Jump to content

ரஞ்சித்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    8740
  • Joined

  • Last visited

  • Days Won

    103

Everything posted by ரஞ்சித்

  1. இலங்கையின் சிறப்புப் படைப்பிரிவிற்குப் பயிற்சி வழங்கியதே அமெரிக்காவின் கிரீன் பெரெட் எனப்படும் சிறப்புப்படைப்பிரிவு. அதுமட்டுமல்லாமல் புலிகளின் கடற்கலங்களின் தாக்குதல் திறனுக்கு நிகராக, அல்லது மேம்படுத்த டோராக்களில் 30 மி மீ கனொன் ரக பீரங்கியைப் பொருத்தும்படி ஆலோசனை வழங்கியது மட்டுமல்லாமல், தானே இலவசமாகவும் பொருத்திக்கொடுத்தது. புலிகளைத் தடைசெய்தது முதல் தனது வால்பிடிக்கும் நாடுகளையும் தடைசெய்ய வைத்தது. புலிகளின் உதவியாளர்களை ஆயுதம் விற்கும் தரகர்கள் என்கிற போர்வையில் சிக்கவைத்துக் கைதுசெய்ததுடன் புலிகளின் வெளிநாட்டு வங்கிக் கணக்குளையும் முடக்கிப் போட்டது. இன்றுவரை புலிகளை பயங்கரவாதிகளாக தடைசெய்து வைத்திருப்பது. இவை எல்லாமே அமெரிக்கதான். இதில் புலநாய்வுத்தகவல்களை வழங்காது விட்டதென்று எதிர்பார்த்தால் அது முட்டாள்த்தனம். அமெரிக்காவிற்கும் மனிதவுரிமைக்கும் சம்பந்தமில்லை. சோசலிசம் குறித்த புலிகளின் ஆரம்பகால நிலைப்பாடும், இந்தியாவின் தயவில் தமிழ் ஆயுதக் குழுக்கள் அப்போது இயங்கியதும் தமிழ்ப் போராளிகளை அமெரிக்கா தனது எதிரிகளாகப் பார்கக் காரணமாக இருந்திருக்கலாம். அலன் தம்பதிகளின் கடத்தல் இதனை உறுதிப்படுத்தியிருக்கலாம். ஐ நா வை தனது எண்ணத்திற்கேற்ப இழுக்கும் அமெரிக்கா தலைமையிலான நேட்டொவும், தம்பக்கத்திற்கு இழுக்கும் ரஸ்ஸிய சீனத் தரப்பும், அதனை ஒரு பலமற்ற வெற்று சம்பிரதாய அமைப்பாக மாற்றியிருக்கின்றன. அமெரிக்கா ஜனநாயக விரோதி, விடுதலைக்குப் போராடும் மக்களின் விரோதி என்பதுபோன்றே ரஸ்ஸியாவினதும் சீனாவினதும் செயற்பாடுகளும். இதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. முடிவாக, அலி சப்ரி சொல்ல மறந்த கதை ஒன்றிருக்கிறது. அமெரிக்காவின் உளவுத்தகவல்களால் மட்டுமே புலிகளின் ஆயுதக் கப்பல்கள் அழிக்கப்படவில்லை. இந்திய கடற்படையும், விமானப்படையும் இதில் ஆற்றியிருக்கும் பங்கு மிகப்பெரியது. இதனை ஏனோ சப்ரி சொல்ல மறுத்துவிட்டார்.
  2. போராட்டத்துடன் தன்னை இணைத்துக்கொண்ட அன்டன் பாலசிங்கம் *************************************************************************************************** செய்திக்குறிப்பு : திரு சபாரட்ணம் அவர்களுக்கு அவரது வாசகர் ஒருவர் அனுப்பிய தகவல் ஒன்றினை சபாரட்ணம் இணைத்திருந்தார். அதன் விபரங்கள் கீழே. 1978 முதல் 1979 வரையான காலப்பகுதியில் புலிகளும் டெலோ அமைப்பும் இளைஞர்களுக்கான மென்பந்து கிரிக்கெட் ஆட்டங்களையும், உதைபந்தாட்டங்களையும் வட மாகாணத்தில் ஒழுங்கு செய்திருந்தனர். கல்வி உயர்தரப் பரீட்சை நடந்துவந்த காலப்பகுதியில் வடமராட்சியின் வதிரி, துன்னாலை மற்றும் கரணவாய் ஆகிய பகுதிகளில் இந்த ஆட்டங்கள் நடந்தன. யாழ்ப்பாணம் மற்றும் அதனோடு அண்டிய பகுதிகளிருந்து வந்த அணிகளுடன் வடமாராட்சி அணிகள் போட்டிகளில் கலந்துகொண்டனர். இந்தப் போட்டிகளில் கலந்துகொண்ட முக்கியமானவர்களில் பொன்னமான் (குகன் - யோகியின் சகோதரர்) யாழ் இந்துக்கல்லூரியில் பயின்றுவந்த திறமையான கிரிக்கெட் வீரர். அப்படியான போட்டியொன்றில் நான் பிரபாகரனைக் கண்டேன். போட்டியின் பின்னர் வீரர்களும், பார்வையாளர்களும் கலந்துரையாடுவதுடன் உணவுவகைகளையும் பகிர்ந்துகொள்வது வழக்கம். இப்படியான கலந்துரையாடல்களில் அரசியலும் வழமையாக இடம்பெறுவதுடன் ஒரேவகையான கருத்தினைக் கொண்டவர்கள் ஒன்றிணைந்து பயணிப்பதும் வழமையானது. கடல்ப்புறா எனும் சரித்திர நாவல் சோழர்களின் பெருமையினைப் பற்றியும், அவர்களின் கடலறிவு பற்றியும் பேசுகிறது. இந்த நாவலின்ன் பெரும்பகுதி கடாரம் எனப்படும் பகுதியினை மையப்படுத்தியே கூறப்படுகிறது. மேலும், அகூதா எனும் பிரபலமான பெயர் ஒன்றும் இக்கதையில் கூறப்பட்டிருக்கிறது. திரு பிரபாகரன் இந்த நாவலை வாசித்திருந்தார். சோழர்களின் கடல்வலிமை பிரபாகரனை மிகவும் கவர்ந்திருந்தது. இதனாலேயே கேர்ணல் சங்கர் முதலாவது கப்பலை புலிகளுக்காக அமைத்தபோது அதற்கு பிரபாகரன் கடல்ப்புறா என்று பெயரிட்டார். பின்னாட்களில், 1987 ஆம் ஆண்டு புலிகளின் மூத்த தளபதிகளான லெப்டினன்ட் கேணல்கள் குமரப்பாவும் புலேந்திரனும் கடல்ப்புறாவில் பயணித்துக்கொண்டிருந்தவேளை இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர். நான் இந்தச் சம்பவம் பற்றிய அனைத்துத் தகவல்களையும் நன்கு அறிந்திருந்தேன். அதுலத் முதலியுடன் இக்காலப்பகுதியில் அடிக்கடி தொடர்புகொண்டு வந்திருந்தேன். அதுபற்றிய தகவல்களை இங்கே தருகிறேன், குமரப்பாவின் தற்கொலையோடு தொடர்புபட்ட விடயம் ஒன்றைப்பற்றியும், அது என்னை எவ்வளவு தூரத்திற்குப் பாதித்திருந்தது என்பது பற்றியும் கூறுகிறேன். காங்கேசந்துறை சீமேந்துத் தொழிற்சாலையில் பொறியியலாளராகப் பணியாற்றிவந்த ஒருவரின் மனைவி தனது கணவருக்கு என்ன நடந்தது என்பற்றி அறிந்துகொள்ள டெயிலி நியூஸ் காரியாலயத்திற்கு வந்திருந்தார். மூத்த ஆசிரியர் மணிக் டி சில்வா அவரை என்னிடம் அழைத்து வந்திருந்தார். அந்தப்பெண் எனக்கு முன்னால் அமர்ந்துகொண்டார். நான் யாழ்ப்பாண அரசாங்க அதிபரைத் தொடர்புகொண்டு கேட்டபோது, அந்த இளம் பொறியியலாளர் கொல்லப்பட்டு விட்டதாகக் கூறினார். அந்த பொறியியலாளரை நான் கண்டிருக்கிறேன், கைத்தொழில் அமைச்சரான சிறில் மத்தியூ காங்கேசந்துறைக்கு விஜயம் செய்தவேளை நானும் அவருடன் சென்றபொழுது அந்தப் பொறியியலாலறைச் சந்தித்திருந்தேன். அவர் இறந்த செய்தி எனக்குக் கண்ணீரை வரவழைத்தது. ********************************************************************************************* இனப் பூசலின் அரசியல் 1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் மூலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தன்னைப் பலப்படுத்திக்கொண்ட ஜெயவர்த்தனவின் பலம் சிறிமாவை மேலும் பலவீனப்படுத்தி மக்கள் முன் அவரது நம்பகத்தன்மையை வலுவிழக்கப்பண்ணியதன் மூலம் இன்னும் பலமடைந்து வந்தது. அவரது அடுத்த இலக்காக இருந்தது இரண்டாவது தடவையும் ஜனாதிபதியாகுவதுதான். புதிய அரசியலமைப்பின் மூலம் அவர் நாட்டின் தலைவராகவும், அரசாங்கத்தின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட தலைவராகவும், முப்படைகளின் பிரதான கட்டளையிடும் தளபதியாகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகவும் தன்னை நிலைப்படுத்திக்கொண்டார். 1978 ஆம் ஆண்டு பங்குனி 20 ஆம் திகதி விசேட விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமித்து சிறிமாவின் அரசியல் நம்பகத்தன்மையினை வெகுவாக அழித்திருந்தார். 1970 இலிருந்து 1977 வரையான காலப்பகுதியில் பிரதமராக இருந்த சிறிமா அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டார் என்று ஜெயவர்த்தன குற்றஞ்சாட்டியிருந்தார். அவரது முதலாவது பதவிக்காலம் 1960 இலிருந்து 1965 வரை நடைபெற்றிருந்தது. அவருக்கெதிராக முன்வைக்கப்பட்டிருந்த முக்கியமான குற்றச்சாட்டு என்னவென்றால், அளவுக்கதிகமான விவசாயக் காணிகளை வைத்திருக்கும் நிலச் சுவாந்தர்களிடமிருந்து அவற்றினை கையகப்படுத்தி மக்களுக்குப் பகிர்ந்தளிக்கும் சட்டத்தினை சிறிமா கொண்டுவரவிருந்த சமயத்தில் தனக்குச் சொந்தமான தென்னங்காணிகளின் ஒருபகுதியினை அவர் தனியாருக்கு விற்றிருந்தார் என்பது. இதனால் அவரை ஒரு எமாற்றுப்பேர்வழி என்று மக்கள் அக்காலத்தில் தூற்றி வந்திருந்தனர். ஜே ஆர் இனால் நியமிக்கப்பட்ட மூன்று நீதிபதிகளான வீரரட்ண, சர்வானந்தா, அல்விஸ் ஆகியோர் அடங்கிய ஆணைக்குழுவினருக்கு, ஆணைக்குழு அமைக்கப்பட்ட ஆண்டிற்கு முன்னதாக நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவம் ஒன்றினை விசாரிக்கும் அதிகாரம் இல்லையென்று சிறிமா தாக்கல் செய்த வழக்கினை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. ஆனால், சிறிமா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்க தன்னாலான சகல முயற்சிகளையும் மேற்கொண்ட ஜெயவர்த்தன, நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரங்களில் மாற்றங்களைக் கொண்டுவந்தார். 1978 ஆம் ஆண்டு கார்த்திகை 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஜே ஆர் முன்வைத்த திருத்தத்தினை அமைச்சரவை ஏற்றுக்கொண்டது. இதன்மூலம் நிறைவேற்றதிகாரம் மிக்க ஜனாதிபதியினால் அமைக்கப்படும் விசேட விசாரணைக் குழுக்களின் தீர்ப்புக்களுக்கெதிராக மேல்முறையீடு செய்யமுடியாது என்ற திருத்தம் அரசியல் யாப்பில் இணைக்கப்பட்டது. 1982 இல் ஜெயவர்த்தனவினால் அரசியல் யாப்பில் சேர்க்கப்பட்ட ஜனாதிபதி விசாரணைக்குழு பற்றிய சட்டத் திருத்தம் தன்னை அடுத்துவரவிருந்த ஜனாதிபதித் தேர்தலில் பங்கெடுக்காது தடுக்கவே என்று கடுமையாகக் குற்றஞ்சாட்டிய சிறிமா, இந்த விசாரணைகளில் பங்குகொள்வதை நிராகரித்திருந்தார். தனது காரணத்தை விவரித்து சிறிமா எழுதிய கடிதத்தினை உதாசீனம் செய்த விசாரணை ஆணைக்குழு அவரது பிரசன்னம் இன்றியே விசாரணைகளை நடத்தினர். மூன்று நீதிபதிகளடங்கிய குழு, சிறிமா தனது அதிகாரத்தினைத் துஷ்பிரயோகம் செய்திருந்தார் என்று தீர்ப்பளித்திருந்தனர். 1980 ஆம் ஆண்டு புரட்டாதி 24 ஆம் திகதி பாராளுமன்றம் இந்த ஆணைக்குழுவின் தீர்ப்பினை முழுமையாக ஏற்றுக்கொண்டது. ஜோன் கொத்தலாவலை முன்னாள் பிரதமர் ஜோன் கொத்தலாவலை உட்பட பல பிரமுகர்களின் எதிர்ப்பிற்கு மத்தியிலும் சிறிமாவுக்கெதிரான சிவில்த் தடைகளை பாராளுமன்றத்தின் ஆதரவுடன் ஜெயவர்த்தன நடைமுறைப்படுத்தினார். சாதாரண பொதுமகன் ஒருவருக்கிருக்கும் உரிமைகள் பறிக்கப்பட்ட சிறிமா 7 வருடங்கள் அவதிப்பட்டிருந்தார். சிறிமாவுக்கெதிரான உரிமை மறுப்பு நடவடிக்கைகளை அமிர்தலிங்கம் கடுமையாகக் கண்டித்திருந்தார். ஆனால், சிறிமாவின் உரிமைகளுக்கெதிரான தீர்மானம் 139 இற்கு 19 வாக்குகள் என்கிற அடிப்படையில் பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும், சுதந்திரக் கட்சியும் எதிர்த்து வாக்களித்தன. சிறிமாவின் மீதான உரிமை மறுப்பு நடவடிக்கை இரு கட்சி ஜனநாயக அரசியலினை ஒரு பக்கமாகச் சரிக்கவே எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றால் அது மிகையில்லை. சிறிமாவின் நெருங்கிய நண்பராக இருந்த இதிரா காந்தி, சிறிமா மீதான தடையினை ஜனநாயகத்திற்கெதிரான நடவடிக்கை என்று விமர்சித்திருந்தார். ஜெயவர்த்தனா அமெரிக்கா நோக்கிச் சாய்ந்துவருவதை உணர்ந்துகொண்ட இந்திரா, அதனை மாற்றுவதற்கு அடுத்த தேர்தலில் சிறிமா மீண்டும் பதவிக்கு வரவேண்டும் என்று விரும்பினார். ஆனால், அது நடைபெறாமல்ப் போய்விட்டது. சிறிமாவை அரசியலிலிருந்து முற்றாக அகற்றியதன் பின்னணியில், அமெரிக்காவின் பக்கம் நோக்கிச் சாய்ந்துவரும் இலங்கையை எப்படியாவது வழிக்குக் கொண்டு வந்திடலாம் என்று இந்திரா எதிர்பார்த்ததும் நிகழாது போய்விட்டது. புது தில்லியிலும், கொழும்பிலும் என்னுடன் பேசிய சில இந்திய அதிகாரிகள், சிறிமாவின் அரசியல் மீள்வருகை முற்றாக அழிந்துவிட்டதன் மூலம் இந்தியாவின் நலன்களுக்கு எவ்வகையான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதைப்பற்றி தனக்கு விரிவான அறிக்கையொன்றினைச் சமர்ப்பிக்குமாறு இந்திரா தம்மைக் கேட்டிருந்ததாகவும், அந்த அறிக்கையில் அலசப்பட்ட விடயங்களிலிருந்து இலங்கையினை மீளவும் அணிசேரா நாடுகளின் அமைப்பிற்குள் எப்படிக் கொண்டுவரலாம் என்பதுபற்றிய திட்டங்களையும் வகுத்துக்கொண்டதாகவும் கூறியிருந்தனர். இந்த தேடுதல்களின் விளைவாகவே தமிழ் ஆயுத அமைப்புக்களுக்கு உதவுவதன் மூலம், அவர்களைக் கருவியாகப் பாவித்து, ஜெயவர்த்தனவின் அரசுமீது அழுத்தங்களைப் பிரயோகிக்கலாம் என்று இந்திரா முடிவெடுத்ததாகவும் கூறியிருந்தனர். சிறிமாவை 1982 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலி பங்குபற்றுவதிலிருந்து அகற்றுவது மட்டுமே ஜனநாயத்திற்கெதிரான செயலாக ஜெயவர்த்தனவினால் செயற்படுத்தப்படவில்லை. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை தனக்கு அடிபணிய வைக்கவும் ஜெயவர்த்தன அதனைச் செய்தார். தமிழர் விடுதலைக் கூட்டணி பிரதான எதிர்க்கட்சியாகவும், அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராகவும் பாராளுமன்றத்தில் அமர்ந்தபோது ஜெயவர்த்தனா அவர்களிடமிருந்து எதிர்பார்த்ததெல்லாம் தனக்கு அடிபணிந்து தான் செய்வதை ஆமோதிக்கக் கூடிய ஒரு பொம்மை எதிர்க்கட்சியைத்தான். ஆனால், தான் எதிர்பார்த்தது நடக்காது போகவே தமிழர்களுக்கு ஒரு பாடத்தைப் புகட்டவும், அமிர்தலிங்கத்தை அச்சுருத்தி தனக்கு அடிபணிய வைக்கவும் 1977 ஆம் ஆண்டு ஆவணிக் கலவரத்தை ஜெயவர்த்தனா திட்டமிட்டு நடத்தினார். தான் இரண்டாவது முறையும் ஜனாதிபதியாவதற்கு சிறிமாவின் சுதந்திரக் கட்சியினை முற்றாகப் பலவீனப்படுத்துவதும் தமிழர்களின் வாக்குகள் அனைத்தையும் தனக்கே விழும்படி பார்த்துக்கொள்வதும் அவசியம் என்பதை ஜெயவர்த்தனா உணர்ந்திருந்தார். இதனை விடவும், காலம் காலமாக சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்களாக இருந்துவரும் சிங்கள கடும்போக்குத் தேசியவாதிகளின் வாக்குகளையும் கவர்வதன் மூலம் 50 வீதத்திற்கு அதிகமான வாக்குகளைப் பெற்று தனது வெற்றியை உறுதிப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிந்துவைத்திருந்தார். புதிய அரசியலமைப்பின்படி தேர்தலில் முதலாவது சுற்றில் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் வேட்பாளரே ஜனாதிபதியாகமுடியும் என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.
  3. ரேடியோத் தகவலின் மர்மம் சன்சொனி பார்க்கத் தவறியிருந்த இரண்டாவது விடயம் தான் யாழ்ப்பாணத்தில் பொலீஸாரால் தமிழ் மக்கள் மேல் ஆரம்பிக்கப்பட்ட வன்முறைகள் எவ்வாறு நாடுமுழுதுவதற்கும் பரவியது என்பது. தமிழ் மக்கள் மீது நாடு தழுவிய ரீதியில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதற்குக் காரணமாக இருந்தது யாழ்ப்பாணம் ஆரிய குளத்தருகில் அமைக்கப்பட்டிருந்த நாக விகாரை தமிழர்களால் எரியூட்டப்பட்டு விட்டதாக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு பொலீஸார் அனுப்பிய ரேடியோத் தகவலே. இந்த ரேடியோச் செய்தி யாழ்ப்பாண பொலீஸ் அத்தியட்சகரிடமிருந்து பொலீஸ் மாதிபருக்கு ஆவணி 17 அன்று காலை 11 மணிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. "இன்று இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்கள் நான்கு எரிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்திலுள்ள நாகவிகாரை தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணத்திற்கு வரும் சிங்களவர்களைத் தாக்குவதற்காக ரயில்நிலையத்தில் பாரிய கூட்டம் ஒன்று காத்துக்கொண்டிருக்கிறது, நிலைமை மிக மோசமாக இருக்கிறது" என்று அந்த ரேடியோச் செய்தி அனுப்பப்பட்டிருந்தது. இந்த ரேடியோச் செய்தியில் அனுப்பப்பட்ட அத்தனை தகவல்களும் தவறானவை, பொய்யானவை. ஒரு போக்குவரத்துச் சபை பஸ்தன்னும் எரியூட்டப்படவில்லை. ஆணைக்குழுவின் முன்னால் பலர் அளித்த சாட்சியங்களில் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான சில பஸ்களை கடத்திக்கொண்டு யாழ்நகரின் நகைக்கடைகளுக்குச் சென்றது யாழ்ப்பாணப் பொலீஸாரே என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. நகைக்கடைகளை உடைத்த பொலீஸார் அவற்றைக் கொள்ளையடித்தனர். நாக விகாரை ஒருபோதுமே தாக்குதலுக்குள்ளாக்கப்படவில்லை. ரயிலில் வரும் பயணிகளைத் தாக்கவென ஒரு தமிழர் கூட புகையிரத நிலையத்தில் காத்துக் கிடக்கவில்லை. விசாரணைக் குழுவின் முன்னால் சாட்சியமளித்த போலீஸார் சிலர்கூட அனுப்பப்பட்ட ரேடியோத் தகவல் பொய்யானது என்று கூறியபோது சன்சொனி அதனை ஏற்றுக்கொண்டிருந்தார். அப்படியானால், இந்த பொய்யான செய்தி எங்கிருந்து உருவானது? இதன் பின்னால் இருந்தது யார்? ஆணைக்குழுவின் சாட்சியமளித்த பொலீஸ் கொன்ஸ்டபிள் குமாரசாமி, பொலீஸ் தலைமைக் காரியாலயத்தின் தலைமை அதிகாரி குணசேகர தன்னைப் பணித்தன்படியே தான் அந்தத் தகவலைத் தயார் செய்ததாகக் கூறியதுடன் அத்தகவலை ரேடியோ அறையில் பணிபுரியும் ரேடியோ இயக்குநரான ஜேக்கப்பிடம் கொடுத்துவிட்டதாகவும் கூறினார். மேலும் , குணசேகர தனக்குக் கூறியதன்படி தகவலை தான் எழுதிக்கொண்டிருக்கும்போது, குணசேகரவுடன் பொலீஸ் பரிசோதகர் குருசாமியும் அருகில் இருந்ததாக அவர் கூறியிருந்தார். பின்னர் ரேடியோ இயக்குநர் அத்தகவலை கொழும்பு பொலீஸ் தலைமைக் காரியாலயத்திற்கு அனுப்ப, அத்தகவல் நாட்டிலுள்ள அனைத்துப் பொலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. குணசேகர பொய்யான தகவலை குமாரசாமியைக் கொண்டு எழுதும்போது தான் அருகில் நிற்கவில்லை என்று முதலில் குருசாமி மறுத்திருந்தார். ஆனால், பாதிக்கப்பட்ட தமிழர் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் லெஸ்லி பார்லெட்ட் குருசாமியைக் குறுக்கு விசாரணை செய்தபோது, அத்தகவல் குணசேகரவால் தயார் செய்யப்படும்போது தானும் அருகில் இருந்ததை குருசாமி ஒப்புக்கொண்டதுடன், மேலிடத்திலிருந்து வந்த கட்டளையின்பேரிலேயே அத்தகவலைத் தாங்கள் தயார் செய்து அனுப்பியதாகவும் கூறினார். பொலீஸாரைத் தொடர்ச்சியாகக் குறுக்கு விசாரனை செய்த லெஸ்லி பார்லெட்ட் பின்வரும் விடயங்களைக் கண்டறிந்திருந்தார். "ஆவணி 17 ஆம் திகதி காலை, பொலீஸ் செயற்பாட்டு அறையில் குருசாமியும், குமாரசாமியும் கடமையில் இருந்தார்கள். காலை 11 மணியளவில் செயற்பாட்டு அறைக்குள் நுளைந்த குணசேகர, குமாரசாமியைப் பார்த்து நான் கூறுவதை அப்படியே எழுதுங்கள் என்று கட்டளையிட்டுவிட்டு பேசத் தொடங்கினார், "4 இ.போ.ச பஸ்வண்டிகள் எரியூட்டப்பட்டிருக்கின்றன. யாழ்ப்பாணத்தின் நாக விகாரை தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. ரயில்களில் வரும் பயணிகளைத் தாக்குவதற்கு பாரிய குழு ஒன்று புகையிரதநிலையத்தில் காத்துக்கிடக்கிறது. நிலைமை மோசம்" என்று கூறிவிட்டு, இந்தத் தகவலை உடனடியாக பொலீஸ் மா அதிபருக்கு ரேடியோ மூலம் அறிவிக்குமாறு குணசேகர குமாரசாமியைப் பணிக்கிறார். அருகில் இருந்த குருசாமியும், குமாரசாமியிடம் அத்தகவலை உடனடியாக அனுப்புமாறு அழுத்தம் கொடுக்கிறார். அதன்பிறகு அத்தகவலை எடுத்துச் சென்று ரேடியோ அறையில் கடமையிலிருந்த ரேடியோ இயக்குநர் ஜேக்கப்பிடம், குமாரசாமி கொடுத்துவிடுகிறார். இறுதியாக ஜேக்கப்பினால் அத்தகவல் 11 மணிக்கு பொலீஸ் மாதி அபருக்கு அனுப்பப்படுகிறது". "இத்தகவலைப் பெற்றுக்கொண்ட கொழும்புப் பொலீஸ் தலைமையகத்தின் ரேடியோப் பிரிவு இத்தகவல் உண்மைதானா என்பதை உறுதிப்படுத்துங்கள் என்று யாழ்ப்பாண பொலீஸ் ரேடியோப் பிரிவிற்கு தகவல் அனுப்புகிறது. பொலீஸ் பரிசோதகர் குருசாமி உடனடியாக ரேடியோ அறைக்கு அழைக்கப்படுகிறார். குருசாமி 11:05 இற்கு அளித்த ரேடியோப் பதில் இப்படிக் கூறியது, " எனது தற்போதைய தகவலுக்கு மேலதிகமாக வேறு தகவல்கள் இல்லை, இத்தகவலை புறக்கணியுங்கள், வேறு தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் - இப்படிக்கு யாழ்ப்பாண பொலீஸ் அத்தியட்சகர்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. "காலை 11:20 இற்கு, யாழ்ப்பாண ரேடியோ அறைக்கு பொலீஸ் மா அதிபரிடமிருந்து பின்வரும் கட்டளை கிடைத்தது, "கடற்படையினர் நாக விகாரைக்குப் பாதுகாப்பு அளிப்பார்கள். நாக விகாரையின் பாதுகாப்பிற்கு காவலர்களை ஒழுங்கு செய்யுங்கள்" . இத்தகவலின் பின்னர் பொலீஸ் மா அதிபரிடமிருந்து வேறெந்த தகவல்களும் வரவில்லை. அதன்பிறகு யாழ்ப்பாணத்திலிருந்து வேறெந்த தகவலும் அனுப்பப்படவில்லை. யாழ்ப்பாணத்திலிருந்து அனுப்பப்பட்ட தகவல் தவறானது என்பதையும் போலீஸ் மா அதிபர் ஸ்டான்லி சேனநாயக்கவும் எவருக்கும் அறிவிக்கவில்லை. கடைசியாக ரேடியோவில் பகிரப்பட்ட தகவல் 11:20 இற்கு பொலீஸ் மா அதிபர் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிய தகவல் மட்டும்தான். அத்தகவலில் யாழ்ப்பாணத்திலிருந்த இரு பிரதான பெளத்த விகாரைகளுக்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு கோரப்பட்டிருந்தது. அத்தகவல் எச்சரிக்கையுடன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்பிறகு பொலீஸ் ரேடியோ அலைவரிசயில் நிசப்தமே நிலவியது. இந்தச் செய்திகள் அனைத்தும் பொலீஸாரை ஆத்திரப்படவைக்க அவர்கள் எவ்வாறு தமிழ்மக்களுடன் நடந்துகொண்டார்கள் என்பதை விசாரணைக் குழுவிற்குக் கிடைத்த ஆதாரங்கள் விளக்கியிருந்தன. விசாரணைகளின்போது, பொய்யான பொலீஸ் செய்தியத் தயாரித்தது யாரென்பதை மறைக்க பொலீஸார் பகீரதப் பிரயத்தனத்தனத்தில் ஈடுபட்டிருந்தது அப்பட்டமாகத் தெரிந்தது. இந்தப் பொய்களை மறைக்கும் கைங்கரியம் குருசாமியிலிருந்து ஆரம்பமாகியிருந்தது. முதலில், அத்தகவல் தயாரிக்கப்படும்போது குணசேகரவுடன் தானும் குமாரசாமியின் அருகில் இருந்ததை அவர் மறுத்திருந்தார். பின்னர், குணசேகர அத்தகவலை தயாரிக்குமாறு குமாரசாமிக்குக் கட்டளையிடவில்லை என்று அவர் கூறினார். ஒருகட்டத்தில் அத்தகவலை யார் தயாரித்தார்கள் என்பதே தனக்குத் தெரியாது என்று அவர் கூறினார். ஆனால், குமாரசாமியுடன் சேர்ந்து தான் அத்தகவலை கொழும்பிற்கு அனுப்பி சரியாக 5 நிமிடங்களில் கொழும்பிலிருந்து தாம் அனுப்பிய தகவலை உறுதிப்படுத்துமாறு தகவலொன்று வந்ததாக அவர் ஒப்புக்கொண்டார். குமாரசாமி கைப்பட எழுதிய முதலாவது தகவலை தான் கண்ணுற்றதாகவும், பின்னர் அத்தகவல் தவறானது, மேலதிக தகவல்களுக்காகக் காத்திருங்கள் என்று கொழும்பிற்குத் தகவல் அனுப்பியதாகவும் குருசாமி கூறினார். குணசேகரவும் முதலில் அத்தகவலைத் தான் தயாரிக்கவில்லை என்று மறுத்தார். அத்தகவல் குறித்து முதன்முதலாக தான் கேள்விப்பட்டது புரட்டாதியில் விசாரணைக் குழுவினரூடாகத்தான் என்று கூறினார். வழக்கறிஞர் லெஸ்லி பாட்லெட், குருசாமியைக் குறுக்கு விசாரணை செய்தபோது, தனது மேலதிகாரிகளிடமிருந்து வந்த கட்டளையின்படி செயலாற்றியிருக்கும் குருசாமி, முதலில் அனுப்பப்பட்ட பொய்யான தகவலை திருத்திக்கொள்ளும் சந்தர்ப்பம் இருந்தபோதும் வேண்டுமென்றே தாமதித்து 10 நிமிடங்களின் பின்னரே அத்தகவல் தவறானது, வேறு தகவலுக்காகக் காத்திருங்கள் என்று கொழும்பிற்குத் தகவல் அனுப்பியிருக்கிறார். மேலும், மேலிடத்து அழுத்தத்தினால், குருசாமி தவறான தகவல்பற்றிய மேலதிக விபரங்களை கொழும்பிற்கு தெரிவிக்காதும் விட்டிருக்கிறார் என்று கூறினார். விசாரணைகளின் முடிவில் மனமுடைந்து அழுத குருசாமி, அத்தகவல் பொய்யானதென்று தனக்குத் தெரியும் என்றும், பொய்யொன்றையே தாம் செய்தியாக ரேடியோவூடாக அனுப்பியதாகவும் ஒப்புக்கொண்டார். இறுதியாக வாக்குமூலமளித்த குருசாமி, தனது மேலதிகாரிகளின் சதியே இவற்றிற்கான காரணம் என்று கூறியதுடன், தனக்கும் இச்சதிக்கும் தொடர்பில்லை என்றும் கூறினார். லெஸ்லி பார்லெட் முன்வைத்த தனது அறிக்கையில், பொலீஸ் ரேடியோச் சேவையூடாக வேண்டுமென்றே பொய்யான தகவலை அனுப்பிய பொலீஸ் அத்தியட்சகர் செனிவிரட்ணவும் ஏனைய உயர் அதிகாரிகளும் தண்டனையிலிருந்து எந்தவிதத்திலும் தப்பிக்க முடியாது என்று எழுதியிருந்தார். "பொய்யான தகவல் பரப்பப்பட்டபோது பொலீஸ் மா அதிபர் அனா செனிவிரட்ண, பொலீஸ் அத்தியட்சகர் ஏ. எஸ். செனிவிரட்ண, பொலீஸ் தலைமையக பரிசோதகர் குணசேகர ஆகியோர் தத்தமது செயற்பாட்டு அறைகளில் இருந்திருக்கின்றனர், ஆகவே இவர்களே இந்தப் பொய்யான தகவல் நாடு முழுவதற்கும் பரப்பப்படக் காரணமானவர்கள் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை" என்று லெஸ்லி பார்ட்லெட் முன்வைத்த அறிக்கையினை ஏற்றுக்கொள்ள மறுத்த சன்சொனி, இதனை நிரூபிக்கப் போதுமான ஆதாரங்கள் இல்லையென்று கூறினார். ஆகவே, இப்பொய்யான தகவலை யார் தயாரித்திருப்பார்கள் என்பதை தன்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறி கையை விரித்துவிட்டார். மேலே குறிப்பிடப்பட்ட இரு முக்கியமான கேள்விகளுக்குமான பதிலை சன்சொனி தேடியிருந்தால், 1977 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் மீதான வன்முறைக்கு யார் காரணம் என்பதை மிக இலகுவாக அவரால் கண்டுபிடித்திருக்க முடியும். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பரம வைரியும், ஆய்வாளருமான ராஜன் ஹூலின் கருத்துப்படி தமது புதிய அரசியல் எஜமானர்களான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களின் கட்டளையின்பேரிலேயே பொலீஸார் இந்த வன்முறைகளைத் திட்டமிட்டு நடத்தினர் என்று கூறுகிறார். ஜெயவர்த்தனவின் ஆட்சியில், தமிழரின் விடுதலை வேட்கையினை அடக்குவதற்கு அவர்கள் மீதான இனவன்முறையே கட்டாயமான ஆயுதமாகப் பாவிக்கப்பட்டது. இதன்மூலம் தமிழ் மிதவாதிகளுடன் தொடர்பாடலைப் பேணுவதற்கான கதவினை அவர் இறுக மூடிக்கொண்டார். இரு வருடங்கள் கழித்து, 1979 ஆம் ஆண்டு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான சட்டம் எனும் புதிய சட்டத்தினை உருவாக்கியதன் மூலம் ஜனநாயக வழியிலான தீர்விற்கான முழுக்கதவினையும் அடைத்துக்கொண்டதோடு, பொலீஸாருக்கும், இராணுவத்திற்கும் மிதமிஞ்சிய அதிகாரங்களை அள்ளி வழங்கி மிதவாதத் தமிழர்கள் மீது ஆயுத வன்முறையினையும் கட்டவிழ்த்து விட்டார்.
