Everything posted by ரஞ்சித்
-
ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
சரி, இங்கு சிலர் கவலைப்படுவதுபோல, தமிழ் வேட்பாளர் தமிழர்களின் வாழ்வை அதள பாதாளத்திற்கு இழுத்துச் சென்றுவிடுவார் (இப்போது மட்டும் தமிழர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று கேட்கவேண்டாம்) என்றே வைத்துக்கொள்வோம். ஆகவே, அவர்கள் விரும்புகின்ற மேற்குலகின் நண்பனான ரனிலுக்கே வாக்களிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம், இன்றிருக்கும் நிலையினை விட தமிழர்களின் வாழ்வு எப்படி மேம்படும்? 2002 இலிருந்து 2005 வரை ரணிலே பிரதமராக இருந்தார். 2015 இலிருந்து 2019 வரை நல்லிணக்க அரசாங்கம், (100 நாட்களில் தமிழர்களுக்குத் தீர்வு தருவேன் என்று தனது ஏஜெண்டுகளான சம்பந்தனுக்கும் சுமந்திரனுக்கும் சத்தியம் செய்து கொடுத்துவிட்டு) ரணில் அவரது சகாவான மைத்திரியுடனும் ஆட்சி செய்தார். தற்போது கோட்டா தப்பியோடியபின்னர் மீண்டும் ஜனாதிபதியாகியிருக்கிறார். தமிழரின் வாழ்வு மேம்பட்டதா? கோட்டா உருவாக்கிய தொல்பொருள்ச் சபை, வன வளத்துறை ஆகிய இரண்டும் இன்றுவரை செய்துவரும் சிங்கள பெளத்த மயமாக்கலைத் தடுக்க முடிந்ததா? இவற்றில் பலவற்றைச் செய்விப்பதே ரணில் என்று கூறப்படுகிறது. இன்றுவரை மேற்கின் செல்லப்பிள்ளையான ரணில் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் சபையின் கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தியிருக்கிறாரா? அரசியல்க் கைதிகளை விடுவித்தாரா? காணமாலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் தொடர்ச்சியான கண்ணீருக்கும் கோரிக்கைகளுக்கும் ரணில் வழங்கிய பதில் என்ன? "இவர்களில் பலர் வெளிநாடுகளுக்குத் தப்பிபோய் விட்டார்கள், வேண்டுமானால் இறப்புச் சான்றிதழ் தருகிறோம்" என்பதற்கப்பால் ரணில் செய்திருப்பது என்ன? வடக்கின் சில பகுதிகளில் அதியுயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து சிலவிடங்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன. தமிழரின் பிரச்சினைக்கான நிரந்தர அரசியல்த் தீர்வு குறித்த ரணிலும் முடிவு என்ன? இவை எதுவுமே இல்லாமல் அவருக்குத் தமிழ் மக்கள் வாக்களிக்கவேண்டும் என்று கேட்பது ஏன்? வெறுமனே சர்வதேச நாணய் நிதியத்தை ஜே வி பியினர் திருப்பி அனுப்பிவிடுவார்கள் என்கிற பீதியைக் கிளப்புவோர், சர்வதேச நாணய நிதியம் ஒன்றும் இலவசமாக மக்களுக்குப் பணம் தரவில்லையென்பதையும், இப்பணம் வட்டியோடு அம்மக்களின் வயிற்றில் மேலும் மேலும் அடித்தே அறவிடப்படும் என்பதையும் ஏன் சொல்லத் தயங்குகிறார்கள்? அப்போதுமட்டும் தமிழ் மக்களின் வாழ்வாதாரமும், சமூகத்தரமும் உயர்ந்துவிடுமா? இன்று ஆட்சியில் இருப்பது ரணில். அப்படியிருக்க தமிழர்கள் உட்பட பலர் வெளிநாடு போவது ஏன்? சர்வதேச நாணய நிதியம் உதவுகிறதென்றால் அவர்கள் ஏன் நாட்டில் தொடர்ந்தும் இருக்கமுடியாது? உண்மை என்னவென்றால், ரணில் என்ன, யார் ஆட்சியில் இருந்தாலும் நாடு பின்னோக்கிச் செல்வதைத் தடுக்க முடியாது. ஏனென்றால், யுத்தம் 2009 இல் முடிவடைந்த பின்னர் மகிந்தவும், கோட்டாவும் நாட்டிற்கு கொண்டுவந்து குவித்திருந்த மொத்தக் கடன் 2022 இல் 58.73 பில்லியன் அமெரிக்க டொலர்கள். இக்கடன் 2021 இலிருந்ததைக் காட்டிலும் 0.03 வீதத்தால் மட்டுமே குறைக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒருவருடத்தில் அதன் கடன் $58,732,518,598 இலிருந்து $ 58,712,654,401 ஆகக் குறைந்திருக்கிறதாம். ஆனால், ரணிலின் அரசாங்கம் உட்பட முன்னைய அரசினது அதிகரித்த பாதுகாப்புச் செலவிங்களினால் 2020 இலிருந்து 2021 வரையான ஒருவருட காலத்தில் கடன் 3.3 வீதத்தால் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இந்த இலட்சணத்தில் நாடு ரணிலின் ஆட்சியில் முன்னேறிப் பாய்கிறது என்று கூறுகிறார்கள். நம்புகிறோம். ரணில் இன்று காட்டிவரும் பொருளாதார சீர்செய்தல் என்பது வெற்றுக் கோதுதான். வெறுமனே எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் வரிசையில் இல்லாததையும், மக்களுக்கு காஸ் கிடைப்பதையும் வைத்துக்கொண்டு பொருளாதாரம் அசுர வேகத்தில் வளர்கிறது என்று கனவு காண்பவர்கள், சர்வதேச நாணய நிதியத்தினால் அரசுக்கு வைக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகளைப் பற்றி அறிவார்களா? அப்படி அவர்கள் கூறுவது போல ரணிலின் ஆட்சியில் பொருளாதாரம் அசுர வேகத்தில் இன்று வளர்கிறதென்றால், பலர் வெளிநாடு செல்ல முண்டியடிப்பது ஏன்? ஆக, ரணில் இருந்தாலென்ன, அவரின் மச்சான் இருந்தாலென்ன, தமிழ் மக்கள் மட்டுமல்ல, எந்த மக்களினதும் வாழ்வு இப்போதைக்கு வளம்பெறப்போவதில்லை. ஆகவே ரணில் புராணம் பாடுவதை இவர்கள் நிறுத்தவேண்டும்.
