Everything posted by ரஞ்சித்
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
முடிந்தால் புலிகள் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடையினை நீக்கிப் பார்க்கட்டும் - ரணில் அரசிற்குச் சவால் விடும் சிங்கள இனவாதக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி 6 மாசி 2002 தீவிர இனவாத சிங்கள இடதுசாரிக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி விடுதலைப் புலிகள் மீதான தடையினை முடிந்தால் நீக்கிப் பார்க்கட்டும் என்று ரணில் அரசிற்குச் சவால் விட்டிருக்கிறது. நுகேகொடையில் சுமார் 2000 கட்சி ஆதரவாளர்கள் முன்னிலையில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவே இதனைக் கூறியிருக்கிறார். மேலும் இக்கூட்டத்தில் பங்குபற்றிய பிரச்சாரச் செயலாளரான விமல் வீரவன்ச பேசும்போது புலிகளுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தை நாட்டிற்குச் செய்யும் துரோகம் என்று கூறினார். மேற்குலக ஏகாதிபத்தியவாதிகளின் சூழ்ச்சித் திட்டத்தின்படியே ஈழவாதிகளுக்கு அரசு பணிந்துபோகிறது என்றும் அவர் கூறினார். நுகேகொடை மேடையில் அமர்ந்திருக்கும் அக்கட்சியின் பெண் உறுப்பினர் அஞ்சான் உம்மா சந்திரிக்காவின் ஆட்சியைத் தக்கவைக்க இனவாதப் பேரம் பேசிய இக்கட்சி, ரணில் அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையே நடந்துவரும் பேச்சுக்களுக்கெதிராகச் சிங்கள மக்களை அணிதிரட்டி வருவதோடு, தமிழ் மக்களுக்கு பிராந்திய அதிகாரப் பரவலாக்கம் வழங்கப்படுவதையும் எப்படியாவது தடுத்தே தீருவோம் என்று சூளுரைத்து வருகிறது. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் சந்திரிக்காவின் கட்சியுடன் சேர்ந்து போட்டியிட்ட இனவாதிகளான இக்கட்சியினர், சிங்களவர்களின் நாட்டைப் பிளவுபடுத்தி ஈழவாதிகளுக்குக் கொடுக்கவே ரணில் முயல்கிறார் என்று கடுமையான பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டமை நினைவிலிருக்கலாம். புலிகளுடனான ரணில் அரசின் பேச்சுக்களுக்கெதிராக சிங்கள மக்களை அணிதிரட்டி வரும் இக்கட்சியின் கூட்டங்களுக்கு பெருமளவில் சிங்களவர்கள் கூடிவருவது, இக்கட்சியின் இனவாதப் பிரச்சாரம் சிங்கள மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுவருகிறது என்பதையே காட்டுகிறது. நுகேகொடையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கலந்துகொண்ட சிங்களவர்களின் எண்ணிக்கையே இதற்குச் சாட்சி. ரணில் அரசு புலிகளுடன் நடத்திவரும் பேச்சுக்கள் வெற்றியடையும் பட்சத்தில் இலங்கை தற்போது சிக்குண்டிருக்கும் பொருளாதாரச் சிக்கலில் இருந்து வெளிவருவது சாத்தியமாதலால், அதனைத் தடுத்து தனது செல்வாக்கினை ஏழைச் சிங்கள மக்களிடையே வலுவாக்கும் குறுகிய நோக்கத்திலேயே இனவாதிகளான ஜனதா விமுக்திப் பெரமுனக் கட்சியினர் இப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று தெற்கின இடதுசாரிப் பத்திரிக்கையொன்று செய்தி வெளியிட்டிருக்கிறது. https://www.tamilnet.com/art.html?catid=13&artid=6685
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
"தமிழருக்கு அதிகாரங்கள் வழங்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம்" எனும் தனது போராட்டத்தைக் கூர்மையாக்கும் சிங்கள இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி 29 தை 2002 பல நூற்றுக்கணக்கான மக்கள் விடுதலை முன்னணி இனவாதிகள் கொழும்பின் பல பகுதிகளிலும் நடத்திய ஆர்ப்பாட்டங்களில் தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதை தாம் அனுமதிக்கப்போவதில்லை என்று கோஷமிட்டுள்ளனர். கடந்த தேர்தலில் 16 உறுப்பினர்களைப் பெற்றுக்கொண்டு மூன்றாவது பெரிய கட்சி எனும் நிலையினை இந்த இனவாதக் கட்சி அடைந்திருக்கிறது. சிங்கள பெளத்த இனவாதிகளின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேடிவரும் இக்கட்சி தமிழ் மக்களுக்கு சமஷ்ட்டி அடிப்படியில் அதிகாரங்கள் பகிரப்படுவதை தாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்று கூறுகிறது. ரணில் தலைமையிலான அரசிடம் தாம் முன்வைத்திருக்கும் நிபந்தனைகளை அவர் ஏற்றுக்கொள்ளாதவிடத்து நாடுதழுவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு இவ்வினவாதக் கட்சி தனது பிரதேச ஒருங்கிணைப்பாளர்களுக்கு அறிவித்தலும் விடுத்திருக்கிறது. "அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் ஈழக்கனவிற்கு வலுச்சேர்க்க ரணில் அரசு எடுத்துவரும் முயற்சிகளுக்கெதிராக நாற்பது இலட்சம் சிங்கள மக்கள் சுதந்திரக் கட்சித் தலைமையிலான முன்னணிக்கும், இன்னும் ஒன்பது இலட்சம் சிங்கள மக்கள் எமது கட்சியான மக்கள் விடுதலை முன்னணிக்கும் வாக்களித்திருக்கிறார்கள். ஆகவே ரணிலின் அரசாங்கம் புலிகளுக்கு வடக்கையும் கிழக்கையும் தாரைவார்த்துக் கொடுப்பதற்குச் சிங்கள மக்கள் அவருக்கு ஆணை வழங்கவில்லை என்பது தெளிவாகிறது" என்று மூத்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ஒருவர் மகரகமவில் நடைபெற்ற பேரணியின்போது கூறினார். . சந்திரிக்காவின் ஆட்சியின்போது மாவனல்லவில் முஸ்லீம்கள் மீது சிங்கள இனவாதிகளின் தாக்குதலை சந்திரிக்கா தடுக்கவில்லை என்கிற காரணத்தை முன்வைத்து முஸ்லீம் காங்கிரஸ் அவருக்கு வழங்கிவந்த ஆதரவை இரத்துச் செய்தபோது, சந்திரிக்காவைத் தொடர்ந்தும் ஆட்சியில் வைத்திருக்க சிங்கள இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனை அடிப்படையில் முன்வந்தனர். அந்த நிபந்தனை யாதெனில் தமிழர்களுக்கு பிராந்திய அதிகாரத்தினை வழங்கும் எந்த பேச்சுக்களிலும் சந்திரிக்கா ஈடுபடலாகாது என்பதுதான். அதனைச் சந்திரிக்காவும் ஏற்றுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. ரணில் அரசின் சமாதானப் பேச்சுக்களுக்கெதிராகக் கடும் ஆர்ப்பாட்டங்களை நடத்திவரும் மக்கள் விடுதலை முன்னணி, "தமிழ் மக்களுக்கு இனப்பிரச்சினை என்று ஒன்றில்லை, இருப்பதெல்லாம் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளால் தூண்டப்பட்ட ஈழக்கனவு மட்டும்தான், ஆகவே தமிழர்களுக்கு சமஷ்ட்டி அடிப்படையிலோ அல்லது அதிகாரப் பகிர்வு அடிப்படையிலோ தீர்வு வழங்கினால் அது நாட்டைப் பிளவுபடுத்திவிடும், ஆகவே அதனை எப்படியாவது தடுத்து நிறுத்துவோம்" என்கிற கோஷத்தினை முன்வைத்து நாடெங்கிலும் சிங்கள மக்களிடையே கடுமையான பிரச்சாரத்தினை முன்னெடுத்து வருகிறது. இனப்பிரச்சினைக்கான தீர்வாக மாக்ஸிய அரசு ஒன்றை அமைத்து, அதன் மூலம் தமிழர்களுக்கு ஏனைய மக்களைப்போன்ற உரிமைகளை வழங்கினால் சரி என்றும் அது கூறி வருகிறது. https://www.tamilnet.com/art.html?catid=13&artid=6663
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
புலிகளுக்கெதிரான தடையினை நீக்க விடமாட்டோம், நாடு பிளவுபடுவதையும் தடுப்போம் மக்கள் விடுதலை முன்னணி 25 தை 2002 தீவிர சிங்கள இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான 46 சிங்கள பெளத்த இனவாத அமைப்புக்கள் இணைந்து நடத்திய சந்திப்பொன்றில் தமக்குள் ஒற்றுமையாகவும், தனித்தனியாகவும் இணைந்து புலிகள் மீது இலங்கையில் விதிக்கப்பட்டிருக்கும் தடையினை நீக்குவது குறித்து நடந்துவரும் முயற்சிகளுக்கு எதிராக இயங்கப்போவதாக முடிவெடுத்திருக்கின்றன. அத்துடன், நாடு பிளவுபடுவதை அனுமதிக்கப்போவதில்லை என்றும் அவை சூளுரைத்திருக்கின்றன. சிங்கள இனவாதக் கட்சிகளான மக்கள் விடுதலை முன்னணி, மகஜன எக்சத் பெரமுன, சிகல உறுமய ஆகியவை தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளுக்கெதிரான நிலைப்பாட்டினை எடுத்துவருவதும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு ஏதுவாக இலங்கையில் புலிகள் மீது போடப்பட்டிருக்கும் தடையினை நீக்கும் ரணிலின் அரசாங்கத்தின் முயற்சிகளை முறியடிக்கும்விதமாகச் செயற்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் , புலிகளை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கோரிவருவதையும் தாம் ஏற்கப்போவதில்லை என்று இக்கட்சிகள் வெளிப்படையாக அறிவித்திருக்கின்றன. இலங்கையில் மட்டுமன்றி, சர்வதேசத்திலும் புலிகள் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடையினை நீக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதால் சிங்களத் தேசியக் கட்சிக்ள் இணைந்து அதனை எப்படியாவது தடுத்துவிடவேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணிக்கும் மகஜன எக்சத் பெரமுனக் கட்சிக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுக்களின்போது முடிவுசெய்யப்பட்டிருக்கிறது. மேலும் பெளத்த இனவாத அமைப்பான ஜாதிக்க சங்க சபா அமைப்புடன் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ள மக்கள் விடுதலை முன்னணி இலங்கை மக்களின் நலன் கருதி புலிகள் மீதான தடையினை நீக்குவதை எதிர்க்க ஒன்றுசேர்ந்து செயற்படுவது என்று முடிவெடுத்திருக்கிறது. https://www.tamilnet.com/art.html?catid=13&artid=6652
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
