Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kavallur Kanmani

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kavallur Kanmani

  1. தந்தையின் பிரிவால் துயருற்றிருக்கும் நுணாவிலானுக்கும் குடும்பத்தினருக்கும் எம் ஆழ்ந்த அனுதாபங்கள். அப்பாவின் ஆன்ம சாந்திக்காகப் பிராத்திக்கின்றோம்
  2. நீண்டநாட்களின் பின் இன்றுதான் இத் திரி கண்ணில் பட்டது. தமிழ்சிறி குணமாகி மீண்டும் வேலைக்கு போவதையிட்டு மிகவும் மகிழ்ச்சி. உறவுகள் அனைவரும் உங்கள் நலனுக்காகப் பிராத்தித்தார்கள். உங்கள் உடல் நலனில் கவனமுடன் தொடர்ந்து வேலை செய்யுங்கள்.
  3. சுவி இன்றுதான் நீண்டநாட்களின்பின் யாழை எட்டிப் பார்க்க நேரம் கிடைத்தது. தையல் கடையை முழுவதுமாக ஒரே மூச்சில் படித்து முடித்தேன். நானும்தான் வீட்டில் தைத்துக் கிழிக்கிறேன். நாம் எவ்வளவுதான் தைத்துக் கிழித்தாலும் எழுதிக்கிழித்தாலும் உங்களுக்கே உரிய தனித்துவமான நகைச்சுவையுடன் கூடிய எழுத்தாற்றல் எமக்கு வராது. எம்மைச் சுற்றி நடப்பனவற்றை மிகவும் கூர்ந்து அவதானித்து அனுபவித்து எழுதியுள்ளீர்கள். தொடர்ந்து ஆக்கங்களை தாருங்கள் பாராட்டுக்கள்.
  4. பாடல் வரிகளும் காட்சியமைப்பும் இசையும் குரலும் அருமையாக உள்ளன. பாராட்டுக்கள் கோபி.
  5. கடற்கரையும் காதல்கதையும் மிக அழகான வர்ணனைகளும் மிக அருமை தொடருங்கள் புங்கை.
  6. நன்றிகள் சுவி. முன்பெல்லாம் பல தடவைகள் சென்று பார்க்கக்கூடியதாக கடல் கோட்டை இருந்தது. பின்பு கடற்படையின் கட்டுக்காவல்களை மீறி நாம் எமது கடற்கரைக்கே செல்ல முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. படித்து கருத்திட்டமைக்கு நன்றிகள்
  7. ஆகா அற்புதமான கவிதை. நீண்ட நாட்களின்பின் இன்றைய காலநிலையை அனுபவித்து வெளியே சென்ற நடைப்பயிற்சி செய்து வந்தேன். இந்த இளவேனிலுடன் எம் இன்னல்கள் மறைந்து இலைதுளிர்காலம்போல் எம் வாழ்வும் துளிர்க்க உங்கள் கவிதை இளவேனிலை வரவேறகிறது. நிழலியின் கவிதை அருமை.
  8. சில சமயங்களில் சட்டத்திற்கு அமைந்து நடக்காவிட்டால் பல பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டி ஏற்பட்டு விடுகிறது. அதிலும் இந்த காலக்கட்டத்தில் சமூகஅக்கறையுடன் நாம் செயற்படுவது அவசியம். படித்து கருத்திட்டமைக்கு நன்றிகள் சு.ப. சோமசுந்தரம்
  9. கருத்துக்கு நன்றிகள் உடையார். பசுமைநிறைந்த நினைவுகளை மீட்டியாவது மனத்திருப்தியடைவோம்.நனறிகள் நாம் இழந்தவைகள் எண்ணிலடங்காதவை. அந்த அமைதியான அழகான இயற்கையுடன் கூடிய இயல்பான வாழ்வை மட்டுமல்ல நாம் அனுபவித்த அத்தனை இன்பங்களையும் இழந்தவர்களாய் ....கருத்துக்கு நன்றிகள் புத்தன். நாம் இழந்தவைகள் எண்ணிலடங்காதவை. அந்த அமைதியான அழகான இயற்கையுடன் கூடிய இயல்பான வாழ்வை மட்டுமல்ல நாம் அனுபவித்த அத்தனை இன்பங்களையும் இழந்தவர்களாய் ....கருத்துக்கு நன்றிகள் புத்தன்.
