவரை இலங்கை கண்டிராத நேர்மையான, இனபேதமற்ற இலங்கையன் என்று போற்றிப் புகழ்வதும் நடக்கிறது. இக்கட்சியின் உண்மையான முகம் எப்படிப்பட்டது, அக்கட்சியின் கடந்தகால தமிழர் விரோத செயற்பாடுகள் எப்படியானவை என்பதை நன்கு தெரிந்துகொண்டபோதிலும், அவற்றை மறைத்து, மறந்து, எதுவுமே நடவாததுபோல அவரை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கவேண்டும் என்று தமிழரின் இருப்பிற்கான போராட்டத்தில் பெரும்பகுதியில் வாழ்ந்த முதியோரும் (புலிகளினால் தமது எழுத்துக்களுக்கு பாரட்டைப் பெற்றவர்கள் உட்பட), 2009 இற்கு முன்னரான சரித்திரத்தை அறிந்திராத அல்லது அரசியல் ரீதியில் தமிழ்த் தேசியத்திலிருந்து வேண்டுமென்றே விலத்தி வழிநடத்தப்பட்ட இளையோரும் அநுரவின் பின்னால் குருடர்களாக இழுபட்டுச் செல்லுதல் நடக்கிறது. நடந்தவை தெரிந்தும், அநுரவை ஆதரித்தே தீருவது என்று கங்கணம் கட்டி நிற்கும் முதியோருக்காகவோ அல்லது, தேசிய நீக்கம் செய்து, சிங்களப் பெருந்தேசியத்திற்குள் உள்வாங்கப்பட வேண்டும் என்ற நோக்கில் செயற்படும் இனவிரோதிகளுக்காகவோ இத்தொடரை நான் பதியவில்லை. மாறாக இவ்வகையானவர்களினால் தவறான சரித்திரத்தை உண்மையென்று நம்பி, நமக்கிழைக்கப்பட்ட வரலாற்று அநியாயங்களை அறியாமல் சிங்கள இனவாதியொருவரை தமது நாயகனாக நம்பி பின்னால்ச் செல்லும் இளைய தலைமுறை இவற்றை அறியவேண்டும் என்பதற்காகவே இதனைப் பதிகிறேன். பதிவு இறுதிப் போரில் தமிழினக்கொலையில் முனைப்புடன் செயற்பட்ட போர்க்குற்றவாளியான சம்பத் தூயகொந்தாவை தனது பாதுகாப்புச் செயலாளராக நியமித்த அதே தமிழர்கள் வண‌ங்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க‌ 23 புரட்டாதி 2024 இலங்கை ஜனாதிபதியாக தான் பதவியேற்றுக்கொண்டதும் செய்த முதலாவது பணிகளில் ஒன்று இறுதி யுத்தகாலத்தில் பேர்பெற்ற போர்க்குற்றவாளியாகத் திகழ்ந்த தளபதி சம்பத் தூயகொந்தாவை தனது பாதுகாப்புச் செயலாளராக நியமித்ததுதான். இந்த சம்பத் எனும் போர்க்குற்றவாளி முள்ளிவாய்க்கால் தமிழினக் கொலையினை தனது யுத்தவெற்றியாகப் பறைசாற்றி வெளிப்படையாகவே பேசிவந்தவன். இவனை தனது பாதுகாப்புச் செயலாளராக அநுர நியமித்திருப்பதன் மூலம் அவரை நம்பி, தெய்வம் என்று வழிபடும் தமிழ் பக்தகோடிகளுக்கு அவர் கூறும் செய்தி என்ன? இறுதி யுத்தகாலத்தில் சம்பத் தூயகொந்த இலங்கை விமானப்படையில் உலங்குவானூர்திப் படையணியின் 9 ஆவது பிரிவின் விங் கொமாண்டராகப் பணியாற்றியவன். தாக்குதல் உலங்குவானூர்தியின் கட்டளைத் தளபதியாக இறுதியுத்ததில் ஈடுபாட்டுடன் பணியாற்றிய இவன் குறைந்த 400 வான் தாக்குதல்களை தமிழர்கள் மீது மேற்கொண்டதாக வெளிப்படையாகவே கூறிப் பெருமைப்பட்டிருக்கிறான். இவனும் இவனது சகாக்களும் ஆடி முடித்த தமிழினக்கொலையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் பலியிடப்பட்டார்கள். இவனது வான்படை தமிழர் தாயகத்தின் வைத்தியசாலைகள், அகதிமுகாம்கள், யுத்த சூனிய வலயங்கள் என்று தெளிவாக அடையாளம் காணப்பட்ட சிவிலியன் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தி, மக்களை அதிகளவில் கொன்றொழிக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே பணியாற்றியது. "வன்னிப் போர்க்களத்தில் நாம் அவர்களை ஓடவிட்டோம், கதிகலங்க அடித்தோம்" என்று இனவழிப்புப் போர் முடிந்த கையோடு சிங்கள ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியொன்றில் இனவழிப்பில் தனது பங்கினை மெச்சிப் பேசியிருந்தான். இறுதி யுத்த காலத்தில் தான் மட்டுமே 60 தாக்குதல்களில் நேரடியாகப் பங்குகொண்டு பலரைக் கொன்றதாகப் பெருமைப்பட்டிருக்கிறான். இவனது தாக்குதல் உலங்குவானூர்திப் படையணி மொத்தமாக 19,762 80 மில்லிமீட்டர் ராக்கெட்டுக்களை தமிழர்கள் மீது வீசியிருக்கிறது என்று அவன் இச்செவ்வியில் கூறியிருக்கிறான்.இவற்றிற்கு மேலதிகமாக தனது தாக்குதல் வானூர்தியில் பொருத்தப்பட்டிருந்த 23 மில்லிமீட்டர் இரட்டைக் குழல் தானியங்கித் துப்பாக்கி, 12.7 மில்லிமீட்டர் கட்லிங் இயந்திரச் சுழத் துப்பாக்கி, 30 மில்லிமீட்டர் கனொனன் ரக ஏவுகணைகளையும் தாம் பாவித்ததாகப் பெருமைப்பட்டிருக்கிறான். இவற்றுள் இவனது உலங்குவானூர்தியில் இருந்து கொட்டப்பட்ட ஒவ்வொரு குண்டினதும் நிறை குறைந்தது 250 கிலோ ஆகும். "இரண்டு எம் ஐ 24 தாக்குதல் வானூர்திகளைக் கொண்டே அவர்களுக்கு மிகப்பெரும் அழிவுகளை ஏற்படுத்தினோம்". சித்திரை 2009 இல், புதுக்குடியிருப்பில் தான் பங்குகொண்ட தாக்குதல் ஒன்றுபற்றி அவன் பேசும்போது, "எதிரிகளைத் தேடித்தேடி அழிக்கும் நடவடிக்கையில் நாம் இரவு பகலாக‌ அயராது செயற்பட்டோம். புதுவருடம் பிறக்கும் இரவில் நடக்கும் வானவேடிக்கைகள் போல வன்னி வானம் இரவில்க் காட்சியளித்தது" என்று தமிழர்கள் மீதான திட்டமிட்ட இனக்கொலையினை அவனால் இரசித்து விபரிக்க முடிந்தது. இனக்கொலை முடிந்த பின்னல், மற்றைய போர்க்குற்றவாளிகளைப் போல சம்பத்தும் வெளிநாட்டுத் தூதரகம் ஒன்றிற்கு அதிகாரியாக அனுப்பி வைக்கப்பட்டான். போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகளைப் பாதுகாக்கும் பொருட்டே இவனைப்போன்றவர்களை நாட்டின் இராஜதந்திரப் பதவிகளுக்கு கோட்டாபயலின் அரசாங்கம் நியமித்து வந்தது. தூயகொந்தாவும் இதே காரணத்திற்காக பாக்கிஸ்த்தானில் இயங்கும் இலங்கைத் தூதரகத்தில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்ற அதே கோட்டாபயலினால் அனுப்பிவைக்கப்பட்டான். இறுதி இனக்கொலை யுத்தத்தில் இலங்கையின் பேர்பெற்ற போர்க்குற்றவாளியான சவேந்திர சில்வாவுக்கு நிகரான போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இன்னொரு அரக்கக் குணம் கொண்ட போர்க்குற்றவாளியான கமல் குணரட்ணவின் இடத்திற்கே இப்போர்க் குற்றவாளியான சம்பத் தூயகொந்தாவும் நியமிக்கப்பட்டிருக்கிறான். இவனை தனது பாதுகாப்புச் செயலாளராக அநுர நியமித்து அழகுபார்ப்பதனூடான அவர் தன்னை வணங்கிப் பிந்தொடரும் தமிழ் பக்த கோடிகளுக்குச் சொல்ல விரும்பும் செய்தி என்னவாக இருக்கும்? அது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்! https://www.tamilguardian.com/content/another-accused-sri-lankan-war-criminal-appointed-defence-secretary
  2. திருகோணமலையில் ஹர்த்தாலினை அனுஸ்ட்டித்த தமிழர்கள் மீது தீவிரவாத மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவாளர்கள் தாக்குதல் ‍ மூன்று தமிழர்கள் பலி, 36 பேர் காயம் 12 ஐப்பசி 2002 திருகோணமலையில் ஹர்த்தாலில் ஈடுபட்ட தமிழர்கள் மீது சிங்கள ஊர்காவல்ப்படையினைச் சேர்ந்த மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலில் 3 தமிழர்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் 36 பேர் காயமடைந்தனர். மேலும் மட்டக்களப்பு காஞ்சிரங்குடா பகுதியில் விசேட அதிரடிப்படை முகாமின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது விசேட அதிரடிப்படையினர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 7 தமிழர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 14 பேர் காயமடைந்தனர். பேச்சுவார்த்தைகளைக் குழப்பும் நோக்கில் வடக்குக் கிழக்கில் அமைதியின்மையினைத் தோற்றுவிக்கும் முகமாக மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவாளர்களும் அரச படைகளில் குறிப்பிட்ட ஒரு பிரிவினரும் முயன்றுவருவது இதன் மூலம் உறுதியாகிறது. கிழக்கில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைக் கண்டித்து வடக்குக் கிழக்கு எங்கும் பூரண ஹர்த்தால் தமிழ் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டது. அச்சுவேலி, கொடிகாமம் ஆகிய பகுதிகளில் கடைகளை பலாத்காரமாக இராணுவத்தினர் திறக்க முனைந்த போதிலும், வர்த்தகர்கள் பிடிவாதமாக மறுத்து விட்டனர். வீதிகள், கடைகள், பொதுமக்கள் பாவிக்கும் இடங்களில் கறுப்புக்கொடிகள் பறக்கவிடப்பட்டதுடன், தொடர்ச்சியாக சோக கீதமும் ஒலிபெருக்கிகளைக் கொண்டு ஒலிபரப்பப்பட்டு வந்தது. பலவிடங்களில் வீதிகளுக்குக் குறுக்காக டயர்கள் எரிக்கப்பட்டிருந்தன. பெரும்பாலான போக்குவரத்து முடக்கப்பட்டிருந்தது, ஒரு சில தனியார் வாகனங்களைத் தவிர. யாழ்ப்பாணத்திற்கும் வவுனியாவிற்குமான போக்குவரத்து தடைப்பட்டிருந்ததுடன், ஓமந்தைச் சோதனைச் சாவடிகளும் வெறிச்சோடிக் காணப்பட்டன. https://www.tamilnet.com/art.html?catid=13&artid=7625
  3. புலிகள் மீதான தடையினை நீக்கக் கூடாதென்று கோரி கொழும்பில் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய தீவிர சிங்கள இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணி 3, புரட்டாதி 2002 ஆயிரக்கணக்கான தீவிர சிங்கள இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள், நூற்றுக்கணக்கான பெளத்த பிக்குகள் உள்ளிட்ட பலர் கொழும்பில் இன்று கூடி ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். புலிகள் மீதான தடையினை நீக்குவதன் மூலம் பேச்சுவார்த்தைகளில் நம்பகத்தன்மையினை ஏற்படுத்த ரணில் அரசாங்கம் முயன்று வருகையில் அதனைத் தடுத்து நிறுத்தும் முகமாகவே மக்கள் விடுதலை முன்னணி ஆர்ப்பாட்டங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றது. ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமரின் அலுவலகத்தை நோக்கிச் சென்றபோது பொலீஸாரினால் தடுக்கப்பட்டனர். கொழும்பு கோட்டைப் பகுதியில் ஆரம்பமான ஆர்ப்பாட்டப் பேரணி காலிமுகத்திடலை அடைந்தபோது நூற்றுக்கணக்கான பொலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். மக்கள் விடுதலை முன்னணியின் ஆர்ப்பாட்டப் பேரணியில் முன்னால் செல்லும் அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் https://www.tamilnet.com/art.html?catid=13&artid=7431
  4. யுத்த நிறுத்த ஒப்பந்தத்தினை நிராகரிக்குமாறு மக்களைத் தூண்டிய மக்கள் விடுதலை முன்னணி உள்ளடங்கிய எதிர்க்கட்சிகள். 9 ஆடி 2002 இலங்கையின் பிரதான எதிர்க்கட்சிகளும், பல சிங்கள இனவாத அமைப்புக்களும் இணைந்து கொழும்பில் பாரிய பேரணியொண்றினை நடத்தின. சுமார் 5,000 பேர் பங்குகொண்ட இந்தப் பேரணியில் புலிகளுக்கும் ரணில் அரசிற்கும் இடையே செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தினூடாக நாட்டைப் பிளவுபடுத்தும் சதி நடப்பதனால் சிங்கள மக்கள் அனைவரும் திரண்டெழுந்து இதனை முறியடிக்க வேண்டும் என்று பேரணியில் பேசியோர் கேட்டுக்கொண்டனர். யுத்த நிறுத்தத்திற்கெதிரான சிங்கள இனவாதக் குழு, அநுர பண்டாரநாயக்க, விமல் வீரவன்ச, அர்ஜுன ரணதுங்க ஆகியோர் பேரணி மேடையில் எதிர்க்கட்சிகளின் இந்த பேரணி மாலை 4:30 மணிக்கு நுகேகொடையில் ஆரம்பமானது. பேரணியில் சிங்கள இனவாதத்தின் பிதாமகர்களில் ஒருவரான பண்டாரநாயக்கவின் புத்திரன் அநுர பண்டாரநாயக்க, சிங்கள இனவாதிகளின் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் விமல் வீரவன்ச மற்றும் தேசிய பிக்கு முன்னணியின் தீவிரவாத பிக்கு ஒருவர் ஆகியோர் விசேட உரையாற்றினர். பேரணியில் முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அர்ஜுன ரணதுங்க, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர‌ ஆகியோரும் பங்குபற்றினர். "கெளரவமான சமாதானத்திற்கும், பிளவுபடாத நாட்டிற்குமான தேசிய இயக்கம்" எனும்பெயரிலேயே இந்தப் பேரணியினை எதிர்க்கட்சிகள் ஒழுங்குசெய்திருந்தன. https://www.tamilnet.com/art.html?catid=13&artid=7171
  5. விடுதலைப் புலிகள் மீதான தடையினை நீக்கக் கூடாது, தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை வழங்கக் கூடாது என்று கோரி கொழும்பு நகரில் ஆயிரக்கணக்கான தீவிர சிங்கள இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணியினர் ஆர்ப்பாட்டம் 19 ஆனி 2002 தீவிர சிங்கள இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்களும், சிங்களப் பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் கொழும்பில் கூடி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரான தடையினை அரசாங்கம் நீக்கக் கூடாதென்றும், வடக்குக் கிழக்கின் இடைக்கால நிர்வாகத்தை புலிகளிடம் வழங்கக் கூடாதென்றும் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் இனவாதக் கட்சியின் உறுப்பினர்கள், பொதுமக்கள், பெளத்த பிக்குகள் உட்பட்ட பலர் கலந்துகொண்டனர். கலந்துகொண்டவர்கள் பதாதைகளை ஏந்திச் சென்றதுடன் தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமையினை வழங்கமுடியாது என்றும் கோஷமிட்டனர். அதன் பின்னர் புலிகளுடனான பேச்சுக்களை ஆரம்பிப்பதன் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதற்காச் செயற்பட்டுவரும் பிரதமர் ரணிலின் அலுவலகத்திற்குச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் புலிகள் மீதான தடையினை நீக்கக் கூடாதென்று ரணிலிடம் மகஜர் ஒன்றைக் கையளிக்க முயன்றபோது பொலீஸாரினால் தடுக்கப்பட்டுத் திருப்பியனுப்பப்பட்டனர்.