-
தமிழ்ப் பொது வேட்பாளர் : என் இவ்வளவு வன்மம்? - நிலாந்தன்
- ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
- தமிழ்ப் பொது வேட்பாளர் : என் இவ்வளவு வன்மம்? - நிலாந்தன்
- தமிழ்ப் பொது வேட்பாளர் : என் இவ்வளவு வன்மம்? - நிலாந்தன்
இதை ஏற்க எம்மில் பலருக்கு விருப்பமில்லை. கட்சிபேத அரசியலைத் தொடர்ச்சியாகச் செய்து, அக்கட்சி கைகாட்டும் சிங்கள பெளத்தன் ஒருவனுக்கு வாக்குப் போடவேண்டும் என்று கேட்கிறார்கள். கேட்டால் தமிழ் மக்களை இன்னும் அதளபாதாளத்திற்குள் தமிழ் வேட்பாளர் விழுத்திவிடுவாராம். ஆகவே மரியாதையாக ரணிலுக்கே தமிழகள் தமது வாக்குகளை மறவாது போடவேண்டுமாம். அருமை! இதுதான் உண்மை. தமது இருப்பையும், தாம் வாக்குகளை வாங்கிக் கொடுக்கவிருக்கும் சிங்கள பெளத்தன் ஒருவனது வெற்றியையும் நினைத்தே இவர்கள் கவலைப்படுகிறார்கள். இதுவும் ஒரு கோணம்.- ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
உண்மை அண்ணை, இங்கே நான் எழுதிய கருத்திற்கு நக்கலாக படம்போட்டது போல, முன்னர் ஒரு கருத்திற்கும் என்னை, மனித அழிவை விரும்புகின்ற, மக்கள் இறப்பதை விரும்புகின்ற ("சாவின் அரசன்") அந்நியன் படத்தில் வருவது போன்ற, முகம் இல்லாத, தலை முதல் கால்வரை முகமூடியணிந்த கைகளில் கொலை வாளினை ஏந்திய ஒரு உருவத்தினைப் போட்டு கேவலப்படுத்தினார்.. நாம் தமிழ் மக்களைக் கொல்ல அழைத்துச் செல்லவில்லை. மாறாக எதுவுமே பலனளிக்காத நிலையில் எம்மால் வேறு என்ன செய்யமுடியும் எனும் கோணத்திலேயே ஆயுதப் போராட்டம் பற்றிக் குறிப்பிட்டேன். அதை நாகரீகமாக, "இல்லை, அதுவும் சரிவராது" என்று சொல்லியிருக்கலாம். என்னை இரத்தப்பசி கொண்டவனாகக் காட்டியிருக்கத் தேவையில்லை. இப்போதும் அதேபோல, "நீ சொல்றதைச் சொல்லு, சனத்துக்குத் தெரியும் என்ன செய்வதெண்டு" என்கிற ரீதியில் இன்னொரு படம். ஆகவேதான் படம்போடுவதைக் காட்டிலும் எழுதலாம் என்று கூறினேன். உடனேயே சில மேதாவிகள் வந்துவிட்டார்கள். அரைத்த மாவை அரைப்பதைப் பார்க்கச் சகிக்காமலேயே கடந்துசெல்லத் தீர்மானித்தேன். கருத்தெழுதுங்கள், படம் வரையுங்கள், மற்றையவனை இகழாமல் அதைச் செய்யப் பாருங்கள்.- ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது குறித்த உங்களின் கருத்தென்ன அண்ணை? தமிழ் மக்கள் யாரை ஆதரிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அப்படி ஒருவரை தமிழர்கள் ஆதரிக்க வேண்டும் என்றால், எதற்காக என்றும் கூறமுடியுமா? அறிந்துகொள்ளத்தான் கேட்கிறேன்.- ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
- ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
கடந்து செல்கிறேன்.- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
இலங்கையரசாங்கம் முன்வைத்த தீர்வுத்திட்டத்தினை முற்றாக நிராகரித்து, நான்கு அம்சக் கோரிக்கையின் அடிப்படையிலான தீர்வினை கோரிய தமிழ்த் தரப்பு நான்காம் நாள் பேச்சுக்கள் பெரும் குழப்பத்திற்குள் நுழைந்தன. ஜெயவர்த்தன இன்னொரு சதியைத் திட்டமிட்டு அரங்கேற்றினார். பொலீஸாரைக் கொண்டு அரங்கேற்றப்பட்ட இச்சதியில் கொழும்பில் குண்டுத்தாக்குதலில் ஈடுபட வந்திருந்த ஈரோஸ் அமைப்பின் உறுப்பினர்களைத் தாம் கைதுசெய்திருப்பதாக ஜெயார் தெரிவித்தார். ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையாக சுற்றித்திருந்த இரு இளைஞர்களைக் கைதுசெய்து விசாரித்தவேளை அவர்கள் ஜனாதிபதியைக் கொல்வதற்காக ஈரோஸ் தலைமைப் பீடத்தால் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதை ஒத்துக்கொண்டதாக பொலீஸார் அறிவித்தனர். ஜெயாரின் திட்டத்தின்படி, கொழும்பு ஊடகங்களும் இச்செய்தியை பெரும் எடுப்பில் வெளியிட்டிருந்தன. இதனைச் செய்தியாக்கும்போது டெயிலி நியுஸ் காரியாலயத்தில் இருந்த உற்சாககத்தினை நேரடியாக நாண் கண்டேன். மறுநாள் ஆசிரியர்த் தலையங்கம் "முறியடிக்கப்பட்ட ஜனாதிபதி மீதான படுகொலை முயற்சி" என்று வெளியாகியிருந்தது. தன்மீதான இந்தப் பழியை சோடிக்கப்பட்ட புரளி என்று ஈரோஸ் தலைமைப்பீடம் அறிவித்தது. பொதுத் தபாலகத்திற்குச் சென்றுகொண்டிருந்த இரு அப்பாவிகளைக் கைதுசெய்து, கடுமையான சித்திரவதைகளின் பின்னர் பொய்யான வாக்குமூலம் ஒன்றினை கொடுக்க வைத்தே பொலீஸார் இந்த நாடகத்தினை ஆடுகிறார்கள் என்று ஈரோஸ் அமைப்பு விளக்கியிருந்தது. நான்காம் நாள் பேச்சுக்கள் ஆரம்பமாகிய வேளை, அரசாங்கத்தின் பொய்யான வதந்திகுறித்து ஈரோஸ் அமைப்பினரும் ஏனைய தமிழ்ப் பிரதிநிதிகளும் தமது ஆட்சேபணையைத் தெரிவித்தார்கள். "இது