  4. பொலீஸ் பயங்கரவாதம் பொலீஸ் பயங்கரவாதி - அனா செனிவிரட்ண யாழ்ப்பாணத்தில் பொலீஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான பகையுணர்வு என்பது பல வருடங்களாக இருந்து வரும் ஒரு விடயம். குறிப்பாக 1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் 11 அப்பாவிகள் கொல்லப்படக் காரணமான பொலீஸாரின் அடாவடித்தனம் இடம்பெற்ற காலத்திலிருந்து இந்தப் பகைமையுணர்வு அதிகரித்தே வந்திருந்தது. ஆனால், பொலீஸாரின் தமிழ் மக்கள் மீதான இந்த வன்மத்தை சன்சொனி பார்க்க விரும்பவில்லை. மேலும், 1974 ஆம் ஆண்டுப் படுகொலையில் நீதிபதி கிரெஸ்டர் அளித்த தீர்ப்பில் பொதுமக்களின் கொலைக்கு பொலீஸாரின் நடவடிக்கைகளே காரணம் எனும் முடிவை பொய்யாக்க பொலீஸாருக்கு ஒரு சந்தர்ப்பத்தையும் சன்சொனி ஏற்படுத்திக் கொடுத்திருந்தார். மேலும், தமிழ் மக்களுக்கு சரியான பாடம் ஒன்றினைப் புகட்டவேண்டும் என்று செயலாற்றிய அனைத்துப் பொலீஸ் அதிகாரிகளும் பதவியுயர்வுகள் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்கள். 1974 ஆம் ஆண்டு தமிழாராய்ச்சி மாநாட்டில் அப்பாவித் தமிழர்களைக் கொன்றதற்காக சிறிமாவினால் உதவி பொலிஸ் அத்தியட்சகரான சந்திரசேகரவிற்கு பதவியுயர்வு வழங்கப்பட்டது போன்றே, 1977 ஆம் ஆண்டு பொலீஸார் நடத்திய படுகொலைகளுக்காக அனா செனிவிரட்ண, ஜெயவர்த்தனவினால் பொலீஸ் மாதிபராக பதவியுயர்வு வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார். இந்தப் பதவி உயர்வு பொலீஸார் மீதான குற்றச்சாட்டுக்களை சன்சொனி விசாரித்துவந்த நிலையிலேயே நடந்தேறியது என்பதும் குறிப்பிடத் தக்கது. மேலும் யாழ்ப்பாண பொலீஸ் அத்தியட்சகர் உதவிப் பொலீஸ் மாதிபராகவும், யாழ்ப்பாணத் தாக்குதல்களில் முன்னின்று செயலாற்றிய ரொனி குணசிங்க, ஏ எஸ் செனிவிரட்ணவின் உதவியாளராகவும் பதவியுயர்த்தப்பட்டனர். யாழ்ப்பாணத்தின் சந்தைப்பகுதியை பொலீஸார் எரித்துக்கொண்டிருந்தவேளை அப்பகுதிக்குச் சென்றிருந்த கொட்டடிப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் வாக்குமூலம் பின்வருமாறு, " 15 ஆம் திகதி இரவு யாழ்ப்பான நகரின் பல பகுதிகளில் தீவைக்கப்பட்டிருப்பதாகவும், பொலீஸாரே கடைகளுக்குத் தீ வைப்பதாகவும் எமக்குச் செய்தி கிடைத்தது. பல இளைஞர்கள் அப்பகுதி நோக்கி அவசரமாகச் சென்றுகொண்டிருந்தனர். என்னை எக்காரணம் கொண்டும் வீட்டிற்கு வெளியே வரக்கூடாது என்று கூறிவிட்டு எனது மூத்த சகோதரனும் யாழ்நகரப்பகுதிக்கு விரைந்தார். ஆனால், நானும், எனது வயதினை ஒத்த சில நண்பர்களும் வைத்திய சாலை வீதியும், காங்கேசந்துறை வீதியும் சந்திக்கும் இடத்திலுள்ள வாய்க்கால் ஒன்றில் ஒளிந்துகொண்டு, எனது சகோதரனின் கண்ணில்ப் படாமல் நடப்பதை அவதானிக்கத் தொடங்கினோம். நாங்கள் பொலீஸாரையும் அவரது வாகனங்களையும் நகரத்தில் கண்டோம். சிலரிடம் ஆயுதங்கள் இருந்தன. தெய்வாதீனமாக அவர்கள் கண்களில் நாங்கள் படவில்லை". "சில மூத்தவர்கள் டயர்களை இழுத்துவந்து காங்கேசந்துறை வீதிக்குக் குறுக்கே குவியலாகப் போட்டு தீமூட்டினார்கள். பொலீஸார் நாம் இருந்த பக்கம் வருவதைத் தடுப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது. அப்படியிருந்தும், நாமிருந்த பக்கத்திற்கு அருகில் வந்த பொலீஸார் வீதிகளின் பெயர்களைத் தாங்கி நின்ற பெயர்ப்பலகைகளை கீழே இழுத்து வீழ்த்தினார்கள். பெயர்ப்பலகைகள் பொறுத்தப்பட்டிருந்த தூண்களைக் கொண்டு எரிந்துகொண்டிருந்த டயர்களை ஒவ்வொன்றாக இழுத்துச் சென்று எரிபொருட்கள் சேமிக்கப்பட்ட கடைகள் மீதும், பழைய சந்தைமீதும் அவர்கள் எறிந்த போது அவை தீப்பிடிக்கத் தொடங்கின. நாம் அவர்கள் மீது கற்களை எறிய ஆரம்பித்தோம். எம்மைப்போன்றே பலரும் அவர்கள் மீது கற்களை எறிந்து தாக்குதல் நடத்தவே அவர்கள் ஓடிச்சென்று தமது வாகனங்களில் ஏறித் தப்பிச் சென்றார்கள்". "மறுநாள் காலை நான் பாடசாலைக்குச் செல்லும்போது, வங்கியின் காவலுக்கு வந்த இரு பொலீஸ்காரர்களிடமிருந்து அவர்களின் ஆயுதங்களைப் பொதுமக்கள் பறித்துக்கொண்டதாகக் கேள்விப்பட்டேன். அவர்களில் ஒருவர் தாக்கப்படுவதையும் நான் கண்டேன். எனது பாடசாலைப்பையிலிருந்த வட்டாரியினைக் கொண்டு அந்தப் பொலீஸ்காரரின் தொடையில் குத்தி விட்டு பாடசாலைக்குச் சென்றேன். ஒரு துப்பாக்கி பொதுமக்களால் அடித்து நொறுக்கப்பட்டிருந்தது. மற்றையதைப் பறித்தவர்கள் அதனை வெளியே வைத்துவிட்டு தேநீர் அருந்தச் சென்றவேளை அங்கு வந்த பொலீஸார் அதனை எடுத்துச் சென்றார்கள்" என்று கூறினார்.
  5. வன்முறைக் கலாசாரத்தை நியாயப்படுத்திய நீதிபதி சன்சொனி சன்சொனி தனது விசாரணை அறிக்கையில் வன்முறைக் கலாசாரத்தை நியாயப்படுத்தியிருந்தார். விசாரணைகளின் இரு முக்கிய வினாக்களுக்கான பதிலை அவரால் இறுதிவரை கண்டறிய முடியாமற்போனதே அவரது விசாரணை முற்றாகத் தோல்வியடைவதற்குக் காரணமாகியது. ஆவணி 16 ஆம் திகதி அதிகாலை யாழ்ப்பாணச் சந்தைக்குத் தீ வைத்தது யாரென்பதையும், யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்த தமிழருக்கெதிரான வன்முறைகள் பின்னர் நாடு முழுதிற்கும் எவ்வாறு பரவின என்பதற்கும் அவரால் காரணங்களைக் கண்டறிய முடிந்திருக்கவில்லை. ஆவணி 16 ஆம் திகதி காலை யாழ்ப்பாணம் பழைய சந்தைப்பகுதிக்குத் தீவைத்தது யார்? இது நடந்த சூழ்நிலையினை மீளுருவாக்கம் செய்வதற்கு சன்சொனியினால் சேகரிக்கப்பட்ட ஆதராங்களை நாம் முதலில் பார்க்கலாம்ம். ஆவணி 15 ஆம் திகதி, பிற்பகல் புத்தூர் சந்தியூடாக சைக்கிள்களில் பயணம் செய்துகொண்டிருந்த மூன்று இளைஞர்களை பொலீஸார் மறிக்கின்றனர். பொலீஸார் தம்மை மறிக்கவே, தாம் வந்த சைக்கிள்களை எறிந்துவிட்டு அந்த இளைஞர்கள் தப்பியோடிவிட்டனர். அப்படித் தப்பியோடிய இளைஞர்களில் ஒருவர் தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியினால் பொலீஸாரை நோக்கிச் சுட்டுவிட்டே ஓடியிருக்கிறார். இச்சம்பவத்தின்போது பொலீஸ் கொன்ஸ்டபிள் பண்டாரவின் தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. ஆவணி 15 பிற்பகல் நடந்த இந்த சம்பவம் குறித்து யாழ்ப்பாணப் பொலீஸ் அத்தியட்சகர் ஏ எஸ் செனிவிரட்ணவை கொழும்பு டெயிலி சண் பத்திரிகைக்காக யாழ்ப்பாண நிருபர் எல் ஏ சவரிமுத்து பேட்டி கண்டிருந்தார். செனிவிரட்ண இச்சம்பவம் குறித்து மிகுந்த ஆத்திரத்துடன் காணப்பட்டார். செய்தியாளரிடம் பேசிய பொலீஸ் அத்தியட்சகர், அரச ஊழியரான பண்டார மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்காக தமிழ் மக்கள் பாரிய விலையைச் செலுத்தவேண்டி வரும் என்று எச்சரித்திருந்தார். தமிழ் பொலீஸ் கொன்ஸ்டபிளான சட்டநாதப்பிள்ளை வழங்கிய வாக்குமூலத்தில், "இச்சம்பவம் நடந்த ஆவணி 15 ஆம் நாள் இரவு தனது வாசஸ்த்தலத்தில் பொலீஸார் அனைவரையும் அழைத்த யாழ்ப்பாணப் பொலீஸ் அத்தியட்சகர் செனிவிரட்ண, கூட்டம் ஒன்றினை நடத்தியிருந்தார். இக்கூட்டத்தில் பேசிய அத்தியட்சகர் தமிழரை மிகவும் இழிவாகப் பேசியிருக்கிறார். சிங்களப் பொலீஸாரின் மீது சுடுவதென்பது இனிமேல் பொறுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்று அவர் அங்கு பொலீஸாரின் முன்னிலையில் கூறியிருக்கிறார். அக்கூட்டம் முடிந்தபின் ஒரு தொகுதி பொலீஸார் தமது நடவடிக்கைப் புத்தகத்தில் புங்குடுதீவுக்குச் செல்கிறோம் என்று கூறிவிட்டு, யாழ்நகருக்குள் சென்று அங்கிருந்த பழைய சந்தைக்கு காலை 1:30 மணியளவில் தீவைத்தனர்" என்று அவர் கூறியிருந்தார். பொலீஸாரே யாழ்ப்பாணம் பழைய சந்தைக்குத் தீவைத்தனர் என்பதை அப்பகுதியில் வியாபார நிலையங்களை நடத்திவந்த வர்த்தகர்களும், ஏனையோரும் உறுதிப்படுத்தியிருந்தனர். அவர்களின் கூற்றுப்படி சுமார் 100 பேர் அடங்கிய பொலீஸ் குழுவொன்று வாகனங்களில் வந்திறங்கி சந்தைப்பகுதிக்குத் தீவைத்திருக்கிறார்கள். சந்தைக்குத் தீவைத்தவர்களின் தலைமுடி குட்டையாக வெட்டப்பட்டிருந்தது. அவர்கள் காக்கிக் காற்சட்டைகளை அணிந்திருந்தனர். அவர்களிடம் ஆயுதங்கள் இருந்தன. அவர்கள் சிங்களத்தில் தமக்குள் பேசிக்கொண்டார்கள். அவர்கள் பொலீஸ் வாகனங்களிலேயே வந்திறங்கியிருந்தார்கள். அவர்கள் வந்திறங்கிய பொலீஸ் வாகனங்கள் யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. அப்பகுதியில் வியாபார நிலையங்களை நடத்திவந்த பல வர்த்தகர்கள் இதுகுறித்து வழங்கியிருந்த வாக்குமூலங்களில் , சந்தைப்பகுதிக்கு பொலீஸார் தீவைக்கிறார்கள் என்கிற செய்திபரவியபோது, மக்கள் அப்பகுதிநோக்கி அணிதிரண்டதுடன், சந்தைக்குத் தீவைத்துக்கொண்டிருந்தவர்கள் மீது கற்களை வீசியும் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். பொலீஸார் சந்தையின் ஏனைய பகுதிகளுக்குள் நுழைந்து எரிப்பதை தடுப்பதற்கு மக்கள் வீதிகளில் டயர்களை எரித்து பொலீஸாரின் நடமாட்டத்தைத் தடுக்க முனைந்திருக்கிறார்கள். தமிழர்கள் அப்பகுதிக்கு அதிகமாக வருவதுகண்டு உசாரான பொலீஸார் தாம் வந்த வாகனங்களில் ஏறி பொலீஸ் நிலையம் நோக்கிச் சென்றிருக்கிறார்கள். ஆனால், இச்சட்சியங்களை முற்றாக மறுத்த சன்சொனி, "இவை போதுமானவையாக இல்லை, பொலீஸார் மீது வேண்டுமென்றே பழிசுமத்தும் நோக்கோடு கூறப்பட்ட குற்றச்சட்டுக்கள்" என்றும் கூறியிருந்தார். அப்படியானால் பழைய சந்தையினை எரித்தது யார்? உதவிப் பொலீஸ் மாதிபர நூர்டீன் தலைமையில் ஆதாரங்களைச் சேகரித்த குழு, யாழ்ப்பாணம் சந்தைப்பகுதியில் குழுவொன்று தீவைப்புச் சம்பவத்தில் ஈடுபடுவதாகத் தமக்குத் தகவல் கிடைத்ததாகவும், அதன்பின்னர் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்ட பொலீஸார் அங்கு சென்றதாகவும் கூறியிருந்தது. இதனையே சன்சொனி சாட்சியமாக ஏற்றுக்கொண்டார். சன்சொனி தனது அறிக்கையில், சந்தைப்பகுதியில் வன்முறையில் ஈடுபட்ட சமூக விரோதிகளை அடக்கவே பொலீஸார் அப்பகுதிக்குச் சென்றனர் என்று இதனை முடித்திருந்தார். சன்சொனி பல சாட்சியங்களை வேண்டுமென்றே உதாசீனம் செய்திருந்தார். மதிப்பிற்குரிய பிரமுகர்களான வைத்தியர் பாலசிங்கம், வர்த்த பெரும்புள்ளி எம் ஆர் ஜோசேப் ஆகியோர் கூறிய "பொலீஸாரின் அட்டூழியங்கள்" எனும் கருத்தை அவர் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஜோசேப் வழங்கிய வாக்குமூலத்தில் உதவிப் பொலீஸ் அத்தியட்சகர் தனது வாகனத்தில் யாழ்ப்பாணப் பேரூந்து நிலையம் நோக்கி வெகு வேகமாகப் பயணித்ததைக் கண்டதாகவும், அங்கு வன்முறைகளில் ஈடுபட்டிருந்த பொலீஸாரைப் பார்த்து, "அவர்களை நாய்களைப் போல் சுட்டுத் தள்ளுங்கள், நாங்களா அவர்களா என்று பார்த்துவிடலாம்" என்று கட்டளையிட்டதாகவும் கூறினார். சன்சொனி கேட்கமறுத்த கேள்விகளாவன, 1. வன்முறையில் ஈடுபட்ட குழு எதற்காக நகர்ப்பகுதியை அதிகாலை 1:30 மணிக்குத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது? 2. தமிழர்கள் தமது சொந்த நகரையே தீவைத்து எரிக்க வேண்டிய தேவை என்ன?
  6. ஈரான் இதனை நிச்சயம் செய்யவேண்டும். அமெரிக்காவுக்குப் பாடம் புகட்டவேண்டும்.