  6. தனியார் ஊடகங்களை தனது இனவழிப்பிற்கும், சிங்களக் குடியேற்றங்களுக்கும் பிரச்சார இயந்திரங்களாக்கிய ஜெயார் பிரதான தொடரிலிருந்து சற்று விலகி அக்காலத்தில் ஜெயவர்த்தனவும், காமிணி திசாநாயக்கவும், லலித் அதுலத் முதலியும் தமது இன ஒதுக்கல் கொள்கைகளுக்கு ஊடகங்களை எவ்வாறு பயன்படுத்தினர் என்பதுபற்றிச் சற்று விளக்கலாம் என்று நினைக்கிறேன். தாம் செய்ய நினைத்த அனைத்து தீவிரச் செயற்பாடுகளுக்கும் சண், தி ஐலண்ட் மற்றும் அதனோடிணைந்த சிங்கள இனவாதப் பத்திரிக்கைகளை அவர்கள் பயன்படுத்த முடிவெடுத்தனர். அரசிற்கு எதிரான கருத்துக்களைக் கொண்ட எதிர்க்கட்சிக்குச் சார்பான பத்திரிக்கைகளை எதற்காகப் பயன்படுத்துகிறீர்கள் என்று ஒருமுறை லலித் அதுலத் முதலியிடம் கேட்டேன். அதற்குப் பதிலளித்த லலித், "டெயிலி நியூஸ் எமது பத்திரிக்கை. ஆகவே டெயிலி நியூஸோ அல்லது தினமினவோ இவ்வாறான செய்திகளைக் காவி வந்தால் அவற்றினை நாமே வழங்கியதென்பஎன்பதை மக்கள் உடனடியாக அறிந்துகொள்வார்கள். ஆகவேதான் சண், தி ஐலண்ட் போன்ற பத்திரிக்கைகளைப் பயன்படுத்துவதென்று முடிவெடுத்தோம்" என்று கூறினார். இக்காலப் பகுதியில் ஜெயாரும் அவரது இரு சகாக்களும் தி ஐல‌ண்ட் பத்திரிக்கையின் பீட்டர் பாலசூரிய, ஞாயிற்றுக்கிழமை பதிப்பான ஐலண்ட் பத்திரிக்கையின் ஜெனிபர் ஹென்ரிக்கஸ், மற்றும் சண்டே பத்திரிக்கை மற்றும் அதன் ஞாயிற்றுக்கிழமை பதிப்பு ஆகியவற்றின் மூத்த பத்திரிக்கையாளர்களான அநுர குலதுங்க, ரனில் வீரசிங்க ஆகியோரையும் தமது பிரச்சாரச் செயற்பாடுகளுக்காகப் பாவித்துக்கொண்டனர். 1982 ஆம் ஆண்டு கார்த்திகை 28 ஆம் திகதி வெளிவந்த சண்டே பத்திரிக்கையின் ஞாயிற்றுக்கிழமை பதிப்பிலும் அதன் சகோதரச் சிங்களப் பத்திரிக்கைகளிலும் ஜெயாரும் காமிணியும் முன்னெடுத்த இனவாதம் கடை விரித்திரிந்தது. காந்தியம் அமைப்பைக் கடுமையாகச் சாடிய இப்பத்திரிக்கைகள் "நாடற்ற" மலையகத் தமிழர்களை எல்லையோரக் கிராமங்களில் குடியேற்றுவதாகவும், பின்னர் அக்கிராமங்களை பயங்கரவாதிகள் மறைந்திருந்து பயிற்சி எடுக்கவும், பயங்கரவாத நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் பாவித்து வருவதாக அவை செய்தி வெளியிட்டிருந்தன. "பயங்கரவாதிகள் நாடற்ற மலையகத் தமிழர்களைக் கொண்டு மனித வேலி ஒன்றினை அமைத்து வருகின்றனர்" என்று அவை தலைப்பிட்டிருந்தன. சிங்கள இராணுவத்தினரும், காவல்த்துறையும் காந்தியம் பண்ணைகளைச் சுற்றிவளைத்துச் சோதனையிடவும், அவற்றினை அழித்து, அங்கிருந்தோரை விரட்டவும் தேவையான களநிலையினை இப்பத்திரிக்கைகளில் வெளிவந்த செய்திகள் உருவாக்கிக் கொடுத்திருந்தன. 1983 ஆம் ஆண்டு, பங்குனி மாதமளவில் இப்பண்ணைகளை முற்றாகத் துடைத்தழிக்க அரசால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதற்காக ஒரு உத்தியினை சிங்கள இராணுவமும் காவல்த்துறையும் பாவித்தன. முதலில் மலையக மக்கள் வாழ்ந்துவந்த காந்தியம் பண்ணையின் பகுதியினை இராணுவம் சுற்றிவளைக்கும். பின்னர் அங்கிருப்பவர்களை பொலீஸார் வீதிக்கு இழுத்து வருவர். எங்கே கொண்டுசெல்லப்படுகிறார்கள் என்பதனை அறிவிக்காது பஸ்களில் ஏற்றப்படும் இந்த மலையகத் தமிழர்கள் இரவோடிரவாக மலையகத்தின் பல பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு வீதிகளில் இறக்கிவிடப்படுவர். பங்குனி 14 ஆம் திகதி இந்த துடைத்தழிக்கும் நடவடிக்கைக்கு இன்னுமொரு பரிணாமம் சேர்த்துக்கொள்ளப்பட்டது. திருகோணமலைக்கு மேற்காக 25 கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கும் பன்குளத்தில் அமைக்கப்பட்டிருந்த மலையக மக்களின் 16 கொட்டகைகளுக்கு சிறிலங்கா பொலீஸார் தீமூட்டினர். தொண்டைமான் இதுபற்றிக் கேள்விப்பட்டபோது நானும் அவருடன் கூடவிருந்தேன். செய்தியைக் கேட்ட தொண்டைமான் கொதித்துப் போயிருந்தார். ஜெயவர்த்தனவின் கட்டளைகளின்படியே பொலீஸார் இவற்றைச் செய்கிறார்கள் என்பது அவருக்கு நன்கு புரிந்தது. அதனால் அவரால் எதுவுமே செய்ய முடியவில்லை. அவரால் செய்ய முடிந்ததெல்லாம் பத்திரிக்கை அறிக்கையொன்றினை வெளியிடுவது மட்டும்தான். 1983 ஆம் ஆண்டு சித்திரை மாதம் வவுனியாவில் இயங்கிவந்த காந்தியம் அலுவலகம் இழுத்து மூடப்பட்டு, சீல் வைக்கப்பட்டது. அவ்வமைப்பின் ஸ்த்தாபகர்களான வைத்தியர் ராஜசுந்தரம் மற்றும் எஸ் ஏ. டேவிட் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைத்துவைக்கப்பட்டனர். ஜூலை இனப்படுகொலைகளில், 25 ஆம் திகதி இன்னும் 53 தமிழ் அரசியற்கைதிகளுடன் வைத்தியர் ராஜசுந்தரமும் சிங்களச் சிறைக் காவலர்களாலும், கைதிகளாலும் கொல்லப்பட்டார். டேவிட் வெலிக்கடைச் சிறைப் படுகொலையிலிருந்து உயிர் தப்பினார். மட்டக்களப்புச் சிறைச்சாலைக்கு பின்னர் வேறு தமிழ்க் கைதிகளுடன் மாற்றப்பட்ட அவர் மட்டக்களப்புச் சிறையுடைப்பின்போது அங்கிருந்து தப்பித்து இந்தியாவைச் சென்றடைந்தார். 1983 ஆம் ஆண்டு ஆடி மாதமளவில் மலையகத் தமிழர்கள் மீதான சிங்கள அரசின் அடாவடித்தனங்கள் மிகவும் அதிகரித்துக் காணப்பட்டன. பண்ணைகளில் இருந்து பெரும்பாலான மலையகத் தமிழர்களை அரசு விரட்டியடித்திருந்தது. இப்பகுதிகளில் பெருமளவிலான தெற்குச் சிங்களவர்களைக் குடியேற்றும் நடவடிக்கைகளை அரசு முடுக்கிவிட்டிருந்தது. 1983 ஆம் ஆண்டின் தமிழினப் படுகொலைகள் இச்சிங்களக் குடியேற்றங்களைத் தற்காலிகமான‌ தேக்க நிலைக்கு கொண்டுவந்தன. தமிழர்களின் தனிநாடான ஈழத்திற்கான அவர்களின் கோரிக்கையினை முற்றாக அழித்துவிடுவதற்கான சூழ்ச்சித் திட்டம் 1983 ஆம் ஆண்டு பங்குனி மாத‌த்தில் கொழும்பு மகாவலி அமைச்சிலேயே போடப்பட்டது. தமிழீழத்தின் அடிப்பகுதியை முற்றாக உடைத்தெடுக்கும் நோக்கத்துடன் தமிழர் தாயகத்தை சிங்களக் குடியேற்றங்களை உருவாக்குவதன் மூலம் மூன்று பிரிவுகளாகச் சிதைப்பதென்று அங்கு திட்டமிடப்பட்டது. அச்சிங்களக் குடியேற்றத் திட்டங்களாவன, மாதுரு ஓயாக் குடியேற்றத் திட்டம், வலி ஓயா (மணலாறு) சிங்களக் குடியேற்றம் மற்றும் மல்வத்து ஓயா சிங்களக் குடியேற்றம் என்பனவே அவை மூன்றுமாகும். சிங்களத்தில் ஓயா எனப்படுவது ஆற்றினைக் குறிக்கும். இந்த மூன்று ஆற்றுப்படுக்கைகளின் ஓரங்களில், செழிப்பான தமிழர் தாயகத்தில் சிங்களவர்கள் அரச முனைப்புடன் குடியேற்றப்பட்டார்கள். தமிழர்கள் பெரும்பான்மையினராக வாழும் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் எல்லையிலேயே மாதுரு ஓயா சிங்களக் குடியேற்றம் அமைக்கப்பட்டிருக்கிறது. மாதுரு ஓயா ஆற்றினையண்டி உருவாக்கப்படும் சிங்களக் குடியேற்றத்தினூடாக திருகோணமலை மாவட்டத்திற்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் இடையிலான நிலத்தொடர்பு முற்றாக அறுத்தெறியப்பட்டிருக்கிறது. வெலி ஓய சிங்களக் குடியேற்றம் திருகோணமலை மாவட்டத்திற்கும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் இடையே இருக்கும் நிலத்தொடர்பை மிகவும் பலவீனமாக்கும் வகையில் அரசால் உருவாக்கப்பட்டது. மல்வத்து ஓய சிங்களக் குடியேற்றம் மன்னார் மாவட்டத்தின் தென்பகுதியூடாக ஊடறுத்துச் செல்கிறது. மன்னார் மாவட்டத்தின் தென்பகுதிகளை வட மாகாணத்திலிருந்து பிரித்தெடுக்கும் நோக்கத்துடனேயே இக்குடியேற்றம் அரசால் உருவாக்கப்பட்டது. இம்மூன்று சிங்களக் குடியேற்றங்களும் முற்றுபெற்ற பட்சத்தில் வடமாகாணத்தின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களும், சிங்களவர்களால் அரிக்கப்பட்ட மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் வடக்கு எச்சங்களும் மட்டுமே வட மாகாணத்தில் எஞ்சியிருக்கின்றன. வெலி ஓய நீர்ப்பாசணக் கால்வாய் 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற தமிழினப் படுகொலை முடிந்த கையோடு மாதுரு ஓயாச் சிங்களக் குடியேற்றத் திட்டம் அமுல்ப்படுத்தப்பட்டது. ஆனால் மகாவலி அமைச்சில் பணிபுரிந்த அதிகாரிகளின் ஆர்வக் கோளாரினால் அவ்விடயம் வெளித்தெரிய வந்ததையடுத்து அது தற்காலிகமாகக் கைவிடப்பட்டது. சிங்களவர்களைக் குடியேற்றுவது தமிழரின் தனிநாட்டுக் கோரிக்கையினைப் பலவீனப்படுத்தவே என்று அதிகாரிகள் வெளிப்படையாகப் பேசி வந்தமை இந்தியாவின் எதிர்ப்பையும், சர்வதேசத்தில் அதிருப்திகளையும் ஏற்படுத்தி விட்டிருந்தது. அவமானப்பட்டுபோன ஜெயார் இக்குடியேற்றங்களுக்கும் தனக்கும் எந்தவித தொடர்புகளும் இல்லை என்று காட்டத் தலைப்பட்டார். ஆனால், முல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாற்றினை வெலி ஓய எனும் சிங்களக் குடியேற்றமாக மாற்றும் திட்டம் முழுமூச்சுடன் ஜெயாரினால் ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்பட்டு வந்தது. 1983 ஆம் ஆண்டு புரட்டாதி 30 ஆம் திகதி சீனாவின் தலைநகர் பீஜிங்கிலிருந்து பாக்கிஸ்த்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்திற்குப் பயணம் செய்த அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் கொழும்பில் தங்கி ஜெயாருடன் தேநீர் அருந்தினார். இந்திய புலநாய்வுத்தகவல்களின் அடிப்படையில் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் வெயின்பேர்கரின் ஜெயாருடனான சந்திப்பு இலங்கைக்கு ஆயுத உதவிகளைச் செய்வது தொடர்பாகவே அமைந்திருந்தது. இலங்கைக்கு நேரடியான ஆயுத வழங்கலைச் செய்வதில் அமெரிக்க அரசாங்கம் சங்கடப்படுவதாக வெயின்பேர்கர் ஜெயாரிடம் தெரிவித்திருக்கிறார். ஆகவே, இலங்கைக்குத் தேவையான ஆயுதங்களை இஸ்ரேலின் ஊடாகவோ அல்லது பாக்கிஸ்த்தானூடாகவோ தன்னால் செய்துகொடுக்கமுடியும் என்று அவர் ஜெயாரிடம் உறுதியளித்திருக்கிறார். அமெரிக்காவின் ஆயுத உதவி உறுதியாக்கப்பட்டதையடுத்து வெலி ஓயாத் திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்க ஜெயவர்த்தன முடிவெடுத்தார். அமெரிக்காவினால் செய்யப்படவிருக்கும் ஆயுத உதவிகளுக்குப் பிரதியுபகாரமாக இலங்கை சில விடயங்களை ஒத்துக்கொள்ள வேண்டும் என்று ஜெயாரிடம் கோரினார் வெயின்பேர்னர். அவையாவன, இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவுகளி மீள ஆரம்பிப்பது, வொயிஸ் ஒப் அமெரிக்கா வானொலிச் சேவையினை இலங்கையில் ஆரம்பிக்கும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது, திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகளை அமெரிக்க நிறுவனம் ஒன்றிற்கு குத்தகைக்கு வழங்குவது. இம்மூன்று விடயங்கள் தொடர்பான பேரம்பேசல்களுக்கு அமெரிக்க அதிபர் ரீகனின் ஆலோசகர் வேர்னன் வோல்ட்டர்ஸ் இலங்கைக்கு வருவார் என்றும் வெயின்பேர்னர் ஜெயாரிடம் தெரிவித்தார். ஆனால், வெயின்பேர்னரோ ஊடகங்களுடன் பேசும்போது தனது பயணத்திற்கான காரணத்தை திரித்துக் கூறினார். இலங்கையில் நடக்கும் இனப்பிரச்சினை ஒரு அரசியல்ப் பிரச்சினையென்றும், அதனை அரசியல் ரீதிய்ல் மட்டுமே தீர்க்கமுடியும் என்று அமெரிக்கா நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் இந்தியாவின் உதவியுடன் தமிழர் பிரச்சினையினை இலங்கை அரசியல்த் தீர்வினூடாகத் தீர்த்துக்கொள்ளவேண்டும் என்று தான் ஜெயாரிடம் வேண்டுகோள் விடுத்த‌தாகவும் அவர் கூறினார். அமெரிக்காவின் ஆயுத உதவியினால் உற்சாகமடைந்த ஜெயவர்த்தன உடனடியாக செயலில் இறங்கினார். 