Everything posted by ரஞ்சித்
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
இராணுவத்தினரின் நடவடிக்கைகளை வெகுவாக ஆதரித்த மக்கள் விடுதலை முன்னணி, ரணிலின் அரசைக் கவிழ்த்துவிடப்போவதாகவும் மிரட்டல் திங்கட்கிழமை, 6, தை 2003 இலங்கையின் பலமான இடதுசாரிக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி, யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருக்கும் இராணுவத்தினர் ரணில் அரசின் உயர் பாதுகாப்பு வலயங்களை விட்டு நீங்கி மக்கள் அப்பகுதிகளுக்குத் திரும்ப வழிவிடவேண்டும் என்கிற கோரிக்கையினை நிராகரித்திருப்பது குறித்து இராணுவத்தை வெகுவாகப் பாராட்டியிருக்கிறது. மேலும் புலிகளுடன் இணைந்து நாட்டைப் பிளவுபடுத்தும் சதிச்செயலில் பிரதமர் ரணில் இறங்கியிருப்பதாகவும் அது பிரதமரைக் கடுமையாகச் சாடியிருக்கிறது. இலங்கைப் பாராளுமன்றத்தில் மக்கள் விடுதலை முன்னணியே பலமான எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. கொழும்புநகரின் பத்திரிக்கையாளர் மாநாடொன்றினை நடத்திய மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச பேசும்போது, "ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலத்தில் வடக்கில் இருக்கும் உயர் பாதுகாப்பு வலயங்களில் இருந்து இராணுவத்தினரை விலக்கிக்கொள்வதாக புலிகளுடன் இரகசிய ஒப்பந்தம் ஒன்றைச் செய்திருந்தார்" என்றும், "ஆட்சிக்கு வந்தவுடன் தான் அன்று செய்த ஒப்பந்தத்தினை அமுல்ப்படுத்த முனைகிறார்" என்றும் சாடினார். மேலும் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்ட நோர்வே தூதரகத்தின் அதிகாரியான ஜொன் வெஸ்ட்போர்க் தனது கட்சியினதும், ஜனாதிபதி சந்திரிக்காவினதும், பெளத்த பிக்குகளின் தொடர் போராட்ட அழுத்தங்களினாலேயே நாட்டை விட்டு விரட்டப்பட்டார் என்றும் அவர் உரிமை கோரினார். "யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்குவது தொடர்பான விடயத்தில், அவ்வாறு விலகுவதில்லை என்கிற மிகத்துணிவான நிலைப்பாட்டினை இராணுவத்தினர் எடுத்திருக்கிறார்கள். ஆனால், புலிகளுக்கும் ரணில் அரசிற்கும் இடையே நடந்துவரும் பேச்சுக்களில் இதுதொடர்பாக எட்டப்படும் தீர்மானங்களின்படி, இராணுவத்தினரின் இந்த துணிகர நிலைப்பாடு மாற்றப்பட்ட அழுத்தம் கொடுக்கப்படுமா என்று எனக்குக் கூறத் தெரியவில்லை" என்று வீரவன்ச கூறினார். "புலிகளின் தலைவரின் பாணியைப் பின்பற்ற ரணில் விரும்புவது போல் எனக்குத் தெரிகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நாட்டு மக்களுக்கு ரணில் உரையாற்றும்போது அவர் பின்னால் காணப்பட்ட மேடையலங்காரத்தையும், அமைப்பையும் பார்க்கும் ஒருவருக்கு கடந்த கார்த்திகை மாதத்தில் புலிகளின் தலைவர் ஆற்றிய மாவீரர் தின உரையின் மேடையமைப்பே நினைவிற்கு வந்திருக்கும்" என்று அவர் மேலும் தெரிவித்தார். "ரணில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய விதத்தினைப் பார்க்கும்போது அவரது அரசு கடுமையான சிக்கலில் மாட்டியிருப்பதாகவே எனக்குத் தெரிகிறது. ஆட்சிக்கு வந்த கடந்த ஒருவருடத்தில் நாட்டு மக்களுக்காக அவர் எதனையும் செய்யவில்லை" என்றும் அவர் கூறினார். மக்கள் விடுதலை முன்னணியினால் பேச்சுவார்த்தைகளுக்கெதிராகவும், விலைவாசி உயர்வு, தனியார் மயமாக்கல் ஆகியவற்றிற்கெதிராகவும் கொழும்பில் நடக்கவிருக்கும் "ஜன பல" போராட்டம் பற்றிய தகவல்களை அறிவிக்கவே இம்மாநாடு மக்கள் விடுதலை முன்னணியினால் கூட்டப்பட்டிருந்தது. https://www.tamilnet.com/art.html?catid=13&artid=8108
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
நோர்வேத் தூதரகத்தின் நடவடிக்கைகளில் தலையீடு செய்து நாட்டைக் காப்பற்றுங்கள், இல்லாதுவிடில் புலிகளின் பலம் அதிகரித்து விடும் - சந்திரிக்காவை எச்சரித்த மக்கள் விடுதலை முன்னணி திங்கள் , 30 மார்கழி 2002 தீவிர சிங்கள இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச தலைமையிலான குழுவினர் ஜனாதிபதி சந்திரிக்காவைச் சந்தித்து நீண்டநேரம் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். அரசாங்கத்திற்கும் புலிகளுக்குமிடையே நடந்துவரும் பேச்சுவார்த்தைகள், உயர் பாதுகாப்பு வலயங்களிலிருந்து படையினரை விலக்கிக் கொள்வது தொடர்பாக ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள், நாட்டின் பாதுகாப்பு நிலவரம் தொடர்பாகவே இப்பேச்சுக்கள் இடம்பெற்றன. மேலும் நோர்வே தூதரகத்தினூடாக புலிகளுக்குக் கொண்டுவந்து கொடுக்கப்பட்டதாகக் கருதப்படும் தொலைத்தொடர்புக் கருவிகள், ஒலிபரப்புக் கருவிகள் தொடர்பாகவும் விமல் வீரவன்சவினால் கேள்வியெழுப்பப்பட்டது. புலிகளுக்கு ஆதரவாக நோர்வே தூதரகம் செயபட்டு வருவதாக இச்சந்திப்பின்போது வீரவன்ச சந்திரிக்காவிடம் முறையிட்டார். ஆகவே நாட்டைக் காப்பதற்காக, ஜனாதிபதி இவ்விடயத்தில் தலையீடு செய்து , புலிகள் பலம்பெறுவதைத் தடுக்க ஆவண செய்யவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
தீவிர சிங்கள இனவாத மக்கள் விடுதலை முன்னணியின் சகோதர அமைப்பான ஜாதிக்க சங்க சம்மேளனய அமைப்பு நோர்வே நாட்டுக் கொடியை அந்நாட்டின் கொழும்பு தூதரகத்தின் முன்னால் எரித்தது. செவ்வாய்க்கிழமை, 24 மார்கழி, 2002 தீவி சிங்கள இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் சகோதர அமைப்பும் இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் கிளைகளையும் உறுப்பினர்களையும் கொண்டதுமான தேசிய பிக்குகள் முன்னணி (ஜாதிக்க சங்க சம்மேளனய) சமாதான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் நோர்வே நாட்டு இராஜதந்திரியான ஜொன் வெஸ்ட்பேர்க் இனை நாட்டை விட்டு உடனடியாக விரட்ட வேண்டும் என்று கோரி கொழும்பில் இருக்கும் நோர்வேத் தூதரகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்ட பிக்குகள் நோர்வே நாட்டின் இரு கொடிகளை தூதரகத்தின் முன்னால் எரித்ததுடன், அங்கிருந்து ஜனாதிபதிச் செயலகம் நோக்கிப் பேரணியாகச் சென்று ஜனாதிபதி சந்திரிக்காவிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர். தேசிய பிக்குகள் முன்னணியின் செயலாளர் பிக்கு கலேவெலகலே சந்தலோக்கவிடமிருந்து மகஜரை ஜனாதிபதிக்கான மேலதிகச் செயலாளர் பெற்றுக்கொண்டார். அண்மையில் நோர்வேயிடமிருந்து புலிகளுக்குத் தருவிக்கப்பட்டதாகக் கூறப்படும் தொலைத்தொடர்புக் கருவிகள் தொடர்பாகவே மக்கள் விடுதலை முன்னணியின் பிக்குகள் அமைப்பு இப்போராட்டத்தை நடத்தியிருந்தது.
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
அநுர குமார திசாநாயக்க ஒரு உறுதியான சிங்கள பெளத்த இனவாதி அனைவருக்கும் பொதுவான வேட்பாளரைக் களமிறக்குகிறோம் என்று மக்கள் விடுதலை முன்னணி கூறினாலும், அநுர எப்போதுமே சிங்கள பெளத்த இனவாதிகளை நோக்கியே தனது கருத்துக்களை முன்வைத்து வருகிறார். அண்மையில் மகரகமவில் 1500 பெளத்த பிக்குகள் முன்னால் பேசுகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் பெளத்த மதத்திற்கு மற்றைய மதங்களைக் காட்டிலும் முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என்று குறிப்பிடும் 9 ஆவது அத்தியாயத்தினை தனது கட்சி ஒருபோதும் மாற்றாது என்று உறுதியளித்தார். பெளத்த மதத்தின் புனிதத்தனமையினை அரசுத்தலைவர் தனது தலையாய கடமையாக வரிந்து பேணுதல் அவசியம் எனும் சரத்தை தான் தவறாது கடைப்பிடிப்பேன் என்று அவர் அங்கு உறுதியளித்தார். அங்கு பேசிய இன்னொரு மக்கள் விடுதலை முன்னணியின் பிரமுகர் நலிந்த ஜயதிஸ்ஸ, "இது ஒரு பெரும்பான்மைச் சிங்கள பெளத்த நாடு. ஆகவே எமது கட்சி அத்தியாயம் 9 இனை முழு மூச்சுடன் பாதுகாக்கும். பெளத்த மதத்தினை மெருகூட்டி, போஷித்து, வளப்படுத்தும் நடவடிக்கைகளில் எமது அரசாங்கம் ஈடுபடும். அத்தியாயம் 9 இனைப் போற்றிப் பின்பற்றுவதென்பது இந்த நாட்டில் ஒருபோதும் பிரச்சினையாக இருந்ததில்லை" என்று குழுமியிருந்த 1500 பெளத்த பிக்குகளிடம் உறுதி வழங்கினார். தமிழர்களிடம் பேசும்போது எச்சரிக்கை விடுத்த அநுர குமார திசாநாயக்க "எமது வெற்றியில் யாழ்ப்பாணத் தமிழர்களும் பங்குதாரர்கள் ஆக வேண்டும். இந்தப் பாரிய மாற்றத்தை எதிர்த்தவர்கள் என்று நீங்கள் அழைக்கப்படுவதைத் தவிருங்கள். இந்த மாற்றத்தின் பங்குதாரர் ஆகுங்கள்.......நீங்கள் இந்த மாற்றத்தை எதிர்ப்பீர்கள் என்று நாம் காணும் பட்சத்தில், தெற்கு மக்கள் உங்களைப்பற்றி என்னை நினைப்பார்கள் என்று சிந்தியுங்கள். யாழ்ப்பாண மக்கள் இந்த மாற்றத்தை விரும்பாதவர்கள் என்று தெற்கில் அடையாளப்படுத்தப்படுவதை நீங்கள் விரும்புகிறீர்களா? இந்த மாற்றத்தை எதிர்த்தவர்கள் என்று பார்க்கப்படுவதை விரும்புகிறீர்களா? வடக்கு இவ்வாறு அடையாளப்படுத்தப்படுவதை நீங்கள் விரும்புகிறீர்களா?" என்று எச்சரிக்கும் தொனியில் பேசினார்.