ஜெயாரின் புரளி" என்றும் அதனை அழைத்தார்கள். அன்றைய நாளின் பெரும்பகுதி யுத்தநிறுத்த மீறல்கள் குறித்து ஒருவரையொருவர் சாடுவதிலேயே கழிந்தது. யுத்தநிறுத்த மீறல்கள் குறித்த வாக்குவாதங்கள் முடிவடைந்த பின்னர் பேசிய ஹெக்டர் ஜெயவர்த்தன தான் முன்வைத்துள்ள யோசனைகளை அதிகாரப் பரவலாக்கத்திற்கான அடிப்படையாக வைத்து செயற்பட முடியும் என்று கூறினார். அதற்குப் பதிலளித்த தமிழ்த் தரப்பு, அதிகாரங்கள், அதிகாரப் பரவலாக்கத்திற்கான அலகு, அரசாங்கத்தின் கட்டமைப்பு என்பன குறித்த சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும் என்றும், தமிழர்கள் எதிர்பார்க்கும் அதிகாரங்களுக்கும், அரசால் முன்வைக்கப்படும் அதிகாரங்களுக்கும் இடையே பாரியளவு இடைவெளி காணப்படுவதாகவும் விமர்சித்தனர். பேச்சுக்கள் முறிவடைவதைத் தவிர்ப்பதற்காக இந்திய அரசாங்கம் தனது வெளிநாட்டமைச்சர் ரொமேஷ் பண்டாரியை திம்புவிற்கு அனுப்பியது. இரு தரப்பினருடனும் ரொமேஷ் பண்டாரி ஒன்றன் பின் ஒன்றாக பல சந்திப்புக்களை நடத்தினார்.தமிழர் தரப்புடன் பேசிய பண்டாரி, அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வு ஆலோசனையினை நிராகரிப்பதாகவும், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் அபிலாஷைகளை தீர்க்கக்கூடிய புதியதொரு தீர்வுத்திட்டத்துடன் அரசு வரவேண்டும் என்கிற கோரிக்கையினையும் முன்வைத்து அறிக்கையொன்றினை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார். இதன்மூலம் அன்று முறிவடைய இருந்த பேச்சுக்களை அவரால் நீட்டிக்க முடிந்தது. பேச்சுவார்த்தையின் ஐந்தாம் நாளான ஆடி 12 ஆம் திகதி தமிழ்ப் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து அரசு முன்வைத்திருக்கும் தீர்வுக்கான ஆலோசனைகளை நிராகரிப்பதாக அறிக்கையொன்றினை வெளியிட்டனர். அறிக்கை வெளியிடப்பட முன்னர் தமிழ் மக்களைஅவமானப்படுத்தும் விதமாக இலங்கைஅயரசாங்கம் தனது தீர்வு யோசனையினை முன்வைத்திருப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். அமிர்தலிங்கம் ஒருபடி மேலே சென்று, அரசு முன்வைத்திருக்கும் யோசனைகளை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறினார். தமிழ்ப் பிரதிநிதிகள் சார்பாக டெலோ அமைப்பின் சார்ள்ஸ் அறிக்கையினை சமர்ப்பித்தார். தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்களுக்கு தமிழரின் அபிலாஷைகள் குறித்த எமது கோரிக்கைகளை ஜனநாயக வழியில் புரியப்படுத்த முடியாமையினாலேயே நாம் ஆயுதம் தூக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். மேலும், எமது தேசியம் மீதான சிங்கள அரசுகளின் ஒடுக்குமுறையும், எம் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் அரச பயங்கரவாதமும், எம் மக்கள் மீதான இனவழிப்பும் அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் எம் மக்களுக்கான தர்க்கரீதியான ஒரே தீர்வு தனிநாடுதான் என்கிற நிலைமைக்கு எம்மைக் கொண்டுவந்து விட்டிருக்கிறது. இதன் தர்க்கரீதியான வெளிப்பாடே ஆயுதப்போராட்டம் என்றால் அது மிகையில்லை. ஆனாலும், இலங்கையரசாங்கம் நியாயமான, ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றினை முன்வைக்கும் பட்சத்தில் அமைதியான அத்தீர்வினை பரிசீலிக்க தமிழ் மக்கள் தயாராகவே இருக்கிறார்கள். ஏனென்றால், தமிழ் மக்கள் அமைதியினை விரும்பும் ஒரு மக்கள் கூட்டமாகும். சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்வு ஆலோசனைகள் எந்தவிதத்திலும் நேர்மையானதாகவோ, அமைதியை ஏற்படுத்தும் முகாந்திரங்களையோ கொண்டிருக்கவில்லை என்பதை எம்மால் உணர்ந்துகொள்ளமுடிகிறது. முதலாவதாக, சிறிலங்கா அரச பிரதிநிதிகள் குழுவின் தலைவர் தனது உரையில், இந்தத் தீர்வு ஆலோசனைகள் கடந்த வருடம் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் இலங்கையரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்ட ஆலோசனைகள் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். ஆனால், பின்வரும் காரணங்களுக்காக சர்வகட்சி மாநாட்டினை நாம் முற்றாக நிராகரித்திருக்கிறோம், முதலாவதாக, சர்வகட்சி மாநாட்டில் பங்குகொண்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, சர்வகட்சி மாநாடு குழப்பகரமான நிலையில் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டவுடன் வெளியிட்ட அறிக்கையில் அதிகாரம் மிக்க பிராந்தியம் எனும் அடிப்படையில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்விற்கு அருகில்க் கூட சர்வகட்சி மாநாட்டில் அரசால் முன்வைக்கப்பட்ட