1983 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் தனது பாதுகாப்புச் செயலாளரான அசோக டி சில்வாவை இணைந்த அரச படைகளின் விசேட நடவடிக்கைகள் கட்டளை மையம் எனும் புதிய பாதுகாப்புப் பிரிவை உருவாக்குமாறு பணித்தார். இக்கட்டளை மையத்தினூடாக முப்படைகளையும், பொலீஸாரையும் ஒரே கட்டளைப் பீடத்தின் கீழ் கொண்டுவர ஜெயாரினால் முடிந்தது. கடற்படைத் தளபதி அசோக டி சில்வா இக்கட்டளை மையத்தின் இணைப்பதிகாரியாகவும், மகாவலி அமைச்சின் மேலதிகச் செயலாளர் பண்டாரகொட கட்டளை மையத்தின் உதவி இணைப்பாளராகவும் ஜெயாரினால் நியமிக்கப்பட்டனர். பண்டாரகொட திருகோணமலை மாவட்டத்தில் அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய காலப்பகுதியில் அம்மாவட்டத்தில் சிங்களக் குடியேற்றங்களை துரித கதியில் நடத்திவந்தமையினைப் பாராட்டும் முகமாகவே ஜெயாரினால் அவருக்கு விசேட கட்டளை மையத்தில் உயர் பதவியொன்று வழங்கப்பட்டது. ஜெயாரின் பணிப்பின் பேரில் விசேட கட்டளைப் பணியகத்தை உருவாக்கிய அசோக டி சில்வா, அப்பணியகத்திற்கு இரண்டு முக்கிய பணிகள் கொடுக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். முதலாவது பணி, "வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் பயங்கரவாதிகளுக்கெதிரான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பது". இரண்டாவது, "இந்த மாவட்டங்களில் இடம்பெறும் குடியேற்றங்கள் மற்றும் சிவில் நிர்வாக சேவைகளை மேற்பார்வை செய்வது". அதே பத்திரிக்கையாளர் மாநாட்டில் பண்டாரகொடவும் பங்குபற்றியிருந்தார். தொடர்ந்து பேசிய அசோக டி சில்வா, விசேட கட்டளைப் பணியகத்தின் படைகளின் முதலாவது நடவடிக்கை பயங்கரவாதிகளை குறிப்பிட்ட பிரதேசத்திலிருந்து விரட்டியடிப்பதுதான் என்று கூறினார். அவர் குறிப்பிடும் விசேட நடவடிக்கை குறித்து மேலதிக தகவல்களை ஊடவியலாளர்கள் அவரிடம் கேட்க முட்பட்டபோது, "இராணுவ இரகசியங்களை வெளியே சொல்லமுடியாது" என்று கூறித் தவிர்த்துவிட்டார். ஆனால் சண் மற்றும் தி ஐலண்ட் பத்திரிக்கைகளில் தேவையானளவு விபரங்களுடன் இந்த விசேட நடவடிக்கை பற்றிய விடயங்கள் அரசால் கசியவிடப்பட்டிருந்தன. ஐப்பசி 7 ஆம் திகதி சண்டே ஐலண்ட்டில் வெளிவந்த பீட்டர் பாலசூரியவின் தலைப்புச் செய்தி இவ்வாறு கூறியது, "காந்தியம் அமைப்பினரால் குடியேற்றப்பட்ட சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் விரைவில் வெளியேற்றப்படவிருக்கிறார்கள்". "தெற்கில் காணியற்ற சிங்களவர்களைக் குடியேற்றவென உலக வங்கியின் உதவியோடு முல்லைத்தீவு மாவட்டத்தின் 500 ஏக்கர்களில் தெரிவுசெய்யப்பட்டிருந்த காணிகளில் கடந்த இரு வருடங்களாக சட்டவிரோதமாகக் கூடியேறி வாழ்ந்துவரும் 50 மலையகத் தமிழ்க் குடும்பங்களை அரசாங்கம் அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்துவருவதாக" அச்செய்தி கூறியது. வவுனியா அரச அதிபரால் தெரிவுசெய்யப்பட்ட காணியற்ற விவசாயிகளை இந்நிலங்களில் குடியேற்றுவது சட்டவிரோத மலையகத் தமிழ்க் குடியேற்றவாசிகளால் இதுவரையில் தடைப்பட்டிருந்ததாக அச்செய்தி மேலும் கூறியது. ஜெயவர்த்தனவின் தமிழர்களைத் தோற்கடிக்கும் செயற்பாடுகளுக்கு உற்ற துணை வழங்கியவரும், தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்குவதை ஒரு கொள்கையாகவே கொண்டிருந்தவருமான காமிணி திசாநாயக்க ஜெயாரின் ஆலோசனையின் பெயரில் உருவாக்கப்பட்ட இணைந்த படைகளின் விசேட கட்டளைப் பணியகத்தைப் பெரிதும் நியாயப்படுத்தியதுடன், அதனை பலப்படுத்தும் காரியங்களிலும் ஈடுபடலானார். வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மலையகத் தமிழர்கள் குடியேறி வாழும் இடங்களைப் பார்த்து வரவென தனது நம்பிக்கைக்குப் பாத்திரமான அதிகாரியான கருணாதிலக்கவை 1983 ஆம் ஆண்டு ஐப்பசி 10 ஆம் திகதி அம்மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்தார். கருணாதிலக்க காமினிக்கு வழங்கிய அறிக்கையில் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பெருமளவான காணிகளில் பிரஜாவுரிமையற்ற மலையகத் தமிழர்கள் குடியேறி வாழ்ந்துவருவதாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்தக் குடியேற்றங்களால் நாட்டிற்கு பாதுகாப்பு அச்சுருத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார். சண், தி ஐலண்ட் ஆகிய பத்திரிக்கைகள் காந்தியம் பண்ணைகளில் இருந்து தமிழர்களை விரட்டியடிக்கும் நடவடிக்கைகளுக்காக சிங்கள மக்களைத் தூண்டிவிடும் பிரச்சார நடவடிக்கைகளில் இறங்கின. 1983 ஆம் ஆண்டு ஐப்பசி 17 ஆம் திகதி வெளிவந்த சண் பத்திரிக்கை, "பிரஜாவுரிமையற்ற மலையகத் தமிழர்கள் வடக்குக் கிழக்கில் சட்டவிரோ காணி பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்" என்று ஓலமிட்டிருந்தது. அப்பத்திரிக்கையின் முதலாம் பக்கத்தின் காற்பகுதி இம்மலையகத் தமிழ் மக்களின் குடியேற்றத்தினை விமர்சிக்கும் விதமாகவே அமைந்திருந்தது. "பொலீஸாரும், படையினரும் இக்குடியேற்றங்களால் பாதுகாப்பு அச்சுருத்தல் ஏற்படப்போகிறது என்று அஞ்சுகின்றனர்", "அரச சார்பற்ற நிறுவனங்கள் பெருமளவு நிதியினை இச்சட்டவிரோதக் குடியேற்றங்களுக்காக வாரியிறைக்கின்றனர்", "மனித வேலியமைத்து ஈழத்தின் எல்லைகளைக் காத்துக்கொள்ள பிரிவினைவாதிகள் எத்தனிக்கிறார்கள்" என்கிற தலைப்புக்கள் கொட்டை எழுதுக்களுடன் முதற்பக்கத்தை அலங்கரித்திருந்தன. வவுனியாவில் இடம்பெற்ற‌ விடயங்களை திகதி அடிப்படையில் இவ்வறிக்கை வெளியிடப்பட்டிருந்தது, "கூட்டம் கூடமாக பிரஜாவுரிமையற்ற மலையகத் தமிழர்கள் தொண்டைமானின் மிக இழிவான செயலினால் வடக்குக் கிழக்கின் பல பகுதிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறார்கள். அதன்பின்னர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மற்றும் காந்தியம் போன்ற பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய அரச சார அமைப்புக்கள் நாடற்ற மலையகத் தமிழர்களைப் பொறுப்பேற்று யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களின் எல்லையோரக் கிராமங்களில் தமக்கென்று பாதுகாப்புப் பிரதேசம் ஒன்றினை மனித வேலி கொண்டு உருவாக்கி வருகின்றன‌ர். இதுவரையில் சுமார் 10,000 நாடற்றவர்கள் இப்பகுதிகளில் குடியேறி உள்ளதுடன் இவர்களுக்கான நிதியினை நோர்வேயின் ரெட்பாணா, ஜேர்மன் அமைப்பு, கத்தோலிக்கத் திருச்சபையினால் நடத்தப்படும் செடெக் மற்றும் சர்வோதய ஆகிய அரசுசாரா அமைப்புக்கள் வழங்கிவருகின்றன" என்றும் கடுமையாகச் சாடியிருந்தது.
  7. சமாதானப் பேச்சுவார்த்தைகளை உடனடியாக நிறுத்தக்கோரி கொழும்பில் மற்றுமொரு மாபெரும் ஆர்ப்பாட்டத்தினையும் ஊர்வலத்தையும் நடத்திய தீவிர சிங்கள இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி 23 சித்திரை 2002 அதி தீவிர சிங்கள இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணியினர் அரசாங்கம் புலிகளுடன் மேற்கொண்டுவரும் சமாதான முயற்சிகளை உடனடியாக நிறுத்தக்கோரி கொழும்பு லிப்டன் சதுக்கத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தையும் ஊர்வலம் ஒன்றினையும் நடத்தியிருக்கிறது. சுமார் 5,000 தீவிரவாத சிங்களவர்களை ஒன்றுசேர்த்த மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளரான டில்வின் சில்வா ஊர்வலத்திற்குத் தலைமை தாங்கிச் சென்றார். லிப்ட்டன் சதுக்கத்தில் ஆரம்பமாகிய ஊர்வலம் கொழும்பு ஹயிட் பார்க் இல் முடிவிற்கு வந்தது. சமாதான முயற்சிகளை எப்படியாவது தடம்புரளச் செய்வதன் மூலம் தமிழர்க்கு கொடுக்கவிருப்பதாகக் கூறப்படும் அதிகாரப் பகிர்வினை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடக் கங்கணம் கட்டியிருக்கும் தீவிர சிங்கள இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னண்னியினர் இன்னொரு அணியினர் மேற்கு மாகாண சபையில் சமாதானப் பேச்சுக்களை நிறுத்தக் கோரும் விவாதம் ஒன்றினை இருநாட்களாக நடத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் திருகோணமலை அமைப்பான கிழக்கு மாகாண மக்கள் அமைப்பு எனும் அதி தீவிர சிங்கள இனவாதிகளின் உறுப்பினர்கள் சித்திரை 24 ஆம் திகதி திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றினை நடத்தவிருப்பதாக பொலீஸார் அறிவித்திருக்கின்றனர். புலிகள் மேல் நடைமுறையில் இருக்கும் தடையினை நீக்குவதற்கெதிராகவும், வட கிழக்கு மாகாண‌ங்களின் இடைக்கால நிர்வாகத்தை புலிகளிடம் ஒப்படைப்பதற்கு எதிராகவும் இந்த பேரணியை மக்கள் விடுதலை முன்னணியின் திருகோணமலை அணி நடத்துகிறது. https://www.tamilnet.com/art.html?catid=13&artid=6874 உங்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கும், ஊக்கத்திற்கும் நன்றிகள் நொச்சி, இந்தத் தொடரின் ஆங்கில மூலம் தமிழ்நெட் மற்றும் தமிழ் கார்டியன் இணையங்களில் இருக்கிறது. நான் இவற்றைச் சேமித்து வைப்பது பற்றி யோசிக்கவில்லை. ஆனால் நீங்கள் கூறுவது போல செய்வது நலம்தான். ஏனென்றால் ஒருமுறை நான் எழுதி, சேமித்துவைக்காத பகுதியொன்று யாழில் தொழிநுட்பக் கோளாறு காரணமாக அழிந்துபோனது நினைவில் இருக்கிறது. நட்புடன் ரஞ்சித்
  8. வடக்குக் கிழக்கில் இடம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தமது வாழிடங்களுக்குத் திரும்பும்வரை உள்ளூராட்சித் தேர்தல்களை ஒத்திப்போட்ட அரசு, ‍ எதிர்த்து வழக்குத் தக்கல் செய்ய விழையும் மக்கள் விடுதலை முன்னணி 5 சித்திரை 2002 நாட்டில் நடக்கவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தல்களை அனைத்து மாகாணங்களிலும் ஒரேநேரத்தில் நடத்துவதாக முன்னர் அரசால் அறிவிக்கப்பட்டது. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளிற்கு அமைவாக, நடமைமுறையில் இருக்கும் சமாதான முயற்சிகளைப் பாவித்து வடக்குக் கிழக்கில் பல வருடங்களாக இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களிலும், அகதிமுகாம்களிலும் இன்றும் வசித்துவரும் தமிழர்கள் தமது நிரந்தர வாழிடங்களுக்குத் திரும்பும்வரை அப்பகுதிகளில் நடக்கவிருந்த உள்ளூராட்சித் தேர்தல்களை பிந்திய நாளொன்றிற்கு நகர்த்த அரசாங்கம் இணங்கியிருந்தது. தமிழர்களின் வேண்டுகோளிற்குச் செவிசாய்த்து ரணில் அரசாங்கம் தேர்தலைப் பிற்போட்டிருப்பதாகக் கூறி, இந்த முடிவினை எதிர்த்துவரும் தீவிர இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணியினர் வடக்குக் கிழக்கில் தேர்தல்கள் ஒத்திப்போடப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வழக்கொன்றினைத் தாக்கல் செய்யும் வேலைகளின் இறங்கியிருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் சட்ட ஆலோசகர் சுனில் யட்டவள கூறியிருக்கிறார். https://www.tamilnet.com/art.html?catid=13&artid=6826
  9. தீவிர சிங்கள இனவாதிகளின் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் பிக்குகள் அணி பேச்சுவார்த்தைகளுக்கெதிராக கொழும்பில் இன்னொரு ஆர்ப்பாட்டத்தினை நடத்தியது 18 பங்குனி 2002 தீவிர சிங்கள இனவாதிகளின் கூடாரமான மக்கள் விடுதலை முன்னணியின் பெளத்த பிக்குகள் அணியும் இன்னும் சில பிரிவுகளும் இணைந்து புலிகளுக்கும் அரசிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்டைருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இரத்துச் செய்யக் கோரியும், பேச்சுவார்த்தைகளை நிறுத்துமாறும் கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தியிருக்கின்றன. பேச்சுக்களை நிறுத்தவும், யுத்தநிறுத்தத்தினை நிறுத்தவும் மக்கள் விடுதலை முன்னணியினர் நாடு முழுதும் சிங்கள மக்களை அணிதிரட்டி நடத்திவரும் ஆர்ப்பாட்டங்களின் தொடர்ச்சியாகவே கொழும்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. தமிழர்களுடன் அதிகாரப் பகிர்வையும், சமஷ்ட்டி அடிப்படையிலான ஆட்சிமுறையினையும், வடக்குக் கிழக்கு இணைப்பையும் தொடர்ச்சியாக எதிர்த்துவரும் இந்த இனவாதக் கட்சி நடைமுறையில் இருக்கும் அரசாங்கத்தைப் பலவீனமாக்கி பேச்சுக்களைத் தடம்புரளச் செய்யும் நோக்கில் ஜனாதிபதி சந்திரிக்காவுடனும், ஏனைய தீவிர சிங்கள இனவாதக் கட்சிகளுடனும் இணைந்து சூழ்ச்சிகளில் ஈடுபட்டு வருவது நாம் அறிந்ததே. https://www.tamilnet.com/art.html?catid=13&artid=6779
  10. வேலையற்ற பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டத்தை பின்னாலிருந்து இயக்கி அரசை ஆட்டங்காண வைக்க முயலும் தீவிர சிங்கள இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணி 14 பங்குனி 2002 நாட்டில் இருக்கும் 30,000 வேலையற்ற பட்டதாரிகள் நெடுங்காலமாக தமக்கு வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தித் தருமாறு அரசுகளைக் கேட்டுக்கொண்டே வருகின்றனர். இவர்களின் உண்மையான கோரிக்கைகளை செவிமடுத்துத் தீர்த்துவைக்க அரசுகள் இன்னும் தவறியிருக்கின்றன. இந்த பின்னணியில், அரசாங்கம் புலிகளுடன் செய்திருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம், அதன் மூலமான யுத்த நிறுத்தம் ஆகியவற்றை எப்படியாவது கலைத்தே தீருவது என்று கங்கணம் கட்டியிருக்கும் தீவிர சிங்கள இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணியினர் வேலையற்ற பட்டதாரிகளின் கோரிக்கையினை அரசைக் கவிழ்க்கும் தமது நடவடிக்கையின் ஒரு அங்கமாகப் பாவிக்க எத்தனித்திருக்கிறார்கள். பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்த்தலமான அலரி மாளிகையின் முன்னால் மக்கள் விடுதலை முன்னணியினரால் முடுக்கிவிடப்பட்ட சில வேலையற்ற பட்டதாரிகளும் அவர்களின் பெற்றோரும் தமது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் தாம் சாகும்வரை உண்ணாவிரதத்தில் குதிக்கப்போவதாகக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். குறுகிய அரசியல் இலாபத்திற்காக நாட்டு மக்களை உசுப்பேற்றிவிடும் இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணியினர் வேலையற்ற பட்டதாரிகள் பின்னால் ஒளிந்துநின்று தமது அரசியல் நலன்களை இதன்மூலம் அடைய எத்தனிக்கிறார்கள் என்று அரசு கண்டித்திருக்கிறது. https://www.tamilnet.com/art.html?catid=13&artid=6769