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
இந்திய எதிர்ப்பு நிலை மக்கள் விடுதலை முன்னணி இயல்பிலேயே இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டினை உடையது. 1987 ஆம் ஆண்டு அக்கட்சி நடத்திய இரண்டாவது ஆயுதக் கிளர்ச்சியே தமிழர்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க இந்தியா வந்திருக்கிறது, ஆகவே அதனை எதிர்க்கவேண்டும் என்பதற்காகவே நடத்தப்பட்டது. தமிழர் விரோத, இந்திய விரோத உணர்வினை தெற்கின் பாமர மக்களிடையே வளர்த்துவிட்டே 1987 முதல் 1990 வரையான இரத்தக்குளியலை மக்கள் விடுதலை முன்னணி அரங்கேற்றியது. இக்கட்சி முன்னர் மலையகத் தமிழர்களை, "இந்தியா ஆக்கிரமிப்பின் ஐந்தாவது கருவிகள்" என்றே அழைத்து வந்தது. இலங்கையில் இந்தியா மேற்கொள்ளும் எந்த வர்த்தகச் செயற்பாடுகளையும், இலங்கையைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காக இந்தியாவினால் எடுக்கப்படும் முயற்சி என்றே இக்கட்சி பார்த்தது. இந்திய இலங்கை வர்த்தக ஒப்பந்தத்திற்கெதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் மக்கள் விடுதலை முன்னணியினர் கட்சியின் இந்திய விரோத நிலைப்பாடு அநுரவிற்கும் இருந்தது. 2008 இல் பாராளுமன்றத்தில் பேசும்போது, "கச்சதீவை இந்தியாவிற்குத் தாரை வார்க்கும் செயற்பாடுகள் நடப்பதாக உணர்கிறேன், ஆனால் எமது கட்சி இருக்கும்வரை அது ஒருபோது நடவாது, எவ்விலை கொடுத்தாவது இம்முயற்சி வெற்றிபெறுவதை நாம் தடுப்போம்" என்று சூளுரைத்திருந்தார். அண்மையில்க் கூட கச்சதீவு விவகாரம் தில்லியில் பேசப்பட்டாலும் கூட, அநுரவை உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை இந்தியாவிற்கு மேற்கொள்ளுமாறு இவ்வருடத்தின் ஆரம்பத்தில் இந்தியாவால் அழைப்பு விடுக்கப்பட்டது. அநுரவின் இந்திய விஜயம் மக்கள் விடுதலை முன்னணியின் அதி தீவிர இந்திய எதிர்ப்பை சற்று களையும் அரசியல் மாற்றத்தின் அறிகுறியென்றும், இந்தியா தேவைக்கதிகமாகவே அநுரவுக்கு வளைந்துகொடுக்கிறது என்கிற தோற்றத்தினையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய விஜயத்தின்போது அநுர குமாரவும் அவரது பரிவாரங்களும் இந்தியாவின் அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், வர்த்த அமைப்புக்களின் உறுப்பினர்களையும் சந்தித்தனர். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை மீள்பரிசீலினை செய்தல் 2022 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொருளாதாரச் சிக்கலின்பொழுது, அன்றைய ஜனாதிபதியாகவிருந்த கோட்டாபயலின் அரசாங்கம் மூன்று பில்லியன் அமெரிக்க டொலர்களை சிக்கலில் இருந்து மீள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்திடம் கேட்டிருந்தது. ஆனால், இலங்கையின் கடன் அடைக்கும் வரலாறு கத்திமுனையில் நடப்பதற்கு நிகரானது என்பதை சர்வதேச நாணய நிதியம் அறிந்தே இருந்தது. சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் இயக்குநர், ஜூலி கொசாக் கடந்த வாரம் பேசுகையில் மூன்றாம் கட்ட 350 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்கப்படு முன்னர் புதிய ஜனாதிபதியுடன் பேசவேண்டியிருக்கிறது என்று கூறியிருந்தார். ஆனால், கடன் நிபந்தனைகளை மீள அமைக்கவேண்டும் என்று அநுர குமார பேசத் தொடங்கியிருக்கிறார்.இதனையே சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் கடனை மீளச் செலுத்தும் வரலாறு குறித்து எச்சரிக்கை செய்திருந்தது. இலங்கையின் இராஜாங்க நிதியமைச்சர் செகான் சேமசிங்க பேசும்போது, பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, மூன்றாவது கட்ட கடனுதவியான 350 மில்லியன் டொலர்கள் வழங்கப்படாதுவிட்டால் நாடு மீண்டும் ஒரு பொருளாதாரச் சிக்கலைச் சந்திப்பதைத் தடுக்க முடியாது என்று கூறியிருந்தார். தொடர்ந்து பேசிய சேமசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தினை இரத்துச் செய்வதால் நாட்டில் இடம்பெற்றுவரும் சிக்கலில் இருந்து மீளுதல் முயற்சிகள் தடைப்பட்டு நின்றுவிடும் என்றும், நாடு பழையபடி 2022 ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடிக்குள் சென்றுவிடும் என்று எச்சரித்தார். "சர்வதேச நாணய நிதியத்திடம் நான் ஒத்துக்கொண்ட விடயங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். நாம் ஒருதலைப்பட்சமாக ஒப்பந்தத்திலிருந்து விலகிச் செல்ல முடியாது" என்று பத்திர்க்கையாளர்களிடம் பேசும்போது சேமசிங்க மேலும் கூறினார். "இது நடக்குமாக இருந்தால் 2022 இல் இலங்கை எதிர்கொண்ட அதே நெருக்கடிக்குள் மீண்டும் சென்றுவிடும்" என்று அவர் எச்சரித்தார். தமிழர் தாயகத்தில் நடந்துவரும் இராணுவமயமாக்கல் குறித்துப் பேச மறுக்கும் அநுர குமார திசாநாயக்க அநுரவின் தேர்தல் விஞ்ஞாபனம் வடக்குக் கிழக்கில் இடம்பெற்றுவரும் இராணுவமயமாக்கலினால் தமிழ் மக்கள் அடைந்துவரும் துன்பங்கள் குறித்து எதுவுமே பேசவில்லை. அதற்கு மாறாக காணிகளை பகிர்ந்தளிப்பதில் சமூகத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளினால் அரசியல் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கலாம் என்று தனியார்மயமாக்கலை மட்டுமே கருத்திற்கொண்டு பேசியிருக்கிறார். மேலும், தமது கட்சி ஆட்சிக்கு வருமிடத்து காணிப்பிரச்சினைகள் தொடர்பாக விரைவானதும், நீதியானதுமான தீர்வுகளை வழங்கும் என்று கூறுகிறார். தற்போது வடக்குக் கிழக்கில் தமிழ் மக்களின் காணிகளை இராணுவமும், கடற்படையும் அடாத்தாக ஆக்கிரமித்து வருவதால் தமிழ் மக்கள் காணி அபகரிப்பு எனும் பிரச்சினையினை எதிர்நோக்கி வருகிறார்கள்.
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
இனவழிப்பிற்கான மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவு 2004 ஆம் ஆண்டு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒரு பங்காளிக்கட்சியாகவிருந்த மக்கள் விடுதலை முன்னணி, தமிழரின் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வே சரியானது என்று தொடர்ச்சியாக கோரி வந்தது. சமாதான தீர்விற்கான பேச்சுவார்த்தை முன்னெடுப்புக்களுக்கு விடாப்பிடியாக முட்டுக்கட்டைகளைப் போட்டுவந்த இக்கட்சி ஈற்றில் முள்ளிவாய்க்கால் இனவழிப்பிற்கும் தனது பங்களிப்பை வழங்கியிருந்தது. 2003 இல் மக்கள் விடுதலை முன்னணியினால் முன்னெடுக்கப்பட்ட சமாதானத்திற்கெதிரான பேரணியில் அநுரவும் கலந்துகொண்டிருந்தார் சமாதான முயற்சிகளுக்கெதிரான கடுமையான நிலைப்பாடு, யுத்த முஸ்த்தீபுகளுக்கான தொடர்ச்சியான ஆதரவு, தமிழர்களுடன் அதிகாரப் பகிர்விற்கான எதிர்ப்பு, வடக்குக் கிழக்கு இணைப்பை பிரித்தமை, சமஷ்ட்டிக்கு எதிர்ப்பு ஆகிய தீவிர தமிழர் விரோத செயற்பாடுகளால் மக்கள் விடுதலை முன்னணி தென்மாகாணங்களில் கிராமப்புர மக்களிடையே மிகுந்த வரவேற்பினைப் பெறத் தொடங்கியது. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் நலன்காக்கும் சதியே என்று தெற்கின் சிங்கள மக்களை நம்பவைத்த ரோகண விஜேவீர, ஈழத்தமிழருக்கெதிராக சாதாரண சிங்கள மக்களை நீண்டகாலப்போக்கில் இனவன்மம் ஏற்றுவதில் வெற்றிகண்டார். இருமுறை அரசாங்கத்திற்கெதிரான ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டு பல்லாயிரக் கணக்கான சிங்கள இளைஞர்களின் கொலைகளுக்குக் காரணமாகவிருந்தபோதிலும் கூட மக்கள் விடுதலை முன்னணி ஈழத்தமிழரின் உரிமைப் போராட்டம் குறித்து அனுதாபத்தினையோ அல்லது அவர்களின் போராட்டத்திற்கான தார்மீக ஆதரவினையோ ஒருபோதும் கொடுக்க நினைத்ததில்லை. தமிழரின் போராட்டக் காலம் நெடுகிலும் மக்கள் விடுதலை முன்னணி செய்ததெல்லாம் அவர்களின் போராட்டத்தைச் சிறுமைப்படுத்தி, அவர்களுக்கான அதிகாரங்களைத் தொடர்ச்சியாகக் கொடுக்க மறுத்து வந்தமை மட்டும்தான். இக்கட்சியிலிருந்தே இலங்கையின் சரித்திரம் கண்ட பல சிங்கள இனவாதிகள் உருப்பெற்று வந்தார்கள் என்றால் அது மிகையில்லை. 2002 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே யுத்த நிறுத்தம் கைச்சாத்திட்டவேளை பாராளுமன்றத்தில் இதனைக் கடுமையாகச் சாடிய ஒரு சிலரில் அநுரகுமார திசாநாயக்கவும் ஒருவர். "புலிகள் இலங்கையில் தனிநாடு ஒன்றினை நிறுவ அடித்தளம் இட்டுவிட்டார்கள்" என்று அவர் பாராளுமன்றத்தில் கூக்குரலிட்டார். பாராளுமன்றத்திற்கு வெளியேயும், உள்ளேயும் அநுர குமார திசாநாயக்க சமாதான முயற்சிகளுக்கெதிராக கடுமையான எதிர்ப்புணர்வைக் காட்டிவந்தார். மக்கள் விடுதலை முன்னணியினர் ஒழுங்குசெய்த பல பேரணிகளுக்குத் தலைமைதாங்கியதோடு, 2003 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியினர் ஒழுங்குசெய்த சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கெதிராக கண்டி முதல் கொழும்பு வரையான ஐந்துநாள், 116 கிலோமீட்டர்கள் கொண்ட நடைபயண ஆர்ப்பாட்டப் பேரணியை அநுர குமாரவே முன்னின்று நடத்திச் சென்றார். 2004 ஆம் ஆண்டில் யுத்த நிறுத்தத்திற்கெதிராகவும், சமாதான முயற்சிகளுக்கெதிராக அநுரவும் அவரது கட்சியினரும் மேற்கொண்டுவந்த பாரிய எதிர்ப்பு நடவடிக்கைகளால் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணியொன்றினை உருவாக்கும் சூழ்நிலையினை ஏற்படுத்திக் கொடுத்தது. இக்கூட்டணி ஆட்சியில் அநுரவுக்கு விவசாயம், காணி மற்றும் நீர்ப்பாசண அமைச்சுக்கள் வழங்கப்பட்டன. அவ்வருடம் இடம்பெற்ற இந்துசமுத்திர சுனாமி இயற்கை அநர்த்தத்தின்போது இலங்கையில் சுமார் 35,000 மக்கள் கொல்லப்பட்டனர். இவர்களுள் மூன்றில் இரு பங்கினர் வடக்குக் கிழக்கில் வாழ்ந்த தமிழர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளை வழங்க புலிகளுடன் இணைந்து அமைப்பொன்றினை உருவாக்க அரசு எத்தனித்தபோது அநுர குமார திசாநாயக்க அதனைக் கடுமையாக எதிர்த்து நிறுத்தினார். இதனால் வடக்குக் கிழக்கிற்கென்று வெளிநாடுகளில் இருந்து வழங்கப்பட்ட பெருமளவு நிதியும் நிவாரணப் பொருட்களும் கொழும்பிலேயே தங்கிவிட்டன. "நாம் அரச சார்பற்ற அமைப்புக்களை வீதியில்க் கண்டால் அவர்கள் மேல் காறி உமிழவேண்டும். உதவி வழங்கும் நாடுகளும் அவர்களது உதவி அமைப்புக்களும் எமது நாட்டை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றன. அவர்களே இப்போது புலிகளுடன் இணைந்து நிவாரணப் பொறிமுறை ஒன்றை அமைக்கும்படி வற்புருத்துகிறார்கள்" என்று மக்கள் விடுதலை முன்னணியின் அன்றைய பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச 2005 இல் கொழும்பு கூட்டமொன்றில் பேசும்போது முழங்கியிருந்தார். அக்காலப்பகுதியில் தமிழ் மக்களுக்கென்று உதவி