அநுரவின் வெளிவிவகார அமைச்சரான விஜித்த ஹேரத்தின் பின்னணி பல ஈழத்தமிழர்களின் இன்றைய கதாநாயகனாக பவணி வரும் இலங்கையின் ஜனாதிபதியான அநுர குமார திசாநாயக்கவின் வலது கரமும் நெருங்கிய சகாவுமான விஜித்த ஹேரத் இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக பதவியேற்றிருக்கிறார். தமிழர் மீதான இனக்கொலை அரச மயப்படுத்தப்பட்டதிலிருந்து இலங்கையின் வெளிவிவகார அமைச்சர்களாகப் பணியாற்றிய எல்லோருக்கும் கொடுக்கப்பட்ட வேலை ஒன்றுதான், அதுதான் தமிழ் மக்களின் போராட்டத்தைப் பயங்கரவாதம் என்று சர்வதேசத்தில் சித்தரித்து, தமிழ் மக்கள் மீதான படுகொலைகளை உலகெங்கும் சென்று நியாயப்படுத்துவது. ஹமீது, ரஞ்சன் விஜேரத்ன, ஹரல்ட் ஹேரத், டிரோன் பெர்ணான்டோ, லக்ஷ்மன் கதிர்காமர், அநுர பண்டாரநாயக்க, மங்கள சமரவீர, ரோகித போகொல்லாகம, ஜி எல் பீரிஸ், ரவி கருணநாயக்க, திலக் மாறப்பன என்று 1983 ஆம் ஆண்டிலிருந்து 2024 வரை இருந்த எல்லோருமே செய்த அதே பணியினை ஆற்ற தற்போதைய அமைச்சர் விஜித்த ஹேரத்தும் வந்திருக்கிறார். அவர் வெளிவிவகார அமைச்சராக ஆற்றிய முதலாவது பணி ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை அவையில் தமிழ் மக்கள் மீதான படுகொலைகள் ஈடுபட்ட இராணுவப் போர்க்குற்றவாளிகளுக்கெதிரான சர்வதேச விசாரணைப்பொறிமுறையினை எதிர்த்து வாக்களித்து வருவதற்காக சவுதி அரேபியாவிற்கு வாழ்த்துக் கூறியமை என்பதும் குறிப்பிடத் தக்கது. தற்போதைய ஜனாதிபதியை, அவரது அமைச்சரவையினை தமிழர்களின் காவல் தெய்வங்கள் என்று வழிபட ஆரம்பித்திருக்கும் தமிழ் அபிமானிகளுக்கு அநுரவின் சகாவான விஜித்த ஹேரத்தின் பின்னணி பற்றி விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம். விஜித்த ஹேரத், ஒரு தீவிர சிங்கள தேசியவாதியும் ஜனதா விமுக்தி பெரமுன எனும் தீவிரவாத சிங்கள இடதுசாரிக் கட்சியின் மிக மூத்த உறுப்பினருமாவார். இவர் அநுர குமாரவினால் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர், சமய விவகாரங்களுக்கான அமைச்சர், தொழிநுட்ப ஊடகத்துறை, சுற்றுப்புறச் சூழல், நீர் வழங்கல், தோட்டத்துறை, சமூகவியல், வீடமைப்பு மற்றும் போக்குவரத்து போன்ற அமைச்சுக்களுக்குப் பொறுப்பானவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். நாம் இவரது கடந்தகால செயற்பாடுகளைப் பார்க்கலாம். மக்கள் விடுதலை முன்னணிக்கு அவர் காட்டிவரும் அசைக்கமுடியாத விசுவாசமே அவரை அநுரகுமாரவின் நெருங்கிய சகாவெனும் நிலைமைக்கு உயர்த்தியது. விஜித்த ஹேரத் மக்கள் விடுதலை முன்னணியின் நீண்டகால உறுப்பினர். மாணவராக இருந்த காலத்தில் 1986 ஆம் ஆண்டு அவர் அமைப்பில் இணைந்தார். இவர் அமைப்பில் இணைந்த சில மாதங்களின் பின்னர் மக்கள் விடுதலை முன்னணி இலங்கை அரசிற்கெதிரான இரத்தக்களறி மிகுந்த ஆயுதக் கிளர்ச்சியை ஆரம்பித்தது. 1999 ஆம் ஆண்டு மாகாணசபைத் தேர்தல்களிலேயே அவர் முதன்முதலாக தேர்தலில் இறங்கினார். அத்தேர்தலில் கம்பகா மாவட்டத்தில் போட்டியிட்டு வெறும் 605 வாக்குகளையே அவர் பெற்றார். 2000 ஆண்டு பாராளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு 8,000 வாக்குகளுடன் வெற்றிபெற்ற அவர் அதன் பின்னர் அத்தொகுதியைத் தொடர்ச்சியாகத் தக்கவைத்து வருகிறார். பாராளுமன்ற கோப்புக்களைப் பார்க்கின்றபோது விஜித ஹேரத் எப்போதுமே பொது நிதித்துறை, மீன்வளத்துறை, பொதுப்பணித்துறை, மற்றும் விவசாயம் சார்ந்த பாராளுமன்றக் கமிஷன்களில் அங்கம் வகித்திருப்பது தெரிகிறது. பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல சட்டங்களின்போது ஹேரத் சார்பாக வாக்களித்த போதிலும், அவரால் இதுவரை எச்சட்டமும் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இலங்கை சுதந்திரக் கட்சியுடன் 2004 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணி இணைந்து ஆட்சியமைத்தபொழுது விஜித்த ஹேரத் அந்த அரசாங்கத்தின் கலாசார அமைச்சராகவும், தேசிய பாரம்பரிய அமைச்சராகவும் பதவி வகித்திருக்கிறார். பாராளுமன்றத்தில் அதிகம் பிரபலமாகாத ஒரு உறுப்பினராக ஹேரத் இருந்த போதிலும் அநுரவின் மிக நெருங்கிய சகாக்களில் ஒருவராக அவர் வலம் வந்தார். விஜித்த ஹேரத்தின் போரிற்கான ஆதரவும், நீதிவழங்கலுக்கு எதிரான அவரது நிலைப்பாடும் 2008 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியினால் கொழும்பு ஐ நா அலுவலகத்திற்கு முன்னால் ஒழுங்குசெய்யப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொள்ளும் விஜித ஹேரத் அரச அடக்குமுறைக்கெதிரான தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டக் காலம் முழுவதும் மக்கள் விடுதலை மார்க்ஸிஸச் சிந்தனைகளை முன்வைத்து தமிழ் மக்கள் மீதான இராணுவ அடக்குமுறையினை நியாயப்படுத்தியே வந்தது. ஏனைய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்களைப் போலவே விஜித்த ஹேரத்தும் தமிழர்களுடனான சமாதானப் பேச்சுக்களுக்கு மிகக் கடும் எதிர்ப்பினைத் தொடர்ச்சியாக காட்டி வந்திருந்தார். 2004 பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சியாக ஆட்சியில் அமர்ந்த மக்கள் விடுதலை முன்னணி, புலிகளுடனான பேச்சுக்களுக்கு தொடர்ச்சியான எதிர்ப்பினைக் காட்டி வந்தது. மேலும், 2004 சுனாமிப் பேரிடரின் பின்னரான இணைந்த சுனாமி நிவாரணக் கட்டமைப்பிற்குக் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்து அதனைத் தோற்கடித்ததுடன், பேச்சுக்களை இரத்துச் செய்தால் மகிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கவும் தயார் என்று பகிரங்கமாக அறிவித்தது. 2006 ஆம் ஆண்டி ஆரம்பத்தில் மக்கள் விடுதலை முன்னணி வெளிப்படையாகவே இராணுவத் தீர்விற்கான தனது ஆணையினை அப்போதிருந்த மகிந்த அரசிற்கு வழங்கியதுடன் முள்ளிவாய்க்கால் இனக்கொலைக்கும் உறுதுணை வழங்கியது. 2007 ஆம் ஆண்டு கொழும்பில் அமைந்திருக்கும் இங்கிலாந்து தூதரகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் விடுதலை முன்னணியினர், கூடவே விஜித்த ஹேரத் இறுதி யுத்த காலத்தின்போது இலங்கை இராணுவத்தினர் பரந்தளவில் மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று மேற்குலக நாட்டு இராஜதந்திரிகள் அறிவித்து வந்த நிலையில் விஜித்த ஹேரத் தனது அமைப்புடன் இணைந்து இங்கிலாந்து தூதரகத்திற்கு முன்பாகவும் ஐ நா அமைப்பின் அலுவலகம் முன்பாகவும் அன்றைய மனிதவுரிமைக் கவுன்சில் ஆணையாளர் லுயிஸ் ஆர்பருக்கெதிராகவும் ஆர்ப்பாட்டம் செய்திருந்தார். 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் கூட்டுப் படுகொலைகளுக்குப் பின்னர் சர்வதேசத்தில் உருவாகி வந்த சுதந்திரமான போர்க்குற்ற விசாரணைகளுக்கான கோரல்களை விஜித்த ஹேரத் தொடர்ந்தும் எதிர்த்து வந்தார். "போரில் நடந்ததாகக் கூறப்படும் மனிதவுரிமை மீறல்களை விசாரிப்பது அவசியம் என்றால், அது உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றின் ஊடாக மட்டுமே விசாரிக்கப்பட முடியும். இலங்கையினை விமர்சிக்கின்ற மேற்குநாடுகள் இன் கோரிக்கைக்கு அமைவாக விசாரணைகளை நாம் நடத்தப் போவதில்லை" என்று 2015 ஆம் ஆண்டு விஜித்த ஹேரத் கூறியிருந்தார். இதுபற்றி மேலும் வாசிப்பதற்கு கீழுள்ள இணைப்பை அழுத்துங்கள். https://www.tamilguardian.com/content/sri-lankan-ministers-reject-un-investigation-mass-atrocities புதிய வெளிநாட்டு அமைச்சர் விஜித்த ஹேரத்தின் முதலாவது பணி ஐ நா மனிதவுரிமை சபையில் கொண்டுவரப்பட்ட போர்க்குற்ற விசாரணைக்கான சர்வதேசப் பொறிமுறையினை எதிர்த்து வாக்களித்த சவுதி அரேபியாவிற்கு நன்றி கூறியதே. கடந்த வாரம் வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்ற சில மணித்துளிகளுக்குப் பின்னர் சவுதி அரேபிய நாள் நிகழ்வில் உரையாற்றிய ஹேரத் ஐ நா மனிதவுரிமைச் சபையில் இலங்கை ராணுவப் போர்க்குற்றவாளிகளுக்கான சர்வதேச விசாரணைப் பொறிமுறையினை எதிர்த்து வாக்களித்த சவுதி அரேபியாவிற்கு அவர் நன்றி தெரிவித்திருந்தார். மக்கள் விடுதலை முன்னணியினருடனான ஹேரத்தின் ஆரம்ப காலம் 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தினூடாக தமிழர்களின் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுக்கலாம் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் தீவிர சிங்களத் தேசியவாதியான விஜித்த ஹேரத் தமிழ் மக்களுடன் அதிகாரப் பகிர்வென்பதே கிடையாதென்று தொடர்ந்து வாதாடி வந்தார். விஜித்த ஹேரத் போன்ற மக்கள் விடுதலை முன்னணியினரின் தலைவர்களிடம் மேலோங்கி நின்ற சிந்தனையான தமிழர்களுடன் அதிகாரத்தைப் பகிரக் கூடாதெனும் நிலைப்பாட்டினால் அவ்வமைப்பு தெற்கின் கிராமப்புறச் சிங்கள இளைஞர்களிடையே பிரபல்யம் அடையத் தொடங்கியது. மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்த்தாபகரான ரோகண விஜேவீர "தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையென்பது அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் தூண்டுதலின்பேரில் உருவாக்கப்பட்டது" என்று பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். ரோகண விஜேவீரவின் இந்த பிரச்சாரமே தமிழ் மக்களுக்கெதிரான இவ்வமைப்பின் நீண்டநாள் காழ்ப்புணர்விற்குக் காரணமாக அமைந்தது என்றால் அது மிகையில்லை. இலங்கை அரசாங்கங்களுக்கெதிராக இரு முறை ஆயுதப் போராட்டங்களில் மக்கள் விடுதலை முன்னணி ஈடுபட்டு பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களின் மரணங்களுக்குக் காரணமாக இருந்தபோதிலும் கூட, அதே காலப்பகுதியில் உரிமைக்காகப் போராடி வந்த ஈழத்தமிழர் சார்பாக கிஞ்சித்தும் அவ்வமைப்பு இரக்கமோ அக்கறையோ காட்டவில்லை. மாறாக இக்கட்சியிலிருந்தே இலங்கை சந்தித்த அதிதீவிர சிங்கள இனவாதிகள் உருப்பெற்று வெளிக்கொணரப்பட்டார்கள் . மக்கள் விடுதலை முன்னணியினுடனான தனது ஆரம்ப காலம் குறித்தும் 1987 ஆம் ஆண்டு ஆயுதக் கிளர்ச்சி குறித்தும்விஜித்த ஹேரத் பின்வருமாறு நினைவுகூர்ந்தார். "அன்றைய காலகட்டத்தில் நாட்டில் சிவில் யுத்தம் ஒன்று நடந்து வந்தது. நாம் இந்திய இராணுவத்திற்கெதிராகப் போராடினோம். அக்காலத்தில்தான் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனவிற்கும் இடையே ஒப்பந்தம் ஒன்றும் செய்யப்பட்டது" . "அவ்வொப்பந்தம் இலங்கை மக்களை வெகுவாகப் பாதித்திருந்தது. ஒப்பந்தத்தின் ஊடாக எமது திருகோணமலையில் அமைந்திருந்த எண்ணெய்க் குதங்களை இந்திய அரசாங்கத்திற்கும் இந்திய நிறுவனம் ஒன்றிற்கும் கொடுக்கவேண்டி ஏற்பட்டது. அவ்வாறே எமது நாட்டின் உளவீட்டு விவகாரங்களில் இந்தியா மூக்கை நுழைக்கத் தொடங்கியது. இந்தத் தலையீட்டினை எதிர்த்தே நான் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டது". "நான் அப்போது