தீர்வு வரவில்லை என்பதைத் தெளிவாகக் கூறியிருந்தது. இரண்டாவதாக, ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பு என்கிற வகையில், நவ பாஸிஸ இலங்கையரசு, தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு இராணுவ ரீதியில் தீர்வினை வழங்கவே சர்வகட்சி மாநாட்டினை போர்வையாகப் பாவித்தது என்பதனை ஐயம் திரிபுற நம்புகிறோம். மேலும், ஈழத்திற்கான தேசியப் பிரச்சினையினை இலங்கையரசாங்கம் இதுவரையில் புரிந்துகொள்ளவில்லை என்பதையே அது இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு சுட்டிக் காட்டுகிறது. அதற்கான காரணங்களை நாம் முன்வைக்கிறோம், 1. அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வில் தமிழ் மக்கள் ஒரு தேசமாக அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால், தமிழ் மக்களால் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத மாவட்ட ரீதியிலான அதிகாரப் பரவலாக்க அலகினை அரசு முன்வைத்திருக்கிறது. 2. அரசு முனைத்திருக்கும் தீர்வு, தமிழ் மக்களினதோ அல்லது சிங்கள மக்களினதோ சுயநிர்ணய உரிமையினை புறக்கணித்திருப்பதுடன், சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ அல்லது அதையொத்த இன்னொரு வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ தீர்வினை மக்கள் முன் கொண்டுசெல்லும் வழிவகையினைக் கொண்டிருக்கவில்லை. மக்களின் விருப்பினை நிராகரித்திருக்கும் அரசாங்கம், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைக் கொண்டு அரசியல் சட்டத்தில் திருத்தத்தினைச் செய்யலாம் என்று கூறுகிறது.இப்படிச் செய்வதனூடாக மக்கள் மீது அரசியல் யாப்பின் அடைப்படையில் உருவாக்கப்படவிருக்கும் சர்வாதிகாரத்தைத் திணிக்க முயல்கிறது. ஆகவே, இந்த நிலையில் மேற்கொண்டு பேச்சுக்களில் ஈடுபடுவதில் பயனில்லை என்கிற நிலைப்பாட்டிற்கு நாம் வந்திருப்பதுடன், நாடு இன்றிருக்கும் இக்கட்டான நிலைக்குக் காரணமாகியிருக்கும் அரசாங்கமே தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நேர்மையானதும், அவர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதுமான தீர்வினை முன்வைக்க வேண்டும் என்றும் கோருகிறோம். நிரந்தர சமாதானத்தினைக் கருத்தில்க் கொண்டு, தமிழ் மக்களால் பரிசீலித்துப் பார்க்கக் கூடிய தீர்வொன்றுடன் மீண்டும் இலங்கையரச பிரதிநிதிகள் குழு பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்பவேண்டும் என்கிற தீர்க்கமான கோரிக்கையினை நாம் முன்வைக்கிறோம். ஜனாதிபதி ஜெயாரைப் படுகொலை செய்ய எத்தனித்ததாக தம்மீது முன்வைக்கப்பட்ட அரசின் குற்றச்சட்டிற்கெதிரான தனது அதிருப்தியினை ஈரோஸ் அமைப்பு எழுத்துமூல அறிக்கையொன்றின் ஊடாக வெளியிட்டது. இந்தியாவின் ரொமேஷ் பண்டாரி பேச்சுவார்த்தைக்குழுக்களுக்கான விருந்துபசராம் ஒன்றினை வழங்கினார். பேச்சுவார்த்தையின் இறுதிநாளான ஆடி 13 ஆம் திகதி அரச தரப்புப் பிரதிநிதிகளுடன் பேசிய தமிழ்த் தரப்பு தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய தீர்வொன்றுடன் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததுடன் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தீர்வு அமையவேண்டிய அடிப்படைகள் குறித்து தனது நிலைப்பாட்டினையும் முன்வைத்தது. பேச்சுவார்த்தைக் குழுக்கள் இணைந்து வெளியிட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திம்புப் பிரகடணம் இவ்வாறு அமைந்திருந்தது, தமிழ்த் தரப்பு முன்வைத்த பிரகடணம், தமிழ்த் தேசிய பிரச்சினைக்கான அரத்தபுஷ்ட்டியான தீர்வு பின்வரும் நான்கு அடிப்படை விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்று நாம் கருதுகிறோம், 1. இலங்கைத் தமிழர்களைத் தனியான தேசமாக அங்கீகரிப்பது 2. இலங்கையில் தமிழருக்கென்று தனியான தாயகம் இருப்பதை அடையாளம் காண்பதும் அதனை அங்கீகரிப்பதும் 3. தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிப்பது 4. இலங்கையில் வாழும் அனைத்துத் தமிழர்களினதும் குடியுரிமை மற்றும் அடிப்படை உரிமைகளை அங்கீகரிப்பது பல்வேறு நாடுகள் தமக்கு உகந்த செயற்திட்டங்கள் ஊடாக இந்த அடிப்படைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதனை உறுதிப்படுத்தியிருக்கின்றன. தமிழ் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் நிராகரிக்கப்பட்டமையினாலேயே அதற்குத் தீர்வாக தனிநாட்டினை முன்வைத்துப் போராடி வருகிறோம். தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வாக