  11. தலைவர் பிரபாகரனிற்கும், ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையே கைச்சாத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இரத்துச் செய்யவேண்டும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சிங்கள இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி பதிவுசெய்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளச் சம்மதம் 05 பங்குனி 2002 தலைவர் பிரபாகரனிற்கும், ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் சட்டத்திற்கு முரணானது என்று கூறி தீவிர சிங்கள இனவாதிகளின் கூடாரமான மக்கள் விடுதலை முன்னணி கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கினை விசாரிக்க அந்நீதிமன்றம் முடிவுசெய்திருக்கிறது. இந்த முறையீட்டில் நடைமுறையில் இருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை உடனடியாகச் செல்லுபடியற்றதாக தடைவிதிக்கும் உத்தரவு ஒன்றினைப் பிறப்பிக்க வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி கோரியிருந்தது. தனது முறையீட்டில் தலைவர் பிரபாகரன், ரணில் விக்கிரமசிங்க மற்றும் சட்டவாளர் நாயகம் ஆகியோரைப் பிரதிவாதிகளாக மக்கள் விடுதலை முன்னணி குறிப்பிட்டிருந்தது. இலங்கையில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கம் ஒன்றுடன் ஒப்பந்தம் ஒன்றிற்குள் நாட்டின் பிரதமர் கைச்சாத்திட்டிருக்கிறார் என்பதனால் அவர் நாட்டின் அரசியலமைப்பினை மீறிச் செயற்பட்டிருக்கிறார் என்பத‌னை அடிப்படையாக வைத்தே இவ்வழக்குத் தக்கால்செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னர் இனவாத மக்கள் விடுதலை முன்னணியினருடன் இணைந்து பேச்சுக்களை குழப்பும் நோக்கில் இயங்கிவரும் இன்னொரு சிங்கள இனவாதக் கட்சியான சிகல உறுமய பதிவுசெய்த முறையீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் பிரதிவாதிகளுக்கான அறிவித்தல்களை மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுப்பிவைத்திருப்பதாக அறியக் கிடைக்கிறது. https://www.tamilnet.com/art.html?catid=13&artid=6752
  12. புலிகளுக்கும் ரணில் அரசிற்கும் இடையே செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மீதான பாராளுமன்ற விவாதத்தைக் கோரும் மக்கள் விடுதலை முன்னணி எனும் சிங்கள இடதுசாரி இனவாதிகள் 23 மாசி 2002 சிங்கள இடதுசாரி இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி தனது கட்சி உறுப்பினர்கள் உட்பட 40 பா.உறுப்பினர்களின் கையொப்பத்துடன், ரணில் அரசிற்கும் புலிகளுக்கும் இடையே செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மீதான பாராளுமன்ற விவாதத்தினை நடத்தவேண்டும் என்று சபையில் மகஜர் ஒன்றைக் கையளித்திருக்கிறது. "புலிகளுடன் ரணில் அரசு செய்திருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தமும், அதனுடன் இணைந்த யுத்த நிறுத்தமும் நாட்டின் பாதுகாப்பிற்கும், ஒருமைப்பாட்டிற்கும், பிராந்திய ஒருமைப்பாட்டிற்கும் பாரிய அச்சுருத்தலை விடுத்திருக்கிறது" என்று அக்கட்சி தனது மகஜரில் குறிப்பிட்டிருக்கிறது. மக்கள் விடுதலை முன்னணிக் கட்சியின் பெளத்த துறவிகள் அமைப்பு இதுதொடர்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தியதோடு உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றினையும் ஒழுங்குசெய்தனர். "புலிகளும் ரணிலும் தனித்தனியாகக் கையொப்பம் இட்டுள்ள இந்த ஆவண்ங்கள் நாடு மக்களுக்கும், பாராளுமன்றத்திற்கும் வெளிப்படையாக இதுவரை காட்டப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் நாட்டின் தலைவரான சந்திரிக்காவிற்குக் கூட இந்த ஆவணம் இதுவரையில் காண்பிக்கப்படவில்லை" என்று அக்கட்சியின் பிரச்சாரச் செயளாளர் விமல் வீரவன்ச சபையில் கூறினார்.. இதேவேளை இலங்கையில் இருக்கும் பிரதான தொழில் அமைப்புக்கள், வர்த்த சம்மேளங்கள சந்திரிக்காவிற்கு அனுப்பியுள்ள வேண்டுகோளில் சமாதானத்திற்காகக் கிடைத்திருக்கும் இச்சந்தர்ப்பத்தை தயவுசெய்து கெடுத்துவிட வேண்டாம் என்று இணைந்த கோரிக்கை ஒன்றினை முன்வைத்திருக்கின்றன. மேலும், ரணில் அரசிற்கும் புலிகளுக்கும் இடையே செய்யப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் நாட்டைப் பிளவுபடுத்தப்போகின்றது என்று மக்கள் விடுதலை முன்னணி முன்வைத்துவரும் விசமப் பிரச்சாரத்தையும் வர்த்தக சம்மேளங்கள் கண்டித்திருக்கின்றன. நெருங்கிவரும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடக் காத்திருக்கும் மக்கள் விடுதலை முன்னணி எனும் சிங்கள இனவாதிகளின் கட்சி, தனது தேர்தல்ப் பிரச்சாரங்களில் பேச்சுவார்த்தையினால் நாடு பிளவுடபப்போகிறது, தமிழ் மக்களுக்கு அதிகாரம் வழங்கப்படப்போகிறது என்கிற கோசங்களை முன்னிறுத்தி வருகின்றனர். https://www.tamilnet.com/art.html?catid=13&artid=6732
  13. மக்கள் விடுதலை முன்னணி சோசலிசக் கோட்பாடுகளை மறந்து குறுகிய அரசியல் இலாபத்திற்காக இனவாதம் கக்குகிறது - ‍ கொழும்பிலிருந்து வெளிவரும் ஹிரு பத்திரிக்கை ஆசிரியத் தலையங்கம் 17 மாசி 2002 கொழும்பிலிருந்து வெளிவரும் சிங்கள வார இதழான ஹிரு, ரணில் அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையே நடந்துவரும் பேச்சுக்களுக்கெதிராகக் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்துவரும் சிங்கள இனவாதிகளின் கூடாரமான ஜனதா விமுக்திப் பெரமுனவைச் சாடியிருக்கிறது. " வடக்குக் கிழக்கில் தமிழ் மக்களுக்கு இதுவரை மறுக்கப்பட்டிருக்கும் அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகளைக் கொடுக்க மறுப்பதன் மூலம் சோசலிஸ் சித்தார்த்தங்களை மக்கள் விடுதலை முன்னணி தூக்கியெறிந்து செயற்பட்டு வருகிறது" என்று இப்பத்திரிக்கை விமர்சனம் செய்திருக்கிறது. "தனது குறுகிய அரசியல் இலாபத்திற்காக மிகவும் கீழ்த்தரமான இனவாத அரசியலை அக்கட்சி கையில் எடுத்திருக்கிறது. இந்நாட்டில் வாழும் தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற அரசியல் ரீதியிலான பிரச்சினைகள் பற்றியோ அவர்களுக்கு மறுக்கப்பட்டிருக்கும் உரிமைகள் குறித்தோ மக்கள் விடுதலை முன்னணிக்கு அல்க்கறையோ அல்லது அறிவோ இருக்கவில்லை" என்றும் அது மேலும் கூறுகிறது. "தமிழர்களுக்கு உரிமைகள வழங்கப்பட்டு அவர்கள் நாட்டின் ஏனைய மக்கள் போன்று சுயகெளரவத்துடன் வாழுவதை உறுதிசெய்யும் நோக்குடன் நடக்கும் பேச்சுக்களை எப்படியாவது குழப்பிவிட மக்கள் விடுதலை முன்னணி கங்கணம் கட்டியிருக்கிறது. இக்கட்சியைப் போன்று இன்னும் சில தெற்கின் இனவாதக் கட்சிகள் வடக்குக் கிழக்கில் பட்டினியை எதிர்நோக்கும் தமிழ் மக்களுக்கு உணவையும் மருந்துகளையும் அனுப்பக்கூடாது என்று ஆர்ப்பாட்டங்களைச் செய்யும் அதேவேளை, தெற்கில் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துவருவதாகவும் பிரச்சாரம் செய்துவருகின்றன" என்றும் அது சாடியிருக்கிறது. தமிழர்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்படக்கூடாது எனும் கோஷத்தை முன்வைத்தே மக்கள் விடுதலை முன்னணி சிங்கள மக்களை அணிதிரட்டி பேச்சுக்கள் தடம்புரளச் செய்ய‌ முயன்று வருகிறது. https://www.tamilnet.com/art.html?catid=13&artid=6709
  14. முடிந்தால் புலிகள் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடையினை நீக்கிப் பார்க்கட்டும் - ரணில் அரசிற்குச் சவால் விடும் சிங்கள இனவாதக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி 6 மாசி 2002 தீவிர இனவாத சிங்கள இடதுசாரிக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி விடுதலைப் புலிகள் மீதான தடையினை முடிந்தால் நீக்கிப் பார்க்கட்டும் என்று ரணில் அரசிற்குச் சவால் விட்டிருக்கிறது. நுகேகொடையில் சுமார் 2000 கட்சி ஆதரவாளர்கள் முன்னிலையில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவே இதனைக் கூறியிருக்கிறார். மேலும் இக்கூட்டத்தில் பங்குபற்றிய பிரச்சாரச் செயலாளரான விமல் வீரவன்ச பேசும்போது புலிகளுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தை நாட்டிற்குச் செய்யும் துரோகம் என்று கூறினார். மேற்குலக ஏகாதிபத்தியவாதிகளின் சூழ்ச்சித் திட்டத்தின்படியே ஈழவாதிகளுக்கு அரசு பணிந்துபோகிறது என்றும் அவர் கூறினார். நுகேகொடை மேடையில் அமர்ந்திருக்கும் அக்கட்சியின் பெண் உறுப்பினர் அஞ்சான் உம்மா சந்திரிக்காவின் ஆட்சியைத் தக்கவைக்க இனவாதப் பேரம் பேசிய இக்கட்சி, ரணில் அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையே நடந்துவரும் பேச்சுக்களுக்கெதிராகச் சிங்கள மக்களை அணிதிரட்டி வருவதோடு, தமிழ் மக்களுக்கு பிராந்திய அதிகாரப் பரவலாக்கம் வழங்கப்படுவதையும் எப்படியாவது தடுத்தே தீருவோம் என்று சூளுரைத்து வருகிறது. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் சந்திரிக்காவின் கட்சியுடன் சேர்ந்து போட்டியிட்ட இனவாதிகளான இக்கட்சியினர், சிங்களவர்களின் நாட்டைப் பிளவுபடுத்தி ஈழவாதிகளுக்குக் கொடுக்கவே ரணில் முயல்கிறார் என்று கடுமையான பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டமை நினைவிலிருக்கலாம். புலிகளுடனான ரணில் அரசின் பேச்சுக்களுக்கெதிராக சிங்கள மக்களை அணிதிரட்டி வரும் இக்கட்சியின் கூட்டங்களுக்கு பெருமளவில் சிங்களவர்கள் கூடிவருவது, இக்கட்சியின் இனவாதப் பிரச்சாரம் சிங்கள மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுவருகிறது என்பதையே காட்டுகிறது. நுகேகொடையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கலந்துகொண்ட சிங்களவர்களின் எண்ணிக்கையே இதற்குச் சாட்சி. ரணில் அரசு புலிகளுடன் நடத்திவரும் பேச்சுக்கள் வெற்றியடையும் பட்சத்தில் இலங்கை தற்போது சிக்குண்டிருக்கும் பொருளாதாரச் சிக்கலில் இருந்து வெளிவருவது சாத்தியமாதலால், அதனைத் தடுத்து தனது செல்வாக்கினை ஏழைச் சிங்கள மக்களிடையே வலுவாக்கும் குறுகிய நோக்கத்திலேயே இனவாதிகளான ஜனதா விமுக்திப் பெரமுனக் கட்சியினர் இப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று தெற்கின இடதுசாரிப் பத்திரிக்கையொன்று செய்தி வெளியிட்டிருக்கிறது. https://www.tamilnet.com/art.html?catid=13&artid=6685
  15. "தமிழருக்கு அதிகாரங்கள் வழங்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம்" எனும் தனது போராட்டத்தைக் கூர்மையாக்கும் சிங்கள இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி 29 தை 2002 பல நூற்றுக்கணக்கான மக்கள் விடுதலை முன்னணி இனவாதிகள் கொழும்பின் பல பகுதிகளிலும் நடத்திய ஆர்ப்பாட்டங்களில் தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதை தாம் அனுமதிக்கப்போவதில்லை என்று கோஷமிட்டுள்ளனர். கடந்த தேர்தலில் 16 உறுப்பினர்களைப் பெற்றுக்கொண்டு மூன்றாவது பெரிய கட்சி எனும் நிலையினை இந்த இனவாதக் கட்சி அடைந்திருக்கிறது. சிங்கள பெளத்த இனவாதிகளின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேடிவரும் இக்கட்சி தமிழ் மக்களுக்கு சமஷ்ட்டி அடிப்படியில் அதிகாரங்கள் பகிரப்படுவதை தாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்று கூறுகிறது. ரணில் தலைமையிலான அரசிடம் தாம் முன்வைத்திருக்கும் நிபந்தனைகளை அவர் ஏற்றுக்கொள்ளாதவிடத்து நாடுத‌ழுவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு இவ்வினவாதக் கட்சி தனது பிரதேச ஒருங்கிணைப்பாளர்களுக்கு அறிவித்தலும் விடுத்திருக்கிறது. "அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் ஈழக்கனவிற்கு வலுச்சேர்க்க ரணில் அரசு எடுத்துவரும் முயற்சிகளுக்கெதிராக நாற்பது இலட்சம் சிங்கள மக்கள் சுதந்திரக் கட்சித் தலைமையிலான முன்னணிக்கும், இன்னும் ஒன்பது இலட்சம் சிங்கள மக்கள் எமது கட்சியான மக்கள் விடுதலை முன்னணிக்கும் வாக்களித்திருக்கிறார்கள். ஆகவே ரணிலின் அரசாங்கம் புலிகளுக்கு வடக்கையும் கிழக்கையும் தாரைவார்த்துக் கொடுப்பதற்குச் சிங்கள மக்கள் அவருக்கு ஆணை வழங்கவில்லை என்பது தெளிவாகிறது" என்று மூத்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ஒருவர் மகரகமவில் நடைபெற்ற பேரணியின்போது கூறினார். . சந்திரிக்காவின் ஆட்சியின்போது மாவனல்லவில் முஸ்லீம்கள் மீது சிங்கள இனவாதிகளின் தாக்குதலை சந்திரிக்கா தடுக்கவில்லை என்கிற காரணத்தை முன்வைத்து முஸ்லீம் காங்கிரஸ் அவருக்கு வழங்கிவந்த ஆதரவை இரத்துச் செய்தபோது, சந்திரிக்காவைத் தொடர்ந்தும் ஆட்சியில் வைத்திருக்க சிங்கள இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனை அடிப்படையில் முன்வந்தனர். அந்த நிபந்தனை யாதெனில் தமிழர்களுக்கு பிராந்திய அதிகாரத்தினை வழங்கும் எந்த பேச்சுக்களிலும் சந்திரிக்கா ஈடுபடலாகாது என்பதுதான். அதனைச் சந்திரிக்காவும் ஏற்றுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. ரணில் அரசின் சமாதானப் பேச்சுக்களுக்கெதிராகக் கடும் ஆர்ப்பாட்டங்களை நடத்திவரும் மக்கள் விடுதலை முன்னணி, "தமிழ் மக்களுக்கு இனப்பிரச்சினை என்று ஒன்றில்லை, இருப்பதெல்லாம் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளால் தூண்டப்பட்ட ஈழக்கனவு மட்டும்தான், ஆகவே தமிழர்களுக்கு சமஷ்ட்டி அடிப்படையிலோ அல்லது அதிகாரப் பகிர்வு அடிப்படையிலோ தீர்வு வழங்கினால் அது நாட்டைப் பிளவுபடுத்திவிடும், ஆகவே அதனை எப்படியாவது தடுத்து நிறுத்துவோம்" என்கிற கோஷத்தினை முன்வைத்து நாடெங்கிலும் சிங்கள மக்களிடையே கடுமையான பிரச்சாரத்தினை முன்னெடுத்து வருகிறது. இனப்பிரச்சினைக்கான தீர்வாக மாக்ஸிய அரசு ஒன்றை அமைத்து, அதன் மூலம் தமிழர்களுக்கு ஏனைய மக்களைப்போன்ற உரிமைகளை வழங்கினால் சரி என்றும் அது கூறி வருகிறது. https://www.tamilnet.com/art.html?catid=13&artid=6663