மக்கள் விடுதலை முன்னணியின் ஒரு உறுப்பினராக இருந்தேன். நாம் பல்வேறான ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்தினோம். இந்திய ஆக்கிரமிப்பிற்கெதிரான ஜனநாயகவழி ஆர்ப்பாட்டங்கள் பலவற்றை நாம் முன்னெடுத்தோம்". தமிழருடனான அதிகாரப் பகிர்விற்கெதிரான உறுதியான விஜித்த ஹேரத்தின் நிலைப்பாடு பொலீஸ் அதிகாரங்களோ காணி அதிகாரங்களோ மாகாணசபைகளுக்குக் கொடுக்க அனுமதிக்கப்போவதில்லை தேர்தலுக்கு 72 மணிநேரமே இருக்க மீண்டும் உறுதிப்படுத்திய மக்கள் விடுதலை முன்னணி 2021 ஆம் ஆண்டு விஜித்த ஹேரத் வழங்கிய செவ்வியொன்றில், "எமது நாட்டில் நாம் பிரிவினையினை முற்றாக எதிர்க்கிறோம். ஏனென்றால் இந்த நாட்டில் இருப்பதாகக் கூறப்படும் இனப்பிரச்சினைக்கு பிரிவினை ஒரு தீர்வாக அமையாது என்று நாம் உறுதியாக நம்புகிறோம்" என்று கூறினார். அவர் தொடர்ந்து பேசும்போது, "மக்கள் விடுதலை முன்னணியினால் வெளியிடப்பட்ட புத்தகம் ஒன்றில், "பிரிவினை எப்படி இலங்கையில் இருக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமைய மாட்டாது, அவ்வாறே சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வும் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது" என்று கூறினார். "இனப்பிரச்சினைக்கான தீர்வு எவ்வாறானதாக அமையவேண்டுமெனில், இலங்கை மக்கள் அனைவருக்கும் இன, மத, அல்லது வேறு எந்த அடிப்படையிலோ அல்லாமல் ஒரேவகையான உரிமைகளை வழங்குவதனூடாக மட்டும்தான்" என்று அவர் கூறினார். "நாம் புலிகள் இயக்கத்திற்கெதிராகப் போராடினோம். ஏனென்றால் அது எமது மக்களைப் பிரிக்க முயன்றது. அவ்வியக்கத்திற்கெதிராக இன்னும் பல்வேறு வகையான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்தோம். இறுதியில் எமக்குத் தேவையான வெற்றியை நாம் அடைந்துகொண்டோம். நாம் புலிகள் இயக்கத்தை தத்துவாந்த ரீதியில் மட்டுமல்லாமல் எல்லாவழிகளிலும் தோற்கடித்து அழித்தோம்". 13 ஆவது திருத்தத்தினூடாக மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட ரீதியில் வடக்குக் கிழக்கிற்கான அதிகாரங்கள் பகிரப்படலாம் என்று அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், அதனையும் கடுமையாக எதிர்த்து வந்தார் விஜித்த ஹேரத். 2005 இல் அவர் பேசும்போது வடக்கையும் கிழக்கையும் இணைத்து ஒரு மாகாணமாக உருவாக்குவதை தாம் எதிர்ப்பதாகக் கூறினார். 2015 இல் சிங்கள இனவாதிகளின் ஆங்கில நாளேடான தி ஐலணட்டில் பேட்டியளித்த ஜேரத் "மக்கள் விடுதலை முன்னணி சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வை முற்றாக எதிர்க்கிறது" என்று கூறினார்." தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அவலங்கள் குறித்து அக்கறை காட்டினாலும் கூட சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வு இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என்று உறுதியாக நாம் நம்புகிறோம்" என்று கூறினார். மேலும், இந்திய இலங்கை ஒப்பந்தத்தின்படி குறிப்பிடப்பட்டிருக்கும் வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பது என்பதை அவர் தீவிரமாக எதிர்த்தார். "இலங்கை இந்திய ஒப்பந்தத்தினூடாக தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களை நீதிமன்றத்தினூடாக பிரித்துப்போட்டது எமது கட்சியான மக்கள் விடுதலை முன்னணியே. இந்த மாகாணங்கள் இரண்டும் தனித்தனியாக, சுதந்திரமாக இயங்க வேண்டும்" என்று அவர் கூறினார். இந்திய இலங்கை ஒப்பந்தப்படி 1987 ஆம் ஆண்டிலிருந்து இவ்விரு மாகாணங்களும் தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்தன. ஆனால் 2005 இல் மக்கள் விடுதலை முன்னணி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் 2006 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், வடக்குக் கிழக்கு இணைப்பு நிரந்தரமாக பிரிக்கப்படுவதாகவும், இம்மாகாணங்கள் இணைந்திருப்பது சட்டத்திற்கு முரணானது என்றும் தீர்ப்பு வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. மக்கள் விடுதலை முன்னணியும், தீவிர இனவாத அமைப்பான ஜாதிக ஹெல உறுமயவும் வடக்குக் கிழக்கு மாகாண்ங்களின் இணைப்பிற்கெதிராகத் தொடர்ச்சியாக எதிர்ப்புத் தெரிவித்து வந்ததுடன் நீதிமன்றத்திற்கு அதனை இழுத்துச் சென்று, மாகாணங்கள் பிரிக்கப்பட்டபோது வீதிகளில் கொண்டாடி ஆர்ப்பரித்தனர். 2019 ஆம் ஆண்டு பத்திரிக்கையாளர் மாநாடொன்றில் பேசிய விஜித்த ஹேரத், "வடக்குக் கிழக்கு மாகாணங்களை இணைத்து வைத்திருப்பதனூடாக சர்வதேசத்திற்கு இந்த இணைந்த மாகாணத்தில் தமிழ் மக்களே பெரும்பான்மையாக வாழ்கிறார்கள் என்று காண்பித்து, ஆகவே இம்மாகாணங்களுக்கு தனியான அதிகாரம் தேவையென்று கோருவதே தமிழ்ப் பிரிவினைவாதிகளின் நோக்கமாகும்" என்று விஜித்த ஹேரத் கூறினார். "இதே கோரிக்கையினைத்தான் தமிழ்க் கட்சிகள் ஒவ்வொரு தேர்தலிலும் முன்வைத்து வருகின்றனர். ஆனால் நாம் இந்தக் கோரிக்கையினை எப்போதுமே நிராகரித்தே வந்திருக்கிறோம்" என்றும் அவர் கூறினார். இவ்வருடம் மாசி மாதத்தில் அநுர குமாரவுடன் தில்லிக்குப் பயணமாகிய விஜித்த ஹேரத், இலங்கையின் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையினையும், பூகோள ஒருமைப்பாட்டையும் உறுதிப்படுத்தும் விதமாக அரசியலில் ஈடுபடும் என்று உறுதிப்படுத்தியிருந்தார். 1987 ஆம் ஆண்டில் தமது அமைப்பு நடத்திய ஆயுதக் கிளர்ச்சி குறித்துப் பேசும்போது, " நாம் மிகவும் தீவிரமாக இந்திய இலங்கை ஒப்பந்தத்தினை பல ஆண்டுகளுக்கு முன்னர் எதிர்த்தோம். எமது செயற்பாடுகளை இலங்கையின் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையினையும் காக்கப் பாவிக்கிறோம். அதற்காகப் பல உயிர்த்தியாகங்களை நாம் புரிந்திருக்கிறோம்" என்று கூறினார். "இதுகுறித்த எமது நிலைப்பாடு என்றுமே மாறப்போவதில்லை" என்றும் அவர் மேலும் கூறினார். 2024 ஆம் ஆண்டு புரட்டாதி மாதத்தின் இறுதிப்பகுதியில், தேர்தலுக்குச் சற்று முன்னரான நாட்களில் பேசிய விஜித்த ஹேரத், "மகாணசபை அமைப்பு முறை இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வாகாது. இந்த நாட்டின் தேசியப் பாதுகாப்பையும், ஒற்றையாட்சியையும், ஒருமைப்பாட்டினையும் பாதுகாக்க நாம் மிகப்பெரிய தியாகங்களைச் செய்திருக்கிறோம். நேற்றும், இன்றும், நாளையும் இதுதொடர்பான எமது நிலைப்பாடு மாறப்போவதில்லை. இந்த நாட்டின் ஒருமைப்பாட்டினை எவ்விலை கொடுத்தாவது பாதுகாப்பது எமது கட்சியின் தலையாய கடமையாகும்" என்று அவர் பிரகடணம் செய்தார். அகில இலங்கை பெளத்த காங்கிரஸின் மாநாடு ஒன்றில் பேசிய விஜித்த ஹேரத், "பெளத்த மதத்திற்கான முன்னுரிமையினைக் கொடுப்பதில் தமது கட்சி எப்போதும் உறுதியாக நிற்கும்" என்று கூறினார். "நாம் அன்றே இதுகுறித்து உறுதிப்படுத்திவிட்டோம். அதையே நாம் இப்போதும் நினைவுபடுத்துகிறோம். இந்த நாட்டின் இனப்பிரச்சினைக்கு மாகாணசபை அமைப்பு முறை தீர்வாகாது. எமது அரசியலமிப்பின் 9 ஆவது அத்தியாயம் எக்காரணம் கொண்டும் மாற்றப்பட மாட்டாது என்று என்னால் உறுதிபடக் கூறமுடியும்" என்று அவர் கூறினார். இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தில் 9 ஆம் அத்தியாயம் என்பது பின்வருமாறு கூறுகிறது, "இலங்கைக் குடியரசு பெளத்த மதத்திற்கு எல்லாவற்றைக் காட்டிலும் முன்னுரிமையும், உயர்ந்த இடமும் வழங்குகிறது. ஆகவே பெளத்த மத்தத்தைப் போற்றிப் பாதுகாத்து வளர்ப்பதென்பது ஒவ்வொரு அரசினதும் தலையாய கடமையாகும். ஏனைய மதங்களுக்கான இடம் அத்தியாயம் 10 மற்றும் 14 இல் குறிப்பிடப்பட்டுள்ளதற்கமைய வழங்கப்படும்" என்று கூறப்பட்டிருக்கிறது. "முன்னைய அரசாங்கங்கள் பெளத்த மதத்திற்கு வழங்கிய அதே முன்னுரிமையினையும், உயர்ஸ்த்தானத்தையும் மக்கள் விடுதலை முன்னணியின் அரசும் வழங்கும்" என்று விஜித்த ஹேரத் அங்கு உறுதி வழங்கினார். https://www.tamilguardian.com/content/who-sri-lankas-foreign-minister-vijitha-herath
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
******************************************************************************************************************************************ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் அவையில் இலங்கைக்கு ஆதரவளித்து, போர்க்குற்றங்களுக்கான சர்வதேச விசாரணைப் பொறிமுறைக்கெதிராக வாக்களித்தமைக்காக சவுதி அரேபியாவிற்கு நன்றி தெரிவித்த இலங்கையின் புதிய வெளிநாட்டமைச்சர் விஜித்த ஹேரத் ******************************************************************************************************************** 26, பபுரட்டாதி 2024 https://www.tamilguardian.com/content/new-sri-lankan-foreign-ministers-first-remarks-thank-saudi-arabia-combatting-un-resolutions இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் முக்கியஸ்த்தர் விஜித ஹேரத் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் சபையில் இலங்கைக்கு ஆதரவளித்து, தமிழ் மக்கள் மீது இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கான சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையினை எதிர்த்து வாக்களித்து வருகின்றமைக்காக சவுதி அரேபியாவிற்கு தனது அரசாங்கம் சார்பாக நன்றி தெரிவித்ததன் ஊடாக வெளிவிவகார அமைச்சராக தனது முதலாவது கடைமையினை ஆற்றியிருக்கிறார். மக்கள் விடுதலை முன்னணியின் மிக முக்கிய உறுப்பினராகக் கருதப்படும் விஜித்த ஹேரத், தான் வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்ற சற்று நேரத்தின் பின்னர், கொழும்பில் இடம்பெற்ற சவுதி அரேபியாவின் தேசிய நாள் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இந்த நன்றியைத் தெரிவித்திருந்தார். "ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் சபையில் இலங்கைக்கு