இலங்கையரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வினை எம்மால் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை திட்டவட்டமாகக் கூறிக்கொள்கிறோம். ஆகவே, 1985 ஆம் ஆண்டு ஆடி மாதம் 12 ஆம் திகதி நாம் வெளியிட்ட அறிக்கையின்படி இலங்கையரசாங்கம் இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு யோசனைகளை நாம் முற்றாக நிராகரிக்கிறோம். ஆனாலும், அமைதிக்கான வழிகளைத் தேடும் மக்கள் கூட்டம் எனும் அடிப்படையில், நாம் மேலே குறிப்பிட்ட நான்கு அடிப்படை அம்சங்களை உள்ளடக்கிய புதிய தீர்வு யோசனைகளை இலங்கையரசாங்கம் முன்வைக்கும் பட்சத்தில் அவற்றைப் பரிசீலிர்த்துப் பார்க்கத் தயாராக இருப்பதையும் இங்கு கூறிக்கொள்கிறோம்.- ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
- ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
நீங்கள் முதலில் சிங்கள அரசுகளின் தயவிலேயே தமிழ் மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்று கருதுவதை நிறுத்த வேண்டும். ஏனென்றால், தமிழர்களைச் சிங்கள அரசுகள் கைவிட்டு கிட்டத்தட்ட 76 வருடங்கள் ஆகிவிட்டது. சிங்கள அரசுகளுக்கு தமிழர்களின் நலன்களைக் காப்பததைத்தவிர வேறு தலையாய கடமையே இல்லை எனும் ரேஞ்சில் எழுதுகிறீர்கள். தமிழர்களின் வாழ்வாதாரமும், வளமான தாயகமும், மேய்ச்சல் நிலங்களும் நீங்கள் கூறும் அதே சிங்கள அரசுகளாலேயே காவுகொள்ளப்பட்டன. ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த காலத்திலிருந்தே வடக்கும், வன்னியும், கிழக்கின் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழான பகுதிகளும் இலங்கை அரசினதும், இராணுவத்தினதும் பூரண பொருளாதாரத் தடைக்குள்ளேயே இருந்துவந்தன. அதற்காக, அங்கிருந்த தமிழர்கள் பட்டிணியால் இறந்துவிடவில்லை. தமது கைகளில் இருந்த வளங்களைக் கொண்டு தமது வாழ்வாதாரத்தைப் பார்த்துக்கொண்டார்கள். வன்னியில் ஓரளவிற்கு தன்னிறைவை அவர்கள் ஒருகட்டத்தில் அடைந்திருந்தார்கள். 2005 முதல் 2009 வரையான காலப்பகுதியில் வன்னிமீது மகிந்த இறுக்காத தடையினையா இனிவரும் சிங்களத் தலைவர் இறுக்கப்போகிறார்? சரி, அதை விடுங்கள், 2020 - 2022 வரையான கொரோணாப் பகுதியில் மொத்த நாடுமே வீதிக்கு வந்தபோது வடக்கும் கிழக்கும் தம்மைத் தாமே பார்த்துக்கொண்டன. நிரந்தரமாகவே சிங்கள அரசுகளின் பொருளாதாரத் தடையினை முகம்கொடுத்துவரும் தமிழ்ச் சமூகம் தன்னை மீண்டும் சுய பொருளாதாரத்திற்கு மாற்றிக்கொள்ள அவர்களின் முன்னைய அனுபவம் கைகொடுத்தது. 80 களின் ஆரம்பத்திலிருந்தே புலம்பெயர் தமிழ்ச் சமூகம் தாயகத்தில் இருக்கும் உறவுகளுக்கு உதவியே வருகின்றன. கிட்டத்தட்ட 40 வருடங்களாக இது தொடர்கிறது. எப்போது நிற்கும் என்று கேட்டால் என்னிடம் பதில் இல்லை. வடக்கிற்கும் கிழக்கிற்கும் இடையே கிடைக்கும் புலம்பெயர் உதவிகளின் அள்வில் ஏற்றத்தாள்வு இருக்கிறது என்பதை நான் மறுக்கவில்லை. மலையகத் தமிழர்கள் நிச்சயமாக தமிழ் வேட்பாளருக்கு வாக்களிக்கப்போவதில்லை. அவர்களது தலைமை நிச்சயம் அவர்களை தான் முடிவெடுக்கும் சிங்கள வேட்பாளருக்கே வாக்களிக்கும்படி பணிக்கும். இலங்கைத் தமிழர்களுக்கும் மலையகத் தமிழர்களுக்குமான அரசியல் தொண்டைமானின் பிரிவிலிருந்தே வேறு பாதையில் பயணிக்கத் தொடங்கிவிட்டன. ஆகவே, புதிதாக வரும் சிங்கள ஜனாதிபதி அவர்களை இக்காரணத்திற்காக வஞ்சிப்பார் என்று நினைக்கவில்லை. உங்களுக்கு ஓவியம் வரையும் திறமை இருப்பது நாம் எல்லோரும் அறிந்ததே. அதற்காக மற்றையவர்களின் கருத்துக்களுக்கு ஓவியம் வரைந்து பதிலளிக்கவேண்டும் என்று கட்டாயம் இல்லை. முடிந்தால் எழுதுங்கள்.- ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
நிச்சயமாக தமிழருக்கும் பாதிப்பு இருக்கும். ஆனால், அதைச் சரிசெய்ய புலம்பெயர் தமிழரின் உதவியிருக்கிறது, பெரும்பாலான தமிழர்களுக்கு, ஓரளவு காலத்திற்காவது. 2004 - 2005 இல் நடந்தது உண்மை, மறுப்பதற்கு எதுவுமில்லை. ரணிலையோ அல்லது சஜித்தையோ ஆதரிக்காமல் விடுவதாலோ அல்லது தமிழ் வேட்பாளரை ஆதரித்து அநுர ஆட்சிக்கு வந்தாலோ, தமிழர் அடையப்போகும் அதியுச்ச பாதிப்பு என்ன? பொருளாதார நிலை சரியும் என்பதைத் தவிர, ஏனைய சிங்களத் தலைவர்களைக் காட்டிலும் அநுர புதிதாக தமிழருக்கு எவ்வகையான அழிவினை ஏற்படுத்திவிடப்போகிறார்? சிங்கள அரசியல்வாதிகளில் நல்லவர் கெட்டவர் என்று வேறுபாடு இருக்கின்றதா? என்னைப்பொறுத்தவரை ரணிலோ, சஜித்தோ, அநுரவோ, எல்லோருமே ஒரே வகையானவர்கள்தான். இவர்களில் எவர் ஆட்சிக்கு வந்தாலும் எமது வாழ்வு மீளப்போவதில்லை. ஆனால், இவர்களில் எவரையுமே நாம் ஆதரிக்கவில்ல என்கிற செய்தியாவது மிச்சமிருக்கும். உண்மை- ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