வழங்கும் நாடுகளால் அனுப்பிவைக்கப்பட்ட நிதி மற்றும் பொருட்களை இலங்கை அரசாங்கம் போரில் ஒரு கருவியாகப் பாவித்து தமிழ் மக்களைத் தண்டிக்கிறது என்று சர்வதேசத்திடமிருந்து கடுமையான விமர்சனங்கள் எழுந்திருந்தன. 2005 மார்கழியில் இலங்கைக்கு விஜயம் செய்த ஐ நா செயலாளர் நாயகம் கொபி அனான் வடக்குக் கிழக்கிற்கும் செல்ல முயன்றபோது மக்கள் விடுதலை முன்னணியினரின் அழுத்ததுடன் இலங்கையரசு அதற்கு அனுமதி தர மறுத்து விட்டது. நடந்துகொண்டிருந்த சமாதானப் பேச்சுக்கள் முடிவிற்குக் கொண்டுவரப்படவில்லை என்கிற காரணத்தைக் காட்டி அநுர குமாரவும் ஏனைய மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒருவருடத்தின் பின்னர் அரசாங்கத்திலிருந்து விலகிக்கொண்டனர். பின்னர் யுத்தநிறுத்தத்தை நிறுத்தியே தீருவது, போரை மீளவும் ஆரம்பித்து இராணுவத் தீர்வு நோக்கி நகர்வது என்று மகிந்த ராஜபக்ஷ தனது தேர்தல் பிரச்சாரத்தில் அறிவிக்கத் தொடங்கியபோது அநுரவும் அவரது கட்சியும் இந்த ஒற்றைக் காரணத்திற்காகவே மகிந்தவுக்கு 2005 ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு கொடுக்க முன்வந்தனர். யுத்த நிறுத்தத்தினை முடிவிற்குக் கொண்டுவந்து, இராணுவ ரீதியில் புலிகளைத் தோற்கடிக்கவென்று 2006 இல் மக்கள் விடுதலை முன்னணியினால் "நாட்டைக் காக்கும் இணைந்த முன்னணி" எனும் அமைப்பின் உருவாக்கப்பட்டபோது அநுரவும் அதில் பங்காற்றியிருந்தார். தமிழ் மக்களின் சுதந்திரத்திற்கான போருக்கெதிராக மகிந்த ராஜபக்ஷ மிகப்பெரும் அளவில் யுத்தத்தினை ஆரம்பித்தபோது, மக்கள் விடுதலை முன்னணி அரசிற்கு பலத்த ஆதரவினை வழங்கியதோடு, சிங்கள மக்களை போருக்கு ஆதரவாக அணிதிரட்டும் கங்கரியத்தில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கியது. சர்வதேச மனிதவுரிமைக் கண்காணிப்பாளர்களை போர் நடக்கும் பகுதிகளுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று சர்வதேசத்தின் கோரிக்கைகளை உதாசீனம் செய்துகொண்டு மகிந்த போரைத் தீவிரமாக நடத்திவருகையில், அவரது அரசாங்கத்திற்கு ஆதரவாக கொழும்பில் அமைந்திருந்த அனைத்து மேற்குநாட்டு தூதரகங்களுக்கும் முன்னால் பாரிய கண்ட ஆர்ப்பாட்டங்களை அநுரவின் மக்கள் விடுதலை முன்னணி தொடர்ச்சியாக நடத்திவந்தது. 2002, 2006 மற்றும் 2007 ஆகிய வருடங்களில் சமாதானத்திற்கெதிராகவும், போரை வலியுறுத்தியும் மக்கள் விடுதலை முன்னணி ஒழுங்குசெய்த ஆர்ப்பாட்டங்களில் சில. இரத்திணபுரியில் இராணுவ அதிகாரிகளுக்கு முன்னிலையில் பேசும்போது மக்கள் விடுதலை முன்னணியின் பிரமுகர் லால்காந்த, "ஜாதிக்க ஹெல உறுமயவின் தீவிரவாத எண்ணம் கொண்ட பெளத்த பிக்குகளும், மக்கள் விடுதலை முன்னணியினராகிய நாமும் இணைந்து நடத்திய செயற்பாடுகளாலேயே பிரிவினைவாதிகளின் பயங்கரவாதத்தை எம்மால் முற்றாக அழிக்க முடிந்தது" என்று கூறினார். "சுதந்திரக் கட்சியோ, ஐக்கிய தேசியக் கட்சியோ, பொதுஜன பெரமுனவோ அல்லது எந்தக் கட்சியோ போரை முடிவிற்குக் கொண்டுவரவில்லை. ஆனால் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய நாமும், ஜாதிக்க ஹெல உறுமயக் கட்சிட்யினரும் இணைந்து எடுத்த தீர்மானமான "நாம் தமிழரின் பிரச்சினையினை போரின் மூலமே தீர்க்கவேண்டு, ஏனென்றால் அதற்கு வேறு தீர்வுகள் கிடையாது என்பதற்கமைய போரில் வெற்றிகொண்டோம்" என்று அவர் மேலும் கூறினார். போர்க்குற்றவாளிகளைப் பாதுகாப்பேன் என்கிற சூளுரை போர்க்குற்றவாளி அருனா ஜயசேகர இலங்கை இராணுவம் ஆடிமுடித்த தமிழினக் கொலையில் 167, 679 தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்டனர். போர்வலயத்தில் அகப்பட்டிருந்த மக்களுக்கான உணவையும், அத்தியாவசிய மருந்துப்பொருட்களையும் அரசு தடை செய்தது. வைத்தியசாலைகள் தொடர்ச்சியாக இலங்கை இராணுவத்தால் இலக்குவைக்கப்பட்டன. தமிழ்ப் பெண்களுக்கெதிரான மிகவும் காட்டுமிராண்டித்தனமான பாலியல் வன்புணர்வுகளை பரந்துபட்ட அளவில் போர்காலம் முழுவதும் இலங்கை இராணுவம் நிகழ்த்தியது. சரணடைந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இனக்கொலையில் நடத்தப்பட்ட பாரிய மனிதவுரிமைகள் மற்றும் மனித நாகரீகத்திற்கெதிரான குற்றங்களையடுத்து ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைச் சபையில் பல தீர்மானங்கள் இலங்கை அரசிற்கெதிராக நிறைவேற்றப்பட்டன. அப்படியான இன்னொரு தீர்மானம் இப்போதும் ஐ நா சபையில் கொண்டுவரப்படவிருக்கிறது. இத்தீர்மானங்களும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களும் சர்வதேச விசாரணைப்பொறிமுறை ஒன்றின் ஊடாக நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட்டு, பாரியளவில் குற்றங்களைப் புரிந்த குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாகக் கோரி வந்தன. ஆனால் சர்வதேசத்தினதும் தமிழ் மக்களினதும் இக்கோரிக்கைகளை முற்றாக நிராகரித்திருக்கும் அநுர குமார திசாநாயக்க, "போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்றோ, மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் என்றோ எவரையுமே நாங்கள் தண்டிக்க அனுமதிக்கப்போவதில்லை" என்று ஆவணி 2024 இல் தேர்தல் பிரச்சார மேடையொன்றில் வெளிப்படையாகவே கூறியிருந்தார். போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும், அரசியல் இராணுவத் தலைமைகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் தொடர்ச்சியாகக் கோரிவரும் நிலையில் "பாதிக்கப்பட்ட தமிழர்கள் கூட போர்க்குற்றவாளிகளைத் தண்டியுங்கள் என்று கோரவில்லை" என்று சிங்கள மக்களிடையே பொய்யான பிரச்சாரத்தினை அநுர குமார திசாநாயக்க மேற்கொண்டார். அதேவேளை, அவரது கட்சியான மக்கள் விடுதலை முன்னணி, போர்க்குற்றவாளிகள் என்று அறியப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதிகளை தமது பாதுகாப்புக் கொள்கை வகுப்பில் இணைத்து வருகின்றனர். உதாரணத்திற்கு இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற அருன ஜயசேகர என்பவன் தமது பாதுகாப்புக் கொள்கைகளை வகுப்பதில் பிரதானியாக அநுர குமார திசாநாயக்க அமர்த்தியிருக்கிறார். இந்த அருண ஜயசேகர என்பவன் ஹெயிட்டி நாட்டிற்கு அமைதிகாக்கும் சேவையில் ஐ நா வினால் அமர்த்தப்பட்ட இலங்கை இராணுவத்தின் மூன்றாம் படையணிக்குக் கட்டளை அதிகாரியாக இருந்தவன். இவனது படைப்பிரிவே 2004 முதல் 2007 வரையான காலப்பகுதியில் சிறுவயதுச் சிறுமிகளை பாலியல்த் தொழிலுக்காகக் கடத்திவந்ததாகப் பரவலாக விமர்சனங்கள் எழுந்திருந்தன.
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
யார் இந்த அநுர குமார திசாநாயக்க 20 புரட்டாதி 2024 தேசிய மக்கள் சக்தி எனும் பெயரினுள் மறைந்திருக்கும் மக்கள் விடுதலை முன்னணி எனும் அதே பழைய சிங்கள இனவாத மார்க்ஸிஸ்ட்டுக்களின் தலைவரும், 2000 ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலில் தேசியப் பட்டியல் ஆசனத்தினூடாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகவும் வந்தவரே இந்த அநுர குமார திசாநாயக்க எனும் நபர். ஆரம்பத்தில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசாங்கத்தை ஆதரித்து வந்தபோதிலும், பின்னர் தீவிர சிங்கள பெளத்த இனவாதக் கட்சிகளுடன் தன்னை இணைத்துக்கொண்டு 2002 இல் விடுதலைப் புலிகளுக்கும் ரணில் அரசாங்கத்திற்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளைக் குழப்பி யுத்தத்திற்குள் நாட்டைத் தள்ளுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயற்பட்ட போலி மார்க்ஸிஸ்ட்டுக்களின் கட்சியின் முக்கிய உறுப்பினர் இவர். யுத்த நிறுத்தத்திற்கெதிராகவும், சமாதானப் பேச்சுக்களிற்கெதிராகவும் சிங்கள மக்களிடையே பிரச்சாரம் செய்து அதனூடாக அரசியலின் முன்னணிக்கு வந்த இவரது கட்சி 2004 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ஷ எனும் போர்க்குற்றவாளியுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எனும் பொதுச் சிங்கள இனவாத முன்னணியைத் தோற்றுவித்தது. இவர் தலைமை தாங்கும் மக்கள் விடுதலை முன்னணியினர் போர்க்குற்றங்களுக்கான சர்வதேச விசாரணைகளை ஆரம்பத்திலிருந்தே முற்றாக நிராகரித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தமிழ் மக்களுடன் அதிகாரங்களைப் பகிரப்போவதில்லையென்று வெளிப்படையாகவே கூறிவரும் இவர்கள் தமிழ் மக்களுக்கெதிரான இனக்கொலையில் இலங்கை இராணுவத்தின் பின்னால் நின்று பூரண ஆதரவினை வழங்கியவர்கள். 13 ஆவது திருத்தத்திற்கு ஆரம்பமுதல் எதிர்ப்புத் தெரிவித்து வருபவர் அநுர குமார திசாநாயக்க பதவிக்கு வந்தவுடன் பாராளுமன்றத்தை உடனடியாகவே கலைப்பேன் என்று உறுதி வழங்கியிருந்தார். இவ்வருடம் சித்திரையில் வடக்குக் கிழக்கிற்கு தேர்தல்ப் பிரச்சாரங்களுக்காகச் சென்றிருந்தவேளை "நாட்டில் நடக்கும் ஊழலுக்கு எதிராக அரசியல் யாப்பில் மாற்றங்களைச் செய்வேன் என்று உங்களிடம் கூறவே வந்திருக்கிறேன். 13 ஆவது திருத்தத்தை அமுல்ப்படுத்துவேன் என்று உங்களிடம் உறுதியளிப்பதற்காக நான் இங்கு வரவில்லை" என்று மிகத் தெளிவாகவே தமிழ் மக்களுக்கு தனது எண்ணத்தைக் கூறிவிட்டு வந்தவர். "எனக்கு வாக்களியுங்கள் என்று உங்களிடம் கேட்க நான் இங்கு வரவில்லை. 13 ஆவது திருத்தத்தை அமுல்ப்படுத்துவேன், அதற்குப் பிரதியுபகாரமாக எனக்கே வாக்களியுங்கள் என்று உங்களிடம் கேட்கவும் நான் இங்கு வரவில்லை. உங்களிடம் வாக்குக் கேட்பதற்காக சமஷ்ட்டி முறை தீர்வை உங்களுக்குத் தருவேன் என்று கூறுவதற்காகவும் நான் வரவில்லை. நான் வந்திருப்பது இலங்கை இன்றிருக்கும் பொருளாதாரச் சிக்கலில் இருந்து அதனை மீட்டெடுக்க என்ன செய்யலாம் என்று கலந்தாலோசிப்பதற்காகத்தான்" என்று பெரும்பாலான தமிழர்கள் வாழும் இம்மாவட்டங்களுக்கு அவர் வந்தபோது அவர் கூறினார். 13 ஆவது திருத்தச் சட்டத்தை அவர் கடுமையாக எதிர்த்து வந்தபோதிலும் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுடன் பேசும்போது 13 ஆவது திருத்தச் சட்டத்தை தனது ஆட்சி நடைமுறைப்படுத்துவது குறித்துச் சிந்திக்கும் என்று கூறியிருந்தார். ஆனால், 13 ஆவது திருத்தத்தினை அது உருவாக்கப்பட்ட நாளில் இருந்தே எதிர்த்தும், வடக்குக் கிழக்கு இணைப்பை எதிர்த்தும், மாகாணசபைகள் அமைப்புக் கலைக்கப்படவேண்டும் என்றும் கூறி வரும் ஒரு கட்சியின் தலைவர் இவ்வாறு கூறுவது அக்கட்சியின் கொள்கைகளுக்கு முரணானது. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே கைச்சாத்தான 1987 ஆம் ஆண்டு ஒப்பந்தம் தமிழர்களின் நலனைக் கருத்திற்கொள்ளாது இரு அரசுகளின் நலன்களை மட்டுமே கருத்திற்கொண்டு உருவாக்கப்பட்டது. இவ்வொப்பந்தம் மூலம் உருவாக்கப்பட்ட மாகாணசபைகள் அமைப்பின் மூலம் தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட முடியும் என்று கூறப்பட்டது. இணைந்த வடக்குக் கிழக்கு மாகாணசபைகள் ஊடாக காணி மற்றும் பொலீஸ் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படலாம் என்றும் அவ்வொப்பந்தம் பரிந்துரை செய்திருந்தது. "பல ஆண்டுகளுக்கு முன்னர் செய்யப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தினை ஒரு அரசியற் கட்சி என்கிற வகையில் நாம் எதிர்க்கிறோம். எத்தனை உயிர்கள் காவுகொள்ளப்பட்டாலும்கூட இலங்கையின் இறையாண்மையினையும், ஒருமைப்பாட்டையும் எமது கட்சி பாதுகாத்தே தீரும்" என்று அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் இவ்வாண்டின் ஆரம்பத்தில் கூறியிருந்தார். "எமது இந்த நிலைப்பாடு இதுவரையிலும் மாறவில்லை, இனிமேலும் மாறப்போவதில்லை" என்றும் அவர் கொழும்பு பத்திரிக்கையாளர் மாநாடொன்றில் நாட்டு மக்களுக்கு உறுதியளித்தார். "இந்த நாட்டின் சரித்திரத்தில் அதன் இறையாண்மையினையும், ஒருமைப்பாட்டினையும் பாதுகாக்க தொடர்ச்சியாக உறுதியான நிலைப்பாட்டினை எடுத்து வந்திருக்கிறோம். அதனைக் கட்டிக் காப்பதற்கு நாம் உறுதிபூண்டிருக்கிறோம். இதுகுறித்த எமது நிலைப்பாடு என்றைக்குமே மாறப்போவதில்லை. எமது கொள்கைகளில் எந்த விட்டுக்கொடுப்பிற்கும் இடமில்லை என்பதை இந்த நாட்டு மக்களுக்கு எங்களால் உறுதியாகக் கூறமுடியும்" என்று அவர் கூறினார். மக்கள் விடுதலை முன்னணி இலங்கை அரசாங்கத்திற்கெதிராக இரு ஆயுதக் கிளர்ச்சிகளில் ஈடுபட்டது. முதலாவது 1970 களில், இரண்டாவது 1980 களின் இறுதிப்பகுதியில். இதில் இரண்டாவது ஆயுதக் கிளர்ச்சி முழுக்க முழுக்க இந்திய இலங்கை ஒப்பந்தத்தினூடாக ஏற்படுத்தப்பட்ட 13 ஆம் சட்டத்தினூடாக வட கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கு எதிராக நடத்தப்பட்டது. பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் இந்தக் கிளர்ச்சியின்போது கொல்லப்பட்டார்கள். இந்த தீவிர இடதுசாரி இனவாதிகளின் தலைவரான ரோகண் விஜேவீர 1986 ஆம் ஆண்டு தான் எழுதிய "தமிழ் ஈழப் போராட்டத்திற்கான எனது தீர்வுகள்" எனும் புத்தகத்தில் தமிழர்களின் சுயநிர்ணயக் கோரிக்கையினை அமெரிக்க ஏகதிபத்தியவாதிகளின் நலன்களைப் பேண புனையப்பட்ட சதி என்று குறிப்பிட்டிருந்தார். 2015 ஆம் ஆண்டில் மக்கள் விடுதலை முன்னணியின் பிரசாரச் செயலாளராக இருந்த விஜித்த ஹேரத் தி ஐலண்ட் எனும் சிங்கள இனவாதிகளின் ஆங்கில ஊதுகோலுக்கு வழங்கிய செவ்வியில், "மக்கள் விடுதலை முன்னணி சமஷ்ட்டி ஆட்சிக்கு எதிரானது. தமிழ் மக்களின் இன்னல்கள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும் அதேவேளை, சமஷ்ட்டி முறையினூடாக இப்பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் என்பதை எமது கட்சி முழுமையாக நிராகரிக்கிறது. இந்திய இலங்கை ஒப்பந்தத்தின்படி இணைக்கப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாணங்களை எமது கட்சியே நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் பிரித்தது. இதற்காக மூன்று தனியான வழக்குகளை நாம் தாக்கல் செய்திருந்தோம்" என்று அவர் கூறினார். மக்கள் விடுதலை முன்னணியினர் தாக்கல் செய்த வழக்கினையடுத்து வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டமை சட்டத்திற்கு முரணானது என்று கூறிய மூன்று நீதிபதிகளும், அவை உத்தியோகபூர்வமாக பிரிக்கப்படுவதாக தீர்ப்பு வழங்கியிருந்தனர். 2007 ஆம் ஆண்டு தை மாதம் 1 ஆம் திகதியிலிருந்து தமிழர்களின் தாயகமான வட மாகாணமும், கிழக்கு மாகாணமும் நிரந்தரமாகவே பிரிக்கட்டுப் போயின. அநுர திசாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் "இலங்கை நாட்டின் இறையாண்மையும், ஒருமைப்பாடும் எந்தவிட்டுக்கொடுப்புக்களுக்கும் இடமின்றி எமது கட்சியினால் காக்கப்படும்" என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. மக்கள் விடுதலை முன்னணியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவாரான சுனில் ஹந்துநெட்டி பேசும்போது "தற்போதிருக்கும் மாகாணசபை முறையினை தமது கட்சி தொடர்ந்து கடைப்பிடித்தாலும், நீண்டநாட்களுக்கு அதனை தொடரும் எண்ணம் இல்லை" என்று கூறினார். சிங்கள இனவாதிகளுடனும், தேசியத்துடனும் மக்கள் விடுதலை முன்னணி காட்டும் நெருக்கமும் தமிழர்களுக்கெதிரான அக்கட்சியின் நிலைப்பாடும் இவர்கள் குறித்த சந்தேகங்களை தமிழர்களிடையே நீண்டகாலமாகத் தோற்றுவித்து வந்திருக்கின்றன. 2010 ஆம் ஆண்டில் அநுர குமார திசாநாயக்க பேசும்போது, தமது கட்சி "வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு அரசியலமைப்பில் மாற்றங்களைச் செய்வதன் மூலம் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க அரசு முற்படுமாயின் தமது கட்சி அதனை எதிர்க்கும்" என்று கூறியிருந்தார்.
-
தமிழரசுக் கட்சியின் அனைத்து பொறுப்புக்கள் தொடர்பிலும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவின் அதிரடி முடிவு
உண்மை, ஆனால் இன்று அவர்கள் பின்னால் காவடி தூக்கும் தமிழர்களுக்கு உரிமையோ, நாடோ, நீதியோ, தீர்வோ அல்லது இனம் சார்ந்த எதுவுமோ தேவைப்படுவதாகத் தெரியவில்லை. வரிசையில் நிற்காமல் பெற்றொலும், எரிவாயுவும், பாணும் கிடைத்தாலே போதும் என்கிற நிலையில்த்தான் அவர்கள் இருக்கிறார்கள்.
-
தமிழரசுக் கட்சியின் அனைத்து பொறுப்புக்கள் தொடர்பிலும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவின் அதிரடி முடிவு
நாம் வெட்கித் தலைகுனிய வேண்டிய தருணம் இது.
-
தமிழரசுக் கட்சியின் அனைத்து பொறுப்புக்கள் தொடர்பிலும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவின் அதிரடி முடிவு
இது அந்தக் கட்சியின் பின்னால் ஓடும் தமிழர்களுக்குத் தெரியுமா? அல்லது தெரிந்துகொண்டு தான் இப்படி ஓடுகிறார்கள்? கேட்டால் எனக்கு இனவாதம் என்று சொல்வார்கள், எதுக்கு தேவையில்லாத பிரச்சினை. உப்பிடியே ஓடட்டும்.
-
ஈழத்தின் துயரத்தை படமாக்க விரும்புகிறேன் : இயக்குனர் மாரி செல்வராஜ் அறிவிப்பு
நல்லது. உண்மையான வலிகளைப் பதிவு செய்யுங்கள். இன்னொரு கன்னத்தில் முத்தமிட்டால் வேண்டாம்.
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
அநுரவை தேசியத் தலைவருக்கு நிகரானவர் என்று வர்ணித்து வணங்குவதும், வேறு சிலர் அவரை தமிழர்களின் காவலன் என்று கூறுவதும், மீதிப்பேர் இவரை இதுவரை இலங்கை கண்டிராத நேர்மையான, இனபேதமற்ற இலங்கையன் என்று போற்றிப் புகழ்வதும் நடக்கிறது. இக்கட்சியின் உண்மையான முகம் எப்படிப்பட்டது, அக்கட்சியின் கடந்தகால தமிழர் விரோத செயற்பாடுகள் எப்படியானவை என்பதை நன்கு தெரிந்துகொண்டபோதிலும், அவற்றை மறைத்து, மறந்து, எதுவுமே நடவாததுபோல அவரை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கவேண்டும் என்று தமிழரின் இருப்பிற்கான போராட்டத்தில் பெரும்பகுதியில் வாழ்ந்த முதியோரும் (புலிகளினால் தமது எழுத்துக்களுக்கு பாரட்டைப் பெற்றவர்கள் உட்பட), 2009 இற்கு முன்னரான சரித்திரத்தை அறிந்திராத அல்லது அரசியல் ரீதியில் தமிழ்த் தேசியத்திலிருந்து வேண்டுமென்றே விலத்தி வழிநடத்தப்பட்ட இளையோரும் அநுரவின் பின்னால் குருடர்களாக இழுபட்டுச் செல்லுதல் நடக்கிறது. நடந்தவை தெரிந்தும், அநுரவை ஆதரித்தே தீருவது என்று கங்கணம் கட்டி நிற்கும் முதியோருக்காகவோ அல்லது, தேசிய நீக்கம் செய்து, சிங்களப் பெருந்தேசியத்திற்குள் உள்வாங்கப்பட வேண்டும் என்ற நோக்கில் செயற்படும் இனவிரோதிகளுக்காகவோ இத்தொடரை நான் பதியவில்லை. மாறாக இவ்வகையானவர்களினால் தவறான சரித்திரத்தை உண்மையென்று நம்பி, நமக்கிழைக்கப்பட்ட வரலாற்று அநியாயங்களை அறியாமல் சிங்கள இனவாதியொருவரை தமது நாயகனாக நம்பி பின்னால்ச் செல்லும் இளைய தலைமுறை இவற்றை அறியவேண்டும் என்பதற்காகவே இதனைப் பதிகிறேன். பதிவு இறுதிப் போரில் தமிழினக்கொலையில் முனைப்புடன் செயற்பட்ட போர்க்குற்றவாளியான சம்பத் தூயகொந்தாவை தனது பாதுகாப்புச் செயலாளராக நியமித்த அதே தமிழர்கள் வணங்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 23 புரட்டாதி 2024 இலங்கை ஜனாதிபதியாக தான் பதவியேற்றுக்கொண்டதும் செய்த முதலாவது பணிகளில் ஒன்று இறுதி யுத்தகாலத்தில் பேர்பெற்ற போர்க்குற்றவாளியாகத் திகழ்ந்த தளபதி சம்பத் தூயகொந்தாவை தனது பாதுகாப்புச் செயலாளராக நியமித்ததுதான். இந்த சம்பத் எனும் போர்க்குற்றவாளி முள்ளிவாய்க்கால் தமிழினக் கொலையினை தனது யுத்தவெற்றியாகப் பறைசாற்றி வெளிப்படையாகவே பேசிவந்தவன். இவனை தனது பாதுகாப்புச் செயலாளராக அநுர நியமித்திருப்பதன் மூலம் அவரை நம்பி, தெய்வம் என்று வழிபடும் தமிழ் பக்தகோடிகளுக்கு அவர் கூறும் செய்தி என்ன? இறுதி யுத்தகாலத்தில் சம்பத் தூயகொந்த இலங்கை விமானப்படையில் உலங்குவானூர்திப் படையணியின் 9 ஆவது பிரிவின் விங் கொமாண்டராகப் பணியாற்றியவன். தாக்குதல் உலங்குவானூர்தியின் கட்டளைத் தளபதியாக இறுதியுத்ததில் ஈடுபாட்டுடன் பணியாற்றிய இவன் குறைந்த 400 வான் தாக்குதல்களை தமிழர்கள் மீது மேற்கொண்டதாக வெளிப்படையாகவே கூறிப் பெருமைப்பட்டிருக்கிறான். இவனும் இவனது சகாக்களும் ஆடி முடித்த தமிழினக்கொலையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் பலியிடப்பட்டார்கள். இவனது வான்படை தமிழர் தாயகத்தின் வைத்தியசாலைகள், அகதிமுகாம்கள், யுத்த சூனிய வலயங்கள் என்று தெளிவாக அடையாளம் காணப்பட்ட சிவிலியன் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தி, மக்களை அதிகளவில் கொன்றொழிக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே பணியாற்றியது. "வன்னிப் போர்க்களத்தில் நாம் அவர்களை ஓடவிட்டோம், கதிகலங்க அடித்தோம்" என்று இனவழிப்புப் போர் முடிந்த கையோடு சிங்கள ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியொன்றில் இனவழிப்பில் தனது பங்கினை மெச்சிப் பேசியிருந்தான். இறுதி யுத்த காலத்தில் தான் மட்டுமே 60 தாக்குதல்களில் நேரடியாகப் பங்குகொண்டு பலரைக் கொன்றதாகப் பெருமைப்பட்டிருக்கிறான். இவனது தாக்குதல் உலங்குவானூர்திப் படையணி மொத்தமாக 19,762 80 மில்லிமீட்டர் ராக்கெட்டுக்களை தமிழர்கள் மீது வீசியிருக்கிறது என்று அவன் இச்செவ்வியில் கூறியிருக்கிறான்.