  16. புலிகளுக்கெதிரான தடையினை நீக்க விடமாட்டோம், நாடு பிளவுபடுவதையும் தடுப்போம் மக்கள் விடுதலை முன்னணி 25 தை 2002 தீவிர சிங்கள இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான 46 சிங்கள பெளத்த இனவாத அமைப்புக்கள் இணைந்து நடத்திய சந்திப்பொன்றில் தமக்குள் ஒற்றுமையாகவும், தனித்தனியாகவும் இணைந்து புலிகள் மீது இலங்கையில் விதிக்கப்பட்டிருக்கும் தடையினை நீக்குவது குறித்து நடந்துவரும் முயற்சிகளுக்கு எதிராக இயங்கப்போவதாக முடிவெடுத்திருக்கின்றன. அத்துடன், நாடு பிளவுபடுவதை அனுமதிக்கப்போவதில்லை என்றும் அவை சூளுரைத்திருக்கின்றன. சிங்கள இனவாதக் கட்சிகளான மக்கள் விடுதலை முன்னணி, மகஜன எக்சத் பெரமுன, சிகல உறுமய ஆகியவை தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளுக்கெதிரான நிலைப்பாட்டினை எடுத்துவருவதும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு ஏதுவாக இலங்கையில் புலிகள் மீது போடப்பட்டிருக்கும் தடையினை நீக்கும் ரணிலின் அரசாங்கத்தின் முயற்சிகளை முறியடிக்கும்விதமாகச் செயற்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் , புலிகளை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கோரிவருவதையும் தாம் ஏற்கப்போவதில்லை என்று இக்கட்சிகள் வெளிப்படையாக அறிவித்திருக்கின்றன. இலங்கையில் மட்டுமன்றி, சர்வதேசத்திலும் புலிகள் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடையினை நீக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதால் சிங்களத் தேசியக் கட்சிக்ள் இணைந்து அதனை எப்படியாவது தடுத்துவிடவேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணிக்கும் மகஜன எக்சத் பெரமுனக் கட்சிக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுக்களின்போது முடிவுசெய்யப்பட்டிருக்கிறது. மேலும் பெளத்த இனவாத அமைப்பான ஜாதிக்க சங்க சபா அமைப்புடன் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ள மக்கள் விடுதலை முன்னணி இலங்கை மக்களின் நலன் கருதி புலிகள் மீதான தடையினை நீக்குவதை எதிர்க்க ஒன்றுசேர்ந்து செயற்படுவது என்று முடிவெடுத்திருக்கிறது. https://www.tamilnet.com/art.html?catid=13&artid=6652
  17. அநுரவின் வெளிவிவகார அமைச்சரான விஜித்த ஹேரத்தின் பின்னணி பல ஈழத்தமிழர்களின் இன்றைய கதாநாயகனாக பவணி வரும் இலங்கையின் ஜனாதிபதியான அநுர குமார திசாநாயக்கவின் வலது கரமும் நெருங்கிய சகாவுமான விஜித்த ஹேரத் இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக பதவியேற்றிருக்கிறார். தமிழர் மீதான இனக்கொலை அரச மயப்படுத்தப்பட்டதிலிருந்து இலங்கையின் வெளிவிவகார அமைச்சர்களாகப் பணியாற்றிய எல்லோருக்கும் கொடுக்கப்பட்ட வேலை ஒன்றுதான், அதுதான் தமிழ் மக்களின் போராட்டத்தைப் பயங்கரவாதம் என்று சர்வதேசத்தில் சித்தரித்து, தமிழ் மக்கள் மீதான படுகொலைகளை உலகெங்கும் சென்று நியாயப்படுத்துவது. ஹமீது, ரஞ்சன் விஜேரத்ன, ஹரல்ட் ஹேரத், டிரோன் பெர்ணான்டோ, லக்ஷ்மன் கதிர்காமர், அநுர பண்டாரநாயக்க, மங்கள சமரவீர, ரோகித போகொல்லாகம, ஜி எல் பீரிஸ், ரவி கருணநாயக்க, திலக் மாறப்பன என்று 1983 ஆம் ஆண்டிலிருந்து 2024 வரை இருந்த எல்லோருமே செய்த அதே பணியினை ஆற்ற தற்போதைய அமைச்சர் விஜித்த ஹேரத்தும் வந்திருக்கிறார். அவர் வெளிவிவகார அமைச்சராக ஆற்றிய முதலாவது பணி ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை அவையில் தமிழ் மக்கள் மீதான படுகொலைகள் ஈடுபட்ட இராணுவப் போர்க்குற்றவாளிகளுக்கெதிரான சர்வதேச விசாரணைப்பொறிமுறையினை எதிர்த்து வாக்களித்து வருவதற்காக சவுதி அரேபியாவிற்கு வாழ்த்துக் கூறியமை என்பதும் குறிப்பிடத் தக்கது. தற்போதைய ஜனாதிபதியை, அவரது அமைச்சரவையினை தமிழர்களின் காவல் தெய்வங்கள் என்று வழிபட ஆரம்பித்திருக்கும் தமிழ் அபிமானிகளுக்கு அநுரவின் சகாவான விஜித்த ஹேரத்தின் பின்னணி பற்றி விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம். விஜித்த ஹேரத், ஒரு தீவிர சிங்கள தேசியவாதியும் ஜனதா விமுக்தி பெரமுன எனும் தீவிரவாத சிங்கள இடதுசாரிக் கட்சியின் மிக மூத்த உறுப்பினருமாவார். இவர் அநுர குமாரவினால் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர், சமய விவகாரங்களுக்கான அமைச்சர், தொழிநுட்ப ஊடகத்துறை, சுற்றுப்புறச் சூழல், நீர் வழங்கல், தோட்டத்துறை, சமூகவியல், வீடமைப்பு மற்றும் போக்குவரத்து போன்ற அமைச்சுக்களுக்குப் பொறுப்பானவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். நாம் இவரது கடந்தகால செயற்பாடுகளைப் பார்க்கலாம். மக்கள் விடுதலை முன்னணிக்கு அவர் காட்டிவரும் அசைக்கமுடியாத விசுவாசமே அவரை அநுரகுமாரவின் நெருங்கிய சகாவெனும் நிலைமைக்கு உயர்த்தியது. விஜித்த ஹேரத் மக்கள் விடுதலை முன்னணியின் நீண்டகால உறுப்பினர். மாணவராக இருந்த காலத்தில் 1986 ஆம் ஆண்டு அவர் அமைப்பில் இணைந்தார். இவர் அமைப்பில் இணைந்த சில மாதங்களின் பின்னர் மக்கள் விடுதலை முன்னணி இலங்கை அரசிற்கெதிரான இரத்தக்களறி மிகுந்த ஆயுதக் கிளர்ச்சியை ஆரம்பித்தது. 1999 ஆம் ஆண்டு மாகாணசபைத் தேர்தல்களிலேயே அவர் முதன்முதலாக தேர்தலில் இறங்கினார். அத்தேர்தலில் கம்பகா மாவட்டத்தில் போட்டியிட்டு வெறும் 605 வாக்குகளையே அவர் பெற்றார். 2000 ஆண்டு பாராளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு 8,000 வாக்குகளுடன் வெற்றிபெற்ற அவர் அதன் பின்னர் அத்தொகுதியைத் தொடர்ச்சியாகத் தக்கவைத்து வருகிறார். பாராளுமன்ற கோப்புக்களைப் பார்க்கின்றபோது விஜித ஹேரத் எப்போதுமே பொது நிதித்துறை, மீன்வளத்துறை, பொதுப்பணித்துறை, மற்றும் விவசாயம் சார்ந்த பாராளுமன்றக் கமிஷன்களில் அங்கம் வகித்திருப்பது தெரிகிறது. பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல சட்டங்களின்போது ஹேரத் சார்பாக வாக்களித்த போதிலும், அவரால் இதுவரை எச்சட்டமும் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இலங்கை சுதந்திரக் கட்சியுடன் 2004 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணி இணைந்து ஆட்சியமைத்தபொழுது விஜித்த ஹேரத் அந்த அரசாங்கத்தின் கலாசார அமைச்சராகவும், தேசிய பாரம்பரிய அமைச்சராகவும் பதவி வகித்திருக்கிறார். பாராளுமன்றத்தில் அதிகம் பிரபலமாகாத ஒரு உறுப்பினராக ஹேரத் இருந்த போதிலும் அநுரவின் மிக நெருங்கிய சகாக்களில் ஒருவராக அவர் வலம் வந்தார். விஜித்த ஹேரத்தின் போரிற்கான ஆதரவும், நீதிவழங்கலுக்கு எதிரான அவரது நிலைப்பாடும் 2008 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியினால் கொழும்பு ஐ நா அலுவலகத்திற்கு முன்னால் ஒழுங்குசெய்யப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொள்ளும் விஜித ஹேரத் அரச அடக்குமுறைக்கெதிரான தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டக் காலம் முழுவதும் மக்கள் விடுதலை மார்க்ஸிஸச் சிந்தனைகளை முன்வைத்து தமிழ் மக்கள் மீதான இராணுவ அடக்குமுறையினை நியாயப்படுத்தியே வந்தது. ஏனைய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்களைப் போலவே விஜித்த ஹேரத்தும் தமிழர்களுடனான சமாதானப் பேச்சுக்களுக்கு மிகக் கடும் எதிர்ப்பினைத் தொடர்ச்சியாக காட்டி வந்திருந்தார். 2004 பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சியாக ஆட்சியில் அமர்ந்த மக்கள் விடுதலை முன்னணி, புலிகளுடனான பேச்சுக்களுக்கு தொடர்ச்சியான எதிர்ப்பினைக் காட்டி வந்தது. மேலும், 2004 சுனாமிப் பேரிடரின் பின்னரான இணைந்த சுனாமி நிவாரணக் கட்டமைப்பிற்குக் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்து அதனைத் தோற்கடித்ததுடன், பேச்சுக்களை இரத்துச் செய்தால் மகிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கவும் தயார் என்று பகிரங்கமாக அறிவித்தது. 2006 ஆம் ஆண்டி ஆரம்பத்தில் மக்கள் விடுதலை முன்னணி வெளிப்படையாகவே இராணுவத் தீர்விற்கான தனது ஆணையினை அப்போதிருந்த மகிந்த அரசிற்கு வழங்கியதுடன் முள்ளிவாய்க்கால் இனக்கொலைக்கும் உறுதுணை வழங்கியது. 2007 ஆம் ஆண்டு கொழும்பில் அமைந்திருக்கும் இங்கிலாந்து தூதரகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் விடுதலை முன்னணியினர், கூடவே விஜித்த ஹேரத் இறுதி யுத்த காலத்தின்போது இலங்கை இராணுவத்தினர் பரந்தளவில் மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று மேற்குலக நாட்டு இராஜதந்திரிகள் அறிவித்து வந்த நிலையில் விஜித்த ஹேரத் தனது அமைப்புடன் இணைந்து இங்கிலாந்து தூதரகத்திற்கு முன்பாகவும் ஐ நா அமைப்பின் அலுவலகம் முன்பாகவும் அன்றைய மனிதவுரிமைக் கவுன்சில் ஆணையாளர் லுயிஸ் ஆர்பருக்கெதிராகவும் ஆர்ப்பாட்டம் செய்திருந்தார். 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் கூட்டுப் படுகொலைகளுக்குப் பின்னர் சர்வதேசத்தில் உருவாகி வந்த சுதந்திரமான போர்க்குற்ற விசாரணைகளுக்கான கோரல்களை விஜித்த ஹேரத் தொடர்ந்தும் எதிர்த்து வந்தார். "போரில் நடந்ததாகக் கூறப்படும் மனிதவுரிமை மீறல்களை விசாரிப்பது அவசியம் என்றால், அது உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றின் ஊடாக மட்டுமே விசாரிக்கப்பட முடியும். இலங்கையினை விமர்சிக்கின்ற மேற்குநாடுகள் இன் கோரிக்கைக்கு அமைவாக விசாரணைகளை நாம் நடத்தப் போவதில்லை" என்று 2015 ஆம் ஆண்டு விஜித்த ஹேரத் கூறியிருந்தார். இதுபற்றி மேலும் வாசிப்பதற்கு கீழுள்ள இணைப்பை அழுத்துங்கள். https://www.tamilguardian.com/content/sri-lankan-ministers-reject-un-investigation-mass-atrocities புதிய வெளிநாட்டு அமைச்சர் விஜித்த ஹேரத்தின் முதலாவது பணி ஐ நா மனிதவுரிமை சபையில் கொண்டுவரப்பட்ட போர்க்குற்ற விசாரணைக்கான சர்வதேசப் பொறிமுறையினை எதிர்த்து வாக்களித்த சவுதி அரேபியாவிற்கு நன்றி கூறியதே. கடந்த வாரம் வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்ற சில மணித்துளிகளுக்குப் பின்னர் சவுதி அரேபிய நாள் நிகழ்வில் உரையாற்றிய ஹேரத் ஐ நா மனிதவுரிமைச் சபையில் இலங்கை ராணுவப் போர்க்குற்றவாளிகளுக்கான சர்வதேச விசாரணைப் பொறிமுறையினை எதிர்த்து வாக்களித்த சவுதி அரேபியாவிற்கு அவர் நன்றி தெரிவித்திருந்தார். மக்கள் விடுதலை முன்னணியினருடனான ஹேரத்தின் ஆரம்ப காலம் 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தினூடாக தமிழர்களின் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுக்கலாம் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் தீவிர சிங்க‌ளத் தேசியவாதியான விஜித்த ஹேரத் தமிழ் மக்களுடன் அதிகாரப் பகிர்வென்பதே கிடையாதென்று தொடர்ந்து வாதாடி வந்தார். விஜித்த ஹேரத் போன்ற மக்கள் விடுதலை முன்னணியினரின் தலைவர்களிடம் மேலோங்கி நின்ற சிந்தனையான தமிழர்களுடன் அதிகாரத்தைப் பகிரக் கூடாதெனும் நிலைப்பாட்டினால் அவ்வமைப்பு தெற்கின் கிராமப்புறச் சிங்கள இளைஞர்களிடையே பிரபல்யம் அடையத் தொடங்கியது. மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்த்தாபகரான ரோகண விஜேவீர "தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையென்பது அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் தூண்டுதலின்பேரில் உருவாக்கப்பட்டது" என்று பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். ரோகண விஜேவீரவின் இந்த பிரச்சாரமே தமிழ் மக்களுக்கெதிரான இவ்வமைப்பின் நீண்டநாள் காழ்ப்புணர்விற்குக் காரணமாக அமைந்தது என்றால் அது மிகையில்லை. இலங்கை அரசாங்கங்களுக்கெதிராக இரு முறை ஆயுதப் போராட்டங்களில் மக்கள் விடுதலை முன்னணி ஈடுபட்டு பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களின் மரணங்களுக்குக் காரணமாக இருந்தபோதிலும் கூட, அதே காலப்பகுதியில் உரிமைக்காகப் போராடி வந்த ஈழத்தமிழர் சார்பாக கிஞ்சித்தும் அவ்வமைப்பு இரக்கமோ அக்கறையோ காட்டவில்லை. மாறாக இக்கட்சியிலிருந்தே இலங்கை சந்தித்த அதிதீவிர சிங்கள இனவாதிகள் உருப்பெற்று வெளிக்கொணரப்பட்டார்கள் . மக்கள் விடுதலை முன்னணியினுடனான தனது ஆரம்ப காலம் குறித்தும் 1987 ஆம் ஆண்டு ஆயுதக் கிளர்ச்சி குறித்தும்விஜித்த ஹேரத் பின்வருமாறு நினைவுகூர்ந்தார். "அன்றைய காலகட்டத்தில் நாட்டில் சிவில் யுத்தம் ஒன்று நடந்து வந்தது. நாம் இந்திய இராணுவத்திற்கெதிராகப் போராடினோம். அக்காலத்தில்தான் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனவிற்கும் இடையே ஒப்பந்தம் ஒன்றும் செய்யப்பட்டது" . "அவ்வொப்பந்தம் இலங்கை மக்களை வெகுவாகப் பாதித்திருந்தது. ஒப்பந்தத்தின் ஊடாக எமது திருகோணமலையில் அமைந்திருந்த எண்ணெய்க் குதங்களை இந்திய அரசாங்கத்திற்கும் இந்திய