  7. சன்சொனி ஆணைக்குழு 1978 ஆவணியில் யாழ்ப்பாணப் பொலீஸார் மேற்கொண்ட அட்டூழியங்களை விசாரிக்கவென சன்சொனி ஆணைக்குழுவை ஜெயவர்த்தனா அமைத்தார். ஆனால், விசாரணைகளின் முடிவில் ஆணைக்குழுவினரால் கண்டறியப்பட்டதாகக் கூறப்பட்ட பல விடயங்கள் தமிழ் மக்களை கடுமையாக ஏமாற்றி விட்டிருந்தன. பாராளுமன்றத்தில் ஆவணி 18 ஆம் திகதி அமிர்தலிங்கம் செய்த முறைப்பாட்டின் பின்னர் பொலீஸாரின் அடாவடித்தனத்தை விசாரிக்க ஒரு ஆணைக்குழுவை ஜெயவர்த்தனா அமைக்கப்போவதாக அறிவித்தபோது தமிழர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். ஆவணி 22 ஆம் திகதி பறங்கி இனத்தைச் சேர்ந்தவரும், மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டவருமான ஓய்வுபெற்ற முன்னாள் பிரதம நீதியரசர் சன்சொனியை ஜே ஆர் அணுகி யாழ்ப்பாணத்திலும் பின்னர் நாடு முழுவதும் தமிழ் மக்களுக்கெதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் தொடர்பான விசாரணைகளுக்குத் தலைமை தாங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டபோது தமிழர்களின் மகிழ்ச்சி இரட்டிப்பாகியது. ஒற்றை நீதிபதியின் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்த விசாரணை ஆணைக்குழு மூன்று விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தும் என்று அறிவிக்கப்பட்டது. 1. இலங்கையில் 1977 ஆவணி மாதம் 13 ஆம் திகதியிலிருந்து புரட்டாதி மாதம் 15 வரையான காலப்பகுதியில் நடைபெற்ற வன்முறைகளுக்கான மூல காரணம் மற்றும் வன்முறைகள் நடைபெறுவதற்கான சூழ்நிலைகளை உருவாக்கியிருந்த புறக் காரணிகளைக் கண்டறிதல். 2. தனிநபரோ, அல்லது ஒரு குழுவோ அல்லது ஒரு அமைப்போ இந்த வன்முறைகளின் பின்னால் இருந்துள்ளதா என்று கண்டறிதல். 3. வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான புணர்வாழ்வு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் இவ்வாறான வன்முறைகள் இனிமேல் நடவாதிருப்பது ஆகியவற்றிற்கான பரிந்துரைகளை மேற்கொள்வது. தனது முதலாவது அமர்வினை 1978 ஆம் ஆண்டு மாசி மாதம் 8 ஆம் திகதி ஆரம்பித்த ஆணைக்குழு இறுதியாக 1979 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 10 ஆம் திகதியுடன் தனது விசாரணைகளை பூர்த்தி செய்துகொண்டது. யாழ்ப்பாணம், அநுராதபுரம், கொழும்பு, கண்டி, திருகோணமலை ஆகிய இடங்களின் இந்த விசாரணைகளுக்கான அமர்வுகள் இடம்பெற்றன. விசாரணைகள் சாட்சியங்களூடு பூரணப்படுத்தப்பட்டிருந்தது என்று கூறலாம். விசாரணைகளின் இறுதி அறிக்கை 1980 ஆம் ஆண்டு ஆடி 22 ஆம் திகதி ஜெயவர்த்தனவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதே வருடம் கார்த்திகை 4 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஆணைக்குழுவின் பிரதான குறிக்கோளாக இருந்தது வன்முறைகளுக்கான மூல காரணத்தையும், சூழ்நிலைகளையும் கண்டறிதல் மற்றும் வன்முறைகளின் பின்னாலிருந்த தனிநபர்கள் அல்லது அமைப்புக்களைக் கண்டறிதல் என்றே கூறப்பட்டிருந்தது. சுமார் 277 பக்கங்களைக் கொண்ட தனது அறிக்கையில் வன்முறைகளுக்கான மூல காரணம் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் தலைமைப்பீடமே என்று தீர்க்கமாக வரையறை செய்துகொண்டே தனது அறிக்கையினைச் சமர்ப்பித்திருந்தார். வன்முறைகள் உருவாவதற்கான சூழ்நிலையினை நாட்டில் உருவாக்கியது முன்னணியினர் தான் என்று குற்றஞ்சாட்டிய சன்சொனி, வன்முறைகளைச் செய்தவர்கள் யாரென்பதை எவ்விடத்திலும் குறிப்பிட்டிருக்கவில்லை. தனிநாட்டிற்கான கோரிக்கையினை தமிழ்த்தலைவர்கள் முன்வைத்து வந்தமையும், தமிழ் ஆயுத அமைப்புக்களை ஊக்குவித்து வந்தமையுமே சிங்கள மக்களின் ஒரு பிரிவினரை இதற்கெதிரான பழிவாங்கல் நிலைக்குத் தள்ளியிருந்ததாக சன்சொனி குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு கூறியதன் மூலம் ஒரு நாட்டில் சிறுபான்மையின மக்கள் தமக்கும் சம அந்தஸ்த்துக் கோரும்போது, அது பெரும்பான்மையின மக்களைக் கோபப்படுத்துமிடத்து, சிறுபான்மையின மக்களுக்கெதிரான வன்முறைகளில் பெரும்பான்மையின மக்கள் இறங்கலாம் எனும் புதிய சட்டத் தேற்றத்தை உருவாக்கியிருந்தார். இதனை இன்னும் சுருக்கமாகக் கூறினால், "நீங்கள் பெரும்பான்மைச் சமூகத்தை கோபப்பட வைத்தால் அதன் விளைவுகளுக்கு நீங்களே பொறுப்பாளிகள்" அல்லது "பெரும்பான்மைச் சமூகத்தைக் கோபப்படுத்தியதால் உங்களுக்கு நீங்கள் கேட்டது கொடுக்கப்பட்டிருக்கிறது" என்று பொருள். சன்சொனி மேலும் கூறுகையில், "இலங்கையின் மொத்த மக்களையும் பொறுத்தவரையில் தனிநாடு என்பது வெறுக்கத்தக்க ஒரு விடயமாகும். அதனை பெரும்பான்மையின மக்கள் இறுதிவரை எதிர்ப்பார்கள். வன்முறைகளோ, அல்லது வன்முறைகளுக்கான ஊக்கப்படுத்தல்களோ மேலும் மேலும் வன்முறைகளையே கொண்டுவரும் என்பதை நாம் மறக்கக் கூடாது. 1977 ஆவணியிலும் புரட்டாதியிலும் இடம்பெற்ற சம்பவங்கள் எங்களுக்குக் கற்றுத்தரும் பாடங்கள் இவைதான்" என்று கூறினார். இந்த அறிக்கையினை ஆராய்ந்த பலர் சன்சொனி கூறியிருப்பது 1977 ஆம் ஆண்டு ஆவணி 18 இல் பாராளுமன்றத்தில் ஜெயவர்த்தன நிகழ்த்திய தமிழர்களைச் சீண்டும் விதமான ஆணவப் பேச்சிற்குச் சற்றும் சளைத்தது இல்லை என்று கூறியிருந்தனர். பாராளுமன்றத்தில் அமிர்தலிங்கத்தின் அறிக்கைக்குப் பதிலளித்துப் பேசிய ஜெயவர்த்தன பின்வருமாறு பேசியிருந்தார், "நாட்டிலுள்ள பெரும்பான்மையான மக்களுக்கு இந்தப் பாராளுமன்றத்தில் இருக்கும் உறுப்பினர்களைப் போன்று, குறிப்பாக முன்வரிசயில் அமர்ந்திருக்கும் அதிகாரம் மிக்க உறுப்பினர்களுக்கு இருக்கின்ற பொறுமையோ சகிப்புத்தன்மையோ கிடையாது. தனியான நாடொன்றினை அமைக்கப்போகிறார்கள் என்று மக்கள் கேள்விப்படும்போது அவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கப்போவதில்லை. இந்து சமுத்திரத்தின் திறவுகோல் திருகோணமலையென்று நெப்போலியன் ஒருமுறை சொன்னானாம், ஆகவே தமிழர்கள் தமது தனிநாட்டிற்குத் திருகோணமலையை தலைநகராக்கப் பார்க்கிறார்களாம். " "எது எப்படியிருந்தாலும், நீங்கள் தனிநாட்டுக்கான அறிக்கைகளை விடும்போது பத்திரிக்கைகள் அதனை நாடு முழுதும் கொண்டு செல்கின்றன. நீங்கள் வன்முறையினை விரும்பவில்லை என்று கூறிக்கொண்டே எதிர்காலத்தில் வன்முறையினைப் பாவிக்கலாம் என்று கூறும்போது, இலங்கையில் வாழும் மற்றைய மக்கள் என்ன செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள்? உங்களுக்குப் போர் வேண்டும் என்றால், போர் செய்துபார்க்கலாம். உங்களுக்குச் சமாதானம் வேண்டுமென்றால், சமாதானம் செய்து பார்க்கலாம்" என்று ஜெயவர்த்தனா முழங்கியபோது அவரது கட்சியினர் பலத்த கரகோஷம் செய்தனர். கரகோஷங்களுக்குப் பின்னர் தொடர்ந்து பேசிய ஜெயவர்த்தன, "இதனை நான் சொல்லவில்லை, எனது மக்களே சொல்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் வன்முறைகள் நடக்கும்போது, சிங்களவர்கள் தாக்கப்படும்போது, அவர்களது கடைகள் எரிக்கப்படும்போது, அங்கிருந்து தப்பி ரயில்களில் ஏறி தென்பகுதிக்கு வரும் சிங்களவர்கள் தமக்கு நடந்தவற்றைச் சொல்கிறார்கள். இதன் விளைவாகவே பல தமிழ் உயிர்களும், முஸ்லீம் உயிகளும் பலியாகின. இவை நடந்திருக்கத் தேவையில்லை. அவை நடந்ததற்காக நான் வருந்துகிறேன்" என்று கூறி முடித்தார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மற்றும் தமிழ் ஆயுத அமைப்புக்களுக்கெதிராக கடுமையான விமர்சனங்களை தொடர்ச்சியாக முன்வைத்துவரும் ராஜன் ஹூல் என்பவர் சன்சொனியின் அறிக்கை பற்றிக் கூறும்போது, பாதிக்கப்பட்ட 952 பேரின் சாட்சியங்களை 298 அமர்வுகளில் விசாரித்தும், பாதிக்கப்பட்ட 275 வாக்குமூலங்களை விசாரணை செய்தும் முடிக்கப்பட்ட அறிக்கையினை ஒருவர் படிக்கும்போதும், இந்த அமர்வுகளைத் தொடர்ச்சியாக பார்த்தும் வரும் போதும், 1977 ஆம் ஆண்டில் ஜெயவர்த்தனவின் ஆக்ரோஷமான பேச்சினை உறுதிப்படுத்தும் வகையில் அறிக்கயினை வெளியிடவேண்டும் என்கிற அழுத்தம் சன்சொனி மீது பிரயோகிக்கப்பட்டிருந்தது என்பது இலகுவாகப் புரியவரும் என்று கூறுகிறார். சன்சொனி தனது அறிக்கையின் முழுவதிலும் தனிநாட்டிற்கான கோரிக்கையும், அதனை நோக்கிய வன்முறைகள் அல்லது வன்முறைகளுக்கான ஊக்கப்படுத்தல்களே இனவன்முறைக்குக் காரணமாக அமைந்தன என்று கூறிவந்தார். தம்மீது நடத்தப்பட்ட சிங்களக் காடையர்களின் தாக்குதல்களுக்கு தமிழர்களே பொறுப்பெடுக்க வேண்டும் என்று அவர் கூறினார். "வன்முறைகளுக்கான சூழ்நிலையினை நீங்களே உருவாக்கினீர்கள், அதனையே நீங்கள் பெற்றுக்கொண்டீர்கள் " என்று அவர் தமிழர்களைப் பார்த்துக் கூறினார். இதுதான் அவரது தீர்ப்பு. அவர் சொல்லாது விட்ட ஒரு விடயம் தான், "வன்முறைகளுக்கு நீங்கள் தகுதியுடையவர்கள் தான்" என்பது. "தமிழர்களுக்குச் சரியான பாடம் ஒன்றினைப் புகட்ட வேண்டும்" என்பதும் "தமிழர்கள் தாக்கப்படும்போது, மற்றையபக்கம் பார்த்துக்கொண்டு நில்" என்று பொலீஸாருக்குக் கட்டளையிடுவதுமே சுதந்திர இலங்கையில் அரசியல் இலட்சணமாகிவிட்டது. தமிழர்களால் முதன் முதலாக முன்னெடுக்கப்பட்ட அகிம்சை வழியிலான போராட்டத்திற்கும் சிங்களவர்கள் கொடுத்த பதில் இதுதான். 1956 ஆம் ஆண்டு ஆனி 5 ஆம் திகதி, தமிழுக்கும் உத்தியோகபூர்வ மொழி அந்தஸ்த்தினை வழங்குங்கள் என்று அன்றைய பிரதமர் பண்டாரநாயக்கவைக் கோரி, காலிமுகத்திடலில் கால்களை மடித்து பிரார்த்தனையில் ஈடுபட்ட சுமார் 200 தமிழர்கள் மீது சிங்களக் காடையர்கள் மிருகத்தனமாகத் தாக்குதல் நடத்தியபோது, அருகிலிருந்து பொலீஸார் எதுவுமே செய்யாது வேடிக்க பார்த்துக்கொண்டிருந்ததுடன், பலர் வேறு திசையில் பார்த்துக்கொண்டிருந்தனர். சத்தியாக்கிரகம் தமிழ் மக்கள் மீதான "பாடம் புகட்டும் தாக்குதல்களும்" பொலீஸாரின் பாராமுகமும் அன்று கொழும்பிலும், மறுநாள் கல்லோயாவிலும் இடம்பெற்றன. 1958 ஆம் ஆண்டு இதே "பாடம் புகட்டுதல்களும்" பாராமுகமும் இன்னும் பெரிய அளவில் இடம்பெற்றன. 1961 ஆம் ஆண்டின் சமஷ்ட்டிக் கட்சியினர் செய்த சத்தியாக்கிரக போராட்டத்தைக் கலைப்பதற்கும் சிறிமா இதே அரசியல் கலாசாரத்தையே பாவித்தார். ஜே ஆரை பொறுத்தவரை வன்முறை என்பது ஆர்ப்பாட்டங்களை அடக்க தேவையானதும், வீரியம் மிக்கதுமாகக் காணப்பட்டது. ஆடி, 1977 ஆம் ஆன்டு தனது அரசியல் எதிரிகள் மீது, குறிப்பாக சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் மீது வன்முறையை ஏவிவிட்டார். தான் செய்யப்போவது குறித்து அவர் முன்னரே அறிவித்தும் இருந்தார். 1956 ஆம் ஆண்டின் சத்தியாக்கிரக நிகழ்வுபற்றி புத்தகம் ஒன்றினை எழுதிய எஸ் பொன்னையா, சிங்களவரின் அரசியல் கலாசாரம் வன்முறையினை அடிப்படையாகக் கொண்டது என்பதற்கான சாட்சியம் ஒன்றினை குறிப்பிட்டிருந்தார். 1956 ஆம் ஆண்டு, ஆனி 5 ஆம் திகதி, காலை 9:30 மணிக்கும் 10:00 மணிக்கும் இடையிலான நேரத்தில் பாராளுமன்றத்தில் தனது தனிச்சிங்களச் சட்டத்தினை பிரகடணப்படுத்த காரில் வந்துகொண்டிருந்தார் அன்றைய பிரதமர் எஸ் டபிள்யூ ஆர் டி பண்டாரநாயக்க. காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளோரைக் கண்டதும் தனது காரினை அவர் நிறுத்தினார். சத்தியாக்கிரகிகள் மீது சிங்களக் குண்டர்கள் சரமாரியாகத் தாக்குதல் நடத்துவதைப் பார்த்து சிரித்துக்கொண்டே சில நிமிடங்கள் அவர் அங்கே நின்றிருந்தார். அங்கு கடமையில் நின்ற சிரேஷ்ட்ட பொலீஸ் அதிகாரியொருவர் பண்டாரநாயக்காவின் காரின் அருகில் வந்து, "தாக்குதல் நடத்தும் குண்டர்களைக் கலைத்து விடலாமா?" என்று கேட்டார். அதற்குப் பதிலளித்த பண்டாரநாயக்கா, "இல்லையில்லை, அவர்களைக் கலைக்க வேண்டாம். தமிழர்களுக்கு ஒரு பாடம் புகட்டப்பட வேண்டும்" என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். சிறிது நேரத்தின்பின்னர் தலையில் காயத்துடன் பாராளுமன்றம் வந்த அமிர்தலிங்கத்தைப் பார்த்து கேலியுடன் பேசிய பண்டாரநாயக்க, "போரில் ஏற்பட்ட விழுப்புண்களா?" என்று வினவினார். "தேர்தல்களின் பின்னர் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டும் பொலீஸாருக்கு விடுமுறை வழங்குங்கள்" 1977 ஆம் ஆண்டுத் தேர்தல்களின் பின்னர், அரச திணைக்கள வாகனங்களில் நாடு முழுவதும் பவனி வந்த ஜே ஆரின் ஆதரவாளர்கள் ஜே ஆரின் வெற்றியைக் கொண்டாடியதோடு, எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் மீதும் தாக்குதல்களை மேற்கொண்டனர். பொலீஸார் இவற்றைக் கண்டும் காணாததுபோல பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டனர். ஆவணி 77 இல் நடந்தவை இதற்குப் பின்னர் இடம்பெற்ற வன்முறைகளே. 1980 ஆம் ஆண்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கங்கள் மீதும் இதே பாணியிலான அரசியல் வன்முறைகளை ஜே ஆர் ஏவி விட்டார். தொழிற்சங்க தலைவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டதோடு, பல தொழிற்சங்க உறுப்பினர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். 1981 இலும் 1983 இலும் தமிழர்களுக்கு மேலும் பல பாடங்கள் சிங்களவர்களால் கற்றுக்கொடுக்கப்பட்டன. 1984 ஆம் ஆண்டு, பிரதம நீதியரசரான ஹேமா பஸ்நாயக்கவுக்கும் பாடம் புகட்டப்பட்டது. ஜெயவர்த்தனவை விமர்சித்தார் என்பதற்காக அவரது உத்தியோகபூர்வ இல்லம் சுற்றிவளைக்கப்பட்டு காடையர்களால் தக்கப்பட்டு அவரும் அச்சுருத்தப்பட்டார்.
  8. விசாரணைக் கமிஷன்களில் நம்பிக்கையிழந்த தமிழர்கள் நீதித்துறை மீதிருந்த தமிழர்களின் நம்பிக்கை இல்லாமற்போனது 1977 ஆம் ஆண்டு ஆவணியில் தமிழர்களுக்கெதிரான பொலீஸாரின் வன்முறைகளை மறைக்கத் துணைபோன குற்றத்திற்காக பொலீஸ் ஆய்வாளர் குருசாமி டெலோ அமைப்பினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அரசாங்கத்தால் அமைக்கப்படும் விசாரணைக் கமிஷன்களில் தமிழர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதைப் பறைசாற்றும் ஒரு நிகழ்வாகவே குருசாமியின் தண்டனை நிகழ்ந்திருந்தது. முக்கியமாக கண்துடைப்பிற்காக அமைக்கப்பட்ட சன்சொனி விசாரணைக் கமிஷன் அரசு எதிர்பார்த்ததையே செய்துமுடித்திருந்தது. ஆவணி 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் பொலீஸார் மேற்கொண்ட அட்டூழியங்களைப் பாராளுமன்றத்தில் பதிவுசெய்து, அவைதொடர்பாக விசாரணை நடத்தவேண்டும் என்று அமிர்தலிங்கம் கேட்டுக்கொண்டதன் பின்னர் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சன்சொனி தலைமையில் ஒரு விசாரணைக் கமிஷனை ஜெயவர்த்தன 1977 ஆம் ஆண்டு கார்த்திகை 9 ஆம் திகதி அமைத்திருந்தார். அமிர்தலிங்கத்தைப் பொய்யர் என்று நிறுவுவதற்கும், பொலீஸாரின் வன்முறை குறித்த அவரது தகவல்கள் யாவும் பொய்யானவை என்று நிறுவுவதற்கும் சன்சொனி விசாரணைக் கமிஷனை அரசும் பொலீஸாரும் மிக நேர்த்தியாகப் பாவித்துக் கொண்டனர். தனிநாட்டிற்கான கோர்ரிக்கையினை தமிழ் மக்களும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரும் தொடர்ச்சியாக முன்வைத்து வந்ததும், அதுநோக்கிய வன்முறைச் சம்பவங்களில் அவர்கள் ஈடுபட்டதும் சிங்கள மக்களை சினங்கொள்ள வைத்தது மட்டுமல்லாமல் ஆவணி வன்முறைகள் நடைபெறுவதற்கு ஏதுவான பதட்டமான சூழ்நிலையினை தமிழர்களே ஏற்படுத்தியிருந்தனர் என்றும் சன்சொனி கமிஷன் கூறியிருந்தது. முடிவாக, "நீங்கள் கேட்டுக்கொண்டதே உங்களுக்கு வழங்கப்பட்டது" என்று தமிழர்களுக்கு இந்தக் கமிஷன் பதிலளித்திருந்தது. சோல்பரி பிரபு ஆனால், இலங்கையின் நீதித்துரை மீதிருந்த நம்பிக்கையினை தமிழர்கள் ஏற்கனவே இழந்துவிட்டிருந்தனர். சோல்பரி அரசியலமைப்பின் பிரகாரம் சரத்து 29 இல் குறிப்பிடப்பட்டிருந்த சிறுபான்மையின மக்களுக்கான பாதுகாப்பினை வழங்குவதை இலங்கையின் நீதித்துறை முற்றாக மறுத்திருந்தது. சோல்பரி யாப்பின் சரத்து 29 இவ்வாறு கூறுகிறது, "ஒரு இனத்தையோ மதத்தையோ சார்ந்த ஒருவருக்கோ அல்லது ஒரு பிரிவினர்க்கோ வழங்கப்படும் அந்தஸ்த்து மற்றைய இன, மத பிரிவுகளைச் சேர்ந்த ஒருவருக்கோ அல்லது ஒரு பிரிவினருக்கோ வழங்கப்படும் அந்தஸ்த்தினைக் காட்டிலும் அதிகமாக இருக்க முடியாது" "பாராளுமன்றத்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்குமிடத்து அரசியலமைப்பில் மாற்றங்களைச் செய்யவியலும்" சோல்பரி யாப்பின் பிரகாரம் நீதிக்கு முறணான வகையில் பிரஜாவுரிமை பறிக்கப்பட்ட பல லட்சம் மலையகத் தமிழர்கள் விடயத்தில் நீதித்துறை தலையீடு செய்து தவற்றினைத் திருந்த்திக்கொள்ள இருவேறு சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டிருந்தன. முதலாவது தமிழர்களுக்கெதிராக சிங்கள அரசுகள் கொண்டுவந்த பாகுபாட்டு முறைகளைத் திருத்தக்கூடிய சந்தர்ப்பம். பதுர்தீன் எனும் மனிதர் ஆரம்பித்த வழக்கில் இலங்கை பிரஜாவுரிமைச் சட்டத்தில் புகுத்தப்பட்ட "சாதாரண வதிவாளர்" எனும் பதத்தினை நீதித்துறை பாவித்த விதம் பற்றியது. அரச வழக்கறிஞர்களின் கூற்றுப்படி மனுதாரரின் மனைவியும் பிள்ளைகளும் குறைந்தது 7 வருடங்களாவது இலங்கையில் வாழ்ந்திருந்தால் மட்டுமே பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்கும் தகமையினைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் வழக்கின் நீதிபதி பஸ்நாயக்கவோ, 7 வருடங்கள் தேவையில்லை, விண்ணப்பிக்கும் நேரத்தில் அவரது குடும்பம் அவருடன் இருந்தாலே போதுமானது என்று கூறி தீர்ப்பு வழங்கியிருந்தார். இதன்மூலம் சுமார் 50,000 தமிழர்கள் தமது பிரஜாவுரிமைகளை மீளப் பெற்றுக்கொள்ளும் வழி பிறந்திருந்தது. ஆனால் சுதாரித்துக்கொண்ட அரசு தனது பிரஜாவுரிமைச் சட்டத்தினை தனக்கு ஏற்றவகையில் மாற்றி இந்தச் சந்தர்ப்பத்தை இல்லாமலாக்கியது. இதன்மூலம் பல்லாயிரம் தமிழர்களுக்கு நீதித்துறையின் தலையீட்டினால் கிடைத்திருக்கவேண்டிய பிரஜாவுரிமை அரசால் தட்டிப் பறிக்கப்பட்டது. சோல்பரி அரசியலமைப்பினைப் பாவித்தே அரசு இதனைத் தனக்குச் சாதகமாக மாற்றியிருந்தது. சோல்பரி அரசியல் யாப்பின் பிரிவு 29 இன்படி முதன்முதலாக பதிவுசெய்யப்பட்ட வழக்கு கேகாலை மாவட்டத்தின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் கே ஜி எஸ் நாயர் என்பவரால் பதிவாளருக்கு எதிராகப் போடப்பட்டிருந்தது. தேர்தல் தொகுதியில் தன்னை ஒரு வாக்காளராக பதிவு செய்ய மறுத்தமைக்காகவே இந்த வழக்கு தாக்கல்செய்யப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி என் சிவஞானசுந்தரம், நாயரின் பெயர் வாக்காளர் பட்டியலில் மீளவும் சேர்க்கப்படவேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார். சோல்பரி யாப்பின் சரத்து 29 இன்படி ஒரு இனம் மற்றைய இனம் மீது நீதிக்குப் புறம்பான வகையில் சலுகைகளைப் பெறமுடியாது எனும் சரத்தினைப் பயன்படுத்தியே பிரஜாவுரிமைச் சட்டத்திற்கு மேலாகச் சென்று யாப்பின்பிரகாரம் நீதி வழங்கியிருந்தார். ஆனால், இந்த தீர்ப்பிற்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கொன்றை குடியகல்வு - குடிவரவு ஆணையாளர் மதநாயக்க பதிவுசெய்தார். இந்த வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகளான ஜயதிலக, புள்ளே மற்றும் சுவான் ஆகியோர் 1952 ஆம் ஆண்டு கேகாலை மாவட்ட நீதிபதியின் தீர்ப்பை உடைத்தெறிந்ததோடு பிரஜாவுரிமைச் சட்டம் எந்தவொரு இனப்பிரிவிற்கும் மற்றைய இனப்பிரிவுகளைக் காட்டிலும் அதிக சலுகைகள் வழங்கவில்லையென்றும், சோல்பரி யாப்பிற்கெதிராக பிரஜாவுரிமைச் சட்டம் பாவிக்கப்படவில்லையென்றும் தீர்ப்பு வழங்கினர். 1961 ஆம் ஆண்டு மார்கழியில் அரசால் வெளியிடப்பட்ட திறைசேரியின் சுற்று நிருபத்தின் அடிப்படையில் அரச சேவையில் எழுதுவிளைஞராகப் பணிபுரியும் ஒருவர் சம்பள உயர்வினைப் பெறவேண்டுமென்றால் சிங்கள மொழிப் பரீட்சையில் சித்தியடைந்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதன் பிரகாரம் அரச எழுதுவிளைஞராக இருந்த சி. கோடீஸ்வரன் அவர்களின் வருடாந்த சம்பள உயர்வுகள் அவர் சிங்கள மொழிப் பரீட்சையினை எழுதாதனால் தடுத்துவைக்கப்பட்டிருந்தன. ஆகவே, சோல்பரி யாப்பில் கூறப்பட்டதற்கு முரணான விதத்தில் இந்த சுற்றுநிருபம் அனுப்பட்டுள்ளதென்றும், ஆகவே தனது சம்பள உயர்வுகள் தடையின்றித் தனக்குக் கிடைக்கப்பெறவேண்டும் என்றும் கோரி கோடீஸ்வரன் அவர்கள் வழக்கொன்றினைத் தாக்கல் செய்திருந்தார். இந்த சுற்று நிருபத்தை அனுப்பும்படி கட்டளையிட்டவர் அன்றிருந்த அரச சேவைகள் அமைச்சரான பீலிக்ஸ் ஆர் டயஸ் பண்டாரநாயக்க என்பதுடன், தனிச்சிங்களச் சட்டத்தின் அடிப்படையிலேயே இந்தச் சுற்றுநிருபம் சகல அரச நிறுவனங்களுக்கும் கூட்டுத்தாபனங்களுக்கும் அனுப்பப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத் தக்கது. பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க கொழும்பு நீதிமன்றத்தில் தனது வழக்கினைப் பதிவுசெய்த கோடீஸ்வரன் சிறுபான்மையினமான தமிழினத்திலிருந்து தான் வந்துள்ளதால் சிங்களம் தெரிந்தாலன்றி சம்பள உயர்வு தரமுடியாதென்பது சோல்பரி யாப்பிற்கெதிரான செயற்பாடு என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், தனிச் சிங்களச் சட்டத்தின் மூலம் தமிழர்களின் பாரம்பரிய வாழிடங்களில் பணிபுரியும் சிங்கள அதிகாரிகள் தமிழில் பணிபுரியத் தேவையில்லை என்கிற அனுமதி இருக்கின்ற அதேவேளை, தமிழர்களின் பூர்விக்கத் தாயகத்தில் தனது சொந்த மொழியான தமிழில் பணிபுரியும் தமிழர்கள் கட்டாயம் சிங்கள மொழியினைக் கற்றிருக்கவேண்டும் என்கிற அழுத்தம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார். இது தமிழர்களைக் குறிவைத்தே கொண்டுவரப்பட்ட சதியென்றும் அவர் கூறியிருந்தார். ஆனால், இந்த வழக்கு அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்துகொண்ட அரச தலைமைச் சட்ட அதிகாரி, அரச பணியில் இருக்கும் ஒருவர் சம்பள உயர்வு தொடர்பாக அரசிற்கெதிராக வழக்குத் தக்கல் செய்யமுடியாது எனும் விவாதத்தை முன்வைத்து இவ்வழக்கிற்கெதிரான தடையொன்றினைக் கேட்டிருந்தார். அரச தலைமை சட்டவாளரின் தடைக் கோரிக்கையினை நிராகரித்த மாவட்ட நீதிபதி கோடீஸ்வரனுக்குச் சார்பாக தீர்ப்பளித்ததோடு சோல்பரி அரசியல் யாப்பிற்கு எதிராக தனிச் சிங்களச் சட்டம் இயங்குவதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், இத்தீர்ப்பிற்கெதிராக அரசு உச்சநீதிமன்றில் வழக்கொன்றைத் தாக்கல் செய்தது. அரசு சார்பில் வழக்காடிய வழக்கறிஞர்கள் கோடீஸ்வரனின் வழக்கு ஆங்கில சட்டங்களின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதால், சாதாரண ஊழியர் ஒருவர் அரசுக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியாது என்று வாதாடினர். ஆனால் கோடீஸ்வரனின் சார்பில் வழக்காடிய வழக்கறிஞர் ரங்கனாதன் மூல வழக்கு ரோமன் டச்சுச் சட்டத்தின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டதால் அரச ஊழியர் ஒருவர் அரசிற்கெதிராக வழக்காட முடியும் என்று வாதாடினார். வழக்கின் முடிவில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், வழக்கு ஆங்கில சட்டத்தின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதால் ஊழியர் ஒருவர் சம்பள விடயங்கள் தொடர்பாக அரசிற்கெதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியாது என்று தீர்ப்பளித்ததுடன் தனிச் சிங்களச் சட்டத்தினை இந்த நீதிமன்றத்தில் விவாதிக்கவேண்டிய தேவையும் இல்லையென்று கூறியிருந்தார். ஆனால் தொடர்ந்தும் போராடிய கோடீஸ்வரன், ஆளுநரால் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் முன்னிலையில் தனது வழக்கைக் கொண்டு சென்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் குழு, கோடீஸ்வரன் அரசிற்கெதிராக வழக்காடும் உரிமையினைப் பெற்றிருப்பதாகக் கூறித் தீர்ப்பளித்ததுடன், தனிச் சிங்களச் சட்டம் குறித்து வழக்கில் எதுவும் குறிப்பிடப்படாததால் இந்துதொடர்பாக தாம் தீர்ப்பெதுவும் வழங்கத் தேவையில்லை என்றும் கூறியது. மேலும், தேவையேற்படும் பட்சத்தில் உச்ச நீதிமன்றம் தனிச்சிங்களச் சட்டம் குறித்து விசாரிக்கலாம் என்று கூறியபோதும் இலங்கையரசு வழக்கை நீட்டிச் செல்வதில் ஆர்வம் காட்டியிருக்கவில்லை. கோடீஸ்வரன் விரும்பியிருந்தால் வழக்கினை மேலும் தொடர்ந்திருக்க முடியும். ஆனால், அரச நிர்வாக அமைச்சினால் விநியோகிக்கப்பட்ட சுற்று நிருபத்தில் மாற்றங்களைச் செய்து தமிழர்கள் அனைவருக்கும் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சம்பள உயர்வுகளை மீள வழங்க அரசு ஒத்துக்கொண்டதனால் அவரும் தொடர்ந்து வழக்காடுவதை நிறுத்திக்கொண்டார். இந்த மூன்று நீதிமன்றங்களிலும் முன்வைக்கப்பட்ட வாதங்களின்படி தனிச்சிங்களச் சட்டம் செல்லுபடியற்றதாக நிரூபிக்கப்பட்டதுடன், அதுதொடர்பாக விவாதங்களையும் இம்மூன்று நீதிமன்றங்களும் தவிர்த்தே வந்தன. ஆனாலும், இந்த நீதிமன்றங்களின் கருத்தினை உதாசீனம் செய்த அரசு தொடர்ந்தும் தனிச் சிங்களச் சட்டம் நடைமுறையில் இருக்கும் என்று அறிவித்ததுடன், நீதித்துறையின் சுயாதீனத்தையும் கேள்விக்குள்ளாக்கியது. 1970 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த சிறிமா, நீதிமன்ற தீர்ப்பினை மீறி, தனிச்சிங்களச் சட்டத்தினை 1972 ஆம் ஆண்டு யாப்பினுள் உள்வாங்கியதோடு, சோல்பரி அரசியல் யாப்பிலிருந்தும் விலகிக்கொண்டார். 1972 ஆம் ஆண்டு யாப்பின்படி பாராளுமன்றா அதிகாரம் பொறுந்திய அமைப்பாக மாறியதுடன், ஆளுநரூடாக வழக்குத் தாக்கல் செய்யும் பிரிவி செயன்முறையினையும் முற்றாக இல்லாமலாக்கியிருந்தது. அமிர்தலிங்கத்திற்கெதிராக பதிவுசெய்யப்பட்ட ட்றையள் அட் பார் வழக்கில் 1972 ஆம் ஆண்டின் குடியரசு யாப்பு இரு முக்கிய விடயங்களில் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருந்தது. வழக்கறிஞர் திருச்செல்வம் இதுதொடர்பாக வாதிடுகையில் சோல்பரி யாப்பின் பிரிவு 29.4 இன்படி பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம் யாப்பின் சரத்துக்கள் மாற்றப்படலாமேயன்றி, யாப்பினை முற்றாக மாற்ற முடியாது என்று கூறியிருந்தார். அதற்குப் பதிலளித்த அரச தலைமை வழக்கறிஞர் ஐக்கிய முன்னணி அரசாங்கம் புதிய அரசியல் யாப்பினை உருவாக்கும் மக்கள் ஆணையினைப் பெற்றிருப்பதாகக் கூறினார். இந்த வழக்கை விசாரித்து மூன்று நீதிபதிகளும் இதுதொடர்பாக கருத்துத் தெரிவிக்க மறுத்ததுடன், திருச்செல்வம் முன்வைத்த இன்னுமொரு முக்கிய விடயத்தையும் வேண்டுமென்றே தட்டிக்கழித்தனர். திருச்செல்வத்தின் வாதத்தின்படி ஐக்கிய முன்னணி அரசாங்கம் மக்கள் ஆணையினைப் பெற்றிருந்தாலும் கூட, அது வெறுமனே சிங்கள மக்களின் ஆணை மட்டுமேயன்றி , இன்னொரு தேசிய இனமான தமிழ் மக்களின் ஆதரவு இந்த புதிய அரசியல் அமைப்புருவாக்கத்திற்குக் கிடைக்கவில்லை என்று வாதிட்டிருந்தார். தமிழ் மக்கள் சமஷ்ட்டி முறையிலான ஆட்சியொன்றிற்கு 1970 ஆம் ஆண்டு தேர்தல்களில் வாக்களித்திருந்தனர் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. இந்தவிடயத்தை முற்றாகப் புறக்கணித்த மூன்று நீதிபதிகளும் அமிர்தலிங்கமும் ஏனையவர்களும் கைதுசெய்யப்பட்ட அவசரகாலச் சட்டம் காலவதியாகிவிட்டதனால், அவர்களைத் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைத்திருக்க முடியாது என்று மட்டுமே தீர்ப்பளித்தனர். மேலும், இந்த நீதிமன்றம் யாப்பின் பிரகாரம் உருவாக்கப்படாததனால், குடியரசு யாப்பின் ஏற்புடைமை குறித்து தம்மால் கருத்தெதுவும் கூறமுடியாதென்று கைவிரித்து விட்டனர். உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கெதிராக வழக்கொன்றைத் தாக்கல் செய்த அரச பிரதான வழக்கறிஞர், உயர் நீதிமன்றம் கூறுவதுபோல அவசரகாலச் சட்டம் வழக்கற்றுப்போனாலும் கூட, உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி அது இன்னமும் நடைமுறையிலேயே இருக்கிறது. ஆகவே இந்த நீதிமன்றமும் யாப்பின்படியே உருவாக்கப்பட்டிருக்கிறது, ஆகவே அமிர்தலிங்கத்திற்கெதிரான வழக்கு தொடர்ந்தும் நடைபெறவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், திடீரென்று சட்ட மாதிபர் வழக்கினை வாபஸ் வாங்கியதால் 1972 ஆம் ஆண்டு குடியரசு யாப்பின் ஏற்புடைமையினை உரசிப்பார்க்கும் சந்தர்ப்பம் ஒன்று அரசால் திட்டமிட்ட ரீதியில் தவிர்க்கப்பட்டிருந்தது. 1976 ஆம் ஆண்டு புரட்டாதி 20 ஆம் திகதி அமிர்தலிங்கத்திற்கெதிரான வழக்கின் தீர்ப்பு நீதிபதி ஜே. எப். ஏ. சோசா அவர்களால் வழங்கப்பட்டது. இந்த தீர்ப்புப்பற்றி தந்தை செல்வாவிடம் கேட்டேன். வெளிப்படையாக எதனையும் சொல்ல மறுத்த செல்வா அவர்கள் ஒரு விடயத்தைப் பொதுவாகச் சொன்னார். இலங்கையில் தமிழ் மக்கள் பாராளுமன்றத்தினூடாகவோ, நீதித்துறை ஊடாகவோ அல்லது அதிகாரத்திலிருப்பவர்களூடாகவோ தமக்கான நீதியை ஒருபோதுமே பெற்றுவிட முடியாதென்பது தெரிகிறது என்று மட்டும் கூறினார். "தமிழர்கள் இலங்கையின் நீதிமன்றங்கள் மீது நம்பிக்கையிழந்துவிட்டார்கள். சோல்பரி யாப்பின் பிரிவு 29 இன்படி சிறுபான்மையின மக்களுக்கான நலன்கள் பாதுகாக்கப்படுகின்றனவா என்பதைக் கண்டறிய இலங்கையில் உள்ள எந்த நீதிமன்றமும் தயாராக இல்லை" என்று தந்தை செல்வா கூறினார்.