ஆதரவாகச் செயற்பட்டு வரும் சவுதி அரேபியாவிற்கு நன்றி கூற இத்தருணத்தை நான் பாவிக்க விரும்புகின்றேன்" என்று அவர் கூறினார். தற்போதைய ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை சபையின் அமர்வுகள் இப்போது நடைபெற்று வருகின்றன. அங்கு இலங்கைக்கெதிரான புதிய தீர்மானம் ஒன்று முன்வைக்கப்படவிருப்பதாக அறியவருகின்றது. இதுவரை இலங்கைக்கெதிராக முன்வைக்கப்பட்ட மனிதவுரிமைச் சபைத் தீர்மானங்களில் சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றை ஏற்றுக்கொண்டு, சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறை ஒன்றினூடாக போர்க்குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தவேண்டும் என்று தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்த போதிலும், கடந்தகால அரசாங்கங்கள் இவற்றில் எதுவித அக்கறையும் கொள்ளாது நிராகரித்தே வந்திருக்கின்றன. இந்த நிகழ்வில் கலந்துகொண்டவர்களில் மிக முக்கியமானவர் முன்னள் இராணுவத் தளபதியும், இறுதிப் போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்களைப் படுகொலை செய்ததில் நேரடியாகப் பங்குகொண்டிருந்தவரும், இதனாலேயே அமெரிக்காவிற்குள் செல்லத் தடைவிதிக்கப்பட்டிருப்பவருமான சவேந்திர சில்வா என்பது குறிப்பிடத் தக்கது. அமெரிக்கா இவரது பயணத்தடை குறித்து அறிவிக்கும்போது, "இறுதி யுத்தத்தில் நடத்தப்பட்ட கூட்டுப் படுகொலைகள் மற்றும் பாரிய மனிதவுரிமை மீறல்களில் கட்டளைத் தளபதி என்கிற ரீதியில் சவேந்திர சில்வா நேரடியாகப் பங்கெடுத்திருக்கிறார் என்பதை நம்பத்தகுந்த ஆதாரங்கள் ஊடாக உறுதிப்படுத்தியிருப்பதால் இவரை எமது நாட்டிற்குள் வர நாம் தடை விதிக்கிறோம்" என்று குறிப்பிட்டிருந்தது. தமிழ் மக்கள் மீதான மிகக்கொடூரமான இலங்கை அரசாங்கத்தின் இறுதி யுத்தத்தின்போது படுகொலைகளுக்குப் பெயர்பெற்ற 58 ஆவது படைப்பிரிவிற்கு சவேந்திர சில்வா கட்டளைத் தளபதியாக இருந்தார். 2009 ஆம் ஆண்டின் தமிழ் இனக்கொலையில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் படுகொலைகளில் இவரது படைப்பிரிவும் நேரடியான பங்களிப்பைச் செலுத்தியிருந்தது. இவரும் இவரைப்போன்ற ஏனைய சிங்கள இராணுவத் தளபதிகளும் வைத்தியசாலைகள் மீதான இலக்குவைத்த தாக்குதல்கள், பரந்த கூட்டுப் பாலியல் வன்புணர்வுகள், சித்திரவதைகள், சரணடைந்தவர்களை சகட்டுமேனிக்குச் சுட்டுப் படுகொலை செய்தல் போன்ற பாரிய மனிதவுரிமை மீறல்களுக்கு தலைமை தாங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிறு குறிப்பு : நாட்காட்டி, திகதியின் பிரகாரம் பதிவிடப்படுகின்றபோதிலும் அவ்வப்போது தற்போது நடந்துவரும் விடயங்களை ஆங்காங்கே இணைப்பதனால் வாசகர்கள் இதனைப் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். நன்றி!
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
நான் இந்தத் தொடரை எழுதுவதன் காரணத்தைத் தெளிவாகக் கூறிய பின்னரும் இதனை நிறுத்துவதை ஒரே நோக்கமாகக் கொண்டு சிலர் எனது பதிவுகளைச் சிறுமைப்படுத்தும் விதமாக தொடர்ச்சியாகப் பிந்தொடர்ந்து எழுதிவருகிறார்கள். இங்கே நான் பதியும் விடயங்கள் என்னால் உருவாக்கப்பட்டவை அல்ல, மாறாக சரித்திரத்தில் பதியப்பட்டவை, எம் கண்முன்னாலேயே நடந்தவை. ஆகவே நீங்கள் தடுக்க நினைப்பது ரஞ்சித் எனும் தனி மனிதனின் சொந்தக் கருத்துக்களையல்ல, மாறாக எமது இனத்தின் மீது குறிப்பிட்ட ஒரு இனத்தால், அதனை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு கட்சியால், அக்கட்சியில் முக்கிய உறுப்பினராக விளங்கும் ஒருவரால் கடந்த காலங்களில் புரியப்பட்ட விடயங்களைத்தான். நான் எழுதுபவை உண்மையானவை என்பது உங்களுக்கு நன்றாகவே தெரிகிறது. அதனால்த்தான் அப்பதிவுகளைப் பற்றி கேள்வி எழுப்பாமல் என்னைப்பற்றியும், எனது நோக்கங்கள் எப்படிப்பட்டவை என்பது பற்றியும் தனிப்பட்ட ரீதியில் மிகவும் கீழ்த்தரமாக உங்களால் எழுதவேண்டி ஏற்படுகிறது. ஏதாவதொரு சிங்களத் தலைவர் அவ்வப்போது புதிதாக ஆட்சிக்கு வரும்போது அவர் பேசும் விடயங்களை அப்படியே வேத வாக்கென்று நம்பி, அவரது கட்சியும், அவரும் கடந்த காலங்களில் செய்த எம்மீதான செயற்பாடுகளை, எம்மினத்தின் இருப்பு மீதான திருப்பமுடியாத சேதங்களை இலகுவாக மறந்து அவர் பின்னால் ஓடுவதென்பது ஈழத்தமிழருக்குப் புதியது அல்ல. 1994 இல் சந்திரிக்கா, 2002 இல் ரணில், 2010 இல் சரத் பொன்சேக்கா, 2015 இல் மைத்திரிபால சிறிசேன, 2019 இல் சஜித் பிரேமதாச என்று ஒவ்வொரு தலைவரும் வரும்போது நாம் அவர்களைத் தூக்கிக் கொண்டாடினோம். ஆனால் தேர்தல்கள் முடிந்தபின்னர் அவர்கள் ஒவ்வொருவரும் எவ்வாறான முகங்களை எமக்குக் காட்டினார்கள் என்பது எம் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். அந்த வரிசையில்த்தான் அநுரவும் இப்போது வருகிறார். அவர் புதியவர் (எம்மில்ப் பலரைப் பொறுத்தவரை), அவர் பேசும் பேச்சு வசீகரமாக இருக்கிறது, மக்களுடன் மக்களாக மிகவும் எளிமையாக அவர் வலம் வருகிறார், தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து மிகுந்த அக்கறையுடன் அவர் பேசவும், செயற்படவும் போகிறார் என்று நாம் நம்புகிறோம். கடந்த 50 வருடகால தமிழ் அரசியலை அவதானிப்பவர்களுக்கு நடந்தவை பற்றிய பூரண அறிவு இருக்கிறது. பலருக்கு அவை இருந்தும் அதுபற்றிப் பேச விருப்பமிருப்பதில்லை. சிலருக்கு அவை குறித்துப் பேசுவதே வெறுப்பாக இருக்கிறது. அவ்வாறு பேசுவதால் தாம் கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு தரத் துடிக்கும் அநுரவுக்கான தளம் பலவீனமாகிப் போய்விடும் என்கிற நியாயமான கவலை அவர்களுக்கு. எந்தவினமும் தனது சரித்திரத்தை, குறிப்பாக தன்மீது நடத்தப்பட்ட அக்கிரமங்களை பதிவுசெய்து வைக்கத் தவறுவதில்லை, ஈழத் தமிழினத்தைத் தவிர. எம்மீது நடத்தப்பட்ட ஆக்கிரமங்களை நாம் எங்கும் பதிந்துவிடக் கூடாது என்று நினைப்பவர்கள் எம்மிடையேதான் இருக்கிறார்கள். 2009 இற்குப் பின்னரான தமிழ் மக்களின் அரசியல் வேண்டுமென்றே தேசிய நீக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய பங்காற்றியவர்கள் சம்பந்தன், சுமந்திரன், மாவை போன்றவர்கள். ஆரம்பத்தில் புலிநீக்கம் என்று ஆரம்பித்து, இப்போது தமிழ்த் தேசிய நீக்கம் என்று உருமாறி, இனிவரும் காலத்தில் சிங்களப் பெருந்தேசியத்திற்குள் உள்வாங்கப்படும் விருப்பினை பலரின் நோக்கம் கொண்டிருக்கிறது. இக்காலப்பகுதியில் தாயகத்தில் வளர்ந்துவரும் தலைமுறைக்கு எமது போராட்டத்தின் அவசியம் குறித்தோ, எம்மீது நடத்தப்பட்ட இனவழிப்புக் குறித்தோ, இந்த இனவழிப்பில் பங்குகொண்ட பல்வேறுபட்ட சிங்களத் தேசியவாதக் கட்சிகள் குறித்தோ எந்த அறிவும் ஊடப்படவில்லை. இது வேண்டுமென்றே தமிழரை 2009 இல் இருந்து பிரதிநிதித்துவம் செய்த அரசியல்வாதிகளால் செய்யப்பட்டவை. அதனாலேயே அநுரவின் வசீகரமான பேச்சினைக் கேட்கும்போது தமிழ் இளைஞர்கள் அதன் பால் கவரப்பட்டு பின்னால் ஓடுகிறார்கள், இதற்கு தமிழ் யுடியூப் வியாபாரிகளும் விதிவிலக்கல்ல. இன்னும் கூறப்போனால் தமிழ் இளைஞர்கள் அநுர எனும் சிங்கள அரசியல்வாதி மீது வைத்திருக்கும் கண்மூடித்தனாமான விசுவாசத்திற்கு இவர்களும் பெரும் காரணமாகி இருக்கிறார்கள். ஆகவேதான் அநுர எனும் மனிதர் தனிப்பட்ட ரீதியிலும், மக்கள் விடுதலை முன்னணி எனும் கட்சியின் உறுப்பினராக இதுவரை செய்துவந்த விடயங்களை இங்கே பதிகிறேன். தேவையானவர்கள் இவற்றைப் படித்துப் பார்ப்பதன் ஊடாக சரித்திரத்தை அறிந்து சரியானதைச் செய்யலாம், அல்லது கடந்து போகலாம். தமிழ்த் தேசியத்தை மட்டுமே முன்னிறுத்துவோம் என்று ஆரம்பித்த யாழ் இணையம் இன்று தேசிய நீக்கம் செய்யும் நபர்களுக்கு தாராளமாகக் களம் அமைத்துக் கொடுக்கிறது. இதில் புலிநீக்கம் செய்யவேண்டும் என்று விரும்புபவர்களும் தாராளமாகக் கடை விரித்து வருகிறார்கள். ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றத்திற்கும், விவாதத்திற்கும் இந்த எதிர்மறையான கருத்துக்கள் பகிரப்படுவது அவசியம் என்று காரணம் சொல்லப்படுகிறது. நல்லது. நான் எழுதுவதை எப்படியாவது தடுத்து நிறுத்திவிடவேண்டும், இதனைப் படிப்போரின் எண்ணங்களைச் சிதறடிக்க வேண்டும் என்று எண்ணி தொடர்ச்சியாக எழுதி வருவோருக்கு சிறிய வேண்டுகோள். நீங்கள் உண்மையாகவே எனது பதிவு அநுர எனும் மகத்தான மனிதரின் வெற்றி வாய்ப்பைப் பாதித்துவிடும் என்று நம்பினால், புதிதாக ஒரு திரியைத் திறந்து (யாழ்க்களத்தில் புதிதாக அனுமதிக்கப்பட்டிருக்கும் தேசியத்திற்கெதிரான, தேசிய நீக்கத்திற்கு ஆதரவான கருத்துக்களுக்கும் இடமளித்தல் எனும் கோட்பாட்டிற்கு அமைய), அத்திரியில் அநுர எனும் மனிதருள் மாணிக்கத்தின், அவர் பிரதிநிதித்துவம் செய்யும் மக்கள் விடுதலை முன்னணி எனும் மாபெரும் இயக்கத்தின் செயற்பாடுகளை, அவர்கள் தமிழ் மக்களுக்காகச் செய்த தியாகங்களை பட்டியலிட்டு தனியே ஒரு நாட்குறிப்பாக எழுதினால் நான் எழுதுபவை குறித்து நீங்கள் பயப்படத் தேவையில்லை என்று நினைக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் அநுரவின் வெற்றிக்காக யாழ் களத்தின் அனுமதியுடன் இங்கேயே ஒரு பிரச்சாரத் திரியைத் திறக்கலாம். எனது எழுத்துக்களால் ஏற்படப்போகும் பாதிப்புக்கள் என்று நீங்கள் கருதுபவற்றை உங்களின் பிரச்சாரத் திரியினால் நீங்கள் சரிசெய்து கொள்ளலாம். அதுதான் படித்த மக்களுக்கு அழகு. அதைவிடுத்து அற்பத்தனமாக என்னைத் தொடர்ந்துவந்து தனிமனித தாக்குதல் நடத்தத் தேவையில்லை. உங்களின் அருவருக்கத்தக்க எழுத்துக்களால் நான் இத்தொடரை நிறுத்தப்போவதில்லை. நிச்சயமாக தொடர்ந்து எழுதுவேன். உங்களின் பொன்னான நேரத்தை இங்கே வீணடிக்காமல், அநுரவுக்கென்று தனியே திரி திறந்து அங்கே உங்களின் பிரச்சாரங்களை முன்வைய்யுங்கள். இன்றைய இளைய தலைமுறைக்கு அது பெரும் உதவியாக இருக்கும். நன்றி.