நிறுவனம் ஒன்றிற்கும் கொடுக்கவேண்டி ஏற்பட்டது. அவ்வாறே எமது நாட்டின் உளவீட்டு விவகாரங்களில் இந்தியா மூக்கை நுழைக்கத் தொடங்கியது. இந்தத் தலையீட்டினை எதிர்த்தே நான் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டது". "நான் அப்போது மக்கள் விடுதலை முன்னணியின் ஒரு உறுப்பினராக இருந்தேன். நாம் பல்வேறான ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்தினோம். இந்திய ஆக்கிரமிப்பிற்கெதிரான ஜனநாயகவழி ஆர்ப்பாட்டங்கள் பலவற்றை நாம் முன்னெடுத்தோம்". தமிழருடனான அதிகாரப் பகிர்விற்கெதிரான உறுதியான விஜித்த ஹேரத்தின் நிலைப்பாடு பொலீஸ் அதிகாரங்களோ காணி அதிகாரங்களோ மாகாணசபைகளுக்குக் கொடுக்க அனுமதிக்கப்போவதில்லை தேர்தலுக்கு 72 மணிநேரமே இருக்க மீண்டும் உறுதிப்படுத்திய‌ மக்கள் விடுதலை முன்னணி 2021 ஆம் ஆண்டு விஜித்த ஹேரத் வழங்கிய செவ்வியொன்றில், "எமது நாட்டில் நாம் பிரிவினையினை முற்றாக எதிர்க்கிறோம். ஏனென்றால் இந்த நாட்டில் இருப்பதாகக் கூறப்படும் இனப்பிரச்சினைக்கு பிரிவினை ஒரு தீர்வாக அமையாது என்று நாம் உறுதியாக நம்புகிறோம்" என்று கூறினார். அவர் தொடர்ந்து பேசும்போது, "மக்கள் விடுதலை முன்னணியினால் வெளியிடப்பட்ட புத்தகம் ஒன்றில், "பிரிவினை எப்படி இலங்கையில் இருக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமைய மாட்டாது, அவ்வாறே சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வும் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது" என்று கூறினார். "இனப்பிரச்சினைக்கான தீர்வு எவ்வாறானதாக அமையவேண்டுமெனில், இலங்கை மக்கள் அனைவருக்கும் இன, மத, அல்லது வேறு எந்த அடிப்படையிலோ அல்லாமல் ஒரேவகையான உரிமைகளை வழங்குவதனூடாக மட்டும்தான்" என்று அவர் கூறினார். "நாம் புலிகள் இயக்கத்திற்கெதிராகப் போராடினோம். ஏனென்றால் அது எமது மக்களைப் பிரிக்க முயன்றது. அவ்வியக்கத்திற்கெதிராக இன்னும் பல்வேறு வகையான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்தோம். இறுதியில் எமக்குத் தேவையான வெற்றியை நாம் அடைந்துகொண்டோம். நாம் புலிகள் இயக்கத்தை தத்துவாந்த ரீதியில் மட்டுமல்லாமல் எல்லாவழிகளிலும் தோற்கடித்து அழித்தோம்". 13 ஆவது திருத்தத்தினூடாக மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட ரீதியில் வடக்குக் கிழக்கிற்கான அதிகாரங்கள் பகிரப்படலாம் என்று அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், அதனையும் கடுமையாக எதிர்த்து வந்தார் விஜித்த ஹேரத். 2005 இல் அவர் பேசும்போது வடக்கையும் கிழக்கையும் இணைத்து ஒரு மாகாணமாக உருவாக்குவதை தாம் எதிர்ப்பதாகக் கூறினார். 2015 இல் சிங்கள இனவாதிகளின் ஆங்கில நாளேடான தி ஐலணட்டில் பேட்டியளித்த ஜேரத் "மக்கள் விடுதலை முன்னணி சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வை முற்றாக எதிர்க்கிறது" என்று கூறினார்." தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அவலங்கள் குறித்து அக்கறை காட்டினாலும் கூட சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வு இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என்று உறுதியாக நாம் நம்புகிறோம்" என்று கூறினார். மேலும், இந்திய இலங்கை ஒப்பந்தத்தின்படி குறிப்பிடப்பட்டிருக்கும் வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பது என்பதை அவர் தீவிரமாக எதிர்த்தார். "இலங்கை இந்திய ஒப்பந்தத்தினூடாக தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களை நீதிமன்றத்தினூடாக பிரித்துப்போட்டது எமது கட்சியான மக்கள் விடுதலை முன்னணியே. இந்த மாகாணங்கள் இரண்டும் தனித்தனியாக, சுதந்திரமாக இயங்க வேண்டும்" என்று அவர் கூறினார். இந்திய இலங்கை ஒப்பந்தப்படி 1987 ஆம் ஆண்டிலிருந்து இவ்விரு மாகாணங்களும் தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்தன. ஆனால் 2005 இல் மக்கள் விடுதலை முன்னணி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் 2006 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், வடக்குக் கிழக்கு இணைப்பு நிரந்தரமாக பிரிக்கப்படுவதாகவும், இம்மாகாணங்கள் இணைந்திருப்பது சட்டத்திற்கு முரணானது என்றும் தீர்ப்பு வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. மக்கள் விடுதலை முன்னணியும், தீவிர இனவாத அமைப்பான ஜாதிக ஹெல‌ உறுமயவும் வடக்குக் கிழக்கு மாகாண்ங்களின் இணைப்பிற்கெதிராகத் தொடர்ச்சியாக எதிர்ப்புத் தெரிவித்து வந்ததுடன் நீதிமன்றத்திற்கு அதனை இழுத்துச் சென்று, மாகாணங்கள் பிரிக்கப்பட்டபோது வீதிகளில் கொண்டாடி ஆர்ப்பரித்தனர். 2019 ஆம் ஆண்டு பத்திரிக்கையாளர் மாநாடொன்றில் பேசிய விஜித்த ஹேரத், "வடக்குக் கிழக்கு மாகாணங்களை இணைத்து வைத்திருப்பதனூடாக சர்வதேசத்திற்கு இந்த இணைந்த மாகாணத்தில் தமிழ் மக்களே பெரும்பான்மையாக வாழ்கிறார்கள் என்று காண்பித்து, ஆகவே இம்மாகாணங்களுக்கு தனியான அதிகாரம் தேவையென்று கோருவதே தமிழ்ப் பிரிவினைவாதிகளின் நோக்கமாகும்" என்று விஜித்த ஹேரத் கூறினார். "இதே கோரிக்கையினைத்தான் தமிழ்க் கட்சிகள் ஒவ்வொரு தேர்தலிலும் முன்வைத்து வருகின்றனர். ஆனால் நாம் இந்தக் கோரிக்கையினை எப்போதுமே நிராகரித்தே வந்திருக்கிறோம்" என்றும் அவர் கூறினார். இவ்வருடம் மாசி மாதத்தில் அநுர குமாரவுடன் தில்லிக்குப் பயணமாகிய விஜித்த ஹேரத், இலங்கையின் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையினையும், பூகோள ஒருமைப்பாட்டையும் உறுதிப்படுத்தும் விதமாக அரசியலில் ஈடுபடும் என்று உறுதிப்படுத்தியிருந்தார். 1987 ஆம் ஆண்டில் தமது அமைப்பு நடத்திய ஆயுதக் கிளர்ச்சி குறித்துப் பேசும்போது, " நாம் மிகவும் தீவிரமாக இந்திய இலங்கை ஒப்பந்தத்தினை பல ஆண்டுகளுக்கு முன்னர் எதிர்த்தோம். எமது செயற்பாடுகளை இலங்கையின் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையினையும் காக்கப் பாவிக்கிறோம். அதற்காகப் பல உயிர்த்தியாகங்களை நாம் புரிந்திருக்கிறோம்" என்று கூறினார். "இதுகுறித்த எமது நிலைப்பாடு என்றுமே மாறப்போவதில்லை" என்றும் அவர் மேலும் கூறினார். 2024 ஆம் ஆண்டு புரட்டாதி மாதத்தின் இறுதிப்பகுதியில், தேர்தலுக்குச் சற்று முன்னரான நாட்களில் பேசிய விஜித்த ஹேரத், "மகாணசபை அமைப்பு முறை இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வாகாது. இந்த நாட்டின் தேசியப் பாதுகாப்பையும், ஒற்றையாட்சியையும், ஒருமைப்பாட்டினையும் பாதுகாக்க நாம் மிகப்பெரிய தியாகங்களைச் செய்திருக்கிறோம். நேற்றும், இன்றும், நாளையும் இதுதொடர்பான எமது நிலைப்பாடு மாறப்போவதில்லை. இந்த நாட்டின் ஒருமைப்பாட்டினை எவ்விலை கொடுத்தாவது பாதுகாப்பது எமது கட்சியின் தலையாய கடமையாகும்" என்று அவர் பிரகடணம் செய்தார். அகில இலங்கை பெளத்த காங்கிரஸின் மாநாடு ஒன்றில் பேசிய விஜித்த ஹேரத், "பெளத்த மதத்திற்கான முன்னுரிமையினைக் கொடுப்பதில் தமது கட்சி எப்போதும் உறுதியாக நிற்கும்" என்று கூறினார். "நாம் அன்றே இதுகுறித்து உறுதிப்படுத்திவிட்டோம். அதையே நாம் இப்போதும் நினைவுபடுத்துகிறோம். இந்த நாட்டின் இனப்பிரச்சினைக்கு மாகாணசபை அமைப்பு முறை தீர்வாகாது. எமது அரசியலமிப்பின் 9 ஆவது அத்தியாயம் எக்காரணம் கொண்டும் மாற்றப்பட மாட்டாது என்று என்னால் உறுதிபடக் கூறமுடியும்" என்று அவர் கூறினார். இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தில் 9 ஆம் அத்தியாயம் என்பது பின்வருமாறு கூறுகிறது, "இலங்கைக் குடியரசு பெளத்த மதத்திற்கு எல்லாவற்றைக் காட்டிலும் முன்னுரிமையும், உயர்ந்த இடமும் வழங்குகிறது. ஆகவே பெளத்த மத்தத்தைப் போற்றிப் பாதுகாத்து வளர்ப்பதென்பது ஒவ்வொரு அரசினதும் தலையாய கடமையாகும். ஏனைய மதங்களுக்கான இடம் அத்தியாயம் 10 மற்றும் 14 இல் குறிப்பிடப்பட்டுள்ளதற்கமைய வழங்கப்படும்" என்று கூறப்பட்டிருக்கிறது. "முன்னைய அரசாங்கங்கள் பெளத்த மதத்திற்கு வழங்கிய அதே முன்னுரிமையினையும், உயர்ஸ்த்தானத்தையும் மக்கள் விடுதலை முன்னணியின் அரசும் வழங்கும்" என்று விஜித்த ஹேரத் அங்கு உறுதி வழங்கினார். https://www.tamilguardian.com/content/who-sri-lankas-foreign-minister-vijitha-herath
  18. ******************************************************************************************************************************************ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் அவையில் இலங்கைக்கு ஆதரவளித்து, போர்க்குற்றங்களுக்கான சர்வதேச விசாரணைப் பொறிமுறைக்கெதிராக வாக்களித்தமைக்காக சவுதி அரேபியாவிற்கு நன்றி தெரிவித்த இலங்கையின் புதிய வெளிநாட்டமைச்சர் விஜித்த ஹேரத் ******************************************************************************************************************** 26, பபுரட்டாதி 2024 https://www.tamilguardian.com/content/new-sri-lankan-foreign-ministers-first-remarks-thank-saudi-arabia-combatting-un-resolutions இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் முக்கியஸ்த்தர் விஜித ஹேரத் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் சபையில் இலங்கைக்கு ஆதரவளித்து, தமிழ் மக்கள் மீது இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கான சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையினை எதிர்த்து வாக்களித்து வருகின்றமைக்காக சவுதி அரேபியாவிற்கு தனது அரசாங்கம் சார்பாக நன்றி தெரிவித்ததன் ஊடாக‌ வெளிவிவகார அமைச்சராக தனது முதலாவது கடைமையினை ஆற்றியிருக்கிறார். மக்கள் விடுதலை முன்னணியின் மிக முக்கிய உறுப்பினராகக் கருதப்படும் விஜித்த ஹேரத், தான் வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்ற‌ சற்று நேரத்தின் பின்னர், கொழும்பில் இடம்பெற்ற சவுதி அரேபியாவின் தேசிய நாள் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இந்த நன்றியைத் தெரிவித்திருந்தார். "ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் சபையில் இலங்கைக்கு ஆதரவாகச் செயற்பட்டு வரும் சவுதி அரேபியாவிற்கு நன்றி கூற இத்தருணத்தை நான் பாவிக்க விரும்புகின்றேன்" என்று அவர் கூறினார். தற்போதைய ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை சபையின் அமர்வுகள் இப்போது நடைபெற்று வருகின்றன. அங்கு இலங்கைக்கெதிரான புதிய தீர்மானம் ஒன்று முன்வைக்கப்படவிருப்பதாக அறியவருகின்றது. இதுவரை இலங்கைக்கெதிராக முன்வைக்கப்பட்ட மனிதவுரிமைச் சபைத் தீர்மானங்களில் சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றை ஏற்றுக்கொண்டு, சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறை ஒன்றினூடாக போர்க்குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தவேண்டும் என்று தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்த போதிலும், கடந்தகால அரசாங்கங்கள் இவற்றில் எதுவித அக்கறையும் கொள்ளாது நிராகரித்தே வந்திருக்கின்றன. இந்த நிகழ்வில் கலந்துகொண்டவர்களில் மிக முக்கியமானவர் முன்னள் இராணுவத் தளபதியும், இறுதிப் போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்களைப் படுகொலை செய்ததில் நேரடியாகப் பங்குகொண்டிருந்தவரும், இதனாலேயே அமெரிக்காவிற்குள் செல்லத் தடைவிதிக்கப்பட்டிருப்பவருமான சவேந்திர சில்வா என்பது குறிப்பிடத் தக்கது. அமெரிக்கா இவரது பயணத்தடை குறித்து அறிவிக்கும்போது, "இறுதி யுத்தத்தில் நடத்தப்பட்ட கூட்டுப் படுகொலைகள் மற்றும் பாரிய மனிதவுரிமை மீறல்களில் கட்டளைத் தளபதி என்கிற ரீதியில் சவேந்திர சில்வா நேரடியாகப் பங்கெடுத்திருக்கிறார் என்பதை நம்பத்தகுந்த ஆதாரங்கள் ஊடாக உறுதிப்படுத்தியிருப்பதால் இவரை எமது நாட்டிற்குள் வர நாம் தடை விதிக்கிறோம்" என்று குறிப்பிட்டிருந்தது. தமிழ் மக்கள் மீதான மிகக்கொடூரமான இலங்கை அரசாங்கத்தின் இறுதி யுத்தத்தின்போது படுகொலைகளுக்குப் பெயர்பெற்ற 58 ஆவது படைப்பிரிவிற்கு சவேந்திர சில்வா கட்டளைத் தளபதியாக இருந்தார். 2009 ஆம் ஆண்டின் தமிழ் இனக்கொலையில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் படுகொலைகளில் இவரது படைப்பிரிவும் நேரடியான பங்களிப்பைச் செலுத்தியிருந்தது. இவரும் இவரைப்போன்ற ஏனைய சிங்கள இராணுவத் தளபதிகளும் வைத்தியசாலைகள் மீதான இலக்குவைத்த தாக்குதல்கள், பரந்த கூட்டுப் பாலியல் வன்புணர்வுகள், சித்திரவதைகள், சரணடைந்தவர்களை சகட்டுமேனிக்குச் சுட்டுப் படுகொலை செய்தல் போன்ற பாரிய மனிதவுரிமை மீறல்களுக்கு தலைமை தாங்கியிருந்தனர் என்பது குறிப்பிட‌த்தக்கது. சிறு குறிப்பு : நாட்காட்டி, திகதியின் பிரகாரம் பதிவிடப்படுகின்றபோதிலும் அவ்வப்போது தற்போது நடந்துவரும் விடயங்களை ஆங்காங்கே இணைப்பதனால் வாசகர்கள் இதனைப் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். நன்றி!