மேற்குலகின் நண்பனான ரணில் 2005 இல் புலிகளால் தோற்கடிக்கப்பட்ட பின்னர் பதவிக்கு வந்த மகிந்தவுடன் சேர்ந்து அதே மேற்குலகு எம்மை அழிக்கவில்லையா? அதேபோல, ரணில் இம்முறை தோற்கடிக்கப்பட்டாலும் அநுரவுடனோ அல்லது சஜித்துடனோ சேர்ந்து மேற்குலகு வேலை செய்யும்.- ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
2019 தேர்தல் இத்தேர்தலில் பிரபல சிங்கள பெளத்த இனக்கொலையாளியான கோட்டாபய ராஜபக்ஷவுக்கெதிராகவும், இன்னொரு பெயர்பெற்ற சிங்கள இனவாதியான பிரேமதாசவின் மகனும், பிரேமதாசவை ஒத்த இனவாதியுமான சஜித் பிரேமதாசவுக்குத் தமிழர்கள் வாக்களித்த விதம் கோட்டாபய ராஜபக்ஷ மட்டக்களப்பு : 12.6% யாழ்ப்பாணம் : 6.2% வன்னி : 12.2% திருகோணமலை : 23.3% சராசரி : 13.5% சஜித் பிரேமதாச மட்டக்களப்பு : 78.7% யாழ்ப்பாணம் : 83.36% வன்னி : 82.1% திருகோணமலை : 72% சராசரி : 79.04% அன்று தமிழர்கள் வாக்களித்த அதே சஜித் இன்று தமிழர்களுக்கு எதனையும் கொடுக்கமாட்டேன், பிரிவினையை அனுமதிக்கமாட்டேன், எவராவது மீளவும் ஆயுதப்போராட்டம் குறித்துப் பேசினால் அதனை முளையிலேயே கிள்ளி எறிவேன் என்று இனவாதம் பேசி வருகிறான். இவர்களுள் தமிழர்கள் ஆதவளிக்கக் கூடிய வகையில் இருப்பது யார்? எவர் சிறந்தவர்? தெரியாத பேயை விடவும், தெரிந்த பிசாசு பரவாயில்லை என்று வாக்களிக்கப்போகிறோமா அல்லது, பேயும் வேண்டாம் பிசாசும் வேண்டாம், எமக்கென்று ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி வாக்களிக்கப்போகிறோமா என்பதை தமிழ் மக்கள் தீர்மானிக்க வேண்டும் !- ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
2015 தேர்தல் இனக்கொலையாளியான மகிந்த ராஜபக்ஷவுக்கெதிராகவும், அதே இனக்கொலை யுத்தத்தில் அவனது பிரதமராகவும், இறுதிப்போரின் இறுதிநாட்களின்போது மகிந்த வெளிநாடு சென்றிருந்தவேளை நாட்டின் ஜனாதிபதிப் பொறுப்பினைக் கவனித்துக்கொண்டவனுமான மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாகவும் தமிழ் மக்கள் வாக்களித்த விதம் மகிந்த ராஜபக்ஷவுக்கான வாக்குகள் யாழ்ப்பாணம் : 21.8% மட்டக்களப்பு : 16.2% திருகோணமலை : 26.6% வன்னி : 19% சராசரி :20.9% மைத்திரிபால சிறிசேனவுக்கான வாக்குகள் யாழ்ப்பாணம் : 74.4% மட்டக்களப்பு : 81.6% திருகோணமலை : 71.8% வன்னி : 78.5% சராசரி : 76.6% 2015 முதல் 2019 வரையான காலப்பகுதியில் தமிழர்கள் தெரிவுசெய்த ஜனாதிபதியான மைத்திரியும், தமிழர்கள் தெரிவுசெய்த பிரதமரான ரணிலும் தமிழர்களுக்கு என்ன செய்தார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.- ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
2010 தேர்தல் ஒரே இனவழிப்பில் தோளுக்குத் தோள் நின்று தமிழர்களைக் கொன்றொழித்த இரு இனக்கொலையாளிகளில் ஒருவனான மகிந்தவுக்கு எதிராகவும், அவனது இராணுவத் தளபதியான சரத் பொன்சேக்காவுக்கு ஆதரவாகவும் தமிழர்கள் வாக்களித்த விதம் கீழே, மகிந்தவுக்கான தமிழரின் வாக்குகள் யாழ்ப்பாணம் : 24.7% வன்னி : 27.3% மட்டக்களப்பு : 26.2% திருகோணமலை : 43% சராசரி : 30.3% சரத் பொன்சேகாவுக்கான வாக்குகள் யாழ்ப்பாணம் : 63.8% வன்னி : 66.8% மட்டக்களப்பு : 68.93% திருகோணமலை : 54% சராசரி : 63.4% இத்தேர்தலில் இனக்கொலையாலியான சரத் பொன்சேக்காவிற்கு வக்களித்ததன் மூலம் தமிழர்கள் சொல்லிய செய்தி : சரத் பொன்சேக்காவின் கூற்றுப்படி 1. இனக்கொலையென்றும், போர்க்குற்றங்கள் என்றும் எதுவுமே நடைபெறவில்லை என்பதை எனக்கு வாக்களித்ததன் மூலம் தமிழர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். 2. புலிகளை அழிக்க நான் தலைமையேற்று நடத்திய யுத்தத்தினை தமிழ் மக்கள் வரவேற்றிருக்கிறார்கள்.- ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
2005 தேர்தல் ஜனாதிபதி : மகிந்த ராஜபக்ஷ (தமிழர்கள் வன்னியில் வாக்களிக்காது விட்டமையினால் தெரிவுசெய்யப்பட்டவர்) யாழ்ப்பாணம் : 25% வன்னி : 20% மட்டக்களப்பு : 18.8% அம்பாறை : 43% திருகோணமலை : 37% சராசரி : 28.76% இதே தேதலில் தமிழர்களால் ஆதரவளிக்கப்பட்ட வேட்பாளர் ரணிக்குக் கிடைத்த வாக்குகள் யாழ்ப்பாணம் : 70% வன்னி : 77% மட்டக்களப்பு : 79.5% அம்பாறை : 55% திருகோணமலை : 61 % சராசரி : 68.5% ஒரு சிங்கள வேட்பாளருக்கு வாக்களிக்காது, இன்னொருவர் ஆட்சிக்கு வர உதவியமையினால் தமிழர்கள் சரித்திரத்தில் கண்டிராத அழிவையும், அவலங்களையும், ஆக்கிரமிப்பையும் இவ்வாட்சிக் காலத்தில் கண்டார்கள்.- ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