இவற்றிற்கு மேலதிகமாக தனது தாக்குதல் வானூர்தியில் பொருத்தப்பட்டிருந்த 23 மில்லிமீட்டர் இரட்டைக் குழல் தானியங்கித் துப்பாக்கி, 12.7 மில்லிமீட்டர் கட்லிங் இயந்திரச் சுழத் துப்பாக்கி, 30 மில்லிமீட்டர் கனொனன் ரக ஏவுகணைகளையும் தாம் பாவித்ததாகப் பெருமைப்பட்டிருக்கிறான். இவற்றுள் இவனது உலங்குவானூர்தியில் இருந்து கொட்டப்பட்ட ஒவ்வொரு குண்டினதும் நிறை குறைந்தது 250 கிலோ ஆகும். "இரண்டு எம் ஐ 24 தாக்குதல் வானூர்திகளைக் கொண்டே அவர்களுக்கு மிகப்பெரும் அழிவுகளை ஏற்படுத்தினோம்". சித்திரை 2009 இல், புதுக்குடியிருப்பில் தான் பங்குகொண்ட தாக்குதல் ஒன்றுபற்றி அவன் பேசும்போது, "எதிரிகளைத் தேடித்தேடி அழிக்கும் நடவடிக்கையில் நாம் இரவு பகலாக அயராது செயற்பட்டோம். புதுவருடம் பிறக்கும் இரவில் நடக்கும் வானவேடிக்கைகள் போல வன்னி வானம் இரவில்க் காட்சியளித்தது" என்று தமிழர்கள் மீதான திட்டமிட்ட இனக்கொலையினை அவனால் இரசித்து விபரிக்க முடிந்தது. இனக்கொலை முடிந்த பின்னல், மற்றைய போர்க்குற்றவாளிகளைப் போல சம்பத்தும் வெளிநாட்டுத் தூதரகம் ஒன்றிற்கு அதிகாரியாக அனுப்பி வைக்கப்பட்டான். போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகளைப் பாதுகாக்கும் பொருட்டே இவனைப்போன்றவர்களை நாட்டின் இராஜதந்திரப் பதவிகளுக்கு கோட்டாபயலின் அரசாங்கம் நியமித்து வந்தது. தூயகொந்தாவும் இதே காரணத்திற்காக பாக்கிஸ்த்தானில் இயங்கும் இலங்கைத் தூதரகத்தில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்ற அதே கோட்டாபயலினால் அனுப்பிவைக்கப்பட்டான். இறுதி இனக்கொலை யுத்தத்தில் இலங்கையின் பேர்பெற்ற போர்க்குற்றவாளியான சவேந்திர சில்வாவுக்கு நிகரான போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இன்னொரு அரக்கக் குணம் கொண்ட போர்க்குற்றவாளியான கமல் குணரட்ணவின் இடத்திற்கே இப்போர்க் குற்றவாளியான சம்பத் தூயகொந்தாவும் நியமிக்கப்பட்டிருக்கிறான். இவனை தனது பாதுகாப்புச் செயலாளராக அநுர நியமித்து அழகுபார்ப்பதனூடான அவர் தன்னை வணங்கிப் பிந்தொடரும் தமிழ் பக்த கோடிகளுக்குச் சொல்ல விரும்பும் செய்தி என்னவாக இருக்கும்? அது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்! https://www.tamilguardian.com/content/another-accused-sri-lankan-war-criminal-appointed-defence-secretary
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
திருகோணமலையில் ஹர்த்தாலினை அனுஸ்ட்டித்த தமிழர்கள் மீது தீவிரவாத மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவாளர்கள் தாக்குதல் மூன்று தமிழர்கள் பலி, 36 பேர் காயம் 12 ஐப்பசி 2002 திருகோணமலையில் ஹர்த்தாலில் ஈடுபட்ட தமிழர்கள் மீது சிங்கள ஊர்காவல்ப்படையினைச் சேர்ந்த மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலில் 3 தமிழர்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் 36 பேர் காயமடைந்தனர். மேலும் மட்டக்களப்பு காஞ்சிரங்குடா பகுதியில் விசேட அதிரடிப்படை முகாமின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது விசேட அதிரடிப்படையினர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 7 தமிழர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 14 பேர் காயமடைந்தனர். பேச்சுவார்த்தைகளைக் குழப்பும் நோக்கில் வடக்குக் கிழக்கில் அமைதியின்மையினைத் தோற்றுவிக்கும் முகமாக மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவாளர்களும் அரச படைகளில் குறிப்பிட்ட ஒரு பிரிவினரும் முயன்றுவருவது இதன் மூலம் உறுதியாகிறது. கிழக்கில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைக் கண்டித்து வடக்குக் கிழக்கு எங்கும் பூரண ஹர்த்தால் தமிழ் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டது. அச்சுவேலி, கொடிகாமம் ஆகிய பகுதிகளில் கடைகளை பலாத்காரமாக இராணுவத்தினர் திறக்க முனைந்த போதிலும், வர்த்தகர்கள் பிடிவாதமாக மறுத்து விட்டனர். வீதிகள், கடைகள், பொதுமக்கள் பாவிக்கும் இடங்களில் கறுப்புக்கொடிகள் பறக்கவிடப்பட்டதுடன், தொடர்ச்சியாக சோக கீதமும் ஒலிபெருக்கிகளைக் கொண்டு ஒலிபரப்பப்பட்டு வந்தது. பலவிடங்களில் வீதிகளுக்குக் குறுக்காக டயர்கள் எரிக்கப்பட்டிருந்தன. பெரும்பாலான போக்குவரத்து முடக்கப்பட்டிருந்தது, ஒரு சில தனியார் வாகனங்களைத் தவிர. யாழ்ப்பாணத்திற்கும் வவுனியாவிற்குமான போக்குவரத்து தடைப்பட்டிருந்ததுடன், ஓமந்தைச் சோதனைச் சாவடிகளும் வெறிச்சோடிக் காணப்பட்டன. https://www.tamilnet.com/art.html?catid=13&artid=7625- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
புலிகள் மீதான தடையினை நீக்கக் கூடாதென்று கோரி கொழும்பில் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய தீவிர சிங்கள இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணி 3, புரட்டாதி 2002 ஆயிரக்கணக்கான தீவிர சிங்கள இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள், நூற்றுக்கணக்கான பெளத்த பிக்குகள் உள்ளிட்ட பலர் கொழும்பில் இன்று கூடி ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். புலிகள் மீதான தடையினை நீக்குவதன் மூலம் பேச்சுவார்த்தைகளில் நம்பகத்தன்மையினை ஏற்படுத்த ரணில் அரசாங்கம் முயன்று வருகையில் அதனைத் தடுத்து நிறுத்தும் முகமாகவே மக்கள் விடுதலை முன்னணி ஆர்ப்பாட்டங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றது. ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமரின் அலுவலகத்தை நோக்கிச் சென்றபோது பொலீஸாரினால் தடுக்கப்பட்டனர். கொழும்பு கோட்டைப் பகுதியில் ஆரம்பமான ஆர்ப்பாட்டப் பேரணி காலிமுகத்திடலை அடைந்தபோது நூற்றுக்கணக்கான பொலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். மக்கள் விடுதலை முன்னணியின் ஆர்ப்பாட்டப் பேரணியில் முன்னால் செல்லும் அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் https://www.tamilnet.com/art.html?catid=13&artid=7431- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தினை நிராகரிக்குமாறு மக்களைத் தூண்டிய மக்கள் விடுதலை முன்னணி உள்ளடங்கிய எதிர்க்கட்சிகள். 9 ஆடி 2002 இலங்கையின் பிரதான எதிர்க்கட்சிகளும், பல சிங்கள இனவாத அமைப்புக்களும் இணைந்து கொழும்பில் பாரிய பேரணியொண்றினை நடத்தின. சுமார் 5,000 பேர் பங்குகொண்ட இந்தப் பேரணியில் புலிகளுக்கும் ரணில் அரசிற்கும் இடையே செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தினூடாக நாட்டைப் பிளவுபடுத்தும் சதி நடப்பதனால் சிங்கள மக்கள் அனைவரும் திரண்டெழுந்து இதனை முறியடிக்க வேண்டும் என்று பேரணியில் பேசியோர் கேட்டுக்கொண்டனர். யுத்த நிறுத்தத்திற்கெதிரான சிங்கள இனவாதக் குழு, அநுர பண்டாரநாயக்க, விமல் வீரவன்ச, அர்ஜுன ரணதுங்க ஆகியோர் பேரணி மேடையில் எதிர்க்கட்சிகளின் இந்த பேரணி மாலை 4:30 மணிக்கு நுகேகொடையில் ஆரம்பமானது. பேரணியில் சிங்கள இனவாதத்தின் பிதாமகர்களில் ஒருவரான பண்டாரநாயக்கவின் புத்திரன் அநுர பண்டாரநாயக்க, சிங்கள இனவாதிகளின் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் விமல் வீரவன்ச மற்றும் தேசிய பிக்கு முன்னணியின் தீவிரவாத பிக்கு ஒருவர் ஆகியோர் விசேட உரையாற்றினர். பேரணியில் முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அர்ஜுன ரணதுங்க, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரும் பங்குபற்றினர். "கெளரவமான சமாதானத்திற்கும், பிளவுபடாத நாட்டிற்குமான தேசிய இயக்கம்" எனும்பெயரிலேயே இந்தப் பேரணியினை எதிர்க்கட்சிகள் ஒழுங்குசெய்திருந்தன. https://www.tamilnet.com/art.html?catid=13&artid=7171- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
விடுதலைப் புலிகள் மீதான தடையினை நீக்கக் கூடாது, தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை வழங்கக் கூடாது என்று கோரி கொழும்பு நகரில் ஆயிரக்கணக்கான தீவிர சிங்கள இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணியினர் ஆர்ப்பாட்டம் 19 ஆனி 2002 தீவிர சிங்கள இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்களும், சிங்களப் பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் கொழும்பில் கூடி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரான தடையினை அரசாங்கம் நீக்கக் கூடாதென்றும், வடக்குக் கிழக்கின் இடைக்கால நிர்வாகத்தை புலிகளிடம் வழங்கக் கூடாதென்றும் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் இனவாதக் கட்சியின் உறுப்பினர்கள், பொதுமக்கள், பெளத்த பிக்குகள் உட்பட்ட பலர் கலந்துகொண்டனர். கலந்துகொண்டவர்கள் பதாதைகளை ஏந்திச் சென்றதுடன் தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமையினை வழங்கமுடியாது என்றும் கோஷமிட்டனர். அதன் பின்னர் புலிகளுடனான பேச்சுக்களை ஆரம்பிப்பதன் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதற்காச் செயற்பட்டுவரும் பிரதமர் ரணிலின் அலுவலகத்திற்குச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் புலிகள் மீதான தடையினை நீக்கக் கூடாதென்று ரணிலிடம் மகஜர் ஒன்றைக் கையளிக்க முயன்றபோது பொலீஸாரினால் தடுக்கப்பட்டுத் திருப்பியனுப்பப்பட்டனர்.- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தனியார் ஊடகங்களை தனது இனவழிப்பிற்கும், சிங்களக் குடியேற்றங்களுக்கும் பிரச்சார இயந்திரங்களாக்கிய ஜெயார் பிரதான தொடரிலிருந்து சற்று விலகி அக்காலத்தில் ஜெயவர்த்தனவும், காமிணி திசாநாயக்கவும், லலித் அதுலத் முதலியும் தமது இன ஒதுக்கல் கொள்கைகளுக்கு ஊடகங்களை எவ்வாறு பயன்படுத்தினர் என்பதுபற்றிச் சற்று விளக்கலாம் என்று நினைக்கிறேன். தாம் செய்ய நினைத்த அனைத்து தீவிரச் செயற்பாடுகளுக்கும் சண், தி ஐலண்ட் மற்றும் அதனோடிணைந்த சிங்கள இனவாதப் பத்திரிக்கைகளை அவர்கள் பயன்படுத்த முடிவெடுத்தனர். அரசிற்கு எதிரான கருத்துக்களைக் கொண்ட எதிர்க்கட்சிக்குச் சார்பான பத்திரிக்கைகளை எதற்காகப் பயன்படுத்துகிறீர்கள் என்று ஒருமுறை லலித் அதுலத் முதலியிடம் கேட்டேன். அதற்குப் பதிலளித்த லலித், "டெயிலி நியூஸ் எமது பத்திரிக்கை. ஆகவே டெயிலி நியூஸோ அல்லது தினமினவோ இவ்வாறான செய்திகளைக் காவி வந்தால் அவற்றினை நாமே வழங்கியதென்பஎன்பதை மக்கள் உடனடியாக அறிந்துகொள்வார்கள். ஆகவேதான் சண், தி ஐலண்ட் போன்ற பத்திரிக்கைகளைப் பயன்படுத்துவதென்று முடிவெடுத்தோம்" என்று கூறினார். இக்காலப் பகுதியில் ஜெயாரும் அவரது இரு சகாக்களும் தி ஐலண்ட் பத்திரிக்கையின் பீட்டர் பாலசூரிய, ஞாயிற்றுக்கிழமை பதிப்பான ஐலண்ட் பத்திரிக்கையின் ஜெனிபர் ஹென்ரிக்கஸ், மற்றும் சண்டே பத்திரிக்கை மற்றும் அதன் ஞாயிற்றுக்கிழமை பதிப்பு ஆகியவற்றின் மூத்த பத்திரிக்கையாளர்களான அநுர குலதுங்க, ரனில் வீரசிங்க ஆகியோரையும் தமது பிரச்சாரச் செயற்பாடுகளுக்காகப் பாவித்துக்கொண்டனர். 