  9. நீங்கள் கூறுவது சரியாக இருக்கலாம் சோழன். ஆனால் இரத்மலானை விமானத் தகர்ப்பு என்று தேடினால் இதுதான் வருகிறது.
  10. குருசுவாமியின் கொலை அதிகரித்து வந்துகொண்டிருந்த முறுகல் நிலை, டெலோ அமைப்பினரால் பொலீஸ் பரிசோதகர் குருசுவாமி 1979 ஆம் ஆண்டு ஆடி 1 ஆம் திகதி கொல்லப்பட்டபோது மேலும் தீவிரமாகியது. 1977 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தி இடம்பெற்ற தமிழர்களுக்கெதிரான பொலீஸ் மற்றும் இராணுவத்தினரின் வன்முறைகளை விசாரிக்கவென்று அமைக்கப்பட்ட சன்சொனி விசாரணைக் கமிஷனின் முன்னால் அழைக்கப்பட்ட இரு தமிழ் பொலீஸ் அதிகாரிகளில் குருசுவாமியும் ஒருவர். மற்றைய அதிகாரியான தாமோதரம்பிள்ளை கமிஷனின் முன்னால் பேசும்போது யாழ்ப்பாண பொலீஸ் நிலையத்தைச் சேர்ந்தவர்களே யாழ்ப்பாணத்தில் கடைகளுக்கும் சந்தைக் கட்டிடத் தொகுதிக்கும் தீவைத்ததாகக் கூறினார். அவர்கள் எவரும் சீருடையில் இருக்கவில்லையென்றும், எவரும் தமது அடையாள இலக்கத் தகடுகளை அணிந்திருக்கவில்லை என்றும் மேலும் கூறினார். முன்னாள் பிரதம நீதியரசர் சன்சொனி யாழ்ப்பாணம் சந்தை ஆவணி 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் பொலீஸார் நடத்திய வன்முறைகளில் இருமுக்கிய விடயங்களில் பொலீஸாரைப் பாதுகாக்கும் வகையில் குருசுவாமி சாட்சியமளித்திருந்தார். முதலாவது, யாழ்ப்பாண பழைய சந்தைக்குத் தீமூட்டிய விவகாரம். இந்த தீவைப்புச் சம்பவத்தில் பொலீஸார் எவரும் ஈடுபடவில்லை என்று அவர் கூறினார். இரண்டாவது யாழ்ப்பாணத்தில் வாழும் சிங்களவர்கள் தாக்கப்படுவதாகவும், யாழ்ப்பாணத்தில் அமைந்திருக்கும் நாகவிகாரை தமிழர்களால் எரியூட்டப்பட்டதாகவும் வேண்டுமென்றே பொலீஸாரால் அனுப்பப்பட்ட செய்தி. யாழ்ப்பாணப் பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரியான நாணயக்கார அனுப்பிய இந்த விஷமத்தனமான அறிவிப்பை அவர் செய்யவில்லை என்று குருசுவாமி கமிஷனிடம் கூறினார். யாழ்ப்பாண உதவிப் பொலீஸ் அத்தியட்சகர் ரொனி குணசிங்கவின் நெருங்கிய தோழரான குருசுவாமி தனது பொலீஸ் நண்பர்களைக் காப்பதில் மிகுந்த கவனம் எடுத்திருந்தார். குருசுவாமியின் வாக்குமூலம் பத்திரிக்கைகளில் வெளிவந்தபோது தமிழர்கள் மிகவும் ஆத்திரமடைந்தனர். பல தமிழர்கள் அவரைத் தமிழினத் துரோகி என்று அழைக்கத் தலைப்பட்டனர். தமிழர்களின் வெறுப்பினை அவர் சம்பாதித்துக்கொண்டதால் அவரின் பாதுகாப்பிற்கென்று தானியங்கிக் கைத்துப்பாக்கியொன்றும் அவருக்கு பொலீஸாரால் வழங்கப்பட்டது. நடராஜா தங்கவேல் (தங்கத்துரை) தங்கத்துரையின் அமைப்பு குருசுவாமியைக் கொல்லத் தீர்மானித்தது. குருசுவாமியைக் கொல்லும் பணி குட்டிமணி, ஜெகன் மற்றும் ஒபரோய் தேவனிடம் வழங்கப்பட்டது. கொழும்பில் அமைந்திருக்கும் உல்லாச விடுதியான ஒபரோய் ஹோட்டலில் சிலகாலம் தேவன் கடமையாற்றி வந்ததினால் அவர் ஒபரோய் தேவன் என்று அழைக்கப்பட்டு வந்தார். குருசுவாமியைச் சுட்டுக் கொல்லும் பொறுப்பு தேவனுக்கு வழங்கப்பட்டது. யாழ்ப்பாணம் ஓட்டுமடம் பகுதியில் குருசுவாமியின் இல்லம் அமைந்திருந்தது. குருசுவாமியைக் கொல்லும் குழு அவரது வீட்டை நெருங்கிய நேரத்தில், அருகிலுள்ள வீடொன்றில் திருமண நிகழ்வொன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஒலிபெருக்கியில் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டுக்கொண்டிருக்க இன்னொரு புறத்தில் வெடிகளும் கொழுத்தப்பட்டன. குருசுவாமியின் வீட்டுக் கதவை குட்டிமணி தட்டினார். குருசுவாமி கதவினருகில் வரும்போது அவரைச் சுட்டுக் கொல்வதே தேவனுக்கு வழங்கப்பட்டிருந்த பணி. யன்னலின் அருகில் பதுங்கியிருந்த தேவன், வீட்டினுள் இருந்து கதவுநோக்கி குருசுவாமி வருவதைக் கண்டதும் பதட்டமடையத் தொடங்கினார். அவரை நடுக்கம் பற்றிக்கொண்டது. அதுவே தேவனின் முதலாவது கொலை. "சுடடா" என்று தேவனைப் பார்த்துக் கட்டளயிட்டார் குட்டிமணி. தேவனுக்கு இன்னமும் நடுக்கம் நின்றிருக்கவில்லை. "டேய், சுடடா" மீண்டும் குட்டிமணி தேவனைப் பார்த்துக் கத்தினார். இந்தமுறை தேவன் சுட்டார். அருகில் வெடிச்சத்தம் காதைப் பிளந்துகொண்டிருக்க, தாம் வந்த சைக்கிள்களில் ஏறி மறைந்தது குருசுவாமியைக் கொல்ல வந்த குழு.
  11. ஒருங்கிணையும் சிங்கள இனவாதிகள் பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் செயல்களை நியாயப்படுத்தி வாதிடுவதற்கென்று ஒரு சிறந்த பேச்சாளர் இருந்தார். அவரது பெயர் ஜி எம் பிரேமச்சந்திர. அவர் பாராளுமன்றத்தில் அரசுக்கு முன்வைத்த கோரிக்கையில் அனைத்து பிரிவினைவாத அமைப்புக்களையும் உடனடியாகத் தடைசெய்யவேண்டும் என்று கேட்டிருந்தார். சகல சிங்கள இனவாத அமைப்புக்களுக்கும் இதன்மூலம் செயற்படுவதற்கான அழைப்பு விடுக்கப்பட்டது. இவற்றுள் முக்கியமானது மூன்று நிக்காயக்களின் சங்க சபா என்றழைக்கப்பட்ட மூன்று முக்கிய பெளத்த பீடங்களின் பெளத்த பிக்குகளும் உள்ளடங்கிய பெளத்த இனவாத அமைப்பு. இவ்வமைப்பு அரசுக்கு விடுத்த கோரிக்கையில் சிங்களவர்களுக்கெதிராகவும், நாட்டிற்கெதிராகவும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பிரச்சாரம் செய்யும் அனைவருக்கும் எதிராக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டிருந்தது. இவ்வமைப்பைத் தொடர்ந்து நாட்டிலுள்ள அனைத்து சிங்கள பெளத்த இனவாத அமைப்புக்களும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரைக் கண்டிக்கத் தொடங்கியதுடன் அமிர்தலிங்கத்தின்மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். இவர்கள் சிலரின் தீர்மானங்கள் அமிர்தலிங்கத்தை "துரோகி" என்று விழித்திருந்தன. ஐக்கிய பெளத்த மண்டலய எனும் பெளத்த சிங்கள அமைப்பு தனிநாட்டிற்கெதிரான தீர்மானத்தினை நிறைவேற்றியது. அஸ்கிரிய பீடத்தின் மாநாயக்கர் பலிபான சந்தானந்த தேரரும், மல்வத்தை பீடத்தின் அனுனாயக்கரான ரம்புக்வல்ல சிறி சோபித தேரரும் இத்தீர்மானங்களுக்கு தமது ஆதரவினைத் தெரிவித்திருந்ததுடன், தனிநாட்டிற்கான கோரிக்கையினையும் வெகுவாகக் கண்டித்திருந்தனர். சிங்கள ஆங்கில நாளிதழ்கள் சிங்களவரின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டு வந்ததுடன் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கும் தமிழருக்கும் எதிரான செய்திகளையும் கருத்துக்களையும் தாங்கி வந்தன. சிங்களப் பத்திரிக்கைகள் தமது ஆசிரியர் தலையங்கத்தில் சிங்களவர்களின் நலன்களைப் பாதுகாக்கும் பொருட்டு தமிழர்கள் செய்யவேண்டியவை என்ன என்கிற தலைப்பிலும் தமிழர்கள் தமது தனிநாட்டுக் கனவினை ஏன் கைவிடவேண்டும் எனும் தலைப்பிலும் வெளியிடப்பட்டன. அரச ஆதரவிலான டெயிலி நியூஸ் பத்திரிக்கை தனது ஆசிரியர்த் தலையங்கம் ஒன்றில் "தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் தமது தனிநாட்டுக் கனவினை தூக்கிக் குப்பையில் போடவேண்டும்" என்று கூறியிருந்தது. "பிரிவினவாதகளான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தமது தனிநாடான தமிழ் ஈழத்திற்கான கோரிக்கையினை முன்வைப்பதனை உடனடியாக நிறுத்த வேண்டும். பயங்கரவாத நடவடிக்கைகள், சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரிகளைக் கொல்லுதல், வங்கிகளைக் கொள்ளையிடல், அச்சுருத்தல்களில் ஈடுபடுதல் ஆகிய நடவடிக்கைகளை உடனடியாகக் கைவிட வேண்டும்" என்றும் அது கூறியிருந்தது. தனது கட்டுப்பாட்டினை இழந்த அமிர்தலிங்கம் தமது அரசியல்த் தலைவர்களைப் போலவே சிங்களப் பத்திரிக்கையாளர்களும் தமிழர்களின் உணர்வுகளுக்கு எந்தவித முக்கியத்துவமும் கொடுக்க விரும்பவில்லை. அமிர்தலிங்கத்தை சிங்களவர்களின் நலன்களுக்கு அடிபணியவைக்கும் தமது முயற்சிகள் மொத்தத் தமிழ்ச் சமூகத்தின்மீது, குறிப்பாக தமிழ் இளைஞர்கள் மீது எவ்வகையான தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பதனை அவர்கள் ஒருபோதுமே எண்ணிப்பார்க்க விரும்பியதில்லை. தமது அழுத்தங்களுக்கு அமிர்தலிங்கத்தைப் பணியவைக்க அவர்கள் எடுக்கும் முயற்சிகள் தமிழர்கள் முன்னால் அவரை கீழ்நிலைக்குத் தள்ளிவிடும் என்பதை அவர்கள் தெரிந்திருந்தும் வேண்டுமென்றே அதனைச் செய்தார்கள். 1978 ஆம் ஆண்டு தமிழ் இளைஞர் பேரவையின் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பல பேச்சாளர்கள் அமிர்தலிங்கம் சிங்களவர்களுடன் மிகவும் மென்மையாக நடதுகொள்வதாக விமர்சித்திருந்தனர். கூட்டத்திற்குத் தலைமை வகித்த சந்ததியார் பேசும்போது "தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது தேர்தல் வெற்றிக்காகவே தமிழ் ஈழம் எனும் கோரிக்கையினை முன்வைக்கிறார்கள்" என்று குற்றஞ்சாட்டியிருந்தார். தனது பேச்சின் முடிவில்,"இனிமேல் தமிழ் இளைஞர் பேரவை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியிடமிருந்து பிரிந்து தனித்தே இயங்கும்" என்று கூறினார். மாவை சேனாதிராஜா இன்று தமிழ் இளைஞர் பேரவையின் இந்த தனித்தியங்கும் முடிவை தனது ஆதரவாளரான மாவை சேனாதிராஜாவைப் பாவித்துத் தடுத்துவிடலாம் என்று அமிர்தலிங்கம் நினைத்தார். சிங்களவர்களிடமிருந்து எழுந்து வந்த கடுமையான அழுத்தத்தினையடுத்து வன்முறைகளைக் கண்டிப்பதாகக் கூறிய அமிர்தலிங்கம், தமிழ் ஆயுத அமைப்புக்களிடமிருந்தும் விலகி நடக்கத் தொடங்கினார். இது, இளைஞர் அமைப்புக்கள் மீது அவருக்கிருந்த செல்வாக்கினை சிறிது சிறிதாக இழக்கக் காரணமாகியது. 1979 ஆம் ஆண்டின் முதற்பாதியில் டெலோ அமைப்பு வீரியமாகச் செயற்பட்டு வந்தது. மார்கழி 13 ஆம் திகதி தொண்டைமானாறு பகுதியைச் சேர்ந்த பொலீஸ் உளவாளி ஐயாசாமி சிவராஜாவை டெலோ இயக்கம் கொன்றது. மாசி 1 ஆம் திகதி பொலீஸ் கொன்ஸ்டபிள் ஞானசம்பந்தம் என்பவர் கொக்குவில்ப் பகுதியில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார். பங்குனி 21 ஆம் திகதி இன்னொரு பொலீஸ் கொன்ஸ்டபிள் சிவநேசன் என்பவர் வல்வெட்டித்துறையில் கொல்லப்பட்டார்.ஆனி 30 ஆம் திகதி தொண்டைமனாற்றினைச் சேர்ந்த பொலீஸுக்குத் தகவல் வழங்கும் கணவன் மனைவியான சுவர்ணராஜா தம்பதிகளை டெலோ கொன்றது. மாவை சேனாதிராஜா தமிழ் இளைஞர் பேரவையினை தன்பக்கம் மெதுவாகத் திருப்பிக் கொண்டாலும்கூட, அவ்வமைப்பில் செல்வாக்கு மிகுந்தவர்களாக விளங்கிய பல உறுப்பினர்களை அவரால் தன்பக்கம் இழுத்துக்கொள்ள முடியாமற்போனது. இவர்களுள் சந்ததியார், இரா வாசுதேவா, இறைக்குமரன், யோகனாதன் போன்றோர் தனித்து இயங்கி வந்ததுடன் பின்னாட்களில் ஆயுத அமைப்புக்களின் தலைவர்களாகவும் மாறிப்போனார்கள். சிறிதுகாலம் தமிழ் இளைஞர் பேரவை - விடுதலை அணி என்கிற பெயரில் இயங்கிவந்த இவர்கள் உமாமகேஸ்வரன் 1981 ஆம் ஆண்டு புளொட் அமைப்பினை உருவாக்கியபோது அதில் தம்மையும் இணைத்துக்கொண்டார்கள். டெலோ அமைப்பினரது செயற்பாடுகள் ஜெயவர்த்தனவை ஆத்திரப்பட வைத்திருந்ததுடன், சிங்கள மக்களின் உணர்வுகளையும் வெகுவாகப் பாதித்திருந்தது. ஐரோப்பாவில் வசித்துவந்த இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர்கள் அமெரிக்காவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு செயற்பட்ட விதமும் சிங்களவர்களுக்கு எரிச்சலையூட்டியிருந்தது. இலங்கையில் பொது எழுதுவிளைஞர்கள் ஒன்றியத்தின் முன்னாள்த் தலைவரும், பின்னர் வழக்கறிஞராகி பிரித்தானிய மற்றும் இலங்கை வழக்காடு மன்றங்களில் வழக்குரைஞராகவும் பணிபுரிந்து ஒரு காலத்தின் சம்பியாவின் மாவட்ட நீதிபதியாக கடமையாற்றிய கிருஷ்ணா வைகுந்தவாசன் அவர்கள் அமெரிக்காவில் நடைபெற்ற வழக்கறிஞர்கள் மாநாட்டில் இங்கிலாந்தின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டிருந்தார். கிருஷ்ணா வைகுந்தவாசன் 1978 ஆம் ஆண்டு ஐப்பசி 5 ஆம் திகதி டெயிலி நியூஸ் பத்திரிக்கையின் வெளிநாட்டுச் செய்திப் பிரிவிற்கு வந்த உடனடிச் செய்தியொன்று மிகுந்த பரபரப்பாகப் பேசப்பட்டது. ரொயிட்டர்ஸ் செய்திச்சேவையூடாக ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து இலங்கையர்களுக்காக அனுப்பப்பட்ட செய்தி என்று தலைப்பில் அது வந்திருந்தது. சுமார் 150 நாடுகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஐக்கிய நாடுகள் சபையில், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேச எழுந்த தருணத்தில் இலங்கையின் சிறுபான்மைத் தமிழ் இனத்தைச் சேர்ந்த ஒருவர் தான் இலங்கையில் தமிழ் மக்கள் மேல் சிங்கள அரசு செய்துவரும் கொடுமைகளைக் கண்டிப்பதாக முழக்கமிட்டார். ஆனால், அவர் முழக்கமிடத் தொடங்கிய சில வினாடிகளில் அவரது ஒலிவாங்கியின் இணைப்பு மறுக்கப்பட்டதுடன் அவரைக் காவலர்கள் அங்கிருந்து அகற்றிச் சென்றனர். ஐக்கிய நாடுகள் சபையில் சபையில் கவனயீர்ப்பில் ஈடுபட்ட அந்த தமிழர் தன்னை கிருஷ்ணா என்று அறிமுகப்படுத்தியிருந்ததோடு, சுமார் 25 லட்சம் மக்களைக் கொண்ட, இந்தியாவிற்கும் சிங்களவர்களின் நாட்டிற்கும் இடையில் அமைந்திருக்கும் தமிழ் ஈழம் எனும் தேசத்தை தான் பிரதிநித்துவம் செய்வதாகவும் கூறியிருந்தார். "தமிழர்கள் மேல் சிங்களவர்களின் தேசம் இனக்கொலையொன்றினைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது" என்று அவர் முழக்கமிட்டு முடியும்போது அவரது ஒலிவாங்கியின் இணைப்புத் துண்டிக்கப்பட்டது. ரொயிட்டர்ஸ் செய்தி நிறுவனம் இந்த சம்பவம் குறித்து தொடர்ச்சியாகச் செய்தி வெளியிட்டு வந்தது. அதன் இன்னொரு செய்தி பின்வருமாறு கூறியது, "இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் சாகுல் ஹமீட் பேசும்போது, "எனக்கு முன்னால் பேசிய பேச்சாளருக்கு முதலில் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர் எனது நேரத்தில் ஒரு பகுதியினை எடுத்துக்கொண்டாலும் கூட, சபையில் சலசலப்பை ஏற்படுத்தி எனது பேச்சிற்கான முன்னுரையை வழங்கிவிட்டுச் சென்றிருக்கிறார்" என்று அச்சம்பவத்தின் தக்கத்தை குறைக்க எத்தனித்தார்" என்று கூறியது. அச்செய்தியின் இறுதிப் பகுதி பின்வருமாறு கூறியது. "கவனயீர்ப்பில் ஈடுபட்ட அந்த நபரை விசாரித்தபோது அவர் இலங்கையைச் சேர்ந்த கே வைகுந்தவாசன் என்று அடையாளம் காணப்பட்டதாக ஐ நா பேச்சாளர் தெரிவித்தார். முன்னாள் நீதிபதியான அவர் தற்போது லண்டனில் பணிபுரிந்துவருந்துவருகிறார். அவரது வதிவிட விபரங்கள் தெரியவில்லை. சபையினுள் நுழையும்போது ஏனைய அதிதிகளுடன் அவரும் நுழைந்து வந்துள்ளதனால் அவர் தனது அடையாளம் தொடர்பான அனைத்துச் சோதனைகளும் மிகவும் நுட்பமாகக் கடந்து வந்திருக்கிறார் என்பது தெரியவருகிறது. ஐ நா வின் மாநாட்டு மண்டபத்தில் இராஜதந்திரிகளும் அவர்களது விருந்தினர்களும் அமரும் பகுதியில் அமர்ந்துகொண்ட அவர் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேசுதற்கு அழைக்கப்பட்ட வேளை மேடையில் திடீரென்று ஏறி பேசத் தொடங்கியிருக்கிறார். ஐ நா சபையின் பேச்சாளர் கூறும்போது அவரை மண்டபத்திற்கு வெளியே அழைத்துச் சென்றதாகவும், இனிமேல் பிரவேசிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாகவும் கூறியிருக்கிறார். மேலும், வைகுந்தவாசன் அமெரிக்காவில் செய்தியாளர் ஒருவருடன் பேசும்போது நியுயோர்க் நகரில் நடைபெறும் அமெரிக்க வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநாட்டில் பங்குபெற தான் வந்திருந்ததாகக் கூறிய அவர், தமிழரின் அவலங்களை உலகறியச் செய்து அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவளிக்கவே ஐ நா சபையில் தான் அவ்வாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டதாகவும் கூறினார்". வைகுந்தவாசனின் பேச்சின் முழு வடிவம், "மதிப்பிற்குறிய தலைவர் மற்றும் உலக நாடுகளின் அதிபர்களே! அடக்குமுறைக்கு உள்ளான ஈழத் தமிழர்கள் போன்ற சிறுபான்மையின மக்களுக்கு இந்த உயரிய சபையில் தம்மை பிரதிநிதித்துவம் செய்ய முடியவில்லையென்றால், அவர்கள் எங்குதான் போவார்கள்? எனது பெயர் கிருஷ்ணா, நான் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே அமைந்திருக்கும் சுமார் இரண்டரை மில்லியன் தமிழ் மக்களைக் கொண்ட தமிழ் ஈழம் எனும் தேசத்திலிருந்து வந்திருக்கிறேன். தமிழ்த் தேசத்தை முற்றாக அழித்துவிடும் நோக்கில் ஒரு திட்டமிட்ட இனக்கொலையினை சிங்கள அரசு ஈழத் தமிழர்கள் மேல் ஏவிவிட்டிருக்கிறது". "தமிழர்களின் பிரச்சினை இந்திய பிராந்தியத்தின் அமைதியினைக் குலைக்கும் நிலைக்கு வளர்ந்திருக்கிறது. உலக நாடுகளின் தலைவர்களாகிய நீங்கள் உடனடியாக எமது பிரச்சினையில் தலையிட்டு ஒரு தீர்விற்கு உழைக்காவிட்டால் ஈழத் தமிழரின் பிரச்சினையும் மிக விரைவில் இன்னொரு பாலஸ்த்தீனமாகவோ அல்லது சைப்பிரஸாகவோ மாற வாய்ப்பிருக்கிறது. ஆகவே, நாங்கள் உங்களின் உதவியினை வேண்டி நிற்கிறோம். மிக்க நன்றி ! அனுமதியின்றி எனது பேச்சினை இங்கே நிகழ்த்தியதற்காக மன்னிப்புக் கோருகிறேன். நெடுநாள் வாழ்க தமிழ் ஈழம் !!!". இந்தச் சம்பவம் குறித்து வைகுந்தவாசனையும் சாகூல் ஹமீதையும் நான் தனித்தனியாகச் செவ்வி கண்டேன். என்னிடம் பேசிய வைகுந்தவாசன் தனது நோக்கமெல்லாம் தமிழரின் அவலங்களை உலகறியச் செய்வதுதான் என்றும், அதற்காக அதனை தான் மிகவும் திட்டமிட்டு நிகழ்த்தியதாகவும் கூறினார். ஹமீத் என்னிடம் பேசும்போது, அந்த அசாதாரண சூழ்நிலையினை தணிக்கவேண்டிய தேவை தனக்கு இருந்ததனால் தான் மிகவும் இயல்பாக நடந்துகொள்ள எத்தனித்ததாகக் கூறினார். தான் இயல்பாக நடந்துகொண்டமைக்காக பலராலும் கெளரவப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். ஆனால், கொழும்பு அரசாங்கமோ கொதித்துப் போயிருந்தது. வைகுந்தவாசனின் செயலை அமிர்தலிங்கம் வரவேற்றிருந்ததனால் தனது ஆத்திரம் முழுதையும் அவர்மீதே கொழும்பு அரசாங்கம் காட்டியது. அமிர்தலிங்கத்தின் அறிக்கை இவ்வாறு கூறியது, " திரு வைகுந்தவாசன் அவர்கள் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான தமிழ் ஈழத் தனிநாட்டின் தேவையினையும், நவ காலணித்துவவாதிகளான சிங்களவர்களிடமிருந்து தமிழ்த் தேசத்தின் விடுதலைக்கான தேவையினையும் மிகச் சுருக்கமாக சர்வதேச அவையில் கொண்டுவந்திருக்கிறார். எம்முன்னால் உள்ள இன்றைய தேவை என்னவென்றால் சர்வதேசத்தின் முன்னால் தமிழர்களின் போராட்டம்பற்றி பிரச்சாரம் செய்வதுதான். இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேசுவதற்கு முன் மேடையில் வைகுந்தவாசன் பேசியதன் மூலம் உலக வரைபடத்தில் தமிழ் ஈழத்தினையும் அவர் இடம்பெறச் செய்திருக்கிறார்" என்று அவ்வறிக்கை கூறியது. இந்த விவகாரத்தை பாராளுமன்றத்தில் கொண்டுவந்து விவாதித்த எதிர்க்கட்சியினர், இந்த சம்பவம் சிங்களவர்களின் அதிகாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறினர். உலகத்தின் கண்களில் சிங்களவர்கள் அடக்குமுறையாளர்களாக இதன்மூலம் காட்டப்பட்டிருப்பதாக அவர்கள் மேலும் கூறினார்கள். மசாசுசெட்ஸ் தீர்மானம் 1979 ஆம் ஆண்டு வைகாசி 10 ஆம் திகதி அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலத்தின் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி அமெரிக்க ஜனாதிபதியும், காங்கிரஸின் உறுப்பினர்களும் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பாவித்து இலங்கையில் தமிழர்களுக்கெதிராக சிங்கள அரசுகளினால் நிகழ்த்தப்பட்டுவரும் மனிதாபிமானமற்ற செயற்பாடுகளையும், மனிதவுரிமை மீறல்களையும் உடனடியாக முடிவிற்குக் கொண்டுவரவேண்டும் என்று கேட்டிருந்தது. இதுவும் ஜெயவர்த்தனவையும் சிங்கள மக்களை வெகுவாக ஆத்திரப்பட வைத்தது. சமர்வில் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினரான மேரி இ ஹவீ என்பவரால் முன்வைக்கப்பட்ட இத்தீர்மானத்தில் சுமார் 8000 சதுர மைல்களைக் கொண்ட தமிழ் ஈழம் எனும் நிலப்பரப்பில் வாழும் சுமார் 30 லட்சம் தமிழ் மக்கள் இலங்கையில் சிங்களவர்களால் அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டு வாழ்வதாகக் கூறியிருந்தார். மேலும் இலங்கையில் சரித்திர காலம் தொட்டு இரு வேறு இனங்களான தமிழர்களும் சிங்களவர்களும் தனித்துவமான மத, கலாசார, மொழிகளையும் கொண்டிருப்பதாகவும், வரையறுக்கப்பட்ட எல்லைகளைக் கொண்ட இவ்விரண்டு தேசங்களும் பிரிட்டிஷாரின் நிர்வாகத் தேவைகளுக்காக ஒன்றக்கப்பட்டதாகவும் அவர் விளக்கப்படுத்தியிருந்தார். அத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டதன்படி பிரஜாவுரிமை, மொழி, கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை உட்பட்ட பல விடயங்களில் தமிழர்கள் சிங்களவர்களால் வஞ்சிக்கப்பட்டு வருவதாகவும், 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டுகளில் சிங்கள அரசுகளால் கொண்டுவரப்பட்ட யாப்புகளில் தமிழர்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். அவரின் உரையின் முடிவில் அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் பின்வருமாறு அம்மாநில அவை கூறியிருந்தது, "இத்தீர்மானத்தினை ஏற்றுக்கொள்ளும் இந்த அவை, அமெரிக்க ஜனாதிபதியும், காங்கிரஸ் தலைவர்களும் தமது அதிகாரத்தினைப் பாவித்து தமிழர்மீது நடத்தப்பட்டுவரும் அநீதியான அடக்குமுறைகளையும், மனிதவுரிமை மீறல்களையும் உடனே நிறுத்தி தீர்வொன்றினை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறது" என்று கூறியதுடன் இதன் பிரதிகளை அமெரிக்க ஜனாதிபதி, காங்கிரஸின் தலைவர், நாடாளுமன்ற அவையின் பிரதிநிதிகள், அமெரிக்க அரசுச் செயலாளர், உலக வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் ஆகியோருக்கும் அனுப்பியிருந்தது. ஆளுநர் எட்வேர்ட் கிங் அத்தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து மசாசுசெட்ஸ் மாநிலத்தின் ஆளுநர் எட்வேர்ட் கிங் அவர்கள் 1979 ஆம் ஆண்டு, வைகாசி 22 ஆம் திகதியினை "தமிழ் ஈழம் நாள்" என்று பிரகடண்ம் செய்ததுடன், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவரும், நல்லூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான சிவசிதம்பரத்தையும் ஆளுநர் மாளிகையில் நடைபெறவிருக்கும் தமிழ் ஈழம் நாள் நிகழ்வில் பங்குபற்றுமாறும் அழைப்பு விடுத்திருந்தார். மசாசுசெட்ஸ் மாநில ஆளுநரால் மேற்கொள்ளப்பட்ட தமிழ் ஈழ நாள் பிரகடணத்தின் பிரதி சிவசிதம்பரத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் செயற்பாடுகள் சிங்கள மக்களின் உணர்வுகளை வெகுவாகப் பாதித்திருந்தது. ஆகவே தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரைத் தடைசெய்யும் முயற்சிகள் மீளவும் முன்னெடுக்கப்படலாயின. ஆடி 3 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பேசிய பிரேமச்சந்திர மற்றும் சுனில் ரஞ்சன் ஜயக்கொடி ஆகியோர் இந்த விடயத்தை மீளவும் முன்வைத்துப் பேசினர். அதற்குப் பதிலளித்துப் பேசிய ஜெயவர்த்தனா விசேட சட்டம் ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாகவும், அதனைப் பயன்படுத்தி தீவிரவாதத்தை முழுமையாக அழித்தொழிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என்றும், அச்சட்டம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் கூறினார். தனது விசேட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்காகக் காத்திருக்கும் வேளையில், வவுனியா மாவட்டத்தில் சிங்களவர்கள் பெரும்பான்மையாகக் குடியேற்றப்பட்டு வாழ்ந்துவந்த பகுதிகளை அநுராதபுர மாவட்டத்துடன் ஜெயவர்த்தன இணைத்துக்கொண்டார். இதற்கெதிராக செயற்பாடுகளில் இறங்கிய முன்னணியினர் பாராளுமன்றத்தைலிருந்து வெளிநடப்புச் செய்தனர். தீவிரவாத எண்ணங்கொண்டிருந்த தமிழ் இளைஞர்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி பாராளுமன்றத்தின் அனைத்து குழுக்களிலிருந்தும் வெளியேறவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இதற்குப் பதிலளித்த அரசாங்கம் பிரேமச்சந்திரவையும், ஜெயக்கொடியையும் பாவித்து இரு தீர்மானங்களை முன்வைத்தது. வன்முறைகளில் ஈடுபடும் அமைப்புக்களையும், தனிநாடு கோரும் அரசியல்க் கட்சிகளையும் தடைசெய்யவேண்டும் என்று பிரேமச்சந்திர முதலாவது தீர்மானத்தை முன்வைத்தார். இரண்டாவது தீர்மானத்தை முன்வைத்த ஜயக்கொடி தமிழ் ஈழத்திற்காகப் பிரச்சாரம் செய்வோர் துரோகிகளாக அடையாளப்படுத்தப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
  12. நீங்கள் கூறுவது சரியாக இருக்கலாம். இது சபாரட்ணம் அவர்கள் எழுதிய தகவல் என்பதால் நான் சரி பிழை பார்க்கவில்லை.