1994 ஆம் ஆண்டு மற்றும் 1999 ஆம் ஆண்டு ஜனாதிபதி : சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க யாழ்ப்பாணம் : 96.35% (1994) & 46.65 % (1999) வன்னி : 85.30% (1994) & 25.8% (1999) மட்டக்களப்பு : 87.3% (1994) & 34.7% (1999) திருகோணமலை : 71.6% (1994) & 45% (1999) சராசரி : 85.13% (1994) & 38% (1999) சந்திரிக்காவினால் தமிழர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளின் பட்டியலில் ஒரு சில, 1. முன்னேறிப்பாய்தல் படுகொலைகள் 2. நவாலி சென் பீட்டர்ஸ் தேவாலயப் படுகொலை 3. யாழ்ப்பாண நகரைக் கைப்பற்றியபோது அந்நிய நாடொன்றினைக் கைப்பற்றிய நிகழ்வினை ஒத்த விதத்தில் அனுருத்தை தனது மருமகளும் இராணியுமான சந்திரிக்காவிடம் யாழ்ப்பாணத்திற்கான திறவுகோலினைக் கையளித்தார். 4. செம்மணிப் புதைகுழிகள் 5. கிளிநொச்சி மீதான ஆக்கிரமிப்புப் போர் 6. ஜயசிக்குரு ஆக்கிரமிப்புப் போர் 7. புதுக்குடியிருப்புப் பாடசாலைச் சிறுவர்கள் படுகொலை 8. படுகொலை செய்யப்பட்ட 20,000 தமிழர்கள்- ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
1956 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரையான 53 ஆண்டுகளில் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை 154,022 இலிருந்து 253,818 ஆக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இவற்றுள், 1956 ஆம் ஆண்டிலிருந்து 2001 ஆம் ஆண்டு வரையான 45 ஆண்டுகளில் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 79,155 பேர் ஆகும். இவர்களுள் 54,044 தமிழர்களின் கொலைகள் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதோடு, மீதி 25,266 பேர் காணாமலாக்கப்பட்டிருக்கிறார்கள். 2002 ஆம் ஆண்டிலிருந்து 2008 ஆம் ஆண்டுவரையான ஆறுவருட காலப்பகுதியில் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 4,867 பேர். இவர்களுள் 3,545 பேரின் கொலைகள் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதுடன் மீதி 1,322 பேர் காணாமலாக்கப்பட்டிருக்கிறார்கள். 2009 ஆம் ஆண்டின் தை மாதம் முதல் வைகாசி வரையான ஐந்து மாத காலப்பகுதியில் மட்டும் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 169,796 என்று நீதிக்கும், சமாதானத்திற்குமான சர்வதேச மையம் கூறுகிறது. இக்காலத்தில் கொல்லப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 70,000 இலிருந்து 146,000 ஆக இருக்கலாம் என்று ஐக்கிய நாடுகள் சபையினாலும் மற்றும் முன்னாள் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையினாலும் மதிப்பிட்டிருக்கிறது. 1956 ஆம் ஆண்டிலிருந்து 2004 ஆம் ஆண்டு வரையான 48 வருட காலத்தில் காயப்படுத்தப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை குறைந்தது 61,132 ஆக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதே காலப்பகுதியில் இலங்கை இராணுவத்தாலும், சிங்களப் பொதுமக்களாலும் பாலியல் வன்புணர்வுள்ளாக்கப்பட்ட தமிழ்ப் பெண்களின் எண்ணிக்கை 12,437 பேர் என்று பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. ஆனால், 2005 இலிருந்து 2009 வரையான காலப்பகுதியிலேயே அதிகளவான உயிரிழப்புக்களும், காணாமற்போதல்களும், பாலியல் வன்புணர்வுகளும், இடப்பெயர்வுகளும் நடைபெற்றிருக்கின்றன. மேலும் 112,246 தமிழர்கள் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக முறைப்பாடு செய்யப்பட்டிருப்பதுடன், 24 இலட்சம் தமிழர்கள் இடம்பெயர்வுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர். தமிழ் மக்கள் மீதான திட்டமிட்ட இனக்கொலையில் இலங்கையை ஆட்சிசெய்த அனைத்து சிங்களத் தலைவர்களும் தமது பங்கினை நல்கியிருக்கிறார்கள். இவர்களுள் எவருமே விதிவிலக்கில்லை. டட்லி சேனநாயக்கா, பண்டாரநாயக்கா, சிறிமா, ஜெயார், பிரேமதாசா, டிங்கிரிபண்டா விஜேதுங்க, சந்திரிக்கா, மகிந்த, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய, ரணில் என்று அனைவருமே எம்மீதான இனக்கொலையினை நேரடியாக நடத்தியவர்கள். இவர்களைத் தவிரவும் சிங்கள் இடதுசாரி இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி தொடர்ச்சியாகவே தமிழ் மக்கள் மீதான வன்மத்தைக் கக்கி வருவதுடன், தமிழ மக்களின் தாயக் கோட்பாட்டையும் நிர்முலமாக்க முயன்று வருகிறது. நாட்டில் இருப்பது பொருளாதாரப் பிரச்சினையே அன்றி, இனப்பிரச்சினை இல்லையென்றும், தமிழர்களுக்கென்று தனியான பிரச்சினைகள் என்று நாட்டில் எதுவுமே இல்லையென்றும் அது வாதிடுகிறது. ஆகவே, இப்படியான, தமிழ் மக்களின் இனவழிப்பை தமது தாரக மந்திரமாக ஏற்று செயற்பட்டு வரும் எந்தச் சிங்களத் தலைவரையும் தமிழர்கள் எதற்காக இன்னுமொருமுறை தெரிவுசெய்வதில் வாக்களிக்க வேண்டும் என்பதே எனது கேள்வி.- ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