1982 ஆம் ஆண்டு கார்த்திகை 28 ஆம் திகதி வெளிவந்த சண்டே பத்திரிக்கையின் ஞாயிற்றுக்கிழமை பதிப்பிலும் அதன் சகோதரச் சிங்களப் பத்திரிக்கைகளிலும் ஜெயாரும் காமிணியும் முன்னெடுத்த இனவாதம் கடை விரித்திரிந்தது. காந்தியம் அமைப்பைக் கடுமையாகச் சாடிய இப்பத்திரிக்கைகள் "நாடற்ற" மலையகத் தமிழர்களை எல்லையோரக் கிராமங்களில் குடியேற்றுவதாகவும், பின்னர் அக்கிராமங்களை பயங்கரவாதிகள் மறைந்திருந்து பயிற்சி எடுக்கவும், பயங்கரவாத நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் பாவித்து வருவதாக அவை செய்தி வெளியிட்டிருந்தன. "பயங்கரவாதிகள் நாடற்ற மலையகத் தமிழர்களைக் கொண்டு மனித வேலி ஒன்றினை அமைத்து வருகின்றனர்" என்று அவை தலைப்பிட்டிருந்தன. சிங்கள இராணுவத்தினரும், காவல்த்துறையும் காந்தியம் பண்ணைகளைச் சுற்றிவளைத்துச் சோதனையிடவும், அவற்றினை அழித்து, அங்கிருந்தோரை விரட்டவும் தேவையான களநிலையினை இப்பத்திரிக்கைகளில் வெளிவந்த செய்திகள் உருவாக்கிக் கொடுத்திருந்தன. 1983 ஆம் ஆண்டு, பங்குனி மாதமளவில் இப்பண்ணைகளை முற்றாகத் துடைத்தழிக்க அரசால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதற்காக ஒரு உத்தியினை சிங்கள இராணுவமும் காவல்த்துறையும் பாவித்தன. முதலில் மலையக மக்கள் வாழ்ந்துவந்த காந்தியம் பண்ணையின் பகுதியினை இராணுவம் சுற்றிவளைக்கும். பின்னர் அங்கிருப்பவர்களை பொலீஸார் வீதிக்கு இழுத்து வருவர். எங்கே கொண்டுசெல்லப்படுகிறார்கள் என்பதனை அறிவிக்காது பஸ்களில் ஏற்றப்படும் இந்த மலையகத் தமிழர்கள் இரவோடிரவாக மலையகத்தின் பல பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு வீதிகளில் இறக்கிவிடப்படுவர். பங்குனி 14 ஆம் திகதி இந்த துடைத்தழிக்கும் நடவடிக்கைக்கு இன்னுமொரு பரிணாமம் சேர்த்துக்கொள்ளப்பட்டது. திருகோணமலைக்கு மேற்காக 25 கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கும் பன்குளத்தில் அமைக்கப்பட்டிருந்த மலையக மக்களின் 16 கொட்டகைகளுக்கு சிறிலங்கா பொலீஸார் தீமூட்டினர். தொண்டைமான் இதுபற்றிக் கேள்விப்பட்டபோது நானும் அவருடன் கூடவிருந்தேன். செய்தியைக் கேட்ட தொண்டைமான் கொதித்துப் போயிருந்தார். ஜெயவர்த்தனவின் கட்டளைகளின்படியே பொலீஸார் இவற்றைச் செய்கிறார்கள் என்பது அவருக்கு நன்கு புரிந்தது. அதனால் அவரால் எதுவுமே செய்ய முடியவில்லை. அவரால் செய்ய முடிந்ததெல்லாம் பத்திரிக்கை அறிக்கையொன்றினை வெளியிடுவது மட்டும்தான். 1983 ஆம் ஆண்டு சித்திரை மாதம் வவுனியாவில் இயங்கிவந்த காந்தியம் அலுவலகம் இழுத்து மூடப்பட்டு, சீல் வைக்கப்பட்டது. அவ்வமைப்பின் ஸ்த்தாபகர்களான வைத்தியர் ராஜசுந்தரம் மற்றும் எஸ் ஏ. டேவிட் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைத்துவைக்கப்பட்டனர். ஜூலை இனப்படுகொலைகளில், 25 ஆம் திகதி இன்னும் 53 தமிழ் அரசியற்கைதிகளுடன் வைத்தியர் ராஜசுந்தரமும் சிங்களச் சிறைக் காவலர்களாலும், கைதிகளாலும் கொல்லப்பட்டார். டேவிட் வெலிக்கடைச் சிறைப் படுகொலையிலிருந்து உயிர் தப்பினார். மட்டக்களப்புச் சிறைச்சாலைக்கு பின்னர் வேறு தமிழ்க் கைதிகளுடன் மாற்றப்பட்ட அவர் மட்டக்களப்புச் சிறையுடைப்பின்போது அங்கிருந்து தப்பித்து இந்தியாவைச் சென்றடைந்தார். 1983 ஆம் ஆண்டு ஆடி மாதமளவில் மலையகத் தமிழர்கள் மீதான சிங்கள அரசின் அடாவடித்தனங்கள் மிகவும் அதிகரித்துக் காணப்பட்டன. பண்ணைகளில் இருந்து பெரும்பாலான மலையகத் தமிழர்களை அரசு விரட்டியடித்திருந்தது. இப்பகுதிகளில் பெருமளவிலான தெற்குச் சிங்களவர்களைக் குடியேற்றும் நடவடிக்கைகளை அரசு முடுக்கிவிட்டிருந்தது. 1983 ஆம் ஆண்டின் தமிழினப் படுகொலைகள் இச்சிங்களக் குடியேற்றங்களைத் தற்காலிகமான தேக்க நிலைக்கு கொண்டுவந்தன. தமிழர்களின் தனிநாடான ஈழத்திற்கான அவர்களின் கோரிக்கையினை முற்றாக அழித்துவிடுவதற்கான சூழ்ச்சித் திட்டம் 1983 ஆம் ஆண்டு பங்குனி மாதத்தில் கொழும்பு மகாவலி அமைச்சிலேயே போடப்பட்டது. தமிழீழத்தின் அடிப்பகுதியை முற்றாக உடைத்தெடுக்கும் நோக்கத்துடன் தமிழர் தாயகத்தை சிங்களக் குடியேற்றங்களை உருவாக்குவதன் மூலம் மூன்று பிரிவுகளாகச் சிதைப்பதென்று அங்கு திட்டமிடப்பட்டது. அச்சிங்களக் குடியேற்றத் திட்டங்களாவன, மாதுரு ஓயாக் குடியேற்றத் திட்டம், வலி ஓயா (மணலாறு) சிங்களக் குடியேற்றம் மற்றும் மல்வத்து ஓயா சிங்களக் குடியேற்றம் என்பனவே அவை மூன்றுமாகும். சிங்களத்தில் ஓயா எனப்படுவது ஆற்றினைக் குறிக்கும். இந்த மூன்று ஆற்றுப்படுக்கைகளின் ஓரங்களில், செழிப்பான தமிழர் தாயகத்தில் சிங்களவர்கள் அரச முனைப்புடன் குடியேற்றப்பட்டார்கள். தமிழர்கள் பெரும்பான்மையினராக வாழும் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் எல்லையிலேயே மாதுரு ஓயா சிங்களக் குடியேற்றம் அமைக்கப்பட்டிருக்கிறது. மாதுரு ஓயா ஆற்றினையண்டி உருவாக்கப்படும் சிங்களக் குடியேற்றத்தினூடாக திருகோணமலை மாவட்டத்திற்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் இடையிலான நிலத்தொடர்பு முற்றாக அறுத்தெறியப்பட்டிருக்கிறது. வெலி ஓய சிங்களக் குடியேற்றம் திருகோணமலை மாவட்டத்திற்கும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் இடையே இருக்கும் நிலத்தொடர்பை மிகவும் பலவீனமாக்கும் வகையில் அரசால் உருவாக்கப்பட்டது. மல்வத்து ஓய சிங்களக் குடியேற்றம் மன்னார் மாவட்டத்தின் தென்பகுதியூடாக ஊடறுத்துச் செல்கிறது. மன்னார் மாவட்டத்தின் தென்பகுதிகளை வட மாகாணத்திலிருந்து பிரித்தெடுக்கும் நோக்கத்துடனேயே இக்குடியேற்றம் அரசால் உருவாக்கப்பட்டது. இம்மூன்று சிங்களக் குடியேற்றங்களும் முற்றுபெற்ற பட்சத்தில் வடமாகாணத்தின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களும், சிங்களவர்களால் அரிக்கப்பட்ட மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் வடக்கு எச்சங்களும் மட்டுமே வட மாகாணத்தில் எஞ்சியிருக்கின்றன. வெலி ஓய நீர்ப்பாசணக் கால்வாய் 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற தமிழினப் படுகொலை முடிந்த கையோடு மாதுரு ஓயாச் சிங்களக் குடியேற்றத் திட்டம் அமுல்ப்படுத்தப்பட்டது. ஆனால் மகாவலி அமைச்சில் பணிபுரிந்த அதிகாரிகளின் ஆர்வக் கோளாரினால் அவ்விடயம் வெளித்தெரிய வந்ததையடுத்து அது தற்காலிகமாகக் கைவிடப்பட்டது. சிங்களவர்களைக் குடியேற்றுவது தமிழரின் தனிநாட்டுக் கோரிக்கையினைப் பலவீனப்படுத்தவே என்று அதிகாரிகள் வெளிப்படையாகப் பேசி வந்தமை இந்தியாவின் எதிர்ப்பையும், சர்வதேசத்தில் அதிருப்திகளையும் ஏற்படுத்தி விட்டிருந்தது. அவமானப்பட்டுபோன ஜெயார் இக்குடியேற்றங்களுக்கும் தனக்கும் எந்தவித தொடர்புகளும் இல்லை என்று காட்டத் தலைப்பட்டார். ஆனால், முல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாற்றினை வெலி ஓய எனும் சிங்களக் குடியேற்றமாக மாற்றும் திட்டம் முழுமூச்சுடன் ஜெயாரினால் ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்பட்டு வந்தது. 1983 ஆம் ஆண்டு புரட்டாதி 30 ஆம் திகதி சீனாவின் தலைநகர் பீஜிங்கிலிருந்து பாக்கிஸ்த்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்திற்குப் பயணம் செய்த அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் கொழும்பில் தங்கி ஜெயாருடன் தேநீர் அருந்தினார். இந்திய புலநாய்வுத்தகவல்களின் அடிப்படையில் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் வெயின்பேர்கரின் ஜெயாருடனான சந்திப்பு இலங்கைக்கு ஆயுத உதவிகளைச் செய்வது தொடர்பாகவே அமைந்திருந்தது. இலங்கைக்கு நேரடியான ஆயுத வழங்கலைச் செய்வதில் அமெரிக்க அரசாங்கம் சங்கடப்படுவதாக வெயின்பேர்கர் ஜெயாரிடம் தெரிவித்திருக்கிறார். ஆகவே, இலங்கைக்குத் தேவையான ஆயுதங்களை இஸ்ரேலின் ஊடாகவோ அல்லது பாக்கிஸ்த்தானூடாகவோ தன்னால் செய்துகொடுக்கமுடியும் என்று அவர் ஜெயாரிடம் உறுதியளித்திருக்கிறார். அமெரிக்காவின் ஆயுத உதவி உறுதியாக்கப்பட்டதையடுத்து வெலி ஓயாத் திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்க ஜெயவர்த்தன முடிவெடுத்தார். அமெரிக்காவினால் செய்யப்படவிருக்கும் ஆயுத உதவிகளுக்குப் பிரதியுபகாரமாக இலங்கை சில விடயங்களை ஒத்துக்கொள்ள வேண்டும் என்று ஜெயாரிடம் கோரினார் வெயின்பேர்னர். அவையாவன, இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவுகளி மீள ஆரம்பிப்பது, வொயிஸ் ஒப் அமெரிக்கா வானொலிச் சேவையினை இலங்கையில் ஆரம்பிக்கும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது, திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகளை அமெரிக்க நிறுவனம் ஒன்றிற்கு குத்தகைக்கு வழங்குவது. இம்மூன்று விடயங்கள் தொடர்பான பேரம்பேசல்களுக்கு அமெரிக்க அதிபர் ரீகனின் ஆலோசகர் வேர்னன் வோல்ட்டர்ஸ் இலங்கைக்கு வருவார் என்றும் வெயின்பேர்னர் ஜெயாரிடம் தெரிவித்தார். ஆனால், வெயின்பேர்னரோ ஊடகங்களுடன் பேசும்போது தனது பயணத்திற்கான காரணத்தை திரித்துக் கூறினார். இலங்கையில் நடக்கும் இனப்பிரச்சினை ஒரு அரசியல்ப் பிரச்சினையென்றும், அதனை அரசியல் ரீதிய்ல் மட்டுமே தீர்க்கமுடியும் என்று அமெரிக்கா நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் இந்தியாவின் உதவியுடன் தமிழர் பிரச்சினையினை இலங்கை அரசியல்த் தீர்வினூடாகத் தீர்த்துக்கொள்ளவேண்டும் என்று தான் ஜெயாரிடம் வேண்டுகோள் விடுத்ததாகவும் அவர் கூறினார். அமெரிக்காவின் ஆயுத உதவியினால் உற்சாகமடைந்த ஜெயவர்த்தன உடனடியாக செயலில் இறங்கினார். 