  13. ஜே ஆரின் வன்முறை மீதான விருப்பு ஜெயவர்த்தனா தான் நீதிக்கு எதிரானவர், பழிவாங்கும் குணம் கொண்டவர், அரசியல் தில்லுமுள்ளுகளில் கைதேர்ந்தவர், வன்முறையில் மிகுந்த நாட்டம் கொண்டவர் எனும் பெயரைச் சம்பாதித்து வைத்திருந்தார். 2003 ஆம் ஆண்டு இலங்கையில் போரும் சமாதானமும் எனும் தனது இரண்டாவது நூலை எழுதிய டி. டி. எஸ் ஏ. திசாநாயக்கா என்பவர் ஜெயவர்த்தனாவின் இந்த மனோநிலையின் உறுதிப்படுத்த இரு நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டியிருந்தார். இந்த இரு நிகழ்வுகளும் 1944 இல் சிங்களத்தினை ஆட்சிமொழியாக்கும் தனது தீர்மானத்தினைப் பாராளுமன்றில் ஜெயவர்த்தன முன்வைத்த காலத்தில் இடம்பெற்றவை. இந்த பிரேரணை மீதான பாராளுமன்ற விவாதத்தின்பொழுது ஜி ஜி பொன்னம்பலம் பின்வருமாறு கூறினார். ஜி ஜி பொன்னம்பலமும் தந்தை செல்வாவும் "மிகுந்த மரியாதைக்குரிய உங்களின் தகப்பனாரான நீதிபதி இ. டபிள்யு ஜெயவர்த்தனவின் முன்னால் வழக்காடுவது பெரும் பாக்கியமாகக் கருதப்பட்டது. ஆனால், நீங்களோ நீதிக்கு நேர்முரணானவர்" என்று கூறியபோது சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே பாரிய செற்போர் உருவாகியது. நிலைமையினைக் கட்டுப்படுத்த முடியாமல்த் திணறிய சபாநாயகர் சபை நடவடிக்கைகளை ஒத்திவைத்தார். தனது புத்தகத்தை எழுதும்போது ஜெயவர்த்தனவே இந்தத் தகவலை தன்னிடம் கூறியதாக டிசாநாயக்க கூறுகிறார். அவர் இலங்கையில் போரும் சமாதானமும் எனும் புத்தகத்தில் இரண்டாவது பகுதியினை "இலங்கையின் ஜே ஆர் ஜெயவர்த்தன" எனும் பெயரில் எழுதியிருந்தார். இரண்டாவது சம்பவமும் ஜே ஆரின் 1944 தீர்மானத்தின்போதே இடம்பெற்றது. 1972 இல் "இலங்கையின் டட்லி சேனநாயக்க" எனும் புத்தகத்தை எழுதும்போது டிசாநாயக்க இதுபற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். ஜே ஆர் தனது சிங்களத்தினை அரசாட்சி மொழியாக உருவாக்கக் கோரும் தீர்மானத்தினை முன்வைத்தபோது அவையின் தலைவராக இருந்த டட்லி கொதித்துப் போயிருந்தாராம். தனது மகனை ஜே ஆரிடம் அனுப்பிய டட்லி, "நீங்கள் தீர்மானத்தை மேலும் முன்கொண்டு சென்றால் உங்களின் கழுத்தை முறிப்பேன்" என்று எச்சரித்திருக்கிறார். உள்ளூர் அலுவல்கள் அமைச்சராக இருந்த தேவநாயகம் ஒருமுறை திசாநாயக்கவுடன் பேசும்போது ஜே ஆரின் வன்முறை மீதான வெறுப்பு மற்று அரசியல் தில்லுமுள்ளுகள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய குழுவில் 1977 ஆம் ஆண்டுத் தேர்தலுக்கு முன்னர் விவாதிக்கப்பட்டதாகக் கூறியிருக்கிறார். ஜே ஆரின் இந்த மூர்க்கத்தனமான நிலைப்பாடு தேர்தலின்பொழுது தமது கட்சிக்கு பாதகமாக அமையலாம் என்று பல மூத்த கட்சி உறுப்பினர்கள் அச்சமடைந்திருந்தனர் என்றும் அவர் கூறினார். எஸ்மண்ட் விக்கிரமசிங்க எனும் உறுப்பினர் இதற்குப் பரிகாரமாக யோசனை ஒன்றினை முன்வைத்ததாக தேவநாயகம் குறிப்பிட்டிருந்தார். அதுதான் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மதம் கூறும் விதிகளின்படி நடத்தல், இன மத பேதமற்ற ஆட்சியினை உருவாக்குதல் ஆகிய விடயங்களைப் புகுத்தலாம் என்ற ஆலோசனை . "இப்படித்தான் வன்முறையாளரான ஜே ஆர் ஒரு தர்மிஸ்ட்டராக மாறினார்" என்று கூறிச் சிரித்தாராம் தேவநாயகம். ஆனால், ஜே ஆர் இன் பழிவாங்கும் முகம் 1977 ஆம் ஆண்டுத் தேர்தலின் பின் மீண்டும் வெளித்தெரிய ஆரம்பித்தது. சிறிமாவின் ஆதரவாளர்களின்மீது ஜே ஆர் தனது குண்டர்களை ஏவித் தாக்குதல் நடத்தத் தொடங்கினார். அவரின் வன்முறை மீதான விருப்பு அடுத்த மாதத்திலும் தொடர்ந்தது. 1979 ஆம் ஆண்டு ஆவணியில் பொலீஸார் மீது டெலோ அமைப்பினர் தாக்குதல்களை நடத்தியதையடுத்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் மீது தனது விஷமத்தனமான பிரச்சாரத்தினை முடுக்கி விட்ட ஜே ஆர், தனது சட்டவல்லுனர்களின் மூலம் மிகவும் கொடூரமான பயங்கவாதத் தடைச் சட்டத்தினை உருவாக்கியதுடன் இராணுவத்தினருக்கும் பொலீஸாருக்கும் அளவிற்கதிகமான அதிகாரத்தை வழங்கி தமிழரின் பிரச்சினைகளுக்கான தீர்வினை இராணுவ ரீதியில் வழங்கத் தயரானார். கொலைக்களத்திற்கான ஆயத்தங்களைச் செய்தல் அமிர்தலிங்கத்தின் மீதான தனது விஷமத்தனமான பிரச்சாரங்களின் மூலம் கொடூரமான சட்டங்களை உருவாக்கி, இராணுவத்தினரின் கடுமையான அடக்குமுறைகளை ஜே ஆர் மிகவும் திட்டமிட்ட முறையில் வகுக்கத் தொடங்கினார். அமிர்தலிங்கம் சென்னையில் ஆற்றிய உரையினை தனது பழிவாங்கல் நடவடிக்கைகளுக்காக ஜே ஆர் பாவித்தார். பாராளுமன்றத்தில் அமிர்தலிங்கத்தின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த சிறில் மத்தியூ புலிகள் இயக்கம் என்று அமைப்பு இருப்பதை மறுப்பதன் மூலம் அமிர்தலிங்கம் புலிகளைப் பாதுகாக்க முயல்வதாகக் குற்றஞ்சாட்டினார். இந்தக் காலத்தில் அமிர்தலிங்கத்தின் பேச்சுக்களைப் பற்றி பாராளுமன்றம் தொடர்ச்சியாக விவாதித்து வந்தது. தன்மீது தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்த பிரச்சாரங்களினால் அமிர்தலிங்கம் தற்காப்பு நிலையினை எடுக்கவேண்டியதாயிற்று. தனது பேச்சுக்களை விளக்கப்படுத்தி அமிர்தலிங்கம் ஒரு விரிவான அறிக்கையினை வெளியிட்டார். தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி தமிழீழத்திற்கான ஆணையினை முன்வைத்தே தேர்தலில் தமிழ் மக்களால் தேர்வுசெய்யப்பட்டதாக அவர் கூறினார். ஆகவே தனது பேச்சுக்களில் இதனையே தான் வலியுறுத்திப் பேசிவந்ததாக அவர் கூறினார். ஆனால், அறிக்கையின் முடிவில் அவர் இறங்கிப் பேசவேண்டியதாயிற்று, "ஆனாலும், அரசாங்கம் மாற்றீடான தீர்வொன்றினை முன்வைக்குமிடத்து அதனைப் பரிசீலிக்கவும் நாம் தயாராகவே இருக்கிறோம்" என்று அவர் முடித்திருந்தார். அரசாங்கத்தின் பேச்சாளரான அத்துலத் முதலியிடம் அரசாங்கம் தனிநாட்டிற்கான மாற்றீட்டுத் தீர்வை முன்வைக்குமா என்று நான் வினவியபோது, லலித் பின்வருமாறு பதிலளித்தார், "தனிநாட்டிற்கான ஒரே மாற்றுத்தீர்வு இராணுவ ஆட்சி மட்டுமே. அதனைத்தான் நாம் இப்போது செய்து கொண்டிருக்கிறோம்"
  14. தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையில் வளரத் தொடங்கிய முறுகல் நிலை இனவாதப் பிரச்சாரம் தின்னைவேலி வங்கிக்கொள்ளை ஜெயவர்த்தனவை ஆத்திரப்படுத்தி விட்டிருந்ததுடன் பொலீஸாரையும், இராணுவத்தினரையும் வெகுவாக அலைக்கழித்திருந்தது. ஜெயவர்த்தனவும் அவரது ஆதரவாளர்களும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கும் தமிழருக்கும் எதிரான விஷமப் பிரச்சாரத்தை முடுக்கிவிட, இராணுவமும் பொலீஸாரும் தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தத் தொடங்கியிருந்தனர். இதற்குப் பதில் வழங்க விரும்பிய தமிழ்ப் போராளிகளும் செயல்களில் இறங்கத் தொடங்கினர், குறிப்பாக டெலோ அமைப்பு செயலில் இறங்கியது. 1979 ஆம் முதற்பாதியில் தமிழருக்கும் சிங்களவருக்கும் இடையிலான முறுகல் நிலை அதிகரிக்கத் தொடங்கியிருந்ததுடன் இரண்டாம் பகுதியில் நடைபெறப்போகும் படுகொலைகளுக்கான களத்தையும் அது திறந்துவிட்டிருந்தது. தின்னைவேலி வங்கிக்கொள்ளை நடந்து ஏறத்தாள 10 மணிநேரத்திற்குப் பின்னர், 1978 ஆம் ஆண்டு மார்கழி 5 ஆம் திகதி இராணுவமும் பொலீஸும் தமிழர் மீதான தாக்குதல்களில் இறங்கினர். யாழ் நகரில் அமைந்திருந்த மதுபான விற்பனை நிலையத்திற்கு சாதாரண உடையில் சென்ற இரு சிங்களப் பொலீஸார் மது அருந்தியபின்னர் அந்த மதுபான விற்பனை நிலையத்திற்கு அருகிலிருந்த வியாபார நிலையம் ஒன்றிற்குள் புகுந்து அதனை அடித்து நொறுக்கியதுடன், அங்கிருந்த பணத்தையும் ஏனைய பெறுமதியான பொருட்களையும் கொள்ளையிட்டுச் சென்றனர். அதே இரவு பலாலி நிலையத்தில் முகாமிட்டிருந்த இராணுவத்தினர் அருகிலிருந்த வியாபார நிலையம் ஒன்றிற்குச் சென்று இலவசமாக சிகரெட்டுக்களைக் கேட்க, உரிமையாளர் தரமறுத்துவிட்டார். எதுவும் கூறாது அங்கிருந்து அகன்ற ராணுவத்தினர் சில நேரத்தின்பின்னர் தமது சகாக்களை முகாமிலிருந்து ஆயுதங்களுடன் அழைத்துவந்து அக்கடையினை அடித்து நொறுக்கிவிட்டுச் சென்றனர். மார்கழி 14 ஆம் திகதி இரவு படம் பார்த்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மக்களை வழிமறித்து இராணுவத்தினர் தாக்கியதுடன் 18 ஆம் திகதி இரவு வல்வெட்டித்துறையினுள் நுழைந்து மக்களின் வீடுகளையும் கடைகளையும் தாக்கிச் சேதப்படுத்தினர். தமிழர்கள் அநியாயமாக இராணுவத்தினராலும் பொலீஸாராலும் தாக்கப்படுவது குறித்து பாராளுமன்றத்தில் பேசிய அமிர்தலிங்கம், இத்தாக்குதல்கள் குறித்து விசாரணை நடக்கவேண்டும் என்று கோரினார். இதற்குப் பதிலளித்த சிங்கள இனவாதியான கைத்தொழில் அமைச்சர் சிறில் மத்தியூ, இராணுவமும் பொலீஸாரும் நடத்திவரும் தாக்குதல்களை நியாயப்படுத்தியதோடு, தமிழ் ஆயுதக் குழுக்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரே பாதுகாத்து வருவதாகக் குற்றஞ்சாட்டினார். "நீங்கள் பயங்கரவாதிகளையும், கொலைகாரர்களையும் பாதுகாத்து வைத்திருக்கிறீர்கள்" என்று அமிர்தலிங்கத்தைப் பார்த்து அவர் கர்ஜித்தார். அமிர்தலிங்கம் சிறில் மத்தியூவின் குற்றச்சாட்டினை மறுத்தார். மத்தியூவின் குற்றச்சாட்டுக்களை மீளப்பெறவேண்டும் என்று அவர் கோரினார். மத்தியு தனது கருத்துக்களை மீளப்பெற பிடிவாதமாக மறுக்க, அதனை ஆதரித்துப் பேசிய சபாநாயகர் , "மத்தியூ தனிப்பட்ட ரீதியில் எவரையும் குறிப்பிடவில்லை, பொதுவாக ஒரு அரசியல் கட்சியினை குறித்தே பேசியதனால், அவர் கூறியதை மீளப்பெறவேண்டியதில்லை" என்று கூறினார். ஆனால், தொடர்ந்தும் அமிர்தலிங்கம் இதனை எதிர்த்துக்கொண்டிருந்துவிட்டு இறுதியில் தனது கட்சியினருடன் வெளிநடப்புச் செய்தார். 1979 ஆம் ஆண்டு பங்குனியில் அரசாங்கத்திற்கும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கும் இடையில் இன்னொரு முறுகல் உருவாகியது. அந்த மாதத்தில் அமிர்தலிங்கமும், அவரது துணைவியார் மங்கையற்கரசியும் இந்தியாவுக்குச் சென்றிருந்தனர். ஆட்சியிலிருந்த திராவிட முன்னேற்றக்கழகத்தினர் சென்னையில் அவர்களுக்கு மகத்தான பொதுமக்கள் வரவேற்பொன்றினை அளித்திருந்தனர். அங்குபேசிய அமிர்தலிங்கம் சிங்கள இராணுவத்தினரும் பொலீசாரும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பல மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான சொத்துக்களை அழித்துவிட்டதாகவும், பல தமிழர்களைக் கொன்றிருப்பதாகவும் கூறினார். "பாதுகாப்பாக வாழ்வதென்பது தமிழர்களைப்பொறுத்தவரையில் மிகவும் சவாலான விடயமாக மாறியிருக்கிறது. எமக்கான ஒரே தெரிவு தனியான நாடு மட்டுமே" என்று அவர் அங்கு கூடிநின்ற மக்களைப் பார்த்துக் கூறினார். மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அங்கு பேசிய மங்கையற்கரசி, 1977 ஆம் ஆண்டு தமிழர்மீது நடத்தப்பட்ட அரச ஆதரவு வன்முறைகளில் பெருமளவு தமிழ்ப்பெண்கள் சிங்கள இராணுவத்தாலும் சாதாரணச் சிங்களவர்களாலும் வன்புணர்விற்குள்ளாக்கப்பட்டதாகவும், தமிழ்ப்பெண்கள் இரவு வேளைகளில் வீதிகளில் நடமாடுவது என்பது இனிமேல் முடியாது என்றும் கூறினார். பங்குனி மாதம் 21 ஆம் திகதி அமிர்தலிங்கம் சென்னை பத்திரிக்கையாளர் அமைப்பினரின் கூட்டத்தில் பேசும்போது தமிழீழ விடுதலைப் புலிகள் எனும் அமைப்பென்பது உண்மையில் இல்லையென்றும் தமிழினத்திற்கெதிரான பலரின் கொலைகளுக்காக புலிகளால் வெளியிடப்பட்ட உரிமைகோரலே பொலீஸாரால் வேண்டுமென்றே கட்டவிழ்த்துவிடப்பட்ட சதிதான் என்று பேசினார். தமிழர்கள் சுய கெளரவத்துடனும், கண்ணியத்துடனும் வாழ்வதற்கான ஒரே வழி அவர்கள் தமக்கான தனிநாட்டினை உருவாக்குவது மட்டும் தான் என்றும் கூறினார். தமிழர்கள் தமக்கான உரிமைகளைப் பெற்றுக்கொள்ள ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுவார்களா என்று அவரிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்த அமிர்தலிங்கம், "இல்லை நாம் ஜனநாயக வழியிலேயே எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்வோம்" என்று கூறினார். உங்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கான கால அட்டவணை ஒன்றினை வைத்திருக்கிறீர்களா என்று அவரிடம் கேட்டபோது,"எமக்கான தனிநாட்டினை இன்னும் பத்து வருடங்களில் உருவாக்குவோம்" என்று அவர் பதிலளித்தார் (அதாவது 1989 ஆம் ஆண்டில்). இந்தியப் பிரதமர் மொரார்ஜி தேசாய் மற்றும் இந்திரா காந்தியுடன் அமிர்தலிங்கம் அதன் பின்னர் தலைநகர் தில்லிக்குப் பயணம் செய்த அமிர்தலிங்கம் இந்தியப் பிரதமர் மொரார்ஜி தேசாயையும் இந்திரா காந்தியையும் சந்தித்தார். பிரதமர் தேசாய் தமிழர்களின் பிரச்சினை இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினை, அதற்கும் இந்தியாவிற்கும் சம்பந்தம் இல்லை என்று தலையிடாமை எனும் தனது முடிவில் தீவிரமாக இருந்தார். இந்த முடிவினால் சற்று அதிருப்தியடைந்த அமிர்தலிங்கம், இந்திரா காந்தியிடம் இதுபற்றிப் பேசினார். அதற்குப் பதிலளித்த இந்திரா பின்வருமாறு கூறினார், " தேசாயும் ஜெயவர்த்தனாவும் இரு கிழட்டு நரிகள், அவர்கள் குறித்து நீங்கள் மிக்க அவதானமாக இருக்கவேண்டும்".
  15. ஜே வி பி மற்றும் வாசுதேவ நாணயக்கார போன்றோருடன் சேர்ந்து பயணித்தல் எனும் கருத்திற்கான எனது பதில். மக்கள் விடுதலை முன்னணியினரின் இரண்டாவது எழுச்சியே 13 ஆம் திருத்தச் சட்டத்தினை அமுல்ப்படுத்தக் கூடாதென்பதற்காகவே நடத்தப்பட்டது. மேலும், 13 ஆவது திருத்தச்சட்டத்தினை அடிப்படையாக வைத்து தற்காலிகமாக (பொதுசன வாக்கெடுப்பு நடக்கும்வரையில்) இணைக்கப்பட்டிருந்த வடக்கையும் கிழக்கையும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் 2006 இல் இனவாத நீதியரசர் சரத் என் சில்வாவைக் கொண்டு நிரந்தரமாகவே பிரித்துப்போட்டதும் இதே மக்கள் விடுதலை முன்னணிதான். தமிழர்களுக்கென்று தனியான பிரச்சினை ஏதுமில்லை, நாட்டிலிருக்கும் மற்றைய இனங்களைப் போன்ற பொருளாதாரப் பிரச்சினைகளே அவர்களுக்கும் இருக்கின்றன, ஆகவே அரசியல்த் தீர்வென்ற பேச்சிற்கே இடமில்லை என்பதே மக்கள் விடுதலை முன்னணியினரின் இன்றைவரையான நிலைப்பாடு. இருவாரங்களுக்கு முன்னர்கூட மக்கள் விடுதலை முன்னணியினரின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தமது கட்சி 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார். அடிப்படையில், மக்கள் விடுதலை முன்னணியினர் என்போர் இனவாதத்தினை சோசலிசத்தினுள் மறைத்து அரசியல் செய்யும் தென்னிலங்கைச் சிங்களவர்களே. அவன் தமிழருக்குப் பிரச்சினையே இல்லையென்கிறான், இந்த இலட்சணத்தில் அவர்களுடன் சேர்ந்து பயணிக்கலாமாம், நன்றாக இருக்கிறது. இரண்டாவது வாசுதேவ நாணயக்கார கடைந்தெடுத்த இனவாதி. மகிந்த இராஜபக்ஷெ எனும் இனக்கொலையாளியின் அத்தனை அக்கிரமங்களையும் கூடவிருந்தே ஆதரித்தவன், இன்றுவரை ஆதரிப்பவன். விக்கிரமபாகு கருணாரத்தினவுடன் நவ சம சமாஜக் கட்சியிலிருந்த வாசுதேவ நாணயக்காரதான் இப்போதும் இருக்கிறான் என்றும், அவனோடு சேர்ந்து பயணிக்கலாம் என்றும் கனவு காண்போர் கடந்த 18 வருடங்களாக உறக்கத்தில் இருக்கிறார்கள் என்று பொருள். இவனது ஹெலிகொப்டர் முன்னணியின் ஏனைய இனவாத மிருகங்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்சவுடனும் சேர்ந்து பயணிக்கலாமே?? அவர்கள் உங்களுக்கு என்ன தரவிரும்புகிறார்கள் என்று கேட்டு, அதையே வாங்கிக்கொண்டு வாருங்கள், பின்னர் சிறிது சிறிதாக நாம் எமது இலக்கை அடையலாம், பகிடிக்குத்தானே???
  16. அதுசரி, இன்றுவரை இலங்கை தமிழருக்குத் தருவதாக வாக்களித்துள்ள தீர்வுகள் என்னவென்பதை இலங்கையுடன் நட்புப் பாராட்டவேண்டும் என்று கூறுவோர் பட்டியலிடுங்கள் பார்க்கலாம். எனக்குத் தெரிந்தவகையில் 1978 ஆம் ஆண்டு ஜே ஆர் கொடுப்பதாக கூறிய மாவட்ட அமைச்சர்கள் பதவியைத் தவிர வேறு எதுவுமே இல்லையென்பதுதான் உண்மை. வடக்குக் கிழக்கும் இணைந்த தமிழரின் தாயகத்தை தமிழரின் பூர்வீக நிலமாக அங்கீகரியுங்கள், சிங்களத்திற்கு ஒத்த அந்தஸ்த்தை தமிழுக்கும் தாருங்கள் என்று தமிழர் கேட்டதற்கு ஜே ஆரினால் தர முடிந்தது 25 மாவட்ட சபை அமைச்சர்களில் 3 மாவட்ட சபை அமைச்சுப் பதவிகள்தான். அதுகூட பேச்சளவில்த்தான் கூறப்பட்டது. ஒருவேளை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி இந்த அமைச்சர் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டிருந்தால் மறுகணமே அவற்றை சிங்கள பெளத்தர்களை ஆர்ப்பட்டம் செய்யத் தூண்டி முளையிலேயே கிள்ளி எறிந்திருப்பார்கள். பண்டா செல்வா ஒப்பந்தம், டட்லி செல்வா ஒப்பந்தம் ஆகியவற்றுக்கு நடந்த அதே கதிதான் இதற்கும் நடந்திருக்கும். முதலில் சிங்களவர்களின் விருப்பத்தோடு தமிழர்களுக்குக் கிடைக்கும் தீர்வு என்னவென்பதை வெளிப்படையாகக் கூறுங்கள். பொலீஸ் வேண்டாம், காணியதிகாரம் இருந்தால்ப் போதும் என்று நீங்கள் தான் கூறுகிறீர்களே ஓழிய அவர்கள் கூறவில்லை. 13 ஆம் திருத்தமே வேண்டாம், அகற்றிவிடுங்கள் என்பதுதான் அவர்களின் வாதம். இந்த லட்சணத்தில் அவர்கள் விரும்பும் தீர்வு என்னவென்பதை உங்களை அனுப்பிவிட்டவர்களிடம் கேட்டு வாருங்கள். என்னைப்பொறுத்தவரை சிங்களவன் விரும்பித் தரும் தீர்வு : "இது ஒரு சிங்கள பெளத்த நாடு. சிங்களமும் பெளத்தமும் மற்றைய இனங்களுக்கும், மதங்களுக்கும் மேலானவை. இந்த நாடு சிங்களவர்களுக்கு மட்டுமே உரியது. சிங்களவரது தயவில் வாழ விரும்பினால் மற்றைய இனங்கள் ஒரு மூலையில் இருந்துவிட்டுப் போகட்டும். உரிமையும் சம அந்தஸ்த்தும் கோரினால் இந்தியாவுக்குப் போய்விடுங்கள். ஏனென்றால், மற்றைய இனங்களுக்கு உரிமையும் சம அந்தஸ்த்தும் இங்கே கிடையாது". இதைத்தானே விரும்பி ஏற்றுக்கொள்ளப்போகிறீர்கள்? இதைவைத்துக்கொண்டு பின்னர் சிறிது சிறிதாக ஏனைய விடயங்களைப் பெற்றுக்கொள்ளலாமா? எப்படி? நீங்கள் அவன் விரும்பித்தரும் இந்த அடிமைச் சாசனத்தை ஏற்றுக்கொண்டுவிட்டபின்னர் நீங்கள் மீண்டெழுவதென்பது கனவில்கூட நடவாதே? சிங்களவன் எமது எதிரி, இந்தியா எமது துரோகி. இரண்டுமே எம்மை அழிப்பதில் இணைந்துதான் செயற்படுகின்றன. இதில் ஒன்றை விட மற்றையது சிறந்தது என்று நாம் நினைத்தால் எம்மில்த்தான் தவறு இருக்கிறது.