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
தமிழர்கள் சுய நிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மலையளவு, ஆனால் நான் இதனைச் சொல்வதால் மக்கள் விடுதலை முன்னணியும், சிகல உறுமயவினரும் என்னைக் கொன்றுவிடப்போகின்றன - மகாகல்கடவெல புண்ணியசார தேரர் 21 ஐப்பசி, 2001 அரச ஆதரவு துணை இராணுவக் குழுவினால் படுகொலை செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் நிமலராஜனின் நினைவுப் பேருரை மட்டக்களப்பில் நடைபெற்றது. கிழக்கிலங்கைப் பத்திரிக்கையாளர் அமைப்பினால் இந்த நினவுப் பேருரை நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் பேராசிரியர் வி டி தமிழ்மாறன் மற்றும் குருநாகலை மகாகல்கடவெல புண்ணியசார தேரர் ஆகியோர் உரையாற்றினர். "சுதந்திரத்திற்காகப் போரிடும் ஒரு இனம், அப்போரில் அடக்குமுறையாளனிடம் தோற்கும்போது, சர்வதேச சமூகம் அவ்வினத்திற்கான சுயநிர்ணய உரிமையினை மறுத்துவிடுகிறது. இது உண்மையிலேயே மிகவும் கவலைதரும் விடயமாகும். நைஜீரியாவிலிருந்து பிரிந்துசென்று தனியான நாடு கோரிப் போரிட்ட BAFTA மக்கள் போரில் தோற்றதன் பின்னர் அவர்களுக்கான சுய நிர்ணய உரிமையினை சர்வதேச சமூகம் நிராகரித்தது" என்று தமிழ்மாறன் கூறினார். மகாகல்கடவெல புண்ணியசார தேரர் பேசும்போது, "இலங்கையில் இருப்பது தமிழ்ப்பிரச்சினையல்ல, ஆனால் பயங்கரவாதப் பிரச்சினையே என்று கூறிவரும் சில பெளத்த பிக்குகளை என்னுடன் நேரடியான விவாதத்திற்கு வருமாறு அறைகூவல் விடுக்கிறேன். என்னிடம் யாராவது தமிழருக்கென்று ஒரு பிரச்சினை இருக்கிறதா என்று வினவினால், ஒரு பிரச்சினையல்ல, மலையளவு பிரச்சினைகள் இருக்கின்றன என்று நான் கூறுவேன். நான் இப்படிக் கூறுவதால் மக்கள் விடுதலை முன்னணியோ அல்லது சிகல உறுமயவினரோ என்னைக் கொன்று போடலாம். அந்தச் சிங்கள இனவாதிகளைப் பொறுத்தவரையில் இங்கிருப்பது ஒற்றைச் சிங்கள தேசம்தான், ஒற்றைச் சிங்கள பெளத்த நாடுதான்". "ஆனால் சிங்களவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? இலங்கையை ஆண்ட முன்னாள் அரசர்களில் பலர் தமிழர்களே. பல அரசர்கள் தென்னிந்தியத் தமிழப் பெண்களையே மணம் முடித்தனர். புராதன காலத்து இலங்கையின் போர்வீரர்களும் தளபதிகளும் தென்னிந்தியாவில் இருந்து வந்தவர்களே. அதுமட்டுமல்லாமல் சிங்கள அரசர்களின் பெருமைமிகு மெய்ப்பாதுகாவலர்கள் கூடத் தென்னிந்தியத் தமிழர்களே. இவர்கள் எவருமே தென்னிந்தியாவிற்குத் திரும்பிச் செல்லவில்லை. இங்கேயே மணம் முடித்து, இலங்கையின் பல பாகங்களிலும் அவர்கள் குடியேறினார்கள். ஆகவே இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழர்கள் எமது சகோதரகள், எமது உறவினர்கள். நாங்கள் எலோரும் ஒரே வம்சாவளியில் இருந்தே வந்தவர்கள். இங்கே தனிச் சிங்களவர்கள் என்று ஒரு இனம் இல்லை" என்று அவர் மேலும் கூறினார். "சுதந்திரத்திற்குப் பின்னரான காலத்தில் இரு அதிகாரம் மிக்க சிங்களக் குடும்பங்கள் இலங்கையை ஆண்டன. கொழும்பில் இருந்து ஆண்டுகொண்டு முழு இலங்கைக்கும் அவர்கள் தீமூட்டினர். அவர்கள் தமிழர்களின் பிரச்சினையினை ஒருபோதுமே தீர்க்கப்போவதில்லை" என்று அவர் முடித்தார்..
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதைத் தடுக்கவே மக்கள் விடுதலை முன்னணி சந்திரிக்கா அரசை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கிறது. 17 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட விவாதத்திலிருந்து தமிழ்க் கட்சிகள் வெளிநடப்பு. திங்கள், 24, புரட்டாதி 2001 https://www.tamilnet.com/art.html?catid=13&artid=6337 டெலோ மற்றும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், 17 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தினை பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பித்தபோது கூட்டாக வெளிநடப்புச் செய்தனர். தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதைத் தடுக்கும் முகமாக தீவிர இடதுசாரிக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் கட்டாயத்தால் உருவாக்கப்பட்ட 17 ஆவது அரசியமைப்புத் திருத்தச் சட்டத்திற்குத் தாம் ஆதரவளிக்கப்போவதில்லை என்று அவர்கள் தெரிவித்தனர். "50 வருடங்களுக்கு மேலாக தமிழர் பிரச்சினையினைத் தீர்ப்பதற்கான இதயசுத்தியான எந்த முயற்சியையும் நீங்கள் எடுக்கவில்லை. நீங்கள் இப்படியே காலத்தைக் கடத்தி வருவீர்களாக இருந்தால் ஒன்றுபட்ட இலங்கை எனும் கூப்பாடு இறந்தகாலத்திற்குள் சென்றுவிடும்" என்று டெலோ அமைப்பின் உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்றத்தைவிட்டு ஏனைய தமிழ் உறுப்பினர்களுடன் சேர்ந்து வெளியேறும்போது கூறினார். "இந்த நாட்டில் இருக்கும் அதி முக்கிய பிரச்சினை தமிழர்களின் தேசியப் பிரச்சினையாகும். அதனை நீங்கள் முதலில் தீர்க்கவேண்டும். ஆனால் உங்களை தொடர்ந்தும் ஆட்சியில் வைத்திருப்பதற்காக மக்கள் விடுதலை முன்னணியின் தாளத்திற்கு நீங்கள் ஆடிக்கொண்டிருக்கிறீர்கள்" என்றும் அவர் மேலும் கூறினார். அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குக் கண்டனம் செய்யும் விவாதத்தில் கலந்துகொள்ளுமாறு தமிழ் உறுப்பினர்களை பிரதமர் அழைத்தபோது, "அமெரிக்கா மீது நடத்தப்பட்டது பயங்கரவாதத் தாக்குதல்தான். அதனை நாங்களும் கண்டிக்கிறோம். ஆனால் இதனைச் சாட்டாகப் பயன்படுத்தி எமது போராட்டத்தையும் நீங்கள் பயங்கரவாதம் என்று சித்திரிக்க முயல்வதை நாம் மறுக்கிறோம். இந்த நாட்டில் தம்மீது தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் அரச அடக்குமுறைக்கும், தம்மீதான இனப்பாகுபாட்டிற்கும் எதிரான தமிழ் மக்களின் போராட்டமே இங்கு நடந்து வருவது. அரச பயங்கரவாதத்திற்கெதிராகவே எமது மக்கள் போராடி வருகிறார்கள். யுத்த நிறுத்தம் ஒன்றை அறிவித்து, தமிழர் தாயகம் மீதான பொருளாதாரத் தடையினை நீக்கி புலிகளுடன் பேச்சுக்களில் ஈடுபட்டால் ஒழிய உங்களின் 17 ஆவது அரசியலமைப்புச் சீர்திருத்தத்திற்கு எமது ஆதரவு ஒருபோதும் கிடைக்கப்போவதில்லை" என்றும் செல்வம் கூறினார். "அரசியலமைப்புச் சபையினை உருவாக்குவதற்கு நாம் எதிர்ப்புக் காட்டப்போவதில்லை. ஆனால், நாட்டின் முக்கியமான இனப்பிரச்சினைக்கு தீர்வெதையும் காணாது அரசியலமைப்பு விடயத்தில் மாற்றங்களை செய்ய எத்தனிப்பதையே நாம் எதிர்க்கிறோம். அதனாலேயே பாராளுமன்றத்திலிருந்து வெளிநடப்புச் செய்தோம்" என்று தமிழ் உறுப்பினர்கள் பின்னர் தெரிவித்தனர்.- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
நோர்வேயின் சமாதான முயற்சிகளை தோற்கடிக்க சந்திரிக்காவும், மக்கள் விடுதலை முன்னணியும் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம். சந்திரிக்காவின் மக்கள் கூட்டணிக்கும், சிங்கள இனவாத இடதுசாரிக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையே செய்துகொள்ளப்பட்டிருக்கும் ஒப்பந்தம் இலங்கையில் சமாதானத்திற்கு பெரும் அச்சுருத்தலாக மாறியிருக்கிறது - விடுதலைப் புலிகள் 11, புரட்டாதி 2001 https://www.tamilnet.com/art.html?catid=13&artid=6311 சந்திரிக்காவின் மக்கள் கூட்டணிக் கட்சிக்கும், தீவிர இனவாத இடதுசாரிகளான மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடயே செய்யப்பட்டிருக்கும் நன்னடத்தைக் கால அரசு எனும் ஒப்பந்தம் இலங்கையில் சமாதானம் ஏற்படுவதற்கு அச்சுருத்தலாக அமைந்திருக்கிறதென்று தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர். தென்னிலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் சூழ்நிலைகள் குறித்து தமிழ் கார்டியன் பத்திரிக்கை புலிகளின் அரசியல் ஆலோசகரும், பேச்சுவார்த்தைக் குழுவின் பிரதானியுமான திரு அன்டன் பாலசிங்கத்திடம் வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் பேசும்போது சந்திரிக்காவிற்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையே செய்துகொள்ளப்பட்டிருக்கும் புரிந்துணர்வு உடன்பாட்டில் சேர்க்கப்பட்டுள்ள சரத்துக்கள், தமிழர் பிரச்சினைக்குத் தீர்வாக பரிந்துரைகள் முன்வைக்கப்படுவதை முற்றாகவே தடுக்கும் சூழ்நிலையினை ஏற்படுத்தியிருக்கின்றது என்று கூறினார். திரு பாலசிங்கம் அவர்களின் கருத்துக்கள் புலம்பெயர்ந்த நாட்டிலிருந்து வெளிவரும் நாளேடான தமிழ் கார்டியனின் செவ்வாயன்று வெளிவந்த இதழில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. புலிகளுடனான பேச்சுக்களுக்கு தமது அரசாங்கம் மக்கள் விடுதலை முன்னணியுடன் செய்துகொண்டிருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் எவ்விதத்தில் தடையாக இருக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி சந்திரிக்காவும், வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமருக் கூறியிருப்பது பற்றி பாலசிங்கத்திடம் தமிழ் கார்டியன் வினவியபோது அவர் பின்வருமாறு பதிலளித்தார். "இது மிகவும் முட்டாள்த்தனமான கருத்தாகும். அவர்கள் செய்துகொண்டிருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் 20 ஆவது சரத்தில், நன்னடத்தைக் காலமான முதல் 12 மாதங்களுக்குள் தமிழரின் பிரச்சினையினை அரசியல் ரீதியாகத் தீர்ப்பது குறித்த எந்த பேச்சுவார்த்தைகளிலும் அரசாங்கம் ஈடுபடலாகாது என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. எமது