  10. அன்னையாக அரவணைத்து மனைவியாக உடன் பயணித்து சகோதரியாக அன்பு செய்து மகளாக மடி தவழ்ந்து தோழியாக தோள் கொடுத்து வாழும் பெண்மையை போற்றுவோம் பகிர்வுக்கு நன்றிகள் நிலாமதி
  11. இந்த கைத்தொலைபேசி இல்லாத காலத்திலும் நாம் வாழ்ந்தோம் என்று நினைக்க எனக்கே வியப்பாயுள்ளது. எப்படி ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டோம்? எப்படி பயணங்களை மேற்கொண்டோம்? எப்படி காரில் றைவிங் செய்தோம்? என்ன விடயத்தை எடுத்தாலும் எம் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இந்த தொல்லைபேசி எம்முடன் ஒன்றித்து விட்டது. ஆனாலும் அன்று ஊரில் கிணற்றடி குழாயடி இவற்றில் பரப்பப்படும் செய்கிகளை மறக்காமல் கவி வடித்த பசுவூர் கோபியின் கவிதை அருமை. நோயும் இதுதான் நோய்க்கு மருந்தும் இதுதான் என்பதுபோல் ஆகிவிட்டது இத்தொலைபேசி.
  12. விரிவான விளக்கத்திற்கு நன்றிகள் . இங்கும் கொரோனா காலமென்றபடியால் வைத்தியரிடம் செல்ல முடியாத நிலையில்தான் உள்ளோம். ஏதாவது பிரச்சினை என்றால் போனில்தான் கதைக்கிறார்கள். பாவிக்கும் மருந்துகளையும் பாமசியில் போய் எடுக்கும்படி போனில் அழைத்து சொல்கிறார்கள். நாம் இந்த நேரத்தில் எமது உணவுகளின் மூலம்தான் எமது நோய் எதிர்ப்புசக்தியை கூட்ட வேண்டி உள்ளது. முருங்கை இலை விற்றமின் டீ காய்கறிகள் நட்ஸ் உடல்பயிற்சி முதலியன எம் உடலுக்கு நன்மை பயக்கும் என நினைக்கிறேன். இது தவிர எமது குடும்ப வரலாறுகளும் எமது உடல்நலத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. உதாரணமாக இரத்த அழுத்தம் மாரடைப்பு புற்றுநோய் முதலியவை சிலருக்கு பரம்பரையாக வர வாய்ப்பு உள்ளதாக அறிகிறோம். உங்கள் பகிர்வுக்கு நன்றிகள். அம்மா இறையடியில் அமைதியில் இளைப்பாறட்டும்.
  13. இசை அமைப்பாளர் சசி வரிணன் என் கவிதையை ரசித்த விதம் கண்டு பூரித்துப் போனேன். உங்கள் அனைவரது ஊக்கமும் உற்சாகமும்தான் என்னை எழுத வைக்கிறது நன்றிகள் சசி. இத்தனை ஆண்டுகள் எங்கெங்கோ வாழ்ந்தாலும் இரவில் கனவில் வருவது எம் ஊரும் அதன் நினைவுகளும்தானே. அந்த இயற்கை அழகும் எம் இளமை நினைவும் என்றும் தொடரும். கருத்துக்கு நன்றிகள் பாஞ்ச்.
  14. உங்கள் பதிவுக்கு கருத்தெழுத தவறி விட்டேன். மன்னிக்கவும். எங்கள் ஊருக்கே அழகு தருவது ஒல்லாந்தர் கட்டிய கடல்கோட்டை. சரித்திர சின்னங்களில் ஒன்றான இக் கடற்கோட்டை பல ஆண்டுகள் இராணுவத்தளமாக மாறியது. இப்பொழுது உல்லாச விடுதியாக மாற்றியுள்ளனர். நன்றிகள் தமிழ்சிறி.