  17. 1960 கள் வரை தமிழர்கள் இந்தியாவை தமது உரிமைக்காக குரல்கொடுக்கும்படியோ அல்லது தமது தனிநாட்டிற்கான போராட்டத்திற்கு ஆதரவு நல்கும்படியோ கேட்டதில்லை. பண்டாரநாயக்காவின் தனிச்சிங்களசட்டம், தமிழர் மீதான திட்டமிட்ட வன்முறைகள், குடியேற்றங்கள், அடுத்தடுத்து தம்முடன் செய்த ஒப்பந்தங்களை பெளத்த காடையர்களின் அழுத்தத்தினால் சிங்களத் தலைவர்கள் தூக்கியெறிந்தமையினால் ஏற்பட்ட விரக்தியும் ஏமாற்றமும் ஆகியவற்றின் பின்னரே தந்தை செல்வா தலைமையிலான சமஷ்ட்டிக் கட்சியினர் தமிழ்நாட்டுத் தலைவர்களையும், அவர்களூடாக இந்திய மத்திய அரசையும் தொடர்புகொண்டனர். அதுவரை இந்தியா தமிழர் சார்பாக இலங்கையில் தலையீடு செய்ததில்லை. தமிழர்களை இந்தியா நோக்கித் தள்ளியது யார்? இதற்கான விடை தெரிந்தால் எமது உண்மையான எதிரி யாரென்பது ஓரளவிற்குப் புரியும். சிங்களவர்கள் கூறும் இந்தியாவின் தமிழர் மீதான பாசமே தமது கொடுங்கோண்மைக்குக் காரணம் என்பது அர்த்தமற்றது என்பதுதான் எனது அசைக்கமுடியாத் நிலைப்பாடு. . சரி, எல்லாவற்றையும் விடுங்கள், 2006 இலிருந்து 2009 வரையான காலப்பகுதியில் இந்தியாவை ஆண்ட சோனியா தலைமையிலான காங்கிரஸ் அரசு தமிழரை அழிக்க இலங்கைக்குச் செய்த உதவியை சிங்களவர்கள் அறியவில்லை என்கிறீர்களா? எமது போராட்டத்தை முற்றாக அழித்து, ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொல்ல இலங்கைக்கு முழு உதவிகளையும் செய்தது இந்தியாதான் என்பதை சிங்களவர்கள் நன்றாக அறிவார்கள். இந்த லட்சணத்தில், தமிழர்களுக்குச் சார்பாக இந்தியா இனிமேலும் களத்தில் இறங்கும் என்று சிங்களவர் பயப்படுவதாகவும், அதனாலேயே இன்றுவரை தமிழனை அழிக்கக் கங்கணம் கட்டியிருப்பதாகவும் கூறுவது வேடிக்கை. நாம் உதவிகேட்டோம், இந்தியா எம்மைப் பாவித்து இலங்கைக்குள் நுழைந்தது. ஆனால் இன்று தமிழரை விடவும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் சிங்களவரையே தனது தோழர்களாக வைத்திருக்க வேண்டும் என்று அது விரும்புகிறது. சீனாவின் பின்னால் இலங்கை ஓடுவது கண்டும், அதனன் பின்னால் போய் அடுத்தடுத்து உதவிகளைச் செய்வதுகூட அதனால்த்தான். ஆக, இந்தியாவின் அச்சமே சிங்களவரை எம்மை அழிக்கத் தூண்டுகிறது என்பது பொய். ஏனென்றால், அப்படியொன்று இல்லையென்பது அவர்களுக்கே தெரியும். 13 ஆம் திருத்தச் சட்டத்தை சிங்களவர்கள் எதிர்க்கக் காரணம் அது இந்தியாவினால் கொண்டுவரப்பட்டது என்பதற்காக அல்ல, மாறாக அதில் இருக்கும் சில விடயங்களை தமிழர்கள் பாவித்து தனிநாடு அடைந்துவிடுவார்கள் எனும் பயமும், கணி அதிகாரம் தமிழர் கையில் போகுமிடத்தும் தமது சிங்களக் குடியேற்றங்கள் தடைப்பட்டு விடுமென்கிற பயமும், பொலீஸ் அதிகாரம் தமிழரின் கைகளில் போகுமிடத்து தமிழர்களுக்கு தாமே அயுதம் கொடுத்துப் பலமாக்கி ஈற்றில் தனிநாடு அடைய வழிசெய்துவிடுவோம் என்கிற பயமும் தான். சிங்கள இனவாதிகளின் அண்மைய கூச்சல்களில் இது அதிகமாகப் பேசப்படுகிறது. தமிழ் பொலீஸுக்கும் சிங்கள இராணுவத்திற்கும் வெகு விரைவில் போர் நடக்கும் என்று அழுகிறார்கள். இவர்களுள் ஒருவர்கூட இந்தியாவை எதிர்த்துப் பேசவில்லை. ஏனென்றால் அவர்களுக்குத் தெரியும், இன்னொரு போர் வந்தால்க்கூட இந்தியா தமிழரை அழிக்க உதவும் என்பது.
  18. தமிழர் ஒற்றுமை தின்னைவேலி வங்கிக்கொள்ளையினையடுத்து ஜெயவர்த்தன மிகுந்த சீற்றம் கொண்டார். பொலீஸ் மாதிபர் ஸ்டான்லி சேனநாயக்கவையும், இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் டெனிஸ் பெரேராவையும் உடனடியான கூட்டம் ஒன்றிற்கு அவர் அழைத்தார். இக்கூட்டத்திற்கு பணாகொடை பகுதியில் அமைந்திருந்த மேற்குக் கட்டளைப்பிரிவின் தளபதியான பிரிகேடியர் சிறில் ரணதுங்கவையும் டெனிஸ் பெரேரா அழைத்துச் சென்றார். அவர்களைப் பார்த்து ஜெயவர்தன பின்வருமாறு கூறினார், "இதனை இப்படியே அனுமதித்துக்கொண்டிருக்க முடியாது. இது உடனடியாக நிறுத்தப்படவேண்டும். நீங்கள் என்ன செய்வீர்களோ எனக்குத் தெரியாது, ஆனால் இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்" என்று கூறினார். பொலீஸ் அதிபரும், இராணுவத் தளபதிகளும் நடைமுறையில் இருக்கும் சட்டங்களை மேலும் இறுக்கவேண்டும் என்று ஜெயவர்த்தனவிடம் கேட்டுக்கொண்டார்கள். புலிகளைத் தடை செய்ய அமுல்ப்படுத்தப்பட்ட விசேட சட்டம் அவர்களை அடக்கப் போதுமானதல்ல என்று அவர்கள் வாதிட்டனர். இதனை உடனடியாக ஏற்றுக்கொண்ட ஜெயவர்த்தன, தனது செயலாளரான மனிக்டிவெலவை அழைத்து சட்டமா அதிபரை உடனடியாக தொடர்புகொண்டு பொலீஸாருக்கும் இராணுவத்திற்கும் தேவையான சட்டத்தினை உடனடியாக வரையும்படி உத்தரவிட்டார். புலிகளுக்கெதிரான இராணுவ நடவடிக்கைக்கு பிரிகேடியர் சிறில் ரணதுங்கவை பொறுப்பாக நியமிக்குமாறு இராணுவத் தளபதி ஜெயவர்த்தனவிடம் சிபாரிசு செய்தார். சிறில் ரணதுங்க 1979 ஆம் ஆண்டு தை மாதம், போராளிகளைத் தேடிக் கைதுசெய்யும் நடவடிக்கைக்குப் பொறுப்பாக சிறில் ரணதுங்க ஜெயவர்த்தனவினால் நியமிக்கப்பட்டார். அவரது முதற்பணி, தனது நடவடிக்கைகளுக்கு உதவியாக யாழ்ப்பாணத்தில் இராணுவ உளவுத்துறையின் அமைப்பொன்றினை உருவாக்குவதாக இருந்தது. இப்பணிக்கு அவர் கப்டன் சரத் முனசிங்கவை பொறுப்பாக அமர்த்தினார். பலாலி இராணுவப்படைத் தளத்தில் சரத் முனசிங்க தனது உளவுப் பிரிவை ஆரம்பித்ததுடன் யாழ்ப்பாணத்தில் பொலீஸாருக்கும் இராணுவத்தினருக்கும் பலவீனமான பகுதிகள் என்று கண்டறியப்பட்ட வல்வெட்டித்துறை உட்பட பல பகுதிகளின் வரைபடங்களை அவர் தயாரித்தார். யாழ்ப்பாண இராணுவத் தளபதியாக சிறில் ரணதுங்க 1979 ஆம் ஆண்டு மாசி மாதம் நியமிக்கப்பட்டார். தமிழ் ஆயுத அமைப்புக்களுக்கெதிராக தனது இராணுவத்தைத் தீவிரமாகப் பலப்படுத்திவந்த அதேவேளை, தனது அரசியல் விளையாட்டான போராளிகளுக்கும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கும் இடையிலான விரிசலை தொடர்ந்தும் அதிகரிக்கும் காரியத்திலும் ஜெயவர்த்தன ஈடுபட்டு வந்தார். மாவட்ட அமைச்சர் பதவிகளைக் காட்டி தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை தனது வலைக்குள் வீழ்த்திவிடலாம் என்று ஜே ஆர் போட்ட திட்டம் அவ்வளவாகப் பலனளிக்கவில்லை என்பதை அவர் புரிந்து வைத்திருந்தார். இளைஞர்களிடமிருந்து தமது செயற்பாடுகளுக்கு அதிகரித்துவந்த எதிர்ப்பினையடுத்து ஜே ஆர் இன் மாவட்ட சபை அமைச்சர்ப் பதவிகளுக்கான தமது விருப்பத்தினை முன்னணியினரால் உறுதிபடக் கூற முடியவில்லை. ஆகவே, ஆவணி 2 ஆம் திகதி தொண்டமானுடன் பேசிய ஜெயவர்த்தனா, உத்தேச மாவட்ட சபை அமைச்சரவையில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கு மூன்று அமைச்சுப் பதவிகளை தான் வழங்கத் தயாராக இருப்பதாகக் கூறினார். "நான் அமிர்தலிங்கத்திடம் எனது மாவட்டசபை அமைச்சர்கள் திட்டம் பற்றிக் கூறியிருந்தேன். அவர் இதுகுறித்து உங்களிடம் ஏதாவது பேசினாரா?" என்று தொண்டைமானைப் பார்த்து அப்பாவியாகக் கேட்டார் ஜெவர்த்தன. மறுநாள் அமிர்தலிங்கத்தைச் சந்தித்த தொண்டைமான் இதுகுறித்துக் கேட்டார். அதற்குப் பதிலளித்த அமிர்தலிங்கம், "நாம் ஜெயவர்த்தனவின் சலுகையினைப் பற்றிச் சிந்தித்து வருகிறோம், ஆனால் இதுவரை எந்த முடிவினையும் எடுக்கவில்லை" என்று கூறினார். அமிர்தலிங்கத்துடன் தொடர்ந்தும் பேசிய தொண்டைமான், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஜெயவர்த்தனவின் மாவட்ட சபை அமைச்சுப் பதவிகளை ஏற்க முன்வரும் பட்சத்தில் அவர்களுக்கு மூன்று அமைச்சர்களை வழங்க ஜெயவர்த்தன தயாராக இருப்பதாகக் கூறினார். மறுநாளான ஆவணி 4 ஆம் திகதி தொண்டைமானுடன் பேசிய ஜே ஆர், தான் கேட்ட விடயம் குறித்து அமிர்தலிங்கத்துடன் பேசினீர்களா என்று கேட்டார். அதற்குப் பதிலளித்த தொண்டைமான், ஜே ஆரின் கோரிக்கையினை தான் அமிர்தலிங்கத்திடம் முன்வைத்ததாகவும், அதனை அவர் எற்றுக்கொள்ளும் பட்சத்தில் அவருக்கும் ஒரு அமைச்சுப்பதவி வழங்கப்படும் என்று தான் கூறியதாகவும் அவர் சொன்னார். இந்தச் சந்தர்ப்பத்தினைப் பாவித்துக்கொண்ட ஜெயவர்த்தன தொண்டைமானைப் பார்த்து, "உங்களுக்கு ஒரு அமைச்சுப்பதவியினைத் தந்தால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? மாவட்டசபை அமைச்சரவையில் என்னவிருக்கிறது? ஆகவே அதைவிடுத்து எனது அமைச்சரவையில் இணைந்துகொள்ளுங்கள். நீங்கள் என்னை அழைத்தால், நானும் உங்களை அழைக்கிறேன், என்னுடன் இணைந்துகொள்வீர்களா? " என்று மீண்டும் தொண்டைமானிடம் வினவினார் ஜே ஆர். தொண்டைமானும் மறுபேச்சின்றி ஒத்துக்கொண்டார். ஆனால், தனது தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸையும் தன்னுடன் தொடர்ந்தும் வைத்திருக்க ஜே ஆர் அனுமதியளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஜெயவர்த்தனாவுக்கு இது மிகெப்பெரிய வெற்றியாக அமைந்தது. தமிழ் இனத்தின் ஒரு பகுதியை அவர் தன்பக்கம் இழுத்துவிட்டிருந்தார். தமிழ் மக்களின் போராட்டத்தினைப் பலவீனப்படுத்தி, குறிப்பிடத்தக்களவு பாதிப்பினை அதற்கு அவர் இதன்மூலம் ஏற்படுத்தினார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரையும் தனது வலைக்குள் எப்படியாவது வீழ்த்திவிடவேண்டும் என்று அவர் முயன்று வந்தார். இதனையும் செய்துவிட்டால், இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் முன்னால் தான் பக்கச்சார்பற்ற ஒரு அதிபர் என்றும், சிறுபான்மையின மக்களையும் அரவணைத்துச் செல்லும் தலைவர் என்று காட்டிவிடலாம் என்று அவர் எண்ணினார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மிகவும் தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தது. அதன் பெருமளவு பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப்பதவிகளைப் பெற்றுவிட மிகவும் ஆவலாக இருந்தனர், ஆனால் இளைஞர்கள் இவர்களின் விருப்பிற்குக் கடுமையான எதிர்ப்பினைக் காட்டி வந்தனர். இறுதியாக, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் அரசியல்ப் பீடம் தமக்கு 5 மாவட்ட அமைச்சுப்பதவிகள் தரப்படுமிடத்து ஜே ஆர் இன் கோரிக்கையினை ஏற்றுக்கொள்வதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தது. ஜெயவர்த்தனவுடன் பேசிய அமிர்தலிங்கம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய வடமாகாண மாவட்ட அமைச்சுப்பொறுப்புக்களை தமக்குத் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால், ஜே ஆர் பிடிவாதமாக மூன்று மாவட்ட அமைச்சுப்பதவிகளைத்தான் தரமுடியும் என்று மறுக்கவே, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி அவரின் காலை வாரிவிட்டது. ஐப்பசி 5 ஆம் திகதி ஜெயவர்த்தன 24 மாவட்டங்களுக்கான அமைச்சர்களின் பெயர்களை அறிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட அமைச்சர் பொறுப்பினை காலியாக விட்டிருந்த ஜே ஆர், அது தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்காக ஒதுக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். ஆனால், இதனை முன்னணியினர் ஏற்றுக்கொள்ள மறுத்துவிடவே குருநாகல் மாவட்ட உறுப்பினரான உக்கு பண்டா விஜேக்கோனை இப்பதவிக்கு ஜே ஆர் நியமித்தார். யாழ்ப்பாண மாவட்ட அமைச்சரான விஜேகோனின் செயலாளராக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் எதிர்ப்பாளாராக இருந்த வைத்திலிங்கம் துரைசாமியை அவர் நியமித்தார். இதேவேளை, தனது அடியாளும் பிரபல சிங்கள இனவாதியுமான சிறில் மத்தியூவை தமிழர் ஐக்கிய முன்னணியினருக்கு எதிராகவும், தமிழினத்திற்கெதிராகவும் தொடர்ச்சியான இனவாதப் பிரச்சாரங்களை நடத்தும்படி ஜே ஆர் முடுக்கி விட்டார். தமிழர்களுக்கெதிரான இனவாதப் பேச்சுக்கள், துண்டுப்பிரசுரங்கள், புத்தகங்கள் என்று மிகத்தீவிரமாக தமிழருக்கெதிரான விஷமப் பிரச்சாரத்தில் சிறில் மத்தியூ இறங்கியிருந்தார். தமிழ் மக்களுக்கெதிராக சிங்கள மக்களை மிகவும் சாதுரியமான வகையில் திருப்பிக்கொண்டிருந்ததுடன், சிங்கள இனவாதத்தினையும் தொடர்ந்தும் தூண்டிக்கொண்டிருந்தார். கைத்தொழில் அமைச்சராகவிருந்த சிறில் மத்தியூ தனது அமைச்சில் பணிபுரிந்த பலரையும் இந்த இனவாதப் பிரச்சாரத்திற்கு முழுமூச்சுடன் ஈடுபடும்படி பணித்திருந்தார். தமிழர்களைப் பேய்கள் என்று விழித்து அவராலும் அவரது உதவியாளர்களாலும் பிரசுரிக்கப்பட்ட புத்தகங்கள் அரச அச்சகக் கூட்டுத்தாபானத்தில் அச்சிடப்பட்டு, கைத்தொழில் அமைச்சினூடாக சிங்கள மக்கள் மத்தியில் அரச வெளியீடுகளாக விநியோகிக்கப்பட்டு வந்தன. சிறில் மத்தியுவினால் வெளியிடப்பட்ட முதலாவது இனவாதம் கக்கும் புத்தகம் "சிங்களவர்களே, பெளத்த சமயத்தைக் காத்திட எழுந்திருங்கள்" என்று தலைப்பில் வெளிவந்தது. 1979 ஆம் ஆண்டில் மத்தியுவினால் மேற்கொள்ளப்பட்ட இனவாதப் பிரச்சாரங்களைத் தாங்கிவந்திருந்த அப்புத்தகம், ஈரோஸ் அமைப்பினரால் அமைக்கப்பட்ட மத்திய மாகாணத்தினையும் இணைத்த தமிழீழ வரைபடத்தினையும் கொண்டிருந்தது. அந்த வரைபடத்தின்படி சிலாபம் வரையிலான வடமேற்குக் கரைகளையும் மத்திய மலைநாட்டின் தமிழர் அதிகமாகச் செறிந்துவாழும் பகுதிகளையும் சேர்த்து தமிழரின் தாயகமான தமிழீழம் என்று அது அடையாளப்படுத்தியிருந்தது. டெயிலி நியூஸ் பத்திரிக்கையின் ஊடகவியலாளன் என்கிற வகையில் நான் கைத்தொழில் அமைச்சரான சிறில் மத்தியூவுடன் அவரது இளைப்பாறும் விடுதிக்கு ஒருமுறை சென்றிருந்தேன். அங்கு நான் நின்ற நாளில், அவரது அமைச்சகத்தின் அதிகாரிகள் சிறில் மத்தியூவினால் எழுதப்பட்ட முதலாவது புத்தகத்தின் பிரதிகளை கொண்டுவந்து கொடுத்தார்கள். அவர் புத்தளம் சீமேந்துத் தொழிற்சாலைக்கு பரிசோதனை தொடர்பாகச் சென்றிருந்தார். என்னிடம் புத்தகத்தின் ஒரு பிரதியைத் தந்துவிட்டு, "இந்த வரைபடத்தைப் பாருங்கள், இதனை உங்களது நாடென்று நீங்கள் உரிமைகோருவது நியாயமா?" என்று என்னைக் கேட்டார். அவர் எழுதிய முதலாவது புத்தகத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் சிங்களவர்களின் புராதன வாழிடங்கள் என்று கூறியிருந்தார். அப்பகுதிகள் சிங்கள மன்னர்களால் ஆளப்பட்ட பகுதிகள் என்றும், சிங்கள மக்களே அங்கு வாழ்ந்துவந்ததாகவும் அவர் எழுதியிருந்தார். தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கி பி 1000 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கை மீது படையெடுத்து, அங்கு வாழ்ந்த சிங்களவர்களை தெற்குநோக்கித் துரத்திவிட்டதாக அவர் மேலும் கூறுகிறார். சரித்திர கால சிங்களச் சின்னங்களை முற்றாக அழித்துவிட்டு தமிழர்கள் இன்று வடக்கையும் கிழக்கையும் தமது நாடென்று அநீதியாக உரிமைகோருவதாக அவர் சாடுகிறார். தான் எழுதிய புத்தகத்தின் பிரதிகளை ஒவ்வொரு பெளத்த விகாரைகளூடாகவும் மக்களுக்கு விநியோகிக்க அவர் நடவடிக்கை எடுத்திருந்தார். அவரது இரண்டாவது புத்தகம் தமிழர்களின் கடைகளைப் புறக்கணிக்குமாறு சிங்களவர்களைக் கேட்டிருந்தது. இலங்கையின் பொருளாதாரத்தினை தமிழர்கள் அதன் கழுத்தில் பிடித்து வைத்திருப்பதாக அவர் எழுதியிருந்தார். "சில்லறை வியாபாரமும், மொத்த வியாபாரமும் முற்றிலுமாக தமிழர்களின் கைகளில் சிக்கியிருப்பதாக" அவர் கூறினார். "புறக்கோட்டை சந்தையில் தமிழர் மொத்தவியாபாரத்தின் மீது வைத்திருந்த கட்டுப்பாட்டை சிங்களவர்கள் அழிக்கவேண்டும்" என்று அவர் கேட்டிருந்தார். மேலும், "சிங்களவர்கள், சிங்களவர்களின் கடைகளில் மட்டுமே பொருட்களை வாங்கவேண்டும்" என்றும் வேண்டுகோள் விடுத்தார். இந்தப் புத்தகமும், துண்டுப்பிரசுரங்களும் சிங்கள வியாபாரிகளூடாக மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இன்னொரு புத்தகம் மலையக தோட்டத் தொழிலாளர்களை இலக்குவைத்து எழுதப்பட்டிருந்தது. பெளத்த சிங்கள கலாசாரத்திற்கு அச்சுருத்தல் கொடுக்கும் வகையில் இந்திய தமிழ்த் தொழிலாளர்கள் வளர்ந்துவிட்டதாகவும், மலையகமெங்கும் இந்துக் கோயில்களை அவர்கள் கட்டிவருவதாகவும், இதுவே முதன்மையான அச்சுருத்தலாக மாறியிருப்பதாகவும் ஆது கூறியது. சரித்திரப் பழமைவாய்ந்த கண்டி இராச்சியத்திற்குற்பட்ட மலையகத்திலிருந்து பெளத்த மதமும், சிங்களக் கிராம வாழ்க்கையும் இந்தியத் தமிழர்களால் அழிக்கப்பட்டு வருவதாகவும் அது கூறியது. இந்தப் புத்தகமும் மலை நாட்டிலுள்ள அனைத்து பெளத்த விகாரைகள் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. நான்காவது புத்தகம் "புலிகள் யார்" என்கிற தலைப்பில் வெளிவந்தது. உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் எல்லாத்தமிழர்களையும் புலிகள் என்று நிறுவுவதே இப்புத்தகத்தின் நோக்கம். மகாவம்சக் கதையினை சிங்களவர்களுக்கு மீள நினைவுபடுத்திய இப்புத்தகம் சிறிலங்கா பெளத்த சிங்கள மக்களுக்கு மட்டுமே உரியது என்றும், தமிழர்கள் இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து வந்த ஆக்கிரமிப்பாளர்களே என்றும் கூறியது. தமிழர்கள் ஒன்றில் தமிழ்நாட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும், அல்லது சிங்கள பெளத்தர்களில் தயவிலேயே இங்கு வாழமுடியும் என்று வாதிட்டது. இப்புத்தகமும் சிங்கள வியாபாரிகள், சமூக அமைப்புக்கள், பெளத்த விகாரைகள் ஊடாக சிங்கள மக்களிடம் கொண்டுசேர்க்கப்பட்டது. தமிழர்கள் மீது மிகவும் திட்டமிட்ட முறையில் தாக்குதல் ஒன்றினை நடத்துவதற்காக சிங்களவர்களைத் தயார்செய்து வந்த அதேவேளை, சிறில் மத்தியூ தன்பங்கிற்கும் சிங்கள பெளத்தர்களின் ஆவேசத்தை கட்டியெழுப்ப முயன்றார். சிறிமாவினால் கொண்டுவரப்பட்டு பின்னர் தமிழர்களின் எதிர்ப்பினால் பின்வாங்கப்பட்ட பல்கலைக்கழக அனுமதி முறையினை மீளவும் தான் கொண்டுவருவேன் என்று அவர் சூளுரைத்தார். தமிழர்களின் அழுத்தத்திற்குப் பயந்தே சிறிமா பல்கலைக்கழக அனுமதி முறையில் மாற்றங்களைச் செய்திருந்தார் என்று சிங்களவர்கள் மத்தியில் இருந்துவந்த கசப்புணர்வை மீளவும் தட்டியெழுப்புவதே அவரது நோக்கமாக இருந்தது. ஆவணி 4 ஆம் திகதி, 1977 ஆம் ஆண்டு அரசால் கொண்டுவரப்பட்ட கொள்கைப் பிரகடணத்தை சிங்கள இனவாதிகளும், ஆசிரியர்களும், கல்விமான்களும் கூட்டாக எதிர்க்கத் தொடங்கியிருந்தார்கள். 1972 ஆம் ஆண்டிலிருந்து சிங்கள மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விசேட சலுகைகள் இரத்துச் செய்யப்படுவதை அவர்கள் முற்றாக நிராகரித்தார்கள். சிங்களத் தேசிய அமைப்புக்கள் மெரிட் முறையில் பல்கலைக்கழக அனுமதியினை வழங்குவதை தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று பிரகடணம் செய்தார்கள். மெரிட் முறை மூலம் மீளவும் பெருமளவு தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகத்தினுள் நுழையும் அபாயம் இருப்பதாக அவர்கள் வாதிட்டார்கள். பொறியியல் மற்றும் மருத்துவ பாடநெறிகளுக்கு உள்வாங்கப்படும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை சிங்கள மாணவர்களைக் காட்டிலும் அதிகமாகிவிடும் என்று அவர்கள் எச்சரித்தார்கள். 