மக்களின் பிரச்சினைகள் குறித்துப் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் நாம் அரசாங்கத்துடன் இதுகுறித்து இணக்கப்பாடு ஒன்றிற்கு வருவதில் ஏதாவது அர்த்தம் இருக்கின்றதா?" என்று பாலசிங்கம் வினவினார். "உண்மையென்னவென்றால், சமாதானப் பேச்சுக்களைச் சாத்தியமற்றதாக்குவதற்காகவே சந்திரிக்காவின் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருக்கின்றன. சந்திரிக்காவும், கதிர்காமரும் உளரும் வியாக்கியானங்கள் சர்வதேச அரசாங்கங்களில் இருப்பவர்களுக்காகப் புனையப்பட்டவையே அன்றி வேறில்லை. ஒரு பலவீனமான, ஊழலால் மூழகடிக்கப்பட்டிருக்கின்ற சந்திரிக்காவின் அரசிற்கும், சமாதானத்தையும், சர்வதேச மத்தியஸ்த்தத்தையும் தொடர்ச்சியாக எதிர்த்துவரும் அதிதீவிரவாத மாக்ஸிஸ்ட் கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையே செய்யப்பட்டிருக்கும் செயற்கைத்தனமான அருவருக்கும் இந்த இணைப்பின் ஊடாக சமாதானம் ஏற்பட்டுவிடும் என்று இவர்கள் இருவரும் கூறுவதை கண்களை மூடிக்கொண்டு இந்த சர்வதேச அரசாங்கங்கள் நம்புகின்றன" என்று அவர் மேலும் கூறினார். "இந்த நாட்டினை சிதைத்துக்கொண்டிருக்கும் இனவாதப் போரினை நிறுத்தி, தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான உண்மையான தீர்வினை வழங்கக் கூடிய ஒத்திசைவான நோக்கு சந்திரிக்காவின் மக்கள் கூட்டணிக்கோ அல்லது சிங்கள தீவிரவாத மக்கள் விடுதலை முன்னணிக்கோ எள்ளவும் கிடையாது. ஒருவருக்கொருவர் நேரெதிரான கொள்கைகளைக் கொண்ட இவ்விரு கட்சிகளும் செய்துகொண்டிருக்கும் நன்னடத்தைக்கால அரசாங்கமானது தமிழர் பிரச்சினைக்கான தீர்வு குறித்து வெவ்வேறுவிதமான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். சந்திரிக்காவின் மக்கள் கூட்டணி தமிழருக்கு "மிகவும் பலவீனமான" அதிகாரங்களைப் பகிரலாம் என்று கூறிவரும் அதேவேளை அவரது அரசாங்கத்தின் இன்னொரு பகுதியான மக்கள் விடுதலை முன்னணியோ, "தமிழருக்கென்று தனியாகப் பிரச்சினைகள் இல்லை, எல்லா இன மக்களும் சமம்" என்று கூறி வருகிறது. ஆனால் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வாக தமிழர்களால் முன்வைக்கப்படும் அடிப்படைக் கோரிக்கைகள் குறித்து விவாதிக்க இவர்கள் எவருமே தயராக இல்லை" என்று பாலசிங்கம் கூறினார். "முடிவில் தமிழ் மக்கள் தமது தலைவிதியையும், அரசியல் தகமையினையும் தாமே முடிவெடுப்பார்களே ஒழிய கொழும்பில் இருந்து ஆட்சி செய்யும் சிங்கள அரசியல் கட்சிகள் அதனை முடிவு செய்ய முடியாது என்பதை நாம் மீண்டும் மீண்டு கூறி வருகிறோம். திம்புப் பேச்சுக்களின் அடிப்படையில் தமிழர்களால் முன்வைக்கப்பட்ட அடிப்படை அம்சங்களை உள்ளடக்கிய கோரிக்கைகளை சிங்களவர்கள் உணர்ந்துகொள்ளத் தவறுமிடத்து, தமிழர்கள் தம்வழியில்ச் சென்று தமக்கான விடுதலையினை அடைவதைத்தவிர வேறு தெரிவுகள் அவர்களுக்கு இருக்கப்போவதில்லை" என்றும் பாலசிங்கம் தெரிவித்தார். சமாதானப் பேச்சுக்களில் மத்தியஸ்த்தம் வகிக்க நோர்வே அழைக்கப்பட்டிருப்பது குறித்து பாலசிங்கத்திடம் தமிழ் கார்டியன் வினவியபோது, "நோர்வே அரசின் சமாதான முன்னெடுப்புக்களில் ஈடுபட்டிருக்கும் சொல்கெயிமின் முயற்சிகளை தொடர்ச்சியாக விமர்சித்துவருவதன் ஊடாக சந்திரிக்காவும், லக்க்ஷ்மன் கதிர்காமரும் பேச்சுக்களைத் தேக்க நிலைக்குக் கொண்டுவந்திருக்கின்றனர். நோர்வேயின் சமாதானத் தூதுவர் புலிகளுக்குச் சார்பாக இயங்கிவருகிறார் எனும் தீவிர மனநோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் சந்திரிக்காவும், கதிர்காமரும் நோர்வேயின் தலைமையில் நடைபெற்றுவந்த முயற்சிகளைக் கொன்று புதைத்துவிட்டார்கள். இது மிகப்பெரிய இராஜதந்திரத் தவறு. மூன்று தரப்புக்கள் கூடி நடத்தும் பேச்சுக்களில் ஒரு தரப்பு தாந்தோன்றித்தனமாக இவ்வகையான குழிபறிக்கும் காரியங்களில் ஈடுபடுவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. சொல்கெயிமை மீளவும் பிரதான சமாதானத் தூதுவராக பதவியில் அமர்த்துவதன் ஊடாக மாத்திரமே பேச்சுக்களுக்கு நாம் மீளவும் உயிர்கொடுக்க முடியும்" என்று புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான பாலசிங்கம் தெரிவித்தார். பாலசிங்கம் மேலும் கூறும்போது "நிலவிவரும் பொருளாதார அரசியல் சீர்கேட்டிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ளும் ஒற்றை நோக்கிலேயே சந்திரிக்கா அரசு பேச்சுக்களில் ஈடுபட விரும்புவதாக காட்டிக்கொள்கிறது. தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு நேர்மையான அரசியல்த் தீர்வைக் காண்பதில் சந்திரிக்காவின் அரசிற்கு உண்மையான அக்கறை எதுவும் கிடையாது. தனது இக்கட்டான நிலையில், வேறு வழியின்றி தன்னிச்சையான யுத்தநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கலாமா என்று அது சிந்தித்து வருகிறது. ஆனால் இந்த சிந்தனைகள் எல்லாம் நன் நம்பிக்கையின் பால் உருவானவை அல்ல, மாறாக புலிகளை போரை விரும்பும் அரக்கர்கள் என்றும், சமாதானத்தின் எதிரிகள் என்றும் சர்வதேசத்தில் காண்பிக்க சந்திரிக்கா - மக்கள் விடுதலை முன்னணி அரசால் புனையப்பட்டவை" என்றும் தெரிவித்தார். "உண்மையாகவே இந்த அரசு புலிகளுடன் நேர்மையான பேச்சுக்களில் ஈடுபட்டு தமிழரின் தேசியப் பிரச்சினையினை தீர்க்க விரும்பினால், முதலாவதாக அது செய்ய வேண்டியது சந்திரிக்கா - ஜே வி பி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருக்கும் 20 ஆவது சரத்தினை முற்றாக நீக்கி, தமிழர் தாயகத்தின் மீது போடப்பட்டிருக்கும் பொருளதாரத் தடையினை விலக்கி, தமிழர் தாயகத்தில் குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு சுமூகமான சூழ்நிலையினைக் கொண்டுவருவதுதான். மேலும் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டது போல புலிகளை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டு எம்மீது போடப்பட்டிருக்கும் தடையினை அரசாங்கம் நீக்குவதும் அவசியமாகும்" என்றும் அவர் கூறினார்.- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
இரத்திணச் சுருக்கம் அண்ணை, மிக்க நன்றி !- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
உங்களின் ஆதரவிற்கு நன்றி வசி!- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
என்னை இங்கு வந்து தனிப்பட்ட ரீதியில் தாக்கியும், என் மீது வசை மாறி பொழிந்தும் இன்புற்றவர்களுக்கு முதற்கண் எனது நன்றிகள். எனென்றால், உங்களின் எதிர்ப்பே என்னை இத்தொடரை இறுதிவரை இழுத்துச் சென்று முற்றாகப் பதியும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. உங்களின் வசைகளும், "நாசமாய்ப் போவாய்" என்கிற "ஆசீர்வாதங்களும்" என்னை ஒன்றும் செய்யப்போவதில்லை. எனது கருத்துக்களுக்கு மதிப்பளித்து, ஊக்கமும் ஆதரவும் தரும் ஈழப்பிரியன் அண்ணா, நுணாவிலான், பெருமாள் ஆகியோரிற்கு எனது இருகரம் குவிந்த நன்றிகள். எழுதுவதற்கான எனது உரிமையை ஏற்றுக்கொண்டபோதிலும், இனவாதியென்று என்னை அடையாளம் கண்டுகொண்ட இன்னும் சிலருக்கும் எனது நன்றிகள். யாழ் இணையம் என்னைத் தடை செய்யும் வரையில் எழுதுவேன். நான் எழுதுவது நடந்த சரித்திரத்தை. சரித்திரத்தில் இருந்து நாம் எதையும் கற்றுக்கொள்ளவில்லையென்றால், சிங்கள இனவாதிகளிடம் மீண்டும் ஒருமுறை ஏமாற்றப்படப்போகிறோம் என்கிற ஆதங்கத்தில்த்தான். அதை இங்கே செய்யவேண்டாம் என்றாலும் கவலைப்படப்போவதில்லை. எனது கருத்துக்களை வெளிக்கொணர வேறு மார்க்கங்களும் இருக்கின்றன. எனது இனம் மீது இன்றுவரை நடத்தப்படுகின்ற திட்டமிட்ட இனக்கொலை, எனது தாயகம் மீது ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள பெளத்த இராணுவம், நாள்தோறும் கபளீகரம் செய்யப்பட்டு, சிங்களமயமாகும் எனது தாயகம், கொல்லப்பட்ட எனது மக்களுக்கும், மாவீரர்களுக்குமான நீதி, அரசியல்கைதிகளுக்கான விடுதலை, காணாமலாக்கப்பட்டவர்களுக்கான நீதி...இவை அனைத்திற்குமான நேர்மையான பதில்களும், தீர்வுகளும் எந்தவொரு சிங்களத் தலைவனிடமிருந்து உண்மையாக வருகின்றதோ, அன்றைக்கு நான் எழுதுவதை நிறுத்திவிடுகிறேன். என்னை இனவாதி என்று அழையுங்கள், சாதியில் குறைந்தவன் என்று முகத்தில் உமிழுங்கள், ஆங்கிலமும் தமிழும் தெரியாதவன் என்று எள்ளி நகையாடுங்கள், இந்திய விசுவாசி என்று அடையாளம் காணுங்கள், இந்துவெறியன் என்று அழையுங்கள்......எதுவுமே என்னை கலக்கமடையச் செய்யப்போவதில்லை. எனது பணி தொடரும். முடிந்தால் யாழில், இல்லாவிட்டால் எனக்கு எங்கெல்லாம் எழுதமுடியுமோ, அங்கெல்லாம். எல்லோருக்கும் நன்றி. இடதுசாரி எனும் போர்வைக்குள் ஒளிந்து நின்றுகொண்டு தனது தீவிர சிங்கள இனவாத முகத்தை மறைக்க எத்தனிக்கும் அநுரவுக்கெதிரான எனது கருத்துக்கள் மறுபடியும் இன்றிரவில் (சிட்னி நேரப்படி 8 மணி) இருந்து தொடரும். மறவாமல் உங்களின் வசைவுகளையும் அடிக்கடி இணையுங்கள், எழுத்துத்துணைக்கும் எனக்கு ஆள்த் தேவைப்படுகிறது.- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