  19. நான் இந்தத் தொடரை எழுதுவதன் காரணத்தைத் தெளிவாகக் கூறிய பின்னரும் இதனை நிறுத்துவதை ஒரே நோக்கமாகக் கொண்டு சிலர் எனது பதிவுகளைச் சிறுமைப்படுத்தும் விதமாக தொடர்ச்சியாகப் பிந்தொடர்ந்து எழுதிவருகிறார்கள். இங்கே நான் பதியும் விடயங்கள் என்னால் உருவாக்கப்பட்டவை அல்ல, மாறாக சரித்திரத்தில் பதியப்பட்டவை, எம் கண்முன்னாலேயே நடந்தவை. ஆகவே நீங்கள் தடுக்க நினைப்பது ரஞ்சித் எனும் தனி மனிதனின் சொந்தக் கருத்துக்களையல்ல, மாறாக எமது இனத்தின் மீது குறிப்பிட்ட ஒரு இனத்தால், அதனை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு கட்சியால், அக்கட்சியில் முக்கிய உறுப்பினராக விளங்கும் ஒருவரால் கடந்த காலங்களில் புரியப்பட்ட விடயங்களைத்தான். நான் எழுதுபவை உண்மையானவை என்பது உங்களுக்கு நன்றாகவே தெரிகிறது. அதனால்த்தான் அப்பதிவுகளைப் பற்றி கேள்வி எழுப்பாமல் என்னைப்பற்றியும், எனது நோக்கங்கள் எப்படிப்பட்டவை என்பது பற்றியும் தனிப்பட்ட ரீதியில் மிகவும் கீழ்த்தரமாக உங்களால் எழுதவேண்டி ஏற்படுகிறது. ஏதாவதொரு சிங்களத் தலைவர் அவ்வப்போது புதிதாக ஆட்சிக்கு வரும்போது அவர் பேசும் விடயங்களை அப்படியே வேத வாக்கென்று நம்பி, அவரது கட்சியும், அவரும் கடந்த காலங்களில் செய்த எம்மீதான செயற்பாடுகளை, எம்மினத்தின் இருப்பு மீதான திருப்பமுடியாத சேதங்களை இலகுவாக மறந்து அவர் பின்னால் ஓடுவதென்பது ஈழத்தமிழருக்குப் புதியது அல்ல. 1994 இல் சந்திரிக்கா, 2002 இல் ரணில், 2010 இல் சரத் பொன்சேக்கா, 2015 இல் மைத்திரிபால சிறிசேன, 2019 இல் சஜித் பிரேமதாச என்று ஒவ்வொரு தலைவரும் வரும்போது நாம் அவர்களைத் தூக்கிக் கொண்டாடினோம். ஆனால் தேர்தல்கள் முடிந்தபின்னர் அவர்கள் ஒவ்வொருவரும் எவ்வாறான முகங்களை எமக்குக் காட்டினார்கள் என்பது எம் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். அந்த வரிசையில்த்தான் அநுரவும் இப்போது வருகிறார். அவர் புதியவர் (எம்மில்ப் பலரைப் பொறுத்தவரை), அவர் பேசும் பேச்சு வசீகரமாக இருக்கிறது, மக்களுடன் மக்களாக மிகவும் எளிமையாக அவர் வலம் வருகிறார், தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து மிகுந்த அக்கறையுடன் அவர் பேசவும், செயற்படவும் போகிறார் என்று நாம் நம்புகிறோம். கடந்த 50 வருடகால தமிழ் அரசியலை அவதானிப்பவர்களுக்கு நடந்தவை பற்றிய பூரண அறிவு இருக்கிறது. பலருக்கு அவை இருந்தும் அதுபற்றிப் பேச விருப்பமிருப்பதில்லை. சிலருக்கு அவை குறித்துப் பேசுவதே வெறுப்பாக இருக்கிறது. அவ்வாறு பேசுவதால் தாம் கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு தரத் துடிக்கும் அநுரவுக்கான தளம் பலவீனமாகிப் போய்விடும் என்கிற நியாயமான கவலை அவர்களுக்கு. எந்தவினமும் தனது சரித்திரத்தை, குறிப்பாக தன்மீது நடத்தப்பட்ட அக்கிரமங்களை பதிவுசெய்து வைக்கத் தவறுவதில்லை, ஈழத் தமிழினத்தைத் தவிர. எம்மீது நடத்தப்பட்ட ஆக்கிரமங்களை நாம் எங்கும் பதிந்துவிடக் கூடாது என்று நினைப்பவர்கள் எம்மிடையேதான் இருக்கிறார்கள். 2009 இற்குப் பின்னரான தமிழ் மக்களின் அரசியல் வேண்டுமென்றே தேசிய நீக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய பங்காற்றியவர்கள் சம்பந்தன், சுமந்திரன், மாவை போன்றவர்கள். ஆரம்பத்தில் புலிநீக்கம் என்று ஆரம்பித்து, இப்போது தமிழ்த் தேசிய நீக்கம் என்று உருமாறி, இனிவரும் காலத்தில் சிங்களப் பெருந்தேசியத்திற்குள் உள்வாங்கப்படும் விருப்பினை பலரின் நோக்கம் கொண்டிருக்கிறது. இக்காலப்பகுதியில் தாயகத்தில் வளர்ந்துவரும் தலைமுறைக்கு எமது போராட்டத்தின் அவசியம் குறித்தோ, எம்மீது நடத்தப்பட்ட இனவழிப்புக் குறித்தோ, இந்த இனவழிப்பில் பங்குகொண்ட பல்வேறுபட்ட சிங்களத் தேசியவாதக் கட்சிகள் குறித்தோ எந்த அறிவும் ஊடப்படவில்லை. இது வேண்டுமென்றே தமிழரை 2009 இல் இருந்து பிரதிநிதித்துவம் செய்த அரசியல்வாதிகளால் செய்யப்பட்டவை. அதனாலேயே அநுரவின் வசீகரமான பேச்சினைக் கேட்கும்போது தமிழ் இளைஞர்கள் அதன் பால் கவரப்பட்டு பின்னால் ஓடுகிறார்கள், இதற்கு தமிழ் யுடியூப் வியாபாரிகளும் விதிவிலக்கல்ல. இன்னும் கூறப்போனால் தமிழ் இளைஞர்கள் அநுர எனும் சிங்கள அரசியல்வாதி மீது வைத்திருக்கும் கண்மூடித்தனாமான விசுவாசத்திற்கு இவர்களும் பெரும் காரணமாகி இருக்கிறார்கள். ஆகவேதான் அநுர எனும் மனிதர் தனிப்பட்ட ரீதியிலும், மக்கள் விடுதலை முன்னணி எனும் கட்சியின் உறுப்பினராக இதுவரை செய்துவந்த விடயங்களை இங்கே பதிகிறேன். தேவையானவர்கள் இவற்றைப் படித்துப் பார்ப்பதன் ஊடாக சரித்திரத்தை அறிந்து சரியானதைச் செய்யலாம், அல்லது கடந்து போகலாம். தமிழ்த் தேசியத்தை மட்டுமே முன்னிறுத்துவோம் என்று ஆரம்பித்த யாழ் இணையம் இன்று தேசிய நீக்கம் செய்யும் நபர்களுக்கு தாராளமாகக் களம் அமைத்துக் கொடுக்கிறது. இதில் புலிநீக்கம் செய்யவேண்டும் என்று விரும்புபவர்களும் தாராளமாகக் கடை விரித்து வருகிறார்கள். ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றத்திற்கும், விவாதத்திற்கும் இந்த எதிர்மறையான கருத்துக்கள் பகிரப்படுவது அவசியம் என்று காரணம் சொல்லப்படுகிறது. நல்லது. நான் எழுதுவதை எப்படியாவது தடுத்து நிறுத்திவிடவேண்டும், இதனைப் படிப்போரின் எண்ணங்களைச் சிதறடிக்க வேண்டும் என்று எண்ணி தொடர்ச்சியாக எழுதி வருவோருக்கு சிறிய வேண்டுகோள். நீங்கள் உண்மையாகவே எனது பதிவு அநுர எனும் மகத்தான மனிதரின் வெற்றி வாய்ப்பைப் பாதித்துவிடும் என்று நம்பினால், புதிதாக ஒரு திரியைத் திறந்து (யாழ்க்களத்தில் புதிதாக அனுமதிக்கப்பட்டிருக்கும் தேசியத்திற்கெதிரான, தேசிய நீக்கத்திற்கு ஆதரவான கருத்துக்களுக்கும் இடமளித்தல் எனும் கோட்பாட்டிற்கு அமைய), அத்திரியில் அநுர எனும் மனிதருள் மாணிக்கத்தின், அவர் பிரதிநிதித்துவம் செய்யும் மக்கள் விடுதலை முன்னணி எனும் மாபெரும் இயக்கத்தின் செயற்பாடுகளை, அவர்கள் தமிழ் மக்களுக்காகச் செய்த தியாகங்களை பட்டியலிட்டு தனியே ஒரு நாட்குறிப்பாக எழுதினால் நான் எழுதுபவை குறித்து நீங்கள் பயப்படத் தேவையில்லை என்று நினைக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் அநுரவின் வெற்றிக்காக யாழ் களத்தின் அனுமதியுடன் இங்கேயே ஒரு பிரச்சாரத் திரியைத் திறக்கலாம். எனது எழுத்துக்களால் ஏற்படப்போகும் பாதிப்புக்கள் என்று நீங்கள் கருதுபவற்றை உங்களின் பிரச்சாரத் திரியினால் நீங்கள் சரிசெய்து கொள்ளலாம். அதுதான் படித்த மக்களுக்கு அழகு. அதைவிடுத்து அற்பத்தனமாக என்னைத் தொடர்ந்துவந்து தனிமனித தாக்குதல் நடத்தத் தேவையில்லை. உங்களின் அருவருக்கத்தக்க எழுத்துக்களால் நான் இத்தொடரை நிறுத்தப்போவதில்லை. நிச்சயமாக தொடர்ந்து எழுதுவேன். உங்களின் பொன்னான நேரத்தை இங்கே வீணடிக்காமல், அநுரவுக்கென்று தனியே திரி திறந்து அங்கே உங்களின் பிரச்சாரங்களை முன்வைய்யுங்கள். இன்றைய இளைய தலைமுறைக்கு அது பெரும் உதவியாக இருக்கும். நன்றி.
  20. தமிழர்கள் சுய நிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மலையளவு, ஆனால் நான் இதனைச் சொல்வதால் மக்கள் விடுதலை முன்னணியும், சிகல உறுமயவினரும் என்னைக் கொன்றுவிடப்போகின்றன‌ - மகாகல்கடவெல புண்ணியசார தேரர் 21 ஐப்பசி, 2001 அரச ஆதரவு துணை இராணுவக் குழுவினால் படுகொலை செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் நிமலராஜனின் நினைவுப் பேருரை மட்டக்களப்பில் நடைபெற்றது. கிழக்கிலங்கைப் பத்திரிக்கையாளர் அமைப்பினால் இந்த நினவுப் பேருரை நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் பேராசிரியர் வி டி தமிழ்மாறன் மற்றும் குருநாகலை மகாகல்கடவெல புண்ணியசார தேரர் ஆகியோர் உரையாற்றினர். "சுதந்திரத்திற்காகப் போரிடும் ஒரு இனம், அப்போரில் அடக்குமுறையாளனிடம் தோற்கும்போது, சர்வதேச சமூகம் அவ்வினத்திற்கான சுயநிர்ணய உரிமையினை மறுத்துவிடுகிறது. இது உண்மையிலேயே மிகவும் கவலைதரும் விடயமாகும். நைஜீரியாவிலிருந்து பிரிந்துசென்று தனியான நாடு கோரிப் போரிட்ட BAFTA மக்கள் போரில் தோற்றதன் பின்னர் அவர்களுக்கான சுய நிர்ணய உரிமையினை சர்வதேச சமூகம் நிராகரித்தது" என்று தமிழ்மாறன் கூறினார். மகாகல்கடவெல புண்ணியசார தேரர் பேசும்போது, "இலங்கையில் இருப்பது தமிழ்ப்பிரச்சினையல்ல, ஆனால் பயங்கரவாதப் பிரச்சினையே என்று கூறிவரும் சில பெளத்த பிக்குகளை என்னுடன் நேரடியான விவாதத்திற்கு வருமாறு அறைகூவல் விடுக்கிறேன். என்னிடம் யாராவது தமிழருக்கென்று ஒரு பிரச்சினை இருக்கிறதா என்று வினவினால், ஒரு பிரச்சினையல்ல, மலையளவு பிரச்சினைகள் இருக்கின்றன என்று நான் கூறுவேன். நான் இப்படிக் கூறுவதால் மக்கள் விடுதலை முன்னணியோ அல்லது சிகல உறுமயவினரோ என்னைக் கொன்று போடலாம். அந்தச் சிங்கள இனவாதிகளைப் பொறுத்தவரையில் இங்கிருப்பது ஒற்றைச் சிங்கள தேசம்தான், ஒற்றைச் சிங்கள பெளத்த நாடுதான்". "ஆனால் சிங்களவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? இலங்கையை ஆண்ட முன்னாள் அரசர்களில் பலர் தமிழர்களே. பல அரசர்கள் தென்னிந்தியத் தமிழப் பெண்களையே மணம் முடித்தனர். புராதன காலத்து இலங்கையின் போர்வீரர்களும் தளபதிகளும் தென்னிந்தியாவில் இருந்து வந்தவர்களே. அதுமட்டுமல்லாமல் சிங்கள அரசர்களின் பெருமைமிகு மெய்ப்பாதுகாவலர்கள் கூடத் தென்னிந்தியத் தமிழர்களே. இவர்கள் எவருமே தென்னிந்தியாவிற்குத் திரும்பிச் செல்லவில்லை. இங்கேயே மணம் முடித்து, இலங்கையின் பல பாகங்களிலும் அவர்கள் குடியேறினார்கள். ஆகவே இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழர்கள் எமது சகோதரகள், எமது உறவினர்கள். நாங்கள் எலோரும் ஒரே வம்சாவளியில் இருந்தே வந்தவர்கள். இங்கே தனிச் சிங்களவர்கள் என்று ஒரு இனம் இல்லை" என்று அவர் மேலும் கூறினார். "சுதந்திரத்திற்குப் பின்னரான காலத்தில் இரு அதிகாரம் மிக்க சிங்களக் குடும்பங்கள் இலங்கையை ஆண்டன. கொழும்பில் இருந்து ஆண்டுகொண்டு முழு இலங்கைக்கும் அவர்கள் தீமூட்டினர். அவர்கள் தமிழர்களின் பிரச்சினையினை ஒருபோதுமே தீர்க்கப்போவதில்லை" என்று அவர் முடித்தார்..