1978 ஆம் ஆண்டு மாசி மாதத்தில் புதிய மெரிட் முறைக்கு எதிராக பாடசாலைகளைப் பகிஷ்கரிக்கப்போவதாக உயர்கல்வி மாணவர்கள் மேற்கொண்ட நடவடிக்கை இறுதிநேரத்தில் அதன் ஒருங்கிணைப்பாளர்களை அரசால் கைதுசெய்யப்பட்டதனால் இடம்பெறாது போனது. தன்னை ஒரு சிங்களத் தேசியவாதியாக நிறுவுவதில் மும்முரமாக ஈடுபட்டு வந்தார் மத்தியூ. 1977 ஆம் ஆண்டு மார்கழி 11 ஆம் திகதி பாராளுமன்றத்தில் தமிழ் பரீட்சையாளர்கள் தமிழ் மாணவர்களுக்கு அதிகமான புள்ளிகளை வழங்கிவருவதாக மீண்டும் கூறிய அவர், தன்னிடம் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் அவற்றினை மறுநாள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் காண்பிக்கப்போவதாகவும் கூறினார். இதற்குப் பதிலளித்த சிவசிதம்பரம், தமிழர்கள் ஏமாற்றுப் பேர்வழிகள் எனும் மத்தியூவினது குற்றச்சாட்டினை தாம் முற்றாக நிராகரிப்பதாகக் கூறினார். தான் கூறியவாறே, மார்கழி 12 ஆம் திகதி தனது கஒத்தொழில் அமைச்சின் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர் மாநாடொன்றினை மத்தியூ கூட்டினார். நான் டெயிலிநியூஸ் பத்திரிகைக்காக அந்த பத்திரிகையாளர் மாநாட்டிற்குச் சென்றிருந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தின் இரசாயணவியல்ப் பேராசிரியர் பி பி ஜி எல் சிறிவர்த்தனவும் இம்மாநாட்டில் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டிருந்தார். 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் உயிரியல்ப் பிரிவில் பரீட்சையெழுதிய இரு தமிழ் மாணவர்களின் விடைத்தாளகளை மத்தியூ பத்திரிக்கையாளர்களுக்குக் காண்பித்து, நுளம்பொன்றின் வாழ்க்கைச் சக்கரம் தொடர்பான கேள்வியொன்றிற்கு ஒதுக்கப்பட்ட புள்ளிகளைக் காட்டிலும் அதிகமான புள்ளிகள் அம்மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டினார். மனித நாகரீகத்திற்கு முரணான வகையில் தமிழ் மாணவர்களுக்கு அதிகமான புள்ளிகள் தமிழ்ப் பரீட்சையாளர்களால் வழங்கப்பட்டுவருவதாக அவர் கூறினார். தமிழ்ப் பரீட்சையாளர்கள் நேர்மையற்று நடப்பதாகவும், இதன் விளைவாக பெருமளவு சிங்கள மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு நுழையும் வாய்ப்பினை இழந்திருக்கிறார்கள் என்றும், இந்தச் சூழ்ச்சி 1968 ஆம் ஆண்டிலிருந்து இடம்பெற்று வருவதாகவும் அவர் மேலும் கூறினார். ஆனால், மாணவர்களின் விடைத்தாள்கள் இரகசியமாக வைக்கப்படும்போதும், சிறில் மத்தியூ அவ்விடைத்தாள்களை எங்கணம் பெற்றார் என்று சில பத்திரிக்கையாளர்கள் அவரைக் கேட்டபோது அவர் பதிலளிக்கது மெளனம் காத்தார். ஆனால், அரச ஆதரவு சிங்கள மற்றும் ஆங்கிலப் பத்திரிக்கைகள் மத்தியூவின் இந்தக் குற்றச்சாட்டிற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து தமது தலைப்புச் செய்தியாக மறுநாள் வெளியிட்டன மகிழ்ந்தன. தனது பத்திரிக்கையாளர் மாநாட்டினைத் தொடர்ந்து இன்னொரு விஷமத்தனமான துண்டுப்பிரசுரத்தை "ஒரு கொடூரமான சதி" எனும் பெயரில் வெளியிட்டார். அதில் தமிழ் பரீட்சையாளர்கள் தமிழ் மாணவர்களுக்கு அதிகப்படியான புள்ளிகளை வழங்குவதன் மூலம் பெருமளவு தமிழ் மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுக் கொடுக்கிறார்கள் என்று புனையப்பட்டிருந்தது. இது தமிழத் தேசியத்தின் சதி என்று நிறுவ அவர் மும்முரமாக முயன்றுவந்தார். இதனை பாரிய பிரச்சினையாக உருவாக்கிவிட்ட அவர், சிங்கள மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் மனதில் கடுமையான தாக்கத்தினை இந்தச் சதி ஏற்படுத்திவிட்டிருப்பதாக பிரச்சாரப்படுத்தினார். இதன் பின்னர் அரசாங்கம் மாவட்ட ரீதியிலான ஒதுக்கீட்டு முறையினை அறிமுகப்படுத்தியது. இதன்படி 30 வீதமான பல்கலைக்கழக அனுமதிகள் மெரிட் முறை மூலமும், 55 வீதமானவை மாவட்டத்தின் சனத்தொகை அளவின் அடிப்படையிலும், மீதி 15 வீதமானவை பிற்படுத்தப்பட்ட மாவட்டங்களிலிருந்து வரும் மாணவர்களுக்கும் வழங்கப்பட்டன. ஆனால், மாவட்ட ரீதியில் பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை அனுமதிக்கும் முறையினை அறிமுகப்படுத்தவே சிறில் மத்தியூவின் பிரச்சார நாடகத்தினை அரசாங்கம் பாவித்ததாகக் கூறப்படுகிறது. இதனைச் செய்ய அரசு நினைத்திருந்தால், தமிழ் மக்களின் மனங்களைப் புண்படுத்தது செய்திருக்க முடியும். ஆனால், தமிழ் மக்களின் எண்ணங்களுக்கோ, உணர்வுகளுக்கோ மதிப்பளிக்காத அரசும் சிங்கள ஊடகங்களும் இதனைத் தெரிந்தே செய்துவந்தன. இதுவும் ஒரு முக்கிய காரணம் தமிழர்கள் தாம் அந்நியப்படுத்தப்படுவதாக எண்ணுவதற்கு. தமிழர்கள் தமிழ்த் தேசியம் நோக்கி நகரத் தொடங்கியதோடு, தமக்குள் ஒற்றுமையின் அவசியத்தையும் உணரத் தலைப்பட்டனர். இவை நடப்பதற்கு சுமார் மூன்று வாரங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் சூறாவளி அநர்த்தத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தன. இதன்போது சிறில்மத்தியூ நடந்துகொண்ட விதமும் தமிழர்கள் தாம் தனித்து வாழவேண்டும் என்கிற எண்ணக்கருவை மேலும் உறுதிப்படுத்தியிருந்தது. பாரிய அலைகளுடன் கூடிய சூறாவளியொன்று கிழக்கு மாகாணத்தின் கரையோரப் பகுதிகளை கடுமையாகச் சேதப்படுத்திக்கொண்டு பொலன்னறுவை ஊடாகக் கடந்து சென்றிருந்தது. இப்பகுதிகளில் இயங்கிவந்த அரச கூட்டுத்தாபனங்களில் பணிபுரிந்து வந்த சிங்கள் அதிகாரிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்ட சர்வதேச மற்றும் உள்ளூர் நிவாரண உதவிகளை திசை திருப்பி பாதிப்படையாத பொலொன்னறுவை உட்பட்ட பல சிங்களப் பகுதிகளுக்கு அனுப்பி வைத்தனர். சூறாவளியினால் கடுமையான அழிவுகளைச் சந்தித்திருந்த தமிழ் மக்களுக்கு கிடைக்கவேண்டிய அவரச உதவிகள் இதனால் மறுக்கப்பட்டன. சர்வதேசத்திலிருந்து கிடைத்த நிவாரணப் பொருட்களை ஏற்றிவந்த பாரவூர்திகளை வீதிகளில் தடைகளையிட்டு மறித்த சிங்களக் காடையர்கள், அவற்றினை சிங்களப் பகுதிகளுக்குத் திருப்பிவிட்டனர். கிழக்கில் பாதிக்கப்பட்ட தமிழருக்கு அனுப்பப்பட்ட பொருட்களை அரசும், சிங்களக் காடையர்களும் இணைந்து பாதிக்கப்படாத சிங்களப் பகுதிகளுக்கு அனுப்பியதை அறிந்தபோது வடபகுதித் தமிழர்கள் கொதித்துப் போயினர். ஆகவே, கிழக்கின் தமிழர்களுக்கான நிவாரண உதவிகளை தாமே செய்ய முடிவெடுத்தனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், சமூக அமைப்புக்கள், மத அமைப்புக்கள் மற்றும் ஆயுத அமைப்புக்கள் இந்த நிவாரண ஒருங்கிணைப்புப் பணியில் முன்னின்று செயற்பட்டன. ஆயுத அமைப்புக்களில் புலிகளும் ஈரோஸ் அமைப்பும் குறிப்பிடத்தக்களவு பங்களிப்பினைச் செய்திருந்தன. சிறிய குழுக்களாக செயற்பட்ட இந்த அமைப்புக்கள் கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களிடம் சென்று அவர்களின் வாழிடங்களைத் திருத்தவும், வாழ்க்கையை மீள ஒருங்கிணைக்கவும் உதவிசெய்தனர். இவர்களுள் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டிய ஒரு இளைஞரின் பெயர் இன்பம். விஸ்வஜோதி எனும் இயற்பெயரைக் கொண்ட இவர் நிவாரண உதவிகளை முடித்துக்கொண்டு யாழ்ப்பாணம் திருபியிருந்தவேளை இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டார். கடுமையான சித்திரவதைகளின் பின்னர் கொல்லப்பட்ட அவரது உடல் பண்ணைப் பாலத்தின் கீழிருந்து கண்டெடுக்கப்பட்டிருந்தது. 1979 ஆம் ஆண்டின் காலப்பகுதியில், யாழ்ப்பாணக் குடாநாட்டை பாரிய கொலைக்களமாக ஜெயவர்த்தனா மாற்றியிருந்தார். இதுபற்றிய செய்திகளை பின்னர் விரிவாகப் பார்க்கலாம். சூறாவளி அநர்த்தத்தின்பொழுது சிங்கள அதிகாரிகளும் அரசும் நடந்துகொண்ட விதம் பாராளுமன்றத்திலும், தமிழ்ப் பத்திரிக்கைகளிலும் வெளிவரத் தொடங்கியபோது, சிங்கள அதிகாரிகள் மீதிருந்த நம்பிக்கையினை தமிழர்கள் இழக்கத் தொடங்கினர். கிழக்குத் தமிழர்களுக்கென்று இந்தியாவினால் வழங்கப்பட்ட தரம்வாய்ந்த சேலைகள் கொழும்பு தெருவோரக் கடைகளில் மிகவும் குறைந்த விலைக்கு சிங்களவர்களால் விற்கப்பட்டன. இதுபற்றி அரச அதிகாரிகளிடம் வினவியபோது, இந்தியச் சேலைகளை விற்றுப் பெற்ற பணம் அரசின் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டதாகக் கூறினர். மேலும், சூறாவளியினால் வீடுகளை இழந்து தங்க இடமின்றித் தத்தளித்துக்கொண்டிருந்த தமிழ் மக்களுக்கு சர்வதேசத்தால் அனுப்பப்பட்ட கூடாரங்கள் கொழும்பின் அரச கிட்டங்கிகளில் குவிக்கப்பட்டு பழுதடைந்து போயின. தமிழர்கள் தங்களைத் தாமே இனிப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் தமிழரிடையே வளர ஆரம்பித்திருந்தது. குறிப்பாகக் கொழும்பில் வாழ்ந்துவந்த தமிழரும் இதனை உணரத் தடலைப்பட்டனர். சூறாவளி நிவாரணச் செயற்பாடுகளில் கொழும்புத் தமிழரும் இணைந்துகொண்டனர். ஜெயவர்த்தன அரசானது தனது நடவடிக்கைகளாலும், மாற்றாந்தாய் மனப்பாங்கினாலும் 1978 - 79 காலப்பகுதியில் தமிழ் ஆயுத அமைப்புக்களின் வளர்ச்சிக்கு வழிகோலியிருந்தது. புலிகள் மற்றும் டெலோ அமைப்புகள் மீது ஓரளவுக்குச் செல்வாக்குச் செலுத்தும் நிலையில் இருந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை தொடர்ந்தும் பலவீனப்படுத்துவதிலேயே ஜெயவர்த்தனா தனது கவனத்தைச் செலுத்தி வந்திருந்தார். பிரபாகரன், உமா மகேஸ்வரன், தங்கத்துரை, குட்டிமணி, ஜெகன் ஆகியோ அன்றுவரை அமிர்தலிங்கம் - சிவசிதம்பரம் ஆகியோரின் அறிவுரைகளைக் கேட்டும் மதித்தும் வந்திருந்தனர். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரைக் கொண்டு தமிழ் ஆயுத அமைப்புக்களைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, முன்னணியினருக்கும் ஆயுத அமைப்புக்களுக்கும் இடையே பகைமையினை வளர்த்து அதனை விரிவாக்குவதிலேயே ஜெயவர்த்தன தனது முழுக்கவனத்தையும் செலுத்தியிருந்தார். ஜெயவர்த்தனா வன்முறையில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆதரவாளர்களுக்கு தான் வழங்கிய அதே தண்டனையினைத்தான் தமிழ் ஆயுத அமைப்புக்களுக்கு அவர் வழங்க விரும்பினார். அது அரச பயங்கரவாதம் !
  19. தின்னைவேலி வங்கிக்கொள்ளை மக்களை எப்படி அணிதிரட்டுவது, தனது போராட்ட அமைப்பை எவ்வாறு விரிவுபடுத்துவது என்கிற பிரபாகரனின் சிந்தனைகளை அடிப்படையாக வைத்தே தின்னைவேலி வங்கிக்கொள்ளை திட்டமிடப்பட்டது. சர்வதேச கவனத்தினை ஈர்ந்திருந்த இரத்மலானை விமானத் தகர்ப்பிற்குப் பின்னர் பாரிய வங்கிக்கொள்ளை ஒன்றினை நடத்தவேண்டும் என்று பிரபாகரன் விரும்பினார். இதனைத் தயார்ப்படுத்துவதற்கு அவருக்கு ஒருமாதகாலம் தேவைப்பட்டது. வங்கியில் காவலுக்கு நிற்கும் பொலீஸ் அதிகாரியின் உப இயந்திரத் துப்பாக்கியினைக் கைப்பற்றுவதே அவரது திட்டத்தின் முதலாவது இலக்கு. இதற்கு செல்லக்கிளியை அவர் பொறுப்பாக நியமித்தார். பிரபாகரன் உட்பட 6 பேர் கொண்ட அணியின் தலைவராக செல்லக்கிளியே பிரபாகரனால் நியமிக்கப்பட்டார். தின்னைவேலியில் இயங்கிவந்த மக்கள் வங்கியின் காசாளரான சபாரட்ணத்துடன் நட்பாகப் பேசத் தொடங்கினார் செல்லக்கிளி. செல்லக்கிளியுடன் பேசும்போது சபாரட்ணம் தமது கிளைகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளின்போதும் தமது வங்கியிலிருக்கும் பணத்தினை யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் பிரதான அலுவலகத்திற்குக் கொண்டுசெல்வதாகக் கூறியிருந்தார். வங்கிக் கிளைகளில் சேரும் பணம் நேர்த்தியாக சூட்கேஸுகளில் அடுக்கப்பட்டு, பிரதான காசாளரின் அறையில் வைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை பகல்வேளைகளில் பிரதான அலுவலகத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது. வங்கியின் வரைபடம், உள்நுழையும், வெளியேறும் வாசல்கள் குறித்த தகவல்களை சபாரட்ணம் செல்லகிளிக்கு வழங்கினார். வங்கியில் மேலாளர் உட்பட 8 ஊழியர்கள் வேலைபார்த்து வந்தார்கள். செல்லக்கிளியே ஒருமுறை நேரே வங்கிக்குச் சென்று நடைமுறைகளை அவதானித்து வந்தார். தமிழீழத்தின் எல்லைகள் 1978 ஆம் ஆண்டு மார்கழி 5 ஆம் திகதி, வங்கி தனது அலுவல்களைத் தொடங்கி சரியாக ஒரு மணிநேரத்தின்பின்னர் வங்கி நோக்கி நகர்ந்தது புலிகளின் அணி. வங்கியின் வாயிற்கதவருகே உப இயந்திரத் துப்பாக்கியுடன் காவலுக்கு நின்ற பொலீஸ் கொன்ஸ்டபிள் கிங்ஸ்லி பெரேரா அருகில்ச் சென்று அவர்மீது தாக்குதல் நடத்திய செல்லக்கிளி அவரது இயந்திரத் துப்பாக்கியைப் பறித்துக்கொண்டதோடு, அதனாலேயே அவரைச் சுட்டார். வாயிலின் மறுபுறத்தில் நின்றிருந்த ரிசேர்வ் கொன்ஸ்டபிளான சச்சிதானந்தம் நடப்பதைக் கண்டவுடன் ஓடத் தொடங்கினார். அவரையும் சுட்டுக்கொன்ற செல்லக்கிளி, அவ்விடத்திலேயே காவலுக்கு நின்றுகொண்டார். பிரபாகரனும் மற்றைய நான்கு போராளிகளும் ஊழியர்களை மேலாளரின் அறைக்குள் இட்டுச் சென்றதோடு, சூட்கேசுகளில் இருந்த பணத்தினை உரைப்பைகளில் நிரப்பிக்கொண்டனர். தாம் அங்கிருந்து கிளம்பிச் செல்லும்வரை ஊழியர்களை அசையவேண்டாம் என்று அவர்கள் எச்சரித்திருந்தனர். அவர்கள் கொள்ளையிட்ட பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறும் வேளை கோப்பாய் பொலீஸ் நிலையத்தைச் சேர்ந்த ஜீப் வண்டியொன்று தற்செயலாக அப்பகுதியூடாக வந்தது. கோப்பாய் பொலீஸ் நிலைய அதிகாரி, ஜெயரட்ணம் எனும் கொன்ஸ்டபிளை காசோலை ஒன்றை மாற்றுவதற்காக வங்கிக்கு அனுப்பியிருந்தார். ஜீப் வண்டியிலிருந்து ஜெயரட்ணம் கீழிறங்கவே அவர்மீது செல்லக்கிளி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டார். மற்றையவர்கள் ஜெயரட்ணத்தை இழுத்து வெளியே வீசிவிட, புலிகளின் அணி கொள்ளையிட்ட பணத்தோடு பொலீஸ் வண்டியில் தப்பிச் சென்றது. கொன்ஸ்டபிள் ஜெயரட்ணம் காயங்களுடன் தப்பித்துக்கொண்டார். மிகப்பெரிய வங்கிக்கொள்ளையினை கச்சிதமாக முடித்துக்கொண்ட புலிகளின் அணி, தமது இரண்டாவது இயந்திரத் துப்பாக்கியையும் இந்த நடவடிக்கையில் கைப்பற்றிக்கொண்டது. கொள்ளையிடப்பட்ட பணத்தின் பெறுமதி 1,180,000 ஆக இருந்ததோடு, அக்காலத்தில் இது பெருந்தொகையாக கணிக்கப்பட்டது. அன்று புலிகளுக்கு உதவிய வங்கியின் காசாளரான சபாரட்ணம் இன்று வன்னியில் புலிகளின் நிதிச் சேவைக்கு தலைவராக இருக்கிறார். இன்று புலிகளின் நிதிப்பொறுப்பாளராக இருக்கும் சபாரட்ணம் ஒரு காலத்தில் ரஞ்சித்தப்பா என்று அழைக்கப்பட்டதுடன் இன்று தமிழேந்தியென்றும் அழைக்கப்பட்டு வருகிறார். இயக்கத்தில் இணைந்த திறைமையுள்ள இளைஞர்கள் தின்னைவேலி வங்கிக்கொள்ளையினையடுத்து தமிழேந்தி எனப்படும் சபாரட்ணம் புலிகளுடன் இணைந்துகொண்டார். பிரபாகரனின் செயல்வீரமும், மனதை வசீகரிக்கும் ஆற்றலும் இயக்கத்திற்கு புதிய உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் பெற்றுக்கொடுத்தது. பல திறமைசாளி இளைஞர்கள் புலிகள் இயக்கம் உருவக்கப்பட்டபின்னர் அதனோடு இணையத் தொடங்கினார்கள். நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல, புலிகள் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டவுடனேயே பேபி சுப்பிரமணியம் எனும் இளங்குமரன் இயக்கத்தில் இணைந்துகொண்டார். மேலும் இரத்மலானை விமானத் தகர்ப்பிலும் அவர் பங்கெடுத்திருந்தார். 1977 இல் குமரப்பாவும் பண்டிதரும் இணைந்தார்கள். 1978 இல் கிட்டு, மாத்தையா, ரகு ஆகியோர் இணைந்தார்கள். இவர்கள் எல்லோருமே மிகவும் திடகாத்திரமாக இருந்ததுடன் வெற்றித்தளபதிகளாகவும் வலம்வந்தார்கள். ஆனால், பேபி சுப்பிரமணியம் இராணுவத்துறையிலிருந்து விலகி கல்வித்துறைக்குப் பொறுப்பாக இயங்கிவருகிறார். மாத்தையா தலைமைக்கெதிரான துரோகத்திற்காக மரணதண்டனை வழங்கப்பட ஏனைய தளபதிகள் மாவீரர்களாகிவிட்டதுடன் இன்றுவரை புலிகளாலும், தமிழ் மக்களாலும் மிகவும் அன்பாக நினைவுகூறப்பட்டு வருகின்றனர். இரத்மலானை விமானத் தகர்ப்பின் பின்னரான காலத்தில் கிட்டு, மாத்தையா மற்றும் ரகு ஆகியோர் இயக்கத்தில் இணைந்துகொண்டனர். அவர்கள் எல்லோரும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்கள். கிட்டு பிரபாகரனுக்கு நெருங்கிய உறவினராக இருந்ததுடன், அவருக்கான பயிற்சியினை பிரபாகரனே வழங்கினார். சதாசிவம்பிள்ளை கிருஷ்ணகுமார் எனும் இயற்பெயரைக் கொண்ட கிட்டு வல்வை சிதம்பராக் கல்லூரியில் கல்விகற்றவர். அவரது தந்தை நெல்லியடியில் அச்சகம் ஒன்றை நடத்திவந்தவர், சமஷ்ட்டிக் கட்சியின் தீவிர ஆதரவாளர், தந்தை செல்வாவின் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்த சீடர். கிட்டுவின் தாயாரான இராஜலட்சுமியும் சமஷ்ட்டிக் கட்சியின் தீவிர ஆதரவாளராக இருந்ததுடன் 1961 ஆம் ஆண்டில் இடம்பெற்ற யாழ்ப்பாணச் செயலகத்திற்கு முன்னால் இடம்பெற்ற சத்தியாக்கிரக நிகழ்வில் ஒரு வயதுப் பாலகனான கிட்டுவையும் சுமந்துகொண்டு கலந்துகொண்டவர்கள். கிட்டு, குடும்பத்தின் கடைசிப்பிள்ளயாக 1960 ஆம் ஆண்டு தை 2 ஆம் திகதி பிறந்தார். மகாத்மா காந்தியின் அகிம்சை வழிமுறைகளில் மிகவும் நாட்டம் கொண்டிருந்த கிட்டுவின் பெற்றோர்கள் தமது மூத்த மகனுக்கு காந்திதாசன் என்று பெயர் வைத்தனர். இன்று அவர் இந்தியாவில் வாழ்ந்துவருகிறார். காந்திதாசனுக்குப் பின்னர் இரு பெண்பிள்ளைகள் பிறக்க, இறுதியாக கிட்டு பிறந்தார். கிட்டுவின் மரணம் மிகவும் சோகமான முறையில் நடந்தது. ராஜலட்சுமி தனது தள்ளாத வயதிலும் சமூகத்தில் தாழ்த்தப்பட்டுவாழும் பெண்களின் வாழ்வை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார். கிருஷ்ணகுமார் இயக்கத்தில் இணையும்போது வெங்கட் என்று அழைக்கப்பட்டு பின்னர் வெங்கட் அண்ணா என்று செல்லமாக அழைக்கப்படலானார். இறுதியில் எல்லோராலும் செல்லமாக கிட்டண்ணா என்று விரும்பி அழைக்கப்பட்டார். பிரபாகரனினால் ஆயுதப்பயிற்சி வழங்கப்பட்ட கிட்டு பிரபாகரனோடும், கலபதியோடும் தோளுக்குத் தோள் நின்று செயற்பட்டவர். துரையப்பா மீதான தாக்குதலில் புலிகள் அணியின் குறிபார்த்துச் சுடும் வீரராகவும் பங்கெடுத்தவர். துரையப்பாவின் கொலையின்பின்னர் பிரபாகரனுடன் கிட்டுவும் 1979 இல் தமிழ்நாட்டிற்குச் சென்றிருந்தார். மாத்தையாவின் இயற்பெயர் கோபாலசாமி மகேந்திரராஜா. அவர் 1956 ஆம் ஆண்டு பருத்தித்துறையில் பிறந்ததோடு சிதம்பராக் கல்லூரியில் கல்விகற்றவர். அவரையும் பிரபாகரனே பயிற்றுவித்தார். இயக்கத்தின் உபதலைவர் நிலைக்கு உயர்ந்த மாத்தையா வன்னிப்பகுதிக்குப் பொறுப்பாகச் செயற்பட்டிருந்தார். கிட்டுவுடனான மாத்தையாவின் தனிப்பட்ட குரோதமே அவரின் வீழ்ச்சிக்குக் காரணமாகியது. ரகு பொலீஸ் துறையில் சேர விண்ணப்பித்திருந்தார். அவர் வல்வெட்டித்துறையில் பிறந்தமையினால் பொலீஸார் அவரை சேர்க்க மறுத்துவிடவே அவர் புலிகளுடன் சேர்ந்துகொண்டார். பிரபாகரன் தனது முழு நேரத்தையும் தனது போராளிகளைப் பயிற்றுவித்தல், ஆயுதங்களைச் சேகரித்தல், பணத்தினைச் சேகரித்தல் என்பதிலேயே செலவிட்டார். அவர் தனது போராளிகளை அர்ப்பணிப்பு மிக்க, இலட்சியத்தினால் உந்தப்பட்ட, குற்றமேதுமற்ற, ஒழுக்கம் மிக்க, தலைமைக்கு விசுவாசமான வீரர்களாக உருவாக்கினார். ஒழுக்கமும் விசுவாசமுமே வெற்றிகரமான விடுதலை அமைப்பை உருவாக்கும் என்று பிரபாகரன் உறுதியாக நம்பினார்.