  15. எத்தனை வசதிவாய்ப்புக்களுடன் வாழ்ந்தாலும் நாம் பிறந்து வளர்ந்த அந்த மண்வாசனை எம்மை விட்டு அகலாது. படித்து கருத்திட்டமைக்கு நன்றிகள் வாதவூரான். கவிதையை படித்து பச்சைப் புள்ளிகள் இட்ட மல்லிகை வாசம் கிருபன் மோகன் புலவர் அனைவருக்கும் நன்றிகள்
  16. கருத்துக்கு நன்றிகள் ஈழப்பிரியன். அத்துடன் எனது கவிதைக்கு விருப்பிட்ட சபேஸ். நிலாமதி. நந்தன்.பெனி. தமிழினி.யாயினி. விசுகு.குமாரசாமி.புங்கையூரன்.சு.ப.சோமசுந்தரம்.நுணாவிலான்.நிழலி.ஈழப்பிரியன்அனைவருக்கும் நன்றிகள்
  17. நன்றிகள் நிழலி. முன்பென்றால் நயினாதீவுக்குப் போவதற்கு ஊர்காவற்றுறை துறைமுகத்தில் இருந்து பயணம் செய்வார்கள். இப்போது குறிகட்டுவானிலிருந்து செல்வதால் எமது ஊர் பலருக்குத் தெரியாமல் போய் விட்டது. அந்தோனியார் கல்லூரியில் கல்வி கற்றீர்களா? எல்லோரும் அயலவர்களாகத்தான் உள்ளீர்கள். படித்து கருத்திட்டமைக்கு நன்றிகள்
  18. சிலர் இடம் பொருள் பார்க்காமல் ஆத்திரத்தில் வார்த்தைகளைக் கொட்டி விடுவார்கள். என்ன செய்வது சில விதி விலக்குகளை வைத்து எல்லோரையும் மதிப்பிட முடியாது. இந்த காலக்கட்டத்தில் அநேகர் மனஅழுத்தத்துக்கு உள்ளாகி இருப்பதாக செய்திகள் வருகின்றன. யாயினி இந்த சந்தர்ப்பத்தில் உங்கள் ஆதங்கம் பொருத்தமானதே. சமூக அக்கறையற்றவர்களை அடுத்திருப்போரால் மாற்ற முடியாது.
  19. கனவுகள் நனவாகும் என்ற ஆசை மனம் நிறைய இருந்தாலும் காலம் நம்பிக்கையை பொய்யாக்கி விடுமோ என்ற பயமும் உள்ளது. கருத்துக்கு நன்றிகள் நிலாமதி.
  20. அந்த அழகிய உதயத்தையும் அஸ்தமனத்தையும் அழகிய அலையோசையையும் நாம் வாழும் காலம் வரை மறக்கமுடியுமா? கருத்துக்கு நன்றிகள் புங்கையூரன் சென்ற வருடம் போய் மீண்டும் சில நாட்களாவது இவற்றை அனுபவிக்கலாம் என்ற நாம் கட்டிய மனக்கோட்டைகளெல்லாம் கொரோனாவால் இடிந்து தரைமட்டமாகி விட்டது. இழந்து கொண்டு வருகிறோம் என நினைக்கவே வலிக்கிறது. நன்றிகள் குமாரசாமி.
  21. எங்கு நாம் வாழ்ந்தாலும் நாம் உருண்டு பிரண்டு ஓடி ஆடிய மண்ணின் நினைவை மறக்க முடியுமா? கருத்துக்கு நன்றிகள் விசுகு ஓ நீங்களும் காவலூரா? எம் கனவுகளிலும் கண்முன் விரியும் காவலூரின் நினைவுகள் கவிஎழுத வைத்தது. கருத்துக்கு நன்றிகள் உதயகுமார்.