தமிழர்கள் தமது நோக்கத்தினை அடைவதைத் தடுக்க நன்னடத்தைக் கால அரசாங்கம் ஒன்றைக் கோரும் மக்கள் விடுதலை முன்னணி - 8, ஆவணி 2001 தீவிர இனவாத இடதுசாரிக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி நன்னடத்தைக் கால அரசாங்கம் ஒன்றைக் கோரியிருக்கிறது. அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பான மக்கள் ஆணையினைப் பெற்றுக்கொள்ளும் கால எல்லையினை நீட்டிப்பதைக் காட்டிலும் அதனை முற்றாக இரத்துச் செய்வதே சரியானது என்று அரசிற்கு அது எழுதியிருக்கும் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறது. பாராளுமன்றம் மீண்டும் கூடும் பட்சத்தில் அரசியலமைப்பு ஆலோசனை சபையொன்றினை நிறுவுவதன் மூலம் இச்சிக்கலைத் தீர்த்துக்கொள்ள முடியும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச குறிப்பிட்டிருக்கிறார். "நாடு இன்றிருக்கும் இக்கட்டான தருணத்தில் அரசியல் ஆதாயம் நோக்கி நாம் செயற்படப்போவதில்லை. அதேவேளைத் தமிழ்ப் பிரிவினவாதிகளும் இச்சூச்ழ்நிலையினைப் பாவித்து தமக்கான ஆதாயங்களை அடைந்துகொள்ள நாம் அனுமதிக்கப்போவதில்லை" என்று அவர் கூறினார். அதிதீவிர சிங்கள இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணியினர் உட்பட்ட பல சிங்கள இனவாத அமைப்புக்கள் தேசிய அரசாங்கம் ஒன்றினை உருவாக்கும் ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சந்திரிக்கா கொண்டுவர எத்தனிக்கும் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் சிங்கள இனம் பிளவுபட்டிருப்பதாக மக்கள் விடுதலை முன்னணி கருதுகிறது. புலிகள் இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தமிழர்களுக்கென்று தனிநாடு ஒன்றினை உருவாக்குவதை சிங்களவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு தடுத்துவிட வேண்டும் என்றும் விமல் வீரவன்ச போன்றோர் கூறத் தொடங்கியிருக்கின்றனர். நிகழ்ந்துவரும் அரசியல்ச் சிக்கலில் தனது பங்கு சிங்களவர்களின் நலன்களுக்கு ஆபத்தாக அமையாது என்று தெரிவித்திருக்கும் இக்கட்சி, தமிழர்களுக்கு எவ்விதமான அதிகாரப் பரவலாக்கத்தையும் வழங்குவதை தாம் முற்றாக எதிர்க்கும் என்று தெளிவுபடுத்திக் கூறியிருக்கிறது. மேலும், இலங்கை எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான ஒரே தீர்வு நாடு கம்மியூனிசம் நோக்கிச் செல்வதுதான் என்றும் அக்கட்சி கூறுகிறது.- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
அநுரவின் இனவன்மம் தொடரும்.....- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
வெளிநாட்டு மத்தியஸ்தத்திற்கெதிராகத் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் தீவிர சிங்கள இடதுசாரி இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணியினர் - 13, மார்கழி 2000 இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையில் வெளிநாடுகள் தலையிடுவதற்கெதிராகவும், உயர்ந்துசெல்லும் வாக்கைச் செல்வினைக் கண்டித்தும் பலநூற்றுக்கணக்கான சிங்கள இனவாத இடதுசாரிக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியினர் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தினர். மாலை 4 மணிக்கு ஆரம்பித்த இந்த ஆர்ப்பாட்டம் இரவு 8 மணிக்கு நிறைவு பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய டில்வின் சில்வா, தமது கட்சி இலங்கை இனப்பிரச்சினையில் எந்த வெளிநாடு தலையீடு செய்ய வந்தாலும் அதனை எதிர்க்கும் என்று கூறினார். வெளிநாடுகள் தமது சொந்த நலன்களுக்காகவே மத்தியஸ்த்தம் செய்ய வருகின்றன, அவர்கள் ஒருபோதும் பிரச்சினையினைத் தீர்க்கப்போவதில்லை என்றும் அவர் மேலும் கூறினார். இருமுறை ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டுத் தோல்வியடைந்த மக்கள் விடுதலை முன்னணி தற்போது பாராளுமன்றத்தில் 10 ஆசனங்களைக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
மக்கள் விடுதலை முன்னணியைத் தொடர்ந்து நோர்வேயிற்கெதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட சிகல உறுமய, நோர்வே அமைச்சரின் கொடும்பாவியை எரித்த இனவாதப் பிக்கு - கார்த்திகை 2000 இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதில் நோர்வே வகிக்கவிருக்கும் மத்தியஸ்த்திற்கெதிராக தீவிர இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி சிங்கள மக்களை அணிதிரட்டி கடுமையான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவது தெரிந்ததே. தமிழர்களுக்கான தனிநாட்டினை உருவாக்கவே நோர்வே வந்திருப்பதாக சிங்கள மக்களிடையே கடுமையான பிரச்சாரத்தை அக்கட்சி கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. இக்கட்சியின் ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து இன்னொரு சிறிய இனவாதக் கட்சியான சிகல உறுமயவும் நோர்வேயிற்கெதிரான ஆர்ப்பாட்டத்தில் இறங்கியிருக்கிறது. கொழும்பிலிருக்கும் நோர்வேயின் தூதரகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிகல உறுமயவின் பிக்குகள் அணியினர் அங்கு எரிக் சொல்கெயிமின் கொடும்பாவியையும் எரித்தனர். பின்னர் நரகென்பிட பகுதியில் நடத்திய பொதுக்கூட்டத்தில் தமிழருக்குத் தீர்வினை வழங்கும் எந்தமுயற்சியையும் தாம் எதிர்ப்பதாகத் தெரிவித்தனர். முன்னர் சுமார் 700 உறுப்பினர்களுடன் நோர்வே தூதரகத்திற்குச் சென்ற அக்கட்சியின் தலைவர் திலக் கருணாரட்ன, நோர்வேயின் மத்தியஸ்த்தத்தினை எதிர்த்து ஆர்ப்பரித்ததுடன், இலங்கை அரசிற்கும் புலிகளுக்கும் இடையில் நடக்கும் பேச்சுக்களையும் உடனடியாக நிறுத்தவேண்டும் என்று கோஷமிட்டார். புலிகளின் ஆலோசனையின் பேரிலேயே நாட்டைத் துண்டாடும் கைங்கரியத்தில் சொல்கெயிம் இறங்கியிருப்பதாக அவர் கூறினார். அண்மையில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனை நோர்வேயின் விசேட தூதுவர் எரிக் சொல்கெயிம் மல்லாவியில்ச் சென்று சந்தித்ததை தீவிரவாத இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணியினர் கடுமையாக விமர்சித்திருக்கும் பின்னணியில் இன்னொரு இனவாதக் கட்சியான சிக உறுமயவும் மக்கள் விடுதலை முன்னணியின் வழியில் சென்று பேச்சுக்களை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றது. அநுரவின் இனவன்மம் தொடரும்........- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
தமிழீழத் தேசியத் தலைவருக்கும் நோர்வேயின் விசேட தூதுவருக்கும் இடையே மல்லாவியில் நடைபெற்ற பேச்சுக்களை இரகசியப் பேச்சுக்கள் என்று கடுமையாகக் கண்டித்திருக்கிறது மக்கள் விடுதலை முன்னணி - கார்த்திகை 2000 கடந்த பாராளுமன்றத் தேர்தலில் 10 ஆசனங்களை வென்றுள்ள தீவிர இனவாத இடதுசாரிக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி, தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனுடன் நோர்வேயின் விசேட தூதுவர் எரிக் சொல்கெயிம் மல்லாவியில் நடத்திய பேச்சுக்களை "இரகசியப் பேச்சுக்கள்" என்று கூறி தனது கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. கொழும்பில் மக்கள் விடுதலை முன்னணி எனும் தீவிர சிங்கள இனவாதக் கட்சி வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கையில், இலங்கை அரசாங்கம் மீது நோர்வே அரசியல்த் தீர்வொன்றைத் திணித்துவருவதாகக் குற்றஞ்சாட்டியிருக்கிறது. அதனை அடையும் நோக்கத்தின் முதற்படியே தலைவருக்கும் சொல்கெயிமிற்கும் இடையிலான இரகசியப் பேச்சுவார்த்தை என்றும் அது விமர்சித்திருக்கிறது. 70 களிலும் 80 களின் இறுதிப்பகுதியிலும் இருமுறை ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்ட வரலாற்றைக் கொண்ட இக்கட்சி, நோர்வேயின் மத்தியஸ்த்தத்துடனான இனப்பிரச்சினைத் தீர்வுக்கெதிரான தனது நிலைப்பாட்டினை ஆரம்பமுதல் கடுமையான ஆர்ப்பாட்டங்கள் மூலம் வெளிப்படுத்திவருவது நாம் அறிந்ததே.- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
நாடுதழுவிய ரீதியில் பல்லாயிரக்கணக்கான உறுப்பினர்களை அழைத்து அரசியலமைப்பு மாற்றத்திற்கெதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வரும் மக்கள் விடுதலை முன்னணி - ஆவணி 2000 இடதுசாரி இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் பல்லாயிரக்கணக்கான உறுப்பினர்கள் நாடு தழுவிய ரீதியில் உத்தேச அரசியலமைப்பு சீர்திருத்தங்களுக்கெதிராக கடுமையான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் புதிய தேர்தல் நடைமுறை தொடர்பான தமது ஆர்ப்பாட்டம் ஒன்றினை கொழும்பு உச்ச நீதிமன்றத்தின் முன்னாலும் மக்கள் விடுதலை முன்னணி இன்று நடத்தியது. உத்தேச அரசியலமைப்பு சீர்திருந்த்தத்திற்கெதிரான ஜே வி பி யின் ஆர்ப்பாட்டம் இன்று கொழும்பில் நடைபெற்றதுடன், மாகாணத் தலைநகரங்களான கண்டி, மாத்தறை, காலி ஆகியவிடங்களிலும் ஜே வி பி உறுப்பினர்கள் இவ்வார்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கில் கலந்துகொண்டனர். அரசியலமைப்புச் சீர்திருத்தத்தினை தாம் நிராகரிப்பதான சுவரொட்டிகள் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் வடக்குக் கிழக்கைத் தவிர்த்த ஏனைய பகுதிகளில் மக்கள் விடுதலை முன்னணியினரால் பரவலாக ஒட்டப்பட்டிருந்தன. மேலும், உத்தேச அரசியல்ச் சீர்திருத்தம் முற்றாகத் தோற்கடிக்கப்படும்வரை தமது போராட்டங்கள் ஓயாது என்றும் மக்கள் விடுதலை முன்னணி எச்சரித்திருக்கிறது. உத்தேச அரசியலமைப்புச் சீர்திருத்தம் நிறைவேற்றப்பட்டால் நாடு பிரிந்து தமிழர்கள் தனிநாட்டினை அடைந்துகொள்வார்கள் என்பதற்காகவே தாம் அதனை எதிர்ப்பதாகவும் அக்கட்சி கூறியிருக்கிறது.- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