  20. எதிரியிடமிருந்து ஆயுதங்களைப் பறித்தல் இத்தொடரை எழுதும்போது நான் சேகரித்த விடயங்களை எனது வாசகர்களோடு பகிரும் அதேவேளை அவர்களிடமிருந்து இத்தொடர் குறித்த தகவல்கள், திருத்தங்கள் ஆகியவற்றை பெற்றுக்கொள்வதன் மூலம் எமது வாழ்நாளில் தமிழ் இனம் கண்ட ஒப்பற்ற ஆளுமை பற்றி எமது வருங்கால சந்ததியினரும் அறிந்துகொள்ளும் வகையில் ஆவணம் ஒன்றைத் தயார்ப்படுத்த வேண்டும் என்பதே எனது நோக்கமாகும். வாசகர்களின் கருத்துக்களை எனது தொடரினுள் உள்வாங்குவது எனது நோக்கமல்ல, மாறாக அவற்றினை எனது தொடருக்குச் சமாந்தரமாக குறிப்பிட்டுச் செல்வதன்மூலம் எதிர்கால எழுத்தாளர்களுக்கும், வரலாற்றாசிரியர்களுக்கும் தமது பதிவுகளை மேற்கொள்ள உதவுவதே எனது நோக்கமாகும். பிரபாகரன் ஒரு தனி மனிதன் அல்ல, அவன் ஒரு நிகழ்வு. உலகின் ஒப்பற்ற கெரில்லா தலைவர்களுள், விடுதலைப் போராட்ட வீரர்களுள் முதன்மையானவன். அவன்பற்றி எழுதப்படுவதும், ஆராயப்படுவதும் கருத்தாடப்படுவதும் மிக மிக அவசியம். இதுவரை எனக்குக் கிடைக்கப்பெற்ற வாசகர்களின் கருத்துக்களில் ஒரு சிலவற்றைப் பற்றி இங்கு குறிப்பிட விரும்புகிறேன், ****************************************************************************************************** எனது அக்கத்தில் நான் இட்ட முக்கியமான வழு ஒன்று பற்றி கனடாவில் வசித்து வரும் அம்பலவானர் செல்லத்துரை தெரிவித்த கருத்திலிருந்து ஆரம்பிக்கலாம், அவரது மின்னஞ்சலின இங்கே பிரசுரிக்கிறேன், ஐயா, உங்களின் பதின் நான்காவது அத்தியாயத்தில் புனித மாணிக்கவாசகரின் சுலோகமான நாம் யார்க்கும் குடியல்லோம் என்பதை தங்கத்துரை பாடியதாகக் குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால், இந்த சுலோகம் திருநாவுக்கரசரால் பாடப்பட்டதே ஒழிய, மாணிக்கவாசகரினால் அல்ல, ஆகவே தயவுசெய்து திருத்தி விடுங்கள். நான்கு சைவ புனிதர்களுள். அப்பரே முதன்மையானவர். அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் மற்றும் மாணிக்கவாசகர் ஆகிய நால்வருமே அவர்களாகும். நான் ஒரு இந்து. இந்தப் பெயர்கள் எனது மனதில் ஆழமாகப் பதிந்துள்ளன. எனது சிறுவயதில் முதியோரிடமிருந்து குட்டுக்களை வாங்காது இவற்றை நான் மனப்பாடம் செய்துவைத்திருக்கிறேன். இந்தத் தவற்றினை நான் எவ்வாறு செய்தேன் என்று எனக்கே புரியவில்லை. அதற்காக வருந்துவதோடு, அதனை திருத்தியும் விட்டேன்.1957 ஆம் ஆண்டிலிருந்து ஒரு செய்தியாளனாக வலம்வரும் எனக்கு எனது தரவுகளில் ஏற்படும் தவறுகள் மிகுந்த அச்சத்தினை ஏற்படுத்தி விடுகின்றன. *********************************************************************************************************** சங்கம் இணையத்தின் ஆசிரியரின் கருத்து, "உங்களின் பிரபாகரன் பற்றிய தொடரினை தொடர்ச்சியாக வாசித்துவரும் ஒருவரை சங்கம் இணையத்தள உறுப்பினர் கூட்டத்தில் சந்தித்தேன். அவர் என்னிடம் கேட்ட முதலாவது கேள்வி, "சபாரட்ணம் இத்தொடரினை எழுதி முடித்தபின்னர் அதனை ஒரு புத்தகமாக வெளியிடப் போகின்றாரா?" என்பதுதான். உங்களின் தொடரினை வாசித்து தான் பெற்ற அனுபவத்தினைத் தொடர்ச்சியாக அவர் விபரித்துக்கொண்டு சென்றார். அத்தொடரினை பக்கச்சார்பில்லாத, உண்மையான தகவல்களைக்கொண்ட, நேர்த்தியாக அமைக்கப்பட்ட முழுமையான ஆவணம் என்று அவர் என்னிடம் கூறினார். நீங்கள் எழுதும் விதத்தினைப் பார்க்கும்போது அச்சம்பவங்களினை நேரில் கண்ட அனுபவம் ஏற்பட்டதாக அவர் கூறுகிறார். இத்தொடரினை தான் தொடர்ச்சியாக வாசித்துவருவதாகவும் தனது நண்பர்களுக்கும் இத்தொடர் குறித்து கூறிவருவதாகவும் என்னிடம் பேசும்போது அவர் கூறினார்" பிரபாகரனின் இளமைக் காலத்தில் தானும் சைக்கிளில் பிரபாகரன் சென்ற பேரணிகளுக்குச் சென்றதாகக் கூறும் அவர், உங்களின் தொடரினை வாசிக்கும்போது தனது பழைய நினைவுகளை மீட்கக்கூடியதாக அமைந்ததாகக் கூறினார்" என்று சங்கம் இணைய ஆசிரியர் என்னிடம் தெரிவித்தார். அந்த மனிதருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டே, அவர்கூட தனது அனுபவங்களை எழுதலாமே என்று கேட்டுக்கொண்டேன். பிரபாகரன் தனது இளமைக் காலத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் நீள அகலங்களுக்கெல்லாம் சைக்கிளில் பயணித்து குடாநாட்டின் வீதிகள், ஒழுங்கைகள், குச்சொழுங்கைகள் என்று சகல பகுதிகளையும் தெளிவாக அறிந்துவைத்திருந்தார் என்பது நாம் அறிந்ததே. பிரபாகரன் பேரணிகளுக்கும், அரசியல்க் கூட்டங்களுக்கும் சைக்கிளிலேயே சென்று வந்தார். ஆகவே, அவர் பயணித்த இடங்கள், நிகழ்வுகள் மற்றும் அவருடனான சம்பாஷணைகள் என்பனவற்றை ஆவணப்படுத்தி வைத்திருப்பது எமக்கு உதவியாக இருக்கும். ஆகவேதான் அந்த மனிதரிடம் பிரபாகரன் குறித்த விடயங்களை எழுதுமாறு கேட்டிருந்தேன். ********************************************************************************************************** இவ்வாறே இன்னொரு கடிதம் ஒன்று கனடா கார்ள்ட்டன் பல்கலைக்கழகத்தில் இரசாயணவியல் கற்கும் மாணவர் ஒருவரிடமிருந்து வந்திருந்தது. அவரது கடிதத்திலிருந்து சில பகுதிகள், "இத்தொடரை எழுதுவதற்காக சபாரட்ணம் அவர்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகள். இத்தொடர் மூலம் பல விடயங்களை நான் அறிந்துகொள்ள முடிந்ததோடு, அவர் எழுதும் விதமும் மிகவும் நன்றாக இருக்கிறது" என்று கூறியதோடு, இந்தத் தொடரினை தனது பல்கலைக்கழகத்தின் தமிழ்ச் சங்கம் இணையத் தளத்திலும் தரவேற்றம் செய்யப்போவதாகவும் கூறியிருந்தார். இவ்வாறான ஊக்கப்படுத்தல்கள் எனக்கு மனநிறவினைத் தருகின்றன. மற்றையவர்களும் இதுபோன்ற செயல்களைச் செய்யலாம். இவர்களைப்போன்றே இன்னும் பலரும் இதுகுறித்து எழுதவேண்டும் என்று விரும்புகிறேன். அவர்கள் தமது கருத்துக்களை சங்கம் இணையத்தின் ஆசிரியருக்கு அனுப்பி வைக்கலாம். நன்றி டி. சபாரட்ணம் ************************************************************************************************************* இரண்டு விதிகள் 1978 ஆம் ஆண்டி இரண்டாவது அரைப்பகுதியில் தமிழ் ஆயுத அமைப்புக்களுக்கிடையில் பாரிய அறிவுசார் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வந்தன. இரு பிரச்சினைகளான தனிநபர் தீவிரவாதம் மற்றும் வங்கிக்கொள்ளை என்பன பேசுபடுபொருளாக இருந்தன. மாக்ஸியச் சிந்தனையைக் கொண்டிருந்த ஆயுத அமைப்புக்கள் இந்த இரு செயற்பாடுகளையும் ஒழுக்கக்கேடானவை என்றும் சமூகக் கோட்பாடுகளுக்குப் புறம்பானவை என்றும் விமர்சித்தன. தனிநபர்களைக் கொல்வது விடுதலைப் போராட்டம் ஆகாது என்றும் அவர்கள் வாதிட்டனர். அவர்களைப்பொறுத்தவரை வங்கிக்கொள்ளை என்பது மக்களின் பணத்தினைக் கொள்ளையடிப்பதுதான் என்று கருதப்பட்டது. மக்கள் புரட்சிக்காக அணிதிரட்டப்படவேண்டும் என்றும், போராட்டத்தினைச் சுமக்கும் நிலையினை மக்கள் உருவாக்கவேண்டும் என்றும் அவர்களால் கூறப்பட்டது. ஈரோஸ் அமைப்பின் ஆதரவாளர்களே இந்த விவாதங்களை ஆரம்பித்து வைத்திருந்தார்கள். அவ்வியக்கத்தின் ஸ்த்தாபகரான ரத்ணா எனப்படும் ரத்திணசபாபதி யாழ்ப்பாணத்தில் அப்போது தங்கியிருந்தார். அவர் ஏற்கனவே லெபனானில் ஆயுதப் பயிற்சியை முடித்திருந்தவர். அவரது கனவு தத்துவார்ந்த அடிப்படியில் அமைந்திருந்ததோடு, மிகவும் விரிவானதாகவும் இருந்தது. மேலும், பாட்டாளி வர்க்கத்தின் ஆயுதப்போராட்டமாகவே அவர் விடுதலைப் போராட்டத்தை விளங்கிக்கொண்டிருந்ததுடன், மத்திய மலைநாட்டில் வசித்துவந்த மலையகத் தமிழர்களையும் உள்ளடக்கியதாக போராட்டம் அமையப்பெறவேண்டும் என்றும் அவர் விரும்பினார். அவர் தன்னுடன் தமிழீழத்திற்கான வரைபடம் ஒன்றையும் கொண்டுவந்திருந்தார். அதில் வடக்குக் கிழக்கு மாகாணங்களுடன் மத்திய மாகாணமும் இணைக்கப்பட்டிருந்தது. ஆனால், பிரபாகரனோ மிகவும் எளிமையான யதார்த்தவாதியாக இருந்தார். ஆதலால், மார்க்ஸிய தத்துவவாதிகளிடமிருந்து அவர் வேறுபட்டவராகக் காணப்பட்டார். தமிழீழத்தின் பகுதிகள் மட்டுமல்லாது போராட்டத்தின் தத்துவார்த்த அடிப்படை தொடர்பிலும் வேறுபட்ட எண்ணங்களைக் கொண்டிருந்தார். அவரைப்பொறுத்தவரை தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்துவரும் வடக்கும் கிழக்கும் இணைந்த நிலப்பகுதியே தமிழீழம் என்று கருதப்பட்டது. மத்திய மலைநாடு கண்டிய சிங்களவர்கள் சரித்திர காலம் தொட்டு வாழ்ந்துவரும் ஒரு பகுதி என்று பிரபாகரனினால் உணரப்பட்டது. அவர் தன்னை ஒரு மார்க்ஸியவாதியாக அடையாளப்படுத்திக்கொள்ளவில்லை. தொழிலாளர் பற்றியோ, பாட்டாளி வர்க்கம் பற்றியோ, வர்க்கவேறுபாடற்ற சமுதாயம் பற்றியோ அவர் ஒருபோதும் பேசவில்லை. தனது சிறுபராயம் முதல் அவருக்கிருந்த ஒரே கவலை தமிழினத்தின் பாதுகாப்பு மட்டும்தான். தமிழர்கள் சிறுமைப்படுத்தப்பட்ட இனமாக கருதப்படுவதை அவர் வெறுத்தார். அவர்கள் சுதந்திரமாகவும், சுயகெளரவத்துடனும் பாதுகாப்புடனும் வாழவேண்டும் என்று அவர் விரும்பினார். சிங்களக் காடையர்களாலும், இராணுவத்தாலும் அவர்கள் அச்சுருத்தப்படுவதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சோசலிசம் தொடர்பான பிரபாகரனின் நிலைப்பாடு என்பது தமிழினத்தை சாதிய வேற்றுமைகள் அற்ற சமூகமாக மாற்றவேண்டும் என்கிற விருப்பிற்கு அப்பால் வேறு எதுவாகவும் இருக்கவில்லை. சாதிய வேறுபாடுகள் போராட்டத்திற்குப் பாதகமாக அமையும் என்று அவர் நம்பினார். சாதிய வேற்றுமைகள் தமிழர்களின் ஒற்றுமையினைக் குலைத்துவிடுவதோடு, பலமான ஆயுதப் போராட்ட அமைப்பொன்றினை உருவாக்குவதையும் தடுத்துவிடும் என்று அவர் கருதினார். யாழ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர் பிரபாகரனுடன் ஒருமுறை பேசும்போது, ஆயுதப் போராட்டத்திற்கு முதல் மக்கள் அரசியல்மயப்படுத்தப்படவேண்டும் என்று கூறியிருந்தார். அதனை உடனடியாக கையை வீசி மறுத்த பிரபாகரன், "என்ன அரசியல்மயப்படுத்தல்?" என்று கேட்டார். "மக்களுக்கு இன்று தேவையானது செயல்கள் மட்டுமே. நாம் செயலில் முதலில் இறங்கவேண்டும். மக்கள் எம்மைப் பிந்தொடர்வார்கள்" என்று அவர் கூறினார். அதையேதான் அவர் செய்தும் காட்டினார். அவரது போராட்டத்தின் முறையாகவும் அதுவே இருந்தது. திருப்பியடி, கடுமையாகத் திருப்பியடி, மீண்டும் மீண்டும் திருப்பியடி, இடைவேளையின்றி திருப்பியடி, மக்கள் உன்னுடன் இருப்பார்கள் என்பதே அவரது எண்ணமாக இருந்தது. தனது நிலைப்பாட்டிலிருந்து இரு முக்கிய விதிகளை அவர் வரைந்தார். போராட்டத்திற்கான ஆயுதங்களை உனது எதிரியிடமிருந்தே பறித்துக்கொள். எதியிடமிருந்தே உனது போராட்டத்திற்குத் தேவையான பணத்தினைக் கொள்ளையடி என்பதுதான் அவையிரண்டு விதிகளும். புலிகள் இராணுவத்தினரிடமிருந்தும், பொலீஸாரிடமிருந்துமே தமது பெரும்பாலான ஆயுதங்களைக் கைப்பற்றியிருந்தனர். எந்தவொரு ராணுவ நடவடிக்கையினதும் முக்கிய குறிக்கோளாக இருப்பது எதிரியிடமிருந்து ஆயுதங்களைக் கைப்பற்றுவதுதான் என்று பிரபாகரன் தனது போராளிகளுக்குச் சொல்லிவந்தார். போராட்டத்தின் ஆரம்பக் கட்டத்தில் தமக்குத் தேவையான பணத்தின் பெரும்பகுதியை இரு அரச வங்கிகளான மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி ஆகியவற்றைக் கொள்ளையிட்டதன் மூலம் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.
  21. முதலாவது விமானத் தகர்ப்பு 1978 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பினை அமுல்ப்படுத்திய நிகழ்வினை கெளரவிக்க புரட்டாதி 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் நிகழ்வொன்றினை அரசு ஒழுங்குசெய்திருந்தது. இந்நிகழ்வில் பங்குபற்றும் முன்னணியினரின் விருப்பு இளைஞர்களின் கடுமையான அழுத்தத்தினையடுத்து கைவிடப்பட்டது. 1972 ஆம் ஆண்டு அமுல்ப்படுத்தப்பட்ட குடியரசு யாப்பின்மூலம் தமிழர்களின் கழுத்தில் கட்டப்பட்ட தூக்குக் கயிற்றினை 1978 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பு மேலும் இறுக்கியிருக்கிறது என்று இளைஞர்கள் வாதிட்டு வந்தனர். 1978 ஆம் ஆண்டி யாப்பு ஒற்றையாட்சி முறையினை மேலும் உறுதிப்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத் தக்கது. சிங்கள மொழிக்கும் பெளத்த மதத்திற்குமான அதியுயர் இடம் இந்த யாப்பிலும் மேலும் உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டதுடன், பெளத்த மதத்தினை மேலும் மேம்படுத்தும் நோக்குடன் பெளத்த சாசன அமைச்சு எனும் அதிகாரம் மிக்க அமைச்சுப் பொறுப்பும் இந்த யாப்பின்மூலம் உருவாக்கப்பட்டது. ஏற்கனவே இருந்த சிங்கள மொழிக்கான உத்தியோகபூர்வ அந்தஸ்த்து இந்த யாப்பின்மூலம் மேலும் விரிவாக்கப்பட, தமிழ் மொழியிலான நிர்வாகம் தமிழ் பேசும் பகுதிகளுக்கு மட்டுமே என்று சுருக்கப்பட்டது. வடக்குக் கிழக்கிற்கு வெளியே வாழும் தமிழர்கள் தமது நிர்வாகத் தேவைகளை சிங்கள மொழியிலேயே செய்துகொள்ளவேண்டிய நிலையினையும் இந்த யாப்பு ஏற்படுத்தியது. 1972 ஆம் ஆண்டி யாப்பினை அடிமைச் சாசனம் என்று அன்று கூறிய நீங்கள் இன்று அதனைவிடவும் அநீதியான யாப்பினை எப்படி ஆதரிக்க நினைக்கிறீர்கள்? என்று தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இளைஞர்கள் கேள்வியெழுப்பி வந்தனர். அமிர்தலிங்கத்திடம் பதில் இருக்கவில்லை. அவரால் செய்ய முடிந்ததெல்லாம் அரசியல் யாப்பு நிகழ்வினைப் புறக்கணித்த தீர்மானத்தை அடக்கி வாசிப்பதும் இளைஞர்களால் முன்வைக்கப்பட்ட கறுப்புக்கொடி போராட்டத்தை நிராகரித்ததும் மட்டும்தான். ஜெயவர்த்தனவின் அரசுக்கெதிராக இளைஞர்கள் செய்யும் எந்தப் போராட்டமும் இன்னொரு இனக்கலவரத்தை ஏற்படுத்திவிடும், ஆகவே அரசியல் யாப்பிற்கெதிரான எந்தப் போராட்டத்திலும் இறங்கி ஜெயவர்த்தனவை ஆத்திரப்படுத்த வேண்டாம் என்று கூறி இளைஞர்களை அடக்கி வைக்க முயன்றார். ஆனால், அமிர்தலிங்கத்தின் பயமுருத்தல்களை இளைஞர்கள் சட்டை செய்யவில்லை. வடக்குக் கிழக்கின் பெரும்பாலான பகுதிகளில் அரசியல் யாப்பு நிகழ்விற்கெதிராக கறுப்புக் கொடிகளை தமிழர்கள் பறக்கவிட்டார்கள். மட்டக்களப்பில் பஸ் வண்டிமீது குண்டுவீசப்பட்டதுடன் ஊர்காவற்றுரையில் இன்னொரு பஸ் வண்டி எரியூட்டப்பட்டது. இன்னொரு குண்டு பஸ் வண்டியினுள் வெடிக்கவைக்கப்பட்டது. இதற்குப் பதிலடியாக மட்டக்களப்பில் வாழ்ந்துவந்த காசி ஆனந்தனை அரசு கைது செய்தது. இவை சிறிய சம்பவங்கள் மட்டுமே. புலிகள் இந்த சம்பவங்கள் எவற்றிலும் ஈடுபட்டிருக்கவில்லை. எயர் சிலோன் என்று அழைக்கப்பட்ட இலங்கையின் விமான சேவைக்குச் சொந்தமான விமானம் ஒன்றினைத் தகர்க்கும் திட்டத்தில் புலிகள் அப்போது ஈடுபட்டிருந்தார்கள். விமானங்களைக் கடத்துவதோ அல்லது குண்டுவைத்துத் தகர்ப்பதோ அன்றைய காலத்தில் சர்வதேச கவனத்தை ஈர்த்திருந்த சம்பவங்களாக இருந்தமையினால், தாமும் அவ்வாறான தாக்குதல் ஒன்றினைச் செய்யவேண்டும் என்று பிரபாகரனும் உமாவும் திட்டமிட்டனர். பாலஸ்த்தீனியர்கள் இதனைச் செய்திருந்தனர். வேறு சில கெரில்லா அமைப்புக்களும் இவ்வாறான விமானத் தகர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். ஆகவே, தாமும் அதனைச் செய்ய வேண்டும் என்று புலிகள் முடிவெடுத்தனர். இத்தாக்குதல் நடவடிக்கைக்கு நால்வர் பொறுப்பாக நியமிக்கப்பட்டனர். அவர்கள் பிரபாகரன், உமா மகேஸ்வரன், பேபி சுப்பிரமணியம் மற்றும் ராகவன் ஆகியோராகும். பிரபாகரனும் பேபி சுப்பிரமணியமும் நேரம் குறித்து வெடிக்கும் குண்டினைத் தயாரிப்பதில் ஈடுபட உமா மகேஸ்வரனும் ராகவனும் விமானத்தை தெரிவுசெய்தல், தாக்குதலின் பின்னரான பிரச்சார நடவடிக்கைகளைத் திட்டமிடல் ஆகியவற்றில் ஈடுபட்டனர். மேம்படுத்தப்பட்ட குண்டுகளைத் தயாரிப்பதில் வல்லுனராக பிரபாகரன் இருந்தார். அவ்வாறே, குண்டுகளை நேரம் குறித்து வெடிக்கவைக்கும் பொறிமுறையினை பேபி சுப்பிரமணியம் என்று அழைக்கப்படும் இளங்குமரன் அறிந்துவைத்திருந்தார். ஆகவே, இருவரும் இணைந்து ஒரு நேர வெடிகுண்டினைத் தயாரித்து முடித்தனர். பாராளுமன்ற அமர்வின் உத்தியோகபூர்வ ஆரம்ப நாளான புரட்டாதி 7 ஆம் திகதியே குண்டினை வெடிக்கவைப்பது என்று மத்திய குழு முடிவெடுத்திருந்தது. இரத்மலானையிலிருந்து பலாலிக்கு நடத்தப்படும் விமான சேவையில் அமர்த்தப்பட்டிருந்த அப்ரோ 748 ரக விமானத்தில் இரு ஆசனங்கள் புலிகளால் பதிவுசெய்யப்பட்டன. அன்று இரத்மலானையில் 35 பயணிகளுடன் விமானம் வந்திறங்கியது. பேபி சுப்பிரமணியமும், ராகவனும் குண்டின் நேரப் பொறியை அமுக்கிவிட்டு இறுதியாக விமானத்தை விட்டு இறங்கி, விரைவாகவே விமான நிலையத்திலிருந்தும் வெளியேறிச் சென்றனர். மாலைதீவுக்கான பயணிகள் விமானத்தில் ஏறுவதற்குச் சற்று முன்னதாக குண்டு வெடித்தது. குண்டுவெடிப்பினை விசாரணை செய்த பொலீஸார், மாலைதீவிற்குச் செல்லும் வழியிலேயே குண்டினை வெடிக்கவைக்க புலிகள் திட்டமிட்டிருந்தார்கள் என்று கூறியபோதும், புலிகள் அதனை முற்றாக மறுத்துவிட்டனர். பாலகுமாரன், பேபி சுப்பிரமணியம், தங்கன் பேபி சுப்பிரமணியம் தற்போது புலிகளின் நிர்வாகத்தில் கல்வித்துறைக்குப் பொறுப்பாக இருந்துவருகிறார். புலிகளிடமிருந்து விலகிய ராகவன் இன்று இங்கிலாந்தில் வாழ்ந்துவருகிறார். லண்டனில் இருந்த தனது தொடர்பாளர்கள் மூலம் விமானத்தைத் தகர்த்தது புலிகளே என்று உமா மகேஸ்வரை உரிமை கோரி அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தார். "எமது விடுதலைப் போராட்டத்தினை நசுக்கி, இலட்சியத்தைத் தகர்த்து, சலுகைகள் மூலம் எமது விடுதலைத் தீயை அணைத்துவிடலாம் என்று கனவுகாணும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு இந்த விமானத் தகர்ப்பு ஒரு பாடமாக இருக்கட்டும்" என்று என்று அந்த அறிக்கை கூறியது. இத்தாக்குதலின் மூலம் இணக்க அரசியலை நடத்திவந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என்று ஜெயவர்த்தனா கொண்டிருந்த திட்டம் ஆட்டம் காணத் தொடங்கியது. கொழும்பில் இதேவகையான உரிமைகோரும் அறிக்கையினை வெளியிட்டிருந்த உமா மகேஸ்வரன் அந்தக் கடிதத்தில் புலிகள் இயக்கத்தின் தலைவர் என்று கையொப்பம் இட்டிருந்தார். தம்மீதான தடையினூடாகவும், விமானத் தகர்ப்பு நடவடிக்கை மூலமும் சர்வதேசத்தில் விமானத் தகர்ப்பில் ஈடுபடக்கூடிய வல்லமையினைப் பெற்றிருந்த ஒரு சில விடுதலை அமைப்புக்களில் ஒன்றாக புலிகளும் ஆகிப்போனார்கள். தமது முதலாவது நேர வெடிகுண்டுத் தாக்குதல் மூலம் இந்த நிலையினை அடைந்தார்கள் புலிகள்.
  22. செய் அல்லது செய்ய விடு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் மூன்றாவது மாநாடு ஆவரங்காலில் ஆடி 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் இடம்பெற்றது. இளைஞர்களின் ஆத்திரத்தினை முன்னணியினர் அப்போது மிகவும் தெளிவாக உணர்ந்திருந்தனர். "நீங்கள் செய்யுங்கள், அல்லது எங்களைச் செய்ய விடுங்கள்" எனும் மனநிலைக்கு இளைஞர்கள் வந்திருந்தனர். பேரணிகளுக்கு எதிராகப் பொலீஸார் விதித்திருந்த தடைகளையும் மீறி முத்துக்குமாரசாமி தலைமையில் சுமார் 300 இளைஞர்கள் அச்சுவேலிச் சந்தியிலிருந்து மாநாடு நடைபெற்ற ஆவரங்கால் நோக்கி பேரணியாக "செய் அல்லது எம்மைச் செய்ய விடு" எனும் கோஷத்தினையும் எழுப்பியவாறு சென்றனர். மாநாடு நடைபெற்ற மைதானத்தினுள் உள்நுழைந்த இளைஞர்கள், அந்த மைதானத்தைச் சுற்றிக் கோஷமிட்டவாறே சென்றதுடன், அங்கிருந்தவர்களுக்கு தாம் கொண்டுசென்ற துண்டுப்பிரசுரங்களையும் விநியோகித்தனர். அதில், 1977 ஆம் ஆண்டு மக்களால் வழங்கப்பட்ட ஆணைக்கு அமைவாக தமிழீழ தனிநாடு நோக்கிய பயணத்தை முன்னணியினர் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்று கேட்கப்பட்டிருந்தது. அமிர்தலிங்கம் இநத நடவடிக்கையினால் அதிருப்தியடைந்து காணப்பட்டதுடன், இளைஞர் மேல் தனக்கிருந்த கட்டுப்பாடு முற்றாக இல்லாமற்போனதையும் உணர்ந்துகொண்டார். மைதானத்தில் அடாத்தாக உள்நுழைந்திருந்த இளைஞர்கள் மீது அமிர்தலிங்கத்தின் அடியாட்களில் ஒருவரான ஜனசேகரன் எனப்படும் "பரந்தன் ராஜன்" தாக்குதலில் ஈடுபட்டதுடன், இளைஞர்களின் கைகளிருந்த துண்டுப்பிரசுரங்களையும் பறிக்க முனைந்தார். ஆனால் இதே பரந்தன் ராஜன் சில காலத்திற்குப் பின்னர் அமிர்தலிங்கத்தைக் கைகழுவி விட்டு ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி எனப்படும் ஈ பி ஆர் எல் எப் அமைப்பில் இணைந்துகொண்டதுடன், அதற்குப் பின்னரான காலத்தில் இந்திய அணுசரணையுடன் ஈழத் தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி எனப்படு ஈ என் டி எல் எப் எனும் ஆயுதக் குழுவையும் ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத் தக்கது. மைதானத்தினுள் நுழைந்திருந்த இளைஞர்கள் மீது அமிர்தலிங்கத்தின் அடியாட்கள் தாக்குதல் நடத்திக்கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டே "தளபதி" என்று அழைக்கப்பட்ட அமிர்தலிங்கம் மேடையில் வீற்றிருந்தார். இளைஞர்களுக்கும் அமிரின் ஆட்களுக்கும் இடையே நடந்துகொண்டிருந்த கைகலப்பில் மக்களின் கவனம் சென்றிருக்க, அதனைத் திசைதிருப்பும் முகமாக பெண்ணொருவர் மேடையில் ஏறி பாடத் தொடங்கினார். அவளது பாடல் பலரின் கரகோஷத்தினையும் பெற்றது. "துவக்கு போரைத் துவக்கு துவக்கும் போரைத் துவக்கு" என்று அவள் பாடினாள். நீ திட்டமிட்ட போரை உடனே தொடங்கு என்பது போலவும் துவக்கினைக் கொண்டு ஆயுதப்போராட்டத்தினைத் தொடங்கு என்பது போலவும் இரட்டை அர்த்தத்தில் அப்பாடல் அவளால் பாடப்பட்டது. அங்கிருந்த பெரும் எண்ணிக்கையான இளைஞர்களின் மனோநிலையினை அப்பாடல் வெளிக்காட்டியது. மாநாட்டில் கலந்துகொண்ட தமது உறுப்பினர்கள் மூலம் முன்னணியினருக்குக் கடுமையான செய்தியொன்றினைச் சொல்ல இளைஞர்கள் விழைந்திருந்தனர். மக்கள், முன்னணியினர் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு துரோகம் இழைத்து விட்டதாக இளைஞர்கள் விமர்சித்தனர். முன்னணியினரின் தலைமை எடுக்கும் முடிவுகளை கண்டிக்கும் இரு தீர்மானங்களையும் இளைஞர்கள் நிறைவேற்றினர். முதலாவது தீர்மானம், தமிழப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உடனடியாக தமிழீழப் பாராளுமன்றத்திற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும், தமிழீழத்திற்கான அரசியல் யாப்பினை வரையவேண்டும் என்றும் கேட்டிருந்தது. இரண்டாவது தீர்மான தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான விதிமுறைகளை உடனடியாக வரையவேண்டும் என்றும் கேட்டிருந்தது. இளைஞர்களால் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானங்களை அமிர்தலிங்கத்தின் ஆதரவாளர்களான வண்ணை ஆனந்தன் மற்றும் பரமேஸ்வரன் ஆகியோரே ஆதரித்திருந்தனர். பரமேஸ்வரன் கோப்பாயைச் சேர்ந்தவர் என்பதும், தமிழ் மாணவர் பேரவையினால் கோப்பாய் வங்கி மீது நடத்தப்பட்ட தோல்வியடைந்த கொள்ளைச் சம்பவத்திலும் ஈடுபட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது. முன்னணியினருடனான அவரது நெருக்கத்தையடுத்து ஆவரங்கால் மாநாட்டினைத் தலைமையேற்று நடத்தும் பொறுப்பு அவருக்கு முன்னணியினரால் வழங்கப்பட்டிருந்தது. அவர் தனது தலைமை உரையில், "தலைவர்கள் உடனடியாகச் செயற்படவேண்டும். அவர்கள் நேரத்தை வீணடிக்கக் கூடாது. மக்கள், தலைவர்களின் செயற்பாட்டிற்காகக் காத்திருக்கிறார்கள், அதற்காக எந்தத் தியாகத்தினையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். எமது செயற்பாட்டிற்கான திட்டத்தினை தலைவர்கள் உடனடியாக வரைய வேண்டும். அதனைப் பிந்தொடர்ந்து வர நாம் காத்திருக்கிறோம்" என்று பரமேஸ்வரன் கூறினார். வண்ணை ஆனந்தன் பேசும்போது, தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தாம் செய்யவேண்டிய கடமையிலிருந்து விலகாது பயணிக்கவேண்டும் என்று நினைவுறுத்திப் பேசினார். வி யோகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் முன்னணியினரின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அறிவுருத்தும் பேச்சு இரு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இளைஞர்களுக்கும் இடையே முன்னர் ஏற்பட்ட பிணக்கு ஒன்றினை அடிப்படையாக வைத்தே பேசப்பட்டது. ஆவரங்கால் மாநாட்டிற்கு இரு வாரங்களுக்கு முன்னதாக அரசின் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் யாழ்ப்பாணத்தில் தனது கிளை ஒன்றினைத் திறந்திருந்தது. இந்த திறப்பு நிகழ்வுக்கு அமிர்தலிங்கம் பிரதம அதிதியாக அழைக்கப்பட்டிருந்தாலும், அவர் தனது சார்பாக யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் வி யோகேஸ்வரனையும், உடுவில்த் தொகுதி உறுப்பினர் எஸ் தர்மலிங்கத்தையும் அனுப்புவதாகத் தீர்மானித்திருந்தார். இந்தச் செய்தி வெளியில் பரவவே, பெருமளவு இளைஞர்கள் யோகேஸ்வரனின் வீட்டின் முன்னால் திரண்டு, அந்நிகழ்விற்குச் செல்லவேண்டாம் என்று கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், அங்கு பேசிய யோகேஸ்வரன், " அமிர் அண்ணா எங்களுக்கு இட்ட கட்டளைக்கு அமைய நாம் அந்நிகழ்வில் பங்கெடுப்போம், இதில் சமரசத்திற்கு இடமில்லை" என்று இளைஞர்களைப் பார்த்துக் காட்டமாகக் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், அவரின் வீட்டு வாயிலின் முன்பாக அமர்ந்து அவரது பயணத்தைத் தடுக்க முயன்றனர். ஆனால், இளைஞர்கள் எதிர்பாராத தருணத்தில் தனது வீட்டின் மதிலை தாண்டிக் குதித்த யோகேஸ்வரன், இளைஞர்களின் எதிர்ப்பிற்கு மத்தியிலும் திறப்பு விழாவில் கலந்துகொண்டார். இன்னொரு இளைஞர் குழு காப்புறுதி நிறுவனத்தின் கிளையின் அருகே காத்திருந்து அங்கு வந்த தர்மலிங்கத்தைக் கைகளில் பிடித்துக்கொண்டதுடன், நிகழ்விற்குச் செல்லவிடாமல்த் தடுக்கும் முகமாக அவரை வெளியே இழுத்துவர முற்பட்டது. அவர்களைத் தள்ளி வீழ்த்திவிட்டு தர்மலிங்கமும் திறப்புவிழாவில் கலந்துகொண்டார். ஆனால், அமிர்தலிங்கத்தினால் மற்றைய இரு பாராளுமன்ற உறுப்பினர்களையும் போல இளைஞர்களைத் தள்ளிவிட்டுச் செல்ல முடியவில்லை. ஆகவே, இளைஞர்களை அப்போதைக்குச் சமாளிக்க அவர்களின் தீர்மானங்களைப் பரிசீலிக்க இரு குழுக்களை அமைப்பதாகக் கூறினார். எது எப்படி இருந்தாலும், ஆவரங்கால் மாநாடு இளைஞர்களின் வளர்ந்துவரும் அதிருப்தியினை முன்னணியினருக்குத் தெளிவாகக் காட்டியிருந்தது. அழுத்தம் கொடுக்கும் சக்தியாக அதுவரை இருந்த இளைஞர்கள் தற்போது தீர்மானம் எடுக்கும் சக்தி எனும் நிலைக்கு வளர்ந்திருந்தனர். மேலும், ஜெயவர்த்தனவினால் முன்வைக்கப்பட்ட மாவட்ட சபைகளுக்கான அமைச்சர் பதவிகளை ஏற்றுக்கொள்ளும் முன்னணியினர் உத்தேச தீர்மானத்திற்குத் தமது கடுமையான எதிர்ப்பினை இளைஞர்கள் காட்டியிருந்தனர்.
  23. இதன் அர்த்தம் என்ன? தலைவர் சித்திரவதை செய்யப்பட்டார் என்கிறீர்களா?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.