  22. காவலூர்க் கனவுகள் கடலோரம் அலைவந்து கரைமீது மோதும் காதோரம் ஆலய மணி வேதம் ஓதும் இனிதான தென்றலும் இடை வந்து வீசும் எங்கெங்கு நோக்கினும் தெய்வீகம் பேசும் இல்லங்கள் எங்குமே இறை புகழ் பாடும் இயம்பிடும் செபமாலை தினம் சாரல் தூவும் அதிகாலைத் திருப்பலி அரங்கேறும் நேரம் அற்புத கானங்கள் அகமெங்கும் மோதும் நிலவோடு கடல் வந்து நிதம் சங்கமிக்கும் கடலோடு மேகங்கள் தலை கோதிச் செல்லும் செம் பருத்திப் பூக்கள் வேலியில்; ஆடும் செவ்வந்திப் பூக்களும் பொன் அள்ளித் தூவும் அதி காலைச் சேவல்கள் அறை கூவிப் பாடும் அதை மிஞ்சும் திருந்தாதி மணி நாதம் கேட்கும் வான் முட்டும் ஆலய கோபுரம் நான்கும் ஆன்மீக தாகங்கள் தீர்த்திடும் பாங்கும் அறிவூட்டும் அதிசய கலைக்கூடம் எங்கள் அறிவுக்கண் திறந்திடும் அற்புதம் செய்யும் குயிலோசை காதிலே இன்னிசை பாடும் அலையோசை காற்றோடு சுதிதாளம் போடும் வெள்ளிக் கொலுசொலி வீதியில் சிந்தும் துள்ளும் வனிதையர் சிரிப்பொலி மிஞ்சும் காலைச் சந்தையும் களைகட்டிக் கூடும் காவலூர்த் துறைமுகம் கலகலப் பூட்டும் மாலைச் சூரியன் மறைந்திடும் வேளை மஞ்சள் குளித்திடும் கடல் மகள் நாணம் கண்டு களித்திட காளையர் கூடும் கடற்கரை பொன்மணற் பரப்பென மின்னும் பூவரசம் பூக்கள் சாமரம் வீசும் மாமரக் காற்றிலும் தமிழ் மணம் வீசும் காவலூர்க் கனவினைக் கண்களில் சுமக்கும் கண்மணிகள் வாழ்வில் வசந்தமே வீசும் --
  23. வரிக்கு வரி உவமானங்களை தாங்கி வந்த அருமையான கவிதை பாராட்டுக்கள் பசுவூர்கோபி
  24. நாம் பெற்ற பிள்ளைகள் உண்மையிலேயே நல்ல முற்போக்கான சிந்தனைகளுடன் வளர்க்கப் படுகிறார்கள்.எங்களைப்போல் புறங்கூறுதல் வஞ்சனை பொருளாசை போன்ற தீய குணங்களற்றவர்களாகவும் சாதி சமயம் குலம் கோத்திரம் போன்றவற்றிற்கு மதிப்பு கொடுக்காதவர்களாகவும் எதையும் துணிவுடன் நேருக்கு நேர் பேசக்கூடியவர்களாகவும் பிள்ளைகள் வாழ்விற்காய் தம்மையே தியாகம் செய்த எம் பெற்றவர்களைப்போல் நாம் இருக்கக்கூடாது என அறிவுரை கூறுபவர்களாகவும் சில சமயம் எமக்கு ஆசானாகவும் இருக்கிறார்கள். அவர்களது பார்வையும் பக்குவமும் பலமுறை எம்மை பிரமிக்க வைப்பதாய் இருக்கும். கனடாவில் மூன்றாம் வகுப்பு சமயப் புத்தகத்திலேயே குழந்தை உருவாவது பிறப்பது குடும்ப உறவு போன்ற பாடங்களை பார்த்து திகைத்த காலம் ஒன்றுண்டு. எமது காலத்தில் பெரியவர்கள் பேசுமிடத்தில்கூட எமக்கு இருக்க அனுமதி கிடைப்பதில்லை. ஆனால் இன்றோ எமது பிள்ளைகள் வளரும் காலத்தில் எதைப்பற்றியும் வெளிப்படையாக பெற்றவர்களுடனும் சகோதரர்களுடனும் பேசுவதைப்பார்க்க வியப்பாயிருக்கும். அவர்களது சிந்தனைகளும் செயற்பாடுகளும் வித்தியாசமானவை. அதற்கேற்ப நாம் மாறினால்தான் எம்மால் சந்தோசமாக வாழமுடியும். அவர்களை எம்மைப்போல் மாற்ற முயற்சித்தால் எமது வாழ்க்கையின் சந்தோசங்களை இழக்கவேண்டி ஏற்படலாம். வளர்ந்த பிள்ளைகளை வைத்திருப்பவர்களுக்கு விளங்கும். தலைப்பிற்கு நன்றிகள் விசுகு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.