1983 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் தனது பாதுகாப்புச் செயலாளரான அசோக டி சில்வாவை இணைந்த அரச படைகளின் விசேட நடவடிக்கைகள் கட்டளை மையம் எனும் புதிய பாதுகாப்புப் பிரிவை உருவாக்குமாறு பணித்தார். இக்கட்டளை மையத்தினூடாக முப்படைகளையும், பொலீஸாரையும் ஒரே கட்டளைப் பீடத்தின் கீழ் கொண்டுவர ஜெயாரினால் முடிந்தது. கடற்படைத் தளபதி அசோக டி சில்வா இக்கட்டளை மையத்தின் இணைப்பதிகாரியாகவும், மகாவலி அமைச்சின் மேலதிகச் செயலாளர் பண்டாரகொட கட்டளை மையத்தின் உதவி இணைப்பாளராகவும் ஜெயாரினால் நியமிக்கப்பட்டனர். பண்டாரகொட திருகோணமலை மாவட்டத்தில் அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய காலப்பகுதியில் அம்மாவட்டத்தில் சிங்களக் குடியேற்றங்களை துரித கதியில் நடத்திவந்தமையினைப் பாராட்டும் முகமாகவே ஜெயாரினால் அவருக்கு விசேட கட்டளை மையத்தில் உயர் பதவியொன்று வழங்கப்பட்டது. ஜெயாரின் பணிப்பின் பேரில் விசேட கட்டளைப் பணியகத்தை உருவாக்கிய அசோக டி சில்வா, அப்பணியகத்திற்கு இரண்டு முக்கிய பணிகள் கொடுக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். முதலாவது பணி, "வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் பயங்கரவாதிகளுக்கெதிரான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பது". இரண்டாவது, "இந்த மாவட்டங்களில் இடம்பெறும் குடியேற்றங்கள் மற்றும் சிவில் நிர்வாக சேவைகளை மேற்பார்வை செய்வது". அதே பத்திரிக்கையாளர் மாநாட்டில் பண்டாரகொடவும் பங்குபற்றியிருந்தார். தொடர்ந்து பேசிய அசோக டி சில்வா, விசேட கட்டளைப் பணியகத்தின் படைகளின் முதலாவது நடவடிக்கை பயங்கரவாதிகளை குறிப்பிட்ட பிரதேசத்திலிருந்து விரட்டியடிப்பதுதான் என்று கூறினார். அவர் குறிப்பிடும் விசேட நடவடிக்கை குறித்து மேலதிக தகவல்களை ஊடவியலாளர்கள் அவரிடம் கேட்க முட்பட்டபோது, "இராணுவ இரகசியங்களை வெளியே சொல்லமுடியாது" என்று கூறித் தவிர்த்துவிட்டார். ஆனால் சண் மற்றும் தி ஐலண்ட் பத்திரிக்கைகளில் தேவையானளவு விபரங்களுடன் இந்த விசேட நடவடிக்கை பற்றிய விடயங்கள் அரசால் கசியவிடப்பட்டிருந்தன. ஐப்பசி 7 ஆம் திகதி சண்டே ஐலண்ட்டில் வெளிவந்த பீட்டர் பாலசூரியவின் தலைப்புச் செய்தி இவ்வாறு கூறியது, "காந்தியம் அமைப்பினரால் குடியேற்றப்பட்ட சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் விரைவில் வெளியேற்றப்படவிருக்கிறார்கள்". "தெற்கில் காணியற்ற சிங்களவர்களைக் குடியேற்றவென உலக வங்கியின் உதவியோடு முல்லைத்தீவு மாவட்டத்தின் 500 ஏக்கர்களில் தெரிவுசெய்யப்பட்டிருந்த காணிகளில் கடந்த இரு வருடங்களாக சட்டவிரோதமாகக் கூடியேறி வாழ்ந்துவரும் 50 மலையகத் தமிழ்க் குடும்பங்களை அரசாங்கம் அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்துவருவதாக" அச்செய்தி கூறியது. வவுனியா அரச அதிபரால் தெரிவுசெய்யப்பட்ட காணியற்ற விவசாயிகளை இந்நிலங்களில் குடியேற்றுவது சட்டவிரோத மலையகத் தமிழ்க் குடியேற்றவாசிகளால் இதுவரையில் தடைப்பட்டிருந்ததாக அச்செய்தி மேலும் கூறியது. ஜெயவர்த்தனவின் தமிழர்களைத் தோற்கடிக்கும் செயற்பாடுகளுக்கு உற்ற துணை வழங்கியவரும், தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்குவதை ஒரு கொள்கையாகவே கொண்டிருந்தவருமான காமிணி திசாநாயக்க ஜெயாரின் ஆலோசனையின் பெயரில் உருவாக்கப்பட்ட இணைந்த படைகளின் விசேட கட்டளைப் பணியகத்தைப் பெரிதும் நியாயப்படுத்தியதுடன், அதனை பலப்படுத்தும் காரியங்களிலும் ஈடுபடலானார். வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மலையகத் தமிழர்கள் குடியேறி வாழும் இடங்களைப் பார்த்து வரவென தனது நம்பிக்கைக்குப் பாத்திரமான அதிகாரியான கருணாதிலக்கவை 1983 ஆம் ஆண்டு ஐப்பசி 10 ஆம் திகதி அம்மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்தார். கருணாதிலக்க காமினிக்கு வழங்கிய அறிக்கையில் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பெருமளவான காணிகளில் பிரஜாவுரிமையற்ற மலையகத் தமிழர்கள் குடியேறி வாழ்ந்துவருவதாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்தக் குடியேற்றங்களால் நாட்டிற்கு பாதுகாப்பு அச்சுருத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார். சண், தி ஐலண்ட் ஆகிய பத்திரிக்கைகள் காந்தியம் பண்ணைகளில் இருந்து தமிழர்களை விரட்டியடிக்கும் நடவடிக்கைகளுக்காக சிங்கள மக்களைத் தூண்டிவிடும் பிரச்சார நடவடிக்கைகளில் இறங்கின. 1983 ஆம் ஆண்டு ஐப்பசி 17 ஆம் திகதி வெளிவந்த சண் பத்திரிக்கை, "பிரஜாவுரிமையற்ற மலையகத் தமிழர்கள் வடக்குக் கிழக்கில் சட்டவிரோ காணி பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்" என்று ஓலமிட்டிருந்தது. அப்பத்திரிக்கையின் முதலாம் பக்கத்தின் காற்பகுதி இம்மலையகத் தமிழ் மக்களின் குடியேற்றத்தினை விமர்சிக்கும் விதமாகவே அமைந்திருந்தது. "பொலீஸாரும், படையினரும் இக்குடியேற்றங்களால் பாதுகாப்பு அச்சுருத்தல் ஏற்படப்போகிறது என்று அஞ்சுகின்றனர்", "அரச சார்பற்ற நிறுவனங்கள் பெருமளவு நிதியினை இச்சட்டவிரோதக் குடியேற்றங்களுக்காக வாரியிறைக்கின்றனர்", "மனித வேலியமைத்து ஈழத்தின் எல்லைகளைக் காத்துக்கொள்ள பிரிவினைவாதிகள் எத்தனிக்கிறார்கள்" என்கிற தலைப்புக்கள் கொட்டை எழுதுக்களுடன் முதற்பக்கத்தை அலங்கரித்திருந்தன. வவுனியாவில் இடம்பெற்ற விடயங்களை திகதி அடிப்படையில் இவ்வறிக்கை வெளியிடப்பட்டிருந்தது, "கூட்டம் கூடமாக பிரஜாவுரிமையற்ற மலையகத் தமிழர்கள் தொண்டைமானின் மிக இழிவான செயலினால் வடக்குக் கிழக்கின் பல பகுதிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறார்கள். அதன்பின்னர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மற்றும் காந்தியம் போன்ற பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய அரச சார அமைப்புக்கள் நாடற்ற மலையகத் தமிழர்களைப் பொறுப்பேற்று யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களின் எல்லையோரக் கிராமங்களில் தமக்கென்று பாதுகாப்புப் பிரதேசம் ஒன்றினை மனித வேலி கொண்டு உருவாக்கி வருகின்றனர். இதுவரையில் சுமார் 10,000 நாடற்றவர்கள் இப்பகுதிகளில் குடியேறி உள்ளதுடன் இவர்களுக்கான நிதியினை நோர்வேயின் ரெட்பாணா, ஜேர்மன் அமைப்பு, கத்தோலிக்கத் திருச்சபையினால் நடத்தப்படும் செடெக் மற்றும் சர்வோதய ஆகிய அரசுசாரா அமைப்புக்கள் வழங்கிவருகின்றன" என்றும் கடுமையாகச் சாடியிருந்தது.- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
சமாதானப் பேச்சுவார்த்தைகளை உடனடியாக நிறுத்தக்கோரி கொழும்பில் மற்றுமொரு மாபெரும் ஆர்ப்பாட்டத்தினையும் ஊர்வலத்தையும் நடத்திய தீவிர சிங்கள இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி 23 சித்திரை 2002 அதி தீவிர சிங்கள இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணியினர் அரசாங்கம் புலிகளுடன் மேற்கொண்டுவரும் சமாதான முயற்சிகளை உடனடியாக நிறுத்தக்கோரி கொழும்பு லிப்டன் சதுக்கத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தையும் ஊர்வலம் ஒன்றினையும் நடத்தியிருக்கிறது. சுமார் 5,000 தீவிரவாத சிங்களவர்களை ஒன்றுசேர்த்த மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளரான டில்வின் சில்வா ஊர்வலத்திற்குத் தலைமை தாங்கிச் சென்றார். லிப்ட்டன் சதுக்கத்தில் ஆரம்பமாகிய ஊர்வலம் கொழும்பு ஹயிட் பார்க் இல் முடிவிற்கு வந்தது. சமாதான முயற்சிகளை எப்படியாவது தடம்புரளச் செய்வதன் மூலம் தமிழர்க்கு கொடுக்கவிருப்பதாகக் கூறப்படும் அதிகாரப் பகிர்வினை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடக் கங்கணம் கட்டியிருக்கும் தீவிர சிங்கள இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னண்னியினர் இன்னொரு அணியினர் மேற்கு மாகாண சபையில் சமாதானப் பேச்சுக்களை நிறுத்தக் கோரும் விவாதம் ஒன்றினை இருநாட்களாக நடத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் திருகோணமலை அமைப்பான கிழக்கு மாகாண மக்கள் அமைப்பு எனும் அதி தீவிர சிங்கள இனவாதிகளின் உறுப்பினர்கள் சித்திரை 24 ஆம் திகதி திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றினை நடத்தவிருப்பதாக பொலீஸார் அறிவித்திருக்கின்றனர். புலிகள் மேல் நடைமுறையில் இருக்கும் தடையினை நீக்குவதற்கெதிராகவும், வட கிழக்கு மாகாணங்களின் இடைக்கால நிர்வாகத்தை புலிகளிடம் ஒப்படைப்பதற்கு எதிராகவும் இந்த பேரணியை மக்கள் விடுதலை முன்னணியின் திருகோணமலை அணி நடத்துகிறது. https://www.tamilnet.com/art.html?catid=13&artid=6874 உங்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கும், ஊக்கத்திற்கும் நன்றிகள் நொச்சி, இந்தத் தொடரின் ஆங்கில மூலம் தமிழ்நெட் மற்றும் தமிழ் கார்டியன் இணையங்களில் இருக்கிறது. நான் இவற்றைச் சேமித்து வைப்பது பற்றி யோசிக்கவில்லை. ஆனால் நீங்கள் கூறுவது போல செய்வது நலம்தான். ஏனென்றால் ஒருமுறை நான் எழுதி, சேமித்துவைக்காத பகுதியொன்று யாழில் தொழிநுட்பக் கோளாறு காரணமாக அழிந்துபோனது நினைவில் இருக்கிறது. நட்புடன் ரஞ்சித்- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
வடக்குக் கிழக்கில் இடம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தமது வாழிடங்களுக்குத் திரும்பும்வரை உள்ளூராட்சித் தேர்தல்களை ஒத்திப்போட்ட அரசு, எதிர்த்து வழக்குத் தக்கல் செய்ய விழையும் மக்கள் விடுதலை முன்னணி 5 சித்திரை 2002 நாட்டில் நடக்கவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தல்களை அனைத்து மாகாணங்களிலும் ஒரேநேரத்தில் நடத்துவதாக முன்னர் அரசால் அறிவிக்கப்பட்டது. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளிற்கு அமைவாக, நடமைமுறையில் இருக்கும் சமாதான முயற்சிகளைப் பாவித்து வடக்குக் கிழக்கில் பல வருடங்களாக இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களிலும், அகதிமுகாம்களிலும் இன்றும் வசித்துவரும் தமிழர்கள் தமது நிரந்தர வாழிடங்களுக்குத் திரும்பும்வரை அப்பகுதிகளில் நடக்கவிருந்த உள்ளூராட்சித் தேர்தல்களை பிந்திய நாளொன்றிற்கு நகர்த்த அரசாங்கம் இணங்கியிருந்தது. தமிழர்களின் வேண்டுகோளிற்குச் செவிசாய்த்து ரணில் அரசாங்கம் தேர்தலைப் பிற்போட்டிருப்பதாகக் கூறி, இந்த முடிவினை எதிர்த்துவரும் தீவிர இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணியினர் வடக்குக் கிழக்கில் தேர்தல்கள் ஒத்திப்போடப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வழக்கொன்றினைத் தாக்கல் செய்யும் வேலைகளின் இறங்கியிருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் சட்ட ஆலோசகர் சுனில் யட்டவள கூறியிருக்கிறார். https://www.tamilnet.com/art.html?catid=13&artid=6826- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