சிங்கள ஜனாதிபதியொருவரே மீளவும் வரப்போகிறார் எனும்போது, அவர்களில் எவரையும் தெரிவிசெய்வதில் தமிழர்கள் அடையப்போகும் நண்மையென்ன? ஒரு சிங்கள ஜனாதிபதியிடமிருந்து, இன்னொரு சிங்கள ஜனாதிபதி தமிழரைப் பொறுத்தவரையில் எந்தவகையில் வேறுபடப்போகிறார்? தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டச் சரித்திரத்தில் "நல்ல" சிங்கள ஜனாதிபதியாக இதுவரை இருந்தவர்களும் இல்லை, இனிமேலும் இருக்கப்போவதில்லை. அவர்கள் ஆட்சிக்கு வருவதே சிங்கள பெளத்தத்தைப் பாதுகாக்கவும், அதற்குத் தொண்டாற்றவும்தான். சிவாஜிலிங்கத்தை சிவாஜிலிங்கமாகவும், குமார் பொன்னம்பலத்தைக் குமார் பொன்னம்பலமாகவும் தமிழர்கள் பார்த்ததால்த்தான் அவர்களுக்கான ஆதரவு அன்று கிடைக்கவில்லை. தம்மை பொதுவான தமிழ் வேட்பாளராக அடையாளப்படுத்தப் போதுமானவற்றை அவர்களும் செய்யவில்லை, தமிழ் மக்கள் முன்னால் இதற்கான தர்க்கரீதியிலான கருத்துருவாக்கத்தையோ அல்லது இன்று ஏற்பட்டிருப்பதுபோன்ற மக்களின் ஈடுபாட்டையோ அன்று அவர்களால் செய்ய முடியவில்லை. ஆகவே தான் சிவாஜிலிங்கத்தின் முயற்சி ஏளனமாகப் பார்க்கப்பட்டதுடன், குமார் பொன்னம்பலத்தின் முயற்சி கொழும்புத் தமிழர்களுடன் மட்டுமே சுருங்கிவிட்டது என்று நினைக்கிறேன்.- ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
மிகச்சரி. இரண்டுமே ஒரு செய்தியைத்தான் சொல்கின்றன. அதாவது, சிங்கள ஜனாதிபதியொருவரில் தமிழர்களுக்கு நம்பிக்கையில்லை என்பது. ஆனால், இவை இரண்டுமே சிங்கள ஆளும்தரப்பிற்கும் சிங்கள் மக்களுக்கும் ஓரளவிற்கு அதிர்ச்சியையோ , எரிச்சலையோ கொடுக்கவல்லன. தேர்தல்ப் பகிஷ்கரிப்பு என்பது முன்னர், 2005 இல் பரீட்சிக்கப்பட்டதுதான். அதனால் ஏற்பட்ட பின்விளைவுகள் குறித்து பேசவேண்டிய தேவையில்லை. ஆனால், ஒருங்கிணைந்த தமிழ் வேட்பாளர் என்பது புதியது. சிவாஜிலிங்கமோ, குமார் பொன்னம்பலமோ தமிழர்களுடன் இதுகுறித்துச் சரியான வகையில் கருத்துருவாக்கம் ஒன்றினைச் செய்தார்களா என்பது சந்தேகமே. தமிழர் வேட்பாளர் என்றபோதும் கூட, தம்மை முன்னிறுத்தி அவர்கள் வாக்குக் கேட்டது தமிழர்களின் கவனத்தை பெரிதாகப் பெறவில்லையென்றே எண்ணத் தோன்றுகிறது. இருக்கலாம். ஆனால், தமிழர்களுக்கு இன்னமும் பிரச்சினை இருக்கிறது, அவை இன்றுவரை தீர்க்கப்படவில்லை, ஆகவேதான் சிங்களத் தேசிய அரசியலில் இருந்து அவர்கள் விலகி நிற்கிறார்கள் என்கிற செய்தியை நாம் சொல்லமுடியும். ஏனென்றால், 2009 இற்குப் பின்னரான 15 வருடத்தில் எமது அவலங்கள் குறித்துச் சர்வதேசம் பேசுவதை முற்றாக நிறுத்தியிருப்பதாகவே தெரிகிறது.- ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
Why A Tamil Common Candidate In The Presidential Election? - Colombo Telegraph- ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
சிங்கள ஜனாதிபதி : ரணசிங்க பிரேமதாச ஆட்சிக்காலம் : 1988 - 1993 தமிழர்கள் அளித்த வாக்குகள் மாவட்ட ரீதியாக மட்டக்களப்பு : 51 % யாழ்ப்பாணம் : 28.034% திருகோணமலை : 45.64% வன்னி : 55.82 % சராசரி : 45.11 % 1988 இலிருந்து 1993 வரையான காலப்பகுதியில் ரணசிங்க பிரேமதாசவினால் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 5100 + https://en.wikipedia.org/wiki/List_of_massacres_in_Sri_Lanka- ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
1985 ஆம் ஆண்டு தமிழர் தாயகத்தில் ஜெயாரினால் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை : 1690 + https://en.wikipedia.org/wiki/List_of_massacres_in_Sri_Lanka 1986 ஆம் ஆண்டு தமிழர் தாயகத்தில் ஜெயாரினால் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை : 720 + https://en.wikipedia.org/wiki/List_of_massacres_in_Sri_Lanka 1987 ஆம் ஆண்டு தமிழர் தாயகத்தில் ஜெயாரினால் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை : 270 + https://en.wikipedia.org/wiki/List_of_massacres_in_Sri_Lanka - ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.