இனப்பிரச்சினைக்கான தீர்வினை ஏதுவாக்க அரசு கொண்டுவர எத்தனிக்கும் அரசியலமைப்பு மாற்றத்தை எதிர்த்து சிங்களவர்களைத் திரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் விடுதலை முன்னணி - ஆவணி 2000 இலங்கைப் பாராளுமன்றத்திற்குச் செல்லும் வழிகளை அடைத்து சுமார் நான்காயிரம் மக்கள் விடுதலை முன்னணி ஆதரவாளர்கள் கடுமையான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இனப்பிரச்சினைக்கான தீர்வை ஏதுவாக்கும் நோக்கில் சந்திரிக்கா அரசு மேற்கொள்ளவிருப்பதாகக் கூறப்படும் அரசியலமைப்பு மாற்றத்தை எதிர்த்தே இவ்வார்ப்பட்டத்தினை தீவிர இனவாத இடதுசாரிக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி ஒழுங்கு செய்திருந்தது. ஆனால், ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதான சந்தியிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வருகையில் ஆயுதம் தரித்த கலகம் அடக்கும் பொலீஸாரினால் அவர்கள் மறிக்கப்பட்டார்கள். அரசியலமைப்பு மாற்றத்திற்கான பரிந்துரைகள் அன்று முற்பகல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்தன. அரசு அரசியலமைப்பு மாற்றத்தைக் கைவிடாத பட்சத்தில் நாடுதழுவிய ஆர்ப்பாட்டங்களைத் தாம் ஒழுங்குசெய்யப்போவதாக மக்கள் விடுதலை முன்னணி எச்சரித்திருக்கிறது. மக்கள் விடுதலை முன்னணிக்கு ஆதரவாகக் களத்தில் குதித்திருக்கும் தீவிரவாத பிக்குகள் அமைப்பொன்று, அரசியலமைப்பின் மூலம் தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டால் சிங்களவர்கள் அரசியல் அநாதைகளாகிவிடுவார்கள் என்றும், இதனால் மக்கள் விடுதலை முன்னணியின் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக தாமும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்திருக்கிறது.- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
நோர்வேயின் மத்தியஸ்த்தை எதிர்த்து 10,000 சிங்களவர்களைக் கொழும்பில் திரட்டிய மக்கள் விடுதலை முன்னணி - பங்குனி 2000 இலங்கையில் நிலவும் இனப்பிரச்சினையினைத் தீர்ப்பதற்காக மத்தியஸ்த்தத்தில் ஈடுபடும் நோர்வேயினை எதிர்த்து சுமார் 10,000 சிங்களவர்களைத் திரட்டி ஆர்ப்பாட்டப் பேரணியொன்றினை மக்கள் விடுதலை முன்னணி கொழும்பில் நடத்தியது. மத்தியஸ்த்தத்தினை எதிர்த்தும், பேச்சுவார்த்தைகள் குறித்த விபரங்களை நாட்டு மக்களுக்கு அரசாங்கம் உடனுக்குடன் அறிவிக்க வேண்டும் என்று கோரியே இப்பேரணி நடத்தப்பட்டது. நூற்றுக்கணக்கான பெளத்த பிக்குகள் முன்னால்ச் செல்ல, மக்கள் விடுதலை முன்னணியின் பிரமுகர்களான டில்வின் சில்வா மற்றும் விமல் வீரவன்ஸ ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை வழிநடத்தினர். சமாதானப் பேச்சுக்களில் நோர்வே மத்தியஸ்த்தம் வகிப்பதை எதிர்த்து சுலோகங்கள் எழுப்பப்பட்டதோடு, பதாதைகளும் ஆர்ப்பாட்டக் காரர்களால் எடுத்துச் செல்லப்பட்டன.- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
நோர்வே மத்தியஸ்த்தத்தினை நாம் எதிர்ப்போம் டில்வின் சில்வா - பங்குனி 2000 இலங்கையில் நிலவிவரும் இனப்பிரச்சினையினைத் தீர்த்துவைக்கும் பேச்சுக்களில் மத்தியஸ்த்தம் வகிக்க நோர்வே முன்வந்தால் தாம் அதனை எதிர்த்து நாடுதழுவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோம் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார். இஸ்ரேலிற்கும் பலஸ்த்தீனர்களுக்கும் இடையிலான ஒஸ்லோ உடன்படிக்கையின்போது நோர்வே இஸ்ரேலியர்களுக்குச் சார்பாகவே நடந்துகொண்டது. அதுபோல் இலங்கைப் பிரச்சினையில் தமிழர்களுக்குச் சார்பாக நடந்துகொள்ளவே நோர்வே மத்தியஸ்த்தம் வகிக்க வருகிறது. அதனால் அந்த மத்தியஸ்த்தத்தினை நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அவர் கூறினார். புலிகளுடன் சமாதானப் பேச்சுக்கள் நடத்துவது தொடர்பாக எதிர்க்கட்சியுடனும், நோர்வேயுடனும் அரசு மேற்கொள்ளும் கலந்துரையாடல்கள் மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்றும், தமிழர்களுக்கான தீர்வு என்பது அரசியலமைப்பில் மாற்றங்களைச் செய்வதனூடாக அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும் அரசியலமைப்பில் முன்னர் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் எல்லாம் நாட்டு மக்களின் ஒப்புதல் இன்றியே உருவாக்கப்பட்டவை என்றும் அவர் தெரிவித்தார். தமிழர்கள் ஏனைய இன மக்களுடன் ஒன்றாக வாழவே விரும்புகிறார்கள், ஆனால் அவர்களுக்கான சம உரிமைகளை அவர்கள் கேட்கிறார்கள், அவ்வளவுதான் என்று கூறிய அவர், தமது கட்சியின் முதலாவது ஆர்ப்பாட்டம் கொழும்பு லிப்டன் சதுக்கத்தில் ஆரம்பமாகும் என்றும் தெரிவித்தார்.- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
தமிழர்கள் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறோம், ஆனால் புலிகளுடன் பேச முடியாது டில்வின் சில்வா - வைகாசி 1999 "இலங்கையில் தமிழர்களுக்குப் பிரச்சினை இருக்கிறதென்பதை ஏற்றுக்கொள்கிறோம். அடுத்தடுத்து ஆட்சிசெய்த சிங்கள அரசுகள் தமிழர்கள் மீது பாகுபாடு காட்டினார்கள். இதனால் தமிழர்கள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள்" என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்திருக்கிறார். "இலங்கை ஒரு பல்லின, பல்மத நாடாகும், ஆகவே இது ஒரு சிங்கள பெளத்த நாடு என்று கூறப்படுவதை நாம் ஏற்கவில்லை. இலங்கை மக்கள் பல்லின, பல்கலாசார பின்னணியைக் கொண்டவர்கள் என்பதனை ஆட்சிக்கு வரும் அரசுகள் உணரத் தவறுவதாலேயே தமிழ் மக்கள் இன்னல்களை எதிர்நோக்குகிறார்கள். ஆனாலும், தமிழ் மக்களின் விடுதலைக்காகவே தாம் போராடி வருவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் கூறுவதை நாம் முற்றாக நிராகரிக்கிறோம். அவர்களுடன் எந்த இணக்கப்பட்டிற்கும் எம்மால் வரமுடியாது. தமிழரின் பிரச்சினைக்கு பிரிவினையினை புலிகள் இயக்கம் தீர்வாக முன்வைக்கிறது. அதை எம்மால் ஏற்கமுடியாது. அது எமது நாடு துண்டுகளாக சிதைவடைவதற்கு வழிவகுக்கும், ஆகவே நாம் அதனை முற்றாக எதிர்க்கிறோம். ஆயுதங்கள் மூலம் பெறப்படும் தீர்வு சமூக அநீதிகளுக்கு இட்டுச் செல்லும். பேச்சுவார்த்தையின் ஊடாகவே அரசாங்கம் தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்" என்று அவர் மேலும் கூறினார்.- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
முக்கிய வர்த்தக, தொழில் அமைப்புக்களின் தலைவர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட "வடக்குக் கிழக்கு இனப்பிரச்சினைக்கு சமாதானமான முறையில் தீர்வு காணுவோம்" எனும் அரசுசாரா அமைப்புக்களின் கருத்தரங்கைப் புறக்கணித்த மக்கள் விடுதலை முன்னணி - ஐப்பசி 1998 இலங்கையில் செயற்பட்டு வரும் பிரதான வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழில் அமைப்புக்களின் தலைவர்களின் சம்மேளணம் வடக்குக் கிழக்கில் நடந்துவரும் போரினை முடிவிற்குக் கொண்டுவந்து சமாதான ரீதியில் தீர்வொன்றைக் காணும் நோக்கில் அனைத்துக் கட்சிகளையும் அழைத்து கருத்தரங்கொன்றினை ஒழுங்கு செய்திருந்தது. அனைவரினதும் இன்றைய தேவை நடந்துவரும் போரினை முடிவிற்குக் கொண்டுவருவதே என்றாகிறபோது இக்கருத்தரங்கிற்கு பலரும் தமது கருத்துக்களை வெளிப்படுத்தி வந்தனர். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் முஸ்லீம் காங்கிரஸும் பங்குபற்றின. ஆனால், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, லங்கா சம சமாஜக் கட்சி, கொம்மியூனிஸ்ட் கட்சி, மகஜன எக்சத் பெரமுன ஆகிய கட்சிகள் இக்கருத்தரங்கை முற்றாகப் புறக்கணித்திருந்தன. வடக்குக் கிழக்குப் பிரச்சினையினைத் தீர்ப்பதற்கான காத்திரமான தீர்வு என்ன? என்பதுடன் ஆரம்பித்த இக்கருத்தரங்கில் பேசிய ஐக்கிய இடதுசாரிகளின் முன்னணியின் உறுப்பினர் லீனஸ் ஜயதிலக்க, "வடக்குக் கிழக்கில் நடத்தப்படும் போர் உடனடியாக நிறுத்தப்பட்டு, அங்கிருந்து இராணுவத்தினர் முற்றாக மீளப்பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்" என்று கோரிக்கை முன்வைத்தார்.- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
தமிழர்களுக்கு தீர்வொன்றினை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட மாகாணசபை முறைமையினை எதிர்த்துப் படுகொலைகளில் ஈடுபட்ட மக்கள் விடுதலை முன்னணி தற்போது மாகாணசபைத் தேர்தல்களை பிற்போடுவதை எதிர்க்கிறது - ஆவணி 1997 மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச மாகாணசபைத் தேர்தல்களைப் பிற்போடும் அரசின் முடிவினை சட்ட ரீதியில் எதிர்க்கப்போவதாக சூளுரைத்திருக்கிறார். தனது கட்சி உட்பட அனைத்து இடதுசாரிகளையும் திரட்டி அரசின் இம்முடிவிற்கெதிராகப் போராடப்போவதாக அவர் தெரிவித்திருக்கிறார். ஜே வி பி இன் இம்முடிவினை விமர்சித்திருக்கும் அரசாங்கத்தின் பிரதியமைச்சர் செனிவிரட்ன, மக்கள் விடுதலை முன்னணி அரசியல் ஆதாயத்திற்காகவே இதனைச் செய்கிறது என்று கூறியிருக்கிறார். "இன்று மாகாணசபைத் தேர்தல்களை நடத்தவேண்டும் என்று கூப்பாடு போடும் இதே கட்சியினர்தான் 1988 இலிருந்து 1990 வரையான காலப்பகுதியில் மாகாணசபைத் தேர்தலில் ஈடுபடுவோர் அனைவரையும் கொல்லப்போவதாக மிரட்டி வந்தனர்" என்றும் கூறினார். - அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
Important Information
By using this site, you agree to our Terms of Use.