  21. இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதைத் தடுக்கவே மக்கள் விடுதலை முன்னணி சந்திரிக்கா அரசை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கிறது. 17 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட விவாதத்திலிருந்து தமிழ்க் கட்சிகள் வெளிநடப்பு. திங்கள், 24, புரட்டாதி 2001 https://www.tamilnet.com/art.html?catid=13&artid=6337 டெலோ மற்றும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், 17 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தினை பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பித்தபோது கூட்டாக வெளிநடப்புச் செய்தனர். தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதைத் தடுக்கும் முகமாக தீவிர இடதுசாரிக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் கட்டாயத்தால் உருவாக்கப்பட்ட 17 ஆவது அரசியமைப்புத் திருத்தச் சட்டத்திற்குத் தாம் ஆதரவளிக்கப்போவதில்லை என்று அவர்கள் தெரிவித்தனர். "50 வருடங்களுக்கு மேலாக தமிழர் பிரச்சினையினைத் தீர்ப்பதற்கான இதயசுத்தியான எந்த முயற்சியையும் நீங்கள் எடுக்கவில்லை. நீங்கள் இப்படியே காலத்தைக் கடத்தி வருவீர்களாக இருந்தால் ஒன்றுபட்ட இலங்கை எனும் கூப்பாடு இறந்தகாலத்திற்குள் சென்றுவிடும்" என்று டெலோ அமைப்பின் உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்றத்தைவிட்டு ஏனைய தமிழ் உறுப்பினர்களுடன் சேர்ந்து வெளியேறும்போது கூறினார். "இந்த நாட்டில் இருக்கும் அதி முக்கிய பிரச்சினை தமிழர்களின் தேசியப் பிரச்சினையாகும். அதனை நீங்கள் முதலில் தீர்க்கவேண்டும். ஆனால் உங்களை தொடர்ந்தும் ஆட்சியில் வைத்திருப்பதற்காக மக்கள் விடுதலை முன்னணியின் தாளத்திற்கு நீங்கள் ஆடிக்கொண்டிருக்கிறீர்கள்" என்றும் அவர் மேலும் கூறினார். அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குக் கண்டனம் செய்யும் விவாதத்தில் கலந்துகொள்ளுமாறு தமிழ் உறுப்பினர்களை பிரதமர் அழைத்தபோது, "அமெரிக்கா மீது நடத்தப்பட்டது பயங்கரவாதத் தாக்குதல்தான். அதனை நாங்களும் கண்டிக்கிறோம். ஆனால் இதனைச் சாட்டாகப் பயன்படுத்தி எமது போராட்டத்தையும் நீங்கள் பயங்கரவாதம் என்று சித்திரிக்க முயல்வதை நாம் மறுக்கிறோம். இந்த நாட்டில் தம்மீது தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் அரச அடக்குமுறைக்கும், தம்மீதான இனப்பாகுபாட்டிற்கும் எதிரான தமிழ் மக்களின் போராட்டமே இங்கு நடந்து வருவது. அரச பயங்கரவாதத்திற்கெதிராகவே எமது மக்கள் போராடி வருகிறார்கள். யுத்த நிறுத்தம் ஒன்றை அறிவித்து, தமிழர் தாயகம் மீதான பொருளாதாரத் தடையினை நீக்கி புலிகளுடன் பேச்சுக்களில் ஈடுபட்டால் ஒழிய‌ உங்களின் 17 ஆவது அரசியலமைப்புச் சீர்திருத்தத்திற்கு எமது ஆதரவு ஒருபோதும் கிடைக்கப்போவதில்லை" என்றும் செல்வம் கூறினார். "அரசியலமைப்புச் சபையினை உருவாக்குவதற்கு நாம் எதிர்ப்புக் காட்டப்போவதில்லை. ஆனால், நாட்டின் முக்கியமான இனப்பிரச்சினைக்கு தீர்வெதையும் காணாது அரசியலமைப்பு விடயத்தில் மாற்றங்களை செய்ய எத்தனிப்பதையே நாம் எதிர்க்கிறோம். அதனாலேயே பாராளுமன்றத்திலிருந்து வெளிநடப்புச் செய்தோம்" என்று தமிழ் உறுப்பினர்கள் பின்னர் தெரிவித்தனர்.
  22. நோர்வேயின் சமாதான முயற்சிகளை தோற்கடிக்க சந்திரிக்காவும், மக்கள் விடுதலை முன்னணியும் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம். சந்திரிக்காவின் மக்கள் கூட்டணிக்கும், சிங்கள இனவாத இடதுசாரிக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையே செய்துகொள்ளப்பட்டிருக்கும் ஒப்பந்தம் இலங்கையில் சமாதானத்திற்கு பெரும் அச்சுருத்தலாக மாறியிருக்கிறது ‍- விடுதலைப் புலிகள் 11, புரட்டாதி 2001 https://www.tamilnet.com/art.html?catid=13&artid=6311 சந்திரிக்காவின் மக்கள் கூட்டணிக் கட்சிக்கும், தீவிர இனவாத இடதுசாரிகளான மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடயே செய்யப்பட்டிருக்கும் நன்னடத்தைக் கால அரசு எனும் ஒப்பந்தம் இலங்கையில் சமாதானம் ஏற்படுவதற்கு அச்சுருத்தலாக அமைந்திருக்கிறதென்று தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர். தென்னிலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் சூழ்நிலைகள் குறித்து தமிழ் கார்டியன் பத்திரிக்கை புலிகளின் அரசியல் ஆலோசகரும், பேச்சுவார்த்தைக் குழுவின் பிரதானியுமான திரு அன்டன் பாலசிங்கத்திடம் வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் பேசும்போது சந்திரிக்காவிற்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையே செய்துகொள்ளப்பட்டிருக்கும் புரிந்துணர்வு உடன்பாட்டில் சேர்க்கப்பட்டுள்ள சரத்துக்கள், தமிழர் பிரச்சினைக்குத் தீர்வாக பரிந்துரைகள் முன்வைக்கப்படுவதை முற்றாகவே தடுக்கும் சூழ்நிலையினை ஏற்படுத்தியிருக்கின்றது என்று கூறினார். திரு பாலசிங்கம் அவர்களின் கருத்துக்கள் புலம்பெயர்ந்த நாட்டிலிருந்து வெளிவரும் நாளேடான தமிழ் கார்டியனின் செவ்வாயன்று வெளிவந்த இதழில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. புலிகளுடனான பேச்சுக்களுக்கு தமது அரசாங்கம் மக்கள் விடுதலை முன்னணியுடன் செய்துகொண்டிருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் எவ்விதத்தில் தடையாக இருக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி சந்திரிக்காவும், வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமருக் கூறியிருப்பது பற்றி பாலசிங்கத்திடம் தமிழ் கார்டியன் வினவியபோது அவர் பின்வருமாறு பதிலளித்தார். "இது மிகவும் முட்டாள்த்தனமான கருத்தாகும். அவர்கள் செய்துகொண்டிருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் 20 ஆவது சரத்தில், நன்னடத்தைக் காலமான முதல் 12 மாதங்களுக்குள் தமிழரின் பிரச்சினையினை அரசியல் ரீதியாகத் தீர்ப்பது குறித்த எந்த பேச்சுவார்த்தைகளிலும் அரசாங்கம் ஈடுபடலாகாது என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. எமது மக்களின் பிரச்சினைகள் குறித்துப் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் நாம் அரசாங்கத்துடன் இதுகுறித்து இணக்கப்பாடு ஒன்றிற்கு வருவதில் ஏதாவது அர்த்தம் இருக்கின்றதா?" என்று பாலசிங்கம் வினவினார். "உண்மையென்னவென்றால், சமாதானப் பேச்சுக்களைச் சாத்தியமற்றதாக்குவதற்காகவே சந்திரிக்காவின் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருக்கின்றன. சந்திரிக்காவும், கதிர்காமரும் உளரும் வியாக்கியானங்கள் சர்வதேச அரசாங்கங்களில் இருப்பவர்களுக்காகப் புனையப்பட்டவையே அன்றி வேறில்லை. ஒரு பலவீனமான, ஊழலால் மூழகடிக்கப்பட்டிருக்கின்ற சந்திரிக்காவின் அரசிற்கும், சமாதானத்தையும், சர்வதேச மத்தியஸ்த்தத்தையும் தொடர்ச்சியாக எதிர்த்துவரும் அதிதீவிரவாத மாக்ஸிஸ்ட் கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையே செய்யப்பட்டிருக்கும் செயற்கைத்தனமான அருவருக்கும் இந்த இணைப்பின் ஊடாக சமாதானம் ஏற்பட்டுவிடும் என்று இவர்கள் இருவரும் கூறுவதை கண்களை மூடிக்கொண்டு இந்த சர்வதேச அரசாங்கங்கள் நம்புகின்றன" என்று அவர் மேலும் கூறினார். "இந்த நாட்டினை சிதைத்துக்கொண்டிருக்கும் இனவாதப் போரினை நிறுத்தி, தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான உண்மையான தீர்வினை வழங்கக் கூடிய ஒத்திசைவான நோக்கு சந்திரிக்காவின் மக்கள் கூட்டணிக்கோ அல்லது சிங்கள தீவிரவாத மக்கள் விடுதலை முன்னணிக்கோ எள்ளவும் கிடையாது. ஒருவருக்கொருவர் நேரெதிரான கொள்கைகளைக் கொண்ட இவ்விரு கட்சிகளும் செய்துகொண்டிருக்கும் நன்னடத்தைக்கால அரசாங்கமானது தமிழர் பிரச்சினைக்கான தீர்வு குறித்து வெவ்வேறுவிதமான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். சந்திரிக்காவின் மக்கள் கூட்டணி தமிழருக்கு "மிகவும் பலவீனமான" அதிகாரங்களைப் பகிரலாம் என்று கூறிவரும் அதேவேளை அவரது அரசாங்கத்தின் இன்னொரு பகுதியான மக்கள் விடுதலை முன்னணியோ, "தமிழருக்கென்று தனியாகப் பிரச்சினைகள் இல்லை, எல்லா இன மக்களும் சமம்" என்று கூறி வருகிறது. ஆனால் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வாக தமிழர்களால் முன்வைக்கப்படும் அடிப்படைக் கோரிக்கைகள் குறித்து விவாதிக்க இவர்கள் எவருமே தயராக இல்லை" என்று பாலசிங்கம் கூறினார். "முடிவில் தமிழ் மக்கள் தமது தலைவிதியையும், அரசியல் தகமையினையும் தாமே முடிவெடுப்பார்களே ஒழிய கொழும்பில் இருந்து ஆட்சி செய்யும் சிங்கள அரசியல் கட்சிகள் அதனை முடிவு செய்ய முடியாது என்பதை நாம் மீண்டும் மீண்டு கூறி வருகிறோம். திம்புப் பேச்சுக்களின் அடிப்படையில் தமிழர்களால் முன்வைக்கப்பட்ட அடிப்படை அம்சங்களை உள்ளடக்கிய கோரிக்கைகளை சிங்களவர்கள் உணர்ந்துகொள்ளத் தவறுமிடத்து, தமிழர்கள் தம்வழியில்ச் சென்று தமக்கான விடுதலையினை அடைவதைத்தவிர வேறு தெரிவுகள் அவர்களுக்கு இருக்கப்போவதில்லை" என்றும் பாலசிங்கம் தெரிவித்தார். சமாதானப் பேச்சுக்களில் மத்தியஸ்த்தம் வகிக்க நோர்வே அழைக்கப்பட்டிருப்பது குறித்து பாலசிங்கத்திடம் தமிழ் கார்டியன் வினவியபோது, "நோர்வே அரசின் சமாதான முன்னெடுப்புக்களில் ஈடுபட்டிருக்கும் சொல்கெயிமின் முயற்சிகளை தொடர்ச்சியாக விமர்சித்துவருவதன் ஊடாக சந்திரிக்காவும், லக்க்ஷ்மன் கதிர்காமரும் பேச்சுக்களைத் தேக்க நிலைக்குக் கொண்டுவந்திருக்கின்றனர். நோர்வேயின் சமாதானத் தூதுவர் புலிகளுக்குச் சார்பாக இயங்கிவருகிறார் எனும் தீவிர மனநோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் சந்திரிக்காவும், கதிர்காமரும் நோர்வேயின் தலைமையில் நடைபெற்றுவந்த முயற்சிகளைக் கொன்று புதைத்துவிட்டார்கள். இது மிகப்பெரிய இராஜதந்திரத் தவறு. மூன்று தரப்புக்கள் கூடி நடத்தும் பேச்சுக்களில் ஒரு தரப்பு தாந்தோன்றித்தனமாக இவ்வகையான குழிபறிக்கும் காரியங்களில் ஈடுபடுவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. சொல்கெயிமை மீளவும் பிரதான சமாதானத் தூதுவராக பதவியில் அமர்த்துவதன் ஊடாக மாத்திரமே பேச்சுக்களுக்கு நாம் மீளவும் உயிர்கொடுக்க முடியும்" என்று புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான பாலசிங்கம் தெரிவித்தார். பாலசிங்கம் மேலும் கூறும்போது "நிலவிவரும் பொருளாதார அரசியல் சீர்கேட்டிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ளும் ஒற்றை நோக்கிலேயே சந்திரிக்கா அரசு பேச்சுக்களில் ஈடுபட விரும்புவதாக காட்டிக்கொள்கிறது. தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு நேர்மையான அரசியல்த் தீர்வைக் காண்பதில் சந்திரிக்காவின் அரசிற்கு உண்மையான அக்கறை எதுவும் கிடையாது. தனது இக்கட்டான நிலையில், வேறு வழியின்றி தன்னிச்சையான யுத்தநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கலாமா என்று அது சிந்தித்து வருகிறது. ஆனால் இந்த சிந்தனைகள் எல்லாம் நன் நம்பிக்கையின் பால் உருவானவை அல்ல‌, மாறாக புலிகளை போரை விரும்பும் அரக்கர்கள் என்றும், சமாதானத்தின் எதிரிகள் என்றும் சர்வதேசத்தில் காண்பிக்க சந்திரிக்கா ‍- மக்கள் விடுதலை முன்னணி அரசால் புனையப்பட்டவை" என்றும் தெரிவித்தார். "உண்மையாகவே இந்த அரசு புலிகளுடன் நேர்மையான பேச்சுக்களில் ஈடுபட்டு தமிழரின் தேசியப் பிரச்சினையினை தீர்க்க விரும்பினால், முதலாவதாக அது செய்ய வேண்டியது சந்திரிக்கா - ஜே வி பி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருக்கும் 20 ஆவது சரத்தினை முற்றாக நீக்கி, தமிழர் தாயகத்தின் மீது போடப்பட்டிருக்கும் பொருளதாரத் தடையினை விலக்கி, தமிழர் தாயகத்தில் குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு சுமூகமான சூழ்நிலையினைக் கொண்டுவருவதுதான். மேலும் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டது போல புலிகளை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டு எம்மீது போடப்பட்டிருக்கும் தடையினை அரசாங்கம் நீக்குவதும் அவசியமாகும்" என்றும் அவர் கூறினார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.