தீவிர சிங்கள இனவாதிகளின் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் பிக்குகள் அணி பேச்சுவார்த்தைகளுக்கெதிராக கொழும்பில் இன்னொரு ஆர்ப்பாட்டத்தினை நடத்தியது 18 பங்குனி 2002 தீவிர சிங்கள இனவாதிகளின் கூடாரமான மக்கள் விடுதலை முன்னணியின் பெளத்த பிக்குகள் அணியும் இன்னும் சில பிரிவுகளும் இணைந்து புலிகளுக்கும் அரசிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்டைருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இரத்துச் செய்யக் கோரியும், பேச்சுவார்த்தைகளை நிறுத்துமாறும் கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தியிருக்கின்றன. பேச்சுக்களை நிறுத்தவும், யுத்தநிறுத்தத்தினை நிறுத்தவும் மக்கள் விடுதலை முன்னணியினர் நாடு முழுதும் சிங்கள மக்களை அணிதிரட்டி நடத்திவரும் ஆர்ப்பாட்டங்களின் தொடர்ச்சியாகவே கொழும்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. தமிழர்களுடன் அதிகாரப் பகிர்வையும், சமஷ்ட்டி அடிப்படையிலான ஆட்சிமுறையினையும், வடக்குக் கிழக்கு இணைப்பையும் தொடர்ச்சியாக எதிர்த்துவரும் இந்த இனவாதக் கட்சி நடைமுறையில் இருக்கும் அரசாங்கத்தைப் பலவீனமாக்கி பேச்சுக்களைத் தடம்புரளச் செய்யும் நோக்கில் ஜனாதிபதி சந்திரிக்காவுடனும், ஏனைய தீவிர சிங்கள இனவாதக் கட்சிகளுடனும் இணைந்து சூழ்ச்சிகளில் ஈடுபட்டு வருவது நாம் அறிந்ததே. https://www.tamilnet.com/art.html?catid=13&artid=6779- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
வேலையற்ற பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டத்தை பின்னாலிருந்து இயக்கி அரசை ஆட்டங்காண வைக்க முயலும் தீவிர சிங்கள இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணி 14 பங்குனி 2002 நாட்டில் இருக்கும் 30,000 வேலையற்ற பட்டதாரிகள் நெடுங்காலமாக தமக்கு வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தித் தருமாறு அரசுகளைக் கேட்டுக்கொண்டே வருகின்றனர். இவர்களின் உண்மையான கோரிக்கைகளை செவிமடுத்துத் தீர்த்துவைக்க அரசுகள் இன்னும் தவறியிருக்கின்றன. இந்த பின்னணியில், அரசாங்கம் புலிகளுடன் செய்திருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம், அதன் மூலமான யுத்த நிறுத்தம் ஆகியவற்றை எப்படியாவது கலைத்தே தீருவது என்று கங்கணம் கட்டியிருக்கும் தீவிர சிங்கள இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணியினர் வேலையற்ற பட்டதாரிகளின் கோரிக்கையினை அரசைக் கவிழ்க்கும் தமது நடவடிக்கையின் ஒரு அங்கமாகப் பாவிக்க எத்தனித்திருக்கிறார்கள். பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்த்தலமான அலரி மாளிகையின் முன்னால் மக்கள் விடுதலை முன்னணியினரால் முடுக்கிவிடப்பட்ட சில வேலையற்ற பட்டதாரிகளும் அவர்களின் பெற்றோரும் தமது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் தாம் சாகும்வரை உண்ணாவிரதத்தில் குதிக்கப்போவதாகக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். குறுகிய அரசியல் இலாபத்திற்காக நாட்டு மக்களை உசுப்பேற்றிவிடும் இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணியினர் வேலையற்ற பட்டதாரிகள் பின்னால் ஒளிந்துநின்று தமது அரசியல் நலன்களை இதன்மூலம் அடைய எத்தனிக்கிறார்கள் என்று அரசு கண்டித்திருக்கிறது. https://www.tamilnet.com/art.html?catid=13&artid=6769- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
தலைவர் பிரபாகரனிற்கும், ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையே கைச்சாத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இரத்துச் செய்யவேண்டும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சிங்கள இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி பதிவுசெய்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளச் சம்மதம் 05 பங்குனி 2002 தலைவர் பிரபாகரனிற்கும், ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் சட்டத்திற்கு முரணானது என்று கூறி தீவிர சிங்கள இனவாதிகளின் கூடாரமான மக்கள் விடுதலை முன்னணி கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கினை விசாரிக்க அந்நீதிமன்றம் முடிவுசெய்திருக்கிறது. இந்த முறையீட்டில் நடைமுறையில் இருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை உடனடியாகச் செல்லுபடியற்றதாக தடைவிதிக்கும் உத்தரவு ஒன்றினைப் பிறப்பிக்க வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி கோரியிருந்தது. தனது முறையீட்டில் தலைவர் பிரபாகரன், ரணில் விக்கிரமசிங்க மற்றும் சட்டவாளர் நாயகம் ஆகியோரைப் பிரதிவாதிகளாக மக்கள் விடுதலை முன்னணி குறிப்பிட்டிருந்தது. இலங்கையில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கம் ஒன்றுடன் ஒப்பந்தம் ஒன்றிற்குள் நாட்டின் பிரதமர் கைச்சாத்திட்டிருக்கிறார் என்பதனால் அவர் நாட்டின் அரசியலமைப்பினை மீறிச் செயற்பட்டிருக்கிறார் என்பதனை அடிப்படையாக வைத்தே இவ்வழக்குத் தக்கால்செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னர் இனவாத மக்கள் விடுதலை முன்னணியினருடன் இணைந்து பேச்சுக்களை குழப்பும் நோக்கில் இயங்கிவரும் இன்னொரு சிங்கள இனவாதக் கட்சியான சிகல உறுமய பதிவுசெய்த முறையீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் பிரதிவாதிகளுக்கான அறிவித்தல்களை மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுப்பிவைத்திருப்பதாக அறியக் கிடைக்கிறது. https://www.tamilnet.com/art.html?catid=13&artid=6752- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
புலிகளுக்கும் ரணில் அரசிற்கும் இடையே செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மீதான பாராளுமன்ற விவாதத்தைக் கோரும் மக்கள் விடுதலை முன்னணி எனும் சிங்கள இடதுசாரி இனவாதிகள் 23 மாசி 2002 சிங்கள இடதுசாரி இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி தனது கட்சி உறுப்பினர்கள் உட்பட 40 பா.உறுப்பினர்களின் கையொப்பத்துடன், ரணில் அரசிற்கும் புலிகளுக்கும் இடையே செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மீதான பாராளுமன்ற விவாதத்தினை நடத்தவேண்டும் என்று சபையில் மகஜர் ஒன்றைக் கையளித்திருக்கிறது. "புலிகளுடன் ரணில் அரசு செய்திருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தமும், அதனுடன் இணைந்த யுத்த நிறுத்தமும் நாட்டின் பாதுகாப்பிற்கும், ஒருமைப்பாட்டிற்கும், பிராந்திய ஒருமைப்பாட்டிற்கும் பாரிய அச்சுருத்தலை விடுத்திருக்கிறது" என்று அக்கட்சி தனது மகஜரில் குறிப்பிட்டிருக்கிறது. மக்கள் விடுதலை முன்னணிக் கட்சியின் பெளத்த துறவிகள் அமைப்பு இதுதொடர்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தியதோடு உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றினையும் ஒழுங்குசெய்தனர். "புலிகளும் ரணிலும் தனித்தனியாகக் கையொப்பம் இட்டுள்ள இந்த ஆவண்ங்கள் நாடு மக்களுக்கும், பாராளுமன்றத்திற்கும் வெளிப்படையாக இதுவரை காட்டப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் நாட்டின் தலைவரான சந்திரிக்காவிற்குக் கூட இந்த ஆவணம் இதுவரையில் காண்பிக்கப்படவில்லை" என்று அக்கட்சியின் பிரச்சாரச் செயளாளர் விமல் வீரவன்ச சபையில் கூறினார்.. இதேவேளை இலங்கையில் இருக்கும் பிரதான தொழில் அமைப்புக்கள், வர்த்த சம்மேளங்கள சந்திரிக்காவிற்கு அனுப்பியுள்ள வேண்டுகோளில் சமாதானத்திற்காகக் கிடைத்திருக்கும் இச்சந்தர்ப்பத்தை தயவுசெய்து கெடுத்துவிட வேண்டாம் என்று இணைந்த கோரிக்கை ஒன்றினை முன்வைத்திருக்கின்றன. மேலும், ரணில் அரசிற்கும் புலிகளுக்கும் இடையே செய்யப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் நாட்டைப் பிளவுபடுத்தப்போகின்றது என்று மக்கள் விடுதலை முன்னணி முன்வைத்துவரும் விசமப் பிரச்சாரத்தையும் வர்த்தக சம்மேளங்கள் கண்டித்திருக்கின்றன. நெருங்கிவரும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடக் காத்திருக்கும் மக்கள் விடுதலை முன்னணி எனும் சிங்கள இனவாதிகளின் கட்சி, தனது தேர்தல்ப் பிரச்சாரங்களில் பேச்சுவார்த்தையினால் நாடு பிளவுடபப்போகிறது, தமிழ் மக்களுக்கு அதிகாரம் வழங்கப்படப்போகிறது என்கிற கோசங்களை முன்னிறுத்தி வருகின்றனர். https://www.tamilnet.com/art.html?catid=13&artid=6732- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
மக்கள் விடுதலை முன்னணி சோசலிசக் கோட்பாடுகளை மறந்து குறுகிய அரசியல் இலாபத்திற்காக இனவாதம் கக்குகிறது - கொழும்பிலிருந்து வெளிவரும் ஹிரு பத்திரிக்கை ஆசிரியத் தலையங்கம் 17 மாசி 2002 கொழும்பிலிருந்து வெளிவரும் சிங்கள வார இதழான ஹிரு, ரணில் அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையே நடந்துவரும் பேச்சுக்களுக்கெதிராகக் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்துவரும் சிங்கள இனவாதிகளின் கூடாரமான ஜனதா விமுக்திப் பெரமுனவைச் சாடியிருக்கிறது. " வடக்குக் கிழக்கில் தமிழ் மக்களுக்கு இதுவரை மறுக்கப்பட்டிருக்கும் அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகளைக் கொடுக்க மறுப்பதன் மூலம் சோசலிஸ் சித்தார்த்தங்களை மக்கள் விடுதலை முன்னணி தூக்கியெறிந்து செயற்பட்டு வருகிறது" என்று இப்பத்திரிக்கை விமர்சனம் செய்திருக்கிறது. "தனது குறுகிய அரசியல் இலாபத்திற்காக மிகவும் கீழ்த்தரமான இனவாத அரசியலை அக்கட்சி கையில் எடுத்திருக்கிறது. இந்நாட்டில் வாழும் தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற அரசியல் ரீதியிலான பிரச்சினைகள் பற்றியோ அவர்களுக்கு மறுக்கப்பட்டிருக்கும் உரிமைகள் குறித்தோ மக்கள் விடுதலை முன்னணிக்கு அல்க்கறையோ அல்லது அறிவோ இருக்கவில்லை" என்றும் அது மேலும் கூறுகிறது. "தமிழர்களுக்கு உரிமைகள வழங்கப்பட்டு அவர்கள் நாட்டின் ஏனைய மக்கள் போன்று சுயகெளரவத்துடன் வாழுவதை உறுதிசெய்யும் நோக்குடன் நடக்கும் பேச்சுக்களை எப்படியாவது குழப்பிவிட மக்கள் விடுதலை முன்னணி கங்கணம் கட்டியிருக்கிறது. இக்கட்சியைப் போன்று இன்னும் சில தெற்கின் இனவாதக் கட்சிகள் வடக்குக் கிழக்கில் பட்டினியை எதிர்நோக்கும் தமிழ் மக்களுக்கு உணவையும் மருந்துகளையும் அனுப்பக்கூடாது என்று ஆர்ப்பாட்டங்களைச் செய்யும் அதேவேளை, தெற்கில் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துவருவதாகவும் பிரச்சாரம் செய்துவருகின்றன" என்றும் அது சாடியிருக்கிறது. தமிழர்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்படக்கூடாது எனும் கோஷத்தை முன்வைத்தே மக்கள் விடுதலை முன்னணி சிங்கள மக்களை அணிதிரட்டி பேச்சுக்கள் தடம்புரளச் செய்ய முயன்று வருகிறது. https://www.tamilnet.com/art.html?catid=13&artid=6709 - அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
Important Information
By using this site, you agree to our Terms of Use.